Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம் - புத்தாண்டு வாழ்த்தில் பிரதமர் ஹரிணி 14 APR, 2025 | 06:16 AM வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம் என தமிழ், சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'வளமான நாடு, அழகான வாழ்க்கை'க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வரும் இவ் வேளையில் மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும் புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம். ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் புதுப்பிக்க வேண்டிய தேவையுள்ள நேரத்தில் இப் புத்தாண்டு மலர்கிறது. எமது கலாசாரம் மற்றும் பெறுமானங்களில் வேரூன்றியிருக்கும் நேர்மறையான மாற்றத்தை அடைந்து கொள்வதற்கு இலக்குகளின் அடிப்படையில் நாம் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்பதை இந்த பாரம்பரிய பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது. அண்மைய வரலாற்றில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பலருக்கு புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி நினைத்தும் பார்க்க முடியாதளவு கடினமாக இருந்ததை நாம் அறிவோம். இருப்பினும் ஊழல் மற்றும் மோசடி சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கு மக்களின் துணிச்சலான முயற்சிகள் ஒரு புதிய ஆரம்பத்துக்கு வழி வகுத்துள்ளன. அதனால்தான் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு முக்கிய மைல் கல்லைக் குறித்து நிற்கிறது. இது வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து சமூகங்களும் சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனநாயகக் கொள்கைகளின் கீழ் ஒன்றிணைந்துள்ள ஆண்டாகும். எதிர்வரும் மே மாதத்தில் அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை. புலர்ந்திருக்கும் புத்தாண்டில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் இத் தருணத்தில் அனைத்து பிரஜைகளும் தங்கள் சமூகங்களில் கௌரவம், அமைதி மற்றும் பரிவுணர்வுடன் செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம். மலரும் இந்த சிங்கள - தமிழ் புத்தாண்டில் இலங்கை தேசத்துக்கு புதியதோர் மாற்றமும் வளமான எதிர்காலமும் அமைய புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலிமையும் ஐக்கியமும் புத்தெழுச்சியும் கிடைக்க எனது பிரார்த்தனைகள்! உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211832
  2. 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி 14 APR, 2025 | 06:25 AM 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம். வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கே உரித்தாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்த வேண்டும். சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டிற்காக நமது பொறுப்பை மேலும் வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது. மேலும் பூகோள அரசியலை போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வருகிறது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்று பிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன. இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளை கலைந்து சமூகத்திற்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பாகும். மேலும், மக்கள் வாழ்வை புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான மனப்பாங்கு மற்றும் சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும். இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும். நாட்டிற்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றிபெறச் செய்யவும் நாட்டையும் மக்களையும் வெற்றிபெறச் செய்வதற்காகவும் இந்த புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் அனைவருக்கும் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும்! என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211727
  3. தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குல்தீப் யாதவ் ரன்அவுட் ஆன காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்து 12 ரன்களில் தோற்றது. மும்பை அணியின் தோல்வி நிச்சயமாகிவிட்டதாக ரசிகர்கள் கருதிய போதுதான் அந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. நேரிலும், நேரலையிலும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணிப்புக்கு மாறாக, மூன்றே பந்துகளில் டெல்லியிடம் இருந்து வெற்றியை மும்பை அணி பறித்தது. மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு பரஸ்பர வரி விதிப்பில் இருந்து டிரம்ப் விலக்கு அளித்தது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் ரோஹித் மீண்டும் ஏமாற்றம், கைகொடுத்த திலக் வர்மா மும்பை அணிக்கு 5வது போட்டியிலும் ரோஹித் சர்மா(18) நல்ல தொடக்கத்தை இந்த ஆட்டத்திலும் வழங்கவில்லை. பவர்ப்ளேயில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. 2வது விக்கெட்டுக்கு ரிக்கெல்டன்(41), சூர்யகுமார்(40) ஆகியோர் 38 ரன்கள் சேர்த்தனர். 3வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி 60 ரன்கள் சேர்தது நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. ஹர்திக் பாண்டியா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 6 பந்துகள் இடைவெளியில் ஹர்திக், சூர்யகுமாரின் விக்கெட்டுகள் போனதால் மும்பை சற்று தடுமாறியது நமன்திர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணியில் திலக் வர்மா அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா, நமன் திர் ஜோடி கடைசி நேரத்தில் 33 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஸ்கோர் 200 ரன்களைக் கடக்க உதவினர். திலக் வர்மாவைப் பொருத்தவரை இதுவரை மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் 5 அரைசதங்களை விளாசியிருந்தார் ஆனால் ஒருமுறைகூட மும்பை அணி வென்றதில்லை. இந்த முறைதான் திலக் வர்மா அரைசதம் அடித்து மும்பை அணி வென்றுள்ளது. டெல்லி அணியின் ரி்ஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், விப்ராஜ் நிகம் 8 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES 7ஆண்டுகளுக்குப் பின் அரைசதம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கிய கருண் நாயர், 3 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் தொடரில் நேற்று ஆடினார். ஏறக்குறைய 7ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் நேற்று அரைசதம் அடித்தார். அதிரடி ஆட்டம் ஆடிய கருண் நாயர் 22 பந்துகளில் அரைசதம் அடித்து 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் என 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அசுரத்தனமான ஃபார்மில் இருந்த கருண் நாயர் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தார். கருண் நாயர் இதுபோன்று அதிரடியாக ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மும்பை அணியில் பும்ரா, ஹர்திக், சான்ட்னர் என யார் பந்துவீசினாலும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் கருண் நாயர் பேட்டிலிருந்து பறந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ராவின் பந்துவீச்சையும் விளாசிய கருண் நாயர் பவர்ப்ளேயில் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 28 ரன்கள் சேர்த்தார். கருண் நாயர் களத்தில் இருந்த வரை டெல்லி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. டெல்லி அணி பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 72 ரன்களும், 9வது ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. 2வது விக்கெட்டுக்கு அபிஷேக் போரெல், கருண் நாயர் 100 ரன்கள் சேர்த்தனர். சதத்தை நோக்கி நகர்ந்த கருண் நாயர் 89 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் போல்டாகினார். 119 ரன்கள்வரை டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தது. அடுத்த 10 ஓவர்களில் வெற்றிக்கு 86 ரன்கள்தான் தேவைப்பட்டது, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், அடுத்த 26 ரன்களுக்குள் அபிஷேக் போரெல், கருண் நாயர், அக்ஸர் படேல், ஸ்டெப்ஸ் ஆகியோரின் விக்கெட்டை இழக்கவே ஆட்டம் தலைகீழானது. டெல்லி அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. தங்கத்தில் முதலீடு செய்வது உண்மையாகவே பாதுகாப்பானதா?13 ஏப்ரல் 2025 இந்திய ராணுவத்தை வழி நடத்திய 'செங்கல்பட்டு' ஜெனரல் சுந்தர்ஜி- ஆபரேஷன் புளூஸ்டாரில் நடந்தது என்ன?13 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை மாற்றிய 3 பந்துகள் 18-வது ஓவர்கள் முடிவில் டெல்லி வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா ஸ்டார்க் களத்தில் இருந்தனர். இதுபோன்ற சூழலில் பலமுறை அசுதோஷ் சர்மா ஆட்டத்தை வென்று கொடுத்ததால் நம்பிக்கை இருந்தது. பும்ரா வீசிய 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அசுதோஷ் அடிக்கவே, வெற்றிக்கு 15 ரன்களே தேவைப்பட்டன. பும்ரா வீசிய 4வது பந்தில் அசுதோஷ் 17 ரன்னில் ஜேக்ஸால் ரன்அவுட் ஆகினார், அடுத்துவந்த குல்தீப் யாதவ் ராஜ்பாவாவால் ரன் அவுட் ஆகினார், கடைசி விக்கெட்டுக்கு வந்த மோகித் சர்மா சான்ட்னரால் ரன்அவுட் ஆகவே மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி கைகளில் இருந்த ஆட்டம், வெற்றி வாய்ப்பு மூன்றே பந்துகளில் மும்பை அணியின் கரங்களுக்கு மாறியது எப்படி? என்பது அவர்களுக்கே புரியவில்லை. மாயாஜால வித்தை போன்று 3 பந்துகளில் ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவும் தலைகீழாக மாறியது ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 3 பந்துகளில் 3 ரன்அவுட் நடந்தது இதுதான் முதல்முறையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியின் தோல்விக்கு காரணம் ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பனிப்பொழிவு இருந்தால் 11வது ஓவர் முடிந்தபின் பந்தை மாற்றும் விதி அறிமுகமானது. இது டெல்லி ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 11வது ஓவர் முடிந்தபின் பனிப்பொழிவை ஆய்வு செய்து நடுவர்கள் பந்தின் தன்மையையும் ஆய்வு செய்து புதிய பந்து அறிமுகப்படுத்தினர். புதிய பந்து மும்பைக்கு கிடைத்தபின் ஆட்டம் மும்பையின் கரங்களுக்கு மாறியது. அடுத்த 4 ஓவர்களில் டெல்லி அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கருண் நாயர், அக்ஸர் படேல் (9), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(1), கே.எல். ராகுல் (15) என 12வது ஓவரில் இருந்து ஓவருக்கு ஒரு விக்கெட்டை டெல்லி இழந்தது. 24 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம் களத்தில் இருந்தனர். அசுதோஷ் இருந்ததால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது. 17-வது ஓவரை வீசிய டிரன்ட் போல்ட் 5 யார்கறை வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டு 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் விப்ராஜ் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி அவுட் ஆகினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?10 ஏப்ரல் 2025 இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES 200 ரன்களும் வெற்றியும் மும்பை அணியும், டெல்லி அணியும் 200 ரன்களை அடித்தவிட்டால் அதை இந்த ஆட்டம் வரை டிபென்ட் செய்து வெற்றி பெறும் வரலாற்றை தக்கவைத்துள்ளன. மும்பை அணி 15 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அனைத்திலும் வென்றுள்ளது. அதேபோல டெல்லி அணியும் 13 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அதை வெற்றிகரமாக டிபெண்ட் செய்து வென்றுள்ளது. இந்த போட்டியில் ஆட்டம் 18-வது ஓவர் வரை டெல்லியின் பக்கம்தான் இருந்தது. பும்ரா வீசிய 19 வது ஓவரில் ஆட்டம் தலைகீழாக மாறி ஒரே ஓவரில் ஹாட்ரிக் ரன்அவுட் நடந்து, டெல்லியின் வெற்றி 3 பந்துகளில் மும்பைக்கு கைமாறியது. மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் கரன் சர்மா 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். மும்பை அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில் 2வது வெற்றியைப் பெற்று, 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. டெல்லிகேபிடல்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் முதல் தோல்வியைச் சந்தித்து 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES "எங்கே தோற்றோம் எனப் புரியவில்லை" தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் " ஆட்டம் எப்படி முடிந்தது, எந்த இடத்தில் தோற்றோம் என்று எங்களுக்கே புரியவில்லை. ஆட்டம் எங்களிடம் இருந்ததுஎப்படி மும்பை கரங்களுக்கு மாறியது, வென்று என்பது பிரமிப்பாக இருக்கிறது. நடுப்பகுதியில் பல விக்கெட்டுகளை சாப்ட் டிஸ்மிசல்களில் இழந்தது தோல்விக்கான காரணமாக இருக்கலாம். 12 ரன்னில் தோற்றுள்ளோம், ஒரு ஓவர்வரை மிச்சம் இருந்ததால் நாங்கள் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். டெய்லெண்டர் பேட்டர்கள் சேஸிங்கின்போது ஒவ்வொரு முறையும் அணியை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்ப்பது தவறு. சில நேரங்களில் தவறான ஷாட்களும், தவறான முடிவைக் கொடுக்கும். ஆடுகளம் சேஸிங்கிற்கு ஏற்றதாக இருந்தது, பனிப்பொழிவு இருந்து புதிய மாற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எங்கள் சுழற்பந்துவீச்சு திருப்தியாக இருக்கிறது, பவர்ப்ளேயில் 2 பேர் வரை பந்துவீசுகிறோம். குல்தீப் இந்த சீசனில் மிரட்டலாக பந்துவீசுகிரார். விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் குல்தீப்பை அழைத்தால் விக்கெட் கிடைக்கிறது. இந்த ஆட்டத்தில் ஏராளமான நல்ல அம்சங்கள் இருந்தன, தோல்வியை மறந்துவிட்டு நகர்கிறோம்" எனத் தெரிவித்தார். ஜெர்மனியில் 68வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் வயதான கொரில்லா13 ஏப்ரல் 2025 மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி?12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய ஆட்டங்கள் லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்: லக்னெள நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நாள் - ஏப்ரல் 17 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 18 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-349 ரன்கள்(6 போட்டிகள்) சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்செல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்) பரப்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது (சிஎஸ்கே)12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) ஷர்துல் தாக்கூர் (லக்னெள) 11 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) குல்தீப் யாதவ் (டெல்லி கேபிடல்ஸ்) 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crm3vgvjwlvo
  4. இரண்டு அவிச்ச முட்டை இரவு சாப்பிட்டதிற்கும் இன்றைய போட்டிகளில் முட்டைகள் வாங்குவதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமா?! சுவி அண்ணை 38 புள்ளிகளோட முன்னிலை....
