Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இந்த கேள்வியை சச்சியரிடம் கேட்டீர்களானால், உங்களுக்கு விளங்கும்படி முழுமையான பதில் கிடைக்குமென நம்புகிறேன்.
  2. இதை நீங்கள் முன்பிருந்த அரசாங்கங்களிடமும் கேட்டிருக்கலாமே? இன்னும் பாராளுமன்றம் முறையாக இயங்காத நிலையில், தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எதற்காக இவ்வளவு அவசரம் கேள்விக்கு? என்ன நெஞ்சு பதறுது எல்லோருக்கும். ஒவ்வொரு குற்றச்சாட்டு வைத்து அனுராவை கவிழ்க்கிற திட்டம். இவர்களை சேர்க்கிறாருமில்லை, சட்ட நடவடிக்கை என்று வேற பயப்படுத்துகிறார். நீங்கள் துள்ளத்தான் செய்வீர்கள். அப்போ, ரணிலின் வேலைத்திட்டமும் பிழை என்கிறீர்களா? ஏன் அதை ரணிலுக்கு அவரது ஆட்சியின் போது தெரியப்படுத்தவில்லை? அவரோ, கண்ணாடி தண்ணீர்குவழையுடன் மேடையில் உரையாற்றுகிறார். அவரைப்பார்த்தா இந்தக்கேள்வி? தம்மை மறைக்கவும் பாதுகாக்கவும் பொய் பொய்யாய் சொல்லுகிறார்கள்.
  3. அடப்பாவமே! இப்படியா ஏமாறுவது? முறைப்படி விஸா எடுத்து போய் சுற்றிப்பார்த்து வந்திருக்கலாமே, இவ்வளவு காசு கொடுத்துப்போய் வெளிநாட்டில் என்ன செய்ய நினைத்தார்?
  4. என்ன.... இன்றைக்கு சதிராடுறதெண்டே நிக்கிறியள் எல்லோரும். அவரவர் தங்கள் கவலையை மறைக்க, மறக்க பல விடயங்களில் கவனத்தை செலுத்துகிறார்கள், நீங்களும் விடுவதாயில்லை.
  5. ம்ம்.... பொது வேட்பாளருக்கு வாக்களித்து எமது தீர்வை குழி தோண்டிப்புதைக்கிறார்கள் என்று சவால் விட்டார் சுமந்திரன், இன்று அவரின் நிலை என்ன? வெட்கமில்லாமல் ஏன் ஜனாதிபதியை தனியாக சந்திக்க சென்றார்? பழக்க தோசமாய் இருக்குமோ, தனியாக கதைத்து பதவிகளை எடுப்பது? பாராளுமன்றத்தில் அடித்த கூத்துகளையெல்லாம் அமசடக்கமாய் பாத்துக்கொண்டிருந்து யாரை எங்கே வைப்பது என்று தீர்மானித்திருப்பார்கள் போலும். அவர்களோடு நின்று போட்டோ எடுத்து, வெளியிட்டால் மக்கள் ஏமாந்து அனுராவுடன் நட்பு கொண்டாடுகிறார்கள் என நினைத்து தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்கிற நப்பாசை, உங்களுக்கு நாங்கள் பணி செய்ய காத்திருக்கிறோம் எனும் செய்தியை சொல்லவும் போயிருப்பார்கள் போலும். எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது. சுமந்திரன், டக்கிளசு எல்லா கட்சிகளையும் விமர்சித்தார்கள், இன்று இவர்கள் தென்பகுதியாலும் விமர்ச்சிக்கப்படுகிறார்கள். தன் சட்டியில் என்ன தீயுது என்று பார்க்காமல், மற்றவர் சட்டியில் என்ன அவியுது என்று பிரலாபித்ததன் பயன் உடனேயே கிடைத்து விட்டது. இனியாவது பொத்திக்கொண்டு இருப்பார்களா இவர்கள்?
