Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. பொதுவாக மூளைக்கு என்ன நடக்கிறது என்பது (மற்ற உடல் பகுதியில் இருந்து) அறிவிக்கப்பட்ட பின்பே, மூளை எதை செய்ய வேண்டும் (குறிப்பிட்ட பகுதிக்கு) என்பதை அறிவுறுத்தும். உ.ம். ஆக இயங்கும் போது காலோ கையோ அடிபடப்போவது மூளைக்கு தெரியாது. அடிபட்ட உடன் மூளைக்கு செல்லும் சமிக்கியை, குறித்த அங்கத்தை அந்த இடத்தில் விலத்துமாறு அறிவிப்பது. இப்படியானதே நாம் துள்ளுவது, பின்னோக்கி அங்கத்தை அசைப்பது, இழுப்பது போன்றவை. இங்கே சொல்லப்பட்டு இருப்துக்கு ஒப்பானது மலம் வெளியேற்ற்ற வேண்டிய உணர்வு வருவது. அதை மூளை அதுவாக செய்வது இல்லை, குறிப்பிட்ட பகுதி (மலம் நிரம்பி விட்டது) அகன்று, இழுபட்டு உருவாகும் சமிக்ஞைகள் மூளைக்கு (ஏதோ (மலம்) நிரம்பி விட்டது) என்பதை அறிவுறுத்த, மூளை பின்பு குறிப்பிட்ட பகுதி தசைகளுக்கு (சுருங்க அல்லது இளக) அறிவிப்பது, அதாவது மலம் வெளியேற்ற வேண்டிய உணர்வு உருவாகுவது. ஆம் , பொதுவாக மூளை எத்தனிக்கும் பாதுகாக்க. ஆனால் வந்த வருத்தமோ, நோயோ ஏதோ, வெளி (மருத்துவ) உதவி இன்றி மூளை எதிர்ப்பதை, பாதுக்காக்க எத்தனிப்பதை மேவும் (பொதுவாக நடப்பது, உடனடியாக என்று இல்லை காலம் எடுத்து புற்றுநோயில் போல) என்றால் ஆக குறைந்தது உடம்பின் எதாவது ஒரு பகுதியை தற்கலிகமாகவேனும் பகுதியாக செயல் இழக்க வைக்கும், அத்துடன் உடம்பில் நோய் போன்றவற்றால் உருவாகும் ஒருபகுதி தாக்கம் மற்றவற்றையும் பாதிக்கும் ( இயந்திரங்கள் போல). இங்கே ஜஸ்டின் சொன்ன உதாரணம் போல ஆனால், மூளை எத்தனிப்பது, எதீர்ப்பது போதுமானது என்றோ , வந்த வருத்தமோ, நோயோ அதை மீறாது என்பது மூளைக்கே தெரியாது. எனவே மருத்துவத்தை இயலுமான அளவு விரைவாக நாட வேண்டும். சும்மா எழுதுவது, அரைகுறையாக விளங்கி.
  2. சிங்களவர் ஒரு பகுதி காரணமாக (அதில் புரட்டும் இருக்கிறது) சொல்வது, தமிழருக்கு அதிகாரம் கொடுத்தால் இப்படியான நிலை ஏற்பட்டு விடும் என்று. அன்றைய நிலையில் அதில் பகுதி நியாயம் இல்லாமலும் இல்லை. ஏனெனில் சாதியை கொண்டு பகுதி மக்கள் நாத்தப்பட் விதம். இலங்கைத்தீவில் தமிழரில் இப்படியாக நடப்பது மிக குறைவு.இலங்கைத்தீவில் தமிழரில் இப்படியாக நடப்பது மிக குறைவு. அனால், இப்போதும் கிணற்றில் தண்ணி அள்ளக்கூடாது போன்றவை இருப்பது, தமிழ்நாட்டில் நடப்பது தொற்றிவிவிடுமோ என்ற கிலேசமும் வருகிறது.
