Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கூறினார்: செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியரும் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். பேராசிரியரின் அறிக்கையில், ஸ்கேனர் பயன்படுத்தப்பட்ட பின்னர் குறைந்தது எட்டு வாரங்களுக்கு மேலதிக அகழ்வுப் பணிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இதனடிப்படையில், நான் இரு தடவைகள் அகழ்வு இடத்திற்குச் சென்று மேற்பார்வை செய்தேன். இதனைத் தொடர்ந்து, இன்றைய விசாரணையில் சில முக்கிய விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையின் கீழ் நடைபெறுகிறது. குற்றவியல் நடவடிக்கைகளில் இதற்கென தனியான சட்ட ஏற்பாடுகள் இல்லை. உடல் கண்டெடுக்கப்பட்டால், அது உடனடியாக மரண விசாரணையாக மாற்றப்படுகிறது. மரண விசாரணையின் முதன்மை நோக்கம், கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளப்படுத்துவதாகும். எனவே, அகழ்வுப் பணிகளுடன், உடல்களை அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. சட்ட வைத்திய அதிகாரி, இப்பணிகளில் நிபுணத்துவம் இல்லை என்று ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதாக முறைப்பாடு செய்தார். இது தொடர்பாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கையில் அகழ்வுப் பணிகளுக்கு நிபுணத்துவம் இருந்தாலும், உடல்களை அடையாளப்படுத்துவதற்கு உரிய நிபுணத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. உதாரணமாக, 1999இல் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூடுகள் முதலில் இந்தியாவின் ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அங்கு நிபுணத்துவம் இல்லாததால், அவை திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் லாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது அவை இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிகிறோம். 1999இல் மரண தண்டனைக் கைதியான சோமரட்ன ராஜபக்ச, மேல் நீதிமன்றத்தில் அளித்த கூற்றின் அடிப்படையில் செம்மணியில் அகழ்வு நடத்தப்பட்டது. அவர் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போது 15 எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. தற்போது, 150 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ராஜபக்ச குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ளதால், அவரது கூற்று உண்மையாக இருக்கலாம் என்பது தற்போது நிரூபணமாகிறது. செம்மணி விவகாரம் தொடர்பாக B2899 என்ற வழக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பல இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சிலர் விடுவிக்கப்பட்டு, ஐவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவ்வழக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கை மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு நான் கோரியுள்ளேன். இதனைப் பரிசீலித்து, இரு வழக்குகளும் தொடர்புடையதாக இருப்பின், மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 1999இல் செம்மணி பகுதியில் பலர் காணாமல் ஆக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து, கலாநிதி தெவநேசன் நேசையா தலைமையில் மூவர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, 2003 ஒக்டோபர் 28இல் 210 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில், அரியாலை, சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்ப்பாண நகரம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு படைத்தரப்பினர் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள், முகாம்களின் பொறுப்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்டவை அறிக்கையில் உள்ளன. இவ்வறிக்கையின் பிரதியை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இவ்விடயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதால், உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளேன். இதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வழமையாக, மரண விசாரணை முடிந்த பின்னரே குற்றப் புலனாய்வு ஆரம்பிக்கப்படும். ஆனால், பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையின் பேரில், இதற்கு இணையாக புலனாய்வு நடத்தப்படுகிறது. இன்று, சட்டத்தரணிகளான மணிவண்ணன், குருபரன் மற்றும் நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் அளிக்க வந்தவர்களை பயமுறுத்தியதாக முறைப்பாடு செய்தோம். இதனையடுத்து, வாக்குமூலங்கள் பகிரங்கமாக, அனைவரும் காணக்கூடிய இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை இவ்விசாரணையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்தேன். மேலும், சான்றுப் பொருட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும்போது, அவை உரிய மேற்பார்வையுடன் கையாளப்பட வேண்டும் எனவும், இதற்கு அனுபவமிக்க ஆய்வகங்கள் தேவை எனவும் வலியுறுத்தினேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் DNA பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். ஆனால், இவ்வாறு புதிதாக அமைக்கப்படும் ஆய்வகத்தில் இப்பரிசோதனைகளை மேற்கொள்வது உகந்ததல்ல என நான் குறிப்பிட்டேன். அனுபவமும் நிபுணத்துவமும் உள்ள ஆய்வகங்களே இதற்கு பொருத்தமானவை என வாதிட்டேன். எட்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 20ஆம் திகதி அகழ்வு இடம் சுத்தப்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி மீண்டும் பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறினார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmebja1p202k7qp4k6eihllkv
  2. 14 AUG, 2025 | 05:15 PM (இராஜதுரை ஹஷான்) மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தல் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவோம். கடந்த 09 மாதகாலத்துக்குள் மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தினோம். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்டசிக்கலால் ஆணைக்குழுவினால் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியாத தடை காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்ட சிக்கல் மற்றும் அவற்றுக்கான தீர்வு குறித்து உயர்நீதிமன்றம் பலமுறை வியாக்கியானமளித்துள்ளது. நடைமுறை தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது. மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகளால் செயலாற்றப்பட வேண்டும். இலங்கையின் தேர்தல் கட்டமைப்பில் மாகாண சபைத் தேர்தல் ஒரு பிரதான அங்கமாக காணப்படுகிறது. ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/222565
  3. டிரம்ப் - புதின் சந்திப்பு அலாஸ்காவில் நடப்பது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பு கட்டுரை தகவல் மேட்லைன் ஹால்பர்ட் பிபிசி செய்திகள் கிறிஸ்டல் ஹேய்ஸ் பிபிசி செய்திகள் 14 ஆகஸ்ட் 2025, 05:28 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றி விவாதிக்க, ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்கவிருக்கின்றனர். இந்த சந்திப்பு அலாஸ்காவில் நடைபெறவிருக்கிறது. யுக்ரேனில் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால், மேலும் பல கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா விதித்திருந்த காலக்கெடு முடிவடையவிருந்த நாளன்று டிரம்ப் இந்த சந்திப்பு பற்றிய செய்தியை அறிவித்தார். டிரம்பின் உத்தரவின் பேரில் ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே இந்த கோடையில் நடைபெற்ற மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினரும் எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை. ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பைப் பற்றி இதுவரை வெளியான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம். பட மூலாதாரம், GETTY IMAGES சந்திப்பு அலாஸ்காவில் நடப்பது ஏன்? ரஷ்யாவுக்கு சொந்தமான அலாஸ்காவை 1867ஆம் ஆண்டில் அமெரிக்கா வாங்கியது. 1959இல் அமெரிக்க மாகாணங்களில் ஒன்றாக மாறிய ரஷ்யாவின் பழைய நகரம் ஒன்றில் நடைபெறும் சந்திப்பு என்பது, இந்த சந்திப்பை சரித்திர முக்கியத்துவம் பெறச் செய்கிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அண்டை நாடுகள், பெரிங் ஜலசந்தி மட்டுமே அவற்றைப் பிரிக்கிறது என்பதை ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் சுட்டிக்காட்டுகிறார். "எங்கள் தூதுக்குழுவினர் பெரிங் ஜலசந்தியின் மீது பறப்பதும், அலாஸ்காவில் நடைபெறவிருக்கும் இரு நாடுகளின் தலைவர்களின் முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாடும் மிகவும் தர்க்கரீதியானதாகவே தெரிகிறது" என்று உஷாகோவ் கூறினார். 