  6. வராமல் விட்டால் தப்பித்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள். என் கேள்விக்கென்ன பதில் என்று தேடிதேடியே கேள்விக்கணை தொடுப்பார். யாழையே கொஞ்ச நாளைக்கு திறவாதீர்கள். இன்னொரு விஷயம் ஆளுக்கு கிடைக்குமட்டும்.
  7. ஐயர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? சரி, உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் நாங்கள் கேட்க்கிறோம்.
  8. ஐயா! நீங்கள் கிறிஸ்தவர் என்று தெரிகிறது, நீங்கள் ஏன் சைவரின் சம்பிரதாயங்களை நோண்டுகிறீர்கள்? ஒரு அறிவுக்கு கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் தெரிந்ததை சொல்கிறார்கள், அதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லை. கேள்விமேல் கேள்வி. இது அறிவுக்காக எழுப்பப்பட்ட கேள்வியாக தெரியவில்லை. ஏதோ விதண்டா வாதம் புரிகிறது.
  9. ஏமாற்றத்தின் வலி அப்படி! இந்த முடிவை ஏற்க மக்களை முன் தள்ளியிருக்கிறது. இருந்தும், சும்மா அதை சாதித்தோம், அதை சொன்னோம், மக்களுக்காக மக்களோடு இருக்கிறோம் என சவடால் விடுகிறார்கள். அப்படி அவர்கள் ஏதும் ஆற்றியிருந்திருந்தால்; எப்படி இவ்வளவு கட்சிகள் உருவாகின? அனுரபற்றி தெரியாமலேயே அவர்கள் பின்னால் போகிறார்களே? அதற்கு நம்ம ஏக பிரதிநிதிகள் ,பின்வாசல் பிரதிநிதிகள் பதில் சொல்லட்டுமேன்?
  10. இல்லை கந்தையர்! ஒரு மாற்றம் வராதா என்கிற ஏக்கம், எல்லோரும் மக்களை ஏமாளிகளாக பயன்படுத்துகிறார்கள் என்கிற வருத்தம், அதிலும் பலமிழந்த மக்களை ஏமாற்றும் சொந்த மனிதர்கள் மேல் உள்ள கோபம், இதுவரை ஆட்சி செய்யாத கட்சி, நம்மைப்போல் வருத்தங்களையும், தோல்விகளையும், இழப்புகளையும் சந்தித்த கட்சி. எனது தாயார் சொல்வார், இவர்கள் அனுபவித்த வேதனைகள் பற்றி, அங்கங்கு சடலங்கள் மிதந்ததும், வீட்டுக்கு அனுப்பி வைத்ததும். ஆகவே அவர்களுக்கு எங்கள் தாகம் வருத்தம் புரியும். உண்மையாகவே விடுதலைக்காக போராடியவர்களென்றால் எங்கள் உணர்வுகளை மதிப்பர், பாதிக்கப்பட்ட எங்களுக்கு தனது கரத்தை நீட்டுவார். இல்லை சர்வாதிகாரத்துக்கு போராடியவர்களென்றால் எந்த மாற்றமும் நிகழாது. ஆனால் அநுர மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது, எடுக்கவும் விட மாட்டார்கள், பொறுத்திருந்து பாப்போம்! எல்லோராலும் ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள், இனியும் ஏமார இடமில்லை.
