Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அமெரிக்காவுடன் மோதல் வெடித்தால் இரான் முன்னுள்ள 4 வாய்ப்புகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பர்னியன் சடேகி பிபிசி மானிட்டரிங் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடனான பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, இரானின் தலைமை தீவிர ராஜிய ரீதியான தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு எதிராக டிரம்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிராந்திய சக்திகளை செயல்படுத்த இரான் தலைமை முயற்சிக்கிறது. இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பிராந்திய போரை தூண்டக்கூடும் என இரான் கூறியுள்ளது. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகியவை தங்களின் வான்வெளி மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்தி இரான் மீதான எந்தவொரு சாத்தியமான தாக்குதலுக்கும் அனுமதிக்க மாட்டோம் என ஏற்கெனவே தெளிவாக கூறியுள்ளன. இது, அமெரிக்காவுக்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தளங்கள் மற்றும் வளங்களையும் இலக்கு வைப்போம் என இரான் எச்சரித்துள்ளது. இராக், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, குவைத், ஜோர்டான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சிரியா ஆகிய நாடுகளில் சாத்தியமான தாக்குதல்கள் நடக்கக்கூடும். அமெரிக்காவுடனான முந்தைய மோதல்களுக்கு இரானின் எதிர்வினை அடையாள ரீதியானதாக மட்டுமே இருந்தது. 2025ஆம் ஆண்டு இரான்-இஸ்ரேல் போரின்போது அமெரிக்காவின் தாக்குதல்களை தொடர்ந்து இரான் முன்கூட்டியே எச்சரித்துவிட்டு கத்தாரின் அல் உதெய்ட் விமானப் படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பின்னர், 2020 ஜனவரியில் இராக்கின் ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பும் இரான் அமெரிக்காவை எச்சரித்திருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜனவரி 14, 2026 அன்று டெஹ்ரானில் நடந்த போராட்டங்களின் போது கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் இறுதிச் சடங்கின் போது இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி படங்களை ஏந்தியிருக்கும் இரானிய பெண்கள். எனினும், தற்போதைய சூழலில் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் தன்னுடைய இருப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாக இரான் கருதலாம். இரானின் சமீபத்திய பதற்றமான சூழலின்போது டிரம்ப், "இரானில் புதிய தலைமையை" கண்டறிய வேண்டிய நேரம் என டிரம்ப் தெரிவித்திருந்தார். அங்கு புதிய போராட்டங்களைத் தூண்டி இஸ்லாமிய குடியரசு ஆட்சியை கவிழ்க்க ராணுவ வாய்ப்புகள் குறித்து அவர் யோசித்ததாகவும் தகவல் வெளியானது. பதற்றம் அதிகரித்த நிலையில், தங்கள் நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என இரான் எச்சரித்திருந்தது. இரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் மீது அமெரிக்கா 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்துவதைத் தடுக்க இரானின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட இரானின் எதிர்தரப்பு தலைவர் ரெஸா பஹ்லவி அத்தகைய தாக்குதலுக்கு அழைப்பு விடுத்திருப்பது, தற்போதைய சூழலில் அமைப்பை மேலும் பலவீனப்படுத்தி, இரானில் புதிய போராட்டங்களை தூண்டக்கூடும். 1. பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுதல் பட மூலாதாரம்,Fatemeh Bahrami/Anadolu via Getty Images படக்குறிப்பு,இரானின் 'புனித பாதுகாப்பு வாரத்தின்' (Sacred Defense Week) ஒரு பகுதியாகவும், இரான்-இராக் போரின் 45வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும், செப்டம்பர் 27, 2025 அன்று டெஹ்ரானின் பஹரிஸ்தான் சதுக்கத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (ட்ரோன்கள்) காட்சிப்படுத்தப்பட்டன. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த ஜனவரி 28ஆம் தேதி, 30,000 முதல் 40,000 வரையிலான அமெரிக்க துருப்புகள் மத்திய கிழக்கின் எட்டு அல்லது 9 தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் 'ஆயிரக்கணக்கான இரானிய யுஏவி (டிரோன்கள்) மற்றும் இரானிய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதல் வரம்புக்குள்ளேயே நிறுத்தப்பட்டுள்ளதாக' கூறினார். இரானிடம் குறுகிய மற்றும் நடுத்தர தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கவல்ல சுமார் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளதாக கருதப்படுகிறது. இஸ்ரேலுடனான போரின்போது, இரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் சில ஏவுகணைகள் இஸ்ரேலின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புக்குள் ஊடுருவதில் வெற்றி கண்டன. அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வைத்துள்ளது, ஆனால் இஸ்ரேலை விட அமெரிக்கா இன்னும் பெரிய பகுதியை பாதுகாக்க வேண்டியிருக்கும். கடந்தாண்டு ஜூன் மாதத்திலிருந்து ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இரான் தன்னுடைய ராணுவ திறன்களை மேம்படுத்த உதவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2. எதிர் தாக்குதல் கொள்கை பட மூலாதாரம்,Fadel Itani/NurPhoto via Getty Images படக்குறிப்பு,ஜனவரி 26, 2026 அன்று லெபனானின் பெய்ரூட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஹெஸ்பொலா பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசெமின் உரையை மக்கள் கேட்கிறார்கள். டஹியே பகுதியில் ஹெஸ்பொலா மற்றும் இரானிய கொடிகள் மற்றும் இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி சுவரொட்டிகளை ஏந்திய மக்கள் கூடியிருந்தனர். இரானின் பழைய ராணுவ தொழில்நுட்பம் அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியாது, எனவே இரான் தன்னுடைய பாரம்பரிய வியூகத்தை மாற்றலாம். வேகமான தாக்குதல் படகுகள் அல்லது டிரோன்களை ஒரே நேரத்தில் அனுப்பி எதிரி சென்சார்கள் மற்றும் வான் பாதுகாப்புகளை செயலிழக்க செய்ய முயற்சிக்கலாம். பெர்சிய வளைகுடாவில் தங்களின் வேக படகுகள் மற்றும் ஷாஹெத்-136 டிரோன்களை பயன்படுத்தி, யுக்ரேனிய போரில் ரஷ்யா பெரியளவில் பயன்படுத்தியது போன்ற ஒரு வியூகத்தை இரான் தழுவக்கூடும். பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், சில இரானிய ஊடகங்கள், குறிப்பாக புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சில ஊடகங்கள், இந்த வியூகத்தை வலியுறுத்தி கூறுகின்றன. ஜனவரி 29ஆம் தேதி இரானிய ராணுவம் தங்களுக்கு 1,000 'ஸ்டிரேட்டஜிக் டிரோன்கள்' கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவித்தது. 3. பிராந்திய கூட்டாளிகளை முடுக்கி விடுதல் பட மூலாதாரம்,Fadel Itani/NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரான் பல தசாப்தங்களாக ஹெஸ்பொலா உட்பட அதன் நட்பு ஆயுதக்குழுக்களுக்கு நிதியளித்து உதவி செய்துவருகிறது இரான் பல தசாப்தங்களாக தன்னுடைய கூட்டணி ஆயுதக்குழுக்களுக்கு (Axis of Resistance) நிதியளித்து ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதில், இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்கள், லெபனானில் ஹெஸ்பொலா மற்றும் ஏமனில் ஹூதிகள் போன்றவை அடங்கும். இரானிய நட்பு நாடுகளில் உள்ள இத்தகைய குழுக்களை குறிப்பிடத்தக்க அளவில் இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளில் சேதப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இரான் தனது எல்லைக்கு அப்பால் செல்வாக்கை பயன்படுத்தும் திறனை இஸ்ரேல் குறைத்துள்ளது. இருப்பினும், இந்தக் குழுக்கள் கூட்டாக அமெரிக்க இலக்குகளைத் தாக்கினால் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இந்த குழுக்கள் 2025ஆம் ஆண்டு இரான் - இஸ்ரேல் போரில் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் அமெரிக்காவுடனான போர் இரானுக்கு அதன் இருப்புக்கான அச்சுறுத்தலாக மாறினால் இரான் மற்றும் அதன் நட்பு ஆயுதக்குழுக்களின் எதிர்வினைகள் மாறக்கூடும். இதுவரை, இரான் ஆதரவு பெற்ற பி.எம்.எஃப்(Popular Mobilization Forces - PMF) உடன் இணைந்த சில இராக்கிய குழுக்கள் இரானைப் பாதுகாப்பது பற்றிப் பேசியுள்ளன. அதேபோன்று, அல்-நுஜாபா இயக்கம் மற்றும் பத்ர் அமைப்பு (Badr) ஆகியவை இரானுக்கு தங்களின் ஆதரவை அறிவித்துள்ளன. ஹெஸ்பொலாவின் பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசெம் இரானுக்கான ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும் எச்சரித்துள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், தங்களின் குழு எப்போது, எப்படி தலையிடுவது என்பது குறித்து முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா இரானை தாக்கினால், ஹூதிகள் செங்கடலில் அமெரிக்க கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்கலாம். ஜனவரி 26ஆம் தேதி, கப்பல் ஒன்று தீப்பிடித்து எரியும் வீடியோவை ஹூதிகள் வெளியிட்டிருந்தனர், அதில் "விரைவில்" (Soon) என எழுதப்பட்டிருந்தது. எனினும், 2025ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க ஹூதிகள் விரும்பினால், இரானுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என அந்த அமைப்பு முடிவெடுக்கலாம். 4. ஹோர்முஸ் நீரிணையை மூடுதல் மேற்கு நாடுகளுடனான எந்தவொரு பெரும் பதற்றத்தின் போதும் இரான் தொடர்ந்து விடுக்கும் பழைய அச்சுறுத்தலே இது. வளைகுடாவின் இந்தக் குறுகிய பாதை வழியே உலகின் எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடக்கிறது. கடல் கண்ணிவெடிகள், குரூயிஸ் ஏவுகணைகள், கடலோர பாதுகாப்பு அமைப்புகள், அதிவேக படகுகள் ஆகியவை நீரிணையை மூடுவதற்கு பயன்படுத்தக்கூடும். இரானின் கடைசி புகலிடமாக இது இருக்கக்கூடும். ஏனெனில், இரானிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கிவரும் அதன் நட்பு நாடான சீனா மற்றும் இரானுக்கு தற்போது வரை ஆதரவு அளித்து வரும் வளைகுடா நாடுகளின் வர்த்தகத்தையும் இது பெருமளவில் பாதிக்கக்கூடும். அதனால்தான் சமீபத்திய அமெரிக்க-இரான் பதற்றங்களின் போது இரானின் சொல்லாடல்களில் இது முக்கியமாக இடம்பெறவில்லை. என்ன நடக்கலாம்? இரான் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளுமே ராஜ்ஜீய ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளித்தாலும், அவர்களின் நிலைப்பாடுகளில் உள்ள மிகப்பெரிய இடைவெளி காரணமாக இரு தரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவது எளிதானது அல்ல. டிரம்ப் நிர்வாகம் படைபலத்தைப் பயன்படுத்தினால், இரான் தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு இஸ்லாமியக் குடியரசைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு சில சலுகைகளை அறிவிக்கக் கூடும். மறுபுறம், மோதலின் போது இரான் அமெரிக்காவுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் அது மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் நிலை வரலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7e98jy9jjo
