-
Posts
1533 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by valavan
-
கனடாவுக்குள் என்ன செய்யவேண்டுமென்று அமெரிக்காவுடன் கனடிய அரசு போய் பேசுமா? இங்கிலாந்துக்குள் என்ன செய்ய வேண்டுமென்று ஜேர்மனியுடன் போய் பிரிட்டன் அரசு இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துமா? பிராந்திய வல்லரசுக்கு அடிபணிந்து வாழ்ந்தாலும் வாழ்வோமேயொழிய தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கமாட்டோம் என்று வாழும் ஆணவ நிலை தொடரும்வரை உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன் கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்
-
பொதுவாகவே ஒரு தனிமனிதனின் வருமானம், சொத்துக்கள், வாழ்க்கையை தோண்டியெடுத்து செய்தியாக்குவது அருவெருப்பான ஒன்றாகவே பார்ப்பதுண்டு. இங்கே வடிவேலுவின் இந்த பிரமாண்டம்பற்றி பகிர்வதற்குகாரணம், வாழ்க்கையின் அடிமட்டத்தின் கீழிருந்து ஒருவர் தனது ஒப்பற்ற திறமையினால் எவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை காண்பிக்கவே.
-
தந்தி டிவி எனும் இந்திய செய்தி சேவை நிறுவனம் தனது நாட்டு அமெரிக்க குடியேறிகளை பற்றி தானே சொன்ன செய்தியை இங்கே தெரிவித்தது மட்டுமே நான், நீங்க சொன்னபடியே அந்த வீடியோவை பார்க்காமலே தீர்மானிக்கிறது நீங்கள். ஒரு செய்தி பிரிவில் ஒரு செய்தியை தெரிவிப்பது எனது கடமை, அதுபற்றிய தீர்மானங்கள் உங்கள் உரிமை.
-
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஆபத்து.!
-
அரபுநாடுகளுக்கு வேலைக்கு இலங்கையர்களை அனுப்பி வைப்பதே அரசாங்க அனுமதியுடன்தான், அது என்னமோ அரசாங்கத்துக்கு தெரியாத மாதிரியும் இவர்கள்தான் அவர்களை அங்கு அனுப்பி இலங்கைக்கு வருமானம் பெற்று தருவது மாதிரியும் நினைவூட்டுறது மாதிரி இருக்கு. பெரும்பாலான இந்திய இலங்கை முஸ்லீம்களின் நினைப்பு எல்லாம், அரபுநாடுகள் எல்லாம் என்னமோ அவர்கள் நாடு போலவும் இவர்களுக்கு ஒன்று என்றால் அரபுநாடுகள் களத்தில் குதிக்கும் என்பது போலவும் இருக்கும். பாலஸ்தீன பிரச்சனையில் அரபுநாடுகள் எப்படி நடந்து கொண்டன என்பதை பார்த்த பின்னரும் அரபுநாடுகளை காட்டி தாம் வாழும் நாட்டு பிரஜைகளையும் பிரதிநிதிகளையும் அச்சுறுத்தவதுபோல் இவர்கள் கருத்து பகிர்வது நகைச்சுவையின் உச்சம். முஸ்லீம்கள் என்பதற்காக இவர்களை அரபுநாடுகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாது, வேண்டுமென்றால் ரமழானுக்கு பேரீச்சம் பழம் அனுப்பியும் , பள்ளிவாசல் மதராசா கட்டவும் உதவி செய்யும் மற்றும்படி அந்தந்த நாட்டு அரசுகளுடனேயே அவை தொடர்பைபேணும். அதற்கு மிக சிறந்த உதாரணம் முஸ்லிம்களுக்கெதிராக மிக மோசமான தாக்குதலை தொடுக்கிறார் என்று கூறப்படும் மோடியுடன் அரபுலகநாடுகள் மிக நெருக்கமான பொருளாதார அரசியல் இந்து கலாச்சார உறவுகளை பேணுவது.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அனுமதி என்றால் திரு.ஜஸ்டின் , சரி உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறேன். நாங்கள் யாழ்களம் என்ற ஒரு தளத்தில் சம்பாசணை செய்கிறோம் அதன் ஸ்தாபகர் திரு.