Everything posted by ஏராளன்
-
புலர் அறக்கட்டளை
மாற்றுத்திறனாளிகள், விசேட தேவையுடையோருக்கு உதவியும் ஆதரவும் வழங்கும் இலாப நோக்கற்ற தொண்டு அமைப்பு.
-
pular.jpg
-
viber_image_2024-12-03_21-59-30-284.jpg
-
viber_image_2024-12-03_21-59-29-900.jpg
-
viber_image_2024-12-03_21-59-29-465.jpg
-
viber_image_2024-12-03_21-59-29-085.jpg
-
viber_image_2024-12-03_21-59-28-707.jpg
-
viber_image_2024-12-03_21-59-28-234.jpg
-
viber_image_2024-12-03_21-59-27-809.jpg
-
viber_image_2024-12-03_21-59-27-440.jpg
-
viber_image_2024-12-03_21-59-30-664.jpg
-
0-02-03-59ac91cea3b6f307a0fbec629ed9e284294bee37c232ba1ca67fa7e2b15b5560_4f6a6d8cc459ac56.jpg
-
b9182296-e65f-4ea3-b27e-d641f3f92bd5.JPG
-
12-04-23.jpg
-
AHC.jpg
-
16.jpg
-
15.jpg
-
14.jpg
-
13.jpg
-
12.jpg
-
11.jpg
-
- pular.jpg
-
நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டம்
Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 03:23 PM நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. விஸ்வாவசு வருடம் சித்திரை முதல் நாள், இன்று திங்கட்கிழமை (14) அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (14) விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் திங்கட்கிழமை (14) காலை இடம் பெற்றன. விஜிதாகரன் சர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜையில் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விஷேட பூஜை மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு , வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. திங்கட்கிழமை (14) காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , காலை 07 மணிக்கு வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் 'விசுவாவசு' சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் திங்கட்கிழமை (14) காலை முதல் ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. காலை 4:00 மணியளவில் சுப்ரபாதமும், 5 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15 மணியளவில் சங்கற்பம், அபிஷேகமும், 6 மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15 மணியளவில் வசந்த மண்டப பூசையும் 6:45 மணி அளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம் பெற்றது. அதை தொடர்ந்து 7:30 மணியளவில் கை விசேஷமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில் பொங்கல் வழந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர். மேலும் மாவட்டத்தின் பல பாகங்களில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211975
-
தற்போதைய அரசாங்கமும் டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 04:49 PM ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும், நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு, நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல்லன்சேன பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையில் நடைபெற்ற வட்டார மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைவாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்து, டீசல் மற்றும் அனல் மின்சாரம் பயன்பெறும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. சதிகாரர்களால் மின்சாரத்துறை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கும் மாபியாக்களிடம் மின்சாரத்துறை கையளிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என மேடைக்கு மேடை பிரஸ்தாபித்த அரசாங்கம் தற்போது எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களின் அடிமைகளாக மாறியுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும். இன்று மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. சுகாதாரம் என்பது சேவையல்ல, அது மனித உரிமையும், அடிப்படை உரிமையுமாகும். இலவச மருத்துவம் என்ற மக்களின் மனித உரிமையைக் கூட அரசாங்கம் மீறியுள்ளது. இன்று அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை. இலவச மருத்துவ சேவை காணப்படும் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாமையினால் உயிர்காக்கும் மருந்துகளை கூட தனியார் மருந்தகங்களில் வாங்கும் நிலைக்கு இன்று நாடு வந்துள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை. இன்று நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்து, வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியடைந்து, வருமானம் கூட குறைந்துள்ள இவ்வேளையில், பொருட்களின் விலைகளும், வாழ்க்கைச் செலவுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கக்கூட முடியாத நிலை உருவாகி வருகிறது . ஜே.வி.பி தேர்தல் காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தந்து, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வறுமை அதிகரித்து வருகின்றன. மேடைகளில் மக்களுக்காக கோஷங்கள் எழுப்பினாலுர், ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பிரகாரம் செயல்படத் தவறியுள்ளனர். வெறும் பேச்சு, பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். வறுமையை அதிகரிக்கச் செய்து, நிவாரணங்களை குறைக்கும் நடவடிக்கையையே தற்போதைய அரசாங்கம் செய்து வருகிறது. அரச ஊழியர்களினது சம்பளத்தை ரூ. 20,000 ஆல் அதிகரிப்போம் என சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் சம்பளத்தை அதிகரித்துத் தருவோம் என்றனர். அதுவும் நடந்தபாடில்லை. ஆகவே இந்த அரசாங்கம் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியே வருகிறது. தெளிவான அதிகாரம் கிடைத்தும் மக்கள் செய்தது ஒன்றுமில்லை. திறம்பட ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கவே மக்கள் தெளிவான அதிகாரத்தை வழங்கினர். ஆனால் அரசாங்கமானது இன்னும் கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு தமது இயலாமையை மறைத்து, மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு ஜனநாயக ரீதியாக சரியான பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211999
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடித்து ஆடுவதை மறந்துவிட்டாரோ?!
-
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் : எப். பி. ஐ. அறிக்கையில் உறுதி
14 APR, 2025 | 07:14 AM இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 டிசம்பர் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட எப்.பி.ஐ. அறிக்கையில், 2019 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்காவின் எப்.பி.ஐ. (FBI) மூலம், கலிஃபோர்னியாவின் அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஆணையிலேயே 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என உறுதியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில், தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 268 பேர் கொல்லப்பட்டனர். நுட்பமான நீதிமன்ற சாட்சியங்கள், சமூக ஊடக பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எப். பி. ஐ. அறிக்கையில், இலங்கையில் இயங்கிய உள்ளூர் ஐ.எஸ். அமைப்பை சஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய விதமும், அந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் திட்டத்தை எப்படி திட்டமிட்டார் என்பதையும் விளக்குகிறது. இந்த அறிக்கை மிக முக்கியமான ஆதாரங்களைக் கொண்டிருந்த போதிலும், இலங்கையினால் இது புறக்கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் நீதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை எப்.பி.ஐ. யின் அறிக்கையின் உறுதித்தன்மை சுட்டிக்காட்டுகின்றன. எப். பி. ஐ. அறிக்கையை பார்வையிட https://cdn.virakesari.lk/uploads/medium/file/281832/Easter_Attack_Report_US_District_Court_SLGuardian_Copy-3.pdf https://www.virakesari.lk/article/211972
-
தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்த வரலாறு
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 14 ஏப்ரல் 2025 (தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிபிசி தமிழின் பழைய கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது) தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சொல்லியே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி? தமிழ்நாட்டில் ஒவ்வொரு புத்தாண்டு நெருங்கும்போதும், "தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திர மாதம் பிறக்கிறதா?" என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் அவை எப்போதிருந்து புழக்கத்திற்கு வந்தன என்ற கேள்வியும் எழுப்பப்படும். இது ஒரு முடிவில்லாத சர்ச்சை. தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் துல்லியமாக எப்போதிருந்து துவங்கியது, ஏன் துவங்கியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுகளைக் குறிப்பிட பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய பல்வேறு காலக் கணிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கலி வருடம், கொல்லம் வருடம் (கேரளத்தில் பயன்படுத்தப்படும் முறை. உதயமார்த்தாண்ட வர்மாவால் துவங்கப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. 823ஆம் ஆண்டிலிருந்து இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்தனர்), விக்ரமாதித்ய வருடம் (விக்ரமாதித்ய மன்னரால் கி.மு. 57 துவங்கப்பட்டதாகக் கருதப்படும் வருடம்), சாலிவாகன சகாப்தம் (சாலிவாகனன் எனப்படும் சாதவாகன மன்னன் கி.பி. 78ல் துவங்கி வைத்த முறை), ஃபஸ்லி (அக்பர் அரியணை ஏறிய ஆண்டில் துவங்குவது. அறுவடையை மையமாகக் கொண்ட காலக் கணிப்பு முறை), ஹிஜ்ரி (இஸ்லாமிய காலக்கணிப்பு முறை) என்று நீளும் கணக்கீட்டு முறைகளில் இந்த சம்வத்சரம் எனப்படும் 60 ஆண்டு சுழற்சி முறையும் ஒன்று. பெண் விடுதலை முதல் சாதி ஒழிப்பு வரை - அம்பேத்கர் கூறும் ஜனநாயகத்தின் 3 சக்திகள் எவை?6 மணி நேரங்களுக்கு முன்னர் தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது?14 ஏப்ரல் 2025 இது தவிர, தமிழ்நாட்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ற கணக்கீட்டு முறை தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படுகிறது. கிரிகேரியன் நாட்காட்டியோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 2023ஆம் ஆண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டில் 2054ஆம் ஆண்டாகும். 1972 முதல் இது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ ஆண்டு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. மற்ற கணக்கீட்டு முறைகளுக்கும் சம்வத்சர முறைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. மற்ற ஆண்டு முறைகள், தொடர்ச்சியான எண்களைக் கொண்டவை. ஆனால், இந்த சம்வத்சர முறை, எண்களுக்குப் பதிலாக 60 பெயர்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, 60 ஆண்டுகள் முடிந்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து அந்தப் பட்டியல் துவங்கும். இந்தப் பட்டியலில் முதல் பெயர் 'பிரபவ' என்று துவங்குகிறது. 'அக்ஷய' என்ற பெயரோடு இந்தப் பட்டியல் முடிவுக்கு வருகிறது. வராகமிக்ரர் எழுதிய வானியல் நூலான பிருகத் சம்ஹிதையில்தான் (கி.பி. 505 - 587) முதன்முதலாக, இந்த 60 பெயர்களும் நாம் இப்போது பயன்படுத்தும் வரிசையில் காணப்படுகின்றன. சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டைக் குறிக்கிறது. ஆனால், 'வருஷ' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் 'சம்வத்சரம்' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் வித்தியாசம் உண்டு. 'வருஷம்' என்பது பூமியின் ஒரு சூரிய வருடத்தைக் குறிக்கிறது. ஆனால், 'சம்வத்சரம்' என்பது வியாழனின் சுழற்சியை மையமாகக் கொண்டது. அதாவது, ஒரு சம்வத்சர ஆண்டு என்பது 361.026721 நாட்களைக் கொண்டது. பூமியை அடிப்படையாகக் கொண்ட சூரிய ஆண்டைவிட, 4.232 நாட்கள் குறைவு. இதனைச் சரிசெய்ய, ஒவ்வொரு 85 சம்வத்சர ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்த 60 பெயர்களில் ஒன்று தாண்டிச் செல்லப்படும். அதாவது அந்த ஆண்டு 'பிரபவ' என்ற பெயர் சூட்டப்படவிருந்தால், அதற்கு அடுத்த பெயரான 'விபவ' என்ற பெயர் சூட்டப்படும். ஆனால், காலப்போக்கில் இது கைவிடப்பட்டது. சம்வத்சரமும் வருஷமும் ஒரே காலகட்டத்தைக் குறிப்பதாக மாறிவிட்டன. ஒரே ஒரு மரத்திற்காக ரூ.1 கோடியை டெபாசிட் செய்த ரயில்வே - விவசாயிக்கு ஜாக்பாட்7 மணி நேரங்களுக்கு முன்னர் முழுவதும் பெண்களே நிரம்பிய குழு இன்று விண்வெளி பயணம் - இந்த 6 பேரும் யார்? என்ன செய்யப் போகிறார்கள்?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES எப்போதிலிருந்து 'சம்வத்சர' பட்டியல் கடைப்பிடிக்கப்படுகிறது? வட இந்தியாவில் நீண்ட காலமாக இந்தப் பட்டியல் பயன்படுத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் 13-14ஆம் நூற்றாண்டில் இருந்துதான் இந்த முறை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார் ஆய்வாளர் அ.கா. பெருமாள். "தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் 13-14ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்துதான் இந்த பெயர்களைக் குறிப்பிட்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தென்காசி கோவிலில் பல இடங்களில் இந்த வருடப் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இந்த சுழற்சி ஆண்டு முறையையும் இந்தப் பெயர்களையும் தமிழ்நாட்டில் பரவலாக்கியது பாண்டிய மன்னர்கள்தான். சோழமன்னர்களின் கல்வெட்டுகளில் இவை கிடையாது" என்கிறார் அ.கா. பெருமாள். இலக்கியங்களைப் பொறுத்தவரை, இடைக்காடர் எழுதிய வருடாதி வெண்பாவில் இந்த அறுபது ஆண்டுப் பெயர்களும் வருகின்றன. இந்தப் பெயர்களையும் சொல்லி, அந்தந்த ஆண்டுகள் எப்படியிருக்கும் எனப் பாடியிருக்கிறார் இடைக்காடர். இவரது காலம் 15ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் இந்த அறுபது ஆண்டுகளும் வரிசைப்படி காணப்படுவது இந்த வருடாதி வெண்பாவில்தான். "கல்வெட்டுகள், இடைக்காடரின் பாடல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது 14-15ஆம் நூற்றாண்டில் இது பிரபலமாக ஆரம்பித்திருக்கலாம்" என்கிறார் அ.க. பெருமாள். இதே கருத்தையே முன்வைக்கிறார் கல்வெட்டு ஆய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியன். "15ஆம் நூற்றாண்டில்தான் இது பிரபலமாகியிருக்க வேண்டும். ராஜராஜசோழனின் கல்வெட்டுகளிலோ, அவனுக்குப் பிந்தைய சோழ மன்னர்கள் கல்வெட்டுகளிலோ இந்த வருடப் பெயர்கள் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சியாண்டையும் சக ஆண்டையும்தான் கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்" என்கிறார் அவர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கும்போது, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இதனை அப்படிப் பார்க்கத் தேவையில்லை என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி. "தமிழ் இங்கிருந்து வந்ததாகவும் சமஸ்கிருதம் வெளியில் இருந்து வந்ததாகவும் சொல்லி, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே சமஸ்கிருதமும் தமிழும் நெருக்கமாக இருந்திருக்கின்றன. இரு மொழிகளுக்கும் இடையில் ஒரு நீண்ட காலத் தொடர்பு இருக்கிறது. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்பவர்கள் மொழியியலாளர்கள் அல்ல. அவர்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தம் சார்ந்து அந்தக் கருத்தைச் சொல்கிறார்கள். ஆகவே இந்தப் பெயர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு நீண்ட காலத் தொடர்ச்சி இருக்கிறது" என்கிறார் அவர். ஆனால், இந்த சம்வத்சர முறையிலான பெயர்களை ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதில் வேறு ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, இந்தப் பெயர்கள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரும்பவும் அதே பெயர் வருமென்பதால், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு நாம் குறிப்பிட விரும்பும் ஆண்டு எது என்ற குழப்பம் ஏற்படும். 'நானே தலைவர்' - மோதிக் கொள்ளும் ராமதாஸ் - அன்புமணி; பாமகவில் என்ன நடக்கிறது? முழு பின்னணி14 ஏப்ரல் 2025 காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "கல்வெட்டுகளைப் பொறித்த மன்னர்கள் இதில் தெளிவாக இருந்தார்கள். அவர்கள் இந்த சுழற்சி ஆண்டைக் குறிப்பிட்டாலும் சக ஆண்டு, சாலிவாகன ஆண்டு போன்ற பிற ஆண்டுகளையும் சேர்த்தே குறிப்பார்கள். இதனால், அவர்கள் எந்த வருடத்தைச் சொல்கிறார்கள் என்பதில் குழப்பம் கிடையாது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் பதிப்பாளர்களாக இருந்தவர்கள், தங்கள் புத்தகங்களில் கிரிகேரியன் ஆண்டையோ, வேறு ஆண்டையோ குறிக்காமல், வெறும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார் அ.கா. பெருமாள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காலத்தைக் கணக்கிட்டுக் குறிப்பிடுவது சங்க காலத்தில் இருந்தே இருந்துவருகிறது. அதற்கு நல்ல உதாரணம், புறநானூற்றின் 229வது பாடல். கூடலூர் கிழார் பாடிய இந்தப் பாடல், கோச்சேரமான் யானைகட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியது. அவன் குறிப்பிட்ட நாளில் இறப்பான் எனக் கணித்து, அதேபோல அவன் இறந்துவிட கையறு நிலையில் பாடிய பாடல் இது. இந்தப் பாடலின் பல இடங்களில், ராசிகள், நட்சத்திரத்தின் நிலை, மாதத்தின் பெயர் ஆகியவை வருகின்றன. ஆனால், காலத்தைக் குறிப்பிட தங்களுக்கென தொடர்ச்சியான ஒரு ஆண்டு முறையை தமிழர்கள் ஏன் உருவாக்கவில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz7wz3eggl0o
-
அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
இந்தப் பண்டிகைக்காலம் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும் - புத்தாண்டு வாழ்த்துசு் செய்தியில் வடக்கு ஆளுநர் 11 APR, 2025 | 05:06 PM 'இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும்' என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், வடக்கு மாகாண மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு புதுப்பித்தல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான வாய்ப்பையும் குறிக்கின்றது. இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும். ஒற்றுமை, கலாசார நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் உணர்வோடு இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொள்வோம். இந்தப் பண்டிகை நாளில், எமது வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம். சமூகங்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகளை வலுப்படுத்துவோம். கடந்த காலங்களில் பின்னடைவைச் சந்திருந்த எமது நாடும், மாகாணமும் மீண்டெழுந்து வரும் இந்தத் தருணத்தில் புதிய உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடும் நாம், எதிர்காலத்தில் சிறப்பான இலக்கை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211818
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LIVE 30th Match (N), Lucknow, April 14, 2025, Indian Premier League Lucknow Super Giants 166/7 Chennai Super Kings (11/20 ov, T:167) 87/3 CSK need 80 runs in 54 balls. Current RR: 7.90 • Required RR: 8.88 • Last 5 ov (RR): 28/2 (5.60) Win Probability: CSK 67.50% • LSG 32.50% தொடக்கம் எல்லாம் நல்லாத்தான் தொடங்குது! பினிசிங் சரியில்லையே?!