  5. பட மூலாதாரம்,HAPPER COLLINS படக்குறிப்பு,ஜெனரல் கே சுந்தர்ஜி கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் முகர்ஜி, பானர்ஜி அல்லது சாட்டர்ஜி போல சுந்தர்ஜி பெங்காலியா அல்லது ஃபிரோஜி அல்லது ஜாம்ஷெட்ஜி போல பார்ஸியா என்று மக்கள் அடிக்கடி கேட்பார்கள். சிலர் அவரை ஒரு சிந்தி என்றும் கருதினர். ஜெனரல் சுந்தர்ஜியின் மனைவி வாணி சுந்தர்ஜி தனது 'எ மேன் கால்ட் சுந்தர்ஜி' என்ற கட்டுரையில், "உங்கள் பெற்றோர் இருவரும் தமிழர்கள். ஆனாலும் உங்களுக்கு சுந்தர்ஜி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கள் திருமணத்தின் ஆரம்ப நாட்களில் நான் அவரிடம் கேட்டேன்," என்று எழுதியுள்ளார். "எனக்கு மூன்று வயதாக இருந்தபோது என் பெற்றோர் காந்திஜியை பற்றி அடிக்கடி பேசுவதை நான் கேட்பேன். ஒரு நாள் நான் என் தந்தையிடம், நீங்கள் எந்த காந்திஜியை பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்டேன். மகாத்மா காந்தி ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரை கௌரவிக்கும் விதமாக நாம் அவரது பெயருடன் 'ஜி'யை சேர்க்கிறோம் என்று என் தந்தை பதிலளித்தார். அன்று முதல் என்னையும் சுந்தர்ஜி என்று அழைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். என் தந்தை இதற்கு ஒப்புக்கொண்டார் என்று அவர் பதில் சொன்னார்," என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார். மெட்ராஸில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டில்கூட அவரது பெயர் கிருஷ்ணசாமி சுந்தர்ஜி என்று பதிவு செய்யப்பட்டது. அவரது ஊழியர்களும் சகோதரர்களும் அவரது பெயருடன் 'ஜி'ஐ சேர்க்கத் தொடங்கினர். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தப் பெயரே நிலைத்துவிட்டது. முன்னாள் இந்திய தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த சிங்கப்பூர் நீதிமன்றம் – என்ன விவகாரம்?12 ஏப்ரல் 2025 அதிமுக - பாஜக கூட்டணியால் யாருக்கு லாபம்? அண்ணாமலை, ஓபிஎஸ், தினகரன் எதிர்காலம் என்ன? 6 கேள்வி-பதில்கள்12 ஏப்ரல் 2025 களைப்பில் போர்க் களத்திலேயே உறங்கிய சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,72 மணிநேர தொடர்ச்சியான தாக்குதலுக்குப் பிறகு களைப்படைந்த சுந்தர்ஜி போர்க்களத்திலேயே தூங்கிவிட்டார். பெயரைப் போலவே மற்ற விஷயங்களிலும் சுந்தர்ஜி வித்தியாசமானவராக இருந்தார். ஒருமுறை டேராடூனில் உள்ள அதிகாரிகள் உணவகத்தில் ஒரு ராணுவ கேப்டன் அவரிடம் ஓடி வந்து, "சார், நாங்கள் உங்களுக்காக முழு சைவ உணவைத் தயார் செய்துள்ளோம்" என்றார். "என் இளம் நண்பரே, நான் மாட்டிறைச்சி உண்ணும் பிராமணன். எனக்கு சுவை பிடித்திருந்தால் நகரும், நீந்தும், ஊர்ந்து செல்லும் அனைத்தையும் நான் சாப்பிடுவேன்," என்று சுந்தர்ஜி பதிலளித்தார். தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் உயிரியலில் ஹானர்ஸ் படிக்கத் தொடங்கினார். ஆனால் படிப்பின் பாதியிலேயே ராணுவத்தில் சேர முடிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே. அவர் தனது வாழ்க்கையில் ஐந்து போர்களில் பங்கு கொண்டுள்ளார். அவர் மேஜராக இருந்தபோது ஐ.நா படைகளின் சார்பாகப் போரிட காங்கோவுக்கு அனுப்பப்பட்டார். அங்கே கடுமையான சண்டை நடந்தது. ஒருமுறை 72 மணிநேரம் தொடர்ந்து நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் சாப்பிடாமலும் தூங்காமலும் ஈடுபட்ட சுந்தர்ஜி மிகவும் சோர்வடைந்ததால் தாக்குதலின் நடுவே இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டார். "அவரது பிகாரி உதவியாளர் லட்சுமண் அவரைப் பதுங்கு குழிக்குள் இழுக்க முயன்றார். ஆனால் சுந்தர்ஜி அவரை நோக்கி கோபமாக 'F…off' (இங்கிருந்து செல்) என்று கத்தினார். 24 மணிநேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்தபோதுதான் போர்க்களத்தில் இருப்பதையே அவர் உணர்ந்தார். அவரைச் சுற்றி 36 மோர்டார் குண்டுகள் கிடந்தன. அவர் அவற்றைக் கவனமாக எண்ணினார். ஆனால் இவ்வளவு பெரிய தாக்குதலுக்குப் பிறகும் அவருக்கு ஒரு கீறல்கூட ஏற்படவில்லை" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது அதே லட்சுமண் அவருக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யைக் கொண்டு வந்தார். காங்கோ நாட்களை நினைவுகூர்ந்த சுந்தர்ஜி தனது முன்னாள் உதவியாளரிடம், "அன்று என்னைப் போர்க்களத்தில் தூங்க விட்டுவிட்டு ஏன் சென்றுவிட்டீர்கள்?" என்று நகைச்சுவையாகக் கேட்டார். "நீங்கள் என்னைத் திட்டினீர்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் சென்றுவிட்டேன்" என்று லட்சுமண் பதில் அளித்தார். காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு ஜப்பான் தவிர, அமெரிக்க அணுகுண்டுகள் விழுந்த இன்னொரு நாடு எது தெரியுமா? என்ன நடந்தது? 1998 முதல் 2025 வரை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக 'இயல்பான' கூட்டணி கடந்து வந்த வரலாறு பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேஜர் ஜெனரல் கே.எஸ்.பிரார், ஜெனரல் ஏ.எஸ். வைத்யா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் சுந்தர்ஜி (நடுவில்), ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது... கடந்த 1928ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்த கிருஷ்ணசாமி சுந்தர்ஜி, 1945ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது வடமேற்கு எல்லைப் பகுதியில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றார். கடந்த 1971 போரின்போது அவர் வங்கதேச போரின் முன்வரிசையில் இருந்தார். 1984ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் பொற்கோவிலில் இருந்த ஆயுதமேந்தியவர்களை விரட்டியடிக்க மேற்கொள்ளப்பட்ட, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு சுந்தர்ஜி தலைமை வகித்தார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது ஜெனரல் சுந்தர்ஜி மேற்கு கமாண்டின் தலைவராக இருந்தார். 1984 ஜூன் 3ஆம் தேதியன்று இந்திரா காந்தி அவரை டெல்லிக்கு அழைத்தார். அன்றிரவு அவர் இந்திரா காந்தியுடன் தனியாக ஒரு மணிநேரம் பேசினார். இரவு 2 மணிக்கு வீடு திரும்பியபோது அவர் தனது மனைவியிடம், 'இது எனக்கான மிகப்பெரிய சோதனை' என்றார். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு பிறகு அவர் முற்றிலும் மாறிவிட்டார். அவருடைய சிரிப்பு மறைந்துவிட்டது. இது குறித்து அவரது மனைவி தனது கவலையை வெளிப்படுத்தியபோது, 'நான் விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவேன்' என்று கூறினார். ஆனால் அவரால் அதிலிருந்து ஒருபோதும் மீள முடியவில்லை. "எதிரியை எதிர்த்துப் போராடவே எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. என் சொந்த மக்களை எதிர்ப்பதற்கு அல்ல என்று அவர் அடிக்கடி கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்," என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார். மக்கள் உண்மையை அறியும் வகையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் அனுபவங்களைப் பற்றி எழுதுமாறு பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் அவரைக் கேட்டுக் கொண்டார். தனது ஓய்வு நேரத்தில் அது பற்றி எழுதுவதாக அவர் கூறினார். ஆனால் அந்த நேரம் ஒருபோதும் வரவில்லை. லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ். பிரார் தனது 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தி ட்ரூ ஸ்டோரி' என்ற புத்தகத்தில் "நாங்கள் பொற்கோவிலுக்குள் நுழைந்தது கோபத்துடன் அல்ல, சோகத்துடன். உள்ளே நுழையும்போது எங்கள் உதடுகளில் பிரார்த்தனையும், எங்கள் இதயங்களில் பணிவும் இருந்தது. அந்த நேரத்தில் வெற்றி, தோல்வி என்ற எண்ணமோ, வெகுமதிக்கான விருப்பமோ எங்களுக்கு இருக்கவில்லை. நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகவே அதை நாங்கள் கருதினோம்" என்று ஜெனரல் சுந்தர்ஜி கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார். சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 ஆபரேஷன் பிராஸ்டாக்ஸின் கதை பட மூலாதாரம்,WWW.BHARATRAKSHAK.COM படக்குறிப்பு,ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ் காரணமாக பாகிஸ்தான் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்தது ஜெனரல் சுந்தர்ஜியின் பெயருடன் தொடர்புடைய மற்றொரு நடவடிக்கை 'ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ்'. இந்தியாவின் போர் தயார்நிலையைச் சோதிப்பதற்காக இந்தப் பயிற்சி 1986 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ராஜஸ்தான் பாலைவனத்தில் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியாக இது இருந்தது. இந்த அளவிலான ராணுவப் பயிற்சி இதற்கு முன்பு ஆசியாவில் நடத்தப்பட்டதில்லை. போர் சூழ்நிலையில் எல்லா ராணுவ உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் சோதிக்கப்பட வேண்டும் என்று சுந்தர்ஜி விரும்பினார். இந்தப் பயிற்சியில் ராணுவத்தின் பெரும் பகுதியினர் ஈடுபட்டனர். இந்தியா தன்னைத் தாக்க நினைக்கிறது என்று பாகிஸ்தான் தவறாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இந்தப் பயிற்சி மிகவும் தீவிரமாக இருந்தது. பாகிஸ்தான் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து அவர்களைப் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டது. இந்தப் பயிற்சி காரணமாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங்கின் துறை மாற்றப்பட்டது. "ஒருமுறை நாங்கள் ஆப்கானிஸ்தான் அதிபர் நஜிபுல்லாவை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றபோது ராஜீவ் காந்தி என்னிடம் 'நட்வர், நாம் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கப் போகிறோமா?" என்று கேட்டார்," என்று 'ஒன் லைஃப் இஸ் நாட் இனஃப்' என்ற தனது சுயசரிதையில் நட்வர் சிங் எழுதுகிறார். இந்தப் பயிற்சிக்கான ஒப்புதலை பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங் அளித்திருந்தார். இது குறித்து ராஜீவ் காந்திக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை ராஜீவ் காந்தி நட்வர் சிங் மற்றும் நாராயண் தத் திவாரியிடம், 'பாதுகாப்புத் துறை இணை அமைச்சரை நான் என்ன செய்வது' என்று கேட்டார். "அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தெளிவாகச் சொன்னேன். இதற்கு ராஜீவ் 'அருண் சிங் என் நண்பர்' என்று கூறினார். இதற்கு நான், 'நீங்கள் டூன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அல்ல. நீங்கள் இந்தியாவின் பிரதமர். பிரதமர்களுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என்று சொன்னேன்," என்று நட்வர் சிங் குறிப்பிட்டார். சில நாட்களுக்குப் பிறகு அருண் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டார். இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 'ஸ்காலர் ஜெனரல்' என்று பெயர் பெற்ற ஜெனரல் சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய ராணுவம் போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க ஜெனரல் சுந்தர்ஜி பரிந்துரைத்தார். இந்த ஆபரேஷனின்போது ஒரு விஷயம் ஒருபோதும் நிற்கவில்லை. ஜெனரல் ஜியா, ஜெனரல் சுந்தர்ஜிக்கு மாம்பழங்கள் மற்றும் கின்னு டேஞ்சரின் பழங்கள் நிரம்பிய பெரிய கூடைகளைத் தொடர்ந்து அனுப்பி வந்தார். "அந்தப் பழக்கூடைகளில் 'ஜெனரல் சுந்தர்ஜிக்கு வாழ்த்துகள். நீங்கள் இவற்றை ரசித்து உண்பீர்கள் என்று நம்புகிறேன். ஜியா" என்று ஜெனரல் ஜியா எழுதிய குறிப்பு இருக்கும்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். ஜெனரல் ஜியா விமான விபத்தில் இறக்கும் வரை இந்த பழக் கூடைகள் சுந்தர்ஜிக்கு வந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க பரிந்துரைத்ததற்காக ஜெனரல் சுந்தர்ஜி நினைவுகூரப்படுகிறார். ஜெனரல் சுந்தர்ஜியை 'ஸ்காலர் ஜெனரல்' என்றும் அழைப்பார்கள். அவர் 'அணுசக்திக் கோட்பாட்டை' வகுத்தார். அதைப் பின்பற்றி இந்தியா 1998 அணுஆயுத சோதனைக்குப் பிறகு 'முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை' என்று அறிவித்தது. 'தி பிரின்ட்' இதழில் வெளியான 'General Sundarji gave China strategy four decades ago' என்ற தனது கட்டுரையில் ஜெனரல் ஹெச்.எஸ். பனாக், "இந்திய ராணுவத்தில் வேறு எந்த ஜெனரலுக்கும் இவ்வளவு அறிவுசார் ஆழம், செயல் உத்திக் கண்ணோட்டம் மற்றும் அமைப்பை மாற்றியமைக்கும் திறன் இல்லை என்பதை அவரது மோசமான விமர்சகர்கள்கூட ஒப்புக்கொண்டனர். தனது இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாத கால பதவிக் காலத்தில் அவர் இந்திய ராணுவத்தை 21ஆம் நூற்றாண்டுக்குள் கொண்டு வந்தார்," என்று குறிப்பிட்டுள்ளார். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை1 ஏப்ரல் 2025 அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 'விஷன் 2000' வரைவை உருவாக்கிய சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுந்தர்ஜியின் வேண்டுகோளின் பேரில், மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி படைப் பிரிவின் பாடலை பண்டிட் ரவிசங்கர் இயற்றினார். ஜெனரல் சுந்தர்ஜி 'பகட்டானவர்' என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பற்றிய இந்தக் கருத்து நியாயமானதல்ல என்று அவரது மனைவி கருதுகிறார். சுந்தர்ஜியிடம் குழந்தைத்தனமான எளிமையும் நேர்மையும் தெரிந்தன என்று அவர் குறிப்பிடுகிறார். "அவர் ஸ்டைலாக வாழ விரும்பினார். அவர் பெரும்பாலும் சீருடை அல்லாத உடைகளில் காணப்பட்டார். அவர் பைப் புகைப்பார். அதன் தண்டைப் பயன்படுத்தி சுவரில் உள்ள வரைபடங்களை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு விளக்குவார். இடையிடையே பைப்பில் இருந்து ஒரு பஃப் அல்லது இரண்டு பஃப் உள்ளிழுப்பார். அவரது மனதில் புதிய யோசனைகள் எப்போதும் பிறந்து கொண்டே இருக்கும்" என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார். அந்த நேரத்தில் அவர் மனதளவில் 21ஆம் நூற்றாண்டை ஏற்கனவே அடைந்திருந்தார். 21ஆம் நூற்றாண்டுக்கான இந்திய ராணுவத்தின் உத்தி மிக விரிவாக விளக்கப்பட்ட 'விஷன் 2000' என்ற வரைவை அவர் தயாரித்தார். அணுசக்தி விவகாரங்கள் குறித்த அவரது கருத்துகள் நன்கு அறியப்பட்டவை. அதைப் பற்றியும் அவர் நிறைய எழுதியிருந்தார். அவரது தனிப்பட்ட நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. "லியோனார்டோ டா வின்சி மற்றும் செங்கிஸ் கானை சுந்தர்ஜிக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய, மேற்கத்திய, பாரம்பரிய, நாட்டுப்புற இசை என அனைத்து வகையான இசையையும் அவர் விரும்பினார். இரவு முதல் விடியல் வரை ரவிசங்கரின் இசை நிகழ்ச்சிகளில் நாங்கள் அமர்ந்திருப்போம். அவர் எங்கள் நாற்பது ஆண்டுக்கால நண்பர்" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். சுந்தர்ஜியின் வேண்டுகோளின் பேரில் மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி படைப் பிரிவுக்காக ரவிசங்கர் ஒரு பாடலை இயற்றினார். அவர் அடிக்கடி பிரபல விஞ்ஞானி ராஜா ராமண்ணாவின் வீட்டிற்குச் சென்று அவர் பியானோ வாசிப்பதைக் கேட்டு ரசிப்பார். வேலை செய்யும்போது சுந்தர்ஜி அடிக்கடி பிஸ்மில்லா கான், யெஹுதி மெனுஹின், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் இசையைக் கேட்பார். தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்கள் அமைத்த 'பெருவழிகள்' பற்றி தெரியுமா?17 மார்ச் 2025 பலுசிஸ்தான் இந்தியாவுடன் சேர விரும்பிய போது நேரு நிராகரித்தாரா? பாகிஸ்தான் என்ன செய்தது?16 மார்ச் 2025 வானியல் மற்றும் பறவைகளின் மீது ஆர்வம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பறவைகளைப் பார்த்து ரசிக்க ஜெனரல் சுந்தர்ஜி இரண்டு சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளையும் வாங்கினார். சுந்தர்ஜி எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஒவ்வொரு விஷயம் பற்றிய அவரது அறிவு மேலோட்டமாக இல்லாமல் ஆழமானதாக இருந்தது. ஓய்வு பெற்ற பிறகு ஒருமுறை அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சீன மொழியைக் கற்றுக்கொள்ள இரண்டு புத்தகங்களை அவர் வாங்கினார். 