  2. இந்தியாவில் பறவைக்காய்ச்சல் ; தமிழ்நாடு, பீகார் மாநிலங்களில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 02:08 PM இந்தியா முழுவதும் H5N1 பறவைக் காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238151
  3. சிறை திரைப்படமும் எதார்த்தமும் - ஒரு அலசல் ஒவ்வொரு மனிதனுக்குள் உறைந்து கிடைக்கும் கருணையினால் இருவரின் வாழ்க்கை துவக்கி வைக்கப்படுகிறது என்பதன் ஒரு துளியை சிறைப்படத்தில் பார்க்கலாம். ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அப்பட்டமான அத்துமீறல் அயோக்கியத்தனங்களின் ஒரு சொட்டுவை இப்படத்தில் காணலாம். சிறுபான்மையாக இருப்பவர்களின் - அது எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி - அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இப்படம் காட்டுகிறது. அசாமில் மியா முஸ்லிம்களை விரட்டி அடியுங்கள் என்று சொன்னவர் மீது சூமோட்டோ வழக்கு போடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் போல நாமும் இது நாள் வரை வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இது பற்றிய தெளிவான பார்வையும் அதற்கான கல்வியும் பெரும்பான்மையோருக்கு கிடைப்பதில்லை. கல்வி மட்டுமே தெளிந்து அறியும் நுட்பத்தை ஒவ்வொருவருக்கும் அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதனும் அடைவதற்குள் அவன் அடையும் துன்பங்கள், துயரங்கள் கொஞ்சமல்ல. நீதியும் சட்டமும் எப்போதும் வேறு வேறாக பயணிப்பவை. இதை சிறை திரைப்படம் தெளிவாக காட்டுகிறது. பலர் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, மக்களிடம் கலவரத்தைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவருக்கும் மூளை நரம்பு வெடித்து சிதறி கையும் காலும் இழுத்துக் கொண்டு கிடக்கிறார். இவர்களுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை. இது இயற்கையின் நீதி. சட்டத்துக்கும், நீதிக்கும் மேலாக இயற்கையின் நீதி என்ற ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தூங்குவதில்லை என்பது உண்மை என இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். யாரும், எவரும் தப்பவே முடியாது. இயற்கை நீதியை மீறி இந்தப் பூமியில் வாழும் எவரும் வாழ்ந்து விட முடியாது. அடாது செய்பவன் படாது போவான் சிறை படத்தின் ஹீரோயினின் தந்தை போல. நானொரு லீகல் ஒப்பீனியன் கொடுத்த ஒரு வாடிக்கையாளரை பணபலத்தைக் காட்டி கைது செய்தார்கள். அவர்களை ஜாமீனில் எடுக்க முனைந்த போது நான் பெற்ற அனுபவங்கள் திகில் கிளப்புவை. சக மனிதனின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் சட்டம் அயோக்கியர்களுக்கு துணை போகிறது. கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீனுக்கு முயற்சிக்கிறேன். எதிர்வாதிகள் ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்ய, அவரை ஜெயிலுக்குள் முடக்கி, பயம் காட்டி தான் நினைத்ததை அடைந்து விட முயற்சித்தார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா? பல வக்கீல்களை ஜெயிலுக்குள் அனுப்பி ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்து வாங்க முயற்சித்தார்கள். அப்படி அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தால், ஒருவருக்கு பல வக்கீல்கள் ஜாமீன் கோருவார்கள். முதலில் யார் உண்மையான வாதியின் வக்கீல் என கோர்ட்டில் கேள்வி எழுந்திருக்கும். கோர்ட்டில் ஜாமீன் வழக்கு தள்ளிப் போயிருக்கும். அவர் ஜெயிலுக்குள்ளே கிடப்பார். அதை வைத்து அவர்களை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்ளலாம். இப்படியெல்லாம் நடக்குமா? ஆமாம் நடந்தது. இந்தக் காரியத்தை வக்கீல்களே செய்தார்கள். அவர்களுக்கு அது அயோக்கியத்தனம் என்று தெரியும். தெரிந்தும் செய்தார்கள். இதை சட்டம் அனுமதிக்கிறது. சட்டத்தின் ஓட்டை இது. எளிதில் தப்பி விடுவார்கள். ஒருவரின் வாழ்க்கை மீது வக்கீல்களுக்கு அவ்வளவு எளக்காரம். எல்லா வக்கீல்களும் இதைச் செய்வதில்லை. கொலைக்கும் அஞ்சாத படுபாதகர்கள் வாழும் பூமி அல்லவா இது? என் மீது புகார் தெரிவித்தார் எனது ஒப்பீனியனால் பாதிக்கப்பட்டவர். என்னை முடக்கி விட வழக்கு. பொய் வழக்கு என நிரூபித்தேன். அவர் மீது நான் அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நிலையில் எனக்கிருந்த மனநிலை வேறு. பிரச்சினையை முடிக்கத்தான் நினைப்பேன். வளர்த்தால் அது எவருக்கும் நல்லதல்ல. ஒரே ஒரு நொடி யோசித்தேன். அவரை மன்னித்தேன். நான் வேறு மாதிரியான ஆள் என்றால் அவர் சாகும் வரை சிறைக்குள் கிடந்திருப்பார். எனக்கு அது தேவையில்லை. வாழ வைக்கணும் அது எவரானாலும் சரி. அதைச் செய்தேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. காகிதத்தில் குறிப்பிட்டபடி, நாம் அனைவரும் கண்ணியத்துடன் வாழவும், சுதந்திரமாகப் பேசவும் ஒரே அளவிலான உரிமைகளை பெற்றிருக்கிறோம் என்பது உண்மை. நடைமுறையில் நிலைமை வேறு. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து பல தசாப்தங்கள் கடந்தும், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளுக்கும் மக்கள் வாழ்ந்து அனுபவிக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது. இதை வெளிப்படையாகச் சொல்ல நாம் தயங்கினாலும், அதன் பொருள் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். சட்டமும் நீதியும் வேறு வேறு. சட்டம் என்பது எழுதப்பட்ட, கட்டமைக்கப்பட்ட மற்றும் நடைமுறையில் அமல்படுத்தப்படும் ஒரு அமைப்பு. நீதி என்பது ஒரு விளைவு — அது நெறிமுறையுடனும், நியாயத்துடனும், மனிதாபிமானத்துடனும் தொடர்புடையது. சட்டம் செயல்படுத்தப்படுகிறது ஆனால் உண்மையான நீதி யாருக்கும் கிடைப்பதில்லை. சட்டம் உண்மையான நீதிக்கு தடையாக நிற்கிறது. இதற்காக பல உதாரணங்களைக் காட்டலாம். அதைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் - சட்டம் என்பது கொடூரங்களின் தொகுப்பு என்பதாய் நினைக்க வைத்து விடும். இந்தக் கொடூரங்களுக்கு இடையில் ஒரு துளி நீதி. அதைச் சிறை திரைப்படம் காட்டுகிறது. ஒரு மசூதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒரு தூணில் தீபமேற்ற உத்தரவிடுவது சட்டம். ஆனால் அதை நிறைவேற்றினால் கலவரம் ஏற்படும் என்பதால், தடை உத்தரவு போட்டு, கலவரம் ஏற்படாமல் தடுப்பத் நீதி. அரசு நீதி பரிபாலனம் செய்கிறது. சட்டம் அதை உடைக்கிறது. இது அரசியலமைப்பை எதிர்க்கும் கருத்தல்ல; மாறாக, அதன் உயர்ந்த இலட்சியங்களை ஒரு வாழும் யதார்த்தமாக மாற்ற நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைக் குறித்து நேர்மையாக சிந்திக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிடுவது. இந்த நடைமுறைகளை சிறைப்படம் தெளிவாக காட்டுகிறது. விசாரணைக் கைதிகள் - ஒன்றும் அறியாத அப்பாவிகள் இன்னும் சிறையில் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை? பற்றி யாருக்கேனும் கவலை உண்டா? இது பற்றி கவலைப்பட வேண்டிய சிறை அதிகாரிகள், நீதிமன்றங்கள் அமைதியாக இருக்கின்றன. சட்டத்தின் நடைமுறைகள் காலதாமத்துக்கு காரணம். இங்கே யாருக்கும் எவரைப் பற்றியும் கவலை இல்லை. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவருடன் சார்புடையவன். அவன் தனியாக வாழ்ந்து விட முடியாது. அதை ஒவ்வொருவரும் உணர மறுக்கிறார்கள். பசித்திருப்பவனுக்கு உணவிடுவது ஒவ்வொருவரின் கடமை. ஒவ்வொருவரின் துன்பத்திற்காக அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவுவது வாழ்க்கை. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. ஒரு உணவு டெலிவரி செய்பவரை - கீழ்மை செய்யும் நபர்கள் இங்கிருக்கிறார்கள். அவர்களால் யாருக்கும் எவருக்கும் நன்மை கிடைக்கவே கிடைக்காது. இவர்களைப் போன்றவர்கள் மாற வேண்டும். மதமும், மொழியும் மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தி வாழ உருவானவை. இப்போது அவைகள் மனிதர்களின் அழிவுக்கான கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது. மாற்றியவர்கள் யார்? அவர்கள் ஏன் இங்கே? என்பது பற்றிய தெளிவான அறிவினை ஒவ்வொருவரும் பெற வேண்டியது அவ்சியம். அதற்கான ஒரு படி தான் கல்வி. கல்வி எல்லோருக்குமானவையாக எளிதில் கிடைப்பதாக செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஒரு படி முன்னேற வேண்டும். அதற்காக சக மனிதனின் துயரங்களில் பங்கெடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அது ஆறறிவு பெற்ற மனிதனாலும் சரி. ஐந்தறிவு கொண்ட விலங்கினமாக இருந்தாலும் சரி. சக உயிர்களின் துன்பத்தை நாம் சற்றே உணர வேண்டும். இங்கு வாழத்தான் பிறந்தோமே ஒழிய, பிறரை அழிக்க அல்ல என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிறு செயல் - ஒரு வாழ்க்கையின் விதை - சிறையின் கதா நாயகி, கதா நாயகன் இருவரும் நம்மிடையே வாழும் பல கோடிக்கணக்கானவர்கள் தான். அவர்கள் மீது நாம் அக்கறை கொள்வோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கு நாமும் ஆதாரமாய் இருப்போம். சிறை திரைப்படத்தை அனைவரும் பாருங்கள். அது நம்மை செம்மைப் படுத்தும். https://thangavelmanickadevar.blogspot.com/2026/02/blog-post_10.html @கலைஞன் அண்ணை, @தயா அண்ணையின் பழைய சொந்தக் கதைகளை சில நாட்களாக வாசித்தேன்.
