Everything posted by ஏராளன்
-
சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!
சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் டிரம்ப் பல்வேறு நாடுகளுடனான அமெரிக்காவின் வணிகத்தை சமன் செய்யும் வகையில் பதில் வரி அறிவிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இதை ஏற்காத சில நாடுகள் தாங்களும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தின. சீனப்பொருட்களுக்கு ட்ரம்ப் 34% வரியை அதிகரித்த நிலையில் பதிலுக்கு சீனாவும் 34% வரி அதிகரிப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. இதனால் ட்ரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். தங்களுடனான வணிகத்தில் சீனா ஏற்கனவே பல தில்லுமுல்லுகளை செய்து வருவதாக குறிப்பிட்ட ட்ரம்ப், 34% வரியை சீனா இன்றைக்குள் திரும்பப்பெறாவிட்டால் நாளை மேலும் 50% வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார். இதை ட்ரம்ப் செய்யும் பட்சத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியின் மொத்த மதிப்பு 104% ஆக அதிகரிக்கும் நிலை ஏற்படும். மேலும், சீனாவுடனான வரி தொடர்பான சமரச பேச்சுகள் அனைத்தையும் கைவிட்டுவிடுவேன் என்றும் ட்ரம்ப் தன் ட்ரூத் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க சந்தை ஏறக்குறைய மூடப்படுவதன் விளைவாக சீன பொருட்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குவியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316920
-
கடந்தகால கொள்கைத்தவறுகளை சீரமைக்க அதிக விலை செலுத்தவேண்டிய நிலையில் மக்கள் - ஐ.எம்.எப்பின் முன்னாள் செயற்றிட்டப் பிரதானி
08 APR, 2025 | 07:29 PM (நா.தனுஜா) இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தம் இன்மை என்பவற்றின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடியைச் சீரமைப்பதற்கு துரதிர்ஷ்டவசமாக தற்போது மக்கள் அதிக விலையைச் செலுத்திவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான முன்னாள் செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் எழுப்பப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இன்றளவிலே அத்தியாவசிய சேவை வழங்கலுக்கு நிதி அளிக்கக்கூடிய மட்டத்துக்கு அரசாங்கத்தின் இயலுமை விரிவடைந்திருப்பதற்கு வரி செலுத்துபவர்கள் அவர்களது தோள்களில் அதிக சுமையைச் சுமப்பதே காரணமாகும். அதேபோன்று தற்போது எரிபொருள் மற்றும் மின்கட்டணங்கள் முழுவதுமாக பயனாளர்களாலேயே செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்குச் சொந்தமான நிதியை சமூகப் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் உள்ளடங்கலாக முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய விடயங்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இலங்கை தற்போதைய நலிவடைந்த நிலையிலிருந்து முழுமையாக மீட்சியடைவதற்கும், 2022ஆம் ஆண்டு முகங்கொடுக்க நேர்ந்ததைப் போன்ற மிக மோசமான நெருக்கடியொன்று மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் இந்தத் தியாகங்கள் இன்றியமையாதனவாகும். நான் 2022ஆம் ஆண்டு அதிகாலை 4 மணிக்கு இலங்கையில் தரையிறங்கியபோது கார்கள், லொறிகள், கனரக வாகனங்கள் அனைத்தும் மிக நீண்ட வரிசைகளில் நிற்பதைப் பார்த்தேன். மக்கள் அனைவரும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருந்ததால் பகல் வேளைகளில் பொருளாதார செயற்பாடுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. அவ்வேளையில் மின்துண்டிப்பும் நடைமுறையில் இருந்தது. மின்துண்டிப்பின் விளைவாக நாம் அவ்வப்போது இருண்ட அறைகளில் அமர்ந்திருந்தோம். இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களில் குறிப்பிட்டுக் கூறத்தக்க முக்கிய அடைவுகளை எட்டுவதற்கு ஏதுவான மிகக் கடினமான மறுசீரமைப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துப் பொருட்களுக்கான வரிசைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மின்துண்டிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நெருக்கடியிலிருந்து மீண்ட பொருளாதாரம், கடந்த ஆண்டு 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இவ்விடயத்தில் இலங்கை மக்களின் அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211523
-
முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு - அஜித் பி பெரேரா
Published By: DIGITAL DESK 2 08 APR, 2025 | 04:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த சட்டமூலத்தில் காணப்படும் ஒருசில தொழில்நுட்ப சிக்கல்களுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, எவரேனும் நபர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியிருந்தால் அவற்றை சட்டத்தின் ஊடாக அரசுடமையாக்கிக் கொள்ளும் இயலுமை காணப்படுகிறது. அத்துடன் குறித்த சொத்தின் முதல் உரித்தாளருக்கு சொத்தை உரித்தாக்கவும் முடியும். குற்றம் தொடர்பில் முறையான காரணிகள் மற்றும் சாட்சியங்கள் இருக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட அனைவரும் முறையற்ற வகையில் சொத்து சேர்த்திருந்தால் அது சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே பேசப்பட்டது. மோசடி செய்யப்பட்ட சொத்துக்களை மீண்டும் அரசுடமையாக்குவது தொடர்பில் 2015.05.01 ஆம் திகதியன்று ஜனாதிபதி சட்டத்தரணி வெலியமுன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த செயலணியில் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய நீதியரசர் யசந்த கோதாகொட உட்பட13 பேர் சேவையாற்றினார்கள். இந்த சட்டம் உருவாக்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டு, இந்த சட்ட வரைவு பணிகள் நிறைவுப்படுத்தப்பட்டன. இவ்வாறான பின்னணியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஆகவே இந்த சட்டமூலத்தை எவரும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு இந்த சட்டமூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் காணப்படும் ஒருசில பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். இந்த சட்டமூலத்தில் உறுப்புரை 53, 55, 56 உட்பட பல பிரிவுகளில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதிப்புக்களில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த சிக்கல்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த சட்டம் சிறந்த முறையில் இயற்றப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/211508
-
பாராளுமன்ற அமர்வில் எழுந்த ஒழுங்கு பிரச்சினை - வரலாற்றில் இதுவே முதல் தடவை
08 APR, 2025 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனினும் செவ்வாய்க்கிழமை (08) சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1.40 மணி அளவில், எதிர்க்கட்சி பக்கத்திலிருந்து உறுப்பினர் ஒருவர் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார். ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய நபர் யார்? என்ன? ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார் என்பது நேரடியாக ஒளிபரப்பபடவில்லை. எனினும், யாரோ கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர, சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை, பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இவ்வாறு சபையில் கூச்சல்கள் எழுந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் மேலே குறிப்பிடப்பட்ட வகையில், அறிவித்தல் திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. இவ்வாறான சம்பவம் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும். https://www.virakesari.lk/article/211517
-
"ஒற்றை வீடியோவால் வீழ்ந்த தர்பூசணி விலை" - 2 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோடைக்காலத்தில் நல்ல வரவேற்பைக் கொண்டிருக்கும் தர்பூசணியில் ரசாயனம் ஊசி மூலமாக ஏற்றப்படுகிறது என்று வெளியான தகவலைத் தொடர்ந்து, உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் உள்ள அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தர்பூசணியில் நிறமிகள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று சமீபத்தில் உணவுத்துறை பாதுகாப்புத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ தான் இதற்கு காரணம் என்கின்றனர் விவசாயிகள். இழப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் விவசாய சங்கத்தினர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தகைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்று விளக்கம் அளிக்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். இந்த விவகாரம் விவசாயிகள் மத்தியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது? பாதிக்கப்பட்ட விவசாயிகள் வைக்கும் கோரிக்கை என்ன? விளக்குகிறது இந்த செய்தி. நாங்கள் விவசாயிகளுக்கு எதிரிகள் அல்ல – பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரியின் விளக்கம் சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலராக இருந்த சதீஷ்குமார் கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், " தர்பூசணி பழங்களில் நிறம் மற்றும் சுவைக்காக ரசாயனங்கள் ஏற்றப்படுகிறது" என்று கூறினார் . இவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதை 'டெமோவாக' செய்துக் காட்டிய அவர், பழத்தில் நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும் போது, அதில் 'டிஸ்யூ' காகிதம் ஒன்றை வைத்துத் தேய்த்தால், அடர் சிவப்பு நிறத்தில் அந்த காகிதம் மாறிவிடும் என்றும் கூறினார். இதற்கு முன்னதாகவும் இது போன்ற அவரின் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்த ஆண்டில் தர்பூசணிக்கு பெரிய அளவில் விலை ஏதும் கிடைக்காததற்கு இது தான் காரணம் என்று விவசாயிகள் தங்களின் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் யாரோ ஒரு சிலர் செய்கின்ற தவறுகளுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர் என்று கவலை தெரிவித்திருந்தனர். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு விளக்கத்தை அளித்தார் சதீஷ்குமார். அதில், "தர்ப்பூசணிகள் சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு வாய்களில் புண்கள் வருகிறது என்ற புகார்கள் ஆங்காங்கே வருகிறது. யாரோ ஒரு சிலர் செய்த தவறு மூலமாக ஒட்டுமொத்தமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல," என்று அவர் கூறினார். மேலும், அவர் ஆய்வு செய்த பகுதியில், எலிக்கடித்த பழங்களை மட்டுமே அழித்ததாகவும், அந்த பழங்களில் எந்தவிதமான நிறமூட்டிகளும் சேர்க்கப்படவில்லை என்றும் உறுதியளித்தார். மக்கள் எந்த விதமான அச்சமுமின்றி இப்பழங்களை உட்கொள்ளலாம் என்றும் கூறினார் அவர். "ரசாயனமேற்றப்பட்ட பழங்கள் அடர் சிவப்பு நிறத்திலும் அதீத இனிப்பு சுவையும் கொண்டிருக்கும். அதனை உட்கொண்ட சில மணி நேரத்திற்குள் வாய்ப்புண், வயிற்றெரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை மக்கள் சந்திப்பார்கள்," என்று விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று, சதீஷ்குமாரை தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு பணியிட மாற்றம் செய்தது தமிழக அரசு. திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ் சென்னை மண்டலத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பானிபூரியில் சேர்க்கப்படும் கண்கவர் நிறமிகளால் புற்றுநோய் ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை13 ஜூலை 2024 தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை - அவற்றை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?17 பிப்ரவரி 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மக்கள் எந்த விதமான அச்சமுமின்றி இப்பழங்களை உட்கொள்ளலாம் விவசாயிகள் கூறுவது என்ன? தாராபுரத்தில் 3 ஏக்கர் நிலத்தில் தர்பூசணி விவசாயம் செய்து வருபவர் சக்திவேல் குப்புசாமி. ரசாயனம் தொடர்பான செய்தி வெளியான பிறகு நஷ்டத்தை சந்தித்து வருவதாக பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் அவர். "எங்கள் குடும்பத்தில், நான், என் மனைவி, என் அக்கா மற்றும் அம்மா என்று நான்கு பேரும் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறோம். இருப்பினும் உரம், மருந்து, மின்சாரம் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு ஏக்கருக்கு (ஒரு விளைச்சலுக்கு) ரூ. 15 ஆயிரம் வரை இரண்டு மாதங்களுக்கு செலவு மட்டும் ஆகும். நல்ல விளைச்சலும் நல்ல விலையும் இருந்தால், ஒரு ஏக்கருக்கு எங்களால் ரூ.15- 20 ஆயிரம் வரை லாபம் பார்க்க இயலும்," என்று விளக்கினார் சக்திவேல். "தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வியாபாரிகள் தர்பூசணிகளை வாங்கிச் செல்வதுண்டு. இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பு வியாபாரிகள் எங்களிடம் ஒரு கிலோ பழத்தை ரூ. 