  3. ஏதாவது ஒன்றோ, பலவோ அசைவுகள் இருந்தாலே நல்லது, ஒரே இடத்தில இருப்பதை காட்டிலும். நடை (சற்று விரைவாக இருந்தால்) கிட்டத்தட்ட முழு உடம்புக்கும் மிக இலகுவான, செலவு இல்லாத பயிற்சி. ஆயினும் சிக்கல் தன்மை உள்ள அசைவுகள், நிலைகள் அவ்வப்போது செய்வதும் (ஒரு கால, நேர ஒழுங்கு இருந்தால் இன்னும் நல்லது) வேண்டியது. (உ.ம். முழங்காலில் கைகளால் முட்டு கொடுக்காமல் குந்தி இருப்பது. அந்த நிலை யில் இருந்து எந்த முட்டும் இல்லாமல் எழும்புவது, மீண்டும் அந்த நிலைக்கு செல்வது போன்றவை. அநேகமாக எல்லா calisthenics, யோகா பயிற்சிகளும் உள்ளடக்கம். ஆனால் அவை மட்டும் தான் எனறு இல்லை. சுயமாக அசைவுகளை சோதனையாக செய்து பயிற்சிகளை உருவாக்கலாம். எல்லாமே இலவசம்) மிக முக்கியமாக பக்கவாட்டில் அசைவது (lateral movements), திரும்பும் அல்லது சுழற்சி அசைவுகள் (tornal movements) (வயது ஏற) மிகவாக குறைவது. இவற்றை ஈடு செய்ய பயிற்சிகள்.
  4. இராக்கில் முடமாக்கப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு வாழ்வு கொடுகிறோம் என்ற பிராரத்தில் நடந்தை போல செய்வ்வாதற்கு UK வெளிக்கிக்கிடுகிறது.
  5. இதை பற்றிய இங்குள்ளவர்கலின் கருத்து என்ன? GOV.UKIndia Young Professionals Scheme visaApply for an India Young Professionals Scheme visa to live and work in the UK if you're an Indian citizen aged 18 to 30 - eligibility, fees, documents. பிரிட்டஜனியாவின் சிறும்பான்மை சமூகங்களின் இளம் மட்டத்தின் வேலைவாய்பை தாக்கும் என்றே நன் நினைக்கிறேன். பெரும்பான்மையும் தாக்கலாம், ஆனால் குறைவாகவே இருக்கும். இங்கே தத்துவம், தியரி அடிப்படையில் நன் சொல்லவில்லை . மறுவளமாக, UK இல் இருந்து இந்தியாவிடற்கு வேலைக்கு செல்லும் வாய்ப்புகள் மிக குறைவு. இதில் சுயநலம் இருப்பதை நான் மறுக்கவில்லை. எமது பிரித்தானிய இளம் சமூகம் உருவாகியது எமது பல உழைப்பு, மீண்டும் பெறமுடியாத இழப்பு, தியாகங்கள் ஊடாக.
  6. ஆம், ரஸ்சியவின் (உலகில் மிக கூடிய மேற்கு பொருளாதார தடை கொண்ட) பொருளாதார பலத்தை gdp மறைக்கிறது.
  7. gdp அளவீடு முறை வேறு பல பலம் / பலவீனங்களை மறைகிறது. உ.ம். ஆக அமெரிக்காவின் பெரிய வெளிக்கடன், சீனாவின் மிக குறைந்த கடன். அத்தத்துடன், கேந்திர முக்கியத்துவத்தில் சீன (அல்லது மற்ற நாடுகள் ) அடைந்துள்ள முன்னேற்றம், முடக்க, பின்தங்கிய நிலை போன்றவை.
  8. அப்படி நடந்த்து இருந்தாலும், Knesset (இஸ்ரேல் பாராளுமன்றம்_ என்ன சும்மா இருந்தததா? இது இஸ்ரேல் (முழு அரசினதும்) இந்த முடிவு. மேற்கு இப்போது வாதத்தை திருப்புவாதத்திற்கு, BB ஐ முதலை ஆக்குகிறது. இதில் இஸ்ரேல் இல் பெரிய பிரச்சனை இல்லை. மேற்கு நடிக்கும், வடிக்கும் முதலை கண்ணீர், ஏனெனில் ரஷ்யா - உக்கிரைனில், மேற்கால் Global South இன் ஏதிர் விவாதம் மட்டும் அல்லா, அதனால் பொருளாதாரம் இயங்குவதையும் சகிக்க முடியாமல் இருப்பது. அனால், ஈரானில், மேற்கு 2ம் தரம் un ஐ ஆகக்குறைந்தது பகுதியாக குழிதோண்டி புதைதது விட்டது. இவ்வளவு இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று இங்கு சிலரால் சொல்லப்படும் இரானில் கூட, யுத்தம் போன்றவற்றுக்கு பாராளுமன்றம் (Majlis) பெரும்பான்மை ஒப்புதல் அளிக்க வேண்டும் (மேலும் ஒரு விடயமாக, இரானில், ஹாமெனியும், ஈரான் அதிபர் Masoud Pezeshkian உம அசரி இனத்தவர்கள் (பக்கத்தில் இதுக்கும் Azerbaijan இன் பெருமைப்பாண்மை இனம்), ஈரானில் பெர்சியன் இனத்தவர் பெருபான்மையாக இருந்தும். தலைமை பீடம் பல்லினம்)
  9. சும்மா சொடக்கு பண்ண வைப்பதற்கு (click bait க்கு) தலைப்பை மாற்றி எழுதி, பொழுது போக்கில் காசு பார்க்க எத்தனிக்கும் ஊடகங்கள், ஏனெனில் பொழுதுபோக்கில் உள்ள போட்டி நெருப்பு அவர்களை கருக்கி விட்டது. உரைக்கு எடுக்கப்பட்டு இருக்கும் விடயங்கள் யதார்தமானவை. இப்படியான தலைப்பு ஆடு மாடுகளை கொண்டுவந்தவர்களும் ஆடு, மாடுகள் போன்றவர்கள் என்று எண்ணவைக்கும் என்பதை சிந்தியாமல் எழுதப்பட்ட செய்தி.
