Everything posted by ஏராளன்
-
யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!
யாழில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு 10 AUG, 2025 | 03:07 PM யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயுடன் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (09) உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் நோக்குடன் ஆபிரக்க நாட்டில் சில காலம் தங்கியிருந்த நிலையில், ஐரோப்பிய நாட்டிற்கு செல்லும் முயற்சி கைகூடாத நிலையில் கடந்த 2 ஆம் திகதி மீண்டும் நெடுந்தீவை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி கடுமையான நடுக்கம், மாறாட்டம் போன்ற அறிகுறிகளுடன் இரவு 10.30 மணிக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒக்டோபர் 5 ஆம் திகதி காலையில் இவரது குடும்பத்தினர் மூலம் இவர் ஆபிரிக்க நாட்டிற்கு சென்று வந்த தகவல் கிடைத்ததும் மலேரியாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு உடனடியாகவே மலேரியா நோய்க்கான ஊசி மருந்துகள் நாளத்தின் ஊடாக ஏற்றப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையில் ஒக்டோபர் 7 ஆம் திகதி அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆயினும், அவருக்குக் காணப்பட்ட பல்வேறு வேறுநோய் நிலைகளால் அவர் சுய நினைவற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/222239
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மன்னார் கடற்பகுதியில் 07 இந்திய மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 10 AUG, 2025 | 01:18 PM மன்னாரை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடித்த 07 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. வட மத்திய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட படகுடன் இந்திய மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்புக்குள் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க தொடர்ந்து ரோந்து மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்தது. https://www.virakesari.lk/article/222231
-
'மீனவர்களை சிறை பிடித்த இலங்கை' - கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் - இராமேஸ்வரம்
'மீனவர்களை சிறை பிடித்த இலங்கை' - கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் 10 AUG, 2025 | 11:38 AM இராமேஸ்வரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க முயன்றனர். இதனை கண்ட ஒரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த இருதய டிக்சன் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகினை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அந்த படகில் இருந்த டல்லஸ், பாஸ்கரன், ஆரோக்கிய சாண்ட்ரின், ஸ்லைடன் சேசுராஜா, அருள், ராபர்ட், லொய்லன் ஆகிய 7 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இதனிடையே இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் தப்பி வந்த மீனவர்கள் தங்களுடன் மீன்பிடிக்க வந்த படகினையும் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற தகவலை மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதனால் பதற்றம் அடைந்த தங்கச்சிமடம் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மீனவர்களின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த போலீஸார் மீனவர்களின் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் போலீஸாரின் சமாதானத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என கூறி மீனவர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையின் போது மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவிக்காவிடில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்களின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. https://www.virakesari.lk/article/222217
-
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி போராட்டம்
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை வலியுறுத்தி திரியாயில் மக்கள் போராட்டம் 10 AUG, 2025 | 01:14 PM வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயன்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட திரியாய் கிராமத்தில் இடம்பெற்றது. பல வழிகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திரியாய் மக்கள் தொடர்ந்தும் நில அபகரிப்புக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை கூடிய மக்கள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தினர். இதில் பெருமாபாலான மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://www.virakesari.lk/article/222232
-
மீண்டும் புதிய அரசியலமைப்பு
Published By: DIGITAL DESK 2 10 AUG, 2025 | 04:56 PM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் கடந்த மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா புதிய அரசியமைப்பு சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுக்கின்ற, முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக கேள்விகளை தொடுத்திருந்தார். அந்தக்கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதிய அரசியலமைப்புக்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமது ஆட்சி நிறைவுக்கு வருவதற்குள் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் உறுதியாக கூறியிருந்தார். பிரதமரின் கூற்றில் சிறு மயக்கம் உள்ளது. அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா இல்லை, தற்போதைய அரசியலமைப்பில் மறுசீரமைப்புச் செய்யப்படுமா என்ற விடயத்தில் தெளிவான விளக்கம் காணப்படவில்லை. இந்த நிலைமையானது, எதிர்க்கட்சிக்களுக்கு ஒருவித கிலேச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தகைய சூழலில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் தொடர்பாக பரிசீலிப்பதற்காகவும் அக்குறித்த புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130 இன் கீழ் சிறப்பு நோக்கத்திற்கான பாராளுமன்றக் குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையொன்றை எதிர்கட்சிகளின் சார்பில் முன்னெடுப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த பிரேரணையானது, பெரும்பாலும் பொது எதிரணிகளின் பிரேரணையாகவே முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அதற்கான பேச்சுக்கள் தற்போது முன்னேற்றகரமான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் ஜே.வி.பி புதிய அரசியலமைப்பு பணிகளுக்கான செயற்பாடுகளை சத்தமின்றி ஆரம்பித்துள்ளது. அக்கட்சிக்கு மிக நெருக்கமான சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களை ஒன்றிணைத்து வரைவு தயாரிக்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தகவலறிந்த வரையில், இந்த அரசியலமைப்பு வரைவுச் செயற்பாடுகள் அனைத்தும் மிகமிக இரகசியமாகவே பேணப்பட்டு வருகின்றன. இந்த வரைவுச் செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தியினரை மையப்படுத்திய துறைசார்ந்தவர்களால் முன்னெடுக்கப்படுகின்றதா இல்லை ஜே.வி.பி. தலைமையகமாக பெலவத்தவின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ரில்வின் சில்வாவின் கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதில் தான் குழப்பங்கள் நீடிக்கின்றன. எவ்வாறாயினும், இச்செயற்பாடு அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் வருட இறுதியில் அல்லது மூன்றாம் வருட நடுப்பகுதியில் தான் வெளிப்படுத்தப்படவுள்ளது. அதுவரையில், புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதா அல்லது, அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களைச் செய்வதா என்பதைவெளிப்படுத்துவதற்கு அநுரவும் அவரது தோழர்களும் தயாராக இல்லை. அண்மையில் ரில்வின் சில்வா, நாட்டில் 'முறைமை மாற்றத்தினை' ஏற்படுத்தி பொருளாதார ரீதியில் முன்னோக்கி நகர்ந்து செல்வதாக இருந்தால் ஆகக்குறைந்தது தசாப்த காலம் தேவைப்படும் என்று கூறியிருப்பதன் ஊடாக, குறைந்தது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருப்பதற்கு அத்தரப்பு திட்டமிடுகின்றது என்பது வெளிப்பட்டுள்ளது. அநுரகுமாரவின் அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பொன்றையோ அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றையோ கொண்டுவர வேண்டிய தேவை உள்ளதென்பதை அவர்கள் உள்ளார்த்தமாக உணர்ந்திருக்கின்றார்கள். அதற்கு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு எதிராக நாடாளவிய ரீதியில் ஏற்பட்டுள்ள 'எதிரான மனோநிலை' நிச்சயமாக அடுத்துவருகின்ற காலத்தில் வலுவடைந்து திரட்சியடைகின்றபோது அது ஆட்சியின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும். அத்தகைய சூழலை சமாளிப்பதென்றால் ஜே.வி.பி.யிடம் காணப்படுகின்ற 'அநுர' என்ற 'தேர்தல் அரசியல் முத்திரயை' மட்டும் பயன்படுத்தி சமாளிக்க முடியாது. அந்த மூலோபாயம் தொடர்ந்து வெற்றிபெறுமா என்ற கேள்விகளும் உள்ளன. 'அநுர' என்ற தனிமனிதனுக்கும் பேச்சாற்றலுக்கும் இன்னமும் நாடாளவிய ரீதியில் 'இரசனை மிகு வரவேற்பு' இருந்தாலும் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி முரண்பாடுகளும் அதனையொத்த செயற்பாடுகளும் வாக்குகளை அலையாக திரட்டுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் அவ்விதமான சூழலில் 2029இல் 'அநுர'வை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கு மீண்டும் முகங்கொடுப்பதாக இருந்தால் அது சவால்கள் நிறைந்த முட்படுக்கைப் பயணம். ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலில் சறுக்கினால் அடுத்துவருகின்ற தேர்தல்களின் முடிவுகளும் அதன்பின்னரான விளைவுகளும் பற்றிக் கூறவேண்டியதில்லை. ஆகவே, தான் தென்னிலங்கையில் ஏற்படவுள்ள வாக்குவங்கிச் சரிவை வடக்கு, கிழக்கைப் பயன்படுத்தி ஈடுசெய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அல்லது புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுகிறது அநுர அரசாங்கம். அந்த வகையில் இரண்டாவது தடவையும் ஆட்சியை தக்கவைப்பதற்காகனதொரு 'பிடி'யாகவே புதிய அரசியலமைப்பு மையப்படுத்திய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது கிடைக்கின்ற உள்வீட்டுத் தகவல்களின் பிரகாரம், ஜனாதிபதி அநுரவும், அவரது தாய்வீடான பெலவத்த ஜே.வி.பி.