Everything posted by goshan_che
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
கட்டாயம் அனைவரும் பார்க்க மட்டும் அல்ல பகிரவும் வேண்டிய காணொளி. 1. பெரியார், பிரபாகரன் - ஒத்த கருத்து, வேறுபட்ட அணுகுமுறைகள் - அருமையான ஒப்பிலக்கணம். 2. சீமான் தலைவரின் தத்துவத்தை கடத்தவில்லை. கவர்ச்சியையே கடத்தினார். 3. தத்துவத்தை கடத்தினால் சீமானை வழிநடத்துபவர்கள் (நான் றோ என்கிறேன், விகடன் டிவியில் அப்படி சொல்ல முடியாது) சீமானை அரசியல் செய்ய விடமாட்டார்கள். 4. தமிழக இளைஞர்கள் 2009 இல் இந்திய மத்திய அரசு மீது கொள்ள வேண்டிய கோவத்தை சீமான் மடைமாறினார். 5. இன்னும் பல அருமையான கருத்துக்கள். 8ம் நம்பருக்கு அகாலமரணமாமே? காத்திருக்கிறேன்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
நன்றி சபேசன். உங்களையும் மேலே உள்ள பதிவில் @ போடத்தேடினேன் எந்த சபேசன் என்ற குழப்பத்தால் விட்டு விட்டேன். ———— நாங்க தனிமரம் இல்லை… தோப்பு…. வைக்கப்போறோம் பாரு ஆப்பு….
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இரெண்டு வருடம் பழைய ரி கொண்டிசன் ஹொண்டா வெசல்ஸ் £ 63,000 🤯. அதை விட திறமான ஹொண்டா எச் ஆர் வி, புது ஷேப், 2 வருடம், 5 ஆயிரம் மைலுக்குள், £23,000க்கு கீழே வாங்கலாம் யூகேயில்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
@shanthy அக்கா கண்டது சந்தோசம். ஆரம்பம் முதலே யாழில் பல அவதூறுகளை எதிர்கொண்டு ஆமைவதம் செய்தவர் நீங்கள். ஒரு பெரிய வேண்டுகோள். யாழில் எப்படி சீமான் கழுவி ஊத்தபடுகிறார் என்பதையும், ஈழத்தமிழர்கள் சீமான் பின்னால் இல்லை, அவர்களும் அவரின் பிராடுத்தனத்தை கண்டு கொண்டார்கள் என்பதையும் உங்கள் தமிழ்நாட்டு அரசியல், இலக்கிய வட்டங்களுக்கும் இந்த நெறியாளர் போன்றோருக்கும் யாழின் திரிகளை உதாரணமாக காட்டி பரப்பி விடுங்கள். ஈழத்தமிழரின் எதிர்காலத்துக்கு இது மிக முக்கியமான பணி. @sathiri @வல்வை சகாறா போன்ற தமிழ்நாட்டில் பெயர் தெரிந்த இலக்கியவாதிகளிடமும் இதே கோரிக்கையை வைக்கிறேன்.
-
மாவையின் மரணவீட்டுக்கு வரமாட்டேன்! - சாணக்கியன்
மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடி பெறும். சாவு வீடே ஆகினும்.
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
யாரை சொல்கிறீர்கள்? அருச்சுனா? ஆளுனர்? அனுர? மேற்கூறிய அனைவரும் ?
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
🤣 அழுக்கை (சீமான்) கழுவிவிட்டால், பாத்திரம் (தமிழ் தேசியம்) துலங்கும், அழுக்கு மக்கள் நலனுக்கு உரமாகும் என்கிறீர்கள். ஏற்கிறேன்🤣 இணைந்ததை அல்ல. அண்மையில் நீங்கள் என்னை பிந்தொடர்வதாக (follow) யாழில் எனக்கு ஒரு அறிவிப்பு (notification) வந்தது. அதைத்தான் சொன்னேன்.
