Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இது எனது கருத்தல்ல, என மறுத்துரைக்கிறேன். பொது இடத்தில நாகரிகம் முக்கியம்! பதில் சொல்ல முடியாவிடில் கடந்து செல்லுங்கள்.
  2. ஏன்? இதுவரை கட்டி முடித்து அபிஷேகம் செய்த விகாரைகளை அடித்து நொறுக்கி விட்டீர்களாக்கும். கூரை மீதேறி கோழி பிடிக்க தெரியாதவர் வானமேறி வைகுண்டம் போனாராம்.
  3. சட்ட நிபுணர் இவ்வளவு காலமும் எதை சாதித்தார்? அவரது நிபுணத்துவதால் வரைந்த சட்ட வரைபையே நிறைவேற்றுவிக்க முடியாதவர், ரணிலை காப்பாற்ற போய் எதிர்க்கட்சி பதவியை இழந்ததுதான் சாதனை. கால நீட்டிப்பு கொடுத்து இழுபட வழிசமைத்தது, கட்சியை பிரித்தது தவிர வேறெதை செய்தார் மக்களுக்கு? கடைசி தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்வித்தாரா? அவரை அவரே சட்ட நிபுணர் என்று சொல்லி புளகாங்கிதம் அடைய வேண்டியதுதான். அனுரா தான் எடுத்த முடிவை தனது குழுவுடன் ஆலோசித்து செய்வார், இதற்குள் சுமந்திரனை புகுத்தி உள்ளதையும் கெடுத்து விடாமல் இருப்பதே நல்லது. அவரின் தோழர்களுக்கு மாறி மாறி தோள் கொடுத்து ஒன்றுமே செய்ய முடியவில்லை, விரும்பவுமில்லை. அனுராவோ, சுமந்திரனை தூரவே வைக்க விரும்புகிறார். ஒரு அரசியலை தூர நோக்கோடு நடத்தி செல்ல திறமையில்லாதவர், அனுராவோட போய் தன் இருப்பை தக்கவே உழைப்பார்
  4. ஆமா... நம்ம தலைவர்கள் காட்டியபடி அவர்களுக்கு வாக்களித்தோம் ஆனால் சொன்னதை அவர்கள் நிறைவேற்றவில்லை. வரும் வராது என்கிற கப்பலை நம்பி காலத்தை வீணடித்து ஏமாறுவதைவிட, ஏமாற்றுபவர்களை நம்புவதை விட, மக்கள் ஒருவரை நம்பித்தான் ஆக வேண்டுமென்று துணிந்து முடிவெடுத்துள்ளார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. அனுரா இப்போதான் பதவி அதிகார பூர்வமாக அவர் கையில் வந்துள்ளது. எழுபத்தைந்து வருடங்களாக புரையோடிப்போனதை பிடுங்கியெறிய உடனடியாக முடியாது. அப்படி முயன்றால் ஒரு வருடம் கூட அவர் பதவியில் தாங்க மாட்டார். நிட்சயம் ஏதாவது செய்வார். இல்லையென்றால்; இன்னொருவர் வருவார் என்பது அவருக்கு தெரியும். ஆடறுக்க முதல் பு .....கு எனக்கு என்று குளறாதீர்கள். மக்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள், அவர்களை குறை கூறுவதற்கு யாருக்கும் அருகதையில்லை. இழந்தவர்கள் அனுபவிப்பவர்கள் எல்லாம் அவர்கள். அவர்கள் முடிவை மதியுங்கள் முறையிடாதீர்கள்.
  5. தேர்தலுக்கு முன் பூச்சாண்டி காட்டி தட்டிப்பறிக்க நினைத்தார்கள், அதையும் தாண்டி மக்கள் அவர்மேல் தமக்கிருந்த நம்பிக்கையை வெளிக்காட்டினார். இப்போ தமிழருக்கு ஏதாவது கிடைத்து விடுமோ என்கிற அச்சத்தில் வந்து புத்திமதி கூறுகிறாராம். ஏதோ அனுரா இவரைக்கேட்டுத்தான் முடிவெடுப்பார் போல. கண்கெட்டபின் புலம்பத்தான் முடியும், தேடியடைய முடியாது இழந்ததை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், மக்கள், அகன்ற கதவை திறந்து அரிய கொடுத்துள்ளது. அவர் மனதை திறந்து நம்மையும் பங்காளிகளாக அழைத்தால் நன்மைகள் நிறைவேறும். இல்லையேல் சந்திரிகா புலம்புவதுபோல், கோத்தா ஓடியதுபோல் எதுவும் நடக்கலாம். இனிமேல் இவர்கள் வாயை சாப்பிடுவதற்கு அப்பால் திறந்தால் ரொம்ப அவமானப்படுவார்கள்.
