Jump to content

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  10253
 • Joined

 • Last visited

 • Days Won

  26

Everything posted by Maruthankerny

 1. புலிகள் தவறே செய்யவில்லை என்றால் இந்த உலகம் எமக்கு ஈழத்தை தரவா போகிறது? அல்லது புலிகள் செய்த சில தவறுக்காகத்தான் உலகமே சேர்ந்து ஈழத்தமிழரை அழித்ததா? அப்போ ருவாண்டா படுகொலையும் அதனலா? புலிகள் செய்துருப்பின் அது பற்றி பேசுவதில் ஒரு குறையுமில்லை நிறையுமில்லை அன்று காத்தான்குடியில் நடந்த முழு சம்பவத்தையும் நீங்கள் ஒரு முறை மீண்டும் அலசி பாருங்கள் பல விடயம் விடை அற்ற கேள்வியாக மட்டுமே இருக்கிறது. 30 வருட போரில் கெலி இறக்கி பொதுமக்களை கொழுப்புக்கு சிங்கள இராணுவம் கொண்டு சென்ற ஒரே சம்பவம் இதுதான். திடீர் தாக்குதல் இராணுவத்தின் மீது நடந்த போதுகூட உள்ளூர் மருத்துவமனை அல்லது அடுத்த நாள்தான் கெலி. அது எவ்வாறு அன்று மட்டும் எல்லாம் தயாராகவே இருந்தது புலிகள் மறுநாள் படகில் தப்பி சென்றார்கள் என்கிறார்கள் முஸ்லீம்களும் இராணுவமும் அன்று இரவு 40 புலிகள் எங்கு இருந்தார்கள்? எந்த முஸ்லீம் வீடு அடைக்கலம் கொடுத்தது? இவை எனக்கு இருக்கும் தனிப்பட்ட கேள்விகள் மட்டுமே யாருக்காவது விடை தெரிந்து இருப்பின் நானும் அறிய விரும்புகிறேன்
 2. "அதே போல் அப்போ அங்கே வாழ்ந்தவன் என்ற வகையில் 1990ம் ஆண்டு கோட்டை/தீவு பகுதிகள் பற்றி நீங்கள் எழுதியதில் சில தரவு பிழைகள் உண்டு. 1989 இல் காட்டில் இருந்து மீள வந்த புலிகள் நீங்கள் சொல்லுமாப்போல இருக்கவில்லை. மிக வலிமையோடுதான் யாழை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் 1995 ரிவிரெச வரை. அதுவும் சுப்பர் சொனிக், மல்டி பரல் என இலங்கை தனது பலத்தை கூட்டியபினே சாத்தியமானது." மணலாற்றில் இருந்து வந்தது 3 குரூப்தான் ஒரு குரூப்பில் 90-120 பேர் மட்டுமே இவர்கள் சுண்டிக்குளம் ஊடாக மருதங்கேணி ..நாகர்கோவில் ஊடாக வரணி வரணி ஊடாக புத்தூர் நீர்வேலி .... அதுதான் மொத்தம் 400க்கு உள்தான் அப்போதே ஏரியாவில் இருந்தவர்கள் ஒரு 100 ... இந்திய இராணுவம் போகும்போது கே கே ஸ் இல் விடுதலை செய்ததவர்கள் 80 . மிகுதி எல்லாம் சினிமாதான் 90-91 களில் பின்பு இயக்கத்தில் சேர்ந்தவர்கள் அதிகம் காரணம் புலிகளில் சேர்வது என்றால் மிக இலகுவாக இருந்தது. அதற்கு முன்பு புலிகளில் சேர விருப்பம் இருந்தாலும் நீங்கள் 3 மாதம் வரை காத்திருக்க வேண்டும் அதிலும் 650 வரையானவர்கள் 91 ஆனையிறவு சண்டையில் மாவீர்கள் ஆனார்கள். கட்டுவன் கோட்டை ஆனையிறவு காவலரண்களில் நின்ற பலர்தான் கொக்காவில் மாங்குளம் முகாம் அடிக்க போனவர்கள் .... மாங்குளம் சண்டையில் இறந்த பெண்கள் எல்லோரும் யாழில் இருந்து போனவர்கள். யாழில் இருந்த உங்களுக்கே நிலைமை இவ்வாறுதான் தெரியும் ........ புலிவாந்தி எடுப்பவர்கள் யாழில் இருந்து வெளியேறியது 88க்கு முன்னர் ஊர்காவற்றுத்துறையில் ஏன் ஆமி இறங்கினது? புங்குடுதீவு ஊர்வாகத்துறை மண்டைதீவு அந்த முழு தீவு பூராக வெறும் 20 பேர்தான் பாரிசில் சுட்டு இறந்த பரிதி தலைமையில் இருந்தார்கள் ... அதை பக்காவாக பார்த்து தகவல் கொடுத்தது வீடு வீடாக பிளாஸ்டிக் வாளி கோப்பை பீங்கான் விற்கும் முஸ்லீம்கள் அதுக்கு பிறகுதான் புலிகள் மக்களை கட்டாய சென்றி என்று ஊருக்கு ஊர் வெளிகளை கண்காணிக்க விட்டார்கள் "காத்தான் குடி குண்டு வெடிப்பில்லை. உள்ளே இறங்கி சுட்டது. " காத்தான்குடி அப்போது முழு இராணுவ கட்டுப்பாடு பகுதி சுட்டு காயம் ஆன பலரை மருத்துவமனை கொண்டு சென்றது இராணுவம் சூடு நடந்தது நாலு வேறு வேறு பள்ளிவாசல்களில் நடத்தியவர்கள் முஸ்லிம்கள் உடையில்தான் இருந்தார்கள் .... இதெல்லாம் சந்தேகத்துக்கு உரியது. அன்று பின்னேரம் பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்பு புலிகளின் ரஞ்சித்அப்பா காத்தான்குடியில் அதே பகுதியில் ஜின்னா கப்பரின் மருமகனை அவர்கள் வீட்டில் வைத்தே மண்டையில் போட்டுவிட்டு வருகிறார் இப்படி தாக்குதல் செய்யும் திட்டம் இருப்பின் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்? 40 பேர்வரை வந்து தாக்குதல் செய்ததாக சொல்கிறார்கள் ..... அப்படி நடந்த ஒரு தாக்குதல் எவ்வாறு இவ்வளவு காலமும் மர்மமாக இருக்கிறது? புலிகள் செய்யவில்லை என்பது எனது வாதம் இல்லை செய்ததுக்கான ஆதாரம் என்பது இன்று கருணா துரோகி ஆன பின் கூட இல்லை என்றால் கொஞ்சம் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது எழுந்த மாத்திரத்தில் புலிகள் என்று கூறும்படியாக இல்லை
 3. இது வசந்த மண்டபம் மூலஸ்தானம் அப்படியேதான் இருக்கு கோவில் என்றால் லக்சுமி சரஸ்வதி பார்வதி வள்ளி தெய்வானை என்று ஒரு கலகலப்பு இருந்தால்தானே பக்தர்களுக்கும் ஒரு பக்தி வரும்
 4. அப்போ டக்ளசுடன் ஒரு 10 எடுபிடி சித்தார்தனுடன் ஒரு 10 எடுபிடித்தான் இருந்தது உண்மையான எடுபிடிகளுக்கு கோல்ட் லீவ் சிகரெட்டுக்கு காசு இல்லாமல் திரிவார்கள் இவர்கள் வந்து கொழும்பில் நிற்குமட்டும் அவர்களுக்கும் திருவிழாதான் கொழும்பு முஸ்லீம் கடை பிரியாணி பியர் சிங்கள பெண்கள் மசாஜ் அப்போ கொள்ளுப்பிட்டி வெள்ளவத்தை சாவோஐ கோட்டல் அருகில் அதுகளும் இருந்தது பின்பு ஒரு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்று சூதாடும் குதிரை மிசின் மசாஜ் எல்லாம் பூட்டிவிட்டார்