-
ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு.. நிர்மல் குமார் - ராஜ்மோகனுக்கும் பதவி தந்த விஜய்
எம்ஜிஆர் கட்சி தொடங்கும் போதே தேர்ந்த அரசியல்வாதி, இயல்பிலேயே ஏழைகள் நேசன், அடிமட்டத்தில் இருந்து வந்ததால் மீண்டும் அங்கே அசூசை இன்றி போக முடிந்தது. நம்ம இளசு அப்படி இல்லைத்தானே, வெற்றிபட இயக்குனரின் மகன், லயோலா அலும்னி, இலண்டன் மாப்பிள்ளை - ஏழை எளியவர் மீது ஒவ்வாமை இருப்பது - இந்திய வாழ்க்கை முறையில் வழமை என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் கட்டாயம் எம்ஜிஆர் போல இறங்கி ஆடினால்தான் வெல்ல முடியும் எனவும் நான் நினைக்கவில்லை. ஜெ டெம்போ டிரவலரில் இருந்து அரசியல் செய்தார். பின்னாளில் அது ஹெலிகொப்டராக மாறியது, ஆனாலும் வாக்கு விழத்தான் செய்தது. ஆனாலும் ஜெ யிடம் ஒரு மக்கள் கவர்ச்சி இருந்தது. பிராமண பெண்ணாக இருந்தாலும், அவர் பெரியார் கொள்கைகளில் சமரசம் செய்யமாட்டார் என மக்கள் நம்பினார்கள். இட ஒதுகீடு, நீட் என பலதில் அவரும் அந்த நம்பிக்கையை காப்பாற்றினார். விஜையிடம் இந்த கவர்ச்சி இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறதா என்பதே கேள்வி. அதை பெற விஜை இன்னும் கடுமையாக அரசியல் செய்ய வேண்டும். உதாரணமாக அண்மைய பெரியார் அவதூறு விடயத்தில் சீமானையும், பிஜேபியையும் விட்டு விளாசி இருப்பின், திமுக சாராத திராவிட சார்பு வாக்குகளை அள்ளி இருக்கலாம். இப்படி செய்யும் போது இயற்கையாகவே அதிமுக, விசிக, திக அனுதாபிகள் கவனம் அவர் மீது விழும். பெரியார் கொள்கைகளில் சோரம் போகாதா திமுகவுக்கான மாற்று என்ற விம்பம் வலு பெறும். ஆனால் இளசு ஒரு அறிக்கையோடு அடங்கி விட்டார். விஜை அரசியலில் தேறமுதல் அவரே போய் சேர்ந்து விடக்கூடும்🤣.
-
சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட்
இப்ப முள்ளம்பன்றி சிகைஅலங்காரிகள் சார்பாக ஒரு கொம்பிளைன்ட் வரும்🤣.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
இதுக்கு பேர்தான் கழுவி, கழுவி ஊத்துவது🤣
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
யோவ், லூச்சா கதை எல்லாம் வேண்டாம். அதான் கூற்றை வாபஸ் வாங்கியாச்சே… நில்லும் ஐயா…. வெட்கெம் கெட்ட எத்தனையோ பேர் என்ன என்னமோ தில்லாலங்கிடி எல்லாம் செய்து போட்டு ஒண்டும் இல்லாதமாதிரி திரியும் போது … இதுக்காக யாழை விட்டு போறதெல்லாம் ஓவர். அதுவும் நான் ஆரம்பித்த திரி… போட்டோக்களை எடுத்து பகிர்ந்தது எல்லாம் பெரிய லெவல் ரிஸ்க். தயவு செய்து தொடரவும். நீங்கள் சொன்ன விளக்கம் நானுட்பட பலருக்கு ஏற்புடையதே.
