Everything posted by ஏராளன்
-
அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு
அம்பிட்டிய சமண ரத்ன தேரருக்கு பிடியாணை Published By: Digital Desk 1 16 Dec, 2025 | 11:35 AM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (15) நீதிமன்ற பிடியாணை பிறப்பித்து வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், எதிர்வரும் ஜனவரி 26 திகதி, குறித்த வழக்கை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் கருத்து வெளியிட்டபோது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என தெரிவித்தார். இதையடுத்து குறித்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழுள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் தேரரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. இந்தநிலையில் குறித்த வழக்கு கடந்த 8ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார் இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15ம் திகதி முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார். இந்த நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்று திங்கட்கிழமை 15ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொண்டபோது தேரர் ஆஜராகாத நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆஜராகி; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று ஆஜராக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றுள்ளதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்தார். இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடியாணை பிறப்பித்து அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/233493
-
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
19இன் கீழ் ஆசிய கிண்ண லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது Published By: Digital Desk 3 15 Dec, 2025 | 01:19 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 8 அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஏ குழு போட்டியில் கனிஷ்க் சௌஹானின் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் இந்தியா 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் அரை இறுதியில் விளையாடுவதை உறுதி செய்து கொண்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தை தனது ஆரம்பப் போட்டியில் வெற்றிகொண்ட இந்தியா, 4 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தானும் ஐக்கிய அரபு இராச்சியமும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்திய - பாகிஸ்தான் போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா இலகுவாக 90 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 46.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. இளம் அதிரடி நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி இப் போட்டியில் வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆரோன் ஜோரஜ், அயுஷ் மாத்ரே (38) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். இதனைத் தொடர்ந்து 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (113 - 4 விக்.) எனினும் ஆரோன் ஜோர்ஜ், கனிஷ்க் சௌஹான் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 60 ஒட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர். ஆரோன் ஜோர்ஜ் 85 ஓட்டங்களையும் கனிஷ்க் சௌஹான் 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அப்துல் ஷபிக் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் சய்யாம் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நிக்காப் ஷபிக் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 41.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தொல்வி அடைந்தது. ஹுசெய்பா அஹ்சான் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 9 பவுண்டறிகள் 2 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட அணித் தலைவர் பர்ஹான் ஸஹூர் (23), உஸ்மான் கான் (16) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் தீப்பேஷ் தேவேந்த்ரன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கனிஷ்க் சௌஹான் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: கனிஷ்க சௌஹான் https://www.virakesari.lk/article/233398
-
பிரேசிலில் வீசிய பலத்த காற்றில் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது!
பிரேசிலில் வீசிய பலத்த காற்றில் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது! 16 Dec, 2025 | 11:02 AM பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள 'ஹவன்' சில்லறை விற்பனைக் கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சுதந்திர தேவி சிலை திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சிலை சரிந்த பிறகு அப்பகுதியில் சிறிய குழப்பம் ஏற்பட்டதுடன், சிலை சரிவு உள்ளூர் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இந்த சிலை 1900 களின் முற்பகுதியில் நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் சிலை இடிந்து விழுந்த காட்சியைப் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளதுடன் அவை தற்போது வைரலாகி வருகிறது. https://www.virakesari.lk/article/233494
-
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடித்த ரியல் ஹீரோவை வைத்தியசாலைக்கு சென்று பாராட்டினார் அவுஸ்திரேலிய பிரதமர்..! Published By: Digital Desk 3 16 Dec, 2025 | 10:39 AM அவுஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரின் போண்டி கடற்கரையில், கடந்த 14 ஆம் திகதி மாலை யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், கூட்டத்தினரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 16 பேர் பலியாகினர்; சுமார் 42 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை, அஹ்மத் அல் அஹ்மத் (43) என்பவர் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தார். அப்போது, மற்றொருவர் அஹ்மத் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் படுகாயமடைந்த அஹ்மத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் நேரில் சந்தித்து பாராட்டினார்கள். அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அஹ்மத், நீங்கள் ஒரு அவுஸ்திரேலிய வீரர். மற்றவர்களை காப்பாற்ற உங்கள் உயிரை ஆபத்தில் இட்டீர்கள் — போண்டி கடற்கரையில் அபாயத்தை நோக்கி ஓடி, ஒரு பயங்கரவாதியை நிராயுதப்படுத்தினீர்கள். மிக மோசமான தருணங்களில்தான் அவுஸ்திரேலியர்களின் சிறந்த பண்புகள் வெளிப்படும். ஞாயிற்றுக்கிழமை இரவில் நாம் அதையே கண்டோம். ஒவ்வொரு அவுஸ்திரேலியரின் சார்பாகவும், உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் கிறிஸ் தனது X தளத்தில், “அஹ்மத் ஒரு நிஜ நாயகன். அவர், தனது உயிருக்கு நேரவிருந்த மிகப்பெரிய ஆபத்தை பொருட்படுத்தாமல், ஒரு பயங்கரவாதியை நிராயுதபாணி ஆக்கியதன் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றினார் என்பதில் சந்தேகமில்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவருடன் நேரம் செலவிட்டதும், நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள மக்களின் நன்றியை அவருக்கு தெரிவித்ததும் எனக்கு ஒரு பெருமையாக இருந்தது. அஹ்மத்தின் தன்னலமற்ற துணிச்சல் இல்லையென்றால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி அஹ்மத்” என்று பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/233486
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
நீதி:- ஆண்களுக்கும் சமைக்க தெரிந்திருக்கவேண்டும்!
-
கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்
கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக் கோரி களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகம்! 16 Dec, 2025 | 10:33 AM கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள் செவ்வாய்க்கிழமை (16) களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை நடத்தினர். இந்த சத்தியாக்கிரகத்தில் கம்போடியாவைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய காஷ்யப தேரர் தலைமையிலான சுமார் 50 பிக்குகளும் கலந்துகொண்டனர். கம்போடிய காஷ்யப தேரர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் கம்போடிய மொழிகளில் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது இங்கு கருத்துத் தெரிவித்த வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர், இலங்கையில் அண்மையில் வீசிய சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே முதன்மையானது என்றும், இந்த நேரத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குற்றவாளிகளைத் தேடுவதை விட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இப்போதைய முக்கிய விடயம் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/233484
-
மலேசியாவிலிருந்து வந்த சிறிய விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்
மலேசியாவிலிருந்து வந்த சிறிய விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் Published By: Vishnu 15 Dec, 2025 | 09:32 PM மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 15ஆம் திகதி திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குறித்த விமானம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ளது. குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் எனவும், பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/233450
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Senura Civil Engineering (Pvt) Ltd மற்றும் Rank Container Terminal (Pvt) Ltd என்பன 50 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 15 Dec, 2025 | 09:56 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகள் நன்கொடை வழங்கி வருகின்றனர். அதன்படி, Senura Civil Engineering (Pvt) Ltd மற்றும் Rank Container Terminal (Pvt) Ltd என்பன திங்கட்கிழமை (15) 50 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கின. Senura Civil Engineering (Pvt) Ltd நிறுவனத்திடமிருந்து 25 மில்லியன் ரூபா மற்றும் Rank Container Terminal (Pvt) Ltd நிறுவனத்திடமிருந்து 25 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டதோடு அதற்கான காசோலைகள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. இரு நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ரவி விஜேரத்ன, ஷாஹேன் விஜேரத்ன மற்றும் சாந்த இளங்கமுதலி ஆகியோர் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233454
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி 15 Dec, 2025 | 05:34 PM நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவோம் எனக்கூறியுள்ளார். இதேவேளை, உக்ரைன் நாட்டின் எந்த ஒரு நிலப் பகுதியையும் ரஷ்யாவிற்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுனார். https://www.virakesari.lk/article/233437
-
யாழ். விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்!