தலைமையகமும் 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதை' முதலாவது இலக்காகக் கொண்டிருக்கின்றன. இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதன் ஊடாக, தமக்கு பெரும்சவாலாக இருக்கின்ற 51 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை ஜனாதிபதி வேட்பாளர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மிகப்பெரிய தலையிடி நீங்கிவிடும். மறுபக்கத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கிய வரலாற்றுப்பெருமையும் ஒருங்கே கிடைக்கும். பொறுப்புக்கூறல், நீதிவிசாரணை என்று தொடர்ச்சியாக கடிந்துகொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை சமாளித்துக்கொள்வதற்கானதொரு உபாயமாகவும், இராஜதந்திர மட்டத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முனையும் தரப்புக்களை புறமொதுக்குவதற்கான உபாயமாகவும் புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தினை பயன்படுத்த முனைகிறது அநுர அரசாங்கம். குறித்த செயற்பாட்டுக்குள் ஏலவே ஸ்தாபிக்கப்பட்டு செயல்திறனற்றிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம், உண்மை, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்டவற்றையும் உள்ளீர்த்துக் வினைத்திறனற்ற கண்துடைப்புக்கான 'தேசிய பொறிமுறையை' ஸ்தாபித்துக்கொள்வதற்கும் முனைப்புக்கள் உள்ளன. அடுத்தபடியாக, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தவிசாளர்கள், கணக்காய்வாளர் நாயகம், வெளிநாடுகளுக்கான இராஜதந்திரிகள் உள்ளிட்ட அனைத்து உயர் பதவிகளுக்கான நியமனங்களில் தமக்கு விரும்பிய நியமனங்களை செய்வதற்கு அரசியலமைப்பு பேரவை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருகின்றது. ஆகவே, முட்டுக்கட்டையாக இருக்கும் அரசியலமைப்பு பேரவையின் வலுவைக் குறைப்பதுவும் ஜனாதிபதி அநுரவின் விசேட நோக்கமாக உள்ளது. இதனைவிடவும், தேர்தல் முறைமை மாற்றம் மாகாண சபை முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களையும் புதிய அரசியலமைப்பு உள்வாங்க வேண்டும் என்ற நோக்கமும் ஜே.வி.பிக்குள் காணப்படுகின்றது. ஜே.வி.பியின் கொள்கைகளை தேசிய கொள்கைகளுக்குள் புகுத்தி, அதனை மையப்படுத்தியதாக நாட்டின் அடிப்படைச்சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்குநிலைகளும் அவர்களுக்கு தாராளமாகவே உள்ளன. இதனைவிடவும், சீனக் கம்னியூஸக் கட்சியுடன் ஜே.விபி 'கட்சிசார்ந்த' இருதரப்பு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ள நிலையில், 'தனிக்கட்சி ஆதிக்கத்தினை' மையப்படுத்திய அரசியலமைப்பு ஏற்பாடுகளும் உள்வாங்கப்படலாம். ஜே.வி.பி. தலைமையிலான அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை அல்லது, அரசியல் மறுசீரமைப்பு பணிகளை தமது இருப்பை நிலைநிறுத்துவதற்கான உபாயமாகவே முழுக்க முழுக்க பயன்படுத்த முனைகிறது. மாறாக, தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வுடன் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று சிந்திப்பதே முட்டாள்தனமானது. அவ்விதமான நிலையில், அநுர அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளையோ அல்லது அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையோ கையாள்வதற்கு தமிழ்த் தரப்பு தீர்க்கமான நிலைப்பாடுகளுடன் தற்போதிருந்தே முனைவதே ஆகக்குறைந்த வியூகமாக இருக்கும். தவிர்த்து, நல்லாட்சிக்கால புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை கைவிட வேண்டும் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்துவதும், தானும் இணைந்து அப்பணியில் ஈடுபட்டதால் அதனைக் கைவிடமுடியாது என்ற சுயமரியாதைக்குள் நின்று சுமந்திரன் 'கட்சி தீர்மானத்தை' காரணம் காண்பிப்பதாலும் நன்மை ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு தான். ஏனென்றால், வடக்கு, கிழக்கில் தமிழ் பிரதிநிதிகள் எண்ணிக்கைக்கு நிகராக ஜே.வி.பி.யும் மக்கள் பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்கின்றது. ஆகவே, தமிழ் பிரதிநிதிகள் வடக்கு, கிழக்கு மக்களின் ஏகோபித்த நிலைப்பாடு என்று கட்சி முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைத்தால் கூட ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகம் தான். இதற்குள், சகோதர முஸ்லிம் தரப்புக்களையும் உள்ளீர்க்க வேண்டிய தேவையும் தமிழ்த் தரப்புக்கு உள்ளது. அத்தரப்பு தனியாக அரசியலமைப்பு விடயங்களை கையாள முனைந்தால் நிலைமைகள் அதோ கதிதான். https://www.virakesari.lk/article/222258
-
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்
ராகுல் காந்தி கிளப்பிய ‘வாக்கு திருட்டு’ விவகாரம்: தேர்தல் ஆணையம், பாஜக எதிர்வினை என்ன? Published By: RAJEEBAN 10 AUG, 2025 | 01:05 PM புதுடெல்லி: கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர், ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக விவரித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி அணுகுண்டு வீசிவிட்டார் என்று பரபரப்புகள் கூடிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். கூடவே, ‘இது ராகுலின் உச்சபட்ச விரக்தியின் வெளிப்பாடு மட்டுமே’ என்று அவரை பாஜக கிண்டல் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன. இதற்கு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதிக்கு கிடைத்த முடிவுகளே சாட்சி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கை கிடைத்தது. ஆனால், நாங்கள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். வெற்றி வாய்ப்புள்ள 7 தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த தோல்வி குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். இந்த விரிவான ஆய்வில், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டது தெரியவந்தது. 1. போலி வாக்காளர்கள், 2.போலி முகவரி, 3.ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், 4.தவறான புகைப்படங்கள், 5.படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது என 5 விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போலி மற்றும் தவறான முகவரிகள் மூலம் 40,009 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண் ‘பூஜ்ஜியம்’ என்று இருக்கிறது. வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்பு, எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இப்போது சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. அவர்கள் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஆகும்” என்று வெகுண்டெழுந்திருக்கிறார் ராகுல் காந்தி. பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தரவுகள் - ஆதாரங்கள் என ஆய்வு முடிவுகளைச் சுட்டிக்காட்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் எதிர்வினை: கர்நாடகாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், கர்நாடக மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘கர்நாடகாவில் தகுதியற்ற வாக்காளர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பல தகுதியுடைய வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் நீங்கள் கூறியுள்ளீர்கள். அவ்வாறு நீக்கப்பட்ட மற்றும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை 1960 தேர்தல் விதி 20 (உட்பிரிவு 3)-இன் கீழ், உங்களின் கையொப்பத்துடன் அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அப்படி அனுப்பினால் மட்டுமே தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க முடியும்” என்று கூறியுள்ளார். இதேபோல், மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராகுலுக்கு எழுதிய கடிதத்தில், “வாக்காளர் பட்டியல் பத்தி 3-ன்படி, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் கூறியதை புரிந்துகொள்ள முடிகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(b)-ன் கீழ் இந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள சத்தியப் பிராமணத்தில் கையொப்பமிட்டு திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை உச்சபட்ச விரக்தி என்று சாடியுள்ளது பாஜக. டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா, “ராகுல் காந்தியும், காங்கிரஸும் அவர்கள் வெற்றி பெற்ற இடங்களில் எந்த பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்துவதில்லை. இதுபோன்ற குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பொங்கும் போக்கை தேசம் கவனித்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் 99 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அதைக் கொண்டாடவும் செய்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கிறது. ராகுல் சொல்வது போல் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவில் சமரசம் செய்திருந்தால், 99 இடங்களில் வெற்றி கிடைத்தது எப்படி? ராகுல் காந்தி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஃப்ரீடம் பார்க்கில் இன்று ‘வாக்கு அதிகாரப் பேரணி’ நடைபெறுகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். ‘நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்’ என்ற கோரிக்கையுடன் இப்பேரணி நடைபெறுகிறது. பேரணியாக சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/222229
-
செம்மணி விவகாரத்தில் அரசாங்கம் தலையிடவில்லை - சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம் மூலம் உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்துவோம் - விஜித ஹேரத்
Published By: RAJEEBAN 10 AUG, 2025 | 10:50 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60 வது கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார். புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானங்கள் கடுமையானவையாக காணப்படாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்காக உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அரசியல் தலையீடுகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்துவது உள்நாட்டு பொறிமுறை குறித்து சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்துவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம், எதிர்காலத்தில் இதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் என்ற வேண்டுகோள்கள் குறித்து பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் செம்மணி விவகாரம் நீதிதிதுறையின் கீழ் வருகின்றது, இதில் அரசதலையீடு எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாத்தளையிலும் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றை அகழ்வது விசாரணைகள் குறித்த உரிய நடைமுறைகளிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது, இந்த விடயங்களில் நாங்கள் வெளிப்படையாக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222209
-
வாயை திறந்தபடி தூங்குவது நோயின் அறிகுறியா? மருத்துவரை அணுகுவது எப்போது?
