Everything posted by satan
-
யாழில் துவிச்சக்கர வண்டியில் திரிந்து திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு
பெயரை போடலாந்தான் ஆனால் இன்னொரு பகுதி பெயரை வெளியிட்டது தவறு என கூப்பாடு போடும், அதோடு சம்பந்தம் இல்லாத உறவுகளும் பாதிக்கப்படும் இதனால். ஒருவேளை நன்றாக வழக்கை ஆராய்ந்தபின் வெளிப்படுத்தக்கூடும். திருடனின் பெயர் அறிவதில் அவ்வளவு அவசரம் உங்களுக்கு. அவன் திருடன், அவன் பெயரை அறிந்து, அவன் பெயரிலுள்ள எல்லோரையும் சந்தேகப்பட, திருடன் என பெயர் சூட்ட ஏதுவாகிவிடும்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நீங்கள்தான் 5 வருடம் பொறுத்து, அவர் நல்லது செய்தால் அதன் பின் அவரை துதிபாட வேண்டும். பொறுமை அவசியம் சாத்தானுக்கு. ஐந்து வருடங்கள்!
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அதுசரி, இந்தக் கருத்தை (உண்மையை) பகிர ஏன் இத்தனை கால தாமதம் எடுத்தீர்கள், தயங்கினீர்கள் என்பதை அறியலாமா? கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு?
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
பல மொழிகளை பேசி, அபிவிருத்திகளை காட்டி மக்களை ஏமாற்றுவது நீடித்து நிற்கக்கூடியதல்ல. மாறாக மக்களின் தேவைகள், இழப்புகள், பாதிப்புக்களை இனங்கண்டு மனந்திருந்தி, மன்னிப்பு கேட்டு, பரிகாரம் செய்து அந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதபடி உறுதி செய்வதே அரசின் பொறுப்பு. பேசுவதோடு கடமை முடிவதில்லை, மக்களின் நிஞாயமான ஆசைகளை வெளிகொண்டுவந்து தீர்த்து வைப்பதே மக்களின் தலைவர்களின் கடமை. அனுரா நடந்த கொடுமைகள், அதற்கான காரணங்கள், தீர்க்கப்படவேண்டிய முறைகளை தொட்டுச்சென்றிருக்கிறார். அவரின் சொந்த அனுபவங்கள் அதை புரிந்துகொள்ள உதவியிருக்கின்றன. அதை அவர் அரசியலுக்கப்பால் செயலாற்ற முன்வரவேண்டும். அர்ச்சுனா சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முன்வரவேண்டும். அப்போதான் மாற்றம் வரும். வெறும் பாராளுமன்றத்திற்குள் வீர வசனம் பேசுவதால் மாற்றம் ஏற்படவோ, மக்கள் மத்தியில் நல்லிணக்கமோ வரப்போவதில்லை. அனுரா செய்வார். ஆனால் அவரோடு கூட இருப்பவர்கள், இனவாதத்தை வளர்த்து அரசியல் ருசி கணடவர்கள் அவரை அனுமதிக்கப்போவதில்லை. மக்களே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
-
இன்று முதல் ஒருவருக்கு 5 கிலோ அரிசி.
சனத்தின் சாவிலும் அழிவிலும் வியாபாரம் செய்து பிழைக்கத் தெரிந்தவர்கள்.
-
மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது
மஹிந்தவும் முன்பு ஏதோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், பின்பு அதே தவறைஅவரே தனது ஆட்சியில் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. அனுராவின் ஆட்சியில் நீதி, நிஞாயம், நிலை நிறுத்தப்பட்டால்; நாடு அமைதியடையும், தங்களது அரசியல் அஸ்தமனமாகும் என சிலர் துடிப்பதும் எச்சரிப்பதும் குற்றம்சாட்டுவதும் தெரிகிறது. அன்று ரேணுக பெரேராவிற்கு அரசியல் செய்வதற்கு அது தேவையாக இருந்திருக்கும், இன்று அந்த அரசியலுக்கு உயிர் கொடுப்பதற்கு தமிழரை பயங்கரவாதிகளாக சித்திரிக்க வேண்டிய தேவையிருக்கிறது. சாகர காரியவசம்தான் ரேணுகா பெரேராவை ஏவிவிட்டு ஒட்டம் பார்த்தாரோ தெரியவில்லை. இவரையும் விசாரிக்க வேண்டும். மஹிந்த ஆட்சிக்கு வந்திருந்திருந்தால், என்ன நடக்குமோ அதையே அவர்கள் செய்தார்கள், ஆனால் தண்டனை என்றவுடன் பொருமுகிறார்கள்.
