Jump to content

Kadancha

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1843
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by Kadancha

 1. ஏனெனில், அரசு, fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, முதல் படி எடுக்கும் வரையிலும் IMF தனது பண பரிவர்த்தனை செய்ய முடியாது. அப்படி செய்யும் போது, , fiscal மற்றும் monetary கொள்கைகளை சீரமைத்து, IMF debt restructuring ஐ கடன் கொடுத்தவர்களோடு வசதிப்படுத்தும். bridging finance, அதுவும் ஓர் அரசுக்கு இக்கட்டம்னா நிலையில், முக்கியமாக, ஓர் நாட்டின், அரசின் தேசிய வருமானம் உழைக்கும் சொத்துக்களை, சேவைகளை, பொதுவாக மேற்கு தனியார் கம்பனிகள், வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதில், IMF மறைமுக வசதிப்படுத்தல் பங்களிப்பு செய்யும். இதில் ஹிந்தியை கம்பனிகளுக்கு இடம் உள்ளது. மேற்கு, மற்றும் ஹிந்தியா வங்கிகள் கிரெடிட் வழங்கவும் இடம் இருக்கிறது.
 2. குமாரசாமி சொல்லிய - bridging finance இன் ஒரு செயல் முறை வடிவம். பணம் வரும் வரைக்கும் ஒன்றும் நிச்சயமில்லை, அனால் அநேகமாக, இவற்றில் ஈடுபடும் கம்பனிகளுக்கு கிரெடிட் வழங்கும் வகைகளுக்கு IMF இன் வசதிப்படுத்துதல் இருக்கும். இப்படியான இக்கட்டான நிலையில் IMF இன் ஈடுபாட்டை கோரினால், IMF இப்படித்தான் கடந்த காலங்களில் செய்து இருக்கிறது. 1997 -1998 கிழக்காசிய நிதி நெருக்கடி, thai bhat US dollar peg, US dollars இல்லாமையால் நீக்க வேண்டி வந்ததால், உதாரணம். IMF இடம் செல்லும் போது பிடி இருக்க வேண்டும், சொறி சிங்களத்துக்கு அந்த வாய்ப்பும், நேரமும் இருந்தும், எல்லாவற்றையும் விட்டு, மூழ்கிம் நிலையில் IMF இடம் போய் இருக்கிறது.
 3. fiscal policy என்பது - வரி அறவீடு, மற்றும் அரச செலவுகளில் உள்ள தெரிவுகள் , முடிவுகளை குறிக்கும். இந்த பிபிரச்சனையின் தொடக்கம் (கூரான ஓர் பகுதி காரணம் ஆயினும்), கோத்த வந்த கையேடு, corporate tax ஐ குறைத்தது. இதை குமாரசாமி சொல்லி இருக்கிறார் - "In fact, the crisis was two years in the making from the time the government cut taxes after the presidential election" அத போல பிரச்சனையின் அறிகுறி, தெரியும் போது. ஓரளவு காலா அவகாசம் இருந்தது, corporate tax ஐ கூடுவதற்கு. அதை செய்ய விடாமல் தடுத்தது, வியத்மகா (கோத்தாவின் அறிவு, சிந்தனையாளர், திறமை சார் வல்லுநர்கள் மற்றும் CORPORATE இல் உள்ள பெரு முதலாளிகள் போன்றவர்கள்). சிங்கள establishment வேண்டும் என்றே இதை உருவாக்கி - இலங்கை தீவில் கால் ஊன்ற முனையும் மூன்று பூகோள, பிராந்திய தரப்புடனும் (மேற்கு, கிந்தியா, சீனா) பேரத்துக்கான இடத்தையும், leverage ஐயும் உருவாக்கி வைத்து உள்ளது. பொருளாதாரம் மட்டும் என்றால், எப்போதோ cut the losses என்ற அணுகுமுறை கையாளப்பட்டு இருக்கும். ஆனால், பொருளாதார பிரச்சனையின் அடித்தள இழுபறி,, பூகோள, பிராந்திய இழுபறி இந்த மூன்று தரப்புகளிடமும், அதை சமாளிப்பது சிங்கலத்தின் பிரச்சனை. IMF - ஒரு போதும் கைவிடாது. என்பது, கிந்தியா வழியாக IMF பங்களிக்கும். 2009 Balance of payment பிரச்சனையில் அமெரிக்கா IMF ஐ தடுக்க முனைந்தது. ஆயினும், கிந்தியா அந்த கடனை பெற்றுக் கொடுக்கும் என்பது தெரிந்தவுடன், அதன் எதிர்ப்பை கை விட்டது. சீனாவுக்கு, பிடிகள் இருக்கிறது. கடன் நிபந்தனையிலும் பிடிகள் இருக்கிறது. கடன் எதற்கு கொடுக்கப்பட்டது, அதை எடுப்பதற்கு. குமாரசாமி சொன்னது - bridging finance - IMF உம, கிந்தியா வழியாக, சீனாவின் கடன் கொடுக்கும் பாணியில், நிதியை பெறுவதற்கு . அதாவது, சேவைகள், கட்டுமானம் போன்றவற்றை அறா விலையில் அறுதியாக வைத்து IMF வழியாக , வேறு நிதி நிறுவநாண்களிடம் இருந்து கடன் பெறுவதற்கு. IMF இதை வசதிப்படுத்தும், நேரடியாக IMF bridging finance கொடுக்காது. பொதுவாக bridging finance இல் valuation இல் 50, அல்லது குறைவான வேதம் நிதியாக கொடுக்கப்படும். குமாரசாமி அதை பட்டும் படாமல் தான் சொல்லி இருகிறார் - "IMF ஆல் பரிவர்த்தனை செய்யமுடியாது, இப்போதுள்ள தாக்குப் பிடிக்க முடியாத நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொடு வரும் வரைக்கும்." bridging finance - நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு. குமாரசாமி சொன்னதை - read between lines ஆக புரிய வேண்டும். IMF இன் கடன் கொடுக்கும், வழிமுறைகள் - https://www.imf.org/en/About/Factsheets/IMF-Lending இதில் எங்காவது bridging finance இருக்கிறதா?