7-க்கு வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது 2 ரூபாய்க்கு தர முடியுமா என்று கேட்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் 3 டன் எடை கொண்ட பழங்கள் தேக்கமடைந்து நிலத்திலேயே வெடித்து அழுகிப்போனது," என்று கூறுகிறார் அவர். சுட்டெரிக்கும் கோடை என்பதால் விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த பழங்களை அறுவடை செய்யாததால் வெடித்தும், வெம்பியும் வீணாகிப் போவதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள். பட மூலாதாரம்,FOOD SAFETY AND DRUG ADMINISTRATION DEPARTMENT TAMIL NADU/ FACEBOOK படக்குறிப்பு,பாலக்கோடு பகுதியில் தர்பூசணியின் தரம் குறித்து ஆய்வு நடத்தும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒரு வாரமாக வேலையில்லை! ஒட்டன்சத்திரம் விவசாயிகளிடம் இருந்து பழங்களை வியாபாரிகளுக்கு கைமாற்றிவிடும் இடைத்தரகராக பணியாற்றி வருகிறார் ராமசாமி ஆறுமுகம். வீடியோவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசும் போது, "இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் பழங்களை விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலங்களுக்கு வாரம் ஒரு முறை சென்று விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு நான் வியாபாரிகளுக்கு தகவல் தெரிவிப்பேன். அவர்கள் பெரிய வண்டிகளில் வந்து பழங்களை வெட்டி எடுத்துச் செல்வார்கள். ஒரு கிலோவுக்கு எனக்கு ஐம்பது காசுகள் கமிஷனாக கிடைக்கும். வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை இந்த வேலையை நான் பார்த்து வந்தேன். தற்போது வீடியோ வெளியான நிலையில், கடந்த சில நாட்களாக எந்த வியாபாரிகளும் என்னிடம் பழங்கள் இருப்பு குறித்து கேள்வி எழுப்பவில்லை. வருகின்ற காலங்களிலும் தர்பூசணிக்கு நல்ல விலை இருக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. எனவே அடுத்த சில வாரங்களுக்கு எனக்கு வேலை ஏதும் இல்லாமல் வருமானமின்றி இருக்க நேரிடும்," என்று குறிப்பிடுகிறார் ராமசாமி. பால், நெய், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?28 அக்டோபர் 2024 கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலராக பணியாற்றிய சதீஷ்குமார் பழங்களை குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது! இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மலர், காய்கனி வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ வைத்தியலிங்கம் பேசுகையில், "ஒரு வீடியோவுக்கு பிறகு தர்பூசணி விவசாயிகளின் நிலைமை தலைகீழாக ஆகிவிட்டது," என்று குறிப்பிடுகிறார். கோவிந்தராஜூ அளித்த தகவலின் படி, திண்டிவனம், செய்யாறு, வந்தவாசி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெரியபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் தர்பூசணி விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தர்பூசணிகளே சென்னையில் விற்பனைக்கு வருகிறது. "சென்னையில் சந்தைப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் தர்பூசணிகளில் 5 முதல் 10 சதவிகித பழங்கள் மட்டுமே நேரடியாக கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. மீத பழங்கள் அனைத்தும் ஒவ்வொரு வார்டிலும் உள்ள உள்ளூர் வியாபாரிகளிடம் கொடுத்து சந்தைப்படுத்துகின்றனர் விவசாயிகள்," என்று கூறுகிறார் கோவிந்தராஜூ. பழத்தின் தரத்திற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று குறிப்பிடும் அவர், உணவுத்துறை அதிகாரிகளின் வீடியோ வருவதற்கு முன்பு, முதல்நிலை தரம் கொண்ட பழங்கள் கிலோ ஒன்று ரூ.20-க்கும், மத்திய தரம் கொண்ட பழங்கள் ரூ.15-க்கும், சிறிய ரக பழங்கள் ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவிக்கிறார். "வீடியோ வெளியான பிறகு பழங்களின் விற்பனை மந்தமடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். வியாபாரிகள் ஏற்கனவே வாங்கிய பழங்களை குப்பையில் கொண்டு போய் கொட்டுகின்றனர். அறுவடை செய்யப்பட்ட பழங்களை, விலை போகவில்லை என்று தெரிந்தும், விவசாயிகள் நேரடியாக வந்து வியாபாரிகளிடம் இலவசமாக கொடுத்துவிட்டு செல்கின்றனர். அந்த பழங்களும் தற்போது குப்பைக்குத் தான் செல்கிறது," என்று தெரிவிக்கிறார் கோவிந்தராஜூ. வெயில் காலத்தில் அதிக காலம் இந்த பழங்களை பாதுகாத்து வைப்பது கடினம். பழத்திற்கான விலை வருங்காலங்களில் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் ஆனால் அத்தனை காலம் வரை இருப்பில் இருக்கும் பழங்கள் தாக்குபிடிக்குமா என்பது கேள்வி தான் என்று தெரிவிக்கிறார் அவர். பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 ரமலான் நோன்பு காலத்தில் உணவு சமைக்கும் போது சலனம் வருமா? முஸ்லிம் சமையல் கலைஞரின் அனுபவம்31 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னையில் சந்தைப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் தர்பூசணிகளில் 5 முதல் 10 சதவிகித பழங்கள் மட்டுமே நேரடியாக கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்! தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் பிபிசி தமிழிடம் பேசிய போது, இந்த இழப்பீட்டிற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். முறையான ஆய்வுகள் மற்றும் ஆதாரங்கள் ஏதுமின்றி இத்தகைய வீடியோவை உணவுத்துறை அதிகாரிகள் எவ்வாறு வெளியிட முடியும் என்ற கேள்வியை எழுப்பிய அவர், "பொறுப்பற்ற வகையில் இவர்கள் வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா என்பதை அரசு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்," என்றும் தெரிவித்தார். தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்த அவர்,"சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தால் அனைத்தும் சரியாகிவிடுமா? தமிழகத்தில் மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தர்பூசணி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் இதனால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்," என்றார் பாண்டியன். விவசாயிகள் அடைந்த நஷ்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், பழங்கள் சாப்பிட பாதுகாப்பானவையாகவே இருக்கிறது என்று கூறினார். மேலும், "விவசாயிகள் இத்தகைய கலப்படத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது," என்று தெரிவித்தார். இழப்பீடு குறித்து எந்த விதமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y40j9lr3jo
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையான் கைது! Published By: VISHNU 08 APR, 2025 | 08:57 PM முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான அவர் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211540
-
அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது; இராசமாணிக்கம் சாணக்கியன்
08 APR, 2025 | 10:50 AM அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது. தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்காமல் விட்டிருந்தால் அவர்கள் அநுராதபுரத்தில் கூட்டத்தை வைத்து அவர்களின் இன பிரச்சனையை மாத்திரம் கதைத்து விட்டு அனுப்பி இருப்பார்கள். மக்கள் எமக்கு வாக்களித்ததினால் எம்மால் இந்திய பிரதமரை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்து மக்களின் பிரச்சனைகளை கையாள கூடியதாக இருந்தது. இம்முறை மக்கள் சிந்தித்து இவ் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (07) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். சாணக்கியன் இராசமாணிக்கம் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்த அரசை பிரதி நிதித்துவப்படுத்தும் குழுவில் ஓர் தமிழரோ, முஸ்லீமோ, மலையகத் தமிழரோ இல்லை. அவர்களின் உறுப்பினர்களில் தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் அவர்கள் அழைக்கப்படவில்லை. ஒதுக்கபட்டர்களோ தெரியவில்லை. தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளை தமிழ் பேசும் மக்களே கையாள வேண்டும். அதனால் மக்களே சிந்தியுங்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/211444
-
பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் அமைத்த ஈரான்; வீடியோ வெளியீடு
ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல் பட மூலாதாரம்,TASNIM படக்குறிப்பு,கய்பர் ஷெகான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ரகசிய அறை. கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்சாத் செய்ஃபிகரன் பதவி, பிபிசி பெர்சியன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "நாம் இன்று தொடங்கி, ஒவ்வொரு வாரமும் ஒரு ஏவுகணை நகரத்தை வெளியிட்டால் கூட, இரண்டு ஆண்டுகளில் அது முடிவடையாது. அத்தனை ஏவுகணை தளங்கள் உள்ளன." மேற்கூறியவாறு குறிப்பிட்டு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழலில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளை பதுக்கி வைத்துள்ள புதிய ரகசிய நிலத்தடி தளங்களை, இரான் சமீபத்தில் வெளிப்படுத்தியது. கடந்த வாரம் அமெரிக்கா, ரகசிய தொழில் நுட்பம் மற்றும் சக்தி வாய்ந்த குண்டுகளைச் சுமந்து செல்லக் கூடிய திறன் கொண்ட ஆறு கூடுதல் போர் விமானங்களை, இரான் மற்றும் யேமன் நாடுகளை எளிதில் அணுகக் கூடிய ஒரு இராணுவ தளத்திற்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். பெயர் தெரிவிக்க விரும்பாத அவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இத்தகவலை வழங்கினார்கள். இதற்கு பதில் அளித்த இரான், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ ஆற்றலை கொண்டிருப்பது, அவர்களை 'கண்ணாடி அறையில்' அமர்ந்துள்ளவர்களாக மாற்றுகிறது. எனவே அவர்கள் 'மற்றவர்கள் மீது கற்களை எறியக் கூடாது' என்று குறிப்பிட்டது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு தெற்கே அமைந்துள்ள பிரித்தானியப் பிரதேசமான டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவத் தளத்தை தாக்கப்போவதாக இரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த டியாகோ கார்சியா தீவின் கட்டுப்பாட்டை மொரீஷியஸிடம் திருப்பி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற தாக்குதலை மேற்கொள்ள முடியும் என இரான் இதற்கு முன் எப்போதும் கூறியதில்லை. இந்த "ஏவுகணை நகரங்கள்" என்பவை என்ன? இரான், தற்போது இதுகுறித்த தகவலை பகிர்ந்து கொள்வதற்கான காரணம் என்ன? இது மத்திய கிழக்கில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளில் எத்தகைய பங்கு வகிக்கும்? ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்ற லட்சக்கணக்கான ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?4 மணி நேரங்களுக்கு முன்னர் வக்ஃப் சட்டத் திருத்தம் பற்றி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர் கூறுவது என்ன?7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,IMA MEDIA படக்குறிப்பு,இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள தளத்தில் ஏவுகணைகள் பொருத்தப்படும் காட்சி இரானின் 'ஏவுகணை நகரங்கள்' எவை? "ஏவுகணை நகரங்கள்" என்பது இரானின் ராணுவப் படைப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையானது (IRGC) நிலத்திற்கு அடியே பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை தளங்களை குறிப்பதற்காக பயன்படுத்தும் சொல். இந்த தளங்கள் நாடு முழுவதும் பரந்த, ஆழமான மற்றும் ஒன்றோடொன்று சுரங்கங்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் மலைப்பிரதேசங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்துள்ளன. அவை பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூயிஸ் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற பிற முக்கிய ஆயுதங்களை சேமிக்க, தயாரிக்க மற்றும் ஏவுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) தளபதிகளின் கூற்றுப்படி, இந்த ஏவுகணை நகரங்கள் ஏவுகணை சேமிப்பு தளங்கள் மட்டுமல்ல, அவற்றில் சில தளங்கள், "ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்காக செயல்படும் தொழிற்சாலைகளாகும்." இந்த ஏவுகணை தளங்கள் அமைந்துள்ள துல்லியமான இடங்கள் தெரியவில்லை. அவற்றின் அமைவிடங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. ஐ.ஆர்.ஜி.சி வான்வழிப் படையின் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹஜிசாதே, இரான் அரசுக்குச் சொந்தமான ஐஆர்ஐபிக்கு (IRIB) அளித்த பேட்டியில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை டிரோன்கள் அந்த தளங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியுடன் "ஏவுகணை நகரம்" தொடர்பான வீடியோவை வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவில் காணப்படுவதை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை. தற்போது இதனை வெளியிடுவதற்கான காரணமாக, "இரானுக்கு எதிரான எந்தவொரு விரோதச் செயலுக்கும்" பதிலடி அளிக்க தெஹ்ரான் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தும் என அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டது. "பிராந்தியத்திலோ அல்லது இரானிய ஏவுகணைகளின் எல்லைக்குள்ளாகவோ இரான் தாக்கப்பட்டால், பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கப் படைகளை குறி வைப்பதில் எந்த விதமான வேறுபாடும் இருக்காது" என்று இரான் எச்சரித்துள்ளது. ஏராளமான ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை சேமித்து வைத்துள்ள நிலத்தடி சுரங்கங்களின் படங்களை, ஐ.ஆர்.ஜி.சி. கடந்த பத்து ஆண்டுகளில், அவ்வப்போது வெளியிட்டு, அவற்றை "ரகசிய ஏவுகணை நகரங்கள்" என கூறி வருகிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் டிரம்புக்கு எதிராக போராட்டம்7 ஏப்ரல் 2025 இலங்கையில் மோதி வழிபட்ட அநுராதபுரம் பௌத்த விகாரையின் முக்கியத்துவம் என்ன?7 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,இரான் ஏவுகணைகள் எவ்வளவு தூரம் வரை தாக்கக் கூடும் என்பதை காட்டும் வரைபடம். இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட தாக்குதல்களைத் தடுக்க இரான் முயல்கிறது. சமீபத்தில் வெளியான காட்சிகளில் கெய்பர் ஷெகான், ஹஜ் காசிம், எமாத், செஜ்ஜில், காதர்-எச் மற்றும் பாவே போன்ற ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன. 