Everything posted by Kadancha
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
(இது பொதுவானதும் கூட) எனது விளக்கம் ஏலவே இருக்கிறது. இந்த இணைப்பை வசித்து பார்க்கவும். இதை தான் அமெரிக்கா தவிர்க்க முனைகிறது (அதனால் காலம் செல்ல இஸ்ரேல் தனியே மாட்டப்படும் வாய்ப்பு இருக்கிறது). எனது விளக்கம், என் சொந்த அரசியல், வரலாறு ..., அறிவு, ஆய்வும், சிந்தனை, புரிவும். இந்த இணைப்பை அடிப்படையாக கொண்டது அல்ல. Asia TimesWhy China's sitting on the Iran war sidelines - Asia TimesOn a visit to Shanghai some years ago, I asked a leading Chinese strategist how Beijing would view a war between the US and Iran, which even back then
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் பற்றி கதைப்வவர்களுக்கு ஈரானை பற்றி என்ன தெரியும். எந்த வித சரி பார்த்தல், தேடுதல், சிந்தனை இல்லாமல் சும்மா மேற்கின் பிரச்சாரத்தை தூக்கி வந்து, துதி பாடுவது, ஒப்புவிப்பது (சிலரின் கைவந்த கலை இங்கு, இல்லாவிட்டால் பரிகாசம், இதை தவிர வேறு இல்லை ). ஈரானில், Zoroastrian, யூத மதம், கிறிஸ்தவம் யாப்பால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மதங்களும், மத சிறுபன்மையும். பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதிதுவத்துக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கியுள்ளது இரான் அரசு. இரான் யாப்பு படி எல்லா மக்களும் சமம், சம உரிமை... சட்டத்தில் சமம் என்றாலும் சமுகத்தில் வேறுபாடு இருக்கிறது (எங்களுக்கு சாதி போல, அதுவும் ஒரே இனத்தில்). இது தான் யதார்த்தம். 1979 இல் Fatwa கூட கொமேனி உருவாக்கியது, இரானில் யூதர் பாதுகாக்கப்படுவார்கள் என்று. எந்த யூதரையும் இரான் ஒரு போதும் கலைக்கவில்லை, இஸ்ரேல் nakba இல் பலஸ்தீனியரை கலைத்து நிலத்தை திருடியது போல (இப்படி zionist அல்லாதவர்களை அழிக்கப்பட வேண்டும், அவர்களின் சொத்துக்கள் அபரிக்கப்பட வேண்டும் .. என்று தத்துவமாக வகுத்து வைத்து இருக்கிறது TALMUD என்ற அதன் போதனையில். இதை சொன்னால்,, மேற்கில் அது anti-semitism) ஆனல் இஸ்ரேல் இன் தூண்டுதலால், யூதர் இஸ்ரேலுக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்து விட்டனர். இவர்களை கொண்டே இஸ்ரேல் ஈரானில் ஊடுருவுகிறது. மேற்கு ஈரானில் சுதந்திரம் இல்லை என்று சொல்வதன நோக்கம் ஆட்சிமாற்றத்துக்கே தவிர, இரான் மக்களின் அக்கரையில் இல்லை. இங்கே சிலர் அது காவுவது , சிலருக்கு சொந்த சிந்தனை இல்லை. இந்த முல்லாக்கள் என்று சொல்வதே மேற்கு ஊடகங்கள் தான். அனால் சிலர் வேண்டும் என்றே agenda ஐ உருவாக்க. ஏன் மேற்கு ஊடகங்களில் மட்டும் இப்படி வருகிறது? வேறு ஊடகங்களில் இது இல்லை என்றே சொல்லலாம். மற்றது, மேற்கத்தைய கலாசாரம் இரானில் வருவதே சுதந்திரம் என்று மேற்கு ஊடகங்கள் பிம்பத்தை காட்டி எழுப்புகின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படை, இங்கே agenda ஐ உருவாக்க எத்தனிப்பவர்கள் உட்பட, ஈரானில் மேற்கு , us இஸ்ரேல் சொல்கேட்கும் அரசாங்கம் வரவேண்டும். (இவர்களின்) முல்லாக்கள் ஒருபோதும் அதற்கு உடன்பட மாட்டார்கள் ஆம், இப்பொது மேற்கு தொடங்க எத்தனிகிறது. இதை நான் அறிவேன் ஆஸ்திரேலியாவில் தொடங்க எத்தனிக்கப்படுகிறது என்று, அனால் எந்த பிரதேசம் என்று குறிப்பாக தெரியாது. சீன போல செய்ய முடியாது, சீன இதில் சிறப்பு தேர்ச்சி பெற்றுவிட்டது, புதிய தொழிநுட்பத்தையும் வளர்த்து உள்ளது. கிட்டத்தட்ட 15 வருட காலம் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது அத்துடன் சீன் கிட்டத்தட்ட எல்லா அருமை உலோகங்களையும் மிகப்பெரிய (scale) இல் செய்வது, அதுக்கு சந்தையை வளைப்பதற்கு ஒப்பீட்டளவில் இலகு. அதாவது, பொருளாதார தக்க வைக்கும் (economic viability) வாய்ப்பு மேற்கில் குறைவு. அல்லது மேற்கு / ஆஸ்திரேலிய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உங்களுக்கு இந்த தெளிவு, இங்கே பந்தி பந்தியாக எழுதுவோருக்கு புரியவில்லை என்பது தான் ஆச்சரியம். உண்மையில், ஈரான் அதன் முதல் படி கேந்திர இலக்குகளை அடைந்து உள்ளது. பேச்சுவார்த்தை நடந்தால், அணுத்துறை பற்றி மட்டும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அழிப்பது வேறு. அடக்குவது வேறு. நீங்கள் சொல்லுவது எல்லா அமெரிக்கார்களும் சொல்வது. அழித்தாலும், அணு துறையை அழிக்க முடியாது. அதாவது உறுதி இல்லை. அப்படி ஆயின் அணு ஆயுதத்தை பாவிக்க வேண்டும். அதுவும் 