-
ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு.. நிர்மல் குமார் - ராஜ்மோகனுக்கும் பதவி தந்த விஜய்
ஆனந்தை விடுங்கோ….ஆதவ் தவெகவையே ஆட்டையை போட்டாலும் போடல்கூடும் என நான் நினைக்கிறேன். தனது முன்றேற்றம் மட்டுமே குறி, கொள்கை, கோட்பாடு எல்லாம் இரெண்டாம் பட்சம் என பட்டவர்தனமாக நடப்பவராக எனக்கு படுகிறது. அத்தோடு தலைமைக்கு கீழ் படிதலும் இல்லை. திருமா எவ்வளவோ விட்டு பிடித்தும் உள்ளே இருந்து குடைச்சல் மேல் குடைச்சல் கொடுத்தார். விஜை சொந்த செலவில் சூனியம் வைப்பதாய் முடியலாம். காளிஅம்மாள் போல கொள்கைவாதிகளை, கட்சி ஒழுக்கம் உள்ளவர்களை விஜை ஈர்க்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
நானும் அவசரபட்டு அனுரவை திட்டிப்போடனே என்ற ஒரு மறுகலோடுதான் ஓடி வந்து பார்த்தனான்🤣. ஆனால் அனுர என் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை🤣. மாம்பழம் கொண்டு வந்த எங்களுகே இப்படி எண்டால், பின்னால சாத்ஸ் @satan பிலாப்பழத்தோட வாறார்🤣. பிகு வல்லவனுக்கு வல்லவன் வையத்திலுண்டு. இந்திய ஹைகொமிசனையே ஏமாத்தின ஆளுக்கு உதயன் வச்சான் ஆப்பு 🤣
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
தடித்த சொல்லுக்கு மன்னிப்பு கேட்ட அதே திரியில் கருத்துக்கு மன்னிப்பு இல்லை என்பதையும் சொல்லி இருந்தேன் அண்ணை. நான் மேலே மிக தெளிவாக இதை ஆரம்பித்தவர் சீமான், ஆகவே அவர்தான் இதை முடித்தும் வைக்க வேண்டும் என சொல்லி உள்ளேன். நீங்கள் இதை விளங்கமுடியாதவர் அல்ல. சீமான் எம்மை கொண்டு போய் தமிழ் நாட்டு அரசியலில் சிண்டு முடிந்து 10 வருடத்தின் பின்னால் வந்து, நாங்கள் இதில் தலையிட கூடாது என்பது… ஒன்றில் கெட்ட எண்ணத்தில் (ரோ அஜெண்டா) வர வேண்டும். அல்லது என்ன நடக்கிறது என்பதே விளங்காத முட்டாள்தனத்தில் இருந்து வர வேண்டும். இவை இரெண்டும் உங்களிடம் இல்லை. ஆகவேதான் இதை நடிப்பு என்கிறேன். கருணா பிள்ளையனை எதிர்ப்பதை, கேபியை எதிர்ப்பதை, போலிக்காவை எதிர்ப்பதை சீமானை எதிர்ப்பதை நான்… என்னால் முடிந்த….என்…இனத்துக்கு நான் செய்யும் கடமை என்றே செய்கிறேன். இதில் ஒரு சமரசமும் எப்போதும் இல்லை. யாழில் தனியாக நின்று எழுத வேண்டி வந்தாலும் தயார்…. ஆனால் நான் தனியாள் இல்லை….நீங்லள் என்னை அண்மையில் பின் தொடர ஆரம்பித்தமையால்….நான் எழுதுவதை மட்டும் வாசிக்கிறீர்களோ அறியேன். இங்கே பலர் சீமானை கழுவி, கழுவி ஊத்தியுள்ளார்கள்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யாழ்களத்தில் மூன்று அணிகள் உள்ளது வாஸ்தவம்தான். 1. சம்பளம் வாங்காமல் தமிழ் இனத்துக்காக வேறுபட்ட கருத்துக்களை எதிரும், புதிருமாக எழுதும் ஆட்கள். கிட்டதட்ட யாழில் அனைவரும் இந்த அணிதான். Team Tamils. 2. சம்பளம் வாங்கி கொண்டு றோவுக்கு ஆடும் one man army - Team India 3. சம்பளம் வாங்கியோ அல்லது சுயவிருப்பிலோ இலங்கைக்கு ஆடும் two men army - Team Sri Lanka. யாழில் நடப்பது பழைய பென்சன் அண்ட் ஹெஜ்டெஸ் கப் போல ஒரு முத்தரப்பு ஆட்டம்🤣. Team Tamils v Team India v Team Sri Lanka
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஒன்றுதான். சில வங்க/ஒரிசா பிராமணர் மீனும் சாப்பிடுவர். The Kashmiri Pandits (also known as Kashmiri Brahmins)[7] are a group of Kashmiri Hindus and a part of the larger Saraswat Brahmin community of India. They belong to the Pancha Gauda Brahmingroup[8] from the Kashmir Valley,[9][10]located within the Indian union territory of Jammu and Kashmir. 👆விக்கி சார் சொல்றார்
-
சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட்
றோ -முத்துகுமார் கொலை - சீமான் பற்றி நான் எழுதி இருக்க கூடாதுதான் 🤣. வேலை வெட்டி இல்லாமல் றோவை எதிர்த்து நாம் எழுதினால்…. றோவுக்கு வெப்சைட் நடத்தி வேலை செய்பவருக்கு கோவம் வருமா இல்லையா?