-
ஒரே ஒரு மரத்திற்காக ரூ.1 கோடியை டெபாசிட் செய்த ரயில்வே - விவசாயிக்கு ஜாக்பாட்
பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத் பதவி, பிபிசி செய்தியாளர் 14 ஏப்ரல் 2025, 03:06 GMT 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்மரம் ஒன்றுக்காக ரூ. 1 கோடியை மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மத்திய ரயில்வே செலுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, ரயில்வே ரூ. 1 கோடியை செலுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயி, இந்த பணத்தில் இருந்து பாதியை அதாவது ரூ. 50 லட்சத்தை எடுத்துக் கொள்ளவும் ஏப்ரல் 9-ஆம் தேதி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. செம்மரம் ஒன்றுக்காக விவசாயி ஒருவர் இழப்பீடு பெற்றது எப்படி? நடந்தது என்ன? இங்கே பார்க்கலாம்! உண்மையில் நடந்தது என்ன? மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ளது கர்ஷி என்ற கிராமம். இங்கே தன்னுடைய ஐந்து மகன்களோடு வாழ்ந்து வருகிறார் விவசாயி கேசவ் ஷிண்டே. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அன்று செம்மரம் ஒன்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கர்ஷி கிராமத்தில் அவருக்கு 2.29 ஹெக்டர் நிலம் சொந்தமாக உள்ளது. வர்தா - யவத்மால் - புசத் - நந்தெத் ரயில் பாதை அவருடைய நிலத்தின் ஊடாக செல்கிறது. இந்த திட்டத்திற்காக மத்திய ரயில்வே அவருடைய நிலத்தை கையகப்படுத்தியது. நிலத்திற்கான இழப்பீட்டை ஷிண்டே பெற்றார். கையகப்படுத்த வந்த அதிகாரிகளிடம், அவருடைய நிலத்தில் இருக்கும் செம்மரத்திற்கும் இழப்பீடு வேண்டும் என்று கேட்டார். அவருடைய நிலத்தில் இருந்த யேனா மற்றும் கருங்காலி மரத்திற்கும், நிலத்திற்கு அடியே இணைக்கப்பட்டுள்ள பைப்புகளுக்கும் இழப்பீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ஷிண்டே. அடர்த்தியாக வளர்ந்து நிழல் தரும் இந்த அழகான மரங்களை வளர்க்க தமிழ்நாட்டில் தடை ஏன்?27 ஜனவரி 2025 பனை மரத்தை ஒத்த உலகின் மிகப் பழமையான மரம் - எப்படி தோன்றியது?10 மார்ச் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செம்மரக்கட்டைகள் அதற்கு அதிகாரிகள், முதலில் செம்மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். வனத்துறை அந்த ஆய்வை நடத்த வேண்டும் என்று கூறி கடிதம் ஒன்றையும் அவர்கள் வழங்கியுள்ளனர். கேசவ் ஷிண்டேவின் மகனும் இந்த வழக்கின் மனுதாரருமான பஞ்சாப் ஷிண்டே அளித்த தகவலின் படி, அந்த நிலத்தில் இருந்த மா உள்ளிட்ட சில மரங்களுக்கான இழப்பீட்டை ஷிண்டே பெற்றுள்ளார். அங்கே இருந்த கிணறுக்காக ரூ. 8 லட்சம் வரை இழப்பீட்டைப் பெற்றதாக தெரிவிக்கும் பஞ்சாப் ஷிண்டே, செம்மரம் உள்ளிட்ட இதர மரங்களுக்கும், பைப் இணைப்புகளுக்கும் இழப்பீடு அப்போது வழங்கப்படவில்லை என்று கூறுகிறார். இது தொடர்பாக அவர் 2014-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர், ரயில்வே, நீர்பாசனத்துறை உள்ளிட்ட பல துறைகளிடம் மனு கொடுத்திருக்கிறார். "இருப்பினும் எங்களுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நாங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு உயர் நீதிமன்றத்தை அணுகினோம்," என்று கூறுகிறார் பஞ்சாப் ஷிண்டே. நேபாளம்: தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்4 ஜூலை 2024 மனித தலையீட்டால் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சந்திக்கும் புதிய சவால்15 செப்டெம்பர் 2024 பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT படக்குறிப்பு,கேசவ் ஷிண்டே (இடது), அவருடைய மகன் பஞ்சாப் ஷிண்டே (வலது) செம்மரத்தை மதிப்பாய்வு செய்த பிறகு இழப்பீடு அதிகரிக்குமா? நீதிமன்றத்தை அணுகிய ஒரே வருடத்தில் இழப்பீட்டைப் பெற்றனர் ஷிண்டேவின் குடும்பத்தினர். இருப்பினும் அவருடைய நிலத்தில் இருக்கும் செம்மரத்தின் மதிப்பு இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. மரத்தின் மதிப்பு ஆய்வு செய்யப்படுவதற்கு முன்பாக ரூ. 1 கோடியை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி பணமும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் அதன் மதிப்பு ரூ. 5 கோடி வரை செல்லலாம் என்று என்று ஷிண்டேவின் வழக்கறிஞர் அஞ்சனா ராவத் நர்வதே பிபிசி மராத்தியிடம் தெரிவிக்கிறார். வனத்துறை அதிகாரிகள் மற்றும் இதர துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்படும். அதன் பிறகே, நிலத்தில் இருக்கும் மரத்தின் மதிப்பை எப்படி ஆய்வு செய்வது என்பது முடிவு செய்யப்படும். அதன் மதிப்பைப் பொருத்து மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். பேய் மரம்: விசாகப்பட்டினம் மக்களை இந்த மரம் அஞ்சி நடுங்கச் செய்வது ஏன்?16 டிசம்பர் 2023 மரங்களுக்கு 75 வயதானால் ஓய்வூதியம் - ஹரியாணாவில் வியக்க வைக்கும் திட்டம்6 டிசம்பர் 2023 பட மூலாதாரம்,ISTOCK படக்குறிப்பு,மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் அதன் விலையானது ரூ. 5 கோடி வரை செல்லலாம் என்று என்று ஷிண்டேவின் வழக்கறிஞர் அஞ்சனா ராவத் நர்வதே தெரிவிக்கிறார் மதிப்பீடு செய்வதில் உள்ள சிக்கல் காரணமாகவே இழப்பீட்டை வழங்கவில்லை என்று ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜா சௌபே கூறுகிறார். "உயிருடன், அந்த நிலத்தில் நிற்கும் மரத்தின் மதிப்பை எப்படி ஆய்வு செய்வது? ஆய்வு செய்யாமல் எப்படி இழப்பீட்டை வழங்குவது? இந்த காரணங்களால் தான் இழப்பீட்டை ரயில்வே வழங்கவில்லை. இப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரூ. 1 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது ரயில்வே. இது செம்மரத்திற்கான இழப்பீடு மட்டுமே," என்று பிபிசி மராத்தியிடம் பேசும் போது அவர் தெரிவித்தார். செம்மரத்தின் விலை தொடராக ஆந்திர பிரதேசத்தில் உள்ளவர்களிடம் பேசியதாக தெரிவிக்கிறார் ஷிண்டே. தனியார் பொறியாளர் ஒருவரை வைத்து செம்மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ததாகவும் அவர் கூறுகிறார். ஷிண்டேவின் கருத்துப்படி, இந்த மரம் ரூ. 4 கோடி 94 லட்சம் மதிப்புடையது. நிலத்தை கையகப்படுத்திய காலம் முதல் இந்த நாள் வரையில், இந்த மதிப்பிற்கான வட்டியையும் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டுள்ளார். நிலத்திற்கு அடியே பதிக்கப்பட்டுள்ள பைப் மற்றும் இதர மரங்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கான இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என்று ஷிண்டேவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் செம்மரம் இருப்பது தெரியவந்தது எப்படி? கேசவிற்கு இப்போது வயது 94. அவருடைய மகன்கள் அனைவருக்கும் வயது 50-ஐ தாண்டிவிட்டது. அவருடைய குடும்பத்தினர் உதவியுடன்தான் இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் கேசவ். அவருடைய நிலத்தில்தான் ரயில் நிலையம் அமைய உள்ளது என்பதால் அவருடைய பெரும்பான்மை நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவருடைய நிலத்தில் மா மற்றும் இதர மரங்கள் பயிரப்பட்டிருந்தன. ஆனால் அங்கே செம்மரம் ஒன்று இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. ரயில்வே திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் போதுதான் அவர்களுடைய நிலத்தில் செம்மரம் இருந்தது தெரிய வந்தது. ரயில்வே நிர்வாகம் அந்த மரத்தை அடையாளப்படுத்த உதவியது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சாப் ஷிண்டே அளித்த தகவலின் படி, நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பே சில ரயில்வே ஊழியர்கள் வந்து நிலத்தை அளவிட்டுள்ளனர். அவர்கள் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலமாகவே அந்த மரம் செம்மரம் என்பதை ஷிண்டேவின் குடும்பத்தினர் அறிந்துள்ளனர். அவர்களின் நிலத்தில் அப்படி ஒரு மரம் இத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதை அவர்களால் நம்பவே இயலவில்லை. செம்மரம் உண்மையாகவே பார்க்க எப்படி இருக்கும் என்று அவர்கள் யுடியூப் வீடியோக்களை பார்வையிட்டுள்ளனர். பிடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிகள்: மரங்களின் காவலர் சுபாஷ்6 செப்டெம்பர் 2019 சீமைக் கருவேல மரங்கள் வரமா? சாபமா? உயிராபத்தையும் மீறி நடக்கும் கரிமூட்டத் தொழில்28 மார்ச் 2022 பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT படக்குறிப்பு,மதிப்பாய்வு முடிந்த பிறகு, செம்மரத்தின் மதிப்பைப் பொறுத்து அதற்கான இழப்பீட்டை ஷிண்டேவின் குடும்பம் பெறும். இதில் அனுபவம் உள்ள ஆட்களிடம் மரம் குறித்து விசாரித்த போதுதான் இந்த மரம் செம்மரம் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். எனவேதான் நிலம் கையகப்படுத்தப்படும் போது, செம்மரத்திற்கும் இழப்பீடு வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். "ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்," என்று ஷிண்டே தெரிவிக்கிறார். உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரூ. 1 கோடி அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 50 லட்சத்தை எடுக்க அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம். தற்போது மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதிப்பாய்வு முடிந்த பிறகு, செம்மரத்தின் மதிப்பைப் பொறுத்து அதற்கான இழப்பீட்டை ஷிண்டேவின் குடும்பம் பெறும். ரூ. 1 கோடி இழப்பீடு பெறப்பட்டது குறித்து ஷிண்டே கூறியது என்ன? "நாங்கள் எதிர்பார்த்த இழப்பீடு எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வந்த பின், மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகு முறையான இழப்பீடு கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களுக்கு நியாயமான முறையில் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை," என்று பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார் பஞ்சாப் ஷிண்டே. பஞ்சாப் ஷிண்டே பொதுத்துறையில் பணியாற்றியவர். பணி ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த ஓய்வூதியம் அனைத்தையும் இந்த வழக்கிற்காக செலவிட்டதாக அவர் தெரிவிக்கிறார். தற்போது ஷிண்டேவின் நிலத்தில் ரயில்வே பாதைக்கான பணிகள், வழக்கு காரணமாக தாமதம் அடைந்துள்ளது. சென்னையில் பெருகி வரும் குறுங்காடுகள்: பசுமை அதிகரிக்குமா?24 மே 2022 10 கோடி மரங்கள் நடுவதற்காக தேசிய விடுமுறை அறிவித்த நாடு எது தெரியுமா?22 நவம்பர் 2023 செம்மரம் என்றால் என்ன? அதன் மதிப்பு ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில், சேஷாசலம் மலைத்தொடரில் செம்மரங்கள் அதிகமாக காணப்படுகிறது தமிழ்நாடு - ஆந்திரபிரதேசம் எல்லையில் அமைந்துள்ள சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் செம்மரங்கள் அதிகமாக காணப்படுகிறது. ஐந்து லட்சம் சதுர ஹெக்டர் பரப்பில் உள்ள செம்மரங்களின் சராசரி உயரமானது 8 முதல் 11 மீட்டர்கள் ஆகும். இது மிகவும் மெதுவாக வளரக் கூடியது. அதனால்தான் இது மிகவும் அடர்த்தியான மரமாக உள்ளது. சீனா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்த மரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62z5v9997xo
-
அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம் - புத்தாண்டு வாழ்த்தில் பிரதமர் ஹரிணி 14 APR, 2025 | 06:16 AM வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம் என தமிழ், சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'வளமான நாடு, அழகான வாழ்க்கை'க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வரும் இவ் வேளையில் மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும் புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம். ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் புதுப்பிக்க வேண்டிய தேவையுள்ள நேரத்தில் இப் புத்தாண்டு மலர்கிறது. எமது கலாசாரம் மற்றும் பெறுமானங்களில் வேரூன்றியிருக்கும் நேர்மறையான மாற்றத்தை அடைந்து கொள்வதற்கு இலக்குகளின் அடிப்படையில் நாம் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்பதை இந்த பாரம்பரிய பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது. அண்மைய வரலாற்றில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பலருக்கு புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி நினைத்தும் பார்க்க முடியாதளவு கடினமாக இருந்ததை நாம் அறிவோம். இருப்பினும் ஊழல் மற்றும் மோசடி சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கு மக்களின் துணிச்சலான முயற்சிகள் ஒரு புதிய ஆரம்பத்துக்கு வழி வகுத்துள்ளன. அதனால்தான் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு முக்கிய மைல் கல்லைக் குறித்து நிற்கிறது. இது வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து சமூகங்களும் சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனநாயகக் கொள்கைகளின் கீழ் ஒன்றிணைந்துள்ள ஆண்டாகும். எதிர்வரும் மே மாதத்தில் அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை. புலர்ந்திருக்கும் புத்தாண்டில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் இத் தருணத்தில் அனைத்து பிரஜைகளும் தங்கள் சமூகங்களில் கௌரவம், அமைதி மற்றும் பரிவுணர்வுடன் செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம். மலரும் இந்த சிங்கள - தமிழ் புத்தாண்டில் இலங்கை தேசத்துக்கு புதியதோர் மாற்றமும் வளமான எதிர்காலமும் அமைய புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலிமையும் ஐக்கியமும் புத்தெழுச்சியும் கிடைக்க எனது பிரார்த்தனைகள்! உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211832