  11. அப்போ ..... உங்களுக்கு இதுபற்றி நிறைய தெரிந்திருக்கு என்று அர்த்தம் கொள்ளலாமா? எத்தனையோ விடயங்களை அலசி ஆராயும் உங்களுக்கு, இது தெரியவில்லையா? உங்களுக்கு தெரிந்ததை பதிவிட வேண்டியதுதானே, அதை விட்டு, ஏன் சமராடிக்கொண்டிருக்கிறீர்கள்? நான் மரக்கறி சாப்பிடுபவன், மாமிசம் சாப்பிடுபவனிடம் போய், நீ ஏன் மாமிசம் சாப்பிடுகிறாய் என்று கேள்வி கேட்டு அடம் பிடிக்கலாமா? பிடிக்காவிட்டால் விலத்தி போக வேண்டியது. நீங்கள் அறிந்து கொள்வதற்காக கேள்வி கேட்ப்பதில்லை, உதெல்லாம் உங்கள் குசும்பு. கபிதனுக்கு விளக்கம் போதுமா? எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் விளங்காது, ஏற்றுக்கொள்ளவும் மாட்டார். அவர் ஒன்றும் விளங்காமல் கேட்கவில்லை, தகராறு பண்ணுவதற்கென்றே வந்திருக்கிறார். நீங்கள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு விதண்டாவாதம் செய்வார். பொறுமை அவசியம்! பின்னர் உங்களையே தலையை பிச்சுக்கொண்டு ஓட பண்ணுவார்.. நான் எடுத்துச்சொன்னால் யாரும் கேட்பதில்லை, பதிலை கொடுத்து மாட்டிக்கொண்டீர்கள். இனி மீண்டு பாருங்களேன், துரத்தி துரத்தி கேள்வி கேட்பார்.
  12. ஐயோ! பிரதம மந்திரிகனவு என்னாச்தம்மை பற்றிசு? நெஞ்சுக்குள்ள பாலை வார்த்தீர்கள். மீண்டும் மீண்டும் நயவஞ்சகர்கள் பதவி பெற்று தமிழரை அடிமையாக சீட்டு எழுதி கொடுத்துவிடுவார்களோ என்று பயந்துவிட்டேன். நீங்கள் கொஞ்சம் மாற்றி சிந்திக்கிறீர்கள், வெற்றியோ தோல்வியோ அது உங்களை மட்டுமே சாரும், மக்களின் பணம் மிச்சம் ஆகும் இந்தப் பெருச்சாளிகளை ஒதுக்கினால். அதனாற் தான் மக்கள் நிராகரித்தால் தான் பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார் கனவான். இவர்கள் வென்றாலும் இல்லையென்றாலும் பாராளுமன்றம் போன காலம் மாற்றி, வென்றாலும் இல்லையென்றாலும் பதவிகள் இல்லை. பிறகு இவர்களுக்கு அங்கு என்ன வேலை? ஆசனம் கிடைக்காததால் கட்சியை விட்டு வெளியேறினார்கள், பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைகிறார்கள் என்று விமர்சித்தவர்கள், இப்போ தலையை தொங்கபோடத் தொடங்கிவிட்டார்கள். மக்களை ஏமாற்றி பாராளுமன்றம் போனவர்களுக்கு சரியான செக் பகிரங்கமாக வைத்திருக்கிறீர்கள் வரவேற்கத்தக்கது! ஆனால் ஒன்று, உங்கள் கட்சியில் பல வழக்குகளை தான்தான் கையாளுகிறேன், தனக்கு பிரதம மந்திரி பதவியை வழங்க அழைப்பு விடுப்பார் ஜனாதிபதி என்று காத்திருக்கிறார். நீங்களோ எந்தபதவியும் இல்லை என்று ஆணித்தரமாக சொல்கிறீர்கள் நல்லது. ஒருவர் கொண்டு வரும் திட்டத்தை மற்றவர் எதிர்ப்பதும், பின்னர் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டி தப்பிப்பதுவும் இனிமேல் நடக்காது. உங்கள் வாக்குறுதிக்கு நீங்களே பொறுப்பு, வாக்கு பத்திரம். அரசியலில் இருந்து விலகுகிறோம் என்பதும் பின்னர் வேறொரு காரணத்தை சொல்லி அரசியல் மோசடி செய்வதும் இனிமேல் ஆகாது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, தாம் மக்கள் நலன் சார்ந்து செய்த பணிகள், செய்யப்போகும் பணிகள் பற்றி பிரச்சாரம் செய்யாமல், மற்ற கட்சிகளை விமர்சிப்பவர்களும் தேர்தலில் நிற்பது தடுக்கப்படவேண்டும். மக்களுக்கு சேவை செய்யாமல் பதவி வகிப்போரும் தடுத்து நிறுத்தப்படவேண்டும். பெறும் ஊதியத்திற்கு சரிவர சேவை செய்து உடுத்திப்படுத்தப்பட வேண்டும். மெல்ல மெல்ல மாற்றத்தை நோக்கி நகர்ந்து, நல்லதே நடக்க, துன்பியல் வரலாற்றை மாற்ற முயற்சிக்க வாழ்த்துக்கள்.
