Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by satan

  1. வியாழேந்திரனின் கட்சி, "ஜனநாயக தேசிய முன்னணி." இப்போ பெயர் மாற்றம் செய்யப்பட்டதோ தெரியவில்லை. எல்லோரும் ஒரே வட்டத்துக்குள் சுற்றுகிறார்கள். ஜனநாயக தேசிய கூட்டணி, ஜ. தே. முன்னணி. ஐக்கியம், ஜனநாயகம், தேசியம், சுதந்திரம் என்று மாற்றி மாற்றி மக்கள் காதில் பூச்சுற்றுகிறார்கள். இப்போ, மக்கள் கட்சியை பார்த்து வாக்களிப்பதில்லை, ஒன்று செயற்பாடுகளை தேடுகிறார்கள், அப்படி ஒருவரும் இல்லை. ஆகவே ஏதோ ஒன்றுக்கு கடமைக்காக வாக்களிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. மக்கள் வாக்களித்து, போராடி, களைத்துவிட்டார்கள். இழப்பும் ஏமாற்றமும் தோல்வியும் வறுமையும் விரக்தியும் மிஞ்சியுள்ளது. தமிழ், மக்கள் தலைமைகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்களுக்குள் தலைமைக்காக அடிபடுகிறார்களேயொழிய அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவுமில்லை நம்பிக்கையாய் இருக்கவுமில்லை. மக்களுக்கு அந்த நம்பிக்கையுமில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?
  2. ஐயா.... குற்றச்சாட்டு உண்மையாயிருக்கிற பட்ஷத்தில் தானே போலீசில் முறைப்பாடு செய்யலாம். சரி.... முறைப்பாடு செய்யவில்லை, எப்படி எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் அதிலும் தமிழ் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படாத அந்த உயர் பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்பட்டது? அதை அவர் என்ன முறையில், மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார்? அதே புலம்பெயர்ந்தோரிடம் எந்த பாதுகாப்பும் இல்லாமல் போய் பகிரங்கமாக கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அது முடிகிறது? புலம் பெயர்ந்தோர் சில ஆட்களுக்கு பணம் அனுப்பி கொலை செய்ய திட்டம் போட்டார்கள் என்றால்; எப்படி பகிரங்கமாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்? அந்த கொலைகாரர் யார்? இரண்டு முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டதாக செய்திகளில் வந்தன. பின் ஏன் அவருக்கு இன்னும் பாதுகாப்பு? அன்றைய சிங்களஅரசு தெரிவித்தது, தங்களுடன் இணைந்து செயற்படும் பாராளுமன்ற உறுப்பினருக்கு உயிராபத்து இருப்பதாக. அப்போ அவர் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுத்தார் என்பது உண்மை, வாக்களித்த மக்களுக்கு அவர் செய்வது துரோகம் என உணர்ந்த அரசு அவருக்கு பாதுகாப்பளித்தது. மற்றப்படி அவர் தமிழ் இனத்துக்கு, தனக்கு வாக்கு போட்டவர்களுக்கு என்ன செய்தார்? ஒரு வீரன், ஒரு துரோகி இவர்களுக்கு உயரச்சுறுத்தல் இருப்பது வழமை. இவர்தான் மேடைகளில் தன்னை துரோகி என்று மக்கள் சொல்வார்கள் நான் அதற்கு அஞ்சசப்போவதில்லை என அடிக்கடி சவால் விடுகிறாரே. ஈஸ்ரர் குண்டு வெடிக்கமுன் எத்தனை உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வுத்தகவல்கள் வந்தும் தடுக்க தவறிய புலனாய்வு, சுமந்திரனுக்கு விஷேச புலனாய்வு பாதுகாப்பு வழங்கியதாம். முஸ்லீம் தீவிர வாதிகள் போலீசாரை கொலை செய்து பறித்த ஆயுதங்களை, முன்னாள் போராளிகள் செய்தார்கள் என கைது செய்த புலனாய்வு, சுமந்திரனுக்கு புலம்பெயர்ந்தோரால் உயிராபத்து என துல்லியமாக கண்டுபிடித்து உயர் பாதுகாப்பு வழங்கியதாம். சொல்பவர் சொன்னாலும் கேட்ப்பவருக்கு மதி இருக்க வேணும், இருக்கு.
  3. ஐயோ...... பயமுறுத்துகிறியள். மஹிந்த, இப்படியொரு பதாகை வைத்தார் பாருங்கோ.... கண்ணூறு பட்ட மாதிரி அதோடு முடிவாகிப்போனது அவரது அரசியல் கனவு.