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
மீண்டும் அதே என்ன கையை பிடித்து இழுத்தியா நடிப்பு. நாம் ஆற்றுவது சீமானுக்கு எதிர் வினை. முதலில் சீமானை எம்மை தமிழக அரசியலில் கலப்பதை நிறுத்த சொல்லவும். அடுத்த நாள் நீங்கள் சொல்லாமலே நாம் நிறுத்துவோம். பிகு றோ -முத்துகுமார் கொலை - சீமான் பற்றி நான் எழுதியதும் றோ மாமா அப்பன் குதிருக்குள் இல்லை என குதிப்பதை காண்கிறீர்கள் தானே அண்ணை?
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
றோ -முத்துகுமார் கொலை - சீமான் பற்றி நான் எழுதி இருக்க கூடாதுதான் 🤣.
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
பழைய ஐடியில் இனி வருவது கஸ்டம் போல் உள்ளது🤣…. புதிய ஐடிக்கான என் பரிந்துரைகளாவன: 1. லகடபாண்டி 2. மங்குனி பாண்டியன் 3. ஒற்றன் வாதகோடாரி 4. அக்காமாலா பிகு @பாலபத்ர ஓணாண்டி வந்து குற்றசாட்டை வாபாஸ் வாங்கி விட்டு தொடர்ந்து எழுதவும் புலவரே.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
அவரவர் தனி மனிதர்களாக தாம் அறிந்தவற்றை பொதுவெளியில் இரு பக்கம் சார்பாகவும் சொல்லலாம். ஆனால் த.வி.பு இப்போ இல்லை. வெளிநாட்டிலும் இலங்கையிலும் தவிபு என அறிக்கை விடுபவர் எல்லோரும் போலிகளே. அது எந்த செயல் (அற்ற) அகமாக இருப்பினும்.
-
சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட்
குருமூர்த்தி, பாண்டேவை பாராட்டும் சீமான்.. சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட் Rajkumar RUpdated: Friday, January 31, 2025, 16:01 [IST] சென்னை: நாம் தமிழர் கட்சியிலிருந்து பல ஆண்டுகளாகவே முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கட்சியின் முக்கிய முகங்களாக இருந்த ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம் ஆகியோர் திராவிட கட்சிகளில் இணைந்து இருக்கும் நிலையில், தற்போது மாநில ஒருங்கிணைப்பாளரான ஜெகதீச பாண்டியன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்ற காரணத்தால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய தம்பிகள் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து உடன்பிறப்புகளாக மாறினர். மேலும், சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஜீவானந்தம், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோனி விஜய் உட்பட பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினர். இதேபோல அரூர். பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி நிர்வாகிகளும் விலகி வருகின்றனர். இது சீமானுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஜெகதீச பாண்டியன் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். அதற்கான காரணத்தை 5 பக்க கடிதமாக சீமானுக்கு எழுதியுள்ளார் ஜெகதீச பாண்டியன். அதில், சில முக்கிய கருத்துக்களாக," அண்ணா இது போல் எழுதுவேன் என்று நான் கனவிலும்நினைத்தது இல்லை காலம் பொல்லாதது என்னை இந்த நிலைமைக்கு தள்ளியது நீங்கள் தான். கட்சி ஆரம்பித்து 1 ஆண்டாகியும் நீங்கள் அமைப்பை கட்டமைக்க கவனம் செலுத்தவில்லை. அமைப்பை பற்றியும், அமைப்பு விதியைப் பற்றியும் நாங்கள் பேசினால் அதீத கோபம் அடைகிறீர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் எழுதி கொடுத்த அமைப்பு விதியை நீங்கள் இன்னும் கூட பார்க்கவில்லை என்பதை பலமுறை சுட்டிகாட்டியும் பயன் இல்லை. கட்சி வளர வளர உங்கள் நம்பிக்கை அதிகமாகி அது அதிகாரமாக மாற, உங்களிடமிருந்த எளிமையும் உறவோடு பேசும் இனிமையும் காணாமல் போய்விட்டது. வேகமாக மாறும் உலகில் கசியும் இரகசிய தகவல்களால் ஏற்படும் பாதிப்புகளை விட பகிரப்பட்ட உண்மையான தகவல்களால் ஏற்படும் நன்மை அதிகம் என்று வரலாறு நமக்கு நிரூபித்திருக்கிறது. இதை உணராமல் உங்களுடனும் உங்கள் பின்னாலும் மக்களிடம் அறிமுகமானவர்கள். புகழ் பெற்றவர்கள், கட்சிக்கு வந்து தனது உழைப்பாலும் கட்சி கொடுத்த