-
அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி 14 APR, 2025 | 06:25 AM 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம். வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கே உரித்தாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்த வேண்டும். சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டிற்காக நமது பொறுப்பை மேலும் வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது. மேலும் பூகோள அரசியலை போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வருகிறது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்று பிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன. இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளை கலைந்து சமூகத்திற்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பாகும். மேலும், மக்கள் வாழ்வை புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான மனப்பாங்கு மற்றும் சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும். இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும். நாட்டிற்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றிபெறச் செய்யவும் நாட்டையும் மக்களையும் வெற்றிபெறச் செய்வதற்காகவும் இந்த புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் அனைவருக்கும் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும்! என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211727
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குல்தீப் யாதவ் ரன்அவுட் ஆன காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்து 12 ரன்களில் தோற்றது. மும்பை அணியின் தோல்வி நிச்சயமாகிவிட்டதாக ரசிகர்கள் கருதிய போதுதான் அந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. நேரிலும், நேரலையிலும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணிப்புக்கு மாறாக, மூன்றே பந்துகளில் டெல்லியிடம் இருந்து வெற்றியை மும்பை அணி பறித்தது. மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு பரஸ்பர வரி விதிப்பில் இருந்து டிரம்ப் விலக்கு அளித்தது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் ரோஹித் மீண்டும் ஏமாற்றம், கைகொடுத்த திலக் வர்மா மும்பை அணிக்கு 5வது போட்டியிலும் ரோஹித் சர்மா(18) நல்ல தொடக்கத்தை இந்த ஆட்டத்திலும் வழங்கவில்லை. பவர்ப்ளேயில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. 2வது விக்கெட்டுக்கு ரிக்கெல்டன்(41), சூர்யகுமார்(40) ஆகியோர் 38 ரன்கள் சேர்த்தனர். 3வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி 60 ரன்கள் சேர்தது நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. ஹர்திக் பாண்டியா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 6 பந்துகள் இடைவெளியில் ஹர்திக், சூர்யகுமாரின் விக்கெட்டுகள் போனதால் மும்பை சற்று தடுமாறியது நமன்திர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணியில் திலக் வர்மா அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா, நமன் திர் ஜோடி கடைசி நேரத்தில் 33 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஸ்கோர் 200 ரன்களைக் கடக்க உதவினர். திலக் வர்மாவைப் பொருத்தவரை இதுவரை மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் 5 அரைசதங்களை விளாசியிருந்தார் ஆனால் ஒருமுறைகூட மும்பை அணி வென்றதில்லை. இந்த முறைதான் திலக் வர்மா அரைசதம் அடித்து மும்பை அணி வென்றுள்ளது. டெல்லி அணியின் ரி்ஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், விப்ராஜ் நிகம் 8 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES 7ஆண்டுகளுக்குப் பின் அரைசதம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கிய கருண் நாயர், 3 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் தொடரில் நேற்று ஆடினார். ஏறக்குறைய 7ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் நேற்று அரைசதம் அடித்தார். அதிரடி ஆட்டம் ஆடிய கருண் நாயர் 22 பந்துகளில் அரைசதம் அடித்து 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் என 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அசுரத்தனமான ஃபார்மில் இருந்த கருண் நாயர் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தார். கருண் நாயர் இதுபோன்று அதிரடியாக ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மும்பை அணியில் பும்ரா, ஹர்திக், சான்ட்னர் என யார் பந்துவீசினாலும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் கருண் நாயர் பேட்டிலிருந்து பறந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ராவின் பந்துவீச்சையும் விளாசிய கருண் நாயர் பவர்ப்ளேயில் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 28 ரன்கள் சேர்த்தார். கருண் நாயர் களத்தில் இருந்த வரை டெல்லி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. டெல்லி அணி பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 72 ரன்களும், 9வது ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. 2வது விக்கெட்டுக்கு அபிஷேக் போரெல், கருண் நாயர் 100 ரன்கள் சேர்த்தனர். சதத்தை நோக்கி நகர்ந்த கருண் நாயர் 89 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் போல்டாகினார். 119 ரன்கள்வரை டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தது. அடுத்த 10 ஓவர்களில் வெற்றிக்கு 86 ரன்கள்தான் தேவைப்பட்டது, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், அடுத்த 26 ரன்களுக்குள் அபிஷேக் போரெல், கருண் நாயர், அக்ஸர் படேல், ஸ்டெப்ஸ் ஆகியோரின் விக்கெட்டை இழக்கவே ஆட்டம் தலைகீழானது. டெல்லி அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. தங்கத்தில் முதலீடு செய்வது உண்மையாகவே பாதுகாப்பானதா?13 ஏப்ரல் 2025 இந்திய ராணுவத்தை வழி நடத்திய 'செங்கல்பட்டு' ஜெனரல் சுந்தர்ஜி- ஆபரேஷன் புளூஸ்டாரில் நடந்தது என்ன?13 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை மாற்றிய 3 பந்துகள் 18-வது ஓவர்கள் முடிவில் டெல்லி வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா ஸ்டார்க் களத்தில் இருந்தனர். இதுபோன்ற சூழலில் பலமுறை அசுதோஷ் சர்மா ஆட்டத்தை வென்று கொடுத்ததால் நம்பிக்கை இருந்தது. பும்ரா வீசிய 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அசுதோஷ் அடிக்கவே, வெற்றிக்கு 15 ரன்களே தேவைப்பட்டன. பும்ரா வீசிய 4வது பந்தில் அசுதோஷ் 17 ரன்னில் ஜேக்ஸால் ரன்அவுட் ஆகினார், அடுத்துவந்த குல்தீப் யாதவ் ராஜ்பாவாவால் ரன் அவுட் ஆகினார், கடைசி விக்கெட்டுக்கு வந்த மோகித் சர்மா சான்ட்னரால் ரன்அவுட் ஆகவே மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி கைகளில் இருந்த ஆட்டம், வெற்றி வாய்ப்பு மூன்றே பந்துகளில் மும்பை அணியின் கரங்களுக்கு மாறியது எப்படி? என்பது அவர்களுக்கே புரியவில்லை. மாயாஜால வித்தை போன்று 3 பந்துகளில் ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவும் தலைகீழாக மாறியது ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 3 பந்துகளில் 3 ரன்அவுட் நடந்தது இதுதான் முதல்முறையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியின் தோல்விக்கு காரணம் ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பனிப்பொழிவு இருந்தால் 11வது ஓவர் முடிந்தபின் பந்தை மாற்றும் விதி அறிமுகமானது. இது டெல்லி ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 11வது ஓவர் முடிந்தபின் பனிப்பொழிவை ஆய்வு செய்து நடுவர்கள் பந்தின் தன்மையையும் ஆய்வு செய்து புதிய பந்து அறிமுகப்படுத்தினர். புதிய பந்து மும்பைக்கு கிடைத்தபின் ஆட்டம் மும்பையின் கரங்களுக்கு மாறியது. அடுத்த 4 ஓவர்களில் டெல்லி அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கருண் நாயர், அக்ஸர் படேல் (9), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(1), கே.எல். ராகுல் (15) என 12வது ஓவரில் இருந்து ஓவருக்கு ஒரு விக்கெட்டை டெல்லி இழந்தது. 24 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம் களத்தில் இருந்தனர். அசுதோஷ் இருந்ததால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது. 17-வது ஓவரை வீசிய டிரன்ட் போல்ட் 5 யார்கறை வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டு 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் விப்ராஜ் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி அவுட் ஆகினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?10 ஏப்ரல் 2025 இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES 200 ரன்களும் வெற்றியும் மும்பை அணியும், டெல்லி அணியும் 200 ரன்களை அடித்தவிட்டால் அதை இந்த ஆட்டம் வரை டிபென்ட் செய்து வெற்றி பெறும் வரலாற்றை தக்கவைத்துள்ளன. மும்பை அணி 15 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அனைத்திலும் வென்றுள்ளது. அதேபோல டெல்லி அணியும் 13 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அதை வெற்றிகரமாக டிபெண்ட் செய்து வென்றுள்ளது. இந்த போட்டியில் ஆட்டம் 18-வது ஓவர் வரை டெல்லியின் பக்கம்தான் இருந்தது. பும்ரா வீசிய 19 வது ஓவரில் ஆட்டம் தலைகீழாக மாறி ஒரே ஓவரில் ஹாட்ரிக் ரன்அவுட் நடந்து, டெல்லியின் வெற்றி 3 பந்துகளில் மும்பைக்கு கைமாறியது. மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் கரன் சர்மா 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். மும்பை அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில் 2வது வெற்றியைப் பெற்று, 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. டெல்லிகேபிடல்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் முதல் தோல்வியைச் சந்தித்து 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES "எங்கே தோற்றோம் எனப் புரியவில்லை" தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் " ஆட்டம் எப்படி முடிந்தது, எந்த இடத்தில் தோற்றோம் என்று எங்களுக்கே புரியவில்லை. ஆட்டம் எங்களிடம் இருந்ததுஎப்படி மும்பை கரங்களுக்கு மாறியது, வென்று என்பது பிரமிப்பாக இருக்கிறது. நடுப்பகுதியில் பல விக்கெட்டுகளை சாப்ட் டிஸ்மிசல்களில் இழந்தது தோல்விக்கான காரணமாக இருக்கலாம். 12 ரன்னில் தோற்றுள்ளோம், ஒரு ஓவர்வரை மிச்சம் இருந்ததால் நாங்கள் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். டெய்லெண்டர் பேட்டர்கள் சேஸிங்கின்போது ஒவ்வொரு முறையும் அணியை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்ப்பது தவறு. சில நேரங்களில் தவறான ஷாட்களும், தவறான முடிவைக் கொடுக்கும். ஆடுகளம் சேஸிங்கிற்கு ஏற்றதாக இருந்தது, பனிப்பொழிவு இருந்து புதிய மாற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எங்கள் சுழற்பந்துவீச்சு திருப்தியாக இருக்கிறது, பவர்ப்ளேயில் 2 பேர் வரை பந்துவீசுகிறோம். குல்தீப் இந்த சீசனில் மிரட்டலாக பந்துவீசுகிரார். விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் குல்தீப்பை அழைத்தால் விக்கெட் கிடைக்கிறது. இந்த ஆட்டத்தில் ஏராளமான நல்ல அம்சங்கள் இருந்தன, தோல்வியை மறந்துவிட்டு நகர்கிறோம்" எனத் தெரிவித்தார். ஜெர்மனியில் 68வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் வயதான கொரில்லா13 ஏப்ரல் 2025 மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி?12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய ஆட்டங்கள் லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்: லக்னெள நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நாள் - ஏப்ரல் 17 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 18 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-349 ரன்கள்(6 போட்டிகள்) சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்செல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்) பரப்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது (சிஎஸ்கே)12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) ஷர்துல் தாக்கூர் (லக்னெள) 11 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) குல்தீப் யாதவ் (டெல்லி கேபிடல்ஸ்) 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crm3vgvjwlvo
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு அவிச்ச முட்டை இரவு சாப்பிட்டதிற்கும் இன்றைய போட்டிகளில் முட்டைகள் வாங்குவதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமா?! சுவி அண்ணை 38 புள்ளிகளோட முன்னிலை....
