Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 01 APR, 2025 | 01:07 PM துரைநாயகம் சஞ்சீவன் திரியாய் கிராமமானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இங்கு தமிழர்கள் 531 பேர், சிங்களவர்கள் 274 பேர், முஸ்லிம் ஒருவர் என 806 பேர் வசித்து வருகின்றார்கள். வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் திரியாய் வட்டாரத்தில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் 1987 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள, மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த 2712 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. செந்தூர் கிராம சேவகர் பிரிவில் 474 ஏக்கரும் கல்லம்பத்தை கிராம சேவகர் பிரிவில் 636 ஏக்கரும் கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவில் 1080 ஏக்கரும் திரியாய் கிராம சேவகர் பிரிவில் 522 ஏக்கருமான காணிகளை விடுவிக்குமாறு கோரி விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள 4 இராணுவ முகாம்களுக்காகவும் 3 கடற்படை முகாம்களுக்காகவும் 55 ஏக்கருக்கு மேற்பட்ட மக்களுடைய காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் திரியாய் மக்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வந்த 80 ஏக்கர் காணியும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தினால் 466 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன். திரியாய் கிராமத்தில் உள்ள 2020.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட பத்மராஜ பபத புராண ரஜமகா விகாரைக்கு பூஜாபூமி மற்றும் அளிப்பு மூலமாக 44.325 ஹெக்டேயர் காணியும், திரியாய் கிராமத்தில் உள்ள 2018.05.30 அன்று பதிவு செய்யப்பட்ட சப்தநாக பபத வன செனசுந்த விகாரைக்கு 2019.07.06 அன்று அளவையிடப்பட்டு அளிப்பு மூலமாக 20.2343 ஹெக்டேயர் காணியும், கல்லறாவ கிராமத்தில் உள்ள 2022.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட தபசு பல்லுக வனசெனசுன விகாரைக்கு அளிப்பு மூலமாக 2020.12.30 அன்று 2.4598 ஹெக்டேயர் காணியும் ஒதுக்கப்பட்டு அளிக்கப்பட்டது. (2020.10.02 வர்த்தமானி) எனினும் இவற்றை விட மேலதிகமான காணிகளையும் கையகப்படுத்தியுள்ளனர். வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினர் திரியாய் பகுதியில் ஏறத்தாழ 2000 ஏக்கரில் எல்லைக் கற்களை போட்டு, அதற்குள் மக்களை செல்ல விடாத ஒரு சூழ்நிலையில், ஆத்திக்காடு பகுதியில் 349 ஏக்கரையும், திரியாய் குள வயலில் 107 ஏக்கரையும், குறுப்பிட்டி கண்டலில் 400 ஏக்கரையும், வேடன்குளத்தில் 310 ஏக்கர் நிலத்தையும் விடுவிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியான பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் ஆத்திக்காட்டு வெளிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் காலாகாலமாக விவசாயம் செய்துவந்த 64 ஏக்கரை தனியாகவும், 18 ஏக்கரை தனியாகவும் குச்சவெளி கமநல சேவை நிலையத்தில் தற்காலிகமாக பதிவு செய்துகொண்டு, மொத்தமாக 82 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இதில் வைத்தியநாதன் தமயந்திதேவி என்பவருக்கு 5 ஏக்கர் பிரித்தானியர் காலத்து உறுதிக் காணியும் காணப்படுகிறது. நீண்டகாலமாக பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு செய்கையிடப்பட்டு வருகின்ற விவசாய காணிகளை விடுவிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மக்கள் முறையிட்டதையடுத்து 07.10.2024 அன்று அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆவணங்கள் உள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ளுமாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருந்தார். இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் உட்பட பௌத்த மதகுருமார்கள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள விவசாயிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். மறுநாள் அப்பகுதியில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் சென்றபோது அந்த விகாராதிபதி விவசாயப் பணிகளுக்கு தடை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் பிரத்தியேக செயலாளரும் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளருமான ராஜசேகர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உயர் அதிகாரிகள், அரிசி மலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், தங்களுடைய உறுதி காணிகளை பௌத்த மதகுரு ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் அதனை மீட்டுத் தருமாறும் கோரினர். அதனையடுத்து, கருத்து தெரிவித்த பௌத்த மதகுரு, தன்னிடம் 18 ஏக்கர் உறுதி காணியும் 50 ஏக்கர் பூஜா பூமிக்குரிய காணியும் இருப்பதாக கூறியதோடு, அதற்கு மேலதிகமாக இருக்கிற காணியில் பொதுமக்கள் விவசாயம் செய்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்தார். அதன் பின்னர், காணி அளக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சபையில் தெரிவிக்கப்பட்டது. வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், தொல்லியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் உட்பட ஏனைய அரச அதிகாரிகள் முன்னிலையில் காணி அளவீடு செய்து பௌத்த பிக்குவுக்குரிய பகுதியை வழங்கி ஏனைய பகுதிகளில் மக்களை விவசாயம் செய்யுமாறு சபையில் முடிவு எட்டப்பட்டது. அந்த வகையில் மறுநாள் 16.10.2024 அன்று நில அங்கீகாரம் பெற்ற நில அளவையாளரான கணபதிப்பிள்ளை சிவானந்தன் என்பவரினால் நில அளவை செய்யப்பட்டு பௌத்த மதகுருவுக்கு சொந்தமான காணி என கூறப்படுகின்ற 18 ஏக்கர் காணியும், பூஜா பூமி எனும் பெயரில் வழங்கப்பட்ட 50 ஏக்கர் காணியும் அளவீடு செய்து வழங்கப்பட்டு, ஏனைய பகுதிகள் மக்களுடைய விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன. எனினும், அக்காணிகளில் மீண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட பௌத்த மதகுரு தடையாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி, காலாகாலமாக வழிபட்டு வந்த நாகதம்பிரான் ஆலயத்துக்கு சென்று வழிபடவும் இந்த மதகுரு தடையாக இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜபிள்ளை மாணிக்கநடராசா இது தொடர்பாக கூறுகையில், “திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எங்களுடைய வாழ்வாதார தொழில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஆகும். எங்களுக்கு வளத்தாமலைப் பகுதியில் 28 ஏக்கர் உறுதிக் காணி இருக்கின்றது. இதனை அப்பா, அப்பாவின் அப்பா காலத்தில் இருந்து நாங்கள் செய்து வருகின்றோம். 1965ஆம் ஆண்டில் இருந்து அந்தக் காணியில் நான் விவசாயம் செய்து வருகின்றேன். நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னி பகுதிக்கும் இந்தியாவுக்கும் சென்றோம். 2002ஆம் ஆண்டு திரியாய் மீள்குடியேற்றப்பட்டபோது நான் இந்தியாவில் இருந்ததால் வர முடியாமல் போனது. பின்னர் 2010ஆம் ஆண்டளவில் நான் எமது கிராமத்துக்கு வந்து எமது காணிகளில் விவசாயம் செய்வதற்காக சென்றபோது வனவளத்துறையினர் எங்களை அப்பகுதிக்குள் செல்ல விடாது தடுத்தனர். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அரிசிமலைப் பிக்கு வந்து எமது உறுதிக் காணிகளில் விவசாயம் செய்து வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலனும் இல்லை. எங்களுடைய உறுதிக் காணிகளில் விவசாயம் செய்யச் செல்லும் எம்மை தடுத்துக்கொண்டு பௌத்த பிக்கு காட்டைத் தள்ளி, விவசாயம் செய்ய ஆதரவாக வனவளத்துறையினர் செயற்படுகின்றார்கள். 2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரைக்கும் எமது காணிகளை தனக்கு வேண்டிய சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு வழங்கி குத்தகை பெற்று வருகிறார். இன்னும் எமது காணியில் எம்மால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. ஊழல் அற்ற புதிய அரசாங்கம் வந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் எம்மைப் போன்ற ஏழை மக்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காலாகாலமாக எமது மக்கள் வழிபட்டு வந்த “வளத்தாமலையான்” என்று அழைக்கப்படுகின்ற நாகதம்பிரான் ஆலயத்தையும் அரிசிமலைப் பிக்கு தங்களுடைய நாக விகாரை என்று சொல்லிக்கொண்டு எமது மக்களை வழிபட விடாமல் தடுத்து வருகின்றார். இந்த ஆலயத்தில் எமது பரம்பரையினரே பூசை செய்து வருகின்றனர். எனது அப்பாவுக்குப் பிறகு நான்தான் பூசாரியாக கடமையாற்றி வருகின்றேன். அருகில் உள்ள புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் வளத்தாமலையானுக்கு நேர்த்திக்கடன் வைத்து, நூல் கட்டுவதற்கும் திருநீறு இடுவதற்கும் வருவார்கள். