Everything posted by Kadancha
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
ஒன்றும் தரமுடியாது என்பதை சொல்லாமல் சொல்வது.
-
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம்
நீங்கள் சொல்வது போதிதர்மா (தர்மன்). அவர் சமாதி அடைந்தது சீனாவில் என்றும், அதன் பின் பலகாலத்துக்கு பின் சமாதி அடைந்த இடத்தை சேர்ந்த வணிகர் போதிதர்மனை வடக்கு சீனாவில் ஒரு பாதணியுடன் கண்டதாகவும், வியப்படைந்த வணிகர் அவரை சோதிக்க (போதிதர்மன் தானா என்று) மற்றைய பாதணி பற்றி கேட்க போதிதர்மன் அவரின் சமாதியை தோண்டி பார்க்க சொன்னதாகவும், பின் வணிகர் சமாதியை அடைந்து தோண்டி பார்த்த போது மற்றைய பாதணி சமாதிக்குள் இருந்ததாகவும், அனால் எந்தவொரு மனித எச்சங்களோ இருக்கவில்லை என்றும். போதிதர்மன் சீனாவில் தொடங்கியதே இப்பொது shaolin temple என்றும் நம்பப்படுகிறது (பொதுவாக ஏற்றுக்கொள்ளபடுவது) அங்கிருக்கும் மலையில் இருக்கும் போதி தர்மா குகையை (இதில் போதி தர்மா தவம் இருந்ததாக), youtube இல் இருக்கிறது. இணைப்பை பார்க்கவும், வேறு youtube விடீயோக்களும் இருக்கலாம். மற்றது, போதி தர்மன் பரப்பியது chan பௌத்தம் என்பது பொதுவாக நம்பப்படுவது மற்றது போதிதர்மன் உடல்வலுவை தற்கப்பு ஆயுதமாக பாவிக்க கற்று கொடுத்த்த கலையே இப்பொது kung fu ஆக உருவெடுத்து இருப்பது என்று நம்பப்படுவதும், shaolin temple ஆல் ஏற்றுக்கொள்ளப்படுவதும். மற்றது போதிதர்மன் பல்லவ அரச பரம்பரை (தமிழில்) போதிதர்மா காலம் , சீனாவில் கி.பி 400 - 550 களுக்கு இடையில். போதி தர்மா இப்போதைய ஜப்பான் இலும் பௌத்தத்தை பரப்பியதாக, அது zen பௌத்தம் என்ற பெயரில். அனால், போகர் சமாதி அடைந்தது பழனியில். இதில் மிகவும் தெளிவு போகர் தமிழில் இயற்றிய நூல்கள் உள்ளன. போகாரின் சீடர் புலிப்பாணி சித்தர். போகரின் காலம் கி.மு. சீனாவிலும் போகரை (ஒத்தவரின் ) காலம் கி.மு. போகரின் பரம்பரை அரச பரம்பரை இல்லை. இப்படி பல வேறுபாடுகள் இவர்களை சொல்லும் சீன குறிப்புகளின் காலமும் வேறு. (இப்போதைய) சீனர்களுக்கு தெரியாது, ஏனெனில் cpc (குறிப்பாக mao) படித்தவர்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லி அழிப்பும், cpc ஐ பொறுத்தவரை தெரிந்தெடுக்கப்பட்ட வரலாறை படிப்பிப்பதும். அனால், இப்பொது சீனா திறந்து இருக்கிறது அதன பழைய வரலாற்று குறிப்புகளை.
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
எமது (கிந்தியாவையும் உள்ளடக்கி) நம்பிக்கைப்படி கறுப்பு குறிப்பது சனீஷ்வரன் - நீதி, நேர்மை, சமத்துவம், விடா, தீவிர முயற்சி, கடின உழைப்பு போன்றவற்றின் குறியீடு. அப்படி மாற்றுவது என்றால் தொப்பியை ஏன் மாற்றக்கூடாது? மாற்ற முடியாது - தொப்பி சரிந்து இருப்பது - பட்டதாரிகளின் அறிவு, திறன் போன்றவை வளர்த்து கொள்ள இடம் இருக்கிறது, எத்தகைய அளவு வளர்த்து கொண்டாலும் , எனவே வளர்த்து கொண்டே இருக்கவும் வேண்டும் போன்றவற்றின் குறியீடு.