வாய்ப்பாலும் உயர்ந்தவர்கள் சிலரை நா வன்மையாலும் சிலர்அவமானப்படுத்தப்பட்டு அவர்களாகவே வெளியேறும்படியும் செய்தீர்கள். இதையெல்லாம் நான் பலமுறை உங்களிடம் சுட்டிக் காட்டியுள்ளேன். கட்சியில் அதற்கு நீங்கள் கொடுத்த பதில் தம்பீ பேருந்தில் 50 பேர் உட்கார்ந்து இருப்பார்கள் ஒருவர்தான் ஓட்ட முடியும் என்பிர்கள். ஆனால் உங்களோடு அந்த பேருந்தில் ஏறியவர்கள் எல்லாம் அறிவார்ந்த ஓட்டுநர்கள் அண்ணா, அப்படியே நீங்கள் ஓட்டுநராக இருந்தாலும் அதன் உரிமையாளர் போல் நடந்து கொண்டுள்ளீர்கள் அண்ணா. அப்பேருந்து (கட்சி) பல பேரின் தியாகத்தாலும் இரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாகிய பேருந்து என்பதை நீங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள் அண்ணா. ஒன்றிய அரசுக்கு நாம் கூடி ஆள்வோம் என்று பல மேடைகளில் அறிவுரை சொல்லும் நீங்கள் ஈட்சியில் கூடி பேசி முடிவெடுத்து செயல்படுத்த மறந்து போகிறீர்கள் அல்லது மறுத்து விடுகிறீர்கள். இதை சுட்டிக்காட்டினால் அன்பான சர்வாதிகாரம் என்கிறீர்கள் அண்ணா. எதிரிகள் தலைவர் பிரபாகரனை சர்வாதிகாரி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கூட தமிழீழ கொள்கையை கைவிட்டு விட்டால் ஆயுதத்துடன் அருகில் இருக்கும் புலிகள் தன்னை சுட்டு கொன்றுவிடுங்கள் என்று அதிகாரம் அளித்த ஆகச்சிறந்த ஜனநாயகவாதியின் உருவத்தை குறியீடாக வைத்து அரசியல் நடத்துகிற நீங்கள் சர்வாதிகாரியாகவே நடந்துக்கொள்கிறீர்களே அண்ணா. அனைத்திலும் வெளிப்படை தன்மை வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசும் நீங்கள். பொதுக் குழுவை கூட்டி யாருக்கும் அறிவிக்காமலேயே வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரை பொதுச்செயலாளராக நியமித்து இருக்கிறீர்களே எப்படி அண்ணா? நிர்வாகத்தில் சிறப்பாக பணிபுரிந்த பொருளாளரை அப்பொறுப்பில் இருந்து எந்தக் காரணமும் சொல்லாமல் நீக்கிவிட்டு எட்டு ஆண்டுகளாக கட்சிக்கே வராத கட்சிக்கு எதிராக செயல்பட்ட நாம் தமிழர் கட்சியையே கைப்பற்ற முயற்சி செய்த பல மேடைகளில் உங்களை திட்டி தீர்த்த ஒருவரை பொருளாளராக நியமித்திருக்கிறீர்களே அண்ணா? தவறான நபர்களை பொறுப்பிற்கு தேர்வு செய்து சரியான செயலை எப்படி அண்ணா செய்ய முடியும்? கட்சியில் நிதி இல்லை, நிதி இல்லாததால்கட்சியினருக்கு நீதி இல்லை. நிதியையும் சரிவர கையாளாததால் இன்று தமிழ் நாட்டில் காசு கொடுத்து கூட்டதிற்கும், பொதுக் கூட்டத்திற்கும் அழைத்து வந்து வாக்குகளை காசு குடுத்து வாங்கும் நிலையில் தன் குடும்ப தேவைகளை குறைத்துக்கொண்டு சொந்த காசைப் போட்டு, கொடி நட்டு கூட்டம் நடத்தி தேர்தல் செலவுகளுக்கு பிழைக்கப் போன இடத்தில் தன் இனம் தழைக்க. ஒரு வேலை உணவை தவிர்த்து உணர்வோடும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கிற நமது தாய் தமிழ் உறவுகள் அனுப்புகிற பணம் கட்சியின் தலைமை அலுவகத்தில் இருப்பவர்களால் ஊதாரிதனமாக செலவு செய்யப்படுகிறது. இது எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால் கட்சியில் இருப்பவர்கள் தனது பொருளாதாரத்தை இழந்து வசிப்பிடத்தை இழந்து வாடகை வீட்டில் குடி இருக்கும் நிலையில் சம்பளத்திற்கு வேலை செய்யும் தலைமை நிலையத்தில் இருப்பவர்கள் கட்சி பணத்தை எடுத்து வட்டிக்கு விடுவதும் புதிய வாகனத்தை வாங்குவதும். வீட்டை வாங்குவதும்ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழப்பதும் வாடிக்கையாய் போனது அண்ணா அலுவலகம் வாங்க வெளிநாடு வாழ் தமிழர்கள் அனுப்பிய பணத்தை தலைமையில் இருப்பவர்களின் கவனக்குறைவால் வீரயமாக்கி சோறு தண்ணி இல்லாமல் சோர்வடையாமல் தமிழ் நாட்டு உறவுகளும் வெளி நாடுகளில் வாழுகிற தமிழ் உறவுகளும் விமான பயணத்திற்கு பல செலவு செய்து இனத்துக்கான வாக்கை தன்மானத்தோடு பதிவு செய்து பெறப்பட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்ற கரும்பு விவசாயி சின்னத்தை சிறப்பாக நிர்வாகம் செய்து வந்த