Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 07 APR, 2025 | 08:37 PM (எம்.வை.எம்.சியாம்) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டுக்கிறார்கள். ஆனால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (06) பண்டுவஸ்நுவர பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதலாவது அரசமுறை விஜயமாக அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு சென்றிருந்தார். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கு சார்பாக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. அன்று தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றனர். ஆனால் எமது அரசாங்கத்துக்கே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோன்று எமது அயல் நாட்டின் தலைவர் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு சென்றுள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினர் சர்வதேசத்துக்கு நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக தற்போது குற்றஞ்சாட்டுக்கிறார்கள். அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை. அவர்கள் காட்டிக்கொடுத்தவற்றை நாமே நிறுத்தியுள்ளோம். ரணில் விக்கிரமசிங்க மில்கோ நிறுவனத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தார். ஆனால் நாம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம். நட்டத்தில் இயங்குவதாக கூறப்பட்ட மில்கோ நிறுவனம் தற்போது இலாபமிட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. திரிபோஷா நிறுவனம் விற்பனை செய்யப்படவிருந்தது. ஆனால் தற்போது திரிபோஷ உற்பத்தியை மேற்கொண்டு அதனை இலாபமிட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம். இதுவே எமது முயற்சியாகும். அதேபோன்று மஹவ- ஓமந்தை புகையிரத பாதை மற்றும் மஹவ-அநுராதபுரம் புகையிரத பாதை சமிக்ஞை கட்டமைப்பு ஆரம்பத்தில் இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய பிரதமர் இந்த திட்டங்களை அன்பளிப்பாக வழங்குவதாக குறிப்பிட்டார். அதேபோன்று இந்தியாவிடமிருந்து நாம் கடன்களை பெற்றுக் கொண்டுள்ளோம். தற்போது இந்த கடனுக்கான வட்டியை குறைப்பதாக பிரதமர் எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முறியடித்து நாம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/211423
  2. 08 APR, 2025 | 08:56 AM கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் அதன் பணிகளை ஆரம்பித்திருப்பதாக அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் நிறுவனம் (அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகனொமிக் ஸோன் லிமிடெட்) அறிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தியை அரச - தனியார் கூட்டிணைவின் அடிப்படையில் இணைந்து முன்னெடுத்திருக்கும் அதானி நிறுவனம் மற்றும் இலங்கையின் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் செஸ் லிமிடெட் என்பன வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கென 800 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பில் ஓர் மைல்கல் அடைவாகும் என அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். அத்தோடு இம் முனையமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்கால வர்த்தக மேம்பாட்டைக் காண்பிப்பதுடன் மாத்திரமன்றி, இலங்கைக்கு பெருமைமிகு முன்முயற்சியாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211440
  3. புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களைச் செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி மற்றும் கல்விசாரா குழு உதவித்தொகை திட்டங்களைப் பூர்த்தி செய்து அறிக்கை அளிக்கவில்லை என்றும் அது கூறுகிறது. 1980 மற்றும் 2023 க்கு இடையில் ஒப்பந்தங்களை மீறிய அதிகாரிகளிடமிருந்து இந்தப் பத்திரங்களை மீட்க பல்கலைக்கழகம் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது. இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகையை சரிபார்க்காமல் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 300 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கூடுதல் நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கை கூறுகிறது. இந்தத் தகவல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2023 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316910
  4. கோலி புதிய மைல் கல்: பரபரப்பான மும்பை - பெங்களூரு ஆட்டத்தில் திருப்பம் தந்த 3 ஓவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 20-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்களில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியின் மூலம் விராட் கோலி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்த 3 ஓவர்களில் என்ன நடந்தது? கோலி அதிவேக அரைசதம் ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே பில் சால்ட் விக்கெட்டை இழந்தாலும், சால்ட் களத்தில் இல்லாத குறை தெரியாமல் ரசிகர்களை கோலி கவனித்துக்கொண்டார். பும்ரா ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட கோலி, வில் ஜேக்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். மும்பை பந்துவீச்சை தெறிக்கவிட்ட கோலி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து, அடுத்த 11 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் இந்த ஆட்டத்தில்தான் கோலி அதிக வேகமாக 30 பந்துகளுக்குள் அரைசதம் அடித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார், ஜிதேஷ் பங்களிப்பு ஆர்சிபி ஸ்கோர் உயர்ந்ததில் ஜிதேஷ் சர்மா, கேப்டன் பட்டிதாரின் பங்களிப்பு முக்கியமானது. 5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 69 ரன்கள் சேர்த்தனர். 19 பந்துகளைச் சந்தித்த ஜிதேஷ் சர்மா 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பட்டிதார் மும்பை பந்துவீச்சாளர்களில் ஜேக்ஸ், ஹர்திக், போல்ட், தீபக் சஹர் பந்துவீச்சை உரித்தெடுத்துவிட்டார். இவர்களின் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி என பட்டிதார் பறக்கவிட்டு 25 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்தார். இருவரின் ஆட்டம் ஆர்சிபி பெரிய ஸ்கோரை எட்டகாரணமாக இருந்தது. ஏனென்றால் இதற்கு முந்தைய 6 ஆட்டங்களிலும் 190வரை ஸ்கோர் செய்தும் ஆர்சிபியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பதால், 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஸ்கோர் செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா வருகை தாக்கம் ஏற்படுத்தியதா? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா வருகை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி, சிக்ஸருக்கு பறக்கவிட்டு, கிங் கோலி என்பதை நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்த பும்ரா விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை, விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES திக் திக் ஆட்டம் ஐபிஎல் டி20 போட்டியில் "ரைவலரி வாரம்" என்று அடையாளப்படுத்தப்பட்டு போட்டிகள் நடக்கைகயில் முதல் ஆட்டமே ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்தது. ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, நமன்திர் களத்தில் இருக்கும்வரை வெற்றி யாருக்கு என்பது உறுதியில்லாமல் இருந்தது, ஆட்டம் மும்பை அணி பக்கமோ அல்லது ஆர்சிபி பக்கமோ சாயலாம் என்ற ரீதியில் இருந்தது. ஆனால், புவனேஷ்வர் வீசிய 18வது ஓவர், ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர், க்ருணால் பாண்டியா வீசிய 20-வது ஓவர் ஆகியவை வெற்றியை ஆர்சிபி பக்கம் மாற்றியது. இந்த 3 ஓவர்கள்தான் ஆர்சிபிஅணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறின. மும்பை அணியின் முயற்சியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது. வெற்றிக்கு 8 ஓவர்களில் 122 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றி, 34 பந்துகளில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினர். 4வது விககெட்டுக்கு188 ரன்களுடன் மும்பை வலுவாகஇருந்தது, ஆனால், கடைசி 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது, அதிலும் க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES சென்டினல்: அணுக முடியாத இந்திய பழங்குடியினரைப் பார்க்க முயன்று கைதான அமெரிக்கர் – யார் இந்த மக்கள்?4 மணி நேரங்களுக்கு முன்னர் கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 போராடிய மும்பை அணி மும்பை அணியின் கரங்களில் இருந்த வெற்றியை ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வர், க்ருணால் பாண்டியா சேர்ந்து பறித்துவிட்டார்கள் என்றுதான் கூற முடியும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா களத்தில் இருந்திருந்தால், நிச்சயம் மும்பை அணி வெற்றி பெற்றிருக்கும். ஏனென்றால், நேற்று ஹர்திக் பாண்டியா "வின்டேஜ் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள்" போல் விளாசினார், அவரின் பேட்டிலிருந்து சிதறிய ஷாட்கள் ஒவ்வொன்றும் மின்னல் வேகத்தில் பவுண்டரி, சிக்ஸரை அடைந்தன, ராட்சதனைப் போல் பேட் செய்த ஹர்திக் கண்களில் வெற்றி தீப்பொறி பறந்தது. 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என 42 ரன்களில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். கிரிக்இன்போ கணிப்பின்படி, 47 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 123 ரன்கள் தேவை என்றபோது அதன் வெற்றி சதவீதம் 1.89 என இருந்தது. ஆனால், திலக் வர்மா 18-வது ஓவரில் ஆட்டமிழந்தபோது மும்பை வெற்றி சதவீதம் 48.42 சதவீதமாக உயர்திருந்து வெற்றிக்கு அருகேதான் இருந்தது. கடந்த ஆட்டத்தில் ரிட்டயர் அவுட் மூலம் திலக் வர்மாவை மும்பை அணி அழைத்துக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் திலக் வெளுத்து வாங்கினார். 29 பந்துகளில் 4 சிக்ஸர், 4பவுண்டரி என 56 ரன்கள் சேர்த்தார். ஹர்திக், திலக் வர்மா கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி, ஸ்வரஸ்யத்தைச் சேர்த்தது. மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?22 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஹேசல்வுட், சூயஷ் கட்டுக்கோப்பு மும்பை அணியின் வெற்றியை பறித்ததில் ஹேசல்வுட்டின் துல்லியமான லென்த் பந்துவீச்சும், சூயஷ் சர்மாவின் சுழற்பந்துவீச்சும் முக்கியக் காரணம். சூயஷ் விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் அவரின் 4 ஓவர்களில் மும்பை பேட்டர்கள் 32 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஹேசல்வுட் பந்துவீச்சில் ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சூர்யகுமார் அடித்த ஷாட்களில் இரு கேட்சுகளை நேற்று ஆர்சிபி அணியினர் தவறவிட்டனர். முதல் கேட்சை சூயஷ் சர்மாவும், 2வது கேட்சை யாஷ்தயாலும், விக்கெட் கீப்பர் சர்மாவும் பிடிக்க முயன்று மோதிக்கொண்டு கேட்சைவிட்டனர். ஆனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தாத சூர்யகுமார் 12வது ஓவரில் யாஷ் தயாலிடம் விக்கெட்டை இழந்தார். சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியைத் தீர்மானித்த கடைசி 3 ஓவர்கள் கடைசி 18 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா இருந்தனர். புவனேஷ்வர் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் புவுண்டரி அடிக்கவே, அதே ஓவரில் திலக் வர்மா ஆப்சைடில் சென்ற பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்று சால்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த நமன்திர் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி பதற்றத்தைக் குறைத்தார் 19-வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். மும்பை வெற்றிக்கு 12 பந்துகளி்ல் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டை லிவிங்ஸ்டோன் கேட்ச் பிடிக்கவே ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்துவந்த சான்ட்னர் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்ட சென்றார். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. க்ருணால் பாண்டியா பந்துவீசினார். களத்தில் சான்ட்னர், நமன்திர் இருவரும் இருந்தனர். க்ருணால் வீசிய முதல் பந்து சிக்ஸருக்கு செல்லும் என எதி்பார்த்தபோது, லாங் ஆப் திசையில் உயரமான பீல்டர் டிம் டேவிட் அற்புதமான கேட்சைப் பிடித்தார். அடுத்துவந்த தீபக் சஹர் வந்தவுடன் சிக்ஸருக்கு பந்தை விரட்டமுயன்றார். ஆனால், பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடித்த சால்ட், பவுண்டரி கோட்டுக்குள் செல்ல முயன்றபோது டிம் டேவிட்டிடம் பந்தை தூக்கிவீசினார். தொடர்ந்து இருவிக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதன்பின் நமன்திர் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 5வது பந்தில் நமன்திர் லெக்திசையில் யாஷ் தயாலிடம் கேட்ச் கொடுக்கவே மும்பையின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த 3 ஓவர்கள்தான் வெற்றி யார் பக்கம் என்பதை தீர்மானித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வேற லெவலில் ஆர்சிபி கடைசியாக 2015ம் ஆண்டு வான்ஹடே மைதானத்தில் மும்பை அணியை 39 ரன்களில் ஆர்சிபி வென்றிருந்தது. அதன்பின் சரியாக 10 ஆண்டுகளுக்குப்பின் இதே வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை நேற்று ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் 6 முறை மும்பையுடன் மோதியும் ஒருமுறைகூட ஆர்சிபி வெல்லவில்லை. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி சேர்த்த ஸ்கோரும் மும்பை அணிக்கு எதிராகச் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். ஏற்கெனவே சென்னையில் சிஎஸ்கே அணியை 17ஆண்டுகளுக்குப்பின் வெற்றி கண்டு வரலாறு படைத்த ஆர்சிபி, இப்போது மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத்பட்டிதாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் 32 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது தவிர விராட் கோலியின் 42 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்த அற்புதமான ஆட்டம், தேவ்தத் படிக்கலின் (37) கேமியோ, கடைசி நேரத்தில் மும்பை பந்துவீச்சை வெளுத்துவாங்கி 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்த ஜிதேஷ் சர்மா ஆகியோரும் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக்காரணமாகும். மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்பு இந்திய ஐடி துறையை பாதிக்குமா? ஆனந்த் ஸ்ரீநிவாசன் விளக்கம்5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "பந்துவீச்சாளர்கள்தான் ஆட்டநாயகர்கள்" வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் " அற்புதமான ஆட்டம், வெற்றிக்கு கடினமாக உழைத்தோம். பந்துவீச்சாளர்கள்தான் உண்மையான ஆட்டநாயகர்கள், அவர்களுக்கு என் விருதை சமர்ப்பிக்கிறேன். அவர்களின் துணிச்சலை வெளிப்படுத்தி கடைசி 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றினர். இந்த மைதானத்தில் ரன்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை, அதைசெய்துள்ளோம். வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தினர். க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தை திருப்பியது. சூயஷ் சர்மா எங்களின் துருப்புச்சீட்டு,விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர். அவர் விக்கெட் எடுக்காவிட்டாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த வெற்றி பந்துவீச்சாளர்களுக்குரியது" எனத் தெரிவித்தார். ஏமாற்றம் தந்த தோனி: சிஎஸ்கே அணியின் 'ஹாட்ரிக்' தோல்வி உணர்த்துவது என்ன? போராட்டமின்றி சரணடைவதா? சிஎஸ்கே தோல்வியால் கொந்தளிக்கும் ரசிகர்கள் கொல்கத்தா அணியை துவம்சம் செய்த அஸ்வனி குமாரை மும்பை கண்டுபிடித்ததன் பின்னணி சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் ரோஹித்தை துரத்தும் துயரம் முந்தைய ஆட்டத்தில் விளையாடாத ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மீண்டு வந்தாலும் அவரது ஆட்டத்தில் பழைய வேகத்தை காண முடியவில்லை. ஐபிஎல் பவர்பிளே ஓவர்களில் அவரது ஆட்டம் மோசமாகவே இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பவர் பிளே ஓவர்களில் (குறைந்தது 200 பந்துகளை சந்தித்த பேட்டர்கள்) ரோஹித்தின் சராசரி ரன் 24.59 ஆக இருக்கிறது. அந்த வகையில் விரித்திமான் சாஹா மட்டுமே ரோஹித்தை விட குறைந்த சராசரியை வைத்திருக்கிறார். அதுவே, 2024-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால் குறைந்தது 180 பந்துகளை சந்தித்த பேட்டர்களில் ரோஹித்தின் 27.90 என்ற சராசரியே மிகவும் குறைவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். டி20 ஃபார்மெட்டில்13 ஆயிரம் ரன்களைக் கடந்த 5வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். 386 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை அதிவேகமாக எட்டிய 2வது வீரராக கோலி இருக்கிறார். கிறிஸ் கெயில் 381 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkgmrlyjn8o
  5. பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு,திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கட்டாயம் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 ஏப்ரல் 2025, 03:17 GMT இன்றைய (08/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏப்ரல் 8ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைத்தளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்ததாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்-4 ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு பிப்.19-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) பாலாஜி, வழக்கை ஏப்.7-ம் தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்தார். நேற்று இவ்வழக்கு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதும், சீமான் ஆஜராகவில்லை. அப்போது அவர் நேரில் ஆஜராக முடியாததற்கான காரணத்தை அவரது வழக்கறிஞர்கள் விளக்கினர். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, (நேற்று) மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து, அவரது வழக்கறிஞர்கள் வழக்கை அன்றே (நேற்று) தள்ளிவைக்க (பாஸ் ஓவர்) கோரினர். அதன்மீதான விசாரணை நடந்தபோது, சீமான் ஆஜராகாத காரணம் குறித்த மனுவை அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சீமான் இன்று (ஏப்.8) கட்டாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் கோடைக் கால மின் தேவையை பூர்த்தி செய்ய 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தமிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "தமிழகத்தின் தினசரி மின் தேவை 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இது மே மாதத்தில் அதிகபட்சமாக 22 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என மின்வாரியம் கணித்துள்ளது. ஆனால் தமிழக மின்வாரிய ஆதாரங்களான அனல் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரம் என மொத்தம் 18,038.05 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் மீதமுள்ள மின்சாரத்தை தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது. ஏப்ரல் மே மாத தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 2,610 மெகாவாட் மின்சாரம் தினமும் காலை முதல் இரவு வரை 12 மணி நேரத்துக்கு பயன்படுத்தப்படும். மீதமுள்ள 1300 மெகாவாட் மின்சாரம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தப்படும். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 சென்னையில் நடந்த கொள்ளையை நெதர்லாந்தில் இருந்தபடி கண்டுபிடித்த வீட்டு உரிமையாளர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சென்னையில் உள்ள தனது வீட்டில் அத்துமீறி யாரோ நுழைகிறார்கள் என்பது குறித்த எச்சரிக்கையை நெதர்லாந்தில் இருந்த வீட்டின் உரிமையாளருக்கு செல்போனில் எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்துள்ளது. இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "சென்னை அசோக் நகரை சேர்ந்த வெங்கட்ரமணன் தனது மனைவியுடன் நெதர்லாந்தில் உள்ள தனது மகளை காண சென்றிருந்தார். ஞாயிற்றுகிழமை இரவு அவரது செல்போனில் ஒரு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. பூட்டிய அவரது வீட்டில் சந்தேகம்படும்படியான நடவடிக்கைகள் நடப்பதற்கான எச்சரிக்கை அவருக்கு கிடைத்தது. உடனே பக்கத்துவீட்டு நண்பருக்கு அவர் தகவல் தெரிவித்தார். பக்கத்துவீட்டுக்காரர் நேரில் சென்று பார்த்த போது, வெங்கட்ரமணனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே இது குறித்துப் போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. போலீச் ரோந்து குழுவினர் சுற்றுவட்டாரத்தில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த கமலகண்ணன் (65), ஆரி பிலிஃப் (57) ஆகியோர் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். ஆறு சவரன் தங்க நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவைகளை போலீஸார் அவர்களிடமிருந்து கைப்பற்றினர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 தமிழகத்தில் 2 தள கட்டடங்களுக்கு சுயசான்று முறை அறிமுகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சுயசான்றிதழ் மூலம் தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்ததாக டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் (Stilt + 2 Floors) கொண்ட குடியிருப்பு கட்டங்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து உடனடியாக கட்ட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். வீட்டுவசதித் துறை 2,500 சதுர மீட்டர் மற்றும் 2500 சதுர மீட்டர் கட்டிடங்களுக்கான திட்டத்தை தயார் செய்யும். குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுயசான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து தரப்படும். ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டுக்கு வாகன நிறுத்துமிடத்துக்கென தனி விதிகள் உருவாக்கப்படும். திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் பொதுமக்களுக்கு உதவி புரிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஒற்றை சாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும் என அமைச்சர் பேரவையில் பேசினார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியீடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இலங்கையில் 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டில் 2.17 கோடி பேர் இருக்கின்றனர் என்றும், 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 14 லட்சம் அதிகரித்துள்ளது என்றும் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட "குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024" அறிக்கை திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத் தொகை 21,763,170 ஆகும். அதாவது, இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்து காணப்படுகிறது. 15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டது. நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது. யாரையும் நெருங்க விடாத இந்தியாவின் சென்டினல் தீவு பழங்குடிகளை பார்க்க சென்ற அமெரிக்கர் என்ன ஆனார்? பாஜக 'காந்திய' சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டது எப்படி? வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் முன்வைக்கும் வாதங்கள் என்ன? 'குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்' - ராமேஸ்வரத்தில் தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சித்த மோதி மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது. வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாக தொடர்ந்து காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதேவேளை முல்லைத்தீவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் வசிக்கின்றார்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crldx5ez758o