 5. அவர்களின் முதல் பிஸினஸ் பொம்பிளை பிடிக்கிறது மற்றதெல்லாம் அதை சார்ந்தது ... இந்தியாவுக்கு போவதென்றால் இந்திய விசா வேண்டும். ஒரு ஈழத்தமிழனாக நீங்கள் இந்திய எம்பசிக்கு 90 களில் போய்யிருப்பின் .... வரவேற்பு எப்படி என்பது உங்களுக்கே தெரியும் ... விசாவுக்கு புலிவாந்தி.... புததகம் வெளியீடு புலிவாந்திக்கு சன்மானம் இலங்கை இந்திய உளவு துறையால் டாகிளாசு சிர்த்தர்தான் போன்ற முகவர்கள் மூலம் தாராளமாக கிடைக்கும் கேரளாவில் பொம்பிளை பிடிக்க சன்மானம் போதிய பணம் கொடுக்கும். அது ஒரு சுழற்சியாக நடந்துகொண்டு இருந்தது புலிகள் மற்ற இயக்கத்தை தடைசெய்தபின்பு எனக்கு தெரியவே கொழும்புக்கு போதைவஸ்த்து கடத்திவருபவர்கள் 10-12 பேர்கள் இருந்தார்கள். பிடப்பட்டால் இயக்கம் ( ஈப்பி டெலோ புளட்) இல்லாவிட்டால் சொந்த வருமானம் கோட்டலில் ரூம் அப்போதைய பிரபல நடிகைகள் (எனக்கு தெரிய பானுபிரியாவுடன் படுத்தவர்களே இருக்கிறார்கள்) முதல் கேரள ஆந்திர இறக்குமதி யுடன் உல்லாசம். ஊரில் பெற்றோர் உறவினர்கள் ஆள் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று அப்போதைய சாத்திரி மாரின் கல்லாவை நிரப்பி கொண்டு இருந்தார்கள். அப்போ விமான போக்குவரத்து அமைச்சராக அஷ்ரப் இருந்தார் அவருக்கு ரொக்கம் மாறியதும் ஏர்போட்டுக்கு போன் போகும் பிடிப்பட்டவர் டாக்ஸியில் கொழும்புக்கு வருவார்.
 6. குற்றத்தை குற்றம் என்று தெரிந்து வேண்டும் என்றே செய்வது ஒருவரின் செயல் இன்னொருவரை பாதிப்பதால் குற்றம் ஆவது என்பதுக்கு இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அது தவிர இன்னொரு ஆதிக்க இனத்தால் எம் இனம் திட்டமிட்டு அழிக்கபடும்போது சொந்த இனத்தை விற்று அற்ப பணத்துக்கும் பதவிக்கும் வாழுவது என்பது மனித குலத்துக்கே எதிரான ஒரு பட்ஸி எனது மாமா ஒருவரை (எந்த தவறும் இழைக்கவில்லை. ஊரில் உள்ள சில வெத்துவேட்டுகளின் தகவலின் அடிப்படையில்) சூசையே அடித்து கொன்றார். பின்பு உண்மையில் சாவத்துக்காக அடிக்கவில்லை அடிக்கும்போது தவறுதலாக பட்டுவிட்டது என்று கூறினார்கள். சூசை மனம் முடித்து முதன் முதலில் சோடியாக மாவின் மகளின் திருமணத்துக்கே வந்து போனார். பணமும் கொடுத்தார் இவர்கள் வாங்கவில்லை. இவ்வாறு ஈழம் பூராக ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை உன்டு 85லேயே பல இயக்கங்கள் விடுதலை போரை மறந்துவிட்டார்கள் டெலோ பொபியின் கல்வியங்காட்டு முகாமை நேரில் பார்த்து இருப்பவர்களுக்கு அது தெரியும் அது இப்போதைய ஆவா ஆவன்னா குரூப் தலைமை செயலகம் மாதிரிதான். செக்ஸ் படம் சிகரட் புகை என்பது 24/7 புளட் 7 டெலா தலைவர் பிரான்சிசை நான் பார்த்து கொண்டு இருக்கவே கலைத்துக்கொண்டு போனார்கள் பின்பு சரமாரியாக வெடிச்சத்தம் மோட்டார் சையிக்கிளுடன் இறந்து கிடந்தார் நாங்கள் பார்க்க ஓடினோம் ஊர் பெரியவர்கள் எங்களை துரத்தி விட்டார்கள். மல்லாவிக்கும் துணைக்காய்க்கும் இடையில் இந்த புளட் முகம் இருந்தது .... எங்களுக்கு மாங்குள இராணுவத்தை தாண்டி செல்வத்துக்கு அந்த அளவில் பயம் இருப்பதில்லை. அந்த புளட் முகாம் பற்றிய பயம் எல்லோருக்கும் அப்போ அந்த ஏரியாவில் இருந்தது .. அதிகமாக கடை வைத்து இருப்பவர்கள் வந்து பிஸ்கெட் பெட்டிகளை தூக்கிக்கொண்டு சென்று விடுவார்கள் பணம் கேட்டால் அடிதான். எனக்கு தெரிய அப்போ அங்கிருந்த புலிகளுக்கும் அவர்களுக்கு கொஞ்சம் பயம்தான் இவர்களிடம் பெரிதாக ஆயுதங்கள் இருப்பதில்லை ....