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தங்களால் தாக்க முடியும் என இரான் பெருமையுடன் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2024-ஆம் ஆண்டில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியபோது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் எமாத் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இடம்பெற்றிருந்தன. இந்த தாக்குதலில் மத்திய இஸ்ரேலில் உள்ள நவதிம் விமானத் தளத்தில் சேதம் ஏற்பட்டது. இராக், சிரியா மற்றும் ஜோர்டான் வழியாக இரானில் இருந்து இஸ்ரேலுக்கான குறைந்தபட்ச தூரம் சுமார் 1,000 கிலோ மீட்டராகும். 2024 ஏப்ரலில் இரான் மேற்கொண்ட தாக்குதலின் போது, ஏவப்பட்ட ஏவுகணைகளில் 99 சதவிகிதம் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. அக்டோபரில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், இரான் ஏவுகணைகள் எவ்வளவு தூரம் வரை தாக்கும் என்பது தொடர்பாகவும், அவற்றின் திறன் தொடர்பான சந்தேகங்களும் உள்ளன. இதுபோன்ற சூழலில், டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை அடைய முடியும் எனச் சொல்லப்படும் சமீபத்திய கூற்று, ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். 1970களின் முற்பகுதியில் இருந்து, அங்கு ஒரு பிரிட்டன்- அமெரிக்க ராணுவத் தளம் செயல்பட்டுவருகிறது. ஆனால் அந்த தளம் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அது இரானில் இருந்து சுமார் 3,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வாரம், தனது ஷாஹெட் 136பி ட்ரோன்கள் மூலம் 4,000 கிமீ தூரம் வரை தாக்க முடியும் என்று இரான் மீண்டும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அது நிரூபிக்கப்படவில்லை. தற்போது 2,000 கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடிய ஏவுகணை இரானிடம் இல்லையெனத் தோன்றினாலும், கோட்பாட்டளவில் அந்தத் தீவை அடைய, கடற்படை வளங்களைப் பயன்படுத்துதல் அல்லது தற்போதுள்ள ராக்கெட் அமைப்புகளை மாற்றியமைத்தல் போன்ற பிற வழிகளும் உள்ளன. மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழ்நாடு மீனவர்கள் பற்றி மோதி கூறியது என்ன?6 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,டியாகோ கார்சியாவுக்கும் இரானுக்கும் இடைப்பட்ட தூரம் மத்திய கிழக்கில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்காவின் ராணுவ துருப்புகள் உள்ளன. அமெரிக்கா அந்தப் பகுதியில் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை தயார் நிலையில் வைத்திருக்கும். டியாகோ கார்சியா தீவில் அமெரிக்காவின் பி-2 ரகசிய குண்டுவீச்சுப் போர் விமானங்கள் இருப்பதை கீழே உள்ள செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இவை, யேமனில் ஹூதி ஆயுதக்குழுவினர் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. "இரான் அல்லது இரானால் ஆதரிக்கப்படும் குழுக்களால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பணியாளர்கள் மற்றும் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், எங்கள் மக்களைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதியான நடவடிக்கை எடுக்கும்" என்று அமெரிக்க ராணுவத் தலையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். டியாகோ கார்சியா தீவை எத்தனை பி-2 விமானங்கள் சென்றடைந்தன என்பதைப் பற்றி அமெரிக்கா தகவல் வழங்க மறுத்துள்ளது. அவர்களின் பயிற்சிகள் அல்லது செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் குறித்து தெரிவிக்க முடியாது என்றும் அது கூறியுள்ளது. அமெரிக்க விமானப்படையில் சக்தி வாய்ந்த பி-2 வகை குண்டுவீச்சு விமானங்கள் மொத்தம் 20 மட்டுமே உள்ளன. எனவே, அவை மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களே இல்லை: பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுகளுக்கும் வரி விதித்த டிரம்ப்4 ஏப்ரல் 2025 இந்திய ஆடை உற்பத்தி துறை டிரம்பின் வரி விதிப்பால் லாபம் அடைவதற்கான வழிகள்4 ஏப்ரல் 2025 ஏவுகணை நகரங்களை இரான் தெரியப்படுத்தியதன் காரணம் என்ன ? இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையிலான மூன்று முக்கிய பிரச்னைகளின் காரணமாக அதிகரித்துள்ள பதற்றத்தின் மத்தியில் இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இரான் ஆதரவு பெற்ற ஹூதி இயக்கத்தின் அச்சுறுத்தல், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் லெபனானில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் தாக்குதல்கள் தான் அந்த மூன்று பிரச்னைகள். இரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வராவிட்டால், ராணுவ தாக்குதல் மற்றும் இரண்டாம் நிலை வரி விதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது, கடந்த ஆண்டு இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிகழ்ந்த ராணுவ மோதலின் பின்னணியில் பார்க்கப்படுகின்றது. இரானால் தன்னைக் குறிவைக்கும் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி அளிக்க முடியும் என்ற எச்சரிக்கையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, ஐ.ஆர்.ஜி.சியின் ஏவுகணை தளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிகிறது. இஸ்ரேல் மீது மூன்றாவது முறையாக தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக இரான் தொடர்ந்து உறுதியளித்து வந்துள்ளது. ஆனால், அதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, இஸ்ரேலின் தாக்குதல்கள் இரானின் ஏவுகணை திறன்களை பாதித்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இரானின் திறன் குறித்தும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். மறுபுறம், அமெரிக்காவிடம் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்க்கும் திறன் தன்னிடம் உள்ளதாகவும், தாங்கள் இன்னும் வலிமையாக உள்ளதாகவும் தனது குடிமக்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறது இரான் அரசாங்கம். நிலத்துக்கு அடியில் ஏவுகணை நகரங்களை கட்டுவதன் நோக்கம், வான்வழி தாக்குதல்களுக்கெதிரான எதிர்ப்பு திறனையும், நீடித்து நிற்கும் திறனையும் அதிகரித்து, தாக்குதல்களைத் தடுக்கும் திறனைத் தொடர்ந்து பராமரிப்பதாகும். இத்தகைய ஏவுகணை நகரங்களை உருவாக்குவதன் மூலம், தனது தளங்கள் தாக்கப்பட்டாலும், திருப்பி தாக்கும் திறன் தனக்குள்ளதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இரான் தெரியப்படுத்த விரும்புகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c93gl3xekz7o
-
வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை கே.மஸ்தான் தலைமையில் நடைபெற்றது
08 APR, 2025 | 10:24 AM வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக திங்கட்கிழமை (07) வன்னி பாராளுமன்ற கே. மஸ்தான் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிப்பதன் ஊடாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி மற்றும் வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை ஏற்படுத்த முடியும் என்கின்ற நோக்கத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் முயற்சியினால் முதற்கட்ட பேச்சுக்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினரோடு இடம்பெற்றிருந்தது. இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்கப்படுமாக இருந்தால் அதற்கான நிதி பலத்தினை பெற்று கொள்வது தொடர்பிலும் அதன் சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதுடன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கான ஏற்பாடுகளுக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ. அற்புதராஜா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர், பல்கலைக்கழகத்தின் துறை தலைவர்கள், வைத்தியர்கள், பிரதேச செயலாளர், சட்டத்தரணிகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/211443
-
தாய் - சிசு மரண எண்ணிக்கையை குறைத்து தரமான சேவையை உறுதி செய்வதே சுகாதார அமைச்சின் நோக்கம் - நளிந்த ஜயதிஸ்ஸ
08 APR, 2025 | 08:32 AM இலங்கையில் தற்போது ஒரு இலட்சம் பேரில் 25 தாய், சிசு மரணங்கள் பதிவாகின்றன. அந்தவகையில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தாய் சிசு மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது இந்நாட்டு சுகாதாரத் துறையில் அடையப்பட்ட ஒரு சாதனையாகும். ஆகையால் மரண எண்ணிக்கையை மேலும் குறைத்து தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதே சுகாதார அமைச்சின் நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபன இலங்கை அலுவலகத்தின் பதில் தலைவர் வைத்தியர் பரூக் குரேஷி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கிடையில், சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை (07) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உலக சுகாதார தினம் வருடாந்தம் ஏப்ரல் 7 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இம்முறை ஆரோக்கியமான தொடக்கங்கள் நம்பிக்கையான எதிர்காலம் என்னும் விசேட தொனிப்பொருளுக்கமைய அனுஷ்டிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பல்வேறு பொது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இம்முறை முன்மொழியப்பட்டுள்ள கருப்பொருளுக்கமைய கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிசு உயிரிழப்பைத் தடுக்கும் முகமாகவும், சர்வதேச சமூகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தத் துறையில் உள்ள நிபுணர்களின் பங்கேற்புடன் ஏப்ரல் 1ஆம், 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் இணையவழி சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதன்போது கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு, தாய்மார்களின் மனநலம் மற்றும் தாய்மார்களின் நல்வாழ்வு ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக் கருத்தரங்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சுகாதார அமைச்சின் வேலைத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அவை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. தற்போதைய அரசாங்கம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் இந்நாட்டின் எதிர்கால உயிர்நாடி எனவே அவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைய கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிசு மரண வீதத்தை ஒரு இலட்சத்துக்கு எழுபதாகக் குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. எனினும் தற்போது இலங்கையில் ஒரு இலட்சம் பேரில் 25 தாய், சிசு மரணங்கள் பதிவாகுகின்றன. அந்தவகையில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தாய், சிசு மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை காணலாம். இது இந்நாட்டு சுகாதாரத் துறையால் அடையப்பட்ட ஒரு சாதனையாகும். நாட்டிலுள்ள அனைத்து சுகாதார நிபுணர்களின் வலுவான அர்ப்பணிப்பின் காரணமாக இத்தகைய திருப்திகரமான நிலையை அடைய முடிந்துள்ளது. ஆகையால் மரண எண்ணிக்கையை மேலும் குறைத்து தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதே சுகாதார அமைச்சின் நோக்கம் என்றார். https://www.virakesari.lk/article/211438
-
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் - ரில்வின் சில்வா
07 APR, 2025 | 08:37 PM (எம்.வை.எம்.சியாம்) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டுக்கிறார்கள். ஆனால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (06) பண்டுவஸ்நுவர பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதலாவது அரசமுறை விஜயமாக அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு சென்றிருந்தார். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கு சார்பாக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. அன்று தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றனர். ஆனால் எமது அரசாங்கத்துக்கே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோன்று எமது அயல் நாட்டின் தலைவர் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு சென்றுள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினர் சர்வதேசத்துக்கு நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக தற்போது குற்றஞ்சாட்டுக்கிறார்கள். அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை. அவர்கள் காட்டிக்கொடுத்தவற்றை நாமே நிறுத்தியுள்ளோம். ரணில் விக்கிரமசிங்க மில்கோ நிறுவனத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தார். ஆனால் நாம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம். நட்டத்தில் இயங்குவதாக கூறப்பட்ட மில்கோ நிறுவனம் தற்போது இலாபமிட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. திரிபோஷா நிறுவனம் விற்பனை செய்யப்படவிருந்தது. ஆனால் தற்போது திரிபோஷ உற்பத்தியை மேற்கொண்டு அதனை இலாபமிட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம். இதுவே எமது முயற்சியாகும். அதேபோன்று மஹவ- ஓமந்தை புகையிரத பாதை மற்றும் மஹவ-அநுராதபுரம் புகையிரத பாதை சமிக்ஞை கட்டமைப்பு ஆரம்பத்தில் இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய பிரதமர் இந்த திட்டங்களை அன்பளிப்பாக வழங்குவதாக குறிப்பிட்டார். அதேபோன்று இந்தியாவிடமிருந்து நாம் கடன்களை பெற்றுக் கொண்டுள்ளோம். தற்போது இந்த கடனுக்கான வட்டியை குறைப்பதாக பிரதமர் எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முறியடித்து நாம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/211423
-
கொழும்பு மேற்கு சர்வதேச முனைய பணிகள் ஆரம்பம்
