Everything posted by ஏராளன்
-
கிணற்றுக்குள் பாய்ந்த வேன்: குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி..!
Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 10:33 AM இந்தியாவில் 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை ஆலயத்தில் பிரதிஷ்டை விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வேனில் சென்றுள்ளனர். சனிக்கிழமை (17) மாலை 4 மணி அளவில், சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி- மீரான்குளம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில், ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின் ஆகிய 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. https://www.virakesari.lk/article/215021
-
நியூயார்க்: புரூக்ளின் பாலம் மீது 277 பேருடன் சென்ற கடற்படை கப்பல் மோதியது - என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு,நியூயார்க்கில் புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோ கடற்படை பயிற்சிக் கப்பல் மோதி நிற்கும் காட்சி. 18 நிமிடங்களுக்கு முன்னர் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் மோதியதில் 2 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 19 பேர் காயமடைந்தனர் என்று நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை மோதலுக்கு முன்பு அந்த படகில் மின்தடை ஏற்பட்டதாக எரிக் ஆடம்ஸ் கூறினார். நல்லெண்ணப் பயணமாக வருகை தந்த அந்த கப்பலில் 277 பேர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த குவாடெமோக் என்ற அந்த பயிற்சிக் கப்பல் சனிக்கிழமை மாலை புரூக்ளின் பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்தபோது அதன் உயரமான கம்பங்கள் பாலத்தின் மீது மோதியதை காட்சிகள் காட்டுகின்றன. கம்பங்களின் சில பகுதிகள் கப்பலின் மேல்தளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மோதலின் போது சில பணியாளர்கள் கம்பங்களின் மீது நின்று கொண்டிருந்தனர் என்றும், இதனால் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "கப்பலில் இருந்த 277 பேரில், 19 பேர் காயமடைந்தனர், அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மேலும் 2 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்." என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, புரூக்ளின் பாலத்திற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மேயர் கூறியிருந்தார். இந்த மோதலால் யாரும் தண்ணீரில் விழவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 22 பேர் காயமடைந்ததாக மெக்சிகோ கடற்படை ஏற்கனவே தெரிவித்திருந்தது. கப்பல் சேதமடைந்ததை உறுதிப்படுத்திய மெக்சிகோ கடற்படை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியது. குவாடெமோக் பயிற்சிக் கப்பல் தனது இரண்டு கம்பங்களின் மேற்பகுதியை இழந்துவிட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நியூயார்க் கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, "இயந்திரக் கோளாறு" மற்றும் மின்வெட்டு காரணமாக அந்த கப்பல், பாலத்தின் ஒரு தூணில் மோதியிருக்கலாம் என்று நியூயார்க் காவல் துறை அதிகாரி கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES கப்பல் வருவதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அது பாலத்தின் மீது மோதியதால் கரையில் இருந்து விரைந்து வெளியேறிவிட்டனர். புரூக்ளின் பாலம், மன்ஹாட்டனில் உள்ள தெற்கு தெரு துறைமுகம் மற்றும் புரூக்ளினில் உள்ள டம்போ ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களிடம் நியூயார்க் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. "விபத்து நடந்த இடத்தின் சுற்றுப்புறப் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசலையும், அவசர கால வாகனங்கள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதையும் எதிர்பார்க்கலாம்" என்று நியூயார்க் காவல் துறை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மெக்சிகோ கடற்படையின் கூற்றுப்படி, 297 அடி நீளம் (91 மீ) மற்றும் 40 அடி (12 மீ) அகலம் கொண்ட இந்தக் கப்பல், 1982 ஆம் ஆண்டு முதல் முறையாக கடலில் பயணித்தது. ஒவ்வொரு ஆண்டும் கடற்படை இராணுவப் பள்ளியில் வகுப்புகள் முடிந்ததும் இது கடலில் பயணிக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி 277 பேருடன் மெக்சிகோ துறைமுகமான அகபுல்கோவிலிருந்து புறப்பட்டதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. அதன் இறுதி இலக்கு ஐஸ்லாந்து செல்வதாக இருந்தது. (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgmj10vkxldo
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்; விசாரணைக்கு அழைத்தும் வராத அதிபரும் ஆசிரியரும் கொழும்பு – கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பம்பலபிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் குறித்த மாணவி கல்விகற்ற பாடசாலை அமைந்துள்ள கல்வி வலய அதிகாரிகளிடம் இந்த அறிக்கைகள் கோரப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது. இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலபிட்டியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் அதிபரும், உயிர்மாய்த்துக் கொண்ட மாணவியை துஷ்பிரயோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரும் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமைக்கான காரணம் தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/318077
-
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!
ரஷ்யா - யுக்ரேன் இடையே 3 ஆண்டுக்குப் பிறகு நேரடி பேச்சுவார்த்தை - என்ன நடந்தது? பட மூலாதாரம்,TURKISH FOREIGN MINISTER OFFICE HANDOUT/EPA-EFE கட்டுரை தகவல் எழுதியவர், ஒர்லா குரின் பதவி, பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 1945-ம் ஆண்டுக்கு பிறகான ஐரோப்பாவின் மிக மோசமான போரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரு சிறிய ராஜதந்திர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் மார்ச் 2022 க்குப் பிறகு முதல் முறையாக பேச்சுவார்த்தைக்கு நேருக்கு நேர் வந்தனர். இந்த சந்திப்பு, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள பாஸ்ஃபரஸ்ஸின் கடற்கரையில் அமைந்துள்ள ஓட்டமான் காலத்து அரண்மனையில் நடைபெற்றது. துருக்கி மற்றும் அமெரிக்காவின் அழுத்தமும் ஊக்கமும் இரு தரப்பினரையும் அங்கு கொண்டு வர உதவியது. இந்த சந்திப்பின் போது கைகுலுக்கல்கள் எதுவும் இல்லை. யுக்ரேனிய பிரதிநிதிகளில் பாதி பேர், தங்கள் நாடு தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது என்பதை நினைவூட்டும் வகையில் ராணுவ சீருடைகளை அணிந்திருந்தனர். அந்த அறையில் யுக்ரேன், துருக்கி மற்றும் ரஷ்யாவின் கொடிகளும், ஒரு பெரிய மலர் அலங்காரமும் இருந்தது. யுக்ரேனில் நிரம்பி வழியும் கல்லறைகள் மற்றும் தகர்க்கப்பட்ட நகரங்களிலிருந்து வெகு தூரத்தில் அமைந்திருந்தது இந்த உலகம். 1000 போர்க் கைதிகளை விடுவிக்க இருதரப்பும் ஒப்புதல் துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், இருதரப்பின் முன்னால் இரண்டு பாதைகள் உள்ளன என்று பிரதிநிதிகளிடம் கூறினார். அவரது கூறுப்படி, ஒன்று அமைதிக்கு வழிவகுக்கும், மற்றொன்று அதிக இறப்பு மற்றும் அழிவுக்கு வழிவகுக்கும். பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீடித்தது. அதற்குள்ளாகவே வலுவான கருத்து வேறுபாடுகள் வெளிப்பட ஆரம்பித்தன. ரஷ்யா "புதிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை" முன்வைத்ததாக யுக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போர் நிறுத்தத்திற்கு ஈடாக யுக்ரேன் அதன் சொந்த பிராந்தியத்தின் பெரும் பகுதிகளில் இருந்து அதன் துருப்புகளை திரும்பப் பெற வலியுறுத்துவதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,HANDOUT PHOTO BY ARDA KUCUKKAYA/TURKISH FOREIGN MINISTRY VIA GETTY IMAGES) போர் நிறுத்தம் என்ற முக்கியமான விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும் - எதிர்பார்த்தது போலவே - ஒரு உறுதியான முடிவு பற்றிய செய்தி உள்ளது. இரு தரப்புகளுமே 1,000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டன. "இது மிகவும் கடினமான நாளின் நல்ல முடிவு" என்று யுக்ரேனின் வெளியுறவு துணை அமைச்சர் செர்ஹி கிஸ்லிட்ஸ்யா கூறினார். "1,000 யுக்ரேனிய குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல செய்தி" என்றார். இந்த பரிமாற்றம் விரைவில் நடைபெறும் என்று தனது நாட்டின் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டம் உமெரோவ் தெரிவித்தார். "எங்களுக்கு தேதி தெரியும்," என்று கூறிய அவர் , "நாங்கள் அதை இன்னும் அறிவிக்கவில்லை" என்றார். "அடுத்த கட்டம்" ஜெலன்ஸ்கி மற்றும் புதினுக்கு இடையிலான சந்திப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அந்த கோரிக்கையை "குறித்து வைத்துக்கொண்டுள்ளதாக" ரஷ்ய தூதுக்குழுவின் தலைவரான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஜெலன்ஸ்கி மற்றும் புதினுக்கு இடையிலான சந்திப்பாக இருக்க வேண்டும் என யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டம் உமெரோவ் தெரிவித்தார். நானும் புதினும் பேசினால் தான் ஏதாவது நடக்கும் : டிரம்ப் ரஷ்ய தூதுக்குழு பேச்சுவார்த்தையில் திருப்தி அடைந்துள்ளதாகவும், தொடர்புகளைத் தொடர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். வியாழக்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை "ஒரு கோமாளி மற்றும் தோல்வியுற்றவர்" என்று அழைத்ததில் இருந்து இது ஒரு மாற்றமாகும். ஆனால் யுக்ரேன் மற்றும் அதன் சில நட்பு நாடுகளிடையே வெறுமனே காலம் கடத்தவும், போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்களிலிருந்து திசை திருப்புவதற்கும், 18வது சுற்று ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளைத் தடுப்பதற்குமான ராஜ தந்திரத்தில் ரஷ்யா ஈடுபடுகிறது என்பது போன்ற அச்சங்கள் உள்ளன. இரு தரப்பினரும் இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளே முக்கியம் என்று கூறியுள்ளார். வியாழனன்று அவர் பேசும் போது, "புதினும் நானும் சந்தித்து பேசும் வரை எதுவும் நடக்கப் போவதில்லை." என்றார். அந்த சந்திப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் "நிச்சயமாக தேவை" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகிறார், ஆனால் அதுபோன்ற சந்திப்புக்கு தயார் செய்ய நேரம் எடுக்கும். அந்த பேச்சுவார்த்தைகள் எப்போது நடந்தாலும், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பில்லை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xg44nq7gjo
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
உங்களுக்கான விபரங்கள் மேலுள்ள திரியில் உள்ளது அண்ணை.
