Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேடபாளருக்கு வாக்களிக்க வேண்டாம் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்றார் இப்போ அனுராவுக்கு வாக்களிக்க வேண்டாம் தனக்கு வாக்களியுங்கள் என்கிறார் சந்தர்ப்பவாதி. அனுராவுக்கு தமிழர் வாக்களிக்க கூடாது, அவர் தேர்தலுக்கு முன் இரகசியமாய் சந்திக்கலாம் உடன்படிக்கை செய்யலாம். விசித்திரமான மனிதன்.
  2. அதை செய்யுங்கள் முதல், அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கு ஏழைமக்கள் இரத்தம் சிந்தி வரி செலுத்தவேணுமாம். நல்லாய் இருக்கு, ஊழல் செய்து சேகரித்து பதுக்கியது ஒருபுறம், இது வேறு. அவர்களுக்கு சம்பளத்தையும் குறையுங்கள். அப்போதான் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை புரியும். மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசியவாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவார்கள், உண்மையான மக்கள் சேவையாளர்கள் உருவாவர். சும்மா வாக்குவங்கிக்காக சொல்லிப்போட்டு தேர்தல் முடிய வாபஸ் பெறக்கூடாது.
  3. இவருக்கு ஏதோ கஸ்ரகாலம் ஆரம்பிக்குது போல கிடக்கு. இவ்வளவு காலமாய் கர்தினால் மல்கம் கேட்டுத்திரிந்தபோது மௌனம் காத்தவர்கள், இப்போ வெளியிடப்போகிறார்களாம். இவர்களை உடனே கைது செய்து இவர்கள் திருடிய அறிக்கையை பிடுங்கி எடுக்கவும்.
  4. வாங்கோ, வாங்கோ, சொல்லுங்கோ புதினத்தை. நீங்கள் காணாமல் போன அப்பவே நினைத்தேன் தேர்தல் வேலையாய்த்தான் மினைக்கெடுக்கிறியள் என்று. கண்டது சந்தோசம் இனி களம் கலகலப்பாயிடும்.
  5. சூனியம் வைத்து விட்டாரா? இப்படி உறுதியாக சொல்கிறாரே? என்னமாதிரி இருந்த நாட்டை சுடுகாடாக்கியது, அனுபவ சாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாடாளுமன்றத்தில், அரசியலில் இருந்துதானே அதை சாதித்தார்கள்.
  6. இதற்குத்தான் சொன்னேன், மக்களுக்கு சேவை செய்பவர் மக்களின் ஆணை பெற்று தைரியமாக பாராளுமன்றம் போய் பகிரங்கமாக பேச வேண்டும். அது என்ன செய்வது, பழக்கதோஷம் விடவில்லையே? கடத்தல்காரர், கொள்ளைக்காரர், என்று சிலரை விமர்சித்தார், அவர்கள் கௌரவமாக இருக்கிறார்கள். இவரோ, வடக்கின் வசந்தத்தின் நிலைக்கு தாழ்ந்து விட்டார். தான் தான் அவர்களின் பெரும்பாலான வழக்குகளில் ஆஜர் ஆகிறேன், எனக்கு பிரதம மந்திரி பதவியை ஏற்க அழைப்பு வருமென காத்திருக்க, இப்படியொரு அவமான செய்தியை எப்படி தாங்கப்போகிறார்? பொய்யும் புழுகும் கன நாளைக்கு நிலைக்காது. எதை விதைத்தாயோ அதையே அறுப்பாய் என்பார்கள், உடனேயே பலித்துவிட்டது.
  7. நீங்கள் தான் எல்லாம், யானொன்றும் அறியேன் பராபரமே!