  10. சீனாவில் தலைமை பொறுப்பை தீர்மானிப்பது, அதில் வரும் பிரகணைகளை தீர்ப்பது இப்படித்த்தான். முதல் 3 தடவை க்ஸி யும், அதுகு முதல் தலைமை பொறுப்பை ஏற்றவர்களும் பகிரங்க அரசாங்க / நிர்வாக தளத்தில் இருந்து விலத்துவது அவ்வப்போது இப்படி நடந்தது. க்ஸி ஊழலை இருப்பதில் முதல் குறி, எனவே க்ஸி உடன் மிகவும் நெருக்கமானவர்கள் என்றாலும், ஊழலை ஒழிக்கும் செயற்குழு நடவடிக்கையில் தலையிடுவதில்லை. (சிலவேளைகளில் அது பிரச்சனைகளை உருவாக்கி இருக்கலாம்) க்ஸி ஊழலை கடுமையாக எதிர்ப்பதன் ஒரு காரணம் , CIA ஊழலை பாவித்து க்ஸி இன் உப தலைமை பொறுப்பு இருந்தபோது, தலைமை பொறுப்பு பீடதில் என்ன நடக்கிறது, எந பேசப்படுகிறது, அலசப்படுகிறது என்பதை நேரடியாக, உடனடியாக உளவு அனுப்புவார்கள் (இவர்கள் அந்த இலாகா நிர்வாகத்தில் தொழில்) மூலம் உடனடியாக அறிந்து கொள்கிறது என்பது, ஈரானில் cia இன் உளவாளிகளோடு தொடர்பு கொள்ளும் முறையை இரான், சீனாவின் துறைசார் மமற்றும் தொழிநுட்ப தேவியை கொண்டு உடைத்தாததால் சீனாவுக்கு தெரியா வந்தது. அதை தொடர்ந்து, 2010 -2012 இல் பல cia உளவாளிகள் சீனாவில் தொடர்சியாக பிடிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். சீன, ஒரு உதாரணம் காட்டுவதற்கு, அமெரிக்கா தூதரகதுக்கு சென்று விட்டு வெளியே வெளியே வந்த சீனப் பிரஷையானா cia உளவாளி ஒருவர் அந்த இடத்தில குரூரமாக கொல்லப்பட்டார். இது அமெரிக்காவுக்கு, cia க்கு கடும் செய்தியை கொடுப்பது என்ற குறியீடாக செய்யப்பட்டது. மற்றது,சீன மொழி அறிவித்தலை மேட்ற்கு ஊடகங்கள் மொழிபெயர்பதிலும், அவற்றின் சீனா நலிவடைய வேண்டும் என்ற வெளியில் சொல்லப்படாத நோக்கத்தாள் பிறழ்வது. ஆங்கிலத்தில் ஒருவர் சொல்லுவதை அல்லது கருத்தை எப்படி pour cold water on என்பதை பாவித்து நிராகரிப்பது போல, சீன மொழியில் ஏவுககனைகள் வேலை செய்யாது என்பதை சீன நிராரித்தது, என்பதே உண்மையான சீன மொழி செய்தி. ப்ளூம் பெர்க், அந்த செய்தியை, சீன ஏவுகணைகள் குளிர் தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கின்றன என்று மொழிபெயர்த்து கரிபூசிக்கொண்டது. இந்த செய்தி மேட்ற்கு ஊடகங்களில் வந்து, கிட்டத்தட்ட 1 மாதத்தில் சீன பசிபிக் சமுத்திரத்தில் ஏவுகணை குறிபார்த்து ஏவி அடிப்பது 1 மீட்டரறிலும் குறைவான வட்டத்துக்குள் ஏவுகணையாகில் துல்லியமாக இலக்கை அடிக்கும் என்பதை சோதனை செய்து காட்டியது. அனால், இது சிலவேளையில் முன்பே திட்டமிடப்பட்டு இருக்கலாம்.
