Everything posted by satan
-
பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
தமிழரை அழிக்காமல் வேறு என்ன செய்வார்? ஆயுளை மிகுதியாக வேண்டிக்கொடுங்கள்.
-
ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்! அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை
ஐயோ! வருங்கால ஜனாதிபதி கனவில் மிதந்தவர்களின் கனவு கலைந்ததே.
-
மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல்
அவருக்கு கொழும்பில் மட்டுமா வீடு உண்டு? பொறுத்திருங்கள். விசாரணை என்றவுடன் பதறியடித்துக்கொண்டு குழப்பங்களை உருவாக்கி, ஆட்சியை பிடித்து, தனது உண்மை கோர முகம் வெளியில் வராதபடி செய்து, தான் செய்த கொலைகளையும் அராஜகங்களையும் சாதனையாக காட்டி, இராணுவத்தினரை முன்னிறுத்தி நாட்டின் தியாகியாக மக்களுக்கு உரையாற்றி, தன்னை காத்துக்கொள்வார். அவருக்கு தெரியும், நாட்டின் சட்டம் நீதியை எவ்வாறு வளைத்து, தன்னை மறைத்தேன், தன் சகாக்களை காத்தேன், வேண்டாதவர்களை பழிவாங்கினேன் என்பது. அது எங்கே தனக்கு எதிராக திரும்பி தன்னை தண்டித்து விடுமென அஞ்சுகிறார். அதற்காகவே திருடர்களை வளர்த்து தன்கூடவே வைத்திருக்கிறார். தமிழரை எதிரிகளாக சிங்கள மக்களிடம் திணிக்கிறார். இவற்றையெல்லாம் கடந்து அனுரா சாதிப்பாரானால், மகிந்த பழைய நிலைமைக்கு திரும்புவார். திருடர் கூட்டம் என இவர்களை சந்திரிகா விழித்தது நூறு வீதம் உண்மை. திருடர் கூட்டம் மட்டுமல்ல பொறுக்கிகள் கூட்டம்.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
தனக்கு சவாலானவர்களை நீக்குவார், ஒத்தூதுபவர்களை பதவியில் இருத்துவார், இறுதியில் இவரால் நீக்கப்பட யாரும் இருக்கமாட்டார் கட்சியில், இவரை நீக்கவுவும் யாருமிலர். தானாகவே கோப்பு கட்டுகளோடு நீங்குவார். அப்போ; சுமந்திரன் என்றால் தமிழரசுக்கட்சியை வேரோடு நாசம் செய்தவர் என்றே மக்களுக்கு நினைவு வரும்.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
தமிழரிடமிருந்து எதை பிடுங்குவேன் என்று அலையும் சிங்களத்திடம் தமிழருக்கு கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் பேச்சுமேடைக்கு போவதே புலிகளை பெலவீனப்படுத்துவதற்கே. கொடுப்பதற்கு எதுவும் இருந்திருந்தால்; புலிகளை அழித்த பின்தான் தீர்வு என்று ஏன் சொல்ல வேண்டும்? சரி, சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்கின்படி, அவர்களை அழித்த பின் ஏன் கொடுக்கவில்லை கொடுக்க இருந்ததை உறுதியளித்ததை? இன்னும் மக்களின் காணிகளை ஏன் விகாரைகளிற்கும் இராணுவத்திற்கும் அபகரிக்கிறார்கள்? இடைத்தரகர்களிற்கும் தெரியும், அவர்களும் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களையுங்கள் என்று கேட்டபோதே மறுத்து விட்டார்கள். புலிகள் இருந்தால் ஏமாற்ற முடியாது, உடன்படிக்கைகளை கிழித்தெறிய முடியாது என்பதற்காக அவர்களை அழித்தார்கள். இந்தப்பிரச்சனை இயற்கையால் தீர்த்து வைக்கப்பட்டால் அன்றி எந்த சிங்களமும் இனப்பிரச்சினையை தீர்க்காது. இல்லை சிங்கள மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை. இது மிகவும் துரதிஷ்டம். அதற்காகவே திட்டமிட்டு நூலகத்தை தீக்கிரையாக்கி வரலாற்றைத்திரித்து, புதிய குடியேற்றங்களையும் விகாரைகளை நிறுவியுள்ளார்கள். இயற்கையின் சீற்றம் ஒருநாள் இந்த இனத்திற்கு எதிராக திரும்பி வரலாற்றை எழுதும். அப்போது இதை எழுதும் நான் உயிரோடு இருக்கப்போவதில்லை. சிங்களத்திற்கு முண்டு கொடுத்த கதிர்காமருக்கு பிரதமர் பதவியை அளிக்க விரும்பாத சிங்களம், எதை தமிழருக்கு கொடுத்திருக்கும்? புலம்பெயர் தமிழரின் பணத்தை வாரிக்கொடுத்த பத்மநாதன், வி. முரளிதரன், டக்கிளஸ் போல நக்கிப்பிழைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். இத்தனை மக்களை, சொத்துக்களை பலி கொடுத்து, தன்னை காப்பாற்றிக்கொள்ள என்தலைவன் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால்; அவரை யாரும் தலைவன் என்று பெருமை பாராட்ட வாய்ப்பில்லை.