 4. கிரிப்டோ - ஷிபா inu, robin hood சென்ட்ரல் exchange இல் பட்டிலியப்பட்டுவிட்டது. கிரிப்டோ - xrp, sec வழக்கு கண்டத்தை கடந்து விட்டது. நிறுவனமயப்பட்ட (institutionalised) பணப் பிரளயம், கிரிப்டோவை நோக்கி வருகிறது. https://dailyhodl.com/2022/04/12/giant-wall-of-money-is-waiting-to-enter-bitcoin-and-crypto-markets-according-to-shark-tank-investor-kevin-o-leary/ ஒன்றும் நிதி அறிவுரை இல்லை. உங்கள் ஆய்வின் மூலம் முடிவு, செயற்றப்படுகளை எடுக்கவும்.
 5. சிங்கலாம், கல்வி பாடத்திட்டத்தில் கைவைக்க முதல், இலங்கை ordinary level, advanced level, university degree எல்லாமே சர்வதேச தரத்தில் இருந்தது. உ.ம். ஆக, மருத்துவ துறையில் 1956 வரையில், அந்த துறையில் மருத்துவர்க வந்து ருந்தால், அவர்களின் தகைமையை எல்லா நாடுகளும், வேறு கேள்வி இன்றி ஏற்றுக் கொண்டன. அதடற்கு பின்னும், சிறிய தேர்வுதான் ஏற்றுக் கொண்டன. ஓ லெவல் - இலங்கையில் முதல் இருந்தது University of London ordinary level - இது கடினமானது. பின்பு - பெயரை மாற்றி விட்டு, University of London ஓல் பரீட்சையை தழுவி பரீட்சை வினாத்தாட்கள் - இதுவும் கடினம். சிறிமா - HSC - எல்லாவற்றையும் தலைகீழாகியது. இதில் இருந்து எந்த தர தொகையின் தரமும் குறையாத தொடங்கியது. HSC இ சிறிமா கொண்டுவந்தது - தரத்தை குறைத்து, சின்னாளவரின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு. அனால், அது வேலைசெய்யமல் போகவே, தரப்படுத்தல் வந்தது. JR உடன் - ஓல் மீண்டும் அறிமுகம் - இது மாணவரை சோதிக்கு ஆயினும் - நீண்ட காலம் இருந்த படியால், பாஸ் பேப்பரை செய்து பாஸ் பண்ணக்கூடிய நிலை உருவாக்கியது (அனால் Distiontion, B எடுப்பது கடினம், பாஸ் பேப்பரை மட்டும் செய்து). அதன் பின் ஒப்படையுடன் (assignments) கூடிய ordinary level, இதில் பரீட்சை ஒப்பீட்டளவில் கடினம் ஆயினும், ஒப்படையினால் pass பண்ணுவோர் வீதம் கூடியது. ஆயினும் Distinction, B கடினம். பின்பு ஒப்படை நீக்கப்பட்டது, பாஸ் பண்ணுவது கடினம் ஆகியது. இப்பொது உள்ள ordinary level, Distiontion, B எடுப்பது கடினம் என்று தான் நினைக்கிறன். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ அனால், எ லெவல், கணித துறைக்கு, பேராசியர் நடராசர் இருக்கும் வரைக்கும் , எ லெவல் தூய, பிரசாயக்க கணித பரீட்சை, மாணவரின் புரிதலை பரீட்சிக்கும். பேராசியர் நடராசர் கணித பரீட்சை வினாக்களை தயாரிப்பது இல்லை, அதை செய்வது வேறு நபர்கள். பேராசியர் நடராசர், அப்படி தயாரித்த பரீட்சையை, அவர் செய்வார், பாடத்திட்டத்துக்குள் வரும் அறிவை கொண்டு. இதை கொண்டு, கேள்விகளின் கடினம், ஏற்ற இரக்கம் செய்யப்படும். இந்த படிமுறை, வேண்டுமாயின் மீளவும் செய்யப்படும், நேரமும், கடினத்தன்மையும் ஒன்றுக்கு ஒன்று மட்டாக இருக்க கூடிய வரையில் இதனால் தான், அங்கு ஒரு போதுமே 100 எடுக்க முடியாது. இது மற்ற பாடங்களும் இருந்து இருக்கும் என்றே நினைக்கிறன்.