2021 மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜோ பைடனால் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜதந்திர மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு, ஆங்கரேஜில், சீனாவின் பாதுகாப்புக் குழுவை சந்தித்தபோது, அலாஸ்கா கடைசியாக ஒரு அமெரிக்க ராஜதந்திர நிகழ்வின் மையமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்கவில்லை. சந்திப்பின் விளைவால் கடும் கோபமடைந்த சீனா, அமெரிக்கர்கள் "உயர்வு மனப்பான்மை மற்றும் பாசாங்குத்தனம்" கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டியது. அலாஸ்காவில் டிரம்பும் புதினும் எங்கு சந்திப்பார்கள்? இரு நாட்டு அதிபர்களும் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை செவ்வாயன்று (2025, ஆகஸ்ட் 11) உறுதிப்படுத்தியது. இருதரப்பு ஒப்பந்தத்தை அறிவிக்கும் போது, அந்த இடம் "பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமானதாக" இருக்கும் என்று டிரம்ப் கூறினார், அது மாகாணத்தின் மிகப்பெரிய நகரத்தில் இருக்கும் என்பதை அவர் வெளியிடவில்லை. அலாஸ்காவின் மிகப்பெரிய ராணுவ நிறுவலான எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சன் கூட்டுத் தளத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்கள் தங்க வைக்கப்படுவார்கள். 64,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தளம் ஆர்க்டிக் ராணுவத் தயார்நிலைக்கு அமெரிக்காவின் முக்கிய தளமாகும். டிரம்ப்-புதின் சந்திப்பு பின்னணி யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார், இருந்தபோதிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றி ஏற்படவில்லை. முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தலில் தான் வெற்றிபெற்று பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும், 2022இல் ரஷ்யா யுக்ரேனின் மீது படையெடுத்த சமயத்தில் தான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போர் "ஒருபோதும் நடந்திருக்காது" என்றும் அவர் பலமுறை வலுவாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம்,பிபிசியிடம் பேசிய டிரம்ப், புதினால் தான் "ஏமாற்றமடைந்ததாக" தெரிவித்தார். இதுபோன்ற சூழலில், உடனடியாக ரஷ்யா போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது இன்னும் பல கடுமையான அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆகஸ்ட் 8ஆம் தேதி புதினுக்கு காலக்கெடு நிர்ணயித்தார் டிரம்ப். காலக்கெடு நெருங்கிய நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தான் நேரில் சந்திப்பதாக டிரம்ப் அறிவித்தார். புதன்கிழமையன்று அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் புதினை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகள், "மிகவும் பயனுள்ளதாக" இருந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தான் ரஷ்ய அதிபரை சந்திக்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக, இருதரப்பும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஊகங்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது. திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவர புதினை வலியுறுத்துவதே அவரை சந்திப்பதன் முக்கிய நோக்கம் என்றும் இது "உணர்ச்சிபூர்வமான சந்திப்பாக" இருக்கும் என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, யுக்ரேனின் ஐரோப்பியக் கூட்டாளிகளான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் (இடது) மற்றும் பிரிட்டனின் பிரதமர் கியர் ஸ்டாமர் (வலது) — அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர் அலாஸ்கா கூட்டத்தில் யுக்ரேனும் கலந்துகொள்கிறதா? யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது சந்தேகம் என்றே தெரிகிறது. திங்களன்று இந்தக் கூட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது, "அவர் கலந்துக்கொள்ளலாம் என்றே நான் கூறுவேன், ஆனால் அவர் இதுவரை பல கூட்டங்களில் கலந்துகொண்டார்" என்று தெரிவித்தார். இருப்பினும், அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு, தான் அழைக்கும் முதல் நபர் ஜெலென்ஸ்கியாகவே இருப்பார் என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் புதினுடனான நேரடி சந்திப்புக்கு முன்னதாக, புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 13) டிரம்பும் ஜெலன்ஸ்கியும் மெய்நிகர் முறையில் சந்தித்துப் பேசுவார்கள் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்தார். ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில் பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொள்வார்கள். டிரம்ப், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி என மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளும் முத்தரப்பு சந்திப்பை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை முன்பு கூறியிருந்தது. ஆனால், ஜெலன்ஸ்கியை விலக்க வேண்டும் என்று புதின் கோரியிருந்தார். யுக்ரேனின் ஈடுபாடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் "உயிரற்ற முடிவுகளுக்கு" சமமானதாக இருக்கும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். சந்திப்பும் இரு தரப்பினரின் எதிர்பார்ப்பும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ரஷ்யாவும் யுக்ரேனும் நீண்ட காலமாக கூறி வந்தாலும், ஒரு நாடு கடுமையாக எதிர்க்கும் விஷயத்தையே மற்றொரு நாடு விரும்புகிறது என்பது முக்கியமான சிக்கலாக இருந்துவருகிறது. " சில பகுதிகளை [ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட] யுக்ரேனுக்குத் திரும்பப் பெற்றுத் தர முயற்சிக்கப் போகிறேன்" என்று திங்களன்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் "சில பரிமாற்றங்களும், நில மாற்றங்களும்" இருக்கலாம் என்றும் அவர் முன்னெச்சரிக்கையும் செய்துள்ளார். இருப்பினும், க்ரைமியா உட்பட மாஸ்கோ கைப்பற்றிய பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை ஏற்கப்போவதில்லை என்பதில் யுக்ரேன் உறுதியாக உள்ளது. பிரதேசங்களை "மாற்றிக்கொள்ளும்" எந்தவொரு யோசனையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இந்த வாரம் கூறிய ஜெலென்ஸ்கி, "ரஷ்யா செய்த செயலுக்கு நாங்கள் பரிசு வழங்க முடியாது" என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டார். ரஷ்ய அதிபர் புதினும், தனது பிராந்திய கோரிக்கைகள், யுக்ரேன் நடுநிலைமையாக இருப்பது மற்றும் ராணுவத்தின் எதிர்கால அளவு போன்ற பிரச்னைக்குரிய பல விசயங்களில் இருந்து பின்வாங்கவில்லை. தனது படைகளை ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் கொண்டு வருவதற்காக யுக்ரேனை மேற்கத்திய தற்காப்பு கூட்டணியான நேட்டோ பயன்படுத்திக் கொள்கிறது என்று நம்பிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார். யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய தலைவர்களை சமாதானப்படுத்த, டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ரஷ்யாவை க்ரைமிய தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை வைத்திருக்க அனுமதிக்கும், மேலும் கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கும், இது டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா, 2014இல் க்ரைமியாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது மற்றும் ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்போது தனது ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் மற்றும் சபோரிஷியாவை ரஷ்யா விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், எந்தவொரு எதிர்கால ஒப்பந்தமும் "யாரையும் முழுமையாக திருப்திப்படுத்தவோ, மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யவோ போவதில்லை" என்று கூறினார். மேலும், "இங்கே சமாதானம் செய்ய வேண்டும்... யாரையும் விரல் நீட்டி பேசமுடியாது," என்று அவர் கூறினார். "அமைதிக்கான ஒரே வழி, மக்களை ஒன்று சேரும்படி கட்டாயப்படுத்தி, வழிநடத்திச் செல்லக்கூடிய தீர்க்கமான தலைவர் ஒருவரைக் கொண்டிருப்பதாகும்" என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80dg4lj77lo
  4. 6) இன்றைய தினம் 14/08/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக நவரத்தினம் சிவரஞ்சன் குடும்பம் (சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்) 20000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 14/08/2025 இன்றுவரை மொத்தமாக 220070 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. பேசமுடியாத தந்தையும் மூத்த மகனும் உள்ள இந்த குடும்பத்திற்கு பலதடவைகள் அரசின் நிதி உதவியுடனான வீட்டுத்திட்டம் தவறிப்போனது. இம்முறை இதனை பூரணப்படுத்தி அவ்வீட்டில் குடியேற நல்லுள்ளங்களே உங்களால் இயன்ற பங்களிப்பை செய்து உதவுமாறு தாழ்மையோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகொள்ள +94 77 777 5448 +94 77 959 1047
