Everything posted by ஏராளன்
-
ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்
ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று 13 JUN, 2025 | 01:05 PM ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளிக்கிழமை (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களின் (Tourism and Travel Industry Associations) பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார். அதன் பின்னர், ஜனாதிபதி ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் (DIHK) ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டிலும் கலந்து கொள்வார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனுக்கும் (Reem Alabali-Radovan) இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் பேர்லினில் உள்ள வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. பின்னர், ஜனாதிபதி ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/217351
-
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மகேந்திர சிங் தோனி - ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?
ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் ஹேடன், அம்லா, தோனி, ஸ்மித், வெட்டோரி, சானா மிர், சாரா டெய்லர் 11 JUN, 2025 | 05:50 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் (ICC Hall of Fame) இந்தியாவின் முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். தோனி உட்பட புதிதாக எழுவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள அபே ரோட் அரங்கில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்வின்போது இந்த ஏழு பேரும் இப் பட்டியலில் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். இந்த ஏழு பேரில் இருவர் தென் ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள். அத்துடன் இரண்டு முன்னாள் வீராங்கனைகளும் அடங்குகின்றனர். அவுஸ்திரேலியாவின் மெத்யூ ஹேடன், தென் ஆபிரிக்காவின் ஹஷிம் அம்லா, இந்தியாவின் மஹேந்த்ர சிங் தோனி, தென் ஆபிரிக்காவின் க்றேம் ஸ்மித், நியூஸிலாந்தின் டெனியல் வெட்டோரி, பாகிஸ்தானின் சானா மிர், இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகிய ஏழு பேரே புகழ்பூத்த வீரர்கள் பட்டியலுக்குள் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஏழு புதிய உறுப்பினர்களையும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா வைபவரீதியாக வரவேற்றார். புகழ்பூத்த வீரர்கள் மெத்யூ ஹேடன் (அவுஸ்ரேலியா) 103 டெஸட்கள், 8625 ஓட்டங்கள், சராசரி 50.73 161 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 6133 ஓட்டங்கள், சராசரி 43.80 9 சர்வதேச ரி20 போட்டிகள், 308 ஓட்டங்கள், சராசரி 51.33 1 photo mathew hayden சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களை சிதறடித்த அதிரடி ஆட்டக்காரரான மெத்யூ ஹேடன், ஐசிசியின் புகழ்பூத்த வீரர்களுக்கான பிரத்தியேக பட்டியலில் இணைகிறார். 30 டெஸ்ட் சதங்களைக் குவித்துள்ள மெத்யூ ஹேடன், ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் அதிசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராவார். 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட மெத்யூ ஹேடன், 2007 உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் அத்தியாத்தில் 3 சதங்களைக் குவித்ததுடன் அந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரரானார். 2003இலும் 2007இலும் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணிகளில் மெத்யூ ஹேடன் இடம்பெற்றார். தற்போது அவர் நேர்முக வர்ணனையாளராக செயற்படுகிறார். ஹஷிம் அம்லா (தென் ஆபிரிக்கா) 124 டெஸ்ட்கள், 9282 ஓட்டங்கள், சராசரி 46.64 181 ஒருநாள் போட்டிகள், 8113 ஓட்டங்கள், சராசரி 49.46 44 ரி20 போட்டிகள், 1277 ஓட்டங்கள், சராசரி 33.60 நிதானமும் பொறுமையும் கொண்ட ஒரு சிறந்த முன்வரிசை வீரர் ஹஷிம் அம்லா ஆவார். தென் ஆபிரிக்காவின் நிலையான மற்றும் உறுதியான வீரராகத் திகழ்ந்த அம்லா, ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைவதற்கு மிகவும் பொறுத்தமானவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆம்லாவின் ஒட்டுமொத்த சாதனை மிகச் சிறந்ததாக இருந்தது. மேலும் 50 ஓவர் வடிவத்தில் இன்னும் சிறப்பாக இருந்தது. எத்தகைய சூழ்நிலைகளிலும் ஓட்டங்களை மிக இலகுவாக குவித்து அனைவரையும் பிரமிக்கவைத்தவர். வலதுகை துடுப்பாட்ட வீரரான அம்லா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000, 5000, 7000 ஓட்டங்களை மிகவேகமாக பூர்த்திசெய்தவர் என்ற சாதனைக்கு உரித்தானவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 சதங்களையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 27 சதங்களையும் குவித்து தனது ஆற்றல் எத்தகையது என்பதை நிரூபித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 311 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் தென் ஆபிரிக்கா சார்பாக முச்சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 90 டெஸ்ட்கள், 4876 ஓட்டங்கள், சராசரி 38.08, 256 பிடிகள், 38 ஸ்டம்ப்கள் 350 ஒருநாள் போட்டிகள், 10775 ஓட்டங்கள், சராசரி 50.57, 321 பிடிகள், 123 ஸ்டம்ப்கள் 91 ரி20 போட்டிகள், 1617 ஓட்டங்கள், சராசரி 37.60, 57 பிடிகள், 54 ஸ்டம்ப்கள் எம்.எஸ். தோனி தனது நீண்டகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறப்பம்சங்களை உருவாக்கியுள்ளார். அத்துடன் ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டவர்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற வீரர் தோனி ஆவார். 2011இல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக வெற்றி ஓட்டங்களை அடித்தபோது, தனது முத்திரை ஹெலிகாப்டர் அடிகளில் ஒன்றை அவர் உருவாக்கியது அவரது வாழக்கையில் மறக்கமுடியாத தருணம் ஆகும். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த, துடிப்பான விக்கெட் காப்பாளாராக அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதேவேளை, கடைசி ஓவர்களில் வெற்றி இலக்கை விரட்டிக் கடக்கும் ஆற்றல் அவரிடம் குடிகொண்டிருந்ததால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பிரபல்யம் பெற்றார். இரசிகர்களாலும் பெரிதும் கவரப்பட்டார். 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி ரி20 உலகக் கிண்ணம், 2011 உலகக் கிண்ணம், 2013 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அற்புதமான அணித் தலைவர் தோனி ஆவார். இந்த மூன்று கிண்ணங்களை வென்றெடுத்த ஒரே ஒரு அணித் தலைவர் என்ற சாதனையை தோனி தன்னகத்தே இப்போதும் கொண்டுள்ளார். க்றேம் ஸ்மித் (தென் ஆபிரிக்கா) 117 டெஸ்ட் போட்டிகள், 9265 ஓட்டங்கள், சராசரி 48.25 197 ஒருநாள் போட்டிகள், 6989 ஓட்டங்கள், சராசரி 37.98, 18 விக்கெட்கள். 33 ரி20 போட்டிகள், 982 ஓட்டங்கள், சராசரி 31.67 மிகச் சிறந்த ஆரம்ப வீரராகவும் எவ்வித கேள்விக்கும் இடமின்றி ஒரு சிறந்த அணித் தலைவராகவும் அனைவராலும் போற்றப்பட்டவர் க்றேம் ஸ்மித். கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கடுமையான மற்றும் ஈடினையற்ற ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்மித் உயர்ந்து நின்றார். இளம் வயதில் தென் ஆபிரிக்காவின் அணித் தலைவராக வரவேண்டும் என்ற அவரது கனவு வீண்போகவில்லை. புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றதில் மிகுந்த பெருமை அடைவதாக ஸ்மித் கூறினார். டெனியல் வெட்டோரி (நியூஸிலாந்து) 113 டெஸ்ட் போட்டிகள், 4531 ஓட்டங்கள், சராசரி 30.00, 362 விக்கெட்கள் 295 ஒருநாள் போட்டிகள், 2253 ஓட்டங்கள், சராசரி 17.33, 305 விக்கெட்கள் 34 டி20 போட்டிகள் - 12.81 சராசரியுடன் 205 ரன்கள், 38 விக்கெட்கள் ஒரு சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மத்திய மற்றும் பின்வரிசையில் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் டெனியல் வெட்டோரி பிரகாசித்தார். ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்படதன் மூலம் பெருமை அடைவதாக அவர் கூறினார். வெட்டோரி ஒரு சிறந்த சகலதுறை வீரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ஓட்டங்களைக் குவித்து 300 விக்கெட்களை வீழ்த்திய மூன்று வீரர்களில் ஒருவராக வெட்டோரி திகழ்கிறார். அவர் 'பிளக் கேப்ஸ்' அணிக்கு ஒரு சிறந்த தலைவராகவும் இருந்தார். ஸ்டீவன் ப்ளெமிங் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் நியூஸிலாந்து அணியின் தலைவர் பதவியை வெட்டோரி பொறுப்பேற்றார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணியை வழிநடத்தி இருந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுநராக வெட்டோரி செயற்படுகிறார். சானா மிர் (பாகிஸ்தான்) 120 ஒருநாள் போட்டிகள், 1630 ஓட்டங்கள், சராசரி 17.91, 151 விக்கெட்கள் 106 ரி20 போட்டிகள், 802 ஓட்டங்கள், சராசரி 14.07, 89 விக்கெட்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகத் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட முதலாவது பாகிஸ்தான் வீராங்கைனை என்ற பெருமையை சானா மிர் பெற்றுக்கொண்டுள்ளார். இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ள மிர், மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேயும் தனது சிறந்த சமூகப் பணிக்காகப் பெயர் பெற்றவர். சாரா டெய்லர் (இங்கிலாந்து) 10 டெஸ்ட் போட்டிகள், 300 ஓட்டங்கள், சராசரி 18.75, 18 பிடிகள், 2 ஸ்டம்ப்கள், 126 ஒருநாள் போட்டிகள், 4056 ஓட்டங்கள், சராசரி 38.26, 87 பிடிகள், 51 ஸ்டம்ப்கள் 90 டி20 போட்டிகள், 2177 ஓட்டங்கள், சராசரி 29.02, 23 பிடிகள், 51 ஸ்டம்ப்கள் அண்மைய காலங்களில் மிகவும் திறமையான வீராங்கனைகளில் ஒருவரான சாரா டெய்லர், இங்கிலாந்தின் நட்சத்திர வீக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீராங்கனையுமாவார். 14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர்ந்து ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் சாரா டெய்லர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். மின்னல் வேக விக்கெட் காப்பாளர் என்ற பெயர் பெற்றவர். விக்கெட் காப்பாளராக அவர் மொத்தமாக 103 ஸ்டம்ப்களை செய்துள்ளார். அத்துடன் அவர் ஒரு திறமையான முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனையும் ஆவார். ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தையும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தையும் 2009இல் இங்கிலாந்து சுவீகரித்தபோது அவ் வெற்றிகளில் சாரா டெய்லர் பெரும் பங்காற்றியிருந்தார். எட்டு வருடங்கள் கழித்து 2017இல் நடைபெற்ற உலக்க கிண்ணத் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த சாரா டெய்லர், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 45 ஓட்டங்களைப் பெற்று தனது சொந்த நாட்டில் இங்கிலாந்து சம்பியனாவதை உறுதிசெய்திருந்தார். https://www.virakesari.lk/article/217200
-
“ரஜ உப்பு” ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
13 JUN, 2025 | 12:00 PM ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என அறியமுடிகிறது. https://www.virakesari.lk/article/217343
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்
புற்றுநோய் சிகிச்சையை குழப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை முன் போராட்டம் Published By: DIGITAL DESK 2 13 JUN, 2025 | 12:05 PM புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (13) யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இந்த வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரே ஒரு புற்றுநோய் வைத்தியசாலையாகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது வைத்தியசாலை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது. ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இதன்போது போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், வைத்தியர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217344
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Israel claims it killed Iran’s top three military commanders The Israeli army said it has killed Iran’s “three most senior military commanders” in its surprise overnight attacks. In a post on X, the Israeli military named the targets of its assassinations as Mohammad Bagheri, chief of staff of the armed forces; Hossein Salami, the commander of the Islamic Revolutionary Guard Corps; and Major-General Gholam Ali Rashid, commander of the Khatam al-Anbiya Central Headquarters. The army said that during the night, more than 200 Israeli air force fighter jets had attacked more than 100 targets across Iran Watchdog says no increase in radiation levels at Natanz nuclear site As we have been reporting, Israeli fighter jets reportedly bombed the Natanz nuclear site during its blitz in the early hours of Friday morning, striking locations across Iran. Citing information provided by Iranian authorities, the International Atomic Energy Agency (IAEA) has said there is currently no increase in radiation levels at Natanz, Iran’s main uranium enrichment site. The IAEA added that the Bushehr nuclear power plant was not targeted during the attack. aljazeera
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Iran says six nuclear scientists killed in strikes Iran’s Tasnim news agency is reporting that six Iranian nuclear scientists were killed in the Israeli strikes. In a post on X, the agency reported that six scientists – Abdulhamid Minouchehr, Ahmadreza Zolfaghari, Seyyed Amirhossein Faqhi, Motlabizadeh, Mohammad Mehdi Tehranchi and Fereydoun Abbasi – had been killed in the attacks. “The Zionist regime showed that … it has come to war against our scientists using the tool of terror,” read the post. aljazeera பதிலடியை ஆரம்பித்தது ஈரான் - இஸ்ரேலை நோக்கி பெருமளவு ஆளில்லா விமானங்கள் 13 JUN, 2025 | 11:42 AM இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் எவ்வி டெவ்ரின் தெரிவித்துள்ளார். ஈரான் சுமார் 100 ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளது அவற்றை செயல் இழக்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பொதுமக்களிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் ஈரான் பதில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என இஸ்ரேலின் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகவே ஒப்பரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் இஸ்ரேலிய மக்களே என்னால் வெற்றி குறித்து வாக்குறுதியளிக்க முடியாது, ஈரான் ஆட்சியாளர்கள் பதில் தாக்குதலை மேற்கொள்வார்கள். அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217337
