Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. சூலத்தோடு இருப்பது ஐயர். சாமியோ, ஆசாமியோ தேர் இழுக்கும் போது பக்கத்தில் ஐயர் இருக்க வேணும். அவர் வாறது போறதுக்கு எல்லாம் கணக்கிருக்கு
  2. ‘மன்னிப்பு’ என்ற சொல் ஒன்றை விட்டிருக்கிறார் ஒன்று விட்ட தாத்தா. இது குடும்பத்துக்குச் சரி. அரசியலுக்குச் சரிவராது. கல்லெடுத்து அடிச்சிருபாங்கள். சம்பந்தருக்கும் அது தெரிஞ்சிருக்கும். ‘சம்பந்தர் காலமானார்’ திரி உள்ள பக்கமே இப்ப நான் போவதில்லை. பயமாயிருக்கு.
  3. யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலத்தின் தலைநகரில் இரண்டு பிள்ளையார் கோவில்களும் ஒரு முருகன் கோவிலும் இருக்கின்றன. முத்தி விநாயகரோ? சித்தி விநாயகரோ? பிள்ளையார் கோவில்களுக்கு என்ன என்ன பெயர் வைத்தார்கள் என்று யாருமே பெரிதாகக் கவனிப்பதில்லை. ஒன்றை புலிப் பிள்ளையார் கோவில், மற்றையதை புளொட் பிள்ளையார் கோவில் என்றால் போதும். அடையாளம் கண்டுவிடலாம். மழை பெய்து, வெள்ளம் வந்து கிணற்று நீரோடு கலப்பது போல, 2009க்குப் பின்னர் நாட்டில் இருந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து வந்த சிலரோடு, ஏற்கனவே பொறுப்பாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சில அதிருப்தியாளர்களும் கலந்து கொள்ளப் பிறந்ததுதான் ஶ்ரீ பால முருகன் கோவில். 2023 இல் உருவான முருகனுக்கு இந்த வருடம் யூனில் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. தேர் இல்லாமல் திருவிழா ஏது? முருகன் கோவில் நிர்வாகிகள் அலசி ஆராய்ந்து ஒரு பழைய ‘காய்’யைப் போய்ப் பார்த்தார்கள். அவருடன் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. தேர் செய்வதற்கு அவர் 20,000 யூரோக்களை தூக்கிக் கொடுத்து விட்டார். தேரும் செய்தாயிற்று. திருவிழாவும் தொடங்கியாயிற்று. தேர்த்திருவிழாவுக்கு முதல்நாள், தேர் செய்ய உதவிய அன்பருக்கு நன்றி செலுத்த நிர்வாகிகள் முடிவெடுத்தார்கள். சாமியை விட சாமி அமரத் தேர் தந்த வள்ளல் பெரியவர் அல்லவா? அவர் இல்லாவிட்டால் சாமி வலம் வரத் தேரேது? சாமிக்கு முந்தி அவரைத் தேரில் அமர்த்தி வெள்ளோட்டம் செய்தார்கள். ஆள் கூடி அவரைத் தேரில் வைத்து இழுத்து மகிழ்ந்தார்கள். திருவிழா முடிந்ததா? இப்பொழுது விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. “சாமி இருக்கிற தேரிலை மனுசனை வைச்சு இழுக்கலாமோ, அதுவும் சாமிக்கு முந்தி?” “அவங்களுக்கு அறிவில்லாமல் இருக்கலாம், தேரிலை ஏறி இருக்கிறவனுக்கு அறிவில்லையோ?” “20,000 குடுத்து வருசத்துக்கு ஒரு தடவை மட்டும் இழுக்கிறதுக்கு தேரைச் செய்யிறாங்களே, இவங்களை என்ன சொல்ல?” “இந்தக் காசை நாட்டிலை கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிற யாருக்காவது குடுத்திருக்கலாம்” “இந்தக் காசுக்கு நல்ல கார் ஒன்றை செக்கன் ஹாண்டா வாங்கி வருசக் கணக்காக ஓடி இருக்கலாம்” “சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாம் பூசுவாங்களோ?” “இப்பத்தான் கிட்டடியிலை வந்தவங்கள். எங்களை விட அவையளுக்கெல்லோ நாட்டு நிலமைகள் நல்லாத் தெரியோணும்” இப்படி இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன. பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்கு… அட அவரேதான்..
  4. எம்ஜிஆர், அதிமுக தொடங்கிய காலம், “இலங்கையில் தமிழ் மக்கள் சிங்களவர்களால் தாக்கப்படுகிறார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு எம்ஜிஆர் சொன்ன பதில், “எனக்கு இலங்கையில் தமிழ் இரசிகர்கள் மட்டுமல்ல சிங்கள இரசிகர்களும் இருக்கிறார்கள்” என்பதே. கருணாநிதி சும்மா இருப்பாரா? ‘மலையாளி’ என எம்ஜிஆரை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார். ஆட்சிக்கு வந்த பின்னர் மெது மெதுவாக நகர்ந்து தமிழ் விடுதலை இயக்கத்தை தேடி வரவழைத்து பேசி புகைப்படம் எடுத்து, தமிழீழப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நாலு கோடி கொடுக்கிறது என அறிவித்தார். “யோவ், இருக்கிற பிரச்சினைகள் காணாது என்று நீ வேறை.. இது வெளிநாட்டு விவகாரம். மத்திய அரசின் வேலை. மானில அரசின் வேலையை மட்டும் நீ பார் என” மத்திய அரசு கோபத்துடன் எச்சரிக்க, தனது கட்சிப் பணத்தில் நாலு கோடியை எடுத்துக் கொடுத்து, “இது புனர் வாழ்வுக்கு, போராட்டத்துக்கு அல்ல” என்று சொல்லி தனது அறியாமையைகளை மறைத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இப்பொழுது தளபதி, ‘நீட்’ விவகாரம் ‘ஒன்றிய அரசு’ என மேடையில் அவிழ்த்து விட வைச்சுக் காய்ச்சிக் கொண்டிருக்கிறாங்கள். நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்றில்லை, குறைந்த பட்சம் அரசியல் பற்றி ‘அனா, ஆவண்ணா’ ஆவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா? “ஸ்ஸபா இப்பவே கண்ணைக் கட்டுதே” என்ற நிலைதான் தளபதிக்கு இப்ப வந்திருக்கும். இன்னும் நிறைய வரும். பார்ப்போம். ஊழலை தமிழ்நாட்டில் இருந்து பிரிக்க முடியாது. செந்தமிழன் வந்தாலும் சரி, தளபதி வந்தாலும் சரி இதுதான் நிலமை. நீங்கள் சொன்னது போல் ‘சிறு பிள்ளைகளின் மண்சோறு விளையாட்டு’
  5. ரொம்ப அப்பாவியாக இருக்கிறீங்களே? வீட்டில் எப்படி காலம் தள்ளுகிறீர்கள்?