60 வயதைக் கடந்த அவர் சீன மொழியை சரளமாகப் பேசத் தொடங்கினார். "அவர் என்னிடமிருந்து இரண்டு விஷயங்களை கற்றுக்கொண்டார். அவற்றில் ஒன்று வானியலில் ஆர்வம். என் தந்தை ஆறு வயதில் இருந்தே கோள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் காட்ட என்னை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்வார். சுந்தர்ஜி எனக்காக வானியல் பற்றிய சில புத்தகங்களைக் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவருக்கும் இந்தத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். "இரண்டாவது விஷயம் பறவைகள் மீதான ஆர்வம். என்னைப் பார்த்து உத்வேகம் பெற்ற அவர் இந்த விஷயத்தில் சாலிம் அலி மற்றும் டிலான் ரிப்லி எழுதிய பல புத்தகங்களை வாங்கினார். பறவைகளைப் பார்த்து ரசிக்க இரண்டு சக்திவாய்ந்த தொலைநோக்கிகளையும் வாங்கினார். மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. அவரது மீன்பிடிக் கருவியும், 12 Bore துப்பாக்கியும் இன்னும் என்னிடம் உள்ளன" என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார். சுந்தர்ஜியின் ஒவ்வொரு வேலையிலும் வேகம் இருந்தது. அவர் மிக வேகமாக நடப்பார். உடன் நடப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுவிடும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அவர் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வேலை செய்தார். முகலாய பேரரசர் ஔரங்கசீப் மகராஷ்டிராவில் மிகவும் எளிய கல்லறையில் புதைக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணி13 மார்ச் 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி பீரங்கியும் ஓட்டுவார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் எல்லையை நோக்கிச் செல்ல கவச வாகனத்தைத் தயார் செய்யும் ஓர் இந்திய ராணுவ வீரர். சுந்தர்ஜிக்கு வாகனங்களை ஓட்டுவது மிகவும் பிடிக்கும். பீரங்கிகள், ஏபிசிகள் (Armored personnel carrier) மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வரை அனைத்தையும் அவரால் ஓட்ட முடியும். அவர் மேற்கு கமாண்ட் தலைவராக இருந்தபோது ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளன்று அவரது முன்னாள் ADC ஒரு மோட்டார் சைக்கிளில் அவரைச் சந்திக்க வந்தார். "அப்போது டெல்லியில் உள்ள இன்ஸ்பெக்‌ஷன் பங்களாவின் வராண்டாவில் நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். சுந்தர்ஜி மோட்டார் சைக்கிளைப் பார்த்தவுடன் "என்னுடன் வா" என்றார். நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தோம். அந்த நேரத்தில் சுந்தர்ஜி குர்தா பைஜாமா அணிந்திருந்தார், நான் இரவு உடையில் இருந்தேன். அடுத்த அரை மணிநேரத்திற்கு அவர் மோட்டார் சைக்கிளில் கன்டோன்மென்ட் முழுவதும் சுற்றினார்" என்று வாணி சுந்தர்ஜி நினைவு கூர்ந்தார். ஒருமுறை அவர் பாலைவனத்தின் 44 டிகிரி வெப்பத்தில் APCஐ ஓட்டினார். சிறிது நேரத்திற்குள் அவரது தோழர்கள் பலர் வெப்பத்தால் துவண்டு போனார்கள். ஆனால் 51 வயதான லெப்டினன்ட் ஜெனரல் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு வாகனத்தை தொடர்ந்து ஓட்டினார். "சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது நாங்கள் ஒன்றாக பபீனா என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு பல பீரங்கிகள் வரிசையாக நிற்பதை அவர் கண்டார். உடனடியாக அருகிலுள்ள ஒரு டாங்கின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த அவர் உடன் அமரும்படி என்னையும் அழைத்தார். அதன் பிறகு அவர் அந்தக் கரடுமுரடான நிலப்பரப்பில் முழு வேகத்தில் பீரங்கியை ஓட்டினார்" என்று வாணி நினைவு கூர்ந்தார். ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 'மோட்டார் நியூரான் நோயால்' அவதிப்பட்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெனரல் சுந்தர்ஜி, இந்தியாவின் 'அணுசக்திக் கோட்பாட்டை' உருவாக்கினார் அவர் பாகிஸ்தானுக்கு சென்றபோது, அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி ஆசிப் நவாஸ் ஜன்ஜுவாவின் விருந்தினராக இருந்தார். இஸ்லாமாபாத், பெஷாவர், கைபர் கணவாய் ஆகிய இடங்களுக்கு சுந்தர்ஜி சென்றார். பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் அவர் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் 50 மீட்டர் உள்ளே சென்றார். இதன் பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம் தக்ஷசீலா, மொஹஞ்சதாரோ மற்றும் லாகூருக்கும் பயணம் மேற்கொண்டார். ஜெனரல் சுந்தர்ஜி 'மோட்டார் நியூரான் நோயால்' பாதிக்கப்பட்டிருப்பதை 1998 ஜனவரி 10ஆம் தேதி மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள மோட்டார் நியூரான்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் நோய். இது தசை பலவீனத்தையும் இறுதியில் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும். இந்த நோயைப் பற்றி ஜெனரல் சுந்தர்ஜியிடம் சொல்வதற்கு மருத்துவர்கள் சிறிது தயங்கினர். ஆனால் விரைவில் அவர் இந்த நோயைப் பற்றிய அனைத்தையும் இணையம் மூலம் கண்டுபிடித்தார். உயிர் காக்கும் கருவிகளைப் பயன்படுத்தி உயிர்வாழ அவர் விரும்பவில்லை. அவர் தனது மருத்துவர்களிடம் கருணைக் கொலை பற்றிய கேள்விகளைக் கேட்டார். மார்ச் 28ஆம் தேதிக்குள் அவர் உயிர்காக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குச் சென்றுவிட்டார். அந்த நிலையிலும்கூட அவர் தனது மனைவிக்கு 'ப்ளீஸ் லெட் மீ கோ' (அதாவது தயவுசெய்து என்னைப் போக விடு) என்று நான்கு வார்த்தைகள் கொண்ட ஒரு குறிப்பை எழுதினார். "வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை அவர் முழு சுயநினைவுடன் இருந்தார். தனது கண்கள் மூலம் என்னிடமும், மருத்துவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார். நான் அவருக்கு போக்ரான் அணு ஆயுத சோதனை பற்றிச் சொன்னேன். அந்த நிலையிலும் அவர் தினமும் மூன்று நாளிதழ்களைப் படிப்பார். பெரிய தொலைக்காட்சித் திரையில் கிரிக்கெட் பார்ப்பார்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். நோய் கண்டறியப்பட்ட பிறகு 'ஒரு வருடம் மற்றும் ஒரு வாரம்' அவர் உயிருடன் இருந்தார். கடந்த 1999 பிப்ரவரி 8ஆம் தேதி ஜெனரல் சுந்தர்ஜி இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7vnr5zlnnzo
  6. 20 ஓவர் போட்டிகளில் கோலியின் 100 வது அரை சதம் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூரு பட மூலாதாரம்,GETTY IMAGES 20 நிமிடங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, முதல் நான்கு ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஐந்தாம் ஓவரில் ஒரு சிக்ஸும் அடுத்த பந்தில் ஒரு ஃபோரும் அடித்த ஜெய்ஸ்வால், பின்னர் நிதானத்தை கடைபிடித்தார். மறுபக்கம் மெதுவாக ஆடிய சஞ்சு சாம்சன், 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரியான் பராக், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 14வது ஓவர் வரை ஓவருக்கு ஒரு பவுண்டரி என தாக்கமின்றி ஆடினார். அதே ஓவரிலேயே ரியான் பராக் தனது விக்கெட்டையும் இழந்தார். அடுத்த ஓவர்களில் ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடியை ஆரம்பித்து, ஹேசில்வுட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 75 ரன்களில் வெளியேறினார். அப்போது 16 ஓவர்களில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். அப்போதும் துருவ் ஜுரெல் அதிரடியாக ஆடவில்லை என்றாலும், மற்ற ஆட்டக்காரர்களுக்கு ஸ்டிரைக் மாற்றி முக்கிய பங்கு வகித்தார். ரன் வேகம் தேவைப்படும் நேரத்தில் ஹெட்மெயர் களத்தில் வந்து, துருவ் ஜுரெலுடன் சேர்ந்து ரன்களை விரைவாக குவிக்க முயன்றார். 17வது ஓவரில் சிக்ஸ் அடித்த துருவ், 19வது ஓவரில் ஒரு சிக்ஸும் ஒரு ஃபோரும் அடித்து கடைசி கட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினார். இரண்டு சிக்ஸும், இரண்டு ஃபோரும் அடித்து, 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்பேக்ட் பிளேயராக களத்தில் இறங்கிய ஹெட்மெயர் , தனது முதல் பந்திலேயே ஃபோர் அடித்து அசத்தினார். பெங்களூரு பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஹேசில்வுட், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடியுடன் தொடங்கிய பெங்களூரு 174 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி மிகச் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஃபோர் அடித்த பில் சால்ட், நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்தார். பின்னர் ஆர்ச்சரின் மூன்றாவது ஓவரிலும் ஒரு ஃபோர் மற்றும் சிக்ஸர் அடித்து தனது அதிரடியை தொடர்ந்தார். மறுபக்கம் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதமாக ரன்கள் சேர்க்கும் பணியை கோலி நிதானமாக செய்தார். ஐந்தாவது மற்றும் ஆறாவது ஓவரிலும் பில் சால்ட் தனது அதிரடியை காட்டினார். ஃபோர் மற்றும் சிக்ஸரை தொடர்ச்சியாக விளாசினார். இந்த ஜோடியை பிரிக்க நினைத்த ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தும் தோல்வியைச் சந்தித்தனர். ஒன்பதாவது ஓவரில் கார்த்திகேய சிங் பந்துவீச்சில், பில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 33 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அவரது கேட்ச் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கையில் பட்டது. அடுத்து களம் இறங்கிய தேவ் தத் படிக்கல், பத்தாவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் 11வது ஓவரில் எந்தவொரு பவுண்டரியும் எடுக்கவில்லை. இந்நிலையில் விராட் கோலி தனது அதிரடியை தொடங்கி ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கினார். சிக்ஸர், ஃபோர் என அதிரடியாக விளாசிய அவரை கட்டுப்படுத்த ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் முடியாமல் தவித்தனர். ஜோப்ரா ஆர்ச்சர், ஹசரங்கா, தீக்ஷனா என பல மாற்றங்களைச் செய்தும், கேப்டன் சாம்சனுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை. கோலியுடன் தேவ் தத் படிக்கலும் அதிரடியை தொடர்ந்து 17.3 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து பெங்களூரு அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 62 ரன்கள் மற்றும் தேவ் தத் படிக்கல் 40 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற கோலியின் இந்த அரைச்சதம், டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 100 வது அரைச்சதமாகும். இந்த வெற்றியின் மூலம், பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5rw2ydwe7o
  7. Published By: DIGITAL DESK 2 13 APR, 2025 | 02:28 PM சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புத்தாண்டு காலங்களில் விபத்துக்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் பெரும்பாலும் சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே இது தொடர்பில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மது போதையில் பிள்ளைகளுடன் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211961
  8. ஐபோன்கள் விலை 3 மடங்காக உயரும் ஆபத்து நீங்கியது - டிரம்ப் அறிவிப்பால் கிடைத்த நிம்மதி பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மடலின் ஹால்பர்ட் பதவி, பிபிசி 13 ஏப்ரல் 2025, 13:23 GMT அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம், பரஸ்பர வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த விலக்கு 125% வரி விதிக்கப்பட்ட சீன இறக்குமதிகளுக்கும் பொருந்தும். பெரும்பாலான நாடுகளுக்கு டிரம்ப் விதித்த 10% இறக்குமதி வரியிலிருந்தும், சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட அதிகளவிலான வரியிலிருந்தும் இந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லைக் காவல் ஏஜென்சியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில் இருந்து முதல் தளர்வை இது குறிக்கிறது. இதனை "முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு" என வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சனிக்கிழமை இரவு மியாமிக்கு செல்லும் போது, விலக்கு குறித்த கூடுதல் தகவல்களை அடுத்த வார தொடக்கத்தில் தருவதாக டிரம்ப் கூறினார். ஸ்மார்ட்போன்கள், கணினிகள் போன்ற பெரும்பாலான மின்னணு பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலை பல மடங்கு உயரலாம் என அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலையடைந்த சூழலில் இந்த முடிவு வெளியானது. கடந்த ஏப்ரல் 5 முதல் பொருந்தும் இந்த வரி விலக்கில், செமிகண்டக்டர்கள், சோலார் செல்கள் மற்றும் மெமரி கார்டுகள் ஆகியவையும் அடங்கும். "தொழில்நுட்ப முதலீட்டாளர்களின் கனவு நனவாகியுள்ளது" என வெட்பஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான உலகளாவிய தலைவரான டான் ஐவ்ஸ், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சீன இறக்குமதி வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிப்களுக்கு விலக்கு அளித்திருப்பது, மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம்" என்றும் அவர் கூறினார். ஆப்பிள், என்விடியா, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், தொழில்நுட்பத் துறையும் இந்த வார இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களது உற்பத்தியை அமெரிக்காவுக்கு நகர்த்தும் நிறுவனங்களுக்கு போதுமான நேரத்தை வழங்க இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. "செமிகண்டக்டர்கள், சிப்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் போன்ற முக்கியமான தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்கா சீனாவை நம்பியிருக்க கூடாது" என்பதை அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். "அதிபரின் வழிகாட்டுதலின்படி, இந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அமெரிக்காவுக்கு நகர்த்த வேகமாக பணியாற்றி வருகின்றன" என்றும் அவர் கூறினார். அமெரிக்கா - இரான் அணுசக்தி பேச்சுவார்த்தையின் வெற்றி, தோல்வி இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?9 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தனது புளோரிடா வீட்டில் வார இறுதியை கழித்த டிரம்ப், சீனாவிற்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள் குறித்து "தான் கவலைப்படவில்லை" என வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் கூறினார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தனக்கு உள்ள உறவைப் பற்றி பெருமையாக பேசிய டிரம்ப், "அதிலிருந்து சாதகமான ஒரு விஷயம் வரும் என்று நினைக்கிறேன்" என்றார். ஃபென்டனில் தொடர்பாக சீனாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 20% வரிகள் இந்த மின்னணு பொருட்களுக்கு பொருந்தும் என, வெள்ளை மாளிகையின் கொள்கைப் பிரிவின் துணை மூத்த பணியாளரான ஸ்டீபன் மில்லர், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வரி செலவுகள் பயனாளர்களுக்கு மாற்றப்படுமானால், அமெரிக்காவில் ஐபோன் விலைகள் மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன. அமெரிக்கா, ஐபோனுக்கான முக்கிய சந்தையாகும். மேலும், கடந்த ஆண்டு ஆப்பிள் விற்பனை செய்த ஐபோன்களில் பாதி அமெரிக்காவில் விற்கப்பட்டதாக கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களில் 80% சீனாவில் தயாரிக்கப்பட்டவை மற்றும் மீதமுள்ள 20% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை எனவும் அது கூறுகிறது. தனது சக தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான சாம்சங் போல, சீனாவை அதிகம் நம்பாமல் தனது உற்பத்தியை பரவலாக்க ஆப்பிள் முயற்சிக்கிறது. கூடுதல் உற்பத்தி மையங்களுக்கான போட்டியில் இந்தியாவும் வியட்நாமும் முன்னணியில் உள்ளன. வரி அமலுக்கு பிறகு, இந்தியாவில் உற்பத்தியை விரைவுபடுத்தவும் அதிகரிக்கவும் ஆப்பிள் சமீப நாட்களில் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. டிரம்ப், இந்த வாரம் உலகின் பல நாடுகளுக்கு கடுமையான வரிகளை அமல்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், அதிக வரிக்கு உள்ளான நாடுகளுக்கு வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தும் என்று கடந்த புதன்கிழமை டிரம்ப் அறிவித்தார். ஆனால் இது சீனாவுக்கு பொருந்தாது. அந்த நாட்டுக்கு எதிராக அவர் வரியை 145% ஆக உயர்த்தினார். சீனாவால் எதிர்வரி விதிக்கப்பட்டதால் அதற்கான வரியை உயர்த்தியதாகவும், மற்ற நாடுகள் எதிர்வரி விதிக்கவில்லை என்பதால் ஜூலை வரை அவர்கள் 10% அடிப்படை வரியை மட்டுமே சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy0k8pw0jjo
  9. கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
  10. 13 APR, 2025 | 07:36 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள விளையாட்டு பயிற்றுநர் ஞாயிற்றுக்கிழமை (13) பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். மேலதிக சட்டநடவடிக்கைக்காக சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். https://www.virakesari.lk/article/211965