  11. அமெரிக்காவின் போக்கை இந்திய எடுத்து உள்ளது. தூதரங்களில், தூதரக தரத்தில் நியமிக்கப்படுவார்கள், உளவுத்துறையையும் பிரதிநிதித்துவம் செய்வார்கள், அப்படியான உளவு துறை வேலைகளிலும் ஈடுபடுபவார்கள். சிலவேளைகளில், அமெரிக்க தூதுவார்களே உளவுத்துறையையும் பிரதிநிதித்துவம் செய்த சந்தர்ப்பமும் இருக்கிறது சிறிலங்காவில்.
  12. இதுக்கு எதாவது வரலாற்று ஆதாரம் இருக்கிறதா? அப்படியானால் சோழரருக்கு பின், எப்படி (இப்போதைய) ஆந்திராவில் இந்த தொழிநுட்பம் தங்கியது?
  13. நீங்கள் சொல்லியதன் ஆழ, அகலம் புரியாது, அதில் ஒரு குறித்த உதாரணத்தை தான் நீங்கள் விபரித்து இருப்பது. இரான் எனும் குறித்த விடயத்தில், நீங்கள் செய்வது virtue signaling. பொதுவெளி என்பதால் எவரும் சுட்டிக்காட்டலாம்
  14. இங்கே சிலருக்கு உள்ளதை உள்ளபடி சொன்னால் எரிகிறது. மேற்கின் பொருளாதாரமே முதலாளித்துவ அடிப்படை என்பதன் பின் சுரண்டலை பற்றி ஏன் கவலைப்படுவான், அது ஒரு பகுதி தானே எந்த மட்டத்திலும். மேற்கின் இப்போதைய பொருளாதாரம் rentier capitalism சாய்வானது. அது மேலும் சுரண்டல் தன்மை கொண்டது எல்லா மட்டத்திலும். முதல் வைத்து இருப்பவர்கள் (இது எப்போதுமே ஒப்பீடட்டளவு தான்), அப்படி இல்லாதவர்களை மறைமுகவேனும் சுரண்டுவார்கள், இது தான் உண்மை. இல்லை ஒரு உதாரணம் மட்டும்.
  15. மேட்ற்கு, us , இஸ்ரேல், Trump வெளிப்படையாகவே வென்று கொண்டு இருக்கிறோம், இரான் அம்மணமாக நிற்கிறது வேண்டிய இடத்தில் தொடலாம் என்று மேட்ற்கு, us, இஸ்ரேல் துள்ளி குதித்தும் ஏன் Trump சண்டை நிறுத்தத்துக்கு வந்தார்? அநேகமாக கீழே இருக்கும் செய்தியால் வந்த விளைவும் பெரிய பங்கு வகித்து இருக்கும் என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. (அத்துடன் Trump இன் சண்டை நிறுத்த தொனியும்) https://www.wsj.com/world/china/china-rare-earths-exports-2fd0dab4 China Is Still Choking Exports of Rare Earths Despite Pact With U.S. Western companies are struggling to secure approvals for rare-earth imports from Chinese authorities, despite U.S.-China deal ... (முழுச்செய்திக்கும் சந்தா செலுத்த வேண்டும்.)
  16. வலிய வந்து சமாதானமாக அணு சக்தியை மின்சக்தி பிறப்பிக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் பாவிக்க இணக்கம் காண வந்த ஈரானை அடித்து, அமெரிக்கா. மேற்கு பொய்யாக சொல்லிய ஈரான் அணு ஆயுதம் செய்யப்போகிறது என்பதை, யதார்த்தமாக பல நாடுகள் இரகசியமாக நாடுவதுக்கு இடம் ஏற்படுத்தி வைத்து இருக்கும் மேற்கு, அமெரிக்கா .
