Everything posted by Eppothum Thamizhan
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏 அதுஎப்படி இவ்வளவுநாளும் ஓரளவுக்காவது நன்றாக இருந்தவர் கடவுச்சீட்டு அனுப்பப்பட்டதும் இறந்திருக்கிறார். அதுவும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில். எங்கோ இடிக்கிறதே??
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
மேலே சிவப்பு எழுத்தில் உள்ளதை வாசிக்கவும்!!
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
இதில் அவிப்பது யாரென்று எல்லோருக்கும் புரியும். சும்மா அமெரிக்கனுக்கும் இஸ்ரேலுக்கும் கொடிபிடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலையிருந்தால் பாருங்கள். 100இக்கு மேற்பட்ட விமானங்கள் வருவதை பார்த்துவிட்டும் உயர் அதிகாரி உதாசீனம் செய்ய சொன்னாராம். கேக்கிறவன் கேனையனாயிருந்தால் .......
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
உதை ஜப்பான்காரன் 1941இல் பேர்ல் ஹார்பரை அடிக்கும்போதே பயன்படுத்தி விட்டான். சும்மா அமெரிக்காவின் அல்லக்கைகளுக்கு துதிபாடுவதே வேலையாய் கொண்டு அலையினம் கொஞ்சப்பேர்!!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
வீட்டுக்கொரு போராளி வரவேண்டுமென்று கேட்டபோது எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவனை கொடுத்தோம். இப்போது பேசலாமல்லவா? இத்தனைக்கும் இப்போதும் நான் ஒரு ஸ்ரீலங்கன் பிரஜை!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நன்னி, இப்போதுதான் முகமூடிகளுக்கு பின்னாலுள்ள முகங்கள் எட்டிப்பார்க்கின்றன! அவர்களுக்கு சிங்குச்சா அடிக்க, முண்டுகொடுக்க எத்தனைபேர்!! விசுகர் இவர் யாரென்று தெரிகிறதா? இப்படியான களைகளை அழிக்காமல் மனிதாபிமானமாக அகன்றுவிடச்சொன்னதால் வந்த விளைவுதான் முள்ளிவாய்க்கால்!
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீங்கள் இதை சொல்கிறீர்களா? உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளமேறி ரொம்ப நாளாச்சே! நெற்கதிர் வளரவேண்டுமென்றால் களைகள் அழிக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டியவையே!!
-
திண்ணை
திண்ணை இனிமேல் தனி திரி போல இயங்குமா? முன்புபோல இல்லையே??😟
-
துவாரகா உரையாற்றியதாக...
2009 இற்கு முன் காசு சேர்க்கசொன்னவர் தலைவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! ஆனால் எல்லாம் முடியும் வேளையிலும், ஆயுதங்களை மௌனித்து சரணடைய சொன்னபின்பும், இன்னும் ஒரு பெரிய அடிக்கு தயார் செய்கிறோம் என்று கூறி உண்டியல் குலுக்கியவர்களுக்கானதே பையனின் கருத்து என்றுதான் நான் விளங்கிக்கொண்டேன்! எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்து போராட்டத்திற்கு கொட்டிக்கொடுத்து இப்பவும் கஷ்டப்படும் ஆயிரக்கணக்கானோர் இருக்கும்போது, உண்டியல் குலுக்கி இப்போ ராஜபோகவாழ்க்கை வாழும் ஈனர்களை ஏதோ போராளிகள் ரேஞ்சிற்கு உயரத்தில் வைக்கிறீர்களே!!
-
துவாரகா உரையாற்றியதாக...
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே அப்படியே வாழ பழகிவிட்டீர்கள்! அதனால்தான் எப்படி வாழ்கிறீர்கள் என்று தெரியாமலே வாழ்கிறீர்கள்!🤣
-
துவாரகா உரையாற்றியதாக...
அதே!!👍
-
துவாரகா உரையாற்றியதாக...
எப்போ உங்களுக்கு யாழ் களம் பந்திவைச்சு படையல் போட்டவை? எங்களுக்கு சொல்லவேயில்லை!! தலைவருக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலிசெலுத்துவது அவரவரின் தனிப்பட்ட உரிமை, கடமை. அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை! பிடிக்கவில்லையா உங்களுக்கு பிடித்த மாதிரி செய்துவிட்டு, பேசாமல் ஒதுங்கி இருங்கள்!! தலைவரின் கடைசி மாவீரர்நாள் உரையை கேட்கவில்லை போலிருக்கிறது. அதுசரி அடிமையாகவே இருந்து பழகி விட்டோம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!!!😜
-
துவாரகா உரையாற்றியதாக...
