Everything posted by Maruthankerny
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இப்படி பல தரவுகள் இலங்கை வாழ் மக்கள் எல்லோரிடமும் உண்டு என்னை சொறிவது இருக்கட்டும் முதலில் அறிவு இருந்தா திரி பற்றி எழுதவும் இப்படி திரிக்கு திரி பலடி அடிக்க தேவை இல்லை இனி போய் நிழலியை கூட்டிவாருங்கள் அப்படித்தான் வாழ முடியும் எங்களுக்கு அந்த வில்லங்கம் இல்லை
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"ஒழுங்கா" மகிழ்ச்சியோ இன்பமோ ஒழுங்கா என்பதில் ஒருபோதும் இல்லை. அதை எப்போது மீறுகிறோமோ அங்கேதான் இன்பம் துளிர்க்கும். அப்படி இல்லையெனில் எப்படி ரோலர்கோஸ்ட்டர் பாரக்குகள் பணம் பார்க்க முடியும்? ஒரு திரில் எப்படி வரும். கள்ள காதலாகவே இருந்தாலும் ஓடு கழட்டி அதை கோவில் கர்ப்பகிரகத்திற்கும் அரேங்கேற்றும்போதுதான் சிவன் - பார்வதியின் ஆசிர்வாதத்துடன் முழுமை அடையும். சிவனுக்கும் பார்வதிக்கும் அவர்கள் படைத்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சம்மத்துடன் இன்பம் ஈர்க்கிறார்கள் அதில் அவர்கள் படைப்பின் உன்னதம் மட்டுமே தெரியும். மனிதர்களுக்கு அவர்களே எழுதாத அவர்களுக்கே புரியாத ஒரு ஆயிரம் வருடம் முன்பு யாரோ யாருக்கோ எதுக்காகவோ எழுதிய வரைமுறைகளை வழக்குகளும் வரையறைகளும் குறுக்கே நிற்கும். புத்தானே பல ஆயிரம் வருடங்கள் முன்பு சொல்லி இருக்கிறான் ....... "நீ பயத்தை எப்போது விடுகிறாயோ அந்த நொடியில் இருந்து வாழ தொடங்குகிறாய்" என்று அவர்கள் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள் ........ நாங்கள் சாப்பிட்டுவிட்டு சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
யாழ்நகரமே தப்பாகத்தான் இருக்கிறது ...... அதுக்காக இப்போ யாழ்நகரை அழிக்க வேண்டுமா? யாழ் நகரில் இருந்து வெறும் 4-5 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே காணிகள் புல்லும் புதருமாக இருக்கிறது ஏன் மீண்டும் மீண்டும் அங்கேயே எல்லாவற்றையும் கொண்டு சென்று செருகுகிறார்கள் என்று புரியவில்லை. யாழ் வைத்தியசாலை சுற்று சூழல் ஒரு சாதாரண ஆஸ்பத்திரிக்கு உகந்த இடமாக கூட இல்லாமல் ஆக்கிக்கொண்டு இருகிறார்கள். ஆரிய குளத்தில் இருந்து வெறும் 2௦௦ மீட்டர் தூரத்தில் வைத்தியசாலை பின்புற வாசலுடன் ஓர் நீர்த்தேக்கம் தேங்கி நிற்கிறது அதன் துர்நாற்றம் அதை கடக்கும்போது தாங்க முடியவில்லை. ஆனா அருகிலேயே ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணி நடக்கிறது. இவாறானா செயல்கள் இவற்றையெல்லாம் துப்பரவு செய்யவேண்டிய கட்டாயம் இருந்தும் செய்யாமல் ஏன் இவாறான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இது யாழில் மட்டுமல்ல கொழும்பிலும் இதே நிலை இருக்கிறது கொம்பனித்தெரு அருகில் இப்படி இருக்கிறது. ஒரு தூர நோக்கு திடடம் இடல் என்பது அங்கே அறவே இல்லை. மிக நெரிசலான போக்குவரத்தை உருவாக்கியபின் அதுக்கு தீர்வு பல கோடி ரூபா அழிவாகத்தான் இருக்கும் ........ அதை கருத்தில் எடுத்தால் இப்போ எந்த செலவும் இல்லாமல் அதை சீர் செய்து கொள்ளலாம். பழைய பூங்கா மரங்கள் பற்றி அதை பற்றிய அறிவு உள்ளவர்கள்தான் சரியான முடிவை எடுக்க வேண்டும் அவை என்ன மரங்கள்? எவ்வளவு வருடங்கள் வாழ்கின்றன? இன்னமும் எவ்வளவு வருடம் வாழும்? போன்ற எந்த அறிவும் இல்லாமல் ஏகாந்தம்தாம் தான் எழுத முடியும். வெறும் உணர்ச்சியால் பிரியோசனமானதை எழுத முடியாது. எனக்கு தனிப்பட ஒவ்வரு மரத்துடனும் ஒரு கதை இருக்கிறது நான் அந்த மரங்களுக்கு கீழே வாழ்ந்திருக்கிறேன் தூங்கி இருக்கிறேன் அது என்னுடைய தனிப்படட உணர்வு மட்டுமே. மேலே ஒரு ஐயா சுமந்திரன் தமிழ் ஈழம் தந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள் என்று ஒரு கருத்தோவியம் வரைந்து உள்ளார் அது உண்மைதான். ஆறுஅறிவும் சரியாக வேலை செய்யும் ஒவ்வரு தமிழனும் அதை அப்படிதான் சொல்வான். ஏனென்னில் சுமந்திரன் தமிழ் ஈழம் கொண்டுவந்தால் அதுக்கு கீழே எல்லா தமிழனுக்கும் அழிவு இருக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். இங்கு பலருக்கு சம்மந்தன் ஐயா தனது பதவியையும் கொழும்பில் உள்ள சொத்துக்களையும் கொத்தவிடம் இருந்து காப்பாற்ற பின்கதவால் கொண்டுவந்த பின்புதான் சுமந்திரனை தெரியும். எங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவையே தெரியும். எனவே நீங்கள் வர்ண வர்ண படங்கள் கீறியோ ........ அடுக்குமொழி வார்த்தைஜாலம் எழுதியோ நாங்கள் சுமந்திரனை பற்றி அறிந்துகொள்ள எதுவுமே இல்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
காலம் காலமாக பரம்பரம்பரையாக வாழும் ஒருவனை அந்த இடத்தில இருந்து துரத்தும் உங்கள் எண்ணங்கள் அதைவிட வினோதமானது மட்டுமல்ல விசித்திரமானதும்
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இந்த AI காலத்திலும் எவ்வளவு கருத்து வரடசியில் இருக்கிறார்கள்? தலைப்பு சார்ந்து ஒரு கருத்தை பதிய ஏன் இவர்களுக்கு தோன்றுவதில்லை? இந்த யாழ்களத்தை இப்படி கேவலம் ஆக்கியதை தவிர இதனால் யாருக்கு என்ன லாபம்? சைகொலோஜி ரீதியாக இதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
ரஷியா இப்பிடி இருக்கு ..... அசோவ் (Azov) கடல் பகுதிக்குள் எந்த ஆதிக்கமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே ரசியாவின் இலக்காக இருந்தது அதன் அனைத்து கரையோரங்களையும் கைப்பற்றி அதை பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளது. தவிர ரசிய கட்டுப்பாட்டுக்குள் வந்த போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) பகுதியில் ரேர் மட்டேரியல் (Rare Material) கனிம வளம் உண்டு என்றும் சொல்கிறார்கள். அமெரிக்காவிற்கு இப்போ உக்ரைனில் சமாதானம் வருதோ இல்லையோ ரேர் மாற்றியலுக்கான மைனிங்கை தொடங்க வேண்டும் என்ற அவசரம்தான் அதிகம். மேற்கின் அனைத்து பேச்சும் இலக்கம் Goal இப்போ அதை நோக்கித்தான் உள்ளது ட்ரம் அதை வெளிப்படையாகவே பல தடவை சொல்லி உள்ளார் உக்ரைனை மீள கட்டும் செலவுக்கு ஈடாக கனிமவளங்கள் வேண்டும் என்று.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
