Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 30 APR, 2025 | 04:21 PM இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இரு வேறுபகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று புதன்கிழமை (30) முன்னெடுக்கப்பட்டன. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஒரு குவினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்றைய தினம் காலை முன்னெடுத்தனர். இதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றுமொரு குழுவினர் கொழும்பு விகாரமாதேசி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/213348
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஏப்ரல் 2025, 11:10 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என, ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் இதனை தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பில் இதுவரை நடந்தது என்ன? சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்குத் தேவையா?20 ஜனவரி 2023 சாதிவாரி கணக்கெடுப்பு: மோதி தயங்குவது ஏன்? ஸ்டாலின் முன் உள்ள தடைகள் என்ன? - 6 கேள்வி பதில்கள்26 ஜூன் 2024 சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு - ஆர்.எஸ்.எஸ் கருத்தும் காங்கிரஸின் 4 கேள்விகளும்3 செப்டெம்பர் 2024 எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது. தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்." என தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோதிக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது? கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c75dg19vkg7o
  3. உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு; தனியார் துறை முதலாளிகளிடம் தேர்தல் ஆணையம் விடுத்திருக்கும் கோரிக்கை 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில், தனியார் துறை ஊழியர்களுக்கு தேவையான விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையம் முதலாளிகளை கேட்டுக் கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 84A (1) இன் படி, இந்த விடுப்பு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வழங்கப்பட வேண்டும். பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு உள்ள தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் விடுப்பின் நீளம் கீழ்கண்டவாறு தீர்மானிக்கப்பட வேண்டும். • 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரமாக இருந்தால் அரை நாளாகவும், • 40 முதல் 100 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒரு நாளாகவும், • 100 முதல் 150 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒன்றரை நாளாகவும், • 150 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்களாகவும் விடுமுறை காலத்தை சரிசெய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்து https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317418
  4. கனகராசா சரவணன் மட்டு. கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (29) மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் கோரியபோது அவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை கோரியுள்ளார். இதனையடுத்து குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில் கரடியனாறு பகுதி வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை வாங்கிய நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317401
  5. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது தடுக்கப்படும் -; இராமலிங்கம் சந்திரசேகர் 30 APR, 2025 | 10:58 AM இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவு பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (29) பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மீனவர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையொன்று அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை உட்பட அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும், இது தொடர்பில் கடற்படையினருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இறங்குத்துறை பிரச்சினை சம்பந்தமாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதேவேளை, நெடுந்தீவு மக்களுடனும் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது நெடுந்தீவு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/213310
  6. ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா - ஆபத்பாந்தவனாக வழிநடத்திய சுனில் நரைன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் ரஹானேவுக்கு நேற்று காயம் ஏற்பட்டதால், சுனில் நரைன் கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வெற்றி பெற்றுக் கொடுத்து ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளார். கொல்கத்தா அணியில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டு துணைக் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்ட வெங்கேடஷ் அய்யர் இருந்தபோதிலும் அவரை அணியை வழிநடத்த வைக்காமல் ரூ.12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட சுனில் நரைன் அணியை வழிநடத்த அனுப்பப்பட்டார். கொல்கத்தாவின் ஆபத்பாந்தவன் கொல்கத்தா அணிக்கு ஆபத்பாந்தவனாக இருக்கும் சுனில் நரைன் இந்த முறையும் பந்துவீச்சாளராக, பேட்டராக, கேப்டனாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டு, அணியை வழிநடத்தினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சுனில் நரைனுக்கும் இடையிலான உறவு 13 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஐபிஎல் டி20 தொடரில் ஒரு குறிப்பிட்ட அணியுடன் நெருக்கமான உறவு வைத்து அதிலேயே தொடர்ந்து வருவது மிகச் சில வீரர்கள் மட்டுமே. அந்த வகையில் சிஎஸ்கே தோனி, ஆர்சிபி விராட் கோலி ஆகிய இருவருக்குப் பின் கொல்கத்தா அணியில் நீண்டகாலம் விளையாடி வருபவர், தொடர்ந்து தக்கவைத்து வருபவர் சுனில் நரைன் மட்டும்தான். கொல்கத்தா அணி பல வீரர்களை ஏலத்தில் எடுத்தாலும், விடுவித்தாலும் சுனில் நரைனை மட்டும் விடுவிக்கவில்லை, அவரின் திறமைக்கான தொகையைக் கொடுத்து தொடர்ந்து 13வது ஆண்டாகத் தக்க வைத்துள்ளது. ரூ.12 கோடிக்கு தக்கவைப்பு இதற்கு முன் ரூ.6 கோடிக்குத்தான் சுனில் நரைனை கொல்கத்தா நிர்வாகம் தக்க வைத்திருந்து. ஆனால் பந்துவீச்சு, பேட்டிங்கில் சில ஆண்டுகளாக நரைன் பங்களிப்பு பிரமாதமாக இருந்து வந்தது. கடந்த 2024 சாம்பியன் பட்டம் வெல்லக் காரணமானவர்களில் ஒருவராக நரைன் இருந்ததைத் தொடர்ந்து, ஏலத்தில் ரூ.12 கோடிக்கு தக்க வைத்தது கொல்கத்தா அணி நிர்வாகம். நரைனுக்கு தற்போது 36 வயதானாலும், வயதைப் பொருட்டாகக் கொள்ளாமல் கொல்கத்தா அணி தொடர்ந்து அவரைத் தக்கவைத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அதிரடியான தொடக்க பேட்டிங்கிற்கும், நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியைத் தனது சுழற்பந்துவீச்சால் திணற வைப்பதற்கும் சுனில் நரைனுக்கு நிகர் அவர்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா அணிக்காக 186 போட்டிகளில் ஆடியுள்ளார் சுனில் நரைன் பேட்டர் அவதாரம் இத்தனைக்கும் சுனில் நரைன் சிறந்த பேட்டரெல்லாம் கிடையாது. 2017ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஐபிஎல் தொடரில் சுனில் கீழ்வரிசையில் களமிறங்கக்கூடிய வீரராகத்தான் இருந்தார். அவர் கரீபியன் டி20 லீக்கில் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்த கொல்கத்தா நிர்வாகம் ஏன் தொடக்க வீரராகக் களமிறக்கக்கூடாது என யோசித்து அவரை 2017இல் இருந்து தொடக்க வீரராகப் பயன்படுத்தியது. சுனில் நரேனை தொடக்க வீரராகப் பயன்படுத்தும் கொல்கத்தா அணியின் முடிவைப் பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். வர்ணனையாளர்கள் கிண்டல் செய்துள்ளனர். ஆனால் தனது முடிவில் இருந்து கொல்கத்தா நிர்வாகம் பின் வாங்கவில்லை. பல போட்டிகளில் சுனில் நரைன் சொதப்பலாக பேட் செய்தாலும், சில போட்டிகளில் சுனில் நரைன் பேட்டிங் கொல்கத்தா அணிக்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சுனில் நரைனுக்கும் இடையிலான உறவு 13 ஆண்டுகளாகத் தொடர்கிறது (2012இல் எடுக்கப்பட்ட படம்) கொல்கத்தா அணிக்கு கெளதம் கம்பீர் பயிற்சியாளராகச் சென்ற பிறகுதான் நரைனின் பேட்டிங் மெருகேறியது. நரைன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து அவரைத் தொடக்க வீரராக கம்பீர் களமிறக்கினார். சுனில் நரைன் ஒரு பேட்டியில், "ஜிஜி (கெளதம் கம்பீர்) மீண்டும் அணிக்குள் வாருங்கள். உங்களால்தான் நான் பேட்டிங்கில் முழு நம்பிக்கை பெற்றேன். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க முடியும், சிறப்பாக ஆட முடியும் என்பதை அறிந்தேன்" எனக் கூறியிருந்தார். அதன் பிறகு கொல்கத்தா அணியில் நிரந்த தொடக்க ஆட்டக்காரராகவே சுனில் நரைன் மாறிவிட்டார். கொல்கத்தா அணிக்காக 186 போட்டிகளில் ஆடியுள்ள சுனில் நரைன், ஒரு சதம், 7 அரைசதங்கள் என 1712 ரன்கள் சேர்த்து 17 சராசரியும், 166 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். பந்துவீச்சில் 190 விக்கெட்டுகளை கொல்கத்தா அணிக்காக மட்டுமே நரைன் வீழ்த்தியுள்ளார், 6.77 ரன்கள் எக்கானமி வைத்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன்29 ஏப்ரல் 2025 ஐபிஎல்லில் இது பழிவாங்கும் வாரம் - ராகுலின் காந்தாரா கொண்டாட்டத்தை கிண்டல் செய்த விராட் கோலி28 ஏப்ரல் 2025 அறிமுகமே அசத்தல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா அணிக்கு கெளதம் கம்பீர் பயிற்சியாளராகச் சென்ற பிறகுதான் நரைனின் பேட்டிங் மெருகேறியது கடந்த 2012 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியில் அறிமுகமான சுனில் நரைன் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2வது முறையாக கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்லும் அணியிலும் 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி நரைன் முக்கியப் பங்காற்றினார். 2012 முதல் 2014 வரை 3 சீசன்களிலும் நரைன் 20 விக்கெட்டுகளுக்கு அதிகமாக வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அறிமுகத்தில் நரைன் எவ்வாறு பந்து வீசினாரோ அதே தரத்தில், அதே எக்கானமியில் தொடர்ந்து பந்துவீசி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் விக்கெட் வீழ்த்தியவுடன் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பார்கள், துள்ளிக் குதிப்பார்கள், பம்பிங் செய்வார்கள். ஆனால், சுனில் நரைன் விக்கெட் வீழ்த்தினாலும் சரி, வீழ்த்தாவிட்டாலும் சரி ஒரே மாதிரியாகவே முகத்தை வைத்திருப்பார். விக்கெட் வீழ்த்திவிட்டேன் என்று களத்தில் ஒருமுறைகூட மகிழ்ச்சியை அதிகப்படியாக வெளிப்படுத்தாத அமைதியான வீரர். "பாகிஸ்தான் மட்டுமல்ல சீனாவுக்கே அழுத்தம் கொடுக்கலாம்" - விக்ராந்துக்கு துணையாக வருகிறது ரஃபேல்-எம்29 ஏப்ரல் 2025 ஹிட்லரின் மரணம் குறித்து விலகாத மர்மங்கள் - இறக்கும் தறுவாயில் எப்படி இருந்தார்?30 ஏப்ரல் 2025 மாறாத நிலைத்தன்மை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த சீசனில் (2024) 15 போட்டிகளில் ஆடிய நரைன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் பந்துவீச்சாளராக அறிமுகமான சுனில் நரைன் கடந்த 13 ஆண்டுகளாக தனது நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார். பவர்ப்ளேவில் பந்து வீசினாலும், நடுப்பகுதி ஓவர்களில் பந்து வீசினாலும் பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவே நரைன் பந்துவீச்சு இருக்கும். சுனில் நரைன் தனது 13 ஆண்டுகால ஐபிஎல் வாழ்க்கையில் பந்துவீச்சு சராசரி என்பது சராசரியாக 6 ரன்களை கடக்கவில்லை, சில சீசன்களில் மட்டும் 7 ரன்ரேட் சென்றுள்ளது. ஆனால் தொடக்கத்தில் 5 ரன்ரேட்டில் பந்துவீசி பேட்டர்களை திணறவிட்ட நரேன் பின்னர் சில சீசன்களில் பின்தங்கினார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தனது பந்துவீச்சு எக்கானமியை சராசரியாக 6 ரன்களில் பராமரித்து வருகிறார். ஐபிஎல் டி20 போட்டிகளில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் எக்கானமியை 6 என 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரித்து வருவது வியப்புக்குரியது. கொல்கத்தா அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் எழுச்சி, ஹர்சித் ராணா வருகை, ரஸலின் விக்கெட் வீழ்த்தும் திறமை, ஸ்டார்க் வருகை எனப் பலர் வந்தபோதிலும் சுனில் நரைன் பந்துவீச்சில் இருக்கும் துல்லியம், மிரட்டல், விக்கெட் வீழ்த்தும் திறன், நிலைத்தன்மை மாறவில்லை. கடந்த சீசனில் 15 போட்டிகளில் ஆடிய நரைன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், பேட்டிங்கில் 488 ரன்கள் குவித்திருந்தார். கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் தனது வழக்கமான ஆக்ஷனை மாற்றிவிட்டால் முன்புபோல் சிறப்பாகப் பந்துவீசுவது கடினமாக இருந்துள்ளது. ஆனால், சுனில் நரைன் 2014ஆம் ஆண்டில் இருந்து தனது பந்துவீச்சு ஸ்டைலை பலமுறை மாற்றியுள்ளார், ஆனால் அவரின் நிலைத்தன்மை மட்டும் மாறவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன், கூக்ளி வீசுவது, பந்துவீச்சில் திடீரென வேகத்தைக் கூட்டுவது என நரைன் பந்துவீச்சில் பல உத்திகளைக் கையாள்வார். சிஎஸ்கே தொடர் தோல்வி – சொதப்பிய அணி மீது தோனியின் கடும் அதிருப்தி என்ன?26 ஏப்ரல் 2025 சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட்25 ஏப்ரல் 2025 உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுனில் நரேனை தொடக்க வீரராகப் பயன்படுத்தும் கொல்கத்தா அணியின் முடிவைப் பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர் இந்த ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்தது. கொல்கத்தா அணி 204 ரன்கள் சேர்த்திருந்த போதிலும், அதை சேஸிங் செய்யும் முனைப்பில் டெல்லி அணி ஆடியது. ஆட்டமும் டெல்லி பக்கம் சென்றது, சுனில் நரைன் ஒரே ஓவரில் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் விக்கெட்டையும், அடுத்த ஓவரில் டூப்ளெஸ்ஸி விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றியை நோக்கி நகர்த்தினார். பேட்டிங்கில் 27 ரன்களையும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை நரைன் வென்றார். கொல்கத்தா அணி வெற்றி பெற்றதும், அங்குல் ராய், வருண், குர்பாஸ் என வீரர்கள் பலரும் உற்சாகத்தில் கிண்டல், கேலி செய்து விளையாடினர். ரஹானே, ரிங்கு சிங் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஆனால், பொறுப்பான கேப்டனாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத் தந்த சுனில் நரைன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் தனியாக மைதானத்தில் ஓரத்தில் அமர்ந்திருந்தார். பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதி பாதுகாப்பின்றி இருந்தது ஏன்? விடை கிடைக்காத 3 கேள்விகள்29 ஏப்ரல் 2025 கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி - இந்தியாவுடனான அணுகுமுறையில் ட்ரூடோவிலிருந்து எப்படி மாறுபட்டவர்?29 ஏப்ரல் 2025 அணியை நரைன் வழிநடத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் கேப்டன்சி வாய்ப்பு என்பது சீனியர் வீரரான நரைனுக்கு வழங்கப்பட்டது. கொல்கத்தா அணியில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டு துணை கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்ட வெங்கேடஷ் அய்யர் களத்தில் இருந்தபோதிலும் அவரை அணியை வழிநடத்த அழைக்காமல் ரூ.12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட சுனில் நரைனை அணியை வழிநடத்த அனுப்பப்பட்டார். ரஹானேவுக்கு 12வது ஓவரில் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் பெவிலியன் சென்றுவிட்டார். அடுத்தபடியாக அணியை வழி நடத்த ஒருவர் வேண்டும் என்பதால், வெங்கடேஷ் அய்யர் வராமல் நரேனிடம் பொறுப்பு வழங்கப்பட்டது வியப்பைக் கொடுத்தது. வெங்கடேஷ் அய்யர் கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் தடுமாறியதால் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி அவரை இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கியது. அதிலும் சொதப்பிய வெங்கடேஷ் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இம்பாக்ட் வீரராக வருபவர் போட்டியில் முழுநேரம் விளையாட முடியாது. ஃபார்முக்கு வந்த ரோஹித், உருக்குலைந்த சன்ரைசர்ஸ் - இஷான் கிஷன் அவுட் ஆகாமலே வெளியேறியது ஏன்?24 ஏப்ரல் 2025 கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி23 ஏப்ரல் 2025 கடின உழைப்பாளி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா கேப்டன் ரஹானே மற்றும் சுனில் நரைன் சுனில் நரைன் குறித்து கொல்கத்தா கேப்டன் ரஹானே நேற்று (ஏப்ரல் 29) பேசுகையில், "நரைன் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். எப்போது நாங்கள் தடுமாற்றத்தில் இருந்தாலும் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார். நரைன் கடினமான உழைப்பாளி, பயிற்சியின்போது அதிகாலையே வந்துவிடுவார், மணிக்கணக்கில் வலைப்பயிற்சியில் பந்து வீசக்கூடியவர்" எனத் தெரிவித்தார். உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், ஜாலியாக இல்லாமல் இருக்கும் நரைன் குறித்து சில நேரங்களில் தவறான எண்ணங்கள் சக வீரர்களிடம் வந்தது உண்டு. அதுகுறித்து ஆந்த்ரே ரஸல் நேற்று கூறுகையில், "நரைனுடன் நீண்ட கால பழக்கம் எனக்கு இருக்கிறது, அவரின் குணத்தையும், அமைதியான போக்கையும் பார்த்துப் பல வீரர்கள் தவறாக நினைத்துள்ளார்கள். நரைன் எப்போதுமே அமைதியானவர், சில சூழல்கள் அவருக்குச் சரியாக இல்லாவிட்டாலும் பேசமாட்டார். அதேவேளையில் களத்தில் அவர் போலச் சுறுசுறுப்பாக யாரும் செயல்பட முடியாது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக சக வீரர்களிடம் அதிகமாகப் பேசுகிறார், தன்னை வெளிப்படுத்துகிறார், போட்டியை ரசிக்கிறார்" எனத் தெரிவித்தார். நாயைத் தேடி 500 நாட்கள் , 5,000 கி.மீ. பயணம் - விஷக்காட்டில் குட்டை வகை நாய் தப்பிப்பிழைத்தது எப்படி?7 மணி நேரங்களுக்கு முன்னர் எனர்ஜி டிரிங்க்ஸ் குழந்தைகளுக்கு ஆபத்தா? தடை செய்த பஞ்சாப் அரசு கூறிய காரணம் என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் இடம்: சென்னை நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் – மே 1 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs சிஎஸ்கே நாள் – மே 3 இடம் – பெங்களூரு நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 456 ரன்கள் (9 போட்டிகள்) விராட் கோலி (ஆர்சிபி) 443 ரன்கள் (9 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 427 (10 போட்டிகள்) நீலத் தொப்பி ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்) பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள் (9 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3vqvv4x59o