2-3 தடையை பிரயோகிக்க வேண்டும். ஜப்பானில் பாவித்த பொது வேறு எவரிடமும் அணு ஆயுதம் இல்லை. இப்பொது மற்றவர்களும் அணு ஆயுதத்தி வைத்து இருக்கிறார்கள். ஒருவர் அணுஆயுதத்தை பாவிப்பது, மற்றவரின் இருப்புக்கு அச்சுறுத்தல். அரசு சாரா ஹௌதி களுக்கு கூட ஏன் அமெரிக்கா இரங்கி வந்தது? எல்லாமே சீனா. இறங்கினால் அமெரிக்காவுக்கு புதைகுழி. இரானும் அதை அறிந்தே விளையாடுகிறது. இது ஒன்றும் உடனடியாக வெட்டு ஒன்று, துண்டு 2 என்ற கதி, காலம் அல்ல. இரானுக்கு தெரியாத அமெரிக்காவை எதிர்க்க முடியாது என்று, வரம்புக்குள் நின்று எதிர்பத்தே ஆட்டம். அதில் அதன் கேந்திர இலக்குகளை அடைவது. ஏறத்தாழ பாதிக்கு மேல் பெற்றுவிட்டது அதே போலவே அலெக்சாண்டர் எல்லாத்தையும் அழித்து இருக்கலாம், ஆனால் அது அரசு / இராச்சியம் அல்ல. மிக கொடுமையான சிங்கிஸ்கான் கூட முதலில் இராச்சியத்தை கொடு, இல்லாவிட்டால் கூண்டோடு தரைமட்டம் என்றே பிடித்தது. டிரம்ப் அப்படியான போக்கில் சரணடை (அதாவது US சொல்வதில் கையெழுத்து வை) சொல்லி, இப்போது நிபந்தனை இல்லாத சண்டை நிறுத்தத்தில். இவற்றின் காலங்கள் வேறு வேறு, அனால் நோக்கம் ஒரே தன்மை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இதில் ஒரு வரலாற்று காலச்சக்கர ஒப்புமையும் இருக்கிறது கி,மு 331 இல், அலெக்ஸாண்டர் சிறிய அரசாக (இராசியமாக) ஒப்பீட்டளவில் மிகச் சிறிய படையுடன், Achaemenid வம்ச டாரியஸ் ஆட்சி செய்த பாரசீக பேரரசை கொண்ட டாரியசின் மிகப் பெரும் படையுடன் மோதி , டாரியஸ் ஐ தோற்கடித்து, பாரசீக பேரரசை வென்று, பேரரசுகளின் புதைகுழி என்று அழைக்கப்படும் இப்போதைய ஆப்கானிஸ்தானையும் கைப்பற்ற முநைந்து, அழிவினை சந்தித்து, பஞ்சாப்பில் , விபச நதி அடியில் (இதுவே சரஸ்வதி ஆறு என்று அழைக்கப்ட்டதாக நம்பப்படுகிறது, இது வற்றியதே சிந்துவவெளி நாகரிகம் அழிந்ததுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் நம்பப்படுகிறது) அலெக்சாந்தரின் படைகள் அலெக்ஸாண்டருக்கு எதிராக கிளர்ந்த படியால் கி.மு 325 இல் திரும்பினார் பபிலோனியாவுக்கு (இன்றைய இராக், குறிப்பாக பாக்தாத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 மில்கள் தெற்காக). அலெக்சாண்டர், பபியலோனியாவில் கி.மு 323 இறக்க, அலெக்ஸாண்டரின் மசடோனியன் பேரரசு உடைந்தது. (அலெக்சாண்டர், டரியஸ் இன் பாரசீக பேரரசை (இப்போதைய இரான் முழுமையாக) வென்றதே மேற்கு நாகரிகத்தின் எழுச்சியாக கருதப்படுவது) இப்போதைய நிகழ்வுகள் எல்லாம் இதன் காலச்சக்கர பிம்பமகா இருக்கிறது. வல்லரசு அமெரிக்கா ஆஃப்கானில் புதைந்து (இந்த காலத்திலேயே சீனா மட்டும் அமெரிக்காவுக்கு பொடியாக எழும்பியது, அமெரிக்கா அரசியல், ராஜதந்திர மற்றும் வரலாற்று வட்டங்கள் பொதுவாக ஆப்கானை புதைகுழி என்கின்றன), திரும்பி, சிறிய இரானுடன் மோதி, ஈரான் கட்டார், இராக்கில் (இதை அமெரிக்கா படைகள் கண்காணிப்பில்படவில்லை என்கிறது) ஆக குறைந்தது குறியீடு அளவிலாவது அமெரிக்காவை தாக்கி பெரும்பாலும் முடிவுக்கு வந்து இருக்கிறது. மீறல்கள் தொடர்கிறது. அல்லது டிரம்ப் இந்த வழமையான பணியாகவும் இருக்கலாம் (சண்டை நிறுத்தம் என்று விட்டு, கபடமாக அடிப்பதுக்கு, அல்லது சண்டை நிறுத்தம் என்று கொண்டே அடிப்பதுக்கு ) ஆனல், முன்பே சொன்னது போல அமெரிக்கா (இஸ்ரேல் உம்) இதில் மாட்டுப்பட்டு இருக்கிறது (சிறிய இரானிடம் , பெரிய அமெரிக்கா - முன்பு சிறிய மசடோனியாவிடம், பெரிய பாரசீக பேரரசு).
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஆம் இதை அறிந்துள்ளேன். ருசியா எதை உடனடியாக மேற்கு, us, இஸ்ரேல் ஐ உறுத்தக் கூடியதாக செய்து இருக்க முடியும் என்பதை சிந்திப்பதத்திற்கு எந்தஒரு விடயமும் இல்லை. அல்லது (நான்) அறியாமல் இருக்கலாம் அனால் சீனா, அருமை உலோக உற்பத்தி கிட்டத்தட்ட ஏகபோக பிடியால், மேற்கு, us, இஸ்ரேல் க்கு boiling the frog போல வெளியே தெரியாமல் ஆயுதம் செய்வதை குறைப்பதுக்கு ஒன்றும் சொல்லாமல் ஒழுங்குகளை (regulations) ஐ இறுக்கி (சர்வசாதாரணமாக ஏற்றுமதி அனுமதி விண்ணப்பம் - அனுமதி நாட்களை கூட்டலாம்) செய்யலாம். ஏனெனில் இந்த அருமை உலோகங்கள் மிக உணர்திறன் (அதிஉயர் வெப்ப, காந்த, ராடாரை விலத்துவது, உறுஞ்சுவது போன்ற பிரயோகங்களுக்கு) ஆயுத உடற்பதியில் இன்றியமையாதது. (அருமை உலோகங்கள் உண்மையில் அருமை ஏனெனில் இயற்றுகை உலோக தாதுக்களில் அவற்றின் மிக செறிவு குறைவு, வேறு பொதுபவன உலோகங்களை உடற்பத்தி செய்யும் போது பக்கவிளைவை கொண்டு பெறவேண்டி இருப்பதால்.)