  6. பணமே கொடுக்காமல் பிரச்சினை முடிந்து விட்டதுதானே. ஏன் ஊதிப் பெருசாக்கிறாங்கள்?
  7. ஏனுங்க உங்களுக்கு ‘ட’க்கு மேலே குற்றுப் போடப் பஞ்சியா? விருப்பமில்லையா? அல்லது மரியாதை நிமித்தம் விட்டிட்டீங்களா?
  8. அவருக்குத் தெரியாமல் அவரது கையில் சிங்கக்கொடியைக் கொடுத்தது போல், திருகோணமலையில் புலிக்கொடி என்று தெரியாமலே அந்தக் கொடியை அவர் ஏற்றி இருக்கலாம் என்றொரு வாதத்தையும் வைக்க முடியும் அல்லவா?
  9. ஒற்றுமையாக இருக்க மக்கள் தயாராகத்தான் இருந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் தலமைகள்தான் மக்களைப் பிரித்தார்கள் என்பதுதானே உண்மை. அடக்குமுறைக்குள்ளான மக்கள் தங்களுக்கான மீட்பாளர்களாக தலமைகளைத்தான் பார்த்தார்கள். உயிர், உறவு, உடமைகளைத் தந்தார்கள். ஏமாந்து போனார்கள். இன்னும் இன்னும் கீழே அடித்தளத்துக்குள் தள்ளப்பட்டு துன்பத்துக்குள் இருக்கிறார்கள். இனி எதுவுமே இல்லை இப்படித்தான் வாழ வேண்டும் என்று அந்த வாழ்க்கையை பழகிக் கொண்டார்கள். ஆக நாங்கள் தேடும் உண்மையான தலமை எங்கே இருக்கிறார். எப்பொழுது தன்னை வெளிக்காட்டுவார்? கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காண முடியவில்லையே. தனது சரியான கொள்கைகள், செயற்பாடுகளைக் கொண்டு மக்களை ஒருங்கிணைத்துச் செல்லக் கூடிய தலமைக்காக நானும் உங்களைப் போல் காத்திருக்கிறேன். அப்படி ஒரு நிலமை வந்தால் மக்கள் நிச்சயமாக ஒற்றுமையாக அணி அணியாக வருவார்கள்.
  10. 300 BCஇற்குப் பிறகு அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்ற கருத்துப்பட எழுதியிருக்கிறீர்கள். 1977இல் கட்சி,மதம், ஜாதி வேறுபாடுகள் இன்றி, ஜி.ஜி. பொன்னம்பலம், ஜே.வி. செல்வநாயகம் இருவரினதும் மறைவுகளின் போது ஈழத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்றதை நான் கண்டிருக்கின்றேன்.
  11. சிலந்தி, பல்லி என்று பலவற்றுக்கு வீட்டில் இடம் கொடுத்திருக்கிறீர்கள்.சாப்பாடு போட்டு அவைகளை வளர்க்கத் தேவையில்லை. உங்களுக்கும் செலவில்லை. இருந்திட்டுப் போகட்டுமே. சிலந்தி வலையை வாசிக்கும் போது. “சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்குதடா பலரை இங்கே பணிய வைக்க பணம்தான் வலையா உதவுதடா…” கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. உங்களுக்கு ஒன்று தெரியுமா? காலையில் முதலில் நான் தேடி வாசிப்பது உங்கள் குறுங்கதையைத்தான். உடன்பிறப்புக்களுக்கு கருணாநிதி நாள்தவறாமல் எழுதியது போல் ரசோதரனும் எழுத ஆசைப்படுகிறேன்.
  12. திருமணத்துக்கு வரவில்லை என்பதில் இருந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. பிறகு அவள் அழைத்தாள் என்பதற்காக அவளது வீட்டுக்குப் போயிருக்கிறார். போனவர் அதை அந்தரங்கமாகவே வைச்சிருந்திருக்கலாம். “டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை விளையாடுவோமா உள்ளே வில்லாளா …” பாட்டைப் போட்டிருப்பாளோ? ஆண்களுக்கு சில நேரம் முன் புத்தி வேலை செய்வதில்லைப் போலே.
  13. சிவாஜிலிங்கத்துக்கும் சூயிங்கம் வாங்கச் சொன்னீங்களா? சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். சீமான் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சிவாஜிலிங்கம் எதையோ வாயில் மென்று கொண்டிருந்தார். அநேகமாக அது சூயிங்கமாக இருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.