-
இந்திய ராணுவத்தை வழி நடத்திய 'செங்கல்பட்டு' ஜெனரல் சுந்தர்ஜி - ஆபரேஷன் புளூஸ்டாரில் நடந்தது என்ன?
பட மூலாதாரம்,HAPPER COLLINS படக்குறிப்பு,ஜெனரல் கே சுந்தர்ஜி கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் முகர்ஜி, பானர்ஜி அல்லது சாட்டர்ஜி போல சுந்தர்ஜி பெங்காலியா அல்லது ஃபிரோஜி அல்லது ஜாம்ஷெட்ஜி போல பார்ஸியா என்று மக்கள் அடிக்கடி கேட்பார்கள். சிலர் அவரை ஒரு சிந்தி என்றும் கருதினர். ஜெனரல் சுந்தர்ஜியின் மனைவி வாணி சுந்தர்ஜி தனது 'எ மேன் கால்ட் சுந்தர்ஜி' என்ற கட்டுரையில், "உங்கள் பெற்றோர் இருவரும் தமிழர்கள். ஆனாலும் உங்களுக்கு சுந்தர்ஜி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கள் திருமணத்தின் ஆரம்ப நாட்களில் நான் அவரிடம் கேட்டேன்," என்று எழுதியுள்ளார். "எனக்கு மூன்று வயதாக இருந்தபோது என் பெற்றோர் காந்திஜியை பற்றி அடிக்கடி பேசுவதை நான் கேட்பேன். ஒரு நாள் நான் என் தந்தையிடம், நீங்கள் எந்த காந்திஜியை பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்டேன். மகாத்மா காந்தி ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரை கௌரவிக்கும் விதமாக நாம் அவரது பெயருடன் 'ஜி'யை சேர்க்கிறோம் என்று என் தந்தை பதிலளித்தார். அன்று முதல் என்னையும் சுந்தர்ஜி என்று அழைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். என் தந்தை இதற்கு ஒப்புக்கொண்டார் என்று அவர் பதில் சொன்னார்," என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார். மெட்ராஸில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டில்கூட அவரது பெயர் கிருஷ்ணசாமி சுந்தர்ஜி என்று பதிவு செய்யப்பட்டது. அவரது ஊழியர்களும் சகோதரர்களும் அவரது பெயருடன் 'ஜி'ஐ சேர்க்கத் தொடங்கினர். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தப் பெயரே நிலைத்துவிட்டது. முன்னாள் இந்திய தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த சிங்கப்பூர் நீதிமன்றம் – என்ன விவகாரம்?12 ஏப்ரல் 2025 அதிமுக - பாஜக கூட்டணியால் யாருக்கு லாபம்? அண்ணாமலை, ஓபிஎஸ், தினகரன் எதிர்காலம் என்ன? 6 கேள்வி-பதில்கள்12 ஏப்ரல் 2025 களைப்பில் போர்க் களத்திலேயே உறங்கிய சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,72 மணிநேர தொடர்ச்சியான தாக்குதலுக்குப் பிறகு களைப்படைந்த சுந்தர்ஜி போர்க்களத்திலேயே தூங்கிவிட்டார். பெயரைப் போலவே மற்ற விஷயங்களிலும் சுந்தர்ஜி வித்தியாசமானவராக இருந்தார். ஒருமுறை டேராடூனில் உள்ள அதிகாரிகள் உணவகத்தில் ஒரு ராணுவ கேப்டன் அவரிடம் ஓடி வந்து, "சார், நாங்கள் உங்களுக்காக முழு சைவ உணவைத் தயார் செய்துள்ளோம்" என்றார். "என் இளம் நண்பரே, நான் மாட்டிறைச்சி உண்ணும் பிராமணன். எனக்கு சுவை பிடித்திருந்தால் நகரும், நீந்தும், ஊர்ந்து செல்லும் அனைத்தையும் நான் சாப்பிடுவேன்," என்று சுந்தர்ஜி பதிலளித்தார். தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் உயிரியலில் ஹானர்ஸ் படிக்கத் தொடங்கினார். ஆனால் படிப்பின் பாதியிலேயே ராணுவத்தில் சேர முடிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே. அவர் தனது வாழ்க்கையில் ஐந்து போர்களில் பங்கு கொண்டுள்ளார். அவர் மேஜராக இருந்தபோது ஐ.நா படைகளின் சார்பாகப் போரிட காங்கோவுக்கு அனுப்பப்பட்டார். அங்கே கடுமையான சண்டை நடந்தது. ஒருமுறை 72 மணிநேரம் தொடர்ந்து நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் சாப்பிடாமலும் தூங்காமலும் ஈடுபட்ட சுந்தர்ஜி மிகவும் சோர்வடைந்ததால் தாக்குதலின் நடுவே இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டார். "அவரது பிகாரி உதவியாளர் லட்சுமண் அவரைப் பதுங்கு குழிக்குள் இழுக்க முயன்றார். ஆனால் சுந்தர்ஜி அவரை நோக்கி கோபமாக 'F…off' (இங்கிருந்து செல்) என்று கத்தினார். 24 மணிநேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்தபோதுதான் போர்க்களத்தில் இருப்பதையே அவர் உணர்ந்தார். அவரைச் சுற்றி 36 மோர்டார் குண்டுகள் கிடந்தன. அவர் அவற்றைக் கவனமாக எண்ணினார். ஆனால் இவ்வளவு பெரிய தாக்குதலுக்குப் பிறகும் அவருக்கு ஒரு கீறல்கூட ஏற்படவில்லை" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது அதே லட்சுமண் அவருக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யைக் கொண்டு வந்தார். காங்கோ நாட்களை நினைவுகூர்ந்த சுந்தர்ஜி தனது முன்னாள் உதவியாளரிடம், "அன்று என்னைப் போர்க்களத்தில் தூங்க விட்டுவிட்டு ஏன் சென்றுவிட்டீர்கள்?" என்று நகைச்சுவையாகக் கேட்டார். "நீங்கள் என்னைத் திட்டினீர்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் சென்றுவிட்டேன்" என்று லட்சுமண் பதில் அளித்தார். காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு ஜப்பான் தவிர, அமெரிக்க அணுகுண்டுகள் விழுந்த இன்னொரு நாடு எது தெரியுமா? என்ன நடந்தது? 1998 முதல் 2025 வரை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக 'இயல்பான' கூட்டணி கடந்து வந்த வரலாறு பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேஜர் ஜெனரல் கே.எஸ்.பிரார், ஜெனரல் ஏ.எஸ். வைத்யா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் சுந்தர்ஜி (நடுவில்), ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது... கடந்த 1928ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்த கிருஷ்ணசாமி சுந்தர்ஜி, 1945ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது வடமேற்கு எல்லைப் பகுதியில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றார். கடந்த 1971 போரின்போது அவர் வங்கதேச போரின் முன்வரிசையில் இருந்தார். 1984ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் பொற்கோவிலில் இருந்த ஆயுதமேந்தியவர்களை விரட்டியடிக்க மேற்கொள்ளப்பட்ட, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு சுந்தர்ஜி தலைமை வகித்தார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது ஜெனரல் சுந்தர்ஜி மேற்கு கமாண்டின் தலைவராக இருந்தார். 1984 ஜூன் 3ஆம் தேதியன்று இந்திரா காந்தி அவரை டெல்லிக்கு அழைத்தார். அன்றிரவு அவர் இந்திரா காந்தியுடன் தனியாக ஒரு மணிநேரம் பேசினார். இரவு 2 மணிக்கு வீடு திரும்பியபோது அவர் தனது மனைவியிடம், 'இது எனக்கான மிகப்பெரிய சோதனை' என்றார். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு பிறகு அவர் முற்றிலும் மாறிவிட்டார். அவருடைய சிரிப்பு மறைந்துவிட்டது. இது குறித்து அவரது மனைவி தனது கவலையை வெளிப்படுத்தியபோது, 'நான் விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவேன்' என்று கூறினார். ஆனால் அவரால் அதிலிருந்து ஒருபோதும் மீள முடியவில்லை. "எதிரியை எதிர்த்துப் போராடவே எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. என் சொந்த மக்களை எதிர்ப்பதற்கு அல்ல என்று அவர் அடிக்கடி கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்," என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார். மக்கள் உண்மையை அறியும் வகையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் அனுபவங்களைப் பற்றி எழுதுமாறு பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் அவரைக் கேட்டுக் கொண்டார். தனது ஓய்வு நேரத்தில் அது பற்றி எழுதுவதாக அவர் கூறினார். ஆனால் அந்த நேரம் ஒருபோதும் வரவில்லை. லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ். பிரார் தனது 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தி ட்ரூ ஸ்டோரி' என்ற புத்தகத்தில் "நாங்கள் பொற்கோவிலுக்குள் நுழைந்தது கோபத்துடன் அல்ல, சோகத்துடன். உள்ளே நுழையும்போது எங்கள் உதடுகளில் பிரார்த்தனையும், எங்கள் இதயங்களில் பணிவும் இருந்தது. அந்த நேரத்தில் வெற்றி, தோல்வி என்ற எண்ணமோ, வெகுமதிக்கான விருப்பமோ எங்களுக்கு இருக்கவில்லை. நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகவே அதை நாங்கள் கருதினோம்" என்று ஜெனரல் சுந்தர்ஜி கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார். சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 ஆபரேஷன் பிராஸ்டாக்ஸின் கதை பட மூலாதாரம்,WWW.BHARATRAKSHAK.COM படக்குறிப்பு,ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ் காரணமாக பாகிஸ்தான் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்தது ஜெனரல் சுந்தர்ஜியின் பெயருடன் தொடர்புடைய மற்றொரு நடவடிக்கை 'ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ்'. இந்தியாவின் போர் தயார்நிலையைச் சோதிப்பதற்காக இந்தப் பயிற்சி 1986 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ராஜஸ்தான் பாலைவனத்தில் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியாக இது இருந்தது. இந்த அளவிலான ராணுவப் பயிற்சி இதற்கு முன்பு ஆசியாவில் நடத்தப்பட்டதில்லை. போர் சூழ்நிலையில் எல்லா ராணுவ உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் சோதிக்கப்பட வேண்டும் என்று சுந்தர்ஜி விரும்பினார். இந்தப் பயிற்சியில் ராணுவத்தின் பெரும் பகுதியினர் ஈடுபட்டனர். இந்தியா தன்னைத் தாக்க நினைக்கிறது என்று பாகிஸ்தான் தவறாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இந்தப் பயிற்சி மிகவும் தீவிரமாக இருந்தது. பாகிஸ்தான் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து அவர்களைப் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டது. இந்தப் பயிற்சி காரணமாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங்கின் துறை மாற்றப்பட்டது. "ஒருமுறை நாங்கள் ஆப்கானிஸ்தான் அதிபர் நஜிபுல்லாவை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றபோது ராஜீவ் காந்தி என்னிடம் 'நட்வர், நாம் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கப் போகிறோமா?" என்று கேட்டார்," என்று 'ஒன் லைஃப் இஸ் நாட் இனஃப்' என்ற தனது சுயசரிதையில் நட்வர் சிங் எழுதுகிறார். இந்தப் பயிற்சிக்கான ஒப்புதலை பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங் அளித்திருந்தார். இது குறித்து ராஜீவ் காந்திக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை ராஜீவ் காந்தி நட்வர் சிங் மற்றும் நாராயண் தத் திவாரியிடம், 'பாதுகாப்புத் துறை இணை அமைச்சரை நான் என்ன செய்வது' என்று கேட்டார். "அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தெளிவாகச் சொன்னேன். இதற்கு ராஜீவ் 'அருண் சிங் என் நண்பர்' என்று கூறினார். இதற்கு நான், 'நீங்கள் டூன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அல்ல. நீங்கள் இந்தியாவின் பிரதமர். பிரதமர்களுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என்று சொன்னேன்," என்று நட்வர் சிங் குறிப்பிட்டார். சில நாட்களுக்குப் பிறகு அருண் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டார். இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 'ஸ்காலர் ஜெனரல்' என்று பெயர் பெற்ற ஜெனரல் சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய ராணுவம் போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க ஜெனரல் சுந்தர்ஜி பரிந்துரைத்தார். இந்த ஆபரேஷனின்போது ஒரு விஷயம் ஒருபோதும் நிற்கவில்லை. ஜெனரல் ஜியா, ஜெனரல் சுந்தர்ஜிக்கு மாம்பழங்கள் மற்றும் கின்னு டேஞ்சரின் பழங்கள் நிரம்பிய பெரிய கூடைகளைத் தொடர்ந்து அனுப்பி வந்தார். "அந்தப் பழக்கூடைகளில் 'ஜெனரல் சுந்தர்ஜிக்கு வாழ்த்துகள். நீங்கள் இவற்றை ரசித்து உண்பீர்கள் என்று நம்புகிறேன். ஜியா" என்று ஜெனரல் ஜியா எழுதிய குறிப்பு இருக்கும்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். ஜெனரல் ஜியா விமான விபத்தில் இறக்கும் வரை இந்த பழக் கூடைகள் சுந்தர்ஜிக்கு வந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க பரிந்துரைத்ததற்காக ஜெனரல் சுந்தர்ஜி நினைவுகூரப்படுகிறார். ஜெனரல் சுந்தர்ஜியை 'ஸ்காலர் ஜெனரல்' என்றும் அழைப்பார்கள். அவர் 'அணுசக்திக் கோட்பாட்டை' வகுத்தார். அதைப் பின்பற்றி இந்தியா 1998 அணுஆயுத சோதனைக்குப் பிறகு 'முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை' என்று அறிவித்தது. 'தி பிரின்ட்' இதழில் வெளியான 'General Sundarji gave China strategy four decades ago' என்ற தனது கட்டுரையில் ஜெனரல் ஹெச்.எஸ். பனாக், "இந்திய ராணுவத்தில் வேறு எந்த ஜெனரலுக்கும் இவ்வளவு அறிவுசார் ஆழம், செயல் உத்திக் கண்ணோட்டம் மற்றும் அமைப்பை மாற்றியமைக்கும் திறன் இல்லை என்பதை அவரது மோசமான விமர்சகர்கள்கூட ஒப்புக்கொண்டனர். தனது இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாத கால பதவிக் காலத்தில் அவர் இந்திய ராணுவத்தை 21ஆம் நூற்றாண்டுக்குள் கொண்டு வந்தார்," என்று குறிப்பிட்டுள்ளார். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை1 ஏப்ரல் 2025 அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 'விஷன் 2000' வரைவை உருவாக்கிய சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுந்தர்ஜியின் வேண்டுகோளின் பேரில், மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி படைப் பிரிவின் பாடலை பண்டிட் ரவிசங்கர் இயற்றினார். ஜெனரல் சுந்தர்ஜி 'பகட்டானவர்' என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பற்றிய இந்தக் கருத்து நியாயமானதல்ல என்று அவரது மனைவி கருதுகிறார். சுந்தர்ஜியிடம் குழந்தைத்தனமான எளிமையும் நேர்மையும் தெரிந்தன என்று அவர் குறிப்பிடுகிறார். "அவர் ஸ்டைலாக வாழ விரும்பினார். அவர் பெரும்பாலும் சீருடை அல்லாத உடைகளில் காணப்பட்டார். அவர் பைப் புகைப்பார். அதன் தண்டைப் பயன்படுத்தி சுவரில் உள்ள வரைபடங்களை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு விளக்குவார். இடையிடையே பைப்பில் இருந்து ஒரு பஃப் அல்லது இரண்டு பஃப் உள்ளிழுப்பார். அவரது மனதில் புதிய யோசனைகள் எப்போதும் பிறந்து கொண்டே இருக்கும்" என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார். அந்த நேரத்தில் அவர் மனதளவில் 21ஆம் நூற்றாண்டை ஏற்கனவே அடைந்திருந்தார். 