Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Maruthankerny

  1. இந்த வீடியோ நான் முன்பே பார்த்து விடடேன் உண்மையிலேயே ஏதும் இருக்கிறதா அல்லது பங்கு சந்தையில் பணம் பறிக்க பீலா விடுகிறார்களா? நான் கொஞ்ச பங்குகள் ( Northern Minerals) நொர்தேன் மினெரல்ஸ் இல் $.2௦ சத்தத்திற்கு வாங்கி இருக்கிறேன் இப்படி பல மைனிங் கொம்பனிகளில் வாங்கி கோவில் உண்டியலில் போடட கதைதான் நடந்திருக்கிறது ஏதாவது உள் செய்திகள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்
  2. ஈரானில் தலை மூடாத பெண்களையும் வீட்டுக்குள் ரகசியமாக புத்தகம் வாசித்த ஆயிர கணக்கான பெண்களையும் முல்லாக்கள் கைது செய்து சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லும் வீடியோ காடசிகள் பலவீனமான இதயம் கொண்ட யாழ் கள கருத்தாளர்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்
  3. உலக அரசியல் பூவியல் உளவியல் விஞ்ஞான அறிஞர்கள் யாழில் பந்தி பந்தியாக எழுதும் கருத்துக்களை கடந்த 20 வருசமாக வாசித்து வந்தும் உங்களால் எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ தெரியவில்லை. செப்டம்பர் 11/2001 தாக்குதலுக்கு முன்பு ராம்போக்களாக கோலிவூட் சினிமா தொடங்கி அமெரிக்க அரசியல் தலைவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரேவேற்ற உலக முஸ்லிம்கள். எப்படி அதி தீவிர பயங்கரவாதிகள் ஆனார்கள்? 2014 இல் சிரியாவின் 6௦ வீத எண்ணையையும் ஈராக்கின் 4௦ வீத எண்ணையையும் விற்று ஒரு நாளுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக பணம் ஈட்டி உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக இருந்த ஐஸ்ஐஸ் இன்று எங்கே? அவர்கள் பணம் தலைவர்கள் எல்லோரும் எங்கே? அவர்கள் கொன்று குவித்தது மூன்று லடசத்திற்குக்கும் மேலான இசுலாமியர்களை. இன்று சிரியாவை கைப்பற்றிய தீவிரவாதிகள் திடீரெனெ இவ்வளவு ஆயுத பலத்துடன் எங்கிருந்து வந்தார்கள்? அமரிக்காவின் தேடல் பட்டியலில் முதலாம் இரண்டாம் இடத்தில இருந்தவர்களுக்கு இன்று அமரிக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்கிறார். மேற்குலகின் பிரச்சார மூளைசலவைக்கு உள்ளாகி உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிணற்று தவளைகள் போல் இருந்து கொண்டு பந்தி பந்தியாக யாழில் எழுதிக்கொண்டிருக்கும் உலக அரசியலை வாசித்தும் உங்களால் எப்படி இப்படி எழுத கேள்வி கேட்க முடிகிறது? வெறும் பத்து நாட்கள் முன்பு தலையில் முடடாக்கு அணியாது ஈரானின் தலைநகரில் திரிந்த்த ஆயிரக்கணக்கான பெண்களை பிடித்து எவ்வளவு சித்தரவதை செய்து கொல்கிறார்கள் என்பதை தயவு செய்து கீழ் இருக்கும் வீடியோவில் ஒருமுறை பார்த்தாவது உங்கள் நிலைபாடடை