  11. 13 APR, 2025 | 12:30 PM தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் 61 நாட்கள் வருடாந்த மீன்பிடி தடை அமுலுக்கு வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை (15) நள்ளிரவு முதல் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் குறித்த இடங்களில் மீன்பிடிக்க இயலாது. இது ஆயிரக் கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை பாதிக்கக்கூடும். 1983 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட இந்த பருவக்கால தடையானது, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை பாதுகாப்பாய் மாற்றுவதற்கும் முட்டையிடும் காலத்தில் மீன் வளங்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மீன்பிடித் தடை அமுல் காலத்தில் ராமேஷ்வரத்தில் மட்டும் சுமார் 700 இற்கும் அதிகமான இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் நங்கூரமிடப்படும். பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, சோலியக்குடி, மூக்கையர் போன்ற பகுதிகள் உட்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் நிறுத்தப்படும். இந்தத் தடைக் காலத்தில் மீனவர்கள் பொதுவாக தங்கள் படகுகளை பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்காக கரைக்கு கொண்டு வருவார்கள். இப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தற்காலிகமாக அரபிக் கடல்களில் மீன்பிடிப்பதற்காக கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இக் காலகட்டத்தில் நாட்டுப் படகுகள், சிறிய அளவில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/211951
  12. பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,2024 இல் தானியங்கி கேமராவால் காட்டில் எடுக்கப்பட்ட படம் கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி முண்டோ 13 ஏப்ரல் 2025, 08:55 GMT பழங்குடி மக்களிடம் பேசாமலும், அவர்களை நேரில் பார்க்காமலும் அவர்களை பற்றி அறிந்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், அமேசானில் இருக்கும் அந்த பழங்குடியின மக்களைத் தொடர்புகொள்வது சாத்தியமல்ல. பிரேசிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ரொண்டோனியா மாகாணத்தில் பொலிவியா எல்லைக்கு அருகே வாழும் ஒரு பழங்குடி குழுவின் படத்தைப் பெறுவதற்காக, தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை நிபுணர்கள் பயன்படுத்தினர். அந்த பழங்குடி இன மக்கள் மாசகோ என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரியாது. மாசகோ என்ற பெயர் அவர்களின் நிலத்தில் பாயும் ஆற்றின் பெயரிலிருந்து வந்தது. "மாசகோ பழங்குடி பிரதேசம், தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட முதல் பழங்குடி பிரதேசமாகும்," என்று தேசிய பழங்குடி மக்கள் அறக்கட்டளையின் (ஃபுனாய்) பிரதேச பாதுகாப்பு இயக்குநர் ஜானெட் கார்வால்ஹோ பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். இந்த பிரேசிலிய அரசாங்க அமைப்பு பல ஆண்டுகளாக இந்த நிலங்களைப் பாதுகாக்கவும், அங்கு வாழும் மக்கள் தொடர்பு கொள்ளப்படுவதைத் தடுக்கவும் பணியாற்றி வருகிறது. அந்தப் பகுதியில் ஃபுனாய் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அல்டெய்ர் அல்கேயர், 30 ஆண்டுகளாக அந்த பணிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார். வெளியுலகத் தொடர்பில்லாமல் அமேசான் காடுகளில் வாழும் அந்த பழங்குடி சமூகத்தின் முதல் தோற்றத்தை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்தினாலும், "அவர்கள் யார் என்பதை இன்னும் எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. இன்னும் நிறைய மர்மங்கள் உள்ளன," என்று என்று அல்கேயர், தி கார்டியன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். பிப்ரவரி 2024 இல் எடுக்கப்பட்ட அந்தப் படங்களையும், மாசகோ எனும் அந்த பழங்குடி இனம் தங்களது தற்காலிக குடியிருப்புகளை முற்றிலுமாக கைவிட்ட போது எடுக்கப்பட்ட பிற படங்களையும் ஃபுனாய் அமைப்பு பிபிசி முண்டோவுடன் பகிர்ந்து கொண்டது. இந்தப் புகைப்படங்களைப் பெறவும், இந்தச் சமூகத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் செயற்கைக்கோள் படங்களையும் நிபுணர்கள் நம்பியுள்ளனர். யாரையும் நெருங்க விடாத இந்தியாவின் சென்டினல் தீவு பழங்குடிகளை பார்க்க சென்ற அமெரிக்கர் என்ன ஆனார்?11 ஏப்ரல் 2025 கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 "200க்கும் மேற்பட்டோர் வாழ்ந்திருக்கலாம்" பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,இந்த படத்தில், 2024ல், ஃபுனாய் உறுப்பினர்கள் இந்த பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் விட்டுச் சென்ற ஒரு கத்தியை நீங்கள் காணலாம் Evergreen: Saving Big Forests to Save the Planet என்ற புத்தகத்தின் இணை ஆசிரியரான ஜான் ரீட் மற்றும் பிரேசிலிய செய்தித்தாள் ஓ குளோபோவின் ஆசிரியரான டேனியல் பயாசெட்டோ ஆகியோர் இணைந்து தி கார்டியனில் வெளியான கட்டுரையை எழுதியுள்ளனர். ஆய்வின் மூலம் கிடைத்துள்ள புதிய படங்கள் வெளியுலகத் தொடர்பில்லாத பிரேசில் பகுதி பழங்குடியின மக்கள், நன்றாக வாழ்ந்து வருவதை வெளிக்காட்டுகின்றன. ஆனால், அதே சமயம் அதில் சில சவால்களும் உள்ளன. முன்னதாக, "அமைதியான முறையில் அந்த பழங்குடி மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியது" என்பதை 1987 ஆம் ஆண்டு ஃபுனாய் நிபுணர்கள் கண்டறிந்தனர். பிரேசிலில் தனிமைப்படுத்தப்பட்ட 28 பழங்குடி மக்களில் மாசகோ இன மக்கள் குழுவும் உள்ளனர். "இந்த கிராமத்தின் சரியான மக்கள் தொகை குறித்த தரவு எங்களிடம் இல்லை, ஆனால் அவர்கள் விட்டுச் செல்லும் தடயங்கள், குடியிருப்புகளின் அளவு மற்றும் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அப்பகுதியின் மக்கள் தொகை 220 முதல் 270 வரை இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்." 1990களின் முற்பகுதியில், அல்கேயர் 100 முதல் 200 பேர் வரை இருந்ததாக மதிப்பிட்டார். கார்வால்ஹோவின் கூற்றுப்படி, அந்த பழங்குடி மக்கள் மாசகோ பூர்வீக நிலத்தின் முழு நிலப்பரப்பிலும் காணப்படுகின்றனர். இது தோராயமாக 421,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. "அவர்கள் தாங்கள் வாழும் இடத்தை, மாசகோ பூர்வீக நிலத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ரியோ பிராங்கோ பூர்வீக நிலத்தின் ஒரு பகுதி (சுமார் நான்கில் ஒரு பகுதி) வரை விரிவுபடுத்துகிறார்கள்." ஆண் ஈக்கள் இணையை கவர இதையும் செய்யுமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்6 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 தானியங்கி கேமரா பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,2024 இல் கேமராவால் படம் பிடிக்கப்பட்ட பழங்குடி மக்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர் அந்த மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது ஃபுனாயின் கொள்கை அல்ல என்பதால், அவர்கள் நடமாடும் முக்கிய இடங்களில் தானியங்கி கேமராக்களை அமைக்க முடிவு செய்தனர். எனவே, 2019 ஆம் ஆண்டில், அவர்கள் ஒரு கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்ட பின்னர், தங்களிடம் இல்லாத ஒன்றைப் பெறும் நோக்கத்துடன், அதாவது அந்த பகுதியின் புகைப்படத்தைப் பதிவு செய்ய, ஒரு கேமராவை "அப்பகுதியின் மையத்தை நோக்கி" வைத்தனர். இறுதியில், அவர்களது முயற்சி வெற்றியடைந்தது. ஆனால், அப்பகுதியை புகைப்படம் எடுப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள் அல்ல. அந்தப் பகுதியில் அவர்கள் கடந்து சென்ற பிறகு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்பினர். 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள், 2021 ஜனவரியில் அந்த பகுதியில் நிறுவப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டவை என்று கார்வால்ஹோ கூறுகிறார். 2021ஆம் ஆண்டு புனாய் குழு ஒரு பாதையில் விட்டுச் சென்ற கோடரிகள் மற்றும் கத்திகளை, அந்தப் பழங்குடியின மக்கள் எடுத்து சென்றனர். இந்த கேமரா ஒன்பது பழங்குடி மக்களைக் கொண்ட ஒரு குழுவை பதிவு செய்தது. அவர்கள் அனைவரும், சுமார் 20 முதல் 40 வயதுகளில் உள்ள ஆண்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். பட மூலாதாரம்,CGIIRC/FUNAI "வானிலை சாதகமாக இல்லாததால், அந்த கேமராவால் தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை என்றாலும், அந்த பழங்குடி மக்களின் உடலமைப்பு, நடத்தை மற்றும் பிற அம்சங்களைப் பதிவு செய்வதற்கான முக்கிய ஆவணமாக இந்தப் படம் இருந்தது." அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பழங்குடி மக்கள், கூர்மையான முனையுடன் கூடிய மரத் துண்டுகள் போன்ற சில "கூர்மையான பொருட்களை" விட்டுச் சென்றனர். ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஒரு வகை கால்ட்ராப் (கூர்மையான முனைகளைக் கொண்ட கருவி) என்று அடையாளம் கண்டுள்ளனர். அவை தரையில் ஊன்றப்பட்டிருக்கும். அவற்றின் கூரிய நுனிகள் வெளிப்புறமாக இருக்கும். மானுடவியலாளர்கள் கூறியபடி, அவர்கள் அந்த கூர்மையான மரத்துண்டுகளை பாதைகள், மரக்கட்டை, வேர்களின் பின்புறம் அல்லது பள்ளத்தாக்கு போன்ற முக்கியமான இடங்களில் வைத்துள்ளார்கள் . "இத்தகைய இடங்களில் நமது உடலின் எடை பாதத்தில் அழுத்தும். அவை சில சமயங்களில் இலைகள் அல்லது புல்லால் மறைக்கப்பட்டிருக்கும்," என்று நிபுணர் கூறுகிறார். பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,"காலணிகள் அணிந்திருந்தாலும் கூட, அந்த கூர்மையான பொருட்கள் காலில் துளையிடுவதால் காயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது தீவிரமான காயத்தைக் ஏற்படுத்தக்கூடும்." "காலணிகள் அணிந்திருந்தாலும் கூட, அந்த கூர்மையான பொருட்கள் காலில் துளையிடுவதால் காயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது தீவிரமான காயத்தை ஏற்படுத்தக் கூடும்." 1980கள் மற்றும் 1990களில், இந்தப் பாதுகாப்பு மண்டலத்துக்குள் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் இருந்தது என்று நிபுணர் விளக்குகிறார். "ஃபுனாய், பிரேசிலிய சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள் நிறுவனம், கூட்டாட்சி காவல்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் மரம் வெட்டும் டிராக்டர்கள் போன்ற பல வாகனங்களின் டயர்களை, பழங்குடி மக்களின் கருவிகள் துளைத்து பாதிப்பை ஏற்படுத்தின." 2024 ஆம் ஆண்டில், கேமராக்களை அமைத்த பிறகு, ஃபுனாய் குழு உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து விலகி, காப்பகத்துக்குள் நுழைந்தது. அந்தப் பகுதிக்குள் பூர்வீகக் குடியேற்றம் "திட்டமிடப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையாக இருந்தது" என்று அல்கேயர் நம்புகிறார். நீங்கள் குடிக்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?4 ஏப்ரல் 2025 பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 ஆய்வாளர்களுக்கு காத்திருந்த ஆச்சர்யம் என்ன? பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,மாசகோ பழங்குடிகள் உருவாக்கும் தற்காலிக வீடுகள் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிப்பில் ஈடுபடும் மக்களுக்கேற்ப வீடுகள் அமைந்துள்ளன என்று கார்வால்ஹோ சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "அந்த குழுவைச் சேர்ந்த பெரும்பாலான மக்களின் நடமாட்டம், பருவநிலை மாற்றங்களான வறட்சி மற்றும் மழை ஆகியவற்றுடனும், தாவரங்களின் வேறுபாடுகளுடனும், வயல்வெளிகள், சவன்னா புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளுக்கும் இடையே தொடர்புடையவை," என்று அவர் கூறினார். "அந்த வகையில், அவர்கள் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் முறையை உருவாக்குகிறார்கள். நாடோடி வாழ்க்கை முறைக்குள் தங்கள் குடியிருப்பு எல்லையை வரையறுக்கிறார்கள்." பழங்குடி மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சில அம்புகளின் நீளம் 3 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. அவர்களை ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று அதில் இருந்தது. "அம்பும் வில்லும் பெரிதாக இருப்பது புதிரான ஒன்று அல்ல. பொலிவியாவின் சிரியோனோ போன்ற மற்ற சமூகங்களும் இதேபோன்ற வில்-அம்புகளை பயன்படுத்துகிறார்கள்". ஆனால், "அவர்கள் எப்படி நீண்ட வில் மற்றும் அம்புகளை காடு மற்றும் சவன்னாக்களின் நடுவில் கையாள்கிறார்கள்? என்பது "ஒருபோதும் மறக்க முடியாத கேள்வி" என்று மானுடவியலாளர் விளக்குகிறார். பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,பாபாசு பனை அமேசானின் காடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றது. பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,பழங்குடி மக்களால் கைவிடப்பட்ட முகாம்களில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சில அம்புகளின் நீளம் 3 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,"அம்பும் வில்லும் பெரிதாக இருப்பது ஒரு மர்மம் அல்ல. பொலிவியாவின் சிரியோனோ போன்ற மற்ற சமூகங்களும் இதேபோன்ற வில், அம்பை பயன்படுத்துகிறார்கள்" "அவர்கள் குரங்குகள், பன்றி போன்ற விலங்குகள், மான்கள் உள்ளிட்ட பல விலங்குகளைக் கொல்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவற்றைப் பிற வழிகளில் கொல்வது எளிதல்ல," என்று அவர் கூறினார். தி கார்டியனில் வெளியான கட்டுரையில், அம்பை எவ்வாறு எய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு 'தெரியாது' என்று அல்கேயர் குறிப்பிட்டார். "மற்ற பழங்குடி மக்களும் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்கள் சிரித்து, இது சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள். ஒருவேளை படுத்துக்கொண்டே அதனைப் பயன்படுத்தலாம் என கருதுகிறார்கள். ஆனால், இன்று வரை இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புதிருக்கு அவர்கள் விடை கண்டுபிடிக்கவில்லை " என்று அவர் தெரிவித்தார். பழங்குடிகளை தொடர்பு கொள்ளாமல் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் பட மூலாதாரம்,CGIIRC/FUNAI "தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக வரையறுக்கப்பட்ட முதல் பூர்வீக பிரதேசம் மாசகோ பூர்வீக பிரதேசமாகும்" என்று கார்வால்ஹோ குறிப்பிடுகிறார். "ஆனால் அதேநேரத்தில், மற்ற பழங்குடி மக்களும் அந்த பாதுகாப்பைப் பெற்றனர், பின்னர் அவர்களுக்காகப் பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டன." "ஆனால் அந்த மக்களுடன் பேச முடியாத சூழலில், அவர்களின் முழு வரலாற்று பின்னணியையும், அவர்கள் வாழ்விடத்தில் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வது தான், இந்த மக்களுக்கான பிரதேசத்தை வரையறுப்பதில் உள்ள சவால்" சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மற்றவர்களிடம் இருந்து, தடயங்களையும் தகவல்களையும் சேகரிக்க பல முறை காட்டுக்குள் ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன, இதன்மூலம் அந்தப் பிரதேசம் வரையறுக்கப்படுகிறது." பட மூலாதாரம்,CGIIRC/FUNAI "தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் சுயாட்சியை, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டிய அவசியமின்றி, அவர்களின் வாழ்க்கை முறைகளில் எந்தவித தலையீடும் இல்லாமல் உறுதி செய்வது அவசியம்" என்று புனாய் தெரிவிக்கிறது. நிபுணரின் கூற்றுப்படி, மாசகோ சமூகம் அமைந்துள்ள பிரதேசத்தில், "மரம் வெட்டுதல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் போன்ற எந்த மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்களும்" தற்போது இல்லை என அறியப்படுகின்றது. "அந்தப் பிரதேசத்தில் நிரந்தரமாக இருக்கும் ஃபுனாய் குழு, எல்லைப் பகுதியில் கூட அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் திறன் கொண்டது." இந்த அமைப்புக்கு, முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. இவை, பல்வேறு நோக்கங்களுக்கு இடையில், தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்களின் உடல்நலமும், சமூக வாழ்க்கையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கான கவலைகளும் உள்ளன, ஏனெனில் "இந்த பிரதேசத்தின் இயற்கை வளங்களை முழுமையாக பாதுகாப்பது தான், இந்த மக்களின் உயிர்வாழ்வுக்கு அவசியமானது" என்று ஃபுனாய் வெளியிட்ட அறிக்கையில் அல்கேயர் குறிப்பிடுகிறார். இதுபோன்ற பழங்குடி சமூக மக்கள் வேட்டையாடவும், அவர்கள் உணவு சேகரிப்பதையும் எளிதாக்குவது தான், கத்திகள் மற்றும் கோடரிகள் போன்ற உலோக கருவிகளை விட்டுச்செல்வதன் நோக்கமாக உள்ளது. இதன் மூலம், அவர்கள் அதேபோன்ற பொருட்களைக் கண்டுபிடிக்க தங்கள் நிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த முறையால் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டதா என்று நான் கார்வால்ஹோவிடம் கேட்டேன். "இந்த கருவிகளை மக்கள் எளிதாகப் பெற இது ஒரு வகையில் உதவியது. இது எல்லோருக்கும் பயனளிக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த சமூக மக்கள் தங்களது நில எல்லைக்குச் செல்வதையோ அல்லது கடப்பதையோ இது தடுக்கவில்லை என்பதை நாங்கள் உறுதியாக சொல்கிறோம். அதற்குப் பிற காரணங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு." ஈரோடு மலையாளிகள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்திற்கு தீர்வு என்ன? 'மரத்திற்கு பின்னே யானை நின்றாலும் தெரியாது' - இந்த பெண்களின் ஆபத்தான காட்டுவழிப் பயணம் யாருக்காக? மூங்கில் பழங்குடிகளின் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருப்பது எப்படி? எளிதில் மூப்படையாத சீமேநே பழங்குடிகள் பற்றி தெரியுமா? அவர்களின் வாழ்க்கை முறை என்ன? பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,மரங்களில் உள்ள விலங்குகளின் கூடுகள் ரீட் மற்றும் பியாசெட்டோ விளக்குகையில், "ஒரு காலத்தில் மக்கள் தொடர்புகொள்வதற்காக இவை பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது அவை தொடர்பை தவிர்க்க பயன்படுத்தப்படுகின்றன," என்று கூறுகின்றனர். "மற்ற பழங்குடி பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் இந்த நடைமுறை, பண்ணைகளுக்கோ அல்லது மரம் வெட்டும் முகாம்களுக்கோ மக்கள் கருவிகளை எடுக்கச் செல்வதைத் தடுக்கிறது," என்று அவர்கள் குறிப்பிட்டனர். பழங்குடி மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையைப் பாதிக்காமல் எடுக்கப்பட்ட சமீபத்திய படங்கள் மற்றும் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட தகவல்கள், இந்த பழங்குடி சமூகம் எவ்வாறு வாழ்கிறது மற்றும் வளர்கிறது என்பதை நிபுணர்கள் தொடர்ந்து அறிய உதவுகின்றன. இந்த சமூகம் வெளியுலகத் தொடர்பு இல்லாமல், தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? "இந்த மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான இந்த பிரதேசத்தின் வளங்களை பாதுகாக்க முடியும் என பிரேசில் அரசாங்கம் உறுதியளிக்கும் வரை, நான் சற்று நம்பிக்கையுடன் உணர்கிறேன்," என்று மானுடவியலாளர் பதிலளிக்கிறார். "ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும் நடைமுறைகள் மாறுகின்றன, ஒரு கட்டத்தில் இந்த மக்கள் தொடர்பு கொள்ள விரும்பலாம். அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6d12pdzx3o