மோகன், கண்காணிப்பாளர்களாக சில மட்டுறுத்தினர்கள் இருக்கிறார்கள், கருத்து பகிர்வாளர்களாக நாங்களிருக்கிறோம் இங்கே அவரவர் கருத்துக்களை பகிரலாம் உரையாடலாம், அதை சக உறுப்பினர்கள் மறுக்கலாம், ஒத்துபோகலாம் அதுதான் விதியாம். ஆனால் உரிமைபோரில் உயிர் துறந்தவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சித்தால் அந்த கருத்துக்கள் மூர்க்கதனமாக எதிர்க்கப்படும், அதாவது உங்கள் கருத்துக்களை உங்கள் போக்கில் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்பதே சக கள உறுப்பினராகிய எனது கருத்து. தேசியதலைவர் போராளிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டிய யாழ்கள விதிகளில் ஒன்று என்றும் நினைக்கிறேன். ஆக அனுமதி என்றால் அதுதான் அர்த்தம், அலுவலகம் என்று அர்த்தமில்லை, அனுமதி வேறு அலுவலகம் வேறு . கருமங்களுக்கு அலுவலகம் தேவைப்படும் கருத்துக்களுக்கு அலுவலகமும் தேவையில்ல பாஸும் தேவையில்லை . அமெரிக்காவில் விலங்கியல் துறையில் மருத்துவராக கடமையாற்றும் திரு.ஜஸ்டினுக்கு அனுமதி என்று எதை அர்த்தப்படுத்தினோம் என்பது விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன். இல்லை விளங்கவில்லை அனுமதி என்றால் அலுவலகம் வைத்து பியோன் வைத்து மேசையில் ஒரு கொம்புயூட்டர் வத்து வளவன் பாஸ் கொடுக்கவேண்டும் அதுக்கு பேர்தான் அனுமதி என்று நீங்கள் இன்னமும் கருதினால் விதிவிட்ட வழி. -
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நிச்சயமாக அது ஐலண்ட் ஒருவருக்கான பதிலும் மட்டுமோ கோபதாபமுமோ இல்லை ரஞ்சித், அதுபோன்ற எண்ணங்களைகாவி திரியும் அனைவருக்குமான ஒரு பதிவு. ஐலண்டின் எல்லா கருத்துக்களுடனும் எனக்கு முரண்பாடில்லை, சரியென்று தெரியும் சமூக ஒதுக்கல் பிரதேச வேறுபாடுகளுக்கெதிரான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் பல லட்சம்பேரின் ரணங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் எள்ளிநகையாட கூடாது என்பதால் எழுதினேன். இனமானம் என்ற விடயத்தில் ரஞ்சித்துக்கு தெரியாத ஒன்றையா புதிதாக எழுதிவிட போகிறேன். -
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த விடையைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் கோசான், சொல்லிவிட்டீர்கள், இனிமேல் கீழேயுள்ள நீங்கள் பகிர்ந்த கருத்தை சரி பார்த்துக்கொள்ளுங்கள் மாவீரர்கள், வேறு, புலிகள் வேறு அதன் தலைவர் வேறா? உள்ளுக்குள் விடை தெரிந்தும் வெளியே பகிரும் முரண்பாடான இந்த கருத்துப்பகிர்வை இத்தோடு நிறுத்திக்கொள்வதில் எனக்கு மிக விருப்புண்டு. -
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அதைத்தான் நானும் கேட்டேன் கோசான், அந்த புறம் தள்ளிய தலைமை யார்? ஐலண்ட் புலிகளையோ தலைவரையோ அர்த்தப்படுத்தவில்லையென்று சொன்னீர்கள், அவர் அர்த்தபடுத்திய அந்த புறம் தள்ளீய தலைமை யாரென்பதை நீங்களும் சொல்ல தயங்குகிறீர்களா? உலகின் எங்கும் மக்களிடம் ஒவ்வொருவராக சென்று ஒருநாட்டின் அல்லது சமூகத்தின் அரசியல்விவகாரங்களை உங்களுக்கு ஒப்பந்தம் ஓகேயா இல்லையா என்று யாரும் பேசிக்கொண்டிருப்பதில்லை, அவர்களுக்கு தலைமை தாங்குகிறவர்களையே அணுகுவார்கள் என்பது கோசானுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். ஏனென்றால் மக்களால் நேசிக்கப்பட்டதும் உருவானதும் / உருவாக்கப்பட்டதும்தான் தலைமை. -
