Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. கஸ்தூரி சொல்லி இருப்பது தெலுங்கு ஆண்களை தானே குறிக்கிறது (அந்தப்புர மகளிருக்கு சேவை) அந்தப்புர மகளிர் அரசிக்கு சேவை. அதில் பொதுவாக, ஆண்களே அந்தப்புர மகளிருக்கு பல கடின வேலைகளை செய்வது.
  2. உண்மையாக இருக்குமோ? கஸ்தூரி சொல்ல வந்ததது, (தமிழ்) மன்னர்களுக்கு (தமிழ்) அரசிமாரை (அந்தப்புர) கட்டிலில் கட்டி ஆழ முடியவில்லை. மகளிரிடம், (தமிழ்) அரசிகள், எங்கடை (தமிழ்) ஆம்பிளையளை விட்டு, ஏன் தெலுங்கரோடு கூத்தடிக்கிறீர்கள் என்று கேட்காமல் இருந்து இருப்பார்களா? உண்மையான விடயம் தெரியவரமுதல் வழக்கு என்று போய், உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு விட்டது?
  3. இவர்கள் உலகளாவிய மக்களா , அல்லது us இல் இருப்பவர்களா? ஏனெனில், அந்த இன வகைப்படுத்தல் US இல் பாவிக்கப்படுவது. ஆம் அதில் இருப்பது US இல் என்று. "This is the first study to look at dementia risk in a large population representing the diversity of the United States" "The study population included more than 274,000 northern California members of Kaiser Permanente, the nation’s largest private integrated healthcare system with more than 10 million members." உலகளாவிய அடிப்படையில் இது வேறுபடலாம் ஏனெனில், us இல் இருக்கும் கறுப்பு, மற்றும் பூர்வீக குடிகளுக்கு சமீப வரலாறு சுமை, பொதி அகற்றப்படவில்லை.
  4. இதை போலவே, இப்பொது உணவாக பெருவிலைபோகும் அரசன் நண்டு (king crab) (கிட்டத்தட்ட , ஆக குறைந்தது 1 கிலோ 100 பிரித்தானிய பௌண்ட்ஸ், நண்டின் அளவை பொறுத்து) , அன்றைய சோவியத் யூனியனால், வட பசிபிக் பூர்வீக அரசன் நண்டு (மரபணு மாற்றம் செயப்படு என்று நம்பப்படுகிறது, ஏனெனில் அவற்றின் மிகப் பெரிய தோற்றம்) Barents கடலில் உணவுக்காக, (கடல் கூண்டில்) வளர்த்து உற்பத்தி செய்யப்பட்டது. அனால், அப்படி வளர்க்கப்பட்ட அரச நண்டுகள் அவ்வப்போது தப்பி கடலில் பரவி விட்டது. ஏனெனில், அவை உணவு சங்கிலியின் உச்சத்தில் இருப்பவை, Barents கடலில் இந்த அரசன் நண்டுகள் உணவாகும் வேறு உயிரினங்கள் இல்லை. பூர்வீக வட பசிபிக் அரசன் நண்டிலும் பார்க்க , Barents கடலில் சோவியத் யூனியனால் வந்த அரசன் நண்டுகள் அரசன் நண்டுகள் மிகப்பெரியவை. ஆனால், Barents கடலின் சுற்றுச்சூழல், ஒட்டு கடல் உயிரினங்களுக்கு (நண்டு, இறால் போன்றவை) மிகவும் உகந்த சூழல், அதனால், உணவு சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் அரசன் நண்டு அப்படியான பெரிய தோற்றத்துக்கு நாளடைவில் வளந்தாதாக என்ற விளக்கமும் இருக்கிறது. மற்றது, பூர்விக வடபசிபிக் அரசன் நண்டுகள் கருமையான மண்ணிறத்தில் இருந்து கருமையான சிவப்பு நிறம். ஆனால், Barents கடல் அரசன் நண்டுகள் பிரகாசமான சிவப்பு நிறம், உண்மையில் அழகான நூதன உயிரினம் போல தோற்றமளிக்கும்.
