Everything posted by ஏராளன்
-
நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்
'நான் படிக்க முடியுமா என கேட்பார்கள்' - நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பட மூலாதாரம்,Thanya Nathan படக்குறிப்பு,24 வயது தான்யா பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 பிப்ரவரி 2026, 05:59 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "சவால்களை கடப்பதை தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. கடின உழைப்பும் நிலையான பயிற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்." 24 வயது தான்யா நாதனின் பேச்சில் உறுதியும் தெளிவும் வெளிப்படுகிறது. இவர், பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுபூர்வ தீர்ப்பை தொடர்ந்து, அதே ஆண்டில் கேரள நீதித்துறை சேவை தேர்வெழுதி, அதில் மாற்றுத்திறனாளிகள் போட்டியாளர்களுக்கான தகுதிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம், கேரளாவில் சிவில் நீதிபதியாகும் (இளநிலை பிரிவு - Junior division) முதல் முழு பார்வை மாற்றுத்திறன் கொண்ட நபராக தான்யா உள்ளார். "நான் நீதிபதியாவது என்பது சாத்தியமில்லாத, கனவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் (பார்வையற்றவர்கள்) தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 2025ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றம் பார்வையற்றவர்கள் நீதிபதி தேர்வெழுத அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு தான் என் திருப்புமுனை." என்கிறார் தான்யா நாதன். உத்வேகம் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் பார்வையற்ற நபர்களும் நீதிபதியாகலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய பிரதேச நீதித்துறை சேவைகள் தேர்வில் இருந்த விதிமுறைகளை ரத்து செய்து, நீதிபதிகள் ஜேபி பர்டிவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியது. மத்திய பிரதேச நீதித்துறை தேர்வு விதிமுறை 6(ஏ)-வின்படி, நீதித்துறை நியமன நடவடிக்கைகளில் பார்வையற்றோர் பங்குபெறுவது தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதாக லைவ் லா இணைய தளம் கூறுகிறது. இதன்மூலம், நீதித்துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. "மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது. இதனை உறுதியான நடவடிக்கை மூலம் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்." என உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு அதன்பின் நேர்காணல் என மூன்று அடுக்கு தேர்வு முறைகளை கொண்ட கடினமான செயல்முறைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது சிவில் நீதிபதி தேர்வு முறை. இந்த தேர்வில் தான்யா அவ்வளவு எளிதில் வெற்றி பெறவில்லை. "படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் கிடைப்பது சவாலாக இருந்தது. சட்டம் போன்ற துறைகளில் புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி புத்தகங்களாகவோ எங்களுக்கு கிடைப்பதில்லை. தேர்வுக்கு தயாராவதில் இதுதான் எனக்கு பிரச்னையாக இருந்தது." என கூறுகிறார் தான்யா நாதன். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,"மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது." என கூறியிருந்தது உச்ச நீதிமன்றம் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய புதிய சட்டங்கள் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்தன. எனவே, பழைய சட்டங்கள் குறித்த குறிப்புகள் டிஜிட்டல் வடிவில் கிடைப்பது தனக்கு சவாலாக இருந்ததாக தான்யா குறிப்பிடுகிறார். படிப்பதில் சிரமங்கள் "எனக்கு தேவையான குறிப்புகளை மற்றவர்களை போன்று நான் உடனேயே படித்துவிட முடியாது. முதலில் குறிப்புகளை டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி வடிவமாகவோ மாற்றிதான் படிக்க வேண்டும். என்னுடைய செல்போனில் எழுத்துகளை ஒலி வடிவில் மாற்றித்தரும் செயலியையே நான் அதிகம் சார்ந்திருக்கிறேன். இவையெல்லாம் அதிக நேரம் எடுக்கும் செயல்முறை. நீங்கள் தேர்வை எழுத வேண்டும் என நினைத்தால் இந்த வழிமுறைகளை செய்துதான் ஆக வேண்டும், ஏனெனில் அதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி." அவரின் தாய் பபிதா - தந்தை ஜெகந்நாதன் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவருடைய மூத்த சகோதரியும் வெளிநாட்டில் பணிபுரிகிறார். தான்யா சோர்ந்துபோகும் நாட்களில், "பரவாயில்லை, இதுவும் சரியாகிவிடும்," என்றே தன்னுடைய பெற்றோர் கூறுவார்கள் என்கிறார். தானும் அத்தகைய சமயங்களில் சிறிது காலம் அமைதியாக இருந்து அந்த சவாலை ஏற்றுக்கொண்டு கடக்க முயற்சிப்பேன் என்கிறார் தான்யா. பள்ளி, கல்லூரி நாட்களில் எவ்வித கேலியையோ அல்லது பெரிய புறக்கணிப்புகளையோ தான் சந்தித்ததில்லை என்கிறார் அவர். ஏழாம் வகுப்பு வரை கண்ணூரின் தர்மசாலாவில் உள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் படித்தார், பின்னர் 12ம் வகுப்பு வரை அனைவரையும் உள்ளடக்கிய பள்ளியில் படித்தார். பின்பு, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிப்பில் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்று, 2024ம் ஆண்டில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார். பட மூலாதாரம்,Thanya Nathan "நீதித்துறையை தேர்ந்தெடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சட்ட ரீதியான அறிவு நிச்சயமாக ஒரு பலம். விவாதம் நடத்துவதோ அல்லது குரலை உயர்த்துவதோ இத்துறைக்கு முக்கியம் அல்ல. உங்களின் கருத்துகளை தெளிவாக சொல்வதுதான் முக்கியம் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. விளிம்புநிலையில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு சட்ட அறிவு நிச்சயம் வேண்டும். உங்களின் உரிமைகளை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் எந்தவித தாக்குதலுக்கு ஆளாகும்போதும் உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்." சிறப்புப் பள்ளியில் படித்தது முக்கிய காலகட்டம் என்று கூறும் அவர், அங்குதான் பிரெய்லியில் படிப்பது உள்ளிட்ட மற்ற சமூக திறன்களை கற்றுக்கொண்டதாக கூறினார். "என்னுடைய சிறுவயது எல்லோரை போலவேதான் இருந்தது, ஒரு வித்தியாசம் எனக்கு பார்வை ரீதியான சவால் இருந்ததுதான். என்னைப் போன்றவர்கள் இந்த உலகத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கும். அதற்கு என் குடும்பம், நண்பர்கள், என்னுடைய சீனியர் சுனில் குமார் போன்றோர் எனக்கு உறுதுணையாக இருந்துவருகின்றனர். என் சீனியர் சுனில் குமார் எனக்கு தந்தை போன்றவர். ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லித் தருவார்." தான்யாவின் மூத்த வழக்கறிஞர் சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆரம்பத்தில் அவர் எப்படி பணியாற்றுவார் என்பதில் எங்களுக்கு பயம் இருந்தது. ஆனால், ஒரு வாரத்திற்குள்ளேயே தான்யா தன் திறமையை வெளிப்படுத்தினார். தான்யாவின் வாதங்களை நீதிபதிகள் அடிக்கடி பாராட்டுவார்கள். ஒரு வழக்கை தாக்கல் செய்வது, வாதிடுவது என எல்லா பணிகளையும் தனியாக பார்ப்பார்." என்றார். தான்யா நீதிமன்றத்தில் தனக்கென உதவியாளர் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. எனினும், தனக்காக கிளார்க் ஒருவரை நியமித்துள்ளார், அவர் தான்யாவுக்காக தட்டச்சு செய்வது உள்ளிட்ட பணிகளில் உதவுகிறார். நீதித்துறையில் சவால்கள் பாகுபாட்டுடன் அணுகுபவர்களையோ அல்லது அவர்களின் கருத்துகளையோ தான்யா நாதன் பொருட்படுத்துவதில்லை. "நான் எல்எல்பி படிப்பை படிக்க முடியுமா என சிலர் கேட்பார்கள். என்னால் வழக்கறிஞராக வேலை பார்க்க முடியுமா என கேள்வி கேட்பார்கள். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிரெய்லி புத்தகம் (சித்தரிப்புப் படம்) நீதித்துறையில் பார்வை சவால் கொண்டவராக அவருக்கான வாய்ப்புகள் எப்படி இருந்தன? "நிச்சயமாக சமவாய்ப்பு என்பது இல்லை. ஆனால், சிலவற்றை செயல்படுத்துவதன் மூலம் இதனை மாற்ற முடியும். குறிப்பாக, கேரளாவில் நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்துவது நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்." என்கிறார் தான்யா. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கண்ணூரில் உள்ள தலிபரம்பா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்துவந்தார் தான்யா. எனவே, அவர் இந்த தேர்வுக்காக தனியே பயிற்சி பெறவில்லை. வழக்கறிஞராக பயிற்சி பெறுவதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு போதுமானதாக இருந்திருக்கிறது. அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இன்னும் ஓராண்டு காலம் அவர் வழக்கறிஞராக பயிற்சி பெற வேண்டும். "வழக்கறிஞராக பணியை தொடங்கியபோது என் மனதில் நிறைய நிச்சயமற்ற விஷயங்கள் இருந்தன. எனக்கு வேலை செய்வதற்கான சௌகரியமான சூழல் கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், இந்த அழுத்தங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் கால்பதித்த உடனேயே மறைந்துவிட்டது. முதல் நாள் நீதிமன்றம் சென்றபோது நான் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். சிவில் வழக்கில்தான் வாதாடினேன். என்னுடைய வாதத்தை நீதிபதி பாராட்டினார். மற்ற வழக்கறிஞர்கள் எல்லோரும் எனக்கு ஊக்கமளித்தனர். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொண்டனர். நான் எப்போதெல்லாம் வாதிடுகிறேனோ அப்போதெல்லாம் நீதிபதிகள் என்னை மனதார பாராட்டினர். அந்த ஊக்கம் தான் தொடர்ந்து என்னை முன்னேறச் செய்தது." என கூறுகிறார் தான்யா. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் என்ன மாற வேண்டும்? பார்வை சவால் உட்பட மாற்றுத்திறன் உடையவர்களுக்கு நீதிமன்றங்கள் அணுகக்கூடிய விதத்தில் இருக்கின்றதா என கேட்டதற்கு, "நீதிமன்றங்களில் உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கின்றன. எங்களின் ஊன்றுகோல் உதவியுடன் நாங்கள் நீதிமன்றங்களின் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும். ஆனால், உடலியல் ரீதியான சவால்களை கொண்டிருப்பவர்களுக்கு நீதிமன்றங்கள் முழுவதும் அணுகக் கூடியதாக இல்லை. மாடிப்படிகள் அவர்களுக்கு தடைகளாக இருக்கின்றன, மேலும் சில இடங்களில் சாய்வு நடைபாதை (ramp) இருப்பதில்லை. இவையெல்லாம் மாற வேண்டும்." என கூறினார். தான்யாவுக்கு வழக்குகள் தொடர்பாக மலையாள மொழியில் உள்ள பழைய ஆவணங்கள் பிரெய்லி அல்லது டிஜிட்டல் வடிவில் இல்லாததால், அவரால் அவற்றை அணுகுவதில் சிரமங்கள் இருப்பதாக கூறுகிறார் வழக்கறிஞர் சுனில் குமார். எனவே, அவற்றை டிஜிட்டல்மயப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். தொழில்நுட்பத்தின் மூலம் இந்த விஷயங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் தான் சமவாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் தான்யா வலியுறுத்துகிறார். ஸ்க்ரைப் உதவி மூலம் தனி அறையில் தேர்வு எழுதியுள்ளார் தான்யா. மாற்றுத்திறன் உடையவர்கள் இத்தகைய தேர்வெழுதுவதற்கான தற்போதைய நடைமுறைகள் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். "ஸ்க்ரைப் நியமித்தல், பதவி உயர்வு போன்றவை தொடர்பாக சமீப காலங்களில் உச்ச நீதிமன்றங்கள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிசெய்துள்ளன." என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். "நம்முடைய இலக்கை அடைவதற்கு தொடர்ந்து கடினமாக உழைக்கும்போது அதற்கு பலன் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் தயங்கக்கூடாது. உச்ச நீதிமன்றம் நமக்கான வழியை திறந்துவிட்டுள்ளது, இனி, நாம்தான் நீதித்துறைக்குள் நுழைவதற்கான வேலைகளை செய்ய வேண்டும்." கடந்த 2009ம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே திமிரி கிராமத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் கொண்ட டி.டி. சக்கரவர்த்தி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 4 வயதில் உடல்நலக் குறைபாட்டால் பார்வையை இழந்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அதேபோன்று, 2018ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த பிரம்மானந்த சர்மா என்பவர் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தன்னுடைய 22வது வயதில் கிளைகோமா நோயால் பார்வையை இழந்தவர் என ஊடக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், முழு பார்வை மாற்றுத்திறன் கொண்டவரான தான்யா, இளம் வயதில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4x3l6d38o
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பெற்று ஓமானை 105 ஓட்டங்களால் வென்றது இலங்கை 12 Feb, 2026 | 03:29 PM (பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி) ஓமானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சொந்த மண்ணில் சர்வதேச ரி20 மற்றும் ரி20 உலகக் கிண்ண போட்டிக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கையைக் குவித்த இலங்கை 105 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இன்றைய வெற்றியுடன் இரண்டு வெற்றிகளை ஈட்டியுள்ள இலங்கை பி குழுவில் 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்றைய போட்டியில் சொந்த மண்ணில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை இலங்கை படைத்த அதேவேளை, தசுன் ஷானக்க சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கான அதிவேக அரைச் சத சாதனையை நிலைநாட்டினார். மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ரி20 போட்டியில் 20 பந்துகளில் அரைச் சதம் குவித்த தசுன் ஷானக்க இன்றைய போட்டியில் 19 பந்துகளில் அரைச் சததத்தைப் பூரத்திசெய்து தனது முந்தைய சாதனையைப் புதுப்பித்தார். ஓமானுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது சொந்த மண்ணில் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கையின் இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். கென்யாவுக்கு எதிராக ஜொஹானெஸ்பேர்க் மைதானத்தில் 2007இல் 6 விக்கெட் இழப்புக்கு பெறப்பட்ட 260 ஓட்டங்களே சர்வதேச ரி20 கிரிக்கெட் மற்றும் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். ஆரம்ப வீரர்கள் காமில் மிஷார (8), பெத்தும் நிஸ்ஸன்க (13) ஆகிய இருவரும் மீண்டும் பிரகாசிக்கத் தவறினர். (42 - 2 விக்.) என்றாலும் குசல் மெண்டிஸ் மூன்றாவது விக்கெட்டில் பவன் ரத்நாயக்கவுடன் பகிர்ந்த 94 ஓட்டங்களும் நான்காவது விக்கெட்டில் தசுன் ஷானக்கவுடன் பகிர்ந்த 63 ஓட்டங்களும் இலங்கையை பலமான நிலையில் இட்டது. பவன் ரத்நாயக்க 28 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டநாயகனானார். தசுன் ஷானக்க பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களைக் குவித்து களம் விட்டகன்றார். குசல் மெண்டிஸ் 45 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் ஆனார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இது அவரது 19ஆவது அரைச் சதமாகும். கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஜித்தேன் ராமானந்தி 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 226 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 20 ஓவர்களையும் தாக்குப்பிடித்து 9 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஓமான் துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். 43 வயதான மொஹமத் நதீம் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரை விட வசீம் அலி 27 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238491
-
கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க
கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க 12 Feb, 2026 | 02:56 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கொக்கிளாய் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எதிர்வரும் மேமாதத்திற்குள் துறைசார்ந்தவர்கள் கையளித்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்நேற்று புதன்கிழமை 11 இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எமது கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கு முன்வந்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றேன். அதேபோல் கொக்கிளாய் - புல்மோட்டை்இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றேன். ஏற்கனவே கடந்த 13.08.2025 அன்று இடம்பெற்ற ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தேன். அதற்கமைய 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே சாத்தியவள ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தங்களிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன். என அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை முன்வைத்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் மேமாதத்திற்குள் குறித்த பாலத்தினை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை துறைசார்ந்தவர்கள் சமர்ப்பித்தால் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார். அந்தவகையில் எதிர்வரும் மேமாதத்திற்குள் தம்மால் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலம் அமைப்பதற்குரியாசாத்தியவள அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238481
-
பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில் தரையிறங்கியது - சோமாலியாவில் சம்பவம்
பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில் தரையிறங்கியது - சோமாலியாவில் சம்பவம் 12 Feb, 2026 | 11:51 AM சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானமொன்று வானில் பறந்த 15 நிமிடங்களிலேயே திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஓடுபாதையை விட்டு விலகி, கடற்கரையோரத்தில் ஆழமற்ற நீர்ப்பரப்பில் தரையிறங்கிய சம்பவம் சோமாலியாவில் இடம்பெற்றுள்ளது. சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை (10) இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கடற்கரையோர நீர்ப்பரப்பில் தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதன்போது எவருக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றும் விமானத்தில் இருந்த 50 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமானம் மட்டுமே சேதமடைந்திருப்பதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் முகமது ஃபரா நூஹ் (Mohamed Farah Nuh) குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/238460
-
'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா?