ஆயுதங்கள் இல்லாதவர்கள் அந்த வீதியால் பயணிப்பதை தவிர்த்து கொள்வார்கள் யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றம் என்பது ஒரு வரலாற்று தவறாக இருந்துவிட்டது ஆனால் இன்று அதை பற்றி எழுதும் யாருக்கும் உண்மையான புலிகளின் நிலை தெரியாது முஸ்லீம்கள் அங்கு இருந்து இருப்பின் தமிழ் மக்களிடமே அடிவாங்கி செத்திருப்பார்கள் அவர்கள் செய்துகொண்டிருந்த வேலை அவ்வாறானது ... தவிர ஒருவர் இருவர் செய்தது அல்ல பள்ளிவாசலில் கூட்டம் கூடி பேசிதான் செய்துகொண்டு இருந்தார்கள் புலிகள் ஆள் பற்றாக்குறையால் கிளித்தட்டு மறித்துக்கொண்டு திரிந்தார்கள் யாழில் எங்கு இராணுவம் வெளியேறினாலும் ஒரு குரூப்தான் ஓடுவதுக்கு இருந்தது ... பலாலி இராணுவம் வெளியேறி காங்கேசன்துறை வரை வந்து கைப்பற்றிய பின்பு முழு பிரதேசத்தையும் காவல் அரண் அமைத்து பாதுக்காக்க கூட அவர்களுக்கு ஆட்கள் இல்லை மையில் கணக்கான பிரதேசங்கள் டம்மி காவலரண் அடித்து வைத்திருந்தார்கள். ஒரு வாரத்தில் மாறி மாறி மூன்று வலிக்காம பொறுப்பாளர்களை இழந்தார்கள் வெளியில் புலி போன்று ஒரு விம்பம் இருந்ததே தவிர உள்ளுக்கு வெறும் டப்பாதான் இருந்தது. பின்பு கொக்காவில் மாங்குளம் முகாம்களை தகர்த்துவிட்டு பால்ராஜ் தனது குரூப்பை கோட்டைக்கு கொண்டுவந்த பின்புதான் ஓரளவுக்கு சமநிலைக்கு வந்தார்கள் .......அதற்கு முன்பு இராணுவம் பயத்தில் இருந்ததே தவிர தீவு போல யாழில் எந்த வெளியில் வந்து இராணுவம் தரை இறங்கி இருந்தாலும் ஆமிக்கு வெற்றிதான். முஸ்லீம்களின் திட்டமிடலில்தான் தீவு தரை இரக்கம் நடந்தது என்பதால் பின்பு ஊர் மக்களை தான் வெளிகளுக்கு சென்றிக்கு விடுவார்கள் ஒரு கை குண்டு கொடுத்து இருந்தார்கள். கெலி வந்து இறங்கினால் எறிந்துவிட்டு ஓட சொல்லி. யாழ் முஸ்லீம்கள் இருந்து இருப்பின் ... யாழ் இராணுவத்தின் கட்டுப்பாடில் 90 கடைசியிலே வந்திருக்கும் ... அவர்கள் திட்டமும் அதுதான். அதே காலத்தில் புலிகளில் இருந்த பலர் இங்கு எழுதுகிறார்கள் தயா நந்தன் போன்றவர்கள் என்பது தெரிந்துதான் எழுதுகிறேன் ... இதுதான் உண்மை நிலை. காத்தான்குடி பள்ளிவாசல் குண்டுவெடிப்பு என்பதன் உண்மை இன்னமும் யாருக்கும் தெரியவில்லை நான் அதை அறிய பல முயற்சி செய்தும் யாரும் அது பற்றி பேசுவதில்லை. புலிகளும் அதை மறுத்ததும் இல்லை. அப்போ கருணாவை விட வேறு பலர்தான் ஆளுமையோடு இருந்தார்கள் ... கோத்தாவின் வீட்டு நாயாகிய பின்பு கூட கருணா கூட இது பற்றி ஏதும் பேசுவதில்லை. அப்போ மடக்கிளப்பு என்றால் றீகன் கீழ்தான் எது நடந்து இருப்பினும் அவரின் கீழ் என்ற நிலைதான் இருந்தது. அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ஆண்டனி அப்போ யாழில் இருந்தார்.