-
உங்கள் காதில் சேரும் அழுக்கு சொல்லும் ஆரோக்கியத்தின் ரகசியம்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி பதவி, 11 மே 2025 அல்சைமர் முதல் புற்றுநோய் வரை ஒருவரின் ஆரோக்கியம் குறித்த அனைத்து முக்கியமான அறிகுறிகள் காதில் படியும் அழுக்கு (earwax) மூலம் அறிந்து கொள்ளலாம். காதில் படியும் அழுக்கில் உள்ள வேதிப் பொருட்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமாக புதிய நோய் அறியும் முறைகளை கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சாம்பல் நிறத்தில் இருக்கும் இதைப் பற்றி நீங்கள் எந்த ஒரு உரையாடலிலும் பேச விரும்பமாட்டீர்கள். ஆனாலும், ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்தி புற்றுநோய், இதய நோய், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சாம்பல் நிறத்தில் இருக்கும் அந்த பொருளுக்கு செருமென் (cerumen) என்று பெயர். செவிக்குழாயில் உள்ள செருமினஸ் மற்றும் செபாசியஸ் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் சுரப்புகளின் கலவையே இது. முடி, இறந்த செல்கள், மற்றும் இதர உடல் கழிவுகளோடு ஒன்று சேர்ந்து மெழுகு போன்ற பதத்தை இது அடைகிறது. செவிக்குழாயில் இது உருவான உடன், கன்வேயர் பெல்ட் பொறிமுறையில், தோலின் செல்களோடு ஒட்டிக் கொள்ளும் இந்த அழுக்கானது காதின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறத்துக்கு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு மில்லிமீட்டரில் 20-ல் ஒரு பங்கு என்ற அளவில் இது நகர்கிறது. பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இவ்வாறு அடையும் அழுக்கின் முதன்மை பணி என்ன என்பது விவாதத்துக்குரியது, ஆனால் பெரும்பாலும் இது செவிக்குழாயை சுத்தமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகள் போன்றவை நம்முடைய தலைக்குள் நுழைவதை தடுக்கும் ஒரு பொறிமுறையாக இது செயல்படுகிறது. விரும்பத்தகாத தோற்றம் காரணமாக உடலில் உள்ள சுரப்புகளில் காதுகளில் சுரக்கும் இந்த சுரப்பு ஆராய்ச்சியாளர்களால் அதிகம் கவனிக்கப்படவில்லை. ஆனால், தற்போது இது மாறத் தொடங்கியுள்ளது. பல ஆச்சர்யமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நன்றி. காதில் அடையும் மெழுகு போன்ற பொருட்களை வைத்து ஒரு நபரின் சாதாரணமான மற்றும் முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள இயலும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய அல்லது ஆப்பிரிக்க மரபைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானோர் காதுகளில் சேரும் மெழுகு ஈரத்தன்மை கொண்டது. மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திலும் ஒட்டும் தன்மையுடனும் இருக்கும். ஆனால், கிழக்காசிய மக்களில் 95% பேர் காதில் உலர் தன்மையுடைய சுரப்பைக் கொண்டிருக்கின்றனர். இது சாம்பல் நிறத்திலும் ஒட்டாத வகையிலும் இருக்கிறது. ஈரமான அல்லது உலர்ந்த காது மெழுகை உற்பத்தி செய்வதற்குப் பொறுப்பான மரபணு ABCC11 என்பதாகும். இது ஒருவரின் அக்குள்களில் துர்நாற்றம் வீசுகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் காரணியாகவும் இருக்கிறது. சுமார் 2% பேர், பெரும்பாலும் உலர்ந்த காது மெழுகைக் கொண்டவர்கள் - இந்த மரபணுவின் பதிப்பைக் கொண்டுள்ளனர். அவர்களின் அக்குள்களில் துர்நாற்றம் வீசுவதில்லை. நம் காதுகளில் சுரக்கும் இவை நம்முடைய ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன என்பதே இது குறித்த கண்டுபிடிப்புகளில் பயனுள்ளதாக இருக்கும். பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,காதில் மெழுகு போன்ற அழுக்கு உருவாகி அது நம்முடைய புறக்காதுகளை அடைய ஒரு மாதம் ஆகும் முக்கிய அறிகுறிகள் 1971ஆம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான நிக்கோலஸ் எல் பெட்ராகிஸ், அமெரிக்காவில் "ஈரமான" காது அழுக்கைக் கொண்ட ஐரோப்பிய வம்சாவளியினர், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மன் பெண்கள் மார்பக புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைக் கண்டறிந்தார். "உலர்ந்த" காது அழுக்கைக் கொண்ட ஜப்பானிய மற்றும் தைவானிய பெண்களை விட மேலே கூறிய மக்களுக்கு தோராயமாக நான்கு மடங்கு ஆபத்து அதிகம் இருப்பதாகவும் அவர் கண்டறிந்தார். 2010ஆம் ஆண்டில், டோக்கியோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மார்பக புற்றுநோயால் (invasive breast cancer) பாதிக்கப்பட்ட 270 பெண்கள் மற்றும் ஆரோக்கியமான 273 பெண் தன்னார்வலர்களிடமிருந்தும் இரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுகள் மேற்கொண்டனர். மார்பக புற்றுநோயால் அவதிப்படும் ஜப்பானிய பெண்கள், ஆரோக்கியமான தன்னார்வலர்களை விட ஈரமான காது 'மெழுகுக்கான' மரபணு குறியீட்டைப் பெற்றிருக்க 77% வரை வாய்ப்புகள் அதிகமாக இருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்தது. இந்த ஆய்வு முடிவுகள் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு முடிவுகள் ஈரமான மற்றும் உலர்ந்த காது அழுக்கைக் கொண்டவர்களிடையே நிலவும் மார்பக புற்றுநோய் அபாயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்று உறுதி செய்தது. இருப்பினும், இந்த நாடுகளில் உலர்ந்த காது அழுக்கைக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், சில நோய்களுக்கும் காது மெழுகில் காணப்படும் பொருட்களுக்கும் இடையிலான தொடர்பு விரிவாக நிறுவப்பட்டுள்ளது. உணவில் காணப்படும் சில அமினோ அமிலங்களை உடைப்பதைத் தடுக்கும் ஒரு அரிய மரபணு கோளாறான 'மேப்பிள் சிரப் சிறுநீர்' (maple syrup urine disease) நோயை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதனால் இரத்தத்திலும் சிறுநீரிலும் மோசமான சேர்மங்கள் அதிகரிக்கும். இதனால் சிறுநீருக்கு மேப்பிள் சிரப்பின் நாற்றம் ஏற்படும். இனிப்பு மணம் கொண்ட சிறுநீருக்கு காரணமான மூலக்கூறு சோடோலோன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயைக் கொண்டிருக்கும் மக்களின் காதுகளில் சேரும் அழுக்கிலும் இந்த மூலக்கூறு காணப்படும். சோதனையே தேவையில்லை என்றாலும், இந்த நோய் இருப்பதை அறிந்து கொள்ள ஒரு காதில் இருந்து ஒரு சிறிய அளவு அழுக்கை பரிசோதிப்பது, மரபணு சோதனைகளை மேற்கொள்வதைக் காட்டிலும் எளிமையானது, மலிவானது. "மேப்பிள் சிரப் போன்ற வாசனை காது அழுக்கில் இருந்து வீசுகிறது என்று வைத்துக் கொள்வோம். குழந்தை பிறந்து வெறும் 12 மணி நேரத்தில் அவரிடம் இருந்து வெளிப்படும் இப்படியான தனித்துவமான வாசனை, அவர் பிறக்கும் போதே இத்தகைய வளர்சிதை மாற்ற குறைபாட்டுடன் பிறந்திருக்கிறார் என்பதை கூறுகிறது," என்று லூசியானா மாகாண பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் வேதியியலாளர் ரபி ஆன் முசா கூறுகிறார். கோவிட்-19 சில நேரங்களில் காது அழுக்கில் இருந்தும் கண்டறியப்படலாம், மேலும் ஒரு நபரின் காதில் அடையும் அழுக்கைக் கொண்டு அவர்களுக்கு டைப்-1 அல்லது டைப்-2 நீரிழிவு நோய் உள்ளதா என்பதையும் உங்களால் கூற