-
இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் குறித்த ஓர் ஒப்பீடு - யாருடைய ராணுவம் பலம் மிக்கது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஆரிஃப் ஷமீம் பதவி,பிபிசி உருது மற்றும் பிபிசி பெர்ஷிய மொழிச் சேவை 18 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 2 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் இரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் ராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரானின் முக்கிய ராணுவ பலம், அதன் ஏவுகணைகள் இஸ்ரேல், இரான் - யார் கை ஓங்கியிருக்கிறது? பிபிசி இந்த கேள்வியைக் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தி எடைபோட்டது. இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன, அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies - IISS) இரு நாட்டு ராணுவத்தின் தாக்கும் திறனை ஒப்பிட்டு, பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் இணையத்தில் கிடைக்கும் முறைகளைப் பயன்படுத்தி சிறந்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் போன்ற பிற நிறுவனங்களும் இத்தகைய மதிப்பீடுகளைச் செய்கின்றன. ஆனால், பெரும்பாலும் புள்ளிவிவரங்களை வழங்காத இந்த நாடுகள் குறித்த ஆய்வில் துல்லியம் மாறுபடும். இருப்பினும், ஓஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Peace Research Institute Oslo - PRIO) சேர்ந்த நிக்கோலஸ் மார்ஷ், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ராணுவ வலிமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக ஐ.ஐ.எஸ்.எஸ் கருதப்படுகிறது, என்கிறார். இஸ்ரேல், தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் இரானை காட்டிலும் அதிகமாகச் செலவழிக்கிறது என்று ஐ.ஐ.எஸ்.எஸ் கூறுகிறது. கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இரானின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 740 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் 62,000 கோடி ரூபாய்). இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட் அதைவிட இருமடங்காக இருந்தது. அதாவது 1,900 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. (இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்). இஸ்ரேலின் பாதுகாப்புச் செலவு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இரானைவிட இரட்டிப்பாகும். தொழில்நுட்ப ரீதியில் முந்துவது யார்? ஐ.ஐ.எஸ்.எஸ் (IISS) புள்ளிவிவரங்கள், இஸ்ரேலிடம் 340 ராணுவ விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகக் காட்டுகின்றன. ஜெட் விமானங்களில் நீண்டதூர வேலைநிறுத்த வரம்பைக் கொண்ட F-15 விமானங்கள், ரேடாரை தவிர்க்கக்கூடிய உயர் தொழில்நுட்ப F-35 ‘ஸ்டெல்த்’ விமானங்கள், மற்றும் வேகமான தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இதில் அடங்கும். இரானிடம் சுமார் 320 போர்த் திறன் கொண்ட விமானங்கள் இருப்பதாக ஐ.ஐ.எஸ்.எஸ் மதிப்பிட்டுள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 1960களில் இருந்தே இருப்பவை. இதில் F4, F5 மற்றும் F14 ஆகியவை அடங்கும். (F14 விமானம், 1986 திரைப்படமான ‘டாப் கன்’ மூலம் பிரபலமானது). ஆனால் PRIO அமைப்பின் நிக்கோலஸ் மார்ஷ் கூறுகையில், இந்தப் பழைய விமானங்களில் உண்மையில் எத்தனை பறக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் பழுதுபார்க்கும் பாகங்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும், என்கிறார். அயர்ன் டோம் மற்றும் ஏரோ அமைப்புகள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேலின் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அயர்ன் டோம் மூலம் முறியடிக்கப்பட்டன இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக, அதன் ‘அயர்ன் டோம்’ மற்றும் ‘ஏரோ’ அமைப்புகள் இருக்கின்றன. ஏவுகணைப் பொறியாளர் உசி ரூபின், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்தில், இஸ்ரேல் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஆவார். இப்போது ஜெருசலேம் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராடஜி அண்ட் செக்யூரிட்டியின் மூத்த ஆராய்ச்சியாளரான அவர், கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தையும் ‘அயர்ன் டோம்’ மற்றும் இஸ்ரேலின் சர்வதேச கூட்டாளிகள் அழித்ததைக் கண்டபோது தாம் எவ்வளவு ‘பாதுகாப்பாக’ உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினார். "நான் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். இலக்குகளுக்கு எதிராக இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவொரு குறுகிய தூர ஏவுகணைப் பாதுகாப்பு. வேறு எந்த அமைப்பிலும் இது போன்ற எதுவும் இல்லை," என்றார். இஸ்ரேலில் இருந்து இரான் எவ்வளவு தொலைவில் உள்ளது? இஸ்ரேல், இரானில் இருந்து 2,100கி.மீ., தொலைவில் உள்ளது. ஏவுகணைகள்தான் இரானை தாக்குவதற்கான இஸ்ரேலின் முக்கிய வழி, என ‘டிஃபென்ஸ் ஐ’ இதழின் ஆசிரியர் டிம் ரிப்லி பிபிசியிடம் கூறினார். இரானின் ஏவுகணைத் திட்டம் மத்தியக் கிழக்கில் மிகப் பெரியதாகவும் மிகவும் மாறுபட்டதாகவும் கருதப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில், அமெரிக்க மத்திய கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி, இரானிடம் ‘3,000க்கும் அதிகமான’ பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறினார். சி.எஸ்.ஐ.எஸ் (CSIS) ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் படி, இஸ்ரேலும் பல நாடுகளுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்கிறது. இரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் கடந்த 1980 முதல் 1988 வரை அண்டை நாடான இராக் உடன் செய்த போரின் நேரத்தில் இருந்து, இரான் தனது ஏவுகணை அமைப்புகள் மற்றும் ட்ரோன்களில் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளது. இரான் குறுகிய மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் சௌதி அரேபியாவை குறிவைத்துத் தாக்கப்பட்ட ஏவுகணைகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அவை இரானில் தயாரிக்கப்பட்டவை என முடிவு செய்துள்ளனர். நீண்ட தூர தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிரியாவில் உள்ள இரானிய துணைத் தூதரகக் கட்டடம் ஏப்ரல் 1ஆம் தேதி வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது, அதில் மூத்த இரானிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர் ‘டிஃபென்ஸ் ஐ இதழின் டிம் ரிப்லி கூறுகையில், இஸ்ரேல் இரானுடன் தரைப் போரில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்கிறார். "இஸ்ரேலின் பெரிய நன்மை அதன் விமானப் படை, மற்றும் அதன் வழிகாட்டும் ஆயுதங்கள். எனவே இரானில் உள்ள முக்கிய இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறன் அதனிடம் உள்ளது," என்றார். அதிகாரிகளைக் கொல்லவும், எண்ணெய் நிறுவல்களைக் காற்றில் இருந்து அழிக்கவும் இஸ்ரேலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரிப்லி கூறுகிறார். "இதன் மையத்தில் இருப்பது ‘பனிஷ்’ தண்டனை. இஸ்ரேலிய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் அந்த வார்த்தையை எப்போதும் பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி, இது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி," என்கிறார். கடந்த காலத்தில், இரானின் தாக்குதலைத் தூண்டிய சிரியாவின் தலைநகரில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அழித்தது உட்பட, உயர்மட்ட இரானிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அதற்கோ, அல்லது இரானின் முக்கிய அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் மறுக்கவுமில்லை. பட மூலாதாரம்,IRGC HANDOUT / REUTERS படக்குறிப்பு,அபு மூசா தீவில் ஒரு பாதுகாப்புப் பயிற்சியின்போது, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கடற்படை வேகப் படகுகள் கடற்படையின் பலம் என்ன? ஐ.ஐ.எஸ்.எஸ் அறிக்கைகளின்படி, இரானின் கடற்படையில் சுமார் 220 கப்பல்கள் உள்ளன. இஸ்ரேலிடம் சுமார் 60 கப்பல்கள் உள்ளன. சைபர் தாக்குதல்கள் சைபர் தாக்குதல் நடந்தால், இரான் இழப்பதைவிட இஸ்ரேல் இழப்பது அதிகம். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு இரானின் பாதுகாப்பு அமைப்பைவிட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது. எனவே இஸ்ரேல் ராணுவத்தின் மீது மின்னணு தாக்குதல் நடத்தப்பட்டால் அதிக அளவில் சாதிக்க முடியும். இஸ்ரேலிய அரசாங்கத்தின் தேசிய சைபர் இயக்குநரகம், “இணைய தாக்குதல்களின் தீவிரம் முன்பைவிடக் குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், ஒவ்வொரு இஸ்ரேலிய துறையிலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும். போரின்போது இரான் மற்றும் லெபனானில் இயங்கும் ஹெஸ்பொலா அமைப்பு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்தது. கடந்த 2023ஆம் ஆண்டின் அக்டோபர் 7 தாக்குதல்களுக்கும் அந்த ஆண்டின் இறுதிக்கும் இடையே 3,380 சைபர் தாக்குதல்கள் நடந்ததாக அது தெரிவிக்கிறது. இரானின் குடிமைத் தற்காப்பு அமைப்பின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் கோலம்ரேசா ஜலாலி கூறுகையில், சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரான் கிட்டத்தட்ட 200 இணையத் தாக்குதல்களை முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், இரானின் எண்ணெய் அமைச்சர் ஜாவத் ஓவ்ஜி, ஒரு இணையத் தாக்குதல் நாடு தழுவிய அளவில் பெட்ரோல் நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரான் இஸ்ரேலின் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சாக்கடல் கரையில் கிடக்கிறது அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் இஸ்ரேல் அதன் சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபற்றி அந்நாடு தெளிவாகப் பேசுவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. இரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கருதப்படவில்லை. குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அது அணு ஆயுதங்கள் உருவாக்குவதற்குத் தனது அணுசக்தித் திட்டத்தைப் பயன்படுத்த முயல்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. நிலவியல் மற்றும் மக்கள்தொகை இரான் இஸ்ரேலைவிடப் பலமடங்கு பெரிய நாடு. அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 8.9 கோடி. இது இஸ்ரேலின் மக்கள்தொகையான 1 கோடியைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு. இரான், இஸ்ரேலைவிட ஆறு மடங்கு அதிகமான ராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. இரானிடம் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இஸ்ரேலிடம் 1.7 லட்சம் வீரர்கள் உள்ளனர் என்று ஐ.ஐ.எஸ்.எஸ். கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77l1rxmx2zo
-
கொவிட் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சுவாச நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
Published By: DIGITAL DESK 2 13 JUN, 2025 | 11:07 AM நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக தொற்றுநோயியலின் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண கருத்து தெரிவிக்கையில், “கொவிட்-19 இப்போது பல்வேறு சுவாச நோய்களில் ஒன்றாகவே கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின்படி, கொவிட் நோயாளிகள் தொடர்பான தனித் தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. எனினும், நிலைமையின் மீது எங்களது தீவிர கண்காணிப்பு தொடர்ந்தும் காணப்படுகிறது” என்றார். மேலும், இந்நேரத்தில் இன்புளுவென்சா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவல் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுவாச நோய்கள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் மீள்பார்வை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய சுவாச நோய்கள் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், மக்கள் சுவாச நிலையை சீராக வைத்திருக்க ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, இருமல், தும்மலின்போது தொற்றுக்களைத் தடுக்கும் முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும் தருணங்களில், உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும். இந்த நோய்கள் அதிகமாக பாதிக்கக்கூடியவர்களான வயதானோர், குழந்தைகள் மற்றும் நீண்டநாள் நோயாளிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அத்துடன், மருத்துவ ஆலோசனையை தவிர்க்காமல் பெறுவது, நோய் பரவலையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்கும் முக்கியமான வழி என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். https://www.virakesari.lk/article/217335