-
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம்
பழனியில் இருக்கும் தண்டாயுதபாணி முருகன் சிலை நவபாசாணத்தினால் போகரால் (சித்தர் போகர்) என்றே நம்பப்படுகிறது. போகர் சீனாவிலும் வாழ்ந்ததாக கதை உள்ளது. tao இசத்தை உருவாக்கியதாகவும், பரப்பியதாகவும் , மரணத்தை தடுக்கும் பாசணத்தை உருவாக்கியதாகவும் , சீன குறிப்பு சொல்கிறது. இது விடவும் குறிப்புகள் இருக்கிறது. அனால், இருவரும் (சீனாவில் இருந்தவரும், இப்போதைய தமிழ்நாடு இருந்தவரும்) ஒருவரா என்பது தெளிவில்லாமல் உள்ளது.
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
முக்கியமாக இன்னொன்றை மறந்து விட்டேன் - கருப்பு நிறம் குறிப்பது - எந்த வித பட்டதாரி பட்டமும் பட்டதாரிகளை ஏனையவர்களின் (மற்றும் வருங்கால அறிவில், விவேகத்தில்) இருந்து வேறுபடுத்தி அல்லது உயர்த்தி காட்டும் தகைமையை பட்டதாரி பட்டம் வழங்கவில்லை குறிப்பாக தொப்பி குறிப்பது - பட்டதாரிகளும் மனித அறிவு, விவேகத்தின் மட்டத்தை தாண்டவில்லை என்றதை. அதாவது பட்டதாரிகளின் கற்றல் எவ்வாறு தொடர்ந்து தமது அறிவு, விவேகத்தை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் கறுப்பு குறிக்கிறது சுருக்கமாக, கற்றது கைமண்ணளவு என்பதையே கறுப்பு குறிக்கிறது. மேலே சொன்னதின் கருத்து சாரப்பட,, பட்டதாரி பட்டமளிப்பு விழாவில் இப்போதும் சில வரலாற்று பிரசித்தி பெற்ற பல்கலைக்களங்களில் சொல்லப்படுபவையும் கூட.
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
கறுப்பு நிறம், பட்டதாரி படிப்பின் (பட்டதாரியின் வருங்காலத்திலும்) தீவிர, கடின உழைப்பு, மற்றும் படிப்பை ஆக்கபூர்வமான, நெறிமுறை நோக்கத்துக்கு பாவிப்பதை குறிக்கிறது. வேறு பல துறைகளிலும், பொதுவாக கறுப்பு நிறம் (அங்கி) குறிப்பது பரந்த சமூகத்துக்கு ஆக்கபூர்வமான, நெறிமுறையான. நீதியான, சமபங்காளராக (கொடுப்பதிலும், எடுப்பதிலும்) இருப்பதை.
-
ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
எப்படி என்றாலும், உக்கிரனும், கிந்தியவும், பத்திரிகையாளர் புடை சூழ்ந்து லபக் என்று செய்தியை சுடச் சுட கெளவுவதற்கு எதிர்பார்த்து நிற்க , பேச்சுவார்தை நடத்தும் புதிய நடைமுறையை படத்துக்காகவாவது செய்து காட்டுவது.
-
12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி
இங்கே மேற்கில் இருக்கும் மாணவருக்கு, பொதுவாக, எந்த போதைப்பொருளும் எப்படி, எந்த இயற்கை / செயற்கை பொருட்களை பாவித்து செய்யப்படுகிறது, அதன் வேதியியல் கூறுகள், எவ்வாறு உடம்பை, நரம்பை, மூளையை பாதிக்கிறது, அல்லது கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பவை தெரியும். இது (இலங்கையில் மட்டும் தான் எனது அனுபவம்), அங்கெ உள்ள மாணவருக்கு பொதுவாக தெரியாது, அக்கறையும் இல்லை. இதுவவே மிகமுக்கியமான காரணம், மேற்கில் மாணவர்கள் போதைப்பொருளை பொதுவாக முதலிலேயே நாடாமல் இருப்பது, மிக முக்கியமாக பாவிக்கும் மாணவரின் தூண்டுதலுக்கு எடுபடாதது. பருவதுடிப்பில், ஓரிருமுறை பாவித்தாலும், பொதுவாக மாணவர் பின் விலத்தி இருப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணம்.