இராவணன் அண்ணனை புறக்கணித்துவிட்டு நிர்வாக திறனற்றவர்களின் கையாளாகாத தனத்தால் விவசாயி சின்னம் பறிபோனது. என மீதுள்ள நம்பிக்கையாலும் என் செயல்திறனை நீங்கள் அறிந்திருந்தாலும் 2004 பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்தீர்கள். அறிவித்த நாள் முதல் அய்யா இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களை எனது தொகுதிக்கு அழைத்துச் சென்று முதன் முதல் பிரச்சாரத்தை துவக்கி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் வென்று விடுவார் என்று தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பில் இடம்பெறும் அளவிற்கு தொகுதி உறவுகளின் ஒத்துழைப்போடு பணியாற்றினேன். நீங்கள் எனக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது தமிழகத்திலேயே மிகச் சிறப்பான ஒரு கூட்டத்தை கூட்டிக் காட்டினோம். அந்தக் கூட்டத் கூட்டத்தில் பேசிய கட்சி ஆரம்பிக்கும்போது வர பயந்தவர்களுக்கு மத்தியில் எதற்கும் அஞ்சாது 25 ஆண்டுகளாக என்னை தோளில் தூக்கிச் சுமந்தவன் என்றும் என் குடும்பமே ஒத்துழைக்க மறுத்த போதும் ஈழ பயன ஏற்பாடுகளை உறுதி செய்து பெங்களுருவில் இருந்து விமானம் ஏற்றியும் திரும்பி வரும்போது என்னை அழைத்து வந்தவன் என்று என்னைப் பெருமையாக பேசி சிலாகித்து கொண்டீர்கள். தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஐந்து இடங்களில் மூன்றாவது இடம் வந்தது. அதில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று. சென்ற ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆரம்ப வேலையிலிருந்து வாக்கு எண்ணும் வரை நான் சிறப்பாக பணிபுரிந்ததாக நீங்கள் மற்றவர்களிடம் சொன்னதாக கேள்விப்பட்டேன். நான் மேற்கூறிய அனைத்தும் நிர்வாக சிக்கல்தானே அதை சரிசெய்துகொள்வோம் என காத்திருந்த வேளையில் இப்போது கொள்கையிலேயே முரண்பட்டு நிற்கிறீர்கள். திரு இரவீந்திரன் துரைசாமியின் தவறான வழிகாட்டுதலால் தாங்கள் திரு ரஜினி அவர்களை சந்தித்தீர்கள் சந்தித்ததில் தவறு இல்லை. சந்தித்த பிறகு நீங்கள் கொடுத்த நேர்காணல் இருக்கின்றதே. சில நாட்களுக்கு முன்னர் சங்கி என்றால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன நீங்கள் சங்கி என்றால் சகத் தோழன் என்று சொன்னதை கேட்டு நானும் கட்சியில் உள்ள பெரும்பான்மையோரும், தமிழ் நாட்டில் உள்ள பல முற்போக்கு சக்திகளும் அதிர்ச்சி அடைந்தோம். சங்கிகளை தோழர் என்று அழைக்க எப்படி அண்ணா மனம் வந்தது? என்று கேட்க உங்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். வழக்கம் போல் பதில் இல்லை எனது கருத்தை தெரிவிக்க முகநூலிலும் தளத்திலும் சங்கி தமிழுக்கு எதிரி, சங்கி தமிழ் நாட்டுக்கு எதிரி சங்கி மானிட குல எதிரி என்று பதிவிட்டேன். பல நூற்றாண்டுகளாக ஆண்டுகளாக தமிழையும் தமிழ் மொழியையும். இனத்தையும் அடிமைப்படுத்தி வஞ்சித்து வருகின்ற வலதுசாரி கருத்து கொண்டவர்களை அய்யா, அம்மா, மாமா என்கிறீர்கள். இருந்தாலும், நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்ட பாண்டே, ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணாமலை மற்றும் அம்மா தமிழசை உங்களை தீம் பார்ட்னர் என்று கூறி வலிய வந்து உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கருத்துக்கெல்லாம் அண்ணன் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். மறுப்பு வராததால் பெரியாரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அண்ணன் சீமானின் கருத்துதானே ஒழிய என்னைப் போன்றவர்களின் கருத்து அல்ல என்று ஜனநாயகப் பூர்வமாக எனது கருத்தை தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டில் உள்ள முதலாளிதத்துவ கட்சிகளில் கூட கட்சிக்குள் சிறிது ஜனநாயகம் இருக்கிறது. "ஆகச் சிறந்த ஜனநாயகத்தை கட்டி எழுப்புவோம்" என்ற முழக்கத்தோடு ஆரம்பித்த நமது கட்சிக்குள் எந்த ஜனநாயகமும் இல்லை. என் கருத்தியலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு எந்த தமிழுக்காக வாழ்நாள் முழுக்க அரசியல் செய்ய வேண்டும் என்று உங்களோடு வந்த என்னை அவதூறு பரப்புகின்றனர். வலதுசாரி ஆதரவு கருத்துக்கு அண்ணன் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் கோவை விமான நிலையத்தில் பிரசாந்த் கிஷோரை விட தம்பி பாண்டே அறிவு மிக்கவன் என்றும், கொஞ்ச நாளைக்கு முன்பு பயித்தியம் என்று சொன்னவரை தமிழ் பேரறிஞர் ஹரிகர ராஜ சர்மா என்றும் நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல பேசுவது பெருத்த அச்சத்தை ஏற்படுத்துகிறது அண்ணா அண்ணன் இப்படியெல்லாம் பேசுகிறாரே என்று வேதனையோடு இருந்தபோது அடிக்கடி நீங்கள் குருமூர்த்தியையும், தினமலர் கோபால் ஜீ யையும் சந்தித்து அவர்களது வழிகாட்டுதலின் பேரில் தமிழர்களின் நாடி நரம்புகளில் உரமேறி இருக்கும் நமது தேசிய தலைவரையும், தமிழீழ விடுதலைக்கு பெரும்பங்காற்றிய திராவிட இயக்கத் தோழர்களின் குறியீடாக இருக்கக்கூடிய பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவது தமிழ் நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் என்பது தெரிகிறது அண்ணா. தமிழரின் அறிவாகவும், ஆற்றலாகவும் உணர்வாகவும் இருக்ககூடிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் குடும்பத்திலுள்ள கார்த்திக் மனோகரனை சிங்களவனே பயன்படுத்த தயங்கக்கூடிய வார்த்தையை பயன்படுத்தி வசைப்பாடினீர்கள் அண்ணா. மாவீரர் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்? வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள் அண்ணா. ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டுவர முடியவே முடியாது. இனிமேல் என்னால் வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும். தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடி முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய, வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு. விலகுகிறேன் அண்ணா!" என கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/jagadeesan-pandiyans-exit-major-setback-for-naam-tamilar-party-amid-leadership-crisis-676059.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி இன்னொரு மாநில ஒருங்கிணைப்பாளர் விலகி உள்ளார். சொன்ன காரணம் - சீமானோடு இருந்தால் நானும் சங்கி ஆகிவிடுவேன்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஏன் கன்பீசன் எப்போ? @Eppothum Thamizhan
-
ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு.. நிர்மல் குமார் - ராஜ்மோகனுக்கும் பதவி தந்த விஜய்
ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு.. நிர்மல் குமார் - ராஜ்மோகனுக்கும் பதவி தந்த விஜய் Nantha Kumar RUpdated: Friday, January 31, 2025, 15:43 [IST] சென்னை: விசிகவில் இருந்து விலகி தவெகவில் இன்று இணைந்த ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்புகளை நடிகர் விஜய் வழங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தற்போது கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. கட்சி சார்பில் மொத்தம் 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமனங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெகவின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதோடு புதிய மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பை அவர்வெளியிட்டு வருகிறார். சென்னையில் இன்று தவெகவில் முக்கிய பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் இணைந்தனர். அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளரும், யூடியூபருமான ராஜ்மோகன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர். கட்சி அலுவகத்துக்கு வந்த 3 பேரையும் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரேவற்றார். அதன்பிறகு 3 