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் வளத்தாமலையானுக்கு பொங்கிப் படைத்துதான் எமது விவசாய நடவடிக்கைகளை தொடங்குவோம். மாடு கன்று போட்டால் முதல் கறக்கின்ற பாலை வளத்தாமலையானுக்கு பொங்கித்தான் நாங்கள் பாவனைக்கு எடுப்போம். இதை எமது மக்கள் எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே செய்து வருகின்றார்கள். எமது ஆலயத்தையும் சப்த நாக பபத விகாரை என சொல்லிக்கொண்டு அதையும் ஆக்கிரமித்து அதைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய காணிகளையும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எமது வளத்தாமலையானுக்கு நேர்த்தி வைப்போம். ஆனால், எமது நேர்த்திக்கடனைக் கூட செலுத்த முடியாமல் பல வருடகாலமாக எமது மக்கள் தவித்து வருகின்றார்கள். சிலர் 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதான வீதியில் இருந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். எமது வளத்தாமலையானை வழிபடுவதற்கு எமது அனுமதி வழங்கப்பட வேண்டும். தற்போது இந்த பகுதியில் புதையல் தோண்டியிருப்பதாகவும் அறிகின்றோம்” என தெரிவித்தார். மேலும், காணி பிரச்சினை தொடர்பாக திரியாய் விவசாய சம்மேளனத்தின் பொருளாளரும் விவசாயியும் ஆலய பூசகருமான மகாதேவஐயர் சாரங்கன் கூறுகையில், “திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எமக்கு வளத்தாமலை கண்டப்பன் வயல் பகுதியில் எமது பாட்டனார் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து 15 ஏக்கர் வயற்காணி இருக்கிறது. நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இறுதியாக 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டில் மீள குடியமர்த்தப்பட்டோம். பின்னர் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து எமது காணியை துப்புரவு செய்து விவசாயத்தில் ஈடுபட முயற்சி செய்தபோதும் வனவள பாதுகாப்புத் துறையினர், தொல்லியல் துறையினர் உட்பட அரச துறையினர் எமக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் எமது காணிகளை பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக பிடித்து அதை சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு கொடுத்து, அவர்கள் அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே சமூகப் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக 80 தொடக்கம் 100 ஏக்கர் வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை பௌத்த பிக்குகள் அடாத்தாக பிடித்து விவசாயம் செய்து வருவதால் எமது மக்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுடைய உறுதிக்காணிகளை பௌத்த பிக்குகளிடம் இருந்து மீட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார். ஓய்வுபெற்ற அதிபர் கனகசுந்தரம் சௌந்தராசா கருத்து தெரிவிக்கையில், “1985ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது திரியாயில் யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் எமது திரியாய் கிராமம் செல்வம் கொளிக்கும் ஊராக இருந்தது. எமது மக்கள் தன்னிறைவடைந்திருந்தனர். இதற்கு காரணம் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். இதனால் அயல் கிராமங்களில் இருந்து குறிப்பாக திருகோணமலை நகரத்தில் இருந்து நிதி சேகரிக்க எமது கிராமத்துக்குத்தான் வருவார்கள். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று மீண்டும் 2002ஆம் ஆண்டு மீள குடியமர்த்தப்பட்டார்கள். நீண்டகாலமாக எமது மக்கள் கிராமத்தில் இல்லாததன் காரணமாக அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் அவர்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்வதற்கு வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எல்லைக் கற்களை போட்டு அப்பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக விவசாயம் செய்யாததன் காரணமாக பற்றைக் காடுகள் வளர்ந்துள்ளன. எனினும் அப்பகுதியில் இன்னமும் வயல் வரம்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆத்திக்காடு, கொம்பெடுத்தான்மடு, கல்லம்பத்தை உட்பட பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆத்திக்காடு வளத்தாமலை பகுதியில் ஒரு மலை இருக்கிறது. இதில் நாகதம்பிரான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதில் மாதாந்தம் மற்றும் வருடாந்தம் பொங்கல் மற்றும் பூசை நிகழ்வுகளை எமது மக்கள் செய்து வந்தார்கள். ஆனால், அது தற்போது பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய பிரித்தானிய உறுதிக் காணிகளையும் அத்துமீறி பிடித்து குத்தகைக்கு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றார். எமது மக்கள் அங்கு சென்றால் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றார்கள். அத்துடன் நீலப்பனிக்கனுக்கு அப்பால் இருக்கின்ற கொம்பெடுத்தமடு பிரதேசத்தில் 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாயம் செய்த தமிழ் மக்களுடைய எல்லைக் காணிகளை தமது எல்லைகள் என கூறிக்கொண்டு சுமார் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை ஆக்கிரமித்து, சகோதர இன மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது விவசாயம் செய்யப்படுகின்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள பற்றைக்காடுகளை எமது மக்கள் துப்புரவு செய்தாலும், அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். எனவே மக்கள் பயிர்ச்செய்கையிட்ட காணிகளுக்கு அதிகாரிகள் வந்து ஆராய்ந்து அவற்றை மீள பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்” என குறிப்பிட்டார். ஆத்திக்காட்டு விவசாயி கிருஸ்ணபிள்ளை சதீஸ்வரன் தனது எண்ணக்கருத்தை வெளிப்படுத்துகையில், “எங்களுக்கு ஆத்திக்காட்டு வெளியில் வயல்காணி இருக்கின்றது. இது என்னுடைய அப்பப்பா, அப்பா என பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்ற காணி. 10 ஏக்கர் அளவில் இந்த காணி காணப்படுகிறது. நாங்கள் 1985ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீண்டும் 1990ஆம் ஆண்டு வந்து இந்த வயற்காணியில் விவசாயம் செய்தோம். பின்னர், 1990ஆம் ஆண்டில் மீண்டும் இடம்பெயர்ந்து 2002ஆம் ஆண்டில் மீள்குடியேறி எங்கள் கிராமத்துக்கு வந்தோம். அந்த யுத்த காலத்தில் காணியை துப்புரவாக்கி வயல் நிலமாக்க உரிய அனுமதி தரப்படவில்லை. நாங்கள் அனுமதி பெற்று இந்த காணிகளை சீரமைக்க முற்பட்டபோது வளத்தாமலை பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வந்திருந்து, இங்கு எவரையும் விவசாயம் செய்ய விடவில்லை. இதனால் நீதிமன்றத்துக்கு சென்றதையடுத்து, தீர்ப்பு எமக்கு சார்பாக வந்தது. அதன் பின்னரும் அந்த பிக்கு எம்மை விவசாயம் செய்ய விடவில்லை. அதன் பின்னரும் இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர் உட்பட பலருக்கு தெரியப்படுத்தினோம். ஆனால், எந்த தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை. தற்போது வந்திருக்கின்ற புதிய அரசாங்கத்தில் எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்ட செயலகத்தில் வைத்து காணி பிரச்சினை தொடர்பாக முறையிட்டோம். அப்போது, ஆவணங்கள் இருப்பவர்கள் காணிகளில் விவசாயம் செய்யுங்கள் என கூட்டத்தில் கூறப்பட்டது. அதை நம்பி விவசாயம் செய்ய வந்தபோது மீண்டும் பிக்கு பொலிஸ் அதிகாரிகளை அழைத்து வந்து தடை விதித்தார். பின்னர் ஆளுநரின் தலைமையில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் கூட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டது. அதன் ஊடாக, பிக்குவுக்கு உரிய காணியை அளந்து கொடுத்துவிட்டு, எமது காணிகள் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு விவசாயம் செய்ய முற்படுகின்றவேளையிலும் பௌத்த பிக்கு மீண்டும் தடைவிதித்து வருகிறார். சொந்த வயற்காணிகளை வைத்துக்கொண்டு அரிசியை விலைக்கு வாங்கி சாப்பிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, திரியாய் விவசாயிகளான நாங்கள் தற்போது பதவி வகித்திருக்கும் ஜனாதிபதியை நம்புகின்றோம். இந்த அரசாங்கத்தில் எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம்” என தெரிவித்தார். திரியாய் விவசாய சம்மேளனத்தின் தலைவர் அற்புதராஜன் டனுர்சன் கூறுகையில், “எமது திரியாய் மக்களுக்கு ஆத்திக்காடு – வளத்தாமலை பகுதியில் 125 வருட பழமை வாய்ந்த, பிரித்தானியரால் வழங்கப்பட்ட உறுதியுடைய காணி இருக்கிறது. எனினும், அந்த காணிகளை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் 2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை அடாத்தாக பிடித்து ஆக்கிரமித்து வருகிறார். இந்நிலையில், புதிய அரசாங்கம் வந்த பின்னர் கிழக்கு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, 07.10.2024 அன்று மாவட்ட செயலகத்துக்கு எம்மையும் பௌத்த பிக்குவையும் மாவட்ட செயலாளர் அழைத்து, எங்களது ஆவணங்களை பரிசீலனை செய்து ஆவணங்கள் இருப்பவர்கள் விவசாயம் செய்யலாம் என தெரிவித்திருந்தார். ஆனால், மறுநாள் வயலுக்குச் சென்றபோது பௌத்த பிக்கு விவசாயிகளை விரட்டியடித்தார். பின்னர் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச சபையில் கூட்டம் நடைபெற்று, அதன் ஊடாக பௌத்த பிக்குவுக்குரிய காணி அளந்து கொடுக்கப்பட்டதோடு, மக்களுடைய காணிகளில் மக்கள் விவசாயம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. எனினும் தொடர்ந்து அந்த பௌத்த பிக்கு எமது மக்களுடைய காணிகளில் விவசாயம் செய்வதற்கு தடையாக இருந்து வருகின்றார். பௌத்த பிக்கு எமது உறுதிக்காணிகளை அடாத்தாக பிடித்து குத்தகைக்கு கொடுத்து வருடாவருடம் இலட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றார். அத்துடன் மாடி வீடு கட்டி வசித்து வருகின்றார். ஆனால் எமது மக்கள் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடி வருகின்றார்கள். எனவே எமது மக்களுக்கு புதிய அரசாங்கத்திலாவது நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். விவசாயி அற்புதராஜன் கௌசலா கூறுகையில், “எமது திரியாய் கிராமத்தில் ஆத்திக்காடு எனப்படுகின்ற வயல்பகுதி 880 ஏக்கர்களை கொண்டதாக காணப்படுகின்றது. இது எமது மூதாதையர் காலத்தில் இருந்து அதாவது 1900 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. எனக்கு இங்கு பரம்பரைக் காணி 10 ஏக்கர் இருக்கிறது. இந்த காணிகளில் 1990ஆம் ஆண்டு வரை விவசாயம் செய்து வந்தோம். பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றதால் இந்தக் காணிகளில் செய்கையிட முடியாமல் போனது. 