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பலரும் தூங்கும்போது வாயைத் திறந்து கொண்டு தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 10 ஆகஸ்ட் 2025, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 10 ஆகஸ்ட் 2025, 05:47 GMT ஒவ்வொருவரும் தூங்கும் போது தனித்தனியான பழக்கவழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் தடிமனான தலையணையை வைத்து தூங்குவார்கள். சிலர் மெல்லிய தலையணையில் தூங்க விரும்புவார்கள். வானிலை எப்படியிருந்தாலும், சிலரால் போர்வை இல்லாமல் தூங்க முடியாது. சிலருக்கு அப்படி தூங்க பிடிக்காது. ஆனால் நன்றாக தூங்கத் தொடங்கிவிட்டால், நம்மால் பல விஷயங்களைக் கவனிக்க முடியாது. அதில் ஒன்று தான் வாயைத் திறந்து கொண்டு தூங்குவது. தூங்கும் போது உங்கள் வாய் திறந்தே இருக்கிறதா? யாராவது உங்களிடம், 'நீ தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பாய்' என்று சொன்னதுண்டா? அப்படியானால், தூக்கத்தில் வாயைத் திறந்து வைத்திருப்பதற்கு காரணம் என்ன? அது எதைக் குறிக்கிறது? இது ஏதேனும் உடல்நல அபாயங்களையும் சுட்டிக்காட்டுகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். தூக்கத்தின் போது வாயைத் திறந்துகொண்டே தூங்குதல் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பொதுவாக பல குழந்தைகள் தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பார்கள், இதற்குப் பின்னால் ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது (குறியீட்டு படம்) பல நேரங்களில், கடினமான வேலைகளைச் செய்யும்போது, மக்களுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்கள் மூக்கு மட்டுமல்லாமல் வாய் வழியாகவும் சுவாசிக்கிறார்கள். ஓடும்போது அல்லது கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது, மக்கள் வாய் வழியாக மூச்சு வாங்குவதைக் காணலாம். ஆனால், பொதுவாக தூங்கும்போது, நம் கண்களைப் போலவே வாயும் மூடியிருக்கும். தூக்கத்தில், நாம் மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். நிம்மதியான நிலையில் இருப்பதால், வேகமாக சுவாசிக்க வேண்டிய தேவை இருப்பதில்லை. ஆனால் தூங்கும்போது பலருடைய வாய் திறந்தே இருக்கும். அப்போது, அவர்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள். இதற்கான காரணத்தை அறிய, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத் துறையின் மருத்துவர் விஜய் ஹட்டாவிடம் பேசினோம். "வாயைத் திறந்து கொண்டே தூங்குவது மிகவும் பொதுவானது. பலரும் இப்படித்தான் தூங்குகிறார்கள். வாயைத் திறந்து கொண்டே தூங்குவது எந்த நோயின் அறிகுறியும் இல்லை" என்று விளக்கிய மருத்துவர் விஜய் ஹட்டா, "மூக்கில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ அல்லது மூக்கு அடைத்திருந்தாலோ, மக்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள்"என்று கூறினார். மூக்கு அடைப்புக்கு ஒரு பொதுவான காரணம் கடுமையான சளி. ஆனால், சில சமயங்களில் டான்சில் பெரிதாவதால் மூக்கு அடைப்பு ஏற்படுகிறது. இது குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு அடினாய்டுகள் அல்லது டான்சில் பெரியதாக இருக்கும், இவை தொற்றுநோயை எதிர்த்து போராட உதவுகின்றன. இதனால் மூக்கில் லேசான அடைப்பு ஏற்படுகிறது. அதனால்தான் பல குழந்தைகள் வாயைத் திறந்து கொண்டே தூங்குகிறார்கள். வயது ஏற ஏற, டான்சில் சிறிதாகி, இந்தப் பழக்கம் மெல்ல மறைந்துவிடும். எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நாம் தூங்கும் போது நிம்மதியான நிலையில் இருக்கிறோம், எனவே பொதுவாக வாய் வழியாக சுவாசிக்க வேண்டிய அவசியமில்லை (குறியீட்டு படம்) செப்டம் குருத்தெலும்பு, நாசி செப்டமின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. இது நாசி செப்டம் குருத்தெலும்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாசி செப்டம் நாசி குழியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. "செப்டம் குருத்தெலும்பு இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும், முற்றிலும் நேராக இருக்காது. ஆனால், அது அதிகமாக வளைந்தால், மூக்கின் ஒரு பகுதி அடைபடுகிறது. இதனால், விலகிய நாசி செப்டத்தின் (DNS) காரணமாக, மக்கள் வாய் வழியாகவும் சுவாசிக்கத் தொடங்குகிறார்கள்" என மருத்துவர் விஜய் ஹட்டா கூறுகிறார். இந்தப் பிரச்னை தீவிரமானால், செப்டோபிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை மூலம் இதை சரிசெய்ய முடியும். ஆனால், தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருந்தால் சுவாசம் உரத்த சத்தமாக இருந்தாலோ அல்லது குறட்டை விடுவதாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வாயைத் திறந்து கொண்டே சுவாசிப்பது வாய் சுகாதாரத்தைப் பாதிக்கிறது (மாதிரி படம்) "வாய் வழியாக சுவாசிப்பது வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது வாய் சுகாதாரத்தைப் பாதிக்கலாம்" எனக் கூறுகிறார் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையின் நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத் துறையின் தலைவர் மருத்துவர் ரோஹித் குமார். ஒருவர் வாயைத் திறந்து கொண்டு தூங்கினால் அல்லது வாய் வழியாக சுவாசித்தால், அந்த நேரத்தில் குறட்டை சத்தம் கேட்டால், அது வேறு ஏதேனும் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதுபோன்ற சூழ்நிலையில், அதற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு மருத்துவரைத் தொடர்புகொள்வது நல்லது. "ஒருவருக்கு இருமல், சளி அல்லது வேறு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாய் திறந்து தூங்கினால், முதலில் காது, மூக்கு, தொண்டை (ENT) பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பிறகு தான் மேற்கொண்டு பரிசோதனைகள் செய்ய முடியும்"என்று மருத்துவர் ரோஹித் குமார் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4wey0j1xro
-
குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? சீமான் கேள்வி
10 AUG, 2025 | 10:26 AM குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக தமிழ்நாடு அரசின் Q - பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிரட்டல் விடுத்து அச்சுறுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது. வீடுகள் திரும்பப்பெறப்படும் என்ற Q - பிரிவு காவல்துறையின் மிரட்டலால் மனமுடைந்த பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் அருள்குமார் விசமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த மனவலியும் தருகிறது. வந்தவரை எல்லாம் வசதியாக வாழவும் ஆளவும் வைத்த தமிழர் நிலம் தம் சொந்த இனத்தவரை சொந்தமாக பத்தடி நிலம் கூட உரிமை கோர முடியாத நிற்கதியான நிலையில் தவிக்க விட்டிருப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழ் இனத்திற்கும் நிலத்திற்கும் துளியும் தொடர்பற்ற வடவர்களை இலட்சக்கணக்கில் உள் நுழைய அனுமதித்து தமிழர் வேலை வாய்ப்பினை தட்டிப்பறித்து வழங்கியதுடன் ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டைவரை வழங்கி நிரந்தரமாய் இங்கே தங்க வைத்துள்ளதற்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்படாத தடைகளும் எம் ஈழத்தமிழ் மக்களுக்கு விதிக்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியும் அதிகாரமும் யாருக்கானது? வடவர்கள் தமிழ் மண்ணிற்கு வந்த ஓரிரு வருடங்களில் வாக்களிக்கும் உரிமை வரை தரத் தயாராகிவிட்ட இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் இரண்டு தலைமுறையாக ஈழச்சொந்தங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தும்கூட இன்றுவரை குடியுரிமை தர மறுப்பது ஏன்? இலங்கை இனவெறி சிங்கள அரசின் இனப்படுகொலையை எதிர்கொண்டு எல்லையில்லா அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகி வீட்டை இழந்து நாட்டை இழந்து உறவுகளைப் பறிகொடுத்து உரிமைகளும் உடைமைகளும் அற்று இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும் தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களுக்கு இல்லாத உரிமை எங்கிருந்தோ இந்த நாட்டிற்கு வந்த திபெத்தியர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை பரிவு பற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா? நாட்டின் விடுதலைப்போராட்டம் முதல் இன்றைக்கு எல்லைப் பாதுகாப்பு போர்கள் வரை தமிழர்களின் பங்கு எவருக்கும் குறைந்தது இல்லையே? அதற்கு இந்நாடு தரும் கைமாறுதான் எம் ஈழச்சொந்தங்களை துரத்துவதா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு குடியுரிமை தர மறுக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ குறைந்தபட்சம் நிம்மதியாக குடியிருக்கும் உரிமையைக்கூட தர மறுக்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? இதுதான் திமுக அரசு இனத்தையும் மானத்தையும் மண்ணையும் மொழியையும் காக்கும் செயலா? இதுதான் திமுக தமிழர் உரிமையை மீட்கும் முறையா? வடவர்களுக்கு வாசல் திறந்துவிட்டு ஈழத்தமிழ்ச் சொந்தங்களை Q - பிரிவு காவலர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா? வீடு என்ற பெயரில் திமுக அரசால் வழங்கப்படும் வெப்பத்தை உமிழும் கான்கீரிட் கொட்டைகளுக்குள் ஈழச்சொந்தங்களை அடைத்துவைக்க முயல்வது கொடுங்கோன்மை இல்லையா? உயிருக்கு ஆபத்தான பாதுகாப்பு அற்ற சாக்கடைக்கு மூடி இடுவதினாலோ வெயில் வரமாலிருக்க மேற்கூரை அமைப்பதினாலோ திமுக அரசுக்கு நேர்ந்த இழப்பு என்ன? அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்? ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு திமுக அரசின் Q - பிரிவு காவலர்கள் தொடர்ச்சியாக தரும் நெருக்கடிகளை கண்டித்து தற்போது பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதை இவ்வறிக்கையின் வாயிலாக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறேன். ஆகவே ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q- பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாகஇ நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இதற்கு மேலும் - பிரிவு காவலர்களின் நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை காக்க என்னுடைய தலைமையில் விரைவில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றேன். https://www.virakesari.lk/article/222205