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அப்படியா கோசான், சரி உங்களிடமே வருகிறேன், தெளிவாக ஒரேவரியில் சொல்லிவிடுங்கள் அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம் , கீழேயுள்ள ஐலண்ட் எழுதிய வரிகளில் அர்த்தப்படுத்தியது, யாரை யார் சார்ந்த சமூகத்தை? மீசை முறுக்கியதும் உதைத்து தள்ளியதும் என்று அவர் அர்த்தப்படுத்தியது யார் தலைமை தாங்கிய ஒரு சமூகத்தை? இது ஐலண்டிடம்தான் கேட்கவேண்உமென்று சாதுரியமாக விலகிவிடாதீர்கள், ஏனென்றால் ஐலண்ட் அர்த்தப்படுத்தியது மாவீரர்களையும் எம் தலைமையையும் இல்லையென்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்போது அவர் அர்த்தப்படுத்தியது வேறு யாரையென்பதும் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் அதனால கேட்கிறேன். இது வீரியமாக எழுதவேண்டும் என்பதற்கான பதிவு இல்லை கோசான், காலம் காலமாக மறக்காமல் அடுத்தடுத்த சந்ததிக்கும் நினைவில் வைத்துக்கொள்ள மீண்டும் மீண்டும் கடத்தப்பட வேண்டியதொன்று என்பதால் எழுதினேன். இன உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு புதுமையும் இல்லை பழமையும் இல்லை. அது எக்காலமும் எம்முடன் எடுத்து செல்லப்பட்டுக்கொண்டிருக்கவும் வேண்டும் எடுத்து சொல்லப்பட்டுக்கொண்டிருக்கவும் வேண்டும்., பல தசாப்தங்களாக எம் இனத்தின்போது எந்த நெகிழ்ச்சியும் எவரும் காட்டாததினால்தான் ஆயுதங்கள் தமிழர்கள் கைக்கு ஏறின, எமக்கு எதிரே ஆயுதத்துடனும் அதிகார பலத்துடனும் நின்றவனுக்கு எந்த நெகிழ்ச்சி போக்கை காட்டியிருக்கவேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்? அதிகாரம், ஆட்சி, ஆயுதம் என்று எம்மைவிட பல மடங்கு பலம் வாய்ந்த ஒரு பெரும்பான்மை இனம், தன்னுடன் வாழும் சிறுபான்மையினருடன் நெகிழ்வு காட்டியிருக்க வேண்டுமா, இல்லை ஒரு பெரும்பான்மை இனத்தின் ஆயுத மிரட்டல், அரசியல் சூழ்ச்சி, நில விழுங்கல்களுக்கு சிறு இன மக்கள் கூட்டம் நெகிழ்வு தன்மை காட்டவேண்டுமா? ஒருவனை பத்துப்பேர் சுற்றிவர நின்று அடிக்கும்போது அடிப்பவர்களிடம் நெகிழ்வு தன்மை இருக்கணுமா, அடிவாங்கி அலறுகிறவனிடம் நெகிழ்வு இருக்கணுமா? உங்களிடம் பொட்டில் அடித்ததுபோல் பதில் இருக்கும், அதை தந்து பலர் அறிய உதவுவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு கோசான். -
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அரசியல்வழியில் சிங்களவனிடம் தீர்வுகளை எதிர்பார்த்து காலம் காலமாக ஏமாந்த எம் சமூகம் பின்னாளில் ஆயுதம் ஏந்தி பிரிந்து செல்ல முற்பட்டது. சேர்த்து வாழாதவனிடம் இருந்து பிரிந்து செல்ல எத்தனிப்பது ஒன்றும் வரலாற்று தவறல்ல. பிரிந்து சென்று தனியரசு அமைப்பது என்ற இலட்சியத்துக்காகவே வடக்கு கிழக்கிலிருந்து பல ஆயிரம் இளைஞர்கள் நம்பிக்கையுடன் தமது உயிரை ஈந்தார்கள், அவர்கள் உயிரை மாகாணசபைக்கே தாரை வார்ப்பதற்கு பிரபாகரன் என்ற தனி மனிதனுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை, அதைத்தான் அவரும் செய்தார், அவர் வாயாலேயே தமிழீழம் என்ற கோட்பாட்டை கைவிட்டால் பிரபாகரனும் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவரே என்றும் சொன்னார். 