  7. Published By: DIGITAL DESK 3 30 APR, 2025 | 03:27 PM மே மாதம் 5 ஆம் திகதி முதல் சில ஐபோன்களில் வட்ஸ்அப் (WhatsApp) சேவை நிறுத்தப்படவுள்ளது. உலகில் அதிகளவானவர்கள் வட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய விவரங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால், போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அண்ட்ரோய்ட் வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் வட்ஸ்அப் சேவை (WhatsApp Services) நிறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஐஓஎஸ் வெர்ஷன்களை கொண்ட ஐபோன் 5எஸ் (iPhone 5s), ஐபோன் 6 (iPhone 6) மற்றும் ஐபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus) மொடல்களில் மே மாதம் 5ஆம் திகதியில் இருந்து வட்ஸ்அப் சேவை நிறுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வட்ஸ்அப் வணிகமும் பாதிப்பு சிறு வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட செயலி பதிப்பான வட்ஸ்அப் வணிகத்தையும் பாதிக்கும். பழைய சாதனங்களை நம்பியிருக்கும் பயனர்கள் வணிகத் தொடர்பு கருவிகளைத் தொடர்ந்து அணுக விரும்பினால் மேம்படுத்த வேண்டும். சாதன ஆதரவு மாற்றங்கள் வட்ஸ்அப் அதன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் புதுப்பித்து, விளக்குகிறது: "சாதனங்களும் மென்பொருளும் அடிக்கடி மாறுகின்றன, எனவே நாங்கள் எந்த இயக்க முறைமைகளை ஆதரிக்கிறோம் என்பதை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து புதுப்பிப்புகளைச் செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும், எந்த சாதனங்கள் மற்றும் மென்பொருள்கள் பழமையானவை மற்றும் மிகக் குறைந்த பயனர்களைக் கொண்டுள்ளன என்பதைப் பார்க்கிறோம். இந்த சாதனங்களில் சமீபத்திய பாதுகாப்பு புதுப்பிப்புகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது வட்ஸ்அப்பை இயக்கத் தேவையான செயல்பாடு இல்லாமல் இருக்கலாம்." பயனர்கள் என்ன செய்ய வேண்டும்? தடையற்ற அணுகலை விரும்பும் பயனர்கள் புதிய ஐபோன் மொடலுக்கு மாற வேண்டும். எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது ஏன் முக்கியம் காலாவதியான இயக்க முறைமைகளுக்கான ஆதரவை நிறுத்துவதன் மூலம், வட்ஸ் அப் செயலியை சிறப்பாக மேம்படுத்தலாம் மற்றும் பழைய வன்பொருளுடன் இணக்கமற்ற புதிய அம்சங்களை வெளியிடலாம். சமீபத்திய வட்ஸ் அப் அம்சங்களில் பின்வருவன அடங்கும்: மேம்பட்ட அரட்டை தனியுரிமை அடுக்குகள் மறைந்து போகும் செய்திகள் அரட்டை பூட்டு விருப்பங்கள் புதிய கருவிகள் செய்திஉகள் மற்றும் மீடியா கோப்புகளை நகலெடுப்பதைத் தடுக்கின்றன, பயனர்களுக்கு வலுவான தரவு பாதுகாப்பை வழங்குகின்றன. சிறந்த பாதுகாப்பையும் தளத்தின் சமீபத்திய அம்சங்களை அணுகுவதையும் உறுதி செய்வதற்காக வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டையும் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வட்ஸ் அப்பின் இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. பாதிக்கப்படும் ஐபோன் மொடல்களைக் கொண்ட பயனர்கள் சேவை இடையூறுகளைத் தவிர்க்க உடனடியாக மேம்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/213340
  8. கனடா பாராளுமன்றத்திற்கு இலங்கை தமிழர்கள் மூவர் தெரிவு கனேடிய பாராளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் மற்றும் அனிதா ஆனந்த் ஆகியோர் ஆளும் கட்சியான லிபரல் கட்சியில் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவான பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் இருந்து இலங்கைத் தமிழ் பூர்விக தமிழ் கனேடியரும் கனேடிய நீதி அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி தனது ஸ்கார்பாரோ – கில்ட்வுட் – ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அதேபோல ஆளும் கட்சியில் இருந்து யுவனிதா நாதனும் பிக்கரிங் – புரூக்ளின் தொகுதியிலும் களம் இறங்கியிருந்தார். Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த் போட்டியிட்டிருந்தார். https://thinakkural.lk/article/317407
  9. எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க திகதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி எவ்வாறு அறிந்திருந்தார் என்று கேட்டார். "ஏப்ரல் 15 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு வருமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். ஏப்ரல் 10, 2025 அன்று நான் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக என்னிடம் விசாரிக்க வேண்டியிருந்தது என்று ஆணையம் கூறியது. புத்தாண்டு விடுமுறையின் போது நான் கொழும்பில் இருந்ததால் அதைச் செய்ய முடியாது என்று சொன்னேன். பின்னர் ஏப்ரல் 25 ஆம் திகதி வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனது சட்டத்தரணி நாட்டிற்கு வெளியே இருந்ததால் வர முடியாது என்று சொன்னேன். நான் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதால், எனது சட்டத்தரணி என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். இருப்பினும், ஏப்ரல் 15 ஆம் திகதி புத்தாண்டைக் கொண்டாடப் போவதால் என்னால் வர முடியாது என்று நான் ஆணைக்குழுவிற்கு கூறியதாக மட்டக்களப்பில் ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கருத்தை வெளியிட்டார். ஆணைக்குழுவுடனான எனது கடிதத் தொடர்பு குறித்து ஜனாதிபதி திசாநாயக்க எப்படி அறிந்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறினார். இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு ஆரம்பத்தில் ஒரு சட்டத்தரணி தன்னுடன் வர அனுமதி மறுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார். ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அவற்றை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவுகளுக்குச் செலவிடுவது குற்றமல்ல என்று ஆணைக்குழுவிடம் மூன்று மணி நேர வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி கூறினார். முந்தைய ஆட்சியின் போது, ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபை நிதியை ஒரு வங்கியில் இருந்து திரும்பப் பெற்ற சம்பவம் தொடர்பாக திரு. விக்ரமசிங்க நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டார். "நான் ஆணைக்குழுவில் ஒரு அறிக்கையை அளித்து எனது கருத்தை விளக்கினேன், அதன் மூலம் வங்கிக் கணக்கில் நிதி வைத்திருப்பது தான் உண்மையான குற்றம் என்று நான் கூறினேன்," என்று திரு. விக்ரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். "மத்திய அரசால் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி பல்வேறு நோக்கங்களுக்காக செலவிடப்பட வேண்டும். நிதிகள் தொடர்ச்சியான மற்றும் மூலதன செலவினங்களுக்கு செலவிடப்பட வேண்டும். பணம் புழக்கத்தில் விடப்படும்போது பொருளாதாரம் சுறுசுறுப்பாகிறது. தொடர்ச்சியான மற்றும் மூலதன செலவினங்களுக்கு நிதி செலவிடுவது பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கும். உங்கள் பணத்தை ஒரு வங்கியில் வைப்புச் செய்தால், அது பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடாது. உங்கள் நிதியை ஒரு வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் நீங்கள் பொருளாதார வளர்ச்சியைப் பெற முடியாது. அன்றாட செலவுகளுக்கு செலவிடாமல் ஒரு வங்கியில் நிதியை டெபாசிட் செய்வது உண்மையான குற்றம். இந்த விஷயத்தை நான் ஆணைக்குழுவிடம் விளக்கினேன். 2024 ஆம் ஆண்டின் பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டம் இந்த விஷயத்தை தெளிவாக வரையறுக்கிறது மற்றும் முறையான செலவினங்களுக்கான ஏற்பாடுகளை வழங்குகிறது என்று நான் ஆணைக்குழுவிடம் கூறினேன்," என்று அவர் கூறினார். "கடந்த காலங்களில் ஒரு வங்கியில் அதிக வட்டிக்கு வைப்பு செய்யப்பட்ட அரச நிதிகள் திரும்பப் பெறப்பட்டு, குறைந்த வட்டிக்கு மற்றொரு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன என்று நான் ஆணைக்குழுவிடம் கூறினேன். இது 2008 இல் நடந்தது. 2002 இல் எங்கள் அரசாங்கம் அதிக வட்டி வழங்கும் வங்கிகளில் அரச நிதிகளை வைப்புச் செய்ய அனுமதித்தது," என்று அவர் மேலும் கூறினார். https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%AE/175-356389