  8. கட்சியிலுள்ள மற்றவர்கள் என்ன துறவிகளா? யாரும் எதுவும் வெட்டி வீழ்த்துவதில்லை அவர்களாவது ஏதாவது முயற்சிக்கிறார்களா என ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்த்தாலென்ன? கட்சி ஒன்றும் ஒருவருடைய தனிச்சொத்தால்லவே, பலவந்தமாக பதவிகளை பறிப்பதும், கையகப்படுத்தி தனக்கு ஏற்றமாதிரி அறிக்கை விடவும், அங்கத்தவர்களை விரட்டவும். இவரைப்பற்றி சரியாக அறியாமல் கட்சிக்குள் சேர்த்தவர்கள் தவறு, அதையே இப்போ அனுபவிக்கிறார்கள். முதலில் விக்கினேஸ்வரனை விரட்ட மாவை, சிவஞானம் போன்றோரை கைக்குள் போட்டு, "அண்ணை நீங்கள்தான் முதலமைச்சராக வரவேண்டியவர், விக்கினேஸ்வரன் வந்தது சரியில்லை." என கொம்பு சீவி, அவரின் தலைவர் பதவிக்கு காத்திருந்தார். அதற்கடுத்து சிறீதரனை பாவித்து மாவையரின் பதவியை வலிந்து தனதாக்கிக்கொண்டார். இப்போ, சிறிதரனை பழிவாங்கும் நேரம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் தற்போதைக்கு. இவர் யாரையும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க விடமாட்டார். இவரை அறிமுகப்படுத்தியதே மாவையர். ஆனால் இவரின் தகிடுதத்தங்களை அவர் மௌனமாக தாங்கிக்கொண்டார். இவரோ தான்தான் விக்கினேஸ்வரனை கட்சிக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் பகிரங்கமாக உளறியத்திரிந்தார். இவர் ஒரு உளறுவாயன். ஜெனிவா கூட்டத்தொடருக்கு போய் கலந்து உண்மைநிலவரங்களை தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொண்டபோது, ஆமாம் என்று சொன்ன சம்பந்தரும் சுமந்திரனும் பின்னர் போகவில்லை. காரணம், அமெரிக்கா சொன்னதாம், நீங்கள் ஒன்றும் வரவேண்டாம், அது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இவருக்கு சொன்னதாம். பின்னர் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தபோது, பதறியடித்து ஓடிப்போய் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். அது ஏன் வாக்களித்த மக்களின் பிரச்சனையை, துயரை, இழப்பை சொல்ல பின்னடிப்பு? சிங்களத்துக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க அவசரம்? இப்போ சொல்கிறார், "தாங்கள் அரசுகளை நம்புவதில்லையாம்." காலையில் ஒன்று சொல்வார் மாலையில் வேறொன்று புளுகுவார், தென்பகுதியில் ஒன்று சொல்வார், வடக்கில் வேறொன்று சொல்வார். பின்னர் பத்திரிகையாளரை குற்றம் சுமத்துவார். தன்னைவிட திறமை சாலிகள் வந்தால் அவர்களை விரட்டுவதிலேயே கவனமாக இருப்பார். உண்மையாகவே அவர் திறமை சாலியாக இருந்தால், ஏன் மற்றவர்களை கண்டு பயப்படவேண்டும், விரட்ட வேண்டும்? யாரோடும் இணைந்து, திறமைகளை ஏற்று, பகிர்ந்து வாழத்தெரியாதவர். உறுப்பினர்களை கூட்டிக்கொண்டுபோய், சிக்க வைத்து ஆதாரங்களை திரட்டி அவர்களின் வாயை அடைப்பது, தனது கூலியை தனியாக பெற்றுக்கொள்வது, அதற்கு ஆதாரம் இல்லை. நான் தனியாக கதைத்தேன், முடிவுகளை எடுத்தேன் என்று தன்னைத்தானே பீற்றுவார். ஒரு கட்சியின் பேச்சாளர், மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர் தனியாக கதைக்கலாமா முடிவுகளை எடுக்கலாமா? அதற்கான ஆதாரங்களை சமர்பித்தாரா? இவ்வளவு செய்த இவருக்கு இன்று வந்தவர்களால் இவரை கேள்வி கேட்கமுடியுமா? ஒவ்வொன்றுக்கு ஒவ்வொன்று சொல்வார். ரவிராஜ், மக்களுக்காக கட்சியில் இருந்து அகாலமாக கொல்லப்பட்டவர். உண்மையை