 6. வேறு எதாவது மறந்து விட்டேனோ தெரியாது. வேறு கதைகள் வரும் பொது, நினைவு வரலாம். நல்லூருக்கு ஒவொரு முக்கியமான விடயத்திடற்கும் ஒவ்வொரு பரம்பரை இருந்தது. யுத்தத்தால் சில மாறி விட்டது தலைமை குருக்கள் சந்ததி, சந்ததியாக குமாரசாமி குருக்கள். யுத்தம், பொருளாதர மாற்றங்கள் இதை மாற்றி விட்டது. இவர்கள் இப்போதும் இருப்பது (குமாரசாமி குருக்கள் இயற்கை எய்தி விட்டார்), மந்திரிமனை காணிக்கு பக்கமாக, பின்புறமாக. இந்த விடயங்களை தெரிந்ததிற்கான காரணம், எனது குடும்பத்தின் நல்லூர் தொடர்பும். எனது அப்பாவின் வழியும், அம்மாவின் வழியும் தான், நல்லூருக்கு கொடி சீலை கொடுப்பது. ரகுநாத மாப்பாண முதலியார் இப்போதுள்ள நல்லூரை கட்டிய போதும் ( பழைய நல்லூர் (நெல்லூர்) கோயில் இடிக்கப்பட்ட பின், அதாவது ஏறத்தாழ 100 வருடங்களுக்கு பின்பு), தொன்று தொட்டு வழங்கி வந்த மரபை மறக்கவில்லை, மறைக்கவில்லை. இந்த கொடிசீலை வழங்குமாறு அழைக்கும் வைபவம், காளாஞ்சி கொடுப்பது என்று அழைக்கப்படும். இப்போதும், இது (காளாஞ்சி கொடுப்பது), தொன்று தொட்டு வழங்கி வந்த மாட்டு வண்டியில் சென்று கொடுக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது. இப்பொது செய்வது, எனது அம்மம்மாவின், சகோதரரின் (அம்மம்மாவிலும் மூப்பு, அனால் அம்ம்மம்வை எனக்கு தெரியாது ஏனெனில் வருத்தத்தினால் இறந்துவிட்டார் இளவயதில் , அவரை எனக்கு நன்கு தெரியும்) மகனின் மகன், எனது ஆச்சியின் தங்கையின் மகனின் மகன். இது இப்பொது தான் பகிரங்கமாக தெரிகிறது பலருக்கு, youtube ஆல். முன்பு, பொதுவாக இப்படி ஒரு வைபவம் நடப்பது பொதுவாக தெரியாது. ஆனாலும், இதன் பின்னேயுள்ள வரலாறும், தாற்பரியம் தெரியாது. முதியவர்கள் (ஒருவருமே இப்போது இல்லை) சொன்னது - ஆக குறைந்தது யாழ்ப்பாண இராச்சியம் நிறுவப்படத்தில் இருந்து அங்கு சந்ததியாக இருக்கிறோம். அனால், அவர்கள் சொல்லியது, அதற்கு முதலில் எமது சந்ததி அங்கு இருந்து இருக்க வேண்டும். அதன் (புராண) விளக்கத்தை பின்னு சொல்கிறேன். அதனால், அவர்கள் சொல்லியது அநேகமாக நடந்து இருக்க வேண்டும். இந்த காளாஞ்சி வைபவமும், கொடிச்சீலை கொடுக்கும் வைபவமும். முழுவதையும் பார்க்கவும். வேறு வேறான வருட வீடியோ, இரண்டாவதில், முழுமையாக இல்லை. தொடரும்.
 7. அன்மையில்(2018 - 2019), கோட்டைக்குள் Prof. Coningham புதைபொருள் ஆராய்ச்சியின் போது, கல் விக்கிரங்கள் அகப்பட்டது.
 8. பற்றை காட்டை அகற்றிவிட்டு பெரிய மரங்களை விட்டு இருக்கிறர்கள். கிணற்றையும் திருத்தி கட்டிவிட்டார்கள்.
 9. கோட்டை இரு கட்டங்களில் கட்டப்பட்டது. முதலில் போத்துகேயர், பின்பு ஒல்லாந்தர் பெருபித்து (பெருமளவில் அகழி, மற்றும் அந்த 5 கோண மூலைகளில் உள்ள காப்பு, தூர பார்க்க கூடிய அரண்கள்). அனால், ராஜதானியை மற்றும் அனறைய நகரை சுற்றி உள்ள கோயில்கள் உடைக்கப்பட்டன என்றே சந்ததி வழியாக சொல்லப்பட்டு வந்து இருக்கிறது. எல்லா கோயில்களும் உடைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. மற்றது, இது பின்பு நான் ஊகித்தது, கோயில்களில் தூண்கள் உருளை வடிவத்தில் இருந்தால், அவை ஒல்லாந்த காலத்திலேயே கட்டப்பட்டு இருக்க வேண்டும். உருளைத் தூண்கள் ஒல்லாந்த கட்டிட கலையின் சிறப்பு அம்சம்.
 10. இதில் உள்ள கிணறு, நாவலர் சிலை அருகில் இருந்த கிணறு போல தெரிகிறது. நான் சொல்வது, பருத்தித்துறை வீதியின் மறுபக்கம். அதில் அந்த நேரம் வீடுகள் இல்லை. google map இல் பார்க்கும் பொது பெரிய மரங்கள் இருப்பதாக தெரிகிறது.முன்பு கண்ணை மறைக்கும் பற்றைக்காடு,இப்பொது பெரிய்ய மரங்களுடன்.