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தரவுகள் உண்மைக்கு புறம்பானவை - மைத்திரிபால சிறிசேன
அந்தத் தேவையுமில்லை இவருக்கு. இவர் ஜனாதிபதியாக இருந்து நடந்த ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை தடுக்க முடியவில்லை இவரால், அரசவையில் இருந்தபோது தமிழருக்கெதிரான தாக்குதலை தடுக்கவோ கண்டிக்கவோ முடியவில்லை. நாட்டின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. தோத்துப்போன ஜனாதிபதி, அரசியல்வாதி இவர். இனிமேல் ஜனாதிபதி பதவியுமில்லை, சுகபோகங்களுமில்லை, ஓய்வூதியமுமில்லை, போதை, பாதாள உழைப்புமில்லை. சாதாரண மக்கள் போல் வாழுங்கள், அவர்களுடைய கஸ்ரம், உரிமை, சேவை புரியுமுங்களுக்கு. ஏழைமக்களின் பணத்தில் காலம் பூராவும் சவாரி செய்வது நிறுத்தப்படவேண்டும். ம், உண்மைகள் வெளிவந்துவிடக்கூடாதென்பதற்காக அவர்களின் கதையும் முடிவுக்கு வரவைக்கப்பட்டது. எய்தவன் இருக்க அம்பை பிடுங்கினீர்கள். அவர்களை நெருங்க உங்களால் முடியாது. அவர்களின் பாதுகாப்பும் கௌரவமும் உங்களுக்கிருப்பது போல் இல்லை. உங்களளவு பாதுகாப்பு பரிவாரங்கள், சமையற் காரர்கள் இல்லை. போதை பொருள் வியாபாரம் இல்லை. சட்டத்தில் விலக்கு இல்லை, நீதி பரிபாலனத்தில் தலையிடுவதில்லை, தான் தோன்றித்தனமாக சட்டத்தை மாற்றுவதில்லை, குடும்ப அரசியல் இல்லை. மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு செயற்படுகிறார்கள். மொத்தத்தில் அவர்கள் சாதாரண மனிதர்கள் போல் வாழ்கிறார்கள். உங்களுக்கு அவர்களைப்போல் வாழவோ, ஆட்சி செய்யவோ தெரியவில்லை.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
அவர் எவர் என்று நீங்களே குறிப்பிட வேண்டியது. வி. முரளி, பகிரங்கமாக கூறியது. தலைவர் ஒரு சர்வாதிகாரி, தான், ஆயதப்போராட்டம் தவறானது என திருந்தி ஜனநாயகத்துக்கு திரும்பினேன் என்று பலதடவை கூறியுள்ளான். சரி, ஜனநாயகத்துக்கு திரும்பி என்ன சாதித்தார்? கோடீஸ்வரர். அது எங்கிருந்து வந்தது? பல கொலைக்குற்றச்சாட்டுகள் இவர்மேல். அத்தனையும் புலிகளிலிருந்து பிரிந்து, அப்பாவி மக்களை, அரசியல் பழிவாங்கல், பணத்துக்காக செய்யப்பட்டவை. ஜனநாயகம் நாட்டில் இருந்திருந்தால்; ஏன் புலிகளில் இணைந்தார் என்றொரு கேள்வியுண்டு. போராளிகள் மூடன்கள், என்னைப்போல் நக்கிப்பிழைத்திருக்கலாம் என எண்ணியிருப்பான்.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