  10. பட மூலாதாரம்,RAFALE படக்குறிப்பு, இந்தியா பிரான்சுடன் 26 ரஃபேல்-எம் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி செய்தியாளர் 29 ஏப்ரல் 2025, 13:30 GMT இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கள்கிழமையன்று கையெழுத்திட்டன. இந்த விமானங்களின் மொத்த விலை சுமார் ரூ.64,000 கோடியாக இருக்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானங்களை இந்தியா பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து வாங்குகிறது. இந்த ரஃபேல் விமானங்களை ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் நிறுத்தி பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம் பல வழிகளில் முக்கியமானது. இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான 26 ரஃபேல்-எம் (கடல்) ஒப்பந்தம் குறித்த தகவல்களை பிஐபி வழங்கியுள்ளது. பிஐபி தகவலின் படி, இந்த 26 போர் விமானங்களில், 22 ஒற்றை இருக்கை கொண்டதாகவும், நான்கு இரட்டை இருக்கை கொண்டதாகவும் இருக்கும். இந்த விமானங்களின் விநியோகமும் 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவில் ரஃபேல் விமானங்களின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விமானங்களைப் பராமரித்தல் போன்ற பல விஷயங்களும் அடங்கும். இது அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அரசு நம்புகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தால் அமெரிக்கா யாரை ஆதரிக்கும்? ஐஎன்எஸ் விக்ராந்த்: "அரபிக்கடலின் காவலன்"-பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விமானந்தாங்கி போர்க்கப்பல் இந்தியாவுடன் பதற்றம்: பாகிஸ்தானின் 2 முக்கிய கவலைகள் இதுவா? ரஃபேல்-எம் போர் விமானங்களின் அம்சங்கள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களைக் கொண்டுள்ளது (கோப்புப் படம்) இந்திய விமானப்படையிடம் ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன, இப்போது ரஃபேல்-எம் விமானத்தை வாங்குவதற்கு ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இது விமானம் தாங்கி கப்பல்களின் உதவியுடன் கடலில் இயங்கக்கூடிய விமானம் ஆகும். "இன்றைய காலகட்டத்தில், உலகின் பல நாடுகளும் ட்ரோன்களின் உதவியுடன் தாக்குகின்றன. ஆனால் துல்லியமாக குறி வைத்து, நீண்ட தூரத்தைத் தாக்கும் திறனின் அடிப்படையில், போர் விமானங்கள் முக்கியமானவை" என்று பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "ரஃபேல் ஒரு நவீன போர் விமானம், பிரான்ஸ் ஏற்கனவே அதன் திறனை நிரூபித்துள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல, சீனாவுக்கு எதிராகவும் இந்தியா தனது பலத்தைக் காட்ட முடியும்" என்கிறார் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா. எந்தவொரு போர் விமானமும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது அதன் சென்சார் திறன் மற்றும் ஆயுதங்களைப் பொறுத்தது. அதாவது, ஒரு போர் விமானத்தால் எவ்வளவு தூரத்தில் உள்ள எதிரியை கண்டறிய முடிகிறது, எவ்வளவு துல்லியமாக, எவ்வளவு தூரத்தில் இருந்து தாக்க முடிகிறது என்பதே போர் விமானத்தின் சக்தியைக் குறிக்கிறது. இந்தியா முன்னதாக 1997-98 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து சுகோய் விமானங்களை வாங்கியது. சுகோய்க்குப் பிறகு, போர் விமானங்களின் தொழில்நுட்பம் மாறிவிட்டது, அந்த அடிப்படையில், ரஃபேல் மிகவும் நவீன போர் விமானமாக உள்ளது. ஆசியா டைம்ஸின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரான இம்மானுவேல் ஸ்கெமியா, தேசிய ஆர்வம் எனும் இதழில், "அணு ஆயுதம் ஏந்திய ரஃபேல் விமானத்தால் 150 கிலோமீட்டர் வரை வானிலிருந்து ஏவுகணைகளை ஏவ முடியும் மற்றும் 300 கிலோமீட்டர் வரை வானிலிருந்து தரைக்கு செல்லும் வரம்பைக் கொண்டுள்ளது. சில இந்திய ஆய்வாளர்கள் ரஃபேல் பாகிஸ்தானின் எப் -16 ஐ விட அதிக திறன் கொண்டது என்று நம்புகிறார்கள்" என குறிப்பிட்டார், இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண் சந்திக்கும் சவால்- கர்ப்பிணி மருமகளை பிரிய மறுக்கும் குடும்பம்2 மணி நேரங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதி பாதுகாப்பின்றி இருந்தது ஏன்? விடை கிடைக்காத 3 கேள்விகள்7 மணி நேரங்களுக்கு முன்னர் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பஹல்காம் இப்போது எப்படி இருக்கிறது?24 ஏப்ரல் 2025 இந்திய கடற்படையின் பலம் அதிகரிக்கும் ரஃபேல் விமானத்தின் வருகை இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்குமா? சீனா மற்றும் பாகிஸ்தானுடனான பதற்றமான சூழ்நிலைகளில் ரஃபேல் திறம்பட செயல்படுமா? போன்ற கேள்விகளுக்கு "உலகின் பல நாடுகள் ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவை சக்தி வாய்ந்ததாகக் காண விரும்புகின்றன. இந்த பிராந்தியத்தில் வெற்றிகரமான ஜனநாயக நிர்வாக அமைப்பு உள்ளதன் காரணமாக அவர்கள் இந்தியாவை நம்புகிறார்கள், அதேசமயம் சீனாவின் அணுகுமுறை அதன் விரிவாக்கத்தை முன்னிறுத்தி அமைந்துள்ளது " என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா பதிலளித்தார். "எனவே, அதன் சக்தியை வலுப்படுத்த, இந்தியா ரஃபேல் போன்ற போர் விமானங்களை வைத்திருப்பது முக்கியம். இது பாகிஸ்தான் மற்றும் சீனா மீது அழுத்தத்தை அதிகரிக்கும், மேலும் எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்தியா இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது." முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் தனது பதவிக் காலத்தில் பிரான்சுடனான ரஃபேல் ஒப்பந்தத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதினார். ரஃபேல் விமானத்தின் வருகையால், பாகிஸ்தான் வான் படையின் திறனை இந்தியா முறியடிக்கும் என்று பாரிக்கர் ஒருமுறை கூறியிருந்தார். "அதன் இலக்கு துல்லியமாக இருக்கும். ரஃபேல் விமானம் மேலும் கீழும், பக்கவாட்டாக, அதாவது ஒவ்வொரு திசையிலும் கண்காணிக்கும் திறன் கொண்டது. அதாவது அதன் தெரிவுநிலை 360 டிகிரியாக இருக்கும். விமானி எதிரியைப் பார்த்து பொத்தானை அழுத்தினால் போதும், மற்றதை கணினி செய்யும். அதில் விமானிக்கு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய ஒரு தலைக்கவசமும் இருக்கும்" என்று பாரிக்கர் கூறியிருந்தார். பாகிஸ்தான் வான்வெளியை மூடுவதால் இந்திய பயணிகளுக்கு என்ன பாதிப்பு?26 ஏப்ரல் 2025 சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது பாகிஸ்தானில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?25 ஏப்ரல் 2025 பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமா? பாதுகாப்பு நிபுணர்கள் விளக்கம்25 ஏப்ரல் 2025 பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்த போர் விமானத்தால் இந்தியா பாகிஸ்தானை வெல்ல முடியுமா? எனும் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "இந்தியா தற்போது ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானிடம் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் கூட இல்லை. இந்தியா சீனாவை மனதில் கொண்டுள்ளது. சீனாவை மனதில் கொண்டு விமானப்படை இதற்கு முன்பு ரஃபேல் விமானங்களையும் நிறுத்தியுள்ளது" என்றார். இந்தியாவின் பாதுகாப்புக்கு எத்தனை போர் விமானங்கள் தேவை? என்ற கேள்விக்கான பதில் என்னவென்றால், உங்களிடம் எத்தனை அதிகமான போர் விமானங்கள் இருக்கிறதோ, அவற்றைக் கொண்டு அதற்கு ஏற்ப அதிக இடங்களில் போரிட முடியும். அதாவது, இந்த சூழலில் எண்ணிக்கை மிகவும் முக்கியம். "ரஃபேல் விமானத்தின் வருகை இந்திய கடற்படைக்கு மிகுந்த பலத்தை அளிக்கும், ஆனால் 26 விமானங்கள் இதற்குப் போதுமானதாக இல்லை. இந்தியாவிடம் உள்ள இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களில் 60 முதல் 70 போர் விமானங்களை நிறுத்த முடியும்" என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "தற்போது சீனா மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது, மேலும் இரண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் 12-13 விமானம் தாங்கிக் கப்பல்களும், ரஷ்யாவில் ஐந்து அல்லது ஆறு கப்பல்களும் உள்ளன." என்றார். பாகிஸ்தானுடனான தற்போதைய பதற்றமான சூழ்நிலையில் இந்தியாவிற்கு ரஃபேல் ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது? எனும் கேள்விக்கு, "ஆசியாவின் இந்தப் பகுதியில், சீனா மற்றும் தாய்லாந்து தவிர வேறு எந்த நாட்டிலும் விமானம் தாங்கிக் கப்பல்கள் இல்லை" என்று கூறுகிறார் ராகுல் பேடி. அதாவது இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்தப் போட்டியும் இல்லை. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவும் சூழ்நிலையில், ரஃபேல்-எம் ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன லாபம்? ராகுல் பேடியின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்தியாவிடம் உள்ள மிக் விமானங்கள் மிகவும் பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றுக்கும் பல சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், ராகுல் பேடி கூறுகையில், "புதிய ரஃபேல் ஒப்பந்தத்தின் மிக முக்கியமான பகுதி இந்தியா எப்போது அந்த விமானங்களைப் பெறும் என்பது தான். முதல் ரஃபேல் விமானம் தோராயமாக 36 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும். இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப ரஃபேல் விமானத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டும், அதற்கும் அதிக நேரம் எடுக்கும்" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y5z7p2pvpo