  4. ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் அவசியமான வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 04:24 PM (நெவில் அன்தனி) சென்னை சேப்பாக்கம், எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மிக முக்கிய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் நியூஸிலாந்து 5 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்டது. இந்த ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிகவும் கடினமான குழு என வருணிக்கப்படும் டி குழுவில் இடம்பெறும் நியூஸிலாந்துக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமான வெற்றியாக அமைந்திருக்கும் என்பது உறுதி. தென் ஆபிரிக்காவும் இந்தக் குழுவில் இடம்பெறுகிறது. இன்றைய போட்டியில் நியூஸிலாந்தின் வெற்றியில் டிம் சீபேர்ட் குவித்த அரைச் சதமும் க்ளென் பிலிப்ஸின் சிறப்பான துடுப்பாட்டமும் நியூஸிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டன. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் சார்பாக குல்பாதின் நய்ப் குவித்த அரைச் சதம் பயனற்றுப்போனது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைக் குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். அவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பாதின் நய்ப் 35 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் குவித்தார். அவரை விட சிதிக்குல்லா அத்தல் (29), ரஹ்மானுல்லா குர்பாஸ் (27), டார்விஷ் ரசூல் (20) ஆகியோர் தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் லொக்கி பேர்கசன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். மிகவும் கடினமான 183 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 17.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது இரண்டாவது ஓவரில் முஜீப் உர் ரஹ்மானின் அடுத்தடுத்த பந்துகளில் பின் அலன் (1), ரச்சின் ரவிந்த்ரா (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். ஆனால், பில் சீபேர்ட், க்லென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 46 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். க்லென் பிலிப்ஸ் 25 பந்துகளில் 7 புவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 42 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சீபேர்ட் 42 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மார்க் சப்மன் 28 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிச்செல் செட்னர் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: பில் சீபேர்ட். https://www.virakesari.lk/article/238162
  5. சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு 08 Feb, 2026 | 11:02 AM (இராஜதுரை ஹஷான்) லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்பியதை போன்று தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் விலைகளை அதிகரித்துக் கொள்கிறது. நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேள்வியெழுப்பிய நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கேள்வியெழுப்பி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். லாப் நிறுவனம் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4330ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1742 ரூபாவாகவும் காணப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் வெளிப்படுத்தியுள்ளனர். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பிள் தலைவர் ரஞ்சித் விதானகே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் விரும்பிய வகையில் ஏனைய நாடுகளுக்கு தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் தனது விருப்பத்துக்கு அமைய சிலிண்டரின் விலையை அதிகரித்துக் கொள்கிறது. எரிவாயு உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்களும், விற்பனையாளர்களும் தீர்மானித்துக் கொள்கிறார்கள். அவர்களே விலைகளை அதிகரித்துக்கொள்கிறார்கள்.நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேட்கிறோம். ஆகவே நுகர்வோருக்கு சாதகமான வகையில் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாட்டு விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார். இதற்கமை லிட்ரோ நிறுவனம் கடந்த மூன்று மாதகாலமாக விலைகளை திருத்தம் செய்யவில்லை. 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 3690 ரூபாவுக்கும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1482 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் தேசிய மட்டத்தில் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.இருப்பினும் நாட்டின் மற்றும் நிறுவன கட்டமைப்பின் நிதி நிலைமை காரணிகள் ஊடாக சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதகாலமாக விலையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை என்று லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238131
  6. மிக்க நன்றி ஐயா. தமிழ் மொழியின் சிறப்பும் புரிகிறது ஐயா.
  7. ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு Feb 8, 2026 - 12:27 PM ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக, ஓராண்டு காலத்திற்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. இதன்படி, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. விண்ணப்பதாரர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்கனவே மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில், வடக்கு மாகாணத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் 253 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 135 சதவீதத்தாலும், மத்திய மாகாணத்தில் 116 சதவீதத்தாலும், ஊவா மாகாணத்தில் 108 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. 47 வருடங்களாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, ஏனைய சேவைகளும் பரவலாக்கப்பட்டுள்ளன. இதன்படி, வறுமை ஒழிப்பு மானியங்கள், கல்விப் புலமைப்பரிசில்கள், விசேட தேவையுடையோருக்கான உதவிகள், யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் அவசர அனர்த்த உதவிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் பொதுமக்கள் இப்போது தமது பிரதேச செயலகங்கள் ஊடாக இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmlddx3v70010356npt038g61
  8. சிறை: 'அதிகார வர்க்கத்தின் மதம் மீதான அணுகுமுறை' - ஊடக விமர்சனம் பட மூலாதாரம்,X/Vikram Prabhu 29 டிசம்பர் 2025 விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கத்தில் 'சிறை' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. போலீஸ் டிராமா படங்களின் வரிசையில் அடுத்த படமாக சிறை வெளிவந்துள்ளது. திரைப்படம் வெளியான சில நாட்களிலே சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. படத்தின் சில காட்சிகளைப் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சனப்பூர்வமாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வேலூர் சிறையிலிருந்து ஒரு இஸ்லாமியக் கைதியை காவலர்கள் சிவகங்கை நீதிமன்றதுக்கு பேருந்தில் அழைத்துச் செல்கின்றனர். வழியில் கைதி காவலரின் துப்பாக்கியுடன் தப்பித்துவிடுகிறார். தப்பித்த கைதி பிடிபட்டரா, அவரின் பின்னணி என்ன, காவலர்களுக்கு என்ன நடந்தது ஆகியவை சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரில்லராக கூறப்பட்டுள்ளது. விக்ரம் பிரபு, கதிரவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஆனந்த தம்பிராஜா 'மரியம்' என்கிற சக காவலர் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். எல்.கே அக்‌ஷய் குமார், அப்துல் ரௌஃப் என்கிற கைதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கைதியின் காதலியான கலையரசி வேடத்தில் அனிஷ்மா நடித்திருக்கிறார். காதர் பாஷா என்கிற ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மூணார் ரமேஷ் நடித்துள்ளார். டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். அவரும் இயக்குநரும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். இந்தப் படம் தொடர்பான விமர்சனங்கள் ஊடகங்களில் வந்திருக்கின்றன. முதன்மை கதாபாத்திரங்களைத் தாண்டி துணை கதாபாத்திரங்களும் படத்தின் தொழில்நுட்ப பங்களிப்பும் விமர்சனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி தனது முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான கதையுடனே வந்திருக்கிறார் என தினமணி திரை விமர்சனம் தெரிவிக்கிறது. "அளவான நடிப்பில் அசத்தும் விக்ரம் பிரபு" பட மூலாதாரம்,X/Vikram Prabhu மேலும் தினமணி விமர்சனத்தில்,"இடைவேளை மற்றும் காதல் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. வசனங்களிலும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டதால் சில வசனங்களும் தனித்தனியான கதைகளைச் சொல்கின்றன. முக்கியமாக, ஒரு குற்றவாளி இஸ்லாமியராக இருந்தால் அதிகார அமைப்பு அவரை எப்படி கையாள்கிறது என்பதை அழுத்தமாக ஒரே காட்சியில் சொல்லப்பட்டது மனதை தொந்தரவு செய்ய வைக்கிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பை பாராட்டியுள்ள தினத்தந்தி விமர்சனத்தில், "விக்ரம் பிரபு, நிஜமான போலீஸ்காரராகவே நெஞ்சில் பதிகிறார். மனசாட்சிக்கும், மனிதாபிமானத்துக்கும் இடையே சிக்கும் இடங்களில் இயல்பான நடிப்பாலும் அலங்கரிக்கிறார். இந்த புதிய விக்ரம் பிரபு இனியும் தொடரவேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை போன்ற திரைப்படங்களின் வெற்றி, அதில் சிக்கியுள்ள மக்களைப் பற்றி நம்மை கவலைப்பட வைக்கிறதா என்பதைப் பொருத்து அமைகிறது எனக் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், சிறை திரைப்படம் அதை விக்ரம் பிரபுவின் அளவான நடிப்பின் மூலம் செய்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. கதாசிரியராக ஜொலிக்கும் இயக்குநர் தமிழ் தமிழ் எழுதும் காவல்துறை சார்ந்த காட்சிகள் சில புதுமையான அனுபவங்களைத் தருகின்றன என தினமணி விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியிருக்கிறார். இவர் காவல்துறையில் பணியாற்றியதால் அதில் கிடைத்த அனுபவங்கள், கடைநிலை காவலர்களின் பணிச்சூழல், அதிகார அமைப்பு செயல்படும் விதங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார். முக்கியமாக, இந்தப் படத்தில் எஸ்கார்ட் காவலர்களின் பணிச்சூழல் எப்படி என பதிவாகியிருக்கிறது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மற்றும் பாதுகாப்புக்குச் சென்ற காவலரின் விதி சிறப்பான த்ரில்லராக உருவாக்கப்பட்டு, மத வெறிக்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கிறது என தி இந்து விமர்சனம் கூறுகிறது. "இத்தகைய சிறிய கதை களத்திலும் கதாசிரியர் தமிழ் மற்றும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி மதவெறிக்கு எதிராக ஆழமான கருத்துக்களைத் தெரிவிக்க பல தருணங்களை வைத்துள்ளனர்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Seven Screen Studios காவல்துறை நடைமுறை எந்த விதமான பிரமாண்டமும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்திற்கு உதவி செய்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம் தெரிவிக்கிறது. "தண்டனை கைதிகளை அழைத்துச் செல்வது, நீதிமன்ற விசாரணை, சார்புடன் செயல்படும் அதிகாரிகள் என எதுவுமே புதியவை கிடையாது. ஆனால் இவை அனைத்தையுமே தேவையான நேர்மையுடன் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தில் வழங்கியுள்ளார்," என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமுகங்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக தி இந்து விமர்சனம் கூறுகிறது. "படத்தில் ஆச்சரியமாக அமைந்தது புதுமுகங்களான அக்‌ஷய் மற்றும் அனிஷ்மாவின் நடிப்பு தான். இதில் அனிஷ்மா குறைவான காட்சிகளே கிடைத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்‌ஷயும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்," என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒளிப்பதிவு, படத்தொகுப்பு படத்தின் பலம்" தொழில்நுட்ப ரீதியாகவும் அனைவரும் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கின்றனர் என தினமணியின் விமர்சனம் தெரிவிக்கிறது. "இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. முக்கியமாக, அப்துலுக்கும் கலையரசிக்குமான காதல் பாடலை எடுத்த விதம் அழகு." "எடிட்டர் பிலோமின் ராஜ் தேர்ந்த கலைஞர் என்பதால் கதையை எவ்வளவு பரபரப்பாக்க வேண்டுமோ அவ்வளவு கட்ஸை வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் நெருங்க, நெருங்க ஒருவித பதற்றம் ஆட்கொள்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு சிறப்பான ஜஸ்டிஸ் வழங்கியிருக்கிறார். பின்னணி இசைகள் ஒவ்வொன்றும் கதைச்சூழலுக்கு ஏற்ப அமைக்கபட்டிருந்தது." என தினமணி