Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. உங்களால் வீட்டிலே சந்தோசமாக இருக்க முடிகிறதா தமிழ் சிறி?
  2. நீண் காலமாகி விட்டது இந்தப் பாட்டைக் கேட்டு. ராஜசுலோசனாவோடு. அட நம்ம நம்பியார்
  3. Nunavilan புலிக்கொடியை வடிவமைத்தவர் வேறு ஒருவர். அதில் மாற்றங்கள் செய்தவர் ஓவியர் நடராசன் என்பதுதான் சரியாக இருக்கும்
  4. நகைச்சுவையைப் பார்தது சிரியுங்கள். பாட்டைக் கேட்டு அழுங்கள். “சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனிதஜாதி”
  5. கழுதைக்குப் பிறந்த பசங்கள் என்று பாலையா தன்னையே இரண்டு தடவைகள் குத்திக் காட்டுவது நகைச்சுவை. இதேபாணியில் ஒரு நகைச்சுவை பாடல் இருவர் உள்ளம் திரைப்படத்தில் இருக்கிறது. அதில் “அசட்டுப்பய பிள்ளை ஆராரோ” என்று எம்.ஆர்.ராதா தன்னையே குறிப்பிட்டு பாடுவதாக இருக்கும் இந்த நகைச்சுவை பகுதிக்குப் பின்னால் வரும் பாடல் என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் ஆழமானவை “இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா இருவிழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா சிதறிவரும் வார்த்தைகளில் தெரியவில்லையா சிந்தையிலே தெளிவுடையோர் யாருமில்லையா சிரிக்கச் சொன்னார் சிரித்தேன் பார்ககச் சொன்னார் பார்த்தேன்” நல்ல பாடல்கள் நகைச்சுவைகள் இருந்தும் கண்ணதாசனை கவலையுள்ள மனிதனாக்கிய படம்
  6. என்னுடய இளமைக் காலத்தில் காதலித்தலே ஒரு பாரதூரமான குற்றச் செயலாகப் பார்ககப் பட்டது. பெண்களுடன் பேசுவது பழகுவது எல்லாம் பிழை என்ற காலம் அது. என்னுள் எழுந்த பல காதல்கள் இதயத்துக்குள்ளேயே செத்துப் போய் ஏக்கப் பெருமூச்சாக வெளியேறிவிட்டன. Suvy, உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.
  7. நன்றி Suvy. இந்தப் பாடலும் சோகம்தன். அன்றைய காலங்களில் அழுகைப் படங்கள்தான் அநேகருக்குப் பிடிக்கும். அதுவும் காதலில் தோற்றுப் போன ஆண்களின் படப் பாடல்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. எங்கள் ஊரில் சென்றல் தியேட்டர் என்ற பெயரில் ஒரு சினிமா அரங்கு இருந்தது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் பங்குனி மாதத்தில் தேவதாஸ் படம் போடுவார்கள். பங்குனி கள்ளை ‘அடித்து’ விட்டு இரண்டாம் காட்சியில் சோகத்துடன் தேவதாஸ் படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த பெரிசுகளை அன்று நான் பார்ததிருக்கிறேன். ‘நான் தேடும் போது நீ ஓடலாமோ’ பாடும் ஆண்குரல் சோகத்துக்கு நன்றாக ஒத்துப் போகிறது. இதே இசையில் ஆனால் சந்தாசமாக ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு பாடலை ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல் “திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ”
  8. Suvy எங்கே. இருந்து இந்தப் பாடலை எடுத்தீர்கள்? எப்போதோ கேட்ட ஞாபகம் மட்டும் இருக்கிறது. பாடியவரைத் தெரியவில்லை. ஒரு சமயத்தில் கண்டசாலா போல் இருக்கிறது. இன்னொரு தடவை மோதியின் குரல் போல் தெரிகிறது. பாடியவர் யாராயிருந்தாலும் சோகத்தையும் ஏக்கத்தையும் கலந்து தரும் குரல்👍🏾
  9. பி.பீ. சிறீனிவாஸை விட ஏ.எம். ராஜவின் குரல் ஜெமினிக்குப் பொருத்தமானது என்பது என் கருத்து. இந்தப் பாடலைக் கேட்கும் போது “வானோரும் காணாத பேரின்பமே” என்று சொல்லிக் கொள்ளலாம்