  13. வடக்கில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு - வணிகர் கழகம் 13 APR, 2025 | 10:09 AM மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார். ஜெயசேகரன் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகிய 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் அமையவுள்ளது. விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும். இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், உள்ளக வீதி வசதிகள், மின்சார வசதிகள் என்பன கிடைக்க வசதி செய்யப்படும். இதற்கு மேலதிகமாக முதலீட்டு ஊக்குவிப்பாக முதலீட்டுக் கழிவுரிமை 200 வீதம் வழங்கப்படும். இது ஏனைய பகுதிகளில் 100 வீதமாக உள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் 30 வருட குத்தகைக்கு வழங்கப்படும். இது பொதுவான நடைமுறை. தேவையை பொறுத்து இதனை நீடித்துக் கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு தேவையான அனுமதிகளை முதலீட்டு சபை ஒழுங்கமைத்து வழங்கும். தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், கட்டட நிர்மாணத்திற்கு தேவையான பொருட்கள் போன்றவற்றிற்கு இறக்குமதி தீர்வை விலக்களிக்கப்படும். ஏற்றுமதி நோக்கிலான தொழில் முயற்சிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை தீர்வை இன்றி இறக்குமதி செய்யலாம். எனவே மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை இந்த 3 வலயங்களிலும் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறோம். இதன் மூலம் வடமாகாணம் பொருளாதார ரீதியாக முன்னேறவும், தேசிய ரீதியாக எமது உற்பத்தியின் பங்களிப்பை அதிகரித்து கொள்ள முடிவதுடன் வடமாகாணத்தில் அதிகளவானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். மேற்படி பிரதேசங்களில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் தமது விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு சமர்ப்பிக்க முடியும். ஆகவே இந்த வருட இறுதியில் இவ் மூன்று வலயங்களும் உருவாக இருப்பதனால் விரைவாக விண்ணப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் முதலீட்டாளர்களை கோருகின்றது. இது தொடர்பாக மேலதிக விபரங்களை 021 222 1336, +9477 777 6606, மின்னஞ்சல் - jeyamanonr@boi.lk, முகவரி - சிரேஸ்ட பிரதிப்பணிப்பாளர், இலங்கை முதலீட்டு சபை, வடமாகாண காரியாலயம், NHDA கட்டடிம், கண்டி வீதி, யாழ்ப்பாணம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும். இது பொருளாதார ரீதியாக கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம். இதனை முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெறுவதற்கு யாழ் வணிகர் கழகத்தை தொடர்புகொள்ளலாம்” என்றார். https://www.virakesari.lk/article/211939
  14. 13 APR, 2025 | 12:14 PM அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் பரஸ்பரம் வரி விதிப்பு மேற்கொண்டது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில், ட்ரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இலத்திரனியல் பொருட்களுக்கு வரி விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான இலத்திரனியல் கருவிகள், தரவு சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211953
  15. பட மூலாதாரம்,TWITTER/BLUE ORIGIN படக்குறிப்பு,நியூஷெப்பர்ட்-31 குழு கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 13 ஏப்ரல் 2025, 01:53 GMT பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்தப் பயணத்தை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் ஏப்ரல் 14ஆம் தேதி திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுவில், பாப் பாடகியான கேட்டி பெர்ரி, செய்தியாளர் கேல் கிங், சிவில் உரிமைகள் வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஆறாவது பெண்ணாக, இந்தக் குழுவை வழிநடத்தப் போகிறவரும் ஜெஃப் பெசோஸின் காதலியுமான லாரன் சான்செஸ் பயணிக்கவுள்ளார். இவர்கள் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை எல்லைக்கோடான கார்மன் கோட்டைக் கடந்து செல்வார்கள். விண்வெளிக்கு ஒரு சிறு பயணம் பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,ஏப்ரல் 14ஆம் தேதி ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்கள் நியூ ஷெப்பர்ட்-31 என இந்தப் பயணத் திட்டத்தில், ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் இந்த ஆறு பெண்களும் பயணிக்கப் போகிறார்கள். அதனுள் இருக்கும் விண்கலம் முற்றிலுமாக தானியங்கி முறையில் செயல்படக்கூடியது. அதாவது, விண்கலத்தை இயக்குவதற்கென அதனுள்ளே யாரும் இருக்க மாட்டார்கள். இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை அழைத்துச் செல்லும். இந்த பயணம் தோராயமாக 11 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியைக் கண்டு களித்த பிறகு பூமியை நோக்கிய பயணத்தை தொடங்குவார்கள். பாப் பாடகி கேட்டி பெர்ரியின் இசை சுற்றுப்பயணம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஏப்ரல் 14ஆம் தேதியன்றே இதைச் செய்து முடிக்க ப்ளூ ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவர்களை ஏற்றிச் செல்லப்போகும் நியூ ஷெப்பர்ட் ராக்கெட், ஏப்ரல் 14ஆம் தேதியன்று அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் உள்ள அந்த நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். விண்வெளியில் இருந்து இமயமலையை பார்த்த அனுபவம் பகிரும் சுனிதா வில்லியம்ஸ் மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது? விண்வெளியில் சாப்பிடுவது, குளிப்பது, கழிவுகளை அகற்றுவது எப்படி? விண்வெளியில் இருக்கும்போது பெண்கள் மாதவிடாயை எப்படி சமாளிக்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கார்மன் கோட்டை அடைந்ததும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற கேப்சூல் (சித்தரிப்புப் படம்) லாரன் சான்செஸ் கடந்த 2023ஆம் ஆண்டு வோக் பத்திரிகை நேர்காணலில், முழுமையாகப் பெண்கள் மட்டுமே விண்வெளிக்குப் பயணிக்கும் இத்தகைய கனவுப் பயணம் குறித்து விவரித்திருந்தார். "இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கார்மன் எல்லைக்கோடு என்றால் என்ன? கார்மன் கோடு என்பது ஒரு கற்பனையான எல்லைக்கோடு. இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, பூமியில் இருந்து பயணித்தால் விண்வெளியை அடைந்துவிட்டதாகக் கருதப்படும் இடம் எனப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும் இந்தப் புள்ளி கருதப்படுகிறது. கார்மன் கோடு, விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே ஒரு வேறுபாட்டைக் குறிப்பதற்காக, ஃபெடரேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் என்ற அமைப்பால் தீர்மானிக்கப்பட்டது. இந்த உயரத்தை அடைவது, விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் கருதப்படுகிறது. "சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி, இதுதான் விண்வெளி என்று ஒரு வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கார்மன் எல்லைக்கோடு," என்கிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,ஆறு பெண்களும் விண்வெளியில் வரையறுக்கப்பட்டுள்ள கார்மன் எல்லைக் கோட்டுக்கு சற்று மேலே சென்றுவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள். அவரது கூற்றுப்படி, கார்மன் எல்லைக்கோடு எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் 100 கி.மீ என்ற உயரத்துக்குக் கீழேதான் 99.9% வரையிலான வளிமண்டலம் உள்ளது. ஆகையால்தான் அதற்கு மேலே இருக்கும் பகுதி விண்வெளி என்று முடிவு செய்யப்பட்டது. இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் பயணிப்பவர்கள் "விண்வெளிக்குச் சென்றவர்கள்" என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அதனால்தான் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களும் இந்தக் கோட்டுக்கு மேலே சென்று, அதன் பயணிகளுக்கு உண்மையான விண்வெளி அனுபவத்தை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 'விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே நோக்கம்' விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "இத்தகைய விண்வெளிச் சுற்றுலா பயணங்களை இந்த நிறுவனம் பலமுறை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பயணம் குறித்துக் கேள்விப்பட்டதும், சுனிதா வில்லியம்ஸ் சென்றதைப் போன்றதொரு பயணமோ எனக் கருதிவிடக்கூடாது," என்கிறார் அவர். சுனிதா வில்லியம்ஸ் சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய விண்வெளிப் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனால், இது அப்படியான பயணமல்ல என்கிறார் வெங்கடேஸ்வரன். ஆண் ஈக்கள் இணையை கவர இதையும் செய்யுமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்6 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விண்வெளி சுற்றுலா துறையை பிரபலப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் மட்டுமே செல்லும் இந்த விண்வெளிப் பயணம் குறித்து விளக்கிய அவர், "விண்வெளி தொடங்கும் இடமான கார்மன் எல்லைக் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி விடுவார்கள்," என்றார். அதுகுறித்து விரிவாக விளக்கிய வெங்கடேஸ்வரன், "இந்தப் பயணத்தின் மொத்த நேரமே சுமார் 11 நிமிடங்கள்தான் இருக்கும். ஏழு நிமிடங்களுக்கு ராக்கெட்டில் பயணிப்பார்கள். சுமார் 48 கி.மீ வரை அதில் பயணித்த பிறகு, அங்கிருந்து ஒரு கல் மேல்நோக்கி வீசப்படுவதைப் போல, ராக்கெட்டில் இருந்து பயணிகள் இருக்கும் விண்கலம் விண்வெளி நோக்கி வீசப்படும். ராக்கெட்டில் இருந்து வீசப்படும் விண்கலம், கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே வரை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்," என்று விவரித்தார். விண்வெளி சுற்றுலாத் துறைக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதும் இதன்மூலம் ஒரு புதிய தொழிலை உருவாக்கலாம் என்பதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் அவர். அதே நேரத்தில், இத்தகைய முயற்சி "பெண்கள் முன்னேற்றம் மீதான கவனத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கு ஓர் உத்வேகத்தையும்" ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். மனிதனை போல பேசி பிரமிக்க வைக்கும் காகம் - வியப்பூட்டும் காணொளி4 ஏப்ரல் 2025 பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்களின் பின்னணி என்ன? இந்தப் பயணத்தில் விண்வெளி எல்லைக் கோடான கார்மன் கோட்டுக்குச் செல்லப் போகும் ஆறு பெண்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? லாரன் சான்செஸ் பட மூலாதாரம்,LAUREN SÁNCHEZ/IG படக்குறிப்பு,லாரன் சான்செஸ் எம்மி விருது பெற்ற பத்திரிகையாளரான இவர், நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான படைப்புகளைக் கொண்ட எழுத்தாளர், விமானி, பெசோஸ் எர்த் ஃபண்ட் அமைப்பின் துணைத் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உரிமம் பெற்ற ஹெலிகாப்டர் விமானியான சான்செஸ் கடந்த 2016ஆம் ஆண்டில் ப்ளாக் ஆப்ஸ் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை நிறுவினார். இது, முழுவதும் பெண்களால் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்படும் முதல் வான் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். ஹெலிகாப்டர் விமானியாகவும் விமானப் பணி சார்ந்த தொழிலதிபராகவும் அவர் செய்த பணிக்காக, 2024இல் எல்லிங் ஹால்வர்சன் வெர்டிகல் ஃப்ளைட் ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருதைப் பெற்றார். ஆயிஷா போவே பட மூலாதாரம்,AISHA BOWE/IG படக்குறிப்பு,ஆயிஷா போவே ஆயிஷா போவே பஹாமாவை பூர்வீகமாகக் கொண்டவர். நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி மற்றும் தொழில்முனைவோரான ஆயிஷா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றை ஊக்குவிப்பவராகவும் இருக்கிறார். அமெரிக்காவின் வேகமாக வளர்ந்து வரும் தனியார் நிறுவனங்களின் பட்டியலான இங்க் 5000-இல் இரண்டு முறை இடம்பிடித்த பொறியியல் நிறுவனமான ஸ்டெம்போர்டின் (STEMBoard) தலைமை செயல் அதிகாரியாகவும் ஆயிஷா இருக்கிறார். மேலும், பத்து லட்சம் மாணவர்களுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப திறன்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்ட லிங்கோ (LINGO) என்ற நிறுவனத்தையும் இவர் நிறுவியுள்ளார். விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?2 ஏப்ரல் 2025 சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'ஜிப்லி' என்றால் என்ன? அது முதலில் எப்படி உருவானது?31 மார்ச் 2025 அமாண்டா இங்குயென் பட மூலாதாரம்,AMANDA NGUYỄN/IG படக்குறிப்பு,அமாண்டா இங்குயென் அமாண்டா, ஓர் உயிரி விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி. அவர் ஹார்வர்டில் பட்டம் பெற்றார். மேலும், ஹார்வர்ட் வான் இயற்பியல் மையம், எம்ஐடி, நாசா, சர்வதேச வானியல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். கடந்த 1981 முதல் 2011 வரை நாசா முன்னெடுத்த மறுபயன்பாட்டு விண்கலத் திட்டத்தின் கடைசி விண்வெளிப் பயணத் திட்டத்தில் அமாண்டா பணியாற்றியுள்ளார். அவர் கெப்லர் புறக்கோள் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதால் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டில் டைம் இதழின், ஆண்டின் சிறந்த பெண் என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார். கேல் கிங் பட மூலாதாரம்,GAYLE KING/IG படக்குறிப்பு,கேல் கிங் கேல் கிங் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளர். சிபிஎஸ் மார்னிங்ஸின் இணை தொகுப்பாளராகவும் ஓப்ரா டெய்லியின் ஆசிரியராகவும் இருக்கும் இவர் சிரியஸ்எக்ஸ்எம் வானொலியில் கேல் கிங் இன் தி ஹவுஸ் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். தனது பல்லாண்டுக்கால பத்திரிகை அனுபவத்தில் நேர்காணலில் அர்த்தமுள்ள உரையாடல்களை உருவாக்குவதில் திறமை படைத்தவராக கேல் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?20 மார்ச் 2025 வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?31 மார்ச் 2025 கேட்டி பெர்ரி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேட்டி பெர்ரி கேபிடல் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் அதிகம் விற்பனையாகும் பெண் கலைஞராக கேட்டி பெர்ரி அறியப்படுகிறார். பாப் பாடகியான இவர், 115 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட, அனைத்து காலகட்டத்திலும் அதிகமாக விற்பனையாகும் இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். உலகளாவிய பாப் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் கேட்டி, பல மனிதநேய நோக்கங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அதில், யுனிசெஃப் நல்லெண்ண தூதராக, ஒவ்வொரு குழந்தையின் சுகாதாரம், கல்வி, சமத்துவம், பாதுகாப்புக்கான உரிமையை உறுதி செய்வதற்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். கேரியன் ஃப்ளின் பட மூலாதாரம்,KERIANNE FLYNN/IG படக்குறிப்பு,கேரியன் ஃப்ளின் ஃபேஷன் மற்றும் மனித வளத்துறையில் சிறந்து விளங்கிய பிறகு, கேரியன் ஃப்ளின், கடந்த பத்து ஆண்டுகளாக தி ஆலன்-ஸ்டீவன்சன் பள்ளி, தி ஹை லைன், ஹட்சன் ரிவர் பார்க் ஆகியவற்றுடன் இணைந்து லாப நோக்கமற்ற தன்னார்வப் பணிகளைச் செய்து வருகிறார். கதை சொல்லலுக்கு இருக்கும் ஆற்றலின் மீது அதீத ஆர்வமுள்ள கேரியன், ஹாலிவுட்டில் பெண்களின் வரலாற்றை ஆராயும் திஸ் சேஞ்சஸ் எவ்ரிதிங்(2018), லில்லி லெட்பெட்டர் என்ற வழக்கறிஞர் குறித்தான லில்லி(2024) போன்ற சிந்தனையைத் தூண்டும் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25n4nw1zqo