  13. சுமந்திரன் தன் குருவை விஞ்சிய சீடன். விக்கினேஸ்வரனுக்கு சட்டம் படிப்பிப்பார், மாவையருக்கு கட்சியை பற்றி சொல்லுவார். கட்சியுடன் கலந்துரையாடி முடிவெடுப்போம் என்கிறார். கட்சித்தலைவரின் பதவியை அடாத்தாக பிடித்து வைத்துக்கொண்டு, அவரின் முடிவுகளை உதாசீனம் செய்து, தன் முடிவை நிகழ்த்திக்கொண்டு, கட்சி, பரிசீலனை, முடிவு என்று தமாசு விடுகிறார்.
  14. அதனால் சுமந்திரனுக்கு எந்த பாதிப்புமில்லை பதவி முக்கியம்.
  15. அதுமட்டுமா, காலையில் ஒன்று, மாலையில் வேறொன்று சொல்வார். வடக்கின் வசந்தத்தின் அடுத்த பக்கம் இவர்.
  16. எதை கொடுத்தாலும் இவர்கள் பேரம் பேசப்போவதில்லை. சும்மா பழக்க தோஷத்தில பேசுறார் விடுங்கோ....
  17. கொஞ்சம் தெளியிற மாதிரி இருக்கு! கொளுத்தி விட்டிட்டு நல்லாய் எரியுமட்டும் காத்திருக்கிறார், ஆனால் அது அணைந்து விட்டது.
  18. சரி இருவரையும் சொல்லி இருப்பார் என்று இப்போதைக்கு எடுத்துக்கொள்வோம் மீரா வரும்வரை. மீரா......! விரைந்து வந்து விளக்கம் தரவும். இல்லையேல், விபரம் தெரியாமல் ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கப்போகிறார்கள்.
  19. இன்றைக்கு களம் சூடு பிடிக்கப்போகுது. மீராவின், கோத்துவிட்ட சிறியரின் தலையும் சேர்ந்து உருளப்போகுது. விபரீதம் புரியாமல் சிங்கத்தின் வாலை பிடித்து இழுத்து விட்டார்கள். பாவம் மீரா! சுட்டிக்காட்டியது சச்சியரை.
  20. இதற்குத்தான் மக்களிடம் வாக்கு பெற்று நேரம் செலவு செய்கின்றனர். சாள்சும், சிறீதரனும் கலந்து பேசி முறைப்பாட்டாளித்திருப்பார்களோ? இவர்களுக்கு குடைச்சல் கொடுப்பவர்கள் சி. வி. கே. சிவஞானம், சுமந்திரன், சத்தியலிங்கம். சத்தியலிங்கம் தன்னை தேசியபட்டியலில் இணைத்த சுமந்திரனுக்கு நன்றிக்கடன் ஆற்றுகிறார். சுமந்திரன் ஒருவரை அணைப்பது; அவர்களை வைத்து தனது காரியங்களை நிறைவேற்றுவது, அதன்பின் விரட்டுவது.