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
ஹிந்தி சினிமாவையும் கட்டுப்படுத்துவது (ஒப்பீட்டளவில்) சிறு குழு. அதில் சல்மான்ஹான் முக்கிய புள்ளி என்பது பரவலாக தெரிந்த, அனால் ஏற்றுக்கொள்ளப்படாத இரகசியம்.
-
விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்
நல்லூர் கோயில் ஆண்களுக்கு மேற்சட்டையை அகற்றும் படி பணித்ததின் பின் ஒரு சுவாரசிய கதை இருக்கிறது. அது சித்தார்த் (போன்றவர்களின் ) முன்னைய சந்ததி நல்லூர் கோயிலுக்குள் வருவதை சாதி அடிப்படையில் ஒரு பகுதியினர் எதிர்த்தனர் (இதில் வேறு பல சாதிகளும் உள்ளடக்கம், இந்த ஒவ்வொரு சாதியும் அவர்களுக்கு இடையில் வேறுபாடு பார்ப்பது வேறு விடயம் - ஒவ்வொரு சாதிக்குள்ளும் 9 ஆக பிரித்து வேறுபாடு. இதில் வேடிக்கை, சித்தார்த் போன்றவர்களின் சாதிக்குள்ளும் அந்த பிரிவுகள் - தமிழினத்துக்கு எப்படி அவர்களே அவர்களை பிரிப்பது என்பதில் புதுமை சிந்தனை பட்டம் வழங்கலாம்). பொதுவாக சித்தார்த் போன்றவர்களின் முனைய சந்ததிக்கு வசதி இல்லை, அதனால் அவர்கள் மேல் சட்டை அணியாமலேயே நாளாந்த வாழ்க்கை எங்கு சென்றாலும். (ஆனால், பொதுவாக, நல்ல உழைப்பு என்று அந்த நேரம் இருந்தவர்கள் கூட வசதியாக இருந்ததாக உணரவில்லை. எனது அம்மா, அப்பா முப்பாட்டன் சந்ததி வயல்களை கொண்டிருந்தது பூநகரியில், புகையிலை வியாபாரம் என்று இலக்கைத் தீவு முற்றாக சுற்றி திரிந்தது. நன்றான வருமானம் ஒப்பீட்டளவில், ஆனாலும் வசதி என்று உணரவில்லை, எனது அப்பா, அம்மா சொன்னவற்றில் இருந்து, அவர்கள் எதிர்நோக்கிய வாழ்க்கை கடினங்களை பற்றி). அதனால் மேல்சட்டை அணியாது வருபவர்கள் தடுக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் பொதுவாக இதனால் பாதிக்கப்பட்டது சித்தார்த் (போன்றவர்களின் ) முன்னைய சந்ததி. இதை பார்த்த மாப்பாண முதலியார், விதியாக எல்லா ஆண்களும் மேல்ச்சட்டை அகற்றும் படி விதி கொண்டுவந்தார், சித்தார்த் போன்றவர்களின் முனைய சந்ததியை மேல்சட்டை இல்லாததை கொண்டு அடையாளம் பார்த்து நல்லூர் கோயிலுக்குள் வருவது தடுக்கப்படுவதை தவிர்க்க. ஆனால், புதிய வேடிக்கை சித்தார்த் மேல்ச்சட்டையுடன் நல்லூரை வெளிவீதி வலம் வந்தது, அதிகார சிங்கள இனத்தினர் மேல்ச்சட்டை இல்லாமல் வெளிவீதி வலம் வந்தது. மிகவும் வினோதமான உலகமும், காலமும்.
-
திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார்.