 7. வரும் செப்டம்பர் 11க்குள் முழு இராணுவத்தையும் கூப்பிடுவதாக பைடன் அறிவித்து இருக்கிறார். அதன் பின்பு இவர்கள் எங்கெல்லாம் ஓட போகிறார்கள்? என்பதுதான் புரியவில்லை ஏகாபதியங்களுக்கு மூன்றாம் உலகு எப்போதும் எள்ளு கீரைதான்
 8. கிளியில் காணும் கிளியின் மூக்கு விடலை பெண்ணின் வெற்றிலை நாக்கு புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமியில் படாத பிள்ளையின் பாதம் எல்லா சிவப்பும் ............ உந்தன் கோவம்.
 9. இயற்கையையும் அதன் அழகையும் நீங்கள் ரசிக்கும் ரசனையை நாங்கள் ரசிக்க கூடியதாக இருக்கிறது
 10. எங்களின் கொல்லைக்குள் இருந்த பிரபாகரனை பற்றி 5 தரம் போய் சந்தித்த சொல்கெய்ம் சொல்லிவிட்டார் என்று ஆடுவதுக்கு இருக்கும் கூட்டம்தான் தங்களை அறிவார்ந்த கூட்டமாக இங்கே பதிவு செய்ய துடிக்கிறது இந்த கேடு கெட்ட நிலையைத்தான் அறிவுசார் நிலை என்று நம்பும்போது இவர்களின் அறிவு நிலை எவ்வாறு இருக்கும்?
 11. எங்களுக்கு அடிக்கடி வரும் கேள்வியும் புரியாததும் இதுதானே? என்ன தான் இன துவேசம் அது இது என்று எல்லாம் இருந்தாலும் எப்படி சிங்கள காடைகள் இன்னொரு சக மனிதனை வெட்டி கொத்தி கொலை செய்கிறார்கள்? எங்களால் இன்னொருவன் ஒரு ஆடு மாடை கொலை செய்வதையே நின்று பார்க்க முடிவதில்லை தள்ளி சென்றுவிடுகிறோம் பானுபிரியா போன்ற பிரபல நடிகையே சில காலம் முன்பு ஒரு கன்னட வேலை சிறுமியை எவ்வளவோ கொடுமைக்கு ஆளாக்கி இருந்தார். இது என்ன மாதிரியான ஒரு மனநிலை என்று நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு இவர்களுக்கு தண்டனை கொடுப்பதோடு விட்டுவிட கூடாது. இவர்களுடன் நிறைய பேசி இவர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன் எப்படி எதற்காக வீட்டுக்குள் வந்திருந்தாலும் வீட்டில் இருக்கும் இன்னொரு பெண்ணை எவ்வாறு இன்னொரு பெண் கொடுமை படுத்துவது?
 12. செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம் அடுத்தவன் வந்து முடடையில் மயிர்புடுங்க ஈழ விடுதலை போராட்டத்தில் ஏதும் இல்லை ஒவ்வாரு பேச்சுவார்த்தை முடியும்போதும் அங்கே என்ன நடந்தது என்பதை புலிகள் கூறியே வந்தார்கள் அதை அப்போதைய பத்த்ரிக்கைகள் வெளியிட்டு வந்தன அதை வாசித்து வளந்தர்வர்களுக்கு எவ்வாறு ஏமாற்றபட்டோம் என்பது தெரியும். திலீபன் உணாவிரதம் இருந்தபோது டிக்ஸிட் சார்பாக வெங்கட் புலிகளை வந்து சநதித்து இருந்தார் அதில் யோகி கலந்துவிட்டு வந்து ... திலீபனின் மேடையில் அங்கே என்ன நடந்தது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் அண்ணளவாக நான் அதில் பங்கேற்றது போல இருந்தது இவ்வாறே ஒவொரு பேச்சும் இருந்தது
 13. விடுதலைப்புலிகள் அந்த மக்களுக்கும் மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்குமானவர்கள்...