-
மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது
கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். அப்போதான் இன்னொருவர் இந்த குற்றத்தை செய்ய தயங்குவர். தம்மை பாதுகாப்பதற்கும் தமது சுயநலத்திற்கும் அப்பாவி மக்களை பலிகொடுத்து தமது திட்டங்களை நிறைவேற்றுவது தடுக்கப்படவேண்டும். இனவாதம் பேசுவோருக்கும் உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும்.
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
அது என்ன மாதிரியான சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டது என்று எங்களுக்கும் சொல்கிறது. இல்லையென்றால், எங்களுக்கு வேறொரு சந்தேகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சாராய அனுமதி பெற்றிருப்பாரோ என. சிறியர் மன்னிக்கவும், இது வெறும் சந்தேகமே!
-
முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது !
ஒசாமா பின்னலேடனுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் என்ன தொடர்பு? அவரை ஏன் இலங்கை முஸ்லிம்கள் நினைவு கூரவேண்டும் என்றும் விளக்கி தொடர்பு படுத்தலாமே? நல்லிணக்கம் என்றால் என்ன என்று தெரியாதவர்களெல்லாம் பாடம் எடுக்கிறார்கள், அதுதான் கொடுமை.
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
ஏங்கோ, இந்நாளில் விடுதலைப்புலிகள் இயங்குகின்றனரா? அல்லது அவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்களா? உங்களுக்கு, புலிகளுக்கும் விசுவாசத்தை காட்ட வேண்டும். அதே நேரம் சுமந்திரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும். ஒரு தோணியில் காலை வைத்து பயணியுங்கள்.
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
முன்னாள் விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
ம்.... விடுதலைப்புலிகள் ஏன் இவரை கொலை செய்ய வேண்டும்? விடுதலைக்கெதிரான வேலைகளை செய்திருப்பாரோ? இருக்கும் இருக்கும். அன்றைய அரசு சொன்னது, தங்களுடன் சேர்ந்து இயங்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் என்பதால் பாதுகாப்பளிக்கபடுகிறதென. சரி, ஒரு பொதுமகன் கொலை செய்ய நினைத்தால் அவருக்கு ஆயுதம் எங்கிருந்து வந்தது? எதற்காக இவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்கு பாதுகாப்பு பெற்றோரும், வழங்கியோருமே விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்கள். அது இருக்க, சுமந்திரனின் ஆதரவாளர்கள், புலம்பெயர்ந்தோரே அவரை கொலைசெய்ய ஆட்களை ஏவியதாக பிரச்சாரம் செய்கின்றனர். செய்தி உண்மையெனில், ஏன் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை? சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொலிகண்டி பேரணியில் சுமந்திரனும் சாணக்கியனும் புகுந்து பிரபல்யம் காட்டியபோது, அவருக்கு மரண அச்சுறுத்தல் ஏதுமில்லை அவரது இராணுவ பாதுகாப்பு மீளப்பெறப்படும் என அரசாங்கம் கூறிய போது, தான் பாதுகாப்பு கோரவில்லை என்று சொன்னவர், அதை ஏற்க முன்னரே ஏன் கூறவில்லை? மறுக்கவில்லை? வாக்குகளுக்கு மக்கள், பின் அந்த மக்களாலேயே தனக்கு ஆபத்து என பாதுகாப்பு. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அந்த மக்கள் மேலேயே பழி போட்டு அச்சுறுத்துவது. தான் பாதுகாப்பு கோரவில்லை, எனக்கு அப்படி ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்பவர், ஏன் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க முயற்சிக்கவில்லை? அவர்கள் சிறை வாழ்வுக்கு காரணமே இவர்தானே? இப்போ தாராளமாக நேரமிருக்கிறது, யோசித்து திருந்துவதற்கு. எதற்கெடுத்தாலும், இவர் கிறிஸ்தவர் என ஒரு துண்டை இழுத்துக்கொண்டு ஓடிவந்து மூடுவீர்களே, இதுதான் கிறிஸ்தவ பண்பா? கிறிஸ்தவர் என இவரை காட்டி நீங்கள் மார் தட்டலாமா? அது நிஞாயமா? அன்று பாதுகாப்பினரின் கெடுபிடி மத்தியிலும், இன்று இந்த இயற்கை அனர்த்த நிலையிலும் மாவீரர்களுக்கு முண்டியடித்து வணக்கம் செலுத்தும் மக்கள், சுமந்திரனுக்கு வாக்களிப்பது அந்த மாவீரர்களுக்கு செய்யும் துரோகம். இன்று அதற்குரிய தண்டனையை அளித்து தமது சபதத்தை முடித்துள்ளனர்.