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
டிரம்ப் நிர்வாகம் தந்திரோபாய அணுஆயுத தாக்குதலையும் கவனத்தில் எடுத்து இருந்தது. பலர் கவனிக்காகாது, ருசியா அதுக்கு எச்சரிக்கை விடுத்தும் இருந்தது. இதில் தெரிவது அமெரிக்காவின் கேந்திர பலத்தின் ஒப்பிட்டளவிலான வீழ்ச்சி. இரான் கேட்டது சண்டை நின்றால் பேசலாம். அமெரிக்கா சொன்னது சண்டை தொடந்தாலும் பேச வேண்டும், இல்லாவிட்டால் .... . இதில் முக்கியமாக, எந்த நிபந்தனையும் இல்லாத சண்டை நிறுத்தம். பின்னுக்கு வேறு சக்திகளும் இருந்து இருக்கலாம். குறிப்பாக சீனா (வாயால் வலியுறுத்துவதால் அல்ல. )
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ராஜதந்திர உறவுகளை வளர்ப்பது என்ன உங்களின் வாசிப்பு போன்றதா? இப்படித்தான் கட்டி எழுப்புவது. ரஷ்யாவின் நடத்தையும் அறியக் கூடியதாக இருப்பது. சிரியாவில் இரான் விமான எதிர்ப்பு விடயத்தில் ருசியா உடன் பெட்ரா அனுபவத்தை வைத்து. ரஷ்யாவுக்கு உழைப்பு அதுவாக அவ்வளவு இலகுவில் விட்டு கொடுக்காது, ஈரானுக்கு (அது தனியே நிற்கும் போது), மேற்கு சும்மாவே தடுக்க முனைகிறது, உரசல்கள் வராது. (அமெரிக்காவே அடிபட்ட இராக்கின் எண்ணெய் வருவாயை தடைகள் மூலம் மறைமுகமாக தடுத்து, இரானில் இருந்து வர்த்தகம் , மின்சக்தி போன்றவற்றை இரானிடம் இருந்து ஈராக் வாங்குவதை தடுப்பது போல, ரஷ்யாவுக்கும் இது ஒரு பிடி இரானிடம் இருந்து வேறு பொருளாதார நமைகளை பெறுவதற்கு.) முறித்தால் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். ஈரானின் கணிப்பில் வேறு அம்சங்களும் இருக்கலாம். (உ.ம். ருசியா இடம் இருந்து போர்விமானங்களை பெறுவது, விமான எதிர்ப்பு அமைப்பை பெறுவது போன்றவை. இரான் 90 நடுப்பகுதியில் முனைய சோவியத் இல் இருந்த சில நாடுகளிடம் போர்விமானங்களை வாங்க தெண்டித்தது. அதை அமெரிக்கா தடுத்து விட்டது. பகிரங்கமாக இணைய தளத்தில் இருக்கிறது. https://www.armscontrol.org/act/1997-10/press-releases/us-buys-moldovan-aircraft-prevent-acquisition-iran#:~:text=Moldova%20informed%20the%20United%20States,agreement%20authorizing%20future%20cooperative%20activities.) (இது பல மேற்கு / us குறுக்கீடு. தடுப்புக்கு உட்பட்டே கட்டப்பட்டது. இறுதியில் ருசிய பாவிக்கப்பட்ட எரிபொருளை அகற்றும் (ககிஸ்ஸிங்யர் ஷாவுக்கு சொன்னது போலவே) என்ற உடன்பாட்டுக்கு கீழே அனுமதிக்கப்பட்டது. அப்போது இரான் மீது தடைகளும் கொண்டு வரப்பட்டு விட்டது.) அந்த நேரத்தில்,, இதில் ரஷ்யா (பிரான்ஸ் உம் எப்போதும் ) தடைகளுக்கு ஆமோதிப்பதன் ஒரு பகுதி காரணம், அதன் அணு உலை / சிறப்புத்தேர்ச்சி வர்த்தகத்துக்காக. (ஆனால், இப்படித்தான் எந்த மிகஉயர் தொழில் நுட்பம் விற்கப்படுவது - அது எப்போதுமே rentier transaction.) இதனாலேயே இரான் சொந்த செறிவூட்டல் வேண்டும் என்று நிற்பது, வெளியாரிடம் தங்காமல் இருக்க. அது மேற்கு / இஸ்ரேல் க்கு பொறுக்கமல், வெப்பியாரத்தில் எரிகிறது. ஏனெனில், எவர் கொடுத்தாலும் மேற்கு / us தடுக்கும். இப்போது வெளிப்படையாகவே ஈரானை அன்ஹா உரிமையை விடும்படி கேட்கிறது மேற்கு / us. மேற்கின் பிரகாரத்தை ஒப்புவிக்கும் கதை உங்களுடையது; ஒன்றில் அந்த நிலைக்கு ஆதரவால் அல்லது சிந்தனை இல்லாததால். இதில் கூட சொல்வது அவளையும் செய்து இருப்பது நீங்கள் நானல்ல. அதுக்கு முதல் பரந்த சிந்திப்பு இருக்க வேண்டும். எந்த நாடாவது சொந்தமாக மின் அணு ஆலையை இயக்குவதை வேறு எந்த நாட்டிடமும் பொறுப்பு கொடுக்க விரும்புமா, வேறு எந்த நன்மைகளும் இல்லாமல், அதில் அச்சுறுத்தல் பிரச்சனைகளும் வெளியாரால் (மேற்கு) இல்லாது இருந்தால். அதுவும் இரான் போன்ற துறை சார் அனுபவம் உள்ளவர்களை கொண்டு இருக்கும் போது? மற்றவை , உங்களின் விடயம், சிந்தனை இல்லாத அரைகுறை வெற்றுக் கதை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிந்தனை இல்லாத கதை. பயண விமான தொழில் நுட்பம் வாங்கலாம். தடை வந்தது மேற்கின் பொம்மையாக வைத்து இருக்கும் எண்ணத்தால். தடை அகன்ற பின் வாங்கலாம். தடை அகன்றாலும் இவற்றை மேட்ற்கு ஈரானுக்கு கொடுக்காது. எது அரசுக்கு முக்கியம் என்று கருதுகிறது அதுக்கே செலவு செய்யும். ஏவுகணை தொழில்நுட்பம் அதுவக்க வளர்த்து கொண்டது. ஏனெனில், இராக்கில் அது அடைந்த அனுபவத்தால், எவரிடமும் பணம் கொட்டுத்தும் வாங்க முடியாமல் போனதால். அதே இரான், சிறு செய்மதி ஏவும் தொழிநுட்பத்தை கூட வளர்த்து உள்ள ஆம் ருசியா நிர்வகிப்பது ராஜதந்திர காரணங்களுக்கு , மற்றும் வெளிப்படை தன்மைக்கு. அப்போது என் மேட்ற்கு இவ்வ்ளவு துள்ள வேண்டும்? இஸ்ரேல் ஏன் இதனை விஞ்ஞானிகளை போட்டு தள்ள வேண்டும். அணு துறையில், பல உபதுறைகள், இப்பொது இஸ்ரேல் போட்டு தள்ளிய விஞ்ஞானிகள் பலர் உபதுறை, நேரடியாக அணுத்துறைக்கு சம்பந்தப்படாதது. இரானிடம் அணுத்துறைக்கே என்றே ஆராய்ச்சி மையங்கள் இருக்கிறது. இதனால தான் இஸ்ரேல் இன் கொலைசெய்யும் திட்டம் மத்திம, நீண்ட காலப்போக்கில் சரிவராது என துரைசார் நிபுணர்கள் சொல்லுவது சும்மா மேற்கின் பிரச்சாரத்தை சிந்தனை இல்லாமல் வாசிப்பது. இங்கே வந்த அளப்பது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