  17. மற்றதுக்கு பின்பு. அனால், அமெரிக்காவின் இவ்வளவு 'வளத்தின்' காரணம் என்ன? மிக முக்கியமானது கடன் வாங்கும் தகமை. அதனால் தான் அமெரிக்கா எதுக்கும் காசை எறியக் கூடிய நிலையில் இருப்பது. (சீன கடன் வழங்குவது - அதனால் அதுக்கு ரேட்டிங் அவ்வளவு தாக்கம் இல்லை, ஆயினும் உயர்வதை விரும்பும். இதவும் ஒரு காரணம் அமெரிக்கா சீனாவின் சர்வதேச வர்த்தகத்தை குழப்ப எத்தனிப்பது வரியால் மற்ற நாடுகளுக்கும் சேர்த்து, வரி குறைப்பின் ஒரு பேரம் சீனவியுடன் வர்த்தகத்தை குறைப்பது. சீனாவை தனிமைப்படுத்துவது. ஏனெனில், சீனாவின் அமெரிக்காவுக்கான வர்த்தக தொகையான 500 பில்லியன் கொடுக்கும் 'முழு பொருளாதார' நன்மையையும் எடுத்தால், புறக்கணிக்க தக்க தொகை. அதாவது TRump இன் வரியின் நோக்கம் வேறு.) அத்துடன் போக்கையும் - அதாவது இது இன்னும் மோசமாகும் நிலைட்டே காணப்படுவதுஎன்பதை rating agencies சொல்வது. காரணம் உள்ளமைப்பு பிரச்சனைகளும். அமெரிக்காவின் ஒவ்வொரு தொழில்நுட்ப மேலாண்மையும் பார்த்தல் - எவ்வளவு காசு எறியப்பட்டு உள்ளதோ அவ்வளவு மேலாண்மை. அதுக்காக அமெரிக்காவிடம் தொழில்நுடப்பா திறமை இல்லை என்று சொல்லவில்லை, ஏனெனில் தொழில்ட்பம் முதலில் idea. ஆனால் ஐடியா வேறு, அதை யதார்த்தத்தில் கொண்டுவருவது வேறு. இதையும் உள்ளடக்கி பணம், கடன் வாங்கும் தகமை மிக முக்கியம். பொருளாதாரம் அப்படி இயங்குவத்தால், அதாவது வெளியார் கடனில். முதலில் வேறு திரியில் சொல்லி இருக்கிறேன் gdp - வெலிக்கடன் அமெரிக்கா 36 - 26 சீனா 19 - 2.5 (3) அமெரிக்கா பொருளாதார நிபுணர்கள் சொல்வது 26 ஐ வாங்கி , 36 ஐ உடற்பதி செய்து, 10 நிகர லாபம் எனது கடன் வாங்கும் தகைமையையில் மிக கூட தங்கி இருப்பது. சீனாவுக்கு சொல்ல தேவை இல்லை, ஏனெனில் அது வர்த்தகத்தில் பணம் பெறுவது,
  18. அங்கு வருவது பெரும்பாலும், இஸ்ரேல் இளம் சமூகத்துக்கு கட்டாய இராணுவ சேவையில் உருவாகும் அழுத்தத்தை குறைபதத்திற்கு. இவர்களில் கணிசமானோர் புலனாய்வு, உளவுத்துறைக்கு உள்வாங்கப்பட்டு இருப்பார்கள். இப்படி இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசதிலும் நடக்கிறது.
  19. அப்போது ஏன் சீனா எல்லா கோளங்களிலும் அச்சறுத்தல் என்று அமெரிக்கா பார்க்கிறது? சீனாவை, சோவியத்தை போல தனிமைப்படுத்தி உடைக்க முயல்கிறது? (இவற்றை நன்கு அவதானித்தே சீனாவும் அதன் நகர்வுகள், அதை தடுப்பதை நோக்கமாக கொண்டே அமெரிக்கா நகர்வுகள். ) இது போன்றவற்றை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்களுக்கு எத்தனை கோளங்களில் சீன, அமெரிக்கா (ஆயுதம் இல்லாமல்) மோதுகிறது தெரியாது இருக்கிறது. கடலுக்கு அடியேயும் மோதுகின்றன. ஏன் அமெரிக்கா பில்லியன் கணக்கில் சீனாவை பற்றி பூச்சாண்டி காட்டும் பிரச்சாரத்துக்கு உத்தியோகப்பூர்வமாக செலவிடுகிறது? இப்படி பல அமெரிக்கா செய்வது, சொல்வது உங்களின் புரிவு பிம்பத்துக்கு எதிர்மாறாக இருக்கிறது. இதில் முக்கியமானது ஒன்று தொடங்கி விட்டது, credit rating விழுந்தது. நீங்கள் எதிர்பார்ப்பது மற்ற அமெரிக்கர்களும், இன்று கதைத்தால், நாளை விளைவுகள் என்பது. அனால் சீனாவும், அமெரிக்கா (கூட), மேற்கு, மற்ற நட்டுகள் அவ்வாறு அப்படியான காலத்தில். நோக்கவில்லை. (அனல், இதில் குறிப்பாக சீனா ஒன்றும் செய்ய தேவை இல்லை, முன்பே சொன்ன யுக உற்பதி அரிதான உலோக பிடி சீனாவிடம் உள்ளது. வேண்டுமாயின் அது பாவிக்கும்.)