கொஞ்சம் மாற்றுங்கள். ஈரானில் யாழ்கள அறிஞர்கள் போல படித்து அறிவு பெறுவதற்கு பெண்களுக்கு 1979 இல் இருந்து தடை விதித்து வந்துள்ளார்கள் பெண்கள் புத்தகத்தை தொடடால் கையை வெட்டி எறிவார்கள் யூனிவர்சிட்டி என்பதே ஈரானில் இல்லை....... தலையை மூடாமல் பெண்கள் வெளியே வந்தால் வீதியிலே தலைவெட்டு அண்ணளவாக ஈழத்தில் தமிழகத்தில் இன்று இருக்கும் நிலைதான் சேலை இன்றி பெண்கள் வெளியில் வந்தால் வெட்ட படுவார்கள் பொட்டு வைக்காது வெளியில் வந்தால் கொல்லபடுவார்கள் எனும் அச்சத்தில்தான் இன்று ஈழத்திலும் இந்தியாவிலும் பெண்கள் சேலை கட்டி வருகிறார்கள் பொட்டு வைத்துக்கொண்டு வெளியில் வருகிறார்கள்
  4. அப்படித்தானே பொதுவாக இருக்கிறது 9 எண்ணுக்கும் வேறு வேறு குணங்கள் எழுதப்பட்டு இருக்கிறது அதுபோலவேதானே அவர்கள் குணாமாசங்களும் இருக்கிறது? ஒரே மாதிரி வாழக்கை இருக்கவேண்டும் என்பதன் பொருள் சரியாக புரியவில்லை அவர் அவர் வாழ்வு அமையும் இடத்திற்கு ஏற்பத்தானே வாழக்கை இருக்கும் அந்த குறிப்பிடட பகுதியில் வாழும் மக்கள் கூடடத்தில் அவர்கள் தமக்கான குணாம்சங்களை கொண்டிருப்பார்கள். பணக்காரர் ஆவார்கள் என்று சொன்னால் எல்லோரும் எலன் மாஸ்க் ஆகுவார்கள் என்று அர்த்தம் ஆகுமா? பெயருக்கான பலன்கள் இராசிபலன் கைச்சாத்திரம் போன்றவை பலவீனமான மனங்களை ஏமாற்றுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் அதில் எண்பது வீதம் என்றாலும் ஏமாற்று வேலை இருப்பதை ஓரளவுக்கு உணர முடியும். ஆனால் இந்த திகதியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை நான் மிக நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன் ஓரளவு உண்மை இருக்கிறது அல்லது அதை பொய் என்று நிறுவ கூடிய எதையும் நான் இன்னமும் காணவில்லை. மேல பலர் காலண்டர் முறைமையை கூறி இருக்கிறார்கள் எந்த காலண்டர் இருந்தாலும் பூமி ஒருமுறை சுற்றுவது ஒரு நாள் அதை காலண்டரை வைத்து மறுக்க முடியாது. ஆகவே அந்த குறிப்பிடட தேதி அல்லது நாள் என்பது அது அதுவாகத்தான் இருக்க போகிறது நாம் அடையாள படுத்தும் முறைமை வேண்டுமானால் வேறாக இருக்கலாம். இவற்றில் எனக்கும் பெரிதான நம்பிக்கை இல்லை அனால் குறித்த இராசியில் உள்ள பொது குணாம்சங்கள் குறித்த திகதியில் பிறந்தவர்களின் குணாம்சங்கள் ஒன்றாக இருப்பதை நான் கவனித்து வருகிறேன். அது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கு இங்கும் யாரும் சரியான பதில் எழுதி அதை பொய் என நிரூபிக்கவில்லை வேறு இடங்களிலும் நான் வாசிக்கவில்லை