21ஆம் நூற்றாண்டுக்கான இந்திய ராணுவத்தின் உத்தி மிக விரிவாக விளக்கப்பட்ட 'விஷன் 2000' என்ற வரைவை அவர் தயாரித்தார். அணுசக்தி விவகாரங்கள் குறித்த அவரது கருத்துகள் நன்கு அறியப்பட்டவை. அதைப் பற்றியும் அவர் நிறைய எழுதியிருந்தார். அவரது தனிப்பட்ட நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. "லியோனார்டோ டா வின்சி மற்றும் செங்கிஸ் கானை சுந்தர்ஜிக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய, மேற்கத்திய, பாரம்பரிய, நாட்டுப்புற இசை என அனைத்து வகையான இசையையும் அவர் விரும்பினார். இரவு முதல் விடியல் வரை ரவிசங்கரின் இசை நிகழ்ச்சிகளில் நாங்கள் அமர்ந்திருப்போம். அவர் எங்கள் நாற்பது ஆண்டுக்கால நண்பர்" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். சுந்தர்ஜியின் வேண்டுகோளின் பேரில் மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி படைப் பிரிவுக்காக ரவிசங்கர் ஒரு பாடலை இயற்றினார். அவர் அடிக்கடி பிரபல விஞ்ஞானி ராஜா ராமண்ணாவின் வீட்டிற்குச் சென்று அவர் பியானோ வாசிப்பதைக் கேட்டு ரசிப்பார். வேலை செய்யும்போது சுந்தர்ஜி அடிக்கடி பிஸ்மில்லா கான், யெஹுதி மெனுஹின், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் இசையைக் கேட்பார். தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்கள் அமைத்த 'பெருவழிகள்' பற்றி தெரியுமா?17 மார்ச் 2025 பலுசிஸ்தான் இந்தியாவுடன் சேர விரும்பிய போது நேரு நிராகரித்தாரா? பாகிஸ்தான் என்ன செய்தது?16 மார்ச் 2025 வானியல் மற்றும் பறவைகளின் மீது ஆர்வம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பறவைகளைப் பார்த்து ரசிக்க ஜெனரல் சுந்தர்ஜி இரண்டு சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளையும் வாங்கினார். சுந்தர்ஜி எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஒவ்வொரு விஷயம் பற்றிய அவரது அறிவு மேலோட்டமாக இல்லாமல் ஆழமானதாக இருந்தது. ஓய்வு பெற்ற பிறகு ஒருமுறை அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சீன மொழியைக் கற்றுக்கொள்ள இரண்டு புத்தகங்களை அவர் வாங்கினார். 60 வயதைக் கடந்த அவர் சீன மொழியை சரளமாகப் பேசத் தொடங்கினார். "அவர் என்னிடமிருந்து இரண்டு விஷயங்களை கற்றுக்கொண்டார். அவற்றில் ஒன்று வானியலில் ஆர்வம். என் தந்தை ஆறு வயதில் இருந்தே கோள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் காட்ட என்னை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்வார். சுந்தர்ஜி எனக்காக வானியல் பற்றிய சில புத்தகங்களைக் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவருக்கும் இந்தத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். "இரண்டாவது விஷயம் பறவைகள் மீதான ஆர்வம். என்னைப் பார்த்து உத்வேகம் பெற்ற அவர் இந்த விஷயத்தில் சாலிம் அலி மற்றும் டிலான் ரிப்லி எழுதிய பல புத்தகங்களை வாங்கினார். பறவைகளைப் பார்த்து ரசிக்க இரண்டு சக்திவாய்ந்த தொலைநோக்கிகளையும் வாங்கினார். மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. அவரது மீன்பிடிக் கருவியும், 12 Bore துப்பாக்கியும் இன்னும் என்னிடம் உள்ளன" என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார். சுந்தர்ஜியின் ஒவ்வொரு வேலையிலும் வேகம் இருந்தது. அவர் மிக வேகமாக நடப்பார். உடன் நடப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுவிடும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அவர் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வேலை செய்தார். முகலாய பேரரசர் ஔரங்கசீப் மகராஷ்டிராவில் மிகவும் எளிய கல்லறையில் புதைக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணி13 மார்ச் 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி பீரங்கியும் ஓட்டுவார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் எல்லையை நோக்கிச் செல்ல கவச வாகனத்தைத் தயார் செய்யும் ஓர் இந்திய ராணுவ வீரர். சுந்தர்ஜிக்கு வாகனங்களை ஓட்டுவது மிகவும் பிடிக்கும். பீரங்கிகள், ஏபிசிகள் (Armored personnel carrier) மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வரை அனைத்தையும் அவரால் ஓட்ட முடியும். அவர் மேற்கு கமாண்ட் தலைவராக இருந்தபோது ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளன்று அவரது முன்னாள் ADC ஒரு மோட்டார் சைக்கிளில் அவரைச் சந்திக்க வந்தார். "அப்போது டெல்லியில் உள்ள இன்ஸ்பெக்ஷன் பங்களாவின் வராண்டாவில் நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். சுந்தர்ஜி மோட்டார் சைக்கிளைப் பார்த்தவுடன் "என்னுடன் வா" என்றார். நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தோம். அந்த நேரத்தில் சுந்தர்ஜி குர்தா பைஜாமா அணிந்திருந்தார், நான் இரவு உடையில் இருந்தேன். அடுத்த அரை மணிநேரத்திற்கு அவர் மோட்டார் சைக்கிளில் கன்டோன்மென்ட் முழுவதும் சுற்றினார்" என்று வாணி சுந்தர்ஜி நினைவு கூர்ந்தார். ஒருமுறை அவர் பாலைவனத்தின் 44 டிகிரி வெப்பத்தில் APCஐ ஓட்டினார். சிறிது நேரத்திற்குள் அவரது தோழர்கள் பலர் வெப்பத்தால் துவண்டு போனார்கள். ஆனால் 51 வயதான லெப்டினன்ட் ஜெனரல் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு வாகனத்தை தொடர்ந்து ஓட்டினார். "சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது நாங்கள் ஒன்றாக பபீனா என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு பல பீரங்கிகள் வரிசையாக நிற்பதை அவர் கண்டார். உடனடியாக அருகிலுள்ள ஒரு டாங்கின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த அவர் உடன் அமரும்படி என்னையும் அழைத்தார். அதன் பிறகு அவர் அந்தக் கரடுமுரடான நிலப்பரப்பில் முழு வேகத்தில் பீரங்கியை ஓட்டினார்" என்று வாணி நினைவு கூர்ந்தார். ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 'மோட்டார் நியூரான் நோயால்' அவதிப்பட்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெனரல் சுந்தர்ஜி, இந்தியாவின் 'அணுசக்திக் கோட்பாட்டை' உருவாக்கினார் அவர் பாகிஸ்தானுக்கு சென்றபோது, அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி ஆசிப் நவாஸ் ஜன்ஜுவாவின் விருந்தினராக இருந்தார். இஸ்லாமாபாத், பெஷாவர், கைபர் கணவாய் ஆகிய இடங்களுக்கு சுந்தர்ஜி சென்றார். பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் அவர் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் 50 மீட்டர் உள்ளே சென்றார். இதன் பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம் தக்ஷசீலா, மொஹஞ்சதாரோ மற்றும் லாகூருக்கும் பயணம் மேற்கொண்டார். ஜெனரல் சுந்தர்ஜி 'மோட்டார் நியூரான் நோயால்' பாதிக்கப்பட்டிருப்பதை 1998 ஜனவரி 10ஆம் தேதி மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள மோட்டார் நியூரான்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் நோய். இது தசை பலவீனத்தையும் இறுதியில் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும். இந்த நோயைப் பற்றி ஜெனரல் சுந்தர்ஜியிடம் சொல்வதற்கு மருத்துவர்கள் சிறிது தயங்கினர். ஆனால் விரைவில் அவர் இந்த நோயைப் பற்றிய அனைத்தையும் இணையம் மூலம் கண்டுபிடித்தார். உயிர் காக்கும் கருவிகளைப் பயன்படுத்தி உயிர்வாழ அவர் விரும்பவில்லை. அவர் தனது மருத்துவர்களிடம் கருணைக் கொலை பற்றிய கேள்விகளைக் கேட்டார். மார்ச் 28ஆம் தேதிக்குள் அவர் உயிர்காக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குச் சென்றுவிட்டார். அந்த நிலையிலும்கூட அவர் தனது மனைவிக்கு 'ப்ளீஸ் லெட் மீ கோ' (அதாவது தயவுசெய்து என்னைப் போக விடு) என்று நான்கு வார்த்தைகள் கொண்ட ஒரு குறிப்பை எழுதினார். "வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை அவர் முழு சுயநினைவுடன் இருந்தார். தனது கண்கள் மூலம் என்னிடமும், மருத்துவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார். நான் அவருக்கு போக்ரான் அணு ஆயுத சோதனை பற்றிச் சொன்னேன். அந்த நிலையிலும் அவர் தினமும் மூன்று நாளிதழ்களைப் படிப்பார். பெரிய தொலைக்காட்சித் திரையில் கிரிக்கெட் பார்ப்பார்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். நோய் கண்டறியப்பட்ட பிறகு 'ஒரு வருடம் மற்றும் ஒரு வாரம்' அவர் உயிருடன் இருந்தார். கடந்த 1999 பிப்ரவரி 8ஆம் தேதி ஜெனரல் சுந்தர்ஜி இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7vnr5zlnnzo
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
20 ஓவர் போட்டிகளில் கோலியின் 100 வது அரை சதம் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூரு பட மூலாதாரம்,GETTY IMAGES 20 நிமிடங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, முதல் நான்கு ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஐந்தாம் ஓவரில் ஒரு சிக்ஸும் அடுத்த பந்தில் ஒரு ஃபோரும் அடித்த ஜெய்ஸ்வால், பின்னர் நிதானத்தை கடைபிடித்தார். மறுபக்கம் மெதுவாக ஆடிய சஞ்சு சாம்சன், 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரியான் பராக், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 14வது ஓவர் வரை ஓவருக்கு ஒரு பவுண்டரி என தாக்கமின்றி ஆடினார். அதே ஓவரிலேயே ரியான் பராக் தனது விக்கெட்டையும் இழந்தார். அடுத்த ஓவர்களில் ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடியை ஆரம்பித்து, ஹேசில்வுட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 75 ரன்களில் வெளியேறினார். அப்போது 16 ஓவர்களில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். அப்போதும் துருவ் ஜுரெல் அதிரடியாக ஆடவில்லை என்றாலும், மற்ற ஆட்டக்காரர்களுக்கு ஸ்டிரைக் மாற்றி முக்கிய பங்கு வகித்தார். ரன் வேகம் தேவைப்படும் நேரத்தில் ஹெட்மெயர் களத்தில் வந்து, துருவ் ஜுரெலுடன் சேர்ந்து ரன்களை விரைவாக குவிக்க முயன்றார். 17வது ஓவரில் சிக்ஸ் அடித்த துருவ், 19வது ஓவரில் ஒரு சிக்ஸும் ஒரு ஃபோரும் அடித்து கடைசி கட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினார். இரண்டு சிக்ஸும், இரண்டு ஃபோரும் அடித்து, 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்பேக்ட் பிளேயராக களத்தில் இறங்கிய ஹெட்மெயர் , தனது முதல் பந்திலேயே ஃபோர் அடித்து அசத்தினார். பெங்களூரு பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஹேசில்வுட், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடியுடன் தொடங்கிய பெங்களூரு 174 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி மிகச் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஃபோர் அடித்த பில் சால்ட், நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்தார். பின்னர் ஆர்ச்சரின் மூன்றாவது ஓவரிலும் ஒரு ஃபோர் மற்றும் சிக்ஸர் அடித்து தனது அதிரடியை தொடர்ந்தார். மறுபக்கம் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதமாக ரன்கள் சேர்க்கும் பணியை கோலி நிதானமாக செய்தார். ஐந்தாவது மற்றும் ஆறாவது ஓவரிலும் பில் சால்ட் தனது அதிரடியை காட்டினார். ஃபோர் மற்றும் சிக்ஸரை தொடர்ச்சியாக விளாசினார். இந்த ஜோடியை பிரிக்க நினைத்த ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தும் தோல்வியைச் சந்தித்தனர். ஒன்பதாவது ஓவரில் கார்த்திகேய சிங் பந்துவீச்சில், பில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 33 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அவரது கேட்ச் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கையில் பட்டது. அடுத்து களம் இறங்கிய தேவ் தத் படிக்கல், பத்தாவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் 11வது ஓவரில் எந்தவொரு பவுண்டரியும் எடுக்கவில்லை. இந்நிலையில் விராட் கோலி தனது அதிரடியை தொடங்கி ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கினார். சிக்ஸர், ஃபோர் என அதிரடியாக விளாசிய அவரை கட்டுப்படுத்த ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் முடியாமல் தவித்தனர். ஜோப்ரா ஆர்ச்சர், ஹசரங்கா, தீக்ஷனா என பல மாற்றங்களைச் செய்தும், கேப்டன் சாம்சனுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை. கோலியுடன் தேவ் தத் படிக்கலும் அதிரடியை தொடர்ந்து 17.3 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து பெங்களூரு அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 62 ரன்கள் மற்றும் தேவ் தத் படிக்கல் 40 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற கோலியின் இந்த அரைச்சதம், டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 100 வது அரைச்சதமாகும். இந்த வெற்றியின் மூலம், பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5rw2ydwe7o
-
பொதுமக்களிடம் சுகாதாரத்துறை விடுத்துள்ள வேண்டுகோள்!