  6. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பயன்படுத்திக்கொள்கிறார்கள், இதுதான் சுமந்திரன் கட்சிக்குள் வந்ததன் பின் ஏற்பட்ட மாற்றம். "ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, கடந்தபின் நீ யாரோ நான் யாரோ."
  7. ஐயா.... அர்ச்சுனா ஒன்றும் ஜனாதிபதியுமல்ல, அவர் கட்சியை சார்ந்தவருமல்லர். இன்று முழு அளவிலான வெற்றி பெற்றவருடன் அர்ச்சுனா மட்டும் போய் போராட முடியுமா? அநுர கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சனையை நேரடியாக கதைக்க முடியும், இல்லை ஜனாதிபதியே அவர்களுடன் கலந்துரையாட முடியும். தனக்காக வாக்களித்தவர்கள் என அவர் மனம் மாறி நல்லது செய்யவும் கூடும். பல கை ஓசையில் அர்ச்சுனாவின் ஒருகை ஓசை எடுபடுமா? நீங்கள் இப்போ அர்ச்சுனாவோடு கோத்து விட முயற்சிக்கிறீர்கள். முதலில் ஒருவருடமாவது பொறுத்திருங்கள், அநுர என்ன செய்கிறாரென பார்ப்பதற்கு.
  8. இப்போ தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் போக சத்தியலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். இவர் எல்லாம் ஒரு மனிதன், நேரம் ஒரு கதை கதைத்துக்கொண்டு.
  9. இது தேர்தலுக்கு முன், எப்படியும் வென்று விடுவேன் எனும் மிதப்பில் சொன்னது. இது தேர்தலுக்குப்பின் தெளிந்த பின். இருவரும் காலையில் ஒன்று சொல்வார்கள், மாலையில் வேறொன்று சொல்வார்கள். பாப்போம் இருவரின் பேரம் பேசலையும். இருக்கிற மிச்சமும் கலையப்போகுது. இவர்களை விரட்டிய பின்தான் வீட்டை புனரமைக்க முடியும். இல்லையென்றால் வீட்டை அரித்துக்கொட்டிக்கொண்டே இருப்பார்கள்.
  10. அர்ச்சுனாவின் திறமையை இனிமேற்தான் பாராட்ட வேண்டும். அதற்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தங்களுக்கு வேண்டியதை நேரடியாகவே கேட்கமுடியும். அரசியல்வாதிகள் கேட்பதேயில்லையே.
  11. கவலைப்படாதீர்கள், மஹிந்தா ரணிலுடன் கூட்டுச் சேர்ந்து செய்த அடூழியங்களுக்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. அவர்கள் இவர்கள்மேல் பழி போடுகிறார்களா, இவர்கள் அவர்கள்மேல் கை நீட்டுகிறார்களா என்பதெல்லாம் இல்லை. எல்லோருமே தண்டிக்கப்படவேண்டும். முன்பெல்லாம் மஹிந்த கூட்டத்தை விசாரணைக்கு அழைத்தால்; மக்கள் புடை சூழ வருவார்கள். இப்போ மக்களே வலைபோட்டு பிடித்து கொடுப்பார்கள். தேர்தலில் தமது விருப்பத்தை மக்கள் காட்டியிருக்கிறார்கள். ஊழல்வாதிகளை கைது செய்வேன் என்றார், அதை செய்யுங்கள் என்றே மக்கள் ஆணை அளித்துள்ளார்கள். எதற்கும் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதிருக்கிறது.
  12. மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தீர்வு தாறோம் என்று சொன்னார்களா? இல்லை சொன்னதை செய்தார்களா? அவர்கள் மேலெல்லாம் வராத வெறுப்பு ஏன் இவர் மீது மட்டும் கொட்டுகிறது? ஒரு கட்சியாக ஆரம்பித்து இன்று பல கட்சிகளாக பிரிந்து தென்னிலங்கை கட்சிகளையும் நுழைய வைத்திருக்கிறார்கள், மக்கள் மட்டும் ஒருமித்து வாக்களிக்க வேண்டுமோ? மக்களின் வாக்குகளை இவர்கள் கொண்டுபோய் தென்னிலங்கை கட்சிகளிடம் கொடுத்து தங்கள் சுயலாபம் தேடுகிறார்கள், அதை இப்போ மக்கள் தங்கள் வாங்குகளை தாங்களே கொடுத்து பேரம் பேசுகிறார்கள். அதை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் குறைகளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தீர்த்து வைப்பேன் என்று அநுர கூறியிருக்கிறார். இதற்கு பூசாரி, தரகர் எல்லாம் எதற்கு?