'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உஸ்மான் தாரிக் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'அவர் என்ன செய்தார் என்பதை இந்தியாவால் கூட புரிந்துகொள்ள முடியாது.' 'இது இந்தியாவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக இருக்கும்.' பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, இந்தியத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் போட்டி குறித்த நிகழ்ச்சியில் இப்படி பேசப்பட்டது. இந்த விவாதம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கை பற்றியது. இவருடைய தனித்துவமான பந்துவீச்சு முறை இதற்கு முன்பே விவாதத்திற்குள்ளாகியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியின் காட்சிகள் இந்தியாவில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. அதனைத் தொடர்ந்து, உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து சில சமூக ஊடகப் பயனர்கள் கேள்வி எழுப்பினர். உஸ்மான் ஓடிவந்து நிறுத்தி பின்பு பந்து வீசும் விதம், விதிகளின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும் இந்த முழு விவாதத்திற்கும் மத்தியில், இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உஸ்மான் தாரிக்குக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்? ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி என்ற சமூக வலைதள பயனர், உஸ்மானின் பந்துவீச்சில் அமெரிக்க பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டமிழக்கும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், உஸ்மான் பந்தை வீசுவதற்கு முன்பு ஒரு கணம் நிற்பது காணப்படுகிறது. ''ஆக்ஷன் ஒகே. ஆனால் நிறுத்துவது? அதுவும் பந்தை வீச வேண்டிய தருணத்தில் அவ்வாறு செய்வதா? இதை தொடரக்கூடாது'' என்று அந்த வீடியோ குறித்து ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பதிவிட்டுள்ளார். ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியின் பதிவை மறுப்பதிவிட்டு எழுதிய அஸ்வின்,'' ''ஒரு பேட்ஸ்மேன் எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நின்று அடிக்கலாம். இப்படி செய்வதற்கு முன்பு அம்பையரிடமோ, பந்துவீச்சாளரிடமோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு பந்துவீச்சாளர் விஷயத்தில் மட்டும் விதி கடுமையாக இருக்கிறது. அம்பையரிடம் சொல்லாமல் நடுவில் கையை மாற்றி பந்து வீசக் கூடாது. இந்த விதிதான் முதலில் மாற்றப்பட வேண்டும்," என்று எழுதியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உஸ்மான் தாரிக் இதற்கிடையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு வீடியோவில், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சு வலிமையானது என்று விவரித்ததுடன், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது என்று கூறியுள்ளார். "உஸ்மானின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது. நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று யாரோ ஒருவர் நிறுத்துவது போல் இது உணர்வைத் தருகிறது. அவர் நிறுத்திவிட்டு பின்னர் பந்து வீசுகிறார். அதேபோல் மெதுவாகப் பந்து வீசுகிறார். இதில் எந்தப் பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது சரியானதுதான். நீங்கள் நிறுத்தி பந்து வீசலாம். அதைப் பற்றி எந்த விதியும் இல்லை. மேலும் அவர் வீசும் மெதுவான பந்துகளில் கூட, முழங்கை மடங்குவது இல்லை," என்றார். ஆனால், கையை வளைக்காமல் பந்தின் வேகத்தை 20 முதல் 25 கிலோமீட்டர் வரை அதிகரிக்க முடியுமா என்ற கேள்வியையும் ஆகாஷ் சோப்ரா எழுப்பினார். இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில், அஸ்வின் எக்ஸ் தளத்தில் மற்றொரு நீண்ட கருத்தைப் பதிவிட்டார். அதில் அவர், "முதலில், பந்துவீச்சு முறை சரியா இல்லையா என்பதை ஐசிசி பந்துவீச்சு சோதனை மையத்தில் மட்டுமே சோதிக்க முடியும்," என்று கூறினார். "இரண்டாவதாக, 15-டிகிரி விதி உள்ளது. அதன்படி, பந்துவீச்சாளர் தனது முழங்கையை 15 டிகிரி வரை நேராக்கலாம். மேலும், பந்துவீச்சாளர் 15 டிகிரியில் பந்து வீசுகிறாரா இல்லையா என்பதை மைதானத்தில் இருக்கும் நடுவர் தீர்மானிப்பது சாத்தியமற்றது." மேலும், "இதற்கு ஒரே தீர்வு, போட்டி நடக்கும் நேரத்திலேயே சோதனை கருவியை அறிமுகப்படுத்துவதுதான். இது ஒரு தெளிவற்ற விஷயம், இந்தத் தெளிவற்ற விஷயத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஆதாயம் அடைகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறு. கிரீஸுக்குள் பந்து வீசும்போது நிறுத்துவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, அது அவருடைய வழக்கமான பந்துவீச்சு முறை என்பதால் அது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்றே நான் நம்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இயன் பிஷப் உஸ்மான் தாரிக் தனது பந்துவீச்சு பற்றி கூறியது என்ன? சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, உஸ்மான் தாரிக் அளித்த பேட்டி ஒன்றில், தனது பந்துவீச்சு முறை சாதாரணமாகத் தெரிவதில்லை, ஏனெனில் தனக்கு 'இரண்டு முழங்கைகள்' உள்ளன என்று கூறியிருந்தார். தனது பந்துவீச்சு முறை குறித்து ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டபோது, தான் மருத்துவரிடம் சென்று தனது இரு கைகளையும் பரிசோதித்ததாக அவர் கூறினார். அவரது உடல் அமைப்பு ஒரு சாதாரண மனிதரிடமிருந்து வேறுபட்டது என்கிறார் உஸ்மான் தாரிக். மேலும், "இது பிறப்பிலிருந்தே இருக்கிறது, இரண்டு முழங்கைகள் இருப்பதால், என்னால் என் கைகளை நேராக்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், உஸ்மான் தாரிக் லாகூரில் உள்ள பயோமெக்கானிக்ஸ் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், அங்கு அவரது பந்துவீச்சு முறை அங்கீகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தாரிக் பந்து வீச்சு தொடர்பான அடுத்தடுத்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆட்டம் எவ்வளவு ஆபத்தானது? அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற பிறகு ஈஎஸ்பிஎன் (ESPN) தளத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து பேசினார். "அவர் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசுகிறார். அவர் ரவுண்ட் ஆர்ம் முறையிலும், பின்னர் ஓவர் தி டாப் முறையிலும் வீசுகிறார். இது உங்களுக்கு வெவ்வேறு அளவிலான பவுன்ஸ்களை வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, அவர் பந்து வீசுவதற்கு முன்பு நிறுத்தி, பேட்ஸ்மேன் எங்கே நகரக்கூடும் அல்லது அவர் என்ன ஷாட் ஆடக்கூடும் என்பதைப் பார்க்க அவருடைய கால்களைக் கவனிக்கிறார். பின்னர் அவர் பந்தை வீசும்போது, அது பேட்ஸ்மேனின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார். அந்தச் சிறிய நிறுத்தம் தான் பந்துவீச்சாளருக்கு பேட்ஸ்மேனை விட முன்னிலை கொடுக்கிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் அதே விவாதத்தில் கூறினார். "ஏனெனில், இது அவருக்கு வெவ்வேறு மாற்றங்களை முயற்சிப்பதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது. கடந்த சில போட்டிகளில் நாம் பார்த்தது என்னவென்றால், அவர் (உஸ்மான்) சிறந்த மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைக் கூட ஆட்டமிழக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு அவரது தனித்துவமான பந்துவீச்சு முறை மிகவும் முக்கியமானதாக அமையலாம்," என்றார். விதிகள் என்ன? இதுகுறித்த அம்சங்களைப் புரிந்துகொள்வதற்காக, லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயோமெக்கானிக்ஸ் நிபுணர் பேராசிரியர் முகமது ஓவைஸுடன் பிபிசி உருது பேசியது. கடந்த காலங்களில், பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறையைச் சோதிப்பதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேராசிரியர் ஓவைஸைப் பணியமர்த்தியுள்ளது. "பந்து வீசும்போது நிறுத்துவதைப் பொறுத்தவரை, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை, பந்து வீசும்போது முழங்கை கோணத்தின் மாற்றம் 15 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது. முழங்கையில் ஏற்படும் மாற்றம் 15 டிகிரி அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், அந்தப் பந்து செல்லுபடியாகும் எனக் கருதப்படும்," என்றார். "ஒரு பந்துவீச்சாளர் நிறுத்தி பந்து வீசினால், அப்போதும் அதே விதிகள் பொருந்தும் என்பது உறுதி. ஐ.சி.சி விதிகளில் நிறுத்தி பந்து வீசுவது குறித்து எந்த விதிமுறையும் இல்லை, 15 டிகிரி சாய்வு பற்றி மட்டுமே பேசுகிறது," என்றார். "சில நேரங்களில் ஒரு பந்துவீச்சாளரின் கை அமைப்பு இயற்கையாகவே அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும். எனவே, வெறும் கண்ணால் பார்க்கும்போது, பந்துவீச்சாளர் பந்தை எறிகிறார் , அதாவது தவறான முறையில் பந்து வீசுகிறார் என்று தோன்றலாம். இருப்பினும், ஐ.சி.சி கேமராக்கள் மூலம் அளவிடப்பட்டு ஆய்வு செய்யப்படும்போது, அது 'சக்கிங்' வகையின் கீழ் வராது. அந்தச் சோதனையில் பந்துவீச்சாளர் தவறாக வீசுவது நிரூபிக்கப்படாமல் போக முற்றிலும் வாய்ப்புள்ளது," என்றார். உஸ்மான் தாரிக்கின் பின்னணி ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தகவலின்படி, உஸ்மான் தாரிக் நவம்பர் 2023-இல் பாகிஸ்தான் தேசிய டி20 கோப்பை போட்டியில் அறிமுகமானார். அவர் 2024-இல் பிஎஸ்எல் தொடரிலும் பங்கேற்றார், ஆனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், 2024-25 காலப்பகுதியில், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் மீண்டும் விளையாடத் தொடங்கி, 15 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், இந்தக் காலக்கட்டத்தில் அவரது பந்துவீச்சு முறை குறித்து இரண்டு புகார்கள் வந்தன. முதல் முறை 2024 பிஎஸ்எல் தொடரின் போது புகார் எழுந்தது. ஆனால், லாகூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, அவர் தேர்ச்சி பெற்றார் மற்றும் அவரது பந்துவீச்சு தொடர்ந்தது. அடுத்த பிஎஸ்எல் தொடரிலும் அவர் மீது மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டது, ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையிலும் அவர் தேர்ச்சி பெற்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c626jnllrn5o