Published By: DIGITAL DESK 2 13 APR, 2025 | 02:28 PM சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புத்தாண்டு காலங்களில் விபத்துக்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் பெரும்பாலும் சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே இது தொடர்பில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மது போதையில் பிள்ளைகளுடன் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211961
-
மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு - அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
ஐபோன்கள் விலை 3 மடங்காக உயரும் ஆபத்து நீங்கியது - டிரம்ப் அறிவிப்பால் கிடைத்த நிம்மதி பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மடலின் ஹால்பர்ட் பதவி, பிபிசி 13 ஏப்ரல் 2025, 13:23 GMT அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம், பரஸ்பர வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த விலக்கு 125% வரி விதிக்கப்பட்ட சீன இறக்குமதிகளுக்கும் பொருந்தும். பெரும்பாலான நாடுகளுக்கு டிரம்ப் விதித்த 10% இறக்குமதி வரியிலிருந்தும், சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட அதிகளவிலான வரியிலிருந்தும் இந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லைக் காவல் ஏஜென்சியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில் இருந்து முதல் தளர்வை இது குறிக்கிறது. இதனை "முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு" என வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சனிக்கிழமை இரவு மியாமிக்கு செல்லும் போது, விலக்கு குறித்த கூடுதல் தகவல்களை அடுத்த வார தொடக்கத்தில் தருவதாக டிரம்ப் கூறினார். ஸ்மார்ட்போன்கள், கணினிகள் போன்ற பெரும்பாலான மின்னணு பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலை பல மடங்கு உயரலாம் என அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலையடைந்த சூழலில் இந்த முடிவு வெளியானது. கடந்த ஏப்ரல் 5 முதல் பொருந்தும் இந்த வரி விலக்கில், செமிகண்டக்டர்கள், சோலார் செல்கள் மற்றும் மெமரி கார்டுகள் ஆகியவையும் அடங்கும். "தொழில்நுட்ப முதலீட்டாளர்களின் கனவு நனவாகியுள்ளது" என வெட்பஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான உலகளாவிய தலைவரான டான் ஐவ்ஸ், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சீன இறக்குமதி வரியிலிருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிப்களுக்கு விலக்கு அளித்திருப்பது, மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம்" என்றும் அவர் கூறினார். ஆப்பிள், என்விடியா, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், தொழில்நுட்பத் துறையும் இந்த வார இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களது உற்பத்தியை அமெரிக்காவுக்கு நகர்த்தும் நிறுவனங்களுக்கு போதுமான நேரத்தை வழங்க இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. "செமிகண்டக்டர்கள், சிப்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் போன்ற முக்கியமான தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்கா சீனாவை நம்பியிருக்க கூடாது" என்பதை அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். "அதிபரின் வழிகாட்டுதலின்படி, இந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அமெரிக்காவுக்கு நகர்த்த வேகமாக பணியாற்றி வருகின்றன" என்றும் அவர் கூறினார். அமெரிக்கா - இரான் அணுசக்தி பேச்சுவார்த்தையின் வெற்றி, தோல்வி இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?9 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தனது புளோரிடா வீட்டில் வார இறுதியை கழித்த டிரம்ப், சீனாவிற்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள் குறித்து "தான் கவலைப்படவில்லை" என வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் கூறினார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தனக்கு உள்ள உறவைப் பற்றி பெருமையாக பேசிய டிரம்ப், "அதிலிருந்து சாதகமான ஒரு விஷயம் வரும் என்று நினைக்கிறேன்" என்றார். ஃபென்டனில் தொடர்பாக சீனாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 20% வரிகள் இந்த மின்னணு பொருட்களுக்கு பொருந்தும் என, வெள்ளை மாளிகையின் கொள்கைப் பிரிவின் துணை மூத்த பணியாளரான ஸ்டீபன் மில்லர், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வரி செலவுகள் பயனாளர்களுக்கு மாற்றப்படுமானால், அமெரிக்காவில் ஐபோன் விலைகள் மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன. அமெரிக்கா, ஐபோனுக்கான முக்கிய சந்தையாகும். மேலும், கடந்த ஆண்டு ஆப்பிள் விற்பனை செய்த ஐபோன்களில் பாதி அமெரிக்காவில் விற்கப்பட்டதாக கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களில் 80% சீனாவில் தயாரிக்கப்பட்டவை மற்றும் மீதமுள்ள 20% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை எனவும் அது கூறுகிறது. தனது சக தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான சாம்சங் போல, சீனாவை அதிகம் நம்பாமல் தனது உற்பத்தியை பரவலாக்க ஆப்பிள் முயற்சிக்கிறது. கூடுதல் உற்பத்தி மையங்களுக்கான போட்டியில் இந்தியாவும் வியட்நாமும் முன்னணியில் உள்ளன. வரி அமலுக்கு பிறகு, இந்தியாவில் உற்பத்தியை விரைவுபடுத்தவும் அதிகரிக்கவும் ஆப்பிள் சமீப நாட்களில் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. டிரம்ப், இந்த வாரம் உலகின் பல நாடுகளுக்கு கடுமையான வரிகளை அமல்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், அதிக வரிக்கு உள்ளான நாடுகளுக்கு வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தும் என்று கடந்த புதன்கிழமை டிரம்ப் அறிவித்தார். ஆனால் இது சீனாவுக்கு பொருந்தாது. அந்த நாட்டுக்கு எதிராக அவர் வரியை 145% ஆக உயர்த்தினார். சீனாவால் எதிர்வரி விதிக்கப்பட்டதால் அதற்கான வரியை உயர்த்தியதாகவும், மற்ற நாடுகள் எதிர்வரி விதிக்கவில்லை என்பதால் ஜூலை வரை அவர்கள் 10% அடிப்படை வரியை மட்டுமே சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy0k8pw0jjo
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
-
16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு : விளையாட்டு பயிற்றுநர் கைது
13 APR, 2025 | 07:36 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள விளையாட்டு பயிற்றுநர் ஞாயிற்றுக்கிழமை (13) பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். மேலதிக சட்டநடவடிக்கைக்காக சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். https://www.virakesari.lk/article/211965
-
தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை
13 APR, 2025 | 12:30 PM தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் 61 நாட்கள் வருடாந்த மீன்பிடி தடை அமுலுக்கு வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை (15) நள்ளிரவு முதல் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் குறித்த இடங்களில் மீன்பிடிக்க இயலாது. இது ஆயிரக் கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை பாதிக்கக்கூடும். 1983 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட இந்த பருவக்கால தடையானது, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை பாதுகாப்பாய் மாற்றுவதற்கும் முட்டையிடும் காலத்தில் மீன் வளங்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மீன்பிடித் தடை அமுல் காலத்தில் ராமேஷ்வரத்தில் மட்டும் சுமார் 700 இற்கும் அதிகமான இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் நங்கூரமிடப்படும். பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, சோலியக்குடி, மூக்கையர் போன்ற பகுதிகள் உட்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் நிறுத்தப்படும். இந்தத் தடைக் காலத்தில் மீனவர்கள் பொதுவாக தங்கள் படகுகளை பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்காக கரைக்கு கொண்டு வருவார்கள். இப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தற்காலிகமாக அரபிக் கடல்களில் மீன்பிடிப்பதற்காக கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இக் காலகட்டத்தில் நாட்டுப் படகுகள், சிறிய அளவில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/211951
-
தானியங்கி கேமரா மூலம் அமேசான் பழங்குடி மக்களை கண்காணித்த ஆய்வாளர்களுக்கு காத்திருந்த ஆச்சர்யம்
பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,2024 இல் தானியங்கி கேமராவால் காட்டில் எடுக்கப்பட்ட படம் கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி முண்டோ 13 ஏப்ரல் 2025, 08:55 GMT பழங்குடி மக்களிடம் பேசாமலும், அவர்களை நேரில் பார்க்காமலும் அவர்களை பற்றி அறிந்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், அமேசானில் இருக்கும் அந்த பழங்குடியின மக்களைத் தொடர்புகொள்வது சாத்தியமல்ல. பிரேசிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ரொண்டோனியா மாகாணத்தில் பொலிவியா எல்லைக்கு அருகே வாழும் ஒரு பழங்குடி குழுவின் படத்தைப் பெறுவதற்காக, தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை நிபுணர்கள் பயன்படுத்தினர். அந்த பழங்குடி இன மக்கள் மாசகோ என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரியாது. மாசகோ என்ற பெயர் அவர்களின் நிலத்தில் பாயும் ஆற்றின் பெயரிலிருந்து வந்தது. "மாசகோ பழங்குடி பிரதேசம், தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட முதல் பழங்குடி பிரதேசமாகும்," என்று தேசிய பழங்குடி மக்கள் அறக்கட்டளையின் (ஃபுனாய்) பிரதேச பாதுகாப்பு இயக்குநர் ஜானெட் கார்வால்ஹோ பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். இந்த பிரேசிலிய அரசாங்க அமைப்பு பல ஆண்டுகளாக இந்த நிலங்களைப் பாதுகாக்கவும், அங்கு வாழும் மக்கள் தொடர்பு கொள்ளப்படுவதைத் தடுக்கவும் பணியாற்றி வருகிறது. அந்தப் பகுதியில் ஃபுனாய் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அல்டெய்ர் அல்கேயர், 30 ஆண்டுகளாக அந்த பணிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார். வெளியுலகத் தொடர்பில்லாமல் அமேசான் காடுகளில் வாழும் அந்த பழங்குடி சமூகத்தின் முதல் தோற்றத்தை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்தினாலும், "அவர்கள் யார் என்பதை இன்னும் எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. இன்னும் நிறைய மர்மங்கள் உள்ளன," என்று என்று அல்கேயர், தி கார்டியன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். பிப்ரவரி 2024 இல் எடுக்கப்பட்ட அந்தப் படங்களையும், மாசகோ எனும் அந்த பழங்குடி இனம் தங்களது தற்காலிக குடியிருப்புகளை முற்றிலுமாக கைவிட்ட போது எடுக்கப்பட்ட பிற படங்களையும் ஃபுனாய் அமைப்பு பிபிசி முண்டோவுடன் பகிர்ந்து கொண்டது. இந்தப் புகைப்படங்களைப் பெறவும், இந்தச் சமூகத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் செயற்கைக்கோள் படங்களையும் நிபுணர்கள் நம்பியுள்ளனர். யாரையும் நெருங்க விடாத இந்தியாவின் சென்டினல் தீவு பழங்குடிகளை பார்க்க சென்ற அமெரிக்கர் என்ன ஆனார்?11 ஏப்ரல் 2025 கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 "200க்கும் மேற்பட்டோர் வாழ்ந்திருக்கலாம்" பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,இந்த படத்தில், 2024ல், ஃபுனாய் உறுப்பினர்கள் இந்த பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் விட்டுச் சென்ற ஒரு கத்தியை நீங்கள் காணலாம் Evergreen: Saving Big Forests to Save the Planet என்ற புத்தகத்தின் இணை ஆசிரியரான ஜான் ரீட் மற்றும் பிரேசிலிய செய்தித்தாள் ஓ குளோபோவின் ஆசிரியரான டேனியல் பயாசெட்டோ ஆகியோர் இணைந்து தி கார்டியனில் வெளியான கட்டுரையை எழுதியுள்ளனர். ஆய்வின் மூலம் கிடைத்துள்ள புதிய படங்கள் வெளியுலகத் தொடர்பில்லாத பிரேசில் பகுதி பழங்குடியின மக்கள், நன்றாக வாழ்ந்து வருவதை வெளிக்காட்டுகின்றன. ஆனால், அதே சமயம் அதில் சில சவால்களும் உள்ளன. முன்னதாக, "அமைதியான முறையில் அந்த பழங்குடி மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியது" என்பதை 1987 ஆம் ஆண்டு ஃபுனாய் நிபுணர்கள் கண்டறிந்தனர். பிரேசிலில் தனிமைப்படுத்தப்பட்ட 28 பழங்குடி மக்களில் மாசகோ இன மக்கள் குழுவும் உள்ளனர். "இந்த கிராமத்தின் சரியான மக்கள் தொகை குறித்த தரவு எங்களிடம் இல்லை, ஆனால் அவர்கள் விட்டுச் செல்லும் தடயங்கள், குடியிருப்புகளின் அளவு மற்றும் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அப்பகுதியின் மக்கள் தொகை 220 முதல் 270 வரை இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்." 1990களின் முற்பகுதியில், அல்கேயர் 100 முதல் 200 பேர் வரை இருந்ததாக மதிப்பிட்டார். கார்வால்ஹோவின் கூற்றுப்படி, அந்த பழங்குடி மக்கள் மாசகோ பூர்வீக நிலத்தின் முழு நிலப்பரப்பிலும் காணப்படுகின்றனர். இது தோராயமாக 421,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. "அவர்கள் தாங்கள் வாழும் இடத்தை, மாசகோ பூர்வீக நிலத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ரியோ பிராங்கோ பூர்வீக நிலத்தின் ஒரு பகுதி (சுமார் நான்கில் ஒரு பகுதி) வரை விரிவுபடுத்துகிறார்கள்." ஆண் ஈக்கள் இணையை கவர இதையும் செய்யுமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்6 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 தானியங்கி கேமரா பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,2024 இல் கேமராவால் படம் பிடிக்கப்பட்ட பழங்குடி மக்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர் அந்த மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது ஃபுனாயின் கொள்கை அல்ல என்பதால், அவர்கள் நடமாடும் முக்கிய இடங்களில் தானியங்கி கேமராக்களை அமைக்க முடிவு செய்தனர். எனவே, 2019 ஆம் ஆண்டில், அவர்கள் ஒரு கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்ட பின்னர், தங்களிடம் இல்லாத ஒன்றைப் பெறும் நோக்கத்துடன், அதாவது அந்த பகுதியின் புகைப்படத்தைப் பதிவு செய்ய, ஒரு கேமராவை "அப்பகுதியின் மையத்தை நோக்கி" வைத்தனர். இறுதியில், அவர்களது முயற்சி வெற்றியடைந்தது. ஆனால், அப்பகுதியை புகைப்படம் எடுப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள் அல்ல. அந்தப் பகுதியில் அவர்கள் கடந்து சென்ற பிறகு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்பினர். 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள், 2021 ஜனவரியில் அந்த பகுதியில் நிறுவப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டவை என்று கார்வால்ஹோ கூறுகிறார். 