Everything posted by satan
-
அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர்
அதல்ல இவர்களின் பிரச்சனை, சிங்களத்தோடு சேர்ந்து தமிழருக்கு ஆப்பு செருகினதும், அவர்களோடு வரிஞ்சு கட்டிக்கொண்டு நின்று, எதையும் பெறவிடாது தட்டிப்பறித்ததும், இப்போ வயிற்றை கலக்குது. எங்கே தாம் செய்தது தமக்கெதிராக மாறிவிடுமோ என்பதுதான் அவர்களது கவலை. சகல துறைகளிலும் திறனும் அறிவும் கொண்டவர்கள் நாட்டை நேசிப்பவர்களென்றால் அமைச்சரவையில் இல்லையாயினும் பங்களிக்கலாம், எதற்கு அமைச்சரவை வேண்டும்? ம்.... புலிகளை அழிப்பதற்கு அரசாங்கம் கேளாமலேயே தாம் உதவியதாக சொல்லி, வசதிகளை அனுபவித்தும், சிங்களம் விட்ட மிச்சத்தை கூட, இருந்து பொறுக்கியும் வளர்ந்தவர்கள். தமிழருக்கெதிராக சேர்ந்தியங்குவதும், பின்னர் எங்களுக்கும் உரிமை வேண்டுமென்று தமிழரோடு சன்னதமாடுவதும் இவர்கள் பிழைப்பாய் போச்சு. ரில்வின் தனக்கு பதவி வேண்டாம் என்று விலகிவிட்டார், அவருக்கு வேறொரு பதவி இருக்கு, அது நேரம் வரும்போது வெளிப்படும். அவரிடம் ஏன் போனார்கள் இவர்கள்? ஒருவேளை, அவரது பொறுப்பு தெரிந்துதான் போனார்களோ அல்லது அவரே அழைத்தாரோ இவர்களை?
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
இன்னொரு பலத்த ஆதாரம். மஹிந்த இன்றுவரை சொல்லிவருகிறார், புலிகளிடமிருந்து அப்பாவி தமிழ் மக்களை மீட்க மனித நேயப்போர் செய்து, மக்களை மீட்டதாக. அப்படியென்றால்; அவரது வெற்றி விழாவை தமிழ் பிரதேசங்களில், தமிழ் மக்களல்லவா கொண்டாடியிருக்க வேண்டும்? தமிழ் மக்களின் வாக்கு அவருக்கு வகைதொகையின்றி வீழ்ந்திருக்க வேண்டுமே? மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மக்கள் தடைகளையும் தாண்டி முண்டியடிக்க தேவையில்லையே? அதை கட்டுப்படுத்த அரசாங்கம் படைகளை திரட்டி தடுக்க தேவையில்லையே? இங்கு இனப்பிரச்சனையில்லை, பயங்கரவாதம் என பொய் சொல்லத்தேவையில்லையே? தமிழரின் தலைவரை கொன்றதுதான் நான் செய்த தவறு என மனஸ்தாபப்படத்தேவையில்லையே? இன்னும் இராணுவம் தமிழர் பிரதேசங்களில் சுற்றி இருப்பதற்கான காரணம் என்ன என விளக்குவீர்களா? அவர்களை வெளியேறும்படி மக்கள் வற்புறுத்துவது ஏன்? மாவீரர் வாரத்தை பெரிய விவகாரமாக சிங்கள மக்களிடம் தோற்றுவிப்பது ஏன்? ஏன் அந்த சிங்கள மக்கள் கேள்வி கேட்கவில்லை? எதற்காக தங்களை வருத்தியவர்களின் நினைவை தமிழ் மக்கள் அனுசரிக்கிறார்கள்? ஏன் தடை போடுகிறீர்கள்? என்று கேள்வி கேட்க வேண்டுமே? முன்பு யூட், கற்பகத்தின் பெயர்கள் மாறி கருத்துக்கள் இன்னொரு பெயரில் எதிரொலிக்கிறது.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
எல்லோர் நாவிலும் ஒலிக்குக அனுரா மாத்தையா நாமம்!
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
அது உங்களின் கருத்து, அதற்கு நான் பொறுப்பல்ல. தங்களது கடமையை அவர்கள் சரியாக செய்யவில்லை என்பதற்கு, எமது மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளே சான்று என்பதே எனது கருத்து. இங்கே, சிங்களம் தெரியாதவர்களிடம் சிங்களம் பேசுவதால் பயனில்லை. இதைத்தான் சிங்களமக்களிடம் பேசும்படி வெகுநாளாக வேண்டுகிறேன். ஆனால் அதை செய்யாமல் நையாண்டி செய்கிறார்கள்.