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 2 அணு விஞ்ஞானிகள், முக்கிய தலைவர் பலி - அமெரிக்கா என்ன செய்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES 13 ஜூன் 2025, 02:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 2 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்று அதன் வெளியுறவு செயலர் ரூபியோ தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த தாக்குதலை அமெரிக்காவின் ஆதரவுடன்தான் இஸ்ரேல் நடத்தியிருப்பதாக இரான் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன், இஸ்ரேல் தங்களது பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் இரான் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், டெஹ்ரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவைப்பட்டால் தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுஎச்சரித்துள்ளார். இரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன சொல்கிறார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தகவல் டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, நகரத்தின் மீது வான் பாதுகாப்பு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது. இஸ்ரேலிய தாக்குதலில் மூத்த அணு விஞ்ஞானிகள் 2 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறுகிறது. அதன்படி, ஒருவர் இரான் அணுசக்தி அமைப்பின் (AEOI) முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அபாசி ஆவர். இரானின் அணுசக்தி நிலையங்களுக்கு அந்த அமைப்பே பொறுப்பு. 2010-ஆம் ஆண்டில் டெஹ்ரான் தெருவில் நடந்த ஒரு படுகொலை முயற்சியில் அபாசி உயிர் தப்பினார். மற்றொருவர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தின் தலைவர் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES புரட்சிகர காவல்படை தலைவர் இறந்தார் - இரானிய அரசு ஊடகங்கள் இரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், அதன் தாக்குதல்கள் "இரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிற இராணுவ இலக்குகளை" குறிவைத்ததாகக் கூறினார். புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது தாக்குதல் - இரானிய அரசு ஊடகம் டெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் இஸ்ரேலிய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரான் ஆயுதப்படைகளின் ஒரு கிளை மட்டுமின்றி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாகும். மேலும், டெஹ்ரானுக்கு அருகில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெஹ்ரானின் வடகிழக்கில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு நடத்தும் நூர் நியூஸை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் தாக்கியதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெஹ்ரானில் உள்ள மக்களிடமிருந்தும் வெடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரானிய அரசு ஊடகங்களின்படி, டெஹ்ரானின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. டெஹ்ரானின் இமாம் காமனெயி சர்வதேச விமான நிலையம் இரானிய தலைநகரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS "தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரானின் ஆயுதத் திட்டத்தின் 'இதயத்தை' குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார். இரான் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து 225 கி.மீ தெற்கே உள்ள நடான்ஸ் என்ற நகரில் உள்ள இரானின் முக்கிய செறிவூட்டல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக நெதன்யாகு கூறினார். ஏப்ரல் 2021-இல், அதே வசதியின் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது. "அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள" இரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் "எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்று எச்சரித்தார். இஸ்ரேல், அமெரிக்காவுக்கு இரான் எச்சரிக்கை இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த தாக்குதல்களுக்காக 'பெரும் விலை' கொடுக்கும் என்று இரான் எச்சரித்துள்ளது. இரான் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களுக்கு 'பெரும் விலை' கொடுக்கும் என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். "இந்த சியோனிச தாக்குதலுக்கு ஆயுதப்படைகள் நிச்சயமாக பதிலடி கொடுக்கும்" என்று இரானிய செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷேகார்ச்சி கூறினார். இந்த தாக்குதல்கள் இஸ்ரேலின் "மோசமான தன்மையை" வெளிப்படுத்துகின்றன என்று இரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி கூறியுள்ளார். இந்த தாக்குதலின் மூலம் இஸ்ரேல் "தனக்கென ஒரு கசப்பான விதியைத் தேடிக் கொண்டுள்ளது. அதை இஸ்ரேல் நிச்சயமாகப் பெறும்." என்று அவர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, இரான் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் மீண்டும் வெடிச்சத்தங்கள் கேட்டது என்று மக்கள் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இரான் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் இரானில் தாக்குதல்களை நடத்தியதாக இரான் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய தாக்குதல்களை கண்டிக்க சர்வதேச சமூகத்தை ஈரான் அழைக்கிறது இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டிக்க உலக நாடுகளுக்கு இரான் வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த தாக்குதல் "உலகளாவிய பாதுகாப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது" என்று இரான் வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது. இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளர் என்று அது குறிப்பிடும் அமெரிக்கா, இந்த தாக்குதலின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அது கூறுகிறது. ஆனால், இந்த தாக்குதலில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா முன்பு கூறியது. பட மூலாதாரம்,REUTERS தாக்குதல்கள் குறித்து தனக்கு முன்பே தெரியும் - டிரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் பற்றி ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். இஸ்ரேலின் திட்டங்கள் குறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும், ஆனால் அமெரிக்க இராணுவம் இந்த நடவடிக்கையில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்று அவர் மீண்டும் நம்பிக்கை தெரிவித்தார். "இரான் அணு குண்டு வைத்திருக்க முடியாது, நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவோம் என்று நம்புகிறோம். பார்க்கலாம்," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார். இஸ்ரேல் தாக்குதலில் பல இரானியத் தலைவர்கள் இறந்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்பு தனது நிர்வாகம் மத்திய கிழக்கில் உள்ள ஒரு முக்கிய கூட்டாளியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக டிரம்ப் கூறினார். ஆனால், அது எந்த நாடு என்று அவர் கூறவில்லை. பட மூலாதாரம்,X@WAHID அமெரிக்கா கூறுவது என்ன? இரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா பங்கெடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்றிரவு, இஸ்ரேல் இரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. இரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முதன்மையான முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும். இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது. அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். நான் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக் கூடாது." என்று குறிப்பிட்டுள்ளார். "இஸ்ரேல் தாக்க தயாராக இருந்தது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியும்" இரானில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா சில அமெரிக்கர்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதற்கும், இராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததற்கும் இதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd62d6nwqe2o
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
Sollathigaram | விபத்துக்கு ஒரே காரணம் இதுதான்! மாடியில் எடுத்த இந்த வீடியோவில்.. வினோத்குரூப்
-
ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுடன் அல்ஜீரியாவிலிருந்து காசா நோக்கி புறப்பட்டது வாகனப்பேரணி
Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 12:41 PM சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் காசாவிற்கு கடல்வழியாக செல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இஸ்ரேல் முறியடித்துள்ள அதேவேளை காசா முற்றுகையை உடைக்கும் நோக்கில் சுமார் 1500 பேர் கொண்ட வாகனப்பேரணியொன்று அல்ஜீரியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. அல்ஜீரியா துனிசியாவை சேர்ந்த 1500க்கும் அதிகமான பாலஸ்தீன ஆதரவாளர்கள் வாகனங்களுடன் லிபியா சென்றடைந்துள்ளனர். அல்ஜீரியாவிலிருந்து புறப்பட்ட இவர்கள் துனிசியாவிற்கு சென்ற பின்னர் அங்கிருந்து லிபியாவை சென்றடைந்துள்ளனர். இஸ்ரேலின் மனிதாபிமான முற்றுகைக்கு சவால் விடுக்கும் நோக்கில் காசவை சென்றடைவதே இவர்களது திட்டம். லிபியாவின் ஜவியா நகரை சென்றடைந்துள்ள இவர்கள் எகிப்து ஊடாக ரவா எல்லையை சென்றடைய திட்டமிட்டுள்ளனர். இவர்கள் கார்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். லிபியாவின் திரிபோலி,மிஸ்ரட்டா, சேர்ட்டே,பெங்காசி ஊடாக இவர்கள் எகிப்தின் எல்லையான சலூம் சென்றடையவுள்ளனர். பின்னர் அவர்கள் கெய்ரோ ஊடாக ரபா எல்லைக்கு செல்லவுள்ளனர். அல்ஜீரியா துனிசியா அதிகாரிகள் தங்களிற்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக அல்ஜீரியாவை சேர்ந்த ஜமீலா ஷரிட்டா என்பவர் தெரிவித்துள்ளார். எல்லைகளை திறந்து காசா பள்ளத்தாக்கிற்குள் உணவுகள் செல்லும் நிலையை உருவாக்குவதே தங்களின் பயணத்தின் நோக்கம்என மற்றுமொருவர் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் காசாவில் கடல்தரை வான்வழியாக ஆர்வலர்கள் வந்து சேருவார்கள் என இந்த வாகனத்தொடரணியை ஏற்பாடு செய்துள்ள டெர்க்கியா சயிபி தெரிவித்துள்ளார். எங்களிற்கு எதிரான வன்முறைகளால் நாங்கள் அச்சமடையப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217253
-
பாலஸ்தீன தேசம் குறித்த ஐநா மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் - நாங்கள் பதில்நடவடிக்கை எடுப்போம் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 11:07 AM பாலஸ்தீனம் குறித்த ஐக்கியநாடுகளின் சர்வதேசமாநாட்டில் கலந்துகொண்டால் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்கா அதன் சகாக்களை எச்சரித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்திற்கு இரு தேசதீர்வு குறித்து ஆராய்வதற்கான ஐக்கியநாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் மாநாட்டை தொடர்ந்து இஸ்ரேலிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளை அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை மற்றும் நலன்களிற்கு எதிராக செயற்படும் நாடுகளாக கருதப்போவதாக இராஜதந்திர அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்த நாடுகள் இராஜதந்திர விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் உயிர்காக்கும் முயற்சிகளிற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் கருதும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலை தண்டிக்கும் விதத்திலான தடைகள் அரசியல் நடவடிக்கைகள் போன்றவைகளிற்கு சர்வதேச மாநாட்டில் ஆதரவு வழங்கப்படலாம் இதனை எதிர்க்கின்றோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளை பாலஸ்தீன தேசத்திற்கான திட்டத்தினை முன்வைக்கும் மாநாட்டினை பிரான்சும் சவுதிஅரேபியாவும் அடுத்தவாரம் நியுயோர்க்கில் நடத்துகின்றன. https://www.virakesari.lk/article/217236
-
பலாலி பொலிஸார் நீதிமன்றத்தைக் தவறாக வழிநடத்துகிறார்கள் என சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
Published By: DIGITAL DESK 2 12 JUN, 2025 | 09:16 PM யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களில் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போராட்டம் நடத்தியவர் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, நா.காண்டீபன் ஆகியோர் சமர்ப்பனங்களை முன்வைத்தனர். குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நடைபெறவிருந்த வேளை சிலரின் பெயர் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவுகளை பெற்று இருந்தன. நீதிமன்றினால் பெறப்பட்ட தடையுத்தரவை , சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காது, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , அங்கு வந்த பொலிஸார் அவர்களின் பெயர் விபரங்களை வாசித்து சென்று இருந்தனர். அதனூடாக சட்டத்தின் ஏற்பாடுகளை திருப்தி படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு கூற முடியாது என மன்றில் தெரிவித்திருந்தோம். அதேவேளை, தையிட்டி விகாரைக்கு பொறுப்பான "அமரபுர நிக்காய பீடம்" விகாரையில் பொசன் நிகழ்வுகளை நடாத்துவது இல்லை என கடந்த மே மாதம் 29ஆம் திகதியே பதில் பொலிஸ் மா அதிபர் , வடமாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் பூரணை தின வழிபாட்டிற்கு வருகை தந்த பௌத்தர்களை போராட்டக்காரர்கள் இடை மறித்ததாகவும் , தமிழர்கள் விகாரையை இடித்து அழிக்க போகின்றார்கள் , பௌத்தர்கள் ஒன்றிணைந்து தையிட்டிக்கு செல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கடும் போக்கு சிங்கள இனவாதிகள் பொய்யான தகவல்களை பரப்பி , இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்று விக்க முயன்றனர். அவர்கள் தொடர்பில் பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற விடயத்தை மன்றில் சுட்டிக்காட்டி , அதற்கான ஆதாரங்களையும் மன்றில் சமர்ப்பித்துள்ளோம். பலாலி பொலிஸ் அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்கி மன்றை தவறாக வழி நடத்துகிறார். என்ற விடயத்தையும் மன்றில் சுட்டிக்காட்டினோம். அதனை அடுத்து குறித்த வழக்கினை நீதவான் கிடப்பில் போட்டுள்ளார் என தெரிவித்தனர். அதேவேளை தையிட்டி விகாரையை தமிழர்கள் இடித்து அழிக்க போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட பொதுபலசேன ராவண பலய, சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தையிட்டி விகாரைக்கு வந்திருந்தார்கள் என்றும், அவர்களுக்கு பலாலி பொலிஸார் பாதுகாப்பு வழங்கி இருந்தார்கள் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217283
-
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு ; விகாரையை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - இராமலிங்கம் சந்திரசேகர்
12 JUN, 2025 | 03:20 PM தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர் பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார். அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்த காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி, நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/217268
-
வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்!