  5. மன்னிக்கவும், இந்த போட்டியில் நான் கலந்து கொள்ளமாட்டேன். நான் அங்கு வாழவில்லை. அங்குள்ளவர்களின் பிரதிபலிப்பு (மக்களும், வேட்பாளர்களும்), உணர்வுகளை இங்கிருந்து கொண்டு எடை போடுவது கூடாது, முடியாது. கட்சி தேர்வில், தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே எனது தெரிவு. தமிழ் மக்களின் நலன்களில் நான் தெளிவாக இருக்கிறேன்.
  6. இது எல்லோருக்கும் பொதுவானது. இங்கு எந்த கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவிப்பது, தெரிவில் செல்வாக்கு செலுத்தும். இங்கு அந்த செல்வாக்கு முக்கியமானது, தெரிவாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்.
  7. அரச செலவழிப்பது. அரசில் நேரடியாக இருக்கும் வேலைகளை மட்டும் அல்லாது அதற்கு வெளியேயும் வேலைகள், உப தொழிதுறைகள் (industries) ஐ உருவாக்குகிறது. இது வேலைகள் / தொழில்கள் குறையும் /முடங்கும் நிலையை ஏற்றப்படுத்தலாம், மறுவளமாக பணவீக்கத்தையும் குறைக்கலாம். இந்த அரச செலவுக்கு குறைப்புக்கு கிட்டத்தட்ட ஒப்பனை அளவு, தனியார் துறை முதலிடாவிட்டால், பொருளாதாரத்தை தாக்கக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால், அரசு செலவை குறைக்கும் போது, தனியார் துறை பொதுவாக முதலிடாது. அனால், டிரம்ப் இன் எதிர்பார்ப்பு, அரச செலவை குறைப்பதன் மூலம், வரியை குறைப்பது. இது தாக்கப்போவது டிரம்ப் க்கு வாக்களித்த நடுத்தரம் மற்றும் அதன் கீழான வருமானத்தை கொண்டவரை. அமெரிக்க அரசின் பணம் வீணாக்குவது,முக்கியமாக, இராணுவத்தில் (என்றே நினைக்கிறன்). இதில் டிரம்ப் கைவைக்க போய், டிரம்புக்கு impeachment இல் வந்து நின்றாலும் ஒன்றும் புதினம் இல்லை.
  8. வாக்களித்தது எந்த கட்சிக்கு என்று வெளியிடமாட்டேன். தெரிவின் அடிப்படை. அருச்சனா - சுயேட்யச்சையில் - அரசியல் முதிர்ச்சி போதாது. இந்த நிலையில், இருக்கும் status quo ஐ, எவ்வளவு குளறுபடிகள் இருப்பினும், விட்டுக்கொடுப்பது (என்னை பொறுத்தவரை) இன்றைய நிலைக்கு கூடாது. எதை தான் சொன்னாலும், கிந்தியவை சமாளிக்க கூடியது இதில் ஒன்றே ஒன்று தான்,வருடி, நெருடி, இளித்து போன்ற தமக்கு பிடிக்காத எல்லாவற்றையும் செய்து. கஜேந்திர குமார், விக்கி போன்றவர்கள் தத்துவத்தின் பக்கம் சாய்வு கூட (ஆயுத பலம் இருந்தால் அது சரி). Politics is the art of possible என்பது எமது இன்றைய நிலைக்கு பொருத்தமானது.
  9. நல்வரவு, இருட்டு அறையில் முரட்டு குஸ்தி போடுவதற்கு, களம் அப்படி.