இயலும். இரத்தப் பரிசோதனைகள் மூலமாக ஒருவருக்கு இதய நோய் இருக்கிறதா என்பதை அறிய முடியும் என்றாலும் கூட, காதில் அடையும் அழுக்கைக் கொண்டு குறிப்பிட்ட வகையான இதய நோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிய முடியும் என்பதை ஆரம்ப கால ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. மெனியர்ஸ் என்பது ஒரு காதின் உட்பகுதியில் ஏற்படும் நோயாகும். இது மக்களை தலைச்சுற்றல் மற்றும் கேட்கும் திறனை இழக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. "இந்த நோயின் அறிகுறிகள் ஒருவரை மிகவும் பலவீனப்படுத்தும்," என்று முசா கூறுகிறார். "கடுமையான குமட்டல், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும். வாகனம் ஓட்டுவதும் சவாலாகிவிடும். இறுதியாக பாதிக்கப்பட்ட காது முழுமையாக கேட்கும் திறனை இழக்கும்," என்று அவர் கூறுகிறார். ஆரோக்கியமானவர்களைக் காட்டிலும் மெனியர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் காதில் அடையும் அழுக்கில் 3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருப்பதை முசாவின் குழு ஆய்வில் கண்டறிந்துள்ளது. இந்த நிலைக்கு ஒரு உயிரியக்கக் குறிப்பானையைக் (biomarker) கண்டுபிடிப்பது இதுவே முதல்முறையாகும். அனைத்தையும் தவிர்த்துவிட்டு இந்த நோயைக் கண்டறிய பல ஆண்டுகள் தேவைப்படும். எதிர்காலத்தில் இந்த நிலையை விரைவாகக் கண்டறிய மருத்துவர்கள் காதில் அடையும் அழுக்கை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது முசா குழுவின் கண்டுபிடிப்பு. "வழக்கமான உயிரியல் திரவங்களான இரத்தம், சிறுநீர், மூளை தண்டுவட திரவம் கொண்டு கண்டறிவதற்கு கடினமாகவும், நீண்ட காலத்தையும் எடுத்துக் கொள்ளும் நோய்களை கண்டறிய காதில் அடையும் அழுக்கை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் தான் எங்களின் ஆர்வம் இருக்கிறது," என்று முசா தெரிவிக்கிறார். ஆனால் அவ்வாறு காதில் அடையும் அழுக்கில் எந்த அம்சம், ஒருவரின் ஆரோக்கியம் பற்றிய தகவலை வெளிப்படுத்தும் புதையலாக செயல்படுகிறது? ஒரு நபரின் வளர்சிதை மாற்றமான, உடலுக்குள் நடக்கும் உள் வேதியியல் எதிர்வினைகளை பிரதிபலிக்கும் சுரப்புகளின் திறனே அது. புற்றுநோயைக் கண்டறிய காது மெழுகில் உள்ள 27 சேர்மங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "உயிரினங்களில் உள்ள பல நோய்கள் வளர்சிதை மாற்றத்துக்கு உட்பட்டவை" என்று பிரேசிலில் உள்ள கோயாஸ் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் நெல்சன் ராபர்டோ அன்டோனியோசி பில்ஹோ கூறுகிறார். நீரிழிவு, புற்றுநோய், பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களை அதற்கு எடுத்துக்காட்டுகளாக பட்டியலிடுகிறார். "இந்த சந்தர்ப்பங்களில், லிப்பிடுகள், மாவுச்சத்து மற்றும் புரதங்களை ஆற்றலாக மாற்றுவதற்குப் பொறுப்பேற்றுள்ள மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியமான செல்களில் செயல்படுவதைக் காட்டிலும் வித்தியாசமாக செயல்படத் தொடங்குகின்றன. அவை வெவ்வேறு வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன, சில நேரங்களில் மற்றவற்றை உற்பத்தி செய்வதை கூட நிறுத்தக்கூடும்," என்று கூறுகிறார். அவருடைய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வழக்கமான உயிரியல் திரவங்களான இரத்தம், சிறுநீரகம், வியர்வை மற்றும் கண்ணீரைக் காட்டிலும் பன்முகத்தன்மை கொண்ட பொருட்களை காதில் அடையும் அழுக்கு கொண்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. உண்மையில் இது குவிந்து வருகிறது. எனவே நீண்ட காலமாக ஒருவரின் வளர்சிதை மாற்றங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய இது சரியானதாக இருக்கும் என்பதை நம்ப காரணம் இருக்கிறது என்று கூறுகிறார் ப்ரூஸ் கிம்பால். அவர் மொனல் கெமிக்கல் சென்சஸ் மையத்தில் வேதியியல் சூழலியல் நிபுணராக பணியாற்றுகிறார். பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,குழந்தைக்கு வளர்சிதை மாற்றக் குறைபாடு இருப்பதை உங்களால் கண்டறிய இயலும் நோயறியும் முறை இதனை மனதில் வைத்துக் கொண்டு அன்டோனியோசியும் அவருடைய குழுவினரும் செறுமனோகிராமை (cerumenogram) உருவாக்கி வருகின்றனர். காதில் சேரும் அழுக்கை வைத்து ஒருவருக்கு குறிப்பிட்ட வகையிலான புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இந்த கருவி உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர். 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 52 நோயாளிகளின் காது அழுக்குகளை சேகரித்தது அவரின் குழு. அவர்கள் லிம்போமா என்ற ஒரு வகை புற்றுநோய் (Lymphoma), கார்சினோமா அல்லது இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். காற்றில் எளிதில் ஆவியாகும் கரிம சேர்மங்கள் இருப்பதை துல்லியமாகக் கண்டறியும் ஒரு முறையைப் பயன்படுத்தி ஆய்வை மேற்கொண்டனர். அதில் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஒரு பொறிமுறையாக 27 சேர்மங்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த 27 மூலக்கூறுகளின் சேர்மங்களின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு லிம்போமா, கார்சினோமா அல்லது இரத்தப்புற்று நோய் இருக்கிறதா என்பதை 100% அவர்களால் அனுமானிக்க முடிந்தது. சுவாரஸ்யமாக, புற்று நோய்களில் வேறுபாட்டை சோதனையால் உறுதி செய்ய இயலவில்லை. இந்த மூலக்கூறுகள் இந்த புற்றுநோய் செல்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் உருவாகியிருக்கலாம் என்பதை சோதனை முடிவு உறுதி செய்தது. "நூற்றுக்கணக்கான புற்றுநோய் வகைகள் இருக்கலாம். ஆனால் வளர்சிதை பார்வையில் இருந்து பார்க்கும் போது, புற்றுநோய் என்பது ஒரு ஒற்றை உயிர்வேதியல் நிகழ்வாகும். புற்றுநோயின் எந்த நிலையிலும் எளிதில் காற்றில் ஆவியாகக் கூடிய குறிப்பிட்ட கரிம சேர்மங்களின் (VOC) பகுப்பாய்வு மூலமாக அறிய இயலும்," என்று அன்டோனியோசி கூறுகிறார். 2019-ஆம் ஆண்டில் அவர்கள் 27 வகையான கரிம சேர்மங்களைக் கண்டறிந்தனர். தற்போது தனித்துவமான வளர்சிதை மாற்றத்தின் ஒரு பகுதியாக புற்றுநோய் செல்களால் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான கரிம சேர்மங்களை ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு ஏற்படும் வளர்சிதை மாற்ற தொந்தரவுகளை அவர்கள் கண்டறிந்த செருமெனோகிராம் மூலமாக அறிய முடியும் என்பதை, இன்னும் வெளியிடப்படாத ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக அன்டோனியோசி கூறுகிறார். புற்றுநோய் ஏற்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செல்கள் அசாதாரண மாற்றத்தை சந்திக்கும். அவை புற்றுநோய்க்கு வழிவகை செய்யும். ஆனால் புற்றுநோய் செல்களாக அவை அப்போது இருப்பதில்லை. "புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் அதனை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் 90% ஆக இருக்கிறது என்ற நிலையில், புற்றுநோய் ஏற்படுவதற்கு முந்தைய