Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஹிஹி..... சுமந்திரனை எல்லோரும் மதித்தார்கள், அவருக்கு மற்றவரை மதிக்கவும் தெரியாது, மதிப்பை ஏற்றுக்கொள்ளவும் தெரியாது.யாரோடு முரண்பட்டு கட்சியிலிருந்து வெளியேறினார்கள் என்பதை தெரியாதா? அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா? தமிழரசு ஒன்றும் அவரது ஏக சொத்தல்ல. அங்குள்ளவர்களின் கருத்துக்களை ஏற்கவும் அவர்களை மதிக்கவும் கட்சியின் கொள்கைகளை மதித்து நடக்கவும் எல்லோரையும் சமமாக வழிநடத்தவும் தெரிந்திருக்க வேண்டும். அது அங்கே நடந்ததா? ஆம் என்று நீங்கள் சொல்வீர்களானால் உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை. ஒரு தலைவரின் சொல்லுக்கு மதிப்பில்லாமல், தான் தோன்றித்தனமாக நடப்பவரை பாதுகாக்க முனைகிறீர்களென்றால்; உங்கள் குணாதிசயமும் ஒன்றே. தமிழரசு செய்த ஒரே தப்பு, இவரை கட்சிக்குள் புகுத்தியதுமட்டுமல்ல, அவர் செய்த தவறுகளை தட்டிக்கேட்க்காமல், கண்டும் காணாதமாதிரி இருந்து கட்சிக்கு சாவு மணி அடித்தார்கள். இனி மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
  2. ஆமா, கன்ரீன் சாப்பாடு சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் ருசி தெரியும், அதனால் அவர்களும் விரும்புவதில் தப்பில்லையே? இவளவு நாளும் அவர்கள் வெளியேற நினைக்கவில்லை, இப்போ நினைக்கிறார்கள். உலக்கைதேய்ந்து உளிப்பிடியாய் நிற்குது, இனிமேல் பிடிக்க ஆளில்லாமல் மறையப்போகுது. சாப்பாடு என்று கூறி சாப்பாட்டை கேவலப்படுத்தாதீர்கள், அது இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் பறந்துபோகும். மஹிந்த பட்டாளம் அதற்கு உதாரணம். உண்மையை எதிர் கொள்ள முடியாவிட்டால், அவர்களை கேவலப்படுத்துவது. அதுதான் தேர்தல் மேடையில் நடக்கிறது. நீங்கள் இங்கு களத்தில் ஆடுவதை எல்லோரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள், அது உங்களுக்கு புரிவதில்லை.
  3. இது சுமந்திரனுக்கும் பொருந்தும். அதனாற்தான் மற்றவர்களை மதிக்காமல் தன்னை மட்டும் இறுகப்பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென பொறுப்புணர்ச்சியில்லாமல்.
  4. ஆளுக்கொரு நீதி உள்ள வீடு நிலைக்காது. "சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க்கணி." தமிழரசை உரிமை கோரும் சுமந்திரனும் சான்றோனல்ல, அவருக்கு வக்காலத்து வாங்கும் இந்த மூத்தவரும் சான்றோனால்ல. தலைவனுக்குரிய தகுதியுமிதுவல்ல, அதை சுட்டிக்காட்டும் தகுதியும் இவருக்கில்லை. மொத்தத்தில் தமிழரிடம் வாக்கு கேட்க எந்தக்கட்சிக்கும் தகுதியுமில்லை, அவர்கள் மக்களுக்கு எதையும் செய்வதற்காக தேர்தல் களமாடவுமில்லை. மக்களை வைத்து, ஒருவரை ஒருவர் வீழ்த்தி வீரவசனம் பேசுவதற்கே