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
நான், பந்தி பந்தியாக எழுதுவதுதான் உங்கள் பிரச்சனையா? கடந்து போங்கள். உங்களை நான் வாசிக்கும்படி வற்புறுத்தவில்லையே? நான் கொழும்பில் சிறிது காலம் வசித்தேன். அப்போ அங்கிருந்த தமிழ் மக்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த போது, சில சிங்களவர் இவ்வளவு புலிகள் இங்கே பதுங்கியிருந்தார்கள் என்று குதூகலித்தார்கள். அப்போ அங்கே இருந்த எனது உறவினர் உண்மையை விளக்கியபோது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. போர்முடிவடைந்தபின், மஹிந்தா ஒவ்வொரு பௌத்த சங்க குடும்பங்களுக்கும் தலா பத்தாயிரம் கொடுத்து வடக்கை தனது வெற்றியை பார்வையிட சுற்றுலா அனுப்பி வைத்தார். அங்கே போய் வந்த ஒரு குடும்பம் சொன்னது, மஹிந்த மாத்தையா அப்பாவி தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து மீட்டார், இடிந்து போன வீடுகளை திரும்ப அமைத்துக்கொடுக்கிறார், கடைகள் இன்னும் இராணுவம் நடத்துகிறது, வெகு விரைவில் திருப்பி உரியவர்களிடம் கொடுத்து விடுவார்கள் என கூறினார். அதை விட யாழ்ப்பாணத்திற்கு பொருளாதார தடை ஏற்படுத்திய போது, அங்குள்ள வியாபார நிலையங்கள் கேள்வி எழுப்பிய போது, மஹிந்த சொன்ன காரணம், புலிகள் உங்கள் பொருட்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வரி அறவிடுகிறார்கள், உங்கள் பொருட்களை மக்களிடம் சேர அனுமதிக்கிறார்கள் இல்லை, தாங்களே எடுக்கிறார்கள், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், புலிகளை முறியடித்தபின் உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என்றார். இவைகளெல்லாம் பத்திரிகைகளில் வந்தன. அதைவிட ஊடகவியலாளர் அந்த பிரதேசத்துக்கு செல்ல மறுக்கப்பட்டனர், உண்மையை கூறக்கூடிய, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வந்த இராணுவத்தினரை யாரும் சந்திக்க முடியாதவாறு தடுக்கப்பட்டனர், சணல் நான்கை பார்ப்பதற்கு தடை விதித்தனர், இவையெல்லாம் எதை கூறுகின்றன? மக்களிடம் உண்மை போய்ச்சேராதவாறு தடுத்தனர், உண்மையை கூறியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். உதாரணம், பா .உ. ரவிராஜ். பொது அமைப்புகளை ஏன் பலவந்தமாக விரட்டினர்? நான் சொல்லும் கூற்றுக்களுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும். அதனாலேயே எனது கருத்துக்கள் பந்தியாக வருகின்றன. சும்மா ஓரிரண்டு வார்த்தைகளில் சொல்வதால் அது உண்மையாகாது. எனது பதிவுகள் உங்களுக்கு மட்டுமானதாலல்ல. உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்படி குற்றம் சாட்டுவது இயல்பு. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நிர்வாகம் எச்சரித்தால் பரிசீலிப்பேன்!
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
இவையெல்லா விளைச்சலிலும் முன்னிலை வகித்தது தமிழர் பிரதேசம். தமிழரை அழிக்கிறோம், அவர்களின் பொருளாதாரத்தை இடிக்கிறோம்என்று கங்கணம் கட்டி ,நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டு, இப்போ வேறு நாட்டை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதுதான் இனவாதத்தின் வெற்றி. பதுக்குவோர்தான் பொருள் தட்டுப்பாடை ஏற்படுத்துவது. மக்களிடையே இல்லாமையை ஏற்படுத்தி தாம் பிழைப்பது. பறிமுதல் செய்ய வேண்டும் அல்லது வேறு வழியில் பிரச்சனையை கையாண்டு, அவர்களது பதுக்கிய பொருள் அழிவடைய விட வேண்டும்.