08 APR, 2025 | 08:56 AM கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் அதன் பணிகளை ஆரம்பித்திருப்பதாக அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் நிறுவனம் (அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகனொமிக் ஸோன் லிமிடெட்) அறிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தியை அரச - தனியார் கூட்டிணைவின் அடிப்படையில் இணைந்து முன்னெடுத்திருக்கும் அதானி நிறுவனம் மற்றும் இலங்கையின் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் செஸ் லிமிடெட் என்பன வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கென 800 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பில் ஓர் மைல்கல் அடைவாகும் என அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். அத்தோடு இம் முனையமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்கால வர்த்தக மேம்பாட்டைக் காண்பிப்பதுடன் மாத்திரமன்றி, இலங்கைக்கு பெருமைமிகு முன்முயற்சியாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211440
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து 101 பேர் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களைச் செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி மற்றும் கல்விசாரா குழு உதவித்தொகை திட்டங்களைப் பூர்த்தி செய்து அறிக்கை அளிக்கவில்லை என்றும் அது கூறுகிறது. 1980 மற்றும் 2023 க்கு இடையில் ஒப்பந்தங்களை மீறிய அதிகாரிகளிடமிருந்து இந்தப் பத்திரங்களை மீட்க பல்கலைக்கழகம் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது. இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகையை சரிபார்க்காமல் பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 300 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கூடுதல் நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கை கூறுகிறது. இந்தத் தகவல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2023 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316910
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கோலி புதிய மைல் கல்: பரபரப்பான மும்பை - பெங்களூரு ஆட்டத்தில் திருப்பம் தந்த 3 ஓவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 20-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்களில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியின் மூலம் விராட் கோலி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்த 3 ஓவர்களில் என்ன நடந்தது? கோலி அதிவேக அரைசதம் ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே பில் சால்ட் விக்கெட்டை இழந்தாலும், சால்ட் களத்தில் இல்லாத குறை தெரியாமல் ரசிகர்களை கோலி கவனித்துக்கொண்டார். பும்ரா ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட கோலி, வில் ஜேக்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். மும்பை பந்துவீச்சை தெறிக்கவிட்ட கோலி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து, அடுத்த 11 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் இந்த ஆட்டத்தில்தான் கோலி அதிக வேகமாக 30 பந்துகளுக்குள் அரைசதம் அடித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார், ஜிதேஷ் பங்களிப்பு ஆர்சிபி ஸ்கோர் உயர்ந்ததில் ஜிதேஷ் சர்மா, கேப்டன் பட்டிதாரின் பங்களிப்பு முக்கியமானது. 5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 69 ரன்கள் சேர்த்தனர். 19 பந்துகளைச் சந்தித்த ஜிதேஷ் சர்மா 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பட்டிதார் மும்பை பந்துவீச்சாளர்களில் ஜேக்ஸ், ஹர்திக், போல்ட், தீபக் சஹர் பந்துவீச்சை உரித்தெடுத்துவிட்டார். இவர்களின் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி என பட்டிதார் பறக்கவிட்டு 25 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்தார். இருவரின் ஆட்டம் ஆர்சிபி பெரிய ஸ்கோரை எட்டகாரணமாக இருந்தது. ஏனென்றால் இதற்கு முந்தைய 6 ஆட்டங்களிலும் 190வரை ஸ்கோர் செய்தும் ஆர்சிபியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பதால், 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஸ்கோர் செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா வருகை தாக்கம் ஏற்படுத்தியதா? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா வருகை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி, சிக்ஸருக்கு பறக்கவிட்டு, கிங் கோலி என்பதை நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்த பும்ரா விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை, விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES திக் திக் ஆட்டம் ஐபிஎல் டி20 போட்டியில் "ரைவலரி வாரம்" என்று அடையாளப்படுத்தப்பட்டு போட்டிகள் நடக்கைகயில் முதல் ஆட்டமே ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்தது. ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, நமன்திர் களத்தில் இருக்கும்வரை வெற்றி யாருக்கு என்பது உறுதியில்லாமல் இருந்தது, ஆட்டம் மும்பை அணி பக்கமோ அல்லது ஆர்சிபி பக்கமோ சாயலாம் என்ற ரீதியில் இருந்தது. ஆனால், புவனேஷ்வர் வீசிய 18வது ஓவர், ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர், க்ருணால் பாண்டியா வீசிய 20-வது ஓவர் ஆகியவை வெற்றியை ஆர்சிபி பக்கம் மாற்றியது. இந்த 3 ஓவர்கள்தான் ஆர்சிபிஅணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறின. மும்பை அணியின் முயற்சியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது. வெற்றிக்கு 8 ஓவர்களில் 122 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றி, 34 பந்துகளில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினர். 4வது விககெட்டுக்கு188 ரன்களுடன் மும்பை வலுவாகஇருந்தது, ஆனால், கடைசி 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது, அதிலும் க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES சென்டினல்: அணுக முடியாத இந்திய பழங்குடியினரைப் பார்க்க முயன்று கைதான அமெரிக்கர் – யார் இந்த மக்கள்?4 மணி நேரங்களுக்கு முன்னர் கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 போராடிய மும்பை அணி மும்பை அணியின் கரங்களில் இருந்த வெற்றியை ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வர், க்ருணால் பாண்டியா சேர்ந்து பறித்துவிட்டார்கள் என்றுதான் கூற முடியும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா களத்தில் இருந்திருந்தால், நிச்சயம் மும்பை அணி வெற்றி பெற்றிருக்கும். ஏனென்றால், நேற்று ஹர்திக் பாண்டியா "வின்டேஜ் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள்" போல் விளாசினார், அவரின் பேட்டிலிருந்து சிதறிய ஷாட்கள் ஒவ்வொன்றும் மின்னல் வேகத்தில் பவுண்டரி, சிக்ஸரை அடைந்தன, ராட்சதனைப் போல் பேட் செய்த ஹர்திக் கண்களில் வெற்றி தீப்பொறி பறந்தது. 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என 42 ரன்களில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். கிரிக்இன்போ கணிப்பின்படி, 47 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 123 ரன்கள் தேவை என்றபோது அதன் வெற்றி சதவீதம் 1.89 என இருந்தது. ஆனால், திலக் வர்மா 18-வது ஓவரில் ஆட்டமிழந்தபோது மும்பை வெற்றி சதவீதம் 48.42 சதவீதமாக உயர்திருந்து வெற்றிக்கு அருகேதான் இருந்தது. கடந்த ஆட்டத்தில் ரிட்டயர் அவுட் மூலம் திலக் வர்மாவை மும்பை அணி அழைத்துக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் திலக் வெளுத்து வாங்கினார். 29 பந்துகளில் 4 சிக்ஸர், 4பவுண்டரி என 56 ரன்கள் சேர்த்தார். ஹர்திக், திலக் வர்மா கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி, ஸ்வரஸ்யத்தைச் சேர்த்தது. மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?22 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஹேசல்வுட், சூயஷ் கட்டுக்கோப்பு மும்பை அணியின் வெற்றியை பறித்ததில் ஹேசல்வுட்டின் துல்லியமான லென்த் பந்துவீச்சும், சூயஷ் சர்மாவின் சுழற்பந்துவீச்சும் முக்கியக் காரணம். சூயஷ் விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் அவரின் 4 ஓவர்களில் மும்பை பேட்டர்கள் 32 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஹேசல்வுட் பந்துவீச்சில் ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சூர்யகுமார் அடித்த ஷாட்களில் இரு கேட்சுகளை நேற்று ஆர்சிபி அணியினர் தவறவிட்டனர். முதல் கேட்சை சூயஷ் சர்மாவும், 2வது கேட்சை யாஷ்தயாலும், விக்கெட் கீப்பர் சர்மாவும் பிடிக்க முயன்று மோதிக்கொண்டு கேட்சைவிட்டனர். ஆனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தாத சூர்யகுமார் 12வது ஓவரில் யாஷ் தயாலிடம் விக்கெட்டை இழந்தார். சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியைத் தீர்மானித்த கடைசி 3 ஓவர்கள் கடைசி 18 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா இருந்தனர். புவனேஷ்வர் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் புவுண்டரி அடிக்கவே, அதே ஓவரில் திலக் வர்மா ஆப்சைடில் சென்ற பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்று சால்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த நமன்திர் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி பதற்றத்தைக் குறைத்தார் 19-வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். மும்பை வெற்றிக்கு 12 பந்துகளி்ல் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டை லிவிங்ஸ்டோன் கேட்ச் பிடிக்கவே ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்துவந்த சான்ட்னர் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்ட சென்றார். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. க்ருணால் பாண்டியா பந்துவீசினார். களத்தில் சான்ட்னர், நமன்திர் இருவரும் இருந்தனர். க்ருணால் வீசிய முதல் பந்து சிக்ஸருக்கு செல்லும் என எதி்பார்த்தபோது, லாங் ஆப் திசையில் உயரமான பீல்டர் டிம் டேவிட் அற்புதமான கேட்சைப் பிடித்தார். அடுத்துவந்த தீபக் சஹர் வந்தவுடன் சிக்ஸருக்கு பந்தை விரட்டமுயன்றார். ஆனால், பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடித்த சால்ட், பவுண்டரி கோட்டுக்குள் செல்ல முயன்றபோது டிம் டேவிட்டிடம் பந்தை தூக்கிவீசினார். தொடர்ந்து இருவிக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதன்பின் நமன்திர் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 5வது பந்தில் நமன்திர் லெக்திசையில் யாஷ் தயாலிடம் கேட்ச் கொடுக்கவே மும்பையின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த 3 ஓவர்கள்தான் வெற்றி யார் பக்கம் என்பதை தீர்மானித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வேற லெவலில் ஆர்சிபி கடைசியாக 2015ம் ஆண்டு வான்ஹடே மைதானத்தில் மும்பை அணியை 39 ரன்களில் ஆர்சிபி வென்றிருந்தது. அதன்பின் சரியாக 10 ஆண்டுகளுக்குப்பின் இதே வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை நேற்று ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் 6 முறை மும்பையுடன் மோதியும் ஒருமுறைகூட ஆர்சிபி வெல்லவில்லை. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி சேர்த்த ஸ்கோரும் மும்பை அணிக்கு எதிராகச் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். ஏற்கெனவே சென்னையில் சிஎஸ்கே அணியை 17ஆண்டுகளுக்குப்பின் வெற்றி கண்டு வரலாறு படைத்த ஆர்சிபி, இப்போது மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத்பட்டிதாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் 32 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது தவிர விராட் கோலியின் 42 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்த அற்புதமான ஆட்டம், தேவ்தத் படிக்கலின் (37) கேமியோ, கடைசி நேரத்தில் மும்பை பந்துவீச்சை வெளுத்துவாங்கி 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்த ஜிதேஷ் சர்மா ஆகியோரும் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக்காரணமாகும். மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்பு இந்திய ஐடி துறையை பாதிக்குமா? ஆனந்த் ஸ்ரீநிவாசன் விளக்கம்5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "பந்துவீச்சாளர்கள்தான் ஆட்டநாயகர்கள்" வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் " அற்புதமான ஆட்டம், வெற்றிக்கு கடினமாக உழைத்தோம். பந்துவீச்சாளர்கள்தான் உண்மையான ஆட்டநாயகர்கள், அவர்களுக்கு என் விருதை சமர்ப்பிக்கிறேன். அவர்களின் துணிச்சலை வெளிப்படுத்தி கடைசி 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றினர். இந்த மைதானத்தில் ரன்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை, அதைசெய்துள்ளோம். வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தினர். க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தை திருப்பியது. சூயஷ் சர்மா எங்களின் துருப்புச்சீட்டு,விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர். அவர் விக்கெட் எடுக்காவிட்டாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த வெற்றி பந்துவீச்சாளர்களுக்குரியது" எனத் தெரிவித்தார். ஏமாற்றம் தந்த தோனி: சிஎஸ்கே அணியின் 'ஹாட்ரிக்' தோல்வி உணர்த்துவது என்ன? போராட்டமின்றி சரணடைவதா? சிஎஸ்கே தோல்வியால் கொந்தளிக்கும் ரசிகர்கள் கொல்கத்தா அணியை துவம்சம் செய்த அஸ்வனி குமாரை மும்பை கண்டுபிடித்ததன் பின்னணி சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் ரோஹித்தை துரத்தும் துயரம் முந்தைய ஆட்டத்தில் விளையாடாத ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மீண்டு வந்தாலும் அவரது ஆட்டத்தில் பழைய வேகத்தை காண முடியவில்லை. ஐபிஎல் பவர்பிளே ஓவர்களில் அவரது ஆட்டம் மோசமாகவே இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பவர் பிளே ஓவர்களில் (குறைந்தது 200 பந்துகளை சந்தித்த பேட்டர்கள்) ரோஹித்தின் சராசரி ரன் 24.59 ஆக இருக்கிறது. அந்த வகையில் விரித்திமான் சாஹா மட்டுமே ரோஹித்தை விட குறைந்த சராசரியை வைத்திருக்கிறார். அதுவே, 2024-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால் குறைந்தது 180 பந்துகளை சந்தித்த பேட்டர்களில் ரோஹித்தின் 27.90 என்ற சராசரியே மிகவும் குறைவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். டி20 ஃபார்மெட்டில்13 ஆயிரம் ரன்களைக் கடந்த 5வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். 386 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை அதிவேகமாக எட்டிய 2வது வீரராக கோலி இருக்கிறார். கிறிஸ் கெயில் 381 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkgmrlyjn8o