-
87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு; 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய டாக்டர்
பார்க்க வேண்டும் போலுள்ளதோ? பார்ப்பவர்களும் தண்டிக்கப்படுவார்களாம். இல்லை.... வீட்டைபற்றி சொன்னேன் நான். முழுவதையும் பார்த்து முடிக்க, 750 நாள் எடுக்கும். 😂 கிட்டத்தட்ட…. இரண்டு வருசம் வீடியோ பார்க்கிறதிலேயே போயிடும்.
-
அனுரவால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது | சுமந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ் மக்களுக்கு கிடைக்குதோ இல்லையோ, இவருக்கு ஒன்றும் கிடைக்காது அநுர அரசில். ஏன் மற்றைய அரசுகளில் தமிழருக்கு என்ன வாங்கிக் கொடுத்தீர்கள், இதை மட்டும் குற்றம் சொல்ல? ஓ..... நீங்கள் பாராளுமன்றத்தில் இல்லாத படியினால், உங்களால் ஒன்றும் வாங்கித்தர முடியாது போய்விட்டது என்கிற கவலை. மக்கள் மேல் எவ்வளவு பாசம் இவருக்கு. ஆடு நனையுதென்று அழுததாம் ஓநாய் ஒன்று.
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
நன்றி பெருமாள் இணைப்பிற்கு. இதைத்தான் நான் முன்பு கூறியிருந்தேன், அதற்கு ஒரு உறவு, சுமந்திரன் இராணுவ பாதுகாப்போடு வரவில்லை, இராணுவ புலனாய்வு பாதுகாப்புத்தான் கொடுக்கப்பட்டது, இது இன்றும் இருக்கிறது என்று கூறியிருந்தார். அவருக்கு இந்தப்படம் சமர்ப்பணம். சவேந்திர சில்வா புடைசூழ வந்த படமும் வெளிவந்தது. முடிந்தால், இணைத்துவிடவும். பார்த்து ரசிக்கலாம் முன்னைய வசந்த கால நினைவுகளை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மக்கள் அறிந்தது இருக்கட்டும். மக்களின் தேவைகளை அவர்கள் இவர்மூலம் எப்படி அணுகுகிறார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம். முன்பு, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அடங்காத்தமிழன் எனும் அடைமொழியுடன் சுந்தரலிங்கம் என்று ஒருவர் இருந்தாராம். அவரை ஒருதடவை பாராளுமன்ற காவலர்கள் கதிரையோடு தூக்கிக்கொண்டுபோய் பாராளுமன்றத்திற்கு வெளியே வைத்துவிட்டார்களாம். அப்படியேதும் நிகழாமல் இருந்தால் சரி. எந்த இடத்தில எப்படி நடக்க வேண்டுமென்பது அவைப்பழக்கம், நாகரிகம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பயமற்றவர் என்று பேய்த்தனம் காட்டக்கூடாது. இது ஒரு இனத்தின் விடிவு சம்பந்தப்பட்டது. இவரது காணொளிகளை நான் பார்த்ததில்; இவர் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர், அதிலும் புகழில் கவிழ்ந்து, தான் செய்ய வெளிக்கிட்டதை விட்டு வேறொன்றுக்கு மாறி விடுவார். அதை எப்படி சாதிக்க வேண்டுமென ஆராய்ந்து செயற்படமாட்டார், பட்டாலும் அதை திருத்த மாட்டார். இவரது தந்தை காவல் துறையிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர் என்கின்றனர், அதிக பிரயாசைப்பட்டு படித்தவர், இருந்தும் என்ன, ஒரு பிரயோசனமுமில்லை என ஆகிவிடுமென பயமாக இருக்கிறது. இவருடைய கோமாளித்தனத்தில் மக்களின் பிரச்சனை அடிபட்டுப்போய்விடக்கூடாது. ஒரு காணொளியில் பாத்தேன், தான் முதலில் பாராளுமன்றம் போகும்போது புலிக்கொடியுடன் போவேன் என்று சொல்லியிருந்தார், நல்லவேளை அப்படியொன்றும் நடக்கவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி யோசித்து செயற்பட முடியவில்லை அவரால். நன்றி கந்தப்பு. தேர்தல் முடிவு அறிவிக்கும் வேலை மத்தியிலும் தேடி எடுத்து இணைத்ததற்கு.