  10. பொதுவான காரணம், நகைச்சுவை குணசித்திர நடிப்பு வேறு மொழியில் செய்வது முடியாது. எல்லா உணர்வுகளை விடவும், நகைச்சுவை உணர்வை பிரதிபலிப்பது, அதை ரசிகர்களுக்கு தோன்றச் செய்வது, தொற்றச் செய்வது மிகக் கடினம். ஒரு சிலர் வேறு மொழியில் செய்கிறார்கள், அனால் அவர்கள், அந்தந்த மொழிச்சூழ்நிலையில் விபரம் தோற்றம் பெறும் வயதில் வாழ்ந்து இருக்க வேண்டும். நகைச்சுவை என்பது சொல்லும் விடயத்தால் மட்டும் அல்ல,நளினம், நடிப்பு, பாவனை, தோரணை ...(குறிப்பாக அந்தந்த மொழி கலாசாரத்துக்கு உரிய) என்று உரிய வேளையில் ஒருகினையும் போதே நகைச்சவை உணர்வு தோன்றுவது, தொற்றுவது. .
  11. கேந்திர இலக்கு மாறவில்லை. அணுகுமுறையே மாறி உள்ளது. கிட்டத்தட்ட இதையே trump இன் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சொன்னது. மேட்ற்கு படைகளை இடையில் விட்டு , நிரந்தர மேற்கு இரணிவ அணிகளை தனது எல்லைக்கு வெற்றிலை பாக்கு வைத்து அலைபாதத்திற்கு புட்டின் உண்மையில் வழுக்கை மூளையா? டிரம்ப், அவரின் தனித்த அல்லது நிர்வாக அணுகுமுறையாக இருக்கும். புட்டின் / ருசியா அரச நிறுவன அணுகுமுறையாக இருக்கும். ரசிய, டிரம்ப் / எலன் மஸ்க் பேசியதை மறுத்துள்ளது, மறு வளமாக இது உண்மையில் நடந்து இருந்தாலும் அல்லது டிரம்ப் நூல் விட்டு பார்த்து இருந்தாலும். அனால், அமெரிக்கா அரசின் பிரதான இலக்கு சீனா, வேறு களங்கள், பிரச்சனைகள் கவனத்தை சிதறடிக்க கூடாது என்பதில் அமெரிக்கா அரசு கவனமாக இருக்கிறது, எனவே சண்டை தணித்தலை தந்திரோபாய இலக்காக இருப்பதில் ஒன்றும் புதினம் இல்லை. அனால், ருசியா இலக்கோ இதற்கு முற்றிலும் எதிரானது.
  12. அந்த நேர அமெரிக்கர், மேற்கத்தவரை விஞ்சும் கனகச்சிதம் , சந்திரபாபு rock n roll சோடிக்காக ஆடும் பெண்ணும், rock n roll moves இல்லாவிட்டாலும், ஆட்டத்தில் சந்திரபாவுக்கு இணையாக ஆட்டம்.
  13. சந்திரபாபு வளர்ந்தது கொழும்பில், கடின வாழ்கையாகத்தான் இருந்து இருக்கும். காரணம், குடும்பம் இலங்கை கடத்தப்பட்டது (ஏதோ) ஓர் குற்றத்திற்காக. ஒரு கதை இருக்கிறது, சந்திரபாபு அப்போதே பிரேக், டிஸ்கோ, பாப் dance போன்றவற்றை அந்த இளவயதில் நன்றாக பழகி இருந்ததன் காரணம், கொழும்பில் உள்ள club களில் உழைப்புக்காக ஆடியதால் என்று. உண்மை, பொய் தெரியவில்லை.