பேசியதால் கொல்லப்பட்டவர். தான் கொலை செய்யப்படுவேன் என்று தெரிந்தும் பேசினார். அவரின் மனைவிக்கு தேர்தலில் நிற்க முடியாதாம். ஆனால் செல்வநாயகத்தின் பேரன் அந்த கழகத்தில் இருந்தார், இந்த கழகத்தில் இருந்தார் என்று புலம்புகிறார். அவருக்கு தெரியும், தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்பவர்களை அநாகரிகமாக தெருவில் நின்று விமர்சிப்பார், சவால் விடுவார் சபிப்பார். தன்னை யாரும் குற்றம் சொல்லாமல் மற்றவரை குற்றவாளியாக்கி அவமானப்படுத்தி தனது குற்றங்களை மறைத்துவிடுவார். மற்றவருக்கு ஒரு மரியாதை உண்டு, கௌரவம் உண்டு, நாகரிக மானவர்கள் துஸ்ட்டனை கண்டால் தூர விலகிவிடுவார்கள். இவர் காட்டில் மழை. இந்த தேர்தல் முடிய இவருக்கு பின்னால் நிற்பவர்கள் என்ன ஆவார்கள் என்று பாப்போம். ஒருவர் சொன்னால் அலட்சியப்படுத்தலாம், இருவர் சொன்னால் யோசிக்கலாம், பலர் சொல்லும்போதும் அலட்சியப்படுத்திவிட்டு அவமானப்பட்டே தீருவோம் என்று கங்கணம் கட்டுபவர்கள் பட்டுத்தெளியட்டும்.
  9. ஏன் கதிர்காமரும் நீலன் திருச்செல்வமும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டார்கள் என்று புதுப்புரளியை கிளப்புகிறீர்கள்? அப்படியானால்; சுமந்திரனுக்கு இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று புலுடா விட வேண்டிய அவசியமில்லையே?
  10. அப்போ.... அவர்களின் பணியை இவர் தொடர்கிறார் என்று சொல்கிறீர்கள்? ஒத்துகொண்டமைக்கு நன்றி! கவனம், பாதுகாப்பு கொடுப்பவர்களே போட்டுத்தள்ளிவிட்டு, புலம்பெயர்ந்தோர் செய்தார்கள் என்று சொல்வார்கள். அதற்குத்தானே புலனாய்வு பாதுகாப்பு கொடுத்தீர்கள் என்று கேட்டால், மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து விட்டது என்றும் மாற்றுவார்கள்.
  11. அனுரா, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை சொல்லியிருந்தார், அதை சொல்லியிருந்தார் ஆகவே அவர் அதை நிறைவேற்றுவார், என்னை பிரதமமந்திரி பதவி ஏற்க அழைத்தார் அப்போது என்று இன்று அனுரா வென்றபின் கதை விடுகிறார், தன்னை பிரதமந்திரி பதவிக்கு அழைக்கக்கூடும் என்று எதிர் பார்த்திருக்கும் இவர், ஏன் சஜித் ஆதரவு எடுத்தார்? அன்று, சஜித்துக்கு வாக்களிக்கும்படி கூறிய இவர் இலங்கைத் தமிழர் ஒரு தேசிய இனம் என்கிறார். அப்போ ஏன் அந்த பொது வேட்பாளர் அழுத்தத்தை இவர் விமர்சித்தார்? இரண்டாயிரமாம் ஆண்டு சந்திரிகா கொண்டுவந்த திட்டத்தை இன்றுவரை நடைமுறைப்படுத்தாததன் காரணம் என்ன? பண்டாரநாயக்க செல்வா ஒப்பந்த காலம் முதல் இதுதான் வரலாறு. செய்வோம் என்பார்கள், செய்ய மாட்டார்கள். நாங்கள் யாரையும் நம்புவது கிடையாது என்கிறார். நல்லாட்சி தேர்தலுக்கு முன் சந்திரிக்கா எழுத்துமூலம் செய்வோம் உடன்படிக்கை என்று கேட்ட போது, நாங்கள் உங்களை நம்புகிறோம், எழுத்தெல்லாம் வேண்டாம் என்று கூறினேன் என்றார் இவர். சரி.... மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானத்தை தான் அறிவிப்பதே தவிர, தான் முடிவும் எடுப்பதில்லை, நான் எங்கேயோ இருந்தேன் என்கிறார். சரி.... அவர்கள் எடுத்த முடிவை இவர் ஏன் அறிவிக்க வேண்டும்? தான் பேச்சாளராம்! அந்தப்பதவி எப்போவோ காலாவதியாகிவிட்டது, இன்னும் ஏன் அதை கட்டிப்பிடித்து உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்? மது பான அனுமதி பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடும்படி கேட்டோடினது சிறீதரனை தேர்தலில் போட்டியிடாமல் அகற்றுவதற்கே. அவரை அகற்றியிருந்தால்; சுமந்திரனின் அரசியல் கனவு அதோடு கலைந்திருக்கும். ஆனால் தப்பித்து விக்கினேஸ்வரன் மாட்டினார். ஆனால் அவர் தன் தவறை ஏற்றுக்கொண்டார், யாரையும் குற்றம் சாட்டவில்லை, கதையை திசை திருப்பவில்லை. அவர் தான் கொடுத்த வாக்கின்படி இளைஞருக்கு தேர்தலில் இடம் விட்டு விலகிக்கொண்டார். சுமந்திரன் சொல்வதுபோல் அவர் சாராய அனுமதி பெற்று பகிரங்கப்படுத்தப்பட்டதால் விலகினார் என்று வைத்தாலும், அவர் தனது தவறுக்கு பொறுப்பேற்று விலகியது நேர்மைத்தனமே ஒழிய கோழைத்தனமல்ல. இன்று ஒரு பத்திரிகைக்கு சுமந்திரன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதாவது இந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் கீழ் போட்டியிட சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாமென தான் கூறியதாகவும், அவர் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து செயற்பட்டதாகவும், அதற்கு சி .வி .கே. சிவஞானம் தேர்தல் காலத்தில் அப்படி செய்தால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்று சொன்னதால் தான் கட்டுப்பட்டதாக. அப்போ; தேர்தலுக்காக முடிவை மாற்றிக்கொண்டார், தோற்றுவிடுவோம் என்கிற பயம். இவர் கட்சியின் தீர்மானத்தை மதித்து நடந்தவரா மற்றவர்களை அகற்ற? நேற்று இதே கேள்வியை கேட்ட போது அதாவது தனக்கெதிராக பலபேர் செயற்படுவதாக சிறீதரன் கூறியிருக்கிறாரே, அவர் யாரை குறிப்பிடுகிறார்? உங்களையா எனக்கேட்டபோது, எனக்கு தெரியாது, அவரைத்தான் கேட்கவேண்டும், நான் தான் அவரை தலைவர் பதவியை ஏற்கும்படி வற்புறுத்தினேன் என்றார். இன்று இப்படி சொல்கிறார். நாக்கில் சுத்தமில்லை. எந்தப்பக்கமும் கதைப்பார். அனுரா, தான் செய்ய விரும்புவதை செய்வார். யாரும் சொல்லி அவர் செய்யப்போவதில்லை. ஆனால் அதற்கு தான் உரிமை கொண்டாட வலியப்போய் முட்டுக்கொடுக்கிறார்.
  12. ஐயா ..... தேர்தலில் போட்டியிடுபவர்கள், முதலில் தேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்ற கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களை குற்றம் சுமத்துவதற்காக நாமே வலிந்து அதற்குள் அகப்படலாமா? அவர்கள் சும்மாவே கைது செய்யும் கூட்டம் என்பதற்காக நம்மை பிரபல்யப்படுத்த வேண்டும் என்பதற்காக வலியப்போய் பொறியில் தலையை மாட்டலாமா? உங்களையுந்தான் நிராகரிக்க போகிறார்கள், நீங்களும் போட்டியிடாமல் தள்ளி நில்லுங்கள், பகிஸ்கரியுங்கள். இருப்பவன் சரியாய் இருந்தால் சிரைப்பவன் சரியாக செயற்படுவான். நீங்கள் சரியாக செயற்படவில்லை உங்களுக்கு வாக்குப்போட்ட மக்களுக்கு. எங்களைத்தவிர வேறு யாருக்கும் வாக்குபோடக்கூடாது என கட்டளையிட நீங்கள் யார்? உங்களால் சாதிக்க முடியாவிடில் விலகுங்கள். மக்களுக்கு உங்கள் மேல் மரியாதையே போய்விட்டது, தேர்தலுக்கொரு கட்சியில் போட்டியிடுகிறீர்கள். ஒரே கட்சியாக ஒரே கொள்கையாக வாருங்கள், சொல்வதை செயலில் காட்டுங்கள், நீங்கள் சொல்லவே தேவையில்லை மக்களுக்கு என்ன செய்யவேண்டுமென. தமிழ் தேசியம் எனும் மாயையை வைத்துக்கொண்டு அந்த மக்களை ஏமாற்றி அலைக்கழிக்காதீர்கள் உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக.