  6. 07 APR, 2025 | 08:36 PM சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் இன்று (07) நடைபெற்ற 82 ஆவது அடிப்படைப் பயிற்சி பாடநெறியை நிறைவு செய்தோர் வெளியேறும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தமது தொழிற்துறைக்கு ஒருவர் எந்தளவு நியாயத்தை நிலைநாட்டியுள்ளார், கௌரவமளித்துள்ளார் என்பது அவரின் தொழில் வாழ்க்கையின் ஊடாகப் பிரதிபலிக்கிறது எனவும் அந்த தொழில் முறையை அடைந்து இந்த நாட்டுக்கு அவசியமான மாற்றத்தை ஏற்படுத்த பங்களிக்குமாறு பயிற்சி பெறும் இளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். பல துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசியல் அதிகாரத்தை மாற்ற பிரஜைகள் நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் அதிகாரத்தை மாற்றுவதன் மூலமாக மாத்திரம், ஒரு நாடு வெற்றிபெறாது என்றும், அனைத்து துறைகளிலும் சாதகமான மாற்றம் தேவை என்றும் சுட்டிக்காட்டினார். பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அதனைப் பாதுகாக்கும் அதே வேளையில், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு இந்த நாடு பலியாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இளைய தலைமுறையினர், தாய்நாட்டின் பொறுப்பை தங்கள் தோள்களில் ஏற்று, தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் சாதகமான திசையில் கொண்டு செல்ல பாடுபட வேண்டும் என்றும், இன்று இலங்கை பொலிஸ் நிரந்தர சேவையில் இணைவது வலுவான முன்னெடுப்பாகும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அவசர நிலைமைகளில் பிரஜைகளுக்கு விசேட அதிரடிப்படை வழங்கி வரும் சேவை மிகவும் பாராட்டத்தக்கது என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த அணிவகுப்பில் 118 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 231 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து வெளியேறினர். பயிற்சி நெறியின் போது விசேட திறமையை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார். பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது. போர் களத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் கண்காட்சியொன்றும் இங்கு காண்பிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு "நியதை ஜய" (வெற்றி நிச்சயம்) என்ற தொனிப்பொருளுடன் நிறுவப்பட்ட இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு, குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கீர்த்திமிக்க பிரிவாகும். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா, பொலிஸ் அதிகாரிகள், பயிற்சி பெற்று வெளியேறும் பொலிஸ் அதிகாரிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/211432
  7. இலங்கை - ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம் - சர்வதேச மன்னிப்புச்சபை Published By: RAJEEBAN 07 APR, 2025 | 05:08 PM உள்நாட்டு ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள், அல்லது சர்வதேச மனித மனிதாபிமான சட்டங்கள் பாரிய அளவில் மீறப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து,பகுப்பாய்வு செய்து பாதுகாத்தலிற்கான ஆணையை கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் திட்டத்தை நிராகரித்தமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது பாதிக்கப்பட்ட இலங்கையர்களிற்கு நீதியை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் திட்டம் உட்பட ஆணையாளர் அலுவலகத்துடன் ஆக்கபூர்வமான விதத்தில் இணைந்து செயற்படவேண்டும். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கவேண்டும். உள்நாட்டு ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால்,இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம். இலங்கை இன்னமும் சர்வதேச குற்றங்களை அதன் உள்நாட்டு சட்ட கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள், சட்டத்தரணிகள்,பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், நீதியை நாடும்போது துன்புறுத்தலை எதிர்கொள்வது உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/211413
  8. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 89 முறைப்பாடுகள் பதிவு 07 APR, 2025 | 05:30 PM உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 89 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 87 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 02 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் சாராம்சக் குறிப்பு . (2025.04.06 - பி.ப 4.30 மணி வரை ) https://www.virakesari.lk/article/211410
  9. இனி கப்பலுக்கு கம்ப்யூட்டரும் பாலமும் சேர்ந்து வழிவிடும்; New Pamban Bridge-ல் என்ன சிறப்பு? ராமேஸ்வரம் தீவை இந்திய நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம், இந்தியாவின் மிகச் சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக கடலுக்கு நடுவே கட்டப்பட்ட பாலமும் இதுதான். நூறாண்டுகளை கடந்த இந்த பாலம் பலவீனமடைந்ததாக கூறி அதன் அருகிலேயே தற்போது புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தில் உள்ள சிறப்புகள் என்ன? #Pamban #PambanBridge #Ramanadhapuram இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  10. Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 05:24 PM தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத் தொகை 21,763,170 ஆகும். அதாவது, இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்து காணப்படுகிறது. 15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டது. நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது. மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது. 2,433,685 பேருடன் கம்பஹா மாவட்டம் சனத்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 2,374,461 பேருடன் கொழும்பு மாவட்டம் அதிகளவான சனத் தொகையை கொண்டுள்ளது. குருணாகல், கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களும் தலா 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படுகின்றனர். மறுபுறம், வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாக தொடர்ந்து காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதேவேளை முல்லைத்தீவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் வசிக்கின்றார்கள். https://www.virakesari.lk/article/211411
  11. 07 APR, 2025 | 05:32 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் போது இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் சஞ்சய பந்த் (Sanjaya Panth), சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்களான பீட்டர் ப்ரூவர் (Peter Breuer), ஈவான் பபாஜியோரிஜியோ (Evan Papageorgiou) ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/211415
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஜித் கத்வி பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. உலகம் முழுக்க, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி இறக்குமதி வரி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த அறிவிப்பு உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகளில் பெரிய விளைவை ஏற்படுத்தியது. இன்று, அந்த இறக்குமதி வரிகளின் விளைவால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் கோடி ரூபாயை இழந்து வருகிறார்கள். இது எவ்வளவு காலம் தொடரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது பொருளாதார மந்தநிலையை உருவாக்கும் என்று சில நிபுணர்கள் கணிக்கின்றனர். அமெரிக்க பங்கு சந்தை ஐந்து முதல் ஆறு சதவிகிதம் வரை சரிந்தபிறகு, ஆசிய பங்குச் சந்தைகளும் இன்று பெரும் சரிவைக் கண்டன. இந்தியாவுக்கு இன்று கறுப்பு திங்கள். மும்பை பங்குச்சந்தையும், தேசிய பங்குச்சந்தையும் நான்குக்கும் அதிகமான சதவிகிதம் சரிந்ததில் முதலீட்டாளர்கள் சுமார் 19 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். அடுத்த 30 நாட்களில் சந்தையின் நிச்சயமற்ற தன்மை இன்னும் அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். 2008 பிரச்னைகளின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன பட மூலாதாரம்,REUTERS 2008 சப்ப்ரைம் வீட்டுக்கடன் நெருக்கடிக்குப் பிறகு பங்குச்சந்தை சந்திக்கும் மிகப்பெரிய சரிவு இதுதான். ப்ளூம்பர்க் செய்தியின்படி ஆசியப் பங்குச் சந்தைகள் கடந்த 16 ஆண்டுகளில் சந்தித்த மிகப் பெரிய சரிவு இது. இதற்கிடையே இந்த இறக்குமதி வரிப்போரைத் தொடங்கிய டொனால்ட் டிரம்போ பின்வாங்கும் மனநிலையில் இல்லை. ''நோயைத் தீர்க்க கசப்பு மருந்தை விழுங்குவது அவசியம்," என்று கூறியிருக்கிறார். டிரம்பின் இந்த கருத்துக்கு பிறகு பங்குச்சந்தை மேலும் வேகமாகச் சரிந்தது. டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகளுக்குப் பிறகு இந்திய நிறுவனங்கள் இன்னும் பலமான அடி வாங்கியிருக்கின்றன. பிரிட்டனை தளமாக கொண்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் அமெரிக்காவுக்கு ஏப்ரலில் வாகனங்களை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறது. இதனால் அதன் தாய் நிறுவனமான டாட்டா மோட்டார்ஸின் பங்கு இன்று பத்து சதவிகிதம் சரிந்துள்ளது. அந்நிய வாகனங்களுக்கு டிரம்ப் 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்ததற்கான விளைவு இது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற கணிப்பு அனைத்து ப்ளூ சிப் நிறுவனங்களின்(பெரிய நிலையான நிறுவனங்கள்) பங்குகளையும் பாதித்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸின் பங்குகள் இன்று சந்தை தொடங்கியதில் இருந்து ஏழு சதவிகிதத்துக்கும் அதிகமாக விழுந்தது. கடந்த 52 வாரங்களில் மிகக்குறைந்த மதிப்புக்குச் சென்றது. கிட்டத்தட்ட ரிலையன்ஸின் சந்தை முதலீட்டில் 2.26 லட்சம் கோடிகளை அழித்துள்ளது இந்த சரிவு. மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை1 ஏப்ரல் 2025 இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பங்குச்சந்தை எந்தப்பக்கம் செல்லும்? குஜராத்தை சேர்ந்த பங்குச்சந்தை வர்த்தக நிறுவனம் ஒன்றின் தலைவரான குஞ்சன் சோக்ஸி பிபிசியிடம் பேசியபோது, "அமெரிக்காவை கொசு கடித்தால் இந்தியாவுக்கு மலேரியா வரும் சூழல் இது. ஏனெனில் இந்த மொத்த உலகமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது," என்றார். ''1930களில் அமெரிக்கா இதுபோன்ற ஒரு முடிவை எடுத்தது பெரும் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளியது. இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்வது என்று நம்மை வழிநடத்த அந்தக் காலத்தைச் சேர்ந்த எந்த நிதி மேலாளரோ, சந்தையில் ஈடுபட்டவரோ, பொருளாதார நிபுணரோ இப்போது இல்லை" என்றார். '''டிரம்பின் இறக்குமதி வரிப்போர் இப்போது அதன் நான்காவது நிலையில் நுழைந்துள்ளது. தேர்தலின்போது இறக்குமதி வரியை அதிகரிக்கப்போவதாக அவர் எச்சரிக்கை செய்தது போரின் முதல்நிலை. தேர்தலில் வென்றபிறகு பிறகு செலவைக் குறைத்து அமெரிக்காவுக்கு மொத்த தயாரிப்பையும் கொண்டு செல்வது குறித்து அடுத்து பேசினார் மூன்றாவது நிலையில் , இறக்குமதி வரிகளையும், அதன் பிறகு பரஸ்பர வரிகளையும் அறிவித்தார். இதற்கு சீனாவும் இறக்குமதி வரி விதித்து பதிலளித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் அதையே செய்யும். இப்போது சூழல் என்னவென்றால் டொனால்ட் டிரம்ப் பின் வாங்கவில்லையென்றால் நான்காவது நிலையில் மிக ஆபத்தான நிலை உருவாகும்."என்கிறார் அவர் பங்குச்சந்தை எந்த திசையை நோக்கிச் செல்லும் என்று கணிப்பது இப்போது அனைவருக்குமே சிரமமான ஒன்றாக இருக்கிறது. "அதிகப்படிய நிலையற்றதன்மையால் உலக பங்குச்சந்தைகள் தீவிர ஏற்ற இறக்கத்தைக் காணும் காலமிது. டிரம்பின் இறக்குமதி வரிகளால் என்ன சூழல் ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது," என்று ஒரு குறிப்பில் கூறியுள்ளார் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு உத்தியாளர் முனைவர் வி.கே.விஜயகுமார். அமெரிக்காவின் கடன் மிக அதிகமாக இருப்பதால் அதன் அதிபர் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வந்தது என்று குஞ்சன் சோக்ஸி நம்புகிறார். "கடந்த 20 வருடங்களாக புதிய டாலர் நோட்டுக்களை அச்சடிப்பதன் மூலம் திவாலாகும் நிலையைத் தவிர்த்து வந்தது அமெரிக்கா. இப்போது அதன் வரம்பை எட்டிவிட்டது. எனவே இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் டிரம்புக்கு வந்துள்ளது.'' என்கிறார் அவர் கடந்த காலங்களிலும் அமெரிக்கா அதிக இறக்குமதி வரி விதித்ததற்குப் பின்னான காலகட்டங்களில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று கோட்டக் ஏஎம்சியின் நிர்வாக இயக்குனர் நிலேஷ் ஷா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 2008 பொருளாதார நெருக்கடியுடனும், கோவிட் -19 பொருளாதார மந்தநிலையுடனும் இதனை ஒப்பிட்ட அவர், இந்தியா பாதிக்கப்படாது என்று நம்பினால் அது தவறு என்றார். சென்னையில் 'மார்ஷல்' என்ற ஆங்கிலேயருக்கு தமிழ்நாடு அரசு சிலை வைத்தது ஏன்?22 மார்ச் 2025 இந்திரா - முஜிபுர் உடன்பாட்டை 'அடிமை ஒப்பந்தம்' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் அழைத்தது ஏன்?25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பங்குச்சந்தைகளை பாதிக்கும் மற்ற காரணிகள் டிரம்ப் நிர்வாகம் 180க்கும் அதிகமான நாடுகளின் மீது பெரிய வரிகளை விதித்துள்ளது, சந்தையில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்திய பங்குச்சந்தை 2026ம் வருட முதல் காலாண்டில் மேலும் சரியும் என்று பங்கு வர்த்தக நிறுவனங்கள் நம்புகின்றன. எம்கே குளோபலின் மதிப்பீட்டின்படி நிஃப்டி குறியீடு தற்போதைய 22000 புள்ளிகளில் இருந்து 21500 புள்ளிகள் வரை குறையக்கூடும். நிதி சேவை நிறுவனமான ஜே.