ஐயா! நான் ஆயுதம் ஏந்தி போராடவில்லை, அதனால் அது ஏற்படுத்தும் காயங்கள் எப்படிப்பட்டது என தெரியாமல் இருக்கலாம். ஆனால் போராட்டத்தின் வலி, இடப்பெயர்வு, பசி, இல்லாமை, உயிர் பிழைக்க ஓடிய ஓட்டம், ஒழிந்த மறைவிடங்கள், கண்ணெதிரே உறவுகளின் உயிரற்று சரிந்த உடலங்கள், அழிவுகள், இழப்புகள், துயர்கள் போராளிகளின் வீரம், மனவுறுதி அனைத்தையும் நேரடியாகவே கண்டு அனுபவித்த நபர். பல போராளிகளை கட்டி வைத்து வெட்டி அந்தகாயத்திலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து ரசித்த கூட்டம் இது. பல அப்பாவிப்பெண்களை துகிலுரித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்து ரசித்த இனமிது, மணலாற்றில் மரணமடைந்த பெண்போராளிகளின் அந்தரங்க பகுதியில் வெடிகுண்டுகளை வைத்து ரசித்த கூட்டம் இது. சரணடைந்த போராளிகளை நிர்வாணமாக்கி, கைகளை பின்னால் பிணைத்து, கண்களை கட்டி, முட்டிக்கால் போட வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி உடலை காலால் உதைத்து வீழ்த்தி வீரம் காட்டிய வீரர்கள் இவர்கள், அப்பாவிகளை விரட்டி விரட்டி கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை அழித்தேன் என்று முரசு கொட்டிய கூட்டமிது. இதற்கு பெயர் மனிதாபிமானப் போர், வீரர்கள். தங்களுக்குத்தாங்களே கொடுத்துக்கொள்ள வேண்டிய பட்டம். அதன் தண்டனை என்னவென்று தானே தன் வாயால் கூறிக்கொள்கிறார். மின்சாரக்கதிரை! அவரே, அது தான் தனக்குரிய தண்டனையென்கிறார். ஒருவேளை தலைவர் தன்னைத்தானே சுட்டுதற்கோலை செய்து கொண்டிருக்கலாம். ஒரு மாபெரும் வீரன், தான் எதிரியிடம் உயிரோடு பிடிபட்டு அவமானப்படுவதையோ, அல்லது அடிமை வாழ்வு, சுகபோக வாழ்வு எதையோ வாழ்வதை விரும்பாமல் இருந்திருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்து. என் தலைவர் இறந்தபின்பு இராணுவமும், அரசியல், போர் கதாநாயகர்களும் நடந்து கொண்ட விதம், சொல்லப்பட்ட முரண்பாடான கதைகள், இந்தியவுக்கு சொல்லப்பட்ட கதை, அன்றைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட ஏமாற்றமான கருத்து, அதையே எனக்கு உணர்த்துகிறது. இந்தியாவும் இலங்கையும் எதிர்பார்த்த குறிக்கோளை அடைய என் தலைவன் அனுமதிக்கவில்லை. நெற்றியில் சூடு. ஒன்று, வேறொருவர் நேருக்கு நேர் நின்று அவரை சுட்டிருக்க வேண்டும். அது ஒரு போராளியால் அவரின் வேண்டுகோளுக்கமைய, அல்லது அவரே தன்னைத்தான் சுட்டிருக்க வேண்டும்! ஒரு போராட்ட களத்தில், அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட போராட்டம். நெற்றி தவிர வேறெங்கும் காயமில்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு ஆயுதங்கள், இராணுவம். ம் .... கதையெழுதுகிறோமென உண்மையை ஒப்புக்கொள்கிறார்களா இவர்கள்?