-
கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்
10 AUG, 2025 | 10:42 AM கிழக்கு முஸ்லீம்கள் அரசியலில் மறைமுகமான அடிமைத்துவத்தின் கீழ் இருக்கின்றமை கவலையளிக்கின்றது. பொத்துவில் அறுகம்பை பிரச்சினையானது அரசியலாக்கப்படுகின்றமை கவலையளிக்கின்றது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் தெரிவித்தார். கல்முனையில் சனிக்கிழமை (09) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர், இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர் ஒட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எங்களின் கொழும்பு அலுவலகத்தில் இருக்கின்ற குப்பைகளை போடுகின்ற வாளியில் கூட இந்த ஸ்டிக்கர் ஒட்டி இருக்கின்றோம். இந்த ஸ்டிக்கர் ஒட்டுகின்ற நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன பிரச்சினைகளை பேசுகின்றார்களோ கடந்த காலங்களில் இந்தப் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைச்சுகளில் அவர்கள் இருந்திருக்கிறார்கள் . அவ்வாறு அவர்கள் அன்று செய்யாது இன்று இஸ்ரேல் தொடர்பில் அரசியல் ரீதியாக பிரச்சனைக்கு உட்படுத்துகின்றார்கள். பங்களாதேஷ்காரர்கள் என்றாலும் சரி இஸ்ரேல் காரர்கள் இருந்தாலும் சரி சீனாக்காரர்கள் என்றாலும் சரி எமது நாட்டில் தேவையற்ற விடயங்களை செய்வதை நாங்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதற்காக நாங்கள் இஸ்ரேலியர்களை விரட்டுவதற்காக பொத்துவில் மண்ணுக்கு வர வேண்டிய தேவையில்லை. எமது தலைநகரம் கொழும்பில் இரந்து அதாவது எமது வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தூரம் தான் கட்டுநாயக்க விமான நிலையம் இருக்கின்றது. அங்கிருந்து நாங்கள் இஸ்ரேலியர்களை மீண்டும் அவர்களை நாட்டிற்கு அனுப்பி விடுவோம். ஆனால் எமது நாட்டிற்கு உல்லாச பயணிகளாக வருகின்றவர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். இந்த நாட்டின் பிரதான வருமான வழிகளில் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் பெற்றது. அதை மேம்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதற்காக நாட்டின் இறைமையை பாதிக்கும் விடயங்களுக்கு அனுமதிக்க முடியாது. எனவே தான் இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத இஸ்ரேலிய சபாத் இல்லங்களை பொத்துவில் பிரதேச சபை மூடிவிட முன்வர வேண்டும். பொத்துவில் அறுகம்பே பகுதியில் அரச அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலிய வழிபாட்டு தளம் (சபாத் இல்லம்) அருகில் இருக்கும் பள்ளிவாசலும் இருள் சூழ்ந்து இஸ்ரேலிய வழிபாட்டு தளத்தின் வாகன தரிப்பிடம் போன்று மாறியுள்ளது. கிழக்கில் அரசியல் செய்யும் மூன்று காங்கிரஸ் தலைவர்களும் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி அந்த பள்ளிவாசலை எதிர்காலத்தில் குறைந்தது மூடிவிடுவதிலிருந்தாவது பாதுகாக்க வேண்டும். தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் வாயால் கதைத்தவற்றை தவிர சமூகத்தின் நலனுக்காக இந்த காங்கிரஸ்காரர்கள் எதுவும் செய்யவில்லை. கடந்த காலங்களில் வாயால் பேசிக்கொண்டிருந்ததையே இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கை தமிழ் முதலமைச்சர் ஆளவேண்டும் என்ற எங்களின் கொள்கைப்படி கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். அதற்காக எதிர்வரும் காலங்களில் சகல காங்கிரஸ்காரர்களையும் பெருந்தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை அமைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறோம் என்றார். இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதி தலைவர் கலாநிதி ஹக்கீம் ஷெரீப், இணைப்பாளர் ஏ.எம். அஹூவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/222204
-
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
முத்தையன்கட்டு சம்பவம்; அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? - சாணக்கியன் கேள்வி 10 AUG, 2025 | 10:01 AM (நா.தனுஜா) பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது. முத்தையன்கட்டு சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது குறித்து சாணக்கியன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, படையினரால் அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் முத்தையன்கட்டு ஏரியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் வசிப்பவர்கள் வழங்கிய தகவல்களின்படி, சிதைவுற்ற உலோகப்பொருட்களை எடுத்துச்செல்வதற்காக நான்கு இளைஞர்கள் முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தப்பிய நால்வரில் ஒருவர் காணாமல்போனதாகவும் அறியமுடிகிறது. அவ்வாறு காணாமல்போன இளைஞரின் சடலம் பின்னர் முத்தையன்கட்டு ஏரியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதிலும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது. இச்சம்பவம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? அல்லது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைப் பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கான மற்றுமொரு பரீட்சையாகும் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222201
-
சிவில் நடைமுறைகளில் இராணுவ தலையீட்டை உடன் நிறுத்துங்கள்; ஜனாதிபதி அநுரவுக்கு சிறிதரன் எம்.பி கடிதம்
10 AUG, 2025 | 09:31 AM ஆர்.ராம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவப்பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதோடு போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் நடைமுறைகளில் இராணுவத் தலையீடு தீவிரமடைந்துள்ளதால் அச்செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடமாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளர்கள் ஆகியோருக்கும் குறித்த கடிதம் பிரதியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போருக்கு முற்பட்ட காலத்தில் கரைச்சிப் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி பொதுநூலகம் பொதுவிளையாட்டு மைதானம் என்பனவற்றுக்குரிய 13.5 ஏக்கர் காணி போருக்குப் பின்னர் இராணுவத்தினரால் முழுமையாக கையகப்படுத்தப்பட்டிருந்தது. இதில் 9 பரப்புக்காணி பொதுநூலகத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10வருடங்கால போராட்டத்தின் விளைவாக 5பரப்பு காணி மட்டும் விடுவிக்கப்பட்டு நூலக நிர்மாணத்தின் முதற்கட்டப் பணிகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பொதுநூலக காணியின் ஒருபகுதி இன்றளவும் இராணுவத்தால் விடுவிக்கப்படாதுள்ளமை தொடர்புடைய தரப்பினரின் திட்டமிடலிலும் செயற்பாடுகளிலும் மாவட்டத்தின் கல்வித்தளத்திலும் பாதகமான தாக்கங்களை உருவாக்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தின் ஒருபகுதி இராணுவ முகாமாக உள்ள சமநேரத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்கு தேவையான காணியில் இராணுவ நினைவுத்தூபி அமைக்கப்பட்டு இராணுவத்தளமாக எல்லைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த காணியின் ஒருபகுதியை இலவச இணைதள வலையமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனைப்பயன்படுத்தி இளைஞர், யுவதிகளை குறித்த பகுதிக்குள் உள்ளீர்ப்பதன் மூலமாக சமூகவிரோதச் செயற்பாடுகளுக்கான பகிரங்க வெளியை ஏற்படுத்தியுள்னனர். 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் நடைபெற்றபோது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வித் திணைக்களங்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டுவந்த முன்பள்ளிகள் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டு அங்கு கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிவில் பாதுகாப்பு பிரிவின் நிர்வாக ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 303 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 166பேரும், யாழ்ப்பாணத்தில் 12 பேருமாக 481 பேர் இராணுவப்படையணிச் சம்பளத்தைப் பெற்று கடமையாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகரிலும், சில கிராமங்களிலும் பொதுப்பயன்பாட்டிடங்களை அண்மித்த பகுதிகளில் உணவகங்களையும் சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் இராணுவத்தினர் நடாத்திவருகின்றமையானது உள்ளூர் வர்த்தகர்களுக்கு வருமான இழப்பையும் சமூக முரண்நிலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியின் முதன்மை அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் சுற்றுலாத்தளமான கௌதாரிமுனை கடற்கரைப் பகுதியை கட்டண அறவீட்டுடன் நிருவகிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமையானது பொருத்தமற்றதாகும். ஆகவே கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீட்டை உடனடியாக நீக்குவதோடு முன்பள்ளிகளை உடனடியாக மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/222194
-
இந்தோனீசியா வரை கடல் கடந்து வென்று ஆசியாவின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உயர்ந்த 'ராஜேந்திர சோழன்'