  10. எனக்குப் பிடித்த பாடல்களில் இந்ததப் பாடல் முதன்மையானது. 2014இல் இந்தப் பாடலைப் பற்றி நான் எழுதியதை கீழே பதிகிறேன் பி. ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப் படம் சபாஸ் மீனா. 1958இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜாதேவி நடித்த ஒரு வெற்றிப் படம். சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம். இந்தப் படம் நகைச்சுவைப் படமானதால், சிவாஜி கணேசனை விட சந்திரபாபுவுக்குத்தான் படத்தில் அதிக வாய்ப்பு. இதனால் பி.ஆர் பந்துலுவுக்கு சிவாஜி கணேசனை திருப்திப் படுத்த வேண்டிய நிலை. எனவே சபாஸ் மீனா படத்துக்காக அவருக்கான ஒரு மெலடி நிறைந்த பாடல் உருவாகிறது.சிவாஜி கணேசனுக்கு குரல் கொடுப்பவர் டி. ஏ. மோதி. இவர் ஐம்பதுகளில் ஒரு சில பாடல்களைப் பாடி இருந்தாலும் கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோருடன் போட்டி போட்டு முன்னுக்கு வருவது முடியாமல் இருந்தது. அதிகமாகப் பேசப்படாத அவரால் பாடப் பட்ட இந்தப் பாடலுக்கு இணைந்து குரல் தருபவர் பி.சுசிலா.மழையில் நனைந்து கொண்டு காதலனும் காதலியும் பாடும் பாடல் காட்சியில் குதூகலத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னாரோ என்னவோ தேவைக்கு அதிகமாகவே சிவாஜி கணேசன் குதூகலத்தைக் காட்டி பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதில் நடித்த மாலினி பின்னர் சபாஸ் மாப்பிள்ளை திரைப் படத்தில் எம்ஜிஆருடன் நடித்திருந்தார். பிறகு திரையில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. வானம் சிந்தும் மாமழை எல்லாம் வானோர் தூவும் தேன்மலரோ? மேகம் யாவும் பேரொலியோடு மேளம் போலே முழங்குவதாலே கன்னல் மொழியே மின்னல் எல்லாம் விண்ணில் வாண வேடிக்கையோ? மண்ணில் பெருகும் வெள்ளம் போலே மனதில் பொங்கும் ப்ரேமையினாலே காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ...என்று கு.ம. பாலசுப்பிரமணியம் அவர்களது பாடல் வரிகள் மழை போல் அழகாக இருக்கும்.இவ்வளவு பெரும் மழையில் நனைந்து காதலர்கள் இப்படி மகிழ்ந்திருப்பது போன்ற காட்சிகள் பின்னாளில் திரைப் படங்களில் வந்ததா தெரியவில்லை. அப்படி வந்திருப்பின் இதுவே முன்னோடி.இதே மெட்டில் அதே ஆண்டு வெளிவந்த எங்கள் குடும்பம் பெரிது என்ற திரைப்படத்துக்கும் 'ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா..' பாடலை டி.ஜி. லிங்கப்பா இசை அமைத்திருப்பார். ஆனாலும் காணா இன்பம் கனிந்ததேனோ.. பாடலில் டி.ஏ.மோதியின் குரல் இனிமையும் பி.சுசிலாவின் கம்மிங்கும் சிவாஜி கணேசன் மாலினியின் நடிப்பும் பாடலுக்கான வரிகளும் அதற்கேற்ற இசையும் குறிப்பாக அந்த பெரு மழையும் அற்புதம்.மழை பிடிப்பதால் குடை பிடிக்காதவர்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போகும்.
  11. ஜீவனாம்சம் படத்தில் தொடங்கிய சிவகுமார் - லட்சுமி ஜோடிப் பொருத்தம் பல படங்களில் தொடர்ந்தது. அது கண்மணி ராஜாவிலும் தெரிகிறது பொதுவாக வெளிநாட்டவர்கள் கடற்கரையில் கோர்ட் சூட்டோடு உலாவருவதில்லை. ஆனால் தமிழ்ப்பட ஹீரோக்களுக்கு அது ஏனோ பிடிப்பதில்லை. நீண,ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கிறேன். பதிவுக்கு நன்றி Suvy
  12. ஆக, விழுந்தால்தான் வருடப்பிறப்பு என்கிறீர்கள்
  13. கண்ணதாசனின் இந்த வரிகளை பின்னாளில் ஆலங்குடி சோமு பயன்படுத்தியதாக ஒரு சர்ச்சை அப்போது வந்தது. ஜிக்கியின் குரலில் பாடல் கேட்க இனிமை. M.N..ராஜம், M.N.நம்பியார் இருவரது முதல் எழுத்துக்களை வைத்தும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்ததால் இருவரும் அண்ணன் தங்கை என்று நான் சிறுவனாக இருந்தபோது நினைத்திருந்தேன்.