  11. 35 வருடங்களுக்கு பின்னர், பேருந்து சேவை 35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை - பலாலி இடையிலான அரச பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர். கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட பலாலி வீதி வரை இன்றைய தினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதர்ஷன் வினோத் https://www.tamilmirror.lk/%E2%80%8B%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/35-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B5/386-356419
  12. INNINGS BREAK 48th Match (N), Delhi, April 29, 2025, Indian Premier League DC chose to field. Kolkata Knight Riders (20 ov) 204/9 Current RR: 10.20 • Last 5 ov (RR): 45/5 (9.00) Delhi Capitals Win Probability: KKR 64.54% • DC 35.46%
  13. Published By: RAJEEBAN 28 APR, 2025 | 04:40 PM https://www.aljazeera.com/ கனடாவின் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க பிராச்சார மாற்றமொன்றின் மத்தியில் இன்று அந்த நாட்டு மக்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். ஜனவரி மாதத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தன. எனினும் அதன் பின்னர் லிபரல் கட்சியினர் நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளனர். கடந்த சில வாரங்களில் வெளியான கருத்துக்கணிப்புகள் இரண்டு கட்சியினருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளன. லிபரல் கட்சியினர் வெற்றி பெறப்போகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது என கனேடிய கருத்துக்கணிப்பு நிறுவனமான எகோஸ் ஆராய்ச்சியின் தலைவரும் நிறுவனருமான பிராங் கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இது முற்றிலும் நினைத்துப்பாக்க முடியாததாகயிருந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இலையுதிர்காலத்தில் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே டிரம்ப் போன்ற ஒருவர் என கருதப்பட்டார். நீண்ட கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியின் கீழ் அதிகரித்த பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக மக்கள் ஆதரவு மிக்கவராக காணப்பட்டார். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 6 ஆம் தேதி ட்ரூடோ பதவி விலகியபோது நிலைமை தலைகீழாக மாறியது. இது புதிய லிபரல் தலைமைக்கு வழி வகுத்தது. மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் நுழைந்தார், கனடாவின் பொருளாதாரத்தை வர்த்தகப் போரால் அச்சுறுத்தினார். திடீரென்று, கனடியர்கள் தங்கள் தேசிய அடையாளத்தைச் சுற்றியும், டிரம்பிசத்திற்கு எதிராகவும் ஒன்றுபட்டனர். ஊழல் நிறைந்த உயரடுக்கிடமிருந்து அதிகாரத்தை திரும்பப் பெற்று மக்களிடம் திருப்பித் தர வேண்டும் என்ற நம்பிக்கையான ஜனரஞ்சகவாதம், இங்கிலாந்தில் பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்கும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் தேர்தலுக்கும் வழிவகுத்தது. 34 சதவீத கனடியர்கள் ஜனரஞ்சகக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் என்று கண்டறியும் ஒரு ஆய்வறிக்கையை கிரேவ்ஸ் எழுதியுள்ளார். இந்தத் தேர்தலில். டிரம்ப் மீண்டும் பதவியேற்பதைப் பார்த்து கனடியர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டதாக கிரேவ்ஸ் கூறினார், "நாம் இந்த ஜனரஞ்சகப் பாதையில் செல்ல விரும்புகிறோமா?" லிபரல்கள் வெற்றி பெற்றால், கனேடிய வாக்காளர்கள் டிரம்பிற்கு எதிராக நிற்கிறார்கள் என்று அர்த்தம் என்று அவர் தெரிவித்தார்" இது நிச்சயமாக டிரம்பிற்கும், அவரது நிர்வாகத்தில் அவர்கள் காணும் மக்கள்தொகைக்கும் ஒரு கண்டனமாக இருக்கும். போட்டி எப்படி மாறியது அமெரிக்கத் தலைமையின் மாற்றம் அதன் அண்டை நாடான கனடாவில் வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பொய்லிவ்ரே சவாலற்ற பிரபலமாக காணப்பட்டார். கொரோனாவிற்கு பின்னர், மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் பதவியில் இருந்த தலைவர்கள், தொற்றுநோய் கட்டுப்பாடுகள், ஜூன் 2022 இல் 8.1 சதவீதத்தை எட்டிய பணவீக்கம், கட்டுப்படியாகாத வீட்டுவசதி மற்றும் அரசியல் துருவமுனைப்பு காரணமாக கடுமையான தேர்தல்களை எதிர்கொண்டனர். ட்ரூடோவும் இதற்கு விதிவிலக்கல்ல. கனடாவில் பொய்லிவ்ரே டிரம்ப் போன்ற ஒரு நபராகக் காணப்பட்டார்; அமெரிக்காவை விட வாக்காளர்களில் ஒரு சிறிய பங்கைக் கொண்டிருந்த "வடக்கு மக்கள் தொகை"யை அவர் பயன்படுத்திக் கொண்டார், ஆனால் இன்னும் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக இருந்தார் என்று கிரேவ்ஸ் தெரிவித்தார். கனடாவின் கார்பன் வரி போன்ற அவரது செல்வாக்கற்ற கொள்கைகளை குறிவைத்து, பொய்லிவ்ரே ட்ரூடோவை தாக்கினார். நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென ராஜினாமா செய்தபோது ட்ரூடோவின் தலைமை குறித்த கேள்வி உச்சத்தை எட்டியது. ஒரு கடிதத்தில், வரவிருக்கும் டிரம்பின் "அமெரிக்கா முதலில்" பொருளாதார தேசியவாதம் மற்றும் அதிக வரிகளின் சவாலுக்கு ட்ரூடோ தயாராக இல்லை என்று கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் எழுதினார். ட்ரூடோ ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இது லிபரல்களுக்கு தலைமைத்துவப் போட்டியைத் தூண்டியது. கனடாவின் அரசியல் அமைப்பில், ட்ரூடோ பதவி விலகியது என்பது லிபரல்கள் இன்னும் அதிகாரத்தில் இருப்பதைக் குறிக்கிறது, ஆனால் இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட கட்சி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கட்சி தலைமைப் போட்டியை நடத்தியபோது, டிரம்ப் பதவியில் நுழைந்து கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விரைவாக அறிவித்தார். அதே நேரத்தில், கனடா 51வது மாநிலமாக மாற வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கருத்து தெரிவித்தார். டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களுக்குள் லிபரல்களின் தலைமைப் போட்டி நடந்தது, மேலும் நிகழ்வுகளின் திருப்பம் கட்சியை "ட்ரூடோ அரசாங்கத்தின் செல்வாக்கற்ற தன்மைக்கு அப்பால் நகர்த்த உதவியது" என்று கால்கரி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் லிசா யங் கூறினார். கனடாவின் இறையாண்மை மற்றும் பொருளாதாரம் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், மார்ச் 9 அன்று லிபரல்கள் மார்க் கார்னியைத் தேர்ந்தெடுத்தனர், அவர் 2008 நிதி நெருக்கடியின் போது கனடா வங்கியின் ஆளுநராகவும், பிரெக்ஸிட் மற்றும் கொரோனாவின் போது இங்கிலாந்து வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றிய பின்னர் பொருளாதாரத்தில் புத்திசாலி என்று கருதப்பட்டார். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்னி, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட மிகக் குறுகிய தேர்தல் காலமான ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒரு திடீர் தேர்தலை அறிவித்ததன் மூலம் தனது புகழைப் பரப்பினார். கனடா டிரம்பின் வர்த்தகப் போரை எதிர்கொள்கிறது டிரம்பின் திடீர் வரிகள் கனடாவின் பொருளாதாரத்தை நிச்சயமற்ற தன்மையில் ஆழ்த்தியுள்ளன. நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு செல்கின்றன, இதில் வாகன பாகங்கள், மரம் வெட்டுதல் விவசாய பொருட்கள் மற்றும் இரும்பு ஆகியவை அடங்கும். "நாங்கள் அமெரிக்காவை மிகவும் நம்பியிருக்கிறோம்" என்று ஒன்ராறியோவில் உள்ள குயெல்ப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சில்வானஸ் குவாகு அஃபெசோர்க்போர் கூறினார். "கனடாவில் ஒரு பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும், ஏனெனில் நமது பொருளாதாரம் பெரும்பாலும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்துள்ளது. மார்ச் மாதத்தில், கனடாவின் இரண்டாவது பெரிய இரும்பு உற்பத்தியாளரான அல்கோமா ஸ்டீல், டிரம்பின் வரிகளின் நேரடி விளைவாகதொழிலாளர்கள் பணி நீக்கத்தினை அறிவித்தது. ஒன்ராறியோவின் நெருக்கமான நகரமான சால்ட் ஸ்டீ மேரியில்இரும்பு ஆலை பிரதானமானது. மேலும் பணிநீக்கங்கள் சமூகம் முழுவதும் ஆழமாக உணரப்பட்டன. சால்ட் ஸ்டீ மேரி-அல்கோமா மாவட்டம் 2015 முதல் லிபரல்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இரும்பு தொழிற்சாலை எஃகுத் தொழிலாளர்களைப் போலவே, வரிகளால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள், வேலை இழப்பு ஏற்பட்டால் எந்தக் கட்சி சிறந்த பொருளாதார நிலைமையை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்பார்கள் என்று அஃபெசோர்க்போர் கூறினார். "ட்ரம்ப் வரிகள் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், அதைத் தீர்க்க யார் சிறந்த நிலையில் இருப்பார்கள்?" என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளலாம். ஒவ்வொரு கட்சித் தலைவரும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் திறனை வாக்காளர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று அவர் கூறினார். கனேடிய வாக்காளர்கள் பொருளாதாரத்தைப் பற்றி "அக்கறை கொண்டவர்கள்" என்றும், மந்தநிலையையும் டிரம்பின் வர்த்தகப் போரையும் கையாள முடியும் என்று அவர்கள் நம்பும் கட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அஃபெசோர்க்பர் கூறினார். வங்கித் துறையில் மார்க் கார்னியின் சாதனை காரணமாக வாக்காளர்கள் அவரை சிறந்த வேட்பாளராக உணரக்கூடும் என்றும் அவர் கூறினார். "அது தாராளவாதிகளுக்கான ஆதரவை நிறைய மாற்றியுள்ளது." தாராளவாதிகள் முன்னிலை வகிக்கின்றனர் கனடாவை நோக்கிய டிரம்பின் கொள்கைகள் வெறும் பொருளாதார தாக்கத்தை விட அதிகமாக இருந்தன. பல கனடியர்களுக்கு, இது அவர்களின் தேசிய அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக உணர்ந்தது. டிரம்பின் வரி அறிவிப்புகளை அடிப்படையாக வைத்து அமெரிக்கா கனடாவை கைவிடுகின்றது என கனடா மக்கள் கருதினார்கள்.