  5. கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர். Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 01:55 PM Kamanthi Wickramasinghe தமிழில் - ரஜீவன் மன்னாரில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமாகி தொடரும் போராட்டத்திற்கான பெயர் கருநிலம். சட்டவிரோத கனியவள - இல்மனைட் அகழ்வு - காற்றாலை மின் திட்டம் - இறால் பண்ணைகள் போன்ற மன்னார் தீவின் இயற்கை சமநிலையை அழித்துக்கொண்டிருக்கின்ற விடயங்களிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. மன்னார் இலங்கையில் அதிகளவு மணல் பரப்பை கொண்ட தீவாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு அருகில் உள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற தீர்மானங்கள் காரணமாக மன்னார் மக்கள் நிலம், நீரை பெறுவதற்கான வழிமுறைகள் உட்பட ஏனைய அடிப்படை உரிமைகளை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். சமீபத்தில் எப்படி காற்றாலையை அமைப்பதற்கான பொருட்கள் மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டன என்பதை பொதுமக்கள் பார்வையிட்டனர். கடும் பாதுகாப்புடன் ஆறு ஏழு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட இந்த இறக்கைகளை - பொதுமக்கள் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பொதுமக்கள் மறித்தனர் என தெரியவந்துள்ளது. மன்னாரில் ஏற்கனவே உள்ள 30 காற்றுவிசையாழிகளிற்கு அப்பால் இந்த காற்றாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். மிகவும் பலவீனமான சுற்றுசூழல் அமைப்பை கொண்ட மன்னார் தீவிற்கு 30 விசையாழிகள் போதும் என மக்கள் நம்புகின்றனர். மன்னாரின் சுற்றுசூழல் மதிப்பும் முக்கியத்துவமும் பல்லுயிர் பெருக்கமும் பல்லாயிரக்கணக்கான வலசப்பறவைகளை ஈர்க்கின்றது. ஆனால் மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை விசையாழிகள் பல பறவைகளை கொல்லக்கூடியவை என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதானி குழுமத்தின் முன்மொழியப்பட்ட காற்றாலை மின்திட்டத்தினை நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ள போதிலும் பல நிறுவனங்கள் காற்றாலைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இது பசுமை ஆற்றலை உருவாக்கும் போர்வையில் ஒரு அழகிய சுற்றுசூழல் அமைப்பை அழிப்பதற்கு சமமானது. மன்னார் மக்கள் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்களின் நீதியைக் கோருவதற்கான ஒரே வழி அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை கேட்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதுதான். "ஏற்கனவே மழைக்காலத்தில் மன்னார் தீவு 3-4 மாதங்களாக நீரில் மூழ்கி அனைத்து குடியிருப்பாளர்களின் வாழ்க்கையையும் துயரத்தில் ஆழ்த்துகிறது" என்று மன்னாரில் ஏற்படும் அழிவுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு குடியிருப்பாளர் கூறினார். "கழிவுநீர் கசிவுகள் மற்றும் மோசமான சுகாதார நிலைமைகள் காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இது எங்கள் வீடு நாங்கள் எங்கும் செல்ல முடியாது" என்று குடியிருப்பாளர் மேலும் கூறினார். வரவிருக்கும் பேரழிவு கடந்த சில நாட்களாக கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் வரவிருக்கும் பேரழிவைத் தவிர்க்க அரசாங்கத்தை நம்ப வைக்கும் நம்பிக்கையுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர திட்டமிட்டுள்ளனர். ஜூன் 18 அன்று வெளியிடப்பட்ட "பேரழிவு தரும் திட்டங்களை நிறுத்துங்கள்!": மன்னார் மக்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் முந்தைய கட்டுரையில் டெய்லி மிரர் மன்னார் தீவுக்கு ஏற்பட்ட அழிவின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டியது. சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் பொதுமக்கள் அடிப்படை உயிர்வாழ்தலிற்கே சவாலை ஏற்படுத்தியுள்ள போதிலும் அடிப்படை உரிமைகளை பாதித்துள்ள போதிலும் இந்த திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றார்களா என்பது குறித்து அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதில் எதுவுமில்லை. மன்னாரில் நடந்து வரும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 'கருநிலம்' என்ற தலைப்பில் ஒரு அதிகாரப்பூர்வ போராட்டப் பாடலை வெளியிட்டனர். இது நிலைமையின் தீவிரத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது. இல்மனைட் அகழ்வினால் ஏற்படும் நீரில் அதிக அளவுகள் மற்றும் இந்த முன்னேற்றங்களால் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விளைவுகள் குறித்து இந்தப் பாடல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மௌனப் போராட்டம் நடத்தி வந்த போதிலும் அரசாங்கம் மௌனமாக இருப்பதை அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். டெய்லி மிரருக்கு பேட்டி அளித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மெலனி குணதிலகா மன்னார் தீவில் முன்மொழியப்பட்ட இல்மனைட் அகழ்வு மற்றும் பிற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்தார். "மன்னார் ஒரு உள்ளூர் பிரச்சினை மட்டுமல்ல, இது உலகளாவிய சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது. அழிந்து வரும் பல்லுயிர் பெருக்கம் வளமான கடல் வாழ்விடங்கள் மற்றும் மத்திய ஆசிய விமானப் பாதையில் ஒரு முக்கியமான முனை 150 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இடம்பெயர்வு பாதை. இந்தப் பகுதியில் பெரிய அளவிலான தொழில்துறை சீர்குலைவு வனவிலங்குகளுக்கு மட்டுமல்ல இந்த உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்ந்திருக்கும் பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கும் மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார். சர்வதேச சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க மாநிலங்கள் சட்டப்பூர்வ கடமைகளைக் கொண்டுள்ளன இதில் சுத்தமான ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலுக்கான உரிமையும் அடங்கும் என்று சர்வதேச நீதிமன்றம் ) சமீபத்தில் உறுதிப்படுத்தியதாக குணதிலகா மேலும் கூறினார். "இது தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களை தனியார் ஒழுங்குபடுத்துவதற்கும் மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுப்பதற்கும் உள்ள கடமையை உள்ளடக்கியது. இதற்கு மேலதிகமாக நவ்ரு எள. ஆஸ்திரேலியா வழக்கில் அமைக்கப்பட்ட முன்னுதாரணமானது பாதிக்கப்படக்கூடிய தீவு சூழல்களில் வளங்களை பிரித்தெடுப்பதால் ஏற்படும் அழிவுக்கு மாநிலங்கள் பொறுப்பேற்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார் பல சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள் மற்றும் மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ள இலங்கை மக்களின் மட்டுமல்ல இயற்கையின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது. திட்டங்களை ஒவ்வொன்றாக அங்கீகரிப்பது மன்னாரின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கத்தை புறக்கணிக்கிறது. ஒரு விரிவான முழு தீவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியம். குறைவான எதுவும் சர்வதேச விதிமுறைகளை மீறுகிறது மற்றும் சுற்றுச்சூழல் பாகுபாட்டின் செயலாக மாறும் அபாயம் உள்ளது. அங்கு சிறுபான்மை சமூகங்கள் மாசுபாடு இடப்பெயர்ச்சி மற்றும் வாழ்வாதார இழப்பு ஆகியவற்றால் விகிதாசாரமாக சுமையாக உள்ளன. மன்னார் தீவு செலவிடத்தக்கது அல்ல. இது அதன் மக்களுக்கு பறவைகளுக்கு பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு சரணாலயமாகும் மேலும் தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அவ்வாறு நடத்தப்பட வேண்டும்” என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அழிவுகரமான திட்டங்களையும் அனுமதிக்காது' என்று ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளித்தார். ஒவ்வொரு திட்டமும் மக்களின் ஒப்புதலுடனும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்துடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு கட்சி உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். ஆயினும்கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆன பிறகும் மன்னார் தீவின் தொடர்ச்சியான அழிவுக்கு முடிவே இல்லாததால் மன்னார் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். https://www.virakesari.lk/article/222383
  6. பட மூலாதாரம், DEEPAK SHARMA 58 நிமிடங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 38 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்கஜ் சர்மா பிபிசி நிருபர் மஜித் ஜஹாங்கிரிடம் தெரிவித்தார். குறைந்தது 70 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிஷ்த்வார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி அந்தப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிதான் மசைல் மாதா யாத்திரை தொடங்கும் இடமாகும். கிஷ்த்வார் மாவட்ட துணை ஆட்சியர் பங்கஜ் சர்மாவை மேற்கோள் காட்டும் ஏஎன்ஐ நிறுவனம், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. "ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வெற்றிபெற பிரார்த்திக்கிறேன்" என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த இயற்கைப் பேரழிவு குறித்து பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் வலைதளத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். "கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்குள்ள நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்." இந்த இயற்கைப் பேரிடரால் பெரும் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் அலுவலகம், உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரிடமிருந்து அறிக்கைகள் வந்துள்ளன. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இந்த இயற்கைப் பேரிடர் குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ சுனில் குமார் சர்மா கூறுகையில் , "பெரிய இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது, பாதிப்பு மற்றும் சேதம் தொடர்பான முழுமையான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை. யாத்திரை இன்னும் நடந்து கொண்டிருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார். மறுபுறம், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில், கனமழை காரணமாக, மெந்தர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சாலைகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளப்பெருக்கு தொடர்பான சில காணொளிகளை PTI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. "இன்று காலை 11.30 மணியளவில் கிஷ்த்வாரின் சஷோதி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன" என்று ஜம்மு பிரிவு ஆணையர் ரமேஷ் குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் . "மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முழு தயார் நிலையில் பணியாற்றி வருகிறோம். உதவிக்காக ஹெல்ப்லைன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கூடுதல் மீட்புக் குழுக்கள் சம்பவம் நடந்த இடத்தை அடைவதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். "சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த முடியாது. நான் மத்திய அரசுடன் பேசி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்து வருகிறேன்.'' என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா 'புவி வெப்பமடைதலை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்' மலைப்பகுதிகளில் மேக வெடிப்பு சம்பவங்கள் நிகழ்வது சர்வசாதாரணமாகிவிட்டன என்றும், இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஃபரூக் அப்துல்லா கூறினார். மேக வெடிப்பு குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா, "புவி வெப்பமடைதல் பிரச்னையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். மலைப்பகுதிகளில் இது மிகவும் பொதுவானதாகிவிட்டது. அதைச் சமாளிக்க ஏதாவது ஒரு முறையைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த துயரமான நேரத்தில் இதற்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதைப் பற்றி சிந்திக்குமாறு நான் அவரை கேட்டுக்கொள்கிறேன்" என்றார். "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். நமது மலைப்பகுதிகளில் மேக வெடிப்பு ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. உத்தரகண்டிலும் அங்கு ஏற்பட்ட சேதத்தையும் நாம் பார்த்தோம். கடந்த ஆண்டு இந்த சம்பவம் ராம்பனில் நடந்தது. இந்த முறை மசைல் மாதா யாத்திரை செல்லும் பாதையில் நடந்துள்ளது. இந்த யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர்" என்று அவர் கூறினார் . "விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்து மீட்டு வருவார்கள் என்று நம்புகிறோம். கிராமங்கள் மற்றும் கோவில் பகுதிகள் சேதமடைந்துள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்காது என்று நம்புகிறோம்." - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7yryg8n5zo
  7. காசாவில் இடம்பெறும் யுத்தத்தின் முகமாக மில்லியன் கணக்கானவர்களிற்கு அனஸ் அல் ஷரீவ் மாறினார் - பின்னர் இஸ்ரேல் அவரை கொன்றது Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 01:54 PM cnn காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தவேளை அனாஸ் அல் ஷரீவ் தொலைக்காட்சியில் தனது பாதுகாப்பு சாதனங்களை அகற்ற தொடங்கினார். மகிழ்ச்சியுடன் காணப்பட்ட மக்கள் ஆராவரித்தனர். அன்றைய நாளுடன் காசா பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு மில்லியன் மக்களின் துயரங்கள் முடிவிற்கு வந்துவிடும் என நம்பினார்கள். இதற்கு ஏழு மாதங்களிற்கு பின்னர் காசா நகரத்தில் மேற்கொண்ட தாக்குதல் ஒன்றின் மூலம் இஸ்ரேல் அல்ஜசீரா ஊடகவியலாளரையும் அவரது சகாக்கள் நால்வரையும் கொலை செய்தது. காசாவில் அதிகம் அறியப்பட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர் யுத்தத்தின் போது இஸ்ரேலால் கொல்லப்பட்ட பல பத்திரிகையாளர்களில் ஒருவர். - அல் ஷரீவின் மரணம் சர்வதேச கண்டனங்களை மீண்டும் கிளறிவிட்டுள்ளதுடன் பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள்களும் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் காசாவிற்குள் சர்வதேச ஊடகங்கள் செல்வதற்கு தடைவிதித்திருந்த சூழ்நிலையில் மில்லியன் கணக்காண மக்களிற்கு காசாவின் கதையை தெரிவித்ததன் மூலம் 28 வயது அல் ஷரீவ் பிரபலமானவராக மாறினார். யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிகம் அறியப்படதவராக காணப்பட்ட இவர் காசா குறித்த அந்த மக்களின் துயரங்கள் குறித்த நாளாந்த செய்திஅறிக்கையிடல் காரணமாக அராபிய உலகின் வீடுகளில் பேசப்படும் ஒரு பெயராக மாறினார். மோதலின் மிக முக்கியமான தருணங்களின் நேரடி தகவல்களை அவரது செய்திகள் வழங்கின. காசாவின் குறுகிய காலம் நீடித்த யுத்த நிறுத்தம் குறித்தும் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலை குறித்தும் உலகினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள பட்டினி குறித்தும் அவர் செய்திகளை வெளியிட்டார். 2023 இல் தனது சொந்த நகரமான ஜபாலியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் குறித்த அவரது வீடியோ வைரலானதை தொடர்ந்து அல்ஜசீரா ஷெரீவை இணைத்துக்கொண்டது. அவ்வேளை புகைப்படப்பிடிப்பாளராக விளங்கிய இவர் ஆரம்பத்தில் தயங்கினாலும் சகாக்களின் வற்புறுத்தல்களால் போர் முன்னரங்கில் தனது முகத்தை காண்பித்தார். அவர் விபரிக்க முடியாதது என வர்ணித்த அனுபவம் அது. "நான் உள்ளுர்சனல்களில் கூட தோன்றியதில்லை" என கடந்த பெப்ரவரியில் இவர் சொடுர் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார். "தற்போது உயிருடன் இல்லாத எனது தந்தையே இதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்" என அவர் தெரிவித்திருந்தார். அல்ஷரீவ் தொலைக்காட்சியில் தோன்ற ஆரம்பித்த சில காலத்தின் பின்னர் ஜபாலியாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் விமானக்குண்டுவீச்சில் தந்தை கொல்லப்பட்டார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஷரீவ் அல்ஜசீராவிற்காக பணியாற்ற ஆரம்பித்த பின்னர் 24 மணித்தியாலத்தில் இரண்டு தடவையாவது தொலைக்காட்சியில் தோன்றினார். 'ஊடகவியலாளர்களாகிய நாங்கள் மருத்துவமனைகளில் உறங்கினோம், வீதிகளில் வாகனங்களில் அம்புலன்ஸ்கள் முகாம்களில் இடம்பெயர்ந்த மக்களுடன் உறங்கினோம். நான் 30 அல்லது 40 இடங்களில் உறங்கியிருப்பேன்' என அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஜனவரியில் அவர் தனது பாதுகாப்பு சாதனங்களை அகற்றியவேளை மக்கள் அவரை தங்கள் முதுகில் சுமந்துசென்றனர். "என்னை சோர்வடையச் செய்த தலைக்கவசத்தையும் என் உடலின் நீட்சியாக மாறிய இந்தக் கவசத்தையும் நான் கழற்றுகிறேன்" என்று அவர் அப்போது அல் ஜசீராவில் நேரலையில் கூறினார். காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சக ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அல்-ஷெரீப்பின் அறிக்கைகள் இஸ்ரேலிய இராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது மேலும் அவர் கூறுகையில் அல் ஜசீராவிற்கான தனது பணியை நிறுத்துமாறு எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த வலையமைப்பு ஏற்கனவே காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகளால் பல ஊழியர்களை இழந்த ஒரு வலையமைப்பாகும். இதில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட இஸ்மாயில் அல் கோல் மற்றும் மார்ச் மாதத்தில் கொல்லப்பட்ட ஹோசம் ஷபாத் ஆகியோர் அடங்குவர். இறுதியில் (இஸ்ரேலிய இராணுவம்) எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு குரல் குறிப்புகளை அனுப்பியது... ஒரு உளவுத்துறை அதிகாரி என்னிடம்... 'நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறி தெற்கே சென்று அல் ஜசீராவிற்கு செய்தி அனுப்புவதை நிறுத்த சில நிமிடங்கள் உள்ளன' என்று கூறினார்... நான் ஒரு மருத்துவமனையில் இருந்து நேரலையில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தேன்." சில நிமிடங்கள் கழித்து இருந்த அறை தாக்கப்பட்டது அறை தாக்கப்பட்டது" என்று அவர் கூறினார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் இன் கருத்துக்கு பதிலளிக்கவில்லை. இப்போது ஏன்? 10 மாதங்களுக்கு முன்பு அல்-ஷெரீஃப் ஹமாஸுடன் தொடர்புடையவர் என்று இஸ்ரேல் முதலில் குற்றம் சாட்டியது. இப்போது அவரை குறிவைக்க முடிவு செய்தது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தமிழில் - ரஜீவன் https://www.virakesari.lk/article/222408
  8. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2025 | 09:38 AM இத்தாலியின், லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது. லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர். ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலிய கடற்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய ஊடகப் பேச்சாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222540
  9. வணக்கம் வாங்கோ புதியசமநிலை/புதியமீதி! உங்களை எவ்வாறு அழைக்கலாம் என்றும் சொல்லுங்கோ.