  13. ம்.... இவ்வளவுகாலமும், நாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூவி வாக்கு வேண்டி பாராளுமன்றம் போகேக்க மானங் காத்த தமிழர். இப்போ மக்கள் ஏமாற்றமடைந்து தமது வெறுப்பை காட்டியதால், தமிழ் இந வெறியர். தமிழ் கட்சிகள் எல்லார் மீதுமே மக்கள் தமது வெறுப்பை காட்டியிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, ஏன் சுமந்திரனை மட்டும் வெறுத்து ஒதுக்கினார்கள் என்று வெதும்புகிறார்கள்? அப்படியெனில் சுமந்திரனின் அடாவடிக்கு விழுந்த அடியென ஏற்றுக்கொள்கிறார்களா? தலையிருக்க வால் ஆடியதால் ஏற்பட்ட விளைவே இந்த படுதோல்வி. இந்த ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவ்வளவு கோபம் வந்தால், மக்களுக்கு எவ்வளவு கோபம் வரும். வினை விதைத்தவன் வினைதான் அறுக்க முடியும். போன தடவை மாவையர் தோற்றுவிட்டார், மக்கள் தலைவர் மேல் நம்பிக்கையிழந்து விட்டனர், ஆகவே மாவையர் பதவி விலகவேண்டுமென கோசம் போட்டவர் இன்று அதே தோணியில். என்ன ஒரு அதிரடி, எகத்தாளம், யாரையும் மதிப்பதில்லை, எதற்கும் கட்டுப்படுவதில்லை, யாரோடும் ஆலோசிப்பதில்லை, தன்னிச்சையாக ஆடி அடங்கிவிட்டார். இவரை அரவணைப்பதற்கு இப்போ யாரும் இல்லை பதவியில். ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு போட சொல்லி மக்களை கோரினார், மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் சஜித்துக்கே இவரைவிட கூடுதலான வாக்களித்துள்ளனர். ஒன்று ஜனாதிபதி தேர்தலில் இவர் சொல்லி விட்டார் என்பதற்காக மக்கள் சஜித்துக்கு வாக்களிக்கவில்லை, அவர்களே விரும்பி வாக்களித்துள்ளனர். அல்லது அவருக்கு வாக்களிக்க கூறியதால் சுமந்திரனை மக்கள் நிராகரித்துள்ளனர். எது சரியாக இருக்கும்? மக்கள் தாங்களே முடிவெடுத்து சஜித்தை ஆதரித்திருந்தனர் ஜனாதிபதி தேர்தலில். பாராளுமன்றத்தேர்தலில் அனுராவை தேர்தெடுத்துள்ளனர். இதுதான் ஜதார்த்தம்!
  14. கோத்தாவுக்கு தமிழர் வாக்களிக்கவில்லை, இவர்களால் தமிழருக்கு நன்மை வரவேண்டும் இல்லையாயினும் தீமை வராதென நினைக்கிறன். யாரின் வற்புறுத்தலுமில்லாமல், கை காட்டலுமில்லாமல், ஆசை வார்த்தை, உறுதிமொழி இல்லாமல் மக்கள் விரும்பி இவரை தெரிந்தெடுத்துள்ளார்கள்.
  15. ஏன் சிறியர், இவர் சொன்னபடி பாராளுமன்றம் போக மாட்டார் தானே? வாய்ச்சொல்லில் வீரன் இவர்!
  16. பந்தயம் ஏதும் கட்டினீர்களோ இவர் பெயரால்?
  17. அதுசரி.... இந்த வடக்கின் வசந்தம், தென்னிலங்கையில் இரண்டு பிக்குகளை தனது கட்சியின் பெயரால் களமிறக்கியிருந்தாரே, என்னவாச்சு? தான் போக வழியை காணேல்ல மூஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம், இதில பெருமை வேற!
  18. இல்லை சார்! தமிழ் மக்களின் வாக்கை வாங்கி பாராளுமன்றம் போய், முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று கூவினர். கவனம், பாத்து.... உங்களுக்காக வாதாட என்று உங்களிடம் காசு வாங்கிக்கொண்டு, உங்கள் எதிரிக்காக வக்காலத்து வாங்கப்போறார். ஏற்கெனவே அரசியலில் அவரின் சுத்துமாத்து பிரபல்யம். ஆகவே இவரை ஒருவரும் நாட மாட்டார்கள், எல்லா நஷ்டத்தையும் உங்களிலேயே கறந்து விடுவார். இவரைவிட நேர்மையான அமைதியான வக்கீல்கள் நிறைய உண்டு அவர்களை நாடவும்!