  4. ஆயிரத்தில் ஒருவன்! இவ்வளவையும் வாசித்து தாங்கிப்பிடித்து வாக்களிக்கும் மக்கள் மயங்கி விழப்போகிறார்கள். தேர்தல் திணைக்களம் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் அடையப்போகிறது. ஒருமித்து மக்களுக்குகாக போராடி உயிரை விட்ட மண்ணில், இத்தனை கட்சிகள் முளைத்திருக்கின்ற.
  5. "வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா." தமிழ் பொதுவேட்பாளர் தேர்தலில் நின்றபோதும் குறை கூறினார்கள். இப்போ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் குறை கூறுகிறார்கள். கழுதை வியாபாரியின் கதைதான் இது.
  6. வியாழேந்திரனின் தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் நினைக்கிறன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரென. அதன் சின்னம் சங்கு, சித்தார்த்தன்.
  7. செலஸ்ரீன் என்பது தமிழ் கிறிஸ்தவ பெயர். ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன். செலஸ் ரீன்
  8. சில கருத்துக்கள் வேறு வேறு பெயரில், வசனநடை, பொருள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன, பதியப்படுகின்றன. ஒரே கருத்து பலபெயரிலா? அல்லது பல பெயரில் ஒருவரா?
  9. வாசிப்பதில்லை ஆனால் பதில் எழுதுகிறீர்கள் அது எப்படி? நான் லைக்குகளை எதிர்பார்த்தோ, விமர்சனங்களுக்கு பயந்தோ எழுதுவதில்லை. தமிழரசுக்கட்சியில் எந்த வேட்பாளருக்கும் இல்லாத உயிரச்சுறுத்தல், பாதுகாப்பு சுமந்திரனுக்கு மட்டும் ஏன்? எதற்காக? அப்படியென்றால்; அவர் சிங்களத்தோடு இணைந்து வேலை செய்கிறார் என்பது நிதர்சனம். அப்படி புலம்பெயர்ந்தோரால் அவருக்கு ஆபத்து என்றால்; அவர் எப்படி வெளிநாடுகளுக்கு செல்கிறார், பகிரங்கமாக கூட்டங்களில் கலந்து கொள்கிறார்? சுமந்திரனின் சுத்துமாத்துகளை மக்கள் விமர்சிக்கிறார்களேயொழிய அவரது மதத்தையல்ல, அவர் மற்றைய மதத்தினரோடேயே கட்சியில் இருக்கிறார், மற்றைய மதத்தினரின் வாக்குகளை கேட்கிறார், மற்றவர்களின் பதவிகளை கையகப்படுத்துகிறார், தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடுகிறார், முடிவுகளை எடுக்கிறார், நியமனங்களை செய்கிறார், அப்படியிருக்க பொருத்தமில்லாத காரணத்தை நீங்கள் வைத்தீர்கள் அதற்கான பதில்களையே நான் கொடுத்திருந்தேன். நீங்கள் அதை அலட்டல் என்று நினைத்தால்; கடந்து போங்கள். அதை விட்டு தேவையற்ற அநாகரிக வார்த்தைகளை தவிருங்கள். இங்கு ஒரு அநாகரிக வழமையுண்டு. தங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகாதவரை, உண்மையை எடுத்துச்சொல்பவரை கருத்தால் கையாளத்தெரியாவிட்டால்; அவர்களை இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது. இது அவர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனம். மழை மேகங்களால் சூரியனை மறைக்கமுடியாது!
  10. தனக்கு சொந்தமான காணிகளை விற்று காருக்கு பெற்றோல், ஊழியருக்கு சம்பளம் இப்படி பல செய்கிறாவாம். காணிகளை வாங்க ஒரு காலம், விற்க ஒரு காலம், வீர வசனம் பேச ஒருகாலம், அனுதாபம் தேட ஒருகாலம். இதுதான் வாழ்க்கை. ஏழை விழுந்தால் தனது சொந்த முயற்சியால் சீக்கிரம் எழுந்து விடுவான். அவர்களுக்கு சிலர் இரங்குவர். அரசியல்வாதி விழுந்தால் யாரும் தூக்கிவிடவர மாட்டார்கள். விலகியே செல்வர். உதாரணம்; இவர், மஹிந்த, கோத்தா, சரத் பொன்சேகா இப்படி நீளும் வரிசை.
