ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
Everything posted by ஏராளன்
-
கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர்
கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் Published By: Vishnu 08 Dec, 2025 | 07:46 PM டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது. இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்து காணப்பட்டது. கடமைகளுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் பொது மக்கள் வரை இந்த பாதை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதனால் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகினர். எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை புனரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவுக்கு பாலத்தை புனரமைக்கும் பொறுப்பை இலங்கை அரசு வழங்கியிருந்தது. அதற்கமைவாக கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் குறித்த பாலத்தை புனரமைக்கும் பணியினை ஞாயிற்றுக்கிழமை (07) முதல் தொடங்கியிருக்கின்றனர். https://www.virakesari.lk/article/232816
-
அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்
பேரிடரால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் தேசிய மனநல வைத்திய பீடத்தினை நாடுங்கள்! 08 Dec, 2025 | 05:32 PM ( செ.சுபதர்ஷனி) நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் எவரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் உடனடியாக தேசிய மனநல வைத்திய பீடத்தை (1926) தொடர்புக் கொள்ளுமாறு களணி பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியரும் சிறுவர், யௌவன பருவ மனநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முழு நாடும் இயற்கை அனர்த்தத்தால் பாரிய அழிவை சந்தித்துள்ளது. பலர் உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர். இவ்வாறான பேரிடர்கள் எமது மன நலத்தை கடுமையாக பாதிக்கும். பொதுமக்களிடையே மன உளைச்சல் அதிகரித்துள்ளதை எம்மால் காணக் கூடியதாக உள்ளது. மன உளைச்சல் நாளடைவில் தீவிர மன நல நோய்களுக்கு வழிவகுக்கக் கூடும். ஆகையால் ஆரம்பத்திலேயே மன உளைச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்றவாறு தீர்வினை கண்டு மனதை ஆற்றுப்படுத்துவது அவசியம். தற்போது எவரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்திருப்பின் உடனடியாக அருகில் உள்ள தகுதிவாய்ந்த மனநல மருத்துவர் ஒருவரை அணுகி உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நல்லது. அத்தோடு மன நல வைத்திய பீடத்தைத் (1926) தொடர்புக்கொண்டு வைத்தியரை சந்திப்பதற்கு தேவையான வசதிகளை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும். சிறுவர்களின் மன நலம் பாதிப்புக்குள்ளாகியிருப்பின் முடிந்தவரை அவர்களை இயல்பு வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவது அவசியம். அதற்கேற்ப சிறுவர்களை விளையாடுவதற்கு வாய்ப்பளிப்பதுடன், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட மனதிற்கு நெருக்கமானவர்களை சந்திப்பதற்கும் மனம்விட்டு உரையாடுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் கோபம், விரக்தி, தூக்கமின்மை, பசியின்மை மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். எமது நாடு பல சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்களுக்கும் கசப்பான சம்பவங்களுக்கும் முகங்கொடுத்துள்ள போதும், மக்களின் ஒற்றுமை, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் எவ்வாறான சூழ்நிலையிலும் மீள நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்தது. இம்முறை வெள்ள நிலைமை மற்றும் தித்வா புயல் காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டது. இதுபோன்ற பேரிடருக்குப் பின்னர், எமக்கு மிகப் பெரிய துன்பம் நேர்ந்துவிட்டதாக ஆழ்ந்த கவலையடைவோம். இதனால் வெறுமை, நம்பமுடியாத அதிர்ச்சி மற்றும் எதையும் செய்ய விருப்பம் இல்லாத நிலை ஏற்படலாம். இந்த அனர்த்த நிலைமை காரணமாக நீங்கள் கஷ்டங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகியிருந்தால், உங்களுக்காக இலங்கையில் உள்ள அனைவரும் உதவ முன்வருகிறார்கள். ஆகையால் உங்கள் முயற்சி எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளை கைவிட்டு விடாதீர்கள். வீட்டினை இழந்தாலும், குடும்ப உறுப்பினர் இழந்தாலும் உங்கள் மனதில் உள்ள நம்பிக்கைகளை கைவிட வேண்டாம் என்றார். https://www.virakesari.lk/article/232806 1926 National Mental Health Helpline, 1926 Chatline & 075 555 1926 WhatsApp line Providing the much needed psychological support to the Sri Lankan Public. A National Line under the Ministry of Health, Sri Lanka
-
'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள்
'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள் பட மூலாதாரம்,x 3 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் கங்கை அமரன் இன்று (டிச. 08) தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாவலர் சகோதரர்களில் கடைக்குட்டி கங்கை அமரன். தனது அண்ணன்களுடன் பல மேடைக்கச்சேரிகளில் பங்கேற்று இசையை கற்றவர். அண்ணன்களை குருநாதர்களாக நினைத்து, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். அவர் எழுதிய 10 பிரபல பாடல்கள் இங்கே. 1. செந்துாரப்பூவே... '16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற செந்துாரப்பூவே என தொடங்கும் பாடலை முதலில் எழுதினார் கங்கை அமரன். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்த படம் 1977ல் ரிலீஸ் ஆனது. முதன்முதலில் எழுதிய பாடலே நல்ல ஹிட் ஆனது. எஸ். ஜானகி குரலில், 'செந்தூர பூவே செந்தூர பூவே…ஜில்லென்ற காற்றே…' என தொடங்கும் அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. இளையராஜாவின் இசை, ஸ்ரீதேவியின் நடிப்பு, ஒளிப்பதிவாளர் நிவாஸ், இயக்குனர் பாரதிராஜா என பல விஷயங்களும் அந்த பாடலில் சிறப்பாக அமைந்திருக்கும். செந்துாரப்பூவே பாடலை பாடிய எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிய, ஸ்ரீதேவி பிற்காலத்தில் இந்திய சினிமாவில் புகழ்மிக்க நடிகையானார். 16வயதினிலே படம் பாரதிராஜா, ரஜினிகாந்த் போன்றவர்களை அடையாளம் காண்பித்தது. "உண்மையில் செந்துாரப்பூ என ஒன்று உலகில் கிடையாது. கற்பனைக்காக நான் எழுதினேன்" என்று பிற்காலத்தில் பேட்டிகளில் கங்கை அமரன் கூறியிருந்தார். அந்த செந்துாரப்பூ சினிமாவிலும் பின்னர் புகழ் அடைந்தது. இந்த பெயரில் ஒரு படமே வந்தது. அந்த பூ பெயரில் பல பாடல்கள் வந்தன. 