  5. உண்மையில் எனக்கு இவற்றில் துளி அளவும் நம்பிக்கை இருந்ததில்லை பின்பு ஒரு எண்கணித சாஸ்திர புத்தகம் கிடைத்த பொது எனது பிறந்த தேதி பற்றி வாசித்தேன். 80 வீதம் என்னைப்பார்த்தே எழுதியதுபோல இருந்தது. ஆதலால் அதனை என்னால் அடித்து மறுக்க முடியாது போனது ... இது எவ்வாறு சாத்தியம்? பின்பு மற்றைய தேதிகளையும் வாசித்து எனக்கு நெருக்கமானவர்கள் குணாதிசயங்களை பார்க்கும்போது அவையும் பெரும்பாலும் பொருந்திய போகினறது. வெள்ளைகார்கள் கூட அதற்கு விதிவிலக்காக இல்லை. ஒருவேளை இதில் எழுதி இருக்கும் விடயங்கள் மட்டுமே நான் பார்க்கிறேன் அது மற்றவர்களிலும் இருக்கலாம் நான் பார்க்காமல் விடுகிறேன் அப்படி இப்படி என்று அதை மறுதலிப்பதற்கும் பொய் என்று சொலவதற்கும் நிறைய ஆதாரம் தேடியும். அதை மறுக்க எனக்கு போதிய ஆதாரம் எதுவும் இல்லை.......... இதன் பின்பே ராசிகள் பற்றியும் வாசிக்க தொடங்கினேன் பொதுவான குணாதிசயங்கள் அவர்கள் சொலவதுபோலவே அந்த அந்த ராசி காரர்களுக்கு இருக்கிறது. நான் பழகும் சிலரை நீங்கள் இன்ன இராசியா என்று கேட்டு அவர்களும் ஆம் அதுதான் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இது பொய்யா மெய்யா என்ற குழப்பம் இப்போதும் உண்டு. மேலே உள்ளவர் போல ஏதன் அடிப்படையில் அவர்கள் குணாதிசயங்களை எழுதுகிறார்கள்? அது எப்படி கொஞ்சம் என்றாலும் பொருந்தி போகிறது என்பதற்கு சரியான விளக்கம் எழுதினால் நாமும் விளங்கிக்கொண்டு வெறும் பொய்தான் என்று அடித்து கூறி விடலாம்
  6. அந்த "சார்" ரை பாதுகாக்க வேண்டும் என்றால் துரித கதியில் வழக்கை முடித்து இவரையும் ஒரு 6-7 மாதம் ஏசி ரூமில் வைத்து எடுக்க வேண்டும்.
  7. இவர் தமிழ் சார்ந்தும் புலி சார்ந்தும் கொஞ்சம் ஓவராக பாடுகிறார் அவரின் கையை பிடித்து இழுத்தார் என்று ஒரு விபச்சாரியை கண்ணகி ஆக்கினால்தான் என் தாகம் தீரும்
  8. அப்படி இல்லையே? அது யாராலும் மறுக்க முடியாத கருத்து, உண்மையான கருத்து அல்லவா?
  9. இங்கு பலரது நோக்கம் புலிகளின் தியங்களை அர்பணிப்புக்களை மறைத்து நடந்து முடிந்த சில தற்செயல்களையும் சில தன்னிச்சையான முடிவுகளையும் வைத்து அவர்களை பயங்கரவாதிகளாகவே தக்க வைத்துக்கொண்டால் தாங்கள் மகாத்மாக்கள் மக்களுக்கா வெட்டி புடுங்கியவர்கள் என்ற எண்ணத்தில் மிதப்பதுதான். புலிகள் முள்ளிவாய்களில் இருந்த அத்தனை மக்களையும் கொன்றிருந்தால்கூட .... எதிர்கால தற்கால நல்லிணக்கங்களுக்கும் ஒற்றுமைக்கும் என்ன வில்லங்கங்கம் இருக்கப்போகிறது? இல்லாத புலிகளின் ஆதிக்கம் இப்போ எந்த வகையில் இப்போதைய அரசியல் முடிவுகளை தடுத்து நிறுத்த போகிறது? இருவராலும் பாதிக்கப்பட்ட்து தமிழ் மக்கள்தானே ? எங்களை நாங்களே சுட்ட்து தப்புதான் அது மாபெரும் குற்றம் என்று சிங்களவர்களுக்கு சென்று சொலவதில் ........ அதில் சிங்கள தரப்பிற்கு என்ன வில்லங்கம் / வியாக்கினம் இருக்கிறது? ஐநா சபை யாப்பிற்கு எதிரான முழுதான இனவழிப்பை ௩௦ வருடமாக செய்தவர்கள் சிங்களவர்களும் அவர்கள் அரசுகளும் இராணுவமும். அதுக்கு இணையாக எங்கள் காணி சண்டை வேலி சண்டையையும் ஆக்கினால்தான் ........ சிங்களவர்கள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவார்கள் என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுக்கு என்ன பெயர் என்று எனக்கு தெரியவில்லை