கட்டத்தைக் கண்டறியும் போது, சிகிச்சையின் வெற்றி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும்," என்று அன்டோனியோசி தெரிவிக்கிறார். நரம்புச் சிதைவு நோய்களான பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களையும், ஆரம்ப கட்ட வளர்சிதை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கருவியின் மூலம் கண்டறிய இயலுமா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் அதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. வருங்காலத்தில் செருமெனோகிராம் வழக்கமான மருத்துவ ஆய்வு செயல்முறையாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒரு முறை சிறிய அளவில் காதில் சேரும் அழுக்கை வைத்து நீரிழிவு, புற்றுநோய், பார்கின்சன்ஸ் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களைக் கண்டறியவும், மற்ற ஆரோக்கிய சீர்கேட்டினால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பிடவும் இந்த கருவி பயன்படலாம்," என்று அன்டோனியோசி தெரிவிக்கிறார். பிரேசிலில் அமைந்துள்ள அமரல் கர்வல்ஹோ மருத்துவமனையில் செருமெனோகிராம் நோய் கண்டறிதல் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான மேற்பார்வை பொறிமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறுகிறார் அன்டோனியோசி. தற்போது சிகிச்சை முறை ஏதும் இல்லாமல் இருக்கும் மெனியர்ஸ் என்ற உள்காது பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தன்னுடைய ஆராய்ச்சி வருங்காலத்தில் உதவிகரமாக இருக்கும் என்று முசா நம்புகிறார். முதலில் அதிக அளவில் நோயாளிகள் மத்தியில் தன்னுடைய பரிசோதனை முறையை பயன்படுத்தி, முடிவுகள் சரிபார்க்கப்பட்ட பிறகு, மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் நோயறிதல் பரிசோதனையை அறிமுகம் செய்ய அவர் விரும்புகிறார். கோவிட்-19 நோய் கண்டறியும் கருவிகளை எப்படி கடைகளில் வாங்கி பயன்படுத்தினார்களோ அதேபோன்ற கருவிகளை உருவாக்க தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது என்று முசா தெரிவித்தார். பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,கோவிட்-19 நோய் கண்டறியும் கருவிகளை எப்படி கடைகளில் வாங்கி பயன்படுத்தினார்களோ அதே போன்ற கருவிகளை உருவாக்க தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது காது மெழுகை புரிந்து கொள்ளுதல் இயல்பாக காது மெழுகில் காணப்படும் மூன்று கொழுப்பு அமிலங்களின் அளவு குறைவாக இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று முசா தெரிவிக்கிறார். "எதனால் இந்த நோய் ஏற்படுகிறது அல்லது அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை அறிந்து கொள்ள இது உதவும்," என்று முசா கூறுகிறார். இயல்பான, ஆரோக்கியமான காது மெழுகில் உள்ள ரசாயனங்கள் மற்றும் நோயின் பல்வேறு கட்டங்களில் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் புரிந்து கொள்ள நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முசா கூறுகிறார். இன்று இரத்த மாதிரிகள் எவ்வாறு நோய் அறிதல் சோதனைகளில் பயன்படுத்தப்படுகிறதோ அது போன்று ஒரு நாள் காது மெழுகும் பயன்படுத்தப்படும் என்று அவர் நம்புகிறார். "லிபிட் வளர்சிதை மாற்றத்தால் நிறைய நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில், காது மெழுகில் அதிக அளவில் லிபிடுகள் இருப்பதால் இது ஒரு சிறப்பான பொருளாக நோய் அறிதல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தலாம்," என்று கூறுகிறார் முசா. பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி பேராசிரியராகவும், வேதியிலாளராகவும் பணியாற்றி வரும் பெர்டிதா பாரேன், காது மெழுகு குறித்து தனியாக ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஆனால், உயிர் மூலக்கூறுகளை பகுப்பாய்வு செய்து அதனை நோய் கண்டறிதலில் எப்படி பயன்படுத்த இயலும் என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோட்பாட்டளவில், காது மெழுகு என்பது நோய்களின் அறிகுறிகளைக் கண்டறியும் சிறப்பான பொருளாக இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டார். "இரத்தத்தில் காணப்படும் சேர்மங்கள் நீரில் கரையக் கூடியவை. ஆனால் காது மெழுகு கொழுப்புகளால் ஆனது. தண்ணீரோடு பொருந்தாதது. இரத்தம் குறித்து மட்டும் ஆய்வுகளை மேற்கொண்டால், உங்களுக்கு முழுமையான தகவல்கள் கிடைக்காது. ஆனால் கொழுப்புகளில் தான் மாற்றங்கள் தொடங்குகிறது," என்று அவர் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgm83w7n193o
-
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் கைது!
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 05:22 PM கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் செருக்கன் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/214998
-
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விஜயம் செய்து ஆசிபெற்றார் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 02:14 PM கண்டி நகரில் அமைந்துள்ள மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வெள்ளிக்கிழமை தனது (16) விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, மல்வத்து பீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மஹாநாயக்க தேரரையும், அஸ்கிரிய பீடத்தின் வரகாகொட ஸ்ரீ ஞானரதன மஹாநாயக்க தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது, அண்மைய இலங்கைக்கான இந்திய பிரதமரின் அரச விஜயம் குறித்து மஹாநாயக்க தேரர்களிடம் உயர் ஸ்தானிகர் விளக்கமளித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பலதரப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புகளுக்காக ஆசீர்வாதங்களை தேரர்களிடம் கோரினார். இதனையடுத்து, மல்வத்து அஸ்கிரிய பீடங்களுக்கு, கணினிகள், மேசைகள், கதிரைகள், அலுமாரிகள், படுக்கைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் போன்ற பல அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதற்கு முன்னதாக கடந்த புதன்கிழமை (14) இந்திய உயர் ஸ்தானிகர், ஸ்ரீ தலதா மாளிகாவின் தியவடன நிலமேயை சந்தித்தார். இந்த சந்திப்பில், பௌத்த ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், குஜராத்தின் தேவ்னி மோரி பகுதியிலுள்ள புனித புத்தரின் திருவுருவங்களை இலங்கையில் வெளியிடப்படும் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ தலதா மாளிகையின் கோரிக்கையின் அடிப்படையில், யோகா மற்றும் நலவாழ்வை ஊக்குவிக்கும் நோக்கில் 100 ஆர்கானிக் யோகா மேட்களை வழங்கினார். https://www.virakesari.lk/article/214978
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் பகுதியில் இரத்ததான முகாம் 17 MAY, 2025 | 02:16 PM முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குவதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/214977
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முன்னரே ஐபாட்டில் கடவுச்சொல் சேமித்து வைத்துள்ளீகர்கள் போல!