விளங்காவிட்டால் விடுங்கள். சும்மா கதை விட வேண்டாம். இது தெரியும். இதை இந்த திரியிலேயே முதலில் சொல்லி இருக்கிறேன். முதலில் இந்த கிஸ்ஸிங்யர் பக்க விளைவால் உருவாக்கும் புளுட்டோனியத்தை கூட இரானில் வைத்தது இருக்க கூடாது என்பதில் இறுக்கமாக நின்றே ஷா உடன் முறுகுப்பட்டது. ஷாவே அமெரிக்கா. மேற்கு மற்ற நாடுகளிலிருந்து ஈரானை இதில் வேறுபடுத்தி வைத்த இருப்பதாகவும், உரிய இடத்தை கொடுக்கவில்லை என்று கூட முறுக்குப்பட்டது அனால் எதை சொன்னாலும் ஈரான் எவரித்திடம் தொழில்நுட்பத்தை பெற்றதோ, மேலும் செறிவூடல்லுக்கான தொழில்நுட்பம் பெரிய அளவில் அதுவாகவே கட்டி எழுப்பியது உண்மை. (அதை உற்பத்தி செய்யும் தொழிற்றசாலையை கூட கட்டி எழுப்பி இருந்தது. இஸ்ரேல் அதையும் தாக்கி இருந்தது) தொழிநுட்பம் பெறுவது வேறு, அதை கட்டி எழுபவது வேறு. அப்போது ஏன் அமெரிக்கா JCPOA இல் இருந்து விலத்தியது? ஏன் மரபு வழி ஏவுகணை இரான் ஐந்து இருக்க கூடாது? (ரான் 2 முறை ஏமாந்த்து இருக்கலாம், இனிமேல் ஏமாறது) ஈரான் அமைச்சர் , 3 ஐரோப்பிய வால்களுடன் பேசியதில் கூட எந்த தற்பாதுகாப்பு திறன்கள் பற்றி பேசுவதற்கு இடம் இல்லை என்று கூறியது என்னவென்று புரிகிறதா? அமெரிக்காவே சரணடை (சேலை கட்டும் பொம்மையாக வைத்து இருப்பதற்கு) என்று சொன்னன பின் நீங்கள் சொல்லுவது எல்லாம் .. என்னவென்று சொல்வது . . சும்மா கதைப்பது? ஆனால், அமெரிக்காவிலோ அல்லது வேறு எங்குமோ ஒரு தொழில்நுட்பத்தை கற்று விட்டு அல்லது பெற்று விட்டு, பின் அதனில் இருந்து பெற்ற அறிவை கொண்டு மேம்பெடுத்தப்பட்ட தொழிலநுட்பத்தை கட்டி எழுபவது என்பது அமெரிக்காவின். அல்லது அந்த குறித்த நாட்டின் ஹொழில்நுட்பம் ஆகாது. அனல், இதை தான் அமெரிக்கா சீனாவுக்கு சொல்கிறது. அப்படி என்றால் இப்போதைய மரபு வழி ஆயுதங்கள் எல்லாம் சீனாவின் ஹொழில்நுட்பம் என்றே வரும் அமெரிக்கா ஊடகங்கள், அரசாங்கங்கள் சொல்வது (அவை ஹம்து வசதிக்கு கதைப்பது), அதை நீங்களும் சொல்வது சிந்தனை இல்லாத கதை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான், சிரியா, இராக், லிபிய இல் இருந்து மிகவும் வேறுபட்டது. கடைசி மூன்றுக்கும் இணையில் ஒற்றுமை ஒரேயொரு இறுக்கமான (தனிமனித) தலைமை . ஷா இன் ஆட்சியில் ஈரான் அப்படியே இருந்தது, வெளியார் (cia, moosad, அமெரிக்கா. மேட்ற்கு, இஸ்ரேல்) மிகவும் ஆதரவு அளித்தும் அப்படி ( சிரியா, இராக், லிபிய போல ) இருஙக ஷாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. (உண்மையில் ஷாவின் ஆட்சி அப்படி தூக்கி எறியப்படும் என்று கனவில் கூட cia நம்பவில்லை. (உண்மையில் ஷாவின் ஆட்சி அப்படி தூக்கி எறியப்படும் என்று கனவில் கூட cia நம்பவில்லை. இதை முன்பு அறிவேன் வேறு ஏதோ ஒரு வரலாற்று குறிப்பில் வாசித்த நினைவு. அனால் இப்பொது வந்துள்ள ஊடக பதிவு உறுதி செய்கிறது. https://www.theguardian.com/world/2025/jun/22/iran-israel-us-alliance-and-enemies) இபோஹையா ஈரான் அப்படி இல்லை ஆட்சியில். ஒரு பக்கம் இஸ்லாமிய புரட்சி, அதை பாதுகாப்பது, ஆனால் யாப்பின் வழியாக, மறு பக்கம் அதிபர் தேர்தலில் ஹெரிவு செய்யப்படுவது, அதாவது அதிகாரம் குவிக்கப்படாமல் பகிர, பரவப்படுவது. (இஸ்லாமிய (அரசாங்க / அரசு) பக்கம் கிட்டத்தட்ட முடியை போல, அனால் வேண்டுமாயின் அரசாங்கத்தில் தலையிடலாம்) இஸ்லாமிய அரசாங்க பக்கத்தில் கூட, moderates, hardliners என்று. ஈரானின் அதிபர் அண்மையில் ஒரு உயர் நிலை அதிகாரியை கூட பாகவி நீக்கி இருந்தார், ஏனெனில் இப்படியாக கடின காலத்தில் அவர் உல்லாச பிரயாணம் செய்தற்காக. (இஸ்லாமிய புரட்சி பக்கம் அதிபர் பீடத்தில் தலையிடாது. அதிபர் பீடம் இஸ்லாமிய புரட்சியை மதிக்கவேண்டும் என்பதே நிபந்தனை. இது பொதுவாக பிரச்சனை இல்லை) BBC NewsIranian president sacks deputy for 'lavish' Antarctic cruisePresident says trip by Shahram Dabiri, the vice-president for parliamentary affairs, was "indefensible" while Iran's economy suffers. இதனால்பெரும்பாண்மை மக்கள் அரசாங்கத்தில் இருந்து எதோ ஒரு விதத்தில் பயனை பெறுவது. இதே போலவே, IRGC (நோக்கம் இஸ்லாமிய புரட்சியை பாதுகாப்பது) , மரபுவழி இராணுவம் (Artesh, நிலப்புல ஒருமைப்பாட்டை பாதுகாப்பது) ஈரானில், இரண்டும் வேறு, வேறு அமைப்புகள். இப்படியான அமைப்பு இருந்ததாலேயே இரான் 24 மணித்தியாலத்தில் முதல் அடியில் இருந்து மீண்டதன் ஒரு முக்கிய காரணம். (வேறு திரியில் சொல்லி இருக்கிறேன், ஒவ்வொரு அரசும் அவற்றின் அரச /அரசங்க தேவைக்கு ஏற்ப ஆகி கொள்ளும் என்று, மேற்கின் வழிதான் இருக்க வேண்டும் என்று இல்லை) இவை எல்லாம் இணங்குவது அணுத்துறையில். ஹாமெனி தனக்கு எதாவது நடந்து இல்லை என்றால், அடுத்த படி எது என்பதை கூட இரான் முடிவு எடுத்துவிட்டது. இது காட்டுவது, இரான் அரசாங்கம் அமைப்பு அடிப்படையில், தனிமனித அடிப்படடையில் இல்லை (அது மேற்கின், us , இஸ்ரேல் இந்த பிரச்சாரம், அதை இங்கே சிலர் காவுவது, முல்லாக்கள் என்று). என்னவென்றால் இதை மேற்கு , இஸ்ரேல் ஐ அடிக்க விதன் மூலம் முழு ஈரானுக்கும் மானப் பிரச்சனை ஆக்கி விட்டது. காரணம், எந்தவித வெளி உதவியும் இல்லாமல் இரான் அணுத்துறையை கட்டி எழுப்பியது, சும்மா விளையாட்டு இல்லை அத்துடன், covid இல் மேற்கு நடந்து கொண்ட விதத்தை இரான் நினைவு ஊட்டினாலே போதும், மேற்கை, us இஸ்ரேல் ஐ எதிர்க்க. இது எனது தனிப்பட்ட புரிவு.