பி.மார்கனின் கணிப்புப்படி அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள், இப்போது 40 சதவீதத்திலிருந்து 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளன. இதற்கிடையில் மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் இருந்து பங்குகளை வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை வரை சுமார் 13,700 கோடிக்கு மேற்பட்ட பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இந்தக் காரணங்கள் அனைத்துமே சந்தை சரிவதற்கான காரணிகள் ஆகும். தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்கள் அமைத்த 'பெருவழிகள்' பற்றி தெரியுமா?17 மார்ச் 2025 ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை14 மார்ச் 2025 பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK இந்தியாவில் இதன் பாதிப்பு எவ்வளவு இருக்கும்? இந்தியாவையும், அமெரிக்காவையும் பொருளாதார மந்தநிலை பலமாகத் தாக்கும் என்று எல்லா நிபுணர்களும் நம்பத் தயாராக இல்லை. "இந்தியா அமெரிக்காவுடன் அதிகம் வணிகம் செய்வதில்லை. அதோடு, உள் நாட்டில் இருக்கும் தேவைகளே நமது பொருளாதாரத்துக்கு ஆதரவு கொடுக்கப் போதுமானது. இந்த இறக்குமதி வரிப்போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ளது," என்று பிபிசியிடம் குறிப்பிட்டார் பங்குச்சந்தை ஆய்வாளர் அசிம் மேத்தா. "இறக்குமதி வரி அறிவிப்புக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள விஷயம் இந்தியாவுக்கு நல்லது. வரும் நாட்களில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு கட்டுமானத்தில் இந்திய அரசு ஆக்ரோஷமாகச் செலவழித்தால் இறக்குமதி வரிப்போரின் விளைவைத் தவிர்க்கலாம்'' என்றார் பொருளாதார மந்த நிலை பற்றிக் கேட்டபோது அஸிம் மேத்தா, ''பொருளாதார மந்தநிலை என்பது மிகக் கடுமையான வார்த்தை. ஒரு மூன்று நான்கு மாதங்களுக்குத் தேக்கம் இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று நான் நம்பவில்லை," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c05nmz80nn0o
  13. 07 APR, 2025 | 04:14 PM டி.பி.எஸ். ஜெயராஜ் பாகம் 1 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வார இறுதி இலங்கை விஜயம் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமைந்ததாக பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது ஏப்ரில் 4 வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரில் 6 ஞாயிற்றுக்கிழமை வரையிலான அவரின் விஜயத்தின் முக்கிய அம்சங்களாக இரு நாடுகளினதும் தேசிய பாதுகாப்புக்கு இடையிலான பிணைப்பின் தன்மையை அங்கீகரிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண ' விருது ஆகியவை அமைந்தன. இணக்கபூர்வமான ஒரு சூழ்நிலையில் முரண்பாட்டுக்குரியதாக அமைந்தது வடபகுதி கடற்பரப்பிற்குள் பெரும் எண்ணிக்கையில் அத்துமீறிப் பிரவேசித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிப்பிடிப்பதுடனும் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது போன்ற கெடுதியான நடைமுறைகள் மூலமாக கடல்வாழ் உயிரினங்களை நிர்மூலம் செய்து வருவதுடனும் தொடர்புடைய பிரச்சினை மாத்திரமேயாகும். இரு தலைவர்களும் எந்தளவுக்கு இந்த பிரச்சினை குறித்து விரிவாக ஆராய்ந்தார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால், அவர்களின் ஊடக அறிக்கைகள் இந்த பிரச்சினை தொடர்பில் வேறுபட்ட மனப்பான்மைகளைக் கொண்டிருப்பதை வெளிக்காட்டின. இந்த பிரச்சினைக்கு "நிலைபேறான தீர்வொன்றைக் காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறை ஒன்று தேவை என்று திசாநாயக்க வலியுறுத்தினார்." இழுவைப்படகுகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாரதூரமான சேதத்தை தடுத்து நிறுத்துவதற்கும் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை தடுப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை என்று நாம் கோருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார். ஆனால், மறுபுறத்தில் இந்திய பிரதமர் மோடி பெருமளவுக்கு நம்பிக்கையுடனான ஒரு அணுகுமுறையை கடைப்பிடித்தார். இந்த பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்று வர்ணித்த அவர் மனிதாபிமான அணுகுமுறை ஒன்று கடைப்பிடிக்ககப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியும் தானும் இணங்கியிருப்பதாக குறிப்பிட்டார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட அவர்களது படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதை தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி நிறுவன ரீதியான கலந்தாலோசனைகளை தீவிரப்படுத்துவதற்கும் அண்மைய எதிர்காலத்தில் இரு நாடுகளினதும் மீனவர் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு வசதி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டதாக ஊடகங்களுக்கு கூறினார்."இரு தரப்புகளுக்கும் இடையிலான உயர்மட்டங்கள் உட்பட சகல மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியான ஒரு அம்சமாக இது இருந்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் இரு தரப்புகளினாலும் கணிசமானளவு விரிவாக மீன்பிடிப் பிரச்சினை ஆராயப்பட்டது என்று கூறினார். "இறுதியாக பார்க்கும்போது இது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்றும் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மீள்பரிசீலனை செய்யமுடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்." மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை பற்றி வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு இணங்க இந்தியாவினாலும் இலங்கையினாலும் அடையாளபூர்வமான பரஸ்பர நல்லெண்ண சமிக்ஞை ஒன்று காண்பிக்கப்பட்டது. சட்டமா அதிபரினால் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தமிழ்நாடு இராமநாதபுரத்தைச் சேர்ந்த பதினொரு மீனவர்கள் இலங்கையினால் விடுதலை செய்யப்பட்டனர். வடபகுதி கடலில் அத்துமிறி மீன்பிடித்தமைக்காக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்திருந்தனர். அதேபோன்றே யாழ்ப்பாணத்தின் குருநகரைச் சேர்ந்த இரு மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்தனர். சீரற்ற காலநிலை காரணமாக படகுகள் திசைமாறி இந்திய கடற்பரப்புக்குள் சென்றபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பிரதமர் மோடி -- தமிழ்க் கட்சிகள் சந்திப்பு இது இவ்வாறிருக்க, வட இலங்கையின் டற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினையை ஏப்ரில் 5 ஆம் திகதி இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒரு தூதுக்குழுவும் கிளப்பியது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட் ) தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் யாழ்ப்பாண மாவடட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமீழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகிய எழுவர் அடங்கிய தூதுக்குழு மோடியைச் சந்தித்தது. இவர்களது சந்திப்பு தொடர்பாக ' தி இந்து ' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் அனுப்பிய செய்தி பின்வருமாறு ; "வட இலங்கையினதும் தமழ்நாட்டினதும் மீனவர்களைப் பாதிக்கும் மீன்பிடிப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வு காணுமுகமாக இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்யவேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைலர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 5, 2025) வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர். "பாக்குநீரிணையில் வளங்களுக்காக நீண்டகாலமாக நிலவிவரும் இந்த தகராறு குறித்து கவனத்துக்கு கொண்டுவந்த இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் போரினால் பாதிக்கப்பட்ட வட இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான பாதிப்புக்களையும் பாக்குநீரிணையில் கடல்சார் சூழல்தொகுதிக்கு ஏற்படுகின்ற அழிவுகளையும் விளக்கிக் கூறினர். "இந்த சந்திப்பின்போது தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் இழுவைப் படகுகளை பயன்படுத்தும் நடைமுறையை சாத்தியமானளவு விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கி மாற்று நடைமுறையை துரிதப்படுத்துவதற்கு 2016 ஆம் ஆண்டில் இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை நினைவுபடுத்தினார். 2016 நவம்பரில் புதுடில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற இலங்கை தூதுக்குழுவின் ஒரு உறுப்பினரான சுமந்திரன்" ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதற்கு இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாம் வரவேற்பதாக பிரதமர் மோடியிடம் கூறினோம். ஆனால் இழுவைப்படகுகளை பயன்படுத்தும் நடைமுறை இன்றுவரை தொடருவதை நாம் அவரிடம் சுட்டிக்காட்டினோம்" என்று கூறின்ர். "யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட தனிநபர் சட்டமூலம் ஒன்றையடுத்து 2017 ஆம் ஆண்டில் இலங்கை இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்தது. மீன் இனப்பெருக்கத்தை அனுமதிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரில் நடுப்பகுதிக்கும் ஜூன் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட சுமார் இரு மாதங்களில் இந்தியா அதன் கிழக்கு கிரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு பருவகால தடைவிதிக்கும் நடைமுறையை தற்போது பின்பற்றுகிறது." தமிழ்நாட்டு கரையோர மாவட்டங்கள் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்கள் சிலவற்றைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் வட இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பது இலங்கை தமிழ் மீனவர்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இது ஒரு சில படகுகள் அவ்வப்போது வந்து எமது கடலில் மீன்பிடித்துவிட்டுச் செல்லும் ஒரு விவகாரம் அல்ல. இந்த பிரச்சினையின் அம்சங்கள் மிகவும் பாரதூரமானவை. மீன்பிடி படகுகள் தொகுதி பல வருடங்களாக தொடருவது இதுதான். பெருவாரியான மீன்பிடி படகுகளைக் கொண்ட தொகுதி ஒன்று (Flotilla of fishing boats) எமது கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து வடகடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. படகுகளின் எண்ணிக்கை 500 க்கும் அதிகமானதாகவும் அவற்றில் பல படகுகள் வசதியான உபகரணங்களைக் கொண்ட இழுவைப் படகுகளாக இருக்கின்றன. இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயற்பாடாகும். இந்த படகுத் தொகுதியின நடவடிக்கைகள் மன்னார் குடாவிலும் வங்காள விரிகுடாவிலும் இலங்கையின் கடற்பரப்பில் ஒரு கடற்படை வந்து மீன்பிடிப்பது போன்று இருக்கிறது. இந்திய மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கரையோரத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார் மாவட்டங்களில் மிகவும் நெருக்கமான பகுதிகளுக்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. நெடுந்தீவு , கச்சதீவு போன்ற வடபகுதி தீவுகளுக்கு நெருக்கமாகவும் வந்து இந்திய மீனவர்கள் பெருமளவில் மீன்பிடிக்கிறார்கள். இந்திய படகுகள் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக எமது கடறபரப்புக்குள் வந்து பொழுது புலர்வதற்கு முன்னதாக திரும்பிச் சென்றுவிடுகின்றன. இந்த இந்திய படகுகள் தொகுதி தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்காக பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து செயற்படுகின்றன. இவற்றின் பெரும் எண்ணிக்கை காரணமாக இலங்கை மீனவர்கள் அவற்றை எதிர்கொண்டு தடுக்க முடியாமல் இருக்கிறது. இந்த படகுகள் தொகுதியின் தோற்றமே இலங்கை மீனவர்களை அச்சுறுத்துகிறது. இந்திய மீனவர்களிடம் அகப்படுகின்ற சில இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டு அவர்களது படகுகுகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலர் மரணமடைந்த சம்பவங்களும் உண்டு. இலங்கை கடற்படை இலங்கை கடற்படை கூட இந்திய மீன்பிடி படகுகள் தொகுதிக்கு நடுவில் நகருவதில்லை. அவ்வாறு இலங்கை கடற்படை கப்பல்கள் செய்தால் இந்திய படகுகள் அவற்றை சுற்றிவளைத்து மோதுகின்றன. அத்தகைய அண்மைய சம்பவம் ஒன்றில் இலங்கை கடற்படை வீரர் ஒருவருக்கு காயமேற்பட்டு இறுதியில் அவர் மரணமடைந்தார். இது சமாதான காலம். இந்தியாவுடன் இலங்கை போரில் ஈடுபட்டிருக்கவில்லை. அதனால், இலங்கை கடற்படையினர் இந்திய மீன்பிடிப் படகுகளில் இருக்கும் " சிவிலியன் ஆக்கிரமிப்பாளர்களை " நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யமுடியாது. இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் அச்சுறுத்தி