  13. முடிந்தால்; தமிழ்தேசியக்கூட்டணியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்று சவால் விட்டு விக்கினேஸ்வரனை விரட்டியது யார்? அவர் பதவி விலகவேண்டுமென வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தது யார்? அவர் சாராயக்கடைக்கு அனுமதி பெற்ற போது ரணிலுக்கு பின்னால சுற்றிய தனிமையில் பேசிய இவர் ஏன் அதை தடுக்கவில்லை? சிறீதரனை பதவியை ஏற்கச்சொல்ல இவர் யார்? கட்சியின் தலைவரா இவர்? அப்போ ஏன் தமிழரசுக்கட்சி நீதிமன்றத்திற்கு போனது? இவர் கட்சியை விட்டு வெளியேறியிருந்தால் வீடு அமைதியாக இருந்திருக்கும். எல்லோரையும் விரட்டி விட்டு தான் ஆட்சி செய்கிறார். வடக்கின் வசந்தம், தனது சிபாரிசில் எடுத்த திட்டம், ஆரம்பிக்கப்பட்ட திட்டம், என்று சொல்லிக்கொண்டு போனார். இவரோ, நான் அரசியல் திட்ட வரைபை செய்தவன், ஆகவே நான் பாராளுமன்றம் போக வேண்டுமாம். திட்ட வரைபை செய்தேன் என்று இவர் சொல்கிறாரே தவிர வேறு யாரும் சொல்லவில்லை. அதோடு முன்னைய அரசாங்கம் செய்ததோ இல்லையோ அதற்கு அனுரா அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கப்போவதுமில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறார்களோ அதை தமது கட்சியுடன் பேசி ஏனைய சிங்கள கட்சிகளும் அனுமதித்தால் மாத்திரமே நடைபெறும். இவர் அரசியலுக்கு வந்து இவ்வளவு காலமும் ஒட்டியிருந்த அரசாங்கங்களால் செய்விக்க முடியவில்லை, இனி அனுராவை கொண்டு செய்விக்கப்போறாராம். அதற்கு இவர் பாராளுமன்றம் போக வேண்டுமே? அப்படித்தான் போனாலும் இவரால் ஒன்றும் செய்ய முடியாது. முயல் பிடிக்கிறதின் மூஞ்சியை பாத்தாலே புரியுமாம். இவர் முகத்தில் கலக்கம் தெரிகிறது, வலிந்து சிரிக்க முயற்சிக்கிறார், அத்தனை வஞ்சகம். "அகத்தின் அழகு முகத்திற் தெரியுது."
  14. தும்புத்தடியாலேயே பாடம் புகட்டுவர்! மக்களின் உணர்வு, உயிர் மூச்சு என்னவென்பது என்று தேர்தலில் நிற்கும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவர்களை கவர்வதற்கு, ஏமாற்றுவதற்கு, குழப்புவதற்கு இவ்வாறு பெயர்களை மாறி, மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த உணர்வுக்கு உயிர் கொடுக்க மக்கள் இழந்தவை அநேகம், இழப்பின் வலி, துரோகத்தின் வடு அவர்களை வாட்டி வதைக்கிறது. தாங்கள் தன்னிறைவுடன் உழைத்து வாழும்போது, அதை அடைந்துவிடவேண்டும் என அனைத்தையும் கைவிட்டனர். இன்று இழப்பதற்கு அவர்களிடம் ஏதுமில்லை, ஏதிலிகளாய் நிற்கின்றனர். இந்த நிலையை வைத்து அவர்களை அடக்கிவிட்டதாக எதிரியோடு நம் தலைமைகளும் நினைக்கின்றன. இனி தேசியம் உணர்வோடு மட்டுந்தான், நமது அன்றாட வாழ்வே சுமையாகிப்போய்விட்டது. ஆகவே மக்கள் தனித்து, தன்னைப்பற்றி தனது சூழலைப்பற்றி சிந்திக்க தொடக்கி விட்டார்கள். இனி தும்புத்தடியல்ல, வீடல்ல எவராலும் மக்களின் தோல்வியை ஈடுகட்ட முடியாது. அப்படி யாராவது நினைத்தால்; தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கின்றனர், கனவு காண்கின்றனர் என்றே கொள்ளலாம்.