1987 மாகாண சபை முறையினை ஒட்டுமொத்தமாக புலிகளுட்பட எவரும் புறக்கணிக்கவில்லை, காலத்தின் தேவைகருதி ஏற்றே கொண்டார்கள். ஆனால் அந்த தீர்வு திட்டத்தில்கூட வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பில்லை, பிரபாகரன் முதலமைச்சர் இல்லை, இந்திய ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்ட பிற ஆயுத குழுக்கள் பிரசன்னம், இந்திய விசுவாச கூட்டணியை உள்ளுக்குள் திணித்தல். எந்த அரசியல் கைதிகளும் விடுதலை இல்லை, மாறாக ஆயுதமின்றி இருந்த தளபதிகள் போராளிகளையும் ஆயுத குழுக்கள் இலங்கை அரசு வேட்டையாட அனுமதித்தது, சிங்கள குடியேற்றங்களை கண்டும் காணாமல் விட்டது, புலிகளிடம் ஆயுதங்களை கையளிக்க சொல்லிவிட்டு தமிழர் தேசமெங்கும் எந்த பாரிய சிங்கள ராணுவ முகாம்களையும் அகற்றாதது. மாறாக சிங்கள இந்திய ராணுவங்களால் மட்டுமே தமிழர் பிரதேசத்தை நிரப்பியது, அவசரகால சட்டத்தை நீக்காதது என்று இத்தனையும், இதைவிடவும் அதிக கொடுமைகள் இருந்த மாகாண சபை திட்டத்தில் என்ன இருக்கிறது, இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது? இந்திய இலங்கை ஒப்பந்தமென்று வந்தது அப்பட்டமாக இந்திய பிராந்திய நலன் கருதிய திட்டம், இல்லையென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வு திட்டமென்றால், சண்டைபோட்டவர்களுக்கு இடையில்தான் ஒப்பந்தம் நடந்திருக்கவேண்டும், அதெப்படி சம்பந்தப்படாத இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்று என்றாவது நாம் சிந்தித்ததுண்டா? அன்றே அது உப்பு சப்பில்லாதது என்று உறுதியாகிவிட்டது. ஆயிரக்கணக்கான எம் மக்களும் போராளிகளும் தம்மை ஆகுதியாக்கியது இன்னொரு நாட்டின் பிராந்திய நலனுக்கா? பிளேட் கையில் வெட்டினாலும், தலைவலி காய்ச்சல் வந்தாலும் ஒப்பாரி வைக்கும் பழக்கமுள்ள மனிதன், உயிரையும் உடல் அவயங்களையும் உரிமைக்காக போராட தந்து சிதைந்து போனபோது அவன் தியாகத்தை உருப்படியற்ற தீர்வுகளுக்கு பயன்படுவது வரலாற்று துரோகம் அதையே இயக்கமும் செய்தது. ஆயுதரீதியில் பலம் எம்மைவிட பலமடங்கு அதிகமானதால் சிங்களவனிடம் நாம் தோற்று போனோம், ஆனால் மண் ரீதியாக சிங்களவனிடம் நாம் தோற்றுவிட்டாலும், மண்ரீதியாக , சிங்கள தேசத்தில் அவர்கள் வேறு நாங்கள் வேறு என்ற சிந்தனை தமிழர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். அந்த அடிமனது துயரத்தை நீக்கும்வரை இலங்கை எனும் நாடு உருப்பட வாய்ப்பில்லை என்பது உலகுக்கும் தெரியும் மாறி மாறி ஆட்சி செய்பவர்களுக்கும் தெரியும் சிங்களவனுக்கும் தெரியும், எம்மில் சிலருக்குத்தான் எப்போதும் தெரிவதில்லை. வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். எம்மீது பிறர் ஏறி மிதித்து போவதைகூட மன்னித்துவிடலாம், ஆனால் எம் எதிர்கால கெளரவமான இருப்பிற்காக மட்டுமே போராடியதை தவிர வேறெந்த தவறும் செய்யாத எம் போராளிகள், தலைமையின் ஆன்மாவின் நெஞ்சு மீது ஏறி மிதித்து போகவோ மறைமுகமா ஏளனம் செய்யவோ எவருக்கும் அனுமதி இல்லை. -
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