விமர்சனம் கூறுகிறது. பட மூலாதாரம்,X/Vikram Prabhu "படத்தில் மேலோங்கும் டிராமாத்தனம்" - தடுமாறும் இடங்கள் எவை? படத்தில் சில இடங்களில் டிராமாத்தனம் தெரிவதாகப் பரவலாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. "கலையரசி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை பின் தொடரும்போது படத்தில் டிராமாத்தனம் மேலோங்குகிறது. ஆனால் படம் குறைவான நேரமே ஓடுவதால் இந்தக் காட்சிகள் நிலைக்கவில்லை." என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராமா என்பதைத் தாண்டி யதார்த்தத்தின் மீது படம் கவனம் செலுத்தினாலும் தேவைக்கும் அதிகமான இடங்களில் டிராமாத்தனம் எட்டிப் பார்க்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. "அப்துலின் கதையைக் கூறும் ஃப்ளேஷ்பேக்கில் தான் படம் தடுமாறுகிறது. பெரும்பான்மை இந்து கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பம், வன்முறையாக மாறும் மத அடிப்படையிலான பாரபட்சம், மதுப்பழக்கம் கொண்ட வில்லன் கதாபாத்திரம் என அதிகமாக பழக்கப்பட்டதாகவே இருக்கிறது." என்றும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது "ஆனால் இந்த சறுக்கல்கள் அனைத்தும் விக்ரம் பிரபுவின் நடிப்பு மற்றும் படத்தில் நடைமுறை நேர்மறையால் மறைக்கப்படுகிறது" "பரபரப்பான திரைக்கதை பலம். சில இடங்களில் காட்சிகளில் தொய்வு தென்படுகிறது, யூகிக்கவும் முடிகிறது. ஆங்காங்கே லாஜிக் மீறலை தவிர்த்திருக்கலாம்," என தினத்தந்தி விமர்சனம் தெரிவிக்கிறது. கதையின் குறையைச் சுட்டிக்காட்டும் தினமணி விமர்சனத்தில், "அதேநேரம், சிறை தனித்துவமான கதையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தாலும் பாதியில் ஆரம்பித்தது போல் முதல் காட்சிகள் இருந்தது சிறிய குறை. விக்ரம் பிரபுவுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளை வழங்கியிருந்தால் சிறைத்துறை சார்ந்த சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre3ev221ppo
  9. தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2026 பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிப்பதற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டனர். முன்னதாக, தாயின் நஞ்சுக் கொடியில் (Placenta) மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவியிருப்பது தொடர்பான தனியார் கல்லூரியின் ஆய்வு அறிக்கையை தானாக முன்வந்த விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய, மாநில அரசுகளை எதிர் மனுதாரர்களாக சேர்த்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு, கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றை தானாக முன்வந்து விசாரித்தது. 'அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம்' அந்த ஆய்வில், பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் ஏ (BPA) வகை ரசாயனம், பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியில் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் தன்மைவாய்ந்த பிஸ்பினால் ஏ வகை ரசாயனம், பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களின் ஒப்புதலுடன் அவர்களின் நஞ்சுக் கொடியில் இருந்து ரத்த மாதிரிகளை மருத்துவக் குழு சேகரித்துள்ளது. 'இவற்றில் பிபிஏ (Bisphenol A) அளவானது ஒரு கிலோ எடைக்கு 0.43 மைக்ரோகிராம் முதல் 1.1578 மைக்ரோகிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. இவை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தன' என அந்த ஆய்வு கூறுகிறது. தமிழ்நாடு அரசு சொன்னது என்ன? பிஎஸ்ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை அடுத்து நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு, 'தாயின் நஞ்சுக் கொடியைக் கூட பிளாஸ்டிக் துகள்களால் மாசுபடுத்த முடியும் என்றால் இதற்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' எனக் கூறினர். 'இதுதொடர்பாக விரிவாக ஆராய வேண்டும்' எனக் கூறி மத்திய, மாநில அரசின் சுகாதாரத் துறைகளை வழக்கில் எதிர் மனுதாரர்களாக நீதிபதிகள் சேர்த்தனர். மீண்டும் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்துமாறு சென்னை ஐ.ஐ.டியை உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த தகவலை அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் மூலம் தமக்குத் தெரிவித்ததாகவும் நீதிமன்றத்தில் அவர் கூறினார். 'இந்த விவகாரத்தை தீவிரமாக ஆராய வேண்டும்' எனக் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மைக்ரோ பிளாஸ்டிக் (கோப்புப் படம்) ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (European Food Safety Authority - EFSA) 'மனித உடலின் ஒரு கிலோ உடல் எடைக்கு 0.2 நானோ கிராம் (ng) அளவுக்கு பிஸ்பினால் ஏ இருக்கலாம்' என வரையறுத்துள்ளதாகக் கூறுகிறார் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான பார்த்திபன். வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 6) சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வி.சந்திரசேகரன், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். பிளாஸ்டிக் குடுவைகள் மற்றும் பாலித்தீன் உறைகளில் மைக்ரோ பிளாஸ்டிக்கின் இருப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது என்ன? மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் வகைகளை வளர்ந்து வரும் மாசுகளாகவும் உணவுப் பொருள்களில் அவற்றின் பரவலை அறிந்து கொள்வது தொடர்பான திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தொடங்கியுள்ளதாகவும் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் தெரிவித்தார். லக்னௌவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), கொச்சியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் மீன் தொழில்நுட்பத்திற்கான மத்திய கல்விநிறுவனம் (ICAR- CIFT), மற்றும் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் (BITS Pilani) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். 'உணவுப் பொருள்களில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகளை அடையாளம் காணவும் அவற்றின் அளவைத் தீர்மானிக்கவும் பகுப்பாய்வு முறைகளை உருவாக்கி சரிபார்ப்பது இதன் முக்கிய நோக்கமாக உள்ளது' என, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் குறிப்பிட்டுள்ளது. உப்பில் அதிக மைக்ரோ பிளாஸ்டிக் பட மூலாதாரம்,Getty Images பிளாஸ்டிக் குடுவைகளில் அடைக்கப்பட்ட தண்ணீர், பொட்டலங்களில் அடைக்கப்பட்டுள்ள பானங்கள், உலர்ந்த மீன்கள், மீன் உணவு ஆகியவற்றில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடைபெற்று வருவதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'இதன் முதற்கட்ட ஆய்வுகளில் அயோடின் கலந்த உப்பில் அதிக எண்ணிக்கையிலும் கருப்பு உப்பு மற்றும் பாறை உப்பு ஆகியவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த அறிக்கையில், 'இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடிநீர் பாட்டில்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' என்கிறது. இதுதொடர்பாக விவாதிப்பதற்கு கூட்டுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்யுமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்தனர். 'நஞ்சுக் கொடியில் பரவிய பிளாஸ்டிக் துகள்கள்' பட மூலாதாரம்,Facebook/Sudha Ramalingam படக்குறிப்பு,மருத்துவர் சுதா ராமலிங்கம். தாயின் நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்பு இருப்பது குறித்த ஆய்வை கோவை கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. "நாங்கள் நடத்திய தொடக்கநிலை ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டன. இதனை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்," என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம். இவர் கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக மருத்துவத் துறையின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக இதுதொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறோம். சிறு வயதிலேயே உடல் பருமனுடன் வளரும் குழந்தைகள், சர்க்கரை குறைபாடு, புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வரத் தொடங்கிவிட்டன." என்கிறார். 'கருவிலேயே தீர்மானிக்கப்படும் நோய்கள்' நோய்கள் பெருகிக் கொண்டிருப்பதற்கு அடிப்படையாக கருவில் குழந்தை உள்ளபோதே சில வகை வியாதிகளுக்கான தன்மை வெளிப்படுவதாக, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் சுதா ராமலிங்கம் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, மருத்துவரீதியாக இதனை 'டோஹாட்' (Developmental Origin Of Health And Disease - dohad) என்கின்றனர். கருவில் உள்ளபோதே, 'என்ன வியாதி வரும்' என்பதை செல்களின் நடத்தைகள் தீர்மானிப்பதாகவும் அவர் கூறுகிறார். "உணவு முறை காரணமாக தாயின் உடலில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது கருவில் உள்ள குழந்தைக்குச் சென்றால் அதனால் உடல் பருமன், சர்க்கரை குறைபாடு வருமா எனக் கண்டறியும் ஆர்வம் எங்களுக்கு ஏற்பட்டது," என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம். மனித உடலில் உள்ள நாளமில்லாத சுரப்பிகளை (endocrine system) சீர்க்குலைக்கும் வேலையை பிஸ்பினால் ஏ வகை ரசாயனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 400 கர்ப்பிணிகளிடம் ஆய்வு பட மூலாதாரம்,Facebook/Parthiban கடந்த ஆறு மாதங்களாக சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளின் நஞ்சுக் கொடிகளை (placenta) மருத்துவர் சுதா ராமலிங்கம் தலைமையிலான குழு சேகரித்துள்ளது. இந்த நஞ்சுக் கொடிகள், பிரசவத்துக்குப் பிறகு வெளியில் தூக்கி எறியப்படுகின்றன. "அதில் உள்ள ரத்த மாதிரிகள் பெற்றோரின் ஒப்புதலுடன் சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக, நெறிமுறைக் குழு (Ethics commitee) ஒப்புதல், பணிபுரியும் நிறுவனத்தின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்டன," என்கிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம். முதல்கட்ட ஆய்வு முடிவில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட சற்று அதிகமாக நுண் நெகிழி துகள்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார். "மைக்ரோ பிளாஸ்டிக் என்பது பலவகையான தன்மைகளைக் கொண்ட ரசாயனமாக உள்ளது. அதில் பிஸ்பினால் ஏ வகை ரசாயனத்தை மட்டும் கவனித்தோம். மற்ற துகள்களின் வடிவங்களைக் கண்டறிய மேம்பட்ட ஆய்வக வசதி தேவைப்படுகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன," என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம். பாதிப்பைக் கொடுக்கும் தேநீர், சாம்பார் பைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உணவுப் பொருட்கள் பேக்கேஜிங் (கோப்புப் படம்) பால், தேநீர், சாம்பார் ஆகியவற்றை கட்டிக் கொடுப்பதற்கு ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் பிளாடிக் உறைகள் மூலம் மனித உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் நுழைய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம். "இவை நாளமில்லா சுரப்பிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. " என்கிறார் அவர். தொடர்ந்து அவர் பேசும்போது, "தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மனநலரீதியான பாதிப்புகள், இதயநோய், சர்க்கரை குறைபாடுகள் போன்றவற்றை உருவாக்கும் ஆபத்துடைய ரசாயனங்களாக இவை உள்ளன." என அவர் தெரிவித்தார். பேப்பர் குடுவைகள், ஒருமுறை பயன்படுத்தும் டீ தூள் பைகள் (Tea bags) ஆகியவற்றிலும் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளதாகக் கூறும் அவர், "சூடாக தேநீர் குடிக்கும்போது மைக்ரோ பிளாஸ்டிக் உருகி வயிற்றுக்குள் செல்கின்றன. இதுபோன்ற பொருட்களைத் தவிர்க்க வேண்டும்." என்கிறார். வெளியில் உள்ள புகையை சுவாசிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் மனித உடலில் இயல்பாகவே ரசாயனங்கள் உள்ளதாகக் கூறும் அவர், "ஆனால், அது தாயின் நஞ்சுக் கொடி வரையிலும் சென்று சேர்ந்திருப்பது தான் அதிர்ச்சியூட்டுகிறது" எனக் கூறுகிறார். "பிஸ்பினால் ஏ வகை ரசாயனம் போல தாலேட்ஸ் (Pthalates) வகை ரசாயனம் உள்ளது. மனிதர்களைச் சுற்றியே இவை உள்ளன. ஓட்டலில் ஊற்றிக் கொடுக்கும் சாம்பார், பிளாஸ்டிக் குடுவைகள் எனப் பலவற்றில் இவை உள்ளன." என்கிறார் அவர். 'முன்கூட்டிய பிரசவ பாதிப்பு' பட மூலாதாரம்,Facebook/Perumal pillai படக்குறிப்பு,மருத்துவர் பெருமாள் பிள்ளை பிளாஸ்டிக் துகள்கள், நஞ்சுக் கொடியைக் கடந்து கருவை அடைவதாகக் கூறுகிறார், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறையின் இணைப் பேராசிரியரும் மருத்துவருமான பெருமாள் பிள்ளை. கர்ப்பகால நீரிழிவு போன்ற நீண்டகால வளர்சிதை மாற்றங்களுக்கு இவை வழிவகுப்பதாகக் கூறும் மருத்துவர் பெருமாள் பிள்ளை, "தாயின் நஞ்சுக் கொடியில் பி.வி.சி, பாலிமர் போன்ற மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் சில ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன" எனக் கூறுகிறார். இதுதொடர்பாக ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் ஆபத்துகளை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தென்கொரியாவில் குடிநீர் குடுவைகள், பால் பாட்டில் ஆகியவற்றில் பிஸ்பினால் ஏ வகை ரசாயனத்தைக் கண்டறியப்பட்டதாகக் கூறுகிறார், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன். "அங்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக பரிசோதனையில் இதன் பாதிப்பு அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர்" எனக் கூறுகிறார். தவிர்ப்பதற்கான வழிகள் என்ன? தொடர்ந்து பிளாஸ்டிக் குடுவையைப் பயன்படுத்தும்போது மைக்ரோ பிளாஸ்டிக் தாக்கம் அதிகரிக்கும் என கூறும், மருத்துவர் சுதா ராமலிங்கம் மனித உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார். பிளாஸ்டிக் குடுவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு குடுவைகள் பாதுகாப்பானவை ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. ஒருமுறை பயன்படுத்தப்படும் தேநீர் கோப்பைகளைத் தவிர்க்க வேண்டும் சூடான சாம்பார், தேநீர் போன்றவற்றை பாலித்தீன் பைகளில் வாங்கக் கூடாது. "தற்போது இடைக்கால ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளோம். விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்பட உள்ளது. மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுமாறு சென்னை ஐஐடியிடம் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவை வெளிவரும்போது மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படும்," என்கிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgrdrpxey8ro