  19. இது, அவர்களது சொந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அதனை வெளியில் கொண்டுவருவதற்காக இவரின் முன்னைய கொலைகளை கொண்டுவருகிறார். இவர் ஏன் இத்தனை கோடியை இவருக்கு அளித்தார்? தான் தாடியருக்கு ஏதோ ஒரு தொழிலை சொல்லிக்கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்ததாக சொல்கிறாரே, அது என்ன தொழில்? இவரும் சாதாரணமான ஆள் அல்ல. இப்போ தாடியரால் நொந்து நொடிஞ்சு வயிற்றெரிச்சலில் புலம்புகிறார். அங்கயன் தாடியருக்கு தேர்தலில் வெல்வதற்காக உதவியவர் என்றால்; இவர் எப்படிப்பட்டவர்? துஸ்ட்டனுக்கு உதவி புரிந்தால் கடைசியில் அவனாலேயே அழிவது திண்ணம். தாடியர் யாரை வைத்து மற்றவரை அடக்கினாரோ அதே வழியை இவர் எடுத்து விட்டார் போலிருக்கிறது. அடுத்த முறை தாடியரின் இடத்தை இவர் நிரப்பக்கூடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் நன்மை செய்திருந்தால்; அந்த மக்கள் இவரை வாழ்த்தியிருப்பர். பாவம் ஏதோ செய்யக்கூடாத தொழிலை செய்து, கூடாத கூட்டத்தோடு கூடி, அழிந்துபோய் நிக்கிறார். இப்போ... தாடியின் அரசியலும் போகப்போகுது, அவரின் சொகுசு வாழ்க்கைக்கு இவர் நஷ்ட ஈடு கொடுத்தார்தான் உண்டு. ஆனால் இவர் எவ்வளவுதான் சொன்னாலும் அந்த மனிதனுக்கு வாக்கு போடுற கூட்டம் போட்டுத்தான் ஆகும். இது இவரின் பிரச்சனை. அவர்களின் பிரச்சனை என்னவோ? அவர்களும் பின்னாளில் சொல்லக்கூடும். தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம். தாடியர் அரசியலில் வீழ்வது இவராலல்ல. தாடியர் மேல் அனுரா நடவடிக்கை எடுப்பாரெனில், அதில் இவர் பங்குமிருக்கும். புலிகளுக்கு ஐம்பது வீதம் கொடுக்க விரும்பாமல், இப்போ எத்தனை கோடியை இழந்து தவிக்கிறார். நேர்மையாய் சம்பாதித்திருந்தால் யாருக்கும் பயப்படாமல், எதையும் இழக்காமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இத்தனை கோடியை இழந்தவரென்றால், அதற்கு மேல் இவர் சம்பாதிக்க இவர்களின் கூட்டுறவு வேண்டியிருந்திருக்கிறது. இவர் மேல் நஷ்ட ஈடு கேட்டு இன்னும் பலர் வழக்கு போடப்போகிறார்கள். வாங்கிய காணிக்கு கையெழுத்து வாங்காமல் விட்ட புலி இவர், இவர்களுக்கு கொடுத்தவற்றுக்கு ஆதாரம் வைத்திருந்திருப்பாரா? எப்படியோ இவரிலும் சம பங்கு தவறுண்டு. அவர்கள் நஷ்ட ஈடு கேட்டால் இவர் கொடுத்த காசை வட்டியோடு திருப்பிகேக்கலாம், குற்றம் நிரூபணமானால் தாடியர் விண்ணரிடம் கேட்ட நஷ்ட ஈடும், வாங்கிய தொகையை வட்டியோடு திருப்பியளிக்கவும் கோரலாம். "மானம் உயிரினும் மேலானது." அதனால்தான், மானம் போனபின் உயிரை என்ன ம** கு என்பர். இவ்வளவு காலமும் மௌனமாக இருந்தவர், இப்போ, கூட்டம் போட்டு பேசுவதிலிருந்து விளங்குதே!
  20. அப்படி என்னதான் இவரைப்பற்றி விண்ணன் அவதூறாக கூறியிருப்பார்? வெளிப்படையாக கூறினால், நாங்களும் கொஞ்சம் சொல்லலாம் அவர் சொன்னது அவதூறா அல்லது முந்தி நடந்ததுதானா என்று. ஐயாவுக்கு உண்மை விளங்கிற்று அதை விண்ணன் மேல் சுமத்துகிறார்.