  10. “காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை” - பிரியங்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தூதர் பதில் 12 AUG, 2025 | 04:15 PM புதுடெல்லி: காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும், அங்கு நடக்கும் பெரும்பாலான கொலைகளுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகளே காரணம் என்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசால் பாலஸ்தீனத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள். அதோடு, நூற்றுக்கணக்கானவர்களை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது. இதில் பலர் குழந்தைகள். மேலும், பல லட்சம் பேர் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் மரணத்தை நெருங்கும் அபாயம் உள்ளது. இந்தக் குற்றங்களை மவுனமாக செயல்படுத்துவது மட்டுமல்லாது, அவற்றை வேடிக்கை பார்ப்பதும்கூட ஒரு குற்றமாகும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது" என கூறி இருந்தார். பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவை டேக் செய்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் பதில் அளித்துள்ளார். அவரது அந்த பதிவில், "வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், உங்கள் வஞ்சகம்தான். இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது. பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது ஹமாஸின் கொடூரமான தந்திரங்கள். வெளியேற அல்லது உதவி பெற முயற்சிக்கும் மக்களைச் சுடுவது, அவர்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது ஆகியவை காரணமாகவே பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது. காசாவுக்கு 20 லட்சம் டன் உணவை இஸ்ரேல் வழங்கியது. அதேநேரத்தில், அவற்றைக் கைப்பற்ற ஹமாஸ் முயல்கிறது, இதன்மூலம் பட்டினியை உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450% அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, அல்ஜசீரா தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதற்கும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், "அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஐந்து பத்திரிகையாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது, பாலஸ்தீன மண்ணில் நிகழ்ந்துள்ள மற்றொரு கொடூரமான குற்றமாகும். உண்மைக்காக நிற்கத் துணிந்தவர்களின் அளவிட முடியாத தைரியத்தை, இஸ்ரேலிய அரசின் வன்முறை மற்றும் வெறுப்பால் ஒன்றும் செய்ய முடியாது. ஊடகங்களில் பெரும்பாலானவை அதிகாரத்துக்கும் வர்த்தகத்துக்கும் அடிமைப்படுத்தப்பட்ட உலகில், இத்தகைய துணிச்சலான ஆன்மாக்கள் உண்மையான பத்திரிகை என்றால் என்ன என்பதை நமக்கு நினைவூட்டி உள்ளன. அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும்" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222414
  11. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2025 | 11:59 AM கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் பிள்ளைகள் திருமணமாகி வேறு பகுதிகளில் குடியேறிய பின்னர் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். குறித்த நபர் சம்பவத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு பேர் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். ஏனெனில் அவர் முன்தினம் கடையில் சொக்லேட்டுகளை திருடும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்துள்ளது. முதியவரிடம் சொக்லேட் வாங்கும் அளவிற்கு பணம் இல்லாமையால் சொக்லேட் பிரியரான அவர் திருடியுள்ளார். அவர் வழமையாக கடைக்குச் செல்லும் போது தனக்கும் அவரது மனைவிக்கும் சொக்லேட்கள் வாங்கி வரும் பழக்கம் இருந்துள்ளது. சந்தேகநபர்கள் தாக்குதலுக்குள்ளான முதியவரை கடை மூடும் நேரம் வரை உள்ளே வைத்திருந்து வீதியில் விட்டுச் சென்றுள்ளனர். அவ் வழியூடாக சென்ற பெண்ணொருவர் அவரை அடையாளம் கண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார் என மரணப்படுக்கையில் இருந்த முதியவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித விஜேகோனின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். https://www.virakesari.lk/article/222548
  12. பட மூலாதாரம், ANNAMALAI/X கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் "வள்ளியம்மா, சிறையில் அடைக்கப்பட்டதற்காக நீ வருந்துகிறாயா?" என்று நான் கேட்டேன். 'வருந்துவதா? மீண்டும் கைது செய்யப்பட்டால் இப்போதே கூட சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்' என்று அந்தப் பெண் கூறினாள்." "ஆனால் அது உன் மரணத்தில் முடிந்தால் என்ன செய்வது? என நான் கேட்டேன். 'எனக்குப் பிரச்னையில்லை. தாய்நாட்டிற்காக உயிரிழக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்?' என்று அவரிடமிருந்து பதில் வந்தது" மகாத்மா காந்தி தனது 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' எனும் நூலில், தில்லையாடி வள்ளியம்மை குறித்து எழுதியுள்ள வரிகள் தான் இவை. 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு புலம்பெயர் தமிழ் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் வள்ளியம்மை. இவரது பெற்றோர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி - மங்களத்தம்மாள். வள்ளியம்மை தனது 15ஆம் வயதிலேயே, தென் ஆப்பிரிக்காவில் இனவெறியின் அடிப்படையில் இந்தியர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்ட சட்டங்களுக்கு எதிரான மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டவர். படக்குறிப்பு, தில்லையாடி வள்ளியம்மையின் உருவச்சிலை (தில்லையாடி கிராமம்) அதன் காரணமாக அந்த இளம் வயதிலேயே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த கடுமையான சூழ்நிலைகள், வள்ளியம்மையின் உடல்நிலையைப் பாதித்தன. பிப்ரவரி 1914இல் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்த சத்தியாகிரகத்திற்கு பெரும் உத்வேகம் அளித்தது 'வள்ளியம்மை மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பல தமிழ் மக்களின் தியாகங்கள் தான்' என்று காந்தி தனது உரைகளில் குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் (1907–1914) என்பது மகாத்மா காந்தி இந்தியாவில் நடத்திய அஹிம்சை வழியிலான சத்தியாகிரக போராட்டங்களுக்கு ஒரு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களுடன் மகாத்மா காந்தி (1914) மகாத்மா காந்தி, 1893ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிய சென்றார். தென்னாப்பிரிக்காவில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்துவந்த இந்திய சமூகங்கள், அங்கு ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களால் கடுமையான இனவெறி ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். இந்தியர்களைக் குறிவைத்து பாரபட்சமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். மேலும், இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு 5 வருட ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் அங்கு ஒப்பந்தம் முடிந்தவுடன், மீண்டும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் அல்லது சுதந்திர இந்தியர்களாக வாழலாம் அல்லது சொந்த செலவில் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்பதே விதி. அவ்வாறு சுதந்திர இந்தியர்களாக வாழ வேண்டும் என்று விரும்பியவர்கள், 3 பவுண்டுகள் வருடாந்திர வரி செலுத்த வேண்டும். இது ஒரு குடும்பத்திற்கு 3 பவுண்டுகள் என்று இல்லாமல், 13 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 16 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் என ஒவ்வொரு இந்தியருக்கும் 3 பவுண்டுகள் என அறிவிக்கப்பட்டது. இது அப்போதைய சூழலில் இந்தியர்களுக்கு மிகப்பெரிய தொகை. இந்தச் சட்டத்தின் நோக்கம் என்பது, ஒன்று இந்தியர்கள் குறைவான கூலிக்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யவேண்டும் அல்லது தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். பின்னர், 1906 ஆம் ஆண்டில் 'ஆசியப் பதிவுச் சட்டம்' (ப்ளாக் ஆக்ட்) அமலுக்கு வந்தது. இது, தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் மாகாணத்தின் இந்திய மற்றும் சீன சமூகங்களை இலக்காகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரு பாரபட்சமான சட்டமாகும். ஆசியப் பதிவுச் சட்டத்தின்படி, எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிய ஆண்களும் பதிவு செய்து, அடையாளச் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். இதில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கைரேகைகள் இருக்கும். இந்தச் சட்டத்திற்கு இணங்கத் தவறினால் அபராதம், சிறைத்தண்டனை அல்லது நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும். இத்தகைய சட்டங்களை எதிர்த்தே தனது சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார் காந்தி. அதற்கு தென்னாப்பிரிக்காவின் புலம்பெயர் இந்தியக் குடும்பங்கள் பெரும் ஆதரவளித்தன. அதில் ஒன்று தில்லையாடி வள்ளியம்மையின் குடும்பம். பட மூலாதாரம், RANDOM CREATIONS படக்குறிப்பு, சுசான் பிராங்கோ எழுதிய 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' இது சுசான் பிராங்கோ எழுதிய 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' எனும் தில்லையாடி வள்ளியம்மையின் வாழ்க்கை வரலாற்று நூலில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது. "செப்டம்பர் 11, 1906, ஒரு அமைதியான போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. அதற்கு சத்தியாகிரகம் என்று மோகன்தாஸ் காந்தி பெயரிட்டிருந்தார். என்னுடைய இளம் வயதிலேயே, இந்த அறியப்படாத, முயற்சிக்கப்படாத, போராட்டத்தின் ஒரு பகுதியாக நான் இருந்தேன். எதிர்காலத்தில் அது ஒரு மிகப்பெரிய போராட்டமாக மாற இருந்தது...". அதைத் தொடர்ந்து 1911-1913 காலகட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 'தேவாலயங்களில் கிறிஸ்தவச் சடங்குப்படி நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே செல்லும்' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இது பிற மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அதன் பிறகு சத்தியாகிரகப் போராட்டங்கள் மேலும் தீவிரமடைகின்றன. தென்னாப்பிரிக்காவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தேவாலய சட்டத்தை மீறி நடத்தப்பட்ட அனைத்து திருமணங்களும் செல்லாது என்று அறிவித்தபோது, ஆயிரக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து காந்தி முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டார் வள்ளியம்மை. காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்தப் பண்ணையில் பல இந்தியக் குடும்பங்கள் தங்கியிருந்தன. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி 1910 இல் நிறுவிய ஆசிரமம் தான் 'டால்ஸ்டாய் பண்ணை'. டிரான்ஸ்வால் மாகாணத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிரான அவரது சத்தியாக்கிரக இயக்கத்தின் தலைமையகமாக இது செயல்பட்டது. 1100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்தப் பண்ணையில் பல இந்தியக் குடும்பங்கள் தங்கியிருந்தன. இங்கு வள்ளியம்மையும் சில காலம் தனது தாயுடன் வசித்துள்ளார். "இந்தப் பண்ணை அமைதியான இடமாக இருந்தது, அங்கு இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ்ந்தனர். இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் வயதுக்கு ஏற்ற எந்த வேலையையும் செய்தனர்" என டால்ஸ்டாய் பண்ணை குறித்து 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' நூலில் வள்ளியம்மை விவரிக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி உச்சத்தில் இருந்தது குறித்தும் அந்த நூலில் அவர் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். "நான் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து வாழ நினைத்தேன், இவ்வளவு அற்புதமான ஒரு நாட்டில் நான் பிறந்ததால் அல்ல, மாறாக என் இதயம் இங்கிருக்கிறது என்பதால். நான் அநீதியை எதிர்த்துப் போராட முடிவு செய்தேன். என் திறமைகளால் பிரச்னைகளைச் சமாளிக்க, ஞானத்தால் சவால்களை வெல்ல, அன்பால் வெறுப்பைக் கைவிடச் செய்ய, முழுமையான நிராகரிப்புடன் இனவெறியை ஒழிக்கவும் முடிவு செய்தேன்." பட மூலாதாரம், ARUNANKAPILAN படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள தில்லையாடியில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபம் 1913ஆம் ஆண்டில், வள்ளியம்மை தனது தாய் மற்றும் ஏராளமான பெண்களுடன், காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை அமைந்திருந்த டிரான்ஸ்வாலில் இருந்து நடால் வரை ஊர்வலம் சென்றார். அங்கீகரிக்கப்படாத ஊர்வலங்களை தடைசெய்யும் சட்டங்களை மீறி, நியாயமற்ற நடைமுறைகளுக்கு எதிராகப் போராடினார். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக அங்கிருந்த நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் ரயில்வே முகாம்களுக்கு சென்று தொழிலாளர்களை, பெரும்பாலும் தமிழர்களை சந்தித்து சத்தியாகிரக போராட்டம் குறித்து பேசினர். 'மூன்று பவுண்டு வரி' என்ற சட்டம் ஒழிக்கப்படும் வரை வேலையை நிறுத்துமாறு அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 21, 1913 காந்தியின் மனைவி கஸ்தூர்பா, வள்ளியம்மை உள்பட பல பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடின உழைப்புடன் கூடிய மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மாரிட்ஸ்பர்க் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். அவர் பிப்ரவரி, 1914ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டபோது கடும் காய்ச்சலுடன் இருந்தார் என மகாத்மா காந்தி 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' நூலில் குறிப்பிடுகிறார். "வள்ளியம்மா ஆர். முனுசாமி என்ற அந்த பதினாறு வயதுடைய இளம்பெண்ணை எப்படி என்னால் மறக்க முடியும்? ஜோகன்னஸ்பர்க்கைச் சேர்ந்த அவளை நான் பார்த்தபோது அவள் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள். அவள் ஒரு உயரமான பெண்ணாக இருந்ததால், அவளுடைய மெலிந்த உடலைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது." சிறையிலிருந்து விடுதலையான சில நாட்கள் கழித்து, பிப்ரவரி 22ஆம் தேதி தனது பிறந்தநாள் அன்றே உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது. "இந்தியா என்ற நாடு இருக்கும்வரை வரை, தென்னாப்பிரிக்க சத்தியாகிரக வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் நிலைத்து நிற்கும்." என காந்தி குறிப்பிட்டார். வள்ளியம்மையை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள தில்லையாடியில் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அங்கு ஒரு பொது நூலகமும் செயல்பட்டுவருகிறது. இந்திய அரசின் சார்பில் 2015ஆம் ஆண்டு வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவு தினத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4djz807e7o
  13. செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு 14 AUG, 2025 | 10:08 AM முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19 ஆம் ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதி வியாழக்கிழமை (14) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் முப்புரம் வட்டார உறுப்பினர் சிவபாதம் குகநேசன் மற்றும் வள்ளிபுனம் பகுதி இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், சுடரேற்றப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222545
  14. ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிலைமாறுகால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் - கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் - ஐநா மனித உரிமை ஆணையாளர் 14 AUG, 2025 | 07:57 AM இலங்கை அரசாங்கம் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக ஏற்க மறுத்துவந்துள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்வோல்க்கெர் டேர்க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல் புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவித்தல் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல் மற்றும் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்தல் அதன் நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் நிலைமாறுகால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் என என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கை குறித்த அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ஈடுபாடு இன்றியமையாததாக உள்ளது மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கு உறுதுணையாக இருக்க முடியும். சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் முதன்மை பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது என்றாலும் இதை சர்வதேச வழிமுறைகளால் பூர்த்தி செய்து ஆதரிக்க முடியும் என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மாற்றத்திற்கான அடித்தளங்களை நடைமுறைப்படுத்தவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் கடந்த கால மோதல்களிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவும் நிலையான சமாதானம் மற்றும் தேசிய ஐக்கியத்திற்கான அடித்தளத்தை இடவும் கிடைத்துள்ள வரலாற்று சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குதல் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல் பாரபட்சம் மற்றும் பிரிவினைவாத அரசியலை முடிவிற்கு கொண்டுவருதல் போன்ற நீண்டகால பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது புதிய திசையில் பயணிப்பதற்கு தலைமைத்துவம் உறுதி வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த அர்ப்பணிப்புகளை உறுதியான நடவடிக்கைகளுடன் ஒரு ஒத்திசைவான காலக்கெடு திட்டமாக மாற்றவேண்டும் என ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதி வழங்குவதும் இதில் உள்ளடங்கியிருக்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு போரின் போது மீறல்கள் துஸ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களிற்கு அரசபடையினரும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற அரசசாரா தரப்பினரும் காரணம் என்பதை தெளிவாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுதலுடன் இதனை ஆரம்பிக்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான எனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை துன்பத்தை நான் தெளிவாக பார்த்தேன் என தெரிவித்துள்ள அவர் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களின் வேண்டுகோள்களிற்கு தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளார். தேசிய ஐக்கியம் பற்றிய அரசாங்கத்தின் நோக்கினை சாத்தியமாக்குவதற்கு இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அனைத்திற்கும் அப்பால் கடந்தகால மீறல்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் பாரிய மனித உரிமைமீறல்கள் சர்வதேச சட்ட மீறல்களிற்கு தீர்வை காணபதற்கு அர்ப்பணிப்புள்ள நீதித்துறை பொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்குகிழக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிக்கவேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் நீண்டகால பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு வெளியேயும் உள்ளேயும் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளிற்கு சர்வதேச சமூகம் தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சர்வதேச சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வழக்குதொடுப்பதற்கான பொறுப்பு முக்கிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்குரியது என்றாலும் இதனை சர்வதேச வழிமுறைகளால் ஆதரிக்க முடியும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் வலுப்படுத்தப்பட்ட திறனை பயன்படுத்தி பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும் நல்லிணக்க முயற்சிகளிற்கு பங்களிப்பதற்கும் ஐநா உறுப்பு நாடுகளை மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/222536