  10. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷர்கள் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு 08 Feb, 2026 | 12:36 PM (எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் படுகொலையாளிகளின் நிலைப்பாட்டையே எதிர்க்கட்சி தற்போது கொண்டுள்ளது. வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நீதிமன்றமாக மாற்றியமைத்து, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா? வழக்கு விசாரணையை நாளாந்தம் முன்னெடுக்காமல் புதுக்கடை நீதிமன்றத்தில் மூன்று மாதத்தக்கு ஒருமுறையா விசாரிக்க வேண்டும். குண்டுத்தாக்குதலை செய்தது யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார்? என்பதையும் அறிவார்கள். அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசர கால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் சொல்வதற்கு முரணாக செயற்படுகிறார்கள். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காட்டு நீதிமன்றத்தில் இடம்பெறுகிறது. அமைச்சரின் பங்களாவில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது, விசாரணைகள் தினசரி இடம்பெறுவதால் சாட்சியாளர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் முன்னிலையாகுவதற்கு கடினமாக உள்ளது, அதேபோல் பிரதான சூத்திரதாரி இல்லாமல் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடுகிறார்கள். ஏதேனும் வழக்குத் தொடர்பில் நாளாந்தம் விசாரணைகளை முன்னெடுப்பதில் தவறேதும் உள்ளதா என்பதை நீதியமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என சபையில் இருந்த நீதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். இதற்கு எழுந்து பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தண்டனைச் சட்டக்கோவையின் பிரகாரம் நாளாந்தம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தான் விதிமுறை,சட்டத்தரணிகள் பகிரங்க நீதிமன்றில் முன்னிலையாகுவார்கள். அமைச்சரின் பங்களா என்று குறிப்பிட்டாலும் அதுவும் அரச சொத்துதான். வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். இதற்கு புதிய நீதிமன்ற கட்டடங்களை நிர்மாணிக்க முடியாது. அரச கட்டடங்கள், பங்களாக்களையே பயன்படுத்த முடியும். இன்னும் ஐந்து,ஆறு நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படும். வழக்கு விசாரணைகள் அனைத்தும் துரிதப்படுத்தப்படும்.எதிர்க்கட்சியின் உறுப்பினர் நீதிக்காகவும், உண்மைக்காகவும் பேசவில்லை. குற்றவாளிகளுக்காகவே முன்னிலையாகியிருந்தார். பேசினார் என்றே எனக்குத் தோன்றுகிறது என்றார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் படுகொலையாளிகளின் நிலைப்பாட்டையே எதிர்க்கட்சி தற்போது கொண்டுள்ளது.வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நீதிமன்றமாக மாற்றியமைத்து, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா? வழக்கு விசாரணையை நாளாந்தம் முன்னெடுக்காமல் புதுக்கடை நீதிமன்றத்தில் மூன்று மாதத்தக்கு ஒருமுறையா விசாரிக்க வேண்டும். குண்டுத்தாக்குதலை செய்தது. யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார் என்பதையும் அறிவார்கள். அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சானி அபேசேகர, ரவி செனவிரத்ன மற்றும் ஏனைய விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகவே எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். இவர்கள் படுகொலையாளிகளின் பைகளில் இருந்துக்கொண்டு பேசுகிறார்கள்.குண்டுத்தாக்குதல் படுகொலையாளிகளுக்காக முன்னிலையாகும் கீழ் நிலைக்கு எதிர்க்கட்சியினர் விழுந்துள்ளார்கள். இவர்களின் நிலைமை கவலைக்குரியது என்றார். https://www.virakesari.lk/article/238144
  11. ஹெட்மயர் அதிரடி அரைச் சதம், ஷெப்பர்ட் ஹெட்-ட்ரிக்குடன் 5 விக்கெட் குவியல்; மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி Published By: Vishnu 07 Feb, 2026 | 07:37 PM (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஷிம்ரன் ஹெட்மயர் குவித்த அதிரடி அரைச் சதம், ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்த ஹெட்-ட்ரிக் என்பன மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிபெறச் செய்தன. இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு ஸ்கொட்லாந்து தகுதிபெற்றிருக்கவில்லை. ஆனால், இந்தியாவில் தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்து பங்களாதேஷ் விலகிக்கொண்டதால் பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து சி குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டது. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஸ்கொட்லாந்து ஓரளவு திறமையை வெளிப்படுத்தியது. இன்றயை போட்டியில் முதலில் துடப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்ளைப் பெற்றது. ப்றெண்டன் கிங் (35), அணித் தலைவர் ஷாய் ஹோப் (19) ஆகிய இருவரும் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 64 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ரோவ்மன் பவல் 24 ஓட்டங்களையும் ஷேர்பெய்ன் ரதர்பர்ட் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்றட் கியூரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சபியான் ஷெரிப், ஒலிவர் டேவிட்சன், மைக்கல் லீஸ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (42), டொம் ப்றூஸ் (35) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், ரிச்சி பெறிங்டன் உட்பட கடைசி 7 விக்கெட்கள் வெறும் 32 ஓட்டங்ளுக்கு சரிந்ததால் ஸ்கொட்லாந்து தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் அவர்கள் இருவரைவிட ஜோர்ஜ் மன்சே (19), மார்க் வொட் (15), மெத்யூ க்ரொஸ் (11) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது ஹெட் - ட்ரிக்கையும் முதலாவது 5 விக்கெட் குவியலையும் ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்து பலத்த பாராட்டைப் பெற்றார். அத்துடன் அவர் ஒரே ஓவரில் நால்வரை ஆட்டம் இழக்கச் செய்தார். 3 ஓவர்கள் பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான ஜேசன் ஹோல்டர் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷிம்ரன் ஹெட்மயர் https://www.virakesari.lk/article/238095 அமெரிக்காவுடனான போட்டியில் அரைச் சதம் குவித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு வித்திட்ட சூரியகுமார் யாதவ் Published By: Vishnu 07 Feb, 2026 | 11:33 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) இரவு நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் சூரியகுமார் யாதவ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. ஆனால், இந்த மொத்த எண்ணிக்கையை இந்தியா இலகுவாக அடையவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா வீழ்த்தியது போன்று இந்தியாவும் எதிர்நோக்குமோ என்ற ஒரு நிலை இந்தப் போட்டியில் காணப்பட்டது. இப் போட்டியின் 13ஆவது ஓவரில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்ற பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. அதிரடிக்கு பெயர்பெற்ற அபிஷேக் ஷர்மா (0), இஷான் கிஷான் (20), திலக் வர்மா (25), ஷிவம் டுபே (0), ரின்கு சிங் (6), ஹார்திக் பாண்டியா (5) ஆகிய ஆறு பேரும் ஆட்டம் இழந்திருந்தனர். இதன் காரணமாக இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக அமெரிக்கா விளங்கியது. ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் மறு பக்கத்தில் சூரியகுமார் யாதவ் தலைவருக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தார். ஆரம்பத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்ட பின்னர் அதிரடியில் இறங்கினார். 13ஆவது ஓவர் நிறைவில் 22 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்றிருந்த யாதவ், 20 ஓவர்கள் நிறைவில் அடுத்த 27 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இதில் 10 பவுண்டறிகளும் 4 சிக்ஸ்களும் அடங்கி இருந்தன. இதனிடையே 14 ஓட்டங்களைப் பெற்ற அக்சார் பட்டேலுடன் 8ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களை சூரியகுமார் யாதவ் பகிர்ந்திருந்தார். பந்துவீச்சில் ஷெட்லி வன் ஷோக்வைக் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்மீத் சிங் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் மிலிந்த் குமார் (34), சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி (37), ஷுபம் ரஞ்சேன் (37) ஆகிய மூவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். மிலிந்த் குமார், சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டமானது முழு போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக பதிவானது. எனினும் அமெரிக்க துடுப்பெடுத்தாட்டதில் மற்றைய 8 பேரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ் https://www.virakesari.lk/article/238097
  12. யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு! 08 Feb, 2026 | 10:05 AM யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (06) வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் நேற்று சனிக்கிழமை (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/238121