யாழ். விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்! Published By: Vishnu 15 Dec, 2025 | 09:13 PM யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை (15) மதியம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த கட்டடம் அமைப்பதன் மூலம் பயணிகளின் எதிர்நோக்கும் சிரமங்களை தீர்க்க முடியும் என எதிராபார்க்கப்படுதாறது. https://www.virakesari.lk/article/233449
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி! 15 Dec, 2025 | 05:47 PM இலங்கையில் 'திட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்காக அனர்த்த நிவாரண உதவியாக உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக வங்கி குழுமம் ஆழ்ந்த துயரம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தின் போது, இலங்கையர்கள் காட்டிய குறிப்பிடத்தக்க மீள்தன்மைக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் மீட்பு முயற்சிகளைத் தொடங்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளுக்கும் உலக வங்கி பாராட்டுத் தெரிவிக்கிறது. உலக வங்கியின் 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி சூறாவளியால்கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பு, நீர், கல்வி, விவசாயம் மற்றும் இணைப்பு உட்பட அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுக்கவும், சீரமைக்கவும் உதவும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பேரிடர் இடர் குறைப்புக்கான உலகளாவிய வசதியுடன் (GFDRR) இணைந்து ஒரு உலகளாவிய விரைவு பிந்தைய-பேரழிவு சேத மதிப்பீடு (GRADE) ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த விரைவு மதிப்பீடு, ஆரம்ப முடிவுகளுக்குத் தகவல்களை வழங்குவதற்கும், பதில் மற்றும் மீட்பு முயற்சிகளை இலக்காகக் கொள்வதற்கும் பேரழிவுத் தாக்கங்களின் நம்பகமான மதிப்பீடுகளை வழங்கும். புதிய "இலங்கையைக் கட்டியெழுப்புதல்" (Rebuilding Sri Lanka) நிதியை உருவாக்குதல் மற்றும் பேரழிவுக்குப் பிந்தைய தேவைகள் குறித்த அடுத்தகட்ட மதிப்பீடுகள் உட்பட, அரசாங்கம் திட்டமிட்டுள்ள பரந்த மீட்சிக்காக உலக வங்கி நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது. இலங்கையின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும், பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்தவும், வலிமையான, பாதுகாப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் உலக வங்கி குழுமம் உறுதியுடன் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/233442
-
நிகழ்நிலை முறைமையிலான நிதி மோசடி அதிகரிப்பு; சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும் - இலங்கை கணினி அவசர தயார்நிலை
நிகழ்நிலை முறைமையிலான நிதி மோசடி அதிகரிப்பு ; சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும் - இலங்கை கணினி அவசர தயார்நிலை 15 Dec, 2025 | 05:35 PM (இராஜதுரை ஹஷான்) பண்டிகைக் காலம் மற்றும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் நிகழ்நிலை முறைமை ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்துள்ளன. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்கவும், தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கடந்த சில வாரங்களாக சமூக ஊடக தளங்கள் வழியாக நிகழ்நிலை மோசடி மற்றும் பணமோசடி முயற்சிகள் அதிகரித்து வருவதால், இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழு பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தையும் தற்போதைய பேரழிவு சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொண்டு சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. அரசாங்க நிறுவனங்கள், அரசாங்கத் துறைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என்று பொய்யாகக் காட்டிக் கொள்ளும் மோசடி செய்பவர்கள் குறித்து கணிசமான எண்ணிக்கையிலான புகார்கள் கிடைத்துள்ளன. சந்தேகமில்லாத வகையில் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக, மோசடி நபர்கள் போலியான விளம்பரங்களை நிதி வெகுமதிகள் மற்றும் பரிசுகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் தகவல்களைப் பதிவிடுகிறார்கள். நாட்டின் பல பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி மற்றும் கனமழையைத் தொடர்ந்து, நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை சைபர் குற்றவாளிகள் மோசடியாக ஆள்மாறாட்டம் செய்து வருகின்றனர். அவர்கள் மோசடியான இணைப்புகளை இடுகையிடுவதையும், இந்த இணைப்புகள் மூலம் பொதுமக்களை பணத்தை நன்கொடையாக வழங்க ஊக்குவிப்பதையும் கவனித்துள்ளனர். இதன் விளைவாக, மோசடி செய்பவர்கள் சில தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று அந்தக் கணக்குகளைக் கட்டுப்பாட்டில் எடுத்த வழக்குகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்த அனைத்து பணத்தையும் இழந்த வழக்குகளும் உள்ளன. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்கவும், தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அரசு நிறுவனங்களும் நிறுவப்பட்ட அமைப்புகளும் எந்தவொரு கோரிக்கையும் இல்லாமல் சமூக ஊடகப் பதிவுகள் அல்லது ஆன்லைன் இணைப்புகள் மூலம் பொதுமக்களிடமிருந்து முக்கியமான தகவல்களைப் பெறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் நிதி திரட்டும் கோரிக்கை அல்லது நிதி உறுதிமொழி அடங்கிய எந்தவொரு சமூக ஊடகச் செய்திகளையும் கூர்ந்து கவனித்து, அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. விழிப்புடன் இருங்கள். உங்கள் டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். https://www.virakesari.lk/article/233440
-
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: செத்மிக்கவின் அபார பந்துவீச்சின் உதவியுடன் நேபாளத்தை இலகுவாக வெற்றிகொண்டது இலங்கை 13 Dec, 2025 | 03:19 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் நேபாளத்தை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது. துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டி 44 ஓவர்களுக்குள் நிறைவடைந்தது. கண்டி திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து இலங்கையின் வெற்றியை இலகுபடுத்தினார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 25.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. சிப்ரின் ஷ்ரேஸ்தா (18), சஹில் பட்டேல் (12), நிராஜ் குமார் யாதவ் (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். நேபாள இன்னிங்ஸில் இலங்கை கொடுத்த 19 உதிரிகளே அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது. பந்துவீச்சில் செத்மிக்க செனவிரட்ன 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரசித் நிம்சார, விக்னேஸ்வரன் ஆகாஷ், துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 83 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. திமன்னத மஹாவித்தான 39 ஓட்டங்களுடனும் காவிஜ கமகே 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். விரான் சமுதித்த 10 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டநாயகன்: செத்மிக்க செனவிரட்ன. https://www.virakesari.lk/article/233277