முற்படுகின்றனர். அதன் முன்னோட்டந்தான் தேர்தல் மேடைபேச்சு. சுமந்திரன் அனுராவிடம் ஓட்டமாய் ஓடி, மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடுங்கள் அவர்களை தகுதியிறக்க வேண்டும் என்று கோரினார். ஏன்? சமுதாயத்தின் மேல் அவ்வளவு அக்கறையா? அதுவும் தேர்தல் வந்ததாலா? ஏற்கெனவே இந்த அக்கறையை காட்டினாரா? இவர் அநாகரிகமாக எதிர் வேட்பாளர்களை மேடையில் சேறு பூசி தன் வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காக. எழுபத்தாறு வருடங்களாக வீட்டை உரிமை கொண்டாடியவர்கள், அந்த வீட்டை அவர்களுக்கு அளித்து அழகு பார்த்த மக்களை நடுவீதியில் விட்டு வேடிக்கை பார்த்தவர்கள் இவர்களல்லவா? அந்த வீட்டை நேற்று வந்த சுமந்திரன் என்கிற கறையான் அரித்து குடிச்சுவராக்கி அதிலிருந்தவர்களை வெளியே துரத்தியதைவிட வேறெதை சுமந்திரன் சாதித்தார்? இவர்களின் செயலற்ற தன்மையையும், ஏமாற்றும் தன்மையையும் பயன்படுத்தி இன்று எத்தனை கட்சிகள் நுழைந்து விட்டன? அத்தனையும் வீட்டுக்காரரின் சாதனையல்லவா? இவர் ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாமல் தாங்கள் வீதிக்கு வந்து நின்று மக்களுக்கு எதை சாதிக்கப்போகிறார்கள்? கதைக்க வேண்டிய நேரத்தில் கதைக்காமல், நமக்கென்ன வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கிறோமென மற்றவர்களை துரத்தும் போது மௌனமாக இருந்ததன் விளைவு; இன்று அவர்களுக்கு வந்துவிட்டது. கடந்த உள்ளூராட்சி தேர்தல் என நினைக்கிறன் மாவையர், மக்கள் தங்களைத்தான் ஆதரித்தார்கள் என்று பெருமிதமாக பேசினார். இன்று தலைகுனிந்து நிற்கிறார். இந்த நிலை ஒவ்வொருவருக்கும் வரும். கழுதை தேய்ந்து கட் டெறும்பு ஆன நிலையிலும் வீம்பு பேசுதுகள். அவர்கள் சாதித்ததுமில்லை ,சாதிக்க இவர்களால் ஒன்றுமில்லை. அதனால் தேர்தல் மேடையில் வாக்குறுதிகளை விட சேறடிக்கும் கேவலமான பேச்சுக்கள் மலிந்திருக்கின்றன. இதற்கு மற்றக்கட்சிகள் செய்ய வேண்டியவை, இந்த கோமாளியை விமர்சிப்பதை தவிர்த்து, மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அறிவியுங்கள், அதை செயற்படுத்துங்கள். இவர் கையூட்டு பெற்று மேடைகளில் சிங்களத்தை புகழ்ந்து சாதிக்க இனிமேல் உள்ள அரசு இவரை பயன்படுத்தாது. அந்த தேவையுமில்லை அவர்களுக்கு. ஆகவே மக்களாணையை நயவஞ்சகமாய் பெற்று, அரியாசனம் ஏற துடிக்கிறார். இவர் எங்கே வைக்கப்படுவார் என்பது முன்பே அறிமுகத்தில் இருந்து தெரிகிறது. எல்லா சிங்களத்துக்கும் காட்டிக்கொடுக்கும் அடிமைகள் தேவையில்லை. இருந்தவர்தான் இருந்தார் இந்தக்கூத்தையும் பார்த்து வீட்டை மூடிய நிம்மதியுடன் கண்ணை மூடியிருக்கலாம். பாதியில் விட்டிட்டு போட்டார்.
  5. உங்களுக்கு கன்ரீன் சாப்பாடு வேண்டுமென்றால், மற்றவர்களையும் உங்கள் ரகம் என்று கருதாதீர்கள்.