அஞ்சலிக்களும், ஆழ்ந்த அனுதாபங்களும். இவரே, பல சிங்கள , மேற்கு அழுத்தங்கள், மறைமுக அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து. மேற்கு குழுவாக இனவழிப்பை கட்டியம் கூறி அரங்கேற்றியது, அதன் பின் மறைக்க முற்றப்பட்டது ... போன்றவற்றை வெளியில் கொண்டுவந்து, தமிழர்களின் நியாயத்துக்கு போராடியவர். தமிழர்கள் இவருக்கு இனமாக, தேசமாக அஞ்சலி செலுத்துவது அவசியம். ஏனெனில், வீழ்ந்தவருக்கு அப்படி ஒரு தமிழரே அந்த நேரத்தில் அநேகமாக தவிர்க்கப்பட்டு இருக்கும்
-
மேட்டூர் அணை வரலாறு: திருமலை நாயக்கர் கோட்டையை மூழ்கடித்து கட்டப்பட்ட பிரமாண்ட அணை
ஆங்கிலேயர், தமது நாட்டில் , 50 வருட கட்டிடத்தை பாதுகாக்கின்றனர். அனால் ,வேறு நாட்டில் அதை அந்த நேரத்தில் மூழ்கடிக்க கூடியவாறு அணை அமைப்பு. அதுவும் அந்த இடத்தில் ஆட்சி செய்த அரச (வம்சத்தின்) கோட்டை.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ஒப்பீட்டளவில் பாதுகாப்பு அடர்த்தி குறைந்த இடம், தெரிவுக்கு ஒரு காரணம் , இதை உக்கிரேனே சொல்லி உள்ளது , ஏனெனில் இது பகுதியாக அடர்ந்த காட்டுப் பகுதி. இங்கு ஹங்கரிக்கு (ஸ்லோவோக்கியாவுக்கும்) எண்ணெய் வழங்கும் குழாய் வலையமைப்பு சந்தி கொண்ட இடம், அதாவது வழங்கலை முழுமையாக கட்டுப்படுத்தலாம் இந்த குழாய் வலையமைப்பு சந்தியில் இருந்து. இங்கு ருசியா புகையிரத முக்கிய சந்திகள், அதாவது ருசியா புகையிரத வலையைபில் இருக்கும் அனைத்து சேவை தவல்களையும் real-time இல் பெறமுடியும் (இது உண்மை), அனால், உக்கிரேனின் கணக்கில் இது இருக்கிறதா என்பது தெரியாது. அநேகமாக புகையிரத சேனையில் தகவலை பெறமுடியும் என்றால் கட்டுப்படுத்தவும் முடியும், ஏனெனில் புகையிரத சேவைக்கன்னா தகவல் தொழிநுட்ப தொடர்பும், வலைப்பின்னலும் (பொதுவாக SCADA systems, Network என்ற வகைப்படுதலுக்குள் வருவது). இவைகள் தான் அந்த இடத்தில் உக்கிரேனுக்கு உள்ள நன்மைகள். வேறும் இருக்க கூடும்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உத்தியோக பூர்வமாக நேட்டோ இல்லை. அனால் அவைகள் நிலை எடுத்து இருப்பது பின்புறம். மிக முக்கியமாக வழங்கலை தக்கவைக்க. பிரச்சனை என்றால் விலத்துவதும் வசதி. முன்னோக்கி செல்வது / சென்றது உக்கிரைன் அணிகள். (அனால், இந்த உக்கிரைன் அணிகள் நெப்போலியன், ஹிட்லர் படைகளை ருசியர்கள் எதிர்கொண்டு சிக்கவைத்த வியூகத்தில் சிக்கி விட்டதாக சொல்லப்படுகிறது, அதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்) உக்கிரைன் படைகளின் அசைவு இப்போது முன்னோக்கி செல்வது தடுக்கப்பட, கரை வழியாக அசைவு.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
தரவை குறித்து எந்த கருத்தும் என்னிடம் இல்லை. அந்த தரவு உண்மை என்று எடுத்து, உங்களின் ஊகத்தை மட்டும். உக்கிரைன் இராணுவ தலைமை, உங்களில் ஊக முடிவை எடுத்து இருபதற்கான சாத்தியக்கூறுகள். 4000 (நான் சொல்லவில்லை, மேலே சொல்லப்பட்டு இருப்பது ) சண்டை பிடிக்க படையை நீங்கள் சொல்பவது போல சிங்க குகைக்குள் அனுப்புவது.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
"நேட்டோ நாடுகளை சேர்ந்தவர்களை கொண்ட படை" என்னுடையது ஊகம் என்றால், சாத்திய கூறுகள் நிறையவே இருக்கிறது. உங்களுடடைய ஊகத்தில் சாத்தியக்கூறுகளை விட, ஓட்டைகள் இருப்பதன் சாத்தியக்கூறு அதிகமாக இருக்கிறது.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