பின்னர் கனடாவை 51வது மாநிலமாக மாற்றுவது குறித்த ஜனாதிபதி டிரம்பின் கருத்துகளையும் நீங்கள் அதனுடன் சேர்க்கிறீர்கள். எனவே அது என் வாழ்நாளில் நான் பார்த்த எதையும் போலல்லாமல் கனேடிய தேசியவாதத்தின் அலையைத் தூண்டியது” என்று யங் அல் ஜசீராவிடம் கூறினார். போய்லீவ்ரேவுக்கு எதிர்பார்ப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை “அது அடிப்படையில் அரசியல் ரீதியாக நிலப்பரப்பை மாற்றியுள்ளது ஏனென்றால் வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் ஜபோய்லீவ்ரேஸ டிரம்பைப் போலவே இருப்பதாக சந்தேகிக்கின்றனர்” என்று அவர் கூறினார். கிரேவ்ஸ் கருத்துக்கணிப்புகளில் "ஆழ்ந்த மாற்றத்தை" கண்டார். பிப்ரவரியில் தாராளவாதிகள் மற்றும் பழமைவாதிகள் அடிப்படையில் சமநிலையில் இருந்தனர் ஆனால் மார்ச் மாத தொடக்கத்தில் லிபரல்கள் ஐந்து ஆண்டு உச்சத்தை எட்டினர் கனடியர்கள் "டொனால்ட் டிரம்பிலிருந்து வரும் இந்த இருத்தலியல் அச்சுறுத்தலை நாங்கள் எவ்வாறு சமாளிப்பது?" என்று கேட்டனர். தேசியப் பெருமையின் எழுச்சி டிரம்ப் ஏற்படுத்திய கொந்தளிப்பின் மூலம் கனடாவை வழிநடத்தக்கூடிய வேட்பாளராகக் கருதப்பட்ட கார்னியை நோக்கி வாக்காளர்களைத் தள்ளியுள்ளது. " கனடிய வாக்காளர்கள் டிரம்பைக் கண்டிக்கத் தொடங்கினர். கணிக்கப்பட்டபடி தாராளவாதிகள் வெற்றி பெற்றால் டிரம்பிற்கு எதிராக கனடா தனது சொந்த பாதையை அமைத்துக் கொள்கிறது என்பதைக் குறிக்கும் என்று யங் கூறினார். https://www.virakesari.lk/article/213160
  14. Published By: DIGITAL DESK 2 29 APR, 2025 | 05:56 PM (டேனியல் மாக்ரட் மேரி) ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பணம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால், கட்டுப்பாடின்றி அதிகமான பணம் உருவாக்கப்பட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை "பண அச்சிடல்" (Money Printing) என அழைக்கலாம். இது சில நேரங்களில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். பணம் அச்சிடல் என்றால் என்ன? அதாவது, பண அச்சிடல் என்பது, ஒரு நாட்டின் மத்திய வங்கி புதிய பணத்தை உருவாக்கி அரசுக்கு அல்லது பொருளாதாரத்துக்கு வழங்கும் செயலாகும். பொதுவாக அரசு திறைசேரியில் பணம் குறையும்போது, அரசின் செலவுகளை நிரப்ப மத்திய வங்கியிடம் பணம் பெறும். மத்திய வங்கி, புது பணத்தை அச்சிட்டு அல்லது வேறு முறையில் பணத்தை கணக்கில் சேர்த்து, அரசுக்கு நிதியளிக்கிறது. இதுவே பண அச்சிடலாகும். இங்கு மத்திய வங்கி பணத்தை அச்சிட்டு அரசுக்கு வழங்குவதனால் பொருளாதார நெருக்கடி நிலையை ஏற்படும். அதே போல் பணம் அச்சிடப்படாமல் அரசு திறைசேரியின் பணம் நிறைவடைந்து மத்திய வங்கியின் கணக்கில் இருந்து அரசுக்கு பணம் வழங்கப்படும் போதும் பொருளாதார நெருக்கடி நிலைமை தோன்றும். இது நேரடியாக பண அச்சிடல் செயன்முறையை குறிக்காது. ஆனால் இந்த செயன்முறையும் ஒரு வகையில் பண அச்சிடலினால் தோன்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். பணம் அச்சிடுவதால் ஏற்படும் விளைவுகளை குறித்து நோக்கினால், புதிதாக அதிக அளவில் பணம் உருவாக்கப்படும் போது, பொருள்களின் எண்ணிக்கை (supply) அதிகரிக்காமல் இருந்தால், அதன் விலை உயர்ந்துவிடும். இதனால் விலைவாசி அதிகரித்து தோல்விப் பொருளாதாரம் உருவாகும். சந்தை தோல்வி என்பது ஒரு தடையற்ற சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் போதுமான விநியோகம் இல்லாத பொருளாதார சூழ்நிலையைக் குறிக்கிறது. மக்கள் பணத்தின் மதிப்பை நம்பவில்லை என்றால், அவர்கள் விரைவாக பணத்தை செலவழிக்கத் தொடங்குவர். இதன் விளைவாக பணத்தின் மதிப்பு (Currency Value) சரிந்துவிடும். இவை அனைத்தும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தில் நெருக்கடியை (Economic Crisis) உருவாக்கும். சில நேரங்களில் இது மிகை பண வீக்கம் (Hyperinflation) என்ற நிலைக்கே கொண்டு செல்லும். உதாரணமாக சிம்பாப்வே, வெனிசுவேலா போன்ற நாடுகளை குறிப்பிடலாம். ஒரு அரசு திறைசேரியில் பணம் குறைவதால், கடன் எடுக்கும் நிலை உருவாகலாம். மத்திய வங்கி அரசின் கடனை வாங்கி புதிய பணத்தை வழங்கும் போது, நேரடியாக பண அச்சிடல் நடக்கும். இது ஒரு கட்டுப்பாடற்ற செயலாக மாறினால், பொருளாதாரம் மீது பெரும் அழுத்தம் ஏற்படும். பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க, பண அச்சிடலை கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சிக்கு துரித நடவடிக்கைகள் எடுப்பது மற்றும் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்குவது முக்கியம். மத்திய வங்கி பணத்தை சரியான முறையில் வெளியிட்டு, வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை வகுப்பது பொருளாதாரத்தை நிலைநிறுத்தும். இதனால், மக்கள் பணத்தைக் கையாளும் முறையில் நம்பிக்கை செலுத்தி, பொருளாதாரத்தை சீராக்க முடியும். பணம் அச்சிடுவது ஒரு சில நேரங்களில் அவசியமான தீர்வாக இருக்கலாம். ஆனால், அதை சிறந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தவில்லை என்றால், அது பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். ஆகையால், பண அச்சிடல் என்பது ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் போல; அதைச் சரியாக கையாளுதல் அவசியமாகும். https://www.virakesari.lk/article/213255
  15. இந்திய இராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்; எங்கள் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் 29 APR, 2025 | 03:47 PM இஸ்லாமாபாத்: இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும் அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் ராய்ட்டரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “இந்திய இராணுவ ஊடுருவல் நிகழும். தற்போது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம். தற்போதைய சூழலில் எத்தகைய யுக்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். இந்தியா தாக்குதல் நடத்த உள்ளதற்கான சாத்தியம் குறித்து பாகிஸ்தான் இராணுவம் அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளார். அதேநேரத்தில் விரைவில் ஊடுருவல் நிகழும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து அவர் கூறவில்லை. பாகிஸ்தானின் அணு ஆயுத பிரயோகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவாஜா முகமது ஆசிப் “இவ்விஷயத்தில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும். அதேநேரத்தில் எங்கள் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார். போரை தவிர்க்க பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிய கவாஜா முகமது ஆசிப் “வளைகுடா நாடுகள் மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளை அணுகினோம். பிரிட்டன் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கும் நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளோம். அரேபிய வளைகுடாவில் உள்ள எங்கள் நண்பர்கள் சிலர் இரு தரப்பினருடனும் பேசியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நேற்று (திங்கள்) சீனா வேண்டுகோள் விடுத்தது. மேலும் நிலைமையை தணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாகவும் அது கூறியது. இந்த விவகாரத்தில் தலையிடுவதில் இருந்து அமெரிக்கா ‘விலகி’ இருப்பதாக கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான உறவுகளை முடிவு செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கூறினார். எனினும் இரு தரப்பினருடனும் தொடர்பில் இருப்பதாகவும்இ ‘பொறுப்பான தீர்வை’ நோக்கிச் செயல்படுமாறு வலியுறுத்துவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. https://www.virakesari.lk/article/213266