  10. அப்போது அதுதான் உண்மை என்று கட்டிவைத்து அடித்து சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை ரஜனி தினகரணமே யை தாம்தான் சுட்டொம் இப்படி திடடம் வகுத்து இன்னார்தான் இந்த துப்பாக்கியால்தான் சுட்டொம் என்று அவர்களே எழுதிய போதுகூட இன்னமும் 90 வீதமானவர்கள் நம்புவதில்லை. அது புலிகள்தான் சுடடார்கள் என்று இந்த யாழ்களத்திலேயே 5-6 திரி ஓடி இருக்கிறது. இனியும் அது முடியாது ...... தற்போதைய யாழ்களத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்றே எண்ணுகிறேன் அது நிறைவேற வேண்டும் என்றால் சின்னத்திரை நாடகங்கள்போல ரஜனி திரி இனியும் திறக்கப்படும் என்றே நம்புகிறேன்
  11. சோபாசக்திக்கு முட்டுக்கொடுப்பவர்கள் தற்காலத்தில் வெள்ளை வேட்டி சால்வை போட்டிருப்பதால் முட்டு கொடுக்க வரவில்லை என்று நினைக்கிறேன் லீனா மணிமேகலை ( பொம்பிளை சோபாசக்தி.... பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை)
  12. 25 % என்றால் கண்ணில் குத்தும் என்று ஒரு வீதத்தை குறைத்து எல்லா ஊழலவாதிகளும் கடசி இனம் மத பேதம் இன்றி தங்கள் மடியை கனமாக்க வாக்குகள் போட்டு நிறைவேற்றி இருக்கிறார்கள். இதுவே ஒரு மக்கள் பிரச்சனையாக இருந்து இருந்தால் எததனை வாக்குவாதம் எத்தனைஇழுபறிகள்?
  13. கிடடதட்ட ஒரு குறித்த பெண்ணிடம் இருந்து 5 ஆண்களுக்கு தொற்றியிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 106 பெண்களிடம் இருந்து 718 ஆண்களுக்கு தொற்றி இருக்கிறது எனும் கணக்கின் பிரகாரம். ( இது கடந்த வருட தோற்று அறிக்கை இதற்கு முன்னைய வருடங்களில் தொற்றுக்குள்ளாறவர்களும் பரப்பி இருப்பார்கள் என்பது எனக்கும் தெரியும் அப்போதைய வருட கணக்கும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்) முன்பு ஒரு எயிட்ஸ் பற்றிய திரியில் பலகாலம் முன்பு நெடுக்காலபோவான் பெண்கள்தான் கிருமி காவிகள் என்று எழுதி இருந்தார். அதில் அவரை பலரும் திட்டி தீர்த்து இருந்தார்கள் அப்போது எனக்கும் அவரது பெண்களுக்கு எதிரான கருத்துக்களில் உடன்பாடுகள் இருந்ததில்லை. இப்போது பார்த்தால் தலைதான் சரியாக இருந்து இருக்கிறாரோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.
  14. எங்கேயோ கேட்ட குரல் ......... அந்த குரல் ரஞ்சிதா மரத்தடியில் ஞானம் பெற்றது போல புதன் ஜீ ஆனந்தா ரம்சிகா மரத்தடியில் ஞானம் பெற வாழ்த்துகிறேன்!