2002ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் மீள்குடியேற்றம் நடந்தது. தொடர்ந்தும் 2009ஆம் ஆண்டும் மீள்குடியேற்றம் நடந்தது. அதன் பின்னர், எமது ஜீவனோபாய தொழிலான விவசாயத்தை நம்பித்தான் நாங்கள் இந்த கிராமத்தில் மீள குடியேறி இருக்கிறோம். நீண்டகாலமாக பயிர் செய்யாமல் பற்றை வளர்ந்து கிடக்கும் காணிகளை துப்புரவு செய்வதற்காக எம்மிடம் இருக்கின்ற உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்களை காணிபித்தும் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் எம்மை விடவில்லை. ஆனால், பௌத்த பிக்கு எமது காணிகளை துப்புரவு செய்து விவசாயம் செய்வதற்கு திணைக்கள அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள். அரிசிமலை பிக்கு மக்களுடைய பெருமளவான காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றார். அதில் 82 ஏக்கர் காணியை குச்சவெளி கமநல சேவை நிலையத்தின் கீழ் பதிவு செய்து பசளை பெற்றுக்கொண்டும் இழப்பீடுகள் பெற்றுக்கொண்டும் விவசாயம் செய்து வருகின்றார். திரியாயின் ஏனைய பகுதிகளை விட இந்த பகுதியில் மாத்திரம் உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்கள் கொண்ட 800 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இருக்கின்றன. இவற்றை வனவள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் எம்மை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றன. இந்நிலையில் பௌத்த பிக்கு எமது காணிகளில் விவசாயம் செய்து வருகின்றார். ஆனால், நாங்கள் ஒரு நேரம் கூட ஒழுங்காக சாப்பிட முடியாமல் பட்டிணியால் வாடி வருகின்றோம்” என்றார். இவ்வாறாக, அப்பகுதி மக்கள் தமது காணிகளில் தமக்கு உரித்து இருந்தும், விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலையை வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர். திரியாய் கிராமமும் அதன் வரலாறும் திரியாய் கிராம சேவகர் பிரிவானது 11.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு 300 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் வசித்து வருகின்றார்கள். இதில் ஆண்கள் 442 பேர், பெண்கள் 364 பேர். திரியாய் கிராம சேவகர் பிரிவானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. திரியாய் கிராமம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பழம்பெரும் கிராமமாகும். திருக்கோணேஸ்வரர் ஆலயத் திருப்பணிக்காக குளக்கோட்டு மன்னனால் திரியாயில் மக்கள் குடியேற்றப்பட்டு, 7 குளங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதோடு கால்நடைகளும் கொடுக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த வரலாற்றுப் பின்னணியை நோக்குகையில், திரியாயில் இருந்து திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு திரி, நெய் வழங்கப்பட்டு வந்ததால் “திரி - ஆய் - திரியாய்” ஆகிய சொற்கள் இணைந்து “திரியாய்” எனும் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தாமரைத் தண்டில் இருந்து தயாரிக்கப்பட்ட திரியும், பசு நெய்யும் ஆலயத்துக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. இங்கு 1825ஆம் ஆண்டு பாடசாலையொன்று கட்டப்பட்டதாகவும், 1875ஆம் ஆண்டு பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. 1985ஆம் ஆண்டு திரியாய் கிராமம் எரியூட்டப்பட்டது. அந்த சம்பவத்தில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவ்வேளை, கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரியாய் மக்கள் இடம்பெயர்ந்தனர். அந்த சூழ்நிலையில் தங்கள் காணிகளுக்கான ஆவணங்களை இழந்த மக்கள் இன்று தங்கள் காணிகளை உரிமை கோர முடியாமலும், காணிகளில் விவசாயம் செய்ய முடியாமலும் தவிக்கின்றார்கள். எனவே, அரசாங்கம் திரியாய் மக்களுடைய காணிகளுக்கான ஆவணங்களை வழங்கி அவர்களுடைய நிலங்களை விடுவித்து, அந்த நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்ய உதவ வேண்டும். நல்லிணக்கம், சகவாழ்வை ஏற்படுத்த வேண்டுமாயின், இன மற்றும் மதங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளையும் அரசு தடுக்க வேண்டும். https://www.virakesari.lk/article/210824
  2. STRATEGIC TIMEOUT 18th Match (N), Mullanpur, April 05, 2025, Indian Premier League Rajasthan Royals 205/4 Punjab Kings (9/20 ov, T:206) 59/4 PBKS need 147 runs in 66 balls. Current RR: 6.55 • Required RR: 13.36 • Last 5 ov (RR): 28/1 (5.60) Win Probability:PBKS 2.75% • RR 97.25%
  3. அமெரிக்காவிற்கு மிகச்சிறந்த எதையாவது வழங்க முன்வரும் நாட்டுடன் வரி குறித்து பேச்சுவார்த்தை - டிரம்ப் 04 APR, 2025 | 12:35 PM புதிய வரிகள் குறித்து உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆனால் அந்த நாடுகள் பதிலுக்கு அற்புதமான தனிச்சிறப்பு வாய்ந்த எதையாவது வழங்க முன்வந்தால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என குறிப்பிட்டுள்ளார். உலகநாடுகள் அமெரிக்காவை தங்கள் நலன்களிற்காக பயன்படுத்துகின்றன என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் தான் அதனை தடுத்து நிறுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். வரிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான பெரும்பலத்தை எங்களிற்கு தருகின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாடும் எங்களை தொடர்புகொண்டுள்ளது. எவராவது அற்புதமான அல்லது மிகச்சிறந்த விடயத்தை அமெரிக்காவிற்கு வழங்குவதாக தெரிவித்தால் நாங்கள் பேச்சுவார்த்தைகளிற்கு தயார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211119
  4. 05 APR, 2025 | 05:40 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர். அந்தவகையில், தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புள்ளை விவசாயக் களஞ்சிய கட்டிடத்தொகுதி மற்றும் 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்நாட்டிற்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் விஜயத்துடன் இணைந்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் மூன்று அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு மற்றும் திறப்பு விழா இன்று சனிக்கிழமை (05) நடைபெற்றது. தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்நிலையத்தின் பணிகள் ஆரம்பித்தல், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புள்ளை விவசாய களஞ்சி கட்டிடத் தொகுதி மற்றும் இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம் ஆகியவை இணையவழி (online) தொழில்நுட்பம் மூலம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டன. இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் இதில் இணைந்துகொண்டனர். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இந்தியாவின் என்டீபீசீ(NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் நிலையம், நீண்டகால மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தின் (LTGEP) கீழ் நிறுவப்படவுள்ள வடகிழக்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வலயத்தின் ஒரு பகுதியாகும். சம்பூர் சூரிய மின் நிலையத் திட்டம் இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டம் 2027 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 500 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் நாட்டின் தேசிய மின்சார விநியோகத்தில் இணைக்கப்படும். N-type TOPCon solar cells என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவப்படும் இந்த திட்டம், வலுசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், நாட்டின் வலுசக்தி அமைப்பை புதைபடிவ எரிபொருட்களை நம்புவதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நோக்கி மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, சம்பூர் சூரிய மின்நிலையத் திட்டம் ஆண்டுதோறும் வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் காபனீரொக்சைட் அளவை சுமார் 02 மில்லியன் டொன்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது. அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை சுமார் 40% குறைத்தல், விவசாயப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துதல், நுகர்வோருக்கு தரமான உணவை வழங்குதல் மற்றும் விவசாய நிலைபேற்றுத்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், 5,000 மெட்ரிக் டொன் கொள்ளளவும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ள தம்புள்ளை விவசாய களஞ்சிய கட்டிடத்தொகுதி (குளிர் கிடங்கு) இன்று திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு பயிர்களுக்கான உகந்த சேமிப்பு முறைகள் குறித்த ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக இந்த களஞ்சியத் தொகுதியில் ஆறு அறைகள் நிறுவப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு அறையும் வெவ்வேறு காலநிலை நிலைமைகளை உருவகப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முதலில் நிறுவப்படும் இந்தக் களஞ்சிய கட்டிடத் தொகுதியின் மொத்தச் செலவு 524 மில்லியன் ரூபாவாகும். இதில், 300 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாவதோடு, இதற்காக இலங்கை அரசாங்கம் 224 மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது. 5,000 மதஸ்த் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம், நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 5,000 மதஸ்த் தலங்களில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டமாகும். இந்த திட்டத்தில் இந்திய அரசாங்கம் 17 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது, மேலும் இலங்கை மின்சார சபை, இலங்கை நிலைபெறுதகு வலு சக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. அதன்படி, பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் கூரைகளில் 5 kW கொள்ளளவைக் கொண்ட 5,000 சூரிய மின் கலங்கள் நிறுவப்படும். இது நாட்டின் வலுசக்திக் கட்டமைப்பில் 25 மெகாவாட் சூரிய மின்சக்தி திறனை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செலவு குறைந்த, நிலைபேறான மற்றும் நம்பகமான வலுசக்தி அமைப்பை நோக்கிய அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்துகிறது. https://www.virakesari.lk/article/211248
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கட்டுரை தகவல் எழுதியவர், நடாலி ஷெர்மன் பதவி, பிபிசி, நியூயார்க் 5 ஏப்ரல் 2025, 12:46 GMT அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை தீவிரமாக சரிந்தது. இது நீடித்த வர்த்தகப் போர் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் 5 சதவிகிதத்துக்கும் மேலாக சரிந்தன. இதில் எஸ்&பி 500 கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்தது. இது 2020 க்குப் பிறகு அமெரிக்க பங்குச் சந்தை சந்தித்துள்ள மிக மோசமான வாரமாகும். பிரிட்டனில், ஃஎப்டிஎஸ்ஈ 100 (FTSE) கிட்டத்தட்ட 5 சதவிகிதம் சரிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில், ஆசிய சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. மேலும், ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ள பங்குச் சந்தைகளும் இதேபோன்ற கடுமையான சரிவை எதிர்கொண்டன . பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்து எழுந்துள்ள கவலைகளை நிராகரித்த டிரம்ப், அமெரிக்க தொழிலாளர் சந்தை வலுவாக இருக்கிறது என்றார். மேலும், "துணிவுடன் இருங்கள்," என்றும், "நாம் தோற்க முடியாது" என்றும் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் 10% புதிய வரியை டிரம்ப் விதித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாக சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இன்னும் அதிக அளவிலான வரியை எதிர்கொள்கின்றன. இதனால் உலக பங்குச்சந்தை பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளில் சில சனிக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், 1968க்குப் பிறகு அமெரிக்காவில் நடைமுறைக்கு வரவுள்ள மிகப்பெரிய வரி உயர்வு இது என்றும் கூறுகின்றனர் . இந்த நடவடிக்கைகள் வர்த்தகத்தை குறைக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் அவை பல்வேறு நாடுகளை பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். டிரம்பின் வரி விதிப்பு இந்திய ஐடி துறையை பாதிக்குமா? ஆனந்த் ஸ்ரீநிவாசன் விளக்கம்5 ஏப்ரல் 2025 மனிதர்களே இல்லை: பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுகளுக்கும் வரி விதித்த டிரம்ப்4 ஏப்ரல் 2025 டிரம்பின் வரிப் போர் இந்தியாவில் உற்பத்தித் துறைக்கு வழங்கியுள்ள புதிய வாய்ப்புகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளிக்கிழமையன்று சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 34 சதவிகித இறக்குமதி வரி விதித்ததுடன், முக்கியமான கனிமங்களின் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தியது. சில அமெரிக்க நிறுவனங்களை தனது வணிகத் தடை பட்டியலில் சேர்த்து, டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்தது. மேலும் டிரம்பின் நடவடிக்கைகள், "அழுத்தம் கொடுப்பதாகவும்", சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாகவும் சீனா விவரித்தது. அதனையடுத்து, பேச்சுவார்த்தைக்கான ஆர்வம் குறித்து அமெரிக்க அரசு முரண்பட்ட சமிக்ஞைகளை வழங்கியிருந்தாலும், மற்ற நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு உடன்பாடுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதற்காக நம்பிக்கையுடன் இருக்கின்றன. பதிலடி வழங்க திட்டமிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் மரோஷ் செஃப்கோவிச், வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் "வெளிப்படையான" பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். "ஐரோப்பிய ஒன்றியம் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் நடத்த உறுதியாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எங்களது நலன்களை பாதுகாக்கவும் தயாராக உள்ளது, நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்'' என அவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு அவர் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளுடன் ஒத்துப்போகின்றன. ஆனால் அவை சில ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் பரவலான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட மிக மோசமான வாரமாக இது அமைந்துள்ளது. ஆசியாவில் உள்ள விநியோகஸ்தர்களை பெரிதும் நம்பியிருந்த ஆப்பிள் மற்றும் நைக் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. ஆனால், பொதுவாக இறக்குமதி வரிகளின் நேரடி தாக்கத்தை எதிர்கொள்ளாத துறைகளாகக் கருதப்படும், நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்கள், சுகாதார சேவைகள் மற்றும் மின்சாரம், தண்ணீர், எரிவாயு, இணையம் போன்ற துறைகளும் வெள்ளிக்கிழமையன்று சரிவை எதிர்கொண்டன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வரி விதித்த அமெரிக்கா – 7 கேள்விகளும் பதில்களும்3 ஏப்ரல் 2025 இந்திய ஆடை உற்பத்தி துறை டிரம்பின் வரி விதிப்பால் லாபம் அடைவதற்கான வழிகள்4 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் உலகளவில் ஏற்படப் போகும் பாதிப்புகள்3 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளின் பாதிப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள சில வாரங்கள் ஆகலாம் என்று எச்சரித்த அமெரிக்காவின் ஹாரிசன் இன்வெஸ்ட்மென்ட்ஸில் ஆராய்ச்சி மற்றும் அளவியல் உத்திகள் பிரிவின் தலைவராக உள்ள மைக் டிக்சன், "வெளிப்படையாகக் கூறினால், வர்த்தகர்களின் தற்போதைய மனநிலை மிகவும் மோசமாக உள்ளது" என்று கூறினார். "நாங்கள் இப்போது உண்மையிலேயே கவலைப்படுவது காலை 6 மணியளவில் [சீனா பதிலடி கொடுத்தபோது] நடந்ததைக் குறித்துதான். அப்படிப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் எத்தனை உள்ளன? என்பதே கேள்வியாக உள்ளது" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்புகள் 20% வரியை எதிர்கொள்கின்றன ஜேபி மோர்கன் முதலீட்டாளர்களுக்காக வெளியிட்ட குறிப்பில், இந்த ஆண்டில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 40 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சில முதலீட்டாளர்கள் இழப்புகளைக் குறைத்து மதிப்பிட்டனர். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இப்போதைய சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டனர். "சந்தையில் நாம் காணும் இந்த மாற்றங்கள் கடுமையானவை. ஏனென்றால் ஒரு விஷயம் மேலே செல்லும் வேகத்தைவிட, அது கீழே சரிவது மிக விரைவாக நடக்கிறது," என்று கேப்வெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் பக்லியாரா கூறினார். உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்கா ஒரு "பெரிய மறுசீரமைப்பு" நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், ஆனால் அந்த முயற்சி அவசியமானது என்றும் அவர் கூறினார். வெள்ளிக்கிழமை பேசிய அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பவல், மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் வலுவான வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதை பிரதிபலிக்கும் சமீபத்திய தரவுகளை மேற்கோள்காட்டி, பொருளாதாரம் "உறுதியாக" இருப்பதாக தான் கருதுவதாகக் கூறினார். ஆனால் அதிக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதையும் அவர் ஒப்புக்கொண்டார். "எதிர்பார்த்ததை விட வரிகள் அதிகமாக உள்ளன, கிட்டத்தட்ட அனைத்து முன்னறிவிப்பாளர்களும் கணித்ததை விட அதிகமாக உள்ளன என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்," என்று பவல் கூறினார். வளர்ச்சி மெதுவாக நடைபெறும், மறுபுறம் விலைகள் உயரும் வாய்ப்புகள் அதிகம் என்று அவர் எச்சரித்தார். படக்குறிப்பு,பாட் மஸ்கரிடோலோ நியூ ஜெர்சியில் உள்ள ஒரு சிறிய கடையின் உரிமையாளராக உள்ள பாட் மஸ்கரிடோலோ, இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனது விட்டு உபயோக பொருட்களின் கடையான ஜேக்கப்சன் அப்ளையன்ஸை மூட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறினார். தேவையான பொருட்களை இப்போது வாங்கிக் கொள்ளுமாறு அவர் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், "மாத இறுதியில் விலை என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது," என்றும் அவர் கூறினார். குளிர்சாதன பெட்டிகள் போன்ற பொருட்களின் விலைகள் 30 சதவிகிதம் அல்லது 40 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று அவர் எதிர்பார்க்கிறார். வியாழக்கிழமை கடுமையான சரிவைச் சந்தித்த நைக் மற்றும் பிற சில்லறை ஆடை விற்பனையாளர்களின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று ஓரளவு மீண்டன. வியட்நாம் அதிபருடம் "மிகவும் பயனுள்ள தொலைபேசி அழைப்பு" நடந்ததாக டிரம்ப் கூறியதையடுத்து, உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இந்த பங்குகளுக்கு ஊக்கமளித்தது. ஆனால் சந்தையின் பிற பகுதிகள் தொடர்ந்து மந்தமாக இருந்தன. உற்பத்திக்காக சீனாவைப் பெரிதும் சார்ந்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று 7 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்தன. புதன்கிழமையிலிருந்து இதுவரை, ஐபோன் தயாரிப்பாளர்களின் சந்தை மதிப்பு சுமார் 15 சதவிகிதம் குறைந்துள்ளது. இழப்புகள் தொடர்ந்த நிலையில், சில வெள்ளை மாளிகை ஆதரவாளர்கள் கூட இந்த நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கினர். வரிகள் தொடர்பான ஒரு பாட்காஸ்டில், குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ், டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு நன்மை கிடைக்க வழிவகுத்தாலும், அதே நேரத்தில் "மிகுந்த அபாயங்கள்" உள்ளதாகவும் எச்சரித்தார். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgq6yv7774o
  6. இலங்கை - இந்தியவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தால் இறையாண்மைக்கு பாதிப்பில்லை; பாதுகாப்பு செயலாளர் 05 APR, 2025 | 02:17 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை - இந்தியவுக்கு இடையிலான புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளால் இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தெளிவுப்படுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை - இந்திய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இரு நாடுகளினதும் பாதுகாப்பு உறவுகள் வலுப்பெறும் என்பதுடன், பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், அறிவியல் மற்றும் தகவல் பரிமாற்றம் மேலும் விஸ்தரிக்கப்படும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு துறைசார்ந்த ஒத்துழைப்புகள் இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்பயிற்சிகள், செயலமர்வுகள் போன்ற திட்டங்கள் ஊடாக வலுப்பெற்றுள்ளன. இதனை தவிர வருடத்திற்கு இலங்கை பாதுகாப்பு படைகளின் 750பேருக்கு சிறப்பு பயிற்சிகளை இந்தியா வழங்குகின்றது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் ஊடாக பல்வேறு நன்மைகள் இலங்கைக்கு கிடைக்கின்றன. இருநாடுகளுக்குமிடையில் 2023ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாதுகாப்பு கலந்துரையாடலில், இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்தல் மற்றும் செயற்றிறன் மிக்கதாக்குவது போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போதே புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. இதன்பிரகாரம் ஏனைய நாடுகளுடன் இலங்கையின் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கடந்த ஜனவரி மாதத்தில் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆழமாக மீளாய்வு செய்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதியும் எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் இருநாடுகளின் தேசிய கொள்கைகளுக்கோ அல்லது சட்ட கட்டமைப்பிற்கோ எவ்விதமான அழுத்தங்களும் ஏற்படாது. இலங்கை - இந்திய புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின்போது, இருதரப்பு தேசிய மற்றும் இராணுவ சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடணம் என்பவற்றை பாதுகாப்பதில் இருநாடுகளும் உறுதியுடன் உள்ளன. எனவே இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது, உள்ளக விடயங்களில் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்படாதவாறு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களை பாதுகாப்பதற்கு இருநாடுகளும் ஒப்பந்தத்தின் ஊடாக ஒப்புதல் அளித்துள்ளன. எனவே இலங்கை - இந்திய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இரு நாடுகளினதும் பாதுகாப்பு உறவுகள் வலுப்பெறும் என்பதுடன், பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், அறிவியல் மற்றும் தகவல் பரிமாற்றம் மேலும் விஸ்தரிக்கப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்குமென முன்மொழியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் மூன்று மாத முன் அறிவிப்பு மூலம் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளும் உரிமையும் உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/211221
  7. 05 APR, 2025 | 05:28 PM இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று சனிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது. இந்திய - இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டன. அதன்படி, 01- மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட (HDVC) இடை இணைப்பை செயல்படுத்துவதற்கான இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 02- டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக மக்கள் மட்டத்தில் செயல்படுத்தப்படும் வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 03- திருகோணமலையை வலுசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால, இந்தியவெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் காலித் நசார் அலமேரி ஆகியோர் இந்தப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர். 04- - பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். சம்பத் துய்யகொந்த மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 05- இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சிற்கும் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சிற்கும் இடையிலான சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 06- மருந்து விதிமுறைகள் ஒத்துழைப்புக்காக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் மருந்து விதிமுறைகள் ஆணைக்குழுவிற்கும் இலங்கையின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 07- கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்தியக் தூதுக்குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/211247
  8. எவ்வித சமரசமும் இன்றி கச்சதீவை 99 வருட குத்தகைக்கு பெற வேண்டும்; விஜய் வலியுறுத்தல் “கச்சதீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு- “கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது. 1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது. அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை. அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது. கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு. நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் வலியுறுத்துகிறேன். சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்” என தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/316878