-
'சீமான் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்' - நீதிமன்றத்தில் என்ன நடந்தது? டாப்5 செய்திகள்
பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு,திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கட்டாயம் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 ஏப்ரல் 2025, 03:17 GMT இன்றைய (08/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏப்ரல் 8ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைத்தளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்ததாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்-4 ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு பிப்.19-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) பாலாஜி, வழக்கை ஏப்.7-ம் தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்தார். நேற்று இவ்வழக்கு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதும், சீமான் ஆஜராகவில்லை. அப்போது அவர் நேரில் ஆஜராக முடியாததற்கான காரணத்தை அவரது வழக்கறிஞர்கள் விளக்கினர். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, (நேற்று) மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து, அவரது வழக்கறிஞர்கள் வழக்கை அன்றே (நேற்று) தள்ளிவைக்க (பாஸ் ஓவர்) கோரினர். அதன்மீதான விசாரணை நடந்தபோது, சீமான் ஆஜராகாத காரணம் குறித்த மனுவை அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சீமான் இன்று (ஏப்.8) கட்டாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் கோடைக் கால மின் தேவையை பூர்த்தி செய்ய 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தமிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "தமிழகத்தின் தினசரி மின் தேவை 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இது மே மாதத்தில் அதிகபட்சமாக 22 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என மின்வாரியம் கணித்துள்ளது. ஆனால் தமிழக மின்வாரிய ஆதாரங்களான அனல் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரம் என மொத்தம் 18,038.05 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் மீதமுள்ள மின்சாரத்தை தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது. ஏப்ரல் மே மாத தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 2,610 மெகாவாட் மின்சாரம் தினமும் காலை முதல் இரவு வரை 12 மணி நேரத்துக்கு பயன்படுத்தப்படும். மீதமுள்ள 1300 மெகாவாட் மின்சாரம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தப்படும். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 சென்னையில் நடந்த கொள்ளையை நெதர்லாந்தில் இருந்தபடி கண்டுபிடித்த வீட்டு உரிமையாளர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சென்னையில் உள்ள தனது வீட்டில் அத்துமீறி யாரோ நுழைகிறார்கள் என்பது குறித்த எச்சரிக்கையை நெதர்லாந்தில் இருந்த வீட்டின் உரிமையாளருக்கு செல்போனில் எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்துள்ளது. இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "சென்னை அசோக் நகரை சேர்ந்த வெங்கட்ரமணன் தனது மனைவியுடன் நெதர்லாந்தில் உள்ள தனது மகளை காண சென்றிருந்தார். ஞாயிற்றுகிழமை இரவு அவரது செல்போனில் ஒரு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. பூட்டிய அவரது வீட்டில் சந்தேகம்படும்படியான நடவடிக்கைகள் நடப்பதற்கான எச்சரிக்கை அவருக்கு கிடைத்தது. உடனே பக்கத்துவீட்டு நண்பருக்கு அவர் தகவல் தெரிவித்தார். பக்கத்துவீட்டுக்காரர் நேரில் சென்று பார்த்த போது, வெங்கட்ரமணனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே இது குறித்துப் போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. போலீச் ரோந்து குழுவினர் சுற்றுவட்டாரத்தில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த கமலகண்ணன் (65), ஆரி பிலிஃப் (57) ஆகியோர் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். ஆறு சவரன் தங்க நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவைகளை போலீஸார் அவர்களிடமிருந்து கைப்பற்றினர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 தமிழகத்தில் 2 தள கட்டடங்களுக்கு சுயசான்று முறை அறிமுகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சுயசான்றிதழ் மூலம் தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்ததாக டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளங்கள் (Stilt + 2 Floors) கொண்ட குடியிருப்பு கட்டங்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து உடனடியாக கட்ட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். வீட்டுவசதித் துறை 2,500 சதுர மீட்டர் மற்றும் 2500 சதுர மீட்டர் கட்டிடங்களுக்கான திட்டத்தை தயார் செய்யும். குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுயசான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து தரப்படும். ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டுக்கு வாகன நிறுத்துமிடத்துக்கென தனி விதிகள் உருவாக்கப்படும். திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் பொதுமக்களுக்கு உதவி புரிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஒற்றை சாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும் என அமைச்சர் பேரவையில் பேசினார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியீடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இலங்கையில் 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டில் 2.17 கோடி பேர் இருக்கின்றனர் என்றும், 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 14 லட்சம் அதிகரித்துள்ளது என்றும் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட "குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024" அறிக்கை திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத் தொகை 21,763,170 ஆகும். அதாவது, இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்து காணப்படுகிறது. 15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டது. நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது. யாரையும் நெருங்க விடாத இந்தியாவின் சென்டினல் தீவு பழங்குடிகளை பார்க்க சென்ற அமெரிக்கர் என்ன ஆனார்? பாஜக 'காந்திய' சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டது எப்படி? வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் முன்வைக்கும் வாதங்கள் என்ன? 'குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்' - ராமேஸ்வரத்தில் தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சித்த மோதி மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது. வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாக தொடர்ந்து காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதேவேளை முல்லைத்தீவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் வசிக்கின்றார்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crldx5ez758o
-
சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம் : ஜனாதிபதி
07 APR, 2025 | 08:36 PM சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் இன்று (07) நடைபெற்ற 82 ஆவது அடிப்படைப் பயிற்சி பாடநெறியை நிறைவு செய்தோர் வெளியேறும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தமது தொழிற்துறைக்கு ஒருவர் எந்தளவு நியாயத்தை நிலைநாட்டியுள்ளார், கௌரவமளித்துள்ளார் என்பது அவரின் தொழில் வாழ்க்கையின் ஊடாகப் பிரதிபலிக்கிறது எனவும் அந்த தொழில் முறையை அடைந்து இந்த நாட்டுக்கு அவசியமான மாற்றத்தை ஏற்படுத்த பங்களிக்குமாறு பயிற்சி பெறும் இளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். பல துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசியல் அதிகாரத்தை மாற்ற பிரஜைகள் நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் அதிகாரத்தை மாற்றுவதன் மூலமாக மாத்திரம், ஒரு நாடு வெற்றிபெறாது என்றும், அனைத்து துறைகளிலும் சாதகமான மாற்றம் தேவை என்றும் சுட்டிக்காட்டினார். பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அதனைப் பாதுகாக்கும் அதே வேளையில், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு இந்த நாடு பலியாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இளைய தலைமுறையினர், தாய்நாட்டின் பொறுப்பை தங்கள் தோள்களில் ஏற்று, தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் சாதகமான திசையில் கொண்டு செல்ல பாடுபட வேண்டும் என்றும், இன்று இலங்கை பொலிஸ் நிரந்தர சேவையில் இணைவது வலுவான முன்னெடுப்பாகும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அவசர நிலைமைகளில் பிரஜைகளுக்கு விசேட அதிரடிப்படை வழங்கி வரும் சேவை மிகவும் பாராட்டத்தக்கது என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த அணிவகுப்பில் 118 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 231 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து வெளியேறினர். பயிற்சி நெறியின் போது விசேட திறமையை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார். பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது. போர் களத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் கண்காட்சியொன்றும் இங்கு காண்பிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு "நியதை ஜய" (வெற்றி நிச்சயம்) என்ற தொனிப்பொருளுடன் நிறுவப்பட்ட இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு, குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கீர்த்திமிக்க பிரிவாகும். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா, பொலிஸ் அதிகாரிகள், பயிற்சி பெற்று வெளியேறும் பொலிஸ் அதிகாரிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/211432
-
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம் - சர்வதேச மன்னிப்புச்சபை
இலங்கை - ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம் - சர்வதேச மன்னிப்புச்சபை Published By: RAJEEBAN 07 APR, 2025 | 05:08 PM உள்நாட்டு ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள், அல்லது சர்வதேச மனித மனிதாபிமான சட்டங்கள் பாரிய அளவில் மீறப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து,பகுப்பாய்வு செய்து பாதுகாத்தலிற்கான ஆணையை கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் திட்டத்தை நிராகரித்தமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது பாதிக்கப்பட்ட இலங்கையர்களிற்கு நீதியை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் திட்டம் உட்பட ஆணையாளர் அலுவலகத்துடன் ஆக்கபூர்வமான விதத்தில் இணைந்து செயற்படவேண்டும். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கவேண்டும். உள்நாட்டு ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால்,இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம். இலங்கை இன்னமும் சர்வதேச குற்றங்களை அதன் உள்நாட்டு சட்ட கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள், சட்டத்தரணிகள்,பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், நீதியை நாடும்போது துன்புறுத்தலை எதிர்கொள்வது உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/211413
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 89 முறைப்பாடுகள் பதிவு 07 APR, 2025 | 05:30 PM உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 89 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 87 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 02 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் சாராம்சக் குறிப்பு . (2025.04.06 - பி.ப 4.30 மணி வரை ) https://www.virakesari.lk/article/211410
-
நாளை திறப்பு: பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்புகள் என்ன? கப்பலுக்கு எவ்வாறு வழிவிடும்?
இனி கப்பலுக்கு கம்ப்யூட்டரும் பாலமும் சேர்ந்து வழிவிடும்; New Pamban Bridge-ல் என்ன சிறப்பு? ராமேஸ்வரம் தீவை இந்திய நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம், இந்தியாவின் மிகச் சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக கடலுக்கு நடுவே கட்டப்பட்ட பாலமும் இதுதான். நூறாண்டுகளை கடந்த இந்த பாலம் பலவீனமடைந்ததாக கூறி அதன் அருகிலேயே தற்போது புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தில் உள்ள சிறப்புகள் என்ன? #Pamban #PambanBridge #Ramanadhapuram இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
வெளியானது இலங்கையின் சனத்தொகையின் எண்ணிக்கை! வட மாகாணத்தில் 5.3 சதவீதம் பேர்!
Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 05:24 PM தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத் தொகை 21,763,170 ஆகும். அதாவது, இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்து காணப்படுகிறது. 15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டது. நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது. மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது. 2,433,685 பேருடன் கம்பஹா மாவட்டம் சனத்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 2,374,461 பேருடன் கொழும்பு மாவட்டம் அதிகளவான சனத் தொகையை கொண்டுள்ளது. குருணாகல், கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களும் தலா 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படுகின்றனர். மறுபுறம், வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாக தொடர்ந்து காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதேவேளை முல்லைத்தீவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் வசிக்கின்றார்கள். https://www.virakesari.lk/article/211411
-
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
07 APR, 2025 | 05:32 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் போது இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் சஞ்சய பந்த் (Sanjaya Panth), சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்களான பீட்டர் ப்ரூவர் (Peter Breuer), ஈவான் பபாஜியோரிஜியோ (Evan Papageorgiou) ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/211415
-
கறுப்பு திங்கள்: இந்திய பங்குச் சந்தையில் ரூ 19 லட்சம் கோடி இழப்பு – இனி என்ன நடக்கும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஜித் கத்வி பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. உலகம் முழுக்க, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி இறக்குமதி வரி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த அறிவிப்பு உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகளில் பெரிய விளைவை ஏற்படுத்தியது. இன்று, அந்த இறக்குமதி வரிகளின் விளைவால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் கோடி ரூபாயை இழந்து வருகிறார்கள். இது எவ்வளவு காலம் தொடரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது பொருளாதார மந்தநிலையை உருவாக்கும் என்று சில நிபுணர்கள் கணிக்கின்றனர். அமெரிக்க பங்கு சந்தை ஐந்து முதல் ஆறு சதவிகிதம் வரை சரிந்தபிறகு, ஆசிய பங்குச் சந்தைகளும் இன்று பெரும் சரிவைக் கண்டன. இந்தியாவுக்கு இன்று கறுப்பு திங்கள். மும்பை பங்குச்சந்தையும், தேசிய பங்குச்சந்தையும் நான்குக்கும் அதிகமான சதவிகிதம் சரிந்ததில் முதலீட்டாளர்கள் சுமார் 19 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். அடுத்த 30 நாட்களில் சந்தையின் நிச்சயமற்ற தன்மை இன்னும் அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். 2008 பிரச்னைகளின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன பட மூலாதாரம்,REUTERS 2008 சப்ப்ரைம் வீட்டுக்கடன் நெருக்கடிக்குப் பிறகு பங்குச்சந்தை சந்திக்கும் மிகப்பெரிய சரிவு இதுதான். ப்ளூம்பர்க் செய்தியின்படி ஆசியப் பங்குச் சந்தைகள் கடந்த 16 ஆண்டுகளில் சந்தித்த மிகப் பெரிய சரிவு இது. இதற்கிடையே இந்த இறக்குமதி வரிப்போரைத் தொடங்கிய டொனால்ட் டிரம்போ பின்வாங்கும் மனநிலையில் இல்லை. ''நோயைத் தீர்க்க கசப்பு மருந்தை விழுங்குவது அவசியம்," என்று கூறியிருக்கிறார். டிரம்பின் இந்த கருத்துக்கு பிறகு பங்குச்சந்தை மேலும் வேகமாகச் சரிந்தது. டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகளுக்குப் பிறகு இந்திய நிறுவனங்கள் இன்னும் பலமான அடி வாங்கியிருக்கின்றன. பிரிட்டனை தளமாக கொண்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் அமெரிக்காவுக்கு ஏப்ரலில் வாகனங்களை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறது. இதனால் அதன் தாய் நிறுவனமான டாட்டா மோட்டார்ஸின் பங்கு இன்று பத்து சதவிகிதம் சரிந்துள்ளது. அந்நிய வாகனங்களுக்கு டிரம்ப் 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்ததற்கான விளைவு இது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற கணிப்பு அனைத்து ப்ளூ சிப் நிறுவனங்களின்(பெரிய நிலையான நிறுவனங்கள்) பங்குகளையும் பாதித்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸின் பங்குகள் இன்று சந்தை தொடங்கியதில் இருந்து ஏழு சதவிகிதத்துக்கும் அதிகமாக விழுந்தது. கடந்த 52 வாரங்களில் மிகக்குறைந்த மதிப்புக்குச் சென்றது. கிட்டத்தட்ட ரிலையன்ஸின் சந்தை முதலீட்டில் 2.26 லட்சம் கோடிகளை அழித்துள்ளது இந்த சரிவு. மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை1 ஏப்ரல் 2025 இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பங்குச்சந்தை எந்தப்பக்கம் செல்லும்? குஜராத்தை சேர்ந்த பங்குச்சந்தை வர்த்தக நிறுவனம் ஒன்றின் தலைவரான குஞ்சன் சோக்ஸி பிபிசியிடம் பேசியபோது, "அமெரிக்காவை கொசு கடித்தால் இந்தியாவுக்கு மலேரியா வரும் சூழல் இது. ஏனெனில் இந்த மொத்த உலகமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது," என்றார். ''1930களில் அமெரிக்கா இதுபோன்ற ஒரு முடிவை எடுத்தது பெரும் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளியது. இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்வது என்று நம்மை வழிநடத்த அந்தக் காலத்தைச் சேர்ந்த எந்த நிதி மேலாளரோ, சந்தையில் ஈடுபட்டவரோ, பொருளாதார நிபுணரோ இப்போது இல்லை" என்றார். '''டிரம்பின் இறக்குமதி வரிப்போர் இப்போது அதன் நான்காவது நிலையில் நுழைந்துள்ளது. தேர்தலின்போது இறக்குமதி வரியை அதிகரிக்கப்போவதாக அவர் எச்சரிக்கை செய்தது போரின் முதல்நிலை. தேர்தலில் வென்றபிறகு பிறகு செலவைக் குறைத்து அமெரிக்காவுக்கு மொத்த தயாரிப்பையும் கொண்டு செல்வது குறித்து அடுத்து பேசினார் மூன்றாவது நிலையில் , இறக்குமதி வரிகளையும், அதன் பிறகு பரஸ்பர வரிகளையும் அறிவித்தார். இதற்கு சீனாவும் இறக்குமதி வரி விதித்து பதிலளித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் அதையே செய்யும். இப்போது சூழல் என்னவென்றால் டொனால்ட் டிரம்ப் பின் வாங்கவில்லையென்றால் நான்காவது நிலையில் மிக ஆபத்தான நிலை உருவாகும்."என்கிறார் அவர் பங்குச்சந்தை எந்த திசையை நோக்கிச் செல்லும் என்று கணிப்பது இப்போது அனைவருக்குமே சிரமமான ஒன்றாக இருக்கிறது. "அதிகப்படிய நிலையற்றதன்மையால் உலக பங்குச்சந்தைகள் தீவிர ஏற்ற இறக்கத்தைக் காணும் காலமிது. டிரம்பின் இறக்குமதி வரிகளால் என்ன சூழல் ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது," என்று ஒரு குறிப்பில் கூறியுள்ளார் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு உத்தியாளர் முனைவர் வி.கே.விஜயகுமார். அமெரிக்காவின் கடன் மிக அதிகமாக இருப்பதால் அதன் அதிபர் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வந்தது என்று குஞ்சன் சோக்ஸி நம்புகிறார். "கடந்த 20 வருடங்களாக புதிய டாலர் நோட்டுக்களை அச்சடிப்பதன் மூலம் திவாலாகும் நிலையைத் தவிர்த்து வந்தது அமெரிக்கா. இப்போது அதன் வரம்பை எட்டிவிட்டது. எனவே இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் டிரம்புக்கு வந்துள்ளது.'' என்கிறார் அவர் கடந்த காலங்களிலும் அமெரிக்கா அதிக இறக்குமதி வரி விதித்ததற்குப் பின்னான காலகட்டங்களில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று கோட்டக் ஏஎம்சியின் நிர்வாக இயக்குனர் நிலேஷ் ஷா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 2008 பொருளாதார நெருக்கடியுடனும், கோவிட் -19 பொருளாதார மந்தநிலையுடனும் இதனை ஒப்பிட்ட அவர், இந்தியா பாதிக்கப்படாது என்று நம்பினால் அது தவறு என்றார். சென்னையில் 'மார்ஷல்' என்ற ஆங்கிலேயருக்கு தமிழ்நாடு அரசு சிலை வைத்தது ஏன்?22 மார்ச் 2025 இந்திரா - முஜிபுர் உடன்பாட்டை 'அடிமை ஒப்பந்தம்' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் அழைத்தது ஏன்?25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பங்குச்சந்தைகளை பாதிக்கும் மற்ற காரணிகள் டிரம்ப் நிர்வாகம் 180க்கும் அதிகமான நாடுகளின் மீது பெரிய வரிகளை விதித்துள்ளது, சந்தையில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்திய பங்குச்சந்தை 2026ம் வருட முதல் காலாண்டில் மேலும் சரியும் என்று பங்கு வர்த்தக நிறுவனங்கள் நம்புகின்றன. எம்கே குளோபலின் மதிப்பீட்டின்படி நிஃப்டி குறியீடு தற்போதைய 22000 புள்ளிகளில் இருந்து 21500 புள்ளிகள் வரை குறையக்கூடும். நிதி சேவை நிறுவனமான ஜே.பி.மார்கனின் கணிப்புப்படி அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள், இப்போது 40 சதவீதத்திலிருந்து 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளன. இதற்கிடையில் மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் இருந்து பங்குகளை வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை வரை சுமார் 13,700 கோடிக்கு மேற்பட்ட பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இந்தக் காரணங்கள் அனைத்துமே சந்தை சரிவதற்கான காரணிகள் ஆகும். தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்கள் அமைத்த 'பெருவழிகள்' பற்றி தெரியுமா?17 மார்ச் 2025 ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை14 மார்ச் 2025 பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK இந்தியாவில் இதன் பாதிப்பு எவ்வளவு இருக்கும்? இந்தியாவையும், அமெரிக்காவையும் பொருளாதார மந்தநிலை பலமாகத் தாக்கும் என்று எல்லா நிபுணர்களும் நம்பத் தயாராக இல்லை. "இந்தியா அமெரிக்காவுடன் அதிகம் வணிகம் செய்வதில்லை. அதோடு, உள் நாட்டில் இருக்கும் தேவைகளே நமது பொருளாதாரத்துக்கு ஆதரவு கொடுக்கப் போதுமானது. இந்த இறக்குமதி வரிப்போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ளது," என்று பிபிசியிடம் குறிப்பிட்டார் பங்குச்சந்தை ஆய்வாளர் அசிம் மேத்தா. "இறக்குமதி வரி அறிவிப்புக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள விஷயம் இந்தியாவுக்கு நல்லது. வரும் நாட்களில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு கட்டுமானத்தில் இந்திய அரசு ஆக்ரோஷமாகச் செலவழித்தால் இறக்குமதி வரிப்போரின் விளைவைத் தவிர்க்கலாம்'' என்றார் பொருளாதார மந்த நிலை பற்றிக் கேட்டபோது அஸிம் மேத்தா, ''பொருளாதார மந்தநிலை என்பது மிகக் கடுமையான வார்த்தை. ஒரு மூன்று நான்கு மாதங்களுக்குத் தேக்கம் இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று நான் நம்பவில்லை," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c05nmz80nn0o
-
வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கைது செய்யக்கூடாதா?
07 APR, 2025 | 04:14 PM டி.பி.எஸ். ஜெயராஜ் பாகம் 1 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வார இறுதி இலங்கை விஜயம் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமைந்ததாக பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது ஏப்ரில் 4 வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரில் 6 ஞாயிற்றுக்கிழமை வரையிலான அவரின் விஜயத்தின் முக்கிய அம்சங்களாக இரு நாடுகளினதும் தேசிய பாதுகாப்புக்கு இடையிலான பிணைப்பின் தன்மையை அங்கீகரிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண ' விருது ஆகியவை அமைந்தன. இணக்கபூர்வமான ஒரு சூழ்நிலையில் முரண்பாட்டுக்குரியதாக அமைந்தது வடபகுதி கடற்பரப்பிற்குள் பெரும் எண்ணிக்கையில் அத்துமீறிப் பிரவேசித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிப்பிடிப்பதுடனும் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது போன்ற கெடுதியான நடைமுறைகள் மூலமாக கடல்வாழ் உயிரினங்களை நிர்மூலம் செய்து வருவதுடனும் தொடர்புடைய பிரச்சினை மாத்திரமேயாகும். இரு தலைவர்களும் எந்தளவுக்கு இந்த பிரச்சினை குறித்து விரிவாக ஆராய்ந்தார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால், அவர்களின் ஊடக அறிக்கைகள் இந்த பிரச்சினை தொடர்பில் வேறுபட்ட மனப்பான்மைகளைக் கொண்டிருப்பதை வெளிக்காட்டின. இந்த பிரச்சினைக்கு "நிலைபேறான தீர்வொன்றைக் காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறை ஒன்று தேவை என்று திசாநாயக்க வலியுறுத்தினார்." இழுவைப்படகுகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாரதூரமான சேதத்தை தடுத்து நிறுத்துவதற்கும் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதை தடுப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை என்று நாம் கோருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார். ஆனால், மறுபுறத்தில் இந்திய பிரதமர் மோடி பெருமளவுக்கு நம்பிக்கையுடனான ஒரு அணுகுமுறையை கடைப்பிடித்தார். இந்த பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்று வர்ணித்த அவர் மனிதாபிமான அணுகுமுறை ஒன்று கடைப்பிடிக்ககப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியும் தானும் இணங்கியிருப்பதாக குறிப்பிட்டார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட அவர்களது படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதை தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி நிறுவன ரீதியான கலந்தாலோசனைகளை தீவிரப்படுத்துவதற்கும் அண்மைய எதிர்காலத்தில் இரு நாடுகளினதும் மீனவர் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு வசதி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டதாக ஊடகங்களுக்கு கூறினார்."