  16. "டிரம்ப் எங்களை சிதைக்க முயல்கின்றார், அமெரிக்காவுடனான பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது" - கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி Published By: RAJEEBAN 29 APR, 2025 | 12:34 PM அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்கு வந்துவிட்டதாக கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார், அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி இது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார். அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது என நான் பல மாதங்களாக எச்சரித்து வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ள அவர் இது பெரும் துன்பியல் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு சுதந்திர, இறைமையுள்ள தேசங்களின் எதிர்காலம் குறித்து நான் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன். உலகிற்கான தலைமைத்துவத்தின் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்கா விரும்பாவிட்டால் கனடா அதனை செய்யும் நாங்கள் வலுசக்தி வல்லரசாக மாறுவோம் எனவும் கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கார்னி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/213241
  17. பலாலி - காங்கேசன்துறை வரையிலான அரச பஸ் சேவை ஆரம்பம்! Published By: DIGITAL DESK 2 29 APR, 2025 | 01:07 PM 35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பஸ் சேவை செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முதல் பலாலி உயர்பாதுகாப்பு வலயம் காணப்படுவதனால், யாழ்ப்பாணம் - பலாலி வீதி வசாவிளான் சந்தியுடன் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி முதல் நிபந்தனைகளுடன் குறித்த வீதி முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது. அதனை அடுத்து, இன்றைய தினம்(29) முதல் குறித்த வீதியூடாக காங்கேசன்துறை வரையில் அரச பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேவேளை குறித்த வீதியூடாக ஒரு சில தினங்களில் தனியார் சிற்றூர்திகளும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213242
  18. கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை இம்முறை தவிர்த்து மென்மேலும் வினைத்திறனாக செயற்படுமாறு யாழ் அரசாங்க அதிபர் தெரிவிப்பு! Published By: DIGITAL DESK 2 29 APR, 2025 | 05:33 PM எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய முழுமையான பொறுப்பு மற்றும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதால் இத் தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியமானது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக மூன்றாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலில்களில் கற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு சில அசெளகரியங்கள் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு ஏற்பட்டிருந்தால் அவற்றை இம்முறை தவிர்த்து மென்மேலும் வினைத்திறனாக செயற்படுமாறும் தெரிவித்ததுடன், இம் முறை வட்டார ரீதியாக வாக்கெண்ணல் நடைபெறவுள்ளதால் தங்களுக்குரிய பொறுப்புக்களை உணர்ந்தும் செயற்பட வேண்டும் என்பதுடன், அஞ்சல் வாக்கெண்ணல் தொடர்பாகவும் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் பார்வைக்குறை பாடுடையவர்களுக்கான வசதிகளை அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார். கடந்த தேர்தலில் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கிய அசெளகரியங்கள் மற்றும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்ததுடன் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக பிரதித் தேர்தல் ஆணையாளர் இ. சசீலனால் விளக்கமளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/213286
  19. உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சி மரியெல்லா, நேற்று (28) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியாவைச் சேர்ந்த எம்எஸ்சி மரியெல்லா கப்பல் 399.90 மீட்டர் நீளமும் 61.30 மீட்டர் அகலமும் கொண்டது. 240,737 தொன் எடையுள்ள கொள்கலன்களை கையாளக்கூடிய இந்த பெரிய கப்பல் 2023 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கப்பல் கிழக்கு கொள்கலன் முனையத்தில் 1,600 கொள்கலன்களை ஏற்றி இறக்கும் என்று இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக பணிப்பாளர் கனக ஹேமசந்திர தெரிவித்தார். மேலும், எம்.எஸ்.சி மரியெல்லாவின் வருகை இலங்கையின் கடல்சார் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல் என்றும், இது சர்வதேச கடல்சார் துறையில் இலங்கையின் பெயரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் என்றும் அவர் கூறினார். கொழும்பு துறைமுகத்தை தெற்காசியாவின் கடல்சார் மையமாக மாற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கனவு நனவாகி வருவதற்கான அறிகுறியாக இந்த மிகப்பெரிய கப்பலின் வருகை அமைந்துள்ளது. https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B2/175-356424
  20. நம்மட ஊரைத்தவிர மிச்ச இடமெல்லாம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுதாம்! சித்திரை சிறுமாரி போல.
  21. Published By: DIGITAL DESK 2 29 APR, 2025 | 04:27 PM 2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிய திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செலவு செய்து முடிக்கவேண்டியது பொறுப்பு எனக் குறிப்பிட்டார். திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் அதற்கு சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் எனவும் நா.வேதநாயகன் மேலும் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (29) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், நடப்பு ஆண்டின் மூன்றிலொரு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லாமல் உள்ளது. எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவு செய்வதுடன் அடுத்த ஆண்டு அதிகளவு நிதியைக் கோரவேண்டும். அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களது தலைமைத்துவத்தில் தான் இந்தத் திட்டங்களின் நடைமுறையாக்கத்தின் வெற்றி தங்கியிருக்கின்றது. கடந்த மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப்போல திட்டங்களின் நடைமுறையாக்கங்களை செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிடுவதுடன், இரு வாரங்களுக்கு ஒரு தடவை மீளாய்வுக் கூட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். திட்டங்களுக்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்யும்போது அவதானம் தேவை. குறைந்த விலையில் கேள்விகூறலைச் சமர்பித்து ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதை நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். தவறிழைக்கும் ஒப்பந்தகாரர்களை கறுப்புப் பட்டியலில் உள்வாங்க வேண்டும் என்பதை பல தடவைகள் சொல்லியுள்ளேன். அதை நடைமுறைப்படுத்த வேண்டியது பிரதிப் பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகளின் பொறுப்பு. அதைச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்திலாவது பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும், என்று ஆளுநர் குறிப்பிட்டார். இதன் பின்னர் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிதி எஸ்.குகதாசன், நிதி முன்னேற்றம் தொடர்பில் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாக தெரியப்படுத்தினார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிய அவர், கட்டுநிதி விடுவிப்புத் தொடர்பில் தாமதங்கள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டார். அதேபோல மாகாணத்துக்கு எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் உரியவாறு காலாண்டுக்குரியது கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள நிலையான வைப்பு நிதியை அந்தப் பிரதேசங்களின் சிறிய அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாகாணத்தின் நிதியை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். நிரல் அமைச்சுக்கள் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தால் நிதியை விடுவிக்கத் தயாராகவுள்ள நிலையில் தேவையான திட்;டங்களைச் சமர்பித்து நிதியைப்பெற்று நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார். இதன் பின்னர் திட்டங்களின் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாகத் தெளிவுபடுத்தினார். 2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் நிதிக்கூற்று அறிக்கை புத்தகம் இந்தக் கூட்டத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநரிடம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளரால் ஒப்படைக்கப்பட்டது. இதேவேளை இந்த முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தில், வடக்கு மாகாணத்தில் தற்போது முருங்கை மற்றும் மாம்பழச் செய்கையில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அது தொடர்பில் ஆராய்ச்சிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், புதிய இனங்களை அறிமுகப்படுத்தும்போது பாரம்பரிய இனங்களை அழிவடையாமலும் பார்த்துக்கொள்வது விவசாயத் திணைக்களத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/213270