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மற்ற மேற்றகில் உள்ளவர்கள் தங்களுக்கு எதோ ஈரானை பற்றி முழுமையாக தெரியும் என்றது போலவே நீங்கள் சொல்வது இருக்கிறது. முதலில் இரான், காலனித்துவதில் இருந்து விடுதலை பெற்றதாயினும், புதிய நாடு இல்லை. இரான் அரசின் இருப்பு ஆகக்குறைந்தது சைரஸ் கி.மு 600 இல் இருந்து. அதுக்கு முதல் மெடியன் பேரரசு. அதுக்கும் முதல் Elam (Elamites, கி.மு 2700 அளவில்) பெரிய அரசு உட்பட, மற்றும் சிற்றரசுகள் இப்பொது உள்ள இரானையும், இராக்கின் பகுதிகளையும் உள்ளடக்கி. தெற்கில் பாரசீக (Persian), Achaemenid இராச்சியங்கள், இந்த தென் இராச்சியங்களில் இருந்தே சைரஸ் இன் Achaemenid பேரரசாக எழும்பியது. இப்போதைய நிலையில், ஒரு சிறு உதாரணம் இஸ்லாமிய அரசு 1979 இல் வந்தபோது, யாப்பு கூட கொண்டுவந்தது எல்லோரும் சமம், சம உரிமை ... என்று (அமெரிக்காவின் / மேற்றுகின் அரபு நாடுகள் வால்கள் இப்போதும் இருப்பது மன்னர் இராச்சியங்களாக) சிறிய உதாரணம் ஈரானில் பெண்கள் வாகனம் ஓடலாம் என்பது 1979 யிலேயே கொண்டு வரப்பட்டு அனுமதிக்க படுகிறது. அமெரிக்காவின் வாலான சவூதியில் 2018 இல் இருந்தே குறியீடாக அனுமதிக்கப்படுகிறது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஆம், (எண்ணெய், இயற்கை எரிவாயு) போன்ற வளங்கள் ஒரு முக்கிய பரிமாணம், குறிப்பாக சீனாவுக்கு அது கிடைப்பது, us / மேற்கின் கட்டுப்பாட்டில் இல்லாதது. முன்பு சொன்னது போல, இரான் சீனாவுக்கு இடையே நேரடியான சரக்கு புகையிரத சேவை. எண்ணெய் வழங்குவதில் பாரிய கடற்கலங்களுக்கு முற்றிலும்ஒப்பானதாக இப்போது இல்லாவிட்டாலும், புகையிரத தொழில்நுட்பத்தில் நடந்து வரும் மாற்றத்தால் அடுத்த 5-10 ஆண்டுகளில் புகையிரத்தே சேவை சிலவேளைளில் கடற்கலன்களை விட கொள்ளவு விநியோக வினைத்திறன் கூட, மற்றும் விலை , நேரமும் குறைவாக (இப்போதே 15 நாட்களே எடுக்கிறது முழுவதும் நிரம்பிய நிலையில் சீன - ஈரான் சரக்கு புகையிரத சேவை. பாரிய கடற்கலம் எடுப்பது 30 - 40 நாட்கள், அத்துடன் கடலில் ஆபத்தும் கூட)
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இரான் ஏன் தற்கொலை, அதுவும் சண்டை இல்லாமல் செய்வ வேண்டும் மேட்ற்கு / உச சொல்வது இரான் அணுத்துறையை கைவிட வேண்டும் - அப்படி கைவிட்ட பின் மேட்ற்கு ஏமாற்ற்றாது என்பதற்கு எந்த ஒரு இடமும் இல்லை (ஏமாற்றுவதே திட்டம்), அணுத்துறை இல்லை என்றபடியால் உள்ளே என்றது இன்னும் வசதி us, மேற்கிடம். (பொதுவாக இங்கே இதை சொல்லி இருந்தேன், இப்படியான வ்விடயங்களில் இனிமேல் ஒருவரும் மேற்குடன் ஒப்பந்தம் செய்யமாட்டார்கள் (செய்வது மடைத்தனம்). மரபு வழி ஏவுகணைகளை கூட கைவிட வேண்டும் என்கிறது. வேறு நாடுகளில் உள்ள அந்தந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு இருக்க கூடாது. இது நான் முதலில் சொன்னதே - இஸ்ரேல் எ மத்தியகிழக்கில் நடப்பதை தீர்மானிக்க வேண்டும், அதாவது hegemon, பிராந்திய தாதா. 8 மில்லியன் உள்ள இஸ்ரேல் இடம், ஆகக்குறைந்தது, விவிலியப்படி, யூதரை விடுவித்த சைரஸ் இராச்சியத்தின் (அதனால் தான் இப்போதாவது இஸ்ரேல் க்கு நாடு உள்ளது) தொடர்சியான 90 மில்லியன் இரான் இஸ்ரேல் இன் சொல்ல கேட்க வேண்டும் ஈரான் இந்த இப்போதைய ஆட்சி ஷா இன் ஆட்சியுடன் உடம உடன் ஒப்பிடும் பொது எவ்வளவோ மேல். ஷா இன் ஆட்சி , கொலையால் ஆட்சிக்குக்கு என்று cia ல் பயிற்றப்பட்ட SAVAK என்னும் இரகசிய போலீசால் கொலைகளே கொண்டே ஆட்சி. (அதனால் தான் ஷா இன் ஆட்சியை மக்கள் புரட்சியாக தூக்கி எறியப்பட்டு, ஆயதொல்லா கொமெய்னி இஸ்லாமிய அரசாங்கத்தை கொண்டுந்தார்) இங்கே சிலருக்கு வரலாறு தெரியாமல், இரானை பற்றி கதைப்பது, அல்லது வரலாற்று அம்சங்களைவேறு விடயங்களுடன் போட்டு குழப்புவது. (பின் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது). Youtube இல் விடயம் இருக்கிறது எங்கே என்று தெரிந்தால். இதன் மூல காரணத்தை இந்தபேட்டி சொல்கிறது ( அனால் 99% இப்படியானது மிகவும் சலிப்பு. ஏனெனில் விளாசல் இல்லை)
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இது பல பரிமாணங்கள் உள்ள பிரச்சனை. ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கு நெருக்கி விட்டது என்பது திசைதிருப்பும் பொய். உண்மையில் நோக்கம், இரான் அரசாங்க அமைப்பை மாற்றுவது, ஆகப் பிந்தியதும், முந்தியதும், இந்தோ பசிபிக், அதை ஒத்த நவீன பட்டுப் பாதையும். (இதை வேறு திரியில் படம் போடு காட்டினால் கூட பூகோள ராஜதந்திரம் என்னவென்று கேட்பவர்களும் இங்கே இருக்கிறர்கள், மற்றவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கொக்கு மண்ணுக்குள் தலையை புதைத்த கதையாக) கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முதல் தான் சீனாவில் இருந்து கசக்ஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஊடக, நேரடியாக ஈரானுக்கு சரக்கு புகையிரத பாதை அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது உள்ளது. (அமெரிக்கா / மேற்குக்கு சீன பொருளாதர தளத்தில் மட்டும் வைத்து, வவன்முறை பலத்தையும் சேர்த்து அடித்தது போல அடி. us ஆல் தாங்க முடியாமல் இருக்கிறது, ஏனெனில் கடல் வழியால் தடுத்தால் தரைவழி