  20. (இது பொதுவானதும் கூட) எனது விளக்கம் ஏலவே இருக்கிறது. இந்த இணைப்பை வசித்து பார்க்கவும். இதை தான் அமெரிக்கா தவிர்க்க முனைகிறது (அதனால் காலம் செல்ல இஸ்ரேல் தனியே மாட்டப்படும் வாய்ப்பு இருக்கிறது). எனது விளக்கம், என் சொந்த அரசியல், வரலாறு ..., அறிவு, ஆய்வும், சிந்தனை, புரிவும். இந்த இணைப்பை அடிப்படையாக கொண்டது அல்ல. Asia TimesWhy China's sitting on the Iran war sidelines - Asia TimesOn a visit to Shanghai some years ago, I asked a leading Chinese strategist how Beijing would view a war between the US and Iran, which even back then
  21. ஈரான் பற்றி கதைப்வவர்களுக்கு ஈரானை பற்றி என்ன தெரியும். எந்த வித சரி பார்த்தல், தேடுதல், சிந்தனை இல்லாமல் சும்மா மேற்கின் பிரச்சாரத்தை தூக்கி வந்து, துதி பாடுவது, ஒப்புவிப்பது (சிலரின் கைவந்த கலை இங்கு, இல்லாவிட்டால் பரிகாசம், இதை தவிர வேறு இல்லை ). ஈரானில், Zoroastrian, யூத மதம், கிறிஸ்தவம் யாப்பால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மதங்களும், மத சிறுபன்மையும். பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதிதுவத்துக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கியுள்ளது இரான் அரசு. இரான் யாப்பு படி எல்லா மக்களும் சமம், சம உரிமை... சட்டத்தில் சமம் என்றாலும் சமுகத்தில் வேறுபாடு இருக்கிறது (எங்களுக்கு சாதி போல, அதுவும் ஒரே இனத்தில்). இது தான் யதார்த்தம். 1979 இல் Fatwa கூட கொமேனி உருவாக்கியது, இரானில் யூதர் பாதுகாக்கப்படுவார்கள் என்று. எந்த யூதரையும் இரான் ஒரு போதும் கலைக்கவில்லை, இஸ்ரேல் nakba இல் பலஸ்தீனியரை கலைத்து நிலத்தை திருடியது போல (இப்படி zionist அல்லாதவர்களை அழிக்கப்பட வேண்டும், அவர்களின் சொத்துக்கள் அபரிக்கப்பட வேண்டும் .. என்று தத்துவமாக வகுத்து வைத்து இருக்கிறது TALMUD என்ற அதன் போதனையில். இதை சொன்னால்,, மேற்கில் அது anti-semitism) ஆனல் இஸ்ரேல் இன் தூண்டுதலால், யூதர் இஸ்ரேலுக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்து விட்டனர். இவர்களை கொண்டே இஸ்ரேல் ஈரானில் ஊடுருவுகிறது. மேற்கு ஈரானில் சுதந்திரம் இல்லை என்று சொல்வதன நோக்கம் ஆட்சிமாற்றத்துக்கே தவிர, இரான் மக்களின் அக்கரையில் இல்லை. இங்கே சிலர் அது காவுவது , சிலருக்கு சொந்த சிந்தனை இல்லை. இந்த முல்லாக்கள் என்று சொல்வதே மேற்கு ஊடகங்கள் தான். அனால் சிலர் வேண்டும் என்றே agenda ஐ உருவாக்க. ஏன் மேற்கு ஊடகங்களில் மட்டும் இப்படி வருகிறது? வேறு ஊடகங்களில் இது இல்லை என்றே சொல்லலாம். மற்றது, மேற்கத்தைய கலாசாரம் இரானில் வருவதே சுதந்திரம் என்று மேற்கு ஊடகங்கள் பிம்பத்தை காட்டி எழுப்புகின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படை, இங்கே agenda ஐ உருவாக்க எத்தனிப்பவர்கள் உட்பட, ஈரானில் மேற்கு , us இஸ்ரேல் சொல்கேட்கும் அரசாங்கம் வரவேண்டும். (இவர்களின்) முல்லாக்கள் ஒருபோதும் அதற்கு உடன்பட மாட்டார்கள் ஆம், இப்பொது மேற்கு தொடங்க எத்தனிகிறது. இதை நான் அறிவேன் ஆஸ்திரேலியாவில் தொடங்க எத்தனிக்கப்படுகிறது என்று, அனால் எந்த பிரதேசம் என்று குறிப்பாக தெரியாது. சீன போல செய்ய முடியாது, சீன இதில் சிறப்பு தேர்ச்சி பெற்றுவிட்டது, புதிய தொழிநுட்பத்தையும் வளர்த்து உள்ளது. கிட்டத்தட்ட 15 வருட காலம் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது அத்துடன் சீன் கிட்டத்தட்ட எல்லா அருமை உலோகங்களையும் மிகப்பெரிய (scale) இல் செய்வது, அதுக்கு சந்தையை வளைப்பதற்கு ஒப்பீட்டளவில் இலகு. அதாவது, பொருளாதார தக்க வைக்கும் (economic viability) வாய்ப்பு மேற்கில் குறைவு. அல்லது மேற்கு / ஆஸ்திரேலிய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும்.