-
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை
17 MAY, 2025 | 02:00 PM எதிர்வரும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கை மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி முடிவு ஜூன் மாதம் முதல் வாரத்தில் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/214982
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அண்ணை, ஒவ்வொரு முறையும் உள்நுழைய ஈமெயில் கடவுச்சொல் போட உங்களுக்கு மறக்காதே!
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) உஸ்மான் கவஜா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) மார்கோ ஜான்சன் போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) சமநிலை
-
இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை லொறிகள் - விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன
அண்ணை பெரும்பாலும் 8-10 மணித்தியாலங்களில் இலங்கைக்குள் நீண்ட தூர பயணங்கள் முடிந்துவிடும் என நினைக்கிறேன். எனது நண்பர் குறிப்பிட்டது போல சாரதி, நடத்துனர் இருவரும் வாகனம் ஓட்டும் தகுதியோடு பணியில் இணைக்கப்பட்டால் நீண்ட தூர பயணங்களில் மாறி மாறி வாகனம் செலுத்தலாம்.
-
நான்கு பேருக்கு மறுவாழ்வளித்த மூளைச்சாவு அடைந்த சிறுவன்..!
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 10:58 AM வீதி விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, உறவினர் ஒருவருடன் கடந்த புதன்கிழமை (14) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தனியார் பஸ் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை அரசு வைத்தியசாலையிலும், பின்னர் வேலம்மாள் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன், வெள்ளிக்கிழமை (16) மூளைச்சாவு அடைந்ததாக வைத்தியர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில், சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர். அதற்காக, சிறுவனின் தந்தையிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, கல்லீரல் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கும், சிறுநீரகங்கள், கருவிழிகள் மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலை மற்றும் அப்பல்லோ வைத்தியசாலைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இச் சிறுவனின் உடல், உறுப்பு தானத்தால் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214950
-
ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!
இந்தியா - பாகிஸ்தான் மோதலில் யாருக்கு இழப்பு அதிகம்? நிபுணர்கள் தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புக்கொண்டன கட்டுரை தகவல் எழுதியவர், அன்ஷுல் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள 'பயங்கரவாத முகாம்களை' தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது. இந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோஃபியா குரேஷி, "கடந்த மூன்று தசாப்தங்களாக பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அதிகரித்துள்ளன. இவற்றில் ஆள் சேர்ப்பு, பயிற்சியளிப்பது மற்றும் ஏவுதளங்கள் ஆகியவை அடங்கும். அவை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் பரவியுள்ளன" என்று கூறியிருந்தார். இது இந்தியாவின் 'போர் நடவடிக்கை' என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தகுந்த பதிலடி கொடுக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றார். நான்கு நாட்கள் எதிரும் புதிருமாக இருந்த இரு நாடுகளும், பிறகு சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் குறித்த தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் முதலில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையில் உச்சகட்டத்தில் இருந்த பதற்றம் சண்டை நிறுத்தத்திற்குப் பிறகும் குறையவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் நடைபெற்ற மோதலில் அதிக இழப்பு யாருக்கு? யாருக்கு எவ்வளவு நட்டம் என்பதே இப்போதைய பேசுபொருளாக உள்ளது. இந்த விஷயத்தில் நிபுணர்களின் கருத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவின் ரஃபேல் விமானத்தை குறிவைத்ததாக பாகிஸ்தான் கூறுகிறது இழப்புகள் குறித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கூற்றுகள் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, இந்தியாவின் 5 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக கூறியிருந்தார். அதில் 3 ரஃபேல் விமானங்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தவிர, தாக்குதல் நடைபெற்ற இரவில் 70க்கும் மேற்பட்ட டிரோன்களையும் குறிவைத்ததாக பாகிஸ்தான் தரப்பு கூறியது. பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட இந்த விவரங்கள் தொடர்பாக, இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி தெளிவான பதில் எதையும் அளிக்கவில்லை, ரஃபேல் விமானங்களின் இழப்பு குறித்த பாகிஸ்தானின் கூற்று தொடர்பாகவும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எடுத்த பதில் நடவடிக்கையில் பதான்கோட், அம்பாலா, உதம்பூர், ஸ்ரீநகர், படிண்டா, ஆதம்பூர், அவந்திபூர், சூரத்கர், சிர்சா உட்பட 26 இந்திய ராணுவ தளங்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இவற்றைத் தவிர, இந்திய தலைநகர் டெல்லி உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களின் மீது டஜன் கணக்கான டிரோன்களை பறக்கவிட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது. நக்ரோட்டாவில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணை சேமிப்பு தளத்தையும், ஆதம்பூரில் உள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பையும் தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். ஆதம்பூரில் S-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது, இந்திய பிரதமர் மோதி சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றபோது எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தெரிந்தது. அத்துடன் பாகிஸ்தான் கூறிய பிற கூற்றுகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியாவுக்கு கிடைத்த லாபம் என்ன? இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, நூற்றுக்கும் மேற்பட்ட 'தீவிரவாதிகள்' கொல்லப்பட்டனர் யூசுப் அஜ்ஹர், அப்துல் மலிக் ரவூஃப், முத்சிர் அகமது போன்ற முக்கிய 'தீவிரவாத தளபதிகள்' கொல்லப்பட்டனர் அணுசக்தி நாடான பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களை ஒரே தாக்குதலில் தாக்கிய முதல் நாடு இந்தியா. பாகிஸ்தான் விமானப்படை உடைமைகளில் 20% அழிக்கப்பட்டன போலாரி விமானப்படைத் தளத்திற்கு பெரும் சேதம் மற்றும் படைத் தலைவர் உஸ்மான் யூசுப் மரணம் செயற்கைக்கோள் படங்களில் காணப்பட்டவை என்ன? மோதலின் போது, இந்தியாவும் பாகிஸ்தானும் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தின. இதற்குப் பிறகு, இரு தரப்பினரும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியாக தெரிவித்தன தாக்குதல்கள் பரவலாக நடந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, ஆனால் கூறப்பட்டதை விட சேதம் குறைவாக இருப்பதாக அமெரிக்க செய்தித்தாள் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மற்றும் விமான நிலையங்களை குறிவைப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. மேலும், "பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியிலிருந்து 100 மைல்களுக்கும் குறைவான தொலைவில் அமைந்திருக்கும் போலாரி விமானத் தளத்தில் துல்லியமான தாக்குதலை நடத்தியதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார்கள். அங்கு ஒரு இடத்தில் வெளிப்படையான சேதம் ஏற்பட்டிருந்ததை புகைப்படங்கள் காட்டின" என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரோ மாவட்டத்தில் போலாரி விமானப்படை தளம் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள மிகவும் நவீன விமான தளங்களில் ஒன்றான இந்தத் தளம் 2017 டிசம்பரில் திறக்கப்பட்டது. இதேபோல், பாகிஸ்தானின் நூர் கான் விமானத் தளம், ரஹீம் யார் கான் விமான நிலையம் மற்றும் சர்கோதா விமானத் தளம் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதங்களையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு டஜன்களுக்கும் மேற்பட்ட இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் தளங்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் கூறியது. இதில் உதம்பூர் விமான தளமும் அடங்கும். ஆனால் மே 12ஆம் தேதி உதம்பூர் விமானப்படை தளத்திலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் சேதங்கள் ஏதும் தெரியவில்லை. பட மூலாதாரம்,PLANET LABS படக்குறிப்பு,மே 12-ஆம் தேதி எடுக்கப்பட்ட உதம்பூர் விமானப்படை தளத்தின் செயற்கைக்கோள் படம் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? 