எல்லாவற்றிற்கும் சுமந்திரனை திட்ட முடியாthu. மாகாண சபை முறையினை இல்லாதொழிக்க சிங்களவன் திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கும்போது, மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்த வேண்டுமென கோருவது ஒரு சூட்சுமம்தான். அரசாங்கமே தேர்தல் நடத்தி தெரிவு செய்த ஒரு அமைப்பை அரசாங்கமே இல்லாதொழிப்பது சட்ட சிக்கலை எதிர்நோக்க கூடிய காரியம்தான். ஒருகாலம் மாகாணசபை முறையையே உப்பு சப்பில்லாதது என்று புறக்கணித்த எம் சமூகம், இன்று அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவது காலத்தின் பரிணாம துயரம். -
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
valavan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
பலரின் கணிப்பும் அதுதான் யசோ, பார்க்கலாம் புதிய மாற்றத்தை கொண்டுவருவேன் என்ற அநுரவின் ஆட்சி எந்த நோக்கில் நகரும் என்று நீங்கள் சொல்வது சரி ஜஸ்டின் நானும் அறம் சார்ந்த விஷயமாகவே அந்த கருத்தை வைத்தேன் மற்றும்படி மதுவிலக்கை நான் வலியுறுத்தவில்லை, அது சாத்தியமும் இல்லை, எடுத்ததுக்கெல்லாம் தலையை வெட்டும் ஆனானப்பட்ட சவுதியிலேயே புலம்பெயர் தொழிலாளர்கள் திருட்டுதனமாக பழங்களை கொண்டு வடி சாராயம் காய்ச்சுவதை அறிந்திருக்கிறேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு அரசானது எவருக்கும் அடிபணிந்து போகவோ அடி பணிய வைக்க சூழ்ச்சிகள் செய்யவோ தேவையில்லை ரதி , அரசு சொல்வதை பிறர் கேட்டே ஆகவேண்டிய பலம் அவர்களோடது. அதை ஆரோக்கியமான விஷயங்களுக்கு பாவிப்பார்களா என்பதே காலமும் மக்களும் எதிர்பார்க்கும் செய்தி. -
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
valavan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
உண்மைதான், பட்டுவேட்டி ஜிப்பா துண்டு போட்டு நெற்றியில் பட்டை, சந்தண பொட்டு குங்கும பொட்டு எல்லாம் வைத்து சிவகடாட்சமாக தவறணைக்கு சிபாரிசுகடிதம் கொடுத்த உலகின் முதல் சிவ பக்தன் ஐயா விக்னேஷ்தான், ஓவியத்தில் மிகவும் விருப்புடைய எனக்கு அதில் தேர்ச்சிபெற முடியவில்லை, அருணாச்சலம் ஐயாவின் கருத்தோவியங்கள் சர்வதேச பத்திரிகளுக்கான உலக தரம். உடனடியாகவே சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் கொட்டி கிடக்கும் அசாத்திய திறமை உங்களுடையது. -
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
valavan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
என் கேள்வியெல்லாம் ரசோதரன், என்ன ரீதியான தண்டனை இவர்களுக்கு தரப்பட போகிறது, எப்படி இவர்களின் எதிர்காலம் அஸ்தமனபடுத்தப்படும், எவ்வளவு விரைவில் தரப்படும் என்பதே . சட்டரீதியாக பலநூறு மதுபானசாலகளை திறந்தால் அது சமுதாயத்துக்கு கேடு இல்லையா? சட்டவிரோதமாக மதுபான சாலை அனுமதி பெற்றவர்கள் எப்படி சமுதாயத்துக்கு விரோதமானவர்களோ, அதேபோலதான் சட்டரீதியா சாராய கடைகளை திறப்பவர்களும், இருபகுதிக்குமிடையில் அதிக வித்தியாசம் இல்லையென்பதே என்னோட ஒண்ணரையணா அறிவுக்கெட்டின வாதம். -