  15. "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்." இலங்கையில் முக்கியமான தருணங்களில் இவர் சூறாவளி சுற்றுலா செய்வார். கொழுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் இவர்களின் வழமை. இவவும் இலங்கை தேர்தலில் போட்டியிடுகிறாவோ? அழுதுகொண்டு திரியிறா.
  16. மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும்போது, சமுதாயத்தில் அக்கறை பிறக்கவில்லை, இளைஞர்களுக்கு ஊத்திக்கொடுத்து வாக்கு கேட்க வெட்கமில்லை, ஆனால் மற்றவர்களை பழிவாங்க அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இவர்களிடம் பதவி கொடுத்தால் எங்கள் இளம் சமுதாயத்தின் நிலை எதிர்காலம் எப்படி இருக்கும்? வடக்கில் இளைஞர்களின் சமூக விரோத செயல்களை பற்றி இவர்கள் அக்கறை காட்டினாரா? ஓநாய்களை நம்பி மந்தையை மேய்க்கும் பொறுப்பை வழங்கலாமா? மக்களே சிந்தித்து முடிவெடுக்கட்டும். இவர்களுக்கு வாக்கு அளித்தால் நம் இளம் சமுதாயம் அழிந்து போகும் அபாயமுண்டு.
  17. யாரெல்லாம் பதவியேறுகின்றனரோ அவர்களை வாழ்த்துவது என்கிற பெயரில் ஓடோடுவது தாங்கள் சிங்களத்துக்கு செய்த சேவையினை, தம்மை நம்பிய மக்களுக்கு செய்யும் துரோகத்தினை எடுத்து வைத்து பதவி பெறுவதற்கே. அனுரவுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கவேண்டுமென்று. முதலில் ஓடிய சிங்கத்துக்கு நல்ல விடை கிடைக்கவில்லை. கட்சியை நொறுக்கினார், அதுவே அவரது திறமைக்கு நல்ல சிறப்பு சான்றிதழ், கடந்த அரசுகளில் இவர்கள் அடைந்த சலுகைகள் அடுத்த முக்கிய சிறப்பு, இவர்களுக்கு பதவியளித்தால் என்ன நடக்குமென்று கடந்த அரசுகளின் வங்குரோத்து நிலை தெளிவாக்கியுள்ளது. இவற்றை சந்திக்க சென்ற யாரும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அடுத்து வடக்கின் வசந்தம், காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதென்று ஓடிப்போய் விழுந்தார் காலில். விரட்டிவிட்டார், பாராளுமன்றம் வாங்கோ அங்கே வந்து காட்டுங்கள் உங்கள் திறமையை என்று. கோத்த பாய விரட்டப்பட்டபின் ஒரு குழப்பமான நிலையில், தான் பிரதம மந்திரி பதவியை ஏற்க தயார் என்றவர் ஒரு செயல்வீரன். சிங்களத்தை அவர் அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான். தேர்தலில் தோற்றார் என்றால் அவரது வாழ்வே கேள்விக்குறியாகும். இவரை யார் சட்டத்தரணியாக நியமிப்பார்? அதுதான் அவரது பொய், பிரட்டல் எல்லாம் சர்வதேச தூதுவர்கள் அறிந்த விடயமாச்சே. திறமையிருந்தால் பதவி தானாக தேடி வரும், பதவியை தேடி அலைந்தால் அவமானப்பட நேரிடும்.