  21. கடைசியில், தோத்துப்போன எல்லாப்பிரிவினரும் மதத்துக்கு சேறடித்து தம்மை மறைக்க முனைகிறார்கள். அந்த மதத்துக்குரிய பெயரை வைத்துவிட்டால் மட்டும் அந்த மதத்துக்கு உரியவர்கள் ஆகிவிட மாட்டார்கள். அதன் போதனையின்படி, அவர்களின் கடவுளை மட்டும் நம்பி வழிபடவேண்டும், தன்னைப்போல தன் அயலானையும் நேசிக்க வேண்டும், பணம் புகழ் பொருள் பதவியை கடவுளாக நேசித்து மற்றவரை விரட்டி, அவர்களின் உரிமைகளை பறித்து வாழ்வது கிறிஸ்தவம் கிடையாது. ஆகவே சுமந்திரனை மதத்தின் பேரால் தூற்றுவதும் அல்லது போற்றுவதும் அவரின் தவறுகளை மறைப்பதும் ஏற்புடையதல்ல, அது கிறிஸ்தவத்தை பழித்துரைப்பது போலாகும். தங்கள் சுயநலத்திற்க்கு மதத்தை பாவிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் உடுவில் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியில் அதிபர் மாற்ற பிரச்சனை ஏற்பட்டு, அக்கல்லூரியின் மாணவிகளை தெருவில் விட்டு கதவுகளை மூடிய சம்பவத்தின் பின்னால் சுமந்திரன்தான் என குற்றச்சாட்டு இருக்கிறது. அவருக்கு மதம், சமாதானம், ஒற்றுமை என்பது எட்டாப்பொருத்தம். தயவு செய்து உங்களின் காழ்ப்புணர்ச்சியில் சுமந்திரனை புனிதனாக்க முயற்சிக்க வேண்டாம். சுமந்திரன் எங்கே போனாலும் பிரச்சனை ஏற்படுத்தாமல் திரும்ப மாட்டார். அது அவரின் கூடப்பிறந்த இயல்பு. அவரை குற்றம் சாட்டுவதை விடுத்து அவரை விட்டு விலத்தி நடத்துவதே புத்திசாலித்தனம். ஒருவரை எல்லோரும் பேசுகின்றனரென்றால்; அவர் ஒரு சமூக நலன் கொண்டவராக அதற்காக உழைப்பவராக இருப்பார் அல்லது சமூகத்தை தன் சுயநலனுக்காக சீரழிப்பவராக இருப்பார்
  22. ஆல் போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி, பதினாறும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் செழித்து, பார் போற்ற வாழ மணமக்களை வாழ்த்துகிறேன். அறியத்தந்த பாஞ் அவர்களுக்கும் நன்றிகள் சேர்த்து.
  23. அழைப்பிற்கு நன்றி சிறியர். இதைத்தானே நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். சிலர் நாங்கள் தேவையில்லாமல் குறைகூறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அவரை குறை கூற எங்களுக்கு என்ன அவசரம்? அவரோடு வாய்க்கால் வரம்புச்சண்டையா எங்களுக்கு ?தேவையில்லாத கம்பு செருகி அவரை மறைக்கிறார்கள். அவர் யாராகவும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு இனம், அதற்காக இழக்க வேண்டியதெல்லாம் இழந்து ஏதுமற்று நிற்பவர்களின் உரிமையை தாரைவார்த்துக்கொடுக்க இவருக்கு என்ன அருகதை? ஆதாரத்தோடு எழுதினால், பந்தி பந்தியாக அலட்டல் செய்கிறோமென்கிறார்கள். இதிலிருந்தே இவர்களும் அப்படியானவர்கள் என்றே புரிகிறது. இவர்களை திருத்த முடியாது, மாறவும் தயாரில்லை. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்!
  24. இதை சொல்ல வெட்கமில்லை? அறுபத்தொன்பது லட்ஷம் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அவரை, சிங்களத்தின் கதாநாயகர்களை, புலிகள் ஆட்சியிலிருந்தே விரட்டியுள்ளனர். அப்போ, நீங்கள் பெற்ற வெற்றி, கொண்டாட்டம் எல்லாம் புஷ்வாணமே! உங்களை விட புலிகள் கெட்டிக்காரர். அறுபத்தொன்பது லட்ஷம் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன் நான், ஒரு சிறு தொகையினரின் போராட்டத்தால் நான் ஆட்சி விலகமாட்டேன் என்று விதண்டாவாதம் பண்ணிக்கொண்டு இருந்தவர், ஏன் சொல்லாமல் கொள்ளாமல் தப்பியோடினார்? ஏன் அந்த மக்கள் அவரை காப்பாற்ற வில்லை? உங்களை நீங்கள் முட்டாளாக்குகிறீர்கள். போராட்டம் நடத்தியவர்களுக்கு தெரியும் யார் போராட்டம் நடத்தியவர்கள் என்று, அவர்களை முட்டாளாக்க முடியாது உங்களால்.