  14. ஆம் , எந்த வேற்றுமையும் இருக்க கூடாது. அனால் , யதார்த்தம் அப்படி இல்லை. இவை வரலாறு. எதோ ஒரு விதத்தில் உதவும் வேற்றுமையை தணிக்க என்பது எனது நம்பிக்கை. சில வரலாற்றை பார்த்து பெருமை அடைவோம். வெட்கி தலை குனியக் கூடியது, ஒரு பகுதி சமூகத்தை வதைத்தது, கைவிட்டது போன்ற எல்லாவற்றையும் எம்மவர்கள் செய்தனர் என்பதை அறிவது நன்மை என்றே நினைக்கிறன். வரலாற்றில் அங்கெ நடந்தது அநேகமாக எல்லாம் இங்கேயும் நடந்தது. மூடிபோட்டு போகமுடியாது. மூடிபோட்டு போவதன் விளைவின் மறுதாக்கமாக ஓர்ம வடிவம் சித்தார்த் போல, 50 -100 வருடங்கள் கடந்து, அல்லது அவர் போன்றவர்களின் சந்ததிகள் அறியும் போது வரும். சித்தார்த் இப்போது சொல்லியதுக்கு (சித்தார்த் சரி என்று சொல்லவில்லை), சாதியின் பெயரால் அவரின் முனைய சந்ததிக்கு கொடுமை இழைக்கப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு, சித்தார்த் செய்த தவறையும் சுட்டிக்காட்டி, இரு பகுதியும் தமது தவறையும் ஒப்பொக்கொண்டு பகிரங்க வருத்தம் , மன்னிப்பு கேட்டு, வழங்கி கடந்து செல்வதே, இவற்றை தணிக்கும். இது ஒரு உதாரணம் மாத்திரமே. தமிழ் இலக்கியவாதிகள் சந்திப்பில் தான் அறிகிறேன், youtube வழியாக, தென்மராட்சியில் சாதியின் பெயரால் துரத்தி சென்று உயிர் தப்ப மரம் எறியவரை, மரத்தை தறித்து விழுத்தி கொன்றதாக, இது நடந்தது 1960 களில் (youtube இல் தமிழ் இலக்கியவாதிகள் சந்திப்பில் சொல்லப்பட்டது); அதே தென்மராதியில் jcb கொண்டு தேர் இழுக்கப்படுகிறது, மக்கள் இருந்தும், அவர்களை சாதியின் அடிப்படையில் தேர் இழுப்பதை தடுத்து. எங்களுக்குள் உள்ள கரும்ப் பொட்டுகள், சிரங்குகள், எழும்பு கூடுகள் ... வெளியே வர வேண்டும். அதற்கு இது ஒரு சிறிய வெளி. தொடர்ப்பில்லாதது என்று எங்கு வரையறை என்பது புரியவில்லை.
  15. அரை நிர்வாணம் என்ற ஒரு நிலை எமது (சமய, வரலாற்று) கலாசாரத்தில் இல்லை. இது நீங்கள் கேட்பது மேலைத்தேய உடம்பு மறைப்பது அடிப்படையில். (பௌதிக மட்டத்தில்) உடம்பு மறைத்தலில் (நிர்வாணத்துக்கு) சிறந்த உதாரணம் துண்டை காணோம் துணியை காணோம். துண்டு உடம்பில் இருப்பது மானம் (மட்டும்) இருக்கிறது, வேறு எதுவும் இல்லவிட்டாலும், நிர்வாணம் அல்ல, அப்படி துண்டு (ஆடையுடன்) இறைவனுக்கு எளிமை, சரணாகதியாக சமர்பணம் என்ற குறியீடு. யுத்தத்தில் சரணடைவு கூட ஒரு துண்டு துணியை ( வெள்ளை கொடியை) தூஙகவே (முற்றாக செங்குத்து இல்லாது சரிவுடன்) , அதாவது துண்டு உருவப்பட்டு மானம் காற்றில் தொங்குகிறது என்ற குறியீடு. சமணத்தில் (ஆன்மீக மட்டத்தில்) நிர்வாணம் என்பது (உடம்பு) (முழு) நிர்வாணமும் நிலையில், (அதாவது) பௌதிக அடிப்படையிலும் கூட. முருகன் ஆண்டி கோலம் பூண்ட போது நிர்வாணம் நிலை இல்லை (அனால் மேலைத்தேய உடை கலாச்சாரப்படி கோவணம் மட்டும் உடுத்தியிருப்பது, அது முக்கால் நிர்வாணம், )
  16. சமய (மற்றும் வரலாற்று) அடிப்படையில் ஒரு துண்டு (வேட்டி, சேலை) உடை அது குறிப்பது எளிமை, சரணாகதி. (தைக்கப்பட்ட உடை பகட்டு, எளிமை இல்லை, கடவுளிடம் சரணாகதி கேட்டு வரவில்லை என்பவற்றை குறித்து தவிர்க்கப்பட்டது). சாதிகள் அடையாளம் காண்பதற்கும் இது பாவிக்கப்பட்டதாக கதை இருக்கிறது, அப்படி நடந்து இருந்தாலும் புதினம் ஒன்றும் அதில் இல்லை.