-
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம் Feb 12, 2026 - 06:15 PM உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் C 76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (12) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் நீதிமன்றங்களை நிறுவும் பணிகளை இன்று (12) நேரில் கண்காணித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதேபோல், முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றங்களை நிறுவுவதற்காகப் பொறுப்பேற்கப்பட்ட ஏனைய வாசஸ்தலங்களிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக வழங்குமாறு அவர் குறிப்பிட்டார். ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளைச் செயற்படுத்தி, வழக்குக் காரியங்களை விரைவுபடுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்ட நான்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் தற்காலிக அடிப்படையில் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. இலக்கம் B/88, கிரகரி வீதி, கொழும்பு 07, இலக்கம் C-76, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07, இலக்கம் B-108, விஜேராம வீதி, கொழும்பு 07 மற்றும் இலக்கம் B-12, ஸ்டேன்மோர் கிரசன்ட் ஆகிய முகவரிகளில் உள்ள 4 வீடுகள் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmljgb3bx0007356n6zh1ws40
-
பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப்
பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப் 11 Feb, 2026 | 03:23 PM அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டு, பின்னர், கழிவறை டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த கால பயங்கரவாதத்தை தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது தவறு. அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய இராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக், முஷாரப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்றும் அவர் கூறினார். இன்று பாகிஸ்தான் சந்தித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் எதிரொலி என மேலும் அவர் தெரிவித்தார். கடந்த 6ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், தாக்குதலுக்கு காரணமான தற்கொலைக்குண்டுதாரி என அடையாளம் காணப்பட்ட யாசிர் என்பவர் குறித்த தாக்குதலுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என கூறப்பட்டது. அதனையடுத்து, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மேற்கண்டவாறு பேசிய அமைச்சர் ஆசிப், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பாகுபாடின்றி செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/238392
-
'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன?
'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 11 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'ஆட்சியில் பங்கு' என காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் தொடர்ந்து கோரிவரும் நிலையில் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என தொடர்ந்து கோரிவரும் நிலையில், சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'கூட்டணி ஆட்சி கிடையாது' என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கும் வகையில் கருத்தைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் தாமதமாகி வருவதில் காங்கிரஸ் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில், முதலமைச்சரின் இந்தக் கருத்து வந்து சேர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சிக்கான பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனாலும் அதற்குப் பிறகும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் ஏதும் துவங்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதியன்று ஊடகம் ஒன்றிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், "எங்கள் கட்சியின் சார்பில் வாக்குறுதிகளை கட்சியின் தலைவர்கள் வழங்குவார்கள். இதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியில் பங்கு பெறுவது அவசியம்" என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியான மாணிக்கம் தாகூர், புரொஃபஷனல் காங்கிரசைச் சேர்ந்த பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோரும் வலியுறுத்த ஆரம்பித்தனர். பட மூலாதாரம்,@mkstalin/X டெல்லியில் கூட்டம் இதற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' எனக் கூறிவந்ததால், அக்கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கலாமோ என்ற யூகங்கள் எழுந்தன. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஜனநாயகன் படம் வெளியாக எவ்வளவு நாட்கள் ஆகலாம்? தயாரிப்பு நிறுவனம் முன்னுள்ள ஒரே வாய்ப்பு 500 வீரர்களுடன் அக்பரின் பெரும் படையை எதிர்க்கத் துணிந்தெழுந்த ராணி துர்காவதி 'வங்கதேசத்தவர்' என்ற புகாரில் கைதாகும் தொழிலாளர்கள்: கோவை, திருப்பூர் ஜவுளி தொழில்களில் என்ன நடக்கிறது? ரூ.100 கோதுமை திருடியதாக 45 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் ஒருவர் கைது - என்ன நடந்தது? End of அதிகம் படிக்கப்பட்டது இதெல்லாம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் துவங்கவேயில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப. சிதம்பரம், மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கு.செல்வப்பெருந்தகை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்காதது தொடர்பாக காங்கிரசின் வருத்தத்தை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். "தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாகக் குழுவை அமைக்க வேண்டும். விரைவில் தேர்தல் உடன்பாட்டை எட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தவும் வேட்பாளர் தேர்வுகளைச் செய்யவும் எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். கடைசி நேரத்தில் அறிவித்தால் குழப்பம்தான் வரும். தி.மு.க பேச்சு வார்த்தையைத் தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,K.Selvaperunthagai/FB படக்குறிப்பு,செல்வப்பெருந்தகை (கோப்புப் படம்) கு. செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சுக்கு விளைவு இருந்தது. செவ்வாய்க்கிழமையன்று இரவில், கூட்டணிப் பேச்சு வார்த்தை தொடர்பாக அறிக்கை ஒன்றை தி.மு.க. வெளியிட்டது. "வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் அவர்களால் விரைவில் அமைக்கப்படவுள்ள தி.மு.க-வின் தொகுதிப் பங்கீட்டுக் குழு, சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடும்" என்று அந்த அறிக்கை கூறியது. இதற்கு அடுத்த நாள் சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார். காங்கிரசுடனான கூட்டணி குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த முதலமைச்சர், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது எனத் தெரிவித்திருக்கிறார். "(காங்கிரசுடன்) கூட்டணி நிச்சயமாக நன்றாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பதைப் போல இல்லை. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் (காங்கிரசுக்கும்) தெரியும். இடையில் ஏதாவது பிரச்னை ஏற்படுத்தலாம் என நினைப்பவர்கள் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். நாங்களும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்களும் கவலைப்படவில்லை." என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, தி.மு.க-வின் சில அமைச்சர்கள் கூட்டணி ஆட்சி தி.மு.