'ஆபரேஷன் சிந்தூர்' தனது மூலோபாய நோக்கங்களை அடைந்துவிட்டதாகவும், இந்தியா மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் நம்புகிறார். எக்ஸ் வலைதளத்தில் ஜான் ஸ்பென்சர், "நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் இந்தியா பெரிய வெற்றியைப் பெற்றது. ஆபரேஷன் சிந்தூர், அதன் மூலோபாய நோக்கங்களை அடைந்தது மட்டுமல்ல, வேறுசில மேலதிக செயல்களையும் செய்தது. தீவிரவாத உள்கட்டமைப்பை அழித்தது, இந்திய ராணுவத்தின் திறனை நிரூபித்தது மற்றும் ஒரு புதிய தேசிய பாதுகாப்பு கோட்பாட்டை விளக்கியது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் அடையாளமாக இல்லை, இந்த தீர்க்கமான சக்தி, தெளிவாகப் பயன்படுத்தப்பட்டது." என்று கூறியுள்ளார். "இந்தியா பழிவாங்குவதற்காக சண்டையிடவில்லை. தடுப்புக்காகப் போராடியது, அது வேலை செய்தது" என்கிறார் ஸ்பென்சர். "பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மறைவிடங்கள், டிரோன் மையங்கள், விமான தளங்கள் உட்பட எந்தவொரு இலக்கையும் தாக்கும் திறன் தங்களிடம் உள்ளது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. ஆனால், இந்தியாவின் எந்தவொரு பாதுகாப்பான மண்டலத்தையும் பாகிஸ்தானால் ஊடுருவ முடியவில்லை. இது இரு நாடுகளும் சமநிலையில் இல்லை என்பதையும், இந்தியாவின் கை மேலோங்கி இருந்தது என்பதையும் காட்டுகிறது" என்கிறார் அவர். ஃபாரின் பாலிசி பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ரவி அகர்வால், இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து சிஎன்என் பத்திரிகையாளர் ஃபரீத் ஜகாரியாவுடன் பேசினார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அண்மை மோதலின் விளைவு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த ரவி அகர்வால், "பாகிஸ்தானைப் பொருத்தவரை, தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க அந்நாட்டு ராணுவம் விரும்புகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. மிகவும் வலிமையான அண்டை நாட்டைத் தடுக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்புவதாக தெரிகிறது. ஆனால் முதலில் ராணுவம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இறுதியில் அதைத்தான் அவர்கள் செய்ய விரும்புகிறார்கள்" என்று கூறினார். இந்தியா ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், இந்த முறை முன்பை விட தீவிரமாக பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது. அதேசமயம் பாகிஸ்தான் அணுசக்தி கொண்ட நாடு என்ற நிலையில் இந்தியா எப்படி இவ்வளவு துணிச்சலைக் காட்டியது? இந்தக் கேள்விக்கு ரவி அகர்வால் பதில் அளிக்கையில், "இந்தியாவின் பொருளாதாரம் 1999இல் பாகிஸ்தானை விட ஐந்து மடங்கு மட்டுமே பெரிதாக இருந்தது. ஆனால் அது தற்போது 11 மடங்கு பெரியதாக அதிகரித்துவிட்டது. எனவே இந்தியாவின் நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது. எல்லை தாண்டிய தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா நினைக்கிறது. ஆனால் இந்த காரணங்கள் அனைத்திற்கும் மேலாக, பிரச்னையின் மூல காரணம், பாகிஸ்தான் ராணுவத்தால் அதன் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனபதுதான், அதை இந்தியா மாற்ற விரும்புகிறது" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மே 9-ஆம் தேதி ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களின் படம் சண்டை நிறுத்தம் நல்லதா? இல்லை மூலோபாய தவறா? சண்டை நிறுத்தம் ஒரு மூலோபாய தவறாகக் கருதப்படும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறார், நன்கு அறியப்பட்ட மூலோபாய விவகார ஆய்வாளரான பிரம்மா செலானி. "ராணுவ மோதலில் பாகிஸ்தானின் கை மேலே இருந்திருந்தால், அது இந்தியாவிற்கு தீர்க்கமான மற்றும் அவமானகரமான முடிவை கொடுக்கவே நினைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை" என்று பிரம்மா செலானி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். "மாறாக, தனது ஆயுதப் படைகள் மேலாதிக்கம் செலுத்திய நிலையிலும் இந்தியா சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. இந்த நடவடிக்கை இந்தியாவின் கட்டுப்பாடு அல்லது ராஜ்ஜீய கணக்கீட்டைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், இது மூலோபாயத் தவறு என்று கருதப்படும் அபாயமும் உள்ளது. இந்தியாவின் முடிவு, நன்றாக திட்டமிடப்பட்டது, அது மீண்டும் வேட்டையாடக்கூடும்." இந்த சண்டையில் இருந்து படிப்பினையை கற்றுக் கொள்ளும் இரு நாடுகளும், எதிர்காலத்தில் ஆயுதக் கொள்முதல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் உறுப்பினரான ஜோசுவா டி. வொயிட் கூறுகிறார். "பாகிஸ்தான் சீனாவுடனான அதன் நெருக்கத்தை இரட்டிப்பாக்குவதோடு, டிரோன்களுக்காக துருக்கியுடனான கூட்டாண்மையையும் அதிகரிக்கும். முதல் பார்வையில், பாகிஸ்தானின் விமானப்படை வான் இலக்குகளை தாக்குவதில் ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக தோன்றுகிறது" என்று ஜோசுவா டி. வொயிட் குறிப்பிட்டுள்ளார். "சண்டையில் ஏற்பட்ட சேதங்களைப் பற்றி மதிப்பிடும்போது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன. அதிலும் இந்தியாவிற்குள் சொற்ப சேதத்தை மட்டுமே ஏற்படுத்தும் டிரோன்கள் அதிக எண்ணிக்கையில் ஏவப்பட்டது ஏன் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்." இந்தியாவைப் பற்றி கூறுகையில், "இந்தியா பல சிக்கல்களை எதிர்கொண்டாலும், அதன் வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டதாகத் தெரிகிறது. அத்துடன் இந்திய ராணுவம் ஒரே நேரத்தில் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தானை அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் இந்த நெருக்கடி தொடர்ந்தால், ஏவுகணைகள் மற்றும் போர்ப் பொருட்களின் மிகப் பெரிய கையிருப்பு தேவை என்ற கவலை இந்தியாவிற்கு அதிகரிக்கும்." என்றார் ஜோசுவா. லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மூத்த விரிவுரையாளரான வால்டர் லாட்விக், கத்தாரின் ஊடக நிறுவனமான அல் ஜசீராவிடம் பேசியதன் சாரம்சம் இது: "சமீபத்திய மோதல், பாகிஸ்தானின் நீண்டகால மூலோபாய இலக்காக இருந்து வரும் காஷ்மீர் பிரச்னையை சர்வதேசமயமாக்குவதற்கான வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ராஜ்ஜிய ரீதியாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதக் குழுக்கள் மீது சர்வதேச கவனத்தை ஈர்க்கச் செய்வதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது" என்று கூறினார். தீவிரவாதத்தை எதிர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதை சர்வதேச மன்றங்களில் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தற்போது பாகிஸ்தானிடம் வந்துவிட்டது என்று லைட்விக் கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0qgwj13x99o
-
நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வந்த கப்பலில் குஷ் போதைப்பொருளுடன் சென்னையைச் சேர்ந்தவர் கைது!
