Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. ‘ஆப்பிள்’, ஆரஞ்சு’, ‘கம்பனி’ ,’ஆபிஸ் எண்டு உங்களையே அறியாமல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். அந்த மாப்பிள்ளை நீங்கள் இல்லை என்று நம்புகிறேன்
  2. அதுதானே பார்த்தன், ஒருநாளும் வராத சொர்ணமக்கா அண்டைக்கு கனகரின்ரை எட்டுக்கு வந்து, எட்டுப் படையலுக்குப் பக்கத்திலை கன நேரமாக ஏன் இருந்தவ எண்டு.
  3. அவர் சிந்தனை வாழ்க! இன்னும் சம்பந்தருக்கு எட்டு வைக்கவில்லை என்பதால், தொடர்ந்து ‘வைச்சு செய்யலாம்’ என்கிறீர்கள். எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம். உங்கள் முகம் தனியானது. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
  4. வல்லிபுரக் கோவில் குளம்தான் நான் ‘ஒல்லி’ கட்டி நீந்திப் பழகிய குளம். வெள்ளைக் களி மண் கலங்கி பச்சையாகவும் இல்லாமல் மஞ்சளாக இல்லாமலும் இருக்கும் தண்ணீர். அங்கே குளித்தால் கண்டிப்பாக கேணியில் தண்ணி அள்ளிக் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒருநாள் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது கரையில் ஒருவர் குந்தியிருந்நு கொண்டு கழுவிக் கொண்டிருந்தார். “என்னடா செய்யிறான்?” என்று நண்பனைக் கேட்டேன். “பக்கத்திலே பத்தை ஒன்று இருக்கு கவனிக்க இல்லையே? அங்கையிருந்துதான் வந்தவன்” என்றான். விழுந்தடித்து கரைக்கு வந்தேன். சமீபத்தில் ஊருக்குப் போன போது அந்தக் குளத்தைப் போய்ப்பார்த்தேன்
  5. நூல் என்ன? ஆசாமி கயிறு விட்டு கடலை போடக்க கூடிய ஆளெண்டு இன்னுமா தெரியேலை. “மச்சான் இதை ஒருக்கால் பிடிடா” எண்டு ஆலங்குழைக்கட்டை பக்கத்திலை இருக்கிறவனிற்றை நைஸா குடுத்திட்டு அண்ணாச்சி சுழட்ட ஆரம்பிச்சிருப்பார். சரோஜாதேவி எப்பிடி ‘மேக்கப்’ போடுறா எண்டு உன்னிப்பா கவனிக்கிற ஆள், லேசுப்பட்டவராக இருக்க வாய்ப்பில்லை
  6. தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும் சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவில்லை. நடைபெறும் தவறுகளைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் என்பதைத்தான் என்னால் பார்க்க முடிகிறது. சைவ சமயத்தை முன் நிறுத்தி மற்றவர்களை முட்டாள்களாக்கும் செயல்களைத்தான் எதிர்க்கிறார்கள். நேற்றுக் கூட ஒரு செய்தி வாசித்தேன். “கைத்தொலைபேசி, சமூக ஊடகங்களைப் பார்த்து உங்கள் கண்களில் கர்மா நிறைந்திருக்கும். உங்கள் கண்களின் கர்மாவைப் போக்க, தங்கத் தேர் இழுத்து, அதைப் பாருங்கள். கர்மா நீங்கி விடும். ஆலய நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றிருந்தது” இப்படியான மோசடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் தப்பில்லைத்தானே. சரி விடயத்துக்கு வருகிறேன் இல்லத்தில் உள்ள பெண்கள் குளிக்கும் இடத்தை நோக்கிப் பொருத்தப்பட்ட கமரா ஒரு நிகழ்வு, தராதரமற்ற நிலையில் இயங்கிய சிறுவர் இல்லங்களை மூட வேண்டும் என்பது இரண்டாவது செய்தி. நீங்கள் இரண்டையும் ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள். அல்லது யாரோ குழப்பி விட்டிருக்கிறார்கள். கமரா விடயம் நீதிமன்றம்வரை போய் விட்டது. அங்கேதான் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு நிறுவனத்தை நடாத்துவது ஒன்றும் சுலபமான விடயமல்ல. அங்கே ஏதாவது நிர்வாகச் சீர்கேடுகள், குளறுபடிகள் இருந்தால், பதில் சொல்ல வேண்டியவர் அதன் பொறுப்பாளர். “எனக்கு ஏதும் தெரியாது. யாரோ விசமிகள் செய்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போக முடியாது. “தவறு ஒன்று நடந்திருக்கிறது. இப்பொழுதுதான் எனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. உரிய நடவடிக்கைகள் எடுத்து, இனி வரும் காலங்களில் இப்படியான தரக்குறைவான நிகழ்வுகள் நடைபெறாது பார்த்துக் கொள்கிறோம்” என்பதுபோல் அறிக்கை விட்டு ஆவன செய்திருந்தால் பிரச்சனை முடிந்துவிடப் போகின்றது. அதை விடுத்து ‘அப்படி ஒரு பிரச்சனையே இல்லை. அது நாங்கள் இல்லை. நாங்கள் இவரின் வாரிசுகள். பலகாலங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்’ என்ற பாணியில் நிற்பது ஒரு நிறுவனத்திற்கோ, அதன் பொறுப்பாளருக்கோ அழகல்ல. ‘நான் நல்லவன். அப்பழுக்கற்றவன். நான் இவரது வாரிசு’ என்று சொல்வது எல்லாம் ஒருவர் தனது ஒழுக்கங்களுக்கு மேலாகப் போட்டுக் கொள்ளும் போர்வைகள். ‘கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு ….’ என்று சுண்டல் எழுதி இருந்தார். இந்த இரண்டு வரிகளுக்குப் பின்னால் கண்ணதாசன் இப்படி எழுதியிருக்கிறார். ‘காப்பாற்றச் சில பேர் இருந்து விட்டால் கள்ளர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி குணத்துக்குத் தேவை மன சாட்சி…’ சமூகத்தில் ஒரு தவறான பிரச்சனை நடந்தால், தட்டிக் கேட்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் எதிர்க் குரலாவது கொடுக்கலாம். அதுதான் நல்ல ஒரு சமுதாய வளர்ச்சிக்கு உதவும் உரமாக இருக்கும்.
  7. அது அடிக்க வந்த பொறுப்பாளர், காப்பாற்றி விடும் பொறுப்பாளர் ஜோடிதானே? 1966இல் வந்த படம். வீட்டில் அப்பா எதிர்த்தாலும் அம்மா அனுமதி தருகின்ற வயது. ஓரளவு உங்களது வயதை கணிக்க இந்தப் படம் உதவுகிறது.(திரும்ப திரையிட்ட போது பார்த்த படம் என்று சொல்லாமல் இருக்கும் மட்டும்) படத்தைப் பார்த்து லவ் பேர்ட்ஸ் என்று வாங்கினீர்கள். உங்களுக்கு வித்தவனுக்கே அது தெரிந்திருந்திருக்குமா? அல்லது ஆளைப் பார்த்து வித்தனா? யாரறிவர்? நல்ல நேரம், ஆட்டுக்கார அலமேலு, கோமாதா குலமாதா எல்லாம் பின்னாளில் வந்த திரைப்படங்கள் என்பதால் உங்கள் வீடும் தப்பியது, வீட்டில் இன்னொருவருக்கும் பிரச்சினை இல்லாமல் போயிற்று.
  8. கனக்க யோசிக்காதையுங்கோ Suvy. நாங்கள் அவரை ‘சடையர்’ என்று அழைப்போமா?
  9. அப்படி அல்ல Paanch. எங்களுக்குத் தெரிந்தவர் அங்கே நிற்கின்றார் என்பதற்காகத்தான் சேட்டுப் போட்டுக் கொண்டு ஒருவர் நிற்கின்றார் என்று யாழ் உறவுகளுக்கு அடையாளம் காட்டினேன். தவறாகப் புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.