  15. இதில் இருவரின் ( கருணா + சவேந்திர சில்வா) பிறந்த திகதி மாதம் ஒன்றாகவும் மூவரின் ( கருணாகோடா வசந்த) பிறந்த திகதி ஒன்றாகவும் இருக்கிறது. 22/06 ( is it a coincidence?) யாரவது நுமராலாகி கார்கள் இருக்கிறீர்களா?
  16. பல இருதய நோய்களுக்கு அத்திவாரம் விடுவதே இந்த நித்திரை உண்மைதான் அத்திவாரம் இடுவதே இந்த நித்திரை இன்மைதான் என்று பல ஆய்வுகள் முடிவுகளை வாசித்து இருக்கிறேன். நானும் இரண்டு வேலைகள் படிப்பு என்று இளவயதில் இருந்தே நித்திரை சரியாக கொள்ளாது பழகியதால் இப்போதும் கொஞ்சம் கடினமாக இருக்கிறது நான்கு ஐந்து மணித்தியாலங்கள் தூங்கினாலே விழித்து விடுகிறேன். அப்போது இது பெரிதாக தெரியவில்லை .... இப்போது உடல் சோர்வாக இருக்கிறது அதிக உடற்பயிற்சி இதை சரி செய்யும் என்று நம்புகிறேன்
  17. இவனை எல்லாம் பார்த்தால் சாமி மாதிரியா இருக்கு? பார்த்தாலே போருக்கு பொறுக்கி மாதிரி இருக்கு என்ன துணிவில் தனி அறையில் பூஜைகளுக்கு இந்த பெண்கள் போனார்கள் என்றே தெரியவில்லை. இந்த மதவாதிகள் அனைவருமே பலவீனமான பெண்களை கண்டுவிடடால் கண்டம் பண்ணாமல் போவதில்லை. இவனை பிடித்து சிறையில் அடைத்தால்தான் மிகுதி பெண்களுக்கும் கொஞ்சம் புத்தி வரும். ஏன் இந்த செய்தி வேறு எங்கும் இல்லை ... ஒரு ஆங்கில செய்தி மட்டுமே இருக்கிறது
  18. இந்த திரியில் பல சாத்தான்கள் வேதம் ஓதி இருக்கின்றன .... இங்கு யாழ்களத்தில் கருத்து எழுதும் சக கருத்தாளர்களை மிக கேவலமான முறையில் வசைபாடியும் தாங்கள் அறிவு மிகுந்தவர்கள் மற்றவர்கள் யாபேரும் அறிவற்றவர்கள் என்ற தொனியிலும் ஒரு ஆதிக்க வெறியில் மிதந்தவர்கள் ....... யாழ் பல்கலைகழகத்தில் தங்கள் சகோதரனுக்கு புத்தி கூறுகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். ஆதிக்க வெறி என்பதோ .... ஆதிக்க சிந்தனை என்பதோ ... அடுத்தவன் தாழ்ந்தவன் எனும் அடிப்படை எண்ணமோ திடீரெனெ யாருக்கும் வருவதில்லை. அவை எல்லாம் உள்ளேயே இருக்கும் இப்படி சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது தலை கவசத்தை தூக்கி சொந்த முகத்தை காட்டி விடுகிறார்கள் அவ்வளவுதான். அவ்வளவு நாகரீமான பண்பான சமூக யாழ்பாணத்து மக்கள் இருந்து இருப்பின் அவ்வளவு சாதி கொடுமைகளும் எப்படி அரங்கேறின? இதே யாழ் பல்கலைக்கு பல தடைகளை தாண்டி தகுதி பெற்று வந்த கீழ்சாதி மாணவர்கள் (குறிப்பாக மாணவிகள்) வாடகைக்கு வாசித்த வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு ... சக மாணவர்களின் சொல்லாடல்கள் மன அழுத்தம் கொண்டு இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு சென்று இருகிறார்கள். இன்றுகாலைதான் "புதிய ஆரம்பம்" என்று கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்கள் எழுதி இந்த யாழ்களத்தில் பதிந்த கதையை வாசித்தேன். பல நினைவுகள் எனக்கு அதை வாசிக்கும்போது வந்து சென்றது அந்த கதையின் கீழ் ஒரு நிகழ்வை எழுதவேண்டும் என்று இருந்தேன் ... இப்போ இந்த திரி கண்ணில் பட்ட்து. குதிரை வேகத்தில் வந்திறங்கிய சாத்தான்களை பார்த்ததும் எனக்கு எந்த வியப்பும் இல்லை அவர்கள் ஆதி முதல் அந்தம் வரை என்னால் புரிய முடியும் என்பதால். இதை பல்கலைக்கழகத்தில் சரி செய்தால் பகிடிவத்தைத்தான் முடியும். அது ஒரு தீர்வாகி விடும் என்று இங்கு பலரும் எண்ணுகிறார்கள். அனால் இந்த பகிடிவதையோ ஆதிக்க எண்ணமோ முடியபோவிதில்லை.... அது வேலை தளம் வரை நீளும் இவர்களே பின்பு ஆசிரியர்கள் மருத்துவர்கள் கிராம அபிவிருத்தி அதிகாரிகளாக வருவார்கள் இப்போ இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தலைக்கவசம் கம்பு தடிகள்தான் ... பின்பு அதிகாரம் பதவி போன்ற பெரும் ஆயுதங்கள் சிக்கிக்கொள்ளும். அப்போது இவர்களிடம் சிக்கிப்போகும் சக பணியாளர்கள் மக்கள் நோயாளிகள் பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்? நிறைய எழுதலாம் .......... இவை எல்லாம் யாழ் களத்தில் தங்குமா என்று தெரியவில்லை. குறித்த நிர்வாகத்தினர் கண்ணில் பட்ட்தும் நீக்கப்பட்டு விடும் என்றே எண்ணுகிறேன். இவற்றை நாம் எழுதமுடியாது ... சமரசம் பற்றி வேதம் பற்றி எழுதுவது என்றாலும் அது சாத்தான்களுக்கான உரிமையே!
  19. நிழலி இதை வாசித்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன் ........ உங்களுக்கு ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை ( அதிகார வர்க்க சிந்தனை உள்ளவர்களுக்கு இருக்கும் ஒரு சாதாரண இயல்புதான்) இப்படி முன்பு நான் ஒரு திரியில் எழுதியபோது ... அதில் சிலரை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் ஓடி வந்து எனது கருத்துக்களை நீக்கினீர்கள். நான் எழுதாதவற்றை எழுதியதாக நீங்களே எழுதினீன்றக்ள். நான் எங்கே இப்படி எழுதி இருக்கிறேன் என்று கேட்டு எழுதியதை கூட நீக்கினீர்கள்.... பின்பு நான் எழுதிய அப்படியே குவாட் செய்தேன் அதையும் நீக்கினீர்கள். இன்று பெரிய சமத்துவ விரும்பியாக அதையே நீங்கள் எழுதுகிறீர்கள். மிக சிரிப்பாக இருக்கிறது........... அரசியல்வாதிகள் பற்றியும் ... வல்லாதிக்க அரசுகள் பற்றியும் நாம் கவலை அடைய பெரிதாக என்ன இருக்க போகிறது? உங்கள் நிர்வாகம் ... உங்கள் தளம் ... உங்கள் ஆதிக்கம் ... இதில் எனக்கென்ன வேலை? என்றுவிட்டு கடந்து விடுகிறேன் ஆதிக்க சிந்தனை என்பது ஒருவனுக்கு திடீரென வருவதில்லை சிறுவயதில் இருந்து அவனது மூளை