  15. மன்னார் காற்றாலைத் திட்டம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்படுகிறது; ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானம் Published By: VISHNU 14 AUG, 2025 | 02:05 AM மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைப்பதுடன், அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம் தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களை பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழுவர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் புதன்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றை நாடாத்தியிருந்தனர். இக்கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கலந்துரையாடல் தொடர்பில் தெரியவருகையில், மன்னார் தீவில், மக்கள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், மன்னார் பிரஜைகள்குழுப் பிரதிநிதிகளாலும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மன்னார் மக்கள் எதிரானவர்களில்லையெனவும், மன்னார்த் தீவிற்குள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதியிடம் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேவேளை கடந்தகால இனவாத அரசாங்கங்கள் இத்தகைய காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ளபோதும், கற்றாலை அமைப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இவ்விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் இதன்போது மன்னார் காற்றாலைத் திட்டத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டள்ளது. இந்நிலையில் குறித்த காற்றாலைத் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்தி, மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சந்திப்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாட் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222533
  16. நள்ளிரவில் கைது, தள்ளுமுள்ளு - சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் எங்கே? பட மூலாதாரம், ANI 14 ஆகஸ்ட் 2025, 02:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், போராட்டக்காரர்களை கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் கைது நடவடிக்கையின்போது இளைஞர்கள் இருவரை பேருந்துக்குள் போலீஸார் தாக்கும் வீடியோவும் வெளியானது. மேலும், பெண் ஒருவர் பேருந்துக்குள் மயங்கி விழுந்திருப்பதையும் அவருக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்க வேண்டும் என மற்ற தூய்மை பணியாளர்கள் போலீஸாரிடம் கோருவதையும் காண முடிந்தது. எனினும் இந்த காணொளிகளை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுரேஷ் எனும் தூய்மை பணியாளர் பிபிசியிடம் பேசுகையில், "பெண்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இரண்டு பெண்களுக்கு இதில் காயம் ஏற்பட்டது. எங்கே அழைத்துச் செல்கிறோம் என்பதை கூட போலீஸார் கூறவில்லை. எங்களுக்கு உணவு கொடுப்பதாக கூறினர், ஆனால் நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்" என்றார். பட மூலாதாரம், ANI கைதாக மறுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதி, "பலரும் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார். கைது செய்யப்படும்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர், குறிப்பாக பெண்கள் மயக்கமடைந்ததை காணொளிகள் வாயிலாக பார்க்க முடிந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கைது நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டும் என காவல்துறை நினைத்ததாக" அவர் கூறினார். தூய்மைப் பணிகளை தனியார் மயத்துக்கு அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் என அவர் கூறினார். முன்னதாக, தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சென்னை மாநகராட்சி, லேபர் யூனியன், ராம்கி நிறுவனம் என 3 தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் வரும் 31ஆம் தேதி வரை பணியில் வந்து சேரும் தூய்மை பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது ராம்கி நிறுவனம். தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஏன்? சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வந்தனர். இரு மண்டலங்களை சேர்ந்த சுமார் 2,000 தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் ரூ.6,000 என இருந்த தங்களின் சம்பளம், கடந்த 10-15 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 23,000 என உயர்ந்துள்ளதாகவும் தனியார்வசம் சென்றால் தங்கள் சம்பளம் ரூ. 16 ஆயிரமாக குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். "ஆகஸ்ட் 1-ஆம் தேதி வழக்கம்போல பணிக்கு சென்றபோது, 'ஒப்பந்த வேலையில் இருப்பதாக இருந்தால் மட்டுமே வேலை, இல்லையென்றால் வேலை இல்லை' என தங்களிடம் கூறப்பட்டதாக" தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர். தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இரு மண்டலங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது, தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 31(1) படி (Industrial disputes act) தண்டனைக்குரிய குற்றம் என்று உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பணிமறுப்பு, அவுட்சோர்ஸிங் (பணிகளை கையாளும் பொறுப்பை வெளி நிறுவனத்துக்கு அளிப்பது) செய்வது தண்டனைக்குரிய குற்றம்" என்றார். தூய்மை பணியாளர்களின் 3 கோரிக்கைகள் என்ன? தூய்மை பணியாளர்கள் பிரதானமாக 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது. போராட்டக்காரர்கள் குறிப்பாக, "தாங்கள் தற்போது பெறும் சம்பளத்தையே கொடுத்தாலும், தனியார் நிறுவனத்திடம் தங்கள் பணிகளை ஒப்படைக்கக் கூடாது " என்பதையே பிரதானமாக வலியுறுத்துகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx27yw684gko
  17. இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு 14 AUG, 2025 | 09:54 AM புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தியிடம் அவர்கள் தெரிவித்தனர். பிஹாரில் அண்மையில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயரில் தங்களது பெயரும் இருப்பதாக இறந்தவர்கள் என காரணம் காட்டி நீக்கப்பட்ட 7 வாக்காளர்கள், ராகுல் உடனான சந்திப்பில் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் வாக்கு அளிக்கும் தங்களது உரிமையை திரும்ப பெற உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். “வாழ்வில் எண்ணற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பெற்றது உணவு. ஆனால், இறந்து போனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி!” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதோடு அவர்களுடன் உரையாடிய வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். இதை காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது. நீக்கப்பட்ட இந்த ஏழு பேரும் தேஜஸ்வி யாதவின் சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. “இது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் பிழை அல்ல. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வாக்குரிமை பறிப்பு செயல். வாக்கு திருட்டு அம்பலமான நிலையில், தற்போது பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் முடிவு தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வாக்காளர்கள் அல்ல அது ஜனநாயகத்துக்கு கொடுக்கப்பட்ட இறப்பு சான்று” என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கம்: பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/222543
  18. Published By: VISHNU 13 AUG, 2025 | 07:03 PM முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் புதன்கிழமை (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்தி நெத்தி தலைமையில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இல்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இளைஞர்கள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஊடகவியலாளர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தது என. இருந்த போதும் அந்த முகாமிற்குள் உள் நுழைந்த சம்பவம் தொடர்பாக 3 இராணுவ வீரர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. அங்கு இரும்பு திருடப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் இராணுவத்தினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரும்பு கடத்தலில் 3 இராணுவத்தினர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் 3 இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அதேவேளை நீதியாக விசாரணை இடம் பெற்றுவருகின்றது, இதனை மக்களுக்கு நாங்கள் சொல்லுகின்றோம். எனவே தவறு செய்தால் யாரென்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும். அதேவேளை இராணுவ முகாங்களையோ பொலிஸ் நிலையங்களையோ அவசியம் இல்லாமல் அகற்ற வேண்டியது இல்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் பாதுகாப்பான அல்லது முக்கியமான இடங்களை தவிர நில விடுவிப்பினை தொடக்கத்தில் இருந்து கூடுதல் நிலங்களை விடுவித்துள்ளோம். நில பிரச்சனை தொடர்பாக இன்று விவாதித்தோம் எனவே எங்கள் முதல் நோக்கம் மக்களின் நிலம் பொலிஸ் நிலையங்கள் கையகப்படுத்தி இருந்தால் மாற்று இடத்தை கண்டுபிடிப்பதாகும். எனவே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவது அல்ல, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் கொள்கை என்றார். https://www.virakesari.lk/article/222524
