Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ம் ..... பிரதேசவாதத்தை கிளப்பி வாக்குபறிக்க நினைக்கிறார். முதலமைச்சராக இருந்தபோதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வக்கில்லை, இப்போ யாரை குறை கூறுகிறரர்? சிறையிலிருந்தவண்ணம் தேர்தலில் வெற்றி பெற முடியுமென்றால், அந்த மக்களின் தேவைகளை ஏன் பூர்த்தி செய்ய முடியவில்லை? பிரதம மந்திரி பதவியும் உங்களுக்கு தரப்படும், அதை வைத்து உங்களுக்கு ஒரு பியூனை கூட நியமிக்க முடியாது.
  2. பிரதம மந்திரி, ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருவதற்காக திறந்திருக்கிறார்கள் போலும், பின்னர் மூடப்படும். மக்கள், தங்கள் நிலங்களுக்கு போகமுடியாதென்றால் வீதி எதற்கு திறக்கப்படவேண்டும்?
  3. எங்கள் நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்திருக்க வேண்டும், தாக்கியவர்கள் இரவோடிரவாக காணாமல் போகப்பண்ணப்பட்டிருப்பார்கள்.
  4. இந்தப்பதிவு சிறியருக்காக இணைத்தது போலிருக்கே. இப்போ படம் கிளியரா தெரிகிறதா சிறியர்?
  5. தமிழரசுக்கட்சியின் நரி, சி. வி. கே .சிவஞானம் தேர்தல் பயத்தில் உளறுறார். இளைஞரை ஆயுதம் தூக்க வைத்து சந்ததியை அழித்த கூட்டம். தாங்களே வீட்டை உடைக்கிறது, உடைத்த பின் மக்கள் கட்டியெழுப்ப வேண்டுமாம், தாங்கள் குடியேறியிருந்து பிச்சுக் கொட்ட. முதலில் சுமந்திரன் வீட்டை விட்டு வெளியேறட்டும்.
  6. இப்படியே எல்லோரும் வெளியேறினால் யாருக்கு ஆட்சி செலுத்துவது? அதோடு வெளியேறுபவர்கள் எங்கே செல்வது? கோழைத்தனமாக ஓட அந்தப்பெண் விரும்பவில்லைபோலும். உங்கள் ஏக்கம் புரிகிறது சிறியர், எதற்கும் உங்கள் வீட்டுக்காரியிடம் இந்தக்கேள்வியை கேட்டுப்பாருங்கள், நன்றாக உங்களுக்கு புரியும்படி விளக்குவார்.
  7. தங்கள் குற்றத்தை மறைக்க கூட்டுச் சேர்ப்பதும், எதிரிகளுக்கு உதவி செய்வதும், சம்பந்தப்பட்ட நாடுகளை தனிமைப்படுத்துவதும் உதவிகளை தடுப்பதும் குற்றம் சாட்டுவதும் எதிரிகளின் தந்திரம். இவர்களுக்கு அழிவு சீக்கிரத்தில் வராது, வந்தால் இவர்களால் எழுந்திருக்க முடியாது.
  8. அப்படி மேல வந்திருந்தா; தமிழரோட ஒரு போர் தொடங்கியிருப்பினம், அந்த திமிர்தான் கைநீட்டிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் திரிகிறார்கள்.
  9. சுமந்திரன், வதந்திகளை கசிய விட்டு வாக்கு வங்கியை உயர்த்த முனைகிறார். வெட்கம் இல்லாமல் சிறு பிள்ளைகள் போல் சில பொய்களை சொல்வார். அனுரா தன்னை பிரதம மந்திரி பதவியேற்க முன்பு அழைத்தவராம், இப்போது அதற்கான அழைப்பு வருமென காத்திருக்கிறார். அவரின் பல வழக்குகளை தான் தான் கையாள்கிறாராம், இப்படியாக பொய்களை சொல்லி தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறார். இவருக்கு பின்னால் போனவர்கள் ரொம்ப நொந்து போயுள்ளார்கள். சேனாதிராஜா, ஆனோல்ட், சிறிதரன், இவர்களெல்லாரையும் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தினாரே தவிர உண்மையில், அவர்களை பயன்படுத்தும் போதே அவர்களுக்கும் சேர்த்தே குழி பறித்திருந்தார். சத்தியலிங்கம் சி. வி .கே. சிவஞானம் அவர்களுக்கும் தருணம் வரும் காத்திருப்போம்.