  25. 2010 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது இவர் தமிழரசுக்கட்சியில் நுழையவில்லை என நினைக்கிறன். ஆகவே அவர் அதைப்பற்றி கதைக்கத்தேவையில்லை. சரி, இருந்திருந்தாற் கூட யாருக்கு வாக்களித்திருப்பார்? அன்று தேர்தலில் நின்ற முக்கியமானவர்கள் மஹிந்தவும் சரத்பொன்சேகாவுமே. அப்படியென்றால் இவர் மஹிந்தவை தேர்வு செய்திருப்பாரா? பகிஷ்கரித்திருப்பாரா? அல்லது தானே தேர்தலில் நின்றிருப்பாரா? அதையும் தெரிவித்திருக்க வேண்டுமே? கடந்த ஜனாதிபதி தேர்தலில் எல்லா கட்சிகளையும் தனியாக சந்தித்தார், ஆனால் அனுராவை சந்திக்கவில்லை. அவர் தேர்தல் உறுதி மொழியில் இனப்பிரச்சினையை பரிசீலிப்பதாக சொன்னாராம், அதன்படி செய்வார் என்று ஏற்கெனவே சொன்னார். ஆனால் சஜித்தை ஆதரித்தார். இப்போ, பத்தாம் ஆண்டு தேர்தலைப்பற்றி பேசுறார். அரசாங்கம் ஒரு அழைப்பு தங்களுக்கு விடுத்தால்; கட்சி பரிசீலித்து முடிவெடுக்கும் என்பவர், தனியாக ஜனாதிபதியை, வெளிநாட்டுத்தூதுவர்களை சந்திப்பதும், தனியாக முடிவுகளை எடுப்பதும், பத்திரிகையாளர்களை சந்திப்பதும் சரியா? எல்லா கட்சிகளும் சுமந்திரனைப்பற்றி பேசுகிறார்களாம். இவர் தேர்தல் மேடைகளில் யாரைப்பற்றி பேசுகிறார்? மேடையில் ஏறினாரா, தான் சாதித்த காரியங்களை மக்கள் முன் எடுத்துரைப்பதும் இனிமேல் தான் என்ன செய்ய இருப்பதாக உள்ளதை அறிவித்து வாக்கு கேட்கலாமே, அதைவிட்டு அவர்களுக்கு வாக்குபோடவேண்டாம் என்று சொல்லவும் மற்றவர்களை விமர்சிக்கவும் இவர் யார்? சங்கு சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது தவறு என்று சாபம் இட்டவர், இப்போ சங்கு சின்னத்தை திருடி விட்டார்களாம். சங்கு சின்னத்துக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? இவர் ஏன் கூக்குரலிடுகிறார்? தேர்தல் ஆணையமே அனுமதியளித்திருக்கிறது. அது அவர்களின் பிரச்சனை, இவர் ஏன் பயப்படுகிறார்? எதை எதனோடு ஒப்பிட்டு பேசுவது என்றே தெரியாத மனிதர். ஊரில் பிள்ளை பிறக்காவிட்டால் தங்களை குற்றம் சுமத்துகிறார்களாம். இது என்ன ஒப்புவமை என்றே புரியாமல் உளறுகிறார்? பதவி, ஆசனம் இல்லையென்று கட்சியை விட்டு விலகுகிறார்களாம். இவருக்கு அது தொடர்ந்து கிடைப்பதால் அவர் தொடர்ந்து இருக்கிறார். இல்லையெனில் இவரும் கிளம்பியிருப்பார். பேச்சாளர் பதவியையே விடாமல் கட்டிப்பிடிச்சுக்கொண்டிருக்கிறார். இப்போ பிரதம மந்திரி பதவி வருமென காத்திருக்கிறார் பதவி ஆசை இல்லாதவர். கட்சியோடு ஆலோசிக்காமல் ஓடிப்போய் தனியாக சந்திப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும் எப்படி