Everything posted by ஏராளன்
-
ரூ.13,500 கோடி மோசடி: பெல்ஜியத்தில் கைதான மெஹுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வர முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ வேண்டுகோளின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டது. பெல்ஜியத்தில் இருந்து தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த இந்திய ஏஜென்சிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நீரவ் மோதி விவகாரம் என்ன? 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஊழலில் நீரவ் மோதி, அவரது மனைவி ஏமி, அவரது சகோதரர் நிஷால், உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கண்டறியப்பட்டனர். நீரவ் மோதி தற்போது லண்டன் சிறையில் உள்ளார், அவரது ஜாமீன் மனு பல முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தன்னை இந்தியாவிடம் ஒப்படைத்துவிடக் கூடாது என்று அவர் அங்கே சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து சதி செய்து வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியது. நீரவ் மோதி, மெஹுல் சோக்ஸி மற்றும் மற்றவர்கள் மீது பஞ்சாப் நேஷனல் வங்கி முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புகார் அளித்தது. இந்த புகாரில், 280 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உள் விசாரணை முடிந்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த மோசடி குறித்து மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அளித்தது. இது இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடிகளுள் ஒன்றாகும். இந்த வழக்கில் மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது உறவினர் நீரவ் மோதி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஒரே ஒரு மரத்திற்காக ரூ.1 கோடியை டெபாசிட் செய்த ரயில்வே - விவசாயிக்கு ஜாக்பாட்6 மணி நேரங்களுக்கு முன்னர் அரசை விமர்சிக்கும் பள்ளி மாணவர் நாடகத்தால் சர்ச்சை - கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது சாத்தியமா? மெஹுல் சோக்ஸியை ஒப்படைக்க பெல்ஜியத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. கரீபியன் பிராந்தியத்தை குறித்து செய்திகள் வெளியிடும் அசோசியேட்டட் டைம்ஸ் என்ற இணையதளம், மெஹுல் சோக்ஸி பெல்ஜியம் நாட்டில் வசிப்பதாக ஒரு செய்தியில் குறிப்பிட்டிருந்தது. "மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி சோக்ஸி ஆகியோர் தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வசித்து வருகின்றனர். அவர் அந்நாட்டின் எஃப் (F) ரெசிடென்சி கார்டை வைத்திருக்கிறார்." என்று அந்த செய்தி கூறியது. அசோசியேட்டட் டைம்ஸின் இந்த செய்தியானது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பெல்ஜியம் அரசாங்கத்திடம் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகள் இதை இன்னும் உறுதி செய்யவில்லை. மெஹுல் சோக்ஸி பெல்ஜியம் நாட்டில் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் இந்தியாவில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கவும் செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். மெஹுல் சோக்ஸியின் சட்டக் குழு அவரது மோசமான உடல்நிலையை முன்வைத்து அதையே ஒரு வலுவான வாதமாக மாற்ற வாய்ப்புள்ளது என்றும் சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, மும்பை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் அளிக்கும் போது மெஹுல் சோக்ஸி இந்தியா வர அவரது இயலாமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ள தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்று மெஹுல் சோக்ஸி கூறியதாக எகனாமிக் டைம்ஸ் ஊடகத்தில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கின்றது. லுகேமியா என்று அழைக்கப்படும் ரத்த புற்றுநோயினால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னால் "100 சதவீதம்" பயணம் செய்ய முடியாது என்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளதாக மெஹுல் சோக்ஸி கூறியிருந்தார். உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதி உள்ள இந்தியாவில் மெஹுல் சோக்ஸி முறையான சிகிச்சை பெற முடியும் என்று ஒரு அதிகாரி கூறியதாக எகனாமிக் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவதும் பெண்களே நிரம்பிய குழு இன்று விண்வெளி பயணம் - இந்த 6 பேரும் யார்? என்ன செய்யப் போகிறார்கள்?14 ஏப்ரல் 2025 தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது?14 ஏப்ரல் 2025 பெல்ஜியம் அரசாங்கம் சொல்வதென்ன? பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் இருப்பது குறித்தும் பெல்ஜியம் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக பெல்ஜியத்தின் பெடரல் பப்ளிக் சர்வீஸ் வெளியுறவு விவகாரங்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டேவிட் ஜோர்டான்ஸ் கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெல்ஜியமில் மெஹுல் சோக்ஸி எங்கு இருக்கிறார் என்று கேட்டதற்கு, "எஃப்.பி.எஸ் வெளியுறவு விவகாரங்கள் அமைப்புக்கு இது குறித்து தெரியும் என்று நான் உறுதியாக கூற முடியும், அவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்", என்று டேவிட் ஜோர்டான்ஸ் கூறினார். "இருப்பினும் எந்தவொரு தனிப்பட்ட வழக்கு குறித்தும் நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த இந்த வழக்கு பெடரல் பப்ளிக் சர்வீஸ் நீதிமன்றத்தின்கீழ் வருகிறது. இது தொடர்பான முன்னெடுப்புகளை எஃப்.பி.எஸ் வெளியுறவு விவகாரங்கள் அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்", என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES யார் இந்த மெஹுல் சோக்ஸி? 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று, மும்பை நகரில் இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் நிறுவப்பட்டதாக செய்தி வந்தது. இந்த ஏடிஎம்மில் பொதுமக்கள் தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் அனைத்து வகையான நகைகளையும் வாங்க முடியும். ஆனால் இந்த இயந்திரத்தால் மக்களை கவர்ந்திழுக்க முடியவில்லை. வாடிக்கையாளர்கள் யாரும் இதைப் பயன்படுத்துவதில்லை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். இந்த ஏடிஎம்கள் மெஹுல் சோக்ஸியால் நிறுவப்பட்டவை. மெஹுல் சோக்ஸியின் கதை ஆரம்பத்தில் வைரம் போல பளபளப்பாக இருந்தது. அவரது பழக்கவழக்கங்கள் எப்போதும் தங்கத்தைப் போல நெகிழ்வாக இருந்தன. ஆனால் அவற்றின் விளைவு போலி நகைகளைப் போல ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. மெஹுல் தனது தந்தை சினுபாய் சோக்ஸியின் வைரம் வெட்டும் மற்றும் பாலிஷ் செய்யும் தொழிலை வாங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழி காட்டினார். ஆனால் நிறுவனத்தின் கெட்ட பெயர் காரணமாக ஊழியர்கள் தங்கள் வேலைகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கிய ஒரு காலம் வந்தது. அவரது நிறுவனமான கீதாஞ்சலி, 2006 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியீடு மூலம் ரூ.330 கோடியை திரட்டியது. பின்னர் 2013 ஆம் ஆண்டு, முறைகேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் மெஹுலின் நிறுவனம் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதை 6 மாதங்களுக்கு செபி தடை செய்தது. 2008-ஆம் ஆண்டில், கத்ரீனா கைஃப் இந்நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த போது, இந்நிறுவனத்தின் விற்பனை ஒரு வருடத்தில் 60 சதவீதம் அதிகரித்தது. கீதாஞ்சலி நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு போலி வைரங்களை விற்பனை செய்வதாக 2018 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவாஸ்தவா குற்றம் சாட்டினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxn09771vro
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல்; வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எடுத்த அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களுக்கு முக்கிய அறிவித்தல் 15 APR, 2025 | 03:55 PM எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எடுத்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 2025.05.06 ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், அந்த மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளை குறித்த மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்குமாறு அந்தந்த அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற முகவர்கள், சுயேட்சைக் குழுத் தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (11) நீக்கியுள்ளது. குறித்த 18 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு அந்தந்த தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு எழுத்தாணை ஒன்றை பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த இடைக்காலத் தடையுத்தரவை நீக்கியுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரம் 22,23,24, ஆகிய தினங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/212031
-
நீரிழிவு நோயில் மேலும் ஒரு புதிய வகை: டைப்-5 நீரிழிவு யாருக்கெல்லாம் வரக் கூடும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 15 ஏப்ரல் 2025, 03:03 GMT உடல் பருமனாக இருப்பவர்களுக்கே நீரிழிவு நோய் வரும் என்ற எண்ணம் பலரது மனதிலும் உள்ளது. மெலிந்த தேகம் கொண்டவர்கள் மத்தியில் எந்தவிதமான நோயும் வருவதில்லை என்ற எண்ணமும் நம்மிடம் உள்ளது. ஆனால் குறைவான பி.எம்.ஐ கொண்டவர்கள் மத்தியிலும் நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் அது ஏற்கனவே மக்கள் மத்தியில் காணப்படும் டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் அல்ல என்றும் சமீபத்தில் பாங்காங்கில் நடைபெற்ற நீரிழிவுக்கான உலகளாவிய மாநாட்டில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (பிஎம்ஐ- உடல் எடையையும், உயரத்தையும் கொண்டு கணக்கிடுவது. உலக சுகாதார நிறுவனம் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ இருந்தால், அது உடல் பருமன் பிரச்னை என்கிறது) இந்த வகை நீரிழிவு நோய் குறிப்பாக மத்திய மற்றும் குறை வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பருமனாக இல்லாத, அதே நேரத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நபர்களிடம் ஏற்படும் நீரிழிவு நோயை டைப்-5 நீரிழிவு நோய் என்று வகைப்படுத்தி, அதற்கான ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார் பேராசிரியர் மருத்துவர் பீட்டர் ஸ்வார்ஸ். அவர் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். டைப்-5 நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படுகிறது? அது எவ்விதம் ஏற்படுகிறது? அதனை கட்டுக்குள் கொண்டு வர எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதை ஆய்வு செய்ய சர்வதேச அளவில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன? முதன்முறையாக எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? எந்தெந்த சமூகக் குழுக்கள் மத்தியில் இந்த நோய் அதிகமாக பரவுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன? <19 என்ற அளவில் குறைந்த பி.எம்.ஐ எண் கொண்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயே வகை ஐந்து நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீரிழிவு உடல் பருமன் குறைவாக இருக்கும் மக்களிடம் ஏற்படுகிறது. "டைப்-2 நீரிழிவு நோய் உடைய, உடல் பருமன் அதிகமாக இருக்கும் நோயாளிகளிடம், இன்சுலின் சுரந்தாலும் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள அந்த இன்சுலின் சுரப்பு போதுமானதாக இருக்காது. அவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு அதிகப்படியாக இருக்கும். ஆனால், டைப்-5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது. இவர்களின் உடலில் இன்சுலின் பற்றாக்குறை இருக்கும். ஆனால் டைப்- 2 நீரிழிவு நோய்க்கு ஊசி செலுத்துவது போன்று இல்லாமல், மாத்திரைகள் மூலமாகவே சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இயலும்," என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ். இவர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். முட்டையில் இருக்கும் மூளைக்கு தேவையான அறியப்படாத ஊட்டச்சத்து – அறிவாற்றலை மேம்படுத்துமா?9 மணி நேரங்களுக்கு முன்னர் முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வகை 5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது யாருக்கெல்லாம் இத்தகைய நீரிழிவு நோய் வரக் கூடும்? குறைவான மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டக் கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்ட மக்கள் கருவில் இருக்கும் போதே குறைவான பிஎம்ஐ கொண்ட பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆண்கள் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்தும் கேட்டோனூரியா அல்லது கேட்டோசிஸ் குறைபாடு உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு அதிக அளவு இன்சுலின் தேவைப்படும் நபர்கள் ஆகியோருக்கு டைப்-5 நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் என்கிறது வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி நடத்திய ஆராய்ச்சி முடிவுகள். பட மூலாதாரம்,GETTY IMAGES டைப்-5 நீரிழிவு 1955-ல் கண்டுபிடிப்பு குறைவான பி.எம்.