உள்வாங்கிய எண்ணங்கள் உள்ளுக்குள்ளேயே இருக்கும். அவனுக்கு சாதகம் இல்லாத இடங்களிலும் தன்னை சமத்துவ விரும்பியாக காட்டிட முனையும் தருணங்களிலும் கஸ்டரபட்டு தன்னை மறைத்து கொள்வான். தருணம் கிடைக்கும்போது இப்படி தலை கவசத்தால் கூட தாக்குவதற்கு தயங்க மாட்டான். இன்று மேற்கு நாடுகளில் குறிப்பாக அமெரிக்க இத்தாலி போலந்து கங்கேரி நாடுகளின் அரசுகள் சாதகமாக இருப்பதால் வெள்ளை தோல் நிற ஆதிக்கம் என்பது மெல்ல மெல்ல மேல் எழும்ப தொடங்கி இருக்கிறது. ஒரு உதாரணத்திற்காக எழுதுகிறேன் தென் ஆப்ரிக்காவிற்கு எலன் மாஸ்கின் தாத்தா குடிபெயர காரணமே அங்கு கறுப்பினத்தவர்கள் அடிமைகள் ஆக்கப்பட்டு வெள்ளையர்கள் ஆதிக்கத்தின் கீழ் தென் ஆப்ரிக்க இருந்ததுதான் அவரின் இனதுவேஷ சிந்தனை எண்ணம் எல்லாம் அப்படியே அவர் மகனுக்கு தாவியது பின்பு அவர் பேரனுக்கும் தாவியது .... எலன் மாஸ்க் சிறுவயதில் கல்வி கற்ற தனியார் பாடசாலையில் நாசிகளின் சலூட் உடன்தான் வகுப்புகளேஆரம்பம் ஆகி இருக்கிறது. இவ்வளவு காலமும் இதனை தன்னுள் மறைத்து வைத்திருந்தவர் ... இப்போது மெதுவாக தன் சொந்த முகத்தை காட்டுகிறார். இதை நன்கு அறிந்துகொண்ட இஸ்திரேலிய மொஸாட் இவரை பண பலத்தால் மிக நுட்பமாக கையாண்டு வருகிறது. ஆக்டொபர் ௭ முன் அவர் கூறிவந்த வாக்கியங்களும் பின்பு காசா போர் உச்சம் அடைந்த போது அவரை இஸ்திரேலுக்கு அழைத்தது குழை அடித்த பின்பு அவரின் வார்த்தைகளும் நேர் எதிரானவை. இதை செய்திகளை வாசிப்பவர்கள் கவனித்து இருப்பார்கள். இப்போ காமாஸ் கடத்தி சென்றவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஒரு பேண்ட் ஒன்றை கையில் போட்டு கொண்டு திரிகிறார்.
  20. இவாறான ரஷியன் ப்ரோபஹாண்டா வீடியோக்களை யாழில் பதிவு செய்யாதீர்கள். தீண்டாமை அடிப்படை அறிவுகளை தீண்டும் செயல்கள் இவை. என்ன நடக்கிறதோ அதை உள்ளது உள்ளபடி பிபிசி சின்ன் போன்ற செய்தி ஊடகங்கள் எங்களுக்கு காட்டுகிறார்கள் தவிர யாழ்கள அரசியல் ஆலோசகர்கள் சரியாகவும் நேர்த்தியாகவும் நடந்த நடக்கப்போகும் விடயங்களை கூறுகிறார்கள். முதலில் இதில் எந்த மூலமும் இல்லை இது யாழ்கள விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அதை சரி பார்த்து உரியவர்கள் இந்த திரியை நீக்கிவிடவும். நேற்று ஸ்திரேலிய வீரர்கள் வெற்றிகரமாக காசாவில் செய்த தாக்குதலில் இரண்டு காமாஸ் பயங்கரவாதிகள் ஒழித்து இருந்த ஹோஸ்பிடல்கள் தரைமடடம் ஆக்கப்பட்டு இருக்கிறது அதில் 316 காமாஸ் பயங்கரவ்திக்கள் 2 ஆறுமாத பயங்கரவாதிகள் உடபட கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
  21. நெடுக்ஸ் மற்றும் அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.