இலங்கையில் வட மாகாணத்திலேயே வீட்டுத் திட்டத்துக்கு அதிக நிதி வழங்கப்படுகிறது - சோதிநாதன் Published By: DIGITAL DESK 2 12 JUN, 2025 | 03:18 PM இலங்கையிலேயே வட மாகாணத்தில்தான், வீட்டுத் திட்டத்துக்காக அதிக தொகையான 18 இலட்ச ரூபாய் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாண அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டுத் திட்டத்துக்குத் தெரிவான பயனாளிகளுக்கு முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இம்முறை மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளமையால் வீட்டுத் திருத்தத்துக்காக 238 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா வழங்கப்படுகிறது. வடக்கில் உள்ள உங்களுக்கு தலா 18 லட்சம் ரூபா வழங்கப்படுகிறது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற எந்தவொரு வீட்டுத் திட்டத்திலும் இந்தளவு நிதி வழங்கப்படுவதில்லை. நாம் முதல் முறையாக அதிகளவு நிதியை வீட்டுத் திட்டத்துக்கு வழங்கியுள்ளோம். இதை நடைமுறைப்படுத்த உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். அதைப்போல வீடுகளை கட்டி முடித்த பின்னர் நீங்கள் அதில் வாழவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217266
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஜூன் 2025, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. மேகானி நகரில் ஒரு மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கிய இந்த விமானம் விபத்துக்கு உள்ளானதற்கு "மனிதப் பிழை" காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற மீட்புப் படையினர் உள்ளனர். மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்" என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார். METAR என்றழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது. விமானக் கண்காணிப்பு தளமான ஃப்ளைட் ரேடார் 24-இன் (FlightRadar24) கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமான கண்காணிப்பு தரவின்படி, விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்ததுதான் கடைசி சிக்னல். அந்த உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி 'மேடே அழைப்பு' (உயிருக்கு ஆபத்தான அவசர நிலையைக் குறிக்கும் சொல்) விடுத்ததாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்தார். அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. விமானம் மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. அது மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியதாக போலீசார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தனர். விமான விபத்திற்குக் காரணம் மனிதப் பிழையா? விமானம் புறப்படும்போது அதன் இறக்கை மடிப்புகள் (Airplane wing flaps) ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம் என்று விமான நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பிபிசி சரிபார்த்த ஒரு காணொளியில் விமானம் கீழே இறங்குவதையும், அது தரையில் மோதும்போது ஒரு பெரிய வெடிப்பு ஏற்படுவதையும் காண முடிகிறது. "இதைப் பார்க்கும்போது, இறங்கமைப்பு (Undercarriage) இன்னும் கீழே உள்ளது. ஆனால் மடிப்புகள் பின்வாங்கிய நிலையில் உள்ளன என்பது தெரிகிறது" என்று விமான ஆய்வாளர் ஜெஃப்ரி தாமஸ் கூறுகிறார். இதன் பொருள் மடிப்புகள் இறக்கையுடன் ஒன்றிப்போன நிலையில் இருந்துள்ளன, விமானம் புறப்பட்ட உடனேயே இவ்வாறு இருப்பது மிகவும் அசாதாரணமானது என்று அவர் கூறுகிறார். "இறங்கமைப்பு பொதுவாக 10-15 விநாடிகளுக்குள் பின்வாங்கப்படும். பின்னர் மடிப்புகள் 10-15 நிமிடங்களுக்குள் பின்வாங்கப்படும்," என்று விளக்குகிறார் அவர். மற்றொரு நிபுணரான டெர்ரி டோசர், "ஆனால், காணொளியில் பார்த்து 'மடிப்புகள் நீட்டிக்கப்பட்டிருப்பது போலத் தெரியவில்லை' என்று உறுதியாகச் சொல்வது மிகவும் கடினம். ஒருவேளை அவ்வாறு இருந்திருந்தால், ஒரு விமானம் அதன் புறப்பாட்டுச் செயல்முறையை முழுமையாக முடிக்கவில்லை என்பதே அதன் அர்த்தம்" என்கிறார். "இறக்கையின் மடிப்புகள் சரியான நிலையில் இல்லையென்றால், அதற்கு மனிதப் பிழை ஒரு சாத்தியமான காரணமாக இருக்கும். ஆனால் அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு காணொளி தெளிவாகவும் தரமாகவும் இல்லை" என்று பக்கிங்ஹாம்ஷையர் நியூ பல்கலைக் கழகத்தின் முன்னாள் விமானியும் மூத்த விரிவுரையாளருமான மார்கோ சான் கூறுகிறார். போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில்தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்தது. அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் விமானங்களை இயக்கியுள்ளதாக நிறுவனம் கூறியது. இந்த விபத்து, அதன் 737 திட்டங்களுடன், ஆபத்தான விபத்துகள் உள்படப் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்கப் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது. தனது பணியில் ஓர் ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெக்கிற்கு இது மற்றொரு சோதனையாக இருக்கும். அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான இந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அவர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார். ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yqnwwjj3zo
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
நாட்டில் 5.17 மில்லியன் குரங்குகள் : விலங்குகளின் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின! 12 JUN, 2025 | 01:51 PM நாட்டில் உள்ள விலங்குகளின் கணக்கெடுப்பு முடிவுகளை விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது. விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி நாட்டில், 5.17 மில்லியன் குரங்குகள் 1.74 மில்லியன் மந்தி குரங்குகள் 2.66 மில்லியன் மரஅணில்கள் 4.24 மில்லியன் மயில்கள் உள்ளன. விலங்குகள் கணக்கெடுப்புக்காக 2.7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வனவிலங்குகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பயிர்ச்சேதங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் விலங்குகள் கணக்கெடுப்பு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு அறிக்கையின் ஊடாக, வனவிலங்குகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பயிர்ச்சேதங்களை தடுப்பதற்கான உத்திகளை கண்டறிய முடியும். இதனால் எதிர்காலத்தில் பாதுகாப்பான விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள முடியும். https://www.virakesari.lk/article/217259
-
வெருகல் படுகொலை 38வது நினைவேந்தல் நிகழ்வு இன்று!
திருகோணமலை வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு 12 JUN, 2025 | 01:35 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூறப்பட்டது. வெருகல் -ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை ஏற்றிவந்த அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 வருடங்களாகியும் நீதியும், நிவாரணங்களும் கிடைக்காத நிலையில் குறித்த நினைவேந்தலை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நினைவேந்தல் நிகழ்வில் முதலில் ஆத்ம சாந்தி வேண்டிய பூஜைகள் இடம்பெற்று பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி ஆத்மா சாந்தி வேண்டி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் இலங்கை தமிழரசு கட்சியின் தவிசாளர் , உதவி தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் இவ் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் இந்த வெருகல் படுகொலையின் 39வது நினைவுதினம் இன்றாகும். (12.06.2025) அன்று நாட்டில் நிலவிய யுத்தசூழல் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்கம் சேருவில பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வழங்கி வந்தது. இந்நிலையில் 1986ம் ஆண்டு யூன் மாதம் 12ம் திகதி அகதிகளுக்கான நிவாரணங்களை வண்டில்களை கொண்டுவந்து ஏற்றிச் செல்லுமாறு அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வர்ணசூரிய அவர்களினால் மக்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முகாம்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21பேர் மாட்டு வண்டில்களுடன் சேருவில நோக்கிச் சென்றார்கள். அங்கிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி வரும்போது மகிந்தபுரவில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு முழங்காலில் இருக்க வைத்து பின்னர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லீம் சகோதரர்களாவர். அத்துடன் 16.06.1987 ஆம் ஆண்டு வெளியான வீரகேசரி பத்திரிகையில் “ஈச்சிலம்பத்தை அகதிகளில் 21பேரை காணவில்லை” என தலைப்பிட்டு குறித்த படுகொலை தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் பெயர் விபரங்களுடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும் இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் 1.அண்ணாமலை தங்கராஜா – கிராம சேவகர் (தம்பலகாமம்) - ஈச்சிலம்பற்று முகாம் 2.அலிபுகான் - கிராம சேவகர் (தோப்பூர்) - பூமரத்தடிச்சேனை முகாம் 3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் - (பாலத்தோப்பூர்) - மீள்குடியேற்ற உத்தியோகத்தர் - பூநகர் முகாம் 4.கோணாமலை வேலாயுதம் - பூமரத்தடிச்சேனை 5.கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி - பூமரத்தடிச்சேனை 6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை 7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர் 8.கனகசபை கனகசுந்தரம் - பூநகர் 9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி - பூநகர் 10.மூத்ததம்பி காசிப்பிள்ளை - பூநகர் 11.கதிர்காமத்தம்பி நாகராசா - பூநகர் 12.வீரபத்திரன் நடேசபிள்ளை - பூநகர் 13.முத்தையா காளிராசா - பூநகர் 14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை - பூநகர் 15.வைரமுத்து சித்திரவேல் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 16.சித்திரவேல் சிவலிங்கம் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 17.வீரபத்திரன் சோமசுந்தரம் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம் 20.தாமோதரப்பிள்ளை தங்கராசா - ஈச்சிலம்பற்று 21.புண்ணியம் மதிவதனன் - பூமரத்தடிச்சேனை அத்துடன் வீரபத்திரன் சோமசுந்தரன், வேலுப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்கள் https://www.virakesari.lk/article/217261
-
முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்
முள்ளியவளையில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட பௌத்த தோரணம் : இனம்தெரியாதோரால் அகற்றல்! Published By: DIGITAL DESK 2 12 JUN, 2025 | 01:41 PM முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் அண்மையில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த தோரணம் இனம்தெரியாதோரால் அகற்றப்பட்ட சம்பவம் புதன்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம், முள்ளியவளை கல்லூரிக்கு அருகிலுள்ள தனியார் நிலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக அங்கு பௌத்த சமயத்தை பிரதிபலிக்கும் வகையில் வெசாக் தோரண அமைப்பொன்று உருவாக்கப்பட்டிருந்தது. இதில், “மகிந்த தேரரின் இலங்கை வருகை மற்றும் பௌத்த மத ஸ்தாபித்தலும்” எனும் வாசகத்துடன் பதாதையொன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு இனம்தெரியாத நபர்கள் அந்த பதாதையை கிழித்தெறிந்துள்ளனர். மேலும், பௌத்த தோரணம் அகற்றப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217257
-
இலங்கையின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்பதற்கான வாய்ப்பு - கீதா கோபிநாத் நம்பிக்கை
Published By: VISHNU 12 JUN, 2025 | 06:12 PM (நா.தனுஜா) இலங்கையில் நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், இது இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டுக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை; படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கௌரவ அதிதியாகப் பங்கேற்கவுள்ளார். நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன இணைந்து நடாத்தவுள்ள இம்மாநாடானது பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், கடன்மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தல், ஏனைய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை ஆராய்தல் என்பவற்றைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருக்கும் கீதா கோபிநாத், இம்மாநாடு இலங்கையின் அனுபவங்களில் மற்றும் எதிர்வரும் சவால்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217294
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
ஆமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட முக்கியத் தகவல்கள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக ஏர் இந்தியா விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளது. "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட AI171 விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு விபத்துக்குள்ளானது என்பதை உறுதிப்படுத்துகிறோம். இன்று போயிங் 787-8 ரக விமானம் மதியம் 1:38 மணிக்கு லண்டனை நோக்கிப் புறப்பட்டது. பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழுவினர் உள்பட அதில் 242 பேர் இருந்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவை சேர்ந்தவர், 7 பேர் போர்ச்சுகீசியர்கள். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா பயணிகள் தகவல் ஹாட்லைன் ஒன்றை அமைத்துள்ளது. பயணிகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள 1800 5691 444 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். ஏர் இந்தியா விசாரணை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ld37v9ndro
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இவங்கள் ஐபிஎல் விளையாடி டெஸ்ட் போட்டியை மறந்திட்டாங்களோ?! அல்லது லோட்ர்ஸ் மைதான ஆடுகளம் தயாரிப்பவர் வேலையை காட்டிட்டாரோ?!