ஐ. கொண்ட மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயை ஹூக் - ஜோன்ஸ் 1955-ஆம் ஆண்டில் உறுதி செய்தார். ஜமைக்காவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் அவர்களுக்கு டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பதையும் அவர் உறுதி செய்தார். குறைவான மற்றும் மத்திய வருவாய் ஈட்டக்கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது அப்போது கண்டறியப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், கொரியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் எத்தியோபியா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை நீரிழிவு நோய் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் இந்த வகை நீரிழிவு நோய் 1985-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. அதனை ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் (malnutrition-related diabetes mellitus (MRDM)) என்று வகைப்படுத்தியது உலக சுகாதார அமைப்பு. தனிமை - தனித்திருத்தல் என்ன வேறுபாடு? தனிமையை வெல்வது எப்படி?14 ஏப்ரல் 2025 உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?11 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பிரிவுகளை முதன்முறையாக 1980-ஆம் ஆண்டு வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு. WHO பட்டியலில் இருந்து டைப்-5 நீரிழிவு நீக்கப்பட்டது ஏன்? பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பிரிவுகளை முதன்முறையாக 1980-ஆம் ஆண்டு வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு. 1985-ஆம் ஆண்டு அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வெளியிடப்பட்டது. 1980-ஆம் ஆண்டில் நிபுணர் குழு நீரிழிவு நோயின் இரண்டு பிரிவுகளான ஐ.டி.டி.எம் அல்லது டைப்-1 மற்றும் என்.ஐ.டி.டி.எம். அல்லது டைப்-2 நீரிழிவு நோயை பட்டியலில் இணைக்க பரிந்துரை செய்தது. 1985-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் (MRDM) வகை பட்டியலில் இடம் பெற்றது. ஆனால் 1999-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அல்லது புரத பற்றாக்குறை காரணமாக ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் ஏதும் இல்லை என்பதால் MRDM வகை நீரிழிவு நோயை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது உலக சுகாதார அமைப்பு. ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக நீரிழிவு நோயில் ஏற்பட்டிருக்கும் திரிபு என்று கூறி அந்த வகையை நீக்கியதோடு மட்டுமின்றி, அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. நீங்கள் குடிக்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1985-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் (MRDM) வகை உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் இடம் பெற்றது முக்கிய அறிவிப்புக்கு வழிவகுத்த ஆராய்ச்சி கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குறைவான உடல் பருமன் கொண்ட, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயானது டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1955-ல் முதன் முறையாக கண்டறியப்பட்ட, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோயாக (MRDM) இது இருக்கலாம் என்பதையும் அவர்கள் ஆராய்ச்சி முடிவில் உறுதி செய்தனர். இது தொடர்பாக அதே ஆண்டு "An Atypical Form of Diabetes Among Individuals With Low BMI," என்ற தலைப்பில் ஆராய்ச்சி முடிவுகளையும் வெளியிட்டனர். அதன்படி, பின்தங்கிய சமூக பொருளாதார பின்னணியில் இருந்து, குறைவாக உடல் பருமன் கொண்ட 73 இந்திய ஆண்களிடம் சோதனை செய்யப்பட்டது. அதில் 20 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது. வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பணியாற்றி வரும் மூத்த பேராசிரியரும் மருத்துவருமான நிஹல் தாமஸ், அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்திருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மெரிடித் ஹாகின்ஸும், இதர துறை சார் நிபுணர்களும் சேர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். "இது தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை வழங்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில் பிரகடனம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 'வேலூர் எண்டோகிரைனாலஜி சர்வதேச மாநாட்டில்' அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே சமீபத்திய அறிவிப்பு பாங்காங்கில் வெளியிடப்பட்டது," என்று தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ். வேலூரில் நடைபெற்ற மாநாட்டிற்கு பேராசிரியர்கள் நிஹல், மெரிடித் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அமைப்பு செயலாளராக பேராசிரியர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் செயல்பட்டார். இறைச்சி உண்பதை சில காலம் நிறுத்தி, பின்னர் மீண்டும் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படுமா?16 மார்ச் 2025 உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?8 மார்ச் 2025 பட மூலாதாரம்,PROFESSOR PETER SCHWARZ/LINKEDIN படக்குறிப்பு,சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற பேராசிரியர் பீட்டர் ஸ்வார்ஸ் மற்றும் இதர துறைசார் நிபுணர்கள் டைப்-5 நீரிழிவு நோய் தொடர்பான ஆராய்ச்சி ஏன் அவசியமாகிறது? "பொதுவாக இத்தகைய நபர்களுக்கு நீரிழிவு நோய் வராது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும். அவர்களுக்கு, டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொதுவான சிகிச்சை முறையை கையாள்வது தீங்காக போய் முடியக்கூடும். இன்றைய காலத்தில் ஆதாரங்கள் அடிப்படையில்தான் மக்கள் எந்த ஒரு சிகிச்சையையும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே இது தொடர்பாக அதிக அளவு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டைப்-5 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை முறையை உருவாக்கவும் இத்தகைய ஆராய்ச்சிகளை தொடர்வது முக்கியமானது," என்று மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0jz91lvgnlo
-
மியன்மாரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்!
14 APR, 2025 | 05:06 PM மியன்மாரில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. ஒப்பரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் மியான்மரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மீட்பு பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதலால் விமானத்தின் விமானிகளுக்கு தவறான தகவல்கள் கிடைக்க தொடங்கியது. இதனால் விமானிகள் குழப்பம் அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட விமானிகள், அவசரகால சிக்னல்களை பயன்படுத்தி உண்மையான நிலவரங்களை கண்டறிந்தனர். இதையடுத்து இந்த சைபர் தாக்குதலை இந்திய பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர். https://www.virakesari.lk/article/212003
-
அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா!
Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 12:43 PM அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா தற்போது நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் 2 ஆம் திகதி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். இதற்கு ஏனைய நாடுகள் பணிந்த நிலையில், சீனா தொடர்ந்து ஏட்டிக்குப் போட்டியாக வரியையும் அதிகரித்தது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியையும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியையும் விதிப்பதாக அறிவித்தன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா தற்போது நிறுத்தி உள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள் மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவியான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க்க டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் இராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 கனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/211989
-
மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES/ SERENITY STRULL/ BBC கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கோலின் ஊட்டச்சத்து நமது அறிவாற்றலை மேம்படுத்தவும், பதற்றத்தை குறைக்கவும் உதவலாம். ஆனால், அதனை போதுமான அளவு பெறுகிறீர்களா? கோலின் குறித்து இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிக அளவில் கோலின் எடுத்துக்கொள்வது அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதுடன், கவனக்குறைவு, டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளை தடுக்கும் திறன் கொண்டிருக்கலாம் என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்களின் நரம்பியல் வளர்ச்சியில் கோலின் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் கோலின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்ட தாய்மார்கள், குறியீடுகள் மற்றும் தகவல்களை விரைவாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட குழந்தைகளைப் பெற்றேடுத்தனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்தது. விஞ்ஞானிகள் கோலின் ஒரு அதிசய ஊட்டச்சத்து என்கிறார்கள். ஆனால் அது பெரிதும் கவனிக்கப்படவில்லை. கோலின் எந்த பொருட்களில் இருந்து கிடைக்கும்? நீங்கள் அதை போதுமான அளவு பெறுகிறீர்களா? ஒரு முக்கிய ஊட்டச்சத்து நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கோலின் காணப்படுகிறது என்கிறார் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் கல்லூரியில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் பேராசிரியராக பணியாற்றும் ஜின்யின் ஜியாங். கோலின் ஒரு "அத்தியாவசிய" ஊட்டச்சத்து. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான இதனை, நமது உடல் தானாகவே போதுமான அளவு உற்பத்தி செய்யாது. அதற்கு பதிலாக, நாம் அதை நமது உணவிலிருந்து பெற வேண்டும். இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைப் போன்றது என்றாலும், உண்மையில் பி வைட்டமின்களுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று அறிவியல் எழுத்தாளர் மற்றும் ஒர் ஊட்டசத்து ஆலோசனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எம்மா டெர்பிஷயர் கூறுகிறார். மாட்டிறைச்சி, முட்டை, மீன், கோழி மற்றும் பால் போன்ற விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில் பெரும்பாலும் கோலின் காணப்படுகிறது. அதே சமயம், வேர்க்கடலை, கிட்னி பீன்ஸ், காளான் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றிலும் உள்ளது. இருப்பினும், விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில், தாவர அடிப்படையிலான உணவுகளில் உள்ளதை விட அதிக அளவு கோலின் காணப்படுகிறது. நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு, குறிப்பாக கல்லீரல் செயல்பாட்டுக்கு கோலின் அவசியம். போதுமான அளவு கோலின் இல்லாவிட்டால், பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம். "கோலின், கல்லீரலிலிருந்து கொழுப்பை வெளியே அனுப்புவதற்கு உதவுகிறது. மேலும், ஒருவருக்கு கோலின் குறைபாடு இருந்தால், அவருக்கு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படியலாம் (fatty liver) " என்கிறார் ஜியாங். தனிமை - தனித்திருத்தல் என்ன வேறுபாடு? தனிமையை வெல்வது எப்படி?14 ஏப்ரல் 2025 தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் சருமத்தை பாதுகாக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?14 ஏப்ரல் 2025 மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி?12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சோயாபீன்களின் மூலம் 100 கிராமுக்கு 120மிகி அளவில் கோலினைப் பெற முடியும். தாய்மார்களின் கர்பகாலத்தில் கரு வளர்ச்சியடையும்போது, மூளையில் செல் பெருக்கம் குறைய, கோலின் குறைபாடு காரணமாக அமைகிறது. இது பல்வேறு தீங்குகளை விளைவிக்கலாம். எனவே மூளையில் கோலினின் பங்கு மிகவும் முக்கியமானது. இது முதன்மையாக "மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்து" என டெர்பிஷயர் கூறுகிறார். நரம்பு செல்களின் மூலம் மூளையிலிருந்து நமது உடலுக்கு செய்திகளை கொண்டு செல்லும் அசிட்டைல்கோலின் என்ற நரம்பியல் கடத்தியை உற்பத்தி செய்யவும் கோலின் உதவுகிறது. அசிட்டைல்கோலின், நமது நினைவாற்றல், சிந்தனை மற்றும் கற்றலுக்கு தேவைப்படும் மூளை நரம்பு செல்களில் முக்கிய பங்காற்றுகிறது. 