 14. "சில விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த நிலையிலுமே தமிழக அரசு, மத்திய அரசை மீறிச் செயற்படத் துணிந்ததில்லை. உண்மையில், அந்த விதமான எண்ணம் இருந்ததுமில்லை" நீங்கள் எழுதியது எல்லாம் கால நேர்கோட்டில் இல்லை எல்லாவற்றையும் கால நேர்கோட்டில் தேதி ரீதியாக சரிபடுத்தினாலே போதும் எவ்வாறான அழுத்தம் எம்ஜிஆர் இடம் இருந்து கிடைத்து என்பதுக்கு.
 15. அமெரிக்காவில் எல்லா இடமும் வேலைக்கு ஆள் தேடுகிறார்கள் அமேசான் போன்ற கொம்பனிகள் வேலைக்கு சேர்ந்தால் $1000 தருவதாக அறிவித்து இருக்கிறார்கள். எல்லா இடமும் வால்மார்ட் மெக்டொனால்ட்ஸ் எல்லாம் $4-5 சம்பளம் வேறு கூட்டி கொடுக்கிறார்கள் இருந்தாலும் ஒருவனும் அசையிற மாதிரி தெரியலை
 16. சீன போன்ற பெரிய வல்லரசு நாட்டு ஆட்கள் படலையை புடுங்கிக்கொண்டு உள்ளே வரும்போது நான் வேறு எங்கே போவேன்? உங்களைத்தான் நாடுவேன்
 17. கேரளா கஞ்சாவை கொண்டு சென்று கொட்டுறவர்கள் பாடுதான் இனி பரிதாபம் ஆப்கனிஸ்தான் ஓபியம் கராச்சி மும்பை டக்கா துறைமுகம் ஊடாக கொழும்பு வந்து அங்கிருந்து ஆசியா முதல் கோக்கையின் நிரம்பி வழியும் தென்னமெரிக்கா பிரேசில் வரை போகிறது இவர்களின் நெட்வெர்க் நாம் நினைப்பது போல கொழும்பில் சிறு பொதி விற்பதல்ல
 18. இதைத்தான் மேலே நானும் எழுதி இருக்கிறேன் முதலில் தமிழ் பின்பு மற்றதை பார்க்கலாம்
 19. கிரேக்க இரசதோஷத்தினுடன் படுத்து கிடந்தது பெயிண்டிங் பழகியவர்கள் வந்துவிட்டார்கள் இனி திரி பூரா சித்திரம்தான்
 20. உங்களுக்கு தமிழ் வாசிப்பில் குறைபாடு இருந்தால் அதை திருத்திக்கொள்ளுங்கள் நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை முதலில் வாசியுங்கள் பின்பு உங்கள் பித்தலாட்டங்களை காட்டுங்கள் இன்றைய இணைய காலத்திலில் ஒரு 5 வயது குழந்தையே யார் யார் எதை கண்டு பிடித்தான் என்பதை 5 நிமிடத்தில் ஆதாரத்தோடு காட்டும் உங்களை போன்ற தமிழ் புரியாத விரண்டாவதிகளுடன் உருண்டுபுரள எங்களுக்கு எந்த வில்லங்கமும் இல்லை அப்படியே கல் எறிவதாக ஓரமாக உங்கள் பித்தலாட்டத்தை ஆடிக்கொண்டே போகலாம். ஒரு ஆக்கபூர்வமான ஒரு விவாதத்துக்கு ஒருவன் இருந்தால் அவனுடன் பேசுவதில் பலன் உண்டு உங்களைப்போன்ற பித்தலாட்டம் ஆடி ஆவத்துக்கு ஒன்றும் இல்லை காளிதாசனின் இலக்கியத்திலே இது இருக்கு .......... ஒவ்வாரு நாள் சூரிய மறைவிலும் இது உண்டு
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.