இரு தரப்புகளுக்கும் இடையிலான உயர்மட்டங்கள் உட்பட சகல மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியான ஒரு அம்சமாக இது இருந்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் இரு தரப்புகளினாலும் கணிசமானளவு விரிவாக மீன்பிடிப் பிரச்சினை ஆராயப்பட்டது என்று கூறினார். "இறுதியாக பார்க்கும்போது இது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்றும் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மீள்பரிசீலனை செய்யமுடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்." மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை பற்றி வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு இணங்க இந்தியாவினாலும் இலங்கையினாலும் அடையாளபூர்வமான பரஸ்பர நல்லெண்ண சமிக்ஞை ஒன்று காண்பிக்கப்பட்டது. சட்டமா அதிபரினால் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தமிழ்நாடு இராமநாதபுரத்தைச் சேர்ந்த பதினொரு மீனவர்கள் இலங்கையினால் விடுதலை செய்யப்பட்டனர். வடபகுதி கடலில் அத்துமிறி மீன்பிடித்தமைக்காக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்திருந்தனர். அதேபோன்றே யாழ்ப்பாணத்தின் குருநகரைச் சேர்ந்த இரு மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்தனர். சீரற்ற காலநிலை காரணமாக படகுகள் திசைமாறி இந்திய கடற்பரப்புக்குள் சென்றபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பிரதமர் மோடி -- தமிழ்க் கட்சிகள் சந்திப்பு இது இவ்வாறிருக்க, வட இலங்கையின் டற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினையை ஏப்ரில் 5 ஆம் திகதி இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒரு தூதுக்குழுவும் கிளப்பியது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட் ) தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் யாழ்ப்பாண மாவடட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமீழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகிய எழுவர் அடங்கிய தூதுக்குழு மோடியைச் சந்தித்தது. இவர்களது சந்திப்பு தொடர்பாக ' தி இந்து ' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் அனுப்பிய செய்தி பின்வருமாறு ; "வட இலங்கையினதும் தமழ்நாட்டினதும் மீனவர்களைப் பாதிக்கும் மீன்பிடிப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வு காணுமுகமாக இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்யவேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைலர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 5, 2025) வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர். "பாக்குநீரிணையில் வளங்களுக்காக நீண்டகாலமாக நிலவிவரும் இந்த தகராறு குறித்து கவனத்துக்கு கொண்டுவந்த இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் போரினால் பாதிக்கப்பட்ட வட இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான பாதிப்புக்களையும் பாக்குநீரிணையில் கடல்சார் சூழல்தொகுதிக்கு ஏற்படுகின்ற அழிவுகளையும் விளக்கிக் கூறினர். "இந்த சந்திப்பின்போது தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் இழுவைப் படகுகளை பயன்படுத்தும் நடைமுறையை சாத்தியமானளவு விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கி மாற்று நடைமுறையை துரிதப்படுத்துவதற்கு 2016 ஆம் ஆண்டில் இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை நினைவுபடுத்தினார். 2016 நவம்பரில் புதுடில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற இலங்கை தூதுக்குழுவின் ஒரு உறுப்பினரான சுமந்திரன்" ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதற்கு இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாம் வரவேற்பதாக பிரதமர் மோடியிடம் கூறினோம். ஆனால் இழுவைப்படகுகளை பயன்படுத்தும் நடைமுறை இன்றுவரை தொடருவதை நாம் அவரிடம் சுட்டிக்காட்டினோம்" என்று கூறின்ர். "யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட தனிநபர் சட்டமூலம் ஒன்றையடுத்து 2017 ஆம் ஆண்டில் இலங்கை இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்தது. மீன் இனப்பெருக்கத்தை அனுமதிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரில் நடுப்பகுதிக்கும் ஜூன் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட சுமார் இரு மாதங்களில் இந்தியா அதன் கிழக்கு கிரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு பருவகால தடைவிதிக்கும் நடைமுறையை தற்போது பின்பற்றுகிறது." தமிழ்நாட்டு கரையோர மாவட்டங்கள் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்கள் சிலவற்றைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் வட இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பது இலங்கை தமிழ் மீனவர்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இது ஒரு சில படகுகள் அவ்வப்போது வந்து எமது கடலில் மீன்பிடித்துவிட்டுச் செல்லும் ஒரு விவகாரம் அல்ல. இந்த பிரச்சினையின் அம்சங்கள் மிகவும் பாரதூரமானவை. மீன்பிடி படகுகள் தொகுதி பல வருடங்களாக தொடருவது இதுதான். பெருவாரியான மீன்பிடி படகுகளைக் கொண்ட தொகுதி ஒன்று (Flotilla of fishing boats) எமது கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து வடகடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. படகுகளின் எண்ணிக்கை 500 க்கும் அதிகமானதாகவும் அவற்றில் பல படகுகள் வசதியான உபகரணங்களைக் கொண்ட இழுவைப் படகுகளாக இருக்கின்றன. இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயற்பாடாகும். இந்த படகுத் தொகுதியின நடவடிக்கைகள் மன்னார் குடாவிலும் வங்காள விரிகுடாவிலும் இலங்கையின் கடற்பரப்பில் ஒரு கடற்படை வந்து மீன்பிடிப்பது போன்று இருக்கிறது. இந்திய மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கரையோரத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார் மாவட்டங்களில் மிகவும் நெருக்கமான பகுதிகளுக்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. நெடுந்தீவு , கச்சதீவு போன்ற வடபகுதி தீவுகளுக்கு நெருக்கமாகவும் வந்து இந்திய மீனவர்கள் பெருமளவில் மீன்பிடிக்கிறார்கள். இந்திய படகுகள் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக எமது கடறபரப்புக்குள் வந்து பொழுது புலர்வதற்கு முன்னதாக திரும்பிச் சென்றுவிடுகின்றன. இந்த இந்திய படகுகள் தொகுதி தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்காக பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து செயற்படுகின்றன. இவற்றின் பெரும் எண்ணிக்கை காரணமாக இலங்கை மீனவர்கள் அவற்றை எதிர்கொண்டு தடுக்க முடியாமல் இருக்கிறது. இந்த படகுகள் தொகுதியின் தோற்றமே இலங்கை மீனவர்களை அச்சுறுத்துகிறது. இந்திய மீனவர்களிடம் அகப்படுகின்ற சில இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டு அவர்களது படகுகுகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலர் மரணமடைந்த சம்பவங்களும் உண்டு. இலங்கை கடற்படை இலங்கை கடற்படை கூட இந்திய மீன்பிடி படகுகள் தொகுதிக்கு நடுவில் நகருவதில்லை. அவ்வாறு இலங்கை கடற்படை கப்பல்கள் செய்தால் இந்திய படகுகள் அவற்றை சுற்றிவளைத்து மோதுகின்றன. அத்தகைய அண்மைய சம்பவம் ஒன்றில் இலங்கை கடற்படை வீரர் ஒருவருக்கு காயமேற்பட்டு இறுதியில் அவர் மரணமடைந்தார். இது சமாதான காலம். இந்தியாவுடன் இலங்கை போரில் ஈடுபட்டிருக்கவில்லை. அதனால், இலங்கை கடற்படையினர் இந்திய மீன்பிடிப் படகுகளில் இருக்கும் " சிவிலியன் ஆக்கிரமிப்பாளர்களை " நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யமுடியாது. இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் அச்சுறுத்தி அட்டகாசம் செய்கிறார்கள். ஆனால், இலங்கை கடற்படையினரும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சாத்தியமான வேளைகளிர் கடற்படை உஷாராகவே இருக்கிறது. அதனால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கரையோரத்துக்கு மிகவும் நெருக்கமாக வரமுடிவதில்லை. பெருவாரியான படகுகள் தொகுதியில் இருந்து விலகி தனியே வருகிற இந்திய படகை கடற்படை பாய்ந்து பிடித்து விடுகிறது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது தனியான படகுகளை கடற்படை சுற்றி வளைத்து பிடிக்கிறது. அந்நிய மீனவர்களின் கைதுசெய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை 550 இந்திய மீனவர்களைை கைது செய்ததாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை படகுகளின் சொந்தக்காரர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் உட்பட சிலர் குற்றவாளிகளாகக் காணப்படுவதுடன் ஏனையவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த வருடம் இதுவரையில் நூறுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 94 பேர் இன்னமும் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல் மீன்பிடிப் படகுகள் தொகுதியாக எமது கடற்பரப்புக்குள் ஊடுருவி எமது மீன்களையும் இறால்களையும் நண்டுகளையும் இந்திய மீனவர்கள் பிடிப்பது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு அம்சம் மாத்திரமே. அதை விடவும் படுமோசமான அம்சம் இயற்கைக்கு நிரந்தரமாக ஏற்படுத்தப்படுகின்ற அழிவாகும். இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய படகுகளில் அனேகமானவை இழுவைப் படகுகளாகும். அவை கடல் படுக்கை ஓரமாக பெரிய மீன்பிடி வலைகளை ஒன்றாக இழுத்துக்கொண்டு வருகின்ற படகுகளாகும். அவை மீன் முட்டைகள், சிறிய மீன்வகைகள், கூனிஇறால்கள் மற்றும் சகல மீன்வகைகளையும் கடல் தாவரங்களையும் ஒருசேர இழுத்துக் கொண்டு வருகின்றன. பல தசாப்தங்களாக தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு கரையோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியாவின் கடலுணவு ஏற்றுமதியை உயர்த்தி பெரும் இலாபத்தை கொடுக்கும் இந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகிறார்கள். மீன்வகைகள் இல்லாமல் போவதும் கூனி இறால்கள் குறைவடைந்து போவதுமே இதன் எதிர்மறையான விளைவாக இருந்து வருகிறது. தமிழ்நாடு கரையோரமாக உள்ள கடலில் குறிப்பாக பாக்கு நீரிணையின் இந்திய பக்கத்தில் இதுவே நிலைமையாக இருக்கிறது. இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவி தமிழ்நாட்டு மீனவர்கள் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதில் அதீத நாட்டம் காட்டுவதற்கு இந்த நிலைவரமே ஒரு மேலதிக காரணமாக இருக்கிறது. பெரியளவிலான இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் மூலம்க இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கடல்வாழ் உயிரினங்களை அழிக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் நிலைபேறாக மீன்பிடிப்பது என்பது சாத்தியமாகாமல் போகக்கூடிய அளவுக்கு இலங்கையின் கடல்வளங்கள் படுமோசமாக குறைவடைந்து போகக்கூடும். ஆனால், தங்களது சொந்த கடல் வளத்துக்கு மீட்டெடுக்க முடியாத கெடுதியை விழைவித்த சுயநலவாதிகளான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக்கும் அதே அழிவைச் செய்வதற்கு கங்கணம் கட்டி நிற்கிறார்கள். பகைமையும் வெறுப்பும் மேலும், தமிழ்நாடு மீனவர்கள் அவர்களது மொழியையே பேசுகின்ற இலங்கை மீனவர்கள் மீது நம்பமுடியாத அளவு பகைமையையும் வெறுப்பையும் வெளிக்காட்டுகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிடம் அகப்படுகின்ற இலங்கை மீனவர்கள் படுமோசமாக தாக்கப்படுவதுடன் அவர்களது படகுகளும் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன. இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான வலைகள் இந்திய மீனவர்களினால் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன. அண்மையில் சில இந்தியப் படகுகள் மாதகல் -- சுழிபுரம் கரையோரத்துக்கு நெருக்கமாக வந்து மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியிருக்கின்றன. ஒரு அரிதான சம்பவமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அதற்காக இழப்பீட்டை வழங்கியிருக்கிறது. இவ்வாறாக, தமிழ்நாட்டு மீனவர்கள் ஈவிரக்கமின்றியும் பேராசைத்தனமாகவும் வட இலங்கையின் கடல் வளங்களைச் சுரண்டுவதுடன மீட்சிபெறமுடியாத அளவுக்கு கெடுதியையும் விழைவித்துவிட்டுப் போவதை காணக்கூடியதாக இருக்கிறது. நீண்டகாலத்துக்கு நிலைபேறாக மீன்பிடிப்பதற்காக கடல் வளங்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது. தமிழ்நாட்டில் கடற்தொழில் இனிமேலும் ஒரு பாரம்பரியமான தொழிலாக இல்லாமல் போயிருப்பது இதற்கு பிரதான காரணமாகும். பல தலைமுறைகளாக கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த சாதிகளில் பல கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு கல்வியின் மூலமாக வாழ்க்கையில் மேம்பட்டு விட்டன. கடற்தொழில் இன்னமும் கூட குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலாகவோ அல்லது உள்ளூர் முதலாளியின் படகுகளுடன் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு தொழிலாகவே இல்லை. முலாளித்துவ தொழில் துறையாக மாறிய மீன்பிடி பதிலாக, கடற்தொழில் ஒரு முதலாளித்துவ தொழிற்துறையாக மாறிவிட்டது. மீன் வகைகளும் கூனி இறால்களும் நண்டுகளும் " பண்டங்களாக்கப்பட்டு விட்டன." அவை வாழ்வாதார நீட்சிக்கான எந்த அக்கறையும் இன்றி சாத்தியமானளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்ற பண்டங்களாகி விட்டன. பெரிய மீன்பிடி படகுகளும் இழுவைப் படகுகளும் பணக்கார