  21. நாட்டில் சமாதானமே நிலவக்கூடாதென ஒரு சபதம் எடுத்துள்ளார்கள். அதாவது, இனவாதிகள், காடையர், கள்ளர், கொலைகாரர்? உலகத்திலேயே படித்தவர்களை விட இவர்கள் தான் பாராளுமன்றம் போகவேண்டுமென நினைக்கும் முதல் மனிதர் இவர்தான். அதனாலேயே நாடு இந்தளவுக்கு போனது. இன்னும் மூடர் கூட்டம் தான் நாட்டை ஆள வேண்டுமென்கிறார் . அனிஞாயமாக இத்தனைபேர் ஒரு நாட்டின் அழிவுக்காக பாடுபட்டு இந்தக்கதிக்கு ஆளாகியுள்ளனர். இவன் ஊனமடைந்திருந்தால் இப்படிப்பேசுவானா?
  22. இவனெல்லாம் ஒரு சட்டத்தரணி? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுறான்.
  23. யாழ்ப்பாணத்தில் போலீஸ் நிலையங்களுக்கு போகிறவர்கள் லஞ்சம் கொடுக்கக்கூடியவர்களாக இருந்தாலே, அங்கு அவர்களுக்கு வேண்டியது நடக்கும். நீதியின் படி நடப்பவர் லஞ்சம் கொடுக்க முன்வரார், அதுவே தவறு. அதனால் தவறு செய்பவன் லஞ்சத்தை கொடுத்து யோக்கியவானாக திரிவான். மொத்தத்தில் தார்மீகம், ஒழுக்கம், அறிவு அற்ற, ஊழல் பேர்வழிகளே போலீசார். காசு உள்ளவனுக்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நீதிக்கு மாறாக செயற்படுவார்கள். இது நான் சிறுவயதிலிருந்து பார்த்து அறிந்த அனுபவம்.
  24. சிவிலில் மதுபோதையில் வந்து வாகனத்தை முந்திக்கொள்ள முயற்சித்து விழுந்தவர்கள் போலீஸ்காரரோ? தம்மை மறைக்க அடிதடியில் தொடங்கியிருக்கின்றனர். காயமடைந்த போலீஸ் எப்படி அவர்களை நின்று தாக்கியது? சிவில் உடையில் வந்தவருக்கு என்ன அதிகாரமிருக்கிறது? வடபகுதியில் போலிக்காரரினாலே சமூக சீர்கேடுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன, ஊழல் கைலஞ்சம் தாராளமாக புழங்குமிடமும் இதுதான். இப்போ அனுர இவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். கைலஞ்சம் வாங்கா விட்டால் பொலிஸாருக்கு கை அரிக்கும். அதனாலேயே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பார்கள். போலீசார் தங்கள் மேல் தவறில்லையென்றால், எதற்காக காணொளி எடுத்த கைபேசியை பறித்து சென்றனர்? அதை ஆராய்ந்தால் யாரில் பிழை என்பதை கண்டுகொள்ளலாம். மக்கள் வாக்களித்தும், அவர்களுக்காக அவர் போலீசாருடன் மோதியதில்லை. இப்போ, பதவியில்லை என்கிற அறிவிப்பு அவரை சினமடைய வைத்திருக்கும், அவர் ஏன் வாறார்? பதவி என்றால் ஓடி வந்து பெரிய ஊடக அறிக்கை பறந்திருக்கும்.
  25. இலங்கையில் உள்ள தமிழர் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெயரால் கருத்திடுபவர் சைவரே. வேறு மதத்தினரால் சைவத்தின் பெயரால் கருத்திட முடியாது, அது ஏற்புடையதுமல்ல. ஆகவே நீங்கள் தாராளமாக சச்சியரிடம் கேளுங்கள். அவரே, இப்போது சைவசமய அலுவல்களை கவனித்து கண்டிக்கிறார், கருத்து வெளியிடுகிறார். நீங்கள், இங்கு சன்னதம் ஆட நிக்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது. மேலாடை இன்றி என்று பண்பாக கூறியிருக்கலாம். இங்கு கருத்தெழுதும் பலரும் பலவித விளக்கம் தந்துள்ளார்கள், அதில் உங்களுக்கு திருப்தி இல்லாவிட்டால் தேடியறியுங்கள். அவர்கள் சொல்லும் பதில் தவறென்றால் உங்களுக்கு பதில் தெரியுமென்று அர்த்தம். இதெல்லாம் சீண்டல்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.