  22. உங்களுக்கு இந்த தெளிவு, இங்கே பந்தி பந்தியாக எழுதுவோருக்கு புரியவில்லை என்பது தான் ஆச்சரியம். உண்மையில், ஈரான் அதன் முதல் படி கேந்திர இலக்குகளை அடைந்து உள்ளது. பேச்சுவார்த்தை நடந்தால், அணுத்துறை பற்றி மட்டும்.
  23. அழிப்பது வேறு. அடக்குவது வேறு. நீங்கள் சொல்லுவது எல்லா அமெரிக்கார்களும் சொல்வது. அழித்தாலும், அணு துறையை அழிக்க முடியாது. அதாவது உறுதி இல்லை. அப்படி ஆயின் அணு ஆயுதத்தை பாவிக்க வேண்டும். அதுவும் 2-3 தடையை பிரயோகிக்க வேண்டும். ஜப்பானில் பாவித்த பொது வேறு எவரிடமும் அணு ஆயுதம் இல்லை. இப்பொது மற்றவர்களும் அணு ஆயுதத்தி வைத்து இருக்கிறார்கள். ஒருவர் அணுஆயுதத்தை பாவிப்பது, மற்றவரின் இருப்புக்கு அச்சுறுத்தல். அரசு சாரா ஹௌதி களுக்கு கூட ஏன் அமெரிக்கா இரங்கி வந்தது? எல்லாமே சீனா. இறங்கினால் அமெரிக்காவுக்கு புதைகுழி. இரானும் அதை அறிந்தே விளையாடுகிறது. இது ஒன்றும் உடனடியாக வெட்டு ஒன்று, துண்டு 2 என்ற கதி, காலம் அல்ல. இரானுக்கு தெரியாத அமெரிக்காவை எதிர்க்க முடியாது என்று, வரம்புக்குள் நின்று எதிர்பத்தே ஆட்டம். அதில் அதன் கேந்திர இலக்குகளை அடைவது. ஏறத்தாழ பாதிக்கு மேல் பெற்றுவிட்டது அதே போலவே அலெக்சாண்டர் எல்லாத்தையும் அழித்து இருக்கலாம், ஆனால் அது அரசு / இராச்சியம் அல்ல. மிக கொடுமையான சிங்கிஸ்கான் கூட முதலில் இராச்சியத்தை கொடு, இல்லாவிட்டால் கூண்டோடு தரைமட்டம் என்றே பிடித்தது. டிரம்ப் அப்படியான போக்கில் சரணடை (அதாவது US சொல்வதில் கையெழுத்து வை) சொல்லி, இப்போது நிபந்தனை இல்லாத சண்டை நிறுத்தத்தில். இவற்றின் காலங்கள் வேறு வேறு, அனால் நோக்கம் ஒரே தன்மை.