அட்டகாசம் செய்கிறார்கள். ஆனால், இலங்கை கடற்படையினரும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சாத்தியமான வேளைகளிர் கடற்படை உஷாராகவே இருக்கிறது. அதனால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கரையோரத்துக்கு மிகவும் நெருக்கமாக வரமுடிவதில்லை. பெருவாரியான படகுகள் தொகுதியில் இருந்து விலகி தனியே வருகிற இந்திய படகை கடற்படை பாய்ந்து பிடித்து விடுகிறது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது தனியான படகுகளை கடற்படை சுற்றி வளைத்து பிடிக்கிறது. அந்நிய மீனவர்களின் கைதுசெய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை 550 இந்திய மீனவர்களைை கைது செய்ததாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை படகுகளின் சொந்தக்காரர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் உட்பட சிலர் குற்றவாளிகளாகக் காணப்படுவதுடன் ஏனையவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த வருடம் இதுவரையில் நூறுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 94 பேர் இன்னமும் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல் மீன்பிடிப் படகுகள் தொகுதியாக எமது கடற்பரப்புக்குள் ஊடுருவி எமது மீன்களையும் இறால்களையும் நண்டுகளையும் இந்திய மீனவர்கள் பிடிப்பது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு அம்சம் மாத்திரமே. அதை விடவும் படுமோசமான அம்சம் இயற்கைக்கு நிரந்தரமாக ஏற்படுத்தப்படுகின்ற அழிவாகும். இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய படகுகளில் அனேகமானவை இழுவைப் படகுகளாகும். அவை கடல் படுக்கை ஓரமாக பெரிய மீன்பிடி வலைகளை ஒன்றாக இழுத்துக்கொண்டு வருகின்ற படகுகளாகும். அவை மீன் முட்டைகள், சிறிய மீன்வகைகள், கூனிஇறால்கள் மற்றும் சகல மீன்வகைகளையும் கடல் தாவரங்களையும் ஒருசேர இழுத்துக் கொண்டு வருகின்றன. பல தசாப்தங்களாக தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு கரையோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியாவின் கடலுணவு ஏற்றுமதியை உயர்த்தி பெரும் இலாபத்தை கொடுக்கும் இந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகிறார்கள். மீன்வகைகள் இல்லாமல் போவதும் கூனி இறால்கள் குறைவடைந்து போவதுமே இதன் எதிர்மறையான விளைவாக இருந்து வருகிறது. தமிழ்நாடு கரையோரமாக உள்ள கடலில் குறிப்பாக பாக்கு நீரிணையின் இந்திய பக்கத்தில் இதுவே நிலைமையாக இருக்கிறது. இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவி தமிழ்நாட்டு மீனவர்கள் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதில் அதீத நாட்டம் காட்டுவதற்கு இந்த நிலைவரமே ஒரு மேலதிக காரணமாக இருக்கிறது. பெரியளவிலான இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் மூலம்க இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கடல்வாழ் உயிரினங்களை அழிக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் நிலைபேறாக மீன்பிடிப்பது என்பது சாத்தியமாகாமல் போகக்கூடிய அளவுக்கு இலங்கையின் கடல்வளங்கள் படுமோசமாக குறைவடைந்து போகக்கூடும். ஆனால், தங்களது சொந்த கடல் வளத்துக்கு மீட்டெடுக்க முடியாத கெடுதியை விழைவித்த சுயநலவாதிகளான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக்கும் அதே அழிவைச் செய்வதற்கு கங்கணம் கட்டி நிற்கிறார்கள். பகைமையும் வெறுப்பும் மேலும், தமிழ்நாடு மீனவர்கள் அவர்களது மொழியையே பேசுகின்ற இலங்கை மீனவர்கள் மீது நம்பமுடியாத அளவு பகைமையையும் வெறுப்பையும் வெளிக்காட்டுகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிடம் அகப்படுகின்ற இலங்கை மீனவர்கள் படுமோசமாக தாக்கப்படுவதுடன் அவர்களது படகுகளும் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன. இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான வலைகள் இந்திய மீனவர்களினால் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன. அண்மையில் சில இந்தியப் படகுகள் மாதகல் -- சுழிபுரம் கரையோரத்துக்கு நெருக்கமாக வந்து மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியிருக்கின்றன. ஒரு அரிதான சம்பவமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அதற்காக இழப்பீட்டை வழங்கியிருக்கிறது. இவ்வாறாக, தமிழ்நாட்டு மீனவர்கள் ஈவிரக்கமின்றியும் பேராசைத்தனமாகவும் வட இலங்கையின் கடல் வளங்களைச் சுரண்டுவதுடன மீட்சிபெறமுடியாத அளவுக்கு கெடுதியையும் விழைவித்துவிட்டுப் போவதை காணக்கூடியதாக இருக்கிறது. நீண்டகாலத்துக்கு நிலைபேறாக மீன்பிடிப்பதற்காக கடல் வளங்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது. தமிழ்நாட்டில் கடற்தொழில் இனிமேலும் ஒரு பாரம்பரியமான தொழிலாக இல்லாமல் போயிருப்பது இதற்கு பிரதான காரணமாகும். பல தலைமுறைகளாக கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த சாதிகளில் பல கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு கல்வியின் மூலமாக வாழ்க்கையில் மேம்பட்டு விட்டன. கடற்தொழில் இன்னமும் கூட குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலாகவோ அல்லது உள்ளூர் முதலாளியின் படகுகளுடன் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு தொழிலாகவே இல்லை. முலாளித்துவ தொழில் துறையாக மாறிய மீன்பிடி பதிலாக, கடற்தொழில் ஒரு முதலாளித்துவ தொழிற்துறையாக மாறிவிட்டது. மீன் வகைகளும் கூனி இறால்களும் நண்டுகளும் " பண்டங்களாக்கப்பட்டு விட்டன." அவை வாழ்வாதார நீட்சிக்கான எந்த அக்கறையும் இன்றி சாத்தியமானளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்ற பண்டங்களாகி விட்டன. பெரிய மீன்பிடி படகுகளும் இழுவைப் படகுகளும் பணக்கார முதலாளித்துவ வாதிகளுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. அவர்களில் பலர் அரசியல்வாதிகளாக அல்லது அரசியல் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருக்கிற்ர்கள். பல படகுகள் மற்றவர்களுக்கு " பினாமிகளாக " இருக்கின்ற மீனவர்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. பினாமி என்பதுை உண்மையில் இன்னொருவருக்கு சொந்தமாக இருக்கும் ஒரு சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளரைக் குறிப்பதாகும். தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நல உச்சவரம்பு ஒன்று இருப்பதனால், பல நில உடைமையாளர்கள் தங்களது மேலதிகமான நிலங்களை படிப்பறிவில்லாத ஊழியர்களையும் வேலைக்காரர்களையும் பினாமிகளாக வைத்து அவர்களின் பெயர்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோன்றே பல மீன்பிடி படகுகளும் உண்மையில் பினாமிகளாக இருக்கின்ற மீனவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கை -- இந்திய மீன்பிடித் தகராறுகளைப் பற்றி ஆய்வுசெய்த டச்சு ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மீன்பிடிப் படகுகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபடாத சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவர்கள் தினச்சம்பள அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களின் முதலாளிகளினால் இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்திய அதிகாரிகள் இவ்வளவு பெருந்தொகையான மீன்பிடிப்படகுகள் இந்திய அதிகாரிகளினால் கட்டுப்படுத்தப்படாமல் அல்லது பிடிக்கப்படாமல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் எவ்வாறு ஊடுருவக்கூடியதாக இருக்கிறது என்பது இந்த பிரச்சினையில் இன்னொரு முக்கியமான விடயம். நடப்பவை குறித்து இந்திய அதிகாரிகள் வேண்டுமென்றே கண்டும் காணாமல் இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு கண்டும் காணாமல் இருக்குமாறு தங்களது அரசியல் எசமானர்களினால் அறிவுறுத்தப்படுகிற்ர்கள் . அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்ற சாத்தியத்தையும் நிர்கரிக்க முடியாது. காரணம் என்னவாக இருந்தாலும் பிரச்சினை கூர்மையடைந்துவிட்டது. முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவின. இப்போது அவை பெரும்பாலும் தினமும் வருகின்ற என்று தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் நெடுந்தீவில் ஒரு கூட்டத்தில் கூறினார். கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கடற்தொழில், நீரியல்வள, சமுத்திரவியல் வள அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் இருக்கிறார். ஊவா மாகாணத்தின் பண்டாரவளையைச் சேர்ந்தவரான அவர் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராகவும் இருக்கிறார். தமிழ்நாடடில் உள்ள தமிழ்பேசும் சகோதரர்களின் நடவடிக்கைகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுடன் நன்கு பரிச்சயமானவராக சந்திரசேகர் விளங்குகிறார். 2024 பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதாகளைச் சேர்ந்த பெருமளவு மக்கள் தேசிய மக்கள் திசைகாட்டிச் சின்னத்துக்கே வாக்களித்தார்கள். வடகடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தவதாக தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதியே அதற்கு காரணமாகும். வடபகுதி மீனவர்களின் இந்த பிரச்சினை தொடர்பில் சந்திரசேகர் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க புதுடில்லிக்கு செல்வதற்கு முன்னதாக சந்திரசேகர் கொழும்பில் " தி இந்து " வுக்கு ஒரு நேர்காணலை வழக்கியிருந்தார். மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய அந்த நேர்காணல் அவர் நாசகாரத்தனமான இழுவைப்படகு முறையை இந்தியத்தரப்பு நிறுத்தினால் மாத்திரமே மீனவர்களின் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வைக்காண முடியும் என்று குறிப்பிட்டார். " வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட சகல இனக்குழுமங்களையும் சகல புவியியல் பிராந்தியங்களையும் சேர்ந்த மக்கள் அண்மைய தேர்தல்களில் எமக்கு ( தேசிய மக்கள் சக்திக்கு ) வாக்களித்து பெரிய ஒரு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அவர்களது அக்கறைகளை கவனிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் விளைவான இந்த நீண்டகாலப் பிரச்சினையே எமது வடபகுதி மீனவர்களின் முக்கியமான கவலையாக இருக்கிறது" என்று அமைச்சர் சந்திரசேகர் கூறினார். " நவீன தொழில்நுட்பத்தையும் நிலைபேறான வழிமுறைகளையும் பயன்படுத்தி மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரிவான திட்டங்களில் இலங்கை -- இந்திய மீனவர் தகராறுக்கு தீர்வைக் காண்பதும் ஒரு அங்கமாகும். 2017 ஆம் ஆண்டால் 17.2 கிலோ கிராமாக இருந்த நாட்டின் ஆள்வீத மீன் பாவனை இப்போது 11. 07 கிலோ கிராமாக குறைந்து விட்டது.இது மக்கள் புரதத்தை உள்கொள்ளும் அளவின் ஒரு வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கிறது. " 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேதனைமிகு பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு மந்தபோசாக்கு மிகுந்த கவனத்துக்குரிய பிரச்சினையாக இருக்கிறது. மக்கள் ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு கடலுணவு உற்பத்தியை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அவற்றை எல்லாம் செய்வதற்கு எமது கடல் மற்றும் கடல்சார் பல்வகைமையைப் பாதுகாகக்க வேண்டியது அவசியமாகும் " என்றும் அமைச்சர் சந்திரசேகர் அந்த நேர்காணலில் மேலும் கூறினார். இலங்கையின் நிலைப்பாடு மீன்பிடி நெருக்கடியில் இலங்கையின் நிலைப்பாடு மிகவும் தௌாவானது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும். வெறுக்கத்தக்க அந்த இழுவைப்படகு நடைமுறையை அவர்கள் நிறுத்த வேண்டும். நீணடகாலப் போரினால் பெரும் அவலங்களுக்கு உள்ளாகிய இலங்கை தமிழ் மீனவர்கள் தங்களது வாழ்வைக் கட்டியெழுப்பவும் தங்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதை தமிழ்நாட்டு மீனவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் " மனிதாபிமான " அணுகுமுறை ஆனால், இந்தியாவின் ஆதிக்க மனோபாவமும் அணுகுமுறையும் வேறுட்டதாக இருப்பது கவலைக்குரியது. இந்த பிரச்சினை மனிதாபிமான முறையில் அணுகப்பட்டு பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடி தொடக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் வரையானவர்களின் பதிலாக இருக்கிறது. இந்த மனிதாபிமான அணுகுமுறை என்பது பாதிக்கப்படும் இலங்கை தமிழ் மீனவர்கள் மீதான அக்கறையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது இலங்கை கடற்பரப்பில் அதுதுமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான அக்கறையின் விளைவானது. தமிழ்நாட்டு மீனவர்களை பாதிக்கப்படும் ஒரு தரப்பாக தவறான முறையால் காண்பிக்கப்படுகிறது. இலங்கை கடற்படையையும் ஆக்கிரமிப்பாளர்களாக தவறான முறையில் கூறப்படுகிறது. இலங்கை கடற்படை அப்பாவி தமிழ்நாட்டு