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஐபிஎல் மினி ஏலத்தில் 'டிமாண்ட்' அதிகம் உள்ள 5 வீரர்கள் இவர்களா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கேமரூன் கிரீன் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடருக்கான (2026) மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடக்கிறது. அபு தாபியில் நடக்கும் இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் 244 இந்திய வீரர்கள் மற்றும் 115 வெளிநாட்டு வீரர்கள். அணிகளைப் பொறுத்தவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 13 காலியிடங்கள் இருக்கின்றன. அதேபோல் அந்த அணிதான் அதிகபட்ச தொகையோடு (ரூ 64.3 கோடி) ஏலத்துக்குள் நுழையப்போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 9 இடங்கள் மீதமிருக்கின்றன. அவர்களுக்கு 43.4 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. மும்பை இந்தியன்ஸுக்கோ 2.75 கோடி ரூபாய் மட்டுமே மீதமிருக்கிறது. இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிக அணிகளின் கவனத்தை ஈர்க்கப்போகும், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போகும் ஐந்து வீரர்கள் யார்? முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், வர்ணனையாளர் நானி, பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான பகவதி பிரசாத் மூவரும் பிபிசி தமிழுக்கு அவர்களின் கருத்துகளைத் தெரிவித்தார்கள். அவர்கள் பட்டியலில் பொதுவாக இருந்த 5 வீரர்களின் பட்டியல் இது. அதற்காக அவர்கள் கொடுத்த காரணங்கள் என்ன? 1. கேமரூன் கிரீன் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கேமரூன் கிரீன் இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கேமரூன் கிரீன். எந்த இடத்திலும் களமிறங்கக்கூடிய அதிரடி பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நல்ல ஃபீல்டர் என்பதால் அவரை வாங்க எந்த அணியுமே ஆசைப்படும். தனது மேலாளர் செய்த தவறால் ஏலத்தில் தான் பேட்டராக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கிரீன், தான் பந்துவீசத் தயாராக இருப்பதாகக் கூறினார். அதேசமயம், "கிரீன் பேட்டராகப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர் பெரிய தொகைக்குப் போவதற்கு உதவும். ஏனெனில், அவர் பெயர் முதல் செட்டிலேயே இடம்பெற்றிருக்கிறது. அதனால், கொல்கத்தா, சென்னை போன்ற அணிகள் தங்களின் தொகையை செலவு செய்வதற்கு முன்பே இவர் பெயர் வந்துவிடும் என்பதால், நிச்சயம் இரு அணிகளுக்கும் இடையே ஏலத்தின்போது இவரை வாங்க கடும் போட்டி இருக்கும்" என்கிறார் பகவதி பிரசாத். இந்த அணிகள் போக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் ஓரளவு கிரீனுக்காக முயற்சி செய்யலாம். ஆனால், சென்னை, கொல்கத்தா போல் இவர்களால் அந்த ஒற்றை வீரர் மீது பெரும் முதலீடு செய்யமுடியாது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வேறு சில தேவைகள் இருப்பதாகவும் சொல்லும் நானி, கொல்கத்தாவை நிறைய செலவளிக்க வைப்பதற்காக சென்னை இவரை வாங்க ஏலம் கூறலாம் என்கிறார். ஆண்ட்ரே ரஸல் போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயம் கொல்கத்தாவுக்கு இருப்பதால், அவர்கள் கிரீனை வாங்கவேண்டும் என்று காத்திருப்பார்கள் என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,லியாம் லிவிங்ஸ்டன் 2. லியாம் லிவிங்ஸ்டன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு வெளிநாட்டு வீரர் லியாம் லிவிங்ஸ்டன். கடந்த மெகா ஏலத்தில் அவரை பெங்களூரு வாங்கியிருந்தது. ஆனால், பின்னர் அவரை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அதனால் பல அணிகளும் தற்போது இவரை வாங்க நினைப்பார்கள். "ஒரு நல்ல மிடில் ஆர்டர் அதிரடி பேட்டர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டுமே வீசக்கூடியவர் என்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் வித்யுத். சென்னை, கொல்கத்தா,ஹைதராபாத், டெல்லி போன்ற அணிகள் இவரைக் குறிவைக்கலாம். தங்கள் நம்பர் 4 இடத்தை பலப்படுத்தவேண்டும் என்று நினைத்தால் குஜராத் டைட்டன்ஸும் இவரை வாங்க நினைக்கலாம். ஃபினிஷராகப் பயன்படுத்த முடியும் என்பதால் எல்லா அணிகளுமே லிவிங்ஸ்டனை வாங்க நினைப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. "அவர் இதுவரை ஐபிஎல் அரங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால், மிகச் சிறந்த திறமைசாலி. ஆட்டத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்'' என்கிறார் நானி. 3. வெங்கடேஷ் ஐயர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெங்கடேஷ் ஐயர் மெகா ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு வாங்கிய வெங்கடேஷ் ஐயரை, இப்போது ரிலீஸ் செய்திருக்கிறது கொல்கத்தா. "அவரால் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என எங்குமே விளையாட முடியும். எந்த இடத்திலும் விளையாடக்கூடிய ஒரு இந்திய வீரரை எல்லா அணிகளுக்குமே பிடிக்கும். என்ன, அவர்கள் அவரை எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஏலத்தில் அவருக்காக போட்டியிடுவார்கள்" என்று கூறினார் பகவதி பிரசாத். "கடந்த முறைபோல் அல்லாமல் அவர் 8-10 கோடி ரூபாய்க்குள் ஏலம் போனால் நல்லது" என்கிறார் நானி. "போன முறை அந்தப் பெரிய தொகையே அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இம்முறை குறைவான தொகைக்கு ஏலம் போவது, அவரது செயல்பாட்டுக்கு நல்லது" என்று அவர் கூறினார். இவருக்கும் சென்னை vs கொல்கத்தா இடையே போட்டி நிலவலாம். அதேசமயம், லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு போன்ற அணிகளுமே இவரை வாங்க முயற்சி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 4. மதீஷா பதிரனா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மதீஷா பதிரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலம் பயணிப்பார் என கருதப்பட்டவரை அந்த அணி வெளியே விட்டது ஆச்சர்யமாகக் கருதப்பட்டது. கடந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்திருந்தது. "பதிரனா தற்போது அவரது பௌலிங் ஆக்ஷனை மாற்றியதால் அவரது செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் முன்பு ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை" என்று கூறினார் பகவதி பிரசாத். இருந்தாலும் 'எக்ஸ் ஃபேக்டர்' என்று கருதப்படும் ஒரு வீரரை வாங்க நிச்சயம் அணிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். கிட்டத்தட்ட எல்லா அணிகளுக்குமே வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரின் தேவை இருக்கிறது என்பதால் பதிரானாவுக்கு கொஞ்சம் போட்டி இருக்கலாம் என்றும் அவர் கூறினார். 5. ஜேசன் ஹோல்டர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜேசன் ஹோல்டர் "இம்முறை ஹோல்டர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், முன்பை விட அவருக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கலாம்" என்கிறார் பகவதி பிரசாத். எப்போதுமே வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களுக்கான தேவை ஐபிஎல் ஏலத்தில் அதிகமாக இருக்கும். ஹோல்டர் இதுவரை பல அணிகளுக்கு விளையாடியிருந்தாலும், பெரிய தாக்கம் ஏற்படுத்தியதில்லை. ஆனால், இம்முறை அவரது ஃபார்ம், அவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் என்கிறார் அவர். "முன்பெல்லாம் இல்லாததுபோல் ஹோல்டர் தற்போது பேட்டிங், பௌலிங் இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். நன்கு பௌன்சர்களையும், யார்க்கர்களையும் பயன்படுத்துகிறார். நன்கு சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்" என்று நானியும் சொல்கிறார். கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே அவருக்கு போட்டியிடக்கூடும் என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clydx2q9q0do
-