2021ஆம் ஆண்டு புனாய் குழு ஒரு பாதையில் விட்டுச் சென்ற கோடரிகள் மற்றும் கத்திகளை, அந்தப் பழங்குடியின மக்கள் எடுத்து சென்றனர். இந்த கேமரா ஒன்பது பழங்குடி மக்களைக் கொண்ட ஒரு குழுவை பதிவு செய்தது. அவர்கள் அனைவரும், சுமார் 20 முதல் 40 வயதுகளில் உள்ள ஆண்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். பட மூலாதாரம்,CGIIRC/FUNAI "வானிலை சாதகமாக இல்லாததால், அந்த கேமராவால் தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை என்றாலும், அந்த பழங்குடி மக்களின் உடலமைப்பு, நடத்தை மற்றும் பிற அம்சங்களைப் பதிவு செய்வதற்கான முக்கிய ஆவணமாக இந்தப் படம் இருந்தது." அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பழங்குடி மக்கள், கூர்மையான முனையுடன் கூடிய மரத் துண்டுகள் போன்ற சில "கூர்மையான பொருட்களை" விட்டுச் சென்றனர். ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஒரு வகை கால்ட்ராப் (கூர்மையான முனைகளைக் கொண்ட கருவி) என்று அடையாளம் கண்டுள்ளனர். அவை தரையில் ஊன்றப்பட்டிருக்கும். அவற்றின் கூரிய நுனிகள் வெளிப்புறமாக இருக்கும். மானுடவியலாளர்கள் கூறியபடி, அவர்கள் அந்த கூர்மையான மரத்துண்டுகளை பாதைகள், மரக்கட்டை, வேர்களின் பின்புறம் அல்லது பள்ளத்தாக்கு போன்ற முக்கியமான இடங்களில் வைத்துள்ளார்கள் . "இத்தகைய இடங்களில் நமது உடலின் எடை பாதத்தில் அழுத்தும். அவை சில சமயங்களில் இலைகள் அல்லது புல்லால் மறைக்கப்பட்டிருக்கும்," என்று நிபுணர் கூறுகிறார். பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,"காலணிகள் அணிந்திருந்தாலும் கூட, அந்த கூர்மையான பொருட்கள் காலில் துளையிடுவதால் காயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது தீவிரமான காயத்தைக் ஏற்படுத்தக்கூடும்." "காலணிகள் அணிந்திருந்தாலும் கூட, அந்த கூர்மையான பொருட்கள் காலில் துளையிடுவதால் காயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது தீவிரமான காயத்தை ஏற்படுத்தக் கூடும்." 1980கள் மற்றும் 1990களில், இந்தப் பாதுகாப்பு மண்டலத்துக்குள் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் இருந்தது என்று நிபுணர் விளக்குகிறார். "ஃபுனாய், பிரேசிலிய சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள் நிறுவனம், கூட்டாட்சி காவல்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் மரம் வெட்டும் டிராக்டர்கள் போன்ற பல வாகனங்களின் டயர்களை, பழங்குடி மக்களின் கருவிகள் துளைத்து பாதிப்பை ஏற்படுத்தின." 2024 ஆம் ஆண்டில், கேமராக்களை அமைத்த பிறகு, ஃபுனாய் குழு உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து விலகி, காப்பகத்துக்குள் நுழைந்தது. அந்தப் பகுதிக்குள் பூர்வீகக் குடியேற்றம் "திட்டமிடப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையாக இருந்தது" என்று அல்கேயர் நம்புகிறார். நீங்கள் குடிக்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?4 ஏப்ரல் 2025 பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 ஆய்வாளர்களுக்கு காத்திருந்த ஆச்சர்யம் என்ன? பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,மாசகோ பழங்குடிகள் உருவாக்கும் தற்காலிக வீடுகள் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிப்பில் ஈடுபடும் மக்களுக்கேற்ப வீடுகள் அமைந்துள்ளன என்று கார்வால்ஹோ சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "அந்த குழுவைச் சேர்ந்த பெரும்பாலான மக்களின் நடமாட்டம், பருவநிலை மாற்றங்களான வறட்சி மற்றும் மழை ஆகியவற்றுடனும், தாவரங்களின் வேறுபாடுகளுடனும், வயல்வெளிகள், சவன்னா புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளுக்கும் இடையே தொடர்புடையவை," என்று அவர் கூறினார். "அந்த வகையில், அவர்கள் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் முறையை உருவாக்குகிறார்கள். நாடோடி வாழ்க்கை முறைக்குள் தங்கள் குடியிருப்பு எல்லையை வரையறுக்கிறார்கள்." பழங்குடி மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சில அம்புகளின் நீளம் 3 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. அவர்களை ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று அதில் இருந்தது. "அம்பும் வில்லும் பெரிதாக இருப்பது புதிரான ஒன்று அல்ல. பொலிவியாவின் சிரியோனோ போன்ற மற்ற சமூகங்களும் இதேபோன்ற வில்-அம்புகளை பயன்படுத்துகிறார்கள்". ஆனால், "அவர்கள் எப்படி நீண்ட வில் மற்றும் அம்புகளை காடு மற்றும் சவன்னாக்களின் நடுவில் கையாள்கிறார்கள்? என்பது "ஒருபோதும் மறக்க முடியாத கேள்வி" என்று மானுடவியலாளர் விளக்குகிறார். பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,பாபாசு பனை அமேசானின் காடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றது. பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,பழங்குடி மக்களால் கைவிடப்பட்ட முகாம்களில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சில அம்புகளின் நீளம் 3 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,"அம்பும் வில்லும் பெரிதாக இருப்பது ஒரு மர்மம் அல்ல. பொலிவியாவின் சிரியோனோ போன்ற மற்ற சமூகங்களும் இதேபோன்ற வில், அம்பை பயன்படுத்துகிறார்கள்" "அவர்கள் குரங்குகள், பன்றி போன்ற விலங்குகள், மான்கள் உள்ளிட்ட பல விலங்குகளைக் கொல்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவற்றைப் பிற வழிகளில் கொல்வது எளிதல்ல," என்று அவர் கூறினார். தி கார்டியனில் வெளியான கட்டுரையில், அம்பை எவ்வாறு எய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு 'தெரியாது' என்று அல்கேயர் குறிப்பிட்டார். "மற்ற பழங்குடி மக்களும் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்கள் சிரித்து, இது சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள். ஒருவேளை படுத்துக்கொண்டே அதனைப் பயன்படுத்தலாம் என கருதுகிறார்கள். ஆனால், இன்று வரை இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புதிருக்கு அவர்கள் விடை கண்டுபிடிக்கவில்லை " என்று அவர் தெரிவித்தார். பழங்குடிகளை தொடர்பு கொள்ளாமல் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் பட மூலாதாரம்,CGIIRC/FUNAI "தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக வரையறுக்கப்பட்ட முதல் பூர்வீக பிரதேசம் மாசகோ பூர்வீக பிரதேசமாகும்" என்று கார்வால்ஹோ குறிப்பிடுகிறார். "ஆனால் அதேநேரத்தில், மற்ற பழங்குடி மக்களும் அந்த பாதுகாப்பைப் பெற்றனர், பின்னர் அவர்களுக்காகப் பிரதேசங்கள் வரையறுக்கப்பட்டன." "ஆனால் அந்த மக்களுடன் பேச முடியாத சூழலில், அவர்களின் முழு வரலாற்று பின்னணியையும், அவர்கள் வாழ்விடத்தில் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வது தான், இந்த மக்களுக்கான பிரதேசத்தை வரையறுப்பதில் உள்ள சவால்" சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மற்றவர்களிடம் இருந்து, தடயங்களையும் தகவல்களையும் சேகரிக்க பல முறை காட்டுக்குள் ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன, இதன்மூலம் அந்தப் பிரதேசம் வரையறுக்கப்படுகிறது." பட மூலாதாரம்,CGIIRC/FUNAI "தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் சுயாட்சியை, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டிய அவசியமின்றி, அவர்களின் வாழ்க்கை முறைகளில் எந்தவித தலையீடும் இல்லாமல் உறுதி செய்வது அவசியம்" என்று புனாய் தெரிவிக்கிறது. நிபுணரின் கூற்றுப்படி, மாசகோ சமூகம் அமைந்துள்ள பிரதேசத்தில், "மரம் வெட்டுதல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் போன்ற எந்த மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்களும்" தற்போது இல்லை என அறியப்படுகின்றது. "அந்தப் பிரதேசத்தில் நிரந்தரமாக இருக்கும் ஃபுனாய் குழு, எல்லைப் பகுதியில் கூட அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் திறன் கொண்டது." இந்த அமைப்புக்கு, முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. இவை, பல்வேறு நோக்கங்களுக்கு இடையில், தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்களின் உடல்நலமும், சமூக வாழ்க்கையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கான கவலைகளும் உள்ளன, ஏனெனில் "இந்த பிரதேசத்தின் இயற்கை வளங்களை முழுமையாக பாதுகாப்பது தான், இந்த மக்களின் உயிர்வாழ்வுக்கு அவசியமானது" என்று ஃபுனாய் வெளியிட்ட அறிக்கையில் அல்கேயர் குறிப்பிடுகிறார். இதுபோன்ற பழங்குடி சமூக மக்கள் வேட்டையாடவும், அவர்கள் உணவு சேகரிப்பதையும் எளிதாக்குவது தான், கத்திகள் மற்றும் கோடரிகள் போன்ற உலோக கருவிகளை விட்டுச்செல்வதன் நோக்கமாக உள்ளது. இதன் மூலம், அவர்கள் அதேபோன்ற பொருட்களைக் கண்டுபிடிக்க தங்கள் நிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த முறையால் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டதா என்று நான் கார்வால்ஹோவிடம் கேட்டேன். "இந்த கருவிகளை மக்கள் எளிதாகப் பெற இது ஒரு வகையில் உதவியது. இது எல்லோருக்கும் பயனளிக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த சமூக மக்கள் தங்களது நில எல்லைக்குச் செல்வதையோ அல்லது கடப்பதையோ இது தடுக்கவில்லை என்பதை நாங்கள் உறுதியாக சொல்கிறோம். அதற்குப் பிற காரணங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு." ஈரோடு மலையாளிகள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்திற்கு தீர்வு என்ன? 'மரத்திற்கு பின்னே யானை நின்றாலும் தெரியாது' - இந்த பெண்களின் ஆபத்தான காட்டுவழிப் பயணம் யாருக்காக? மூங்கில் பழங்குடிகளின் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருப்பது எப்படி? எளிதில் மூப்படையாத சீமேநே பழங்குடிகள் பற்றி தெரியுமா? அவர்களின் வாழ்க்கை முறை என்ன? பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,மரங்களில் உள்ள விலங்குகளின் கூடுகள் ரீட் மற்றும் பியாசெட்டோ விளக்குகையில், "ஒரு காலத்தில் மக்கள் தொடர்புகொள்வதற்காக இவை பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது அவை தொடர்பை தவிர்க்க பயன்படுத்தப்படுகின்றன," என்று கூறுகின்றனர். "மற்ற பழங்குடி பிரதேசங்களில் பயன்படுத்தப்படும் இந்த நடைமுறை, பண்ணைகளுக்கோ அல்லது மரம் வெட்டும் முகாம்களுக்கோ மக்கள் கருவிகளை எடுக்கச் செல்வதைத் தடுக்கிறது," என்று அவர்கள் குறிப்பிட்டனர். பழங்குடி மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையைப் பாதிக்காமல் எடுக்கப்பட்ட சமீபத்திய படங்கள் மற்றும் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட தகவல்கள், இந்த பழங்குடி சமூகம் எவ்வாறு வாழ்கிறது மற்றும் வளர்கிறது என்பதை நிபுணர்கள் தொடர்ந்து அறிய உதவுகின்றன. இந்த சமூகம் வெளியுலகத் தொடர்பு இல்லாமல், தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? "இந்த மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான இந்த பிரதேசத்தின் வளங்களை பாதுகாக்க முடியும் என பிரேசில் அரசாங்கம் உறுதியளிக்கும் வரை, நான் சற்று நம்பிக்கையுடன் உணர்கிறேன்," என்று மானுடவியலாளர் பதிலளிக்கிறார். "ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும் நடைமுறைகள் மாறுகின்றன, ஒரு கட்டத்தில் இந்த மக்கள் தொடர்பு கொள்ள விரும்பலாம். அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6d12pdzx3o
-
புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
வடக்கில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு - வணிகர் கழகம் 13 APR, 2025 | 10:09 AM மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார். ஜெயசேகரன் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகிய 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் அமையவுள்ளது. விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும். இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், உள்ளக வீதி வசதிகள், மின்சார வசதிகள் என்பன கிடைக்க வசதி செய்யப்படும். இதற்கு மேலதிகமாக முதலீட்டு ஊக்குவிப்பாக முதலீட்டுக் கழிவுரிமை 200 வீதம் வழங்கப்படும். இது ஏனைய பகுதிகளில் 100 வீதமாக உள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் 30 வருட குத்தகைக்கு வழங்கப்படும். இது பொதுவான நடைமுறை. தேவையை பொறுத்து இதனை நீடித்துக் கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு தேவையான அனுமதிகளை முதலீட்டு சபை ஒழுங்கமைத்து வழங்கும். தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், கட்டட நிர்மாணத்திற்கு தேவையான பொருட்கள் போன்றவற்றிற்கு இறக்குமதி தீர்வை விலக்களிக்கப்படும். ஏற்றுமதி நோக்கிலான தொழில் முயற்சிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை தீர்வை இன்றி இறக்குமதி செய்யலாம். எனவே மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை இந்த 3 வலயங்களிலும் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறோம். இதன் மூலம் வடமாகாணம் பொருளாதார ரீதியாக முன்னேறவும், தேசிய ரீதியாக எமது உற்பத்தியின் பங்களிப்பை அதிகரித்து கொள்ள முடிவதுடன் வடமாகாணத்தில் அதிகளவானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். மேற்படி பிரதேசங்களில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் தமது விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு சமர்ப்பிக்க முடியும். ஆகவே இந்த வருட இறுதியில் இவ் மூன்று வலயங்களும் உருவாக இருப்பதனால் விரைவாக விண்ணப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் முதலீட்டாளர்களை கோருகின்றது. இது தொடர்பாக மேலதிக விபரங்களை 021 222 1336, +9477 777 6606, மின்னஞ்சல் - jeyamanonr@boi.lk, முகவரி - சிரேஸ்ட பிரதிப்பணிப்பாளர், இலங்கை முதலீட்டு சபை, வடமாகாண காரியாலயம், NHDA கட்டடிம், கண்டி வீதி, யாழ்ப்பாணம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும். இது பொருளாதார ரீதியாக கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம். இதனை முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெறுவதற்கு யாழ் வணிகர் கழகத்தை தொடர்புகொள்ளலாம்” என்றார். https://www.virakesari.lk/article/211939
-
மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு - அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
13 APR, 2025 | 12:14 PM அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் பரஸ்பரம் வரி விதிப்பு மேற்கொண்டது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில், ட்ரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இலத்திரனியல் பொருட்களுக்கு வரி விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான இலத்திரனியல் கருவிகள், தரவு சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211953
-
முழுவதும் பெண்களே நிரம்பிய குழு நாளை விண்வெளிக்கு பயணம் - 6 பேரும் என்ன செய்வார்கள்?