கொடூரமான முறையில் கைதுசெய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்கிறது என்பதே இந்தியா கூறும் கதை. இந்திய மீனவர்களை கைது செய்யப்படக்கூடாது எனபதும் அவர்களது படகுகள் கைப்பற்றப்படக்கூடாது என்பதுமே இந்தியா விரும்புகின்ற இரக்கமானதும் கண்ணியமாதுமான மனிதாபிமான அணுகுமுறை. சுருக்கமாகச் சொல்வதானால், மனிதாபிமான அணுகுமுறை என்ற பெயரில் இந்திய மீனவர்கள் எமது கடல் வளங்களை தொடர்ந்து சுரண்டுவதை அனுமதிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள் அனுதாபம் கொன்று தின்னும் விலங்கு மீதானதாக இருக்கிறதே தவிர அதன் இரை மீதானதாக இல்லை. பேச்சுவார்த்தைகள் கொடுமையான பகிடி பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த பிரச்சினையை தீர்ப்பது என்பது கொடுமையான ஒரு பகிடியாகும். இது வீட்டுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக வீட்டுக்காரருக்கு கூறுவதை ஒத்ததாகும். இந்திய -- இலங்கை மீன்பிடி தகராறைப் பொறுத்தவரை, வெவ்வேறு நேரங்களில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவிட்டன. உருப்படியாக எந்த பயனும் ஏற்படவில்லை. அதற்கு காரணம் அந்த பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் நோக்குடனான செயற்பாடுகளாக இருந்தமையேயாகும். அத்துமீறலும் இழுவைப்படகு பயன்படுத்தலும் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இன்றி தொடருவதையே காணக்கூடியதாக இருக்கிறது. கச்சதீவு மேலும், இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் புதியதொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. கச்சதீவை இந்தியா இலங்கைக்கு 1974 ஆம் ஆண்டில் விட்டுக் கொடுத்ததன் விளவாகவே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது. கச்சதீவுக்கு அண்மையான கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் அவ்வப்போது பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பொய் பிரசாரப் படுத்தப்படுகின்றது. கச்சதீவை இந்தியா மீளப்பெற்றுக்கொண்டால் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தவறாகக் கூறப்படுகிறது. தமிழர்களின் இடர்பாடு இருட்டடிப்பு இந்திய -- இலங்கை மீன்பிடித் தகராறு தொடர்பில் இந்தியாவில் இடம்பெறுகின்ற கதையாடல்களில் இலங்கையின் வடபகுதி தமிழ் மீனவர்களின் அவலங்கள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். பிரச்சினை விரோத உணர்வைக் கொண்ட இலங்கை கடறனபடைக்கும் அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான மோதலாகவே காண்பிக்கப்படுகிறது. இலங்கை தமிழ் மீனவர்களின் இடர்பாடுகள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. கச்சதீவை மீளப்பெறுவதே பிரச்சினைத் தீர்வுக்கு முக்கியமானதாக பேசப்டுகிறது. எனவே இந்த பிரச்சினையின் தோற்றுவாய் என்ன ? ஏன்? எவ்வாறு இந்தப் பிரச்சினைக்குள் கச்சதீவு கொண்டுவரப்படுகிறது? இந்தியா கூறுவது போன்று இலங்கை "மனிதாபிமான " அணுகுமுறை ஒன்றைக் கடைப்பிடித்து வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை கைதுசெய்யக்கூடாதா? இந்த கேள்விகளை இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம். https://www.virakesari.lk/article/211400
  14. வணக்கம் வாங்கோ இருங்கோ எழுதுங்கோ....
  15. Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 01:01 PM வட கொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மரத்தன் ஓட்டப்போட்டியில் சுமார் 200 வெளிநாட்டு வீரர்களை வட கொரியாவின் தலைநகர் வரவேற்றுள்ளது. 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரத்தன் ஓட்டப் போட்டி வட கொரியாவின் முதல் ஜனாதிபதி கிம் இல் சுங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படுகிறது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. அதில் 950 வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். கொவிட்-19 தொற்று பரவியமையை அடுத்து வட கொரியா மரத்தன் ஓட்டப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், வடகொரியா மீண்டும் போட்டியை நடத்த கடந்த ஆண்டு முதல் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே அதன் தலைநகருக்குள் அனுமதித்தது. தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப் போலவே, ஓட்டப்பந்தய வீரர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுலா குழுவின் ஒரு பகுதியாக நாட்டிற்குள் நுழைய வேண்டியிருந்தது. போட்டி நிகழ்வின் பிரத்தியேக பங்காளராக திகழும் பீஜிங்கை தளமாகக் கொண்ட பயண நிறுவனமான கோரியோ டூர்ஸ், பீஜிங்கிற்குச் சென்று திரும்புவதற்காக 2,195 யூரோக்களுக்கு விமான பயணம் உட்பட ஆறு நாள் மரத்தன் சுற்றுப்பயணங்களை வழங்குகிறது. "பியோங்யாங் மரத்தன் மிகவும் தனித்துவமான அனுபவமாகும், ஏனெனில் இது உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என அந்த நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மரத்தன் ஓட்டப்போட்டி கிம் இல் சுங் மைதானம், ஜப்பானிய ஆட்சியை எதிர்ப்பதில் கிம் இல் சுங்கின் பங்கை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட வெற்றி வளைவு, மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கான குடியிருப்பு மாவட்டம் என கூறப்படும் “ மிரே எதிர்கால விஞ்ஞானிகள் வீதி ”உள்ளிட்ட நகரத்தின் அடையாளங்களைக் கடந்து வீரர்களை அழைத்துச் சென்றுள்ளது. ஓட்டப்போட்டி வீரர்கள் தங்கள் பந்தயத்தைத் ஆரம்பித்து முடிக்கும் வரை அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பியிருப்பதை இணையத்தில் வெளியாகியுள்ள படங்கள் காட்டுகின்றன, அவர்களில் பலர் தங்க நிற காகிதக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்கிறார்கள். "எங்கள் மக்களின் கண்கள் என் மீது இருந்ததால், நான் சோர்வாக உணரும் போதெல்லாம் சிரமங்களைத் தாங்கிக் கொள்ள முடிந்தது." என வட கொரிய ஓட்டப்பந்தய வீரரான பாக் கும் டோங், ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். பந்தய முடிவுகள் குறித்து பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை. வட கொரியா 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் குறைக்க மட்டுமே திட்டமிட்டிருந்தது. பெப்ரவரி மாதத்தில் தொலைதூர, கிழக்கு நகரமான ரேசனுக்குள் சில மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தது, ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு அந்த சுற்றுலாப் பயணிகள் வருகையை நிறுத்தியது. https://www.virakesari.lk/article/211368
  16. Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 02:51 PM கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடு 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்ததால் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (07) காலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, பங்குச் சந்தை நடவடிக்கைகள் காலை 9.51 மணி முதல் காலை 10.07 மணி வரை பதினாறு நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. மேலும் காலை 10.07 மணி முதல் காலை 10.21 மணி வரை பதினான்கு நிமிடங்கள் ஏல விற்பனையை நடத்தியது. அதன்பிறகு, வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் காலை 10.21 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகியது. S&P SL20 குறியீடு 240.45 புள்ளிகள் அல்லது 5.3 சதவீதம் சரிந்து 4,292.90 ஆகவும், அனைத்து பங்கு விலைச் சுட்டிகள் (ASPI) ஆரம்ப வர்த்தகத்தில் 4.16 சதவீதம் அல்லது 639.01 புள்ளிகள் சரிந்து 14,734.34 ஆகவும் சரிந்தது என கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்தள்ளது. பங்குகள் முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்தால் கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் இடைநிறுத்தப்படும். அதேவேளை, ஆசிய சந்தைகள் சரிந்துள்ளன, இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால் தூண்டப்பட்ட உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சியை ஆழப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/211375
  17. Published By: RAJEEBAN 07 APR, 2025 | 03:26 PM காசாவில் இரண்டு மருத்துவமனைகளிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஆறு செய்தியாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. காசாவின் தென்பகுதியில் உள்ள கான்யூனிசின் நாசெர் மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அந்த கூடாரங்கள் தீப்பற்றி எரிந்தன. இதன் போது பாலஸ்தீன் டுடே தொலைக்காட்சியின் உள்ளுர் செய்தியாளரான யூசெவ் அல் பஹாவி கொல்லப்பட்டார் . விமானதாக்குதலில் காயமடைந்த ஆறு ஊடகவியலாளர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதில் ஒருவர் கடும் எரிகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். மற்றுமொருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களின் கீழ் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள் மோதலில் ஈடுபடும் தரப்பினர் அவர்களை பாதுகாக்கவேண்டும். எனினும் ஒக்டோபர் 2023 இல் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் 200 ஊடகவியலாளர்களும் ஊடக பணியாளர்களும் இஸ்ரேலின் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/211396
  18. மஹிந்தவின் நிலை தொடர்பில் நாமல் வௌியிட்ட தகவல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தன. இது குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, “சமூக ஊடகங்களில் என்ன பேசப்பட்டாலும், நான் வீட்டிற்குச் சென்றபோது தந்தை நலமுடன் இருந்தார்” என்றார். https://thinakkural.lk/article/316894
  19. 07 APR, 2025 | 10:39 AM சிட்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்கமுயன்றதால் விமானத்தில் குழப்பநிலை ஏற்பட்டமை குறித்து ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஏஎவ்பி இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. சனிக்கிழமை சிட்னியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்க முயன்றார், ஏனைய பயணிகள் அவரை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் விமான பணியாளர்கள் பொலிஸாரின் உதவியை நாடினர். ஜோர்தானை சேர்ந்த 45 வயதுடைய நபர் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியமை, விமான பணியாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றார். எயர்ஏசியா விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள அவசர சூழ்நிலையில் வெளியேறுவதற்கான கதவை ஏன் இந்த நபர் திறக்க முயன்றார் என பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பிட்ட விமானம் மலேசிய தலைநகரிலிருந்து பயணித்துக்கொண்டிருந்ததாகவும், இந்த நபர் விமானத்தின் கதவுகளை திறக்க முயன்றதை தொடர்ந்து விமானபணியாளர்கள் அவரை விமானத்தின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்றனர் . இதன் போது அந்த நபர் விமான பணியாளர் ஒருவரை தாக்கினார் என குறிப்பிட்டுள்ளது. சிட்னியில் விமானம் இறங்கியதும் அவுஸ்திரேலிய பொலிஸார் உடனடியாக விமானத்திற்குள் ஏறியுள்ளனர். ஜோர்தான் நபர் இழைத்த குற்றங்களிற்காக பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நபரின் செயலால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும், விமானப்பயணங்களின் போது பயணிகளும் விமானபணியாளர்களும் இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகளை எதிர்கொள்ளக்கூடாது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எங்கள் பயணிகள் அல்லது பணியாளர்களின் பாதுகாப்பினை எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்துள்ள எயர்ஏசியா பணியாளர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்தனர், எந்த விதமான பொருத்தமற்ற செயற்பாடுகளையும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/211363