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 850 வாக்கில்) தெற்கு இந்தியாவில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயாலயச் சோழன் எனும் மன்னர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கான அடித்தளம் இவ்வாறு தான் நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் (கிபி 907 ஆம் ஆண்டு) சோழ சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் பராந்தக மன்னர் அரியணை ஏறி 48 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் வந்த பலவீனமான மன்னர்களால் சோழ சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியது. கிபி 985 ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறியபோது சோழ சாம்ராஜ்ஜியம் மீண்டும் எழத் தொடங்கியது. முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரின் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் சோழர்கள், ஆசியாவில் மிகப்பெரிய ராணுவ, பொருளாதார மற்றும் கலாசார சக்தியாக உருவெடுத்தனர். ஒரு காலகட்டத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் தெற்கில் மாலத்தீவிலிருந்து வடக்கே வங்காளத்தில் கங்கை நதிக்கரை வரை பரவியிருந்தது. ரிச்சர்ட் ஈடன் தனது 'பாரசீக காலத்தில் இந்தியா (India in the Persianate Age)' புத்தகத்தில் சோழர்கள், "தஞ்சையின் மகா சோழர்கள்" என அறியப்பட்டதாக குறிப்பிடுகிறார். "ஒட்டுமொத்த தெற்கு கரை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போதும் கோரமண்டல் என நினைவுகூரப்படுகிறது. சோழமண்டல் என்கிற வார்த்தையின் மறுவிய வடிவம் தான் கோரமண்டல். இது சோழப் பேரரசின் ஆட்சி எல்லையைக் குறிக்கிறது" என எழுதியுள்ளார். ஸ்ரீவிஜய அரசுடனான மோதல் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நடராஜர் சிலை சோழப் பேரரசின் அடையாளமாக இருந்தது 11 ஆம் நூற்றாண்டில் கெமர் மற்றும் சோழ வணிகர்கள் வங்காள விரிகுடாவின் கரையோரம் அமைந்துள்ள நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தனர். தங்கள் இருவரின் நலனும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது என சோழர்களும் கெமர்களும் உணர்ந்தனர். இந்தக் காலகட்டத்தில் கெமர் பேரரசும் மிகப் பெரிதாக, செல்வாக்கு மிக்கதாக இருந்தது. அவர்கள் தற்போதைய கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமின் பல பகுதிகளை ஆட்சி செய்தனர். கம்போடியாவில் உள்ள பிரபலமான அங்கோர்வாட் கோவிலை கெமர் மன்னர்கள் கட்டினர். ஒய் சுப்பராயலு தனது 'சோழர்களின் கீழ் தென்னிந்தியா (South India Under the Cholas)' எனும் புத்தகத்தில், "பல கல்வெட்டுகள் சோழர்கள் மற்றும் கெமர்கள் இடையே நட்புறவு இருந்தையும், 1020 ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையே ரத்தினங்கள் மற்றும் தங்கரத பரிமாற்றம் இருந்ததையும் குறிப்பிடுகின்றன. அதிகரித்து வந்த ரஷ்ய, சீன மக்கள் தொகை மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான அவர்களின் ஈடுபாட்டால் இரு அரசுகளும் பெரிதும் பலனடைந்தன" என எழுதியுள்ளார். இருவருக்கும் இருந்த ஒரே எதிரி - ஸ்ரீவிஜய அரசு தான். பௌத்தர்களான ஸ்ரீவிஜய அரசர்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல துறைமுகங்களை கட்டுப்படுத்தி வந்தனர். சீனா நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களுக்கும் அவர்கள் வரி விதித்தனர். வரி செலுத்தாத கப்பல்களை அவர்களின் கப்பற்படை தாக்கி அழித்தது. ஸ்ரீவிஜய அரசின் தோல்வி ஸ்ரீவிஜய அரசர்களின் ராஜாங்கம் சோழ அரசர்களை கோபமடையச் செய்தது. சோழ மன்னர்களுக்கு நட்புறவான செய்திகளை அனுப்பிய அதே வேளையில் தற்போதைய நாகப்பட்டினம் துறைமுகம் இருக்கும் பகுதியில் பௌத்த மடம் கட்டுவதற்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர். மறுபுறம், சீன மன்னர்களிடம் சோழர்கள் சிறிய அரசு என்றும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து வந்தனர். ராஜேந்திர சோழன் 1015-இல் சீனர்களுடன் ராஜாங்க உறவுகளை ஏற்படுத்தினார். அப்போது ஸ்ரீவிஜயர்களின் கொள்கையைப் பற்றி அறிந்த பிறகு விஜயதுங்கவ மன்னரிடம் தனது ராணுவ வலிமையைக் காட்ட முடிவு செய்தார். 1017ஆம் ஆண்டு நடந்த போரில் ராஜேந்திர சோழன் வென்று விஜயதுங்கவர்மனை சிறைபிடித்தார். அதன் பின்னர், ராஜேந்திர சோழனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார் விஜயதுங்கவர்மன். வெற்றிக்குப் பிறகு வன்முறை பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் எச்சங்கள் ராஜேந்திர சோழன் ஆசியாவில் மிகப் பிரபலமான நபராக மாறினார். அவர் ராணுவ வெற்றிகளின்போது வன்முறையில் ஈடுபடுவதற்காக அறியப்பட்டார். அவர் போர் விதிகளை மீறுவதாக அவரின் எதிரிகள் குற்றம்சாட்டினர். சாளுக்கியர்கள் உடனான போரில் ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும் அழித்து, "பெண்கள் மற்றும் பிராமணர்களைக் கொல்லவும் தயங்கவில்லை" எனத் தெரிவிக்கப்படுகிறது. அனிருத் கனிசெட்டி தனது 'தென்னிந்தியாவின் தக்காணப் பிரபுக்கள்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை (Lords of the Deccan, Southern India from Chalukyas to Cholas)' எனும் புத்தகத்தில், "இலங்கையின் வரலாற்றிலும் ராஜேந்திர சோழனின் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளது" என எழுதியுள்ளார். "அரச குடும்பத்தின் பெண்களை கடத்தி, அனுராதபுரத்தின் அரச கஜானாவை களவாடிச் சென்றனர். இது மட்டுமில்லை பௌத்த மடங்களின் ஸ்துபிக்களை உடைத்து ரத்தினத்தை எடுத்துச் சென்றனர்" என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலத்தீவு ஆக்கிரமிப்பு பட மூலாதாரம், UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா இலங்கை அரசாங்கம் மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம். 1014-இல் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு ராஜேந்திர சோழன் அரியணை ஏறினார். பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் உடனான சண்டைக்குப் பிறகு 1017-இல் முதலில் இலங்கையைத் தாக்கினார். இந்தத் தாக்குதலின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல, மாறாக முடிந்த வரையில் தங்கம் மற்றும் இதர பொக்கிஷங்களை எடுத்து வர வேண்டும் என்பது தான் என அந்த காலத்து கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எனினும், முடிவில் சோழர்கள் முதல் முறையாக முழு இலங்கைத் தீவையும் கட்டுப்பாட்டில் எடுத்தனர். அதற்கு ஓராண்டு கழித்து 1018-இல் ராஜேந்திர சோழன் மாலத்தீவிற்கும் லட்சத்தீவிற்கும் கடற்படைகளை அனுப்பி அவற்றை சோழ காலனிகளாக மாற்றினார். 1019-இல் வட கர்நாடகா மற்றும் தெற்கு மகாராஷ்டிராவிற்கு ராணுவப் படைகளை அனுப்பினார். 1021-இல் தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளைக் கட்டுப்படுத்திய சாளுக்கியர்களை வென்றார். கங்கை நீரை தெற்கிற்கு எடுத்துச் சென்றவர் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர்கள் கட்டிய சிவன் கோவில் 1022-இல் தனது பேரரசை 1000 மைல்கள் தாண்டி கங்கையின் கரை மற்றும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்தினார். வழியில் ஓடிசா மற்றும் வங்காளத்தின் சக்திவாய்ந்த பால சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான மகிபாலாவை தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தார். "ராஜேந்திர சோழன் வங்காளத்திலிருந்து மிக விலையுயர்ந்த ரத்தினங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் மற்றும் கலசங்களில் கங்கையின் புனித நீரையும் எடுத்துக் கொண்டு திரும்பினார். இந்த சாதனையின் நினைவாக அவருக்கு 'கங்கை கொண்ட சோழன்' என்கிற பெயர் கிடைத்தது. கங்கை கொண்ட சோழபுரத்தை தனது புதிய தலைநகராக அறிவித்தார். கங்கை கொண்ட என்றால் கங்கையை வென்றவர் என்று பொருள்" என ரிச்சர்ட் ஈடன் எழுதியுள்ளார். புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரான ரோமிலா தாப்பர் தனது 'ஆதி இந்தியா (Early India)' புத்தகத்தில், "வெற்றிக்குப் பிறகு கங்கை நீரை தெற்கே எடுத்துச் சென்றது வடக்கு மீதான தெற்கின் வெற்றியின் சின்னம்" என எழுதியுள்ளார். சுமத்ராவிற்கு கப்பல் பயணம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்தோனீசியாவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பன்னன் கோவில் ராஜேந்திர சோழன் தனது தலைநகரில் சிவனுக்கு ஒரு கோவிலை கட்டினார், இது 250 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ வழிபாடு மற்றும் சோழ கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்ந்தது. தலைநகரில் மிகப்பெரிய செயற்கை ஏரி ஒன்றை நிர்மாணித்தார் ராஜேந்திர சோழன். இதன் பரப்பளவு 16 மைகள் நீளமும் 3 மைல்கள் அகலமும் ஆகும். வங்காளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதி இந்த ஏரியில் ஊற்றப்பட்டது, ஆனால் ராஜேந்திர சோழன் நீண்ட காலம் வடக்கு மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை. மாலத்தீவு மற்றும் இலங்கை மீதான தனது வெற்றிகளால் குதூகலமடைந்த ராஜேந்திர சோழன் மற்றும் கடல்கடந்த பயணத்திற்கு திட்டமிட்டிருந்தார். இந்த முறை இந்தோனீசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளுக்கு தன்னுடைய கப்பற்படையை அனுப்பும் எதிர்பாராத முடிவை எடுத்தார். ஸ்ரீவிஜய அரசு மீதான கப்பற்படை வெற்றி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'The Golden Road' புத்தகத்தில் வில்லியம் டால்ரிம்பிள், சோழர்களின் வெளிநாட்டு பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறார். 