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஐக்கிய அரபு இராச்சியத்தை நையப்புடைத்தார் சூரியவன்ஷி; இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி Published By: Vishnu 12 Dec, 2025 | 07:13 PM (நெவில் அன்தனி) துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சாளர்களை வைபவ் சூரியவன்ஷி நையப்புடைக்க, இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 15ஆவது பிறந்த தினத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வைபவ் சூரியவன்ஷி 95 பந்துகளில் 9 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களை விளாசி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையை நிலைநாட்டினார். எவ்வாறாயினும்,, இங்கிலாந்துக்கு எதிராக டோன்டன் விளையாட்டரங்கில் 2002இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அம்பாட்டி ராயுடு ஆட்டம் இழக்காமல் குவித்த 177 ஓட்டங்களே இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையாக தொடர்ந்தும் இருக்கின்றது. வைபவ் சூரியவன்ஷி குவித்த அபார சதம், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 433 ஓட்டங்களைக் குவித்தது. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். கோலாலம்பூரில் கத்தாருக்கு எதிராக பங்களாதேஷ் 7 விக்கெட்களை இழந்து பெற்ற 363 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இதற்கு முன்னர் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய போட்டியில் சூரியவன்ஷியை விட ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் தலா 69 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 38 ஓட்டங்களையும் அபிக்யான் குண்டு 32 ஓட்டங்களையும் பெற்றனர். இதனிடையே வைபவப் சூரியவன்ஷி, ஆரோன் ஜோர்ஜ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 212 ஓட்டங்ளைப் பகிர்ந்தனர். அத்துடன் விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் த்ரிவேதி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் யுக் ஷர்மா 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உதிஷ் சூரி 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஐக்கிய அரபு இராச்சியம் 14ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியை எதிர்நோக்கியது. ஆனால், ப்ரித்வி மது, உதிஷ் சூரி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை கௌரவமான நிலையில் இட்டனர். அவர்களது இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய இளையோர் அணி கடுமையாக முயற்சித்தது. இறுதியில் 9ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட விஹான் மல்ஹோத்ரா ப்ரித்வி மதுவை ஆட்டம் இழக்கச் செய்து இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். தொடர்ந்து உதிஷ் சூரி, சாலே ஆமின் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து 50ஆவது ஓவர் வரை இந்தியாவை வெற்றிக்காக காக்க வைத்தனர். உதிஷ் சூரி 78 ஓட்டங்களுடனும் சாலே ஆமிக் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் தீப்பேஷ் தேவெந்த்ரன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி https://www.virakesari.lk/article/233215
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் @நிழலி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.
-
காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் : ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் : ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழப்பு Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 11:30 AM இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை காஸா நகரில் கார் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதியான ரயிட் சயத் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காஸா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், காஸா முனையில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. காஸா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி ரயிட் சயத் கொல்லப்பட்டார். மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி ரயிட் சயத் 2023 அக்டோபர் 7ம் திகதி நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/233309
-
மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதித்தல்
மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதித்தல் 15 Dec, 2025 | 04:42 PM பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் (TVTC) 2026ம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 16 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட பாடசாலை கல்வியினை நிறைவு செய்து இளைஞர், யுவதிகள் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கேட்டுக் கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/233427
-
பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு!
பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு! 15 Dec, 2025 | 03:52 PM பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று திங்கட்கிழமை (15) கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரண சேவைக்காக பாகிஸ்தான் தமது விமானப்படையின் C-130 விமானங்களை அனுப்பியிருந்தது. மேலும், 'தித்வா' புயலின் போது, பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று, அதன் ஹெலிகொப்டருடன், இலங்கை ஆயுதப் படைகளுடன் நெருங்கி ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றது. அத்துடன், பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடி, உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவுக்கான உறுதிப்பாட்டை மீளவும் வலியுறுத்தினார். பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரையின் பேரில், பாகிஸ்தானின் மத்திய கடல்சார் விவகார அமைச்சர் முஹம்மது ஜுனைத் அன்வர் சௌத்ரி (Muhammad Junaid Anwar Chaudhry) இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த கடந்த வாரம் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233420
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
தென் ஆப்ரிக்காவை இந்தியா எளிதில் வெற்றி கொள்ள உதவிய 'அர்ஷ்தீப் சிங் எழுச்சி' பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2025, 03:17 GMT "ஒருசில நாட்கள் உங்களின் திட்டத்தை உங்களால் சரியாக செயல்படுத்த முடியாமல் போகலாம். கடந்த போட்டியில் அதுதான் நடந்தது. இன்று அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியதால், அனைத்தும் நன்றாக அமைந்தது" நேற்று (டிசம்பர் 14) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கூறிய வார்த்தைகள் இவை. டிசம்பர் 11-ஆம் தேதி நடந்த இரண்டாவது டி20 போட்டி அர்ஷ்தீப் சிங்கிற்கு ஏமாற்றம் அளித்தது. அவரால் தன் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. வைட் யார்க்கர்கள் வீசவேண்டும் என்ற திட்டம் சற்று தவற, அவர் வீசிய யார்க்கர்கள் நடுவர்களால் 'வைட்' என்று அறிவிக்கப்பட்டன. 4 ஓவர்களில் மொத்தம் 9 வைட்கள் வீசினார் அவர். அதுவும் ஒரே ஓவரில் 7 வைட்கள் வீசியிருந்தார். அந்த ஓவரின்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. அன்று, நியூ சண்டிகரில் வீசிய 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் அர்ஷ்தீப். அதுவே தென்னாப்பிரிக்கா 200 ரன்களைக் கடக்க முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. இது, ஒரு சர்வதேச டி20 போட்டியில் அவர் ஐம்பது ரன்களுக்கு மேல் கொடுத்தது மூன்றாவது முறை. மற்ற இரண்டு தருணங்களில் விக்கெட்டாவது எடுத்திருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் அதுவும் கிடைக்கவில்லை. அர்ஷ்தீப் சிங்கிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் அது மோசமான ஒரு செயல்பாடாக அமைந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நியூ சண்டிகரில் அர்ஷ்தீப் வீசியது அவரது டி20ஐ கரியரின் இரண்டாவது மோசமான செயல்பாடு 3 நாட்கள் & சுமார் 230 கிலோமீட்டர் பயணத்துக்குப் பிறகு... மூன்றாவது டி20 போட்டிக்காக தரம்சாலாவில் களம் கண்டது இந்திய அணி. சொந்த காரணங்களுக்காக இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடவில்லை. அதனால் வேகப்பந்துவீச்சு யூனிட்டின் தலைவர் என்ற பொறுப்போடு அர்ஷ்தீப் களமிறங்க வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பொறுப்புகளை நன்றாக சுமந்து, முந்தைய போட்டியின் செயல்பாட்டை முற்றிலும் மறந்து, சிறப்பாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் ஆனார். 