-
நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இருபகுதியும் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவையிலுள்ளனர். சரிந்து போகும் தங்கள் மதிப்பை உயர்த்திக்காட்ட இப்படியான சந்திப்பு தேவைப்படுகிறது. உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்று எதையோ பேசுவார்கள், தமிழ் இனத்தின் அழிவின் லாப நட்ட கணக்கு பார்ப்பார்கள், எப்படி மீண்டும் ஆட்சியை பிடித்து சுடுகாடாக்குவது என்று யோசிப்பார்கள். இவர்களின் சந்திப்பு நாட்டுக்கு நல்லதை கொண்டு வராது. அழிவைப்பற்றியே யோசிப்பார்கள், பேசுவார்கள். மறைந்தவர்களும் அதையே செய்து காட்டினார்கள். இருப்பவர்களும் தொடர்கிறார்கள். இவர்கள் விரட்டப்பட வேண்டியவர்கள்
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
அப்போ, கோடரியும் கொண்டுதான் இலங்கை இராணுவம் போரிட்டுள்ளதா? ஏதோ இலங்கைப்படை சாதித்ததாக எழுதியுள்ளனர். விநாயக மூர்த்தி முரளிதரன் இராணுவ கூட்டிலேயே இருந்துள்ளான். தலைவருடன் ஒன்றாக இருந்து உண்டு, குடித்து அவரையே காட்டிக்கொடுத்த துரோகி, அவரை அடையாளம் காட்ட வந்தானாம். சரத் பொன்சேகா சொன்னது, நாங்கள் கிளிநொச்சியுடன் எங்கள் போரை நிறுத்திக்கொள்ள நினைத்தோம், ஆனால் இந்தியாவே எங்களை வற்புறுத்தி போரை தொடரச்செய்தது. மஹிந்தா அறிவித்தது, நாங்கள் கேட்க்காமலேயே இந்தியா போருக்கான எல்லா உதவிகளையும் செய்தது. நாங்கள் செய்தது இந்தியாவுக்கான போர். ஏன், அமெரிக்கா, பாகிஸ்தான்,பலஸ்தீன், இஸ்ரேல் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். அதைவிட நாடு முழுவதும் கடனால் நிறைந்திருக்கிறது. ஆனால் புலிகள் தங்கள் சொந்த முயற்சியினால் முப்பது ஆண்டுகள் தமிழருக்கெதிரான வன்முறையை கட்டுபாட்டில் வைத்திருந்தனர். ஒரு விடுதலை போராட்டம் துரோகத்தினாலேயே முடிவுக்கு வந்தது. இனிமேல் துரோகத்தின் பலனை அனுபவிக்கும் போது அதன் வலி புரியும். என் தலைவன், குளிரூட்டிய அறையிலிருந்து போர் புரியவில்லை, போராளிகளின் இழப்பில் புகழ் தேடவில்லை, பிள்ளைகளை வெளிநாட்டில் சுகம் தேட அனுப்பவில்லை. தானும் குடும்பமும் சேர்ந்தே போராடினார். உலகிலேயே சிறந்த எடுத்துக்காட்டு.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
அப்போ, இவர் கட்சியின் கட்டுப்பாட்டை, விதிமுறைகளை மீறி கருத்துச்சொல்லும்போது, பதவிகளை இறுக்கப்பற்றிக்கொண்டிருக்கும்போதும், தனக்காக இல்லாத புது பதவிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போதும் இவருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பது? ஒன்று, உவர் தானாக கட்சியை விட்டு வெளியேற வேண்டும், இல்லையேல் உவரை விட்டு மற்றவர்கள் வெளியேறவேண்டும். கறையான் புற்றெடுக்க விஷ கரு நாகம் இடையில் புகுந்திருந்து புற்றையே கலைக்குது. இவ்வளவு அவமானப்பட்டும் திருந்தவில்லை, என்ன ஜென்மமோ? இதில சட்டத்தரணி வேற.
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
இன்னும் சிறிது காலத்தில் படுத்த படுக்கையாகிறாரோ சிறையில் அடைக்கப்படுகிறாரோ மக்களால் மறக்கப்படுகிறாரோ தெரியவில்லை அதற்குள் எழுந்து நிற்கப்போகிறாராம். அப்பதான் இன்னும் கொள்ளையடிக்கலாம். அதுசரி, எல்லா முன்னாள் ஜனாதிபதிகளையுந்தான் அரச இல்லங்களை விட்டு வெளியேறச் சொல்லப்பட்டிருக்கிறது. இவரும் சந்திரிகாவுந்தான் ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்கள் வெளியேறினால் அந்த வீடுகளை பராமரிப்பததற்கு செலவு அதிகமாகுமாம் என்கிறார் ஒரு அரசியல்வாதி. இவர்கள் குடியிருக்கும்போதே பராமரிப்பு, திருத்தம் என்று கோடிக்கணக்கில் மக்களின் சொத்தை கொள்ளையடித்துள்ளார்கள். அப்போ எப்படி செலவு அதிகமாகும் இவர்கள் வெளியேறினால்? இன்னும் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படவில்லை. அவர்கள் பெற்ற ஓய்வூதியம் சாதாரண தொகையுமல்ல. இப்படியிருக்கும் போது சந்திரிகா, தன் சொந்த வீட்டை விற்று வாழ்கிறாவாம் என அழுகிறதா. இவர்களை விட தெருப்பிச்சைக்காரர் பரவாயில்லைபோலுள்ளதே. இவர்கள் அரசியலுக்கு வராவிட்டால் தெருவிற்தான் கையேந்திக்கொண்டு நின்றிருப்பார்களோ என்கிற சந்தேகம் எனக்கு. இந்த லட்ஷணத்தில் இன்னும் அரசியல் ஆசை. மக்களுக்காகவா, தங்களுக்காகவா? இவர்கள் சிறை செல்வது உறுதியாயிற்று. ஆனால் அதற்கு முதல் நாட்டில் ஒரு பிரளயம் ஏற்படுத்தாமல் விடமாட்டார்கள். உடனேயே இவர்களை பிடித்து அடைப்பதற்கு அனுரா தயாராக இருக்க வேண்டும்.