  17. ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின் விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல) அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம். 70 - 80 ஆய்வுகளில் தான் இந்த விடயம் வெளியில் தெரிய வருகிறது, ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
  18. இசை வேளாளர் என்று முன்பே வந்துவிட்டது. இதன் வரலாறு சுருக்கமாக. இசைவேளார் என்பவர்கள் தமிழர்கள். ஏனெனில், சோழர் காலத்தில் வீட்டிலொரு பெண் பிள்ளையை கோயிலுக்கு தனமாக கொடுப்பது பெருமையாக கருதப்பட்டது. ஏனெனில், அன்று அந்த பெண்கள் பெண் தெய்வம் என்ற (சமூக) நிலையிலேயே வைக்கப்படுவதற்கு சோழ அரசு நிலையை ஏற்படுத்தி இருந்தது. எல்லா சாதியினரும் கொடுத்தனர், அவரவரின் பெருமையை கொண்டாடுவதற்கு இந்த பெண்களே, அவர்களின் அடி தேவதாசியினர். இது விஜயநகர பேரரசின் கீழும் தொடர்ந்தது. ஆங்கிலேயர் அல்லது ஒல்லாந்தர் (எந்த காலம் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது) இதை தடை செய்தனர், சமயத்தை கொண்டு விபச்சாரம் நடப்பதாக. தடை செய்ததால், அவர்களின் உழைப்பும் இல்லாமல் போக, அனாதைகளாக,கோயில் (எல்லா விதத்திலும் பாதுகாத்த, ஆதரவளித்த பிரமணராலும்), சொந்த குடும்பங்களாலும் கைவிடப்பட்டனர். இவர்களே முதலில் இசை வெள்ளாளர் என்று, தமது அடையாளத்தை மறைக்க, அவர்களுக்கு அவர்களே சாதியாக சூட்டிக்கொண்ட பெயர். முக்கியமாக இரண்டு சாதிகள் பெண் பிள்ளளையை கோயிலுக்கு தானம் கொடுத்தனர் - வெள்ளாளர், செங்குந்தர். அதில் தொகையில் வெள்ளாளர் பெண்கள், மற்றும் அடி (ஏனெனில், அவர்கள் கலந்து இருக்க முடிந்தது பிராமணருடன் மட்டுமே) அதிகம் என்றும். அந்த பெயருக்கும் (இசை வெள்ளாளர்) இது ஒரு காரணம் என்றும். (இந்த ஆயு செய்தது Mattison Mines, The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India (Studies in Economic History and Policy) ) அனால், இசை வெள்ளாளர் பற்றிய 1970 - 1980 ஆய்வுகளுக்கு ஒத்துழைக்க வெள்ளாளர் மட்டும் முற்றாக மறுத்து விட்டனர். வேறு ஆய்வுகளும் இதையும், சோழர் கால பெண் பிள்ளை தானத்தையும் தொட்டு செல்கிறது. மிக கொடூரமான வரலாறு.