-
மழைத்துளியாய் பிறந்து காவிரியில் கழிவு நீராக கலக்கும் நொய்யல் நதியின் அவல நிலை
படக்குறிப்பு, மசவரம்பு ஓடை கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி. இந்த பயண தூரத்தில் வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும், வேளாண் நிலங்களுக்கு உயிர்நாடியாகவும், மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விலங்கும் நொய்யல் நதி சந்திக்கும் சவால்கள் ஏராளம். நொய்யலுக்கு ஆதாரமாக விளங்கும் நீர் வீழ்ச்சிகளில் முதன்மையானது கோவைக் குற்றாலம் நீர் வீழ்ச்சி. இது கோவை மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. படக்குறிப்பு,நண்டங்கரை ஓடை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து புறப்பட்டு வரும் பல இயற்கை நீரோடைகள் இந்நதியின் முக்கியமான நீர் ஆதாரங்களாக உள்ளது. அத்தகைய ஓர் ஓடை தான் மசவரம்பு ஓடை. நொய்யலின் மற்றுமொரு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது நண்டங்கரை ஓடை. அதன் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதுவே நொய்யலின் ஆற்றில் அமைந்துள்ள முதல் நீர்த்தேக்கமாகும். காட்டுப்பகுதியிலுள்ள யானை, புலி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட பல்வேறு காட்டுயிர்களுக்கு தாகம் தணிக்கும் நீர்நிலையாகவும் உள்ளது. இவ்வாறு நீர்வீழ்ச்சிகளாக, காட்டாறாக, சிற்றோடைகளாக பயணித்து, பரிணமித்து வரும் நொய்யல் நதியாக உருவெடுக்கும் இடம் இந்த கூடுதுறைதான். (நொய்யலுக்கு காஞ்சிமா நதி, பெரியாறு என்றும் பெயர்கள் இருப்பதாகச் சொல்கிறது பேரூர் புராணம்) படக்குறிப்பு,முன்னோர்களுக்கு மக்கள் பேரூர் படித்துறையில் தர்ப்பணம் நொய்யல் ஆற்றில் மிதமிஞ்சிய உலோக கழிவுகள்: நோய்கள் பரவும் அபாயம் - ஆய்வில் தகவல் கோயம்புத்தூர்: கொல்லப்படுகிறதா நொய்யல் ஆறு? கொத்து கொத்தாக சாகும் மீன்கள் - விரிவான தகவல் கோவையை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்: பரளிக்காடு படகு சவாரி முதல் கேத்தரின் நீர்வீழ்ச்சி வரை பெரு மழை காலங்களின்போது நொய்யலில் வழிந்தோடும் நீர் வெள்ளம் போல காட்சியளிக்கும். நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள அடுத்த நீர்த்தேக்கமான சித்திரைச்சாவடி அணைக்கட்டைத் தாண்டிப் பெருவெள்ளம் நொய்யல் நதி பாய்ந்தோடும். படக்குறிப்பு,கோவைக் குற்றாலம் நீர்வீழ்ச்சி வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய இடங்களில் பயணிக்கும் வரை தெளிந்த நீரோடையாக உள்ள நொய்யல் நதி கோவையின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தபின்பு தான் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் சுமந்து செல்லும் வடிகாலாக மாறுகிறது. இங்கிருந்து சாய ஆலைகள், தங்க நகைப்பட்டறைகள் மற்றும் வீடுகளிலிருந்து வரும் கழிவுகள் அனைத்தும் கலக்கத்துவங்குகின்றன. படக்குறிப்பு,சித்திரைச்சாவடி அணைக்கட்டு நதி என்பது மக்களின் வாழ்வில் பல வழிகளில் பின்னிப்பிணைந்திருக்கிறது. சாக்கடையும் குப்பையும் கலந்து கால்வாயாக ஓடிவரும் நொய்யல் ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு மக்கள் பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. கோவை நகருக்குள் அமைந்துள்ள நொய்யல் வழித்தடம் புதர் மண்டி, கழிவுநீர் கலந்து, ஆக்கிரமிப்புக் கட்டடங்களால் குறுத்து, கருத்து சாக்கடை நதியாக உருமாறுகிறது. சாய ஆலை உள்ளிட்ட நிறுவனங்களின் ரசாயனக் கழிவுகளால் பெரும்பாலும் நொய்யல் ஆற்றில்தான் கலக்கின்றன. இதனால் ஆற்றின்போக்கில் அவ்வப்போது நுரை ஏற்பட்டு காணப்படும். படக்குறிப்பு,ஆற்றின்போக்கில் அவ்வப்போது நுரை ஏற்பட்டு காணப்படும் கோவை நகரில் நொய்யல் பாயும் முக்கியக் குளமான குமாரசாமி குளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்தன. நொய்யல் நதியை மீட்பதற்காக கடந்த 2003 ஆம் ஆண்டில் 'சிறுதுளி' என்கிற அமைப்பு துவக்கப்பட்டது. நொய்யலில் ஏற்பட்டு வரும் மாசுபாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு, கோவையிலுள்ள ஏராளமான அமைப்புகள், பொது மக்கள் இணைந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி ஒன்றும் நடந்தது. படக்குறிப்பு,கோவை நகருக்குள் அமைந்துள்ள நொய்யல் வழித்தடம், புதர் மண்டி, கழிவுநீர் கலந்து, கருத்து சாக்கடை நதியாக உருமாறுகிறது கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, நொய்யல் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு காரணமாக, கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில், கோவை நகரிலுள்ள நொய்யல் குளங்களில் வாலாங்குளம், குமாரசாமி குளம் உள்ளிட்ட பல குளங்களில் இருந்த பல ஆயிரம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அங்கு வாழ்ந்தோர்க்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் மாற்று வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. தமிழக அரசு மற்றும் சிறுதுளி இணைந்து மேற்கொண்ட முயற்சியால், கோவை நகரிலுள்ள அனைத்து நொய்யல் குளங்களும் துார் வாரப்பட்டன. பல வாரங்களாக ஞாயிறுதோறும் நடந்த இந்தப் பணியில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும், தொழில் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மாநகர காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். பட மூலாதாரம்,SIRUTHULI படக்குறிப்பு,முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் பார்வையிட்டிருந்தார் ஊர் கூடி துார் வாரிய குளங்களை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் பார்வையிட்டிருந்தார். அப்போது ஊரணியைக் காக்க ஓரணியில் மக்கள் திரள வேண்டுமென்று என்றும் கூறியிருந்தார் கலாம். நொய்யல் வழித்தடங்கள் மீட்கப்பட்டு, குளங்கள் துார் வாரப்பட்டதால் நொய்யல் ஆற்றில் மழைக்காலங்களில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து குளங்களை நிரப்பியது. இதனால் 1990 களில் கோவை நகரில் அதல பாதாளத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் மேலே உயர்ந்தது. படக்குறிப்பு,அல்லி பூத்திருக்கும் கோளரம்பதி குளம் ஆகியவையே சாட்சி ஆனால் நொய்யல் கோவை நகருக்குள் பாய்வதற்கு முன்பாகத்தான் அது பயன்பாட்டுக்கும் பாசனத்துக்கும் உரிய தண்ணீராக இருக்கிறது என்பதற்கு கோவை நகருக்கு வெளியே அமைந்துள்ள வேடபட்டி புதுக்குளம் மற்றும் அல்லி பூத்திருக்கும் கோளரம்பதி குளம் ஆகியவையே சாட்சி. நகருக்கு வெளியிலுள்ள குளங்களில் செந்நீராக வேளாண் நிலத்தில் பாய்ந்து, அல்லியை பூக்க வைக்கும் நொய்யல் ஆற்றின் நீர்தான், கோவை நகருக்குள் முதலில் அமைந்துள்ள கிருஷ்ணாம்பதி மற்றும் குமாரசாமி குளங்களில் கருப்பு நீராக கண்களை அச்சுறுத்துகிறது. துர்நாற்றத்தால் மக்களைத் துரத்தியடிக்கிறது. படக்குறிப்பு,கோவை நகருக்குள் கருப்பு நீராக உள்ள நீர் கோவை நகரின் கழிவுநீரையும், குப்பைகளையும் சுமந்தபடி, பல்வேறு குளங்களைக் கடந்து, கூடுதலாக சாயக்கழிவு மற்றும் ரசாயனக் கழிவுகளையும் சேர்த்துக் கொண்டு திருப்பூர் நகரில் கருப்பு ஆறாக பாயும் நொய்யல் நதி. கழிவு நீராக காட்சியளிக்கும் 9 குளங்களில்தான், மத்திய–மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.475 கோடி மதிப்பில் சாலையோரப் பூங்கா, படகுக் குழாம், நடைபாதை, ஜிப் லைன் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. படக்குறிப்பு,திருப்பூர் நகரில் கருப்பு ஆறாக பாயும் நொய்யல் நதி. திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கான சாய ஆலைக் கழிவுகளால் முன்பு நொய்யல் பெருமளவில் பாழ்பட்டு வந்தது. தற்போது 18 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் (C.E.T.P.) வாயிலாக 340 சாய ஆலைகளின் கழிவுகளும், 100 சாயஆலைகளில் உள்ள தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் (I.E.T.P.) அந்த ஆலைகளின் கழிவுகளும் சுத்திகரிக்கப்பட்டு வருவதால் சாய ஆலைக் கழிவு கலப்பது குறைந்துவிட்டதாக திருப்பூர் தொழில் அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வழியோர கிராமங்களில் வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் அனுமதியற்ற சாயஆலைகள், தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இவையனைத்தும் சேர்ந்தே நொய்யலை சாக்கடை ஆறாக உருமாற்றியுள்ளன. படக்குறிப்பு,ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையத்தில் நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட அணை இதுதான் ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையத்தில் நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட அணை. கடந்த 1992 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது இந்த அணை திறக்கப்பட்டது. அப்போது திருப்பூர் சாயஆலைக் கழிவு பிரச்னை உச்சத்தில் இருந்தது. அங்கிருந்து சாயஆலைக் கழிவுநீருடன் கலந்து வந்த நொய்யல் ஆற்று நீர், இந்த அணையில் தேக்கப்பட்டது. மொத்தம் 10,375 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பாசனத்துக்குப் பயன் பெறும் என்று நம்பிக் கட்டப்பட்ட அணை, விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியது. வழக்கமாக அணை நீரைத் திறக்கச்சொல்லி விவசாயிகள் போராடுவார்கள். ஆனால் முற்றிலும் முரணாக இந்த அணையைத் திறக்க வேண்டாம் என்று அணைக்குக் கீழேயுள்ள விவசாயிகள் போராடினர். அணையில் நீர் தேங்கியிருந்தால் தங்களுடைய பகுதியில் நிலத்தடி நீர் விஷமாகும் என்று மேலேயுள்ள விவசாயிகள், அணையைத் திறந்து விடச்சொல்லி போராடினார்கள். இறுதியில் அணையில் நீரைத் தேக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. படக்குறிப்பு,காவிரி ஆற்றுடன் நொய்யல் ஆறு கலக்கும் இடத்தில் ஒரு சாக்கடைக் கால்வாய் போலவே காட்சியளிக்கிறது. தற்போது இந்த அணையில் உள்ள நீரின் மாசுத்தன்மை தினமும் அளவிடப்படுகிறது. அணையின் நீர் மட்டம், கொள்ளளவு, மழையளவு மற்றும் உப்புத்தன்மை (TDS ) ஆகியவற்றை நீர்வள ஆதாரத்துறை தினமும் காலை 6 மணிக்கு வெளியிடுகிறது. ஜூன் 11 அன்று இத்துறை வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 39.37 அடி உயரமுள்ள அணையில் 3.48 அடிக்கு மட்டுமே அதாவது 5.6 மில்லியன் கன அடி (மொத்த கொள்ளளவு 616 mcft) அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. நீரின் டிடிஎஸ் அளவு 1180 என்ற நிலையில் இருந்தது. நொய்யல் ஆற்றின் 180 கி.மீ. துார பயணத்தின் இறுதி நிலை இதுதான். மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்த நொய்யல் நகரமயமாக்கலின் எல்லாத் தாக்குதல்களையும் தாங்கி, சாக்கடை நதியாகி, இங்கே ஒரு ஓடையாகக் குறுகிவிடுகிறது. கரூர் மாவட்டம் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றுடன் நொய்யல் ஆறு கலக்கும் இந்த இடத்தில் ஒரு சாக்கடைக் கால்வாய் போலவே காட்சியளிக்கிறது நொய்யல். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1dew712nlvo