-
ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு; முண்டியடித்து விண்ணப்பிக்கும் ஆண்கள் - சாதனைக்கு தயாராகும் நடிகை
முதலில், நீங்கள் போய்விட்டு வந்து உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். அதன் பின் நான் தொடர்கிறேன். வியட்நாமுக்கு ரிக்கெட் போட முண்டியடித்தீர்கள், அதனால் இலகுவான வழி சொன்னேன். அவ்வளவுதான்.
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
நலம் பெற்று நீடு வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
ஏன் ஏராளன், இதே முகாமுக்கு முன் மக்கள் கூடி நின்று இராணுவத்தை அகற்றவேண்டாமென போராட்டம் செய்யும் போது படத்துடன் பத்திரிகைகளில் வெளி வந்ததே? அதை ஒருக்கா முடிந்தால் தயவு செய்து தேடியெடுத்து இணைத்து விடவும். அன்றைய படமும் இன்றைய படமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் போராட்டத்தின் காரணம் மட்டும் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல், அடாவடி நடக்கிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை, ஆகவே இராணுவ பாதுகாப்பு தங்களுக்கு வேண்டுமென்று போராடினார்களே? அது வேறை பிரதேச மக்களா?
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?
-
ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு; முண்டியடித்து விண்ணப்பிக்கும் ஆண்கள் - சாதனைக்கு தயாராகும் நடிகை
தயார் போலிருக்கே! விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். வியட் னாம் எல்லாம் போகவேண்டியதில்லை. என்னென்ன சாதனையெல்லாம் படைக்கிறார்கள். ஆண்டவன் கொடுத்த உடலையும் ஆரோக்கியத்தையும் வைத்து.
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
இதே மக்கள்தான் இராணுவம் வெளியேறக்கூடாது, அவர்கள் வெளியேறினால் தமக்கு பாதுகாப்பில்லை என்று கூறி போராட்டம் செய்தார்கள் முன்பு.
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
ம்.... பொறுத்துக்கொள்ளலாந்தான், ஐந்து வருடங்களின் பின் எலும்பும் மிஞ்சாது, பின்னெப்படி, யார் அனுராவை வீட்டுக்கனுப்புவது? கொஞ்சம் யோசியுங்கள்! இதுதான், ஒரு பிரச்சனையை வேறொரு பிரச்சனைக்குள் செருகுவது என்பது.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஐயோ, மாத்தையாவை தோற்கடித்து வரலாற்றுதுரோகத்தை செய்து, வாழ்நாள் முழுவதும் பழியை சுமக்காதீர்கள்.
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
ஐயோ.... எனக்கு சிங்களம் தெரியாது, ஆளை விடுங்கோ! அதனாற்தான் சிங்களம் தெரிந்த கள உறவுகளை நெடுநாளாக வேண்டுகிறேன்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதென்ன புதுக்கதை? மைத்திரியை அரியணை ஏற்றியது நாமேதான். அப்போ, சந்திரிகா உடன்படிக்கை எழுத சொல்ல, நாம்தானே எழுதவெல்லாம் வேண்டாம், நமக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருக்கிறது என்று நல்லெண்ண சமிக்ஞை கொடுத்தோம். பிறகெதற்கு அவகாசம்? கோத்தாவை நாங்கள் தேர்ந்தெடுக்கவுமில்லை, விரட்டவுமில்லை. அவரின் பதவியேற்பில் நாங்கள் பங்காளிகளுமில்லை, தப்பியோட்டத்தில் பங்குதாரருமில்லை. அவர் சரியாக உடுத்தவே அவகாசம் கொடுக்கப்படவில்லை அவருக்கு? ரணில் ஓடிவந்து குந்தியவர், அவருக்கு கிடைத்த காலமே கொஞ்சம். அவர் ஒன்றும் தேர்தெடுக்கப்பட்டவரல்லர். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியேறியவர். அனுராவுக்கு அவகாசம் கொடுக்க நாம் யார்? அவர் அதிகப்பெரும்பான்மையோடு ஜனாதிபதியாகியவர். அவர் தனது காலம் மட்டும் இருக்கலாம், மீண்டும் ஜனாதிபதியாகலாம் மக்கள் விரும்பினால், இல்லை அவரே சட்டத்தை திரித்து மாற்றி ஜனாதிபதியாக தொடரலாம். எமக்கு காத்திருப்பதை விட வேறு வழியில்லை. இருந்தவர்கள் எதையும் தரவில்லை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும், இனிமேலும் சாத்தியமில்லை. இவர் ஒருவர் முதன் முதலாக ஆட்சிக்கு வந்துள்ளார், எமக்கு பிரச்சினை உள்ளதென ஏற்றுக்கொள்கிறார், அவராலேதான் முடிவு வரவேண்டும். அதை செய்வாரா என தெரிந்து கொள்வதற்கு ஐந்து வருடங்கள் ஆகவேண்டும், நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு. அதை நீங்கள், நாங்கள் அனுராவுக்கு கொடுக்கும் அவகாசம் என்கிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. அது அவரில் உள்ள நம்பிக்கையல்ல, முன்னொருபோதும் ஆட்சிசெய்யாத ஒருவரிடம் எப்படி நம்பிக்கை வரும்? அவர் மேல் நானோ, என்போன்றோரோ கொண்டிருப்பது எதிர்பார்ப்பு. ஆனாலும் நாட்டில் முக்கிய பிரச்சினை பொருளாதாரப்பிரச்சனை, அதற்கே முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் அதன் பின் மற்றைய பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய தீர்வினை வழங்குவேன் என்று சொல்கிறார். வேறு என்ன உங்களால், என்னால் செய்ய முடியும்? சொல்லுங்கள். நீங்கள் என்னை வசை பாடலாம், நான் உங்களுக்கு எரிச்சல் மூட்டலாம் என்பதை தவிர.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இனவாதத்தை அல்ல இனவாதிகளை. தமிழர் நாம் ஒன்றுசேர்ந்து வாக்களித்து அரியாசனம் ஏறிய தலைமைகளே, நமக்கு ஒன்றும் தரவில்லை. மாறாக நமது மண்ணை பல துறைகளாக பிரிந்து நின்று ஆக்கிரமித்து, வளங்களை சுரண்டி, எங்களை நுழையவிடாது தடுத்தது. நமது அரசியல் தலைவர்களே எதுவும் செய்யவில்லை. விகாரை கட்டும்போது எங்கே போனார்கள்? திறப்புவிழா செய்யும்போது எங்கே போனார்கள் என்று கேள்வி கேக்கிறார்கள். ஆனால் அனுரா தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்திருக்கிறார். அவரால் எதுவும் செய்யமுடியும். கடைசி நேரத்தில் சுமந்திரன் விசர்க்கூத்தாடாமல் இருந்திருந்தால், தமிழ் மக்கள் இந்தளவுக்கு அனுராவை வாக்களித்து தெரிந்திருக்க மாட்டார்கள். தமிழரின் வாக்குகள் இல்லாவிட்டாலும் அவர் ஜனாதிபதியாவதை நம்மால் தடுத்திருக்க முடியாது. இருந்தாலும் அவரின் வெற்றியை நானோ நீங்களோ மாற்றமுடியாது, அவர் செய்வதை தடுக்கவும் முடியாது. அவர் அறுதிப்பெரும்பான்மையோடு இருக்கிறார். அவருக்கு அதிக பொறுப்புண்டு, பெருமை பேசவல்ல. ஆனால் கடந்த தலைவர்களை விட ஏதோ செய்ய முயற்சிக்கிறார், அதை நம்புவதைவிட நமக்கு வேறொரு தெரிவில்லை. நீங்கள் பொங்கியெழுவதாலோ அல்லது நான் வழிவதாலோ எதுவும் மாற்ற முடியாது. முன்னைய ஆட்சியாளர்களிடம் உங்களுக்கு இல்லாத கோபம் அனுரா மீது மட்டும் எதற்கு? நாம் விரும்பினாலோ, இல்லையோ அவர் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலேயே இருப்பார். நல்லது செய்தால் தொடர்வார், இல்லையேல் வீழ்வார். எதற்காக அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? வசை பாடுகிறீர்கள்? தருவதை பெற்றுக்கொண்டு மிகுதியையும் பெற முயற்சிப்போம். இவர் வெல்வார் என அவரே நினைத்திருக்க மாட்டார் ஆனாலும் வென்றார். ஆகவே அவர் மனமும் மாறலாமல்லவா? சுமந்திரன் தோற்பேன் என நினைத்தா சன்னதமாடினார்? அவரது ஆட்டமே வேறு வழியின்றி மக்களை அனுரா பக்கம் தள்ளியது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரே ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதி. நாங்கள் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். இருந்தாலும் இவரது ஆட்சிக்குப்பின் யார் வந்தாலும், இவரை விட நல்லது செய்வார் யாருமில்லை. எல்லோரும் பலதடவை ஆட்சியை நிர்வகித்தவர்கள், எங்கள் வாக்குகளின் உதவியோடு. இவரோ முதற்தடவையாக ஆட்சியேற்றிருக்கிறார். பாப்போம்!