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வாக்குப்போட்ட மக்களை நகைச்சுவையாளராக்க கூடாது. அவர்களை மெச்சும்வண்ணம் இவரது நடவடிக்கை இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நல்லெண்ணத்தை காப்பாற்றி, அவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு கோமாளிக்கூத்து ஆடி தன்னையும் வாக்குப்போட்ட மக்களையும் அவமானப்படுத்தக்கூடாது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நீங்கள்தான் தைரியமான, பொருத்தமான ஆள் அதற்கு. பொறுப்பெடுத்து தெரியப்படுத்துங்கள் அவருக்கு, அவமானப்பட்டு வெளியேற்றப்படுவதற்கு முதல் மாற்று வழி காணும்படி. அதுவரை அவர் பாராளுமன்றத்தில் தாக்குப்பிடிக்க வேணுமே, இந்த லட்ஷணதில மாகாண சபை கனவு வேறையா? அந்த பிள்ளையின்ர மானத்தையும் வாங்கப்போறார்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மக்கள் அவரை பாராட்டி ஊக்கப்படுத்தியிருக்கலாம் அவரின் தைரியமான சேவைக்கு, ஆனால் அவரை பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தது ரொம்ப அதிகம். பாவம் மக்கள்! அனுபவம் காணாது. முதல்நாள் பாராளுமன்றம் போயிருந்து காணொளியில் என்ன கதைக்கிறாரென பாருங்களேன்? சிங்களவர் சிரிக்கப்போகிறார்கள், இவர் சிங்களத்தால் தேவையில்லாமல் விளாச.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பாராளுமன்றத்திற்கு சென்ற முதல்நாளே, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் அமர்ந்தாராம். அதை விட்டு வேறு ஆசனத்தில் அமரும்படி கேட்டுக்கொண்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். சிங்கள நாளிதழ்கள் செய்தியை வெளியிட்டுள்ளனவாம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இவரை நம்பி வாக்களித்த மக்களின் மானத்தை வாங்கப்போகிறார். இப்பவே விலகி வேறு யாருக்கும் இடம் விடலாம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நீங்கள் எப்படித்தான் இழுத்து மூடினாலும், அது அவிழ்ந்து விழுந்து கொண்டுதானிருக்கும். ஆகவே விட்டு விடுங்கள், அது அவிழ்ந்தாலென்ன, கவிழ்ந்தாலென்ன? நடக்கிறதை விடுப்பு பாப்போம் நாங்களும்.
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அப்பவே யாரோ சொன்னார்கள், தமிழரசுக்கட்சிக்கு மக்கள் வாக்குப்போட்டால், தோற்றவர்கள் தேசியப்பட்டியல் வழியாக உள் நுழைந்து விடுவார்கள் என. நிராகரிக்கப்படவேண்டியவர்களை மக்கள் நிராகரித்தார்கள், அவர்கள் ஆணையை ஏற்க மறுத்தால், இனிமேல் தமிழரசுக்கட்சியே காணாமல் ஒதுக்கப்படும் மக்களிடமிருந்து.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அது எனது தனிப்பட்ட விருப்பம். அதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை. இது எனது கருத்து சுதந்திரம். அவரது வெற்றியை என்னால் மாற்ற முடியாது எனவே ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்ள முடியாத நீங்கள் என்னை திட்டுவதால் பயனில்லை, அவரது வெற்றியை மாற்றிக்காட்டுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.