  11. ஏன் அவரை லஞ்ச தடுப்புக்காவலர் கைது செய்யவில்லை? இவர் லஞ்சம் வாங்காவிட்டால், வேறொருவர் வாங்குவர். இவரிடம் இருந்து வந்தவர் தானே மஹிந்த. அவரிடம் எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது? இவர் ஊழல் மோசடிக்காரரை தண்டிக்காது விட்டால் லஞ்சத்தைஅனுமதித்தார் என்பதுதானே அர்த்தம். நாடு வங்குரோத்தில்த்தான் இயங்குது என்பதை யாரும் இவருக்கு இன்னும் தெரிவிக்கவில்லைப்போலும்.
  12. வீட்டில், சேடன், வேதாளம் எல்லாம் புகுந்து விட்டது, இனி என்ன மாற்றம் செய்யப்போகிறீர்கள்? முதலில் அவற்றை வீட்டை விட்டு விரட்டுங்கள். முடியாவிடில் வீட்டை இடியுங்கள்.
  13. அப்போ, இதுவரை இதை திருடி ஒளித்து வைத்திருந்தவர் இவர்தானா? தெரியாமல் மாட்டிக்கினார். இவரை துணிந்து கைது செய்து விசாரணை செய்யலாம். தானாகவே துணிந்து சாட்சியமளித்துள்ளார்.
  14. அரசாங்கத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது? மக்களின் வரிப்பணம், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று சர்வதேசம் வழங்கிய நிதி, கழட்டியும் இடித்தும் கொண்டு போனவை எல்லாவற்றையும் திரும்ப கொண்டுவந்து படம் காட்டுகிறார்கள். இதுதான் எதிரியின் தந்திரம்!
  15. கிணறு வெட்ட பூதம் கிழம்பியதுபோல், தங்களையுமறியாமல், மதத்தை அனுதாபத்திற்கு இழுத்து, விழும் சொற்ப வாக்குகளையும் இழக்க வாய்ப்பளிக்கிறார்கள் அதி புத்திசாலிகள்! செயலற்ற வாய் வீரரின் கருவியது.
  16. அவர்கள், தாங்கள் தெரிந்தெடுத்து அழகு பாத்த தங்கள் தலைவனை விரட்ட எடுத்த முயற்சியது. அதில் நமக்கு பங்குமில்லை பாகமுமில்லை. தமிழீழ போராட்டம் நடக்கும்போது அவர்கள் பங்குபற்றவில்லையே.
  17. உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ் நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை. தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!
  18. அடங்காகுதிரைக்கு கடிவாளம் ஒன்று அவசியம். பின் நான் அப்படி சொல்லேலை, பத்திரிகைக்காரர் திரித்து விட்டார்கள் என்று மறுதலிக்க வாய்ப்பில்லை.
  19. அட, இவர் என்ன இப்பிடி பிரட்டிப்போடுறார்? இவர்களுடைய மூளை கணத்துக்கு கணம் மாறும்போல.
  20. போனவருடம், உள்ளூராட்சி தேர்தல் நடைபெறப்போகிறதென்று ரணில் அறிவித்தவுடன் ,தமிழ் தேசிய கூட்டமைப்பை கழட்டி விட்டு தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதாக இந்த சட்டாம்பி முடிவெடுத்தார். ஆனால் அந்த முடிவை அங்கத்துவ கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை. அவர்கள் வழமைபோல தங்கள் செயற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் பத்திரிகைகளில் இதை அறிவித்துள்ளார் இந்த மேதை. இதையறிந்த கட்சிகள் இதுபற்றி இவரிடம் வினவியபோது; இந்த அரிச்சந்திரன் சொன்னார், கூட்டமைப்பு தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு, ஆகவே தனித்து போட்டியிடும் தீர்மானம் இல்லை என்று சமாளித்தார். அவர்களும் உண்மையென நம்பி இருக்கும்போது, இந்த ஒரு மனநிலை இல்லாதவர் சொன்னார், வேறு கட்சிகளுக்கு போகும் வாக்குகளை தடுப்பதற்காக நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம், பின் மீண்டும் ஒன்று சேருவோம். என்று விட்டார் பாருங்கோ ஒரு விடுகை. அவர் அப்பவே போட்ட திட்டம் தமிழரசுக்கட்சியை பிரித்து மற்றவர்களை விரட்டுவதென்று. காரணம் சரியென்றால் ஏன் அதை அவர்களுக்கு விளக்கி கூறியிருக்கலாமே? மனதில் நெல்லெண்ணம் இல்லை, எப்போ, யாரை எப்படி விரட்டுவேன், எதை கைப்பற்றுவேன் என்பதே அவர் சிந்தனை. வாக்களித்த மக்களின் கோரிக்கை என்ன, தனது பணி என்ன என்று யோசிப்பதில்லை. ஏனெனில் அவர் செயல் வீரரல்ல, ஆட்களை சேறடித்து விரட்டி அதை சாகசம் எனக்காட்டி எப்படியோ நுழைந்து விடுவார். இதற்கெல்லாம் வைப்பார் ஆப்பு அநுர. இப்போ சேர்ந்திருப்பவர்களுக்கு எப்போ பிரியாவிடை கொடுப்பாரோ தெரியவில்லையே. சரி.... யாரின் கட்சியையும் சின்னத்தையும் யார் திருடினார்களாம்? அவையும் அவர் சொத்துக்களா? அவர்கள் கட்சி, அவர்கள் சின்னம், இவர் ஏன் அந்தரப்படுகிறார்? எல்லாம் வேண்டுமாமோ தெரியவில்லை.