  6. ஆமா! இவ்வளவு காலமும் இல்லாத பதவி வெறி இப்பதான் வந்தது அவர்களுக்கு. எல்லோரையும் அடக்கியாளும் சுமந்திரன் மட்டும் பதவி ஆசை இல்லாத ஞானியாக்கும்.. இன்று சுமந்திரனால் வரவேற்கப்படுபவர்கள் நாளைக்கு விரட்டப்படுவார்கள், அப்போதும் இதே ஞாயத்தை கூறுவீர்களா? இவர் கட்சியின் கொள்கையோடு கலந்துபேசி கட்சிக்குட்ப்பட்டா கருத்துக்களை வெளியிடுகிறார், அங்கத்தவரை விரட்டுகிறார்? அல்லது புதியவர்களை நியமிக்கிறார்? தான் தோன்றித்தனமாக சர்வாதிகாரி போல் முடிவுகளை எடுக்கிறார் அதனாலேயே அங்கத்தவர் விலகுகின்றனர்.
  7. ஒரு பிடாரி மற்றவர்களை விரட்டுது, அதை விட, விரட்டப்படுகிறவர்களை விமர்சித்து, அந்த பிடாரியை காப்பாற்ற பலர். ஒருவர், இருவர் என்றால் பரவாயில்லை, தலைவரில் இருந்து எல்லோரும் வெளியேறுகிறார்கள், அதற்கான எதிர்ப்பை காட்ட முடியாவிடில், சார்பாக பேசுவது முக ஸ்துதி, தம்மைத்தாமே ஏமாற்றுவது.
  8. "ஊமையர் சபையில் உளறுவாயன் மகா பிரசங்கி." அவர்கள் போய்விட்டார்கள் என்கிறார், சின்னத்தை திருடி விட்டார்கள் என்கிறார், இதுதான் தேர்தல் தந்திர பிரச்சாரம். மற்றைய கட்சிகளை விமர்சிப்பது. மற்றவரை விமர்சிக்குமுன் தன்னை கொஞ்சம் சுய பரிசோதனை செய்ய வேண்டும். தமிழரசுக்கட்சி, அதன் சின்னம் எப்போ இவருக்கு சொந்தமானது? இவர் கட்சிக்குள் வந்தபின் எத்தனை பேரை துரத்தினார்? எல்லா தேர்தலிலும் நாங்கள் ஏகபிரதிநிதிகள் ஏகோபித்து எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூவி வாக்கு சேர்த்து எதை சாதித்தீர்கள்? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்று சொன்னால்; சிங்களத்துக்கு கோபம், பயம் வருகிறது என்கிற கோட்பாட்டை சொன்னவர் இவர். பின் ஏன் அதை கட்டிப்பிடித்துக்கொண்டு திரிகிறார்? கறையான் புத்தெடுக்க பாம்பு குடிகொண்டமாதிரி தில்லு முல்லு செய்து கொண்டு, நீங்கள் இதுவரை எனக்கு வாக்களித்ததற்கு இவற்றை செய்திருக்கிறேன், இனியும் நீங்கள் என்னை ஆதரித்தால்; இவற்றை செய்ய இருக்கிறேன் என்று சொல்லி வாக்கு கேட்பதுதான் வழமை. மற்றவர் மேல் சேறு பூசி, கேலி பண்ணி அரசியல் செய்பவர் செயற்திறன் அற்றவர், மற்றவர்களை விமர்சிக்க இவர் யார், என்ன தகுதியுண்டு இவருக்கு? தேர்தலில் போட்டியிட இவருக்கு உரிமை உள்ளதுபோல் மற்றவருக்கும் உரிமை உண்டு. கட்சியில் இருந்து விலகியோர் எல்லோரும், யாரால் விலகினார்கள்? இவர் ஒருவராலேயே. இன்று கட்சியில் மிஞ்சி இருப்போர், பதவி ஆசை பிடித்தவர்களும், அடாவடிகளும். அப்போ யார் பிழையானவர்? கட்சியை விட்டு விக்கினேஸ்வரன் விலக