4 ஓவர்களில் அவர் விட்டுக்கொடுத்தது வெறும் 13 ரன்களே. 14 பந்துகளை 'டாட் பால்'களாக வீசினார். முக்கிய கட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார். முதல் ஓவரிலேயே தாக்கம் ஏற்படுத்தினார் வழக்கமாக தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைப்புக் கொடுக்கும். அந்த மைதானத்தில் பொதுவாகவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து ஸ்விங் ஆகும். அதனால் அவர்கள் இங்கு பந்துவீச விரும்புவார்கள். ஆனால், போட்டிக்கு முன்பு 'பிட்ச் ரிப்போர்ட் செய்திருந்த ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமானா போமி எம்பாங்வா, இந்தப் போட்டியில் பௌலர்களுக்கு பெரும் சவால் இருக்கும் என்று சொல்லியிருந்தார். "போட்டி தொடங்குவதற்கு முன்பே பனி பொழியத் தொடங்கிவிட்டது. சிறு புற்கள் ஆடுகளத்தில் பரவியிருக்கின்றன. இது நீங்கள் பந்துவீச்சாளராக இருக்கவேண்டாம் என்று நினைக்கக்கூடிய ஒரு ஆடுகளமாகத் தெரிகிறது. இந்த மைதானத்தில் ஒரு போட்டிக்கு சராசரியாக 15 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. பௌலர்கள் தங்களின் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும். பேட்டர்கள் ஆரம்பத்தில் ஆடுகளத்தை சற்று கணித்துவிட்டு அதன்பின்னர் அடித்து ஆடலாம்" என்று போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் கூறியிருந்தார். டாஸின்போது தனது அணி முதலில் பேட்டிங் செய்வது பற்றிப் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், "முதலில் பேட்டிங் செய்வதால், ஒருசில ஓவர்களுக்கு ஆடுகளத்தைக் கணிக்க வேண்டும். இன்று நல்ல தொடக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருந்தார். ஆனால், அவர்கள் சொன்னதுபோல் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தை அர்ஷ்தீப் சிங் கொடுக்கவேயில்லை. அவர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்தில் குயின்டன் டி காக் சிங்கிள் எடுக்க, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டிரைக்குக்கு வந்தார். அவர் சந்தித்த முதல் பந்து (ஓவரின் இரண்டாவது பந்து), நன்கு அவுட்ஸ்விங் ஆனது. அடுத்த பந்து, 'ஓவர் தி ஸ்டம்ப்' வந்து அர்ஷ்தீப் வீசிய கோணத்திலேயே (with the angle) பேட்டருக்கு வெளியே சென்றது. இரண்டு பந்துகள் அடுத்தடுத்து வெளியே சென்றிருக்க, ஓவரின் நான்காவது பந்தை உள்ளே திருப்பி ஹெண்ட்ரிக்ஸுக்கு அதிர்ச்சியளித்தார் அர்ஷ்தீப். நல்ல லென்த்தில், முதலிரு பந்துகளைப் போல் இந்த பந்தும் மிடில்-லெக் ஸ்டம்ப் லைனில் தான் பந்து பிட்ச் ஆனது. அதனால், அதேபோல் வெளியே செல்லும் என்று நினைத்து ஹெண்ட்ரிக்ஸ் ஆடியிருக்கலாம். ஆனால், இம்முறை பந்தை அர்ஷ்தீப் இன்ஸ்விங் செய்ததால், எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார் அந்த தென்னாப்பிரிக்க ஓப்பனர். நான்காவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. எம்பாங்வா சொன்னதுபோல் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தைக் கொடுக்காமல் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் விக்கெட்டை வீழ்த்தியது தென்னாப்பிரிக்காவை பின்தங்கச் செய்தது. மார்க்ரம் எதிர்பார்த்த அந்த நல்ல தொடக்கம் அந்த அணிக்குக் கிடைக்க அவர் விடவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தை அர்ஷ்தீப் வழங்கவில்லை சிக்கனமான பவர்பிளே ஸ்பெல் & சிறப்பான டெத் ஓவர் தன் முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய அர்ஷ்தீப், பவர்பிளேவில் வீசிய 3 ஓவர்களிலும் சேர்த்தே 9 ரன்கள் தான் கொடுத்தார். மறுபக்கம் ஹர்ஷித் ராணாவும் சிறப்பாகச் செயல்பட்டதால் (பவர்பிளேவில் 2 விக்கெட்டுகள்) தென்னாப்பிரிக்க அணி பவர்பிளேவில் 25/3 என தடுமாறவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியால் இந்தப் போட்டியில் மீண்டு வர முடியவில்லை. ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே, குல்தீப் யாதவ் என பந்துவீசிய அனைவருமே விக்கெட் வீழ்த்தினார்கள். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இருந்தாலும், ஒருபக்கம் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், கடைசி கட்டத்தில் அதிரடியை கையில் எடுத்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 17வது ஓவரில் மார்க்ரம் ஒரு சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸரும், 1 பவுண்டரியும் விளாசினார் மார்க்ரம். அதனால், அந்த ஓவரில் மட்டும் தென்னாப்பிரிக்காவுக்கு 19 ரன்கள் வந்தன. அவர் அரைசதம் கடக்க, அந்த அணியும் 100 ரன்களைக் கடந்தது. கடைசி 2 ஓவர்களிலும் அதே அதிரடியைத் தொடர்ந்தால் தென்னாப்பிரிக்கா 140 என்ற ஸ்கோரை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மார்க்ரம் நன்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆட்டத்தின் 19வது ஓவரை வீசவந்தார் அர்ஷ்தீப். இப்போதும் நியூ சண்டிகரில் முயற்சி செய்ததைத்தான் முயற்சித்தார் - வைட் யார்க்கர்கள். ஆனால், கடந்த ஆட்டத்துக்கு மாறாக, இம்முறை பந்துகள் யார்க்கர்களாக தவறிவிட்டாலும் அவற்றின் லைன் தவறவில்லை. பந்து பேட்டருக்கு வெளியே சென்றாலும், வைடாகவில்லை. அந்த ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்த மார்க்ரம், மீண்டும் மூன்றாவது பந்தில் ஸ்டிரைக்குக்கு வந்தார். அர்ஷ்தீப் அவருடைய கோணத்தோடு வெளியே வீசிய பந்தை மார்க்ரம் பலமாக அடிக்க முற்பட, பந்து எட்ஜ் ஆகி கீப்பர் ஜித்தேஷ் சர்மாவின் கைகளுக்குள் தஞ்சமடைந்தது. அதனால், மார்க்ரமின் இன்னிங்ஸும், சற்றே சவாலான ஸ்கோர் அடிக்கலாம் என்ற தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூன்றாவது டி20 போட்டியின் பவர்பிளேவில் 18 பந்துகள் வீசிய அர்ஷ்தீப் அதில் 12 பந்துகளை டாட் பால்களாக வீசினார் மார்க்ரம் அவுட் ஆனதால், அடுத்த 9 பந்துகளில் தென்னாப்பிரிக்காவால் 4 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால், அந்த அணியின் இன்னிங்ஸ் 117 ரன்களில் முடிந்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா வழக்கமான அதிரடி தொடக்கம் (18 பந்துகளில் 35 ரன்கள்) கொடுக்க, சேஸ் செய்வது ஓரளவு எளிதானது. 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்தியா இந்தப் போட்டியை வென்றது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என முன்னிலையும் பெற்றிருக்கிறது. மூன்று இந்திய பௌலர்கள் (அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா, வருண்) தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தாலும், ஆட்டத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்திய அர்ஷ்தீப் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஒரு ஏமாற்றமான செயலபாட்டுக்குப் பிறகு சிறப்பான முறையில் எழுச்சி கண்டு இந்தியாவையும் வெற்றி பெறவைத்துவிட்டார் அர்ஷ்தீப் சிங். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5qyv5wdq1o
-
வீதி நிலைவரங்களை அறிவிக்க புதிய பொதுத் தளம் - போக்குவரத்து அமைச்சு