36 முதல் 83 வயதுக்குட்பட்ட 1,400 பேரை உள்ளடக்கிய ஒரு ஆய்வில், அதிக கோலினை உட்கொண்டவர்கள், சிறந்த நினைவாற்றலுடன் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், நடுத்தர வயதில் கோலினை சேர்த்துக்கொள்வது நமது மூளையைப் பாதுகாக்க உதவக்கூடும். கோலின் பொதுவாக "நூட்ரோபிக்ஸ்" எனப்படும் சப்ளிமென்ட் மருந்துகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. பல்வேறு பொருட்களின் கலவையாகிய இது, கற்றல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுவதாக சிலர் நம்புகின்றனர். மறுபுறம், கோலின் குறைபாடும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்புச் சிதைவுக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. ஒரு ஆய்வில், அதிக அளவில் கோலினை உட்கொண்டால், பதற்றம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில், அதிக அளவில் கோலினை சேர்த்துக்கொள்வதற்கும், மனச்சோர்வு ஏற்படும் ஆபத்து குறைவதற்கும் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. போதுமான அளவு கோலினை எடுத்துக்கொண்டால், பல நன்மைகள் கிடைக்கக்கூடும். தனித்தனியாக, எலிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தின் அளவைக் குறைப்பதற்கும் கோலின் உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமினோ அமிலம் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். மேலும், அதிக அளவில் கோலினை உட்கொண்டவர்கள், அதிக எலும்பு அடர்த்தி கொண்டிருப்பதாகவும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எலும்பின் அடர்த்தி நன்றாக இருந்தால், எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனால் எலும்பு முறிவின் அபாயமும் குறையும். "எலும்பு வலுவிழப்புக்கு எதிராக கோலின் செயல்படக்கூடும்" என்று கோலின் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்த நார்வேயின் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஓயென் ஜனிக் கூறுகிறார். ஒரே வீடியோ தர்பூசணி விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது எப்படி? என்ன நடந்தது?11 ஏப்ரல் 2025 உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?11 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 முதல் 1000 நாட்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முதல் இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை என்பதும், கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது தாயின் உணவுமுறை இதில் ஒரு ஒருங்கிணைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் நன்கு நிறுவப்பட்டுள்ளது. கருப்பையில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு கோலின் மிகவும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் தங்களின் தாய்மார்களுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிக கோலினுடன் பிறக்கின்றன. இதன் மூலம் கர்ப்ப காலத்தில் கோலினின் முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது என்கிறார் டெர்பிஷயர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குழந்தையின் வளர்ச்சிக்கு கோலின் மிகவும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருப்பையில் உள்ள கோலினின் அளவு, குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த நன்மைகள் குழந்தை வளர்ந்த பிறகும் பல ஆண்டுகள் தொடரக்கூடும். கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாத காலம் (வாரம் 13 முதல் 28 வரை) 'இரண்டாம் ட்ரைமெஸ்டர்' எனப்படுகின்றது. அக்காலத்தில் அதிக அளவு கோலின் உட்கொண்ட கர்ப்பிணி பெண்களின் குழந்தைகள், தங்கள் ஏழு வயதில் செய்துக்கொண்ட நினைவாற்றல் பரிசோதனையில் உயர் மதிப்பெண்கள் பெற்றதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவர் போதிய அளவில் கோலின் பெறவில்லை என்றால், பிறக்கும் குழந்தைகளில் கவனக்குறைவு/அதிக செயல்பாட்டு குறைபாடு (ஏடிஎச்டி) தொடர்புடைய நடத்தைகள் காணப்படலாம் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. "பள்ளி மாணவர்களிடையே ஏடிஎச்டி மற்றும் டிஸ்லெக்ஸியா அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது. இதில் சில மரபணுவோடு சம்பந்தப்பட்டது என்றாலும், கருப்பையில் முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதாலும் இது ஏற்படக்கூடும். நரம்பியல் வளர்ச்சியில் மிக நுணுக்கமான மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை பிற்காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இப்போது நாங்கள் அதற்கான பின்விளைவுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் " என்று டெர்பிஷயர் விளக்குகிறார். கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் வழங்கும் காலத்தில், கோலின் உட்கொள்வதற்கும் மூளை வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பை ஜியாங் ஆய்வு செய்துள்ளார். "விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தாய்க்கு அதிக கோலின் இருந்தால் அவற்றின் குட்டிகளின் அறிவாற்றல் வளர்ச்சி மேம்பட்டதாக இருக்கும்" என்று கூறும் அவர், "மனிதர்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிலும் இதேபோன்ற முடிவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. இருப்பினும், ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கவில்லை" என்று விளக்குகிறார். நீங்கள் குடிக்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?4 ஏப்ரல் 2025 பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 நமக்கு போதுமான அளவு கோலின் கிடைக்கிறதா? ஐரோப்பாவில், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையமான ஈஎப்எஸ்ஏ (EFSA), கோலினை உட்கொள்வதற்கான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. பெரியவர்களுக்கு தினசரி 400 மில்லிகிராம், கர்ப்பிணிகளுக்கு 480 மில்லிகிராம், மற்றும் தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு 520 மில்லிகிராம் கோலின் பரிந்துரைக்கப்படுகிறது. கோலின் உட்கொள்வதற்கான பரிந்துரைகளை, அமெரிக்காவிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் (IOM) முதன்முதலில் 1998ம் ஆண்டு வெளியிட்டது. ஆண்களுக்கு தினசரி 550 மில்லிகிராம், பெண்களுக்கு 425 மில்லிகிராம், கர்ப்ப காலத்தில் 450 மில்லிகிராம், மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது 550 மில்லிகிராம் என அதில் பரிந்துரைக்கப்பட்டது. ஒரு முட்டையில் சுமார் 150 மில்லிகிராம் கோலின் உள்ளது. ஒரு கோழியின் மார்புத் துண்டில் சுமார் 72 மில்லிகிராம், மற்றும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் சுமார் 24 மில்லிகிராம் கோலின் காணப்படுகிறது. மூளைக்கு அதிகம் தேவை 38 விலங்கு மற்றும் 16 மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கோலின் சப்ளிமெண்ட் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என கூறுகிறது. இருப்பினும், தற்போது வரை கோலின் மற்றும் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டுக்கிடையிலான வலுவான தொடர்பை விலங்குகளை அடிப்படையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மட்டுமே வெளிக்காட்டுகின்றன. அந்த ஆய்வுக் கட்டுரை கோலின் சப்ளிமெண்ட்டுக்கான சரியான அளவை குறிப்பிடவில்லை. ஆனால் மனிதர்களை கொண்டு நடத்தப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் தினசரி 930 மில்லி கிராம் அளவு கோலின் வழங்கும் சப்ளிமெண்ட்களை பயன்படுத்தின. இது சுமார் ஆறு கோழி முட்டைகளில் உள்ள கோலின் அளவுக்கு இணையானது. இதனால் எந்தவொரு மோசமான விளைவுகளும் பதிவாகவில்லை. பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவை விட அதிக கோலின் தேவைப்படும் சிலரும் இருக்கலாம் என்று ஓயென் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகக் காணப்படும் மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்தவர்களுக்கு கோலின் அதிகம் தேவைப்படலாம். ஒவ்வொருக்கும் இடையே உள்ள மரபணு வேறுபாடுகளால், சிலருக்கு கோலினின் தேவை அதிகமாக இருக்கலாம் என டெர்பிஷயர் கூறுகிறார். வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் வாழும் உலகின் மிகப்பெரிய முகாம் மோசமான நிலையில் இருப்பது ஏன்?28 மார்ச் 2025 பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 தினமும் நிம்மதியாக மலம் கழிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?28 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வேர்க்கடலையில் அதிக அளவு கோலின் உள்ளது. இருப்பினும், நம்மில் பலர் போதுமான அளவு கோலினை பெறவில்லை என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஒரு ஆய்வில், அமெரிக்க மக்களில் 11 சதவிகித மக்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட அளவு கோலினை தினசரி உட்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. முட்டைகளில் அதிக அளவு கோலின் உள்ளது. சைவ உணவு முறையை பின்பற்ற விரும்புவோர், இந்த ஊட்டச்சத்தை போதுமான அளவில் பெற முடியாது என்ற சில கவலைகள் உள்ளன. இருப்பினும் வளர்ந்த நாடுகளில் கோலின் சப்ளிமெண்ட்கள் பரவலாகவும் கிடைக்கின்றன. முட்டை உண்பவர்கள், முட்டை உண்ணாதவர்களை விட, சுமார் இரண்டு மடங்கு அதிக கோலினை உட்கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், "முட்டை உண்ணாமலோ அல்லது சப்ளிமெண்ட் எடுக்காமலோ, தினசரி போதுமான அளவு கோலின் கிடைப்பது மிகவும் கடினம்" என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். ஆனால், ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் கோலின் என்று, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவை ''நீங்கள் உங்கள் உணவை கவனமாகத் திட்டமிட்டால், ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் என்று, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவு கோலினை பெற முடியும்'' என்று ஜியாங் கூறுகிறார். போதுமான கோலின் கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் தினசரி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று ஓயென் கூறுகிறார். இதற்கிடையில், ஆரோக்கியத்துக்கு கோலின் எவ்வாறெல்லாம் உதவும் என்பதை நன்கு புரிந்து கொள்ள விலங்குகளிடமும், மனிதர்களிடமும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால், "மருத்துவர்கள் கோலின் குறித்து அதிகம் அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்," என்கிறார் டெர்பிஷயர். பெரும்பாலும் சற்று கவனிக்கப்படாததாகத் தோன்றினாலும், கோலின் விரைவில் பரவலாக அறியப்படும் என்று அவர் நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c05nez8lqe4o
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
15 APR, 2025 | 11:46 AM யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டுகிறார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமார் 600க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் யாழ். செம்மணியில் புதைக்கப்பட்டமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த பகுதி மறைக்கப்பட்டு இரவிரவாக கனரக வாகனங்கள் மூலம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை மூடி மறைப்பதற்கும் ஆதாரங்களை அழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் அப்போதைய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேபோன்று தற்போதைய ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அண்மையில் செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை அகழ்வதற்கு அனுமதி வழங்காது இழுத்தடிப்பு செய்கின்றது. அரசாங்கத்தை பொருத்தவரையில் மனிதப் புதைகுழி ஒன்றை அகழ்வதற்கு 20 இலட்சம் ரூபா என்பது சிறிய தொகை. அதனை வழங்குவதற்கு கூட தற்போதைய அரசாங்கம் அக்கறை செலுத்தாது இழுத்தடிப்பு செய்கிறது. இந்த மனித புதைகுழியை தமிழ் பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்வதற்காக அமர்த்தப்பட்ட நிலையில் அவரைக் கூட தற்போதைய அரசாங்கம் மாற்றுவதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பியினர் தொடர்பில் தமிழ் மக்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். இறுதி யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத இராணுவத்துக்கு ஆட்களை திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளை மேற்கொண்டவர்கள், பெயரை மாற்றிக்கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வினை தரப் போகிறோம் என மக்களை ஏமாற்றி தமது சிங்கள ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றிய வண்ணம் உள்ளனர். இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் சர்வதேச விசாரணைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதற்கு தற்போதைய பட்டலந்த விவகாரம் மிகச் சரியான உதாரணமாகும். அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை தமிழ் மக்கள் அறிந்த விவகாரமாக பட்டலந்த விவகாரத்தை கொள்ளலாம். பட்டலந்த வீட்டுத் திட்ட குடியிருப்பில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தோழர்கள் தொடர்பாக சர்வதேச தரப்புக்களை இணைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு தயார் என கூறுகிறார்கள். இதிலிருந்து என்ன புரிகிறது..? இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான இனப்படுகொலைகளை சர்வதேச ரீதியில் விசாரிப்பதற்கு மறுத்து உள்ளூர் விசாரணை மூலம் தீர்வு என கூறுகிறார்கள். ஆனால், பட்டலந்தவில் படுகொலை செய்யப்பட்ட தமது ஜே.வி.பி. தோழர்களுக்கு சர்வதேச தரப்புக்களை அழைத்து விசாரணைக்கு தயார் என கூறும் தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கும் போர் குற்றங்களுக்கும் ஏன் சர்வதேச விசாரணைகளை நடத்தி தீர்வு காண மறுக்கிறார்கள். தமது அரசியல் நோக்கத்துக்காக பட்டலந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தியினர், செம்மணி மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கு சிறிய பணத்தொகையை கூட வழங்க பின்னிற்கும் இவர்கள், புதைகுழி விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லத் தயாராக இருக்கிறார்களா? ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆறு மாதங்கள் கடந்து செல்கின்ற நிலையில், ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தியை பற்றி தத்துவார்த்த ரீதியாக தமிழ் மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, தமிழ் மக்களை தத்துவார்த்த ரீதியாக அழிப்பதற்கு பல்வேறு செயற்றிட்டங்களை வகுத்துக் கொடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் விரட்டியடிப்பதற்கான காலம் கனிந்துள்ளது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212020
-
வெப்பநிலை குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
15 APR, 2025 | 10:30 AM நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (15) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலையானது கவனம் செலுத்தவேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212018
-
முழுவதும் பெண்களே நிரம்பிய குழு நாளை விண்வெளிக்கு பயணம் - 6 பேரும் என்ன செய்வார்கள்?