-
செவ்வால் அறணை
வைகாசி பிறந்தவுடன் தலைக்கச்சான் தொடங்கிவிடும். தென்மேற்குத் திசையிலிருந்து சீறிக்கொண்டுவரும். சித்திரை வெயில் புழுக்கத்தில் கிடந்தவர்களுக்கு சீதளக்காற்று சுகமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த வாரமே வெம்மை கூடிவிடும். மரங்களைத் தலைவிரித்தாட்டிவிடும். பூவையும் பிஞ்சுகளையும் விழுத்திவிட்டு வாழை இலைகளை நார் நாராகக் கிழித்துவிடும். கானல் பயிர்கள் விளைந்து முற்றி விழுவதும் இந்த நாட்களில்தான். வட்ட விதானையின் மனைவி, அம்பலவி மாமரத்திற்கு கீழ் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இலைகொள்ளாமல் பிடித்திருந்த பிஞ்சுக் காய்களை புரட்டி எடுத்து விழுத்திவிட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள் விழுந்து, மண்ணில் புரண்டு கிடந்ததை நெஞ்சு பதறப் பார்த்தாள்……. பனையாற்றுக்கு மேலே நாணல் புதர்கள் தாண்டியுள்ள மேட்டு நிலத்தில் எள்ளு விதைத்திருந்தது. அறுவடை முடிந்து கதிர்கள் அடையப் போட்டிருந்தது. தலைக்கச்சான் காற்று புரட்டி எடுத்துவிடும், என்பதற்காக பாரம் ஏற்றிவிட்டு வருகிறேன் என்று போனவர், இன்னும் வரவில்லை… இனி வரும் நேரம்தான்…… தெற்குப் பார்த்த வீடு. தலைக்கச்சானுக்கும் சரி, சோளகத்திற்கும் சரி வீட்டு வாசலுக்கூடாக் காற்று பிய்ச்சுக்கொண்டு போகும். வாசலை ஒட்டினாற் போல பெரிய அறை. மாட்டுக்காலில் சூடடித்து, சணல் சாக்கில் நெல்லை இறுக்கமாகக் கட்டி அந்த அறையில்தான் வைப்பார். விதை நெல்லுக்கென்ற ஏற்பாடு அது. அதற்கு எதிரே விறாந்தை. அதில்தான் அவர் உட்கார்ந்து அலுவல்களைப் பார்ப்பார். அதை ஒட்டியுள்ள திண்ணையில்தான் அமர்ந்து சாப்பிடுவார். சாப்பிடும் போது அவரோடு யாராவது இனசனம் இருக்க வேண்டும். குறைஞ்சது வயல் செய்கைக்காரர் யாராவது இருக்க வேண்டும். வேளாண்மை, ஊர் நடப்பு பற்றி பேச வேண்டும்… அவருக்கென்று குரக்கன் பிட்டு அவித்து வைத்திருக்கிறது. மெல்லிதாக தேங்காய்ப்பூ போட்டு கட்டித் தயிரோடு குழைத்து சாப்பிடுவார். சாப்பிடும் போது அவர் உருட்டித் தரும் உருண்டைகளுக்காக கினிக் கோழிகள் நான்கும் காத்துக் கொண்டிருக்கும். நாவற் காய்களை உருட்டித் தள்ளும் வேகத்தோடு வீசுகின்ற தலைக் கச்சானுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாம்பிஞ்சுகள் ‘பொத் பொத் ‘தென்று விழுவதை வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவள் புதுக்கோலத்தோடு, படலையைத் தள்ளித் திறந்து உள்ளே நுளைகின்ற அவரைக் கண்டதும் விக்கித்துப் போனாள்…… சண்டிக்கட்டு கட்டிய சாரம் முழுவதும் ஈரமாகி தண்ணீர் சொட்ட, காலெல்லாம் சேரும் சக்தியுமாகி, முகம் இருண்டு புதிர் காட்ட…. சாத்திய சைக்கிள் வேலியைத் தாண்டி கீழே விழ – நேரே கிணற்றடிக்குச் சென்று விட்டார். சைக்கிளை சரியாக நிறுத்தி, படலையைப் பூட்டி, தலைக்கயிறை போட்டுவிட்டு உள்ளே நுளைந்தவள். அவரது முகத்தை நேராகப் பார்க்கும் தைரியமின்றி, துவாயை எடுத்து நீட்டினாள். “யாரும் தேடி வந்தால் இல்லை என்று சொல்லி விடு” “ஏனப்பா?” “உனக்கு எல்லாம் விளக்கமாகச் சொல்லணுமோ? சொன்னதைச் செய் நான் கொஞ்சம் படுக்கப்போறன்” “சாப்பாடு குரக்கன்ல அவிச்சு வெச்சிருக்கன்” “அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்னைக் கொஞ்சம் தனிய விடு. யாரையும் உள்ள விடாத என்ன?” “வெளிக்காரர் யாரோடையும் சண்டையா?” ” ஓம் …… ஓம்…. நான் சண்டை புடிக்கிற ஆள்தான்…… கொலைகாரன் தான்….. நீ சாட்சிக்கு வாரியோ?” அவர் இப்படிப் பேசிப் பார்த்ததில்லை. இன்று இது புதுனம். பட்டு நெய்தது போல வார்த்தைகள் மென்மையாக வரும். சித்திரைப் புழுக்கத்தில் புரடியில்படும் வேப்பங் காற்றுப் போல ஆதரவாகப் பேசுவார். சுடுசொல் வராது……. அவருடன் பேசிக் கொண்டிருப்பது புறங்கைத் தேன் நக்குவது போல ஒரு சுகமான அனுபவம். இன்று என்ன நடந்தது?…. நடந்து வந்த முறையும் வித்தியாசம்… காலெல்லாம் சேறு சுடு சொல். அவருக்கு எப்போதாவது கோபம் வராமலும் இல்லை. முற்கோபம். முணுக்கென்று கோபிப்பார். ஆனால் அஞ்சு நிமிசந்தான். அதற்குள் ஆறி விடும். அடுத்த நிமிசம் இந்த மனுசனா இப்படிக் கோபித்தார் என்று ஆச்சரியப்படும்படி…. அன்பாகி விடுவார். பனை நுங்கின் மென்மையும் பால் நுரையின் கலகலப்புமாக……. இப்படித்தான் ஒருமுறை…. தென்னங்காணிக்குள் யாரோ கள்ளமாக தேங்காய் புடுங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டு வெள்ளாப்பிலேயே புறப்பட்டுப் போனார். கதை சரிதான். கள்ளன் ஒருவன் தேங்காய் புடுங்கிக் கொண்டு வட்டுக்குள் தலை மறைத்துக்கொண்டு இருந்திருக்கின்றான். இவருக்கு வந்ததே கோபம். உச்சாணிக் கோபம். ஆத்திரம் தலைக்கேறி கண்ணை மறைத்துவிட்டது. பக்கத்தில் கிடந்த கிடுகுமட்டை, தென்னம்பாளை, விறகுக்கட்டை முழுவதையும் சேர்த்து, கள்ளன் ஏறி இருந்த மரத்தைச் சுற்றி நெருப்புக் கொடுத்துவிட்டார். மரத்தைச் சுற்றி திமுதிமுவென்று தீச்சுவாலை கொழுந்து விட்டெரிய கள்ளன் அலறிய அலறலில் மரண பயம் தொக்கி நிற்க – அவருக்கு மனம் மாறிவிட்டது. மறுகணம், வெள்ளங்கம்பு நாரில் திரித்திருந்த கயிற்றை பக்கத்துத் தென்னையின் வட்டில் இறுகக் கட்டி மறு நுனியை இவனுக்கு எறிந்து அவனது மரத்தில் சேர்த்துக் கட்டிக்கொள்ளச் சொல்லி, கயிற்று வழியே ஆளை இறக்கிய போது, கள்ளன் மறுகி நின்றான். அவர் தாமதிக்கவில்லை. கீழே கிடந்த தேங்காய்களையெல்லாம் பொறுக்கி, மட்டை உரித்து நாரில் கோர்த்து அவனிடம் கொடுத்த ‘சரி போய்வா என்று அனுப்பி வைத்தார். அரணைக் குணம் அது. ஆத்திரம் கொண்டு எதிரியைத் தாக்கவரும். அரணை கடித்தால் மரணம் என்பார்கள். அத்தனை விசம். அதிலும் செவ்வால் அறணை கடும் விசம். வாய் வைத்ததென்றால் கதை முடிந்துவிடும். பல் கிட்டிவிட மரணம்தான். மறுபேச்சில்லை. அதனால் ஆத்திரம் கொண்டு வாய் வைப்பதற்குள் அதன் கோபம் ஆறிவிடும். சாதுவாகிவிடும். நெளிந்து வளைந்து பின்னோக்கி விடும். அற்ப நேரக் கோபம். அதற்குள் மனம் குளிர்ந்து, கோபப்பட்டதற்காக வெட்கப்பட்டு ஓடிவிடும். ‘இன்றைக்கும் அப்படி ஏதும் நடந்திருக்குமோ’ அடையப் போட்டிருக்கும் எள்ளுக் கதிர்களை யாராவது களவாடிப் போயிருப்பார்களோ?.. அல்லது ஆற்றைக் கடக்கையில் மாடு, கன்றுகள் எதையும் முதலை பிடிச்சிருக்குமோ? – அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அரணைக் குணம் வந்து யாருக்காவது அறைந்துவிட்டு வந்து, மனவலியில் படுக்கிறாரோ?…… இவரது தம்பி மகள் ஒருத்திக்கு யாரோ பையன் கடுதாசி கொடுத்தான் என்று கேள்விப்பட்டு – அந்தக் கணத்திலேயே ஆத்திரப்பட்டு அவனைப் பிடித்து அடிஅடியென்று அடித்து துவைத்து நிமிர்ந்த போது – அவன் மூச்சுக் காற்றுக்காக அவஸ்தைப்பட்டான். அவரது கோபம் அடங்கிவிட்டிருந்தது. அவனை அவரே ஆசுப்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போய் வைத்தியரைப் பார்த்து, சுகப்படுத்தி, பின்னர் கல்யாணம் செய்து வைத்து. வீடொன்றைக் கட்டி, அதில் இருப்பாட்டி.. ஓ.. எவ்வளவு தாராளம்………. இந்த மனசுக்குள் கணப்பொழுதில் வந்து ஆட்சி செய்துவிட்டுச் செல்கின்ற அந்த மூர்க்கத்தனம் எங்கே ஒழிந்துகொண்டு இருக்கிறது?…….. இன்றைக்கு என்ன நடந்திருக்கும்?…. எதற்கும், படுத்து ஆறுதலாக எழும்பட்டும்…… படலையடியில் நிழலாடுகிறது. கிராம சேவகர்! “வட்டவிதான் இருக்கிறாரா” அவளுக்கு நெஞ்சு குறுகுறுக்கிறது. “இல்லியே, வெளியே போனவர். இன்னும் வரல” வேலியடியில் சார்த்தியிருந்த சைக்கிளில் அவர் பார்வை சென்று மீளுகின்றது. “வந்தால் ஆசுபத்திரிப் பக்கம் வரச்சொல்லுங்கோ” “ஏனுங்க யாருக்கும் சுகமில்லையோ…….. “உங்கட மேட்டுக்காணிப்பக்கம் ஒரு பையன் அடிபட்டு இறந்து கிடக்கிறான். ஆசுபத்திரிக்குக் கொண்டு போறாங்க. வசதியெண்டால் வரச்சொல்லுங்க” அவள் சில்லிட்டுப் போனாள். காலையில் அவர் அங்கே தான் போனவர்…. இப்பத்தான் பதறி அடித்துக்கொண்டு வந்திருக்கிறார்…. அங்கே ஒரு பையன் செத்துக் கிடக்கிறான், இது என்ன வில்லங்கம்…. அந்தப் பையன் எப்படிச் செத்தான்?…. செவ்வால் அரணையொன்று வேலிக்கிடுகுக்குள் மறைந்து நழுவி ஓடுகிறது….. அவளுக்கு அடிவயிற்றில் குமைச்சல் எடுக்கத் தொடங்கியது…. விறாந்தையை ஒட்டிய திண்ணையில் படுத்திருந்தவருக்கு கிராமசேவகர் வந்து விசாரித்துப் போனது தெளிவாக காதில் விழத்தான் செய்தது. அவருக்கு உடம்பு சில்லிடத் தொடங்கியது. தொண்டை வரண்டு, நாவு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவர் அறியாமல் கண்ணில் நீர் வழிந்து காதோரம் வழிந்து சென்றது. இது என்ன சோதனை?