15 Dec, 2025 | 02:45 PM (எம்.மனோசித்ரா) போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீதி மூடல்கள், சேதங்கள், விபத்துகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் போன்ற வீதி நிலைவரங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்கள் இல்லாததை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தத் தளத்தை https://road-lk.org என்ற இணைய முகவரியில் அணுகலாம். இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வழிசெலுத்தல் (Navigation) செயலிகள் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து முறையான புதுப்பிப்புகளை வழங்குவதில்லை என்றும், பல நாடுகளில் இந்தக் குறைபாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பரவலான வீதி சேதங்கள் மற்றும் மூடல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது என்றும், சாதாரண நிலைமைகளிலும் இது தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த அமைப்பு பொதுமக்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது. சேதமடைந்த வீதிகள், மூடல்கள் அல்லது விபத்துகளைக் காணும் வீதிப் பயனர்கள் https://road-lk.org/report என்ற இணையதளம் மூலம் புகார்களைச் சமர்ப்பிக்கலாம். புகார்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யலாம். மேலும் முடிந்தால் புகைப்படங்களைப் பதிவேற்றுமாறு பயனர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தகவல்களைச் சரிபார்த்து, அதன் பின்னரே பாதிக்கப்பட்ட இடத்தைத் தேசிய வீதி வரைபடத்தில் குறிப்பார்கள். இந்த அமைப்பை இற்றைப்படுத்தும் அதிகாரம் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் வீதிப் பிரச்சினைகளை நேரடியாகக் குறிக்க அனுமதி வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மற்றும் மாகாண வீதி வலையமைப்பிற்காக இந்த அமைப்பு முழுமையாக நிறுவப்பட்ட பின்னர், கிராமப்புற வீதிகளையும் இதில் இணைப்பதற்கான திட்டங்கள் உள்ளன. இந்தத் தளம் தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) பல வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, அதன் பின்னர் இது நிரந்தரமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மற்றும் மாகாண வீதிகளில் உள்ள பிரச்சினைகளை இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க மக்கள் சுறுசுறுப்பாக அறிவிக்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/233405
-
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
சிட்னி: துப்பாக்கியால் சுட்டவர் மீது பாய்ந்து மடக்கிய 'ஹீரோ' - உடலில் 2 குண்டுகள் பாய்ந்த அவர் என்ன ஆனார்? படக்குறிப்பு,அகமது அல் அகமது தாக்குதல் நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கிறார். கட்டுரை தகவல் எமிலி அட்கின்சன் 15 டிசம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த "ஹீரோ" கேமராவில் சிக்கியுள்ளார். அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பிபிசி உறுதிப்படுத்திய வீடியோவில், துப்பாக்கியால் சுடும் நபரை நோக்கி ஓடிய அகமது, அவரது ஆயுதத்தைப் பறித்து, பின்னர் அதை அவர் பக்கம் திருப்பி, தாக்குதல் நடத்தியவரை பின்வாங்கச் செய்வது போன்ற காட்சி உள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அகமது, ஒரு பழக் கடை நடத்தி வருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதுவின் கையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் தெரிவித்தனர். போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ஹானக்கா பண்டிகையைக் கொண்டாட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிகழ்வின் போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. காவல்துறையினர் இதை யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட 'பயங்கரவாத தாக்குதல்' என்று அறிவித்துள்ளனர். ஹானக்கா என்பது யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது. "அவர் ஒரு ஹீரோ, அவர் இரண்டு முறை சுடப்பட்டார்" படக்குறிப்பு,ஒரு காரின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அகமது, தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்தார். அகமதுவின் உறவினர் முஸ்தபா, ஞாயிற்றுக்கிழமை இரவு 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் பேசிய போது, "அவர் ஒரு ஹீரோ, 100 சதவிகிதம் அவர் ஒரு ஹீரோ. அவர் இரண்டு முறை சுடப்பட்டுள்ளார். ஒன்று கையில், மற்றொன்று முழங்கையில்"என்று கூறினார். திங்கட்கிழமை அதிகாலை வெளியான புதிய தகவலில், "அவர் குணமடைவார் என்று நம்புகிறேன். நான் அவரை நேற்றிரவு பார்த்தேன். அவர் நலமாக இருந்தார். ஆனால் நாங்கள் மருத்துவர் வழங்கும் தகவலுக்காகக் காத்திருக்கிறோம்"என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்தியது இரண்டு பேர் என்றும், அவர்கள் தந்தை - மகன் என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய 50 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், 24 வயதுடைய மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஷார்ட் வீடியோ காணொளிக் குறிப்பு,ஆஸ்திரேலியா: துப்பாக்கிச் சூடு நடத்தியவரை துணிச்சலாக எதிர்கொண்ட நபர் வைரலான காணொளியில் என்ன காணப்பட்டது? தாக்குதல் நடத்தியவரிடம் இருந்து அகமது துப்பாக்கியைப் பறிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு சிறிய நடைமேம்பாலத்துக்கு அருகில் ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அவர் குறிவைக்கும் இடம் கேமராவின் சட்டகத்திற்குள் வரவில்லை. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்குப் பின்னால் மறைந்திருந்த அகமது, தாக்குதல் நடத்தியவரை நோக்கிப் பாய்ந்து அவரை மடக்கிப் பிடிப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. தாக்குதல் நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவரைக் கீழே தள்ளி பின்னர் அவரை நோக்கி அகமது துப்பாக்கியை நீட்டுகிறார். அதன்பின், அந்தத் தாக்குதல் நடத்திய நபர் பாலத்தை நோக்கிப் பின்வாங்கத் தொடங்குகிறார். அதன்பிறகு, அகமது தனது ஆயுதத்தைக் கீழே இறக்கிவிட்டு, தான் தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் அல்ல என்று காவல்துறைக்கு காட்டுவதற்காக ஒரு கையை மேலே உயர்த்துகிறார். இந்த நேரத்தில், தாக்குதல் நடத்திய நபர் இன்னொரு ஆயுதத்தை எடுத்து மீண்டும் சுடுவதைக் காண முடிகிறது . துப்பாக்கி ஏந்திய இரண்டாவது நபரும் பாலத்தில் இருந்து தொடர்ந்து சுடுகிறார். தாக்குதல் நடத்திய அவர்கள், யாரை அல்லது எதை நோக்கிச் சுடுகிறார்கள் என்பதை வீடியோ தெளிவாகக் காட்டவில்லை. படக்குறிப்பு,அகமது துப்பாக்கியைப் பிடுங்கி, பின்னர் அதைத் தாக்கியவரை நோக்கி திருப்பினார். அகமதுவுக்கு தலைவர்கள் பாராட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரீமியரான கிறிஸ் மின்ஸ், அகமதுவின் துணிச்சலைப் பாராட்டினார். அப்போது அவரது பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. "அவர் ஒரு உண்மையான ஹீரோ, அவருடைய துணிச்சலால், இன்று இரவு பலர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை," என்று கிறிஸ் மின்ஸ் கூறினார். ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதுகுறித்துப் பேசுகையில், "இன்று, மற்றவர்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த ஆஸ்திரேலியர்களை நாங்கள் கண்டோம். இந்த ஆஸ்திரேலியர்கள் ஹீரோக்கள். அவர்களின் வீரம் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது," என்றார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அகமது மீது தனக்கு "பெரிய மரியாதை" இருப்பதாகக் கூறினார். மேலும் "அவர் உண்மையிலேயே மிகவும் துணிச்சலான மனிதர். அவர் முன்னால் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தாக்கி பல உயிர்களைக் காப்பாற்றினார்," என்று டிரம்ப் தெரிவித்தார். சிட்னி கடற்கரை தாக்குதல் - என்ன நடந்தது ? 