பேசுறவனுக்கும் தெரியும் என்ன பேசுகிறோம் என்று கேட்பவனுக்கும் தெரியும் என்ன கிடக்கிறோம் என்று. அது புட்டினுக்கு மட்டும் தெரியாமல் இருக்கும் என்பதுதான் தற்போதைய உலக அரசியலை நகைப்புக்கிடமாக்கி உள்ளது. எதோ ஒன்றை எழுதி ஒரு 4-5 மாதம் சும்மா இருந்தார்கள் என்றால் தலைவர் ட்ரம்மிற்கு உக்ரைப்போரை நிறுத்திய செம்மல் என்று படடம் கிடைத்துவிடும் அதை தொடர்ந்து அந்த நோபல் பரிசையும் கொடுத்தால் ஐரோப்பியாவிற்கு வரி விலக்கும் வந்துவிடும். இவர்க்ளின் எந்த ஆடடத்திற்கும் கிரிமியாவை ரசியா ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை. க்ரீமியாவை வைத்திருந்தாலே கடலை ரஸ்யா பூரண கண்காணிப்பில் வைத்திருக்கும் அதை ரஸ்யா விட்டுக்கொடுக்க போவதில்லை என்பது இவர்களுக்கும் தெரியும். ஆனால் இவர்கள் இலக்கு க்ரீமியாவை தட்டி பறிப்பதுதான் அங்குதான் முக்கிய பேச்சுக்கள் தொடங்கும். இப்போதே இவர்களின் இராணுவ முழு பலமும் அங்குதான் இருக்கிறது அது சின்ன பிள்ளைக்கே தெரியும் அதை வைத்து இனி ரஸ்யாவிற்கு பூச்சாண்டி காட்டிட முடியாது. இந்த இடைவெளியில் நாம் வெனிசுவேலாவை களவாடலாம். ஐக்கிய ராச்சியத்தில் இவ்வளவு கருத்து பஞ்சமா? தலைப்பு : நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
விடுதலை போருக்கும் அடுத்தவன் அரிப்பு போருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எதிரியாய் இருந்தாலும் கோத்தா சொன்னால் சொல்வதை பார்த்து அப்படியே பற்றிக்கொள்ள வேணுமாம். அடுத்தவன் சொன்னால் சொன்னவர்கள் கருத்தை விட்டுவிட்டு எங்கே சுச்சா போனார்கள் எப்போ போனார்கள் எங்கே போனார்கள் என்று என்று பிரிச்சு மேய்ந்து அக்குவேறு ஆணிவேறாக பார்க்கவேண்டும். அப்போதான் அது இனிக்கும்
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
ஊழல் மாடும் உள் ஊரில்தான் உழுகுது .......... அதுதான் வறுமை நீளுது
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
எல்லாவற்றையும் வாசிக்க நேரம் போதவில்லை இணைப்புக்கு நன்றி
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
ஆள் நடமாடடம் இல்லாத வன்னி அக்கரையானில் கொரோன தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு கோத்தபாய ஐயா அவர்களுக்கு அண்ணளவாக 8.5 மில்லியன் மக்கள் வாழும் நியூ யார்க் நகரில் இருந்து எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்து கொள்கிறேன்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அப்படி நாங்களே கேட்க தொடங்கினால்............ உலகத்தில் உங்களுக்கு என்ன மரியாதை? உங்களைப்போன்ற அறிவாளிகள் பிறந்த இனத்தின் பிறந்தோம் என்ற இன்பமே எங்களுக்கு அனுபவித்து முழுவதுமாக களிப்புற ஆயுள்காலம் போதவில்லை. இதில் வேண்டாத வேலைகள் எதற்கு நமக்கு? நீங்களே கேளுங்கள் ...... நீங்களே செல்லுங்கள் உங்கள் நிழலில் நாங்கள் நடந்து வருகிறோம்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இதுதான் உண்மையான யதார்த்த நிலை ....... இதற்கு சுமந்திரனோ மற்றைய ஊரை கொள்ளையடித்து ருசிகண்ட அரசியல்வாதிகளோ குரல் கொடுக்க போவதும் இல்லை அதை முன்னெடுக்க போவதும் இல்லை. இது மலையக தமிழர்களுக்கு என்று இல்லை .... இலங்கை பூராக இதுதான் தேவை என்பது நிதர்சனமாக இருக்கிறது. எங்களுடன் முட்டி முரண்படுவதால் முஸ்லீம்களை விட்டு விடுகிறோம் உள்ளே பார்த்தல் அங்கும் பஞ்சம் பட்டினிதான் இருக்கிறது .... சிங்களவர்கள் நிலை அதைவிட மோசமாக இருக்கிறது. சிறு மாத வருமானம் வராதா? என்ற அங்காலைப்பில்தான் பெரும்திரல் மக்கள் கொழும்புக்கு படை எடுக்கிறார்கள் அங்கே அவர்கள் நிலை பணவீக்கதால் விளையும் பெரும் செலவீனத்தால் இன்னமும் மோசம் அடைகிறது. இருந்துவந்த ஊர்களில் வளமிக்க நிலம் தரிசு நிலம் ஆகிறது. கொழும்பின் சனத்தொகை 6.5 மில்லியன் ஆகிவிட்ட்து அடுத்தவருடம் 7 ஆகினால் கூட ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அரசியல்வாதிகள் ஆடசியாளர்கள் ஒருபக்கம் என்றால் அங்கு தபால் கந்தோரில் முத்திரை ஓட்டுபவனில் இருந்து கச்சேரியில் கையெழுத்து ஈடுபவன் வரை கொம்பு முளைத்து திரிகிறார்கள். இதுக்குள் அந்த நலிந்த மக்களையும் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இதை சொன்ன சுமந்திரனுக்கு இது தெரியாதா? சுமந்திரன் வாயை திறந்தால் 90 களிலேயே 15-35 ஆயிரம் கொடுக்கவேண்டும். அதுவும் பயங்கரவாத சட்ட்தில் உள்ளே இருந்த யாருக்கும் அந்த வாய் திறந்ததே இல்லை. சுமந்திரன் மலையக தமிழர்களை வடக்கில் குடியேற்ற பேசுகிறார் என்றால் மலையக தமிழர்களின் காணிகளை திருட திருட்டுக்கு தரகு வேலைக்கு தயார் ஆகுகிறார் என்றே அர்த்தம். அது மேலே சுமந்திரனுக்கு குழை அடித்து கருத்து எழுதிய அனைவருக்கும் தெரியும் ......... ஆனால் இங்கே இன்னொருவருவரை வெற்றிகரமாக தாக்கி எழுதி இருக்கிறோமா? என்பதுதான் அடிப்படை கொள்கை....... அதில் மிகுந்த வெற்றியுடன் இந்த திரி நீளுகிறது.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? இந்த 26 ஆம் புலிகேசியை ஜனாதிபதி ஆக்கியதே உக்ரைனை அழிக்கத்தானே ........ அவர் அதை செவ்வனவே செய்து முடித்துள்ளார். அந்த வகையில் பாராட்டிடலாம். கடந்த 3 வருடமாக முழு பலத்தையும் பாவித்து முக்கிய மேற்கு ஆதிக்கம் ரசியாவுடன் மோதி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது என்பதுதான் இதில் முக்கிய செய்தி. ரசியாவையும் சீனாவையும் ஒரு வழிக்கு கொண்டுவர ஒரு கடடத்தில் ஈரானை அழித்து வெற்றிபெறலாம் என்று எண்ணினார்கள் அதற்கும் ஈரான் இஸ்ரேலுக்கு கொடுத்த அடியுடன் மூடி கட்டிக்கொண்டு கிளம்பி விடடார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உருவாக்கிய மேற்கு பணக்கார வர்க்கம் தனது இலக்கை அடைந்து வெற்றியை கண்டுள்ளார்கள். அவர்கள் இலக்கு ஆயுத விற்பனை .... உலகில் உணவு பற்றாக்குறையை உண்டுபண்ணுவது, (இரண்டிலும் வெற்றிதான்) அதன் மூலம் மோன்சடோ பேயர் ( Monsanto, Bayer ) என்ற இரண்டு மகா கம்பெனிகளும் உலகம் பூராக விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது. அவர்கள் எண்ணம் அமெரிக்காவிலேயே பெரும் வெற்றியை கண்டிருக்கிறது அமெரிக்க