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
"நுணலும் தன் வாயாற் கெடும்." இப்போ மகிந்தவுக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்களும், அந்த செய்தியை வெளியிட்டவர்களும் விசாரிக்கப்படவேண்டும். அந்த சொத்துக்கள் யாருடையவை, எப்படி பெறப்பட்டவை என்பதும் விசாரித்து மஹிந்தவுக்கு பின்னால் அழுது புலம்பித்திரியும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும். அதே போல் மற்றைய ஜனாதிபதிகளின் வசிப்பிடங்களும் ஆராயப்படவேண்டும். பாதாள, போதைக் கும்பல் பிடிபடும்போது நாமல் கதறுகிறார். ரணில் கைது செய்யப்படும்போது எல்லா அரசியல் கள்ளரும் தெருவில் இறங்கி குதிக்கின்றனர். அதற்குள் புலிகளை இழுத்து, இராணுவத்தினரை காட்டி, தமது ஊழலை கொலைகளை மறைக்கப் பாடுபடுகின்றனர். இப்போ அனுரா செய்ய வேண்டியது; இவர்கள் எந்த ஆயுதத்தை ஏந்தி மக்களை கூட்டுகின்றனரோ, அந்த ஆயுதத்தை பாவித்து இவர்களை விட்டு மக்களை விரட்ட வேண்டும். ஆதாரத்தோடு இவர்களின் குற்றங்களை இவர்களை சுற்றி மக்கள் கூடும்போது வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து மக்கள் இவர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். நாடே ஊழலால் நிறைந்திருந்திருக்கு. அபேய வர்தன யாப்பாவை உடனடியாக விசாரணைக்கு அழைத்து, யாரந்த வீடு வழங்கும் தொழிலதிபர் என்பதை அறிந்து விசாரிக்க தொடங்கவும். அத்தனையும் மஹிந்தவின், சிரந்தியின் பெயரில் பதியப்பட்டுள்ள வீடுகளாக இருக்கலாம். மக்களை என்ன ஆசை வார்த்தை கூறி, எதை கொடுத்து திரட்டுகின்றனர், அவர்களை திரட்டும் திருடர்கள் யார், அவர்களுக்கும் மஹிந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு, அவர்களது தொழில் என்ன என்பதையும் ஆராய வேண்டும். இப்போ குடும்பமே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து தாம் தப்பிக்க போகிறார்கள் போலுள்ளது.
-
மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல்
பத்திரிகைகளை குறை கூறி தப்பித்து விடலாம் என்கிற நோக்கில் எது வேண்டுமானாலும் பேசுவார், பின் பத்திரிகைகளை சாடுவார். எடுத்ததெற்கெல்லாம் கோட்டுக்குப்போவேன் என எச்சரிப்பவர், இதற்கு எதிராக ஏன் போகவில்லை? ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று பலதடவை கூறியிருக்கிறார். சிங்களவருடன் வாழ்வது தனது அதிஷ்டம் என்று கூறியவர், அவர்களிடமே வாக்கைப்பெற்று பாராளுமன்றம் போயிருக்கலாமே? வடக்கு கிழக்கில் தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறி சிங்கள படையினரின் பாதுகாப்பை பெற்று வடக்கில் அரசியல் செய்ய வேண்டிய தேவை என்ன இவருக்கு? எப்படி வெட்கம் இல்லாமல் வாக்கு கேட்டார்?
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
தன் பக்கமும் தமிழர் இருக்கிறார்கள் என காட்ட விடும் புலுடாவா அல்லது நீங்கள் சொல்வதுபோல் பினாமியாகவுமிருக்கலாம். அனுரா அதையும் விசாரணை செய்தால்; அது விசுவாசியா பினாமியா என்பது தெரிந்துவிடும். மக்களுக்கு துரோகம் செய்தவர்கள், அவர்களுக்காக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், இவர்களது மனச்சாட்சி உறுத்தவில்லையா இவர்களை?
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
வீடிழந்த மகிந்தவுக்கு ராஜகிரியாவில் உள்ள தனது வீட்டை வழங்க ஜெர்மனி வாழ் தமிழர் ஒருவர் முன்வந்துள்ளாராம் அவர் யார் அவருக்கும் மஹிந்தவுக்கு என்ன தொடர்பு என அறிய ஆவல்.