  19. இதை போலவே எனது சிந்திப்பும். இப்பொது ஓர் பூரண யுத்தமாக (total war) மாறிவிட்டது - அதாவது பொருளாதாரம், அரசியல், பலம், வளம் , பூகோள செல்வாக்கு, இலட்சிய கோட்பாடுகள் (சனநாயகம், தாராளவாதம், அனல் அவை வெளிப்போர்வையாக போர்வையாக பாவிக்கப்படுகிறது) போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய யுத்தமாக. டிரம்ப் விட விரும்பினாலும், deep state, trump ஐ விடாது (என்றே சிந்திக்கிறேன்) நேட்டோ, உக்கிரைன், தைவான் போன்ற விடயங்களில், வெளிநாட்டு விடயங்களில், யுத்தத்தை தவிர, அமெரிக்கா அதிபருக்கு ஏறத்தாழ ஏகபோக அதிகாரம் இருந்தாலும். ஏனெனில் விட்டால், இதன் பாதிப்பு அமெரிக்கா மேலாண்மையை ஆகக்குறைந்தது தோற்றத்தையாவது பகுதியாக துடைத்து எறியும். அனால் அதை தக்க வைப்பதே அமெரிக்காவின் கேந்திர இலக்கு. மற்றது, பெரும்பாலும் அமெரிக்கா hedge funds உக்கிரனுக்குள் கொட்டி இருக்கும் பணம். ருஷ்யா பிடித்த பகுதியே உக்கிரைன் இன் ஏறத்தாழ முழு இயற்கை வளம் உள்ள பகுதி. மற்றது, ருசியா சொல்லும் நிபந்தனைகள். கூட்டி கழித்து பார்க்கும் போது, trump இதில் கட்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.
  20. இது சரி, நாயரும் (நம்பூதிரி) பிராமணரின் ஒரு கிளை. இந்த நாயர் கேரளத்தில் இருந்த நாகர்களில் இருந்து இவர்களின் தோற்றம் என்பது ஒரு கதை. அனால், நம்பூதிரிகளின் முதல் மகனுக்கு உள்ள சந்ததி நம்பூதிரிகள் என்றும், மற்ற மகன்களின் சந்ததிகள் நாயர் என்றும் பிரிந்ததாக, அப்படியான ஒரு முறை இருந்து இருக்கிறது. ஏனெனில், நம்பூதிரிகளிடம் ஒரு தாம்பதிய முறை இருந்தது - முதல் மகனின் மனைவி நம்பூதிரியாக இருக்க வேண்டும் முதல் மகன் உடன் மட்டுமே தாம்பத்திய உறவு. மற்ற மகன்களின் மனைவிகள் நாயராக அல்லது நம்போதிரிகளாக இருக்கலாம், அவர்களின் கணவனை தவிர கணவனின் மற்ற ஆண் சகோதரத்துடன் தாம்பத்திய உறவு வைக்க வேண்டும் என்று. இதில் (மற்ற மகன்களுக்கு) வந்த சந்ததிகள் தான் நாயர் என்றும், மனைவிகள் நம்பூதிரிககள் என்றாலும். இதில் தெரிவது, (வட) பிராமண வருகை (ஏனெனில் நம்பூதிரிகளின் தோற்றம் நர்மதா ஆற்றங்கரையில் என்ற நம்பிக்கை), பின் உள்ளூர் மக்களுடன் (சாதிகளுடன்) கலப்பு.
  21. இதில் தான் ஒரூ பக்கத்தை நீங்கள் பார்க்கவில்லை. இந்த மக்கள் உழைப்புக்கு போனாலும், வாழ்க்கை paycheck to paycheck, அடுத்த நாள் கூழுக்கு என்ன கதி என்ற வாழ்க்கை. இவர்களுக்கு டிரம்ப் சொல்லுவதின் சாத்தியக்கூறுகளை பகுத்து அறியும் பக்குவம் இல்லை. தேவையும் இல்லை அவர்களை பொறுத்தவரையில்.
  22. டிரம்ப் என்ன செய்வார், செய்ய முடியும் என்பதை விட, பொருளாதாரத்தில் டிரம்ப் சொல்லுவதை பொதுக செய்ய முடியாது. வீடியோ கிட்டத்தட்ட சரி. பாதிக்கும் வீதங்கள் மாறுபடலாம்.
  23. சீமானின் கொள்கை எப்படி இருந்தாலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் (விஜயலட்சுமிக்கும் , சீமானுக்கும்) நடந்த திருமணத்தை (உண்மையில் இது சட்டப்படி செல்லும் கலாசாரத்தால்), நிரூபிக்க வேண்டாம், வேறு எவருக்கும் தெரியாத திருமணம், செய்த புகாரையும் விலத்தி விட்டவர் கதை, கிசுகிசு ஆவேசம் நன்றாக இருக்கிறது. (வேடிக்கை), மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முறை இருக்கிறது திருமணத்துக்கு.