விவசாயிகள் பெரும் கடனில் மூழ்கி இனி இவர்களிடம் சரண் அடைவது என்பதை தவிர்த்து வேறு வழியின்றி பரம்பரை விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முன்புபோல் விவசாயிகளால் இனி லாபம் பார்க்க முடியாது ....... இந்த இரண்டு கொம்பனிகளின் கொத்தடிமைகளாக இருந்துகொண்டு அவர்களின் விதைகள் உரங்களை கொள்வனவு செய்து அவர்களுக்கு உழைக்கும் ஒரு துரதிர்ஷ்ட்ட நிலையில் நிற்கிறார்கள். சமகாலத்தில் சீனா தென்னமெரிக்க நாடுகளில் விவாசாயத்தை முன்னெடுத்து பெரும் வெற்றியை கண்டுள்ளது இது ஆப்ரிக்காவிட்ற்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் ஆனால் மேற்கின் அடிமைகளான நைஜீரியா ருவாண்டா தென் ஆப்ரிக்கா அதை முறியடிப்பார்கள். தென் அமெரிக்காவில் ஒரு கலகத்தை உண்டுபண்ணி அமெரிக்க இராணுவ தளங்களை நிறுவுவதன் மூலம் சீனவை விரட்டிடலாம் எனும் நோக்கில்தான் இப்போ வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். மீடியாக்களின் உதவியுடன் இப்போ மூளைச்சலவை தொடங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இனி வெனிசுவேலா என்ற நாடே மேற்கை குறிப்பாக அமெரிக்காவை அழிக்கத்தான் தோன்றியது போன்ற பரப்புரையை இங்கிருக்கும் ஆடுகள் நம்ப தொடங்கும்போது அது நடக்கும் என எண்ணுகிறேன் அதன் மூலம் இரண்டு இலக்குகள் எடடபடும் ஒன்று வெனிசுவேலாவின் எண்ணெய் அவர்கள் சொத்தாக ஆகும் மற்றது தென்னமெரிக்காவில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கி விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
யாழ்களத்தில் இப்படி எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறேன் அடிபட்டு பறிப்பட்டு தின்கிறார்கள்
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இந்த திரியில் ஒன்றுமே எனக்கு புரியும்படியாக இல்லை .......... எதோ யாழ்களத்தில் இருப்பவர்கள் சுமந்திரனின் புள்ளிகளை மறைக்க பெயிண்ட் அடிக்க போகிறார்கள் என்று எண்ணுகிறேன் நல்ல விஷயம் வரவேற்பிற்கு உரியது சுமந்திரனின் பரம்பரை காணி இரண்டு பருத்தித்துறையில் சும்மா கிடக்கிறது கோடைகாலம் போனபோதும் பார்த்து வந்தேன். மலையக தமிழர்களில் திடீரென காதல் மிகுந்து பொங்கி வழிந்து அடக்கமுடியாது சஞ்சல படுபவர்கள் நான்கு மலையக குடும்பங்களை அழைத்து வந்து அங்கு முதற்கட்ட்மாக குடியமர்த்தி காதலை கட்டுக்குள் கொண்டுவரலாம்
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
இப்போது என்று இல்லை எப்போதுமே ஆக்கிரமிப்பு அதிகாரம் என்பது பொருளாதர நோக்கு உடையதுதான். தட்டி பறிப்பது அதை ஆயுத பலத்துடன் பாதுகாப்பது என்ற அடிப்படை சிந்தனையில் இருந்துதான் அனைத்து யுத்தங்களும் ஆக்கிரமிப்புகளும் நடந்து இருக்கின்றன. ௧௫ஆம் நூற்றாண்டில் இருந்த காலனியாதிக்கம் என்றாலும் சரி தற்போதைய அமெரிக்க சிந்தனை என்றாலும் பொருளாதார அதிகார ஆக்கிரமிப்புதான் அடிப்படை காரணம். உலகம் பூரா தான் கொக்ககோலா விற்கும்போது ப்ரீ மார்க்கெட் என்று தத்துவம் கூறி தற்சார்பு நாடுகள்மீது போர் தொடுத்த அமெரிக்க இன்று நேர் எதிராக