முழுவதும் பெண்களே அடங்கிய குழு தனது 11 நிமிட விண்வெளிப் பயணத்தில் என்ன செய்தது? பட மூலாதாரம்,BLUE ORIGIN 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நியூ ஷெப்பர்ட் ராக்கெட், 6 பெண்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் இருந்து புறப்பட்டது. 11 நிமிட விண்வெளி பயணத்தை இவர்கள் மேற்கொண்டனர். பாடகி கெட்டி பெர்ரியுடன் தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ் மற்றும் சிபிஎஸ் தொலைகாட்சியின் தொகுப்பாளர் கேல் கிங், நாசாவின் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, மனித உரிமை ஆர்வலர் அமாண்டா இங்குயென் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோரும் விண்வெளிக்குச் சென்றனர். ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த விண்வெளி பயணத்தை ஏற்பாடு செய்தது. பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,6 பெண்களுடன் விண்ணில் பறந்த விண்கலம் இந்த விண்வெளி பயணம் 11 நிமிடங்களை உள்ளடக்கியது. இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை கொண்டு சென்றது. கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியைக் கண்டு களித்தனர். பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,பாராசூட் மூலம் தரையிறங்கிய விண்கலம் இவர்கள் பயணித்த விண்கலமானது பைலட் தேவையின்றி முழுவதும் தானாக இயங்கக் கூடியது. பயணிக்கும் பெண்கள் குழு இந்த விண்கலத்தை எந்த வகையிலும் இயக்கத் தேவையில்லை. விண்வெளி பயணம் முடிந்த பின்னர் விண்கலமானது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட் உதவியுடன் தரையிறங்கியது. இதே நேரத்தில் இந்த விண்கலத்திற்காக பயன்படுத்திய ராக்கெட் பூஸ்டர், ஏவுதளத்திலிருந்து 2 மைல்கள் தொலைவில் தானாக தரையிறங்கியது. பட மூலாதாரம்,BLUE ORIGIN இந்த விண்வெளி பயணம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாடகி கெட்டி பெர்ரி "முதன்முதலாக விண்வெளிக்குச் செல்லும் அனைத்து மகளிர் குழுவில் நானும் இருப்பேன் என நீங்கள் கூறினால் அதனை நான் நம்பியிருப்பேன். ஒரு குழந்தையாக எதுவுமே எனது கற்பனைக்கு அப்பாற்பட்டது கிடையாது." என்று கூறியுள்ளார். கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. "இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,X/BLUE ORIGIN கார்மன் எல்லைக்கோடு என்றால் என்ன? கார்மன் கோடு என்பது ஒரு கற்பனையான எல்லைக்கோடு. இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, பூமியில் இருந்து பயணித்தால் விண்வெளியை அடைந்துவிட்டதாகக் கருதப்படும் இடம் எனப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும் இந்தப் புள்ளி கருதப்படுகிறது. கார்மன் கோடு, விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே ஒரு வேறுபாட்டைக் குறிப்பதற்காக, ஃபெடரேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் என்ற அமைப்பால் தீர்மானிக்கப்பட்டது. இந்த உயரத்தை அடைவது, விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் கருதப்படுகிறது. "சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி, இதுதான் விண்வெளி என்று ஒரு வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கார்மன் எல்லைக்கோடு," என்கிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அவரது கூற்றுப்படி, கார்மன் எல்லைக்கோடு எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் 100 கி.மீ என்ற உயரத்துக்குக் கீழேதான் 99.9% வரையிலான வளிமண்டலம் உள்ளது. ஆகையால்தான் அதற்கு மேலே இருக்கும் பகுதி விண்வெளி என்று முடிவு செய்யப்பட்டது. இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் பயணிப்பவர்கள் "விண்வெளிக்குச் சென்றவர்கள்" என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அதனால்தான் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களும் இந்தக் கோட்டுக்கு மேலே சென்று, அதன் பயணிகளுக்கு உண்மையான விண்வெளி அனுபவத்தை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பட மூலாதாரம்,BLUE ORIGIN 'விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே நோக்கம்' விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "இத்தகைய விண்வெளிச் சுற்றுலா பயணங்களை இந்த நிறுவனம் பலமுறை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பயணம் குறித்துக் கேள்விப்பட்டதும், சுனிதா வில்லியம்ஸ் சென்றதைப் போன்றதொரு பயணமோ எனக் கருதிவிடக்கூடாது," என்கிறார் அவர். சுனிதா வில்லியம்ஸ் சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய விண்வெளிப் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனால், இது அப்படியான பயணமல்ல என்கிறார் வெங்கடேஸ்வரன். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் மட்டுமே செல்லும் இந்த விண்வெளிப் பயணம் குறித்து விளக்கிய அவர், "விண்வெளி தொடங்கும் இடமான கார்மன் எல்லைக் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி விடுவார்கள்," என்றார். விண்வெளிக்கு பயணிக்கும் 6 பெண்கள் யார்?14 ஏப்ரல் 2025 விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?2 ஏப்ரல் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து பார்த்த இந்தியா எப்படி இருந்தது?2 ஏப்ரல் 2025 அதுகுறித்து விரிவாக விளக்கிய வெங்கடேஸ்வரன், "இந்தப் பயணத்தின் மொத்த நேரமே சுமார் 11 நிமிடங்கள்தான் இருக்கும். ஏழு நிமிடங்களுக்கு ராக்கெட்டில் பயணிப்பார்கள். சுமார் 48 கி.மீ வரை அதில் பயணித்த பிறகு, அங்கிருந்து ஒரு கல் மேல்நோக்கி வீசப்படுவதைப் போல, ராக்கெட்டில் இருந்து பயணிகள் இருக்கும் விண்கலம் விண்வெளி நோக்கி வீசப்படும். ராக்கெட்டில் இருந்து வீசப்படும் விண்கலம், கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே வரை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்," என்று விவரித்தார். விண்வெளி சுற்றுலாத் துறைக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதும் இதன்மூலம் ஒரு புதிய தொழிலை உருவாக்கலாம் என்பதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் அவர். அதே நேரத்தில், இத்தகைய முயற்சி "பெண்கள் முன்னேற்றம் மீதான கவனத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கு ஓர் உத்வேகத்தையும்" ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70zxk97e1do
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
தோனி புதிய சாதனை: தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த 'ஆட்டநாயகன்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 15 ஏப்ரல் 2025, 02:06 GMT லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. 167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்டநாயகனாக ஜொலித்த கேப்டன் தோனி, புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். லக்னெளவை ஏமாற்றிய பேட்டர்கள் லக்னெள அணிக்கு நேற்று பேட்டர்கள் எதிர்பார்த்த பங்களிப்பை செய்யவில்லை. மார்க்ரம்(6), நிகோலஸ் பூரன்(8) இருவரும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியுடன் முன்னணியில் இருக்கும் பூரன் விரைவாக விக்கெட்டை இழந்தது சிஎஸ்கேவின் நல்லநேரம். அதேபோல மார்ஷ் 30 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததும், லக்னெளவுக்கு பெரிய ஸ்கோரை வழங்க முடியவில்லை. பூரன், மார்ஷ் இருவரும் களத்தில் நின்றிருந்தால், சிஎஸ்கேவுக்கு 6வது தோல்வி கிடைத்திருப்பது உறுதியாகியிருக்கும். கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் லக்னெள அணிக்காக முதல் அரைசதத்தை அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரிஷப்பந்த் பேட்டிலிருந்து பெரிதாக ரன்கள் வரவில்லை. அதன்பின் ரிஷப் பந்த் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி லக்னெள ஸ்கோரை உயர்த்தினார். பதிரானா, கலீல் அகமது ஓவர்களை குறிவைத்த ரிஷப் பந்த் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி லக்னெள அணியை 150 ரன்கள் கடக்க உதவினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மில்லர் ஏன் விரைவாக வரவில்லை? அதேபோல நெருக்கடியான நேரத்தில் அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரை களமிறக்காமல், அப்துல் சமதையும், ஷர்துல் தாக்கூரையும் களமிறக்கி லக்னெள அணி தவறு செய்துவிட்டது. அப்துல் சமது களமிறங்க வேண்டிய இடத்தில் மில்லர் களமிறங்கி இருந்தால், லக்னெள ஸ்கோர் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருக்கும். அப்துல் சமது 20 ரன்கள் சேர்த்தும் அதில் 2 சிக்ஸர்கள் மட்டுமே சிரமப்பட்டு அடித்தார், 'ஷாட்' ஏதும் சிக்கவில்லை. ஆனால், மில்லரை அணியில் வைத்திருந்தும் அவரை நடுவரிசையில் களமிறக்காமல் கடைசிவரிசையில் களமிறக்கி லக்னெள அணி அவரை வீணாக்கியது. சிறப்பான அறிமுகம் சிஎஸ்கே அணியில் நீண்டகாலம் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த உலகக்கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோர் அணியின் துணைக் கேப்டன் ஷேக் ரஷீத் நேற்று அறிமுகமாகினார். 2023ம் ஆண்டு சீசனில் இருந்து இவரை சிஎஸ்கே பாதுகாத்தாலும், விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், ரஷீத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நேற்று பயன்படுத்தினார். ஆகாஷ் தீப் பந்துவீச்சில் 3 பவுண்டரிகள், விராட் கோலி ஸ்டைலில் பிளிக் ஷாட்டில் சூப்பர் பவுண்டரி என 6 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த பதற்றமும், அச்சமும் இல்லாமல் மிகவும் கூலாக ரஷித் பேட் செய்தார். கெய்க்வாட் பேட்டிங் ஸ்டைலில் ரஷீத் பேட் செய்ததாக வர்ணனையாளர்கள் தெரிவித்தாலும், ரஷீத்தின் ஆட்டம் நேற்று சிஎஸ்கே அணிக்கு பவர்ப்ளேயில் நல்ல தொடக்கத்தை அளிக்க உதவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் என நல்ல தொடக்கத்தை அளித்தாலும் நடுப்பகுதியில் விக்கெட்டுகளையும் இழந்து, ரன் சேர்க்கும் வேகத்தையும் குறைத்தது. ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் மார்க்ரம் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதிக்கு கிடைத்த 5வது வாய்ப்பையும் வீணடித்து 9 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணிக்கு சுமையாக மாறிவருகிறார். ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்களில் தவறான ஷாட்களால் ஆட்டமிழந்தனர். 15வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என்று சிஎஸ்கே தடுமாறியது. கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டதால், சிஎஸ்கே வெற்றி மதில்மேல் பூனையாக மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES 20 ஓவர் போட்டிகளில் கோலியின் 100 வது அரை சதம் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூரு13 ஏப்ரல் 2025 மிரட்டல் சதம் விளாசியதும் அபிஷேக் எடுத்துக் காட்டிய பேப்பரில் என்ன எழுதியிருந்தது? அவர் கூறியது என்ன?13 ஏப்ரல் 2025 தோனி, துபே சிரமப்படவில்லை ஷிவம் துபே களத்தில் இருந்தபோது, அவருக்கு லக்னெள சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரன் சேர்க்கக் கடும் சிரமப்பட்டு, 20 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்திருந்தார். விஜய் சங்கர், ஜடேஜா ஆட்டமிழந்தபின் துபேயின் ரன்சேர்ப்பில் தொய்வு ஏற்பட்டது. தோனி களமிறங்கியபின், லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் ஏன் வேகப்பந்துவீச்சுக்கு வாய்ப்புக் கொடுத்தார் எனப் புரியவில்லை. 2024 ஐபிஎல் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தோனி 222 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஆனால் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மோசமாக ஆடியுள்ளார். ஆனால் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்காமல் தாக்குர், ஆவேஷ்கானை வைத்து வைடு யார்கர், ஃபுல்டாஸ், ஷார்ட் பிட்ச்சில் பந்துவீச வைத்து தோனி, துபே ரன் சேர்ப்பை லக்னெள எளிதாக்கியது. ஷர்துல் வீசிய 19-வது ஓவரில் துபே 2 பவுண்டரி, நோபாலில் சிக்ஸர் என 19 ரன்கள் சேர்த்தபோது வெற்றி லக்னெளவின் கைகளைவிட்டு சென்றுவிட்டது. 6-வது விக்கெட்டுக்கு தோனி, துபே கூட்டணி 28 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தனர். துபே 43, தோனி 26 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே வெற்றிக்கான காரணம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, நூர் முகமது இருவரும்தான். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நடுப்பகுதியில் லக்னெள ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். நூர் முகமது விக்கெட்டுகள் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஜடேஜா 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் பதிராணா, கலீல் அகமது, ஓவர்டன் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு கட்டுக்கோப்புடன் வீசவில்லை, கம்போஜ் 3 ஓவர்கள் வீசி 20 ரன்களுடன் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இந்த ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது, நூர் முகமது, ஜடேஜாவின் பந்துவீச்சுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியது எப்படி? வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், "வெற்றி பெற்றது மகிழ்ச்சி. கடந்த போட்டிகள் துரதிர்ஷ்டமாக நாங்கள் எதிர்பார்த்தவாறு செல்லவில்லை. இந்த வெற்றி அணிக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த ஆட்டம் கடினமாக இருந்தது, எங்கள் தருணத்தை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம். கடந்த போட்டிகளில் தொடக்க ஓவர்களில் சிறிது சிரமப்பட்டுள்ளோம் ஆனால் நடுப்பகுதியில் மீண்டு வந்துள்ளோம் சென்னை ஆடுகளமாக இருந்ததால் அவ்வாறு நடந்திருக்கலாம். சிறந்த ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "முதல் 6 ஓவர்களில் அதிக பந்துவீச்சாளர்கள் தேவை, அஸ்வினை பவர்ப்ளேயில் பந்துவீச வைத்து அதிக அழுத்தம் கொடுப்போம், எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த பந்துவீச்சாளர்களை மாற்றுவோம். அந்த வகையில் பந்துவீச்சு என்பது இன்று பேட்டிங்கைவிட சிறப்பாக இருந்தது. ரஷித் உண்மையாகவே நன்றாக பேட் செய்தார், கடந்த சில ஆண்டுகளாகவே எங்களுடன் பயணிக்கிறார். வலைப்பயிற்சியில் ரஷீத் பேட்டிங் சிறப்பாக இருந்தது, முன்னேற்றம் காணப்பட்டது. பேட்டிங் வரிசையிலும் எங்களுக்கு மாற்றம் தேவைப்பட்டதால் ரஷீத்தை கொண்டுவந்தோம்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? மனம் திறந்தார் சாய் சுதர்சன்12 ஏப்ரல் 2025 நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள்12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியை தாரை வார்த்த ரிஷப் பந்த் லக்னெள அணி இன்னும் கூடுதலாக 10 முதல் 15 ரன்கள் சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். உண்மையில் இன்னும் 40 ரன்கள் கூடுதாக அடித்திருந்தாலும், ரிஷப் பந்தின் தவறான, மோசமான கேப்டன்சியால் லக்னெள அணி தோற்றிருக்கும். சிஎஸ்கே அணியை சுருட்டுவதற்கு, லக்னெளவின் கருப்பு மண் ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் போதுமானது. ஆனால், கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்களை திட்டமிட்டு பயன்படுத்தாமல் ரிஷப் பந்த் செய்த கேப்டன்சி தவறுதான் இந்த விலையைக் கொடுத்தது. கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 44 ரன்கள் தேவை என்ற கடினமான நிலையில் ஆட்டம் லக்னெளவின் பக்கம்தான் இருந்தது. கடைசி 18 பந்துகளில் சிஎஸ்கேவுக்கு 31 ரன்கள் தேவை என்கிற வரையிலும் லக்னெளவின் கைகளில்தான் வெற்றி இருந்தது. 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற ரீதியில் சிஎஸ்கேவுக்கு கடின இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதும் லக்னெள அணி விழிக்கவில்லை. தேவையின்றி கடைசி இரு ஓவர்களை ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கானுக்கு வழங்கி, அணியின் வெற்றியை தனது குருநாதர் தோனிக்கு பரிசாக ரிஷப் பந்த் அளித்துள்ளார். லக்னெள அணி வெற்றிக்கு உரித்தானது, நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்புடன் பந்துவீசி வெற்றிக்கு அருகே வந்துவிட்டனர், லக்னெள அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் திக்வேஷ் ராதி, ரவி பிஸ்னாய், மார்க்ரம் ஆகியோர் 11 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், 19வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் 19 ரன்கள் கொடுத்ததுதான் லக்னெளவை தோல்விக்குழியில் தள்ளியது. ரவி பிஸ்னோய்க்கு 3 ஓவர்கள் மட்டுமே வழங்கிய நிலையில் ஏன் 4வது ஓவரை ரிஷப்பந்த் வழங்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால், ரிஷப்பந்தின் தவறான கேப்டன்சி சிஎஸ்கேவுக்கு சாதகமாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஷப் பந்த் செய்த தவறு என்ன? லக்னெள சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் நேற்றைய ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி கட்டுக்கோப்புடன் பந்துவீசியிருந்தார். ஆனால், அவருக்கு 4வது ஓவரை ரிஷப் பந்த் ஏன் வழங்கவில்லை என்பது கேள்வியாக வர்ணனையாளர்கள் வைத்தனர். ரிஷப்பந்தின் இந்த தவறான முடிவுதான் லக்னெள அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 166 ரன்களை லக்னெள அணி சொந்த மைதானத்தில் டிபெண்ட் செய்திருக்க முடியும். இந்த ஸ்கோரையே கடைசி 3 பந்துகள் இருக்கும்போதுதான் தோனி, துபேயால் அடிக்க முடிந்தது. அப்படியிருக்கும்போது, ஏதேனும் ஒரு ஓவரை கட்டுக்கோப்பாக வீசியிருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும் ரவி பிஸ்னோய் 13வது, 9வது ஓவரில் திரிபாதி, ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தினரார். இவர் வீசிய 18 பந்துகளில் 9 பந்துகள் டாட் பந்துகள். அனுபவம் இல்லாத திக்வேஷ் ராதிக்கும், மார்க்ரமுக்கும் 4 ஓவர்களை முழுமையாக வழங்கிய ரிஷப் பந்த் ஏன் அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய்க்கு 4வது ஓவரை வழங்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. கடைசி 30 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 56 ரன்கள் என்பது லக்னெள மைதானத்தில் கடின இலக்குதான். ஆவேஷ்கானுக்கு 3 ஓவர்களும், தாக்கூருக்கு 2 ஓவர்களும் மீதம் இருந்தன, பிஸ்னோய்க்கு ஒரு ஓவர் இருந்தது. ஆவேஷ் கானுக்கு 16வது ஓவரை வழங்கிய நிலையில் 12 ரன்களை வாரி வழங்கினார். பனியின் தாக்கத்தால் பந்து மாற்றப்பட்டு புதிய பந்து தரப்பட்டது. ஆனால் புதிய பந்தை சுழற்பந்துவீச்சாளர் பிஸ்னோய்க்கு ரிஷப் பந்த் வழங்கவில்லை. பெரும்பாலும் புதிய பந்து மாற்றப்பட்டவுடன் தோனி களத்தில் இருந்தால் சுழற்பந்துவீச்சைத்தான் பெரும்பாலான கேப்டன்கள் தேர்ந்தெடுப்பார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த போட்டியில் கெளகாத்தியில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு 18 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்றபோது, ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன், தீக்சனாவுக்கு ஓவரை வழங்கினார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 72 ரன்கள் தேவை என்ற போது அக்ஸர் படேல் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே சேஸ் செய்யும்போது, 24 பந்துகளில் 68 ரன்கள் தேவை இருந்தது. களத்தில் தோனி இருந்ததால், கேப்டன் ஸ்ரேயாஸ் உடனடியாக யஜுவேந்தி சஹலுக்கு ஓவரை வழங்கினார், தோனியால் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை. 2020 ஐபிஎல் சீசனில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 94 மட்டும்தான், 243 பந்துகளைச் சந்தித்த தோனி 14 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்தான் அடித்துள்ளார். ஆனால் 2024 ஐபிஎல் சீசனில் இருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தோனி 222 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். தோனிக்கு ஒரு ஓவரை ரவி பிஸ்னோய் மூலம் பந்துவீச வைத்திருந்தால், ரன் நெருக்கடி அதிகமாகி சிஎஸ்கே தோல்வியில் விழந்திருக்கலாம். லக்னெள அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை கேப்டன் ரிஷப் பந்த் தனது குருநாதர் தோனிக்கு தாரை வார்த்துவிட்டார். தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?11 ஏப்ரல் 2025 தோனி புதிய சாதனை இந்த போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ரன்-அவுட், ஸ்டெம்பிங் செய்து 11 பந்துகளில் அதிரடியாக 26 ரன்கள் சேர்த்த கேப்டன் மகிகேந்திர சிங் தோனி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ம் ஆண்டுக்குப்பின் தோனி ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்றார். ரவீந்திர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 14-வது ஓவரில் லக்னெள வீரர் ஆயுஷ் படோனி இறங்கி அடிக்க முற்பட, பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பர் தோனியிடம் தஞ்சம் அடைந்தது. அவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து படோனியை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் பீல்டிங்கில் 200-வது வீரரை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். அதன் பிறகு கடைசி ஓவரில் லக்னௌ கேப்டன் ரிஷப் பந்தை கேட்ச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார் தோனி. இதுவரை 271 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 201 பேட்டர்கள் ஆட்டமிழக்க காரணமாக இருந்துள்ளார். அதில், 155 கேட்ச்களும், 46 மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே எங்கே? சிஎஸ்கே அணி தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்த நிலையில் தோனி கேப்டன்ஷிப் ஏற்றபின் முதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணியால் எந்த மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை, தொடர்ந்து கடைசி இடத்தில்தான் இருக்கிறது. அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தால் சிஎஸ்கே அணியின் நிலை மாறும். லக்னெள அணி 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம்: முலான்பூர் நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நாள் - ஏப்ரல் 17 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 18 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்) நீலத் தொப்பி நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) கலீல் அகமது(சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) ஷர்துல் தாக்கூர்(லக்னெள) 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly1vzy80mko