  16. பயங்கரவாத தடைச்சட்ட விடயத்தில் அநுர அரசும் பல்டி - இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழுவிடம் தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை 12 APR, 2025 | 12:52 PM - ஆர்.ராம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்கும் விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தேர்தல்கள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி நிலைப்பாட்டையும் மாற்றியுள்ளது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே, இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவானது, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அரசாங்கம் நீக்கும் வரையில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை உடன் நிறுத்துவதற்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான கால எல்லை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவுக்கு வரவுள்ளநிலையில் அதனை நீட்டிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் வாரம் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அப்பின்னணியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் நிலவுகின்றது. தொழில்துறையும் மக்களும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் வரிச்சலுகைகள் அவசியமானவை என்பது பொதுப்படைய விடயமாகும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், இலங்கையில் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டமானது தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டம் தமிழர்களை இலக்கு வைத்து எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அதேபோன்று தான் ஜே.வி.பியையும் இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பயன்பாட்டில் பாதிப்புக்குள்ளான அனுபவம் ஆளும் தரப்பில் உள்ளவர்களுக்கும் நன்றாகவே உள்ளது. அவ்வாறான நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால், அவ்விதமான நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் முழுமையாக மாறியிருக்கின்றார்கள். தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை பல்வேறு விதமான காரணங்களுக்காக பயன்படுத்தும் நிலைமைகளே உள்ளன. எம்மைப் பொறுத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தினை கொண்டுவருவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த காலத்தில் இருந்த அத்தனை அரசுகளும் அதனை நீக்குவதாகவே கூறிவிட்டு இழுத்தடிப்புக்களைச் செய்து வந்திருந்தார்கள். அப்பின்னணியில் ஒரு கட்டத்தில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்தபோது பிரஸ்ஷல்சுக்குச் சென்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக உறுதியளித்துவிட்டு வந்திருந்தார். அதன்பின்னர் அவர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினை கொண்டுவருவதற்கு விளைந்தார். எனினும் அது கைகூடவில்லை. அதன்பின்னர் தீவிரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்தினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதுவும் நிறைவேறவில்லை. குறித்த இரண்டு சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி. எதிர்க்கட்சியில் இருந்தது. அச்சட்டமூலங்கள் பற்றி உரையாடுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டபோது அதில் பங்கேற்க முடியாது என்று ஜே.வி.பி.அறிவித்ததோடு பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவது தான் தமது நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டது. தமது ஆட்சியில் நீக்கப்படும் என்றும் கூறியது. எனினும், நாங்கள் நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டையையும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். அப்போது ஜே.வி.பியும் அதனை ஆதரித்துள்ளது. தற்போது, அந்த வாக்குறுதிகளையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதில் சட்டத்தினை இயற்றுவதற்கு தயாராகின்றது. அநுர அரசாங்கத்தின் திடீர் கொள்கை மாற்றத்துடனான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை வருகின்ற ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பை குழுவானது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடடினாக நீக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கோர வேண்டும் என்றார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்களில் ஒன்றான பி.ஆர்.எல்.எம்.இன் தலைவரும் கூட்டணியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டமானது, தற்போது வரையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டத்தினை நீக்குமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். ஆனால், ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை எமக்கும் வழங்குவார்கள். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச தரப்பினருக்கும் வழங்குவார்கள். ஆனால், அவர்கள் அந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது கிடையாது. பயங்கரவாத தடைச்சட்ட விடயத்தில் மட்டுமல்ல, பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்த நிலைமையே தற்போது வரையில்நீடிக்கின்றது. தற்போது ஆட்சிக்கு வந்தவர்களும் இந்தச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருந்தாலும் சில விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்த வேண்டியிருப்பதாக கூறுகின்றார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நாட்டில் காணப்படுகின்ற குற்றவியல் சட்டங்கள் இறைமையைப் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் போதுமானதாகவே உள்ளது. ஆகவே, பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி தான் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஏமாற்றும் தந்திரமாகும். ஆகவே தற்போதைய அரசாங்கமும் ஏமாற்றுச் செயற்பாட்டையே செய்கிறது,போலி வாக்குறுதியையே வழங்கியுள்ளது. எனவே பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரையில் ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை நீக்க வேண்டும். அதன் மூலமாகவே அரசாங்கத்தினை வழிக்குக் கொண்டுவர முடியும் என்றார். https://www.virakesari.lk/article/211885
  17. படக்குறிப்பு,ஜான் ஜெபராஜை கைது செய்த போலீஸார் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 9 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், 17 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் அவர் மீது, போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டிருந்தார். தனிப்படை போலீஸார் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க இருக்க விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதேநேரத்தில், ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர், உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் ஜான் ஜெபராஜை போக்சோ நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்போடு காவல்துறையினர் அழைத்து வந்தனர். யார் இந்த ஜான் ஜெபராஜ்? பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM படக்குறிப்பு,ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது ஜான் ஜெபராஜின் கிறிஸ்தவ மத இசை நிகழ்ச்சிகளுக்கு, பெரும் கூட்டம் கூடுவது வழக்கமாகவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களிலும் இவர் இசை ஊழிய நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தென்காசியை சேர்ந்த ஜான் ஜெபராஜ் (வயது 37), ஒரு கிறிஸ்தவ மத போதகர். தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, அவருடைய சொந்த ஊர் செங்கோட்டை. எஸ்எம்எஸ்எஸ் அரசுப்பள்ளியில் கடந்த 2005 வரை படித்த பின், சதர்ன் ஆசியா பைபிள் கல்லுாரியில் படித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெவிமினிஸ்ட்ரிஸ் என்ற மதபோதக அமைப்பை நிறுவி, அதனை நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்த ஜான் ஜெபராஜ், கிராஸ்கட் ரோட்டில் கிங்ஸ் ஜெனரேஷன் சர்ச் என்ற பெயரில் தனியாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை மற்றொரு பாஸ்டருடன் சேர்ந்து நடத்தி வந்துள்ளார். இலங்கையில் பள்ளி செல்லும் வயதில் 'தாயாகும்' சிறுமிகள் - காரணங்களும் தீர்வுகளும் என்ன? கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி? திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்ட பின் அதை மீறுவது சட்டப்படி குற்றமா? பெல்ஜியம்: உலகிலேயே முதன்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் ஓய்வூதியம் கடந்த ஆண்டிலிருந்து அந்த ஆலயமும் மூடப்பட்டுவிட்டதாக கிராஸ்கட் ரோட்டில் உள்ள அந்த கட்டடத்துக்கு அருகில் இருப்பவர்கள், பிபிசி தமிழிடம் தகவல் பகிர்ந்தனர். அதன்பின், தனியாக அரங்கங்களை எடுத்து ஜெபக்கூட்டம் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் ஜான் ஜெபராஜ் நடத்தி வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக, கிறிஸ்தவ பாடல்களுடன் அவர் வெளியிட்டுள்ள பல்வேறு இசை ஆல்பங்கள் பல லட்சக்கணக்கான பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளன. அதேபோன்று, அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகளில் அவர் பேசுகிற பேச்சுக்கள், பாடல்கள் குறித்த காணொளிகளும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன. அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் இளைஞர்களின் கூட்டம் மிக அதிகளவில் திரள்வதையும் அதில் காண முடிகிறது. அவருடைய பேச்சும், பாடல்களும், நடனமும் இளைய வயதினரை குறி வைப்பதாகவுள்ளன. கடந்த சில மாதங்களாக கோவையில் ஜான் ஜெபராஜ் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை என்பதும், அவர் இங்கு இல்லை என்பதும் அவருடைய சமூக ஊடகப் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது. பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM படக்குறிப்பு,கிறிஸ்தவ பாடல்களுடன் அவர் வெளியிட்டுள்ள பல்வேறு இசை ஆல்பங்கள் பல லட்சக்கணக்கான பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று, ஜான் ஜெபராஜ் வீட்டில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வின்போது, 17 வயது சிறுமிக்கும், 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, தற்போது ஜான் ஜெபராஜ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பெயர் கூற விரும்பாத காவல் அதிகாரி, ''கடந்த 2024 மே மாதத்திலேயே இந்த சம்பவம் நடந்திருந்தாலும், அந்தக் குழந்தைகள் யாரிடமும் சொல்லவில்லை. சில மாதங்களாக அவர் கோவைக்கே வரவில்லை. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிதான், தங்களுக்கு நடந்தது குறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அந்த சிறுமி பெயரில்தான் தற்போது புகார் தரப்பட்டு, இரு சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று பிபிசி தமிழிடம் கூறினார். டிரம்பின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுக்கும் போது இந்தியா மௌனம் காப்பது ஏன்?9 ஏப்ரல் 2025 Y மற்றும் U ஆகிய எழுத்துகளால் பெண் காவல் அதிகாரி கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?9 ஏப்ரல் 2025 மற்ற பாஸ்டர்களின் விமர்சனம் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9 (I) (m) (கடுமையான பாலியல் தாக்குதல்) மற்றும் அதற்கான தண்டனைப் பிரிவு 10 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருவதால் வேறு எந்தத் தகவலையும் பகிர முடியாது என்று காவல் ஆய்வாளர் ரேணுகா கூறியுள்ளார். ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, ஆதரவும், எதிர்ப்புமாக பலவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஜான் ஜெபராஜுக்கும், மற்ற கிறிஸ்தவ மதபோதகர்களுக்கும் இடையில் இணக்கம் இல்லை என்பதும், மோதல் இருந்ததும் பல்வேறு பதிவுகளின் மூலமாகத் தெரியவருகிறது. இதே கருத்தை, பிபிசி தமிழிடம் பேசிய பல்வேறு பாஸ்டர்களும் தெரிவித்தனர். இதற்கு முன்பாக ஜான் ஜெபராஜ் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பல்வேறு காணொளிகளிலும் இந்த மோதல் போக்கு வெளிப்படுகிறது. நாடாளுமன்றத்தில் முதன் முதலாக தமிழில் ஒலித்த குரல்- குமரி அனந்தன் வாழ்வின் முக்கிய தருணங்கள்10 ஏப்ரல் 2025 இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 குறிப்பாக, கிறிஸ்தவ மதபோதகர் அகஸ்டின் ஜெபக்குமார் என்பவர், இவரை 'பாட்டுக்காரன்' என்று கூறி, இவர் மேடையில் பேசுகிற சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதற்குப் பதிலடி தரும் விதமாக, ஜான் ஜெபராஜும் தனது இசை நிகழ்ச்சிகளில் அகஸ்டின் ஜெபக்குமார் பெயரைக் குறிப்பிட்டே விமர்சித்துள்ளார். இவ்விருவருக்கிடையிலான மோதல் காணொளிகளும் சமூக ஊடகங்களில் இன்னும் வலம் வருகின்றன. வேறு சில மதபோதகர்களும் இவரைப் பற்றி விமர்சித்துள்ளனர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கோவை கிறிஸ்தவ மதபோதகர்கள் ஐக்கியம் (Pastor's Fellowship) அமைப்பின் தலைவர் சாம்சன் எட்வர்டு, ''கோவையில் பெந்தகோஸ்தே சபை பாஸ்டர்கள் மற்றும் இவாஞ்சலிஸ்ட்கள் என மொத்தம் 800 பேர் எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ளனர். இதில் ஜான் ஜெபராஜ் எப்போதுமே இணைந்ததில்லை. அவரை ஒரே ஒரு நிகழ்வில் ஐந்தே நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.'' என்றார். அவர் மீதான பாலியல் புகாரின் உண்மைத்தன்மை குறித்து எதுவும் தனக்குத் தெரியாத நிலையில், அதுபற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க இயலாது என்று கூறிய சாம்சன் எட்வர்டு, கடந்த சில மாதங்களாக அவர் கோவையில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தவில்லை என்றார். கோவையில் அவர் எந்த ஆலயத்தையும் வெகுகாலம் நடத்தியதில்லை என்றும் அவர் கூறினார். மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு9 ஏப்ரல் 2025 திரை வசனங்களை பயன்படுத்தியவர் ஜான் ஜெபராஜ் இசை நிகழ்ச்சி காணொளிகளில், இளைய வயதினரை ஈர்க்கும் வகையில், சினிமா பாடல் மெட்டுக்களில் கிறிஸ்தவப் பாடல்களை பாடுவதும், ஆடுவதும் நகைச்சுவை நடிகர்கள் வடிவேல், விவேக் உள்ளிட்ட பலருடைய பிரபல வசனங்களை அவர் அடிக்கடி பயன்படுத்துவதும் தெரிகிறது. பிரபல இசையமைப்பாளர்கள் நடத்துவது போலவே, அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கும் Live in Concert என்றே சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் நடந்துள்ளது. தன்னைத் தேடி வரும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து, பொறாமையிலேயே மற்ற மத போதகர்கள் தன்னை விமர்சிப்பதாக இசை நிகழ்ச்சிகளில் அவர் பேசியதையும் காணொளிகள் வாயிலாக பார்க்க முடிகிறது. ஜான் ஜெபராஜ் குறித்து மற்ற கிறிஸ்தவ மதபோதகர்களும், மற்றவர்களைப் பற்றி ஜான் ஜெபராஜும் காணொளிகளில் பகிர்ந்துள்ள தகவல்களையும், கருத்துகளையும் பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜான் ஜெபராஜ் மற்றும் அவர் தரப்பில் தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது - இலங்கையில் நடப்பது என்ன?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், ''ஜான் ஜெபராஜ் தற்போது தலைமறைவாக இருப்பதால், அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வெவ்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர் வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் விரைவில் அவர் கைதாக வாய்ப்பு அதிகமுள்ளது,'' என்றார். அவர் மீது வேறு எந்தப் புகார்களும் வந்துள்ளதா என்பது பற்றி கேட்டபோது, ''இதுவரை வேறு எந்தப் புகாரும் வரவில்லை. இந்த சம்பவம் கடந்த ஆண்டில் நடந்திருந்தாலும் இப்போதுதான் புகார் வந்துள்ளது. அதனால்தான் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார் காவல் ஆணையர் சரவணசுந்தர். கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 வேலை, ஓய்வூதியம், வட்டி: பங்குச் சந்தை சரிவு உங்களை எவ்வாறு பாதிக்கலாம்? 4 முக்கிய விஷயங்கள்9 ஏப்ரல் 2025 மே 18 – சென்னையில் ஜான் ஜெபராஜ் இசை நிகழ்ச்சி ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் மே 18 ஆம் தேதியன்று சென்னை காமராசர் அரங்கத்தில் 'JJ-REBORN என்ற பெயரில் ஜான் ஜெபராஜ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடப்பதாக அவருடைய சமூக ஊடகப்பக்கங்களில் விளம்பரங்கள் காணப்படுகின்றன. டிக்கெட் புக்கிங் நடப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''நான் தேவாலயம் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை என்னுடன் இருந்தவன் திருடிவிட்டான், புதிய தேவாலயம் கட்ட ஒரு கோடி ரூபாய் செலவாகும். அதற்கு நிதி திரட்டவே இந்த இசை நிகழ்ச்சி. இதற்கு பண உதவி செய்ய விரும்பாதவர்கள், இதைப் பொருட்படுத்த வேண்டாம். தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம், '' என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM வழக்குப்பதிவுக்கு முன் ஜான் ஜெபராஜ் வெளியிட்ட ஆடியோ போக்சோ வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு, 3 வாரங்களுக்கு முன்பு, ஜான் ஜெபராஜ் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்தம் ஒரு மணி நேரம் அதில் அவர் பேசியுள்ளார். கோவை ஒய்எம்சிஏ கட்டடத்தில் முதல் முதலாக சபையைத் துவக்கியது குறித்தும், அதன்பின் கிராஸ்கட் ரோட்டில் மற்றொருவருடன் இணைந்து சபை நடத்தியதாகவும் அதில் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் முதல் தேதியன்று கோவையில் புதிய கட்டடத்தில் மீண்டும் சபை துவங்குமென்றும் உறுதியளித்துள்ள அவர், தற்போது தன்னுடைய சபையில் 2,300 குடும்பங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். தன்னைப் பற்றி அவதுாறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுத்தளத்தில் வைத்தால் அதைச் சந்திக்கத் தயாராகவுள்ளதாகவும் பேசியுள்ளார். பல்வேறு பிரச்னைகளால் சாப்பிடாமல் 9 கிலோ எடை குறைந்ததாகவும், தற்கொலைக்கு பலமுறை முயன்றதாகவும் அந்த ஆடியோவில் ஜான் ஜெபராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்துள்ள இந்த பிரச்னையிலிருந்து மீள்வதற்கு கடவுளே நீதிபதியாக இருந்து தீர்ப்பை வழங்குவார் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆடியோவையும் முக்கிய ஆதாரமாக வைத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக காந்திபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் கூறியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5xx2qv31lo