 11. ஆம், திருவிழா தவிர்ந்த காலத்தில் அவர்கள் கற்பூரம், ஊதுபத்தி விற்ப்பார்கள். தீர்வல்ல காலத்தில், ஓரளவு பெரிதாக, அந்த காலத்து விளையாட்டுப் பொருட்கள் ( காற்றாடி, அம்மம்மா குழல்), மற்றும் கற்பூர சட்டி , பட்டு சீலை போன்றவையும் விற்றபரர்கள், இது அவர்களின் உரிமையாக நல்லூர் (கோயில் கட்டப்பதில் இருந்து) எழுதப்படாத உரிமையாக வழங்கி இருந்தது என்பது, வயது முதிர்ந்தவர்கள் சொல்லி நான் அறிந்தது, ஆம், கேணிக்கும் (பழனி ஆண்டவர் இருப்பது), ஆறுமுக சாமி வாசல் (பிரதான கோயில் கட்டிடத்திற்கும்) இடையில் வீதி இருந்தது. வருடாந்த காவடி எனது குடும்பத்தின் தலையாய நல்லூர் கடமைகளில் ஒன்று.
 12. முன் னைய பகுதியின் தலைப்பாக சொல்லி இருக்க வேண்டியது. இப்போதைய நல்லூரை (அப்போதைய நெல்லூரை) பற்றி சொல்லும் போது, முத்திரைச் சந்தி பற்றியும் சொல்ல வேண்டும்.
 13. உண்மையில், முத்திரைச் சந்தியின் வரலாற்று பெயர் முத்திரைச் சந்தை. அது காரணப் பெயர், அன்றைய இராச்சியத்தின் வரியுடன் தொடர்பு பட்டது. அந்த சந்தையில் (இப்போது சந்தி) வைத்து இராச்சியத்துக்குள் வாங்க, விற்க அனுமதிக்கப்பட்ட பொருட்களுக்கு அரச முத்திரை (royal seal) பொறிக்கப்பட்டுள்ளது, வரியும் அறவிடப்பட்டது. முத்திரைச் சந்தி (முத்திரைச் சந்தை), ராஜதானியின் ( அப்போதைய அரச நிர்வாகம் ) முத்திரை சந்தையை பார்வையில் வைவைப்பதற்கான தூரத்தில் இருந்ததாக (அது இப்போதும் பார்த்து ஊகிக்க கூடியதாக உள்ளது), என்னுடைய பல வயது முதிர்ந்தவர்கள் (அவர்களுக்கு அவர்களின் சந்ததி வழியாக சொல்லி ) சொல்லி கிறார்கள். தொடரும்.
 14. ஒரு வாய்வழி கதை இருக்கிறது, அந்த நேரத்தில் இருந்த முஸ்லிம்கள், இப்போதுள்ள நல்லூர் கோயிலை கட்டுவதற்கு பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக. அவர்களை வெளியேற்றுவதற்கு, அவர்கள் பாவித்த கிணற்றில் பன்றித் தலைகள் இரவோடு இரவாக போடப்பட்டதாக. அனால், அந்த நிலம் கோயில் காணி, அன்னைய அரசு முஸ்லிம்களுக்கு பாவிக்க கொடுத்து இருந்தது. முஸ்லிம்கள், அத தமது நிரந்தர சொத்தாக ஆக்குவதற்கு முயன்று இருக்கிறார்கள் போலுள்ளது. நல்லூர் கோயிலின் முன்புறமாக ஆறுமுக நாவலர் சிலை இருந்த போது (ஏறத்தாழ கேணிக்கு, சமாந்திரமாக, நல்லூர் கோயிலின் முன்புறம், இப்பொது மறைத்து சுவர் எழுப்பப்பட்டு விட்டது, நாவலர் சிலை அகற்றபிசட்டுவிட்டது ). இப்பொது அதில் யோகா நிலையசம் இருக்கிறது என்று google காட்டுகிறது. அந்த இடத்தை ஒற்றி பருத்தித்துறை வீதி வளைந்து செல்லும் (இப்போதைய ஆறுமுக சாமி வாசல் கோபுரம்). பருத்தித்துறை வீதிக்கு மற்ற பக்கம் ஓர் காடு (அப்போது) படித்த நிலப் பகுதி இருந்தது. அதில் ஓர் தூர்ந்த ,கிணறும் இருந்ததாகவும் (மூடப்பட்ட சிதை பாடுகளை பார்த்து இருக்கிறேன்), அதிலேயே இந்த பன்றித்தலைகள் போட்டதாகவும், என்னுடைய உறவில் பல வயது முதிந்தவர்கள் (அவர்களும் கேள்விப்பட்டது, எல்லோரும் இப்போது இல்லை ) சொல்லி அறிந்து இருக்கிறேன். தொடரும்.