  19. Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 12:28 PM ரஸ்ய, இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார். மோதல்களில் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் பட்டியலில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் சேர்க்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகளால் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள சிலவகையான பாலியல் வன்முறைகளின் வடிவங்கள் குறித்த குறிப்பிடத்தக்க கவலையின் விளைவு இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல்களின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், பாலியல் வன்முறை மற்றும் ஏனைய பாலியல் ன்வன்முறை வடிவங்களில் ஈடுபடுவதாக நம்பகதன்மை மிக்க விதத்தில் சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது அவற்றில் ஈடுபடுபவர்கள் குறித்த அடுத்த வருட அறிக்கையில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் இணைத்துக்கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார். "ஐக்கிய நாடுகள் சபையால் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பிறப்புறுப்பு வன்முறை, நீடித்த கட்டாய நிர்வாணம் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் இழிவான முறையில் நடத்தப்படும் தொடர்ச்சியான ஆடைகளை அவிழ்க்கும் தேடல்கள் போன்ற பாலியல் வன்முறையின் வடிவங்களைக் குறிக்கின்றன" என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அனுமதிக்க மறுத்துள்ளதால் இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் முறைகள் போக்குகள் மற்றும் மற்றும் திட்டமிடப்பட்ட பாலியல் வன்முறைகள் குறித்து உறுதியாக உறுதிப்படுத்த முடியாமலுள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அனைத்து வகையான பாலியல் வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/222475
  20. 12 AUG, 2025 | 04:13 PM இஸ்ரேலிய அரசால், பாலஸ்தீனத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள். அதோடு, நூற்றுக்கணக்கானவர்களை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது, இதில் பலர் குழந்தைகள். மேலும், பல லட்சம் பேர் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் மரணத்தை நெருங்கும் அபாயம் உள்ளது. இந்தக் குற்றங்களை மவுனமாக செயல்படுத்துவது மட்டுமல்லாது, அவற்றை வேடிக்கை பார்ப்பதும்கூட ஒரு குற்றமாகும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது" என கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், "அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஐந்து பத்திரிகையாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது, பாலஸ்தீன மண்ணில் நிகழ்ந்துள்ள மற்றொரு கொடூரமான குற்றமாகும். உண்மைக்காக நிற்கத் துணிந்தவர்களின் அளவிட முடியாத தைரியத்தை, இஸ்ரேலிய அரசின் வன்முறை மற்றும் வெறுப்பால் ஒன்றும் செய்ய முடியாது. ஊடகங்களில் பெரும்பாலானவை அதிகாரத்துக்கும் வர்த்தகத்துக்கும் அடிமைப்படுத்தப்பட்ட உலகில், இத்தகைய துணிச்சலான ஆன்மாக்கள் உண்மையான பத்திரிகை என்றால் என்ன என்பதை நமக்கு நினைவூட்டி உள்ளன. அவர்கள் சாந்தியடையட்டும்" என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222413
  21. 13 AUG, 2025 | 05:08 PM வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்து 16 வருடகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக என கூறி தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் அதில் விவசாயம் செய்கின்றனர். காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாது வறுமையில் வாடுகின்றனர். தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. அது மாத்திரமின்றி மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இராணுவத்தினர். எவ்வாறு விவசாயம், பண்ணனை, வியாபாரங்கள் நடாத்தி வருமானத்தை பெற முடியும்? அவ்வாறு பெறப்படும் பணம் எங்கே செல்கின்றது ? அந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்படுகிறதா ? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. எனவே யுத்தம் முடிந்து 16 வருட காலமாக பாதுகாப்பு காரணம் என கூறி தனியார் காணிகளை அடத்தாக பிடித்து விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டி வருவதானல் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும். அதேவேளை, அவர்களின் காணிகளை உடனடியாக விடுவித்து, அவர்களை விவசாயம் செய்து அம்பது வாழ்வாதரத்தை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை, நடந்து செல்லவோ, துவிச்சக்கர வண்டியில் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதுடன், இரவு 07 மணி முதல் காலை 06 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை போன்ற கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ள பலாலி வீதியால் மக்கள் சுதந்திரமாக போக்குவரத்து செய்வதற்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222516
  22. 13 AUG, 2025 | 05:02 PM ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று புதன்கிழமை (13) மதியம் 12.30 மணியளவில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், "கடந்த 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் இலங்கை நிறுவனம் ஒன்று பதிவு செய்த மிகச் சிறந்த மற்றும் மிகப்பெரிய இலாபமான 107 பில்லியன் ரூபாயை இலங்கை வங்கியால் பதிவு செய்திருந்தது. குறிப்பாக இலங்கை வங்கி ஈட்டிய இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது. இலங்கை வங்கியின் நிர்வாகமும் இயக்குநர்கள் குழுவும் ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட ஊக்கத்தொகையை குறைக்கவும், நிதி அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நிதி துணை அமைச்சர்கள் இருவரும் எட்டிய ஒப்பந்தங்களை செயல்படுத்தவும் நிதி அமைச்சகம் இன்னும் நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்கிலேயே இருக்கின்றது. வாக்குதுதிகள் வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ஒப்புக் கொள்ளப்பட்ட ஊக்கத்தொகையில் நியாயமற்ற செயற்பாட்டுக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. வழங்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்த நாங்கள் அரசாங்கத்தை வலுயுறுத்துகின்றோம். துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் தொடங்க வேண்டியிருந்தது. ஆனாலும் இன்றைய சூழ்நிலை இதுபோன்ற பல தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது அந்தவகையில் அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை என்றால், தொடர் வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்." எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222511
  23. யாழ். நீதவான் நீதிமன்றில் செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 13 AUG, 2025 | 03:14 PM செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கான் நடவடிக்கையின் அறிக்கை , மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 07ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 07ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணைகளின் போது உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222489
  24. Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 02:56 PM செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம், என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என தெரிவித்துள்ளார்.("if they were already dead, the bodies wouldn't be bent," with some of them displaying twisted limbs.) சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை, அவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ள சட்டத்தரணி நிரஞ்சன் ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர், ஆனால் நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். செம்மணிக்கு மிகவும் வலிமிகுந்த அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் என யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அடையாளம் ஆய்வு கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அனுஷானி அழகராஜா தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள் தந்தைமார் சகோதரிகள் காணாமல்போனார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது நடந்து 25 வருடங்களாகிவிட்டது, இது மிகவும் பழைய காயங்களை கிளறுகின்றது, பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமில்லை, முழு சமூகத்திற்கும் முழுயாழ்ப்பாணத்திற்கும், என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222488
  25. ப்ரவிஸின் சாதனைமிகு சதத்தின் உதவியுடன் ஆஸி. உடனான ரி20 தொடரை தென் ஆபிரிக்கா சமப்படுத்தியது 12 AUG, 2025 | 10:01 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டார்வின், மராரா விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் டிவோல்ட் ப்ரவிஸ் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் 53 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரை 1 - 1 என தென் ஆபிரிக்கா சமப்படுத்தியுள்ளது. இப் போட்டியில் 22 வயதான ப்ரவிஸ், 41 பந்துகளில் சதம் குவித்தார். இதன் மூலம் சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் மிகக் குறைந்த வயதில் சதம் குவித்த தென் ஆபிரிக்க வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். அத்துடன் டேவிட் மில்லருக்கு அடுத்ததாக வேகமாக சதம் குவித்த இரண்டாவது வீரரானார். டேவிட் மில்லர் 2017ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக 35 பந்துகளில் சதத்தைப் பூர்த்திசெய்தார். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது. 56 பந்துகளை எதிர்கொண்ட டிவோல்ட் ப்ரவிஸ் 12 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 125 ஓட்டங்களைக் குவித்தார். 31 ஓட்டங்களைப் பெற்ற ட்ரைஸ்டனுடன் 4ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களை ப்ரவிஸ் பகிர்ந்தார். பந்துவீச்சில் பென் த்வாஷுய்ஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ளென் மெக்ஸ்வெல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இதில் டிம் டேவிட் 50 ஓட்டங்க ளையும் அலெக்ஸ் கேரி 26 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கோபின் பொஷ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்வேனா மஃபாக்கா 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: டிவோல்ட் ப்ரவிஸ் https://www.virakesari.lk/article/222442

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.