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்ததையும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததையும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரீமியர் கிறிஸ் மின்ஸ் உறுதிப்படுத்தினார். 50 வயது தந்தை மற்றும் அவரது 24 வயது மகன் ஆகிய இருவர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்று காவல்துறை ஆணையர் மெயில் லேன்யன் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய 50 வயது நபர், காவல்துறையால் சுடப்பட்டதில் உயிரிழந்தார். 24 வயதான அவரது மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 42 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 50 வயது நபர் துப்பாக்கி உரிமம் வைத்திருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது பெயரில் ஆறு ஆயுதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. போண்டி கடற்கரையில் ஆறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவ இடத்தில் 'இரண்டு வெடிகுண்டுகள்' காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மேற்கு சிட்னியில் உள்ள கெம்ப்ஸி மற்றும் போன்னிரிக் பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களில் காவல்துறையினர் இரவு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சிட்னியில் யூத சமூகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்காக 328 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய சமூகத்தில் இருந்து யூத-விரோதப் போக்கினை "வேரறுக்க" அந்நாட்டு பிரதமர் உறுதியளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9zgdzplw2o
-
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
ஆஸ்திரேலியாவில் யூதர்களை 'குறிவைத்து' துப்பாக்கிச் சூடு - இஸ்ரேல் கூறியது என்ன? பட மூலாதாரம்,Saeed KHAN / AFP via Getty Images படக்குறிப்பு,ஓர் குழந்தை உட்பட 29 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சிட்னி காவல்துறை தகவல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில், பத்து பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பலர் காயமடைந்துள்ள நிலையில், ஓர் குழந்தை உட்பட 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தகவலை நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தலைவர் கிறிஸ் மின்ஸ் கூறியதாக சிட்னிக்கான பிபிசி செய்தியாளர் டிஃபனி டர்ன்புல் தெரிவித்துள்ளார். "பொது இடத்தில் இரண்டு ஆண்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக" நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம். லான்யோனின் கூற்றுப்படி, இந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிழக்கு பகல் நேரப்படி மாலை 6:47 மணியளவில் போன்டி கடற்கரையில் உள்ள ஆர்ச்சர் பூங்கா அருகே நிகழ்ந்தது. பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங்கின் கூற்றுப்படி, இந்த சம்பவம் போன்டி கடற்கரையின் வடக்குப் பகுதியில் உள்ள நெரிசலான பகுதியில் நடந்தது. "கடற்கரைக்குப் பின்னால் உள்ள புல்வெளிப் பகுதிக்கு அருகில் ஒரு ஹனுக்கா கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது," என்று அவர் கூறுகிறார். "கடற்கரைக்குச் செல்ல மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு நடைபாதை இருந்தது. துப்பாக்கிதாரிகள் அதை இலக்காகப் பயன்படுத்தியிருக்கலாம்." "துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நான் பாலத்தைக் கடந்தபோது அங்கு குறைந்தது 200 பேர் இருப்பதையும், இசை உரத்து ஒலித்துக் கொண்டிருந்ததையும், பல்வேறு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதையும் பார்த்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் இந்த உயரமான பகுதியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது" என்று டெஸ்ஸா வோங் கூறினார். "நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் உலோகத் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கான வாயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன" என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு,துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போன்டி கடற்கரையிலிருந்து செய்திகளை வழங்கும் பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங் "தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார், மற்றொருவர் காவல்துறையினரின் காவலில் உள்ளார்" என்று பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங் கூறினார். இந்த தாக்குதல் "சிட்னியின் யூத சமூகத்தை குறிவைத்து திட்டமிடப்பட்டது" என்று நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தலைவர் கிறிஸ் மின்ஸ் கூறியதாக கூறும் அவர், "அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இரவாக இருந்திருக்க வேண்டிய இரவு, பயங்கரமான, தீய தாக்குதலால் சிதைக்கப்பட்டது" என்று அவர் மேலும் கூறினார். "இந்தத் தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து திட்டமிடப்பட்டது. அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு, ஒரு பயங்கரமான கொடூரத் தாக்குதலால் சிதைக்கப்பட்டுவிட்டது," என்று சிட்னி காவல்துறைத் தலைவர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார். யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட அங்கு வந்திருந்த சுமார் ஆயிரம் பேர் அந்த இடத்தில் இருந்ததாக நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம் லேன்யன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குறைந்தது 11 பேர் இறந்ததாகவும், 29 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். இவர்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,Darrian Traynor/Getty Images ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸி இந்த சம்பவம் "அதிர்ச்சியூட்டுவதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பது" என்று விவரித்தார். இந்த சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர்களின் காயங்களின் அளவு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை வெளியிடப்படவில்லை. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தற்போது அந்தப் பகுதியில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்தப் பகுதிக்குச் செல்வததைத் தவிர்க்கவும், சரிபார்க்கப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் யூத விடுமுறை நாளான கடற்கரையில் நடைபெறும் ஹனுக்கா பண்டிகையுடன் தொடர்புடையதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். படக்குறிப்பு,ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸி, போன்டி கடற்கரை தாக்குதல் யூத எதிர்ப்பு வெறுப்பு நடவடிக்கை என்று கூறியுள்ளார் நேரில் கண்ட சாட்சிகள் சொன்னது என்ன? துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது தனது குழந்தைகளுடன் கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் இருந்ததாக, சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தான், தனது குழந்தைகளுடன் அங்கிருந்து ஓடிவிட்டதாக அவர் கூறினார். "நான் வழக்கமாக வேலைக்குப் பிறகு செய்வது போல இன்று மதியம் கடற்கரையில் இருந்தேன், அப்போது தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்டேன். சுமார் 20 பேர் இருந்ததாக நினைக்கிறேன்." "ஆரம்பத்தில் வெடிச்சத்தங்களை யாரும் வித்தியாசமாக நினைக்கவில்லை. பட்டாசுகள் வெடிப்பது போல் தோன்றியது. ஆனால் நாங்கள் இருந்த இடத்திற்கு வடக்கே உள்ள தமராமா மற்றும் போன்டி ஆகிய இரண்டு கடற்கரைகள் மீது ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதைக் கண்டபோது, ஏதோ தவறு இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது. பிறகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகள் தொடர்ந்து வரத் தொடங்கின," என்று அவர் கூறினார். சம்பவத்தை நேரில் கண்ட மற்றொரு சாட்சியான மார்கோஸ் கார்வால்ஹோ, "துப்பாக்கிச் சத்தம் பட்டாசு சத்தம் போல இருந்தது. போன்டியில் இப்படி ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை" என்றார். "கடற்கரையில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பது புரிந்தவுடன், ஓடத் தொடங்கினர். நான் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வடக்கு போன்டியில் உள்ள புல்வெளியை நோக்கி ஓடினேன்." பின்னர் தானும் வேறு சிலரும் ஒரு ஐஸ்கிரீம் வேனின் பின்னால் ஒளிந்து கொண்டதாக கார்வால்ஹோ கூறினார். அவசர சேவைகள் வந்து துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, கார்வால்ஹோ வீட்டிற்குச் செல்லும் வழியில் , "தரையில் சடலங்கள் கிடப்பதை" அவர் கண்டார். 