 15. மற்ற திரியில் சொன்னதை இடையிட்ட பதிவாக இந்த தியரியில் பதியப்படுகிறது. நல்லூரை எந்த தமிழரின் வரலாற்றில் இருந்தும் பிரித்துவிடமுடியாது. ஏன், முஸ்லிம்களின் வரலாற்றில் இருந்தும் பிரிக்க முடியாது. நல்லோரின் ஆதி மூலத்தில் இருக்கும் இடத்தில , ஓர் இஸ்லாமிய சமயக் குறியீடு இருந்தது என்பது அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும்.. இப்போதைய நல்லூர் கோயிலில் இருக்கும் இடத்துக்கு குருக்கள் வளவு என்பததே அதன் வரலாற்று பெயர். அதில் கோயில் கட்ட முதல் அதில் முஸ்லிம்கள் இருந்தனர், முஸ்லீம் குருவானவரின் சமாதியும் அல்லது இஸ்லாமிய குறியீடு இருந்தது என்பது, நான் முதல் சொன்னது போல, அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும். (இப்போதைய, உள்ளோர் நிர்வாகம் அதை மறைக்க முற்படுகிறது, நல்லோர் நிர்வாகமும் இதை ஏற்றகிறதா என்பது தெரியவில்லை.) கிந்தியா எம்மை அழித்தாலும், இதை அங்கேயுள்ள துணை தூதரகம் இணையத்தில் பதிந்து வைத்துப் உள்ளது வரவேற்கப்படவே வேண்டும், இஸ்லாமிய குறியீடு அகற்றப்பட்டதாக சொல்கிறது தூதரகம், நான் அறிந்த வரையில் அப்படி நடக்கவில்லை. ஆதி மூலத்துக்கு பின் சுவரில், எந்த ஒரு விக்கிரகமும் இல்லாத போதும் அதை வணக்கும் வழக்கம் இருக்கிறது அங்கு உள்ளவர்கக்லால், இப்போதைய தலைமுறைக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இததற்கான இப்போதைய சான்று (முஸ்லிம்கள் இருந்தது என்பதற்கு), நல்லூர் கோயில் திருவிழாவின் போது, தற்காலிக வியாபர கடைகள், யிரவர் வாசலுக்கு முன்னால், தேர் முட்டிக்கு எதிர்ப்புறமாக, நல்லூர் கோயிலின் முன்னால் போடுவதத்திற்கு, குறிப்பிட்ட முஸ்லிம்ம் குடும்பக்களிற்கு மட்டுமே கொடுக்கப்படும். இப்பொது கடை போடுபவது, வழக்கொழிந்து போய் விட்டது, நல்லூர் நிர்வாகமும், உளூர் நிர்வாகமும் சேர்ந்து தடுத்து விட்டனர். முஸ்லிம்களுக்கு கூட, அப்போதைய இராச்சியத்தின் அரசர்களே, முஸ்லிம்கள் அகதியாக வந்த போது அடைக்கலம் கொடுத்தனர். சிங்கள மன்னர்கள் மறுத்து விட்டனர். இதுவே காரணம், முஸ்லிம்கள் மூன்று இடங்களில் செறிந்து இருப்பதற்கு. தொடரும்.
 16. ரஷ்யா ஐ ஐரோப்பா, எரிவாயு வாங்கிவதில் தவிர்க்க முடியும் என்றால், rouble இந்த பெறுமதி குறையும்.
 17. ஓர் இணத்துக்ள் இன்னோர்சின்னத்தை சீரழிக்கலாம் (assimilation ) என்பதை கைவிடவேண்டும். நீங்கள் சொன்ன நோக்கம் வேறாக இருக்கலாம். ---------------------------------------------------------------- மருந்தாங்கேணி சொல்லும் நபர்கள், சொல்வதை, மற்ற எல்லோரும் ஏற்றகாவிட்டாலும், அவர்கள் சொல்வதை காத்து கொடுத்து கேட்பார்கள். ஏனெனில், அவர்களின் சமூக நிலை (சாதி அடிப்படையில் அல்ல). மற்றது, அவர்கள் சொல்லும் போது, மிகவும் நுணுக்கமாக சிந்தித்து, வாதாபி பிரதிவாதங்களை ஏற்கனவே ஆராய்ந்து, நியாயதிகத்துக்கு எடுப்பதாக கூடிய விதத்திலேயே சொல்லி இருப்பார்கள். சுருக்கமாக, அவர்களின் அணுகுமுறை (மருந்தாங்கேணி சொல்பவராளின்) மிகவும் sophistigated. அது பலவிதமான சமூக, அரசியல், சமய, பொருளாதாரம், தாராள விழுமியங்கள், வரலாற்று அடித்தளங்களில் இருந்து அவர்களின் வாதம் முழுவதையும் நிராகரிக்க முடியாத வகையில் அமைந்து இருக்கும். இவர் சொல்வது, நீதியில் அடிப்படையில், தெருச் சண்டைக்கு இறங்குவேன் என்ற பாணி. சிங்கள புலனாய்வு தூக்கி பிடித்தாலும், இவரின் கதையால் இவர் படிப்படியாக ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்புகளே அதிகம். நான் முன்பு சொல்லிய நல்லூர் வரலாறு, இவரின் சந்ததியையும் நல்லூர் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது என்பததற்காக.
 18. நல்லூர் கோயிலை இடிப்பது என்பது, உமது முப்பாட்டநரின் அல்லது அதற்கு முற்றப்பட்டவர்களின் வாழ்ந்த இடத்தாய் தூர்ந்து, மலசலகூடம் கட்டுவதற்கு மேலால் ஆனா இழி காரியம். நல்லூரை உனது, எனது, எந்த தமிழரின் வரலாற்றில் இருந்தும் பிரித்துவிடமுடியாது. ஏன், முஸ்லிம்களின் வரலாற்றில் இருந்தும் பிரிக்க முடியாது. நல்லோரின் ஆதி மூலத்தில் இருக்கும் இடத்தில , ஓர் இஸ்லாமிய சமயக் குறியீடு இருந்தது என்பது அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும்.. இப்போதைய நல்லூர் கோயிலில் இருக்கும் இடத்துக்கு குருக்கள் வளவு என்பததே அதன் வரலாற்று பெயர். அதில் கோயில் கட்ட முதல் அதில் முஸ்லிம்கள் இருந்தனர், முஸ்லீம் குருவானவரின் சமாதியும் அல்லது இஸ்லாமிய குறியீடு இருந்தது என்பது, நான் முதல் சொன்னது போல, அந்த இடத்தில சந்திதியாக வேர் விட்டு இருந்தவர்களுக்கு தெரியும். (இப்போதைய, உள்ளோர் நிர்வாகம் அதை மறைக்க முற்படுகிறது, நல்லோர் நிர்வாகமும் இதை ஏற்றகிறதா என்பது தெரியவில்லை.) கிந்தியா எம்மை அழித்தாலும், இதை அங்கேயுள்ள துணை தூதரகம் இணையத்தில் பதிந்து வைத்துப் உள்ளது வரவேற்கப்படவே வேண்டும், இஸ்லாமிய குறியீடு அகற்றப்பட்டதாக சொல்கிறது தூதரகம், நான் அறிந்த வரையில் அப்படி நடக்கவில்லை. ஆதி மூலத்துக்கு பின் சுவரில், எந்த ஒரு விக்கிரகமும் இல்லாத போதும் அதை வணக்கும் வழக்கம் இருக்கிறது அங்கு உள்ளவர்கக்லால், இப்போதைய தலைமுறைக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இததற்கான இப்போதைய சான்று (முஸ்லிம்கள் இருந்தது என்பதற்கு), நல்லூர் கோயில் திருவிழாவின் போது, தற்காலிக வியாபர கடைகள், யிரவர் வாசலுக்கு முன்னால், தேர் முட்டிக்கு எதிர்ப்புறமாக, நல்லூர் கோயிலின் முன்னால் போடுவதத்திற்கு, குறிப்பிட்ட முஸ்லிம்ம் குடும்பக்களிற்கு மட்டுமே கொடுக்கப்படும். இப்பொது கடை போடுபவது, வழக்கொழிந்து போய் விட்டது, நல்லூர் நிர்வாகமும், உளூர் நிர்வாகமும் சேர்ந்து தடுத்து விட்டனர். முஸ்லிம்களுக்கு கூட, அப்போதைய இராச்சியத்தின் அரசர்களே, முஸ்லிம்கள் அகதியாக வந்த போது அடைக்கலம் கொடுத்தனர். சிங்கள மன்னர்கள் மறுத்து விட்டனர். இதுவே காரணம், முஸ்லிம்கள் மூன்று இடங்களில் செறிந்து இருப்பதற்கு. சாதி என்ற காரணத்தால், எந்த சாதியையும் எவரும் அழிக்க முற்படவில்லை. சாதி என்ற போர்வையில், தமிழரின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களின் நோக்கம் சிங்களத்துக்கு இனிப்பாக இருந்து, சாதியை கொண்டு, தனிப்பட்ட முறையில் பணம் பார்ப்பது. அதே சாதி,பணம் பார்ப்பதத்திற்கு எதிராக இருமும் என்றால், அதே சாதியை கொண்டு, இதுவாபாடியில் சாதியை பற்றிய முன்னேற்றங்களையும் அழிக்க தயங்க மாடீர்கள். சாதியில் பற்றிய மனவோட்டத்தில், இன்னமும் முன்னேற்றம் அவசியம் என்பது ஒரு புறம் இருக்க, உனது கதையால், சாதி பிளைவை வளர்க்கிறீகள். கோயுலிக்குள் அனுமதிக்காததற்கு, கோயில் இதுடைப்பட வேண்டும் என்றால், சிங்களவரை nuke பண்ணும் அளவுக்கு தமிழர் பொய் இருக்க வேண்டும். நாக்குக்கு நரம்பில்லாத கதை, உனது செயலை எண்ணி கவலைப்படுவதட்டர்ட்க்கு இடம் இல்லாத நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடும்
 19. இது உண்மை. American deep State பற்றிய கேந்திர சிந்தனைவியலாளர்களின் சிந்தனை போக்கும் ஏறத்தாழ இது போன்றது John Mearsheimar இந்த வீடியோ வீடியோகளை youtube இல் பார்க்கலாம். இது அண்மைக்கால வீடியோ: https://www.youtube.com/watch?v=8mCzbiF5TmQ இந்த யுத்தத்துக்கு, இன்னொரு மறைமுக, முக்கிய காரணம், பூமி வெப்பம் அடைதல் (global warming). காரணம், ஆர்டிக் உருகுகிறது, ஆர்டிக் சர்வதேச கப்பல் ப்பதையாக மாற தொடங்கிவிட்டது, ஆர்டிக் இல் உள்ள பெருமளவு வளங்கலாய் எப்படி பகிர்வது என்பதில் போட்டி. அனால், ரஷ்யா ஐ பொறுத்தவரையில், எந்தவொரு மனித பிரசன்னமும் தாக்கு பிடிக்க முடியயாத, நீண்ட வட எல்லை, மற்றவர்களுக்கு, முக்கியமாக மேற்கின் ஆயுத பல பிரசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா வுக்கு இது அதனது இருப்புக்கு கேந்திர தன்மையான அச்சுறத்தலும், ஆபத்தும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது, நேட்டோ கொடுத்த வாக்குறுதியான, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பால்டிக் நாடுகளுக்கு நேட்டோ பரவாது, என்பதை கடைபிடித்து இருந்தால், ரஷ்யா இவ்வளவு தீவிரவமாக இருந்திருக்காது. சொறி சிங்களம் இறைமையை கொண்டுள்ள அரசு கொண்டுள்ளதாயினும், மனித உரிமை சபையில் உப்புச் சாப்பிலா தீர்மானத்தை கொண்டுவருவதத்திற்கு, மேற்கு நாடுகள் ஹிந்தியை எதிர்க்க கூடாது என்ற நிலையில், ரஷ்யா அதன் இருப்புக்கு வரும் கேந்திர அச்சறுத்தலை வாளாது பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
 20. இங்கே நான் சீனாவுக்கு ஆதரவாகவோ, எதிர்த்தோ சொல்லவில்லை. சீன மனம் வைத்தால் இதற்கு செய்து முடிக்கும், இது ஒன்று பெரிய வேலையல்ல. சீனாவுக்குள் நடைபெற்று வரும் பசுமை புரட்சி பற்றி வெளியில் தெரிவதில்லை. சீனவில், பாலைவனத்தை, பசுமையான பச்சை வனமாக மாற்றி உள்ளது. சீனாவை, நதி ஓடி வற்றி, கட்டாந்தரையை கூட பசுமை ஆகி வைத்து உள்ளது. இதை பற்றி google இல் தேடி பாருங்கள், எத்தனையோ தரவுகள் இருக்கிறது.