  18. 13 APR, 2025 | 10:36 AM சுமார் 75 ஆண்டுகளாக போராடிவரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, உரிமைகளை தர மறுக்கும் பேரினவாத கட்சிகள் வாக்குகளுக்காக இன்று வீட்டு திண்ணையில் வந்து நின்று கதவுகளை தட்டுகின்றனர். அவர்களை மட்டக்களப்பு தமிழர்கள் தோற்கடித்து தன்மானத் தமிழர்கள் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாம் வட்டார வேட்பாளர் செ.நிலாந்தன் தெரிவித்தார். செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தமிழரசுக் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என சிலர் கேட்கின்றனர். தமிழரசுக் கட்சி இந்த ஐயன்கேணி மண்ணுக்கு என்ன செய்துள்ளது என்று? இலங்கையில் சுமார் 75 ஆண்டுகளாக வரலாற்றைக் கொண்ட தன்மானம் மிக்க தமிழர்களின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய மிக்க தமிழரசுக் கட்சி இந்த கிராமத்திற்கு மாத்திரம் அல்ல வடகிழக்கு தமிழர் தாயகத்திற்காக பல உயிர் தியாகங்களை செய்திருக்கிறது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய கட்சி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு துணை நின்ற கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் ஐயாவை நாங்கள் பலி கொடுத்திருக்கின்றோம். நிமலன் சவுந்தரநாயகம் அவர்களை பலி கொடுத்திருக்கின்றோம். சந்திரநேரு ஐயாவை பலி கொடுத்திருக்கின்றோம், கொழும்பில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களை பலி கொடுத்திருக்கின்றோம். இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல உயிர் தியாகங்களை செய்த கட்சி என்றால் அது தமிழரசுக் கட்சி மாத்திரமே. வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காக முப்பது ஆண்டுகள் யுத்தம் செய்தனர், அகிம்சை வழியில் அரசியல் வழியில் போராடினர். அந்த நேரத்தில் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த பேரினவாத அரசுகள் கூட தமிழ் மக்களின் போராட்டத்தை ஏற்று பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால் இன்று இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக ஆட்சிக்கு வந்த அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமைப் பிரச்சினையும் இல்லை என்ற கூறிக்கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, அரசியல் அதிகாரத்தை தர மறுக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான போராளிகளை இழந்திருக்கின்றோம், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்பொருள் திணைக்களம், வன இலாக திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்படுகிறது, மட்டக்களப்பு எல்லைக் கிராமமான மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர் கிராமங்களை பாதுகாக்க முடியவில்லை. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த முகத்தைக் கொண்டு தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாத்திரம் அல்ல தென்னிலங்கையில் உள்ள பல பேரினவாத கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக இங்குள்ள சில தமிழர்களை ஏமாற்றி கையூட்டுக்களை கொடுத்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை, தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை தருவதில்லை அவர்கள் தொடர்ந்து சிங்கள மக்களுக்கான ஆட்சியையே நடாத்தி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதைத்தான் செய்கிறது. தமிழ் மக்கள் தங்களது இருப்பைப் பாதுகாக்க எவ்வளவோ தியாகங்களை செய்திருக்கின்றனர். அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத அரசு இன்று வந்து எமது வீட்டு திண்ணையை தட்டுகின்றனர் தேசிய மக்கள் சக்தி வாக்களிக்குமாறு. நாம் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரம் அல்ல ஏனை மாற்றுக் கட்சிகளுக்கும் வாக்களிப்போமாக இருந்தால் நாம் எமது அடையாளத்தை, நாம் தமிழர்கள் என்ற பூர்வீகத்தை எமது வரலாற்றை இழப்போம் என்பதோடு எமது இருப்பை பாதுகாப்பதற்கும் இருப்பதையாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இன்றுவரை போராடிவரும் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211944
  19. 13 APR, 2025 | 10:24 AM உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் கூறுகையில் , தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகிறது. கடந்த காலங்களில் திகன, மாவனல்லை என பல பிரச்சினைகள் உருவாகியது. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களே.. அவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் வாழ்கிறீர்கள். இதற்காக அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒற்றுமையாக பயணிக்க வேண்டியுள்ளது. எனவே தான் இம் முறை தேர்தலில் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள். பலர் சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். இவர்களை பார்த்தால் அவர்களுக்குப் பின்னால் மரம் உள்ளது. அம்பாறையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவானார்கள். நால்வரும் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்துக்கு அமைவாக ஆதம்பாவை தேசிய பட்டியல் ஊடாக கொடுத்து முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளோம். இன வாத பிரச்சினைகளை இந்த நாட்டில் உருவாக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. 2019இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் 250க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதனால் முஸ்லிம் சமூகம் பெரும் துன்பத்தை எதிர்கொண்டார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசப்படுத்தியுள்ளார்கள். எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, கடன் சுமை என பல இடர்களை சந்தித்தது. தற்போது பொருளாதாரத்தை மீட்டுள்ளோம். இதனையடுத்து அரச சேவையை மீள் எழுச்சி பெறவும் மக்களுக்கு திறந்த சேவைகளை வழங்கவும் அரசாங்க துறையில் சம்பள உயர்வை ஏற்படுத்தியுள்ளோம். ரூபா 38000 பெற்ற ஒருவர் ரூபா 63000 வரை பெறுகிறார். ரூபா 54000 பெற்ற வைத்தியர் ரூபா 94000 பெறுகிறார். இதற்காக இந்தவருடம் 11 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 30000 உத்தியோகத்தர்களை அரச துறையில் ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது போன்று அரசாங்க கொடுப்பனவுகளான அஸ்வெசும நலன்புரி சேவை, முதியோர், சிறுநீரக கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளர்களை இணைக்கவுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/211942
  20. வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதி : பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார் 13 APR, 2025 | 10:08 AM வவுனியா, குருமண்காட்டு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் அவ்விடத்தில் பதற்ற நிலமை காணப்பட்டது. சனிக்கிழமை (12) இடம்பெற்ற இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதன்போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில் தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை. எனவே, தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி - போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதற்ற நிலமை ஏற்பட்டது. எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும். மேலும் அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் என வாகன சாரதி கூறி, முச்சக்கர வண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியின் தலையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றனர். வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/211938
  21. 12 APR, 2025 | 12:23 PM - ஆர்.ராம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு சம்பந்தமாகவோ ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவோ உத்தியோக பூர்வமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலைமையானது வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தமிழ்த் தலைவர்கள் பல தருணங்களில் இந்தியாவின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றாது பல்வேறு சந்தர்ப்பங்களை கைவிட்டு வரலாற்றுத் தவறிழைத்ததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் சம்பந்தமாகவும் தமிழ்த் தலைமைகளின் சந்திப்புத் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும் 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1987இல் இந்தியப்படைகள் நிலை கொண்டிருக்கையில், மிராஜ் விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கையில் தான் ராஜீவ் காந்தியின் வருகை நிகழ்ந்தபோது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் அச்சமடைந்த நிலையில் இருந்தார். ஆனால், இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையில் செயற்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற தருணத்தில் பிரதமர் மோடியின் வருகை நிகழ்ந்திருக்கின்ற நிலையில் அது அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றிருக்கின்றது. அதேபோன்று ராஜீவ் காந்தியின் வருகையானது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்தியதாக இருந்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் பூர்வகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் விஜயமானது, ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் எதிர்கால பொருளாதார மூலோபயத் திட்டங்களை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதனடிப்படையில் தான் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் பார்க்கின்றபோது, இந்தியா தற்போது பொறுமையிழந்துவிட்டது என்றே கொள்ளவேண்டியுள்ளது. ஏனென்றால், பிரதமர் மோடி தனது இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசியப் பிரச்சினை தொடர்பிலோ, அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ உத்தியோக பூர்வமாக எந்த விடயங்களையும் குறிப்பிடவில்லை. அவர் ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகக் கூட நேரடியாகக் கூறாது, இலங்கையின் அரசியலமைப்பு முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்கின்றார். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களே. ஏனென்றால் இவர்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டு மாகாண சபை முறையில் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட விடுதலை இயக்கங்கள் மட்டுமே பங்கேற்றன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளும் பங்கேற்கவில்லை. அதன்பின்னர் புலிகளின் தனிநாட்டுக் கொள்கையை தலைவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு பயணித்தார்கள். பிரபாகரனின் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் அங்கீகரித்தார்கள். போரின் முடிவின் பின்னர் அவர்கள் தங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக மீளாய்வு செய்வில்லை. மாறாக, டில்லி வழங்கிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளாது அவர்களுக்கு கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது வரலாற்றுத் தவறிழைத்தார்கள். டில்லியை விடவும் புலம்பெயர் தமிழர்களையும் மேற்குலகத்தையும் அபரிதமாக நம்பிக்கொண்டு 13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்களை முறையாக கையாளாது அவற்றை ஒற்றையாட்சிக்குள் பெறமுடியாதென நிராகரித்துவிட்டு, பொறுப்புக்கூறல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், வெளிநாட்டு விசாரணையாளர்கள் என்று நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களின் மீது காலத்தினைக் கடத்தினார்கள். இதன் விளைவாக, தமிழ் மக்களுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கமான இடைவெளி அதிகரித்து விட்டது. அந் நிலைமையானது, நான்கு தசாப்த இந்தியாவின் காத்திருப்புக்குப் பின்னர் ‘பொருளாதாரத்தினை மட்டும் மையப்படுத்தியதாக’ தனது மூலோபாயத்தினை மாற்றியமைத்துள்ளது. அதனை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நன்கு புரிந்துகொண்டுள்ளது. இந்த நிலைமையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானதொரு சூழலாகும். ஏனென்றால், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டை கையிலெடுத்தால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. அவ்விதமானதொரு சூழல் ஏற்பட்டால் பிரதமர் மோடியின் அடுத்த இலங்கைக்கான பயணத்தின்போது அவர் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கூடக் கோரிக்கை விடுக்காத நிலைமைகளே ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே, தற்போதைய சூழலை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொண்டு தமது பழைய சித்தாதந்தங்களை கைவிட்டு நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்காக டில்லியுடன் மீள் ஊடாட்டத்துக்குச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது என்றார். https://www.virakesari.lk/article/211882