…. நான் அவனைக் காப்பாற்ற அல்லவா பாடுபட்டேன்…. அவர் எழுந்து உட்கார நினைக்கிறார். முடியவில்லை. கைகள் உதறத் தொடங்கிவிட்டன. இதைப்பற்றியே பேசிக்கொண்டு சனங்கள் ஆசுபத்திரிக்கு விரையும் காட்சி, வேலியடைப்புகால் மங்கலாகத் தெரிகிறது. செய்தி அறியவென்று அவள் படலையடியிலேயே நிற்கிறாள் போலும், நானும் காலையில் கோபப்பட்டு விட்டேன்.. எனக்கிருக்கின்ற ஒரே ஆறுதல் அவள்தானே. அவளிடமாவது உண்மையைச் சொல்லிவிடுவோமா? காலையில் அவர் மேட்டுக்காணிக்கு செல்லும்போது அந்தப் பையன் தனக்கு முன்னால்தான் ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தான். சின்னப்பையன், நாரைகள் பிடிப்பது முசுப்பாத்தி. வைகாசி பிறந்தால் செங்கால் நாரைகள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்க இடம் தேடத் தொடங்கி விடும். ஓங்கி வளர்ந்துள்ள நாணல் புதர்கள் மூன்று நான்கை ஒன்றாக இணைத்து அவை ‘அவதி’ தயாரித்து விடும். அதற்குள் மெல்லிசாகக் கூடு கட்டி நாணற் பூக்களை மெத்தையாக இட்டு, முட்டையும் இட்டு அடைகாக்கத் தொடங்கி விடும். அடர்த்தியாக வளர்ந்துள்ள நாணற் புதர்களுக்குள் கூட்டை கண்டு பிடிப்பது மலைப்பாம்புகளுக்கு கஷ்டம். அப்படியே கண்டு பிடித்தாலும் கூடுகள் இருக்கும் இடத்திற்கு ஏறுவது கஷ்டம். இதனால் நாரைகளும் குஞ்சுகளும் மலைப்பாம்பு அபாயத்தில் இருந்து தப்பி விடும். ஆனால் நாரைக்கொக்கு பிடிக்கும் சிறுவர்கள் வேறு உபாயங்களைக் கையாளுவார்கள். நாணல் புதர்களுக்குள் ஓசைப்படாமல் புகுந்து கூடுகளை அடையாளம் கண்டுகொள்வார்கள். கூடுகளைத் தாங்கிநிற்கும் நாணல்களை திடீரென விலக்கிவிட, கூடும் நாரையும் கீழே விழுந்து, நாணல் அடர்த்திற்குள் சிக்குண்டு விடும். அதனைலாவகமாக ‘லபக்’ என்று பிடித்து சிறகுகளை மேல்நோக்கி இணைத்து கட்டுப்போட்டு விடுவார்கள். மேட்டுக் காணிக்குள் அடையப் போட்டிருந்த எள்ளுக் கதிர்களுக்கு பாலை மரக்குற்றிகளை பாரம் ஏற்றி வைத்தவிட்டு நிமிர்ந்தபோது, பொழுது வெப்பங்கொள்ளத் தொடங்கியிருந்தது. ஆற்றைக் கடக்குமுன் நாணல் மண்டிக் கிடந்த பகுதிகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தபோது அந்தப் பையன் கொக்குக் கூடுகளைத் தேடிப் பதுங்குவது தெரிகிறது. அவர் பார்வை நிதானிப்பதற்குள் அது நடந்துவிட்டது. ஆளுயர மலைப் பாம்பொன்று பையனது கால்கள் வழியாக ஏறி, உயர்ந்து தலைவரை முன்நோக்கி, உடலை ஒரு சுற்றுச் சுற்றி முறுக்கத் தொடங்கிவிட்டது. பையன் ஹீனமாக முனகத் தொடங்கினான். கைகளை ஆட்டி ஆட்டி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த வேளை பாம்பு அவனைக் கீழே விழுத்தியிருந்தது. இனி தாமதிக்க நேரமில்லை. இன்னும் சிறிது நேரத்தில் உடலை முறுக்கி எலும்புகளை உடைத்து கூழாக்கி விழுங்கத் தொடங்கிவிடும். அவர் மின்னலாகச் செயல்பட்டார். எருமைக் கன்றுகளை கட்டிப் போடவென நட்டு இருந்த காட்டாமணக்கு கணுவொன்றைப்புடுங்கி. பையன் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்கு ஓடினார். பாம்பின் தலைக்குக் கீழ், கழுத்துப் பக்கமாக ஓங்கி திசை பார்த்து அடித்தவேளை, பாம்பு தன்பலம் கொண்ட மட்டும் பையனை உருட்டிப் புரட்டிவிட, அடி, பையனின் பிடரியில் பழுவாக இறங்கியது. அதற்குள் பாம்பு பையனை கைவிட்டு விட்டு நழுவி மறைந்து விட்டது. பையன் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது கொஞ்ச நேரந்தான். உயிர் முடிச்சில் அடி விழுந்திருக்க வேண்டும். அவன் ஆவி பிரிந்துவிட்டிருந்தது. வட்ட விதானையார் நிலைகுலைந்து போனார். காப்பாற்றப்போய் தாமே அவனைக் கொன்றுவிட்டோமே என்று நெஞ்சு பதைக்கத் தொடங்கினார். ஊர் நம்பப் போகிறதா?.. தன்மீது பழியைப் போட்டு தாக்கி நசுக்கி விடாதா? ஓடி மந்த மலைப்பாம்பு வந்து சாட்சி சொல்லப் போகிறதா? பையனின் தலையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டார். தொண்டையில் முடிச்சொன்று திரண்டு-தலை முடிக்கற்றையொன்று பொறுத்துக் கொண்டதுபோல – சிக்கலாக வலிக்கத் தொடங்கியது. நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ பிராண்ட…. கழுத்தை நெரிக்க…. கண்கள் குளமாக… குழந்தை போல தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். இரண்டு கைகளையும் முன்னால் இணைத்து விலங்கிட்டு பொலிஸ் பிடித்து இழுத்துச் செல்வது போல….. மனைவி தலைவிரி கோலமாக பின்னால் ஓடி வருவது போல…….. கைகள் உதறத் தொடங்கி விட்டன. அரைவாசி திறந்திருந்த பையனின் கண்களை கசக்கி மூடிவிட்டார். இனி கண்கைளத் திறக்கவே மாட்டான்…. வாய் பேசவே மாட்டான்…. பட்டியில் இருந்து எருமைப் பால் கறந்து காவில் தூக்கி வரும் பால்காரர்களின் பேச்சொலி கேட்கிறது. இனி தாமதிக்க நேரமில்லை. இந்த வழியாகத்தான் வந்து ஆற்றைக் கடப்பார்கள். நாணற் புதர்களை விலக்கிக்கொண்டு, குறுக்கு வழியாக ஆற்றைக் கடந்து, சேற்றில் புதைந்து, சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அப்படியே வீடு வந்தவரை மனசாட்சி கேட்டது. ‘நீ செய்தது நியாயந்தானா?’ அவரால் பதில் சொல்ல முடியவில்லை நெஞ்சுக் கூட்டுக்குள் நெருஞ்சி முட்கள் உருளத் தொடங்கின. தம்பி வந்துவிட்டான். ‘ஏதும் கேள்விப்பட்டிருப்பானோ…. எப்படிக் கேள்விப்பட்டிருப்பான்?’ “ஏதும் சுகமில்லையா? ஏன் படுத்திருக்கிறீங்க?” “இல்லையே….” – குரலில் தடுமாற்றம் “வெள்ளாப்பிலே மேட்டு நிலப்பக்கம் போனீங்களா?” “ஏன் தம்பி கேட்கிற?” “நாரைக் கொக்கு பிடிக்கிற பொடியன் இறந்து கெடந்தவனாம். தூக்கிக்கொண்டு வந்திருக்கிறாங்க. புரடியில் அடிப்பட்டிருக்கு. செத்திட்டான். பொலிசு விசாரிக்கிறது.. நீங்கள் போன நேரம் நடந்ததோ…. கண்டிருப்பீங்களோ….அதான் கேட்டன்.” அவர் ஒன்றும் பேசவில்லை. மோட்டு வளையையே வெறித்துப் பார்த்தார். செவ்வால் அரணை யொன்று இரைதேடி நெளிந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்பி…தம்பி…. விலகு. “காலையில் அலவரைக்குள்ள போய் வந்தனான். வெள்ளாமை பாலேறி அன்னம் வாத்துக் கெடக்குது. கலவன் கதிரெல்லாம் தலப்பு நெல் பழுத்து, கொப்புச் சவண்டு வருது. அதுக்குள்ள அறக்கொட்டியான் தத்துவெட்டி அடிக்கிற குணம் தெரியுது. ஒரு நாளைக்குள்ள அடிச்சு சாம்பலாக்கிவிடும். அதுதான் நாளைக்கு அடிப்பயிர் ஒதுக்கி எண்ணெய் அடிக்கலாம் எண்டு இருக்கன். எண்ணெய்ப் பம்பைக் கொண்டு போக வந்தனான்” அறக்கொட்டியான் என்றதும் தீயை மிதித்தவர் போல அரளத் தொடங்கினார். மனம் அரட்டத் தொடங்கியது. ஐந்து வருசத்து முந்திய நிகழ்ச்சி அது. இந்த முன்கோபத்தால் வந்தவினை அது. மோட்டு வளைவில் நிலைக்குத்தியிருந்த பார்வை இப்போது அசவில் சாத்தியிருந்த பாய்ச் சுருணையில் பதிகிறது. கண்களில் ஓரங்கட்டியிருந்த உப்பு நீர் வழிய, கேவத் தொடங்கினார். தம்பி, ஆதரவாகத் தோளைப் பற்றிக் கொண்டான். “சும்மா ஆறுதலா இருங்க. அழாதேங்க. தைரியமா இருங்க உங்கட குணம் இந்த ஊருக்குத் தெரியும். நீங்க செய்திருக்கமாட்டீங்க…..” “நான் செய்ய இல்லடா தம்பி. என்னை நம்புடா தம்பி. பொலிஸ் வந்திருக்குமோ…. தம்பி வெளியில என்னடா கதைக்கிறாங்க? நான் பாம்புக்குத் தான்டா அடிச்ச நான்…. “எனக்கு எல்லாம் தெரியும். நீங்க அமைதியா இருங்க.” “உனக்கு நடந்தது தெரியுமோ?…. “நான் எல்லாம் விசாரிச்சுக் கொண்டுதான் வாறன். யாரோ நாரைக் கொக்கு பிடிக்கிற பையன்தான் தூரத்தில் நின்டு பார்த்தணென்டு சொல்றான். உங்கமாதிரி எண்டுதான் அவன்ட கணிப்பு. நீங்தான் என்டு குறிப்பாகச் சொல்லயில்ல. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க ஏன் அந்தப் பையனை அடிக்கப் போறீங்க? எல்லாம் நான் பார்த்துக் கொள்றன். நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கணும்.” அதற்குள் அவள் வந்துவிட்டாள். அவளுக்கு செய்திகள் சாடைமாடையாக அருக்கொடுத்துத்தான் இருக்க வேண்டும்… கண்கள் சிவந்திருந்தது. மூக்குச் சிந்தத் தொடங்கி இருந்தாள். கைகளில் நடுக்கம்…. “பார்த்துக் கொள்ளுங்கோ.நான் வெளியிலே வெசவளம் என்னென்று விசாரிச்சுக்கொண்டு வாரன். பசளைக் கடையில அறக்கொட்டியான் எண்ணெயும் வாங்கிட்டு வாரன்.” தம்பி விலகிச் செல்கிறான். அவர் கண்கள் மயங்கி நினைவிழக்கத் தொடங்கினார். ‘தம்பி என்ன சொன்னவன்? அறக்கொட்டியான் மருந்தா? அறக்கொட்டியான் மருந்து ஆளைக் கொல்லுமோ?”….. நினைவுப் பிசிரில் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சி, மெல்லிய மின்வெட்டில் தெரியும் மழை இருட்டுக் காட்சி போல மங்கலாக நிழலாடுகிறது. அறுவடை நிலையில் இருக்கும் வேளாண்மையைத்தான் அறக்கொட்டியான் தாக்குவது வழக்கம். ஒரு பொழுதில் ஒரு வயல் மூலையில் தொட்டமாகக் காணப்படும். இரண்டு நாட்களுக்குள் வயல் பூராகவும் பரவி நெல்மணியைப் பதம் கெடுத்து, மாவாக்கி விடும். எதுவும் மிஞ்சாது. செய்கைக்காரனின் நெஞ்சையும் சேர்த்து சுருக்கி விடும். இவர் அவசர அவசரமாக எண்ணெய் வாங்கி அடிக்க ஆயத்தமானார். அதற்கு முன் வயலிலுள்ள நீர் முழுக்க வடிய வைக்க வேணும். தண்ணீர் நின்றால் எண்ணெய் பலனளிக்காது. அறக்கொட்டியான் மடங்காது. அடுத்த வயல்காரனுக்கும் அறக்கொட்டியான் பிரச்சினை. இவருக்கு முதல் நாளே அவன் தண்ணீரை வடியவிட்டு எண்ணெய் அடித்துக் கொண்டிருந்தான். ஆனால் இவருடைய நீர் வடிச்சல் அவனது வயலுக்குள்ளாலதான்! “ரெண்டு நாள் பொறுங்களன் வட்ட விதானையார். அதுக்குள்ள எண்ணெய் அடிசசு முடிச்சிர்றன். அதற்குப் பிறகு என்ர வயலுக்கால தண்ணிய வடியவிட்டு நீங்க எண்ணெய் அடிங்களன்.” “அதுக்குள்ள என்ட வயல அறக்கொட்டியான் அடிச்சு துவைச்சுப் போடுமே.” “ஒருநாள் பொறுங்க நான் பயிரெல்லாம் ஒதுக்கி, தண்ணிய வடியவிட்டு இன்டைக்குள்ள எண்ணெய் அடிக்கப் போறன். நாளை – ஒருநாள் பொறுங்க அதுக்குப்பிறகு நீங்க தண்ணியை என்ற வயலுக்கால வடியவிட்டு, பயிரை ஒதுக்கி எண்ணெய் அடிங்க. அவருக்கு விறுவிறுவென்று சூடு ஏறுகிறது. “உன்ர வயல் தப்ப வேணும். என்ர வயல் அழிய வேணும். அப்படியே… ஒரு கீற்றால தண்ணிய வடிய விடன். நானும் பயிர் ஒதுக்கி எண்ணெய் அடிக்கிறன்.” “நீங்க வட்ட விதானையார். நீங்கதான் எங்கட வயலையும் காப்பாத்தித் தரணும். அதை விட்டுப் போட்டு மல்லுக்கு நிக்கறீங்க” “நான் சண்டைக்காரன் என்று சொல்றியாடா?” “மரியாதையாப் பேசுங்கோ. ‘டா’ போட்டு பேசக் கூடாது. உங்க வயசுக் குத்தான் நான் மரியாதை தாறன்…….. கவனம்.” இவருக்கு பிடரி மயிர் சிலிர்க்கிறது…… ‘விறுவிறு’வென்று விலங்குக் கூட்டமொன்று எட்டுக் கால் பாய்ச்சலில் வேகம் கொண்டு கைகளில் வலுக்கொள்கிறது…. “இங்க, தண்ணிய தட்ட விடறியோ இல்லையோ” “முடியாது. இண்டைக்கு முடியாது போ. ஏலாது” “என்னடா சொன்னனீ?” முதல் அடி கன்னத்தில் விழுகிறது. கட்டிப் புரண்டதில் யாருக்கு அடி. யாருக்கு உதை என்று புரியவில்லை. விலங்குக் கூட்டம் மறுபடி மறுபடி பாய்ந்து “மனிதனை” விரட்ட…. “எனக்காடா கை வெச்ச ?” இளமையும் முதுமையும் மோதிக்கொள்ள முதுமை பழிதீர்க்கப் பாய்கிறது. “எனக்காடா கை வெச்ச”…… மறுபடிமறுபடி ஆக்காண்டிப்பறவை வட்டமிட்டுக் கீச்சிடுகிறது. “எனக்காடா கை வெச்ச?” கையில் அகப்பட்ட கிருமிநாசினிப் போத்தலில் அரைவாசியை அவனது வாய்க்குள் ஊற்றி முடிந்த போதுதான் அவரது ஆத்திரம் தணிகிறது…. நிலமையின் கொடூரம் புரியத் தொடங்கிய போது….. எல்லாமே முடிந்து விட்டிருந்தது. செவ்வால் அறணை தான் நோக்கிய திசையில் இருந்து பின்வாங்கி நகரத் தொடங்கியது. அவரை ஆட்சி செய்திருந்த விலங்குக் கூட்டம் தனது பேய்ப் பாய்ச்சலை குறுக்கிக்கொண்டு மனக் கூட்டுக்குள் கடிவாளம் இட்டுக்கொண்டது. ஆனாலும் எல்லாமே முடிந்திருந்தது! குற்றத்தின் வெப்பச்சுடர் அவரை தீய்க்கத் தொடங்கியது. ஒரு கொலைகாரனாக மாறிவிட்ட கொடூரம் அவரை அணு அணுவாக பிராண்டத் தொடங்கி விட்டது. கண நேரத்தில் தன்னை ஆக்கிரமித்துச் செல்கின்ற முன்கோபம் செய்து விட்டிருந்த அட்டூழியம் அவரைக் குற்றவாளியாக்கி “நீ கொலைகாரன். நீ கொலைகாரன்” என்று விரல் நீட்டி குதறி எடுத்தது. கொலைகாரனாக மாறிவிட்ட நிலையில் அதற்கான பொறுப்பைத் தட்டிக் கழிப்பதோ – தண்டணையில் இருந்து தப்பிக்கொள்வதோ அவருக்குச் சரியாகப் படவில்லை. பாவத்திற்குரிய தண்டணையை தானே வழங்கிக் கொள்ளவே விரும்பினார். கையில் மிகுதியாக வைத்திருந்த கிருமிநாசினி, தானே தண்டனை அளிக்கின்றேன் என்று கூறிற்றா?