'செந்தூரப்பூவே' எனும் பெயரில் தொலைக்காட்சி தொடரும் எடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,gangaiamaren 2. பூவரசம் பூ பூத்தாச்சு கங்கை அமரனின் அடுத்த பாடலும் ஒரு பூவை பற்றி அமைந்தது ஆச்சர்யம். மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் கிழக்கே போகும் ரயில் படத்துக்காக 'பூவரசம் பூ பூத்தாச்சு' பாடல். ரயிலையும், பூவையும் இணைத்து ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை சொல்லும் துள்ளல் பாடலாக எழுதினார் கங்கை அமரன். அந்த பாடலையும் எஸ்.ஜானகி பாடினார். ராதிகாவின் குறும்புத்தனமான நடிப்பு பாடலுக்கு சிறப்பை சேர்த்தது. 1978ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. அக்காலகட்டத்தில், இந்த பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது. 3. புத்தம் புது காலை அடுத்ததாக, இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் , எஸ்.ஜானகி கூட்டணியில் வெற்றி பெற்ற இன்னொரு பாடல் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம் பெற்ற புத்தம் புது காலை. அந்த பாடல் சூப்பர் ஹிட். ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. ஆடியோவில் மட்டுமே இருந்தது. ஆனாலும் அந்த பாடலுக்கு பல ஆண்டுகள் கழித்து விஷூவலாக இடம் பெறுகிற வாய்ப்பு கிடைத்தது. மேகா என்ற படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினார் இளையராஜா. திருமண வீடு பின்னணியில் ஒலிப்பதாக வரும் அந்த பாடலில் நடிகை சிருஷ்டி டாங்கே நடித்திருந்தார். பட மூலாதாரம்,gangaiamaren/Instagram படக்குறிப்பு,இளையராஜாவுடன் கங்கை அமரன் 4. ஆசையை காத்துல துாதுவிட்டு கங்கை அமரன் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற பாடல் ஜானி படத்தில் இடம்பெறும் 'ஆசையை காத்துல துாதுவிட்டு' . 1980ல் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்துக்கும் இளையராஜாதான் இசை. அண்ணன் கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் பாடலை கொடுத்தார் கங்கை அமரன். எஸ்.பி. ஷைலஜா பாடிய அந்த பாடல் இன்றும் ஒலிக்கிறது. 5. சின்ன மணி குயிலே அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அந்த பாடல்களுக்காகவே படம் ஓடியது. இளையராஜாவின் பாடல் மெட்டுக்களுக்காகவே அந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் எடுத்ததாக சொல்வார்கள். அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அதில் இடம் பெற்ற சின்ன மணி குயிலே, நம்ம கடை வீதி, பூவ எடுத்து, உன் பார்வையில், ஒரு மூணு முடிச்சாலே, காலை நேர பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. பட மூலாதாரம்,Youtube 6. நித்தம் நித்தம் நெல்லு சோறு மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் பாடலை அண்ணன் இசையில் எழுதினார் கங்கை அமரன். ரஜினிக்கு பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. இதே படத்தில் இடம்பெற்ற நித்தம் நித்தம் நெல்லு சோறு இன்றைக்கும் பிரபலமாக உள்ளது. அந்த பாடலையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அந்த பாடலுக்கு ஷோபா - ரஜினியின் பாவனைகள் கூடுதல் பலமாக அமைந்தது. இந்த பாடலை மறைந்த வாணி ஜெயராம் பாடினார். 7. பூங்கதவே தாள் திறவாய் நிழல்கள் படத்தில் வரும் பாடல் 'பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய்' இந்த பாடலை எழுதியதும் கங்கை அமரன்தான். இந்த பாடலை தீபன் சக்ரவர்த்தியும், உமா ரமணனும் பாடியிருப்பார்கள். 8. என் இனிய பொன் நிலாவே மூடு பனி படத்தில் வரும் 'என் இனிய பொன் நிலாவே' பாடலுக்கு தமிழ் சினிமாவில் மெலோடிகளில் தனியிடம் உண்டு. 1980ம் ஆண்டில் பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். பின்னாளில் தன்னுடைய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சூர்யா ரயிலில் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை பாடுவதாக அமைத்திருப்பார். 9. என் ஜோடி மஞ்சக்குருவி விக்ரம் படத்தில் இடம்பிடித்த என் ஜோடி மஞ்ச குருவி பாடலையும் கங்கை அமரன் தான் எழுதினார். அந்த பாடல் தமிழகத்தின் பல்வேறு சந்தோஷ நிகழ்வுகளில் இன்றும் பாடப்படுகிறது. இப்போது கூட பைட்கிளப் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி இருந்தார்கள். அப்போதே அர்த்தம் தெரியாத பல வார்த்தைகளை அழகாக பயன்படுத்தியிருந்தார் கங்கை அமரன். 10. விளையாடு மங்காத்தா மங்காத்தா படத்தில் தனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில், இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் விளையாடு மங்காத்தா பாடலை கங்கை அமரன் எழுதினார். அந்த பாடலில் கங்கை அமரனின் மற்றொரு மகனான பிரேம்ஜியும் பாடி இருந்தார். அஜித் ரசிகர்களுக்கு அது விருப்பமான ஹிட் பாடலாக இன்றும் இருக்கிறது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25nk4yg50o
-
400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் சீன விமானம் நாட்டை வந்தடைந்தது
Published By: Vishnu 08 Dec, 2025 | 06:57 PM (நா.தனுஜா) பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன் மனிதாபிமான உதவி நிவாரணப்பொருட்களை ஏற்றிய சீன விமானம் திங்கட்கிழமை (8) நாட்டை வந்தடைந்தது. 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர். அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் சீனா அரசாங்கம் ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர் நிதியுதவியையும், 10 மில்லியன் ஆர்.எம்.பி பெறுமதியான நிவாரணப்பொருட்களையும் வழங்கியுள்ளது. அதுமாத்திரமன்றி சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மேலும் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன்களுக்கு மேற்பட்ட மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் ஷங்காய் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 747 கார்கோ விமானம் திங்கட்கிழமை (8) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது. மேற்படி மனிதாபிமான நிவாரணப்பொருட்களில் வெள்ளத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவக்கூடிய உயிர்காக்கும் ஜக்கெட்கள், கூடாரங்கள், போர்வைகள், மெத்தை விரிப்புக்கள் என்பன உள்ளடங்குகின்றன. நாட்டை வந்தடைந்த இவ்விமானத்தை வரவேற்பதற்கு துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக, பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232815
-
இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!