  10. அவர்கள் மத்திய கிழக்கில் செய்ததும் அதுதானே. தனது நன்மைக்காக அந்த நாடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதத்தை உருவாக்கி சின்னா பின்னமாக்கியதே அமெரிக்காதான்.
  11. எங்கள் குழந்தைகள் யுத்தத்தின் பின் குடும்பமே அறியாமல் அனாதைகளாயினர். அங்கு, போரில் ஈடுபடாத குழந்தைகள் தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தும், பள்ளிக்கூடத்தில் குண்டுகளை பொழிந்து மரணத்தை ஏற்படுத்தினர், அவயவங்களை துண்டித்தனர். தாய் இறந்து விட்டாள் என்பதை கூட உணர முடியாத மழலை தாயில் பாலைத் தேடியது. இவைகள் எல்லாம் மறக்கக்கூடியதா? எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில், இந்த தாக்குதலில் இறந்த, காயமடைந்த, தவிக்கிற மக்களுக்கு எங்கள் கவலையை மட்டுந்தான் தெரிவிக்க முடியும். நீதியின் குரலை அடக்குபவர்கள் நடத்தும் தாக்குதல்கள், சொல்லும் காரணங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர், பயிற்சி அளிக்கின்றனர், அப்பாவிகளையும் குழந்தைகளையும், பெண்களையும், வயோதிபர்களையும், பெலவீனமானவர்களையும் தாக்கி கொன்று பழி தீர்க்கின்றனர். இவர்கள் கோழைகள்!
  12. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யோசனை இல்லாதவர்கள், இவர்களால் வெளிநாட்டுக்கு மக்களை அனுப்ப முடியுமென்றால்; ஏன் இவர்கள் இங்கிருக்க வேண்டும்? மக்களின் ஆசைகளை அறிந்த போக்கிரிகள், அதை வைத்து பிழைத்துக்கொள்கிறார்கள். எவ்வளவு தான் நடந்தாலும் அறிந்தாலும் மக்களின் ஆசைகள் மாறுவதில்லை.
  13. முகவரி இல்லாத, தலைவன் இல்லாத வீடு, அதற்கொரு விஞ்ஞாபனம்.
  14. இவரைத்தொடர்ந்து சில நாட்களில் அனுரா, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வரவுள்ளார். மக்கள் அவருக்கு கொடுக்கவிருக்கும் வரவேற்பைப் பாருங்கள்! இப்படியொரு நெருக்கடி அவர்களுக்கு வரும் என்று அவர்கள் யாரும் நினைத்திருக்கவில்லை. இறுதியில் இருந்த வீட்டையும் உடைச்சுக்கொண்டு நிக்கிறார்கள். இவர்கள் தங்கள் கட்சியை தக்க வைக்க முடியவில்லை, இதில மக்களை எங்கே தக்க வைப்பது? மக்கள் முடிவு செய்தபின், அதை மாற்ற இவர்களிடம் என்ன துருப்பு இருக்கிறது அவர்கள் வரவழைக்க? ஒருவரை ஒருவர் தூற்றுவதுதான் இவர்களின் சாதனை. அனுரா, மக்களின் வேண்டுகோளை நிஞாயமாக அணுகினால்,இதுவே இவர்கள் போட்டியிடும் கடைசிதேர்தலாக அமையும். ஒருதடவை மஹிந்த சொன்னார், நாங்கள் தமிழ் மக்களிடம் நேரடியாக பேசுவோம், தலைவர்கள் தேவையில்லை என்றார், அவர் சொன்னது வேறு பிரச்சனை, ஆனால் அது இன்று நிறைவேறப்போகிறது.