வேண்டுமென வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தார், அது எந்த யாப்பில் உள்ளது? கட்சியில் கலந்து பேசி தீர்க்க வேண்டியதை, வெளிநாடுகளில் விற்று திரிந்தது யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவர் ஒன்றும் தானாக வந்து புகுந்தவருமல்ல புகுத்தப்பட்டவருமல்ல. வீழும் தருவாயில் இருந்த கட்சியை பலரின் வற்புறுத்தலினால் மீட்டெடுத்தவர். தேவை முடிந்ததும் விரட்டினார். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் இன்று அனாதையாகி நிற்கிறார்கள். அப்போ தலைமை இவர் மேல் நடவடிக்கை எடுத்திருந்தால்; இன்று இந்த நிலை வந்திருக்காது. சரி ..... இவரின் இந்த மேடைப்பேச்சில் இருந்து ஒரு உண்மை வெளிவருகிறது. அதாவது தமிழ் இனத்தின் சொத்திழப்பு, உயிரிழப்பு, அழிவுகளுக்கு காரணம்; தமிழரசுக்கட்சிதான். அது தான் அதற்கு பொறுப்பெடுக்க வேண்டும். தாமுண்டு தம் பாடுண்டு இருந்த மக்களுக்கு தமிழ்தேசம், சுய நிர்ணயம் என்று உசுப்பேற்றி தாங்கள் அரசியல் செய்து, தங்களால் முடியாததை இளைஞர் மேல் திணித்து, இத்தனை அழிவுகளையும், சந்ததியையும் அழித்துவிட்டு, எண்பது சத வீதத்தை இழந்து விட்டோம் இனிமேல் இவற்றை மீளப்பெற முடியாது என்று சொன்ன இவரே, இப்போ வந்து வாக்கு கேட்கிறார். ஏக்கயராஜ்ய சட்ட மூலம் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு, நல்லாட்சி காலத்தில் காணப்படும். இல்லையேல் நான் பதவி விலகுவேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர், அதை மறந்து, மறைத்து மற்றவர்களை விமர்சிக்கிறார். இப்போ, தமிழரசுக்கட்சியை உடைத்து விட்டார், அது நமக்கு இனி தேவையுமில்லை. இந்தக்கட்சிக்காக நம் இனம் அழிந்தது, இழந்தது மீட்கமுடியாதவை. இனிமேல் உங்களைப்போல் பிழைப்பதற்கு எமக்கு தமிழ் தேசியம் தேவையில்லை. நமக்கு சாத்தியமானதை நாம் உரிய முறையில் பெற்றுக்கொள்வோம். எந்த கட்சியை வைத்து மற்றவர்களை விரட்டி உரிமை கொண்டாடினீர்களோ, உங்கள் அரசியலுக்காக நம் இனத்தை அழித்தீர்களோ, உள்ளதையும் வாரிக்கொடுத்தீர்களோ, அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அது இனிமேல் நமக்கு தேவையில்லை. நீங்கள் சிங்களத்திடம் அதற்குரிய சன்மானம் பெற்று விட்டீர்கள். தமிழர் வரலாற்றில் கடைசி கரும்புள்ளி இவராவார்.
  9. வேலைக்கு விண்ணப்பிப்போர் போலுள்ளதே! ஒரு வெற்றிடத்துக்கு இருநூறு பேர் விண்ணப்பிப்பார்கள், ஒருவரையே தெரிவு செய்ய முடியும். தகுதி, திறமை, கல்வியறிவு, பொறுப்பு என்று தகுதிகள் நீளும், இங்கே எந்த தகுதியும் தேவையில்லை.