இப்பொது உள்ளது. மற்றும் பொருளாதார தடை என்று அமெரிக்கா வாலாட்ட முடியாது) எனவே, இப்பொது இரான் அணு ஆயுதம் என்ற போர்வை எடுக்கப்பட்டு இருக்கிறது, ஈரானில் உள்ள அரசாங்கத்தை அகற்றுவதற்கு. (டிரம்ப் சும்மா வாய்ச்சவடாலுக்கு சொன்னதே, அவரின் தேசிய புலனாய்வு director சொன்னன இரான் அணுஆயுதத்தை தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு மேல் தேவை என்றதை தான் கேட்கவில்லை என்று. எந்த அதிபராவது அப்படி இருந்தாலும் சொல்லமாட்டார், Trump இன் வாயால் விளாசும் போக்கால் வெளிவந்து உள்ளது. ஆகவே, ஈரான் அணு ஆயுதம் என்ற பிரச்சனை மட்டும் இப்போதைய தாக்குதல் முனைப்பில் மூல காரணம் அல்ல) இதன் மறுவளம், அமெரிக்காவின், இஸ்ரேல் இன் அந்த இடத்தில உள்ள ஈரான் அந்த பிராந்திய விடயங்களில் தங்களை மீறக்கூடாத நிலையில் ஈரான் இருக்க வேண்டும் என்ற கொள்கையின் விளைவு. அதுக்குதான் இஸ்ரயேலிடம் மாத்திரம் அணுஆயுதம், அமெரிக்காவின் கொள்கை இஸ்ரேல் ஏ எப்போதும் இராணுவ / பல மேலாண்மை கொண்டு இருக்க வேண்டும் என்பது (இதை QME என்று அமெரிக்கா சொல்கிறது, இஸ்ரேல் qualitative military edge எப்போதும் கொண்டு இருக்க வேண்டும் என்று) அத்துடன் இஸ்ரேல் இன் zionist சிந்தனையும் - அந்த பிராந்தியத்தில் தாம் சொல்வதே நடக்க வேண்டும், மற்ற நாடுகள், இனமாக அரபுகள், persians கதைக்க, எதிர்க்க கூடாது என்ற கொள்கை. (அமெரிக்காவின் பொம்மையான ஷாவின் ஆட்சியில் கூட, ஈரானுக்கு அணு சக்தியை வெளியில் இருந்து, US ஏ சகல கட்டுமானக்கனலை வழங்கும், எரிபொருளை வழங்கும், மற்றும் பாவிக்கப்பட்ட அணு எரிபொருளின் பக்க விளைவன புளுடோனியம் கூட ஈரானில் இருந்து அகற்றப்படும் என்பது. ஷா கூட அதை ஏற்கவில்லை. ) ஆகவே, ஈரான் அணு துறையை வைத்து இருக்க கூடாது என்று அமெரிக்கா / மேற்கு, இஸ்ரேல் நாண்டு பிடிப்பது ஈரானில் உள்ள அரசாங்களால் அல்ல (இங்குள்ள சிலரின் விளக்கப்படி ஈரானில் இப்பொது ஆட்சியில் இருக்கும் முல்லாக்களால் அல்ல) US, மேற்கின் நடத்தையால், முதலில் செய்த JCPOA ஐ அமெரிக்கா குழப்ப, eu உம் அதாய் எதிர்க்காமல் வேறு பக்கம் பார்வையை திருப்பி கொண்டு நின்றது, இறுதியாக கூட விபரங்கள் பற்றிய பேச்சுவார்த்தைக்கு 2 நாள் இருக்கும் போது இரானின் கவ்வனத்தை திருப்பும் சந்தர்ப்பமாக பாவித்து தாக்குதல் நடத்தியது, அதை முற்றாக அமெரிக்கா அறிந்து ஆமோதித்து என்பது போண்றவைகளும், எந்தவொரு ஒப்பந்தமும், treaty என்றால் கூட சாத்தியம் இல்லாத நிலைக்கு வந்துள்ளது. தாக்குதலை பொறுத்தவரை, இஸ்ரேல், us, மேற்கு முதலில் தந்திரோபாய அடிப்படையில் இரானை கணிசமாக நிலைகுலைய வைத்து இருந்தாலும், 24 மணிநேரத்துக்குள் இரான் சுதாகரித்து மீண்டதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம், ஈரனின் அரச, அரசாங்க, படை அமைப்பை மேற்கு, us க்கு இப்போதும் குழப்பமாகவே இருக்கிறது. (மறுவளமாக, அமெரிக்கா வேறு நாடடு படைகளுக்கு உதவி, பயிற்றசை கொடுப்பது, அந்தா படைகளில் பரவி, விரவி அறிவத மூலம் உத்தியோகப்பற்றற்ற செல்வாக்கை உருவாக்குவதுக்கு. ஈரானில், எந்த ஒரு குறித்த வெளிச்சக்தி உதவி இன்றி அதன் படை பலத்தை காட்டி எழுப்பி வைத்து இருக்கிறது, புலிகளை போல, இது அமெரிக்காவுக்கு மூலையில் இருந்து குதி வரை குத்திக் கொண்டு இருக்கிறது) கேந்திர அடிப்படையில் அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கு இதில் மாட்டுப்பட்டு உள்ளது. (இதன் அடிப்படை காரணம் சீன, ரஷ்யா என்ற சகதியில் மறுவளத்தில் போட்டியாக இருப்பதால்) மாட்டுப்பட்டதன் ஒரு காரணம் பகுதியாக டிரம்ப் இன் வாயால். சீனா, ருசியா வெளியில் சொல்வதை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாது. (அவை US ஐ மாட்டிவிட்டு, பின் இரானுக்கு என்ன உதவி செய்யலாம் என்பதை பற்றியே சிந்திக்கும் சந்தர்ப்பம் கூட) ( சீனாவை பற்றி இவிடயங்களில் அறிவதற்கு, முன்பும் இங்கு சொல்லி இருக்கிறேன்.சீன அரசியல், ராஜதந்திர, இராணுவ சிந்தனையாளர் Sun Zi (ஆங்கிலத்தில் Sun Tzu , காலம் கி.மு 600 - 400) எழுதிய The Art of War என்பதை வாசித்து அறியலாம். (இணையத்தில் பல இடங்களில் இருக்கிறது) )
-
11 வயதில் மதகுரு, மன்னருக்கு எதிராக கலகம் - இரானின் உச்ச தலைவர் காமனெயி குறித்து அறியப்படாத தகவல்கள்
ஹாமெனி , 12ம் கிளை ஷியா இஸ்லாம் இல் ஒரு (மத) தலைவர் (Marja என்ற (அரபி) சொல்லால் இந்த தலைவர்களை குறித்து அழைப்பது. அதியுயர் மத தலைவர் என்பது கருத்து) இப்படி பல மத தலைவர்கள் (Marja) 12 ம் கிளை ஷியா இஸ்லாமில் இருக்கிறார்கள். இவர்கள் ஒவொருவரின் இஸ்லாம் கருத்துருவாக்கமும் ஒன்றில் இருந்து ஒன்று சிறியது தொடக்கம் மிகப்பெரிய வேறுபாடுகளை கொண்டது. இந்த Marja க்கள் இராக்கில் இருக்கிறார்கள், சிரியாவிலும் இருக்க சந்தர்ப்பம் இருக்கிறது. காஸ்மீரில் கூட முன்பு இருந்து இருக்கலாம், ஏனெனில் காஷ்மீர் ஷியா இஸ்லாமின் செல்வாக்கு பரவி, ஆழமாக இருந்தது, இப்பொது அந்த அளவு இல்லை. சியா இஸ்லம்மில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒத்துவரும் தலைவரை ( Marja) பின்பற்றலாம். ஆனால் ஹாமெனி யை மிகப்பெரும்பான்மை ஷியா பின்பற்றுவதன் காரணம், ஒப்பிஈட்டளவில் நவீனத்துவதையும், தாராளப்போக்கையும் ஹாமெனி போதிப்பதால்.