  22. “மாடுகளின் வாய்க்குள் வெங்காய வெடி வைத்து வாய் சிதறடிப்பு” புத்த பெருமான் போதித்த காருண்யம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு , மாதவனை பகுதிகளில் மீறப்படுகின்றது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் வாய் பேச முடியாத மாடுகளுக்கு வாய்க்குள் வெங்காய வெடியை வைத்து வாயை சிதறடிக்கின்றீர்கள். இதனால் அந்த மாடுகள் உணவுகூட அருந்த முடியாமல் அணு அணுவாக செத்துடுப்போகின்றது என்றார். காலை இழந்த ஒரு இராணுவ வீரர் தான் இவ்வாறான கொடூரத்தை செய்கின்றார். மயிலத்தமடு , மாதவனையில் பெரும் பாவத்தினை இந்த நாடு செய்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த அவர், இலங்கையில் சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்தின் கதவுகளுக்கு ''சீல்'' வைக்கப்பட்டுள்ளது.பௌத்தத்தை பின்பற்றுகின்ற , புத்தரின் பெயரால் விகாரைகளை அமைக்கின்ற ,அவரின் பெயரினால் இந்த நாட்டில் அநியாயங்களுக்கு எல்லாம் முடி சூட்டுகின்ற பிக்குமாரைக்கொண்டுள்ள இந்த நாட்டில் கருணையும் அஹிம்சையும் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. புத்தபெருமான் சொன்ன பாவங்களை நீங்கள் எங்கே கழுவப்போகின்றீர்கள், எங்கே கரைக்கபோகின்றீர்கள்? என்றும் கேள்வியெழுப்பினார். https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/150-328013
  23. பட மூலாதாரம்,FACEBOOK/KANGALA WILDLIFE RESCUE படக்குறிப்பு,வலேரி, நாய் கட்டுரை தகவல் எழுதியவர், பிராண்டன் ட்ரெனன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டின் காட்டுப் பகுதிகளில், சுமார் 500 நாட்களைக் கழித்தபின் 'மினியேச்சர் டாஷண்ட்' என்ற வகையை சேர்ந்த ஒரு நாய் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதியில் உள்ள கங்காரு தீவில் 'வலேரி' என்ற பெயர் கொண்ட அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல நாட்கள் 'இரவும் பகலும்' செலவழித்ததாக கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர்கள் செய்த ஒரு கேம்ப்பிங்க் (camping) பயணத்தின்போது வலேரி நாய் தங்களிடமிருந்து ொலைந்து போனதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஜார்ஜியா கார்டெனர், அவரது காதலர் ஜோஷுவா ஃபிஷ்லாக் ஆகிய இருவரும், வலேரியை விளையாடுவாதற்கான வலை போன்ற ஒரு அமைப்பில் (Playpen) விட்டு விட்டு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வலேரியைக் காணவில்லை. கடுமையான வெப்பம், விஷத்தன்மை கொண்ட பாம்புகள் ஆகியவற்றிடம் இருந்து தப்பிப் பிழைத்து, சுமார் 529 நாட்கள் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வலேரி நாய் உயிர் பிழைத்தது. ஜார்ஜியா கார்டெனரின் சட்டையில் இருந்து வரும் வாசத்தை வைத்து அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்யப்பட்டதில் அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டது. எனர்ஜி டிரிங்க்ஸ் குழந்தைகளுக்கு ஆபத்தா? தடை செய்த பஞ்சாப் அரசு கூறிய காரணம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒவ்வாமை இரட்டையர்களுக்கு ஒன்றுபோல வருமா?29 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மினியேச்சர் டாஷண்ட் வகையை சேர்ந்த ஒரு நாய் (கோப்புப்படம்) "பல வாரங்கள் எடுக்கப்பட்ட தொடர்ச்சியாக முயற்சிக்கு பின், வலெரியை ஒருவழியாக பாதுகாப்பாக மீட்டுவிட்டோம். வலேரி ஆரோக்கியமாக இருக்கின்றது," என்று கங்கலா வனவிலங்கு மீட்புக் குழு சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளது. தன்னார்வலர்கள் வலேரியைத் தேடி 1,000 மணி நேரத்திற்கும் மேலாக 5,000 கிமீ தொலைவு பயணித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மீட்பு முயற்சியில் கண்காணிப்பு கேமராக்களும், ஒரு கூண்டும் பயன்படுத்தப்பட்டது. அந்த கூண்டில், உணவு, ஜார்ஜியா கார்டெனரின் உடைகள், வலேரியின் பொம்மைகள் ஆகியவை இருந்தன. கூண்டில் வலேரி பிடிபட்ட பிறகு ஜார்ஜியா கார்டெனரின் உடைகளை அவர் அணிந்து சென்று, வலேரியின் அருகில் சென்றதாகவும். அந்த நாய் முழுமையாக அமைதியாகும் வரை அதன் அருகிலே அமர்ந்திருந்ததாகவும் கங்கலா வனவிலங்கு மீட்புக் குழுவின் இயக்குநர் லிசா கரன் கூறினார். வலேரி காணாமல் போன முதல் சில நாட்களில் அங்கு தங்கிருந்த மற்ற சில பயணிகள் வலேரியை , அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் அடியில் கண்டதாகவும், அவர்களைப் பார்த்து பயந்து போன வலேரி புதர்க்காடுகளுக்குள் பயந்து ஓடியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது. போக்குவரத்து மிகுந்த சாலையில் புதிய குடும்ப உறுப்பினர்களை வரவேற்ற வெண்மார்பு கடற்கழுகு28 ஏப்ரல் 2025 சங்கரன் நாயர்: ஜாலியன் வாலாபாக் வழக்கில் பிரிட்டிஷாரை எதிர்த்த சென்னை வழக்கறிஞர்27 ஏப்ரல் 2025 பல மாதங்கள் கழித்து, வலேரியின் பிங்க் நிற காலரைப் போன்ற ஒன்றைக் கண்டதாக தீவில் வசிப்பவர்கள் கூறியது கங்கலா வனவிலங்கு மீட்புக் குழுவின் மற்றொரு இயக்குநரான ஜேரட் கரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. "என்னைப் பொறுத்தவரை, எல்லா நாய் வகைகளிலும் இந்த இனம் காட்டுப்பகுதியில் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் இவற்றுக்கு நல்ல மோப்ப சதி உண்டு," என்றார் அவர். வலேரியை கண்டுபிடிக்க எடுத்த விறுவிறுப்பான முயற்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட 15 நிமிட வீடியோ ஒன்றில் லிசா கரன் மற்றும் ஜேரட் கரன் விளக்கியுள்ளனர். கூண்டில் சரியான பகுதிக்கு வலேரி சென்று அமைதியாக இருக்கும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும், அப்போதுதான் அது மீண்டும் தப்பிக்க முயற்சி செய்யாது என்றும் லிசா கரன் கூறுகிறார். "கூடில் வலேரி எங்கு இருக்க வேண்டும் என்று விரும்பினோமோ, அந்த பகுதிக்கு அது சென்றது. அதன் பிறகு கதவை மூடுவதற்காக பட்டனை அழுத்தினேன். எல்லாம் சரியாக நடந்தது," என்றார் ஜேரட் கரன். "வலேரியை கண்டுபிடிக்க 'ஏன் இவ்வளவு நாட்கள் எடுக்கிறது' என்று மக்கள் ஆத்திரம் அடைவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் வலேரியை கண்டுபிக்க நாங்கள் பல்வேறு முயற்சிகள் பின்னணியில் செய்து கொண்டிருந்தோம்," என்றார் அவர். பல நாள் காத்திருப்புக்குப் பின் வலேரி மீட்கப்பட்டபிறகு, ஜார்ஜியா கார்டெனர்சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "உங்கள் செல்லப்பிராணியை இழந்தவர்கள் யாராயினும், உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். சில நேரம் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்", என்று குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0qnyjgyd39o
  24. நான் நினைக்கிறேன் இது சாதாரண வெடி இல்ல, அமுக்கத்தில வெடிப்பது. நிலத்தில வேகமாக அடிப்பாங்கள், சத்தமாக வெடிக்கும். கிட்டதட்ட இதே தொழில்நுட்பத்தில தான் வெங்காய வெடி என்று சொல்லி பன்றிகளுக்கு வைப்பது, யானை தவறுதலாக வாயில் போட்டு அழுத்த வாய்ப்பகுதி சிதறி கொஞ்ச நாளில் உணவும் உண்ணமுடியாமல் இறக்கும். பல்வைத்தியர் பதார்த்தம் என்று நினைத்து கடிக்க, வெடித்துவிட்டது. வாயில் வெடித்த வெடிமருந்து அதிக சக்தி கொண்டதாக இருந்த காரணத்தால் அந்த யானையின் வாயும் நாக்கும் முழுமையாக சேதமடைந்துள்ளது. மிகக் கடுமையான காயங்களுடன் இருந்த யானை, அங்கு இருந்த யாரையும் தாக்கவில்லை, கோபத்தில் எதுவுமே செய்யாமல் அமைதியாகவே நடந்து சென்றுள்ளது. உணவுக்காக வந்த யானைக்கு இன்னும் உணவு கிடைக்காத நிலையில் கடும் பசி, வாயில் கொடூரமான வலி நரக வேதனையை இரண்டு நாட்களுக்கு மேல் யானை சந்தித்துள்ளது. தண்ணீரில் இறங்கிய யானை . பல மணி நேரம் வலியுடன் இருந்த நிலையில் கடைசியில் இறந்து போனது. இந்த சம்பவம் 2020ம் ஆண்டு மே மாதம் நடந்தது. Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/keralites-who-burst-the-pineapple-fruit-that-day-and-today-elephant-gave-protection-in-the-forest-626919.html
  25. கடும் மின்னல் தாக்கம்: மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை புதிய இணைப்பு கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் பெய்ய அதிக வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. முதலாம் இணைப்பு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (29.04.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்காலிகமாக பலத்த காற்று மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னல் அனர்த்தம் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட J 208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J 279 கிராம சேவகரபிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J 301 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 3 பேரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J426 கிராம சேவகர் 1குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/today-weather-heavy-rain-with-thunderstorms-1745891520

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.