-
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!
யாரும் மக்களுக்கு நடந்த அவலங்களை எடுத்துரைக்கப்போவதுமில்லை, யாரும் கேட்கபோவதுமில்லை. கேட்டதற்கே பதிலில்லை, இனி எதை புதுசா சொல்லப்போகிறார்கள், கேட்கப்போகிறார்கள்? உதெல்லாம் மக்களை உசுப்பும் வேலை. அங்கொன்று மக்களுக்கு வேறொன்று சொல்லி பிழைத்த எத்தனைபேரை கண்ட இனம் எம்மினம்.
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
அந்நியரிடமிருந்து ஒன்று சேர்ந்து பெற்ற சுதந்திரத்தை, தன்னகப்படுத்தி அந்த இனத்தை அந்நியப்படுத்திய துரோகிகள் நாட்டை, மக்களை, மதத்தை, மொழியை பிரித்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் தியாகிகளாம். இவர்களின் இந்த வாய் வீர உணர்ச்சி வசப்பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாறுவதாலேயே இவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் செய்ய முடிகிறது. ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோரும் குறைவுபடார். சட்டத்திற்கு தலை வணங்குபவர், நீதிபதியை வீட்டுக்கு அனுப்பி பழிவாங்கியது ஏன்? நீதிமன்றத்திற்கு போக அஞ்சி மக்களை திரட்டுவது ஏன்? விமர்சிப்பது ஏன்? நோய் வருவது ஏன்? விழுந்து எழும்புவதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுமேன்? தாங்களே நாட்டை ஆளவேண்டுமென்று சட்டங்களை மாற்றி இயற்றியது மனதில் வரவில்லையோ இவருக்கு இதை சொல்லும்போது? அது சரி, மக்களை ஊடகங்களை அழைத்து புலம்புவது ஏன்? வீடற்றவர் போல் ஒப்பாரி வைத்ததுமேன்? மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்தவர் கோடி சொத்துக்களை முறையற்ற விதத்தில் சேர்த்தவர், இளைப்பாறிய பின்னும் மக்கள் பணத்தில் வாழ நினைப்பது பேராசை. தன் வேலையை தானே செய்ய முடியாமல் வேலையாட்களை கேட்பவர், தன்னை பாதுகாக்க பாதுகாப்பு கேட்பவர், தனக்கென வீடு இல்லாமல் மக்களின் வீடுகளில் வாழ நினைப்பவர்கள் மக்களுக்கு, நாட்டுக்கு எப்படி சேவை செய்யப்போகிறார்கள்? பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியவர்கள், அது தங்களுக்கு எதிராக பாயும் போது அதை தாங்க முடியவில்லை, குறை கூறுகிறார்கள். என்ன செய்வது? வேலிக்கு வைத்த முள் வைத்தவரின் காலை குற்றத்தான் செய்யும். சுதந்திரம்! அது இந்த நாட்டில் இருக்கிறதா? அதை சிதைத்தவர் தொலைத்தவரே இவர்தான்! இந்த இராணுவத்தை சர்வதேசத்தில் குற்றவாளிகளாக்கி, தங்களுக்குள் தியாகிகளாக காட்டி தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள். தமது திட்டத்தை நிறைவேற்றவும், தம்மை பாதுகாக்கவும் இராணுவத்தை பலி கொடுக்கிறார்கள். அந்த இராணுவமே இவர்களை கைவிட்டதை மறந்து விட்டார் போலும். ஒரு தலைவன், தன் பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாத்துக்கொண்டு, சொகுசு அனுபவித்துக்கொண்டு, ஏழைப்பிள்ளைகளை பலி கொடுத்து, தான் வீரம் பேசுவது, தானே சுதந்திரத்தை கொண்டுவந்தேன் என்று கொண்டாடுவதும், உயிர் இழந்த இராணுவத்தினரின் உடல்களை உறவுகளுக்கு அளிக்காமல் உண்மைகளை மறைத்ததும் சரியா? யார் போர் புரிந்தவர்கள்? இவரா அல்லது இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களா? றக்பி வீரரின் கொலையில் இவர் பிள்ளைகளின் தனிப்பட்ட ஒழுக்கம் நாடு அறிந்தது. ஊடகவியலார்களின் கொலையில் இவரது குடும்ப ஒழுக்கம் வெளிப்பட்டது. பாதாள, போதைக்கும்பலில் இவர்களின் அரசியல் ஒழுக்கம் வெளிப்படுகிறது. எல்லோருக்கும் சட்டம் சமன். இவர்கள் மட்டும் ஏன் அஞ்சுகிறார்கள், வைத்தியசாலையில் படுக்கிறார்கள், விமர்ச்சிக்கிறார்கள், புலம்புகிறார்கள், வெதும்புகிறார்கள்? அதன் பலனை