தலைவா! இது வேதவாக்கு!! அதைவிட்டிட்டு பவுடர் மாமி சொல்ல வாறதை கொஞ்சம் கேளுங்கோ எண்டால்??
-
துவாரகா உரையாற்றியதாக...
என்ன நெடுக்ஸ் விளக்கமே இல்லையா? மாவீரர் தினம் என்பது தலைவரால், எமக்காக உயிர் சிந்தியவர்களை நினைவுகூருவதற்காக உருவாக்கப்பட்ட நாள். முள்ளிவாய்க்கால் மே 18 என்பது நாம் தலைவருக்கும் அவருடன் மரணித்தோருக்கும் அஞ்சலி செலுத்து நாள்! இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இல்லாட்டி பவுடர் மாமி வந்து எல்லாத்தையும் குழப்பி போட்டாவோ?? இப்ப கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் திரியுறியள்!! ம் ம்,பாவம் எப்பிடி இருந்த மனுஷன்!!! மேலே சிவப்பில் உள்ள எழுத்துக்களில் இருந்து தெரிகிறது உங்கள் வண்டவாளம்!😡
-
துவாரகா உரையாற்றியதாக...
என்ன நெடுக்ஸ், முகப்பில் உள்ளதை வாசிக்கவில்லை போலிருக்கு? தாயக கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களை நினைவு கூர்வோம் என்றால் அதற்குள் தலைவரும் அவர் குடும்பமும் அடக்கம்தான். தனியே தலைவருக்கு மட்டும் மாவீரர் நாளில் அஞ்சலி செய்வது தலைவரையே அவமானப்படுத்துவது போலாகாதா?? மேக்கப் மாமியின் உருவ அலங்காரத்தை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இது யாரின் வேலை என்று! என்ன செய்வது இந்தியாவிற்கும், உண்டியல் குலுக்கும் கோஷ்டிக்கும் இப்படியான மட்டமான ஐடியாக்கள்தான் வரும்போல!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பையா ❤️🎂
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் 🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
என்னது Yemen பணக்கார, ராணுவ பலம் பொருந்திய நாடா? நான் இவ்வளவுநாளும் சாத்தான்தான் உள்ளேயிருந்து எழுதவைக்கிது என்று நினைத்தால், இப்பத்தானே தெரியுது பயபுள்ளைக்கு மேல பிரச்சனை எண்டு! 😕
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
LIVE 1st Semi-Final (D/N), Wankhede, November 15, 2023, ICC Cricket World Cup PrevNext India 397/4 New Zealand (10.4/50 ov, T:398) 50/2 New Zealand need 348 runs from 39.2 overs. நியூஸிலாந்தும் கைவிட்டிட்டான், இனி ஆஸ்திரேலியாதான் ஒரே ஒரு நம்பிக்கை!😭
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விளக்கம் இல்லாவிட்டால் இப்படித்தான் பதில்கள்வரும் பையா! கடந்து செல்வதே மேல்!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அது சரி, இந்தியாக்காரன் சொன்னால் ஸ்ரீலங்காக்காரனே கேட்கிறானில்லை. இஸ்ரேல் கட்டாயம் கேட்பான். 🤣
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி 🙏🙏🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதற்கெல்லாம் சேர்த்து ஒருநாள் நல்ல பாடம் படிப்பார்கள்!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பயங்கவாதத்தை தூண்டி, பயங்கரவாதிகளையும் உருவாக்கி அவர்களுக்கு ஆயுத உதவிகளையும் செய்து பின் அதையே சாட்டாக வைத்து அந்த நாடுகளின் வளங்களையும் சுரண்டுவதால்தானே உங்களால் உந்த நாடுகளில் ஒய்யாரமான வாழ்க்கையை வாழ முடிகிறது!!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதே! சிலர் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே கருத்து வைக்கின்றனர்! ஹமாஸ் வேறு சாதாரண பாலஸ்தீனிய குடிமக்கள் வேறு!!