பேரும் கட்சியில் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் இணைந்தனர். கட்சியில் இணைந்த 3 பேருக்கும் உடனடியாக தவெகவில் பதவி என்பது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதவ் அர்ஜுனா தவெகவின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவெகவில் மிகவும் முக்கிய பொறுப்பாகும். ஏனென்றால் தேர்தல் சார்ந்த பணிகளை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்ள உள்ளார். அதாவது வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம், அவர்களுக்கான பயிற்சி பட்டறை, தேர்தலுக்கு கட்சி தொண்டர்களை தயார் செய்யும் பணியை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்ள உள்ளார். ரசிகர் மன்றமாக, மக்கள் மன்றமாக உள்ள ரசிகர்கள் தவெகவின் தொண்டர்களாக மாறி உள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து பணி செய்யும் வகைகளை ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்த பொறுப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் தொடர்பான பணியை மேற்கொண்ட அனுபவம் ஆதவ் அர்ஜுனாவுக்கு உள்ளது. பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தமிழக அரசியல் களத்தை பற்றி அவர் அறிந்து வைத்துள்ளார். கடந்த 2016, 2019 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திமுகவின் அரசியல் வியூக வகுப்பாளர்களுடன் சேர்ந்து ஆதவ் அர்ஜுனாவும் செயல்பட்டார். 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பை தொடங்கியிருந்தார். அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சியில் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டார். விசிக இப்போது திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தான் விசிகவில் இருந்து கொண்டே திமுகவை கடுமையாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார். இதனால் அவர் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் இப்போது தவெகவில் சேர்ந்துள்ளார். அதேபோல் அதிமுகவில் இருந்து விலகிய தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமாருக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். இவருக்கு பக்கப்பலமாக சிடிஆர் நிர்மல் குமார் செயல்பட உள்ளார். அதேபோல் பிரபல யூடியூபரும், பேச்சாளருமான ராஜ்மோகன் தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரு கட்சி என்றால் அதற்கு கொள்கைகள் என்பது மிகவும் முக்கியம். அதோடு கட்சியில் இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் வரை கொள்கைகள் என்பது சென்றடைய வேண்டும். அப்போது தான் கட்சி கொள்கை ரீதியாக வலுவாக நிலைத்து நிற்கும். அந்த வகையில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி ராஜ்மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த பேச்சாளர்களாக அறியப்படும் நிலையில் அவர் இனி தவெகவின் கொள்கைகளை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்வார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-ctr-nirmala-kumar-and-rajmohan-joins-vijays-tvk-party-and-gets-important-posting-de-676065.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி 1. லாட்டரி மார்டீனின் மருமகன் ஆதவ். மார்ட்டின் தனது குடும்ப உறவு ஒருவர் ஆட்சி அதிகாரத்தை எடுக்க கூடிய சகல பகுதியிலும் இருக்கும்படி பார்த்து கொள்வார் என்பார்கள் (யார் ஆட்சிக்கு வந்தாலும் மார்ட்டினின் லாபி அதிகாரத்து அருகே இருக்கும்). ஆதவ் விஜையிடம் போனது மார்ட்டின் விஜையின் வாய்ப்புகளை அங்கிகரிப்பதாக கொள்ளலாம். ஆனால் ஊழலில் சிக்காதவாறு விஜை பார்த்து கொள்ள வேண்டும். 2. காளியம்மா - நேர காலத்தோட கிளம்புமா. பெண் கொ.ப.செ வெற்றிடம் அப்படியேதான் இருக்கு.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
மன்னிக்கவும். தரவுப்பிழை. காந்தி வைசிகர். பிராமணர் அல்ல. ஆனால் மோடி போல பிராமண அடிவருடி. நேரு கஸ்மீரி பண்டிட்.