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
சுமந்திரனின் புலி எதிர்ப்புக்கொள்கையோடு இணைந்திருந்த தமிழரசுக்கட்சி போல், இது என்றுங்கொள்ளலாம். எல்லாம் மாறும், மனித மனங்களும் மாறும். கொடிய போரில் மக்களை கொன்றொழித்த அசோக சக்கரவர்த்தி, புத்த தர்மத்தை போதிக்க தன் மகளை இலங்கைக்கு அனுப்பவில்லையா? காலம் வரும்போது அதுவும் தானாக மாறும். அனுராவின் ஆட்சியில் தமிழ் மக்கள் நிம்மதியடைய வேண்டும். நீங்கள் அவர்களோடு பேசிப்பாருங்கள், உண்மை புரியும். அந்த நேரம் அவர்கள் கிறிக்கெற் பாத்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். புலிகள் விடுதலை செய்த இராணுவத்தினரையே பத்திரிகைகள் பேட்டி எடுக்கவோ, மக்கள் சந்திக்கவோ அனுமதியளிக்காமல் மீண்டும் போர்முனைக்கு அனுப்பியவர்கள். தப்பியோடும் அல்லது போராட மறுத்த இராணுவத்தினரை கொன்றுவிட்டு புலிகள் மேல் பழி போட்டதும், தப்பியோடிவிட்டனர் என்றும் கதை சொன்னனர். ம், தெரியும். நீங்கள் அதை செய்வீர்கள் என்று. அதனாலேயே உங்களுக்கு மட்டும் சமர்ப்பணம்!
-
யாழில் துவிச்சக்கர வண்டியில் திரிந்து திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நான் ஒன்றும் சட்டத்தரணியில்லை, சட்டங்களை ஆராய. ஏதோ ஒரு சட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளார். இனிமேல் இப்படியான செயலில் இறங்கினால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
இனவாதம் பேசி, தமிழருக்கு தீர்வு இல்லை, அதிகாரம் இல்லை, நாடு இல்லை என்று சிங்களமக்களை உசுப்பேத்தி வாக்கு சேர்த்த தேர்தல்கள் நடந்த இலங்கை வரலாற்றில், முதன்முதலாக இனவாதம், மதவாதம், வாக்குறுதி எதுவும் இல்லாமல் பெரும்பான்மையோடு ஜெயித்தவர் மாண்புமிகு ஜனாதிபதி அனுரா அவர்கள்! அவர் போராட்டத்தின் இழப்பு, வலி தெரிந்தவர், அரச கொடூரம் அனுபவித்தவர், உறவுகளை இழந்தவர், நிஞாயமான கோரிக்கைக்காக போராடியவர், எதை அரசு செய்திருந்தால் இழப்புகளை தவித்திருக்கலாம் என்கிற கொள்கை உடையவர். தமிழரை பற்றி சிந்திக்காத நாட்டில், தமிழர் படும் அவலங்களை உணர்ந்தவர், அதை வெளியில் சொன்னவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களும் நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும் என எடுத்துச்சொன்னவர். இனவாதம் பேசி, தம்மை ஏமாற்றி, நாட்டை சூறையாடிய வெறுப்பு, விரக்தியினால் மட்டும் மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் இவ்வளவு பெரும்பான்மையோடு வென்றிருக்க முடியாது. மக்களும், நாட்டில் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்புகிறார்கள். குடும்பி மலை விகாரை விடயத்தில் சில பிக்குகளும் இனவாதிகளும் சேர்ந்து நாட்டில் ஒரு கலகத்தை ஏற்படுத்த வீதியில் நின்று கூப்பாடு போட்ட போதும் யாரும் செவிமடுக்கவில்லை, கஜேந்திரன் எம். பியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் யாரும் அணிசேரவில்லை. இதிலிருந்து தெரிவது; மக்கள் இனிமேலும் வன்முறையை, வன்முறையாளர்களை தொடரப்போவதில்லை என்பது. ஆகவே பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் ஐந்து வருடங்கள் பொறுக்கலாம். அனுரா இல்லாமல் வேறொருவர் வந்திருந்தால், அவர்களிடம் இருந்து எதை தருவார்கள் என