  15. உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஆனால் நீங்கள் அதைவிட வேறொன்றும் மாற்றி செய்யவில்லையே? அப்படியென்றால் உங்கள் சாதனையை சுட்டிக்காட்டியிருக்கலாமே? இனிமேலும் அலங்கரிக்கிற கனவோடு பாராளுமன்றம் போகாலாமென்கிற கனவோடு இருந்தீர்களானால்; அது தவறு. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். உங்களுக்கு என்ன வேலை தெரியும்? முன்னைய வேலையெல்லாம் செய்ய முடியாது. கம்பிதான் எண்ண வேண்டும் முன்னைய பாக்கியையும் சேர்த்து. அப்படி ஒரு திறமை இருந்திருந்தால்; ஏன் இந்த ஏமாற்று வேலைக்கு போட்டியிடுகிறீர்கள்? அத்தோடு உங்களுக்கு கதிரையில் சரியாக உட்கார முடியவில்லை, எழுந்து நின்று பேச முடியவில்லை, காரில்லாமல் நடந்து செல்லவும் முடியாது, நாய் கலைத்தால் ஓடவும் இயலாது. பேசாமல் சொன்னது போல் ஓய்வெடுப்பதே உங்களுக்கு நல்லது. இவர் போன்றவர்கள் தேர்தல் மேடையில் நின்று மற்ற அரசியல்வாதிகளை விமர்சிக்கும் போது, கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள், மேடையில் ஊர் வம்பு பேசவேண்டாம், நீ என்ன செய்தாய் எங்களுக்கு? அதை சொல்லு, இனிமேல் பாராளுமன்றம் போய் என்ன சாதிக்கப்போறாய்? அதை சொல்லு கேட்க்கிறோம், அப்படியேதும் இல்லையானால் நாங்கள் போகிறோமென எழுந்து சென்று விடவேண்டும்.
  16. என்னையும் போட்டியில் கலந்து கொள்ள தேடி அழைத்த சிறியருக்கு நன்றி!. ஆனால் இதில் கலந்து கொள்ளப்போவதில்லை என மிக வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.. மன்னிக்கவும் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு.
  17. அங்கு நிற்கிறார் செயலாளர் நாயகம்! அதிலிருந்தால், தான் செய்த குற்றங்களிலிருந்து தப்பி விடலாமென கனவு காண்கிறார். சாதாரண மக்களுக்கு அளிக்கும் தண்டனைகளை விட, அரசியல் வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு அதிக பட்ஷ தண்டனை அளிக்கப்படவேண்டும். மக்களின் பிரதிநிதிகள் அவர்களை நல்ல வழியில் நடத்த வேண்டியவர்கள். பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்றுவதும், கொலை, கொள்ளை நடத்துவதும் அரசியலில் முன்னிலையில் அமரும் திருடர்களை வாழ்நாள் சிறையில் அடைக்க வேண்டும். தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு தேர்தலின்போது ஒதுங்கப்போவதில்லை மக்களுக்கு சேவை. இவர் மக்களுக்கு சேவை செய்திருந்தால் இவர் என்ன சொல்வது? மக்களே தேர்ந்தெடுத்து அனுப்புவார்களே! இவர் ஏன் கெஞ்சுகிறார்? எத்தனை அடிஉயர கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும், காசு வாங்க தரைக்கு இறங்கி வந்தே ஆகவேண்டும்.பாராளுமன்ற கதிரை அலங்கரிக்க மக்கள் ஆணை கொடுத்தால் மட்டுமே கிட்டும். வேறெங்கு இவர்களின் பருப்பு வேகும்? மக்களுடன் இருந்தாற்தான் அவர்களை சுரண்டி வாழலாம், கொலை செய்தி கூலி பெறலாம். இதைவிட இவருக்கு வேறென்ன தெரியும்? இதைத்தான் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் யாரும் கேட்பதுமில்லை. இவரால் அதை செயற்படுத்துவிக்கவும் முடியவில்லை. தேர்தல் காலங்களில் இதுதான் அவரது பிரச்சாரம். மக்களின் நலனுக்காக அரசியல் செய்பவர், அவர்களின் நலனுக்காக செய்த நன்மைகளையும் கொஞ்சம் எடுத்து விடலாமே? போன ஆசனத்துக்கு ஒன்றும் சாதிக்காதவர், வாழ்நாளில் எதையும் செய்யப்போவதில்லை. சிறியதில் நம்பிக்கையற்றவன் பெரியதிலும் நம்பிக்கையற்றவனே. அது என்ன கொள்கை? புளித்துப்போன, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதா? அங்கால ஒருவர் வேறொரு பல்லவி. இவர்களெல்லாம் தேர்தல் கால திருடர். அயோக்கியர்கள்.