-
அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
'துக்கம் கண்ணீர் இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டுக்காக ஒன்றிணைவோம்' - சஜித் பிரேமதாஸ 11 APR, 2025 | 05:13 PM 'துக்கம் கண்ணீர் இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டுக்காக ஒன்றிணைவோம் என தமிழ், சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள - தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் செல்லுவதை பாரம்பரியமாக புத்தாண்டின் பிறப்பு அல்லது சூரிய பகவானைக் கொண்டாடுவதற்கு இந்நாட்டு மக்கள் தொன்றுதொட்டு செயல்பட்டு வருகின்றனர். இக்காலத்தில் மரங்கள் கனிகளால் நிறைந்து, விளைச்சல் செழித்து, களஞ்சியங்கள் நிரம்பி, அனைவரின் உள்ளங்களிலும் செழிப்பின் ஒளி பிறக்கும். சிங்கள - தமிழ் புத்தாண்டு என்பது சரியான நேரத்தில் துல்லியமாக செயல்படுவதை பழக்கப்படுத்திய, நன்றி உணர்வை வளர்த்தெடுத்த கலாசார விழாவாகும். மேலும், இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறுதியான தொடர்பையும், ஒருவருக்கொருவர் இடையேயான உறவுகளின் மதிப்பையும் வெளிப்படுத்தும் இவ்விழா, அனைத்து வேறுபாடுகளையும் மறந்து புதிய மனிதர்களாக முன்னேறுவதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த புத்தாண்டில் வழக்கமான சவால்களுடன் புதிய சவால்களும் நம் முன் உள்ளன. அவற்றை சரியாக நிர்வகித்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். அத்தகைய சூழ்நிலைகளில் குறுகிய கருத்தியல்களில் ஒட்டிக்கொண்டிருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். எனவே, இதன் உண்மையான பொருளை புரிந்துகொண்டு, கூட்டு முயற்சியின் மூலம் நமக்கு எதிரான சவால்களை வென்று அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த புத்தாண்டிற்கு நாம் அனைவரும் செயல்பட வேண்டும். ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக எதிர்கொண்டு, அந்த சவால்களை வென்று அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பை நோக்கிய இந்த பயணத்தில், அனைவரின் உள்ளங்களிலும் துக்கம், கண்ணீர், வலி இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டிற்காக ஒன்றிணையுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211820
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LIVE 30th Match (N), Lucknow, April 14, 2025, Indian Premier League Lucknow Super Giants166/7 Chennai Super Kings(18.1/20 ov, T:167) 154/5 CSK need 13 runs in 11 balls. Current RR: 8.47 • Required RR: 7.09 • Last 5 ov (RR): 42/1 (8.40) Win Probability: CSK 83.13% • LSG 16.87% கிட்ட வந்திட்டாங்கள்...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உவங்களை நம்பி கண்ணை மூடி சென்னையை தெரிவு செய்த நேரம் எதிரணியை தெரிவு செய்திருக்கலாமோ?!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பந்தை அடிக்காமல் விட்டு மரம் நட்டு சாதனை படைக்குதாம் சென்னை அணி!
-
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
யாழிணைய உறவுகளுக்கு இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்.
-
புலர் அறக்கட்டளை
மாற்றுத்திறனாளிகள், விசேட தேவையுடையோருக்கு உதவியும் ஆதரவும் வழங்கும் இலாப நோக்கற்ற தொண்டு அமைப்பு.
-
pular.jpg
-
viber_image_2024-12-03_21-59-30-284.jpg
-
viber_image_2024-12-03_21-59-29-900.jpg
-
viber_image_2024-12-03_21-59-29-465.jpg
-
viber_image_2024-12-03_21-59-29-085.jpg
-
viber_image_2024-12-03_21-59-28-707.jpg
-
viber_image_2024-12-03_21-59-28-234.jpg
-
viber_image_2024-12-03_21-59-27-809.jpg
-
viber_image_2024-12-03_21-59-27-440.jpg
-
viber_image_2024-12-03_21-59-30-664.jpg
-
0-02-03-59ac91cea3b6f307a0fbec629ed9e284294bee37c232ba1ca67fa7e2b15b5560_4f6a6d8cc459ac56.jpg
-
b9182296-e65f-4ea3-b27e-d641f3f92bd5.JPG
-
12-04-23.jpg
-
AHC.jpg
-
16.jpg
-
15.jpg
-
14.jpg
-
13.jpg
-
12.jpg
-
11.jpg
-
- pular.jpg
-
நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டம்
Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 03:23 PM நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. விஸ்வாவசு வருடம் சித்திரை முதல் நாள், இன்று திங்கட்கிழமை (14) அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (14) விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் திங்கட்கிழமை (14) காலை இடம் பெற்றன. விஜிதாகரன் சர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜையில் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விஷேட பூஜை மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு , வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. திங்கட்கிழமை (14) காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , காலை 07 மணிக்கு வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் 'விசுவாவசு' சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் திங்கட்கிழமை (14) காலை முதல் ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. காலை 4:00 மணியளவில் சுப்ரபாதமும், 5 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15 மணியளவில் சங்கற்பம், அபிஷேகமும், 6 மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15 மணியளவில் வசந்த மண்டப பூசையும் 6:45 மணி அளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம் பெற்றது. அதை தொடர்ந்து 7:30 மணியளவில் கை விசேஷமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில் பொங்கல் வழந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர். மேலும் மாவட்டத்தின் பல பாகங்களில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211975
-
தற்போதைய அரசாங்கமும் டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 04:49 PM ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும், நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு, நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல்லன்சேன பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையில் நடைபெற்ற வட்டார மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைவாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்து, டீசல் மற்றும் அனல் மின்சாரம் பயன்பெறும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. சதிகாரர்களால் மின்சாரத்துறை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கும் மாபியாக்களிடம் மின்சாரத்துறை கையளிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என மேடைக்கு மேடை பிரஸ்தாபித்த அரசாங்கம் தற்போது எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களின் அடிமைகளாக மாறியுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும். இன்று மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. சுகாதாரம் என்பது சேவையல்ல, அது மனித உரிமையும், அடிப்படை உரிமையுமாகும். இலவச மருத்துவம் என்ற மக்களின் மனித உரிமையைக் கூட அரசாங்கம் மீறியுள்ளது. இன்று அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை. இலவச மருத்துவ சேவை காணப்படும் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாமையினால் உயிர்காக்கும் மருந்துகளை கூட தனியார் மருந்தகங்களில் வாங்கும் நிலைக்கு இன்று நாடு வந்துள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை. இன்று நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்து, வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியடைந்து, வருமானம் கூட குறைந்துள்ள இவ்வேளையில், பொருட்களின் விலைகளும், வாழ்க்கைச் செலவுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கக்கூட முடியாத நிலை உருவாகி வருகிறது . ஜே.வி.பி தேர்தல் காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தந்து, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வறுமை அதிகரித்து வருகின்றன. மேடைகளில் மக்களுக்காக கோஷங்கள் எழுப்பினாலுர், ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பிரகாரம் செயல்படத் தவறியுள்ளனர். வெறும் பேச்சு, பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். வறுமையை அதிகரிக்கச் செய்து, நிவாரணங்களை குறைக்கும் நடவடிக்கையையே தற்போதைய அரசாங்கம் செய்து வருகிறது. அரச ஊழியர்களினது சம்பளத்தை ரூ. 20,000 ஆல் அதிகரிப்போம் என சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் சம்பளத்தை அதிகரித்துத் தருவோம் என்றனர். அதுவும் நடந்தபாடில்லை. ஆகவே இந்த அரசாங்கம் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியே வருகிறது. தெளிவான அதிகாரம் கிடைத்தும் மக்கள் செய்தது ஒன்றுமில்லை. திறம்பட ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கவே மக்கள் தெளிவான அதிகாரத்தை வழங்கினர். ஆனால் அரசாங்கமானது இன்னும் கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு தமது இயலாமையை மறைத்து, மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு ஜனநாயக ரீதியாக சரியான பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211999
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடித்து ஆடுவதை மறந்துவிட்டாரோ?!