1017-இல் ராஜேந்திர சோழன் மற்றும் ஸ்ரீவிஜய அரசிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராஜேந்திர சோழனின் கப்பற்படை வென்றது. இது மலேசியாவின் கெடா ("கடாரம்") நகரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜேந்திரன் 'கெடாவை வென்றவர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். 1025-இல் ராஜேந்திர சோழன் தனது முழு கப்பற்படையையும் ஸ்ரீவிஜய அரசுக்கு எதிராக சண்டையிட அனுப்பினார். பால் முனோஸ் தனது 'ஆதி சாம்ராஜ்ஜியங்கள் (Early Kingdoms)' புத்தகத்தில், "இந்தப் போரில் வெற்றிக்குப் பிறகு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் அங்கோரைச் சேர்ந்த சூர்யவர்ம மன்னர், ராஜேந்திர சோழனுக்கு விலைமதிக்க முடியாத பரிசுகளை வழங்கினார். மிகப்பெரிய கப்பற்படை ஒன்றை அவர் அனுப்பினார். இவை சோழர்களின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நாகப்பட்டினத்தில் அணி சேர்க்கப்பட்டன" என எழுதியுள்ளார். வில்லியம் டால்ரிம்பிள் தனது 'தங்க சாலை (The Golden Road)' புத்தகத்தில், "இந்தப் போருக்கான வீரர்கள் மற்றும் யானைகளும் கூட கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டன. சோழர்கள் தங்களின் சண்டையை இலங்கையில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து ஆரம்பித்தனர்" என எழுதியுள்ளார். மேலும் அதில், "பல நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு அவர்கள் சுமத்ரா, தகுவா பா என்கிற தாய்லாந்து துறைமுகம் மற்றும் மலேசியாவில் உள்ள கேதா ஆகிய இடங்கள் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர், அப்போது ஒரு தெற்காசிய அரசால் தங்கள் நாட்டிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட நீண்ட தூர ராணுவ நடவடிக்கை ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிகரமான போர்களுக்குப் பிறகு ராஜேந்திரனின் ஆதிக்கம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்தது. இந்த வெற்றியின் பெருமையால் அதன் முழு விவரங்களை தஞ்சையில் உள்ள கோவில் சுவற்றில் 1027 ஆம் ஆண்டு எழுதினார். விஜய் மற்றும் சங்கீதா சகுஜா தங்களின் 'ராஜேந்திர சோழன், தென்கிழக்கு ஆசியாவிற்கான முதல் கடல் பயணம் (Rajendra Chola, First Naval Expedition to South-East Asia)' எனும் புத்தகத்தில், "இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு இடங்களில் நான்கு சுமத்ராவிலும், ஒன்று மலாய் தீபகற்பத்திலும் ஒன்று நிகோபார் தீவுகளிலும் உள்ளது" என எழுதியுள்ளார். அதில், "ராஜேந்திர சோழன் இன்று சிங்கப்பூர் என அழைக்கப்படும் இடத்தை கடந்து சென்றிருப்பது சாத்தியமே. இதற்கு காரணம் அங்கும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதில் ராஜேந்திர சோழனின் பல்வேறு பெயர்களில் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர். சீனாவுடன் நெருங்கிய உறவு பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தெற்கிழக்காசியாவில் கடல் வழியாக ராஜேந்திர சோழன் நுழைந்ததன் நோக்கம் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒரு வர்த்தகப் போரில் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி கடல் வழித்தடங்களில் ஸ்ரீவிஜய அரசின் பிடியை வலுவிழக்கச் செய்வதே ஆகும் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். கென்னத் ஹால் எழுதிய 'Khmer Commercial Development and Foreign Contacts under Suryavarman I' எனும் புத்தகத்தில், "இந்தப் பயணங்களில் முக்கியமான நோக்கம் என்பது சீனா உடன் மிகவும் லாபகரமான வர்த்தகப் பாதையை உருவாக்குவது ஆகும். அந்த காலகட்டத்தில் மிளகு, மசாலா மற்றும் பருத்திக்கு சீனாவில் பெரிய அளவில் தேவை இருந்தது. இவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிக்க முடியும் என சோழர்கள் நம்பினர்" என எழுதியுள்ளனர். ஸ்ரீவிஜயர்களை தற்காப்பு நிலைப்பாட்டை எடுக்க கட்டாயப்படுத்திய பிறகு, ராஜேந்திர சோழன் சீனாவுக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார். சீன பேரரசருக்கு தந்தம், முத்துகள், பன்னீர், காண்டாமிருகக் கொம்புகள் மற்றும் பட்டு ஆடைகள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை எடுத்துச் சென்றார். அதற்குச் சில நாட்கள் கழித்து சீனாவின் குவான்சூ நகரில் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அதன் சில பகுதிகள் தற்போதும் உள்ளன. ஜான் கை தனது, 'தமிழ் வணிகர்களும் இந்து-பௌத்த புலம்பெயர்ந்தோரும் (Tamil Merchants and the Hindu-Buddhist Diaspora)" எனும் புத்தகத்தில், "1067-69 காலகட்டத்தில் சோழ இளவரசர் திவாகரன் சீனாவில் உள்ள கோவில்களை பராமரிக்க நிதிகள் வழங்கினார் என ஒரு சீன கல்வெட்டு குறிப்பிடுகிறது" என எழுதியுள்ளார். தமிழ் வணிகர்கள் சீனாவிலிருந்து கோரமண்டல் துறைமுகங்களுக்கு நறுமணக் கட்டைகள் (சந்தனக்கட்டை), தூபம், கற்பூரம், முத்துக்கள், பீங்கான் மற்றும் தங்கம் அடங்கிய கப்பல்களைக் கொண்டு வந்தனர். கெமர் பேரரசு உடனான உறவுகள் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பின் அடையாளமாக அங்கோர் வாட் கோவில் உள்ளது. ராஜேந்திர சோழனின் காலகட்டத்தில் சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பு, உலகின் மிகப்பெரிய அங்கோர்வாட் கோவில் கட்டுமானத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விஷ்ணு கோவில் தற்போதும் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தஞ்சையிலும் சிதம்பரத்திலும் கோவில்கள் கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் தான் இந்தக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் இரு சக்தி வாய்ந்த மன்னர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். சிறந்த போர் வீரர் என்பதோடு, சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார் ராஜேந்திர சோழன். பல கிராமங்களில் பல உயர்தர குருகுலங்களை நிறுவினார். இங்கு மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது. தஞ்சாவூர் தவிர்த்து ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம் உட்பட பல பிரம்மாண்டமான கோவில்களை அவர் கட்டினார். அவை இன்றளவும் கட்டடக்கலைக்குச் சான்றாகப் பார்க்கப்படுகின்றன. ராஜேந்திர சோழன் கடலை மட்டுமல்ல மக்களின் மனங்களையும் வென்றவர் எனக் கூறப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4werp9lj2o
-
நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் புதிய நேர சூசி
10 AUG, 2025 | 10:09 AM நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாக திங்கட்கிழமை (04) முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான படகுகள் சேவை பரீட்சார்த்தமாக அதிகரிக்கப்படுகின்றது. நெடுந்தீவுக்கான அதிகரித்த பயணிகள் மற்றும் சேவையில் ஈடுபட போதுமான படகுகள் இன்மை காரணமாக நெடுந்தீவுக்கு பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கமைய சனிக்கிழமை (09) குறிகட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எட்டப்பட்டது. இதற்கமைய திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு முதலாவது படகும் 6.45 க்கு இரண்டாவது படகும் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீளவும் முறையே 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கியும் பயணிக்கும். அதேபோன்று மாலை 2.30 மணிக்கும் 3.30 மணிக்கும் நெடுந்தீவிலிருந்து படகுகள் புறப்பட்டு குறிகாட்டுவனை வந்தடைந்து, குறிகாட்டுவானில் இருந்து மீளவும் 4.00 மணிக்கும் 4.45 மணிக்கும் புறப்பட்டு நெடுந்தீவை சென்றடைய கூடியவாறு படகு சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222202
-
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் உண்மைகளை கூறுவதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாரில்லை; உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இல்லை என சோமரத்னவின் மனைவி, சகோதரி சுட்டிக்காட்டு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் உண்மைகளை கூறுவதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாரில்லை; உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இல்லை என சோமரத்னவின் மனைவி, சகோதரி சுட்டிக்காட்டு Published By: DIGITAL DESK 3 10 AUG, 2025 | 10:34 AM (நா.தனுஜா) சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் எனவும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மற்றும் சகோதரி கேசரியிடம் தெரிவித்தனர். கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் என்பன தொடர்பில் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டுமொரு சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சர் உள்ளிட்டோருக்கு அண்மையில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயத்தில் சோமரத்ன ராஜபக்ஷவின் நிலைப்பாடு தொடர்பில் அவரது மனைவி செனாலி சம்பா விஜேவிக்ரம மற்றும் அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஷ ஆகியோர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெளிவுபடுத்தினர். அதன்படி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியை கைதுசெய்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தனது கணவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது மிகப்பாரதூரமான குற்றச்சாட்டு எனவும், அக்குற்றத்தைப் புரியாத தனது கணவர் 29 வருடகாலமாகத் தண்டனை அனுபவித்துவருதாகவும் அவரது மனைவி செனாலி சம்பா விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார். அதேபோன்று தாம் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுப்பதாகத் தற்போது பலர் குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், தாம் நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை எனவும், மாறாக தனது கணவருக்கும், அவருடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏனைய நால்வருக்குமான நீதியையே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை இவ்விடயத்தில் நாட்டுக்குள் தமக்கான நீதி கிடைக்காவிடின், தாம் சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியைக் கோரவிருப்பதாகவும், உள்நாட்டு அரசாங்கம் தமக்கு எவ்வித நிவாரணத்தையும் அளிக்காத நிலையில், தனது சகோதரர் சர்வதேச விசாரணையில் சகல விடயங்கள் தொடர்பிலும் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ரோஹினி ராஜபக்ஷ தெரிவித்தார். அதுமாத்திரமன்றி சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் என்றும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி விளக்கமளித்தார். மேலும் தனது கணவர் மீதும், ஏனைய நால்வர் மீதும் சுமத்தப்பட்ட மிகமோசமான குற்றத்தை உண்மையிலேயே புரிந்தவர்கள் வெளியே சுதந்திரமாக இருப்பதாகவும், அக்குற்றத்தைப் புரியாதவர்கள் 29 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட செனாலி சம்பா விஜேவிக்ரம, தற்போது தனது கணவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கையையும், தமக்கான நீதியையுமே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222206