  9. 'இலங்கை மித்ர விபூஷண' விருது எனக்கு வழங்கப்பட்டமை பெருமைக்குரிய விடயம் - இந்திய பிரதமர் மோடி 05 APR, 2025 | 07:02 PM இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றும், இது தனக்கு மாத்திரமன்றி, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த விருது என்றும் அது குறித்து ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்தியாவும் இலங்கையும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவையும் ஆழமான நட்பையும் கொண்டிருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டில் மேற்கொண்ட விஜயம் மிகவும் உணர்ச்சிகரமான நேரத்தில் இடம்பெற்றது என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர், பிரதமராகப் பதவியேற்ற பிறகு இது இலங்கைக்கு தாம் மேற்கொண்ட 04 வது பயணம் என்றும் தெரிவித்தார். மக்களின் துணிச்சல் மற்றும் தைரியம் பற்றி தாம் அறிந்திருப்பதால், இலங்கை வலுவாக மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று தான் நம்புவதாகவும் இதன்போது இந்தியப் பிரதமர் தெரிவித்தார். இலங்கை முன்னேற்றப் பாதைக்குத் திரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். கொளரவமான நண்பராக இந்தியா தனது கடமையை நிறைவேற்றுவது பெருமைக்குரிய விடயம் என்றும், 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், கொவிட் நோய்த்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து சூழ்நிலைகளிலும் தனது அரசாங்கம் இலங்கை மக்களுடன் இணைந்து நின்றுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார். “திருவள்ளுவரின்” திருக்குறளை மேற்கோள் காட்டி, பிரதமர் நரேந்திர மோடி, உண்மையான நண்பனையும் அவனது நட்பையும் தவிர வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்பின் பிரதிபலிப்பாகும் என்றும், இலங்கை ஜனாதிபதியை தனது முதல் வெளிநாட்டு நண்பராகப் பெறும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், மஹாசாகர் நோக்கிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உள்ளதாகவும் கூறிய பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் முதல் திருகோணமலையை வலுசக்தி மையமாக நிறுவுவது வரை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் நன்மைகள் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்தார். உயர் மின்னழுத்த மின் இணைப்பு தொடர்பான ஒத்துழைப்பு இலங்கைக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும், இலங்கையில் உள்ள மதத் தலங்களில் 5,000 சூரிய மின் கலங்களை நிறுவுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும், மக்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக இலங்கைக்கு 2.4 பில்லியன் ரூபாய் அன்பளிப்பு வழங்கயிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நன்மைக்காக இலங்கையின் மிகப்பெரிய விவசாய களஞ்சியக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டினார். நாளைய தினம் நவீனமயமாக்கப்பட்ட மஹவ - ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாகவும், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும், இலங்கையின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 700 இளம் தலைவர்களுக்கு நல்லாட்சி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் “சப்கா சாத் சப்கா விகாஸ்" நோக்குக்கு அமைய, அயல் நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதன்படி, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பின் போது வட்டி விகிதங்களைக் குறைக்க தீர்மானித்திருப்பதாகவும், அதனூடாக இலங்கை மக்களுக்கு சலுகை மற்றும் வழி கிடைக்கும் என்றும் இந்தியப் பிரதமர் கூறினார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பல நூற்றாண்டுகளாக ஆன்மிக மற்றும் உணர்வுபூர்வமான உறவு இருப்பதாகவும், அதை உறுதிப்படுத்தும் வகையில், 1960ஆம் ஆண்டு குஜராத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்களை தரிசிக்க எதிர்பார்ப்பதோடு அதனை இலங்கைக்கு வழிபாட்டுக்காக கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார். அத்துடன், திருகோணமலை திருக்கோணேஸ்வரம், அனுராதபுரம் புனித நகரம், சீதாஎலிய கோவில் போன்ற சமய வழிபாட்டுத் தலங்களின் மறுசீரமைப்பிற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இலங்கைக்கான தனது அரச விஜயத்தின் போது உயர் அரச கௌரவத்துடன் வரவேற்றமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211214
  10. 05 APR, 2025 | 01:36 PM இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்டதையடுத்து பிரதமர் மோடிக்கு 'இலங்கை மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். இந்திய பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில், மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். 2019 பயங்கரவாதத் தாக்குதல், கொவிட் தொற்று, சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம். எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான 'மகாசாகர்' ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211213
  11. Published By: RAJEEBAN 05 APR, 2025 | 12:39 PM ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்ற ஏப்பிரல் ஐந்தாம் திகதியன்று ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது என முன்னிலை சோசலிஸ கட்சியின் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். சோசலிஸத்திற்காக குரல்கொடுத்த ஜேவிபியின் உறுப்பினர்கள் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் அரசாங்கம் கைசாத்திடுவதை வேடிக்கை பார்க்ககூடாது என முன்னிலைசோசலிஸ கட்சியின் குமார் குணரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் இலங்கைக்கு எதிர்காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு உடன்படிக்கை எரிசக்திதுறை சம்பந்தமான உடன்படிக்கை உட்பட பல உடன்படிக்கைகள் கைசாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ளார். அமைச்சரவை பேச்சாளர் மோடி ஜயஸ்ரீமகாபோதிக்கு விஜயம் மேற்கொள்வார் மன்னார் மருத்துவமனைக்கு நிதியை அன்பளிப்பாக வழங்குவார் என தெரிவித்துள்ளார். மோடி இதன் மூலம் என்ன எதிர்பார்க்கின்றார், அவர் இலங்கையின் துறைமுகங்களை திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புகின்றார்என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா சீனா அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளன, இது இந்து சமுத்திரத்தில் இன்று காணப்படும் புவிசார் அரசியல் நிலவரம் தொடர்பானது, உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கையில் இலங்கை கைசாத்திட்டால் அது புவிசார் அரசியலில் தேவையற்ற விதத்தில் சிக்குப்படும். இந்த உடன்படிக்கையில் கைசாத்திடுவது வரலாற்று தவறாக அமையும். சமீபகாலத்தில் உலகின் எந்த நாடும் வேறு ஒரு நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடவில்லை, ஆனால் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் சில நாடுகளுடன் புரிந்துணர்வினை ஏற்படுத்தியது, இன்று கைசாத்திடப்படவுள்ள உடன்படிக்கையின் பின்னால் அரசியலே உள்ளது. ராஜபக்சாக்களோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ நாட்டிற்கு துரோகம் இழைப்பது புதிய விடயமல்ல. மாறாக இவ்வாறான உடன்படிக்கைகளிற்கு எதிராக வீதியில் இறங்கிய அரசாங்கம் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றது, ஜேவிபி தன்னை மாற்றிக்கொண்டு இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது. ஜேவிபி தனது பழைய கொள்கைகளை கைவிட்டுவிட்டது போல தோன்றுகின்றது. இது ஜேவிபியின் உறுப்பினர்களின் மனச்சாட்சியுடன் தொடர்புடைய விடயம், இந்த அரசாங்கம் சோசலிஸ ஆட்சிமுறையை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தது, ஆனால் கல்வி வரி போன்றவை தனியார் மயப்படுத்தப்படுவது குறித்து அக்கறையற்றதாக காணப்படுகின்றது. ஜேவிபியின் நீண்டகால உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்களும் இந்த தருணத்தில் வெறும் பார்வையாளர்களாக இருக்கப்போகின்றார்களா என நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம். ஒப்பந்தங்களில் கைசாத்திட்டு இவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே அவரின் விஜயத்தின் நோக்கம். 1971 ஏப்பிரல் ஐந்தாம் திகதி ஜேவிபியின் கிளர்ச்சி இடம்பெற்ற தினத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படுவது விதியின் திருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211209