  22. சாதனைமேல் சாதனை: அபிஷேக் சிக்சர் மழையால் 246 ரன் இலக்கை அநாயசமாக எட்டிப் பிடித்த சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தனது தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியுள்ளது. 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோற்றிருந்த அந்த அணி, நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 246 ரன் இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து ரசிகர்களை வியக்க வைத்தது. அந்த அணியின் தொடக்க ஜோடியான அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட், இந்த தொடரில் முதன் முறையாக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிந்து சாதனை சதத்துடன் அந்த அணியை எளிதாக வெற்றி பெறவும் வைத்தார். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப் பட்டியலிலும் ஏற்றம் கண்டுள்ளது. அதிரடியால் மிரட்டிய அபிஷேக் சர்மா பல சாதனைகளையும் படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அதிரடி ஐதராபாத்தில் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்த அந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டியது. முந்தைய போட்டியில் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோல்வியில் தள்ளிய இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே மிரட்டினார். முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பிரப்சிம்ரன் பவுண்டரிக்கு விரட்ட, அவரது அடுத்த ஓவரின் முதல் பந்தை கிரீசுக்கு வெளியே வந்து சிக்சருக்கு விளாசினார் ஆர்யா. ஷமியின் அடுத்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார். இருவரது அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்தது. ஆனால் ஆர்யாவின் வாண வேடிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் வழக்கமாக இறுதிக்கட்ட ஓவர்களை வீசும் ஹர்ஷல் படேல் நேற்றைய ஆட்டத்தின் போக்கால் தொடக்கத்திலேயே கொண்டு வரப்பட்டார். அதற்கு சன்ரைசர்ஸ் அணிக்க பலனும் கிடைத்தது. 13 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களை விளாசியிருந்த ஆர்யா, ஹர்ஷல் படேல் பந்தில் நிதிஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாசும் தொடக்கம் முதலே பட்டாசாய் வெடித்தார். சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரப்சிம்ரன் ஸ்ரேயாஸ் விளாசல் பஞ்சாப் கிங்ஸ் அணி தனக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. ஆர்யா அவுட்டான பிறகு ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரனும் கேப்டன் ஸ்ரேயாசும் ரன்ரேட்டை அதிகபட்ச நிலையில் அப்படியே பராமரித்தனர். இருவரது பேட்டில் இருந்தும் பந்துகள் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் சென்ற வண்ணம் இருந்தன. ஸ்ரேயாஸ் தனது ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமான அரைசதத்தை எட்டினார். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் அரைசதம் கண்டார். மறுபுறம் சன்ரைசர்ஸ் சார்பில் ஐபிஎல் அறிமுகம் கண்ட ஈஷான் மலிங்கா தனது முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரனை ஆட்டமிழக்கச் செய்தார். பிரப்சிம்ரன் 23 பந்துகளில் 1 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களை சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்ரேயாஸ் ஹர்ஷல் படேல் இம்பாக்ட் சன்ரைசர்ஸ் அணிக்கு தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்த ஹர்ஷல் படேல் இறுதிக்கட்ட ஓவர்களிலும் தாக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 250 ரன்களை எளிதாக தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு அணை போட்டவர் ஹர்ஷல் படேல்தான். ஆட்டத்தின் 15-வது ஓவராக தனது மூன்றாவது ஓவரை வீச வந்த ஹர்ஷல் படேல் அதிரடியில் எதிரணிகளை மிரட்டக் கூடிய ஷஷாங்க் சிங் விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல், 18-வது ஓவரில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் தடாலடி வீரர் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் ஹர்ஷல் பெவிலியனுக்கு அனுப்பினார். ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 82 ரன் எடுத்தார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார். முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு அவரது அணி ரசிகர்களை குஷிப்படுத்தினார். முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை குவித்தது. ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹர்ஷல் படேல் (பவுலர்) சன்ரைசர்ஸ் பதிலடி 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி இந்த சீசனில் முதன் முறையாக சிறப்பான தொடக்கம் தந்தது. யான்சென் வீசிய இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி வாண வேடிக்கையை தொடங்கி வைத்தார். அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். நடப்பு சீசனில் முந்தைய போட்டிகளில் ஜொலிக்காத அபிஷேக் அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் போட்டியில் அதிரடியில் மிரட்டினார். அவர் 2 முறை அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பவும் செய்தார். 28 ரன்களை எடுத்திருந்த போது டீப் பாயிண்டில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யாஷ் தாகூர் தவறவிட்டார். அதேபோல், 57 ரன்கள் எடுத்திருந்த போது, சாஹல் வீசிய ஓவரில் அபிஷேக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சாஹல் தவறவிட்டார். இரு கண்டங்களில் இருந்தும் தப்பிய அபிஷேக் தனது அதிரடியை ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்தில் தொய்வடைய விடவே இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிராவிஸ் ஹெட் டிராவிஸ் ஹெட் - மேக்ஸ்வெல் வாக்குவாதம் 19 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து அவர் அசத்தினார். அபிஷேக் - ஹெட் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 7.3 ஓவரிலயே சதத்தை எட்டிவிட்டது. டிராவிட் ஹெட் 31 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் மேக்ஸ்வெல் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அப்போது மேக்ஸ்வெல் ஏதோ சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டாய்னிஸ் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். சேஸிங்கில் 9-வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்குத் தேவையான ரன்னில் பாதியை எடுத்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 171 ரன்களை எட்டிய போது ஒருவழியாக முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. 13-வது ஓவரில் சாஹல் வீசிய இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் அடித்த பந்தை மேக்ஸ்வெல் கேட்ச் செய்தார். எனினும், இதனை பெரிய அளவில் கொண்டாடும் மனநிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இருக்கவில்லை. காரணம், முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்திய போது சன்ரைசர்ஸ் அணி சாத்தியமில்லாததாக கருதப்பட்ட வெற்றியை சாத்தியமான ஒன்றாக ஆக்கியிருந்தது. டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்களை சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அபிஷேக் சர்மா சதம் டிராவிஸ் ஹெட் அவுட்டானதும் அடுத்த 4 பந்துகளில் அபிஷேக் சர்மா சதம் அடித்தார். ஐபிஎல்லில் அவரது முதல் சதம் இதுவாகும். தொடக்கம் முதலே வாண வேடிக்கை நிகழ்த்திய அபிஷேக் 40 பந்துகளில் தனது முதல் சதத்தை அதுவும், சேஸிங்கில் அடித்தார். சதம் அடித்ததும் தனது ஸ்டைலில் கொண்டாடினார். அத்துடன், 'இது ஆரஞ்சுப் படைக்கானது' என்று ஒரு பேப்பரை பெவிலியனை நோக்கி காட்டினார். இந்த சீசனில் முந்தைய போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத அபிஷேக் இந்தப் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 10 சிக்சர், 14 பவுண்டரிகளை விளாசி, 141 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த கட்டத்தில் ஆட்டம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. கிளாசனும், இஷான் கிஷனும் எளிதான வெற்றியை விரைவிலேயே தங்களது அணிக்கு பெற்றுக் கொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை 9 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே சன்ரைசர்ஸ் அணி எட்டியது. சன்ரைசர்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்ந்து சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? மனம் திறந்தார் சாய் சுதர்சன்12 ஏப்ரல் 2025 தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா சாதனைமேல் சாதனை அபிஷேக் சர்மா அடித்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன் லோகேஷ் ராகுல் அடித்த 132 ரன்களே ஐபிஎல்லில் இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. அபிஷேக் சர்மா சேர்த்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி பேட்டர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். அபிஷேக் சர்மா மூன்றாவது முறையாக 20 பந்துகளுக்குள் அரைசதம் கண்டுள்ளார். அந்த வரிசையில், நிகோலஸ் பூரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அவர் இருக்கிறார். இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. அந்த வகையில், ஆர்சிபி அணியுடன் இந்த சாதனையை அந்த அணி பகிர்ந்து கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா இன்றைய ஆட்டங்கள் முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம்: ஜெய்ப்பூர் நேரம்: மாலை 3.30 இரண்டாவது ஆட்டம் டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இடம்: டெல்லி நேரம்: இரவு 7.30 நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள்12 ஏப்ரல் 2025 சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா?1 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 14 நேரம்- இரவு 7.30 இடம் – லக்னெள ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 349 ரன்கள் (6 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்) இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y477r00g7o
  23. 13 APR, 2025 | 10:38 AM யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக சனிக்கிழமை (12) அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211941
  24. அண்ணை, போறபோக்கப் பார்த்தா அந்த சங்கட்டம் வராது போலயே?! STRATEGIC TIMEOUT 27th Match (N), Hyderabad, April 12, 2025, Indian Premier League Punjab Kings 245/6 Sunrisers Hyderabad (7/20 ov, T:246) 93/0 SRH need 153 runs in 78 balls. Current RR: 13.28 • Required RR: 11.76 • Last 5 ov (RR): 65/0 (13.00) Win Probability: SRH 29.84% • PBKS 70.16%
  25. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் - பாஜகவின் 'திட்டம்' இதுவா? அரசியல் கணக்கு என்ன? பட மூலாதாரம்,K ANNAMALAI கட்டுரை தகவல் எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பதவியேற்றுள்ளார் நயினார் நாகேந்திரன். கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கியதன் மூலம் பாஜகவின் அரசியல் திட்டம் என்ன? நயினார் நாகேந்திரனின் பின்னணி என்ன? நெல்லை பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம்தான் நயினாருக்கு சொந்த ஊர் என்றாலும், அரசியலுக்கு வரும் முன்னரே நெல்லை டவுனில் தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக குடியேறிவிட்டார். நேரடியான அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாகவே, கட்சிப்பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். நெல்லையின் பழம்பெரும் அதிமுக தலைவரான கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளராக அறியப்பட்டார் நயினார் நாகேந்திரன். பின்நாட்களில் கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு திமுகவுக்கு செல்ல, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் பெயர் சொல்லும் தலைவராக வளர்ந்திருந்தார். அப்போதும் கருப்பசாமி பாண்டியனுடன் பரஸ்பரம் நட்பு பாராட்டியதாகக் கூறுகின்றனர் நெல்லை மாவட்ட அதிமுகவினர். பட மூலாதாரம்,K ANNAMALAI அரசியல் களம் 2001-ம் ஆண்டு கருப்பசாமி பாண்டியன் திமுகவுக்கு கட்சி மாறியது , இவருக்கு சாதகமாக திரும்பியது. 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. அதிரடியான அமைச்சர் பதவி பறிப்புகள் சாதாரணமாக நடைபெறும் ஜெயலலிதா நிர்வாகத்திலும், முழுமையாக 5 ஆண்டுகள் அமைச்சராகவே தொடர்ந்தார் நயினார் நாகேந்திரன். பலமுறை துறைகள் மாற்றப்பட்டப் போதும் அமைச்சர் பதவியை இவர் இழக்கவில்லை. 2006-ம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (606 வாக்குகள்) நெல்லை தொகுதியில் தோல்வியடைந்தாலும், 2011-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அமைச்சரவையில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சிறிது காலம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த நயினார் நாகேந்திரன், 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கொண்டார். பட மூலாதாரம்,X 'முன்பு போல அதிமுக இல்லை' "ஜெயலலிதாவின் தலைமையிலிருந்தது போல அதிமுக இப்போது இல்லை" என்று காரணம் கூறி 2017-ம் ஆண்டு பா.ஜ.க. வில் இணைந்த நயினார், இன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களே அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமாக கூறப்பட்டது. அண்ணாமலை அதிமுகவினரையும், அதிமுகவினர் அண்ணாமலையையும் பொதுத்தளத்தில் விமர்சித்ததையும் காண முடிந்தது. இந்நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவரான நயினார் நாகேந்திரன் இந்த பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, இரு கட்சிகளிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. பாஜகவிற்கு கட்சி மாறிய பின்னர் மூன்று தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் கூட்டணி கட்சியான அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் போட்டியிட, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் நயினார் நாகேந்திரன். சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் வந்து போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றார் நயினார். அனைத்து கட்சிகளுடன் இணக்கம் பட மூலாதாரம்,NAINAR NAGENDRA/X இதன் பின்னர் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நயினார் நாகேந்திரன். இந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்ற போதும், அதிமுக கூட்டணியில் தேர்வான 4 பா.ஜ.க. எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்தார் நயினார் நாகேந்திரன். கட்சி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உறவுகளில் அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமான உறவு பாராட்டக்கூடியவராக நயினார் நாகேந்திரன் அறியப்படுகிறார். சட்டமன்றத்தில் சொந்த மாவட்டக்காரரான அப்பாவு சபாநாயகராக இருக்கும் சூழலில் பல சுவையான விவாதங்களிலும் நயினார் நாகேந்திரனின் பெயர் இடம்பெறத் தவறுவதில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தலைநகரை திருச்சிக்கு மாற்றுங்கள் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைக்க, இதனை அன்போடு பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதே போன்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்ட போதே கடந்த பிப்ரவரி மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மத்திய அரசை விமர்சித்த முதலமைச்சர், நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொண்டதும் நடந்தது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் முடித்தார். பட மூலாதாரம்,NAINAR NAGENDRA/X படக்குறிப்பு,2024 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் நயினார் நாகேந்திரன் அரசியல் கணக்கு என்ன? தற்போது பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றிருப்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி," பிற முக்குலத்தோர் சமுதாய தலைவர்களான டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை மறைக்கும் அளவுக்கு நயினாரின் செல்வாக்கு உயருமா என்று கேட்டால், தேர்தல் அரசியலில் தங்களை நிரூபித்த தினகரன் மற்றும் , பன்னீர்செல்வத்துடன் ஒப்பிடுகையில் நயினார் நாகேந்திரன் சபார்டினேட் (துணை நிலைத் தலைவர்) தான். எனவே அவரை இவர்களுக்கு மாற்றாகக் கருத முடியாது. பாஜகவில் இருக்கும் இதே சமுதாயத்தைச் சார்ந்த மற்றவர்களோடு ஒப்பிடுகையில் , முக்குலத்தோர் மத்தியில் கட்சியை வளர்க்க நயினார் நாகேந்திரன் பயன்படலாம்.'' என்கிறார் அவர் மேலும், ''தேர்தல் அரசியலைப் பொருத்தவரையிலும் சசிகலா தனது பலத்தை நிரூபிக்காதவர், ஆனால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தேர்தலை சந்தித்தவர்கள். குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர்.கே.நகர் தேர்தலை வென்றவர் டிடிவி தினகரன், கடைசியாக சந்தித்த தேனி மக்களவைத் தேர்தலில் 2வது இடமும் பெற்றிருக்கிறார். இதே போன்று ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தவர். மற்றவகையில் தேசிய கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருப்பவரை, தேர்தலில் நிரூபித்த தலைவர்களுடன் ஒப்பிட தேவையில்லை" என்றார். "தேசிய கட்சியின் நிழல்" பட மூலாதாரம்,NAINAR NAGENDRA/X மேலும் தேசிய கட்சியான காங்கிரசில் மாநிலத் தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகையின் வளர்ச்சிக்கென ஒரு எல்லை இருப்பதைப் போலத்தான், நயினார் நாகேந்திரனும் தேசிய கட்சியின் அடையாளத்தால் அறியப்படுவார் என்று ரவீந்திரன் துரைசாமி கூறுகிறார். ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையை மேடையில் வைத்துக் கொண்டே, அதிமுகவுடனான கூட்டணியை அறிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ''கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும்" என அமித் ஷா கூறியிருக்கிறார் தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கும் நோக்கம் கொண்டிருக்கும் பா.ஜ.க. தற்போதைய அரசியல் சூழலில் நயினார் நாகேந்திரனை தேர்வு செய்திருப்பதும் கட்சியை வளர்ப்பதற்கான வியூகமே என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg13298y57o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.