பட மூலாதாரம்,TWITTER/BLUE ORIGIN படக்குறிப்பு,நியூஷெப்பர்ட்-31 குழு கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 13 ஏப்ரல் 2025, 01:53 GMT பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்தப் பயணத்தை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் ஏப்ரல் 14ஆம் தேதி திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுவில், பாப் பாடகியான கேட்டி பெர்ரி, செய்தியாளர் கேல் கிங், சிவில் உரிமைகள் வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஆறாவது பெண்ணாக, இந்தக் குழுவை வழிநடத்தப் போகிறவரும் ஜெஃப் பெசோஸின் காதலியுமான லாரன் சான்செஸ் பயணிக்கவுள்ளார். இவர்கள் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை எல்லைக்கோடான கார்மன் கோட்டைக் கடந்து செல்வார்கள். விண்வெளிக்கு ஒரு சிறு பயணம் பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,ஏப்ரல் 14ஆம் தேதி ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்கள் நியூ ஷெப்பர்ட்-31 என இந்தப் பயணத் திட்டத்தில், ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் இந்த ஆறு பெண்களும் பயணிக்கப் போகிறார்கள். அதனுள் இருக்கும் விண்கலம் முற்றிலுமாக தானியங்கி முறையில் செயல்படக்கூடியது. அதாவது, விண்கலத்தை இயக்குவதற்கென அதனுள்ளே யாரும் இருக்க மாட்டார்கள். இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை அழைத்துச் செல்லும். இந்த பயணம் தோராயமாக 11 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியைக் கண்டு களித்த பிறகு பூமியை நோக்கிய பயணத்தை தொடங்குவார்கள். பாப் பாடகி கேட்டி பெர்ரியின் இசை சுற்றுப்பயணம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஏப்ரல் 14ஆம் தேதியன்றே இதைச் செய்து முடிக்க ப்ளூ ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவர்களை ஏற்றிச் செல்லப்போகும் நியூ ஷெப்பர்ட் ராக்கெட், ஏப்ரல் 14ஆம் தேதியன்று அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் உள்ள அந்த நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். விண்வெளியில் இருந்து இமயமலையை பார்த்த அனுபவம் பகிரும் சுனிதா வில்லியம்ஸ் மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது? விண்வெளியில் சாப்பிடுவது, குளிப்பது, கழிவுகளை அகற்றுவது எப்படி? விண்வெளியில் இருக்கும்போது பெண்கள் மாதவிடாயை எப்படி சமாளிக்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கார்மன் கோட்டை அடைந்ததும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற கேப்சூல் (சித்தரிப்புப் படம்) லாரன் சான்செஸ் கடந்த 2023ஆம் ஆண்டு வோக் பத்திரிகை நேர்காணலில், முழுமையாகப் பெண்கள் மட்டுமே விண்வெளிக்குப் பயணிக்கும் இத்தகைய கனவுப் பயணம் குறித்து விவரித்திருந்தார். "இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கார்மன் எல்லைக்கோடு என்றால் என்ன? கார்மன் கோடு என்பது ஒரு கற்பனையான எல்லைக்கோடு. இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, பூமியில் இருந்து பயணித்தால் விண்வெளியை அடைந்துவிட்டதாகக் கருதப்படும் இடம் எனப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும் இந்தப் புள்ளி கருதப்படுகிறது. கார்மன் கோடு, விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே ஒரு வேறுபாட்டைக் குறிப்பதற்காக, ஃபெடரேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் என்ற அமைப்பால் தீர்மானிக்கப்பட்டது. இந்த உயரத்தை அடைவது, விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் கருதப்படுகிறது. "சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி, இதுதான் விண்வெளி என்று ஒரு வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கார்மன் எல்லைக்கோடு," என்கிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,ஆறு பெண்களும் விண்வெளியில் வரையறுக்கப்பட்டுள்ள கார்மன் எல்லைக் கோட்டுக்கு சற்று மேலே சென்றுவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள். அவரது கூற்றுப்படி, கார்மன் எல்லைக்கோடு எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் 100 கி.மீ என்ற உயரத்துக்குக் கீழேதான் 99.9% வரையிலான வளிமண்டலம் உள்ளது. ஆகையால்தான் அதற்கு மேலே இருக்கும் பகுதி விண்வெளி என்று முடிவு செய்யப்பட்டது. இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் பயணிப்பவர்கள் "விண்வெளிக்குச் சென்றவர்கள்" என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அதனால்தான் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களும் இந்தக் கோட்டுக்கு மேலே சென்று, அதன் பயணிகளுக்கு உண்மையான விண்வெளி அனுபவத்தை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 'விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே நோக்கம்' விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "இத்தகைய விண்வெளிச் சுற்றுலா பயணங்களை இந்த நிறுவனம் பலமுறை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பயணம் குறித்துக் கேள்விப்பட்டதும், சுனிதா வில்லியம்ஸ் சென்றதைப் போன்றதொரு பயணமோ எனக் கருதிவிடக்கூடாது," என்கிறார் அவர். சுனிதா வில்லியம்ஸ் சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய விண்வெளிப் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனால், இது அப்படியான பயணமல்ல என்கிறார் வெங்கடேஸ்வரன். ஆண் ஈக்கள் இணையை கவர இதையும் செய்யுமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்6 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விண்வெளி சுற்றுலா துறையை பிரபலப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் மட்டுமே செல்லும் இந்த விண்வெளிப் பயணம் குறித்து விளக்கிய அவர், "விண்வெளி தொடங்கும் இடமான கார்மன் எல்லைக் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி விடுவார்கள்," என்றார். அதுகுறித்து விரிவாக விளக்கிய வெங்கடேஸ்வரன், "இந்தப் பயணத்தின் மொத்த நேரமே சுமார் 11 நிமிடங்கள்தான் இருக்கும். ஏழு நிமிடங்களுக்கு ராக்கெட்டில் பயணிப்பார்கள். சுமார் 48 கி.மீ வரை அதில் பயணித்த பிறகு, அங்கிருந்து ஒரு கல் மேல்நோக்கி வீசப்படுவதைப் போல, ராக்கெட்டில் இருந்து பயணிகள் இருக்கும் விண்கலம் விண்வெளி நோக்கி வீசப்படும். ராக்கெட்டில் இருந்து வீசப்படும் விண்கலம், கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே வரை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்," என்று விவரித்தார். விண்வெளி சுற்றுலாத் துறைக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதும் இதன்மூலம் ஒரு புதிய தொழிலை உருவாக்கலாம் என்பதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் அவர். அதே நேரத்தில், இத்தகைய முயற்சி "பெண்கள் முன்னேற்றம் மீதான கவனத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கு ஓர் உத்வேகத்தையும்" ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். மனிதனை போல பேசி பிரமிக்க வைக்கும் காகம் - வியப்பூட்டும் காணொளி4 ஏப்ரல் 2025 பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்களின் பின்னணி என்ன? இந்தப் பயணத்தில் விண்வெளி எல்லைக் கோடான கார்மன் கோட்டுக்குச் செல்லப் போகும் ஆறு பெண்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? லாரன் சான்செஸ் பட மூலாதாரம்,LAUREN SÁNCHEZ/IG படக்குறிப்பு,லாரன் சான்செஸ் எம்மி விருது பெற்ற பத்திரிகையாளரான இவர், நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான படைப்புகளைக் கொண்ட எழுத்தாளர், விமானி, பெசோஸ் எர்த் ஃபண்ட் அமைப்பின் துணைத் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உரிமம் பெற்ற ஹெலிகாப்டர் விமானியான சான்செஸ் கடந்த 2016ஆம் ஆண்டில் ப்ளாக் ஆப்ஸ் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை நிறுவினார். இது, முழுவதும் பெண்களால் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்படும் முதல் வான் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். ஹெலிகாப்டர் விமானியாகவும் விமானப் பணி சார்ந்த தொழிலதிபராகவும் அவர் செய்த பணிக்காக, 2024இல் எல்லிங் ஹால்வர்சன் வெர்டிகல் ஃப்ளைட் ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருதைப் பெற்றார். ஆயிஷா போவே பட மூலாதாரம்,AISHA BOWE/IG படக்குறிப்பு,ஆயிஷா போவே ஆயிஷா போவே பஹாமாவை பூர்வீகமாகக் கொண்டவர். நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி மற்றும் தொழில்முனைவோரான ஆயிஷா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றை ஊக்குவிப்பவராகவும் இருக்கிறார். அமெரிக்காவின் வேகமாக வளர்ந்து வரும் தனியார் நிறுவனங்களின் பட்டியலான இங்க் 5000-இல் இரண்டு முறை இடம்பிடித்த பொறியியல் நிறுவனமான ஸ்டெம்போர்டின் (STEMBoard) தலைமை செயல் அதிகாரியாகவும் ஆயிஷா இருக்கிறார். மேலும், பத்து லட்சம் மாணவர்களுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப திறன்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்ட லிங்கோ (LINGO) என்ற நிறுவனத்தையும் இவர் நிறுவியுள்ளார். விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?2 ஏப்ரல் 2025 சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'ஜிப்லி' என்றால் என்ன? அது முதலில் எப்படி உருவானது?31 மார்ச் 2025 அமாண்டா இங்குயென் பட மூலாதாரம்,AMANDA NGUYỄN/IG படக்குறிப்பு,அமாண்டா இங்குயென் அமாண்டா, ஓர் உயிரி விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி. அவர் ஹார்வர்டில் பட்டம் பெற்றார். மேலும், ஹார்வர்ட் வான் இயற்பியல் மையம், எம்ஐடி, நாசா, சர்வதேச வானியல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். கடந்த 1981 முதல் 2011 வரை நாசா முன்னெடுத்த மறுபயன்பாட்டு விண்கலத் திட்டத்தின் கடைசி விண்வெளிப் பயணத் திட்டத்தில் அமாண்டா பணியாற்றியுள்ளார். அவர் கெப்லர் புறக்கோள் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதால் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டில் டைம் இதழின், ஆண்டின் சிறந்த பெண் என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார். கேல் கிங் பட மூலாதாரம்,GAYLE KING/IG படக்குறிப்பு,கேல் கிங் கேல் கிங் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளர். சிபிஎஸ் மார்னிங்ஸின் இணை தொகுப்பாளராகவும் ஓப்ரா டெய்லியின் ஆசிரியராகவும் இருக்கும் இவர் சிரியஸ்எக்ஸ்எம் வானொலியில் கேல் கிங் இன் தி ஹவுஸ் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். தனது பல்லாண்டுக்கால பத்திரிகை அனுபவத்தில் நேர்காணலில் அர்த்தமுள்ள உரையாடல்களை உருவாக்குவதில் திறமை படைத்தவராக கேல் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?20 மார்ச் 2025 வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?31 மார்ச் 2025 கேட்டி பெர்ரி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேட்டி பெர்ரி கேபிடல் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் அதிகம் விற்பனையாகும் பெண் கலைஞராக கேட்டி பெர்ரி அறியப்படுகிறார். பாப் பாடகியான இவர், 115 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட, அனைத்து காலகட்டத்திலும் அதிகமாக விற்பனையாகும் இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். உலகளாவிய பாப் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் கேட்டி, பல மனிதநேய நோக்கங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அதில், யுனிசெஃப் நல்லெண்ண தூதராக, ஒவ்வொரு குழந்தையின் சுகாதாரம், கல்வி, சமத்துவம், பாதுகாப்புக்கான உரிமையை உறுதி செய்வதற்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். கேரியன் ஃப்ளின் பட மூலாதாரம்,KERIANNE FLYNN/IG படக்குறிப்பு,கேரியன் ஃப்ளின் ஃபேஷன் மற்றும் மனித வளத்துறையில் சிறந்து விளங்கிய பிறகு, கேரியன் ஃப்ளின், கடந்த பத்து ஆண்டுகளாக தி ஆலன்-ஸ்டீவன்சன் பள்ளி, தி ஹை லைன், ஹட்சன் ரிவர் பார்க் ஆகியவற்றுடன் இணைந்து லாப நோக்கமற்ற தன்னார்வப் பணிகளைச் செய்து வருகிறார். கதை சொல்லலுக்கு இருக்கும் ஆற்றலின் மீது அதீத ஆர்வமுள்ள கேரியன், ஹாலிவுட்டில் பெண்களின் வரலாற்றை ஆராயும் திஸ் சேஞ்சஸ் எவ்ரிதிங்(2018), லில்லி லெட்பெட்டர் என்ற வழக்கறிஞர் குறித்தான லில்லி(2024) போன்ற சிந்தனையைத் தூண்டும் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25n4nw1zqo