எல்லா நாடுகள் மீதும் வரி விதித்து தற்சார்பு கொளகையை கையில் அடுத்து வைத்திருக்கிறது என்பது கொள்கை மாற்றமல்ல ......... இப்போது உலக ஒழுங்கு மாறிவிட்ட்து என்பதால் மட்டுமே. ஏனெனில் உலக சந்தையை இப்போ சீனா கையப்படுத்தி வருகிறது இவர்களால் போட்டி போட கூடிய வலு இல்லை ...... ஆகவே ஒரு மோனோபோலி வடிவமைப்பால் உலகை ஆக்கிரமிக்கும் இன்னொரு தந்திரம் உருவாக்கி வருகிறார்கள். அமேரிக்கா என்றால் ஒரு நாடு என்ற ரீதியில்தான் பலர் பார்க்கிறார்கள் ......... என்னை பொறுத்தவரையில் அமெரிக்க குடிமக்களே சோதனை கூட எலிபோலதான் பலவற்றை அவர்கள் முதலில் பரிசோதிப்பது இவர்களில்தான் இங்கு எது சாதகம் ஆகிறது என்றால் அடுத்தது ஐரோப்பா மக்கள்தான் அவர்கள் இலக்கு.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இரண்டு வரியிலேயே முடித்திருக்க வேண்டிய கறுத்தது வீணாக இரண்டு பந்திகள் உதவி செய்ய போனவன் பொருட்களுடன் போகிறான் படம் பிடிக்க போனவன் காமெராவுடன் போகிறான்
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
அப்போ பூசணிக்காயை பாதியா வெட்டி மறைக்கலாமா?
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
எந்த திரியிலும் சிலர் ஆதாரம் பூதாரம் என்றால் நான் அப்படியே போய்விடுவேன் அவர்களுக்கு தாம் ஏதோ யால களநீதிபதி என்ற நினைப்போ என்னமோ ... அப்படியே கேட்டுவிடடால் நாம் ஓடிவந்து மகாபிரபு இதோ என்று நீட்டிட வேண்டும் என்று ஏதும் எண்ணமோ என்னமோ. இந்த பேச்சுவார்த்தை 1987 லேயே தொடங்கி மால்டா அக்ரீமெண்ட் உருவானது அதன் பின்பு ஜேர்மன் சுவர் வடையும் வரை பல பேச்சுக்கள் உடன்படிக்கைகள் எழுதப்பட்டு இருகினறன. நீங்கள் தட்டினால் கிடைக்க கூடிய வகையில் இல்லாமல் பல இப்போ இன்டர்நெட்டில் இருந்து தூக்க படுகிறது. எங்கள் ஈழ விடுதலை போர் பற்றிய விக்கி தளம் 2017 இல் பல கருத்துக்களை திணித்து இருந்த பலவற்றை அழித்து இருக்கிறது. விக்கி தளம் யூதர்களால் நடாத்தப்படும் ஒன்று. This latter idea of special status for the GDR territory was codified in the final German unification treaty signed on September 12, 1990, by the Two-Plus-Four foreign ministers (see Document 25). The former idea about “closer to the Soviet borders” is written down not in treaties but in multiple memoranda of conversation between the Soviets and the highest-level Western interlocutors (Genscher, Kohl, Baker, Gates, Bush, Mitterrand, Thatcher, Major, Woerner, and others) offering assurances throughout 1990 and into 1991 about protecting Soviet security interests and including the USSR in new European security structures. The two issues were related but not the same. Subsequent analysis sometimes conflated the two and argued that the discussion did not involve all of Europe. The documents published below show clearly that it did. At the Washington summit on May 31, 1990, Bush