  18. இவர்கள், முந்தைய அரசுகளில் அனுபவித்த சுகபோகங்களை எண்ணி மீண்டும் அடிச்சு பிடிச்சு போட்டியிடுகிறார்கள். மிக கஸ்ரப்படப்போகிறார்கள். இவர்கள் இந்தப் பதவியை மக்களால் பெற்று மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை. மாறாக சும்மா இருந்து வசதிகளை பெற்றுக்கொண்டனர், ஆகவே மக்களின் கோரிக்கைகளை ஆளுநர் பாத்துக்கொள்வார், இவர்கள் உத்தியோகஸ்தர்களாக வேலை செய்ய வேண்டும். லஞ்சம் எல்லாம் பெற முடியாது, வசதிகள் குறைக்கப்படும், கன்ரீன் என்று பேசுபவர்களெல்லாம் அதற்குரிய பணம் செலுத்தியே வேண்டியவற்றை கொள்வனவு செய்யலாம், எல்லாம் இறுக்கப்போகிறது. பாப்போம் என்ன நடக்கிறதென்று. நாடாளுமன்ற உறுப்பினர் என்று நாட்டாமை காட்டியதெல்லாம் மறைந்து, அதை சொல்லவே பயப்பட வேண்டி வரும் போலிருக்கிறது. பயங்கரவாத சட்டம் கூட இப்போதைக்கு எடுக்காமல் இருப்பது நல்லதென்றே நான் நினைக்கிறன். இந்த சட்டத்தை பயன்படுத்தியே எதிரிகளை, கேள்வி கேட்டவர்களை நசுக்கினர் இதை உருவாக்கி. அதன் ஆபத்து என்ன என்பதை உருவாக்கியவர்கள் அனுபவித்து பார்க்க வேண்டாமோ? இதை அவசரப்பட்டு எடுத்தால் மீண்டும் வன்முறைகளை ஏவுவார்கள், ஏதாவது தமிழரின் நீதியான கோரிக்கைகைகளை நிறைவேற்ற நினைத்தால் பிக்குகள், இனவாதிகள், ஊழல் பெருச்சாளிகள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்கள் செய்யும்போது பாத்துக்கொண்டு இருந்தோம், அவர்களும் கொஞ்சம் அதன் தாக்கத்தை அனுபவிக்கட்டும். இதை இப்போ அவசரப்பட்டு எடுத்தால் மஹிந்தா பட்டாளம் சும்மா இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? அதை அவர்கள் மீது ஏவும்போது அவர்களால் குறை கூற முடியுமா?