-
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்
அஞ்சலிகள்
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இப்போது நடக்கும் இஸ்ரேல் - ஈரான் சண்டைகூட, அது சர்வதேச சட்டம், மற்றும் ஐ.நா சாசனத்தின் படி சட்டவிரோதம் என்றாலும், NPT treaty ஐ இரான் மீறிவிட்டது என்ற ஒரு பகுதி அடிப்படையிலும். (அதாவது ஒரு கூட்டு (மேற்கு)அரசுகள் இன்னொரு அரசின் மீது படைபலத்தை இஸ்ரேல் வழியாக பிரயோகிப்பது, treaty ஐ வலோற்றகாரமாக வேறு ஒரு அரசு (ஈரான்) மீது சுமத்துவதற்கு) ஈரானுடன் 2015 இல் JCPOA என்ற ஒப்பந்தம், பாதுகாப்பு சபை 5 நிரந்தர உறுப்பினரும், ஜெர்மனியும் செய்த ஒப்பந்தம் treaty அல்ல. ஏனெனில் , அது முழு அரசுகளாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை (அதாவது எந்த அரசாலும் ratify பண்ணப்படவில்லை).
-
கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
இப்படி சொன்னால் தமிழ்நாட்டைத் தான் பரந்த, சர்வதேச தொல்லியல் சமூகம் தவறான கண்ணோடத்தில் பார்க்கும. இந்திய தொல்லியல் துறை, தொல்லியல் துறை சார் விடயங்களை கேட்க, தமிழ்நாடு அரசியல் கதைப்பது. இந்திய அஅமைச்சர் கூட, விஞ்ஞான பூர்வ தன்மை அல்லது ஆதாரங்கள் போதாது (உண்மையில் அவருக்கு இந்திய தொல்லியல் துரையின் அமைச்சர் மட்டத்தில் அறிவுறுத்தல் ) என்று கருத்து சாரப் பட துறை சார் சமபந்தமாகவே சொல்லி இருந்தார். அப்படி இல்லை போதிய அளவு ஆதாரம் இருக்கிறது என தமிழ் நாடு தொல்லியல் துறை துறைசார் மதிப்பீ ட்டை கொண்டு இருக்குமாயின், வேறு சர்வதேச துறை சார் நிபுணத்துவத்தை நாடி இருக்கிறோம் அல்லது அதை போன்ற வேறு எதாவது துறை சார் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
இதில் முக்கிய பிரச்சனை தமிழ்நாடு (தொல்லியல் துறை) நிலைப்பாட்டை அறிவிக்காதது. அந்த இடத்தில், பாலகிருஷ்ணன் போன்றோர் அதை அரசியல் ஆக்க முயன்றது. அவரின் நிலையில் அதை செய்து இருக்க கூடாது. தமிழ்நாடு ஒரு போதும் எதிர்பார்க்காத, ஆனால் சர்வசாதரணமாக சர்வதேச தொல்லியல் ஆய்வில் நடக்கும் விடயம். இந்திய தொல்லியல் துறை சர்வதேச தொல்லியல் விதிமுறைகளை பின்பற்றுகிறது. (நீங்கள் சொல்லும் தமிழ்நாட்டுக்கு தெரியும் என்றால், ஏன் இந்த நிலை?).
-
மீண்ட ருவாண்டாவும், மீளாத இலங்கையும்
சிங்களம் இனப்படுகொலை செய்தது, ஐ.நா பாதுகாப்பு சபையில் சபை இனப்படுகொலை பாதுகாப்பு சபையில் மேற்கு கொண்டு வந்த இனப்படுகொலை பாதுகாப்பு நீக்கப்பட்ட தீர்மானத்தின் கீழ். அதாவது இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசை குற்றம் சாட்ட முடியாது. இதனால் தான் (கள்ள) மேற்கு கிள்ளி விளையாடும் மனித உரிமை (கள்ள) விளையாட்டை சோடினைக்கு செய்வது.