 21. யமுனாரியின் படத்தில் வெளிப்புறத்தில் தெரியும் செங்கற்கள், சிதைவை சரி செய்ய பின்பு கட்டப்பட்டவை. அனால், அதன் உள்ளே இருக்கும் ஒவ்வொரு கல்லும், தனித்தனியே செவ்வக கருங்கல் குற்றிகள். படத்தில் அவற்றின் பிரமாண்ட அளவு தெரியவில்லை. நேரடியாக பார்க்கும் போதே அதன் பிரமாண்டம் தெரியும், குறிப்பாக கோடையில் ஓரளவு வற்றும் போது அதன் ஆழம், கற்களின் பிரமாண்டம் தெரியும். இந்த யமுனாரி என்பது, அரசியும், அரச குமாரிகளும் நீராடுவதற்காக (யமுனை ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீர் விட்டு) கட்டடப்பட்ட ஏறி எனும் ஒரு வாய்வழி கதை இருக்கிறது. இது இப்பொது ஆங்காங்கே இன்டர்நெட் (சுற்றுலா) வரலாற்று குறிப்புக்களிலும் இருக்கிறது. (யமுனை ஆற்று நீர் விட்டு கட்டிய கதை, வாய்வழியாகவே தெரியும்.) உ.ம். ஆக கோடையில், இப்போதுள்ள நல்லூர் கேணியின் அடிமட்டம் தெரியும். ஆனல் யமுனாரி அப்படி ஒருபோதுமே (நான் அறிந்த, பார்த்த வரையில்) இல்லை . ஏனெனில் யாமுனறி பகுதியில் சிறுவயதில் புதினம் பார்ப்பது. அப்போது (70, 80, 90 களில், அதற்கு முன்னரும் இருந்து இருக்கும்) ஒரு நடை] பாதை இருந்தது. அது, யமுனா வீதியயில் இருந்து தொடங்கி , கிட்டு பூங்காவுக்கு, , St James Church க்கும் இடையில். செம்மணி வீதியில் மிதக்கும். மிதக்கும் என்பது ஏனெனில், ஓரளவு பதிந்து பின் மேல் ஏறும் தரையமைப்பை கொண்டது யமுனாரி இருக்கும் நிலப்பகுதி. ஓர் நிலக்கீழ் பாதை யமுனாரிக்கும், அரச மாளிகைக்கும் (இப்படி அரச மாளிகை என்று சொல்பவர்கள் குறிப்பது, இப்பொது இருக்கும் மந்திரி மனை) இருந்ததாகவும், அதை பாவித்தே அரசியும், அரச குமாரிகளும் யமுனாருக்கு சென்று நீராடி வந்ததாக ஓர் கதை இருக்கிறது. அனால், அரசியும், குமரிகளும் நிலக்கீழ் பாதையிது யாமுனறி சென்று நீராடி வந்த கதை, யதார்த்தமாக இல்லை. ஒன்று யமுனாரி, பழைய நல்லூர் கோயிலின் கேணி. மற்றது, யமுனாரி இருக்கும் நிலப்பரப்பு இப்போதும் செட்டியா தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த செட்டியா தோட்டம் என்பது வண்ணை வைத்தீஸ்வரர் கோயிலுலுக்கு தொடர்பு உடையது என்பது இப்போதும் பலருக்கு தெரியும். செட்டியா தோட்டம் பற்றியும் வலரேறு இருக்கிறது. பின்பு அதை பற்றி பார்க்கலாம். அநேகமாக போத்துக்கேயரால் அல்லது அன்று சங்கிலிக்கு (சங்கலியன் 2) எதிராக இருந்தவர்களால் இந்த கதை பரப்பப்பட்டு இருந்திருக்க வேண்டும். போத்துக்கேயரால், நீராடும் தடாகமாக பாவிக்கப்பட்டு இருக்கலாம். படத்தை இணைத்து விளங்கப்படுத்தினால் தான், அரசியும், அரச குமாரிகளும் நித்தடி பாதை பாவித்து நீராடி இருக்க முடியாது என்பது புரியும். ஆனால், முழு இராட்சியமுமே, அதாவது இராச்சிய நிலம் முழுவதும் கோயிலில்களுடன் சம்பந்தப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். தொடரும்.