'இரவு முழுக்க தென்னை மரத்தில்' - இலங்கையில் உயிர் தப்பியவரின் நேரடி அனுபவம் பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் நவம்பர் 27 அன்று திட்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் பெய்த கடும் மழை காரணமாக கலாவௌ ஆறு பெருக்கெடுத்த நிலையில், அநுராதபுரம் அவுகண பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அவுகண பகுதியை சேர்ந்த சம்ஷூதீன் தனது வீட்டை அண்மித்துள்ள பகுதியொன்றுக்கு சென்றுள்ளார். வெள்ளப்பெருக்கு காரணமாக நான்கு பக்கமும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், அருகிலுள்ள தென்னை மரத்தில் ஏறியதாக சம்ஷூதீன் கூறுகிறார். தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள சம்ஷூதீனுக்கு அந்த சந்தர்ப்பத்தில் வேறு எந்தவொரு வழியும் இருக்கவில்லை. பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE சம்ஷூதீன் சிக்குண்டிருந்ததை பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் அவதானித்து, அவரை காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். எனினும், ஒரு நபருக்கு கூட அந்த தென்னை மரத்தை அண்மித்து செல்வதற்கான இயலுமை கிடைக்கவில்லை. காரணம், வெள்ளம் எல்லை மீறி சென்றதாக பிரதேசத்தைச் சேர்ந்த ரகுமான், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, கடற்படையினர் சம்ஷூதீனை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர்களினாலும் அவரை காப்பாற்றுவதற்கான இயலுமை கிடைக்கவில்லை. சம்ஷூதீனை காப்பாற்றும் இறுதி முயற்சியாகவே களமிறங்கியது இலங்கை விமானப்படை. இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர், சம்ஷூதீனை காப்பாற்றும் நடவடிக்கைகளுக்கு களமிறங்கியது. விமானப்படையின் மீட்பு குழு உறுப்பினர்கள், தென்னைமரத்தில் செய்வதறியாதிருந்த சம்ஷூதீனை காப்பாற்றினார்கள். தான் எதிர்கொண்ட ஆபத்து நிறைந்த அந்த அனுபவங்களை சம்ஷூதீன் பிபிசி தமிழுடன் பகிர்ந்துக்கொண்டார். பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE 'மாடுகளை காப்பாற்ற முடியவில்லை' '' நீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று அன்று காலை தொலைபேசி அழைப்பொன்று வந்தது. நான் ஓடிச் சென்று பார்த்தேன். நீர் மட்டம் வெகுவாக அதிகரித்திருந்தது. இதற்கு முன்னர் அவ்வாறு வந்ததில்லை. நீர் பெருக்கெடுத்திருந்தது. ஒன்றுமே செய்ய முடியவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் கட்டப்பட்டிருந்த நான் வளர்த்த மாடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாடுகளை காப்பாற்றுவதற்காக நான் நீந்தி சென்றேன். ஐந்து மாடுகள் இருந்தன. நீர் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொன்றாக அடித்துச் சென்றது. ஒரு மாடு கூட காப்பாற்றப்படவில்லை. அனைத்தும் இறந்து விட்டன." என தெரிவித்தார் சம்ஷூதீன். ''நீர் மட்டம் சடுதியாக அதிகரித்தது. எனக்கு நீந்த தெரியும். ஆனால், நீந்த முடியாதளவு நீர் மட்டம் அதிகரித்திருந்தது. ஒன்றுமே செய்ய முடியாமையினால், அந்த இடத்திலிருந்த தென்னை மரத்தில் ஏறினேன்.'' என சம்ஷூதீன் கூறினார் தென்னை மரத்தில் ஏறிய பின்னர் என்ன நடந்தது என்பது குறித்தும் சம்ஷூதீன் விளக்கினார். பட மூலாதாரம்,RAHUMAN படக்குறிப்பு,மரத்திலிருந்த சந்தர்ப்பத்தில் தான் உணவு உட்கொண்ட விதத்தையும் அவர், பிபிசி தமிழிடம் கூறினார். என்ன சாப்பிட்டார்? ''யாராவது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தென்னை மரத்தில் இருந்தேன். பிரதேச மக்கள் படகொன்றை கொண்டு வந்தார்கள். படகை நான் இருந்த இடத்துக்கு கொண்டு வர முடியவில்லை. கயிறுகளை வழங்க இளைஞர்கள் நீந்தி முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை." என்றார். மேலும் பேசிய அவர், "ஒரு புறத்தில் காடு, வாழைமரங்கள், பாக்கு மரங்கள் இருந்தன. நான் அங்கு அடித்து சென்றிருந்தால் இறந்திருப்பேன். சுனாமி வந்ததை போன்று ஒரே சந்தர்ப்பத்தில் நீர் சடுதியாக அதிகரித்தது." மரத்திலிருந்த சந்தர்ப்பத்தில் தான் உணவு உட்கொண்ட விதத்தையும் அவர் கூறினார். ''என்ன சாப்பிடுவது? சாப்பிடாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் பசி பொறுக்க முடியாமல் இளநீர் ஒன்றை அருந்தினேன். மீண்டும் இளநீரை குடித்தேன். அடுத்த நாள் வரை உண்பதற்கு ஒன்றும் இல்லை. இரவு முழுக்க அங்கேயே கழித்தேன். காலை வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. ஒரு நொடி கூட மழை விடவில்லை. அந்த மழையில் இளநீரை அருந்திக் கொண்டே இருந்தேன்.'' என அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,SRI LANKA AIRFORCE 'மரம் முறிந்து விழும் அளவுக்கு காற்று' ''யாராவது வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன். அருகில் வந்திருந்தால் பாய்ந்து படகை பிடித்துக்கொண்டிருப்பேன். படகால் வர முடியவில்லை. வருவார்கள் என்று இரவு வரை பார்த்துக்கொண்டிருந்தேன். வரவில்லை. மனதை உறுதியாக வைத்துக்கொண்டு அப்படியே இருந்தேன். மரம் சரிந்தால் பாய்ந்து நீந்திச் செல்லும் எண்ணத்துடன் தயாராகவே இருந்தேன்.'' என அவர் கூறினார். நவம்பர் 28 அன்று விமானப்படையினர் வருகை தந்து தன்னை காப்பாற்றியமை குறித்தும் சம்ஷூதீன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''என்னை காப்பாற்றுவதற்காகவே வருகின்றார்கள் என்று நான் அறிந்துகொண்டேன். நான் எழுந்து நின்று அவர்களுக்கு கைகளை காட்டினேன். 'கொஞ்சம் இருங்கள்' என்று கூறி, இரண்டு தடவைகள் சுற்றினார்கள். தென்னை மரம் முறிந்து விழும் அளவுக்கு காற்று வந்தது. என்னால் இருக்க முடியவில்லை. நான் பிடித்துக்கொண்டிருந்தேன்." என அவர் தெரிவித்தார். 'மீண்டு வருவேன்' மேலும் பேசிய அவர், "கடவுள் புண்ணியத்தில் என்னை காப்பாற்றினார்கள். எனது உயிரை காப்பாற்றியமைக்காக அவர்களுக்கு புண்ணியம் சேரட்டும். என்னுடைய நண்பரே என்னை காப்பாற்றினார். அவரை கண்ட பின்னர் எனக்கு நம்பிக்கை வந்தது." என்றார். தன்னை மீட்ட பின்னர் அநுராதபுரத்திற்கு அழைத்து செல்ல முயன்றதாகவும் அவர் கூறினார். "குளிராக இருந்தது. கை, கால்கள் மரத்துப் போயிருந்தன. இந்த காலத்தில் அங்கும் இங்கும் சென்று வர முடியாது என்று சொன்னேன். அதன் பின்னர் கலாவௌ பகுதியில் இறக்கினார்கள். போலீஸாரினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்'' என அவர் கூறினார். விவசாயத்தில் ஈடுபடும் சம்ஷூதீன், தன் அனைத்து விளை நிலங்களும் சேதமடைந்துள்ளன என்று கூறினார். எவ்வாறேனும், ''நான் மீண்டு வருவேன்'' என அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e07jg9q90o
-
அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!
அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு! 08 Dec, 2025 | 03:33 PM நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான நிலைமைகள் காரணமாக மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் மாரடைப்பு , ஏனைய இதய நோய்கள், மனநல பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுவதற்கான ஆபத்து காணப்படுவதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232773
-
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!
அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கண்டனம் 08 Dec, 2025 | 03:55 PM செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ள இத்தூபியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சேதம், சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டார். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் காண வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நிலவும் அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை எந்த விதமான எதிர்மறை கைகளும் பாதிக்க அரசு அனுமதிக்காது. மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இப்படியான நடவடிக்கைகளைத் தடுக்க சமூக ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/232781
-
வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்
வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம் Dec 8, 2025 - 03:52 PM பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இதனை தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தக் குழுவின் தலைவராக பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு இன்று (08) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmix059tv02iso29ndslfe5ct
-
நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்
வடக்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர் 08 Dec, 2025 | 02:59 PM கடந்த மாதம் வடக்கு நைஜீரியாவிலுள்ள கத்தோலிக்க பாடசாலையொன்றில் அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் கடத்தி சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்களில் மேலும் 100 மாணவர்கள்விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட 100 மாணவர்கள் நைஜீரியாவின் தலைநகரான அபூஜாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நைஜர் மாநில உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், விடுவிக்கப்பட்ட 100 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன், பின்னர் குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜர் மாநிலத்தின் அகவாரா மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலையில் கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (21) அததுமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களை கடத்தி சென்றனர். இதில் 10 முதல் 18 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்கள் அடங்குவதாக அந்நாட்டு கிறிஸ்துவ சங்கம் தெரிவித்தது. கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பி சென்று அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர். மேலும் 153 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232767
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 03:06 PM நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/232771
-
மக்களே அவதானம் - புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : பேரா நாகமுத்து பிரதீபராஜா
இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது - பிபிசி வானிலை சேவை 08 Dec, 2025 | 03:34 PM இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகமானது இந்த வாரம் ஒரு புயலாக வலுப்பெறக்கூடும் என பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. இந்தப் புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும். இது புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும் இலங்கையின் சில பகுதிகளில் இடையிடையே நிலையின்மையுடனான கனமழை பெய்யும் என பிபிசி வானிலை ஆய்வாளர் லூயிஸ் லியர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232779
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
இங்கிலாந்தின் போராட்டத்துக்கு 5 விக்கெட் குவியலுடன் முடிவுகட்டினார் நேசர்; ஆஷஸ் தொடரில் 2 - 0 என ஆஸி. முன்னிலை Published By: Vishnu 07 Dec, 2025 | 08:36 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இங்கிலாந்தின் கடும் போராட்டத்துக்கு 5 விக்கெட் குவியலுடன் மைக்கல் நேசர் முடிவுகட்ட, 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா அந்த இரண்டு டெஸ்ட்களையும் மொத்தமாக ஆறு நாட்களுக்குள் நிறைவுசெய்து வெற்றியீட்டியது. முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததுடன் இந்த டெஸ்ட் போட்டி 4 நாட்களுக்குள் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்ததுடன் அவுஸ்திரேலியாவின் களத்தடுப்பு அற்புதமாக இருந்தது. அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 5 பிடிகளைத் தவறவிட்டிருந்தது. இதுவும் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் என்ற மிகவும் மோசமான நிலையில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 37 ஓவர்கள் தாக்குப் பிடித்து 7ஆவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியைத் தாமதிக்க செய்தனர். ஆனால், அவர்கள் இருவரையும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மைக்கல் நேசர் ஆட்டம் இழக்கச் செய்ய இங்கிலாந்தின் தோல்வி நெருங்கியது. பென் ஸ்டோக்ஸ் 50 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மைக்கல் நெசர் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஸ்கோட் போலண்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். வெற்றிக்கு 65 ஓட்டங்கள் தேவைப்பட இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ட்ரவிஸ் ஹெட் 22 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 23 ஓட்டங்களுடனும், ஜேக் வெதரோல்ட் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் கஸ் அட்கின்சன் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 334 (ஜோ ரூட் 138, ஸக் குரோவ்லி 76, ஜொவ் ஆச்சர் 38, ஹெரி ப்றூக் 31, மிச்செல் ஸ்டாக் 75 - 6 விக்.) அவுஸ்திரேலியா 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 511 (மிச்செல் ஸ்டாக் 77, ஜேக் வெதரோல்ட் 72, மானுஸ் லபுஸ்ஷேன் 65, அலெக்ஸ் கேரி 63, ஸ்டீவ் ஸ்மித் 61, கெமரன் க்றீன் 45, ப்றைடன் கார்ஸ் 152 - 4 விக்., பென் ஸ்டோக்ஸ் 113 - 3 விக்.) இங்கிலாந்து 2வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 241 (பென் ஸ்டோக்ஸ் 50, ஸக் க்ரோவ்லி 44, வில் ஜெக்ஸ் 41, ஒல்லி போப் 26, மைக்கல் நேசர் 42 - 5 விக்., ஸ்கொட் போலண்ட் 47 - விக்., மிச்செல் ஸ்டாக் 64 - 2 விக்.) அவுஸ்திரேலியா - வெற்றி இலக்கு 65 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 69 - 2 விக். (ஸ்டீவன் ஸ்மித் 23 ஆ.இ., ட்ரவிஸ் ஹெட் 22, ஜேக் வெதரோல்ட் 17 ஆ.இ., கஸ் அட்கின்சன் 37 - 2 விக்.) ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக் https://www.virakesari.lk/article/232717
-
தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!
தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண பொருட்கள் Published By: Vishnu 07 Dec, 2025 | 10:16 PM டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஞாயிற்றுக்கிழமை தமிழகத்திலிருந்து நிவாரண பொருட்கள் கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்தன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் கப்பல் பணிக்குழுவினரை வரவேற்றதோடு, நிவாரணப்பொருட்களையும் பொறுப்பேற்றனர். தமிழக மாநில அரசினால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் சனிக்கிழமை (6) சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பலொன்றே இவ்வாறு நாட்டை வந்தடைந்தது. https://www.virakesari.lk/article/232721
-
சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் - குருநாகலில் ஜனாதிபதி
சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் - குருநாகலில் ஜனாதிபதி Published By: Vishnu 07 Dec, 2025 | 09:04 PM மீள்குடியேற்றத்திற்காக மெத்தெகெட்டிய, கொகரெல்ல சங்கமு ராஜமஹா விஹாரை விகாராதிபதியினால் 20 ஏக்கர் காணி எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். உருவாக்கப்பட இருக்கும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் கீழ் சட்டம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக தனிப் பிரிவு நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அதன் கீழ் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகள் காண முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். குருநாகல் மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபை வீதிகளையும் அடுத்த 02 வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு திறக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்துமாறும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யக் கூடிய பாதைகள் குறித்த தகவல்களையும் தேவையான நிதியையும் அறிவிக்குமாறும், 2026 ஆம் ஆண்டுக்கு அந்த நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அனர்த்தம் காரணமாக, மாவட்டத்தில் A மற்றும் B தர 1,181 மாகாண வீதிகள் சேதமடைந்துள்ளன. அதே சமயம் 35 பாலங்கள், 162 மதகுகள் என்பன சேதமடைந்துள்ளன. அவற்றின் விரைவான மறுசீரமைப்பு குறித்து இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டது, அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்த மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக விசாரித்த ஜனாதிபதி, இறுதி நுகர்வோர் வரை அந்த சேவைகளை வழங்குவது சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம் தற்போதுள்ள தடைகளை நீக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். குருநாகல் மாவட்டத்தில் 12,729 ஹெக்டெயார் நெல் வயல்கள் அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் 7,215 ஹெக்டெயார் நெல் வயல்கள் மீண்டும் பயிரிடக்கூடிய மட்டத்தில் உள்ளதாகவும், 5,514 ஹெக்டெயார் பயிர்ச்செய்கை செய்ய முடியாதுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். நீர் விநியோகம் இல்லாததால் பயிற்செய்கை மேற்கொள்ள முடியாவிட்டால் தற்காலிக நீர் விநியோகத்தை வழங்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். பயிரிட முடியாத நெல் வயல்களின் அளவை முடிந்தளவு குறைத்து, அந்த வயல்களில் பயிற்செய்கை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரங்களை வழங்கும் திட்டம் குறித்தும் அவர் ஆராய்ந்தார். சோளம், காய்கறிகள் மற்றும் மேலதிக பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் முறை குறித்தும் அவர் கேட்டறிந்தார். கிணறுகளை சுத்திகரிக்கும் பிரதான பொறுப்பு பிரததேச சபைகளுக்கு வழங்கப்படுவதாகவும், முப்படைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பிரதேச சபைத் தலைவர்களிடம் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த துல்லியமான தரவுகளைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், தற்போதுள்ள சட்டங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், அந்தச் சட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், கால்நடை பண்ணைகள் முறையாகப் பதிவு செய்யப்படாததால் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் எழுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த தரவுகளை மீளாய்வு செய்து, இழப்பீட்டுத் தொகைகள் குறித்து விரைவில் கொள்கை ரீதியான முடிவெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், நன்னீர் மீன்பிடித் தொழிலை மீளமைப்பது, சுகாதார சேவை சார்ந்த தேவைகள் மற்றும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. மக்களை மீள்குடியேற்றுவதற்கான காணிகளை அடையாளம் காண்பது மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது, மேலும் இழப்பீடு வழங்குவதிலும் மக்களை மீள்குடியேற்றுவதிலும் பிரதேச செயலாளர்கள் முழுமையாக தலையிட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார். இதேவேளை, வீடுகளை இழந்த மக்களுக்காக தமது விகாரைக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை வழங்க மெத்தெகெட்டிய சங்கமு ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், உதம்மிட வித்தியாலய ஆசிரியருமான வணக்கத்திற்குரிய அளுத்கம மங்கள தேரர், நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான ஆவணங்களும் இதன் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. வடமேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் தலையீட்டின் கீழ், வடமேல் மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து வழங்கிய 100 இலட்சம் ரூபா நிதி நன்கொடை மற்றும் கொகரெல்ல அரிசி ஆலையின் உரிமையாளர் எஸ்.எம். வசந்த சமரக்கோன் வழங்கிய நன்கொடை ஆகியவையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் குருநாகல் மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232720
-
மக்களே அவதானம் - புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : பேரா நாகமுத்து பிரதீபராஜா
புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : வானிலை தொடர்பான முக்கிய விடயங்களை எதிர்வுகூறுகிறார் நாகமுத்து பிரதீபராஜா Published By: Vishnu 07 Dec, 2025 | 08:41 PM தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வானிலை எதிர்வுகூறலொன்றை விடுத்து, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று காணப்படுகிறது. இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்கு தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது. எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைத்தால் அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே மேற்குறிப்பிட்ட (09.12.2025 முதல் 13.12.2025) தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அன்புக்குரிய இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். துறைசார் அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது. குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சற்று குறைவாகப் பேணுவது சிறந்தது. அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/232718
-
அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்
அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும் Dec 8, 2025 - 08:16 AM அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் அது எமது மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்று எனவும் ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். நீங்கள் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும் எனவும், பின்னர் அந்தப் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், யாரேனும் இந்த நிலைமை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பின், அருகிலுள்ள அரச வைத்தியசாலையின் மருத்துவரைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் அறிவித்துள்ளார். பேராசிரியர் மியுர சந்திரதாச மேலும் தெரிவிக்கையில், இந்த அனர்த்தம் காரணமாக பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பின், அவர்களின் வாழ்க்கையை இயன்றவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றார். உதாரணமாக, அவர்களுக்கு விளையாடுவதற்கான சூழலை இயன்றவரை உருவாக்கிக் கொடுத்தல், நண்பர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களைச் செய்ய முடியும் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் கோபம் வருதல், தூக்கமின்மை, பசியின்மை, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும் எனவும் பேராசிரியர் மியுர சந்திரதாச தெரிவித்தார். மேலும், எமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இயற்கை அனர்த்தங்களுக்கும் கசப்பான அனுபவங்களிற்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், மக்களின் ஒற்றுமை, தைரியம் மற்றும் விடாமுயற்சி காரணமாக இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்ப முடிந்ததாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுர சந்திரதாச இது குறித்து மேலும் கூறுகையில், "இம்முறை வெள்ள நிலைமை மற்றும் 'திட்வா' புயல் காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டது. இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் எமது மனதிற்கு முதலில் தோன்றுவது, எமக்கு பெரியதொரு துன்பம் நேர்ந்துவிட்டது என்ற ஆழ்ந்த கவலையாகும். அத்துடன் வெறுமை, நம்பமுடியாத அதிர்ச்சி மற்றும் எதையும் செய்ய விருப்பமில்லாத நிலையும் ஏற்படலாம். இந்த அனர்த்த நிலை காரணமாக நீங்கள் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியிருப்பின், உங்களுக்காக உதவுவதற்கு இலங்கையில் உள்ள அனைவரும் தயாராக உள்ளனர். எனவே, உங்கள் முயற்சியையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையையும் கைவிட வேண்டாம். வீடு இழந்திருந்தாலும், குடும்பத்தில் ஒருவரை இழந்திருந்தாலும்.. உங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்," என்று தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmiwjvxuw02hko29n502cj504
-
இந்திய கழிவறை - மேற்கத்திய கழிவறை: யாருக்கு எந்த முறை உகந்தது?