-
காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
காசாநகரை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - இஸ்ரேலிய தலைநகரில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 10 AUG, 2025 | 09:51 AM காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய பிரதமர் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும், பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். காசாநகரை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கை இராணுவரீதியிலான தீர்மானம் இல்லை, இது நாங்கள் மிகவும் நேசிக்கும் மக்களிற்கான மரண தண்டனை என ஹமாசிடம் பணயக்கைதியாக உள்ள ஒம்ரி மிரானின் மனைவி ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி இதில் உடனடியாக தலையிடவேண்டும் என மன்றாடினார். இந்த அரசாங்கம் இனவெறிபிடித்தது, அவர்கள் நாட்டின் நலனிற்கு எதிராக அனைத்தையும் செய்கின்றனர் என 69 வயது ரமி டார் தெரிவித்திருந்தார். அவரும் டிரம்ப் பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வெளிப்படையாக தெரிவிப்பது என்றால் நான் எதிலும் நிபுணத்துவம் உள்ளவல் இல்லை, ஆனால் இரண்டு வருட யுத்தத்தின் பின்னர் வெற்றி என எதுவும் இல்லை என தனது கணவர் இரண்டு பிள்ளைகளுடன் பேரணியில் கலந்துகொண்ட 45 யனா தெரிவித்தார். இரண்டு தரப்பும் மேலும் உயிர்களை இழப்பது ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே என அவர் கருத்து தெரிவித்துள்ளார். பேரணியில் கலந்துகொண்டவர்கள் பணயக்கைதிகளின் படங்களுடன் காணப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் இஸ்ரேலிய அரசாங்கம் குறித்து சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், பெஞ்சமின் நெட்டன்யாகு மேலும் யுத்தத்தை தீவிரப்படுத்துவதை அமெரிக்க ஜனாதிபதி தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தினால் கொல்லப்பட்ட காசா சிறுவர்களின் படங்களுடனும் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டனர். https://www.virakesari.lk/article/222200
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்
10 AUG, 2025 | 09:19 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகரால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். அதேவேளை இலங்கை தொடர்பில் நடைமுறையில் இருக்கும் இத்தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரவிருப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இருப்பினும் அத்தீர்மானத்தின் திருத்தப்படாத வரைபு மற்றும் அதன் மீதான வாக்கெடுப்புக்கான திகதி என்பன இன்னமும் வெளியாகவில்லை. இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222190
-
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
முல்லைத்தீவில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினரே பக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியுள்ளனர், இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை- கஜேந்திரகுமார் Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 06:36 PM இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- எங்களிற்கு கிடைத்த தகவலின் படி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலை. அவ்வாறே எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் முகாமிற்கு சென்ற பிறகு அவரை கொலை செய்துதான் குளத்தில் போட்டிருக்கின்றார்கள் என அங்கிருக்ககூடியவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வடக்குகிழக்கில் குறிப்பாக முல்லைத்தீவில், ஒன்றிற்கு இரண்டு என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். ஒரு இராணுவசிப்பாய் இரண்டு பொதுமக்கள் என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அங்கு கொலை நடந்தால் கூட இராணுவத்திற்கு தெரியாமல் நடக்க முடியாத நிலைதான் அங்கு காணப்படுகின்றது. அதுதான் அங்கு காணப்படுகின்ற யதார்த்தம், ஆகவே இந்த நிலையிலே, ஒரு இனப்படுகொலையையே செய்திருக்கின்ற ஒரு இராணுவம் 16 வருடங்களாக அந்த இனப்படுகொலை தொடர்பாக எந்த வித பொறுப்புக்கூறலும் நடக்காமலிருக்க, அந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட நபர்களே பக்கத்து பக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியியுள்ளனர். பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில வீதியில் நடந்து செல்கின்றார்கள். பிள்ளைகளை கடத்தி துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில் வந்து நிற்கின்றார்கள். அவர்கள் பாடசாலைக்கு செல்கின்றார்கள், சிவில் பாதுகாப்பு படையினர் என தெரிவித்துவிட்டு முன்பள்ளிகளில் படிப்பிக்கின்றார்கள். ஆகவே அவர்கள் செய்த நேரடிகுற்றங்களிற்கு பொறுப்புக்கூற வைக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்பது ஒன்று. ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்;துகொண்டுள்ள நிலையிலே தொடர்ந்தும் தண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் அந்த மக்கள் மத்தியில் இருப்பது என்பது, அந்த மக்களை இன்னும் இன்னும் மிக மோசமான ஒரு மனஉளைச்சலிற்கு, அவர்களின் மனதை உடைக்கின்ற ஒரு செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். இராணுவத்தினர் முழுமையாக பொறுப்புக்கூறவைக்கின்ற வரைக்கும், இராணுவத்தில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட முழுப்பேரும் அதிலிருந்து முழுமையாக அகற்றப்படும் வரையிலாவது அந்த இராணுவம் வடக்குகிழக்கிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைப்பதற்கு காரணம் எங்களிற்கு ஏதோ விசர் என்பதற்காக இல்லை. அவர்கள் அங்கிருக்க கூடாது , அந்த மக்களிற்கு அவர்கள் அங்கிருப்பதே ஒரு ஆபத்து. இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை. https://www.virakesari.lk/article/222181
-
பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க முயற்சிக்கின்றோம் - சுகாதார அமைச்சர் Published By: DIGITAL DESK 2 09 AUG, 2025 | 04:05 PM (எம்.மனோசித்ரா) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கு சுகாதார அமைச்சின் சார்பில் சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொது மக்களுக்கு தடையற்ற மருத்துவ சேவையை வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சனிக்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை அவசர மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு வேலை நிறுத்த போராட்டத்துக்குச் செல்வதற்கான காரணமொன்று இருக்கும் என நான் நினைக்கவில்லை. அவர்களுடன் நான் கலந்துரையாடினேன். சில இடங்களிலுள்ள பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. தற்போது சேவையாற்றும் வைத்தியர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இணைக்கப்பாட்டுடனேயே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாம் நியாயமான தீர்வொன்றை வழங்குவோம். மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் நோக்கமாகும். எவ்வாறிருப்பினும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே நாம் அந்த சேவையை ஆற்றிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளுக்கு தற்போது படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாது என எதிர்பார்க்கின்றோம். கடந்த ஆட்சிக் காலங்களில் செயற்பட்டதைப் போன்றே தற்போதும் சில அதிகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நியாயமானதல்ல. சுகாதார அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஒரே இலக்குடனேயே பணியாற்றுகின்றனர். சுகாதாரத்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு என்ன காரணம் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நன்கு அறியும். தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை விரைவாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திங்களன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதார அமைச்சின் சார்பில் நாம் முன்னெடுத்திருக்கின்றோம். எமது முயற்சி வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/222173
-