  10. இல்லை, தவறு! ஜனாதிபதி தேர்தல் முடிவு வந்தபோது அனுராவுக்கு எதிராகவே கருத்து தெரிவித்தவர் இந்த விமல் வீரவன்ச. அது அவரது வயிற்றெரிச்சல். இந்த கட்சியின் முன்னாள் அங்கத்தவர், பெரும் பொறுப்பிலிருந்தவர் இவர். விமல் வீரவன்சவின் அனுரா எதிர்ப்பு அறிக்கை வந்த கையோடு, சஷி விமல் வீரவன்சவின், (இவரது மனைவியின்) பாஸ்போட் பிரச்சனையும், விசாரணையும் என்கிற செய்தியும் வந்தவுடன், விமல் செய்தியை மாற்றிப்போட்டு விட்டார், தப்பி விடலாம் என நினைக்கிறார். கோத்தா வெல்ல இவரும் தானே உழைத்தார்? இப்போ பெரும்பாலான கட்சிகள், மொத்தக்கட்சிகளும் அனுராவோடு கூட்டிணைவதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றன. எல்லோரும் ஊழலோடு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை வழிக்கு கொண்டுவந்து அடக்குவதற்கே அவர் முன்னெச்சரிக்கையாக சில அதிரடிகளை ஆரம்பித்தார். சில சவாலான இடங்களில் தனது சிறந்த வேட்ப்பாளர்களை களமிறக்கினார். மகிந்த குடும்பத்தின் ஊழல் விசாரணை என்கிற செய்தி. அதனால் சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினர். ஒவ்வொரு கட்சியின் நகர்வையும் கூர்ந்து கவனித்து களத்தில்இருந்து தடுத்து நிறுத்த துல்லியமாக நிதானமாக காய் நகர்த்தி அவர்களாகவே வாயடைக்கவும் விலகவும் செய்கிறார்.அது சரியாகவே வேலை செய்கிறது. அப்படி இவர்களை அனுரா அணைத்தால்; இப்பவே பெட்டியை கட்டி வைப்பது நல்லது. தப்பவே முடியாது, உடனே கைது செய்யப்படுவார்.
  11. சாச்சா..... உதெல்லாம் தமிழரசுக்கட்சியில் போட்டியிட அனுமதிக்கப்படாதவர்களின் வீண் பேச்சு, சுமந்திரன் மேலுள்ள பொறாமையால் பேசுகிறார்கள். மக்கள் சுமந்திரனை அமோகமாக வரவேற்பார்கள். "ஒருவர் சொன்னால்; கேட்டோடு, ஊரோடினால்; சேர்ந்தோடு (ஒத்தோடு)." சுமந்திரன் மேல் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு விமர்சனம்? அவரது திருகு தாளம் வெளிப்படையானது. இதன் காரணம், இப்போ கட்சியிலிருந்தே வெளிப்படுகிறது. இதைவிட உதாரணம் வேறென்ன வேண்டும்? ஆனால் காலதாமதம், தலைமையின் இயலாத்தன்மை, மக்களின் குரலுக்கு செவி கொடுக்காமை அவரை இந்தளவுக்கு கட்டுக்கடங்காதவராக உருவாக்கியிருக்கிறது. இவரது அபிமானிகள், உறவுகள், நண்பர் இன்னும் இவர் உத்தமர் என்று வாதாடி தம்மைத்தாமே ஏமாற்றுகின்றனர்.
  12. இவர் அவுஸ்ரேலிய பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மக்களுக்காக தன் இளமையை, வளமான வாழ்வை அர்ப்பணித்தவர். இறுதி நாட்களில் இந்தியாவில் ஆங்கில ரியூசன் சொல்லி கொடுத்து தன் வாழ்வாதாரத்தை தேடினார் என்பது என்னை மிகவும் கண் கலங்க வைத்தது. ஆனாலும், அவர் எந்த மண்ணுக்காக எல்லாவற்றையும் இழந்தாரோ, அந்த மண்ணில் அவரது இறுதியாசை, இறுதி மூச்சை நிறுத்தியது மன மகிழ்வைத்தந்தது. அவர் பிறந்த இடம் கரம்பன் என நினைக்கிறன். அவரது இறப்பில் சொந்தங்கள் கூட இல்லை, உறவுவழிக்காரர் வாரிசுகள் இறுதிக்கிரிகையை நடத்தியதாக கேள்வி.
  13. கேட்டு நெஞ்சு நோ? யாருக்கு? பேசிய அவருக்கா? யாரை ஆத்த? நல்ல வைத்தியரை அணுகுங்கள்!