  19. எனக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். அப்போ அவர் அதிகரித்த சம்பளத்தை அளிக்கும்வரை தேர்தலை தள்ளிப்போடலாமா? இவர் ஆட்சிக்காலத்தில் கொடுத்த உறுதி மொழிகளை நிறைவேற்றினாரா? சுதந்திர தினத்துக்கு முன் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்று அறிவித்தாரே, அதற்கு என்னாயிற்று? அனுராவின் வாயை கிளறி அவரது வாக்குகளை குறைக்கவும், அதேநேரம் தமது வாக்கு வங்கியை உயர்த்தவும் பலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அவரும் தேர்தல் முடியும்வரை எந்த விளக்கமும் பதிலும் அளிப்பதாக இல்லை. அதன் பின் இவர்கள் எதுவும் கேட்க போவதில்லை ஆகவே கேட்க வேண்டியவற்றையெல்லாம் இப்போதே கேட்டு விடட்டும். பதில் செயலில் கிடைக்கும், ஆட்சி முழுமையாக அவர் கையில் வந்தபின். அதுசரி.... ஜனாதிபதியாக எத்தனையோ பேர் வந்தார்கள், போனார்கள், ரணிலார் அரசை கவிழ்த்தார்கள், அவர்கள் மேற்கூட இவர் கோபப்பட்டதில்லை, ஏன் அனுரா மீது இவ்வளவு கடுப்பு, சாபம்? ஒருவேளை தமிழருக்கு ஏதாவது நன்மை செய்து விடுவாரோ என்ற பயமா? அரசியல்வாதிகளுக்கு கஸ்ரகாலந்தான். ஆனாலும் பின்னாளில் இந்த திட்டங்களை கைவிடும் நிலையும் வரலாம். இப்போ தனது அரசியல் எதிரிகளை தள்ளி வைப்பதற்கும் மக்களின் ஆதரவை பெறுவதற்கும் அதிரடியாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பின்னாளில் தாமும் அதனால் பாதிக்கப்படுவோம் எனும்போது மாற்றப்படலாம்.
  20. எப்படியாவது அனுரா அமைச்சரவைக்குள் புகுந்து பதவி பெறுவது என முழு மூச்சாக நிற்கிறார் சுமந்திரன். மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடுவோம் என்றார்கள் வெளியிடவில்லை,முடிந்தால் வெளியிடுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டவர்,அந்த அரசின் மீது பல குற்றச்சாட்டுக்களை அடுக்கியவர், இப்போ சேர்ந்து பயணிக்க காத்திருக்கிறார்.
  21. சொன்னதுதான் சொன்னியள், யாருக்கு வாக்களிப்பது என்றும் சொன்னால் வாக்காளருக்கு சௌகரியமாக இருக்கும். அவர்கள் நம்பி வாக்களித்து ஏமாந்ததாலேயே மக்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் சிங்களத்துக்கு வாக்களித்தால்; அது நடக்கும், இது நடவாது என்பவர்கள், அந்த வாக்குகளை வேண்டி அவர்கள் என்ன சாதித்தார்கள்? அதனால் மக்கள் என்ன பயனடைந்தார்கள்? அந்த வாக்குகளை வைத்து என்ன செய்கிறார்கள்? அந்த வாக்குகளுக்கு என்ன நடந்தது? என்றாவது விளக்குங்கள். பெரும்பான்மை கட்சிகள் எப்படி இவ்வளவு இலகுவாக தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கு பெற முடிந்தது? களைத்துப்போயிருக்கும் மக்களை சும்மா குறை கூறாதீர்கள். அதற்கு காரணமானவர்களை குறை கூறுங்கள்.
  22. அது ஏன் இந்த பேட்டி எடுப்பவர்கள் பேட்டியலாளரை முழுமையாக பேச விடாமல் குறுக்கிடுகிறார்கள்? பல பேட்டி எடுப்பவரை பார்த்திருக்கிறேன், தாங்கள் விரும்புவதை பேச வேண்டும் என விரும்புகிறார்களா அல்லது பொறுமை இல்லையா?எதற்கு ஒருவரை அழைத்து இப்படி அவமானப்படுத்துகிறார்கள்? அவர்கள் பேசி முடியும்வரை பொறுத்திருந்து கேள்வியை தொடரலாமே? பேட்டியை பார்க்கும்போது எரிச்சலாக இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.