அனால், இவர்கள் , நேட்டோ நட்டுகள் (விரும்பியவர்களை) அனாமதேயமாக சேர்த்தே, ஒழுங்குபடுத்தியே, UK இல் (மீள்) பயிற்சி அளித்து அனுப்பி உள்ளன என்பது. அனால், தோற்றப்பாடு, முன்பு நடந்தது போல, இவர்கள் தாமாகவே உக்கிரைனுக்கு போய், உக்கிரேனிய படைகளில் இணைந்தார்கள் என்பது போல.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ஒருவரையும் அறிவு, விஷயம் (வேறு எந்த விடயத்திலும்) போன்றவற்றில் எடை போடுவதில்லை . சொல்லப்படுவது எவ்வளவு யதார்த்தத்துக்கு (யதார்த்தம் சிலவேளையில் நம்பமுடியாமல் கூட இருக்கலாம் ) இடம் இருக்கிறது என்பதையே நான் சிந்திப்பது.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
நான் கேள்விப்பட்டது. அனால், நன் பார்க்காமல் சொல்லவில்லை, வந்த படங்களில் பொதுவாக முகம் மறைக்கப்ட்டு உள்ளது. உக்கிரனியர்கள் என்றால் முகம் துணியால் (இராணுவ சீருடை பகுதி என்றால் வேறு விடயம்) மூடப்படவேண்டிய அவசியம் இல்லை. கனரக துப்பாக்கி ஆயுதங்களிலும் வேறுபாடு உள்ளது. இந்த திரியில் உள்ள ஒரு படம் தான் பார்க்கவும்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ஆம், அது தன ருசியா பாதுகாப்பு அமைச்சு veteran சான்றிதழ்களை வழங்கியது வாக்னரில் இராணுவ சேவை செய்தவர்களுக்கு. அந்த சான்றிதழ்கள் விலத்துவோரிடம் இடம் இருந்து ஆயுதங்களை மீளப்பெறுவதற்கு பேரமாகவும் பாவிக்கப்பட்டது. ற்றது, வாகனரில் படை சேவையை தொடர விரும்பியோரை, வேறு படைப்பிரிவுக்குள் உள்வாங்கிய வேகம். உடனடியான விளக்கம் கவிண்டதாக இருந்தால் பறவாயில்லை ஆனல், பிம்பத்தை விலத்தி பார்க்கமாட்டோம் என்றால் ...
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
பிம்பத்தை மனதில் கொண்டு விளங்க முற்றப்பட்டதால் வந்த வினை. சொன்னது விளங்கவில்லை ஆயின் ஒன்றும் செய்ய முடியாது. "நேட்டோ நாடுகளை சேர்ந்தவர்களை கொண்ட படை" நேட்டோ (நாடுகள்) அனுப்பியுள்ளது, உத்தியோகபூர்வமாக உக்கிரேனிய படை.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
இதில் உக்கிரைன் படைகள் அல்ல என்றும் . மேற்கு, UK இல் பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை. (உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) # உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம். நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இது உண்மையாக இருபதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம். ஏனெனில், ஆஸ்திரேலியா coco island இல், ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தளம் அமைக்க முயற்சி எடுக்கப்படுகிரது. எல்லாமே, பச்சையாகவே வெளியில் சொல்லப்டுகிறது, (யுத்தம் வந்தால்) சீனாவுக்கான வழங்கலை தடுப்பதற்கு உதவியாக என்று. அனால், பங்களாதேஷ Chita Kong துறைமுகத்தை சீனா பங்கு தரராக அபிவிருத்தி செய்தது, அது முழுமையாக இருப்பது பங்களாதேஷ் இடம். இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயமாக ஒழுங்குபடுத்தப்பட்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
-
மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்துக்கு தமுகூ அரசியல் குழு அங்கீகாரம்
வடகிழக்கு தமிழர், அரசியல் கட்சிகள் ஏகோபித்த முதல் குரலை கொடுக்க வேண்டும்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சும்மா, வாய்புளிக்குது என்று சுமந்திரனும், ரணிலும் கதைக்க, செய்தியாகிவிட்டது.