  14. அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் கஸ்ரப்படாமல் கூடிய சம்பளம், பகட்டான ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்பு, புகழ், சொத்து, மரியாதை. இதற்கு வேண்டிய தகுதி; மக்களை உசுப்பேற்றவும் ஏமாற்றவும் தெரிந்திருக்க வேண்டும். வேறு தகுதிகள் தேவையில்லை.வேலையில்லாப் பிரச்சனை. முன்னைய அரசியல்வாதிகளின் வாழ்க்கையால் ஈர்ப்பு. பின்னாளில் இவர்களுக்கு வரப்போகும் சிக்கல் தெரியாமை. இன்னும் பல.....
  15. மக்களின் மனமாற்றத்தையும் அதற்கான காரணத்தையும் நிஞாய பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த்தேசியம் என்பதை விட்டு விலகி, எனது கிராமம், வீடு என்று மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். ஏன்,அதற்கு யார் காரணம்? நாங்கள் சிங்கள, தமிழ் மொழியை கற்று சமாதானமாக வாழ, நாட்டை கட்டியெழுப்ப முன்னேற்ற தயாராகிவிட்டார்கள். ஆனால் வற்புறுத்தி சாதிப்பதை வெறுக்கிறார்கள். இந்த ஒன்று இல்லையென்றால் தமிழ் தலைமைக்கும், சிங்கள தலைமைக்கும் அரசியல் சூனியம். ஆகவே, தமிழ்த்தேசியம் பேசி மக்களை உசுப்பேற்றி ஏமாற்றுபவர்களையும் இனவாதம் பேசி அரசியல் குளிர் காய்பவர்களையும் மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இதற்கு இரு பக்க மக்களும் முன்வரவேண்டும். இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர், யுத்த குற்ற விசாரணைகளின் முக்கியத்துவம் பற்றி கூறியிருக்கிறார். நாளடைவில் மக்களும் அதை ஏற்றுக்கொள்வர், ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமுள்ளது. தவறும் பட்ஷத்தில் எதை எதிர்கொள்ள வேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். என்றோ ஒருநாள் உண்மையை சந்தித்தே ஆக வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார். எங்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகள், அழிவுகளுக்கு பதில் சொல்லி இனிமேல் இப்படி நடவாது என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதுவே யுத்த குற்ற விசாரணைகளின் தண்டனையின் மூலம் சொல்லப்படும் செய்தியாகும்.
  16. ஐயோ..... இருக்கிற கட்சிகள் போதாதென்று நீங்கள் வேறை! இவர்களை யார் கட்சியில் சேர்ப்பார்கள்? எல்லாம் சிங்கள துதி பாடி, தம்மை வீரர்களாக காட்டும்போது, இவர்கள் உண்மையை பேசி வேட்டியை உருவி. மானத்தை வாங்கி விட மாட்டார்களா என்ன?
  17. ஒருவர் இருவர் சொன்னால் விட்டுத்தள்ளலாம், அவர்களை களையலாம் கட்சியை விட்டு, பலர் சொல்வதை யோசிக்க,ஏற்றுக்கொள்ள, திருந்த மறுக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு, யாரை வெட்டி எறிய வேண்டுமென்று ஒட்டுமொத்தமாக சொல்லப்படும் நாள் வெகு தொலைவிலில்லை. நானல்ல அவர்கள். என்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் மக்களுக்கு? மக்கள் வெட்டி எறியப்படவேண்டியவர்கள், எங்கள் தனி மனித அரசியலுக்காக என்பார்களா?
  18. வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும். மக்களை வைத்து விளையாடியவர்கள் இப்போ, மக்கள் இவர்களை விரட்டியடிக்கப்போகிறார்கள். அதன் பின் எதை யாருக்காக சரி செய்வது, ஒன்று சேர்ந்து செயலாற்றுவது? மக்கள் எத்தனை முறை எச்சரித்தார்கள் உங்களை? நீங்களோ கவனத்தில் எடுக்கவில்லை, உங்களை விட்டால் மக்களுக்கு வாக்களிக்க வேறு யாருமில்லை என்கிற மமதையில் இருந்தீர்கள், மக்களே உங்களை உதறிவிட்டு தூர விலகி விட்டார்கள், உங்களால் தங்களுக்கு விமோசனம் இல்லையென உணர்ந்து கொண்டார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க தயார் செய்து கொள்ளுங்கள் உங்களை. ஜனாதிபதி தேர்தல் பகிடி, அவருக்கும் போட்டேன் இவருக்கும் போட்டேன். நாடாளுமன்ற தேர்தல் பகிடி, தேர்தலில் போட்டியிடும் எல்லோரும் வெற்றி பெறவேண்டும். தன் பொறுப்பை சரிவர திறமையுடன் செய்யாமல் பக்க சார்பாக நடந்து கொண்டதால் இன்று தனித்து, மௌனமாய், நகைச்சுவையாளனாய் வருந்துகிறார். சொல்லவும் முடியல மெல்லவும் முடியல அவரால்.