  21. இண்டைக்கு தொலைஞ்சசீங்க போங்கோ! காலையில் சொன்னதை மாலையில் மறுப்பது, தனக்கு பிடிக்காதவர்களை திட்டம் போட்டு தாக்கும் தந்திரம், திறமை, பொருத்தமானவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் முடக்குவது, ஓரங்கட்டுவது, மற்றவர் அவர்களை தொடர்வதை தடுத்து தன்னை முன்னிலைப்படுத்துவது இன்னும் பல....
  22. இந்த குற்றச்சாட்டை நிர்வாகம்தான் உறுதிப்படுத்தவேண்டும். ஐயா, முன்னாள் புலி உறுப்பினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி மஹிந்தா இவருக்கு இராணுவ பாதுகாப்பளித்தது. இவர் இராணுவத்துடன் வலம் வந்த படங்களும் பத்திரிகைகளில் வந்தது. என்னால் தேடி எடுக்க முடியவில்லை, முடிந்தவர்கள் இணைப்பார்கள் என நம்புகிறேன். அதன் பின் கொக்கிளாய் தொடங்கி பொலிகண்டி வரை பேரணி வந்ததை கண்ட அரசு, சுமந்திரனின் குற்றச்சாட்டு பொய்யானது, அப்படி அவரது உயிருக்கு ஆபத்து இருந்தால் எப்படி ஊர்வலம் போக முடியும் என்கிற கேள்வியுடன் அவருக்கு அளிக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
  23. சுமந்திரனின் பிரசங்கத்திற்கு கைதட்ட தெரிந்தால் போதும், கேள்வி ஏதும் கேட்கக்கூடாது. அவர்களையே தேடி எடுத்திருப்பார். இவருடன் கூட்டு வைப்பவர்களின் திறமையை இலகுவில் கணக்கிட்டு விடலாம்
  24. அவர்களுக்கு முன் சுமந்திரன் சந்தித்து, மூக்குடைபட்டு வந்து, பிரச்சார மேடைகளில் மற்றையவரை கேலிபண்ணுவதும் சேறடிப்பதும் அதோடுஅனுராவுக்கும் சவால் விடுகிறார்.
  25. தமிழ் இளைஞர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி இராணுவ பாதுகாப்பு பெற்று வடக்கிற்கு வலம் வந்தவர், சிங்கள மக்களுடன் வாழ்வது எனது அதிஸ்ரம் என்று பேட்டி கொடுத்தவர், இன்று எப்படி இளைஞர்களை கட்சியில் சேர்க்கிறாராம், வெட்கமில்லாமல் வடக்கு மக்களிடம் வாக்கு கேட்க்கிறார்? பேச்சாளர் பதவிகாலம் முடிந்துவிட்டது, அதிலிருந்து விலகவில்லை, தலைவர் பதவியை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார். அவருக்கு தெரியும் இவைகளை விட்டால் தன்னை ஒரு தூசாக கூட யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது. தட்டித்தவறி வருங்காலத்தில், யாரும் தங்கள் கட்சியிலோ, வேறு எந்த குழுவிலோ இவரை சேர்த்து விடாதீர்கள், எல்லோரையும் இரண்டுபடுத்தி, விரட்டி விட்டு அமர்ந்துவிடுவார். பின் இவரை அப்புறப்படுத்துவது மிக மிக கஸ்ரம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.