  24. இதில் ஒரு வரலாற்று காலச்சக்கர ஒப்புமையும் இருக்கிறது கி,மு 331 இல், அலெக்ஸாண்டர் சிறிய அரசாக (இராசியமாக) ஒப்பீட்டளவில் மிகச் சிறிய படையுடன், Achaemenid வம்ச டாரியஸ் ஆட்சி செய்த பாரசீக பேரரசை கொண்ட டாரியசின் மிகப் பெரும் படையுடன் மோதி , டாரியஸ் ஐ தோற்கடித்து, பாரசீக பேரரசை வென்று, பேரரசுகளின் புதைகுழி என்று அழைக்கப்படும் இப்போதைய ஆப்கானிஸ்தானையும் கைப்பற்ற முநைந்து, அழிவினை சந்தித்து, பஞ்சாப்பில் , விபச நதி அடியில் (இதுவே சரஸ்வதி ஆறு என்று அழைக்கப்ட்டதாக நம்பப்படுகிறது, இது வற்றியதே சிந்துவவெளி நாகரிகம் அழிந்ததுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் நம்பப்படுகிறது) அலெக்சாந்தரின் படைகள் அலெக்ஸாண்டருக்கு எதிராக கிளர்ந்த படியால் கி.மு 325 இல் திரும்பினார் பபிலோனியாவுக்கு (இன்றைய இராக், குறிப்பாக பாக்தாத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 மில்கள் தெற்காக). அலெக்சாண்டர், பபியலோனியாவில் கி.மு 323 இறக்க, அலெக்ஸாண்டரின் மசடோனியன் பேரரசு உடைந்தது. (அலெக்சாண்டர், டரியஸ் இன் பாரசீக பேரரசை (இப்போதைய இரான் முழுமையாக) வென்றதே மேற்கு நாகரிகத்தின் எழுச்சியாக கருதப்படுவது) இப்போதைய நிகழ்வுகள் எல்லாம் இதன் காலச்சக்கர பிம்பமகா இருக்கிறது. வல்லரசு அமெரிக்கா ஆஃப்கானில் புதைந்து (இந்த காலத்திலேயே சீனா மட்டும் அமெரிக்காவுக்கு பொடியாக எழும்பியது, அமெரிக்கா அரசியல், ராஜதந்திர மற்றும் வரலாற்று வட்டங்கள் பொதுவாக ஆப்கானை புதைகுழி என்கின்றன), திரும்பி, சிறிய இரானுடன் மோதி, ஈரான் கட்டார், இராக்கில் (இதை அமெரிக்கா படைகள் கண்காணிப்பில்படவில்லை என்கிறது) ஆக குறைந்தது குறியீடு அளவிலாவது அமெரிக்காவை தாக்கி பெரும்பாலும் முடிவுக்கு வந்து இருக்கிறது. மீறல்கள் தொடர்கிறது. அல்லது டிரம்ப் இந்த வழமையான பணியாகவும் இருக்கலாம் (சண்டை நிறுத்தம் என்று விட்டு, கபடமாக அடிப்பதுக்கு, அல்லது சண்டை நிறுத்தம் என்று கொண்டே அடிப்பதுக்கு ) ஆனல், முன்பே சொன்னது போல அமெரிக்கா (இஸ்ரேல் உம்) இதில் மாட்டுப்பட்டு இருக்கிறது (சிறிய இரானிடம் , பெரிய அமெரிக்கா - முன்பு சிறிய மசடோனியாவிடம், பெரிய பாரசீக பேரரசு).
  25. ஆம் இதை அறிந்துள்ளேன். ருசியா எதை உடனடியாக மேற்கு, us, இஸ்ரேல் ஐ உறுத்தக் கூடியதாக செய்து இருக்க முடியும் என்பதை சிந்திப்பதத்திற்கு எந்தஒரு விடயமும் இல்லை. அல்லது (நான்) அறியாமல் இருக்கலாம் அனால் சீனா, அருமை உலோக உற்பத்தி கிட்டத்தட்ட ஏகபோக பிடியால், மேற்கு, us, இஸ்ரேல் க்கு boiling the frog போல வெளியே தெரியாமல் ஆயுதம் செய்வதை குறைப்பதுக்கு ஒன்றும் சொல்லாமல் ஒழுங்குகளை (regulations) ஐ இறுக்கி (சர்வசாதாரணமாக ஏற்றுமதி அனுமதி விண்ணப்பம் - அனுமதி நாட்களை கூட்டலாம்) செய்யலாம். ஏனெனில் இந்த அருமை உலோகங்கள் மிக உணர்திறன் (அதிஉயர் வெப்ப, காந்த, ராடாரை விலத்துவது, உறுஞ்சுவது போன்ற பிரயோகங்களுக்கு) ஆயுத உடற்பதியில் இன்றியமையாதது. (அருமை உலோகங்கள் உண்மையில் அருமை ஏனெனில் இயற்றுகை உலோக தாதுக்களில் அவற்றின் மிக செறிவு குறைவு, வேறு பொதுபவன உலோகங்களை உடற்பத்தி செய்யும் போது பக்கவிளைவை கொண்டு பெறவேண்டி இருப்பதால்.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.