17 MAY, 2025 | 11:20 AM நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வந்த கப்பலில் குஷ் போதைப்பொருளுடன் சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (16) மாலை யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தில் 4 கிலோ குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், இந்தியாவில் இருந்து நாகபட்டினம் துறைமுகம் ஊடாக கப்பல் வழியாக குறித்த போதைப்பொருளை எடுத்து வந்தவேளை, சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் பொலிஸ் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/214960
-
இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை லொறிகள் - விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 11:16 AM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்வதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்தார். வீதி விபத்துக்கள் நிவாரணம் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தில் வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான முறையான திட்டம் ஒன்றையும், அதிகாரமிக்க தீர்மானங்களை முன்னெடுக்கக்கூடிய தேசிய மட்டத்திலான குழுவை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட காலவகாசம் வழங்குமாறு இரு முறை தற்போதைய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளோம். ஏற்கனவே மார்ச் 6 ஆம் திகதி வழங்கிய கடித்துக்கு ஜனாதிபதி தரப்பினரிடமிருந்து எவ்வித பதில்களும் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் நேற்று வழங்கப்பட்டுள்ள கடித்துக்கும் அவ்வாறானதொரு நிலையே ஏற்படலாம். மருத்துவ சங்கத்தால் வழங்கப்படும் கடிதம் ஜனாதிபதியிடம் உரியவாறு சென்றடைகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கத்தினர் விபத்துகளை கட்டுப்படுத்த செயற்திறனான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சுகாதார அமைச்சு, பொலிஸார் என சுமார் 80 அதிகமான அமைச்சுகளும் பிரிவுகளும் இதனுடன் தொடர்புடையன. ஆகையால் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டம் ஒன்றே எமக்கு அவசியம். இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், நாட்டில் உள்ளவர்கள் பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்கின்றனர் என்றார். இதேவேளை இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா தெரிவிக்கையில், நாட்டில் பதிவாகும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கும் அஞ்ச வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. அண்மையில் கொத்மலை பகுதியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்ததுடன் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது மிகப்பெரிய உயிர் சேதமாகும். இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 975 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கடந்த 10 வருட காலப்பகுதியில் வருடாந்தம் 2300 தொடக்கம் 2500 இடைப்பட்ட மரணங்கள் பதிவாகுவதை காணக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் இதுவரை அண்ணளவாக 12 ஆயிரம் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தொழிலுக்கு சென்றவர்கள் மீள வீடு திரும்புவார்களா? என நிச்சயமில்லாத நிலை உருவாகியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/214961
-
ஜனநாயகப்பாதையிலிருந்து ஆயுதமேந்திய காலத்துக்குத் திரும்பாதீர்கள் : ஜனாதிபதியிடம் சுமந்திரன் வலியுறுத்தல்
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 11:53 AM (நா.தனுஜா) நிறைவேற்றதிகாரத்தைக் காண்பித்து அச்சுறுத்தும் ஜனாதிபதியின் மிரட்டலுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. நாம் ஜனநாயகவாதிகள். எனவே நாங்கள் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்படுவோம். அதேபோன்று ஜனாதிபதியும் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கவேண்டும். மாறாக மக்கள் விடுதலை முன்னணியாக அவர்கள் ஆயுதமேந்தி செயற்பட்ட காலத்துக்கு மீளத்திரும்பக்கூடாது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஏற்புடையதன்று எனவும், அதனை உடனடியாக மீளப்பெறவேண்டும் எனவும் நாம் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறோம். அதன்படி குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் மீளப்பெறப்படாவிடின், 29 ஆம் திகதியிலிருந்து நாம் பாரியதொரு போராட்டத்தை ஆரம்பிப்போம். இப்போராட்டம் எந்தவொரு கட்சியையும் சார்ந்தது அல்ல. மாறாக தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்வதற்கான இப்போராட்டத்துக்கு எவ்வித பேதங்களுமின்றி சகல தரப்பினரும் ஆதரவளிக்கவேண்டும். அதேவேளை அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த சபைகளின் ஆட்சியை தாம் கைப்பற்றிவிடுவோம் என எச்சரிக்கும் தொனியில் கூறியிருப்பது மிகவும் துரதிஷ்டவசமான விடயமாகும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தம்மிடம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நிறைவேற்றதிகாரமும் தம்மிடமே இருப்பதாக மிகமோசமானதொரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என்பது தான் தேசிய மக்கள் சக்தியின் தாரக மந்திரமாக இருந்தது. ஆனால் தற்போது அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்தவுடன், அந்நிறைவேற்றதிகாரத்தைக் காண்பித்து பிறரை எச்சரிக்கிறார். ஜனாதிபதியின் இந்த மிரட்டலுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. நாம் ஜனநாயகவாதிகள். எனவே நாம் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்படுவோம். அதேபோன்று ஜனாதிபதியும் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கவேண்டும். மாறாக மக்கள் விடுதலை முன்னணியாக அவர்கள் ஆயுதமேந்தி செயற்பட்ட காலத்துக்கு மீளத்திரும்பக்கூடாது என்றார். https://www.virakesari.lk/article/214959
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான விசாரணை 17 MAY, 2025 | 10:06 AM (நா.தனுஜா) கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரையும் ஆணைக்குழுவுக்கு அழைத்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 15 வயதுடைய மாணவி, அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் உயிர்மாய்த்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் பதிவானது. இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது. அவ்விசாரணைகள் தொடர்பில் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கொட்டாஞ்சேனை தொடர்மாடிக்குடியிருப்பிலிருந்து மாணவியொருவர் உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் எம்மால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் முதற்கட்ட விசாரணை கடந்த 14 ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆணைக்குழுவில் இடம்பெற்றது. கொழும்பிலுள்ள சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப்பணிப்பாளர், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர், பம்பலப்பிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் விசாரணைக்காக ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் பாடசாலை அதிபர் மற்றும் கணிதபாட ஆசிரியர் ஆகியோர் காரணத்தை அறியத்தராமல், விசாரணைக்காக உரிய நேரத்துக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுவதற்குத் தவறியமையினால், ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் அவர்களிடம் காரணம் கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தினர். அதேபோன்று வலயக் கல்விப்பணிப்பாளரின் சார்பில் பிரதி வலயக் கல்விப்பணிப்பாளர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, விடயங்களைத் தெளிவுபடுத்தினார். அதன்படி இச்சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதி வலயக் கல்விப்பணிப்பாளருக்கும், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் விபரம் மற்றும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அத்தோடு தனியார் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்ததுடன், சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரை மீண்டும் 15 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு வருகைதருமாறு அழைப்புவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, எம்மால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை வெகுவிரைவில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதேபோன்று இவ்விடயத்துடன் தொடர்புடைய சகல அரச கட்டமைப்புக்களும் அவற்றின் பணிகளை உரியவாறு ஆற்றியிருக்கின்றனவா என்பது குறித்தும், யாரேனும் அம்மாணவியின் அடிப்படை உரிமைகளை மீறியிருக்கிறார்களா அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்வோம். அத்தகைய சம்பவங்கள் பதிவாகியிருப்பின், அதுபற்றி உரிய தரப்பினர் பொறுப்புக்கூறவேண்டும். அதுமாத்திரமன்றி எதிர்வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு கல்வி அமைச்சு உள்ளிட்ட கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/214949
-
இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் ; பிரான்ஸ் அரசாங்கத்திடம் சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தல்
17 MAY, 2025 | 09:38 AM (நா.தனுஜா) ஆர்மேனியாவிலும், ருவண்டாவிலும் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்பதை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைப்போன்று, இலங்கையிலும் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் சி.வி.விக்கினேஸ்வரனின் காணொளி வடிவ உரை ஒளிபரப்பப்பட்டது. அந்த உரையில் அவர் மேலும் கூறியதாவது: வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் என்னால் முன்மொழியப்பட்ட 'தமிழின அழிப்பு தீர்மானம்' கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வடமாகாணசபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் ஊடாக இலங்கை அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், உள்ளக ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட உண்மையை அறியும் ஆணைக்குழுக்கள்மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதற்கான வழிகாட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இது இவ்வாறிருக்க அண்மையகாலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் அரச திணைக்களங்களால் சுவீகரிக்கப்பட்டுவருவதுடன், அரச கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் பௌத்த பிக்குகளால் தீவிர பௌத்த சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பிரான்ஸில் 47 மாநகரசபைகள் இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அதனையொத்த தீர்மானங்கள் இந்தியாவின் தமிழக அரசாங்கத்தினாலும், கனேடிய பாராளுமன்றத்தினாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் ஆர்மேனியாவிலும், ருவண்டாவிலும் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்பதை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைப்போன்று, இலங்கையிலும் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் 5 நிரந்தர உறுப்புநாடுகளில் ஒன்றான பிரான்ஸ், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/214948
-
இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளமை குறித்து ‘திருப்தியடைகின்றேன்’- பிரிட்டிஸ் பிரதமர்'
Published By: RAJEEBAN 17 MAY, 2025 | 08:54 AM இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன் என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றுதிரள்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன், அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குரியவர்களுடன் உடன்நிற்கின்றோம். சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதற்கு, கடந்தகால அட்டுழியங்களை ஏற்றுக்கொள்வதும், பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதை நான் அறிவேன். குற்றமிழைத்தவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டும் என கடந்த வருடம் நான் எழுதியிருந்தேன். இதன்காரணமாக இம்முறை இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக நாங்கள் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்க முடிந்தமை குறித்து திருப்தியடைகின்றேன். நீதி மற்றும் அமைதியை தொடர்ந்து பின்பற்றவேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகின்றது. நீடித்த நல்லிணக்கம் மற்றும் ஸ்திரதன்மையை அடைவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கத்துடனும், இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள சிவில் சமூகஅமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து நாங்கள் ஆக்கபூர்வமாக பணியாற்றிவருகின்றோம். https://www.virakesari.lk/article/214947
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
சிதைத்தல் இல்லை அண்ணை, நான் சொன்னது செயற்பாடற்றதாக்குவது பற்றியே. சிறிய சத்திரசிகிச்சை மூலமாகவோ ஊசி மூலமாகவோ செய்யலாம் என நினைக்கிறேன்.