சாத்தியமாகும்? தமிழருக்கு துரோகம் செய்து அவர்களை அடிமைப்படுத்துவது இவரது லட்சியம். அதற்காக எல்லா சிங்கள தலைவர்களும் தன்னை ஆதரித்து தனக்கு தகுந்த பதவி தருவார்கள் என்று ஓடிப்போய் முட்டுக்கொடுப்பது. அதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களோடு சேர்ந்து போராடினாரா? உறவுகளை இழந்தாரா? உடைமைகளை இழந்தாரா? அல்லது அந்த இடத்தில வாழ்ந்தாரா போராட்ட காலத்தில்? இளைஞர் இரத்தம் சிந்த இவர் பதவி பெறுவாராம். தையிட்டியில் விகாரை கட்டும்போதுகஜேந்திரன் கட்சியினர் எங்கே போனார்கள் என்று கேட்கிறார், இவர் எங்கே போனார்? தொடர்ந்து எங்களுக்கே மக்கள் வாக்களித்து வந்தனர் என்கிறார், மக்களுக்காக இவர் என்ன செய்தார்? ஒருவருடத்திற்கு முதல் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு அளித்தபோது, ஆனோல்ட் தன்னை அழைக்கவில்லை அதனால் தான் நீதிமன்றம் போகவில்லை, அழைத்திருந்தால் தான் போய் தடையுத்தரவை இல்லாமற் செய்வித்திருப்பேன் என பேட்டி கொடுத்தவர், தாங்கள் தானாம் மக்கள் பிரதிநிதி என்கிறார், கட்சியை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு. இவர் எப்போ வந்தார் கட்சிக்குள்? எதை இழந்தார் கட்சிக்காக? பதவி, ஆசனம், சுகபோகங்களை அனுபவிக்கிறார். ஆனால் கட்சிக்காக, மக்களுக்காக சிறைசென்றவர்கள் வெளியே.காணிகள் விட்டது மக்களின் தொடர் போராட்டம், பொதுநல வழக்குகளினாலேயே. இவர் அவர்களுக்காக ஆஜர் ஆன சட்டத்தரணியே. இவரை நம்புபவர்கள், இவரைப்பற்றி தெரியாதவர்களாயிருப்பர் அல்லது இவரைபோன்றவர்களே. இவர் சிங்களத்தோடு வாழ்வது என் அதிஸ்ரம், ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று பேட்டி கொடுத்தபோதே கட்சியினர் தங்கள் எதிர்ப்பை காட்டினர். அதற்கு சம்பந்தர் தான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கி கட்சி உறுப்பினர்களை அடக்கினார். அப்பவே இவரை கட்சியிலிருந்து வெளியேற்றி இருக்க வேண்டும். கட்சியின் உறுப்பினர் அவர்களின் அனுமதியின்றி கட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒன்றல்ல இரண்டல்ல பலமுறை தனது கருத்துக்களை கட்சியின் ஆலோசனையின்றி உளறியிருக்கிறார். கட்சி நடவடிக்கை எடுக்க தவறியதே இன்று இவர் கட்சியை தனது ஏகபோகமாய் கருதி எல்லோரையும் அடக்கியாள்வதும், கருத்துக்களை வெளியிடுவதும் பின்னர் கட்சிக்குப்பின்னால் ஒளிந்து கொள்வதும். இப்போ இவர்கள் (தாடியர், சுமந்திரன்) தொடர்ந்து அனுராவின் ஆட்சியில் பதவியில் அமர்ந்து முட்டுக்கொடுக்க தூது விடுகிறார்கள், ஆனால் யாரும் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.