கவுக்கு ஏற்புடையதல்ல எனக் கூறிவிட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் எதிர்வினை பட மூலாதாரம்,Manickam Tagore / Facebook படக்குறிப்பு,மாணிக்கம் தாகூர் அடுத்தது கூட்டணி ஆட்சிதான் என காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து குரல் எழுப்பிவந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், உடனடியாக இதற்கு எதிர்வினையாற்றினார்கள். விருதுநகர் தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பியான மாணிக்கம் தாகூர், "மக்கள் முடிவு செய்வார்கள் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006இல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தியும் எதிர்வினையாற்றினார். "மற்ற மாநிலங்கள் அனைத்தும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும்போது, தமிழ்நாட்டின் 'தனித்தன்மை' என்ற காரணத்தைக் கூறி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பது ஏன்? மற்ற இந்தியர்களைப் போலவே, தமிழ்நாட்டு மக்களுக்கும் கூட்டணி ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று குறிப்பிட்டார். கூட்டணி ஆட்சி என்பதை முதல்வர் மறுத்துவிட்ட நிலையில் இனி காங்கிரஸ் இதனைத் தொடர்ந்து வலியுறுத்துமா? "அதனை இப்போது வெளியில் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் அந்தத் தருணத்தில் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பார்கள்" என பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கு. செல்வப்பெருந்தகை மிகக் கவனமாகவே இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும் சேர்ந்து பேசி இதற்கு ஒரு தீர்வைக் காண்பார்கள். எல்லோரும் அவரவர் கருத்தைச் சொல்வார்கள். முடிவு செய்ய வேண்டியது, தேசியத் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும்தான். ஊடகங்களில் யூகங்களை உருவாக்காதீர்கள்" என்று கூறி இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். பட மூலாதாரம்,Praveen Chakravarty/Facebook படக்குறிப்பு,பிரவீண் சக்கரவர்த்தி ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை இது குறித்து பேசாதபோது மாநில அளவில் சிலர் சொல்லும் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். "2006ல் தவறு செய்துவிட்டோம் என மாணிக்கம் தாகூர் நினைத்தால், அவர் அதனை காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் கேட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு, மூன்று பேர்தான் இதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கூடுதல் இடங்களைக் கேட்பது நியாயமானதுதான். தேர்தல் முடிவுகள் வரும்போது எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போதுகூட ஆட்சியில் பங்கு கேட்கலாம். ஆனால், தேர்தலுக்கு முன்பே இப்படிக் கேட்பது சரியல்ல. தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்பார்கள்?" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். தி.மு.கவைப் பொறுத்தவரை 22ஆம் தேதிதான் பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருக்கிறார்கள். இந்த நிலையில், முதல்வரின் பேச்சு ஆழம் பார்ப்பதற்காக சொல்லப்பட்ட கருத்து என்று கருதுவதாகச் சொல்கிறார் ப்ரியன். "காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை யாரும் எதையும் சொல்ல முடியும். கேரளாவில் காங்கிரஸின் கொள்கைக்கே மாறுபட்ட கருத்தையெல்லாம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணியைப் பற்றி ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்கிறார்கள். காங்கிரசின் பக்கம் இருந்து பார்க்கும்போது இதுபோன்ற அழுத்தம் நல்லதுதான். கூடுதல் இடங்களைப் பெற உதவலாம். ஆனால், முதல்வர் இது குறித்து தெளிவுபடுத்திய பிறகும் இதைச் சொல்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமளிக்கிறது" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ராகுல் காந்தியும் சந்தித்தபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார் அவர். திமுக கூறுவது என்ன? ஆனால், தனித்து ஆட்சி என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. "கூட்டணி ஆட்சி வேண்டுமென்றால் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும். மக்கள் யாருக்கு எவ்வளவு இடங்களை அளிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். எந்தக் கட்சிக்கும் தனியாக பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், மற்ற கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், நாம் ஒரே கூட்டணியாக இணைந்து நின்று, அந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியை ஆட்சியில் அமர்த்த வாக்குக் கேட்கிறோம். அம்மாதிரி சூழலில், கூட்டணி ஆட்சி என்று கேட்டால் எப்படி?" என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன். 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் தவறுசெய்துவிட்டதாக மாணிக்கம் தாகூர் சொல்வது குறித்துக் கேட்டபோது, அந்தக் கருத்து சரியானதல்ல என்கிறார் அவர். "2006ஆம் ஆண்டில் தி.மு.க 128 இடங்களில் போட்டியிட்டது. மற்ற இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்தத் தருணத்திலேயே தனித்துப் பெரும்பான்மை பெறுவது கடினம் என்பது தி.மு.க-வுக்குத் தெரியும். இருந்தபோதும் தி.மு.க. ஆட்சியமைக்க வாக்களியுங்கள் என்றுதான் பிரச்சாரம் நடந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைத்தன. ஆகவே அது தி.மு.க. ஆட்சியமைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட இடங்கள்தான். கூட்டணி ஆட்சி அமையட்டும் என்று கொடுத்தது அல்ல. அப்போது காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டாலும் இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் அந்த ஆட்சி நீடித்திருக்கும்" என்று அவர் கூறுகிறார். "தற்போதைய காலகட்டத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த அலையும் இல்லாவிட்டால் ஒரே ஒரு கட்சி மட்டும் தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது கடினம்" என்று கூறும் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன், தமிழ்நாட்டில் எப்போதுமே மக்கள் ஒரே கட்சியின் ஆட்சிக்காகத்தான் வாக்களிக்கிறார்கள்" என்கிறார். எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன? பட மூலாதாரம்,X/Edappadi K Palaniswami படக்குறிப்பு,கோப்புப் படம் இந்நிலையில், 'கூட்டணி ஆட்சி' குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக- என்டிஏ கூட்டணியில் இந்தப் பிரச்னை இல்லையென்றும்", "அதிமுக தான் ஆட்சியமைக்கும்" என்றும் கூறினார். இன்று (பிப்ரவரி 11) தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர் "இது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் உள்ள கூட்டணி பிரச்னை. இதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், முதலமைச்சர் பேசியதற்கு உடனடியாக ஒரு காங்கிரஸ் தலைவரிடமிருந்து எதிர்வினை வருகிறது. இது அங்கு ஒரு குழப்பமான சூழல் நிலவுவதைப் பார்க்க முடிகிறது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் கூட்டணியில் இந்தக் குழப்பம் இல்லை, அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக- தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், அதிமுக ஆட்சியமைக்கும், நான்தான் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர், இதெல்லாம் முன்பே தெரிவிக்கப்பட்டதுதான்" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp9mz528zxgo
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின் சடலத்துடன் போராடிய உறவுகள்! Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 02:16 PM யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (12) வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது. https://www.virakesari.lk/article/238471
-
வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!
வணிகக் கப்பல் பாதுகாப்பு சேவைகள் மூலம் 4 மாதங்களில் 598,250 அமெரிக்க டாலர் ஈட்டிய இலங்கை கடற்படை Published By: Vishnu 12 Feb, 2026 | 04:06 AM மேலும், இலங்கை கடற்படை ஏற்கனவே கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்குத் தேவையான பௌதீக மற்றும் மனித வளங்களைக் கொண்டிருப்பதால், கடற்படையால் குறைந்தபட்ச கூடுதல் செலவில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை சேவைகளை வழங்குவதை விரிவுபடுத்த முடிந்தது. தனியார் நிறுவனங்கள் தொடர்பான முந்தைய இயக்க முறைமையின் கீழ், தேசிய நலனுக்காக மிகக் குறைந்த வருவாய் மட்டுமே ஈட்டப்பட்டது, மேலும் புதிய செயல்படுத்தலுடன், முழு வருவாயும் அந்நியச் செலாவணியாக ஒருங்கிணைந்த நிதிக்கு வரவு வைக்கப்படுகிறது. 2009 செப்டம்பர் 10, அன்று, வணிகக் கப்பல்களுக்கு (கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள்) பாதுகாப்பு வழங்கும் ஆயுதமேந்திய காவலர்களுக்கான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை சேமிக்கும் பணியை கடற்படை தொடங்கியது, மேலும் சரியான நேரத்தில் அறிவுறுத்தல்களின் பேரில், இந்த நடவடிக்கைகள் தனியார் பங்குதாரர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டன. சேவைகளை வழங்குவதற்காக உள்ளூர் நாணயத்தில் கடற்படைக்கு மிகச் சிறிய தொகை செலுத்தப்பட்டது, மேலும் அந்த பங்குதாரர்கள் மொத்த வருவாயில் மிகக் குறைந்த தொகையை உள்ளூர் நாணயத்தில் அரசாங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, கடற்படை 2025 அக்டோபர் 03 முதல் 2026 பிப்ரவரி 08 வரை 323 கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, இதன் மூலம் கடற்படை நேரடியாக ஈட்டிய 598,250.00 அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி வருவாயை தேசிய நலன் மற்றும் பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடிந்தது. மேலும், இலங்கை கடற்படையின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பின் கீழ் வெளிநாட்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதிகளால் வழங்கப்படும் வாகனங்கள் அல்லது கப்பல்களைப் பயன்படுத்தி, இலங்கை கடற்படையின் ஆயுதக் கிடங்குகளில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை சேமித்து வைப்பதற்கும், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப அத்தகைய துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை கொண்டு செல்வதற்கும் வசதியாக, இலங்கை கடற்படையுடன் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையின் கீழ் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. https://www.virakesari.lk/article/238432
-
டிரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்; இரான் பற்றி விவாதிக்கப்பட்டது என்ன?
டிரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்; இரான் பற்றி விவாதிக்கப்பட்டது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெதன்யாகுவின் இந்த பயணம், டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாகும் கட்டுரை தகவல் டேனியல் புஷ் பிபிசி நியூஸ் 12 பிப்ரவரி 2026, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது, இரான் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகக் கூறினார். இருப்பினும், அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இரான் மீது தான் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், இரானின் அணு ஆயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையிலும் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். இரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது மட்டுமின்றி, அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொலா போன்ற குழுக்களுக்கான அதன் ஆதரவைத் துண்டிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுக்குமாறு நெதன்யாகு டிரம்ப்பை வற்புறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்குப் பதில் நடவடிக்கையாக தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாக இரான் பரிந்துரைத்துள்ளது, ஆனால் பிற கோரிக்கைகளை நிராகரித்துள்ளது. வெள்ளை மாளிகை சந்திப்பிற்கு முன்னதாக, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தனது நாடு 'அவர்களின் அதிகப்படியான கோரிக்கைகளுக்குப் பணியாது' என்று எச்சரித்தார். நெதன்யாகுவின் இந்த பயணம், டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாகும் - இது மற்ற உலகத் தலைவர்களை விட அதிகமாகும். இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் இரு தலைவர்களும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வழக்கத்திற்கு மாறாக அமைதியான சந்திப்பில் பேசினர். இதில் நெதன்யாகு கேமராக்களின் பார்வையில் படாமல் ஒரு பக்கவாட்டு நுழைவாயில் வழியாக அழைத்து வரப்பட்டார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப் அவருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை. இது தொடர்பாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட டிரம்ப், தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு "மிகவும் நன்றாக" இருந்தது என்று கூறினார். "இரானுடன் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப் பார்க்க பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்தியதைத் தவிர, தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை" என்று அவர் குறிப்பிட்டார். ஓர் ஒப்பந்தமே தனது "விருப்பம்" என்றும், ஆனால் அப்படி ஒன்றை எட்ட முடியாவிட்டால் "அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறினார். இஸ்ரேல் கூறியது என்ன? பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து தலைவர்கள் விவாதித்ததாகவும், அவர்களது "நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் உறவை" தொடர ஒப்புக்கொண்டதாகவும் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிரம்பிற்கு நெருக்கமானவராக இருக்கும் நெதன்யாகு, இஸ்ரேலுக்கு இரான் ஒரு இருப்பு ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக நீண்டகாலமாக வாதிட்டு வருகிறார், பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறார். செவ்வாயன்று வாஷிங்டன் வந்தடைந்த பிறகு, நெதன்யாகு டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரைச் சந்தித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அவர்கள் இரானுடன் நடத்திய "முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் குறித்த சமீபத்திய தகவல்களை" இருவரும் வழங்கியதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தம் பற்றி டிரம்ப் என்ன கூறினார்? அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது ராணுவ இருப்பை அதிகரித்து வரும் வேளையில் நெதன்யாகுவின் பயணம் அமைந்துள்ளது. அணுசக்தி திட்டம் குறித்து ஒப்பந்தத்தை எட்டத் தவறினால் மற்றும் போராட்டக்காரர்களைக் கொல்வதை நிறுத்தத் தவறினால் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். செவ்வாயன்று, மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவை அனுப்புவது குறித்து தான் "யோசித்து" வருவதாக டிரம்ப் கூறினார். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட வெகுஜனப் போராட்டங்களுக்கு எதிரான இரான் அரசாங்கத்தின் அடக்குமுறையை நிறுத்துவதற்காக, இரான் மீது தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் அச்சுறுத்தியதையடுத்து, கடந்த மாதம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழு அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டது. "எங்களிடம் அங்கு சென்று கொண்டிருக்கும் ஒரு கடற்படை உள்ளது, மற்றொன்றும் செல்லக்கூடும்," என்று டிரம்ப் ஆக்ஸியோஸுக்கு (Axios) அளித்த பேட்டியில் கூறினார். "இரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு விரும்புகிறது. ஒரு இராஜதந்திர தீர்வு இன்னும் சாத்தியமே" என்றும் அவர் கூறினார். அதேபோல, ஒரு நல்ல ஒப்பந்தம் என்றால் "அணு ஆயுதங்கள் இல்லை, ஏவுகணைகள் இல்லை" என்று பொருள் என டிரம்ப் 'ஃபாக்ஸ் பிசினஸ்' நிறுவனத்திடம் கூறினார். பட மூலாதாரம்,Iranian Presidency/WANA/Handout via REUTERS படக்குறிப்பு,இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், "அதிகப்படியான கோரிக்கைகளுக்கு அடிபணிய மாட்டோம்" என்று எச்சரித்தார். இரானின் நிலைப்பாடு புதனன்று தெஹ்ரானில் இரானின் இஸ்லாமியப் புரட்சியின் 47-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் பேரணியில் பெசெஷ்கியன் ஆற்றிய உரையில், "எங்கள் இரான் ஆக்கிரமிப்புக்கு முன்னால் பணியாது, ஆனால் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிம்மதியை நிலைநாட்ட அண்டை நாடுகளுடன் முழு பலத்துடன் உரையாடலைத் தொடர்கிறோம்" எனக் கூறினார். தனது நாடு "அணு ஆயுதங்களைப் பெற முயலவில்லை" என்பதையும் இரான் அதிபர் மீண்டும் வலியுறுத்தினார். "இதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம் மற்றும் எந்தவொரு சரிபார்ப்புக்கும் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமையை தங்கள் நாடு கொண்டுள்ளது என்று இஸ்ரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். டிரம்புடனான உறவை பயன்படுத்துவாரா நெதன்யாகு? இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்புக் கவலைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு பரந்த அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கு, டிரம்புடனான தனது உறவைப் பயன்படுத்துமாறு தனது அரசாங்கத்தில் உள்ள தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் அழுத்தத்தில் நெதன்யாகு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "இரான் உடனான ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அவசரத்தில், இரானின் ஏவுகணைத் திட்டம் அல்லது சில குழுக்களுக்கான அதன் ஆதரவு அல்லது அதன் அணுசக்தி திட்டத்தின் சில பகுதிகளை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான ஓர் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொள்வார் என்று இஸ்ரேல் கவலைப்படுகிறது," என்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு சேவைப் பள்ளியின் பேராசிரியர் டேனியல் பைமன் கூறினார். "டிரம்பின் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட முடிவை விட ஒரு ஒப்பந்தத்தையே அதிகம் விரும்புகிறது என்பது இஸ்ரேலின் கவலையாக உள்ளது" என பைமன் கூறுகிறார். கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய 12 நாள் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, இரான் தலைவர்கள் இப்போது பலவீனமான நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்போது இரானிய அணுசக்தி மற்றும் ராணுவ தளங்கள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன. "இரான் ஆட்சி இன்று உண்மையிலேயே பலவீனமாக உள்ளது," என்று கடற்படை முதுகலை பள்ளியின் பேராசிரியரும் மத்திய கிழக்கு அரசியல் நிபுணருமான முகமது ஹபீஸ் கூறுகிறார். "அமெரிக்காவும் இஸ்ரேலும் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக உணர்கிறார்கள். இரான் பின்தங்கிய நிலையில் உள்ளது, அவர்களால் இந்த அதிகபட்ச கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்." என்று ஹபீஸ் கூறுகிறார். பெரிய மோதலை டிரம்ப் விரும்புவாரா? டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இரான் உடனான ஒபாமா காலத்து அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் மற்றும் இரானின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த தடைகளை மீண்டும் அமல்படுத்தினார். இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான போருக்கு முன்னதாக ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக கடந்த ஆண்டு நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியது. சமீபத்திய வாரங்களில் கடுமையான உரையாடல்கள் இருந்தபோதிலும், இரு நாடுகளால் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்ட முடியாவிட்டால் கூட, இரானுடன் ஒரு நேரடி ராணுவ மோதலைத் தவிர்க்க டிரம்ப் விரும்பலாம் என்று முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். "தேர்தல் ஆண்டிற்குள் நுழையும் போது இரானுடன் ஒரு பெரிய ராணுவ மோதலை டிரம்ப் விரும்புவார் என்று நான் நினைக்கவில்லை. இரான் மக்களுக்கும் அது தெரியும் என்று நான் நினைக்கிறேன்" என்று இராக் மற்றும் துருக்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜேம்ஸ் ஜெஃப்ரி கூறினார். அடுத்த கட்டத்தில் காஸா ஒப்பந்தம் காஸாவில் தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தை அமல்படுத்துமாறு டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை வலியுறுத்தி வரும் வேளையில் இந்த பயணமும் அமைந்துள்ளது. புதனன்று, டிரம்பின் 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) உறுப்பினராக கையெழுத்திடுவதற்காக நெதன்யாகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், "வரலாற்றில் அதிபர் டிரம்ப்பை விடச் சிறந்த நண்பர் இஸ்ரேலுக்கு இருந்ததில்லை" என்றார். "அதிபர் டிரம்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஸா அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், மத்திய கிழக்கில் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும் எங்களது கூட்டாளியான இஸ்ரேலுடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்," என்று செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறினார். இஸ்ரேலுக்குள் 7 அக்டோபர் 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலால் தொடங்கிய இரண்டு ஆண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வர, கடந்த அக்டோபரில் இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 71,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இஸ்ரேலும் ஹமாஸும் ஒருவரையொருவர் அடிக்கடி போர்நிறுத்த மீறல்கள் செய்ததாகக் குற்றம் சாட்டி வருகின்றன. ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும், காஸாவிலிருந்து இஸ்ரேலிய ராணுவப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுதல் மற்றும் கடலோரப் பகுதியின் புனரமைப்பு ஆகியவற்றைக் கோரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதில் இரு தரப்பினரும் அதிக முன்னேற்றம் அடையவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn87gvm42eyo
-
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்! Feb 12, 2026 - 01:04 PM கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். தற்போது கணினி அமைப்பை மீண்டும் சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmlj576880005356nzo74yx4g
-
தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா
தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா 11 Feb, 2026 | 07:01 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் தொழில்முறை அரச சேவை சீரழிந்து வருகின்றமை கவலையளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை ஆகியவை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : இணையதளமொன்றில் வெளியிடப்பட்டுள்ள 'நீதி எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாறுகிறது' என்ற சிறந்த கட்டுரையின் பகுதிகளைப் பகிர நான் முடிவு செய்தேன். ஏனெனில், இது இலங்கை அரசின் அடித்தளத்தையே ஆழமாகப் பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது. மிகவும் சிந்தனைமிக்க மற்றும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களுடன் நான் எவ்வித தயக்கமும் இன்றி உடன்படுகிறேன். நான் சமன் ஏக்கநாயக்கவை அறிவேன், அவருடன் பணியாற்றியும் உள்ளேன். அவர் மிகவும் நேர்மையான, உயர்மட்டத் தொழில்முறைத் தகுதியுள்ள ஓர் அரச அதிகாரி ஆவார். தொழில்முறை, திறமையான மற்றும் நேர்மையான அரச சேவை இல்லாமல் ஒரு அரசாங்கம் இயங்க முடியாது. அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால அனுபவமும் தொழில்முறைத் தகுதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களிடம் அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும். ஒரு இயங்கும் ஜனநாயகத்தில், நாட்டை ஆட்சி செய்வதற்கு அரசியல் தலைவர்கள் ஒரு தொழில்முறை அரச சேவையையே சார்ந்திருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் எஞ்சியிருக்கும் நமது அரச சேவையைச் சிதைத்துவிட்டு, அதற்குப் பதிலாகக் குறைந்த தகுதியும் அனுபவமும் கொண்ட கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நியமிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை இலங்கை மக்கள் உணர்ந்ததால்தான் 'அரகலய' போராட்டமே உருவானது. நமது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. இரண்டு தசாப்தகால மோசமான ஆட்சியினால் ஏற்பட்ட அழிவுகளால் நமது நாடு நிலைகுலைந்து போயுள்ளது. தற்போதைய ஆட்சி முறை மாற்றப்படாவிட்டால், அது நாட்டை முழுமையான குழப்பத்திற்குள்ளேயே தள்ளும். இதற்கான தீர்வு மக்களிடமே உள்ளது என்ற கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும், அதன் பாரதூரமான விளைவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் நமது உன்னதமான தேசத்தை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பதை ஜனநாயக ரீதியாகத் தீர்மானிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/238423
-
இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு
இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு 11 Feb, 2026 | 03:22 PM (எம்.மனோசித்ரா) மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன. இது தொடர்பில் வினவிய போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தற்போது தடைகள் காணப்படுகின்றன. மாகாணசபை தொடர்பான சட்டம் இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. அத்தோடு பழைய தேர்தல் முறைமை தற்போது நீக்கப்பட்டுள்ளது. புதிதாக தொகுதிவாரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் எல்லை நிர்ணயம் இல்லை. தொகுதிகள் பிரிக்கப்படவில்லை. அவ்வாறெனில் புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு சட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை என்றால் இதனை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்கி, பழைய சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இதனை எமக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எமது தேவைக்கேற்ப செய்ய முடியாது. இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. மக்களின் நிலைப்பாடுகளைக் கோர வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாது. அந்த வகையில் இவ்வாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நான் நம்பவில்லை என்றார். https://www.virakesari.lk/article/238391
-
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக அறிக்கை
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக அறிக்கை 11 Feb, 2026 | 06:43 PM (எம்.ஆர்.எம்.வசீம்) புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துறைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த சட்டமூலத்துக்காக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதுடன் அவ்வாறு அனுப்பப்படும் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பில் சாதகமான முறையில் ஆராய்ந்து பார்த்த பின்னர், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐராேப்பிய சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலுக்கும் ஐராேப்பிய வெளிக்கள செயற்பாட்டு சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்துக்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பாவோலா பம்பலாேனி, இலங்கைக்கான ஐராேப்பிய ஒன்றியத்தின் தூதுவர் காமென் மொரேனோ, ஐராேப்பிய ஆணைக்குழுவின் அபிவிருத்தி மேம்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான செயற்பாட்டு குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, தென்னாசியா போன்ற துறைகளில் பதில் பிரதானி ஜேன் ஹொஸ்கின்ஸ், கொழும்பு ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ குழுவின் அரசியல் துறை தலைவர் பிரதிநிதிகளின் பிரதித் தலைவர் கலிஜா அகிசேவா ஆகியோரும் ஐரோப்பிய வெளிக்கள நடவடிக்கை சேவையின் ASIAPAC.6 பிரிவின் இலங்கைக்கான அதிகாரி ஏன் வென்ஹவுட், ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் கொழும்பு மேம்பாட்டு தலைவர் ஜொஹான் ஹெசே, ஐராேப்பிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக அதிகாரி பீடர்ஸ் தியடோர் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/238422
-
சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு
சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 12:50 PM சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும். புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு 36 மணித்தியாலங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இனி வரும் காலங்களில் நீதிமன்றம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அதிகாரி உத்தரவிட்ட 03 மணித்தியாலங்களுக்குள் அந்தப் பதிவை நீக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் டீப்ஃபேக் (Deepfake) எனப்படும் போலி வீடியோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி வைரலாகி சமூகப் பதற்றத்தை உருவாக்கும் முன்பே அதை முடக்குவதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய கட்டுப்பாடுகளை செயல்படுவது மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/238465
-
ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு
ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 09:37 AM பிரபல சமூக ஊடகங்களில் ஒன்றான வட்ஸ்அப் செயலியை ரஷ்யாவில் முற்றிலும் முடக்க அந்நாட்டு அராசாங்கம் முயற்சித்து வருவதாக மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பான 'ரோஸ்கோம்னாட்ஸோர்' வட்ஸ்அப் செயலியை அதன் உத்தியோகபூர்வ இணையக் கையேட்டில் இருந்து நீக்கியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள பயனர்கள் வட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வட்ஸ்அப் செயலியின் 'மெட்டா' (Meta) நிறுவனம் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "ரஷ்ய அரசாங்கம் மக்களை 'MAX' என்ற செயலியை பயன்படுத்த ஊக்குவிப்பதற்காக வட்ஸ்அப்பை முடக்கியுள்ளது. இந்த 'மேக்ஸ்' செயலி என்பது பயனர்களைக் கண்காணிக்கவும் உளவு பார்க்கவும் உருவாக்கப்பட்ட அரசாங்க உளவு செயலி (State-owned surveillance app) ஆகும்." என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ரஷ்ய சட்டதிட்டங்களுக்கு மெட்டா நிறுவனம் கட்டுப்பட்டால் மட்டுமே, வட்ஸ்அப்பை மீண்டும் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். பயங்கரவாதம் மற்றும் மோசடி தொடர்பான தகவல்களைப் பகிர மெட்டா மறுப்பதால், பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். உக்ரேன் மீதான போர் ஆரம்பித்த 2022-ஆம் ஆண்டு முதல், ரஷ்யாவில் பல மேற்கத்திய செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (Twitter) ஆகிய சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் (FaceTime) மற்றும் ஸ்னாப்சாட் (Snapchat) ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் முடக்கப்பட்டன. ரஷ்யாவில் மிகவும் பிரபலமான டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்த அதன் நிறுவனர் பாவெல் துரோவ், "இது ஒரு சர்வாதிகார நடவடிக்கை" எனக் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய அரசாங்கம் ஊக்குவிக்கும் 'MAX' செயலி, சீனாவிலுள்ள 'வீசாட்' (WeChat) போன்ற ஒரு செயலி ஆகும். இது பயனர்களின் இருப்பிடம், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்களை அரசாங்கம் எளிதாகக் கண்காணிக்க வழிவகுக்கும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய சூழலில், ரஷ்யாவில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான வட்ஸ்அப் பயனர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/238445
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் தீவிரம்! Feb 12, 2026 - 08:17 AM அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உயிரிழந்த நபர் பயன்படுத்திய வாகனத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதில் காணப்பட்ட தடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம். உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும், சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன. மேலும், உயிரிழந்த நபரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அந்த அறிக்கை கிடைத்ததும், அது தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்படும்" என அவர் தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmliuv1140004356n4urg9d74
-
நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!
திடீர் சந்திப்பு! Feb 11, 2026 - 11:47 AM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்தனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், "எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்" எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். -மலையக நிருபர் சதீஸ்குமார்- https://adaderanatamil.lk/top-picture/cmlhn0ioo0007356n34ryw0vp
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் Published By: Vishnu 12 Feb, 2026 | 03:27 AM (நெவில் அன்தனி) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண வராற்றில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இரண்டு அணிகளுக்கு இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (11) நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இங்கிலாந்தை 30 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது. ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் குவித்த அபார அரைச் சதம், குடாகேஷ் மோட்டி, ரொஸ்டன் சேஸ் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகள் என்பன மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை சுலபமாக்கின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர்களான ப்றண்டன் கிங் (1), அணித் தலைவர் ஷாய் ஹோப் (0) ஆகிய இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் ஆட்டம் இழந்ததால் மேற்கிந்தியத் தீவுகள் மோசமான நிலையில் இருந்தது. (8 - 2 விக்.) இந் நிலையில் ஷிம்ரன் ஹெட்மயர் (23), ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ரொஸ்டன் சேஸ் 34 ஓட்டங்களைப் பெற்று நான்காவதாக ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபர்ட், 5ஆவது விக்கெட்டில் ரோவ்மன் பவலுடன் 51 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் ஜேசன் ஹோல்டருடன் 61 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர். ரோவ்மன் பவல் 14 ஓட்டங்களையும் ஜேசன் ஹோல்டர் 17 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 33 ஓட்டங்களையும் பெற்றனர். ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் 42 பந்துகளில் 2 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஆதில் ராஷித் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இங்கிலாந்து தனது இன்னிங்ஸை வேகமாக ஆரம்பித்தபோதிலும் சிரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் சற்று தடுமாற்றம் அடைந்தது. பில் சோல்ட், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 20 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதில் பில் சோல்ட் 30 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ஜொஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர 7ஆவது ஓவரில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஜொஸ் பட்லர் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்துடன் மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. டோம் பென்டன் (2), ஜேக்கப் பெத்தேல் (33) ஆகிய இருவரே சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக் (17), சாம் கரன் ஆகிய இருவரும் ஐந்தாவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர். ஆனால், இங்கிலாந்தின் கடைசி 6 விக்கெட்கள் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. மத்திய வரிசை வீரர் சாம் கரன் தனித்து போராடியபோதிலும் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது. அவர் 30 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரொஸ்டன் சேஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்:ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் https://www.virakesari.lk/article/238431
-
வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!
வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்! Feb 12, 2026 - 07:48 AM வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்த கடந்த வருடம் ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல் நான்கு மாதங்களுக்குள் 598,250 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா தெரிவித்தார். இலங்கை கடற்படையானது வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். https://adaderanatamil.lk/news/cmlitscqb0003356nw9h8gvla
-
கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!
கனடா துப்பாக்கிச் சூடு ; 18 வயதுடைய நபர் சந்தேகநபராக அடையாளம் Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 12:25 PM கனடாவின் மேற்கு மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் உயிரிழந்ததோடு, 25 பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய நபர் சந்தேகநபராக பொலிஸாரால் அடையாள காணப்பட்டுள்ளார். சந்தேக நபரான ஜெஸ்ஸி வான் ரூட்ஸீலார் என்கின்ற இந்த நபர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்து கிடந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. முதலில் தனது வீட்டில் தாய் மற்றும் தம்பி ஆகியோரைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபர், பின்னர் அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். சந்தேக நபர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில், 39 வயதுடைய பெண் கல்வியாளர் ஒருவரும், 12 வயதுடைய பெண் மாணவர்கள் மூவரும், 12 மற்றும் 13 வயதுடைய ஆண் மாணவர்கள் இருவரும் அடங்குவர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சந்தேக நபர்கள் இருப்பதாக நம்பவில்லை என ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் பிரதி ஆணையாளர் டுவைன் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பாதிப்புகளுக்காகப் பலமுறை பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இவர்களது வீட்டிற்குப் பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் அழைக்கப்பட்டனர். இதில் சில அழைப்புகள் மனநலம் சார்ந்தவையாகவும், ஆயுதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும் இருந்துள்ளன. சந்தேகநபருக்கு துப்பாக்கி உரிமம் இருந்ததாகவும், அது காலாவதியானது எனவும் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் தாக்குதல் நடத்திய பாடசாலையை விட்டு 04 ஆண்டுகளுக்கு முன்பு பாதியில் விலகியவர் என்பதும் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/238461
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்புறம் என்னங்க தாமதம்! பையனுக்கு பட்டம் கட்டிவிடுங்கோ...
-
மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்
குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்..! 11 Feb, 2026 | 05:18 PM மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் . நினைவு நிகழ்வில் சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள், பிரதேச அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள். குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி குறித்த படுகொலையின் 30வது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்தனர். குறித்த பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டநிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது. இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238418
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
RESULT 15th Match, Group C (N), Wankhede, February 11, 2026, ICC Men's T20 World Cup West Indies 196/6 England (19/20 ov, T:197) 166/10 West Indies won by 30 runs