  18. அவர் போனவிடயம் அதுவல்ல.... சந்திப்பின் முக்கிய விடயம் இங்கிருக்கிறது. அவரவர் வகிக்கும் பதவிகளில் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று அனுரா ஏற்கெனவே கூறிவிட்டார். என்றாலும் தனது தில்லுமுல்லுகளை அறிக்கையிட்டு பதவி வாங்க போய் மண்டியிட்டுள்ளார். ஏதாவது சாதித்தேன் என்று சொல்லியுள்ளாரா? ஆரம்பிக்கப்பட்ட திட்டம், முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டம், சிபாரிசு செய்யப்பட்ட திட்டம். இதில் இவரின் திறமை, செயற்பாடு எங்கிருக்கிறது? எல்லா பதவிகளுக்குள்ளும் மூக்கை நுழைத்து படம் காட்டி விளம்பரம் தேடுவதுபோல் படம் காட்டப்போனாராம். அனுரா, அவரின் திறமைக்கு பதிலளித்துள்ளார் பாருங்கள்.... இவர் இனி தேர்தலில் வென்றாற்தான் தொடர்ந்து சந்திப்பு, சும்மா அலட்டல் பாட்டிகளோடு அரட்டை அடிக்க அவருக்கு நேரம் எங்கிருக்கிறது? அவருக்கே தலையை பிடுங்குமளவுக்கு பிரச்சனை இருக்கிறது. பாராளுமன்றத்தில் பேசுவோம், தனியாக பேச வேண்டாமே என்றும் சொல்லியிருக்கலாம். ஆனாலும் இதுகளுக்கெல்லாம் வெட்கம் எங்கிருக்கிறது? இவர்களின் முகவர் வேலையெல்லாம் அவர்களுக்கு தேவையில்லை. அவர்களே நேரடியாக சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கையையும் எடுப்பார்கள்.
  19. குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார் கம்மன்பில, இல்லை என்று சொன்னால் தமிழரின் வாக்கு, ஆதரவு குறையும் அனுராவுக்கு. ஆம் என்று சொன்னால் சிங்களவரின் வாக்கு குறையும். அதனாலேயே ஜனாதிபதி தெளிவுபடுத்தட்டும் என்கிறார். தானே இனப்பிரச்சினையை கிழப்பாமல், யோசனை கொடுக்கிறாராம். இறுதியில் சிறைக்குத்தான் போகப்போகிறார். ஆளான ஆளெல்லாம் வாய் மூடி இருக்கினம், இவர் துள்ளுவதைப்பார்த்தால்; நிறைய ஊழலில் சிக்கப்போகிறார் போலுள்ளது. ஏற்கெனவே வெளிநாட்டுக்காரர் ஒருவரின் காணியை கள்ள உறுதி முடித்து விற்பனை செய்த வழக்கு உள்ளது இவர்மேல். சுமந்திரன் இதை செய்ய நினைத்திருக்க மாட்டார், ஒருவேளை கம்மன் பில செய்யும் காமெடியில் நடந்தாலும் நடக்கலாமே தவிர சுமந்திரனுக்கு உந்த உணர்வு தவறியும் வராது. இப்போ நாட்டில் ஒரு குழப்பம் வெடிக்க வேணும், அதில் கம்மன் பில வாக்கு அள்ள வேண்டும்! பரவணிக்குணம்.
  20. புரியவில்லை..... எமது அரசியல் தீர்வுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் என.
  21. ஆமா..... வெளிநாட்டு புலனாய்வுப்படை ஒன்று ஸ்கொட்லன்ட்? இருக்கலாம், தாம் ஈஸ்ரர் குண்டுவெடிப்பை விசாரிப்பதாக அறிவித்தபோது, இலங்கையில் திறமை மிக்க புலனாய்வுப்படை இருக்கிறது, வெளிநாட்டினரின் உதவி தேவையில்லை, அது தமது நாட்டின் மதிப்பை குறைக்கும் என்றார் கோத்தா. அவர்கள் வந்தால் தான் கைது செய்யப்படுவேன் என்று பயந்தாரோ என்னவோ. குண்டு வெடிக்கப்போகிறது என்று கணித்து துல்லியமாக வந்த செய்தியை நடை முறைப்படுத்த தெரியாமல் கோட்டை விட்ட புலனாய்வு, முஸ்லீம் தீவிரவாதிகள் கொன்ற போலீசாரை முன்னாள் போராளிகள் என்று கைது செய்த புலனாய்வு, இந்த திறமையில் சும்மா சாதாரண மனிதனுக்கு உயிராபத்து என்று புலனாய்வை நியமிக்கினமாம். உலகிலேயே சிறந்த புலனாய்வுப்படை என்று சான்றிதழ் கொடுக்கினமாம். அதில விடுதலைப்புலிகளை வேறை அழித்தவையாம். செல்லும் செல்லாததுக்கெல்லாம் முன்னாள் விடுதலைப்புலிகளை கைது செய்து புலனாய்வை புகழுகிறது.