….. போத்தலை உயர்த்தி வாய்க்குள் ஊற்ற வெளிக்கிட்ட போது, தம்பி ஓடி வருகின்றான். “உங்களுக்கு விசரே” போத்தல் எகிறிப் போய் விழுந்து கவிழ்ந்து கொள்கிறது. “நீங்களென்ன வேணுமென்டா செய்தனீங்க? அவனும் அடிச்சான். நீங்களும் அடிச்சீங்க. சண்டையில் இது சகஜம்… அவன் உங்கட வயசுக்கும் மரியாதை தரயில்லியே….” “என்டாலும் நான் செய்திருக்கப்படாது. என்ர கோபம் கண்ணை மறச்சுப் போட்டுது” “கை கால் கழுவிக் கொண்டு நீங்க மேட்டு நிலத்துக்குப் போங்க…. அங்கேயே ரெண்டு நாள் இருந்து மாடுகன்றைப் பாருங்க.மற்றதெல்லாம் நான் கவனிச்சுக் கொள்றன்.” அப்படியேதான் நடந்தது. அவர் மேட்டு நிலம் போனார். பாதுகாப்பு இல்லாமல் கிருமி நாசினி பாவித்ததால மரணம் சம்பவித்தது என்று முடிவானது. தண்டனை தப்பிப் போனது. குற்றம் அமுங்கிப் போனது. உண்மை அடங்கிப் போனது. நீண்ட நாள் அவர் பேச்சற்றுப் போனார். மனசாட்சி குறுகுறுப்புக் காட்டியது. இரவில் புலம்பத் தெடங்கினார். கண்விழித்து அரட்டத் தொடங்கினார். தம்பி எல்லாவற்றையுமே மறைத்து விட்டான். செத்தவனின் பிள்ளைகளுக்கு தர்ம காரியங்கள் என்று உதவி புரிந்தார்கள். ஆனால் அவையெல்லாம் செய்த பாவங்களுக்குரிய பிராயச்சித்தம் ஆகிவிடுமா…? இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நெஞ்சின் ஓரத்தில் தனித்திருந்து எப்போதாவது அவரை வாட்டி வதைத்துக் கொண்டுதானிருந்தது. அன்று செய்த குற்றத்திலிருந்து தப்பிவிட்டார். இன்று செய்யாத குற்றம் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறது. தண்டணைகள் தாமதிக்கலாம். ஆனால் தப்பவிடாது போலும். விதானைாயர் வந்து விட்டார். “வட்ட விதானை, எனக்கெண்டா நம்பிக்கையில்ல. நீ கொலை செய்ற ஆள் இல்லை. ஆனால் அந்தப் பையன் நீ அடிச்சதெண்டுதான் சொல்றான்.எனக்கெண்டா என்ன செய்றதெண்டு விளங்குதில்லை. நீங்க ஒரு நடை பொலிசுக்கு வாங்களன். நடந்ததை சொல்லிப்போட்டு வந்துருவம்.” அதற்குள் தப்பி வந்து விட்டான். “யாரோ ஒரு பையன் சொன்னான் எண்டதுக்கா அவரை பொலிசுக்கு வரச் சொல்றீங்க…. என்ன நியாயம் விதானை?……. அவர் என்ன கொலைகாரனா?…. நாரைக் கொக்குப் புடிக்கிற பொடியனை நாங்க ஏன் கொல்ல வேணும்….. அவர் வரமாட்டார்….. நீங்க போங்க…” மனைவி விசும்பத் தொடங்கிவிட்டாள். உச்சிப் பொழுதின் வெம்மை யையும் சேர்த்துக்கொண்டு காற்று சுழன்று அடிக்கிறது. வெள்ளை கொழும்பான் மாமரத்திலிருந்து கொப்பொன்று முறிந்து படலைப் பக்கம் விழுந்து வழியை மறைத்து நிற்கின்றது. “நாங்களாகப் போய் உண்மையைச் சொல்லிட்டா நமக்கு நல்லது. அவங்களாக வந்து இழுத்துக் கொண்டு போனா வில்லங்கமாகப் போயிடும். நலவுக்குத்தான சொன்னன்.” “அதெல்லாம் நாங்க பாப்பம். பொலிஸ், கோடு கச்சேரி என்று நாங்களும் ஒரு கை பாப்பம். நீங்க போய்வாங்க.” மாமரக்கொப்பை விலக்கிக் கொண்டு விதானையார் படலை தாண்டுகிறார். தம்பி விறாந்தை நோக்கி வருகிறான். “விதானைக்கென்ன விசறா?….. அவர் வேலையை அவர் பாத்துக் கொண்டு போக வேணும். முந்திரிக் கொட்டை. நீங்க சும்மா இருங்க, நான் எல்லாம் பாக்குறன். பாம்புக்குத்தான் அடிச்சது. அது தவறிப் போச்சு. நீங்க அதையும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியாதெண்டே சொல்லிப் போடுங்க.” “அதெப்படிடா தம்பி’ அவரால் பெச முடியவில்லை. தொண்டடைக்குள் வார்த்தைகள் சிக்குண்டு உறைகிறது. வாந்தி எடுக்கிறார். கண்களில் மயக்கம்…….. செவ்வால் அறணைக் குட்டிகள் தவழ்ந்து ஊர்ந்து செல்வது போலவும் நாரைகள் அவற்றைக் கவ்விக் கொண்டு பறப்பது போலவும் காட்சிகள் அடிமனதில் தோன்றுகின்றன… கோழிக்குஞ்சொன்றை கறுப்புக்காகமொன்று தூக்கிக் கொண்டு கூட்டில் வைத்து தனது குஞ்சுக்கு இரை ஊட்டுவது போல சலனக்காட்சி… இது என்ன நியாயம்? கிருமி நாசினிப் போத்தலை மலைப்பாம்பொன்று விழுங்கி, விழுங்கி வெளியே துப்புகிறது. பாம்பு முட்டைகள் உடைந்து உடைந்து தீப்பற்றிக் கொள்கிறது……. அவர் பார்வையில் சலனங்கள் தீர்ந்து, ஒளி பரவுகிறது. “தம்பி, நான் பொலிசுக்குப் போறன்” “உங்களுக்குப் பைத்தியமா? புடிச்சு கூண்டுல போட்டு நீங்கதான் செய்தது என்டு தண்டனை தந்திடுவாங்க” மனைவி கையை பிசைந்து கொள்கிறாள். “தம்பி நானே செய்ததாகத்தான் சொல்லப் போறன். அதுக்கு பிறகு விசாரணை தேவையில்லை. அஞ்சு வருசத்துக்கு முன் நடந்த அறக்கொட்டியான் சண்டையை நினைச்சுப்பார். அதற்குரிய தண்டனையே இன்னும் எனக்குப் பாக்கி இருக்கிறது. இப்போது நான் போவது தண்டனை பெறுவதற்காக அல்ல. பிராயசித்தம் பெறுவதற்காக” தம்பி மலைத்து நின்றான். இப்போது அவன் தடுக்கவில்லை. அவரைத் தடுக்கலாம். ஆனால் அவரது மனச்சாட்சியை தடுக்க முடியாது என்பதை அவன் அறிவான். – கலாச்சார அமைச்சு தேசிய மட்டத்தில் அரச ஊழியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு (2002) – வரால் மீன்கள் (பரிசு பெற்ற சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, வானவில் வெளியீட்டகம், திருக்கோணமலை. https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%a3%e0%af%88/
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்
"எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம், புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம்" - அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் 12 JUN, 2025 | 12:23 PM தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான சக்திகளிடமிருந்து வைத்தியசாலையை காத்திட கரம்கோர்த்திடுவோம் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அறிக்கையொன்றில் அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது, தெல்லிப்பளை மண்ணின் புகழ் பூத்த எங்கள் வைத்தியசாலை, போர் மற்றும் இடப்பெயர்வுகளின் பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து புதிய இடத்தில் இயங்கத் தொடங்கியது. குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி அடைந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்ததாக வட மாகாண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வைத்தியசாலையாகத் தன்னைத் தரமுயர்த்தி மிடுக்கோடு விளங்குகின்றது. விசேட பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றி வரும் மகத்தான வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத் திறனற்ற வைத்தியசாலை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக அது பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றது. அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பற்ற நிலைக்கும் தற்போதைய நிர்வாகம் இட்டுச் செல்கின்றது. இது தொடர்பாக மாகாண மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இன்று வரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வைத்தியசாலையின் இந்த விரும்பத்தகாத நிலைமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அண்மையில் நாங்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றையும் நடாத்தியிருந்தோம். மேலும் இவ் வைத்தியசாலையில் புற்றுநோய்ப் பிரிவும் அங்கு சேவையாற்றும் சேவை நோக்கம் கொண்ட புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்தியும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் தொடர்ச்சியான நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய வைத்தியசாலை நிர்வாகி மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில் பெயர் பெற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையிலானதாக சந்தேகிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக ஊடகப் பிரச்சாரம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. எனினும், எமது வைத்தியசாலையை மீட்டெடுக்கப் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைப் பாதுகாக்க பொது மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உண்மை நிலையை எடுத்துரைக்கும் நோக்கில் தொழிற் சங்க நடவடிக்கையாக தற்போது பொது மக்களிடமும், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடமும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் நிலவும் சிக்கல்களை விளக்கும் விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால விரயம் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தால் வைத்திய நிர்வாகி தேவநேசனுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக உடனடியாக விசாரணைக் குழுவை நியமிப்பதுடன், புற்றுநோயாளர்களுக்குரிய தரமான இலவச சிகிச்சை அளிப்பதில் செயற்கையாக இடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதுடன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் இதர சுகாதார ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் சேவையாற்றுவதற்கும் ஏதுவான வகையில் நிர்வாக மாற்றத்தை வெகு விரைவில் ஏற்படுத்தாவிடத்து எதிர்வரும் 13 .06.2025 அன்று வைத்தியர்களினால் "எங்கள் வைத்திய சாலையை மீட்டெடுப்போம் - புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம்" என்ற தொனிப் பொருளில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தத் தீர்மானம் எடுத்துள்ளோம். மக்கள் நலன்பால் அக்கறை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள், வைத்தியசாலை மற்றும் நோயாளர் நலன் விரும்பிகள், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம். வைத்தியசாலைக்கு எதிரான சக்திகளிடமிருந்து உங்கள் வைத்தியசாலையைக் காத்திடக் கரம் கோர்த்திடுவோம் வாரீர். https://www.virakesari.lk/article/217247