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அதென்னண்டா தமிழ்சிறி, அநுர சிங்கள ஏரியாவெல்லாம் படிப்படியா நல்லா கூட்டி மொப் அடிச்சுக்கொண்டு வாறான், அடுத்தது இவர் போன்ற அல்லகைகள்தான். அப்படி கோர்ட் கேஸ் எண்டு வந்தா நீதிபதிகிட்ட ஐயா நாங்க ரொம்ப நேர்மையானவங்க நீங்க வேணுமெண்டால் பொலிஸ்கிட்ட கேட்டு பாருங்க, லஞ்சம் ஊழல் பண்றது எல்லாம் தப்பு எண்டு போன கிழமைகூட நாங்கள் முறைப்பாடு கொடுத்து ஜனநாயகத்தை காப்பாத்தியிருக்கோம் எண்டு சொல்லத்தான். என்ன இருந்தாலும் அநுர மொப் அடி சூப்பர். -
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
valavan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அப்போ சட்டரீதியாக அனுமதி வாங்கினால் பிரச்சனை இல்லையா? குடும்பத்தையும் தனிமனித வாழ்வையும் அழிக்கும் மதுவிற்கு சட்டரீதியாக அனுமதி வாங்கினால் தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்கிறார்களா? ஒருவேளை சட்டவிரோதமாக அனுமதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியானால் அவர்களின் உரிமம் ரத்தாவதை தவிர வேறு என்ன தண்டனை தரபோகிறார்கள்? ஏற்கனவே பகிரங்கமாக , ஆம் நான் மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசு செய்தேன் என்று பகிரங்கமாக சொன்ன விக்னேஸ்வரனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்ன தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது? தண்டனை தந்தாலும் உரிமம் பெற்றவர்கள் இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அவர்களை பாராளுமன்றத்தை விட்டு வெளியே அனுப்ப அரசினாலோ அல்லது அவர்களுக்கு வாக்களித்த மக்களாலோ முடியுமா? ஒருவேளை அவர்கள் சிக்கி கொண்டாலும் கள்ள லைசன்ஸ் பார்ட்டி எண்டு கடைசிவரை கத்திக்கொண்டு திரிய வேண்டியதுதான். இது ஒரு பாமரனின் சந்தேகங்கள்தான், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வக்காலத்து வாங்கும் செயல் அல்ல. -
அது சும்மா பெயருக்கு சொல்லிக்கொள்வது, நீண்டகாலமாக கடலுணவுகளிலிருந்து காய்கறி கருவேப்பிலைவரை இலங்கை என்று சொல்லி விற்பார்கள் ஆனால் அவை 95% இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை
-
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
valavan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அது ஏன் திமிங்கிலம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு கடந்த காலத்திலேயே தீர்வு காணாமல் அநுர காலத்தில் அவசரமா திருந்துறீங்க? சிங்களவரையே நம்பியிருக்கும் நாமலின் கட்சிக்கு சிங்களவர்களிட்டையே 3% வாக்குகூட கிடைக்கவில்லை, நீங்கள் எதுக்கு யாரும் இல்லாத கடையில யாழ்ப்பாணத்தில போண்டா சுடுறீங்க? -
Pure cream+ ரின் பால், வேணுமெண்டால் கொஞ்சம் வனிலா ஒரே நிமிடத்தில் ஐஸ்கிறீம் கொத்துரொட்டி கொத்து ரொட்டி தயாரிப்புக்கு ரொட்டி தயாரிக்கவே பாதிநாள் போய்விடும், ஆனால் இங்கு அதிவேக மென்மையான ரொட்டி தயாரிப்பு . அப்புறம் என்ன மொத்த வேண்டியதுதான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச ரோஸ்ட் பாண்தான் , இருந்தாலும் சும்மா ஒரு இணைப்பு இது கொஞ்சம் நேரம் எடுக்கும், இருந்தாலும் நம்ம அச்சு பாண். உழுந்து தேவையில்லை, ஊற வைக்க தேவையில்ல அரைக்க தேவையில்லை அதிவேக அரிசி மா தோசை.