அவர்களே முதலில் அனுபவித்தார்கள். அவர்கள் மேல் வைத்த குற்றச்சாட்டை, அரசியலுக்கு வந்த உடனேயே உங்களாக மாற்றி காட்டிய பெருமை உங்களை சாரும். நீங்கள் அரசியல் செய்ய, செய்த ஊழலை மறைக்க, அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என மக்களின் மனதை மாற்றி அரசியல் வெற்றி பெற்றவர், பின்னாளில் குடும்ப அரசியல் செய்ததை மக்கள் மறந்ததே உங்கள் வெற்றி. தமிழர் ஓரங்கட்டப்படுவதற்கு தனது தந்தையே முக்கிய காரணம் என்பதை காலம் கடந்து அவரது மகளே ஒத்துக்கொண்டுள்ளார். இவர் புதுக்கதை சொல்லி தன்னை கதாநாயகன் என்கிறார். அதே மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினருமே ஒரு இனத்தை அழித்து காணாமல் ஆக்கி துவம்சம் செய்து விட்டு, அது நடக்கவேயில்லை என வாதாடுகிறார், விசாரணை என்றால் அஞ்சுகிறார், இராணுவத்தை சாட்டி ஒழிய பார்க்கிறார். இவற்றில் ஈடுபட்டவர்கள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும் சித்திரவதை செய்யப்பட்டதும் உங்கள் ஆட்சிக்காலத்தில். இப்போ உங்களுக்கென்றவுடன் உபதேசம் செய்ய முடிகிறது இந்த ரவுடிக்கும்பலால். தாங்கள் செய்தது தங்களுக்கு நேர்ந்து விடுமோவென அஞ்சுகிறார்கள், மக்களை கெஞ்சுகிறார்கள். முதலில் உங்களுக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஓடி ஒழியாமல், விழுந்து முறிந்து படுக்கையில் விழாமல், மக்களை திரட்டாமல், ஆரவாரம் செய்யாமல், இராணுவத்துக்கு பின்னால் ஒழியாமல் சட்டத்திற்கு கீழ்ப்பணிந்து தனித்து நின்று உங்களை நிஞாயவாதியாக நிரூபியுங்கள். அதன் பின் மற்றவைகளை யோசிக்கலாம். இப்படி ஒரு நிலைமை வராது என்றும் நீங்களே எப்போதும் நாட்டை ஆளுவீர்கள் என்றும் கனவு கண்டது உங்களது அறியாமை. அரசியலில் மட்டுமல்ல கொலை, ஏமாற்று, ஊழல் எல்லாவற்றிலுமே பலமாக இருந்துள்ளார். அதனாலேயே அவரும் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். குடும்பமே ஏமாற்று குடும்பம். இதற்கு அரசியல் ஒரு கேடு. சட்டம் சகலருக்கும் சமம். சரத் பொன்சேகாவை போர் முடிந்தவுடன் யாவரும் புகழ்ந்தனர், அதை பொறுத்துக்கொள்ளாத கோத்தா, அவரை ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் சீற்றமடைந்த பொன்சேகா அரசியலில் குதித்தார். இவரோடு சேர்ந்தால் தமக்கு வாக்கு அதிகமாகும் என எண்ணிய எதிர்கட்சிகள் பொன்சேகாவுடன் கரங்கோத்தனர். இதனால் அச்சம்கொண்ட ராஜபக்ஸக்கள், தேர்தல் குளறுபடி செய்து ஆட்சியை கைப்பற்றிய கையோடு அவரை ஒரு மிருகதைப்போல் அடித்து இழுத்து சென்று சிறையில் போட்டனர். அவரோடு சேர்ந்திருந்த அரசியல் வாதிகள் திகைத்து அவரை கைவிட்டு மறைந்தனர், அவரை சிறையில் சென்று சந்திக்கவேயில்லை. அன்று விழுந்த பொன்சேகாவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. மக்களும் பேச அஞ்சினர். தேர்தல் ஆணையாளர் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது என கூப்பாடு போட்டார். இவர்கள் ஆட்சியைப்பிடித்தவுடன் அப்படியேதும் நடக்கவில்லையென பல்டி அடித்து விட்டார். அப்படியொரு காலாச்சாரத்தை ஏற்படுத்த ராஜபக்ஸக்களாலேயே முடியும். அதனாலேயே ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை துணிந்து நடத்தினர். ஊழல், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரத்தை வளர்த்தனர். அவர்களது காட்டாட்சியே இன்றைய துர்பாக்கிய நிலைமைக்கு காரணம். தங்களை நிஞாயப்படுத்த தமிழரை பலி கொடுத்து தம்மை மேன்மைப்படுத்திக்கொண்டனர். "செய்த அதர்மம் தக்க சமயத்தில் கழுத்தறுக்கும்."