  14. பிறந்த நாள் வாழ்த்து ராசவன்னியன்
  15. அப்படி என்ன ஏமாற்றம் உங்களுக்கு?
  16. மென்மையான குரல் மட்டுமல்ல மெலடியான பாடல்களுக்கும் பொருத்தமானது ஏ.எம்.ராஜாவின் குரல். தனது அமைதியான குரலால் பல உள்ளங்களில் புகுந்து இசையால் ஒரு ராஜ்ஜியம் அமைத்த ஏ.எம்.ராஜா திடீரென “ஓகோ என்தன் பேபி” என்று ஒரு துள்ளல் பாட்டைப் பாட அது அன்றைய இளைஞர்களை ஆட்டிப் படைத்து. இன்று எழுபது வயதுக்கு மேல் இருக்கும் அன்றைய இளைஞர்கள் இப்பொழுது இந்தப் பாடலைக் கேட்டால் போதும் அன்றைய காதல் நினைவுகளுக்குள் மூழ்கிப் போவார்கள். வீதியில் தங்களுக்கு விருப்பமான பெண்கள் போனால் சைக்கிளில் வரும் அன்றைய இளைஞர்களுக்கு பாட வருகின்றதோ இல்லையோ வாயில் இந்தப் பாடல் கண்டிப்பாக விசில் வடிவமாக (எங்கள் ஊரில் அதை ‘சீக்காய் அடிப்பது’ என்பர்கள்) வரும். “மாசிலா உன்மைக் காதலே”, “மயக்கும் மாலை பொழுதே”, “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்”என்று ஏ.எம்.ராஜா அன்று பாடிய பல மெலடிப் பாடல்கள் காலம் கடந்தும் வாழ்கின்றன. பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடலுக்கு நடிகை ஜமுனா பிடிக்கும் அபிநயம் சிரிக்கவைக்கும். ஆனால் பாடல் எவ்வளவு ரசிக்கப்பட்டது என்பதற்கு சீனா பெண்கள் பங்கு கொள்ளும் இந்த வீடியோ ஒரு சாட்சி A
  17. என்னாயிற்று? திடீரென 64 வருடங்கள் பின்னோக்கி? நீண்ட நாட்களுக்குப் பின் கேட்கிறேன். நன்றி Suvy
  18. சமீபத்தில் நஈ ன் பார்தத படத்தில் மிகவும் பிடித்தது காளிதாஸ். பரத்தின் நடிப்பு அருமை. விரல் விட்டு எண்ணக் கூடியளவு பாத்திரங்கள்தான் ஆனால் அத்தனை பேரும் சிறப்பு
  19. நீங்கள் இப்போ எங்கே நிற்கிறீர்கள்? டுபாயிலா? அல்லது சென்னையிலா?
  20. அன்றைய எழுச்சிப் பாடல் என்றால் முதலாவதாக இந்தப் பாடலைத்தான் சொல்லலாம்.குதிரைக் குளம்பொலி பின்னணியில் ஒலிக்க அதற்கேற்றால் போல் ரி.எம்.எஸ் குரல் கொண்டு பாட.. நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடல் இது. மன்னாதி மன்னன் திரைப்படம் பாரதிதாசன் எழுதிய சேரதாண்டவம் என்ற நாடகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கதை, வசனம், பாடல்கள் என்று கண்ணதாசன் இந்தப்படத்தில் கலக்கியிருப்பார். இந்தப் படத்தில் அஞ்சலி தேவிக்கு, “காவிரித் தாயே காவிரித் தாயே காதலன் விளையாட பூ விரித்தாயே” என்ற பாடல் இருக்கும் ஜமுனாராணி பாடிய அந்தப் பாடல் அப்பொழுது பெண்களின் பிரபல்யமான சோகப்பாடல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.