  20. சன்ரைசர்ஸ் 4-வது தோல்வி: குஜராத் அணிக்காக பேட்டிங், பவுலிங்கில் ஜொலித்த தமிழக வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 ஏப்ரல் 2025, 02:06 GMT ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 19-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட்செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை சேர்த்தது. 153 ரன்கள் என்னும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன், ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. ஒருதரப்பாக மாறிய ஆட்டம் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருதரப்பாகவே அமைந்தது. கடந்த சீசனில் இருந்து அதிரடி ஃபார்முலாவை கையில் எடுத்து ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் அந்த ஃபார்முலா வெற்றியைத் தரவில்லை. பந்துவீ்ச்சிலும், பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணியினர் சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டனர். சன்ரைசர்ஸ் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி (31), கிளாசன்(27), கம்மின்ஸ் (22) ஆகியோர் மட்டுமே ரன்கள் சேர்த்தனர். ஆனால் குஜராத் அணியினர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அற்புதமாகச் செயல்பட்டனர். பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தி நெருக்கடியளித்தது, நடுப்பகுதியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியது, டெத் ஓவர்களை சிறப்பாக வீசியது, பேட்டிங்கிலும் 2வது விக்கெட்டுக்கு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தது என குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக்கு உரியதாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தலை நிமிர வைத்த தமிழக வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் அதிக எண்ணிக்கையில் தமிழக வீரர்கள் இருக்கும் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிதான். இந்த அணியில் தமிழக வீரர்கள் சாய் கிஷோர், சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் தமிழக வீரர்கள் தங்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குஜராத் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சாய் சுதர்சன் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் சாய் கிஷோரும், பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக செயல்பட்டனர். வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்கள் (2சிக்ஸர், 5பவுண்டரி) விளாசி வெற்றிக்கு துணையாகினார். இதுநாள்வரை ஐபிஎல் தொடர்களில் கடைசிவரிசையில் களமிறங்கி வந்த வாஷிங்டன் சுந்தரை குஜராத் அணி நேற்றைய ஆட்டத்தில் 4வது வீரராகக் களமிறக்கியது. சிறந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சிமர்ஜித் சிங் ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என சுந்தர் விளாசவே, அத்தோடு சிமர்ஜித்துக்கு ஓவர் நிறுத்தப்பட்டது. கம்மின்ஸ் பந்துவீச்சில் பவுண்டரி, ஷமி பந்துவீச்சில் பவுண்டரி என சுந்தர் விளாசினார். 168 ஸ்ட்ரைக் ரேட்டில் சுந்தர் அதிரடியாக பேட் செய்து வியக்க வைத்தார். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தருக்கு குஜராத் அணி வாய்ப்புக் கொடுக்காவிட்டாலும் பேட்டிங்கில் தன்னால் சிறப்பாக 4வது வரிசையில் விளையாட முடியும் என்பதை சுந்தர் நிரூபித்துவிட்டார். சுப்மன் கில்லுடன் 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த வாஷிங்டன் சுந்தர் 90 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணியில் 3வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். பந்துவீச்சில் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசிய 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். தமிழக வீரர்கள் 4 பேரில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே கேப்டு (capped) வீரர், சர்வதேச அனுபவம் கொண்டவர். ஆனால் மற்ற 3 வீரர்களும் அன்கேப்டு (uncapped) வீரர்கள், சர்வதேச அனுபவம் இல்லாத நிலையிலும் இவர்களின் ஆட்டம் தமிழகத்தை தலைநிமிர வைக்கிறது. இன்னும் இந்திய அணியின் கதவுகள் சாய் சுதர்சனுக்கும், கிஷோருக்கும் ஏன் திறக்கப்படவில்லை என்ற கேள்வியை இந்த ஆட்டம் விட்டுச் செல்கிறது. மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES யார் வெற்றியாளர்கள்? வெற்றிக்குப்பின் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில் "பந்துவீச்சாளர்கள்தான் ஆட்டத்தை மாற்றியவர்கள். ஏராளமானோர் டி20 குறித்தும், பேட்டிங், பந்துவீச்சு குறித்துப் பேசுகிறார்கள். எங்களைப் பொருத்தவரை போட்டியில் வெற்றி பெற செய்வது பந்துவீச்சாளர்கள்தான். அதனால்தான் எங்கள் அணியில் பந்துவீ்ச்சுக்கு முக்கியத்துவம் அளிப்போம். பவர்ப்ளேயில் டெஸ்ட் போட்டி நுட்பத்தை பயன்படுத்தினோம். பேட்டிங் செய்யும் வாஷிங்டனும், நான் பேசிக்கொண்டு பேட் செய்தோம், சுந்தர் அடித்த பல ஷாட்களும் அற்புதமானவை. முன்பு மும்பைக்கு எதிரான போட்டி கடும் நெருக்கடியானதாக இருந்தது, வாஷிங்டன் கால்காப்பு கட்டி தயாராகஇருந்தாலும் இம்பாக்ட் விதியால் அவரால் களமிறங்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராகவும், பேட்டராகவும் சுந்தரைக் காண முடிந்தது. இருவருக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது இதனால், அணியை வெற்றிக்கு கொண்டு சேர்க்க முடிந்தது. சிராஜ் பந்துவீச்சு அருமையாக இருந்தது, அவரின் பந்துவீ்ச்சில் புதிய உத்வேகம், காணப்படுகிறது" எனத் தெரிவித்தார். ரஷித்கானை ஓரங்கட்டிய சாய் கிஷோர் குஜராத் அணியில் இருக்கும் ரஷித் கான் இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே மோசமாகப் பந்துவீசி வருகிறார். இந்த ஆட்டத்தில் கூட 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தவில்லை. சிறப்பாக தொடங்கினாலும் ரஷித்தான் 3வது போட்டியாக விக்கெட் வீழ்த்தாமல் ஃபார்மின்றி இருக்கிறார். ஆனால், தமிழகத்தன் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர், ரஷித்கான் பந்துவீச்சைவிட குறைந்த வேகத்தில் பந்துவீசியதால், பந்து நன்றாக டர்ன் ஆகியது, பந்துவீச்சிலும் பல்வேறு வேரியேஷன்களை கிஷோர் வெளிப்படுத்தினார். இதனால் மிகப்பெரிய விக்கெட்டான கிளாசனையும்(27), நிதிஷ் குமார் (31)விக்கெட்டையும் சாய் கிஷோர் எளிதாக வீழ்த்தினார். ரஷித் கான் பந்துவீச்சை கையாள்வதில் சன்ரைசர்ஸ் பேட்டர்கள் சிரமப்பட்டதைவிட, சாய் கிஷோர் பந்துவீச்சை ஊகித்து ஆடுவதில்தான் பெரும் சிரமப்பட்டனர். காத்தவராயன் வரலாறு: நாட்டார் தெய்வங்கள் சாதி ஆணவக் கொலையால் உதித்தவையா? ஓர் ஆய்வு6 ஏப்ரல் 2025 சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வியக்க வைத்த 'வாஷி' குஜராத் அணியால் வாங்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் முதல்முறையாக இந்த ஆட்டத்தில் களமிறங்கினார். தன்னுடைய சிறுவயது பள்ளி தோழன் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தபின் வாஷிங்டன் சுந்தர் 4வது வீரராக களமிறங்கினார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் எந்த அணியும் வாஷிங்டனை 4வது இடத்தில் களமிறக்கியதில்லை என்ற நிலையில் அவரை துணிந்து குஜராத் அணி களமிறக்கியது. பவர்ப்ளேயின் கடைசி ஓவரைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர், சிமர்ஜித் சிங் ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினா். 2016 ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் அபினவ் முகுந்துடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி வெளுத்து வாங்கிய அதே நினைவுகளை சுந்தர் கண்முன் நிறுத்தினார். அதிரடியாக பேட்செய்த வாஷிங்டன் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். ஆனால், அரைசதத்தை தவறவிட்டாலும் வாஷிங்டன் பேட்டிங் அரைசதத்துக்கும் மேலானது என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். தொடக்கத்திலேயே குஜராத் அணி சாய் சுதர்சன், பட்லர் இருவரின் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும், கேப்டன் கில், வாஷிங்டன் கூட்டணி அணியைதூக்கி நிறுத்தியது. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள்ச சேர்த்தது. கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்த சுப்ம ன் கில் 36 பந்துகளில் அரைசதம் அடித்து 61 ரன்களிலும், ரூதர்போர்ட் கேமியோ ஆடி 35 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் சறுக்கல் ஹைதராபாத்தில் வழக்கமான பேட்டிங் பிட்சாக இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் ஸ்வரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால், நிதானமாக பேட் செய்யக்கூடிய, சற்று மந்தமான ஆடுகளத்தை, பொறுமையாக ஆடக்கூடிய ஆடுகளத்தை அமைத்தது. இதனால் பேட்டர்களை நோக்கி பந்து வேகமாக வருவதுபோல் தெரிந்தாலும் பிட்சில் பந்துபட்டவுடன் நின்று மெதுவாகவே பேட்டரை நோக்கி வரும்போது எதிர்பார்த்த ஷாட்ளை பேட்டர்களால் ஆட முடியவில்லை. இதனால் டிராவிஸ் ஹெட், அபிஷேக், இஷான் கிஷன் ஆகிய 3 அதிரடி பேட்டர்களும் சொற்பரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். கடந்த 5 போட்டிகளாக சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இந்த 5 போட்டிகளில் மட்டும் பவர்ப்ளேயில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி 12 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவர்ப்ளே ஓவர்களை பந்துவீச்சிலும்,பேட்டிங்கிலும் பயன்படுத்திக்கொண்ட அணி, சிறப்பான வெற்றியைப் பெறுகிறது என்பது புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம். டிராவிஸ் ஹெட், அபிஷேக் இருவருமே கடந்த சீசன்களில் அதிரடியான தொடக்கத்தை அளித்து எதிரணிகளை கதிகலங்க வைத்தவர்கள். ஆனால் இருவரும் இந்த ஆட்டத்தில் பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். முதல் சிக்ஸரை சன்ரைசர்ஸ் அணி 13வது ஓவரில்தான் அடித்தது. சன்ரைசர்ஸ் அணியில் டாப்ஆர்டர் 3 பேட்டர்களைத் தவிர்த்து கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, மெண்டிஸ், கம்மின்ஸ் என வீரர்கள் இருந்தும், ஒரு வீரர்கூட அரைதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 22 ரன்களைச் சேர்த்ததால் ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது இல்லாவிட்டால் மோசமாகியிருக்கும். இங்கிலாந்து அணி கடைபிடிக்கும் பாஸ்பால் ஃபார்மெட்டையே சன்ரைசர்ஸ் அணியும் கையில் எடுத்துள்ளது. அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்குவது, எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்து மனரீதியாக குழப்பி அவர்களை வெல்வது, பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணிகளை எளிதாக வீழ்த்துவது என்ற அதிரடி ஃபார்முலாவை சன்ரைசர்ஸ் கையாண்டது. ஆனால், கடந்த சீசனில் அந்த அணிக்கு சிறப்பாக செயல்பட்ட இந்த அதிரடி ஃபார்முலா இந்த சீசனுக்கு எடுபடவில்லை, 5 போட்டிகளிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் சன்ரைசர்ஸ் அணி 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. பந்துவீச்சில் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் குஜராத் அணியில் பெரிதாக விக்கெட் வீழ்த்தவில்லை. மென்டிஸ், அபிஷேக், சிமர்ஜித் சிங் ஆகியோர் தலா ஒரு ஓவர் வீசிய 20ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஷமி, கம்மின்ஸ், ஜீசன் அன்சாரி ஆகிய 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES மிரள வைத்த முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுக்காதது, ஆர்சிபி அணி ஏலத்தில் சிராஜை கழற்றிவிட்டது ஆகியவற்றால் விரக்தியில் இருந்த முகமது சிராஜ் தனது பந்துவீச்சால் பதில் அளித்தார். தன்னை தவறவிட்டது தவறு என்பதை பிசிசிஐக்கும், ஆர்சிபி அணிக்கும் பந்துவீச்சு மூலம் சிராஜ் உணர்த்தினார். கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிராஜ்-ஹெட் உரசிக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அதன்பின் அபிஷேக் சர்மா(18), அனிகேத் வர்மா(18), சிமர்ஜித் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை சிராஜ் வீழத்தினார். சிராஜின பந்துவீச்சு நேற்று சன்ரைரசர்ஸ் பேட்டர்களுக்கு உண்மையில் சிம்மசொப்னமாகத்தான் இருந்தது, ஒரு சிக்ஸர் கூட அடிக்கவிடாத சிராஜ், 3 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். சிராஜ் வீசிய 4 ஓவர்களில் 17 டாட் பந்துகள் அடங்கும். பிரசித் கிருஷ்ணா தனக்குரிய பங்களிப்பை சரியாகச் செய்து 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் இஷாந்த் சர்மா மட்டுமே விக்கெட் இன்றி 54 ரன்களை வாரிவழங்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cyvq4znvq98o