-
- 1
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
valavan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழர் பகுதிக்கு அதிக தவறணைகள். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழர் பகுதிக்கு அதிக சலுகைகள் தந்தது இதுவே முதல் தடவை. தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் தரப்படவில்லையென்று சொல்லப்படுவது தவறான பிரச்சாரம். ரணில் தமிழருக்கு அதிக உரிமைகள் தந்த ஒரு தெய்வ திருமகன். -
உப்பு தட்டுப்பாடு ஏற்படுவது ஓரளவு ஆர்ரோக்கியம்தான், எவரை பார்த்தாலும் சுகர் பிறசர் எண்டு கொண்டு குளிசையோட திரியுறாங்க. பிளட் பிறசர் எகிறுறதுக்கு உப்பும் பிரதான காரணம், அதை கெளரவமாக சோத்தில் உப்புபோட்டு திண்டால் ரோஷம் வரும் எண்டு உல்டாவா அடிச்சுவிடுவாங்க .ரத்த கொதிப்பு அதிகமாகி கத்தினா அதுக்கு ரோஷம் எண்டு பெயர் வைக்குறது. மூண்டுமாசம் உப்பு தட்டுப்பாடு இருந்தா யாழ்ப்பாணத்தில் வேலி சண்டை காணி சண்டை குறைய வாய்ப்பிருக்கு. தட்டுப்பாட்டில் ஒரு ஆரோக்கியம்.
-
இந்திய அரசியல்வாதிகளில் ஆரம்பம்முதல் இறுதிவரை விசுவாசமாக புலிகள் பக்கம் நின்ற அரசியல்வாதிகள் இரண்டுபேர் மட்டுமே ஒன்று எம்ஜிஆர் , மற்றையது திரு.பழநெடுமாறன் அவர்கள் மீதமுள்ள ராமதாஸ் , திருமாவளவன், வைகோ போன்றவரெல்லாம் புலிகளுக்கும் பாடிவிட்டு பின்பு கருணாநிதியுடனும் சேர்ந்து கூத்தடிச்சவர்களே. பாண்டிபஜார் கைதிலிருந்து ,ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல், கிட்டண்ணா பயணித்த கப்பல் மீதான இந்திய கடற்படை தாக்குதல், ஜூலை கலவரத்தின்போது தமிழக எழுச்சி, தமிழீழத்திற்கு சிலமுறை உயிரை பணயம் வைத்து பயணம் என்று முள்ளிவாய்க்கால்வரை அவர் காட்டிய புலிகள்மீதான பற்று சந்தேகத்திற்கப்பாற்ப்பட்டது. பின்னாளில் அவர் வயது முதுமை காரணமாக யாரோ அடிச்சுவிட்டதையெல்லாம் நம்பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று பேசபோனது அவர் தள்ளாமையின் பிரதிபலிப்பு ஆனாலும் தமிழீழம் உருவாக இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பது இந்தியாவிடம் பயிற்சிபெற்ற இயக்கங்களுக்கும் தெரியும், இலங்கைக்கும் தெரியும் இலங்கை தமிழருக்கும் தெரியும், இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும். இந்திய உதவியுடன் தமிழர்கள் கை ஓங்கியிருந்த அக்காலத்திலேயே தமிழீழத்தை நினைத்தும் பார்க்க அனுமதிக்காத இந்தியா இனிமேல் அது உருவாக அனுமதிக்கும் உதவி செய்யும் என்று ஐயா எதிர்பார்ப்பது இதுவும் அவர் தள்ளாத வயதின் பிரதிபலிப்பே. இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும் இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.