  12. CSK vs DC: தடுமாறும் சென்னை அணி - அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஏப்ரல் 2025, 09:49 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் சென்னை அணிக்கு 184 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி நிர்ணயித்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்து சென்னை அணி தடுமாறி வருகிறது. 10 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்தது. விஜய் ஷங்கர் தவிர்த்து வேறு யாருமே 20 ரன்களைத் தாண்டவில்லை. இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய ஷிவம் துபே இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். 15 பந்துகளை சந்தித்த அவர் 18 ரன்களை எடுத்து நிகம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெவோன் கான்வே ஆட்டமிழந்து வெளியேறுகிறார் டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ஜேக் ஃப்ரேசரின் விக்கெட் வீழ்ந்தது. இரண்டாவது ஓவரை முகேஷ் சவுத்ரி வீசிய நிலையில் அபிஷேக் பொரல் இந்த ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்சரை விளாசினார். பவர் பிளே முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விக்கெட் வீழ்த்திய கலீல் அகமதுவை சகவீரர்கள் பாராட்டுகின்றனர் 7வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா 20 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்திருந்த அபிஷேக் பொரல் விக்கெட்டை வீழ்த்தினார். 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்திருந்தது. இதன் பின்னர் ஒரு புறம் விக்கெட்கள் விழுந்தாலும் கேஎல் ராகுல் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடினார். 51 பந்துகளை சந்தித்த அவர் 77 ரன்களைக்கு குவித்தார். கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற அவர் பதிரானா பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபாரமாக ஆடிய கேஎல் ராகுல் இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் அக்சர் படேல் 21 ரன்களிலும் , சமீர் ரிஸ்வி 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்து 200 ஸ்ரைக் ரேட்டுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனான அசுதோஷ் ஷர்மா கடைசி ஓவரில் களமிறங்கிய நிலையில், அதே வேகத்தில் ரன் அவுட் செய்யப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வழக்கம் போல சிறப்பான விக்கெட் கீப்பிங் பங்களிப்பை அளித்த தோனி இரண்டாவது ரன் ஓட முயற்சித்த போது, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை தோனி லாவகமாக பிடித்து மின்னல் வேகத்தில் ரன் அவுட் செய்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது, மதீஷா பதிரானா ஆகியோ தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறப்பான அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. இதனால் சென்னை அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கிபேட்டிங் செய்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,க்ளீன் போல்டு ஆன டெல்லி கேப்டன் அக்சர் படேல் நடப்பு தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி இரண்டிலுமே வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. மறுபுறம் சென்னை அணி தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியை வெற்றியுடன் தொடங்கினாலும், அடுத்து பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடனான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ளது. அணியின் பேட்டிங் லைன் அப் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இவற்றில், பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அணியின் மிகப்பெரிய தோல்வியும், சென்னை ரசிகர்களை சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்திருக்கும் நிலையில், சிஎஸ்கே அணிக்கு தோனி மீண்டும் தலைமையேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ருதுராஜ் மீண்டும் களமிறங்கியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நூர் முகமதுவுக்கு ஆலோசனை வழங்குகிறார் தோனி களத்தில் விளையாடுவது யார்? சென்னை அணியின் பிளேயிங் லெவன் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பதிரானா. டெல்லி அணியின் பிளேயிங் லெவன் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், அக்சர் படேல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் , சமீர் ரிஸ்வி, அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மொகித் ஷர்மா, மைதானத்தின் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பவர் பிளேயில் சிறப்பாக ஆடிய அபிஷேக் பொரல் இன்றைய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக கருதப்படும் இந்த மைதானம் , இயல்புக்கு மாறாக இருப்பதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்திருந்ததார். சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர், தீபக் ஹூடா என யாரும் சிறப்பாக ஆடவில்லை. சுழற்பந்திலும் பலம் வாய்ந்த டெல்லி அணி அக்சர் படேல் தலைமையில் களம் காணும் டெல்லி அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உற்சாகமாக களமிறங்குகிறது. அணியில் ஃபாஃப் டூப்ளசிஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற அனுபவம் மிக்க வீரர்களையும் விப்ராஜ நிகம், அசுதோஷ் ஷர்மா போன்ற அதிரடியான இளம் வீரர்களையும் கொண்ட கலவையாக உள்ளது. இவர்கள் கடந்த போட்டிகளில் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டதை மறக்க முடியாது. இன்றைய போட்டியில் டூப்ளசிஸ் களம் காணவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டாலும் அக்சர் படேல், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் என சுழற்பந்து வரிசையையும் டெல்லி கொண்டுள்ளது. மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் 2010ம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லி அணி , சிஎஸ்கே-வை வென்றதில்லை. அப்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஹேமங் பதானி தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lzd4klxqxo
  13. இந்தியப் பிரதமர் மோடி ஜனாதிபதி அலுலகத்திற்கு விஜயம் 05 APR, 2025 | 11:54 AM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை (06) வரை நாட்டில் தங்கியிருப்பார். https://www.virakesari.lk/article/211206
  14. படக்குறிப்பு,கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 5 ஏப்ரல் 2025, 07:13 GMT மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவடைந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து, பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு சான்றிதழ் வழங்கினார். அதனை அடுத்து நாளை (ஏப்ரல் 6-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பாம்பன் பாலத்தின் வரலாறு இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேய அரசு நூறாண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டது. ரயில் பாலத்திற்கு கீழே கப்பல் கடந்து செல்ல வசதியாக தூக்குப் பாலம் கட்டுவது என்றும், தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்துவதென்றும் கி.பி.1911இல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்து பணிகள் தொடங்கப்பட்டன. இரண்டே ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்து, சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ரயில் பாலம் வழியாக 1914 பிப்ரவரி 24 அன்று முதன்முதலாக ரயில் இயக்கப்பட்டது. இதனால் சென்னை எழும்பூரிலிருந்து கொழும்பு வரையிலும் பயணிகளால் ஒரே டிக்கெட்டில் பயணிக்க முடிந்தது. இந்த பாம்பன் ரயில் பாலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. நூற்றாண்டு பழமையான பாம்பன் பாலம் சிகாகோவின் ஸெர்ஷர் ரோலிங் லிப்ட் பிரிட்ஜ் (Scherzer Rolling lift Bridge) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இங்கிலாந்தின் தோர்னபி-ஆன்-டீஸின் ஹெட் ரைட்சன் ரூ கோ லிமிடெட் (Head Wrightson & Co Ltd of Thornaby -on –Tees) மூலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் ஸ்பெயினைச் சேர்ந்த பொறியாளர் ஸெர்ஷர் வடிவமைத்து செயல்படுத்தியதால் ஸெர்ஷர் பாலம் என பெயரிடப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் (41 அடி) உயரத்தில் அமைந்துள்ளது இப்பாலம். 