  21. Published By: VISHNU 07 APR, 2025 | 02:33 AM நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்பு உத்தியோகபூர்வ திறப்பு மற்றும் மருத்துவமனையின் ஆய்வகத்தின் திசு அறிவியல் துறையின் தரப்படுத்தலை பெறுவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை பிரிவு, மாதாந்த சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், கதிரியல் பிரிவு, உள் நோயாளர் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு என அனைத்து பிரிவுகளும் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தரப்படுத்தப்பட்ட ஆய்வக சேவையை வழங்கும் நோக்குடன் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆய்வகத்தின் திசு அறிவியல் பிரிவு, இலங்கை அங்கீகார வாரியத்தால் (SLAB) ஆய்வகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்திற்காக சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விண்ணப்பித்தது. அதற்கமைய அரச மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் தரப்படுத்தலுக்கு உட்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். சகல பொது சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும். கடமையில் உள்ள ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களின் தகவல்கள் உட்பட மனித வளங்களை நிர்வகிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முழு கவனமும் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளது. அத்தோடு டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சுகாதார பதிவுகளை ஒன்றிணைப்பதுடன், மருந்து விநியோக வலையமைப்பை எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பத்துடன் நெறிப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நோயாளர்களுக்கு பராமரிப்பு மற்றும் உயர்தர சிகிச்சை சேவைகளை வழங்குவது சுகாதார ஊழியர்களின் பொறுப்பாகும். இதற்காக, சுகாதார அமைச்சு அதன் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் பணிபுரிவதற்கு அவசியமான சூழலை அமைத்துத் தருவதுடன், தொழில்சார் ஏனைய உரிமைகளையும் வழங்க தயாராக உள்ளது. நாட்டில் உள்ள அரச மருத்துவமனை வளாகத்தை பொறியியல் மற்றும் கட்டிட வடிவமைப்பைப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான மற்றும் கவர்ச்சியான இடமாக மாற்ற அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மிகவும் கொந்தளிப்பான காலத்திற்குப் பிறகு அமைதியாக பயணித்து வரும் நாட்டின் சுகாதார சேவையை இன்றைய நிலைக்குக் கொண்டுவருவதில் மருத்துவமனை நிர்வாகம், விசேட மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் வழங்கிய பங்களிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் எனது பாராட்டை இத்தருனத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நெருக்கடியான சூழலில் சுகாதாரத் துறையை சரியான திசையில் வழிநடத்த பங்களித்தவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார். https://www.virakesari.lk/article/211352
  22. Published By: VISHNU 07 APR, 2025 | 02:29 AM (செ.சுபதர்ஷனி) முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் பாதாள உலகக் குழுவின் குற்றச் செயலுக்கு துணைப்போயுள்ளனர். ஆகையால் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கண்டியில் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக்குழுவின் குற்றச் செயல்கள் மற்றும் ஆங்காங்கே இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்பன நாட்டில் வெகுகாலமாக இடம்பெறும் நிகழ்வுகளாக உள்ளன. நாம் இவ்வாறான குற்றச்செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த விரும்பவில்லை. அவ்வாறே போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாதாள உலகக்குழுக்களை இந்நாட்டில் ஸ்தாபிப்பதற்கு பல அரசியல் தலைமைகள் முயற்சித்துள்ளன. இது யாரும் அறியாத இரகசியம் அல்ல. நாட்டில் இத்தகையோரை நிலைநிறுத்தி குற்றச்செயல்களின் மூலம் வெகுகாலமாக ஆட்சியை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். ஆகையால் இத்தகைய செயற்பாடுகளை நான்கு மாதங்களில் இல்லாமல் ஒழிப்பதென்பது முடியாத காரியம். எனினும் நிச்சயமாக பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். பொதுமக்களுக்கு அச்சமின்றி, சந்தேகமற்ற வகையில் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். பாதாள உலகக்குழுவை ஒழிப்பதற்கான விசேட திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும், ஆயுதங்களும் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்வாறே பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களே கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. தற்போது இவ்வாறு மூப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 500 பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகள் கடமை நிமித்தம் கலைந்து செல்ல உள்ளனர். அவர்களையும் மேற்படி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாடுகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைப்போயுள்ளனர். ஆகையால் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய ஒரு சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலகக்குழுவை ஒழிக்கும் நடவடிக்கை முப்படையில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/211351
  23. 07 APR, 2025 | 10:56 AM இலங்கை இராணுவத்தோடு இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு ஜனாதிபதி அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதில் முக்கியமானது இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும். இதன் அடிப்படையில் இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை இராணுவம்தான். ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது. தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள ராணுவம். யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள ராணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்றதையும் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி சிதைத்து சின்னாபின்னமாக்கி சுட்டுக் கொன்றதையும் இங்கிலாந்தின் சேனல் -4 தொலைக்காட்சி வெளியிட்டு உலகின் மனசாட்சியை உலுக்கியது. இந்தக் கொடூர காட்சிகளைக் கண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீர் விட்டுக் கதறினர். இனப்படுகொலை நடத்திய சிங்கள ராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும். தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷன்’ விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள். https://www.virakesari.lk/article/211367
  24. உத்தியோகபூர்வ விஜயம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையிலிருந்து புறப்பட்டார் இந்திய பிரதமர் மோடி Published By: DIGITAL DESK 3 06 APR, 2025 | 02:42 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த நான்காவது தடவை இதுவாகும் என்பதுடன், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்புகளும் பலப்படுத்திக்கொள்ளப்பட்டன. அத்துடன், அயலவருக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மஹாசாகர் நோக்குக்கு அமைவாக, இராஜதந்திர விவகாரங்களில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என்பதையும் இந்தியப் பிரதமரின் விஜயத்தினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விஜயம் பல முக்கியமான பல்வேறு எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு உடன்பாடுகளை எட்டக்கூடியதாக அமைந்ததுடன், இந்த ஒத்துழைப்புகளின் வெற்றிகரமான பலன்களை இலங்கை மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும். மேலும், மக்களுக்கான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும். https://www.virakesari.lk/article/211312
  25. பட மூலாதாரம்,X/NARENDRAMODI கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை வருகைத் தந்த பிரதமர் நரேந்திர மோதி, இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புக்களில் கலந்துக்கொண்டதுடன், உடன்படிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். தனது இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 6) அநுராதபுரம் நோக்கி பயணித்து, அங்கிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டார். அநுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகொப்டர் மூலம் இராமேஸ்வரம் நோக்கி பிரதமர் நரேந்திர மோதி பயணித்தார். அநுராதபுரம் ஏன் சென்றார்? படக்குறிப்பு,புத்த விகாரையின் வருகைப் பதிவேட்டில் மோதி கையெழுத்திடுகிறார் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு சென்ற மோதி வழிபாடுகளில் ஈடுபட்டார். மோதியுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் கலந்துக்கொண்டிருந்தார். விகாரைக்கு வருகைத் தந்த பிரதமர், அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்கநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரை சந்தித்து ஆசிப் பெற்றதுடன், அவருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். தான் பிறந்த குஜராத் மாநிலத்தில் 1960ம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் புனித சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோதி, இதன்போது நாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார். படக்குறிப்பு,புத்த கயா தொடர்பான கோரிக்கைகளை வழங்கிய தேரர் இந்த புனித சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்துகின்றமை தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. மேலும், இந்தியாவின் புத்த கயாவை ஆன்மீக நகரமாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அட்டமஸ்தானாதிபதி, பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மோதி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை அடுத்து, ஜயஸ்ரீ மகா போதி விகாரை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த நுழைவாயிலை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்துள்ளார். வடக்குக்கான ரயில் மார்க்கம் திறப்பு படக்குறிப்பு,இலங்கையில் இந்திய உதவியுடன் புதிய ரயில் திட்டங்கள் தொடக்கம் இந்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மஹவ - ஓமந்தை ரயில் தண்டவாளம் மற்றும் அநுராதபுரம் - மஹவ ரயில் சமிக்ஞை கட்டமைப்பு ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்துள்ளார். அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோர், அந்த ரயில் மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவையை பச்சை கொடியை அசைத்து தொடக்கி வைத்திருந்தனர். சுமார் 91.27 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் மஹவ - ஓமந்தை ரயில் தண்டவாளம் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், 14.89 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஹவ - அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு, இந்திய நிதியுதவியில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வடக்குக்கான ரயில் மார்க்கத்தின் பணிகளை இந்தியா முன்னெடுத்திருந்ததுடன், அநுராதபுரம் தொடக்கம் ஒமந்தை வரையான ரயில் தண்டவாள பணிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளையும் இந்தியா முன்னெடுத்திருந்தது. இவ்வாறான நவீனமயப்படுத்தப்பட்ட ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் தண்டவாளம் ஆகியனவே இன்று (ஏப்ரல் 6) திறந்து வைக்கப்பட்டன. படக்குறிப்பு,ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் நோக்கி பயணித்தார் நரேந்திர மோதி ஜயஸ்ரீ மகா போதி விகாரையின் சிறப்பு என்ன? படக்குறிப்பு,புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு கிளையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள மரம் அநுராதபுரம் விகாரையில் உள்ளது இந்திய பிரதமர் நரேந்திர மோதி அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு இன்று வழிபாடுகளுக்காக சென்ற நிலையில், அந்த விகாரையின் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது. புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையிலிருந்து வளர்க்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளரசு மரத்துடன் அமையப் பெற்ற விகாரையாக அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரை கருதப்படுகின்றது. இந்த வெள்ளரசு மரமானது கி.மு 288ம் ஆண்டில் நடப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இலங்கை மாத்திரமன்றி உலக வாழ் பௌத்த மக்களினால் புனித பூமியாக இந்த இடம் கருதப்படுகின்றது. பௌத்தர்களின் புனித சின்னமாக கருதப்படுகின்ற வெள்ளரசு மரத்தின் கிளையை, தற்போது இந்தியாவில் உள்ள பகுதியை ஆண்ட அசோக பேரரசரின் மகளும், பௌத்த பிக்குணியுமான சங்கமித்தையினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அநுராதபுரத்தை ஆட்சி செய்த அரசரான தேவநம்பியதீசனால் இந்த மரம் நடப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் புத்த கயாவிற்கும், அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிக்கும் இடையில் நேரடி தொடர்பு காணப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு தனது முதலாவது விஜயத்தில் ஈடுபட்ட 2015ம் ஆண்டு, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c078kvrjl0go

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.