  13. சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது) 7 பிப்ரவரி 2026 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது. 2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது. சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பற்றிய முழு விவரமும் இங்கே தரப்பட்டுள்ளன. டி20 உலகக் கோப்பை-2026 அட்டவணை டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பு நகரில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடக்க நாளில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். மற்ற போட்டிகளில் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகளும், மற்றொன்றில் இந்தியா - அமெரிக்கா ஆகிய அணிகளும் மோதுகின்றன. ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய 20 அணிகளுக்கான முதல் கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தொடரும். இறுதி நாளைத் தவிர மற்ற நாட்களில் தினசரி மூன்று போட்டிகள் நடைபெறும். இறுதி நாளில் மட்டும் ஒரு போட்டி நடைபெறும். அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தினசரி ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் நடைபெறும். மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் நடைபெறும். டி20 ஆடவர் உலகக்கோப்பைக்கான வடிவம் என்ன? டி20 ஆடவர் உலகக் கோப்பை, 2024 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அதே வடிவத்தையே பின்பற்றுகிறது. அந்த தொடர், 20 அணிகள் பங்கேற்ற மிகப் பெரிய தொடராக அமைந்தது. லீக் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் நான்கு போட்டிகளில் விளையாடும். தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில், தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும். சூப்பர் 8 சுற்றில் அணிகளின் இடம் லீக் சுற்றில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அல்லாமல், அவற்றின் தர வரிசையைப் பொருத்தே அமையும். உதாரணமாக, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதாக எடுத்துக் கொள்வோம். அப்படியானால், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் குழுவிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இரண்டாம் குழுவிலும் இடம்பெறும். சூப்பர் 8 சுற்றில் தங்கள் குழுவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியைப் பொருத்தவரை, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடித்த அணி, மற்றொரு குழுவில் இரண்டாம் இடம் பிடித்த அணியுடன் மோதும். லீக் மற்றும் சூப்பர் 8 ஆகிய இரு கட்டங்களிலும் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். ஒரு போட்டி முழுமையாக நடக்காத பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். தோற்கும் அணிக்கு புள்ளிகள் கிடையாது. டி20 உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகள் போட்டியிடுகின்றன? டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து 12 நாடுகளும் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஜிம்பாப்வே அணி தகுதிச்சுற்று மூலம் உள்ளே நுழைந்தது. இத்தாலி இந்தத் தொடரில் முதன்முறையாக அறிமுகமாகிறது. அதேசமயம் கனடா 2014-க்குப் பிறகு தனது முதல் சர்வதேச தொடரில் பங்கேற்கிறது. வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களால் தங்கள் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததால், வங்கதேசம் இந்தத் தொடரிலிருந்து விலகியது. தகுதி பெறாத அணிகளில் மிக சிறந்த தரவரிசையில் இருந்த ஸ்காட்லாந்து, 'குழு சி' பிரிவில் வங்கதேசத்தின் இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானும் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கப் பரிசீலித்தது, ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் விளையாட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் தாக்கம் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள் பின்வரும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: குழு A: இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா குழு B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே குழு C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் குழு D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2026 டி20 உலகக்கோப்பை எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது? இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எட்டு மைதானங்கள் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஐந்தும், இலங்கையில் மூன்றும் இதில் அடங்கும். இந்தியாவில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் மற்றும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் ஆகியவை போட்டிகளை நடத்தும். இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம் மற்றும் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், மற்றும் பல்லேகல கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோதி மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் மட்டும் அந்தப் போட்டி கொழும்புக்கு மாற்றப்படும். டி20 உலகக்கோப்பைக்கான விதிகள் என்ன? இந்த போட்டி டி20 வடிவில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் விளையாடும். ஆனால், ஒரு அணி முன்பே ஆல்-அவுட் ஆகிவிட்டால் அல்லது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இலக்கை முன்பே எட்டிவிட்டால், போட்டி 20 ஓவர்களுக்கு முன்பே முடிவடையும். ஒவ்வொரு இன்னிங்சும் ஆறு ஓவர் பவர்பிளேயுடன் தொடங்கும். அந்த நேரத்தில் ஃபீல்டிங் வியூகம் வகுக்க தனி கட்டுப்பாடுகள் உள்ளன. போட்டிகள் மூன்று மணிநேரம் 10 நிமிடங்கள் நீடிக்கும். ஒவ்வொரு இன்னிங்சுக்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 20 நிமிட இடைவேளை அளிக்கப்படும். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் 'ஸ்டாப்-கிளாக்' முறை உள்ளது. இதன் பொருள் ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீசும் அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும். 20 ஓவர்களுக்குப் பிறகு இரண்டு அணிகளும் எடுத்த ரன்கள் சமமாக இருந்தால், போட்டி சூப்பர் ஓவர் முறைக்குச் செல்லும் (ஒவ்வொரு அணியும் தலா 6 பந்துகளை எதிர்கொள்ளும் - அதிக ரன் எடுக்கும் அணி வெற்றி பெறும்). அதுவும் டையில் முடிந்தால், ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறையில் ஆட்டம் தொடர்ந்து விளையாடப்படும். குழு போட்டிகளில், ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 ஓவர்கள் விளையாடியிருந்தால் மட்டுமே ஆட்டத்தில் முடிவு எட்டப்படும். ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், அதுவே 10 ஓவராக இருக்கும். வானிலை காரணமாக அந்த கட்டத்திற்குப் பிறகு போட்டி நிறுத்தப்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டிஎல்எஸ் (டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை) முறை பயன்படுத்தப்படும். நாக்-அவுட் போட்டிகளுக்கான கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே தொடர்பான விதிகளை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், முதல் அரையிறுதி நடைபெறும் இடமாக கொல்கத்தாவிற்குப் பதிலாக கொழும்பு பிரேமதாசா மைதானம் மாற்றப்படும். ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் இறுதிப் போட்டியும் ஆமதாபாத் நகரில் இருந்து மாற்றப்படும். முந்தைய டி20 உலகக்கோப்பை சாம்பியன்கள் விவரம் இதுவரை ஒன்பது டி20 ஆடவர் உலகக் கோப்பைகளில் ஆறு வெற்றியாளர்கள் உள்ளனர். அந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. 2007 - இந்தியா 2009 - பாகிஸ்தான் 2010 - இங்கிலாந்து 2012 - வெஸ்ட் இண்டீஸ் 2014 - இலங்கை 2016 - வெஸ்ட் இண்டீஸ் 2021 - ஆஸ்திரேலியா 2022 - இங்கிலாந்து 2024 - இந்தியா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwygy9j4g8yo
  14. நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு Published By: Digital Desk 1 08 Feb, 2026 | 09:20 AM தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238117
  15. தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண் பட மூலாதாரம்,Puneet Barnala படக்குறிப்பு,55 வயதான அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், குழந்தைகளைக் காப்பாற்ற தேனீக்களோடு போராடினார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த திவாரி பிபிசி செய்தியாளர் 7 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "காஞ்சன் பாய் துணிச்சலோடு செயல்படாமல் இருந்திருந்தால், எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்." மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான விஷயத்தையே சொல்கிறார்கள். மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரன்பூரின் அங்கன்வாடி வளாகம், பிப்ரவரி 2 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. குழந்தைகளின் சிரிப்பும் குறும்பும் வழக்கமாகக் கேட்கும் இடத்தில், திடீரென்று அலறல் சத்தமும் கூச்சலும் எழும்புகின்றன. அதே அங்கன்வாடி வளாகத்தில் ஆரம்பப் பள்ளி மதியம் 2 மணி முதல் இயங்குகிறது, அங்கன்வாடியைச் சுற்றி கூடியிருந்த குழந்தைகளை தேனீக்கள் கூட்டம் தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அப்போது வளாகத்தில் சுமார் 20 முதல் 25 குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளைக் காப்பாற்ற ஓடிய காஞ்சன் பாய் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே ஒரு பெரிய தேன் கூடு இருந்தது. "தேனீக்கள் நேராக குழந்தைகளை நோக்கி நகர்ந்தன, அங்கே முழுமையான குழப்பம் நிலவியது" என்று பள்ளியின் ஆசிரியரான குணசாகர் ஜெயின் கூறுகிறார். அதே நேரத்தில், அங்கு இருந்த 55 வயதுடைய அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், நிலைமையை உணர்ந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஓடினார். குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்வதில் காஞ்சன் பாய் நேரத்தை வீணாக்கவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். முதலில் அங்கன்வாடியில் வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் போர்வைகளால் குழந்தைகளை மூடினார், பின்னர் தனது புடவையால் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அவரது துணிச்சலான செயல் அவரது சொந்த பேரன் உட்பட சுமார் 25 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது, ஆனால் தேனீக்களின் தாக்குதலில் அவர் மோசமாக காயமடைந்திருந்தார், மருத்துவமனையை அடைந்ததும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். "ஜவாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரன்பூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் திங்கள்கிழமை பிற்பகல் தேனீக்கள் தாக்கிய சம்பவம் நடந்தது. அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த காஞ்சன் பாய், குழந்தைகளை காப்பாற்ற முயன்றார். காஞ்சன் பாய் தேனீக்களால் காயமடைந்தார், இதனால் அவர் இறந்தார்" என்று நீமுச் காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெய்ஸ்வால் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 'தாயை நினைத்து பெருமைப்படுகிறேன்' பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் மகன் ரவி மேக்வால், தனது தாயை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறார். காஞ்சன்பாய்க்கு அவரது மகன் ரவி மேக்வால் மற்றும் அவரது கணவர் ஷிவ்லால் ஆகியோர் உள்ளனர். மகன் திருமணமானவர், காஞ்சன்பாய்க்கு ஒரு பேரன் உள்ளார், அவர் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். காஞ்சன் பாயின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கிறார். காஞ்சன்பாய் உயிர்நீத்ததால் முழு குடும்பமும் துக்கத்தில் இருந்தபோதும் அவரது மகன் ரவி மேக்வால் தனது தாயைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார். "நான் அப்போது கிராமத்தில் இல்லை, ஆனால் என் அம்மா டஜன் கணக்கான குழந்தைகளின் உயிரை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். என் அம்மா மிகவும் அன்பான குணம் கொண்டவர். அவர் அனைவரையும் நேசித்தார், ஆனால் குழந்தைகளை மிகவும் நேசித்தார். குழந்தைகள் கடவுளின் வடிவம் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் அவர்களை தனது சொந்த குழந்தைகளாக அல்ல, கடவுளாக நடத்தினார்" என்று ரவி பிபிசியிடம் கூறினார். காஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா தி சுய உதவிக் குழுவின் தலைவராக இருந்தார் மற்றும் அங்கன்வாடி பணிகளை நிர்வகித்தார். அவரது அன்றாட பொறுப்புகளில் சமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் மற்றும் குழந்தைகளைப் பராமரித்தல் ஆகியவை அடங்கும். படக்குறிப்பு,கிராம மக்கள் காஞ்சன்பாயை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடியில் நம்பகமானவராகவும் நினைவில் கொள்கிறார்கள். தனது தாயார் காப்பாற்றிய குழந்தைகளில் தனது சொந்த குழந்தையும் இருந்ததாக ரவி கூறுகிறார். "அவரது உடலில் இருந்து ஐந்து அல்லது ஆறு தேனீக்களின் கொட்டுதல்களும் அகற்றப்பட்டன." தனது தாயாரை நினைவுகூர்ந்து ரவி கூறுகையில், "இந்த வேலையை அவர் ஒருபோதும் வேலையாகக் கருதியதில்லை. இது அவரது வாழ்க்கையின் ஒரு அங்கம். அவர் ஒருபோதும் தாமதமாக வந்ததில்லை, விடுப்பு எடுத்ததும் இல்லை. மிகுந்த சிரமம் காரணமாக அவரால் செல்ல முடியாவிட்டாலும், முதலில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை ஏற்பாடு செய்வார்." என்றார். அந்த நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல சுரேஷ் சந்திர மேக்வால் வந்திருந்தார், அவருடைய மகன் அதே அங்கன்வாடியில் படிக்கிறார். "நான் வெளியே எட்டிப் பார்த்தபோது, மேடம் அலறிக் கொண்டிருந்தார், உள்ளே இருந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. நான் கொஞ்சம் அருகில் சென்றபோது, தேனீக்கள் தாக்குதல் இருப்பதை உணர்ந்தேன். காஞ்சன் பாய் குழந்தைகளை பாய்கள், விரிப்புகள் மற்றும் தனது சேலையால் மூடினார். அங்கே ஒரு பெரிய தேனீ கூட்டம் இருந்தது" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளை காப்பாற்ற முயற்சிக்கும்போது காஞ்சன் பாய் ஏராளமான தேனீக்களின் தாக்குதல்களைச் சந்தித்தார். "அன்று அவர் அங்கு இல்லாதிருந்தால், பல குழந்தைகள் தங்கள் உயிரை இழந்திருப்பார்கள்" என்று சுரேஷ் கூறுகிறார். கிராம மக்கள் என்ன சொன்னார்கள்? பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாயின் மைத்துனர் திலீப் மேக்வால் அங்கன்வாடிக்கு வருவதற்குள், கஞ்சன் பாய் தரையில் விழுந்துவிட்டார். காஞ்சன் பாயின் மைத்துனரான திலீப் மேக்வால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கன்வாடி தேனீக்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாகவும் கூறினார். அங்கன்வாடியை அடைந்தபோது நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக திலீப் கூறினார்."