  19. சிறீதரனை போட்டியிடுவதிலிருந்து நீக்குவதற்காக மதுபான விற்பனை பெற்றவர்களின் பெயரை பகிரங்கப்படுத்துங்கள், அவ்வாறு செய்தால் குறித்த நபர்களை பதவியிறக்கம் செய்ய உதவியாக இருக்கும் என்று அனுராவிடம் கோரிக்கை வைத்தார், அதில் ஏமாந்த இவர், தோல்வியடைந்தவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லி மாற்றி, சிறீதரனையும் சாள்சையும் கைக்குள் போட்டு, அதிலும் ஒரு பொறி வைத்துள்ளார். நல்ல வேளையாக சார்ள்ஸ் அந்தப்பொறியில் இருந்து நழுவி விட்டார். தேர்தலில் சிறீதரன் தோற்றால்; தமிழரசுக்கட்சி தோற்றால், பழி யார் தலையில் விழும்? போனதடவை, மாவை தோற்ற போது, தலைவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் ஆகவே தலைவர் பதவி விலக வேண்டுமென கூறி, தலைவருக்கு தெரியாமலேயே பத்திரிகைகளில் அறிக்கை விட்டு, அவமானப்படுத்தி குழி பறித்தவர். இன்று அதை நிறைவேற்றியும் விட்டார். அன்று, எல்லோரும் சம்மதித்தால், அந்த பதவியை ஏற்க நான் தயார் என்று அறிக்கை விட்ட சிறீதரன், இன்றுஅதே பொறியில். இவரையும் விலக்கி விட்டால், சுமந்திரனின் ரூட் கிளியர்! ஆனால் நாம் நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்று, பாப்போம் சுமந்திரனின் சாமர்த்தியத்தை.
  20. இலங்கைச் வரலாற்றில் அப்படி யாரும் இருந்தார்களா? இருந்திருந்தால் நாடு இப்படி அழித்திருக்குமா? அப்படி யாரும் இருந்தால்; அவரை மக்களுக்கு சுட்டிக்காட்டுவது தங்களின் கடமை. அதை விட்டு இல்லாத ஒன்றை இருப்பதாக பொய் கூறக்கூடாது.
  21. உண்மை. ஆளும் தரப்பினருடன் சேர்ந்து விட்டால் சுகம் அனுபவிக்கலாம் என வௌவால் போல தொங்கும் கூட்டம், தங்கள் பழைய எஜமானரையும் கட்சியையும் துறந்து வேறொரு பிறப்பெடுக்க முயற்சிக்கின்றனர். புதிய மொத்தையில் பழைய கள் குடுக்க முயற்சிக்கின்றனர், குடிப்பவர் யார்? அனுரா குடிப்பாரானால் முன்னையவர்கள் துரத்தியடிக்க பட்டிருக்க மாட்டார்களே. மாற்றத்தை வேண்டித்தான் மக்கள் இவரை நாடினர், அது அவருக்கு நன்றாகத்தெரியும். அவர்களின் அவாவை நிறைவேற்றி வைக்க வேண்டியது இவரின் கடமை. இது இவருக்குள்ள பாரிய பொறுப்பு, இந்த சந்தர்ப்பத்தை கைவிட்டால் இவர்களுக்கோ, வேறு யாருக்கோ இப்படிப்பட்ட ஒரு பொன்னான சந்தர்ப்பம் இவர்களே நினைத்தாலும் திரும்பி வராது. சந்திரிக்கா நழுவ விட்டு இப்போ புலம்புகிறார். மஹிந்த மனதுக்குள்ளேயே குமுறுவார், நான் செய்த தவறு அவர்களின் தலைவரை கொன்றதுதான் என்று வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தாங்கள் செய்யாததை வேறொருவர் செய்து புகழடைவதை விரும்பவில்லை, தடைக்கற்களாக இருக்கிறார்கள். தங்கள் வாரிசுகள், சொத்துக்களுக்காக பொன்னான நாட்டை அடகு வைத்து அழிக்கிறார்கள். கண் கெட்டபின் நீலிக்கண்ணீர் வடித்து, நமஸ்காரம் செய்வதில் பயனில்லை. காலம் ஓடிக்கொண்டே இருக்கும், அது யாருக்காகவும் தன் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை.