முதலாளித்துவ வாதிகளுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. அவர்களில் பலர் அரசியல்வாதிகளாக அல்லது அரசியல் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருக்கிற்ர்கள். பல படகுகள் மற்றவர்களுக்கு " பினாமிகளாக " இருக்கின்ற மீனவர்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. பினாமி என்பதுை உண்மையில் இன்னொருவருக்கு சொந்தமாக இருக்கும் ஒரு சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளரைக் குறிப்பதாகும். தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நல உச்சவரம்பு ஒன்று இருப்பதனால், பல நில உடைமையாளர்கள் தங்களது மேலதிகமான நிலங்களை படிப்பறிவில்லாத ஊழியர்களையும் வேலைக்காரர்களையும் பினாமிகளாக வைத்து அவர்களின் பெயர்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோன்றே பல மீன்பிடி படகுகளும் உண்மையில் பினாமிகளாக இருக்கின்ற மீனவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கை -- இந்திய மீன்பிடித் தகராறுகளைப் பற்றி ஆய்வுசெய்த டச்சு ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மீன்பிடிப் படகுகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபடாத சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவர்கள் தினச்சம்பள அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களின் முதலாளிகளினால் இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்திய அதிகாரிகள் இவ்வளவு பெருந்தொகையான மீன்பிடிப்படகுகள் இந்திய அதிகாரிகளினால் கட்டுப்படுத்தப்படாமல் அல்லது பிடிக்கப்படாமல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் எவ்வாறு ஊடுருவக்கூடியதாக இருக்கிறது என்பது இந்த பிரச்சினையில் இன்னொரு முக்கியமான விடயம். நடப்பவை குறித்து இந்திய அதிகாரிகள் வேண்டுமென்றே கண்டும் காணாமல் இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு கண்டும் காணாமல் இருக்குமாறு தங்களது அரசியல் எசமானர்களினால் அறிவுறுத்தப்படுகிற்ர்கள் . அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்ற சாத்தியத்தையும் நிர்கரிக்க முடியாது. காரணம் என்னவாக இருந்தாலும் பிரச்சினை கூர்மையடைந்துவிட்டது. முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவின. இப்போது அவை பெரும்பாலும் தினமும் வருகின்ற என்று தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் நெடுந்தீவில் ஒரு கூட்டத்தில் கூறினார். கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கடற்தொழில், நீரியல்வள, சமுத்திரவியல் வள அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் இருக்கிறார். ஊவா மாகாணத்தின் பண்டாரவளையைச் சேர்ந்தவரான அவர் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராகவும் இருக்கிறார். தமிழ்நாடடில் உள்ள தமிழ்பேசும் சகோதரர்களின் நடவடிக்கைகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுடன் நன்கு பரிச்சயமானவராக சந்திரசேகர் விளங்குகிறார். 2024 பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதாகளைச் சேர்ந்த பெருமளவு மக்கள் தேசிய மக்கள் திசைகாட்டிச் சின்னத்துக்கே வாக்களித்தார்கள். வடகடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தவதாக தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதியே அதற்கு காரணமாகும். வடபகுதி மீனவர்களின் இந்த பிரச்சினை தொடர்பில் சந்திரசேகர் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க புதுடில்லிக்கு செல்வதற்கு முன்னதாக சந்திரசேகர் கொழும்பில் " தி இந்து " வுக்கு ஒரு நேர்காணலை வழக்கியிருந்தார். மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய அந்த நேர்காணல் அவர் நாசகாரத்தனமான இழுவைப்படகு முறையை இந்தியத்தரப்பு நிறுத்தினால் மாத்திரமே மீனவர்களின் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வைக்காண முடியும் என்று குறிப்பிட்டார். " வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட சகல இனக்குழுமங்களையும் சகல புவியியல் பிராந்தியங்களையும் சேர்ந்த மக்கள் அண்மைய தேர்தல்களில் எமக்கு ( தேசிய மக்கள் சக்திக்கு ) வாக்களித்து பெரிய ஒரு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அவர்களது அக்கறைகளை கவனிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் விளைவான இந்த நீண்டகாலப் பிரச்சினையே எமது வடபகுதி மீனவர்களின் முக்கியமான கவலையாக இருக்கிறது" என்று அமைச்சர் சந்திரசேகர் கூறினார். " நவீன தொழில்நுட்பத்தையும் நிலைபேறான வழிமுறைகளையும் பயன்படுத்தி மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரிவான திட்டங்களில் இலங்கை -- இந்திய மீனவர் தகராறுக்கு தீர்வைக் காண்பதும் ஒரு அங்கமாகும். 2017 ஆம் ஆண்டால் 17.2 கிலோ கிராமாக இருந்த நாட்டின் ஆள்வீத மீன் பாவனை இப்போது 11. 07 கிலோ கிராமாக குறைந்து விட்டது.இது மக்கள் புரதத்தை உள்கொள்ளும் அளவின் ஒரு வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கிறது. " 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேதனைமிகு பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு மந்தபோசாக்கு மிகுந்த கவனத்துக்குரிய பிரச்சினையாக இருக்கிறது. மக்கள் ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு கடலுணவு உற்பத்தியை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அவற்றை எல்லாம் செய்வதற்கு எமது கடல் மற்றும் கடல்சார் பல்வகைமையைப் பாதுகாகக்க வேண்டியது அவசியமாகும் " என்றும் அமைச்சர் சந்திரசேகர் அந்த நேர்காணலில் மேலும் கூறினார். இலங்கையின் நிலைப்பாடு மீன்பிடி நெருக்கடியில் இலங்கையின் நிலைப்பாடு மிகவும் தௌாவானது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும். வெறுக்கத்தக்க அந்த இழுவைப்படகு நடைமுறையை அவர்கள் நிறுத்த வேண்டும். நீணடகாலப் போரினால் பெரும் அவலங்களுக்கு உள்ளாகிய இலங்கை தமிழ் மீனவர்கள் தங்களது வாழ்வைக் கட்டியெழுப்பவும் தங்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதை தமிழ்நாட்டு மீனவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் " மனிதாபிமான " அணுகுமுறை ஆனால், இந்தியாவின் ஆதிக்க மனோபாவமும் அணுகுமுறையும் வேறுட்டதாக இருப்பது கவலைக்குரியது. இந்த பிரச்சினை மனிதாபிமான முறையில் அணுகப்பட்டு பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடி தொடக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் வரையானவர்களின் பதிலாக இருக்கிறது. இந்த மனிதாபிமான அணுகுமுறை என்பது பாதிக்கப்படும் இலங்கை தமிழ் மீனவர்கள் மீதான அக்கறையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது இலங்கை கடற்பரப்பில் அதுதுமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான அக்கறையின் விளைவானது. தமிழ்நாட்டு மீனவர்களை பாதிக்கப்படும் ஒரு தரப்பாக தவறான முறையால் காண்பிக்கப்படுகிறது. இலங்கை கடற்படையையும் ஆக்கிரமிப்பாளர்களாக தவறான முறையில் கூறப்படுகிறது. இலங்கை கடற்படை அப்பாவி தமிழ்நாட்டு கொடூரமான முறையில் கைதுசெய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்கிறது என்பதே இந்தியா கூறும் கதை. இந்திய மீனவர்களை கைது செய்யப்படக்கூடாது எனபதும் அவர்களது படகுகள் கைப்பற்றப்படக்கூடாது என்பதுமே இந்தியா விரும்புகின்ற இரக்கமானதும் கண்ணியமாதுமான மனிதாபிமான அணுகுமுறை. சுருக்கமாகச் சொல்வதானால், மனிதாபிமான அணுகுமுறை என்ற பெயரில் இந்திய மீனவர்கள் எமது கடல் வளங்களை தொடர்ந்து சுரண்டுவதை அனுமதிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள் அனுதாபம் கொன்று தின்னும் விலங்கு மீதானதாக இருக்கிறதே தவிர அதன் இரை மீதானதாக இல்லை. பேச்சுவார்த்தைகள் கொடுமையான பகிடி பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த பிரச்சினையை தீர்ப்பது என்பது கொடுமையான ஒரு பகிடியாகும். இது வீட்டுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக வீட்டுக்காரருக்கு கூறுவதை ஒத்ததாகும். இந்திய -- இலங்கை மீன்பிடி தகராறைப் பொறுத்தவரை, வெவ்வேறு நேரங்களில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவிட்டன. உருப்படியாக எந்த பயனும் ஏற்படவில்லை. அதற்கு காரணம் அந்த பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் நோக்குடனான செயற்பாடுகளாக இருந்தமையேயாகும். அத்துமீறலும் இழுவைப்படகு பயன்படுத்தலும் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இன்றி தொடருவதையே காணக்கூடியதாக இருக்கிறது. கச்சதீவு மேலும், இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் புதியதொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. கச்சதீவை இந்தியா இலங்கைக்கு 1974 ஆம் ஆண்டில் விட்டுக் கொடுத்ததன் விளவாகவே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது. கச்சதீவுக்கு அண்மையான கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் அவ்வப்போது பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பொய் பிரசாரப் படுத்தப்படுகின்றது. கச்சதீவை இந்தியா மீளப்பெற்றுக்கொண்டால் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தவறாகக் கூறப்படுகிறது. தமிழர்களின் இடர்பாடு இருட்டடிப்பு இந்திய -- இலங்கை மீன்பிடித் தகராறு தொடர்பில் இந்தியாவில் இடம்பெறுகின்ற கதையாடல்களில் இலங்கையின் வடபகுதி தமிழ் மீனவர்களின் அவலங்கள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். பிரச்சினை விரோத உணர்வைக் கொண்ட இலங்கை கடறனபடைக்கும் அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான மோதலாகவே காண்பிக்கப்படுகிறது. இலங்கை தமிழ் மீனவர்களின் இடர்பாடுகள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. கச்சதீவை மீளப்பெறுவதே பிரச்சினைத் தீர்வுக்கு முக்கியமானதாக பேசப்டுகிறது. எனவே இந்த பிரச்சினையின் தோற்றுவாய் என்ன ? ஏன்? எவ்வாறு இந்தப் பிரச்சினைக்குள் கச்சதீவு கொண்டுவரப்படுகிறது? இந்தியா கூறுவது போன்று இலங்கை "மனிதாபிமான " அணுகுமுறை ஒன்றைக் கடைப்பிடித்து வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை கைதுசெய்யக்கூடாதா? இந்த கேள்விகளை இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம். https://www.virakesari.lk/article/211400
-
வணக்கம்
வணக்கம் வாங்கோ இருங்கோ எழுதுங்கோ....
-
வடகொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி
Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 01:01 PM வட கொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மரத்தன் ஓட்டப்போட்டியில் சுமார் 200 வெளிநாட்டு வீரர்களை வட கொரியாவின் தலைநகர் வரவேற்றுள்ளது. 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரத்தன் ஓட்டப் போட்டி வட கொரியாவின் முதல் ஜனாதிபதி கிம் இல் சுங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படுகிறது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. அதில் 950 வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். கொவிட்-19 தொற்று பரவியமையை அடுத்து வட கொரியா மரத்தன் ஓட்டப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், வடகொரியா மீண்டும் போட்டியை நடத்த கடந்த ஆண்டு முதல் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே அதன் தலைநகருக்குள் அனுமதித்தது. தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப் போலவே, ஓட்டப்பந்தய வீரர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுலா குழுவின் ஒரு பகுதியாக நாட்டிற்குள் நுழைய வேண்டியிருந்தது. போட்டி நிகழ்வின் பிரத்தியேக பங்காளராக திகழும் பீஜிங்கை தளமாகக் கொண்ட பயண நிறுவனமான கோரியோ டூர்ஸ், பீஜிங்கிற்குச் சென்று திரும்புவதற்காக 2,195 யூரோக்களுக்கு விமான பயணம் உட்பட ஆறு நாள் மரத்தன் சுற்றுப்பயணங்களை வழங்குகிறது. "பியோங்யாங் மரத்தன் மிகவும் தனித்துவமான அனுபவமாகும், ஏனெனில் இது உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என அந்த நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மரத்தன் ஓட்டப்போட்டி கிம் இல் சுங் மைதானம், ஜப்பானிய ஆட்சியை எதிர்ப்பதில் கிம் இல் சுங்கின் பங்கை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட வெற்றி வளைவு, மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கான குடியிருப்பு மாவட்டம் என கூறப்படும் “ மிரே எதிர்கால விஞ்ஞானிகள் வீதி ”உள்ளிட்ட நகரத்தின் அடையாளங்களைக் கடந்து வீரர்களை அழைத்துச் சென்றுள்ளது. ஓட்டப்போட்டி வீரர்கள் தங்கள் பந்தயத்தைத் ஆரம்பித்து முடிக்கும் வரை அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பியிருப்பதை இணையத்தில் வெளியாகியுள்ள படங்கள் காட்டுகின்றன, அவர்களில் பலர் தங்க நிற காகிதக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்கிறார்கள். "எங்கள் மக்களின் கண்கள் என் மீது இருந்ததால், நான் சோர்வாக உணரும் போதெல்லாம் சிரமங்களைத் தாங்கிக் கொள்ள முடிந்தது." என வட கொரிய ஓட்டப்பந்தய வீரரான பாக் கும் டோங், ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். பந்தய முடிவுகள் குறித்து பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை. வட கொரியா 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் குறைக்க மட்டுமே திட்டமிட்டிருந்தது. பெப்ரவரி மாதத்தில் தொலைதூர, கிழக்கு நகரமான ரேசனுக்குள் சில மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தது, ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு அந்த சுற்றுலாப் பயணிகள் வருகையை நிறுத்தியது. https://www.virakesari.lk/article/211368