-
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் : எப். பி. ஐ. அறிக்கையில் உறுதி
14 APR, 2025 | 07:14 AM இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 டிசம்பர் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட எப்.பி.ஐ. அறிக்கையில், 2019 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்காவின் எப்.பி.ஐ. (FBI) மூலம், கலிஃபோர்னியாவின் அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஆணையிலேயே 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என உறுதியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில், தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 268 பேர் கொல்லப்பட்டனர். நுட்பமான நீதிமன்ற சாட்சியங்கள், சமூக ஊடக பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எப். பி. ஐ. அறிக்கையில், இலங்கையில் இயங்கிய உள்ளூர் ஐ.எஸ். அமைப்பை சஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய விதமும், அந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் திட்டத்தை எப்படி திட்டமிட்டார் என்பதையும் விளக்குகிறது. இந்த அறிக்கை மிக முக்கியமான ஆதாரங்களைக் கொண்டிருந்த போதிலும், இலங்கையினால் இது புறக்கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் நீதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை எப்.பி.ஐ. யின் அறிக்கையின் உறுதித்தன்மை சுட்டிக்காட்டுகின்றன. எப். பி. ஐ. அறிக்கையை பார்வையிட https://cdn.virakesari.lk/uploads/medium/file/281832/Easter_Attack_Report_US_District_Court_SLGuardian_Copy-3.pdf https://www.virakesari.lk/article/211972
-
தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்த வரலாறு
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 14 ஏப்ரல் 2025 (தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிபிசி தமிழின் பழைய கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது) தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சொல்லியே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி? தமிழ்நாட்டில் ஒவ்வொரு புத்தாண்டு நெருங்கும்போதும், "தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திர மாதம் பிறக்கிறதா?" என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் அவை எப்போதிருந்து புழக்கத்திற்கு வந்தன என்ற கேள்வியும் எழுப்பப்படும். இது ஒரு முடிவில்லாத சர்ச்சை. தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் துல்லியமாக எப்போதிருந்து துவங்கியது, ஏன் துவங்கியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுகளைக் குறிப்பிட பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய பல்வேறு காலக் கணிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கலி வருடம், கொல்லம் வருடம் (கேரளத்தில் பயன்படுத்தப்படும் முறை. உதயமார்த்தாண்ட வர்மாவால் துவங்கப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. 823ஆம் ஆண்டிலிருந்து இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்தனர்), விக்ரமாதித்ய வருடம் (விக்ரமாதித்ய மன்னரால் கி.மு. 57 துவங்கப்பட்டதாகக் கருதப்படும் வருடம்), சாலிவாகன சகாப்தம் (சாலிவாகனன் எனப்படும் சாதவாகன மன்னன் கி.பி. 78ல் துவங்கி வைத்த முறை), ஃபஸ்லி (அக்பர் அரியணை ஏறிய ஆண்டில் துவங்குவது. அறுவடையை மையமாகக் கொண்ட காலக் கணிப்பு முறை), ஹிஜ்ரி (இஸ்லாமிய காலக்கணிப்பு முறை) என்று நீளும் கணக்கீட்டு முறைகளில் இந்த சம்வத்சரம் எனப்படும் 60 ஆண்டு சுழற்சி முறையும் ஒன்று. பெண் விடுதலை முதல் சாதி ஒழிப்பு வரை - அம்பேத்கர் கூறும் ஜனநாயகத்தின் 3 சக்திகள் எவை?6 மணி நேரங்களுக்கு முன்னர் தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது?14 ஏப்ரல் 2025 இது தவிர, தமிழ்நாட்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ற கணக்கீட்டு முறை தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படுகிறது. கிரிகேரியன் நாட்காட்டியோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 2023ஆம் ஆண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டில் 2054ஆம் ஆண்டாகும். 1972 முதல் இது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ ஆண்டு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. மற்ற கணக்கீட்டு முறைகளுக்கும் சம்வத்சர முறைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. மற்ற ஆண்டு முறைகள், தொடர்ச்சியான எண்களைக் கொண்டவை. ஆனால், இந்த சம்வத்சர முறை, எண்களுக்குப் பதிலாக 60 பெயர்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, 60 ஆண்டுகள் முடிந்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து அந்தப் பட்டியல் துவங்கும். இந்தப் பட்டியலில் முதல் பெயர் 'பிரபவ' என்று துவங்குகிறது. 'அக்ஷய' என்ற பெயரோடு இந்தப் பட்டியல் முடிவுக்கு வருகிறது. வராகமிக்ரர் எழுதிய வானியல் நூலான பிருகத் சம்ஹிதையில்தான் (கி.பி. 505 - 587) முதன்முதலாக, இந்த 60 பெயர்களும் நாம் இப்போது பயன்படுத்தும் வரிசையில் காணப்படுகின்றன. சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டைக் குறிக்கிறது. ஆனால், 'வருஷ' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் 'சம்வத்சரம்' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் வித்தியாசம் உண்டு. 'வருஷம்' என்பது பூமியின் ஒரு சூரிய வருடத்தைக் குறிக்கிறது. ஆனால், 'சம்வத்சரம்' என்பது வியாழனின் சுழற்சியை மையமாகக் கொண்டது. அதாவது, ஒரு சம்வத்சர ஆண்டு என்பது 361.026721 நாட்களைக் கொண்டது. பூமியை அடிப்படையாகக் கொண்ட சூரிய ஆண்டைவிட, 4.232 நாட்கள் குறைவு. இதனைச் சரிசெய்ய, ஒவ்வொரு 85 சம்வத்சர ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்த 60 பெயர்களில் ஒன்று தாண்டிச் செல்லப்படும். அதாவது அந்த ஆண்டு 'பிரபவ' என்ற பெயர் சூட்டப்படவிருந்தால், அதற்கு அடுத்த பெயரான 'விபவ' என்ற பெயர் சூட்டப்படும். ஆனால், காலப்போக்கில் இது கைவிடப்பட்டது. சம்வத்சரமும் வருஷமும் ஒரே காலகட்டத்தைக் குறிப்பதாக மாறிவிட்டன. ஒரே ஒரு மரத்திற்காக ரூ.1 கோடியை டெபாசிட் செய்த ரயில்வே - விவசாயிக்கு ஜாக்பாட்7 மணி நேரங்களுக்கு முன்னர் முழுவதும் பெண்களே நிரம்பிய குழு இன்று விண்வெளி பயணம் - இந்த 6 பேரும் யார்? என்ன செய்யப் போகிறார்கள்?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES எப்போதிலிருந்து 'சம்வத்சர' பட்டியல் கடைப்பிடிக்கப்படுகிறது? வட இந்தியாவில் நீண்ட காலமாக இந்தப் பட்டியல் பயன்படுத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் 13-14ஆம் நூற்றாண்டில் இருந்துதான் இந்த முறை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார் ஆய்வாளர் அ.கா. பெருமாள். "தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் 13-14ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்துதான் இந்த பெயர்களைக் குறிப்பிட்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தென்காசி கோவிலில் பல இடங்களில் இந்த வருடப் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இந்த சுழற்சி ஆண்டு முறையையும் இந்தப் பெயர்களையும் தமிழ்நாட்டில் பரவலாக்கியது பாண்டிய மன்னர்கள்தான். சோழமன்னர்களின் கல்வெட்டுகளில் இவை கிடையாது" என்கிறார் அ.கா. பெருமாள். இலக்கியங்களைப் பொறுத்தவரை, இடைக்காடர் எழுதிய வருடாதி வெண்பாவில் இந்த அறுபது ஆண்டுப் பெயர்களும் வருகின்றன. இந்தப் பெயர்களையும் சொல்லி, அந்தந்த ஆண்டுகள் எப்படியிருக்கும் எனப் பாடியிருக்கிறார் இடைக்காடர். இவரது காலம் 15ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் இந்த அறுபது ஆண்டுகளும் வரிசைப்படி காணப்படுவது இந்த வருடாதி வெண்பாவில்தான். "கல்வெட்டுகள், இடைக்காடரின் பாடல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது 14-15ஆம் நூற்றாண்டில் இது பிரபலமாக ஆரம்பித்திருக்கலாம்" என்கிறார் அ.க. பெருமாள். இதே கருத்தையே முன்வைக்கிறார் கல்வெட்டு ஆய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியன். "15ஆம் நூற்றாண்டில்தான் இது பிரபலமாகியிருக்க வேண்டும். ராஜராஜசோழனின் கல்வெட்டுகளிலோ, அவனுக்குப் பிந்தைய சோழ மன்னர்கள் கல்வெட்டுகளிலோ இந்த வருடப் பெயர்கள் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சியாண்டையும் சக ஆண்டையும்தான் கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்" என்கிறார் அவர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கும்போது, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இதனை அப்படிப் பார்க்கத் தேவையில்லை என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி. "தமிழ் இங்கிருந்து வந்ததாகவும் சமஸ்கிருதம் வெளியில் இருந்து வந்ததாகவும் சொல்லி, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே சமஸ்கிருதமும் தமிழும் நெருக்கமாக இருந்திருக்கின்றன. இரு மொழிகளுக்கும் இடையில் ஒரு நீண்ட காலத் தொடர்பு இருக்கிறது. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்பவர்கள் மொழியியலாளர்கள் அல்ல. அவர்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தம் சார்ந்து அந்தக் கருத்தைச் சொல்கிறார்கள். ஆகவே இந்தப் பெயர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு நீண்ட காலத் தொடர்ச்சி இருக்கிறது" என்கிறார் அவர். ஆனால், இந்த சம்வத்சர முறையிலான பெயர்களை ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதில் வேறு ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, இந்தப் பெயர்கள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரும்பவும் அதே பெயர் வருமென்பதால், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு நாம் குறிப்பிட விரும்பும் ஆண்டு எது என்ற குழப்பம் ஏற்படும். 'நானே தலைவர்' - மோதிக் கொள்ளும் ராமதாஸ் - அன்புமணி; பாமகவில் என்ன நடக்கிறது? முழு பின்னணி14 ஏப்ரல் 2025 காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "கல்வெட்டுகளைப் பொறித்த மன்னர்கள் இதில் தெளிவாக இருந்தார்கள். அவர்கள் இந்த சுழற்சி ஆண்டைக் குறிப்பிட்டாலும் சக ஆண்டு, சாலிவாகன ஆண்டு போன்ற பிற ஆண்டுகளையும் சேர்த்தே குறிப்பார்கள். இதனால், அவர்கள் எந்த வருடத்தைச் சொல்கிறார்கள் என்பதில் குழப்பம் கிடையாது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் பதிப்பாளர்களாக இருந்தவர்கள், தங்கள் புத்தகங்களில் கிரிகேரியன் ஆண்டையோ, வேறு ஆண்டையோ குறிக்காமல், வெறும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார் அ.கா. பெருமாள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காலத்தைக் கணக்கிட்டுக் குறிப்பிடுவது சங்க காலத்தில் இருந்தே இருந்துவருகிறது. அதற்கு நல்ல உதாரணம், புறநானூற்றின் 229வது பாடல். கூடலூர் கிழார் பாடிய இந்தப் பாடல், கோச்சேரமான் யானைகட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியது. அவன் குறிப்பிட்ட நாளில் இறப்பான் எனக் கணித்து, அதேபோல அவன் இறந்துவிட கையறு நிலையில் பாடிய பாடல் இது. இந்தப் பாடலின் பல இடங்களில், ராசிகள், நட்சத்திரத்தின் நிலை, மாதத்தின் பெயர் ஆகியவை வருகின்றன. ஆனால், காலத்தைக் குறிப்பிட தங்களுக்கென தொடர்ச்சியான ஒரு ஆண்டு முறையை தமிழர்கள் ஏன் உருவாக்கவில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz7wz3eggl0o
-
அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
இந்தப் பண்டிகைக்காலம் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும் - புத்தாண்டு வாழ்த்துசு் செய்தியில் வடக்கு ஆளுநர் 11 APR, 2025 | 05:06 PM 'இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும்' என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், வடக்கு மாகாண மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு புதுப்பித்தல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான வாய்ப்பையும் குறிக்கின்றது. இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும். ஒற்றுமை, கலாசார நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் உணர்வோடு இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொள்வோம். இந்தப் பண்டிகை நாளில், எமது வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம். சமூகங்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகளை வலுப்படுத்துவோம். கடந்த காலங்களில் பின்னடைவைச் சந்திருந்த எமது நாடும், மாகாணமும் மீண்டெழுந்து வரும் இந்தத் தருணத்தில் புதிய உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடும் நாம், எதிர்காலத்தில் சிறப்பான இலக்கை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211818
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LIVE 30th Match (N), Lucknow, April 14, 2025, Indian Premier League Lucknow Super Giants 166/7 Chennai Super Kings (11/20 ov, T:167) 87/3 CSK need 80 runs in 54 balls. Current RR: 7.90 • Required RR: 8.88 • Last 5 ov (RR): 28/2 (5.60) Win Probability: CSK 67.50% • LSG 32.50% தொடக்கம் எல்லாம் நல்லாத்தான் தொடங்குது! பினிசிங் சரியில்லையே?!