  22. மீண்டும் இவரிடமே ஆசி பெற்றனரா? எல்லோரையும் ஒன்றிணைத்து செயற்பமுடியாத, முதுகெலும்பில்லாத தலைவர். ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியாக சஜித்துக்கு ஆதரவு, பாராளுமன்ற தேர்தலில் இருதலைக்கொம்பு எறும்பாக, தனது கட்சியையும் அதிகாரத்தையும் பறிகொடுத்த, இழந்த தலைவராக யாருக்கு ஆதரவு கோருவார் மக்களிடம்? மாம்பழத்துக்கா, வீட்டுக்கா? ஒரு தலைவன், முப்பத்தைந்து ஆண்டுகளாக பலதரப்படடட, திறமையுள்ள, திறமையற்ற போராளிகளை வைத்து சிங்களத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது எவ்வாறு? நினைத்ததை சொன்னார், சொன்னதை நிறைவேற்றினார், யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காத தன்மை எதைக்கண்டும், யாரைக்கண்டும் பயப்படாத, சுட்டிக்காட்டி திருத்தி வழிநடத்தும் நெஞ்சுரம், திறமை, பொறுப்பு எதிரிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டாலும் தீரமுடன் போராடி மக்களுக்காக உயிர் விட்டிட ஒரே தலைவன். இதில் ஏதாவது ஒன்று நமது இன்றைய தலைவர்களிடம் உண்டா? அவர் கட்டியெழுப்பியதை சிதைத்ததை தவிர.
  23. இப்போ..... மக்கள்தான் இவர்களுக்கு தீர்ப்பு வழங்கும் கடவுள்! இவர்கள், அவர்களை மன்றாடவேண்டியுள்ளது வாக்குக்காக. மக்களால் அந்தஸ்து பெற்றவர்கள், அந்த மக்களை ஏமாற்றுவது எவ்வளவு துரோகத்தனம். இவர்கள் யாராவது, அதை நினைத்து மனவருத்தப்பட்டிருப்பார்களா? தாங்கள் தோற்றவுடன், மக்களை குறை கூறுவார்கள். தாங்கள் செய்யாத வேலைக்கு மக்கள் கூலி தர மறுத்து விட்டார்களென.
  24. ம்....ம்... அத்தோடு, தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன, இனிமேல் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதையும் சொல்லி சவால் விட்டால், உங்களை நாங்கள் மனமார வாழ்த்தவும், மற்றைய வேட்பாளர்கள் உங்களை பின்பற்ற உதவியாகவும் முன்மாதிரியாகவும் இருக்கும். யாரும் சவால் விடலாம் செய்வது யார்?
  25. அதோடு மூட்டை கட்டியவர்தான் மஹிந்தர், இவர் அரசியல் அனாதையாக்கப்பட்டுவிட்டார், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட மாதிரி. மீண்டும் தமிழ் உணர்வுள்ள கட்சியிற்தான் சேருவேன் என ஏலம் விட்டுக்கொண்டு திரிந்தார், யாரும் ஏற்கவில்லை. இவர் வெளியேறிய வீட்டுக்குள் வேறொருவர் குடியேறி விட்டார். சுமந்திரன் அவரை தட்டு வைத்து கூட்டி வந்து குடியேற்றினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.