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன் : சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது : மூவருக்கு விளக்கமறியல்! 09 AUG, 2025 | 08:08 PM முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (8) முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போன நிலையில் இன்று காலை (09) குறித்த குடும்பஸ்தர் குளத்திலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த இளைஞனின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்ட நிலையில், சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதில், முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (07) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால் தொலைபேசியில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஐவர் சென்றுள்ளனர். இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகிய நிலையில், இன்று காலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்றையதினம் இராணுவ முகாமிற்கு சென்ற இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர். காணாமல்போன குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி நேற்று வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதும் குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டது. இந்நிலையில் குறித்த காணாமல்போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222183
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது 09 AUG, 2025 | 08:16 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் சனிக்கிழமை (9) கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் 28 உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. இந்த நிலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக குறித்த ஐவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறித்த ஐவரில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர் களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் சந்தேக நபரான வைத்தியர் ஒருவரையும், தாதிய உத்தியோகத்தர் ஒருவரையும் கைது செய்ய உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/222178
-
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இன்று (9) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் 7 இளைஞர்கள் சென்றதாகவும், அவர்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளதுடன் தப்பியோடிய ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி ஊடாக உரையாடியதுடன் அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டேன். இது தொடர்பில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியிருந்தேன். பொலிஸார் இது தொடர்பில் நீதியான வகையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு, எமது உயர்மட்ட அமைச்சர்களுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். ஆகவே, இச் சம்பவம் தொடர்பில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைத் தன்மையினை வெளிபபடுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cme3z7wt802bqqp4k1h7g2pps
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? - இந்திய விமானப்படை தலைவர் புதிய தகவல் பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த ராணுவ மோதலின்போது ஐந்து போர் விமானங்களும் ஒரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் ஏபி சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதைப்பற்றி பேசியுள்ளார். இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மே 6, 7 இரவு அன்று நடந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெற்ற 16வது ஏர் சீஃப் மார்ஷல் எல் எம் கத்ரே சொற்பொழிவில் ஏபி சிங் கலந்து கொண்டார். அப்போது, இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை குறைந்தது ஐந்து பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் மற்றும் ஒரு பெரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார். பெரிய விமானம் எலிண்ட் (ELINT) அல்லது ஏஇடபிள்யு&சி (AEW&C) ஆக இருக்கலாம் எனத் தெரிவித்தார். ஏபி சிங்கின் கூற்றுப்படி விமானம் தரையிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் குறிவைக்கப்பட்டது. இது தற்போது வரை மேற்கொள்ளப்பட்டதிலே தரையிலிருந்து வான் இலக்குகளைக் குறிவைக்கும் மிகப்பெரிய தாக்குதல் ஆகும் என்றார். '80-90 மணி நேரம் வரை நீடித்த உயர் தொழில்நுட்ப போர்' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று விவரித்தார். இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை 'உயர் தொழில்நுட்ப போர்' என்று அவர் விவரித்தார். "இது இந்தியா சண்டையிட்ட உயர் தொழில்நுட்ப போர் என நான் கூறுவேன். இதில் அவர்களின் (பாகிஸ்தான்) வான் பாதுகாப்பு அமைப்புக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தினோம்" எனத் தெரிவித்தார். மேலும், "இந்த இழப்புகளைப் பார்த்த பிறகு, இனியும் இதைத் தொடர்ந்தால் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். இது உயர்மட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்றார். மே 7-10 வரை நடைபெற்ற ராணுவ மோதல் தொடர்பாக பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மே 31 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், பாகிஸ்தான் உடனான மோதலின்போது இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்திருந்தார். இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள 'கசப்புணர்வு' பாகிஸ்தானுக்கு சாதகமாகுமா? 'இந்தியாவுக்கு பாகிஸ்தான் கச்சா எண்ணெய் விற்கலாம்' - பாகிஸ்தானின் எண்ணெய் வளம் பற்றிய ஒரு பார்வை இந்தியாவை விமர்சித்துவிட்டு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்த டிரம்ப் - எந்த துறைகளுக்குப் பாதிப்பு? 'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த சொன்னது யார்? வேறுபடும் மோதி - டிரம்ப்! இந்திய விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய பாகிஸ்தானின் கூற்றையும் அவர் முற்றிலுமாக மறுத்தார். எனினும், கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் 'ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது' எனத் தெரிவித்தார். ஆனால், எந்த நாடுகளின் விமானங்கள் பாதிக்கப்பட்டன என டிரம்ப் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக ஐந்து இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. எனினும், இந்தியா இந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78znz37862o
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னாரில் காற்றாலை அமைத்தல், கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர் போராட்டம் : பேசாலை கிராம மக்களும் இணைவு 09 AUG, 2025 | 02:46 PM மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (9) 7 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும்,பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது.இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை (09) வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர். குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனபேவ அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அளவில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள்,குறிப்பாக வயோதிபர்கள்,சிறுவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் காற்றாலை கோபுரங்கள் அமைத்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில் அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர். மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர். பின்னர் நகர சுற்றுவட்ட பகுதியில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/222161
-
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை
09 AUG, 2025 | 01:07 PM (எம்.மனோசித்ரா) ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன. இம்முறை சிங்கள மொழி மூலம் 2,31,637 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 76,313 மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டு மொத்தமாக 3,07,951 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பரீட்சை நிலையங்களுக்கான முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தேவையான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் தீவுகளில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு சேர்ப்பதற்கு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் தேவை ஏற்படும் பட்சத்தில் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும். தடையற்ற மின் விநியோகம் தொடர்பில் இலங்கை மின்சாரசபையுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அவசர மருத்துவ நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பரீட்சாத்திகள் காலை 8.30 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு சென்று விட வேண்டும். முதலில் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். காலை 9.30க்கு பரீட்சை ஆரம்பமாகி 10.45க்கு நிறைவடையும். அதன் பின்னர் முற்பகல் 11.15க்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். 12.15க்கு பகுதி ஒன்று பரீட்சை நிறைவடையும். பரீட்சைக்கு தேவையான உபகரணங்கள் மாத்திரமமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படும். கைக்கடிகாரத்தை உபயோகிக்க முடியும். ஆனால் நவீன கைக்கடிகாரங்களை உபயோகிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றார். https://www.virakesari.lk/article/222152