எதிர்பார்த்திருப்பீர்கள்? மக்களே மாற்றத்தை கொண்டு வந்தவர்கள், ஆகவே சிங்கள சகோதரர்களிடம், சிங்களம் தெரிந்தவர்கள் பேசுங்கள். தமிழருக்கு ஏன் இவ்வளவு கொடுமை நடந்தது என பெரும்பாலான சிங்களமக்களுக்கு தெரியாது, இனவாதிகளும் ஊடகங்களும் பொய்களையே பரப்பின, பொய்யான காரணங்களை கூறினர், திரித்த வரலாறுகளை கற்பித்தனர். அவை எல்லாவற்றையும் இங்கு எழுதிக்கொண்டிருக்க முடியாது. சிங்களம் தெரிந்த யாராவது முகநூல் வழியாக அவர்களுக்கு தெரிவிக்கலாம். டொ. அர்ச்சுனா இதை செய்ய முடியும். நாட்டுக்கு எப்போ பயங்கரவாத சட்டம் தேவையில்லையோ, அப்போ அது தானாக தேவையற்று போகும். முன்னைய அரசுகளில் இந்த சட்டம் தமிழருக்கெதிராக இயற்றி செயற்படுத்தப்பட்டது. இனிமேல் அது இயற்றியவர்களுக்கெதிராகவும் பாய இடமுண்டு. வாழ்க அனுர.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
கக்கியிருக்க கூடும், ரேணுக பெரேரா கைது, முக நூலில் தடைசெய்யப்பட்ட தலைவரின் படத்தை இணைத்தவர் கைது, என்பவை அவர்களை அடக்கியிருக்கும். முன்பு மாவீரர் தின வாரம் புலிகளின் கொடியை இராணுவமே ஏற்றி அதை தமிழர் மீது திணித்தது, போலீசார் தடையுத்தரவு வாங்க நீதிமன்றத்தில் வரிசையில் நிற்பினம். இந்தமுறை அப்படியொன்றும் நடக்கவில்லை. ரேணுக பழக்க தோஷத்தில வெளிக்கிட்டு எச்சரிக்கப்படுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அதோடு அடங்கிவிட்டனர். தெரியும், தொடர்ந்தால் தலைமைக்கு ஆபத்து வருமென்று அதனால் அடங்கி விட்டார்கள்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இனவாதத்தை யார் கக்குகிறார்களோ, அவர்கள்மேல் பாயும். பொறுத்திருந்து பாப்போம். பொறுமை அவசியம்! எல்லோரும் முனகிவிட்டு வாயை மூடிக்கொள்கிறார்களே, என்ன செய்வது? பொறியை வைத்துவிட்டு, எலி விழுகுதா என பரிதவிப்பவர் போலிருக்கிறீர்களே.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
பயங்கரவாத சட்டம் தமிழரை காப்பாற்றும் என்று நான் சொல்லவரவில்லை, அனுராவின் அரசையும் எடுக்கும் திட்டங்களையும், கலைக்கும் இனவாதிகளின் மேல் பாயும். அது எவ்வளவு கடுமையானதென இயற்றியவர்களுக்கும் தெரியும். அதனாலேயே மாவீரர் தினத்திற்கு எழும்பிய எதிர்ப்பு, எழும்பிய வேகத்திலேயே அடங்கியது. சிலர் அடக்கியும் வாசித்தனர். கிடைத்த சந்தர்ப்பத்தை அளவுக்கதிகமாக கற்பனை செய்து செயற்பட்ட நம்மவர்களும் பாதிக்கப்பட்டனர். நினைவு கூர இடமளித்த போது, அதற்குமேல் எடுத்த எடுப்பிலேயே பிரபல்யம் ஆக்கவேண்டுமென்ற பேராசை மதிமயங்க வைத்து, தாமே மாட்டிக்கொண்டனர். காலம் கனியும்வரை பொறுமை வேண்டும். இடையில தட்டிக்கொட்ட நினைக்கலாமா?
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
எல்லாம் மாறும். விடுதலைப்போர் முடிவுக்கு வந்தபின், மஹிந்த கோஷ்டியை யாரும் அசைக்க முடியாது என்கிற நிலையே இருந்தது. இப்போ, அவர்களால் இனி அரசியல் கதிரை ஏற முடியுமா என்பதே கேள்வி. பெரும்பான்மையோடு கம்பீரமாக ஆட்சியேற்ற கோத்தா அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவார் என்பதை நினைத்துப்பார்க்க முடிந்ததா? ஆனால் அந்த வரலாற்று அவமானம் நிகழ்ந்தது. மக்களோடேயே நாம் பேச வேண்டும், நமது கோரிக்கைகளை அவர்கள் பக்கம் வைக்க வேண்டும்.