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
17 MAY, 2025 | 11:02 AM யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பணிகள் வியாழக்கிழமை (15) ஆரம்பமான நிலையில், வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற இரண்டாம் நாள் அகழ்வின் போதே இந்த மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்கப்பட்டுள்ளது. முழுமையான என்புத்தொகுதி, மண்டையோடு என்பவற்றுக்கு மேலதிகமாக கை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் சனிக்கிழமை (17) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை முதல் யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/214956
-
விட்டமின் பி12 குறைந்தால் உடலில் என்ன நிகழும்? சைவ உணவாளர்கள் இதை எப்படி பெறுவது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 16 மே 2025, 04:05 GMT விட்டமின் பி12 உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதன் குறைபாட்டால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பொதுவாக சைவ உணவுகளில் இந்த விட்டமின் இருப்பதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். விட்டமின் பி12 பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? வாழ்வில் எந்தெந்த காலகட்டத்தில் விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கிறது? விட்டமின் பி12 அதிகமாக உள்ள உணவுகள் என்னென்ன? சைவ உணவை உட்கொள்ளும் நபர்கள் எவ்வாறு தங்களுக்கான விட்டமின் பி12 வை பெற்றுக் கொள்ள இயலும்? அதற்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. விட்டமின் பி12 என்றால் என்ன? கோபாலமின் (Cobalamin) என்று அழைக்கப்படும் விட்டமின் பி12 என்பது விட்டமின் பி குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான விட்டமின். இது அதிகமாக விலங்கு சார் உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது. நீங்கள் சைவ உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பீர்கள் எனில், உங்கள் உடலுக்குத் தேவையான விட்டமின் பி12-ஐ சப்ளிமெண்ட்கள் (supplements) மூலமே பெற்றுக் கொள்ள இயலும் அல்லது பி12 விட்டமினுடன் செறிவூட்டப்பட்ட உணவு உங்களுக்கு கைகொடுக்கலாம். உடல் ஆரோக்கியத்துக்கு விட்டமின் பி12-ன் பங்கு என்ன? "உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை சீராக வைக்கிறது விட்டமின் பி12. இரத்த சிவப்பு அணுக்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உங்கள் உடலின் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதையும் உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது விட்டமின் பி12. இது மட்டுமின்றி, "டி.என்.ஏ. உருவாக்கத்துக்கும், சேதமடைந்த டி.என்.ஏவை சரி செய்வதற்கும் விட்டமின் பி12 அதிக அளவில் தேவைப்படுகிறது," என்று தெரிவிக்கிறார் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஊட்டச்சத்து துறையில் பணியாற்றும் மருத்துவர் மீனாட்சி பஜாஜ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விட்டமின் பி12 பற்றாக்குறையால் இளம் வயதினர் மற்றும் கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர் எந்த வயதினருக்கு எவ்வளவு விட்டமின் பி12 தேவை? 2020-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பிறந்த குழந்தை முதல் 3 வயதான குழந்தைகள் வரை, நாள் ஒன்றுக்கு 1.2 மைக்ரோ கிராம் விட்டமின் பி12 ஊட்டச்சத்தை உணவில் கொண்டிருக்க வேண்டும். ஆறு முதல் 18 வயதினருக்கு இந்த ஊட்டச்சத்து நாள் ஒன்றுக்கு 2.2 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறார் மீனாட்சி. யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்? யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் மருத்துவர் மீனாட்சி. பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் உண்ணாமல் 'வீகன்' உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிப்பைச் சந்திப்பார்கள். லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் நபர்களும் விட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடும். விட்டமின் பி12 என்பது நீரில் கரையக்கூடிய (Water Soluble) விட்டமின் ஆகும். இது எளிதில் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால் சில இணை நோய்களுக்காக மருந்துகளை உட்கொள்ளும் போது விட்டமின் பி12-ஐ உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகவும் பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். இதுமட்டுமின்றி வயிற்றில் புற்றுநோய் இருக்கும் போதோ, ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ, அல்லது அல்சர் போன்ற நோய்களுக்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாலோ பி12-ஐ உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு, பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, வகை இரண்டு நீரிழிவு நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபர்களும் இத்தகைய விட்டமின் பி12 பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை கட்டாயமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படாது. பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? "நரம்பு மண்டலம் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக விட்டமின் பி12 இருப்பதால், இதன் பற்றாக்குறை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்," என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மீனாட்சி. "நான்கு முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பி12 குறைபாடு மற்றவர்களைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்று கூறுகிறார் அவர். ஃப்ராண்டியர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள, 'மெட்டர்னல் விட்டமின் பி12 ஸ்டேட்டஸ் ட்யூரிங் பிரக்னன்சி அண்ட் இட்ஸ் அசோசியேசன் வித் அவுட்கம்ஸ் ஆஃப் பிரக்னன்சி அண்ட் ஹெல்த் ஆஃப் தி ஆஃப்ஸ்ப்ரிங்' என்ற ஆய்வறிக்கையில், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 70 முதல் 74% ஆக உள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் இந்த பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 51% ஆகவும் இருக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "பி12 பற்றாக்குறையால் இரத்த சோகையில் பெர்னிசியஸ் அனீமியா (pernicious anemia) என்ற பிரச்னை ஏற்படும். நரம்பியல் சார்ந்த பிரச்னைகள், சமநிலையற்ற தன்மை, தலைசுற்றல், பலவீனம் அடைதல், மூச்சுப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும், இதன் பற்றாக்குறை மிகவும் தீவிரமாக இருக்கும் போது, இரத்தத்தில் ஹோமோசிஸ்டெய்ன் (homocysteine) அளவு அதிகமாகும். அளவுக்கு அதிகமாக ஹோமோசிஸ்டெய்ன், ஹைப்பர்ஹோமோசிஸ்டெய்னீமியா (hyperhomocysteinemia) என்ற குறைபாடு ஏற்படும். இதனால் கார்டியோ வாஸ்குலர் என்ற இருதய நோய் ஏற்படக் கூடும்," என்றும் எச்சரிக்கை செய்கிறார் அவர். உணவு இல்லாமல் மருந்து மாத்திரைகள் மூலமாக பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் மக்கள், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படி செய்யக் கூடாது. தொடர்ச்சியாக பி12 சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்வது இது போன்ற அபாயங்களில் இருந்து மக்களை காப்பாற்றும், என்றும் மீனாட்சி விளக்கம் அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் நபர்களும் விட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடும் விட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகள் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றில் விட்டமின் பி12 கிடையாது. விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களில் விட்டமின் பி12 அதிகமாக காணப்படுகிறது. எந்தெந்த உணவுகளில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது என்பதைப் பற்றி விளக்கிய மருத்துவர் மீனாட்சி, அதனை பின்வருமாறு பட்டியலிட்டார். சிலர் சைவமாக இருந்தாலும் அவர்கள் பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை சேர்க்கும் போது எத்தகைய பிரச்னையும் இல்லை. அதேபோன்று, நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை கட்டாயமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படாது. ஆனால், மாமிச உணவுகளான, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன்களில், குறிப்பாக கானாங்கெளுத்தி, சாலமன், சூரை மீன்களில் விட்டமின் பி12 செறிவுடன் காணப்படுகிறது. மாட்டிறைச்சியில் குறிப்பாக அதன் ஈரலில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது. எனவே, விட்டமின் பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரும்புபவர்கள் இந்த உணவை சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், செரல்கள் போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்ளலாம். மாட்டுப்பால் இல்லாத இதர பால் வகைகளை (non-dairy milks) உட்கொள்ளலாம். மேலும், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செயலிழக்கப்பட்ட ஈஸ்ட்டைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளேக்ஸை உணவாக உட்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் லாரா டில்ட், பிபிசிக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c780x9kpel8o