went out of his way to assure Gorbachev that Germany in NATO would never be directed at the USSR: “Believe me, we are not pushing Germany towards unification, and it is not us who determines the pace of this process. And of course, we have no intention, even in our thoughts, to harm the Soviet Union in any fashion. That is why we are speaking in favor of German unification in NATO without ignoring the wider context of the CSCE, taking the traditional economic ties between the two German states into consideration. Such a model, in our view, corresponds to the Soviet interests as well.” (See Document 21) எழுத்தில் இருக்கும் டாக்குமெண்ட்ஸ் இன்டர்நெட்டில் இப்போதும் இருக்கு நீங்கள் தேடினால் வாசிக்கலாம் ......... இந்த வாய் வாக்குறுதியை வைத்து பலர் குழம்பி கொள்கிறார்கள் நீங்களும் அப்படி என்று எண்ணுகிறேன்
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
யாழ்களத்தில் எழுத்தில் இல்லாத ஒரு விதி இருக்கிறது எங்கள் கருத்துக்களை நாங்கள் எழுத முடியாது ......... இவர் என்ன எழுதுவார் என்று மூன்றாம் நபர் எழுதுவார்.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அப்பப்போ புலிக்காய்ச்சலால் நலிந்து மெலிந்து போகிறார்வர்கள் .... தத்துவம் சொல்லி தருகிறார்கள் ......... நோர்வேயில் குளிர் என்று உண்மையை சொல்வது என்றால் அவர்கள் ஆப்பிரிக்க போய்தான் சொல்ல வேண்டுமாம். சிரித்து சாகவேண்டும் என்பது எங்கள் விதியோ என்னமோ ?
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
கொழும்பில போய் படித்தவர்கள் கொழும்பில் போய் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஈழத்தில் இனப்படுகொலை ஒன்றே நடக்க்கவில்லை விமானங்களில் அவர்கள் பூக்களை தூவினார்கள் என்றுதான் எழுதவேண்டுமோ என்னமோ ?
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
ரசிய உக்ரைன் போரில் இராணுவ தீர்வும் கிடையாது ........ அரசியல் தீர்வும் கிடையாது. உண்மையிலேயே உக்ரைன் மீது பற்று உள்ள ஒருவன் அதிபர் ஆகும்வரை அது நிகழ போவதே இல்லை. எரிந்து கொண்டிருக்கும் உக்ரைனை அமெரிக்காவோ அவர்கள் அருவருடிகளான ஐரோப்பிய ஒன்றியமோ நிறுத்த போவதில்லை அது எரியும் வரைதான் இவர்களுக்கு லாபம். உக்ரைன் போர் என்பதும் அரசியல் தீர்வு என்பதும் மேற்கு கிழக்கு ஜெர்மனி க்கு இடையிலான தடுப்பு சுவர் இடிந்த நாளில் இருந்து நடக்கிறது. அந்த சுவர் இடிக்கும்போது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சீனியர் ஜோர்க் புஸ் சோவியத் யுனினுக்கு ஒரு வாக்குறுதி எழுத்து வடிவத்திலேயே கொடுத்தார் அதாவது ...... ஜெர்மனியில் இருந்து ஒரு இன்ச் கூட நெட்டொ கிழக்கு பக்கம் வாராது என்பதுதான் அது. அன்றில் இருந்து இன்றுவரை இவர்கள் கொடுத்த ஒவ்வரு வாக்குறுதியும் ஒப்பந்தமும் இவர்களால் மீறப்பட்டுக்கொண்டே வருகிறது. இவர்களின் வாக்குறுதிகளோ ஒப்பந்தகளோ ரசியாவிற்கு புதிது அல்ல.