-
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!
இவர்தான் அண்மையில் நாமலை புகழ்ந்து, அடுத்த ஜனாதிபதி அவர் என்றும் முன்புபோல் தமிழருக்கு நடவாதென்றும், தனது அப்பாவை காணாமல் ஆக்கியதை மன்னித்து விட்டதாகவும் கூறியிருந்தார். தேர்தல் காலத்திலேயே மாறி மாறி கதைத்தவர், இவரும் தேர்தலை முன்னிட்டே அப்பப்போ கதையை மாற்றுகிறார். தையிட்டி விகாரை உடைக்கப்படாதென்றும் அதற்காக வேறொரு காணி கொடுக்கப்படலாம் என்றும் கருத்துரைத்தவர், ஆனால் தன் காணிக்கு யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்று விடுவேன், அது யாராகவும் இருக்கலாமென சொன்னவர், நாளைக்கு இன்றைய கருத்தையும் மாற்றிச்சொல்வார். ஒரு கொள்கை இல்லாதவர்கள். இவர்கள் பின்னால் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு அலைகிறார்கள்.
-
அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! - ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர் சதா
அற்புதன் கொலை செய்யப்படுவதற்கு முன் புலிகளின் ஆதரவாகவே எழுதினார். நன்றாகவே தெரியும் இது டக்கிளஸ் எனும் இடி அமீனின் வேலை என்பது. தீவுப்பகுதி கிணறுகளை தோண்டுங்கள். அங்கே பல எலும்புக்கூட்டு கதைகள் உள்ளன. தங்கள் கோடடையாக பாவித்து அந்த மக்களை, வீடுகளை பார்க்க சென்ற மக்களை கொன்று குவித்து மறைத்தவர். கேட்டால்; ஜனநாயகம் பற்றி பாடம் எடுப்பார். தீவுப்பகுதியால் இராணுவத்தை வரவழைத்தவரும் இவரே!
-
தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை
ம்..... பல வருசங்களுக்கு முன், யாரோ ஒருவர் சொல்லக்கேட்டேன். அதாவது மேலைத்தேசத்திலும் தான் அந்த கழிவறையின் மேல் குந்தியிருந்தே மலம் கழிப்பதாகவும் இல்லையேல் தனக்கு மலம் கழிப்பதில் சங்கடம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கேட்டோர் அனைவருமே சிரித்து விட்டனர். இப்போ ஆசிய நாடுகளிலும் மேலைத்தேய கழிவறை முறையே வந்துவிட்டது. சில முழங்கால் பிரச்சனை உள்ளவர்களுக்கு அது வசதியாக உள்ளது.
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம் - விஜித ஹேரத்
இந அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் அழிப்புகளும் பறிப்புகளும் காணாமல் ஆக்குதல் கொக்கரிப்புகளும் கொலைகள் எல்லாம் பொருளாதாரம் என மூட்டை கட்டி மூடி மறைத்துவிட முயற்சிக்கிறார்கள். எடுபடுமா இருந்து பாப்போம். ஏன் நாட்டில் வடக்கு கிழக்கில் மட்டுந்தான் பொருளாதாரப்பிரச்சனையுண்டா?
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!
அரசியல்.
-
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இராணுவத்தை காட்டிக்கொடுக்கக்கூடிய திட்டத்திற்கு எதிர்ப்பு
கால் நடைகளின் உரிமைகளை யாரிடமிருந்து, எப்போது, எப்படி பாதுகாத்தார்கள்? சொந்த நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க தெரியாதவர்கள், பகிர்ந்து வாழ முடியாதவர்கள், அவர்களின் உரிமைகளையும் நிலங்களையும் பறித்தவர்கள் மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். இவர்கள் குற்றம் புரியவில்லையென்றால் ஏன் துடிக்கிறார்கள்? இராணுவத்தை காட்டி பிச்சை எடுத்து அரசியல், சமயம் செய்பவர்கள்.