நான் காஞ்சன் பாய் தரையில் கிடப்பதைப் பார்த்தேன். அவரது உடலில் நிறைய தேனீக்கள் கொட்டியிருந்தன. சில தேனீக்கள் இன்னும் அங்கேயே இருந்தன. காஞ்சன் பாய் மயக்கமடைந்தார், அவர் வாயிலிருந்து நுரை வந்து கொண்டிருந்தது, அவரால் எதுவும் பேச முடியவில்லை." சம்பவம் நடந்த இடத்தை நினைவு கூர்ந்த திலீப், "அருகில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், மக்கள் பீதியடைந்தனர். நான் காஞ்சன் பாயை அழைத்துக்கொண்டு ஒரு குழந்தையுடன் வெளியே வந்தேன். அதற்குள் சுரேஷ் சந்திராவும் அங்கு வந்துவிட்டார், அவர் ஆம்புலன்ஸையும் காவல்துறையையும் அழைத்தார்" என்று அவர் கூறினார். போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வந்த பிறகு, காஞ்சன் பாய் அருகிலுள்ள சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்திற்கு (PHC) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா டி சுயஉதவி குழுவின் தலைவராக இருந்து அங்கன்வாடி பணிகளை கையாண்டார். சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்தின் பொறுப்பாளரான சந்தீப் சர்மா பிபிசியிடம் பேசுகையில், "அன்று நான் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இதற்கிடையில், மாலையில், கடுமையான தேனீ தாக்குதலுக்குப் பிறகு ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக PHC யிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது," என்று கூறினார். "அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களின் கூற்றுப்படி, அவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே இறந்துவிட்டார். தேனீ தாக்குதலால் அவர் அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கு ஆளாகிறார், இது மரணத்தை விளைவிக்கும்." என சந்தீப் சர்மா கூறினார். அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்பது ஒரு கடுமையான, திடீர் மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையாகும், இது ஒரு ஒவ்வாமைக்கு ஆளான சில நிமிடங்களுக்குள் ஏற்படலாம். டாக்டர் சந்தீப்பின் கூற்றுப்படி, தேனீ கொட்டுவது அத்தகைய அதிர்ச்சிக்கு ஒரு நியாயமான காரணமாகும். காஞ்சன் பாயின் மரணம் ரன்பூர் கிராமம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராம மக்கள் அவரை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடிக்குள்ன் இருக்கும் ஒரு நம்பகமான இருப்பாகவும் அவரை நினைவில் கொள்கிறார்கள். "காஞ்சன் பாய் அங்கு வசித்தபோது, குழந்தைகள் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களின் பராமரிப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்" என்று ஒரு கிராமவாசி கூறினார். திலீப் கூறுகையில், தான் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு உணவளிப்பதாகவும், அவர்களுடன் கேலி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காஞ்சன்பாய் குடும்பம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் வீட்டுக்கு வெளியே திரண்ட கிராம மக்கள் காஞ்சன் பாய் மறைவுக்கு பிறகு அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது, நிதி நிலைமை ஏற்கனவே கடினமாக இருந்தது. ரவியின் தந்தை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போயிருந்தார். "வீட்டின் முழுப் பொறுப்பும் என் அம்மாவின் மீது இருந்தது. என் தந்தையின் சிகிச்சைக்காக ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, நான் என் நிலத்தை விற்க வேண்டியிருந்தது. இன்றும் கூட, மருந்துகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை செலவிடுகிறேன்" என்று ரவி கூறினார். ரவி கூறுகையில், "வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் குடும்பத்திற்காக அம்மா கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். காலையில், வீட்டுப் பொறுப்புகள், தந்தையைப் பராமரித்தல், பின்னர் பள்ளி மற்றும் இடையில், சுய உதவிக்குழுவில் வேலை செய்தல். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் எல்லாவற்றையும் சமாளித்தார்." "தேனீக்களின் தாக்குதல் மிகப்பெரியது. குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது காஞ்சன் பாய் உயிரிழந்தார். குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது" என்று கிராம சர்பஞ்ச் லாலாராம் ராவத் கூறுகிறார். கிராம சபை அதன் விதிகளின் கீழ் குடும்பத்திற்கு உதவி வழங்கும் என்று அவர் கூறுகிறார். "அரசாங்கம் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவும், மகனுக்கு வேலைவாய்ப்பைப் பரிசீலிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." கிராமத்தில் நிலவும் அச்சம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமம் முழுவதும் அச்சம் நிலவுகிறது, அங்கன்வாடிக்கு அருகிலுள்ள கை பம்ப் மட்டுமே முழு கிராமத்திற்கும் நீர் ஆதாரமாக உள்ளது. அதே பகுதியில் ஒரு தேனீக்கூடு இருப்பதால் மக்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள். "பள்ளிக் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதால், குழந்தைகள் அங்கன்வாடியில் படிக்க வேண்டியுள்ளது. பள்ளியின் நிலையை மேம்படுத்தவும், குழந்தைகள் அங்கன்வாடியில் உட்கார வேண்டிய நிலையை மாற்றும் வகையில், சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எல்லாம் சரியாக இருந்திருந்தால், என் அம்மா அந்த நேரத்தில் அங்கன்வாடியில் இருந்திருக்க மாட்டார்" என்று ரவி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20d0d1xz5qo
  16. இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'! Published By: Digital Desk 1 07 Feb, 2026 | 01:45 PM நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று 06ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது. 'INS GHARIAL' என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருந்தபோது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். மேலும், கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைப்பால் 'INS GHARIAL' போர்க்கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள் ஒப்படைக்கப்பட்டதும் இந்தக் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238075
  17. தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம் தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் அவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றதும் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்தனர். இதில் த.வெ.க நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்ததாக கூறப்படும் நபர் யார் என்பது குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.bbc.com/tamil/live/cn9zwzl89v4t?post=asset%3A1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2#asset:1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2
  18. சில நேரங்களில் துர்நாற்றத்துடன் 'வாயு' வெளியேற என்ன காரணம்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சண்முகப் பிரியா பிபிசி தமிழுக்காக 8 பிப்ரவரி 2026, 02:38 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவருடனான நேர்காணலை கேள்வி - பதில் வடிவில் பார்க்கலாம். கேள்வி: வயிற்று வலிக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? பதில்: ஆங்கிலத்தில் வயிற்றை பாண்டோரா பாக்ஸ் (Pandora's box) என்று அழைப்பார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. முந்தைய நாள் இரவு அளவுக்கு அதிகமான உணவு உண்டாலோ அல்லது உணவகத்தில் உண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ அஜீரண கோளாறு காரணமாக மேல் வயிற்றில் வலி ஏற்படும். பசி ஏற்படாது. இவை இரண்டும் சாதாரணமானவை. சோடா, எலுமிச்சை சாறு, மோர், சீரகம், இஞ்சி போன்றவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், வயிற்று வலிக்கு குடல் புண், அல்சர் போன்ற 100-க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன. எச்சரிக்கை அறிகுறிகள்: தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு வலி சிறப்பு உணவு எதுவும் சாப்பிடாமலேயே கடுமையான வலி 4-5 மணி நேரம் தொடரும் வலி 4-5 வாரங்கள் தொடர்ந்து வலி நாளுக்கு நாள் அதிகரிக்கும் வலி முதுகு பகுதிக்கு பரவும் வலி பசியின்மை மற்றும் வாந்தி சோர்வு மற்றும் மயக்கம் ரத்த பரிசோதனையில் ஹீமோகுளோபின் குறைவு இரும்புச்சத்து குறைவு ஸ்கேன் செய்தால் வயிறு அல்லது கல்லீரலில் பிரச்னை இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். படக்குறிப்பு,இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணி கேள்வி: சாப்பிட்ட பிறகு புகைபிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்னை என்ன? பதில்: புகையிலை தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். நிகோடின் வயிற்றை தளர்த்துகிறது. வயிறு தளர்ந்தால் பசி குறையலாம், ஆனால் ஸ்பிங்க்டர் தசை தளர்ந்தால் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அதிகரிக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு புகைபிடிப்பது நல்லதல்ல. கேள்வி: காலையில் எழும்போது வாயில் இருக்கும் உமிழ்நீரை விழுங்கலாமா? Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது டி20 உலகக் கோப்பை: அமெரிக்க அணியில் விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்கள் அமெரிக்காவுடன் மோதல் வெடித்தால் இரான் முன்னுள்ள 4 வாய்ப்புகள் வார இறுதியில் கூடுதல் நேரம் தூங்குவது வார நாட்களில் சிறப்பாக செயல்பட உதவுமா? ஆய்வில் புதிய தகவல் இந்தியாவின் அதிரடி வீரர்களை கட்டிப்போட்ட பந்துவீச்சு - கடும் சவால் தந்த 'கத்துக்குட்டி' அமெரிக்கா End of அதிகம் படிக்கப்பட்டது பதில்: உமிழ்நீர் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. அதில் வலி நிவாரண குணம் உள்ளது. குழந்தைக்கு காயம்பட்ட இடத்தில் உமிழ்நீரை வைப்பது நல்லதுதான். இது வலி நிவாரண விளைவு மற்றும் ஆண்டிபயாடிக் விளைவு கொண்டது. உமிழ்நீரில் நல்ல பாக்டீரியா நிறைய இருப்பதால் அது ஆண்டிபயாடிக் போன்றது. அது கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காது. இதை காம்பெடிடிவ் இன்ஹிபிஷன் (competitive inhibition) என்று அழைக்கிறோம். பாக்டீரியாக்களைப் பொருத்தவரை வாயில் ஒரு பெரிய உலகமே உள்ளது. தூக்கத்தின் போது அந்த விகிதம் மாறுகிறது. வறட்சியின் காரணமாக கெட்ட பாக்டீரியாவின் எண்ணிக்கை மாறுகிறது. இரவில் உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது. காலையில் வாயில் இருக்கும் பாக்டீரியா நல்ல பாக்டீரியா அல்ல. அதை விழுங்குவதில் பிரச்னை இல்லை. நம்மிடம் போதுமான அமிலம் இருந்தால், விழுங்கினாலும் நம் வயிறு பாதிக்கப்படாது. பாக்டீரியா வயிற்றில் இறந்துவிடும். பட மூலாதாரம்,Getty Images கேள்வி: வயிறு மற்றும் வாய்ப் புண் இடையே தொடர்பு உள்ளதா? பதில்: இது பாதி உண்மை. வயிறு என்பது வயிற்றுப் பகுதி மட்டுமல்ல, வயிற்றுக்கு அப்பால் 8 மீட்டர் வரை உள்ளது. சிறுகுடலின் இறுதியில் ஒரு சிறிய புண் இருந்தாலும், வாயில் உள்ள பாக்டீரியாவால் அது பாதிக்கப்படலாம். வாய்ப்புண்களுக்கு பல காரணங்கள் உள்ளன. வயிறு இல்லாமலேயே, சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் போன்ற தன்னுடல் தாக்க நிலைகள் மற்றும் லைகன் க்ளோனஸ் போன்ற சில நிலைகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலைகளில் வயிற்றில் உள்ள பாதிப்பு வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கலாம். கேள்வி: குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பதில்: குடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. இவை சரியாக இருந்தால் குடல் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும். இரவில் ஒரு துப்புரவு தொழிலாளி போல இருக்கும். நாம் உறங்கும்போது நமது குடல் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். 3 மணிநேரம் சாப்பிடாமல் இருந்தால், சிறுகுடலில் எதுவும் இருக்காது. இதை ஜெஜூனம் என்று அழைக்கிறோம். ஜெஜூனம் என்றால் குடல் காலியாக இருக்கும் என்று அர்த்தம். பட மூலாதாரம்,Getty Images கேள்வி: குடல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும்? மன அழுத்தம் இல்லாமல் நன்றாக உறங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது. சமச்சீர் உணவு - சில புரதம், சில வைட்டமின் டி, சில இரும்புச்சத்து, தாவர நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பிஸ்கட், பர்கர், பீட்சாவில் காய்கறி குறைவு. நார்ச்சத்து இல்லை என்பதால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. இதுபோன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால் குடல் எரிச்சல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome) உணவு சாப்பிடும்போது குமட்டல் குடல் வீக்க நோய்க்குறி (Inflammatory Bowel Syndrome) குடல் புற்றுநோய் பார்கின்சன் நோய் மனச்சோர்வு தோல் ஒவ்வாமை மூட்டுவலி ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பட மூலாதாரம்,Getty Images கேள்வி: துர்நாற்றத்துடன் வாயு வெளியேற என்ன காரணம்? அது குடல் பிரச்னையின் அறிகுறியா? பதில்: நார்ச்சத்து ஜீரணமாகும் போது காற்று உற்பத்தியாகிறது. ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை நம் உடலில் இருந்து வெளியேறும். மீத்தேன் மற்றும் சல்ஃபைடு ஆகியவை அழுத்தம் கொடுத்து குடலிலிருந்து வெளியேறும். இதுதான் துர்நாற்றத்திற்கு காரணம். சில ரசாயனங்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியா நம் உணவு பழக்கத்தால் இருக்கலாம். சில உணவுகள் நிச்சயமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், நமது குடல் ஆரோக்கியம், தூக்கம், மன அழுத்தம், பாக்டீரியா - இவை அனைத்தும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். காலையில் எழும்போது வாயு வெளியேறுவது இயல்பு. 20-30 முறைக்கு மேல் வாயு வெளியேற்றம் சத்தமாகவும் இரைச்சலாகவும் இருந்தால், குடலில் உள்ள பாக்டீரியா ஏன் மாறியது என்று பார்க்க வேண்டும். இது நமது உணவு பழக்கத்தால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தெரியாத காரணத்தால் வந்ததா என்று அறிந்து தீர்வு தேடலாம். கேள்வி: பழைய சோறு உண்மையில் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? பதில்: சந்தேகமே இல்லாமல் பழைய சோற்றுக்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் கொடுக்கலாம். அது ஆரோக்கியமான உணவு. இதில் ப்ரோபயாடிக் உள்ளது. நிறைய சாப்பிடுபவர்களால் ஜீரணிக்க முடியாது. பழைய சோற்றில் கலோரிகள் மற்றும் ஸ்டார்ச் உள்ளன. எனவே, இது ஒரு நல்ல உணவு. ஆனால், மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80102jejdeo
  19. நெதர்லாந்தின் சவாலை முறியடித்து பாகிஸ்தானுக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார் பாஹீம் அஷ்ரப் 07 Feb, 2026 | 05:20 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று சனிக்கிழமை (07) நடைபெற்ற பத்தாவது ஐசிசி ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நெதர்லாந்தின் சவாலை முறியடித்து 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பாகிஸ்தான் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. போட்டியின் 18ஆவது ஓவர் முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த பாகிஸ்தான் அணியை பாஹீம் அஷ்ரப்பின் கடைசிநேர அதிரடி மீட்டெடுத்தது. பாகிஸ்தானில் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் வன் பீக்கின் பந்துவீச்சில் 6, 2, 6, 0, 6, 4 என 24 ஓட்டங்களைக் குவித்த பாஹீம் அஷ்ரப் அணியை வெற்றிப்பாதையில் இட்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பாஹீம் அஷ்ரப் கொடுத்த இலகுவான பிடியை ஓ'டௌட் தவறிவிட்டது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக திருப்பு முனையாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் விளையாட்டரங்கில் 2016 நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் முதல் நான்கு பந்துகளில் கார்லோஸ் ப்றத்வெய்ட் குவித்த சிக்ஸ்களை பாஹீம் அஷ்ரப்பின் அதிரடி நினைவுபடுத்தியது. நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. சய்ம் அயூப் (24), அணித் தலைவர் சல்மான் அலி அகா (12) ஆகிய இருவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சாஹிப்ஸதா பர்ஹான் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன் பாபர் அஸாமுடன் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அதுவே முழுப் போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. பர்ஹான் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் பாபர் அசாம் (15) களம் விட்டகன்றார். உஸ்மான் கான், ஷதாப் கான், மொஹம்மத் நவாஸ் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 17ஆவது ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 33 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன் காரணமாக நெதர்லாந்தின் கை ஓங்கி இருந்தது. எனினும் லோகன் வன் பீக் வீசிய 19ஆவது ஓவரில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பாஹீம் அஷ்ரப் 24 ஓட்டங்களை விளாசி ஆட்டத்தின் பிடியை பாகிஸ்தான் பக்கம் திருப்பினார்.கடைசி ஓவரில் ஷஹீன் ஷா அப்றிடி, பாஹீம் அஷ்ரப் ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட மிகுதி 4 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பாஹீம் அஷ்ரப் 29 ஓட்டங்களுடனும் ஷஹீன் ஷா அப்றிடி 5 ஓட்டங் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் போல் வன் மீக்கரன் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆரியன் டட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. நெதர்லாந்தின் முன்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்களில் நால்வரே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினர். இதன் பலனாக 15ஆவது ஓவரில் நெதர்லந்து 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் கடைசி 6 விக்கெட்கள் 21 ஓட்டங்களுக்கு சரிந்தது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (37), பாஸ் டி லீட் (30), மைக்கல் லெவிட் (24), கொலின் அக்கமன் (20) ஆகியோரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சல்மான் மிர்ஸா 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சய்ம் அயூப் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பாஹீம் அஷ்ரப். (பட உதவி: எஸ். நாதன்) https://www.virakesari.lk/article/238093
  20. பொலிஸை வெளுத்துக்கட்டியது செரெண்டிப், சோண்டர்ஸுக்கு அதிர்ச்சிக்கொடுத்தது சென். மேரிஸ், ஜாவா லேனிடம் வீழ்ந்தது நியூ ஸ்டார் Published By: Vishnu 07 Feb, 2026 | 09:48 PM (நெவில் அன்தனி) இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் சுப்பர் 8 சுற்றில் பொலிஸ் கழகத்தை மாவனெல்லை செரெண்டிப் கழகம் வெளுத்துக்கட்டியதுடன் சோண்டர்ஸ் கழகத்தை யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் அதிரவைத்தது. அதேவேளை நியூ ஸ்டார் கழகத்தை கொம்பனித் தெரு ஜாவா லேன் வீழ்த்தியது. செரெண்டிப் 5 - 0 வெற்றி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற சுப்பர் 8 கால்பந்தாட்டப் போட்டியில் பொலிஸ் கழகத்தை வெளுத்துக்கட்டிய மாவனெல்லை செரெண்டிப் கழகம் 5 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் பொலிஸ் கழகம் ஆதிக்கம் செலுத்தியபோதிலும் அக் கழகத்தினால் கோல் போட முடியாமல் போனது. குறிப்பாக செரெண்டிப் கழக கோல்காப்பாளர் மொஹமத் லுத்திபி ஓரிரு கோல்களை மிகவும் அற்புதமாக தடுத்தார். எவ்வாறாயினும் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் டாக்டோ ஜோர்ஜ் கோல் போட்டதும் செரெண்டிப் கழகம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அதன் பின்னர் செரெண்டிப் கழகம் எதிர்த்தாடுவதிலும் பொலிஸ் கழகம் தடுத்தாடுவதிலும் குறியாக இருந்தன. எனினும் இடைவேளைக்கு முன்னரும் இடைவேளைக்குப் பின்னரும் 7 நிமிட இடைவெளியில் செரெண்டிப் கழகம் 3 கோல்களைப் போட்டு பொலிஸ் கழகத்தை பிரமிப்பில் ஆழ்த்தியது. இடைவேளைக்கு முன்னரான உபாதையீடு நேரத்தில் விஜயகுமார் அபிஷான், இடைவெளை முடிந்து 46ஆவது நிமிடத்தில் டாக்கோ ஜோர்ஜ், 52ஆவது நிமிடத்தில் மொஹமத் ரஹுமான் ஆகியோர் கோல்களைப் போட்டு செரெண்டிப் கழகத்தின் கோல் எண்ணிக்கையை நான்காக உயர்த்தினர். தொடர்ந்து 76ஆவது நிமிடத்தில் டாக்கோ ஜோர்ஜ் மேலும் ஒரு கோலைப் போட்டு தனது ஹெட் - ட்ரிக்கை நிறைவுசெய்தார். இப் போட்டியில் முரட்டுத்தனமாக விளையாடியதால் பொலிஸ் கழக வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டதுடன் மேலும் இருவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. சோண்டர்ஸ் கழகத்தை அதிரவைத்த சென் மேரிஸ் இதே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு சுப்பர் 8 போட்டியில் பழைமைவாய்ந்ததும் பலம்வாய்ந்துமான சோண்டர்ஸ் கழகத்தை சென் மேரிஸ் கழகம் அதிரவைத்தது. அப் போட்டியில் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் 83ஆவது நிமிடம்வரை சென் மேரிஸ் கழகம் முன்னிலையில் இருந்ததால் சோண்டர்ஸ் கழகம் பெரும் அதிர்ச்சி அடைந்தது. சென். மேரிஸ் கழக பின்கள வீரர் ஓக்கே மிட்டோபொரின் கவனக் குறைவால் வழங்கப்பட்ட பெனல்டியினால் அப் போட்டியை சென் மேரிஸ் கழகம் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள நேரிட்டது. எவ்வாறாயினும் பிரபல சோண்டர்ஸ் கழகத்துடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி (2 - 2) முடித்துக்கொண்ட முதலாவது யாழ். அணி என்ற வரலாற்றுச் சாதனையை சென். மேரிஸ் கழகம் படைத்தது. இந்தப் போட்டியில் மிகவும் திறமையாக விளையாடிய சென் மேரிஸ் கழகம் 7ஆவது நிமிடத்தில் ஜோன் லவானி மூலம் கோல் போட்டு முன்னிலை அடைந்தது. தொடர்ந்து 30ஆவது நிமிடத்தில் செபஸ்தி அருள் அலாதியான கோல் போட்டு சென். மேரிஸ் கழகத்தை 2 - 0 என முன்னிலையில் இட்டார். இடைவேளையின் பின்னர் 56ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணித் தலைவர் இந்தீவ உதார அருமையான கோல் ஒன்றைப் போட்டு தனது அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார். தொடர்ந்து 84ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் பெனல்டி எல்லைக்குள் வைத்து ஓக்கே மிட்டோபோர் பந்தை கையால் தட்டியதால் சோண்டர்ஸ் கழகத்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அந்த பெனல்டியை ஸியார்ட் முபாஸ்ஸல் இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார். இதனை அடுத்து போட்டி வேற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. நியூ ஸ்டார் கழகத்தை வீழ்த்தியது ஜாவா லேன் கழகம் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் மிகவும் பலம்வாய்ந்த அணிகளுள் ஒன்றான நியூ ஸ்டார் கழகத்தை அதிரவைத்து கொம்பனித்தெரு ஜாவா லேன் கழகம் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டு அணிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சுப்பர் 8 போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது. போட்டியின் 29ஆவது நிமிடத்தில் ஒலுவாசேயுன் ஓலாவேல் மிகவும் இலாவகமாக கோல் போட்டு ஜாவா லேன் கழகத்தை முன்னிலையில் இட்டார். அந்த கோல்தான் பின்னர் வெற்றி கோலாக அமைந்தது. ஏனெனில் அதன் பின்னர் கோல் போடப்படவில்லை. https://www.virakesari.lk/article/238096
  21. மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது - நானுஓயாவில் சம்பவம் 07 Feb, 2026 | 01:30 PM நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா பொலிஸாரால் குறித்த ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியரை இன்று சனிக்கிழமை (07) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர் தாக்கியதில் மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டு தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார். எனினும் வெள்ளிக்கிழமை குறித்த மாணவி பாடசாலைக்கு செல்ல வில்லை எனவும் தொடர்ந்து தலை வலி ,தலைச்சுற்று குமட்டல் போன்றவை அதிகமாக உள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார். தொடர்ந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் பொலிஸ் நிலையத்தில் மாணவி மூலம் முறைப்பாட்டை பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . https://www.virakesari.lk/article/238074
  22. அரிதான ஜெல்லி மீன். லிப்ரில் வெடித்த பலூன்கள். பூனைக்குட்டி ஒளித்த இடம்! மன்னிப்புக் கேட்ட விதம்!
  23. யாழ். போதனாவில் "நாள் சத்திர சிகிச்சை நிலையம்" திறந்து வைப்பு 07 Feb, 2026 | 11:33 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் "யாழ்ப்பாணம் - நாள் சத்திர சிகிச்சை நிலையம்" வெள்ளிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும். இதனைத் தமிழில் "நாள் சத்திரசிகிச்சை" அல்லது "அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை" என்று அழைப்பார்கள். இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும். பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன. இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238059
  24. 35 லட்சம் Pages.. சங்கடத்தில் பிரபலங்கள் - தொடரும் Epstein files சர்ச்சை | Explained எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றால் என்ன? உலகின் பெரும் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்படுவது ஏன்? என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு. #EpsteinFiles #JeffreyEpstein இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.