 22. இதில் என்னை பொறுத்தவரையில், ஒரு ஆராய்வும் (தேவை) இல்லை. சொன்னது போல, இந்த கதைகளை வாய் வழியாக மிக சிறு வதில் இருந்தே பலரிடம் இருந்து கேட்டு அறிந்ததும், அந்த இடத்தில் வளர்ந்த படியால், அநேகமாக் அனைத்து இடங்களையும் பார்த்தே வளர்ந்தேன். உ.ம். இப்பொது உள்ள மந்திரி மனைக்குள் நான் பல தடவைவை சென்று வந்து இருக்கிறேன். அதையும் சேர்த்து பின்பு விளக்கமாக எழுதுகிறேன். ஆனால், நூலை வாசித்து இருக்கிறேன், இது பொதுவான அனுமனை அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது.
 23. https://en.calameo.com/read/001179320cd352221bc41 இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள். ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது. உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை. ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிளைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது. இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை. இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும் குறிப்புக்காக சொல்கிறேன். சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.). பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிளுக்கு எடுத்து சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள், aasiyum வேண்டி, பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம். அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது. ======================================= https://en.calameo.com/read/001179320cd352221bc41 இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள். அனால், இந்த நூலின் வெளியீட்டின் பின் வேறு சில நோக்கங்களும் (vested interests) இருக்கலாம். முக்கியமாக, இப்பொது நெதர்லாந்தில் இருக்கும்,, தாம் அன்றைய ஆட்சி பரம்பரையின் வாரிசுகள் என்று கோருபவர்களால். ஆனாலும், இந்த நூலில் கண்ணனுக்கு தெரியும் புராதன கட்டிடங்கள், வீதிகள், வளவுகளை வைத்தும், சரித்திர குறிப்பில் உள்ள பெயர்களை வைத்தும், கட்டிட தோற்றங்கள், கலைகளை வைத்தும், அனுமான அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளது. உ.ம். ஆக இந்த நூலில் சரசுவதி மகால் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறன். ஏன், நெல்லூர் (இது ஆரம்ப போத்துகேய குறிப்புகளில் உள்ளதாக இப்பொது அறிகிறேன்) பற்றியே ஓர் குறிப்பும் இல்லை. ஆனாலும், பழைய நல்லூர் (நெல்லூர்), மற்றும் ராஜதானி, நகர்ப்புறம் போன்றவற்றை எந்த அளவில் இருந்தது என்பதை (பிழைகள் இருந்தாலும்) குறிப்பாக எழுத்து வடிவில் உள்ளது. இன்னொரூ உ.ம் . ஆக, , இப்போதும் பராமரிப்பு இன்றி சிதைவடைந்து, முன்னைய தோற்றத்துடன் இருக்கும் மந்திரி மனை, சட்ட நாதர் கோயில் அருகில் இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்லவில்லை. இதை இங்கே முன்பு சொல்லிய நினைவு இருக்கிறது, ஆனாலும் குறிப்புக்காக சொல்கிறேன். சட்டநாதர் சிவன் (கோயில்) என்பது காரணப் பெயர் (பலர் சட்டை நாதர் என்று அழைக்கிறார்கள், அநேகமாக அந்த இடத்துக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் வேறு இடத்தை சேர்ந்தவர்கள், அது தவறு.). பெயறில் இருக்கும் அர்த்தமே அதன் காரணம் - சட்ட (சட்ட (ஆட்சியின்)) நாதர் (தலைவன்). யாழ் இராச்சியம் இருந்தவரை, மந்திரி நாளாந்தம் சட்டக் கோவையை சட்ட நாதர் கோயிலுக்கு எடுத்து சென்று, (நீதி வழுவா) ஆட்சிக்கும், இராச்சியத்துக்கும் இறை அருள் வேண்டி, பூசை நடைபெற்று, அதன் பின்பே நாளாந்த நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நாம் அறியும், rule of law இன், அப்போதைய வடிவம். அதாவது, இத கட்டிடங்கள், வீதிகள், சிதைபாடுகள் சொல்லும் சரித்திர நிகவுகள், கதைகள் போன்றவை, அந்த இடத்தில சந்ததி, சந்ததியாக இருக்காவிட்டால் தெரியாது. காரணம், பொதுவாக, சந்ததி, சந்ததியாக, வாய்வழி வரலாறாக சொல்லப்படுவது.
 24. நான் சொல்வது, வரலாற்று குறிப்பில், எழுத்து வடிவில், இருக்குமா என்பது சந்தேகம். நான் அறிந்தவற்றை இங்கு பதிகிறேன. அநேகமாக என்னுடைய தலைமுறையுடன், இந்த வரலாறு தெரியாமல் போய்விடும். எங்கு தொடங்குவது என்பது தடுமாற்றமாக இருக்கிறது. இயலுமானவரை, ஓர் ஒழுங்கு முறையில் சொல்ல முயற்சிக்கிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.