  22. தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் பதவி காலாவதியாகிவிட்டது, இன்னும் அந்தபதவியை பிடித்து வைத்துக்கொண்டு அலம்பித்திரியிறார். தலைவர் பதவியை முடக்கி வைத்திருக்கிறார், கட்சிக்குள் ஏகாதிபத்தியம் செய்கிறார், அவருக்கு பதவியாசை இல்லை. எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கவேண்டும் என்னும் பகுத்தறிவு இல்லை, செயற்றிறன் இல்லை, மற்றவர்களையும் மதித்து அவர்களுக்கும் உரிய சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அதை மறுக்கும், அதை நிஞாயப்படுத்தும் யாவரும் அடாவடிகள். அவர்களது கல்வி வெறும் ஏட்டுக்கல்வியே அன்றி பொது வாழ்வுக்குதவாது.
  23. கண்டிப்பாக! நீதிமன்றம் மரண தீர்ப்பளித்த ஒரு குற்றவாளிக்கு, அந்த தீர்ப்பை சவாலுக்கு உட்ப்படுத்தும் வகையில் கோத்தா அந்த குற்றவாளிக்கு விடுதலை அளித்து பதவி கொடுக்கலாம், சாதாரண மக்கள் கேள்வி எழுப்பக்கூடாதோ? அது என்ன நீதி? அரசியல்வாதிகள் நீதி அமைச்சில் தலையிடாதவரை, நீதி அமைச்சில் எல்லோருக்கும் ஒரே சட்டம் எனும் நிலை வராத போது, இப்படியான நிகழ்வுகள் நடந்தே தீரும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நீதியை தேடி அடைய உரிமை இருக்கிறது, அதை யாரும் கேள்விக்குட்ப்படுத்த முடியாது. லலித் குகன் யாழ்ப்பாணத்தில் வைத்தே அன்றைய இராணுவ புலனாய்வாளர்களால் காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாட்டில் எந்தப்பக்கமும் யார் வேண்டுமானாலும் போய்வரக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தோம் என்றவர்கள், இப்போ தாம் வரப்பயப்படுவதேன்? ஒருவேளை தான் செய்தது தனக்கே திரும்பி வந்துவிடுமென பயப்படுகிறாரோ? மஹிந்தா தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்தார் பயமில்லாமல், இப்போ அவருக்குரிய பாதுகாப்பு குறைப்பு என்கிற பேச்சு வந்தவுடன் தனக்கு பயங்கரவாதிகளால் ஆபத்தாம். மற்றவரை வகைதொகையின்றி கொன்று குவித்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள். இப்போ தனக்கு என்றவுடன் பயப்படுகிறார்கள்.
  24. ஆமா... உங்களின் அரசாட்சி காலத்தில் விசாரணை அறிக்கையை வெளியிட்டிருக்கலாமே, ஏன் அதை செய்யாமல் விட்டுச்சென்றீர்கள்? அதன் கதை முடிந்தது என்று முடிவு செய்தீர்களோ? வகை தொகையின்றி கொலை செய்து மகிழ்ந்த உங்களுக்கு இதெல்லாம் பெரிதல்ல. உறவுகளை இழந்தவர்களுக்கு அவர்கள் மரணிக்கும்வரை அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. உங்கள்வீட்டில் ஒரு இழப்பு வந்தால் உணருவீர்கள் அதன் வலி என்ன என்பது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.