-
ஒரே ஒரு மரத்திற்காக ரூ.1 கோடியை டெபாசிட் செய்த ரயில்வே - விவசாயிக்கு ஜாக்பாட்
பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத் பதவி, பிபிசி செய்தியாளர் 14 ஏப்ரல் 2025, 03:06 GMT 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்மரம் ஒன்றுக்காக ரூ. 1 கோடியை மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மத்திய ரயில்வே செலுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, ரயில்வே ரூ. 1 கோடியை செலுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயி, இந்த பணத்தில் இருந்து பாதியை அதாவது ரூ. 50 லட்சத்தை எடுத்துக் கொள்ளவும் ஏப்ரல் 9-ஆம் தேதி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. செம்மரம் ஒன்றுக்காக விவசாயி ஒருவர் இழப்பீடு பெற்றது எப்படி? நடந்தது என்ன? இங்கே பார்க்கலாம்! உண்மையில் நடந்தது என்ன? மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ளது கர்ஷி என்ற கிராமம். இங்கே தன்னுடைய ஐந்து மகன்களோடு வாழ்ந்து வருகிறார் விவசாயி கேசவ் ஷிண்டே. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அன்று செம்மரம் ஒன்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கர்ஷி கிராமத்தில் அவருக்கு 2.29 ஹெக்டர் நிலம் சொந்தமாக உள்ளது. வர்தா - யவத்மால் - புசத் - நந்தெத் ரயில் பாதை அவருடைய நிலத்தின் ஊடாக செல்கிறது. இந்த திட்டத்திற்காக மத்திய ரயில்வே அவருடைய நிலத்தை கையகப்படுத்தியது. நிலத்திற்கான இழப்பீட்டை ஷிண்டே பெற்றார். கையகப்படுத்த வந்த அதிகாரிகளிடம், அவருடைய நிலத்தில் இருக்கும் செம்மரத்திற்கும் இழப்பீடு வேண்டும் என்று கேட்டார். அவருடைய நிலத்தில் இருந்த யேனா மற்றும் கருங்காலி மரத்திற்கும், நிலத்திற்கு அடியே இணைக்கப்பட்டுள்ள பைப்புகளுக்கும் இழப்பீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ஷிண்டே. அடர்த்தியாக வளர்ந்து நிழல் தரும் இந்த அழகான மரங்களை வளர்க்க தமிழ்நாட்டில் தடை ஏன்?27 ஜனவரி 2025 பனை மரத்தை ஒத்த உலகின் மிகப் பழமையான மரம் - எப்படி தோன்றியது?10 மார்ச் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செம்மரக்கட்டைகள் அதற்கு அதிகாரிகள், முதலில் செம்மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். வனத்துறை அந்த ஆய்வை நடத்த வேண்டும் என்று கூறி கடிதம் ஒன்றையும் அவர்கள் வழங்கியுள்ளனர். கேசவ் ஷிண்டேவின் மகனும் இந்த வழக்கின் மனுதாரருமான பஞ்சாப் ஷிண்டே அளித்த தகவலின் படி, அந்த நிலத்தில் இருந்த மா உள்ளிட்ட சில மரங்களுக்கான இழப்பீட்டை ஷிண்டே பெற்றுள்ளார். அங்கே இருந்த கிணறுக்காக ரூ. 8 லட்சம் வரை இழப்பீட்டைப் பெற்றதாக தெரிவிக்கும் பஞ்சாப் ஷிண்டே, செம்மரம் உள்ளிட்ட இதர மரங்களுக்கும், பைப் இணைப்புகளுக்கும் இழப்பீடு அப்போது வழங்கப்படவில்லை என்று கூறுகிறார். இது தொடர்பாக அவர் 2014-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர், ரயில்வே, நீர்பாசனத்துறை உள்ளிட்ட பல துறைகளிடம் மனு கொடுத்திருக்கிறார். "இருப்பினும் எங்களுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நாங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு உயர் நீதிமன்றத்தை அணுகினோம்," என்று கூறுகிறார் பஞ்சாப் ஷிண்டே. நேபாளம்: தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்4 ஜூலை 2024 மனித தலையீட்டால் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சந்திக்கும் புதிய சவால்15 செப்டெம்பர் 2024 பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT படக்குறிப்பு,கேசவ் ஷிண்டே (இடது), அவருடைய மகன் பஞ்சாப் ஷிண்டே (வலது) செம்மரத்தை மதிப்பாய்வு செய்த பிறகு இழப்பீடு அதிகரிக்குமா? நீதிமன்றத்தை அணுகிய ஒரே வருடத்தில் இழப்பீட்டைப் பெற்றனர் ஷிண்டேவின் குடும்பத்தினர். இருப்பினும் அவருடைய நிலத்தில் இருக்கும் செம்மரத்தின் மதிப்பு இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. மரத்தின் மதிப்பு ஆய்வு செய்யப்படுவதற்கு முன்பாக ரூ. 1 கோடியை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி பணமும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் அதன் மதிப்பு ரூ. 5 கோடி வரை செல்லலாம் என்று என்று ஷிண்டேவின் வழக்கறிஞர் அஞ்சனா ராவத் நர்வதே பிபிசி மராத்தியிடம் தெரிவிக்கிறார். வனத்துறை அதிகாரிகள் மற்றும் இதர துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்படும். அதன் பிறகே, நிலத்தில் இருக்கும் மரத்தின் மதிப்பை எப்படி ஆய்வு செய்வது என்பது முடிவு செய்யப்படும். அதன் மதிப்பைப் பொருத்து மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். பேய் மரம்: விசாகப்பட்டினம் மக்களை இந்த மரம் அஞ்சி நடுங்கச் செய்வது ஏன்?16 டிசம்பர் 2023 மரங்களுக்கு 75 வயதானால் ஓய்வூதியம் - ஹரியாணாவில் வியக்க வைக்கும் திட்டம்6 டிசம்பர் 2023 பட மூலாதாரம்,ISTOCK படக்குறிப்பு,மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் அதன் விலையானது ரூ. 5 கோடி வரை செல்லலாம் என்று என்று ஷிண்டேவின் வழக்கறிஞர் அஞ்சனா ராவத் நர்வதே தெரிவிக்கிறார் மதிப்பீடு செய்வதில் உள்ள சிக்கல் காரணமாகவே இழப்பீட்டை வழங்கவில்லை என்று ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜா சௌபே கூறுகிறார். "உயிருடன், அந்த நிலத்தில் நிற்கும் மரத்தின் மதிப்பை எப்படி ஆய்வு செய்வது? ஆய்வு செய்யாமல் எப்படி இழப்பீட்டை வழங்குவது? இந்த காரணங்களால் தான் இழப்பீட்டை ரயில்வே வழங்கவில்லை. இப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரூ. 1 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது ரயில்வே. இது செம்மரத்திற்கான இழப்பீடு மட்டுமே," என்று பிபிசி மராத்தியிடம் பேசும் போது அவர் தெரிவித்தார். செம்மரத்தின் விலை தொடராக ஆந்திர பிரதேசத்தில் உள்ளவர்களிடம் பேசியதாக தெரிவிக்கிறார் ஷிண்டே. தனியார் பொறியாளர் ஒருவரை வைத்து செம்மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ததாகவும் அவர் கூறுகிறார். ஷிண்டேவின் கருத்துப்படி, இந்த மரம் ரூ. 4 கோடி 94 லட்சம் மதிப்புடையது. நிலத்தை கையகப்படுத்திய காலம் முதல் இந்த நாள் வரையில், இந்த மதிப்பிற்கான வட்டியையும் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டுள்ளார். நிலத்திற்கு அடியே பதிக்கப்பட்டுள்ள பைப் மற்றும் இதர மரங்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கான இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என்று ஷிண்டேவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் செம்மரம் இருப்பது தெரியவந்தது எப்படி? கேசவிற்கு இப்போது வயது 94. அவருடைய மகன்கள் அனைவருக்கும் வயது 50-ஐ தாண்டிவிட்டது. அவருடைய குடும்பத்தினர் உதவியுடன்தான் இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் கேசவ். அவருடைய நிலத்தில்தான் ரயில் நிலையம் அமைய உள்ளது என்பதால் அவருடைய பெரும்பான்மை நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவருடைய நிலத்தில் மா மற்றும் இதர மரங்கள் பயிரப்பட்டிருந்தன. ஆனால் அங்கே செம்மரம் ஒன்று இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. ரயில்வே திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் போதுதான் அவர்களுடைய நிலத்தில் செம்மரம் இருந்தது தெரிய வந்தது. ரயில்வே நிர்வாகம் அந்த மரத்தை அடையாளப்படுத்த உதவியது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சாப் ஷிண்டே அளித்த தகவலின் படி, நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பே சில ரயில்வே ஊழியர்கள் வந்து நிலத்தை அளவிட்டுள்ளனர். அவர்கள் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலமாகவே அந்த மரம் செம்மரம் என்பதை ஷிண்டேவின் குடும்பத்தினர் அறிந்துள்ளனர். அவர்களின் நிலத்தில் அப்படி ஒரு மரம் இத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதை அவர்களால் நம்பவே இயலவில்லை. செம்மரம் உண்மையாகவே பார்க்க எப்படி இருக்கும் என்று அவர்கள் யுடியூப் வீடியோக்களை பார்வையிட்டுள்ளனர். பிடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிகள்: மரங்களின் காவலர் சுபாஷ்6 செப்டெம்பர் 2019 சீமைக் கருவேல மரங்கள் வரமா? சாபமா? உயிராபத்தையும் மீறி நடக்கும் கரிமூட்டத் தொழில்28 மார்ச் 2022 பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT படக்குறிப்பு,மதிப்பாய்வு முடிந்த பிறகு, செம்மரத்தின் மதிப்பைப் பொறுத்து அதற்கான இழப்பீட்டை ஷிண்டேவின் குடும்பம் பெறும். இதில் அனுபவம் உள்ள ஆட்களிடம் மரம் குறித்து விசாரித்த போதுதான் இந்த மரம் செம்மரம் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். எனவேதான் நிலம் கையகப்படுத்தப்படும் போது, செம்மரத்திற்கும் இழப்பீடு வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். "ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்," என்று ஷிண்டே தெரிவிக்கிறார். உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரூ. 1 கோடி அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 50 லட்சத்தை எடுக்க அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம். தற்போது மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதிப்பாய்வு முடிந்த பிறகு, செம்மரத்தின் மதிப்பைப் பொறுத்து அதற்கான இழப்பீட்டை ஷிண்டேவின் குடும்பம் பெறும். ரூ. 1 கோடி இழப்பீடு பெறப்பட்டது குறித்து ஷிண்டே கூறியது என்ன? "நாங்கள் எதிர்பார்த்த இழப்பீடு எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வந்த பின், மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகு முறையான இழப்பீடு கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களுக்கு நியாயமான முறையில் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை," என்று பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார் பஞ்சாப் ஷிண்டே. பஞ்சாப் ஷிண்டே பொதுத்துறையில் பணியாற்றியவர். பணி ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த ஓய்வூதியம் அனைத்தையும் இந்த வழக்கிற்காக செலவிட்டதாக அவர் தெரிவிக்கிறார். தற்போது ஷிண்டேவின் நிலத்தில் ரயில்வே பாதைக்கான பணிகள், வழக்கு காரணமாக தாமதம் அடைந்துள்ளது. சென்னையில் பெருகி வரும் குறுங்காடுகள்: பசுமை அதிகரிக்குமா?24 மே 2022 10 கோடி மரங்கள் நடுவதற்காக தேசிய விடுமுறை அறிவித்த நாடு எது தெரியுமா?22 நவம்பர் 2023 செம்மரம் என்றால் என்ன? அதன் மதிப்பு ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில், சேஷாசலம் மலைத்தொடரில் செம்மரங்கள் அதிகமாக காணப்படுகிறது தமிழ்நாடு - ஆந்திரபிரதேசம் எல்லையில் அமைந்துள்ள சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் செம்மரங்கள் அதிகமாக காணப்படுகிறது. ஐந்து லட்சம் சதுர ஹெக்டர் பரப்பில் உள்ள செம்மரங்களின் சராசரி உயரமானது 8 முதல் 11 மீட்டர்கள் ஆகும். இது மிகவும் மெதுவாக வளரக் கூடியது. அதனால்தான் இது மிகவும் அடர்த்தியான மரமாக உள்ளது. சீனா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்த மரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62z5v9997xo