இந்திய கழிவறை - மேற்கத்திய கழிவறை: யாருக்கு எந்த முறை உகந்தது? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும், கழிவறை செல்வது பற்றிச் சிந்தித்தவுடன் பலருக்கும் கால்களை மடக்கி உட்காரும் முறைதான் மனக் கண்ணில் வரும். ஆனால், மேற்கத்திய முறையான நாற்காலியில் அமர்வதைப் போன்ற வகையில் உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிவறைகளும் தற்போது இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டம் முழுவதுமே கணிசமாக பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் கழிவறை பயன்பாட்டில் இந்திய பாணி அல்லது மேற்கத்திய பாணி ஆகிய இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு உகந்தது? என்கிற விவாதம் தொடர்ச்சியாக எழுகிறது. இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியான ஓர் ஆய்வு, அறிவியல்பூர்வ பதிலை வழங்குகிறது. இரண்டுமே மலம் கழிக்க ஏதுவான பாணியாக இருப்பதாகவும் இந்திய பாணி, மேற்கத்திய பாணி இரண்டிலுமே சாதகங்களும் பாதகங்களும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடலின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு எந்த பாணியில் மலம் கழிப்பது சிறந்த தேர்வாக இருக்கும்? மலம் கழிக்கும் முறையின் பின்னுள்ள அறிவியல் மலம் கழித்தல் என்பது மிகச் சாதாரண விஷயமாக தெரியலாம். ஆனால் உடலின் உட்புறத்தில், "தசைகள், உடல் இயக்கத்தின் கோணங்கள் ஆகியவற்றின் சிக்கலான அமைப்பைப் பொறுத்து, எளிதில் வெளியேறுவதும், சிரமப்படுவதும் இருப்பதாக" ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images இதில், மலம் வெளியேறும் பாதையான மலக்குடல்வாய் எந்த அமைப்பில் இருக்கிறது என்பதும் பங்களிப்பதாகக் கூறும் மூத்த இரைப்பை குடல் மருத்துவர் கயல்விழி ஜெயராமன், "இந்த மலக்குடல்வாய் பாதை நேர் கோணத்தில் இருக்கும்போது மலம் எளிதாக வெளியேறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாற்காலி போன்ற மேற்கத்திய பாணி கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது இந்தப் பாதை வளைந்திருப்பதால் சிலர் மலம் கழிப்பதில் சற்று சிரமங்களைச் சந்திக்கலாம்" என்றும் கூறினார். அதாவது ஜூலை மாதம் வெளியான ஆய்வு முடிவுகள்படி, மலக்குடல்வாய் பாதை, மலம் கழிக்கும்போது நேராக்கப்பட வேண்டும். ''அதுதான் இந்திய பாணி டாய்லெட் பயன்பாட்டில் நடக்கிறது." என்கிறார் கயல்விழி ஜெயராமன் அதாவது, ஒருவர் குத்தவைத்து அமரும்போது, தொடைகள் வயிற்றுடன் அழுந்துகின்றன. அப்போது உடல் இயல்பாகவே முன்னோக்கிச் சாய்கிறது. அதனால், "தசைகள் தளர்வடைவதாகவும் மலக்குடல்வாய் பாதை நேராவதாகவும்" கூறுகிறார் மருத்துவர் கயல்விழி. "மாறாக, மேற்கத்திய பாணி கழிவறையில், ஒருவர் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் போது தசைகள் இறுக்கமாகவும், மலக்குடல்வாய் வளைந்தும் இருப்பதால், மலத்தை வெளியேற்ற கூடுதலாக அழுத்தம் கொடுத்து வேண்டியிருப்பதாக" ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images இருப்பினும், இதை மட்டும் அடிப்படையாக வைத்து மேற்கத்திய பாணி கழிவறை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று கூறிவிட முடியாது என்கிறார் மருத்துவர் கயல்விழி. அவரது கூற்றுப்படி, இரண்டு விதமான கழிவறைகளுமே பல்லாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. "ஒருவேளை மேற்கத்திய பாணியில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்திருந்தால் அதன் பயன்பாடு இவ்வளவு காலம் நீடித்திருக்காது." அதோடு, "முதியவர்கள், உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மேற்கத்திய பாணி கழிவறை பயனுள்ளதாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார். மலம் கழிக்க சிறந்த முறை எது? மலம் கழிப்பதைப் பொருத்தவரை, "இந்திய பாணியில் முழுமையாகக் குத்தவைப்பது, மேற்கத்திய பாணியில் நாற்காலி வடிவத்தில் உட்காருவது மற்றும் அதே பாணியில், கால்கள் மட்டும் சற்று உயரமாக இருக்கும் வகையில் முக்காலி அல்லது ஸ்டூலை காலுக்கு அடியில் பயன்படுத்திக் கொள்வது ஆகிய மூன்று வழிகள் உலகளவில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன." என்கிறார் மருத்துவர் கயல்விழி. இதில் எந்த வகையிலும் பெரியளவில் இடையூறுகள் ஏற்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் "நாற்காலி வடிவத்தில் உட்கார்ந்தாலும், கால்களை உயர்த்தி மடக்கியபடி உட்காருவது மலம் கழிப்பதை எளிமையாக்குவதால், மேற்கத்திய பாணியில்கூட இப்படியான மாறுதல்களைச் செய்து கொள்கிறார்கள்," என்று விளக்கினார். அதாவது, இந்திய பாணியில் மலம் கழிக்கும்போது மலக்குடல்வாய் நேர்க்கோணத்தில் இருக்கிறது. அதனால், மலம் வெளியேறுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருப்பதில்லை. ஆனால், நாற்காலி வடிவ கழிவறையைப் பயன்படுத்தும்போது, சில சிரமங்கள் ஏற்படுவதால், அதைத் தவிர்க்க கால்களை ஸ்டூல் வைத்து உயர்த்திக் கொள்ளும் பழக்கம் பலராலும் பின்பற்றப்படுகிறது. பட மூலாதாரம்,Getty Images மேலும், ஆய்வில் பங்கெடுத்த தன்னார்வலர்கள், "குந்துதல் முறையில், மலத்தை வெளியேற்றுவதற்குக் குறைந்த அளவிலான உழைப்பையே செலுத்த வேண்டியுள்ளது. மேற்கத்திய பாணியில் இருக்கக்கூடிய, சற்றுக் கூடுதல் அழுத்தம் கொடுத்து மலத்தை வெளியேற்ற வேண்டிய சூழல், இதில் இருக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளனர். அதோடு, வெளிப்புற அழுத்தம் அதிகப்படியாக கொடுக்கப்படும்போது, அந்த அசௌகரியம், மூல நோய், மலக்குடல் இறக்கம், மலப்புழையில் பிளவுகளை உண்டாக்குவது போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. இது மட்டுமின்றி, எந்தவித இடையூறுமின்றி மலம் எளிதாக வெளியேறுவதால் இந்திய பாணியிலான குந்துதல் முறை, ஒருவர் கழிவறையில் செலவழிக்கும் நேரத்தையும் குறைப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஜர்னல் ஆஃப் அட்வான்ஸ்டு மெடிக்கல் அண்ட் டென்டல் சயின்சஸ் ரிசர்ச் ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை, இந்திய பாணி கழிவறைகளைப் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படுவதில்லை எனவும் செரிமானம் சரியான முறையில் நடப்பதாகவும் கூறுகிறது. அதேவேளையில், "இந்திய பாணி கழிவறைகள், முதியவர்கள், உடல் இயக்கக் குறைபாடுகளைக் கொண்டவர்கள் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மேற்கத்திய கழிவறைகள் அல்லது ஸ்டூல் போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி இந்திய கழிவறைகளைப் பயன்படுத்துவது அவர்களுக்கு வசதியாக இருப்பதை நாமே பல வீடுகளிலும் பார்க்கிறோம். எனவே, எந்தக் கழிவறையைப் பயன்படுத்தினாலும், உணவுமுறையை, சரியான அளவுகளில் ஊட்டச்சத்துகளை உட்கொள்வதற்கு ஏற்பத் திட்டமிடுவதும், எந்தச் சிக்கலுமின்றி மலம் வெளியேறுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது," என்று கூறுகிறார் மருத்துவர் கயல்விழி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பாணி கழிவறையைப் பயன்படுத்துவதில் சிரமங்களை சமாளிக்க, இதுபோன்ற மாற்றுத் தீர்வுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்திய கழிவறை வடிவங்களில் மேற்கத்திய பாணி கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சமூகங்களை உருவாக்க முயல்வதன் மூலம் சுகாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. அந்தத் திட்டம், "மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் ஆகியோரும் எளிதில் அணுகுவதற்கு ஏற்ற கழிவறை வடிவங்களைக் கருத்தில் கொண்டிருந்ததாகவும்" அதற்கெனவே, 'குறைபாடுகள் உள்ளோர் அணுக ஏதுவான வீட்டு சுகாதாரம் பற்றிய கையேட்டில்' இந்திய பாணியிலான குந்துதல் முறைக்கு மாறாக "இரண்டு சிக்கனமான கழிவறை வடிவமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும்" நேஷனல் மெடிக்கல் ஜர்னல் ஆஃப் இந்தியா என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை கூறுகிறது. ஆனால், "அந்த மாற்றுத் தீர்வுகள், அதாவது மேற்கத்திய பாணியிலான நாற்காலி போன்ற கழிவறை வடிவங்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் பயன்படுத்தப்படவில்லையோ என்ற சந்தேகத்தை கள ஆய்வுகள் எழுப்பியிருப்பதாக" கட்டுரையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டுரையின் கூற்றுப்படி, இந்திய