  24. அவர் சொல்லுவது, திராவிடத்தை எதிர்த்தவரின் (அதில் முக்கியமானவர் காமராசர்) வழித்தோன்றல் என்பது. காமராசரின் உறவோ, அல்லது தொடர்பு சந்ததிகளில் ஒன்று என்பது பொதுவான கருத்து அல்ல. (உ.ம்.ஆக பிரபாவின் வழித்தோன்றல் என்றால் என்ன பிரபாவின் உறவு, தொடர்பு சந்ததி என்று அர்த்தமா?) அனால், அவர் எதை குறித்து சொன்னார் என்பது தெளிவில்லாமல் உள்ளது.
  25. இப்பொது, சுவிற்சர்லாந்து உம் அதன் நடுநிலையை இழந்து விட்டது, UN அல்லாத பொருளாதார தடைகளுக்கு வளைந்ததன் வழியாக. வெளியில் சொல்லப்படாதது, அமெரிக்கா அழுத்தம். (எனது புரிதலில், இது கிட்டத்தட்ட சீன விண்வெளி கூடம் போன்ற நிலையை அடையும், ஏனெனில் உலகின் மிகப்பெரிய பகுதி இந்த டாலர் நீங்கிய சர்வதேச பணப்பரிவர்த்தனையை வேண்தியா நிலையில் இருக்கிறது.) yahoo ஆல் retuers செய்தியின் மமீள்பிரசுரம் https://uk.finance.yahoo.com/news/bis-leave-cross-border-payments-112235295.html BIS to leave China-backed central bank digital currency project The tower of the Bank for International Settlements is seen in Basel · Reuters Reuters Updated Thu 31 October 2024 at 3:20 pm GMT 2 min read (Reuters) -The Bank for International Settlements said on Thursday it would quit the cross-border payments platform Project mBridge, raising questions about how the scheme backed by China will evolve at a time of growing geopolitical scrutiny of global transfers. Project mBridge, a collaboration launched in 2021 between the BIS and the central banks of China, Hong Kong, Thailand and the United Arab Emirates, was joined by the Saudi Arabian central bank in June. It also has many more observing members. BIS General Manager Agustin Carstens announced the step after being asked whether mBridge could provide a basis for BRICS countries, which include Russia, to get around international sanctions, a notion he rejected. "The BIS is leaving that project not because it was a failure or not because of political considerations but mostly because we have been involved for four years, and it is at a level where the partners can carry it on by themselves," he said, speaking at a Santander banking conference in Madrid. "At the same time I have to say that mBridge is not mature enough to start operating. So many, many years need to happen." The BIS, a global central bank umbrella organisation which oversees the project, said in June that mBridge had reached "minimum viable product" stage. Addressing the sanctions question, Carstens said: "mBridge is not the BRICS bridge and I have to say that categorically. mBridge was not created to cater (to) the needs of BRICS." The BIS does not operate with any countries subject to sanctions and this would remain the case, he stressed. "We need to be observant of sanctions and whatever products we put together should not be a conduit to violate any of these sanctions," added Carstens, a former Mexican central bank chief. Josh Lipsky at the Atlantic Council think-tank said the BRICS debate showed payment systems have become a geopolitical issue. The BRICS summit hosted by Russia earlier this month had raised more concerns among Western powers about Putin's cross-border digital currency ambitions, he said. "If there's even a possibility that mBridge could be helpful to those ambitions the West wants no part of it," Lipsky said. "But it's fair to ask what the consequences of this decision are. China will surely continue the work, and now the Fed, which is a member of the BIS, will have even less visibility into the project." (Reporting by Dave Graham and Marc Jones;Editing by Rachel More, Jan Harvey and Helen Popper) Terms and Privacy Policy Privacy & Cookie Settings

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.