'யூதர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்' ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் நடந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், இது "யூதர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்" என்று கூறியுள்ளார். இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் தனது எக்ஸ் தள பக்கத்தில், "சிட்னியில் உள்ள எங்கள் யூத சகோதர சகோதரிகளுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், அவர்கள் முதல் ஹனுக்கா மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கச் சென்றபோது பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர்." "இந்த பயங்கரமான நேரத்தில் சிட்னியின் யூத சமூகம் மற்றும் முழு ஆஸ்திரேலிய யூத சமூகத்தினருக்காக பிரார்த்திக்கிறோம்." 'யூத எதிர்ப்பு வெறுப்புச் செயல்' ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், போன்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை ஆஸ்திரேலியர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று விவரித்தார். அது ஒரு 'மகிழ்ச்சியான நாளாக' இருந்திருக்க வேண்டிய நாள் என்று அவர் கூறினார். "இது யூத-விரோத வெறுப்புச் செயல்" என்று கூறிய அல்பனீஸி ,"இது நமது நாட்டின் இதயத்தைத் தாக்கும் ஓர் பயங்கரவாதத் தாக்குதல்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,Darrian Traynor/Getty Images படக்குறிப்பு,சம்பவ இடத்தில் போலீசார் 'யூத உயிர்களைக் காப்பாற்ற வலுவான நடவடிக்கை எடுங்கள்' இந்த தாக்குதலை ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் கடுமையாக கண்டித்துள்ளது. "போன்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம். ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. தீபத் திருவிழாவான ஹனுக்கா, இன்று நம்பமுடியாத அளவிற்கு இருட்டாக இருக்கிறது" என்று இஸ்ரேலிய தூதரகம் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளது. "வெறுமனே ஒற்றுமையை வெளிப்படுத்துவது போதாது. ஆஸ்திரேலிய அரசாங்கம் யூத எதிர்ப்பு வன்முறையிலிருந்து யூத உயிர்களைப் பாதுகாக்க உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்த எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளது. "தற்போது இஸ்ரேலில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேலிய தூதர் மைமோன், இந்த பேரழிவு தரும் செய்தியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா திரும்புகிறார்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr4dk16qerdo
-
சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்
சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர் 14 Dec, 2025 | 10:46 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர், செனட் வெளியுறவு உறவுகள் குழுவிடம் சாட்சியமளித்த போது, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வாஷிங்டன் முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்த ஆண்டு ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியின் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், எரிக் மேயரின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவர் மேலும் கூறுகையில், உலகளாவிய கப்பல் வழித்தடங்களில் இலங்கை அமைந்திருப்பதால், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கும், சீனாவின் வளர்ந்து வரும் பிரசன்னம் உட்பட பகைமைச் செல்வாக்குகளை எதிர்கொள்வதற்கும் இலங்கை மையமாக உள்ளது. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும், உலகின் கடல்வழியாகக் கொண்டுசெல்லப்படும் கச்சா எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கும் இலங்கையின் கடல்வழியே செல்கின்றன. எனவே அதன் மூலோபாய இருப்பிடம், அமெரிக்க முயற்சிகளின் மையமாக அமைகிறது. தான் உறுதிப்படுத்தப்பட்டால், அமெரிக்கக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது முதல் முன்னுரிமையாக இருக்கும். அதேவேளை, சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகளுக்குப் பிந்தைய இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள் முக்கியமானதாகும். உடனடி உதவிக்காக 2 மில்லியன் டொலரை அமெரிக்கா ஒதுக்கியுள்ளதுடன், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க இராணுவத்தின் மூலோபாய வான்வழிப் போக்குவரத்துத் திறன்களையும் பயன்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கையுடனான அமெரிக்காவின் வலுவான மற்றும் நீடித்த பங்களிப்புக்கு ஆதாரம் உள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்துப் பேசிய எரிக் மேயர், கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்களைக் குறிப்பிட்டு, இலங்கை பிராந்தியப் பொருளாதாரத்தின் தலைமைத்துவமாக மாறத் தயாராக இருக்கும் ஒரு மீள்திறன் கொண்ட நாடு' என்றார். அடுத்த ஆண்டில், கொழும்புத் துறைமுகம் சரக்குக் கையாளும் திறனை இரட்டிப்பாக்க உள்ளது. இது இலங்கையின் துறைமுகங்கள், தளவாடங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளில் உள்ள குறிப்பிடத்தக்க மற்றும் மூலோபாய வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச நாணய நிதிய திட்டத்துடன் இணைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை வலியுறுத்துவோம். நாட்டின் பொருளாதாரச் சுதந்திரம் தேசிய சுதந்திரத்துடன் பிணைந்துள்ளது. எனவே புதிய சீர்திருத்தங்கள், அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றார். சீனாவின் செல்வாக்கு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், செனட் வெளியுறவு உறவுகள் குழுவின் தலைவர் ஜிம் ரிஷ், இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் சீனாவின் பங்களிப்பு குறித்து உலகளாவிய அளவில் ஒரு எச்சரிக்கையாகும் என குறிப்பிட்டார். சீனர்கள், இலங்கைத் துறைமுகத்திற்குச் செய்ததெல்லாம், மக்கள் ஏன் சீனாவுடன் வணிகம் செய்யக் கூடாது என்பதற்கான உலகளாவிய உதாரணச் சின்னமாக மாறியுள்ளது என்றார். இதற்குப் பதிலளித்த எரிக் மேயர், அமெரிக்கா 'திறந்த மற்றும் வெளிப்படையான' இருதரப்பு உறவுகளை விரும்புவதாகவும், இலங்கை அதன் இறையாண்மையை உறுதிப்படுத்துவதை உறுதி செய்யவும், அதில் துறைமுகங்கள் மீதான இறையாண்மையும் அடங்கும் எனவும் தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கக் கூட்டுறவு, கடல்சார் ஆதிக்கம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் துறைமுகப் பாதுகாப்பைப் பேணுதல் ஆகியவை இந்தோ-பசிபிக் அணுகுமுறையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான அமெரிக்காவின் ஈடுபாட்டில் மையமாக இருக்கும் என்றும் மேயர் உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/233311