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
அது தான் சொல்கிறேன், மொழியியல், எழுத்தியல் போன்ற ஆய்வாளரை தொல்லியலுக்கு பொறுப்பாக நியமிக்க, அந்த மொழியியல், எழுத்தியல் தான் தொல்லியல் என்று, மொழியியல், எழுத்தியல் ஆய்வாளரை வசைபாடுபவர்ளுக்கு, அரங்கு ஏற்படுத்தி கொடுத்தது யார்? திமுக. துறை சார் தொல்லியல் ஆய்வாளரை பொறுப்பாக நியமித்து இருந்தால், இதுக்கு இடம் இல்லை / குறைவு. நான் சொல்லியதே (கிட்டத்தட்ட அதை போல) நடத்தது என்பதை, இருபக்கமும் எவ்வாறு அணுகியது என்பதை பொதுவெளிக்கு அறிவித்ததில் இருந்து வெளிப்படையாக தெரிவது. கவனிக்காதது அவரவரின் பிரச்சனை. அமரநாத்தை மாறி, மாறி, விட்டு, விட்டு நியமித்தாலும், இறுதியில் ஆய்வின் அறிக்கை வந்துள்ளது தானே. அதிலே தானே கேள்விகள். அமரநாத்தை (அல்லது அவரை போன்ற நிபுணத்துவம் உள்ள ) பொதுவாக தொடர்ச்சியாக ஒருமாநிலத்துக்கு நியமிக்க முடியாது. ஏனெனில் தொல்லியல் துறையில் எந்த நாட்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பது மிகப் பெரிய குறைபாடு, அமெரிக்காவில் கூட. இந்தியாவில் (அதை போன்ற பெரிய நிலப்பரப்பு நாடுகளில்) ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் தொல்பொருள் ஆய்வு நடப்பது, எனவே எது மிக கூட வாய்ப்பாக தெரிகிறது என்பதை பொறுத்து தான் நியமனம். இப்படியே (சர்வதே) தொல்லிய துறைகள் குறிப்பிட்ட நாடு உடன், குறித்த capacity இல் சேர்ந்து ஆய்வு செய்யும் போதும் நடப்பது. இந்திய தொல்லியல் துறை ஒவொரு மாநிலத்துக்கும், (சர்வதேச) தொல்லியல் ஆய்வு நடப்பதை போலவே செயற்படுகிறது, ஏனெனில் பெரிய நிலப்பரப்பு. எல்லாவற்றிலும் அடிப்படை பிரசனை நிபுணத்துவம், அனுபவம் பெற்றவர்கள் என்பவ்வர்களை விரல்விட்டு எண்ணலாம். ஆக குறைந்தது இந்த விடயத்தில், தமிழ் நாடு அதிர்ச்சியான ஆச்சரியம் அடைந்தது. தமிழ்நாடு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பியது. தமிழ்நாடு சொல்வதில் இருந்து தெரிவது. (தமிழ்நாடு நம்பியதுக்கு ரொமிலா தபர் காரணமாக இருக்கலாம். அவர் சொல்லியது தமிழ் நாடு இலக்கியங்களில் தங்கி இராது, துறைசார் (தொல்லியல்) ஆய்வை கீழடியில் செய்து உள்ளது என்று. அப்படி நடந்து இருந்தால் தமிழ்நாட்டுக்கு தெரியாது என்பதே அர்த்தம்) எனவே தொல்லியல் துறை அரங்கேறுவது தமிழ்நாட்டுக்கு தெரியாது என்பதே அடையக் கூடிய முடிவு. அதை அரசியல் ஆகிக் கொண்டு இருக்கும் வேளை, இதை உணர்ந்த இந்திய தொல்லியல் துறை, கேட்கப்பட்டது அரசியல் அல்ல, துறைசார் சம்பந்தமான விடயம் என்பதை அறிக்கை விட்டு தெளிவு படுத்தியது. கேட்கப்படத்துக்கு, பாலகிருஷ்ணனின் பதில் அரசியல் ஆக இருந்தது, எவரோ இந்த கீழடி ஆய்வு அறிக்கை வெளிவருவதை விரும்பவில்லை என்று. குறிப்பு: (தொல்லியலில் இவ்வளவு விஞ்ஞானம் இருந்த்தும் எம்மவர்கள் அல்லது வேறு நாடுகளிலோ, அது அவ்வளவு கவர்ச்சி இல்லை. (மிக) கூடிய பரந்த அறிவும் (விஞ்ஞானம், மருத்துவம், சமூக விஞ்ஞானம், humanities, கணிதமும்), திறமையும் வேண்டிய துறையில், மிக குறைந்த சம்பளம், அத்துடன் புழுதியில், கணிசமான சந்தர்ப்பங்களில் இரவு வேலை, வேலையும் ஏற்ற இறக்கம் மிக கூட. மறுவளமாக, எமது / தென்னாசிய / ஏன் மேற்கு சமூகத்தில் கூட தொல்லியல் என்றால் தோண்டுதல் என்பதே. அப்படி இருப்பவரை எவராவதும் இப்போதும் கணக்கில் எடுப்பது இல்லை. தொல்லியல் கிட்டத்தட்ட thankless career. எனவே ஒருவரையும் குறை சொல்லவும் முடியாது தொல்லியலை தொழிலாக எடுக்காததற்கு. ஆனால், தொல்லியலில் BSc செய்தவர்களுக்கு பலவேறு துறைகள் கதவை திறக்கும்.)
-
அறிவரண் - பொட்டம்மான் பற்றிய பொத்தகம்
இந்த நூலுக்கு சரியான தலைப்பு. "பொட்டுக் குவிக்கூர்மை நுட்ப மதி அரண்" பொட்டு செய்ததும் அதுவே. இருந்த அறிவை கொண்டு, சிந்தினையை (பொட்டைப் போல) குவித்து மதி நுட்பமாக செய்தது. இருந்த அறிவை கொண்டு சிந்தினையை (பொட்டைப் போல) குவித்து மதி நுட்பமாக செய்தது. இருந்த அறிவை கொண்டு, சிந்தித்து செய்தது. (அந்த நேரத்தில், அந்த வயதில் பொட்டு ஈடுபட்ட விடயங்களில் அறிவு விருத்திக்கு இடம் / காலம் மிககுறைவு). (அந்த நேரத்தில் பரந்த , ஆழ்ந்த அறிவை கொண்டு இருந்தது ராதா).
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
ஐராவதம் மகாதேவனோ, பாலகிருஷ்ணனோ பயிற்றப்பட்ட, அனுபவப்பட்ட துறைசார் தொல்லியல் ஆய்வாளர்கள் அல்ல. ஐராவதம் மகாதேவன் மொழியியல், எழுத்தியல் (epigraphy) ஆய்வாளர். அதில் தான் அவர் தமிழ் பிராமி பற்றிய ஆய்வு. வேறுபடுத்தியது அசோக பிராமியில் இருந்து. (திஸ்ஸமகராகமவில் கண்டெடுத்து (பின் சிங்களத்தால் காணாமல் ஆக்கப்பட்ட) கல்லில் இருந்தது தமிழ் பிராமி என்று அறிந்தது மகாதேவன் குறிப்பில் இருந்து தான்) இவை தொல்லியல் ஆதாரத்தின் ஒவ்வோரு பகுதியாக இருக்கலாம் அல்லது அப்படி இல்லாது விடலாம். அனால் இப்போதைய தொல்லியல் துறை மிகவும் சிக்கலானது. forensic archaeology ஆல். அத்துடன் பொதுவாக மானிடவியலும் (குறிப்பாக biological anthropology) உள்ளடக்கம், forensic anthropology ஆல். சில உப விஞ்ஞான (/மருத்துவ) துறையும் (உ.ம். anthropometry, osteology, metallurgy, ecology போன்றவை) தொல்லியல் துறைக்குள் வரும். தொல்லியல் துறை இப்போது விஞ்ஞான பக்கம் சாய்ந்த, interdisciplinary, multi-disciplinary துறை. எனவே துறைசார் பயிற்சியும், அனுபவமும் இல்லை என்றால், அப்படி துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களால் இலகுவாக நிராகரிக்கலாம், அதுவும் இந்திய தொல்லியல் துறை தமிழரின் நாகரிகத்துக்கு வரும் போது. ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது, இந்த தொல்லியல் ஆய்வு செய்தவர்கள் எங்கே?
-
விரட்டியதால் வந்த விபரீதம்: குழியில் விழுந்த புலி..!
புலியின் வேகத்துக்கு அது தாவமுடியாத ஆழம் உள்ள குழியில் விழுந்தால், அநேகமாக கால்கள் சுளுக்கி , ஈய்ந்து, முறிந்தது காரணமாக இருக்கலாம் புலியால் பலமாக நாயை ஒரு இடத்தில் குத்திவைப்பட்டது போல காலால் அழுத்தி பிடித்து கொண்டு வாயால் கிழிக்க முடியாமல் முடியாமல் போனதற்கு. ஏன் புலி படுத்து இருக்கிறது?