பாணி கழிவறை அனைவருக்கும் ஏற்படையதல்ல மற்றும் மேற்கத்திய பாணியிலான கழிவறைகளின் தேவையும் சமூகத்தில் இருக்கவே செய்கிறது. அதற்காக, "ஸ்டூல் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்திய கழிவறைகளை மேற்கத்திய பாணிக்கு ஒத்த வகையில் மறுவடிவமைப்பு செய்து, பயன்படுத்தும் முறையைப் பல குடும்பங்களில் நம்மால் அவதானிக்க முடிகிறது. அதற்கேற்ற உபகரணங்களும் சந்தையில் கிடைக்கின்றன." என்று கூறுகிறார் மருத்துவர் கயல்விழி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மேற்கத்திய பாணி கழிவறையில், மலக்குடல்வாய் பாதை நேரான கோணத்தில் இருப்பதற்காக, கால்களுக்கு ஸ்டூல் வைக்கும் பழக்கமும் பின்பற்றப்படுகிறது மேற்கத்திய பாணியில் காலுக்கு ஸ்டூல் வைப்பது உதவுமா? இந்திய பாணியிலான குந்துதல் முறையில் மலம் கழித்து முடிக்கும்போது ஏற்படும் தன்னிறைவு, மேற்கத்திய பாணியில் அனைத்து நேரங்களிலும் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்று ஜூலை மாதம் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, "மலம் முழுமையாக வெளியேறவில்லையோ என்ற உணர்வை ஏற்படுகிறது. இது மலச்சிக்கல், செரிமான அசௌகரியத்துடன் தொடர்புடையது. இந்த உணர்வு மேற்கத்திய கழிவறைகளைப் பயன்படுத்தியவர்களிடம் அதிகம் தென்பட்டது," என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், இத்தகைய அசௌகரியங்களைச் சமாளிக்க "கால்களுக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது ஓரளவு உதவுவதாக" கூறுகிறார் மருத்துவர் கயல்விழி. "கால்களை ஒரு சிறிய ஸ்டூலில் வைத்து உயரப்படுத்திக் கொள்வது, மலக்குடல்வாய் கோணத்தை மேம்படுத்துகிறது. இதனால், மேற்கத்திய பாணியில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன" என்றும் அவர் தெரிவித்தார். கழிவறைகளும் வாழ்க்கை முறை மாற்றங்களும் இந்தியாவில் குந்துதல் நிலையிலான கழிவறை பயன்பாட்டு முறையில் இருந்து நாற்காலி வடிவ கழிவறை முறைக்கு நிகழ்ந்த மாற்றம், உலகமயமாக்கப்பட்ட அழகியல் வடிவமைப்புகளுடன் தொடர்புடையது. கடந்த சில ஆண்டுகளாக நாற்காலி வடிவ கழிவறைகளே, பெரும்பாலான புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்களில் பொருத்தப்படுகின்றன. மலச்சிக்கல், வீக்கம், மூல நோய் போன்ற பாதிப்புகள் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, அதற்கும் இதற்கும் இடையே தொடர்பு இருக்கக்கூடுமா என்று மருத்துவர் கயல்விழியிடம் கேட்டபோது, "கழிவறை வடிவங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவரது உடல் பாதிப்புகளை முடிவு செய்துவிட முடியாது. உணவுமுறை, வழக்கமாக உட்காரும் முறை, மன அழுத்தம் எனப் பலவும் அதற்குப் பங்கு வகிக்கிறது," என்று கூறினார். இந்தியாவில் தற்போது இருவிதமான கழிவறை முறைகளும் பழக்கத்தில் உள்ளதைக் குறிப்பிட்ட அவர், "குடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, உடலுக்குத் தேவையான தண்ணீரைப் பருகுவது போன்ற பழக்கங்களை முறையாகப் பின்பற்றினால், எப்படிப்பட்ட கழிவறையைப் பயன்படுத்தினாலும் சரி, மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதில் எந்த இடையூறும் இருக்காது," என்றும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdegey9p07eo
-
இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை
இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை Dec 7, 2025 - 07:23 PM 'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தீர்மானித்துள்ளது. இந்த அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழான உதவிகள், இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் வழங்கப்படும் கடன் வசதிக்கு மேலதிகமாக வழங்கப்படும் நிதியிடல் வசதியாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் நாட்டிற்கு கிடைக்கவுள்ள ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவிலிருந்து நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, இலங்கையினால் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி நிதி உதவிக்கான அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் எவன் பப்பஜோர்ஜியோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். https://adaderanatamil.lk/news/cmivs9kmk02h7o29nc0m9axqp
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
புலர் அறக்கட்டளையால் 5ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 3
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
அவுஸ்திரேலியாவுடனான 2ஆவது ஆஷஸ் டெஸ்டில் மோசமான நிலையில் இங்கிலாந்து 07 Dec, 2025 | 06:31 AM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் பகல் இரவு போட்டியில் இங்கிலாந்து மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது. முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியாவை விட 177 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இங்கிலாந்து, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு இங்கிலாந்து மேலும் 43 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸக் க்ரோவ்லி 44 ஓட்டங்களையும் ஒல்லி போப் 26 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. முதல் இன்னிங்ஸ் ஹீரோ ஜோ ரூட் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக், மைக்கல் நேசர், ஸ்கொட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் மூன்றாம் நாளான சனிக்கிழமை (06) தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 378 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா மொத்த எண்ணிக்கை 511 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. அலெக்ஸ் கேரி தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்களைப் பெற்றதுடன் மைக்கல் நேசருடன் 7ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மிச்செல் ஸ்டாக் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 141 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்றார். மிச்செல் ஸ்டாக், ஸ்கொட் போலண்ட் (21 ஆ.இ.) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/232635
-
'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை
'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''என் கணவர் கொழும்புல கஷ்டப்பட்டு வேலை செய்து, சாப்பிடாமல் கூட இருந்து அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போயிட்டு தான் கஷ்டப்பட்டு இந்த வீட்டை பெரிய வீடாக கட்டி எங்களையும் சந்தோஷமாக வைத்திருந்தாரு. இப்போ வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.'' என வீட்டை இழந்து தவிர்க்கும் கோகிலவதனி தெரிவிக்கின்றார். மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோகிலவதனியின் கணவர் தயாளன், கொழும்பில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். திட்வா புயலின் தாக்கத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பேரில் கோகிலவதனியும் ஒருவர் ஆவார். தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்தும், கடன்களை பெற்றும் தமது எதிர்காலத்தை எண்ணி கட்டிய வீடு திட்வா புயல் காரணமாக இன்று இல்லை என்கிறார் அவர். உறவினர் வீட்டில் குழந்தைகள் கடந்த 26-ஆம் தேதி பெய்த கடும் மழையின் போது இவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் கோகிலவதனியின் வீட்டின் ஒரு புறம் முற்றாக சேதமடைந்துள்ளது. மண்மேடு ஒரு புறத்தை சேதப்படுத்தியுள்ளதுடன், மறுபுறத்தில் வீடு தாழிறங்கியுள்ளது. வீடு கட்டியுள்ள நிலம் தாழிறங்கதாலும், வீடு முழுவதும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாலும் இந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடு அமைந்துள்ள நிலத்திற்கு கீழ் ஊற்று நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க முடிந்ததுடன், அதனால் வீடு படிப்படியாக தாழிறங்கி வருகின்றது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். வீட்டை இழந்து கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த கோகிலவதனியின் குழந்தைகள், தற்போது பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடைந்த வீடு, மின்சாரம் இல்லாத நிலைமை, குடிநீர் என அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள தாம் எவ்வாறு பிள்ளைகளை இந்த இடத்தில் வைத்திருப்பது என்கிறார் கோகிலவதனி. படக்குறிப்பு,மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. சமைத்து சாப்பிட கூட இயலாத நிலை ''பிள்ளைகளையும் அங்க விட்டு விட்டோம். போன் பண்ணி எப்போ வாரீங்க. எப்போ வாரீங்க, எப்போ கூட்டிட்டு போறீங்கனு கேட்குறாங்க. அவர்களை கூட்டிட்டு வந்து எங்க வைத்திருப்பது என்று தெரியவில்லை. அவங்களும் பாவம். நாங்களும் என்ன செய்வது? இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்க இயலாத நிலைமை. நாங்களே இன்னுமொரு இடத்தில தான் தங்கியிருக்கின்றோம். அடுத்த நாள் காலையில வீடு இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் வருகின்றோம் நாங்கள். சமைத்து சாப்பிட கூட இயலாத நிலைதான் இருக்கு.'' என கோகிலவதனி குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,தயாளன் கடுமையான கஷ்டத்திற்கு மத்தியில் கட்டிய வீட்டில் தான் வாழ்ந்தது சிறிது காலமே என கோகிலவதனி கண்ணீர் மல்க கூறுகின்றார். ''இந்த வீட்டில் வந்து நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். வீடு கட்டி ஐந்து ஆறு வருஷமாகுது. நாங்கள் பிள்ளைகளோட சந்தோஷமாக இருந்தோம் . இப்போது எப்படி திரும்ப வந்து இந்த வீட்டில இருப்பது என்று கவலையாக இருக்குது. நகை எல்லாம் வச்சு தான் இந்த வீட்டை கட்டி எடுத்தோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடுப்பு கூட இல்லை. இன்னொருத்தர் கிட்ட வாங்கி தான் நாங்க உடுப்பை உடுத்துறோம்'' என அவர் குறிப்பிடுகின்றார். ''இனி இந்த வீட்டில் வாழ கஷ்டம். சின்ன மழை வந்தாலும் இந்த இடத்தில் இப்போது இருக்க முடியாது." படக்குறிப்பு,தயாளன் "கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் தான் இந்த வீட்டை கட்டினோம். அதுவும் இல்லாமல் போயிட்டது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது," என்கிறார் தயாளன். தயாளன், கோகிலவதனி தம்பதிக்கு மாத்திரம் அல்ல. லட்சக்கணக்கானோர் இப்படியான பல பிரச்னைகளை திட்வா புயலினால் எதிர்கொண்டுள்ளனர். வீடுகளை சுத்திகரிக்கவும், வீடுகளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளவும், வீடுகளை புனரமைத்துக் கொள்ளவும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார். தமது எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதை எண்ணி தயாளனும் கோகிலவதனியும் இந்த நாட்களை கடத்தி வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czj0m0pdlvyo
-
அனர்த்தங்களில் சிக்கி புதையுண்ட 8 சடலங்கள் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு
அனர்த்தங்களில் சிக்கி புதையுண்ட 8 சடலங்கள் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு 07 Dec, 2025 | 06:44 PM நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மண்ணுள் புதையுண்ட சடலங்களை கண்டுபிடிப்பதற்காக ஜக்கிய அரபு எமிரேட்டிஸ் இயங்கும் துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை ரஜத்தனவில்லவில் 8 சடலங்களை தமது மோப்ப நாய்கள் ஊடாக கண்டுபிடித்துள்ளனர். இந்த அணியினர் தமது வாகனங்கள், அம்புலன்ஸ் மற்றும் மோப்ப நாய்கள், வல்லங்கள் சகிதம் இலங்கை வந்தடைந்து, அனர்த்தத்தில் காணாமல் போனோர்களது சடலங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நாட்டு மக்கள் அவர்களது உன்னத சேவையை ஆதரவளித்து, சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர். இவர்களது சகல மொழிபெயர்ப்பு, கொழும்பில் உள்ள தூதரக அதிகாரி அப்புதல்லாஹ் மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி, பொலிஸார் இணைந்து இச்சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232710
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு அவுஸ்திரேலியா துணிச்சலான பதில் 05 Dec, 2025 | 11:21 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் பகல் இரவு போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 334 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 376 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவுஸ்திரேலியா சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவருமே திறமையை வெளிப்படுத்தியதுடன் அவர்களில் மூவர் அரைச் சதங்கள் குவித்தனர். அத்துடன் முதல் நான்கு விக்கெட்களில் பதிவான 50 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை பலப்படுத்தின. ட்ரவிஸ் ஹெட் (33), ஜேக் வெதரோல்ட் ஆகிய இருவரும் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து ஜேக் வெதரோல்ட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஜேக் வெதரோல்ட் 72 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் மானுஸ் லபுஷேன் (65), ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதனை அடுத்து ஸ்டீவன் ஸ்மித் (61), கெமரன் க்றீன் (45) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஜொஷ் இங்லிஸ் 23 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆட்ட நேர முடிவில் அலெக்ஸ் கேரி 46 ஓட்டங்களுடனும் மைக்கல் நேசர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 113 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. ஜோ ரூட்டும் இழந்த ஜொவ்ரா ஆச்சரும் கடைசி விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஜொவ்ரா ஆச்சர் 38 ஓட்டங்ளைப் பெற்றதுடன் ஜோ ரூட் 138 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 75 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும். https://www.virakesari.lk/article/232574
-
யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! - அச்சத்தில் மக்கள்
யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! - அச்சத்தில் மக்கள் 07 Dec, 2025 | 05:19 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232702
-
யாழில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை - யாழ். மாவட்ட செயலாளர் ம. பிரதீபன்
யாழில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை - யாழ். மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 04:19 PM வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25, 000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால், பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய பேரிடர் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வீட்டை வசிப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், துப்பரவுப்பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு உபகரணங்களை மீட்டெடுப்பதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபா 25 ஆயிரம் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அந்த வகையில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய 05ஆம் திகதி கடிதத்தில் முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி சேதமடைந்த வீடுகள், வீடுகளுக்கு சேதம் ஏற்படாவிட்டாலும் சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், உதவித்தொகையினை பெறுவதற்கு தகுதியானது என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தருக்கு சரியான தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியது பிரதேச செயலரின் கடமையாகும். இவ்வாறான வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது அனைத்து கிராம மட்ட அலுவலர்களும் நேரடியாக பிரிவிற்கு சென்று தரவுகளை பெற்றுக்கொள்வதனை பிரதேச செயலர் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். படிவத்தினை உரிய முறையில் பூர்த்தி செய்து உறுதிப்படுத்திய வகையில் மேற்படி கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவிற்கு தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற கடமைப்பட்டிருப்பதனால் இவ்விடயங்களில் தனிப்பட்ட கவனமெடுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலினை இற்றைப்படுத்தி உறுதி செய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232681