2.05 கி மீ நீளமுள்ள இந்தப் பாலம் 143 தூண்களை கொண்டது. பாலத்தில், கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் மைய பகுதியில் 289 அடி நீள தூக்கு பாலம் அமைந்துள்ளது. தூக்கு பாலத்தின் இரண்டு தூக்குகளும் நெம்புகோல்களை பயன்படுத்தி கையால் திறக்கப்படுகின்றன. (இந்தியாவில் கட்டப்பட்ட வித்தியாசமான பாலங்கள் குறித்த The Engineer என்ற புத்தகத்தில் இருந்து இந்த விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த பாலங்களை கட்டிய பொறியாளர்களின் பேட்டிகளுடன் அந்த புத்தகத்தில் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன) பாம்பன் பழைய ரயில் பாலத்தில் பயணித்த அனுபவத்தை பாம்பனை சேர்ந்த 86 வயதான சிங்கம் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். "என்னுடைய ஒன்பதாவது வயதில் நான் முதன் முதலில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயிலில் பயணம் செய்தேன். பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் செல்வதற்கு கடல் வழியாக அரை மணி நேரம் வரை ஆகும். ரயில் பாலத்தின் மீது செல்லும் போது மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்படும். நான் பயணிக்கும் போது பாம்பனில் இருந்து ராமநாதபுரம் வரை ஒரு ரூபாய் டிக்கெட் வசூலிக்கப்பட்டது. பாலத்தில் கடலுக்கு மேல் ரயிலில் முதலில் செல்லும் போது ஒரு அச்ச உணர்வு எனக்குள் இருந்தது. ஆனாலும் ரயிலின் அந்த சிக்குபுக்கு சிக்குபுக்கு சத்தம் மற்றும் குலுங்கல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பிறகு பல முறை ரயில் பாலத்தில் சென்றுள்ளேன். எங்கள் பாம்பன் பகுதிக்கு அடையாளமே இந்த ரயில் தூக்கு பாலம் தான்," என்றார் அவர். இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் மோதி இருநாட்டு மீனவர் பிரச்னை பற்றி பேசுவாரா?3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர்களின் இலங்கை பயணமும் கையெழுத்தான ஒப்பந்தங்களும் - ஒரு வரலாற்றுப் பார்வை5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE ENGINEER படக்குறிப்பு,ஸ்பெயினைச் சேர்ந்த பொறியாளர் ஸெர்ஷர் வடிவமைத்து செயல்படுத்தியதால் ஸெர்ஷர் பாலம் என பெயரிடப்பட்டது 1964 புயலில் தப்பிய தூண்கள் 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை தாக்கிய புயலின் போது பாம்பன் ரயில் பாலத்தின் 124 ஸ்பான்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஷெர்சர் ஸ்பானும் 19 கான்கிரீட் கர்டர்கள் (தூண்கள்) மட்டுமே தப்பின. அப்போது செயற்பொறியாளராக இருந்த ஸ்ரீதரன் தலைமையில் புனரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. கடலிலிருந்து கர்டர்கள் மீட்டெடுக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் 67 நாட்களில் முடிக்கப்பட்டன. தனுஷ்கோடியில் 1964-ஆம் ஆண்டு புயல் காலகட்டத்தில் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பை நேரடியாக பார்த்த 70 வயது முதியவர் அம்பிகாபதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் குடும்பத்துடன் தனுஷ்கோடியில் வசித்து வந்தேன். தனுஷ்கோடியில் 1964-ஆம் ஆண்டு இரவு வீசிய புயல் காரணமாக எங்கள் நகரமே பேரழிவை சந்தித்தது. அங்கிருந்து தப்பித்து ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். அதன் பின்னர் மண்டபம் செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் ரயில் நிலையத்திற்கு வந்தோம். அப்போது ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பாம்பன் மண்டபம் இடையே சாலை பாலம் இல்லாததால் நாங்கள் கட்டு மரத்தை பயன்படுத்தி சுமார் இரண்டு மணி நேரம் பயணித்து மண்டபம் சென்றடைந்தோம். மூன்று மாத காலத்திற்குப் பிறகு அந்த வழியே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னர் 1974 ஆம் ஆண்டு பாம்பன் அருகே புயல் வீசியது. பாம்பன் ரயில் பாலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை," என்றார். தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? அண்ணாமலை அறிவிப்பால் புதிய எதிர்பார்ப்பு - இன்றைய டாப்5 செய்திகள்9 மணி நேரங்களுக்கு முன்னர் வளரிளம் ஆண் குழந்தைகளை சரியாக வளர்க்கிறோமா? 'அடோலசென்ஸ்' வெப் சீரிஸ் கூறும் செய்தி என்ன?4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,THE ENGINEER படக்குறிப்பு,1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை தாக்கிய புயலின் போது பாம்பன் ரயில் பாலத்தின் 124 ஸ்பான்கள் அடித்துச் செல்லப்பட்டன மீட்டர் கேஜ் பாதை பிராட் கேஜ் பாதையாக மாற்றம் பாம்பன் ரயில் பாலத்தின் 56-வது தூணில் அனிமோமீட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி காற்றின் வேகத்தை பதிவு செய்யும். மணிக்கு 58 கிமீ வேகத்தை காற்று தாண்டும் போதெல்லாம், பாலத்தின் மீது ரயில்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பாம்பன் பாலம் கட்டப்பட்ட போது அதன் மீது குறுகிய அகலம் கொண்ட (மீட்டர் கேஜ்) ரயில் பாதை இருந்து வந்தது. ரயில்வே பொறியாளர்கள், சென்னை ஐஐடி மற்றும் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சேர்ந்து, விரிவான ஆய்வை மேற்கொண்டு, புதிய பாலம் கட்டுவதற்கு பதில், தற்போது உள்ள பாலத்தை அகலப்பாதை தரநிலைகளின்படி மாற்ற பரிந்துரைத்தனர். அதன்படி, பாம்பன் ரயில் பாலத்தில் ரூ. 24 கோடி செலவில் அகல ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு 47 கர்டர்கள் (தூண்கள்) புதிதாக மாற்றப்பட்டன. மேலும் 98 கர்டர்கள் அகலப்பாதை தர நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு மானாமதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதைப் பிரிவு, ஆகஸ்ட் 12, 2007 அன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. 1914 முதல் 1988 வரை, ரயில்வே பாலத்தையொட்டி சாலைப் பாலம் கட்டப்படும் வரை, ராமேஸ்வரம் தீவிற்கு ஒரே இணைப்பாக இந்தப் பழைய கடல் பாலம் மட்டுமே இருந்து வந்தது. வக்ஃப் சட்டத் திருத்தம்: அதிமுக எதிர்ப்பு, ஜி.கே.வாசன் ஆதரவு - உணர்த்துவது என்ன?5 ஏப்ரல் 2025 டெல்லியைவிட இரண்டு மடங்கு நிலத்தை கொண்டுள்ள வக்ஃப் – எங்கே, எவ்வளவு சொத்துகள் உள்ளன?4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,THE ENGINEER படக்குறிப்பு,1914 முதல் 1988 வரை, ரயில்வே பாலத்தையொட்டி சாலைப் பாலம் கட்டப்படும் வரை, ராமேஸ்வரம் தீவிற்கு ஒரே இணைப்பாக இந்தப் பழைய கடல் பாலம் மட்டுமே இருந்து வந்தது பாம்பன் ரயில் பாலத்தில் கடைசி பயணம் நூற்றாண்டு கால சேவைக்குப் பிறகு, சென்னை ஐஐடி நிபுணர்கள் குழு ரயில் போக்குவரத்தின் போது பாம்பன் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்கு பாலத்தில் அதிகப்படியான அதிர்வுகள் ஏற்படுவதை கண்டறிந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியுடன் பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தில் கடைசியாக சென்ற சேது விரைவு ரயிலில் பயணித்த ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜெரோம். பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "சேது விரைவு ரயில் கடைசியாக இயக்கப்பட்ட போது இரவு 8 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு நான் சென்னை சென்றேன். அப்போது ரயில் பாம்பன் தூக்கு பாலம் வழியாக கடந்து சென்றது. அப்பாலத்தை ரயில் கடந்து சென்ற போது அதிர்வு அதிகமாக இருந்தால் சென்சார்களில் இருந்து ஒலி எழுப்பியதாக ரயில்வே ஊழியர்கள் பேசிக் கொண்டனர்." என்று கூறினார். தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் பதவி நீக்கத்தை உறுதி செய்த நீதிமன்றம் - தேர்தல் எப்போது?4 ஏப்ரல் 2025 பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,THE ENGINEER படக்குறிப்பு,பாதுகாப்பு கருதி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியுடன் பாம்பன் பாலம் வழியாக அனைத்து ரயில் சேவைகளும் மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டது உப்பு காற்றில் துருப்பிடிக்காமல் இருக்க நவீன வர்ணப்பூச்சு பாம்பன் பாலத்திற்கு அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிக்கு 2019 ஆண்டு ரயில்வே மானியக் கோரிக்கைகளின் போது ஒப்புதல் அளிக்கப்பட்டது. 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோதி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.545 கோடி மதிப்பில் பணிகள் துவங்கின. புதிய ரயில் பாலம் பாலம் 2078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் உயரமானது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது. அதிக துருப்பிடிக்கும் சூழலை கொண்ட பாம்பன் பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதால் துருப்பிடிக்காமல் இருக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துருப்பிடிக்காமல் இருக்க உதவும் வர்ணங்கள் பல அடுக்குகளாக பூசப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் 200 மைக்ரான் துத்தநாக கலவை, அடுத்த அடுக்கில் 25 மைக்ரான் ஜெல்லி போன்ற எபோக்ஸி பூச்சு, கடைசி மேல் அடுக்கில் சிலிக்கான் ஆக்சிஜன் கலந்த சிந்தடிக் பாலிமர் பூச்சு செய்யப்பட்டது. "இவை பால அமைப்புகளை கடல் காற்றில் இருந்து துருப்பிடிக்காமல் 35 ஆண்டுகள் வரை பாதுகாக்கும்," என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டிரம்பின் வரி விதிப்பு இந்திய ஐடி துறையை பாதிக்குமா? ஆனந்த் ஸ்ரீநிவாசன் விளக்கம்5 ஏப்ரல் 2025 டிரம்பின் வரிப் போர் இந்தியாவில் உற்பத்தித் துறைக்கு வழங்கியுள்ள புதிய வாய்ப்புகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,THE ENGINEER படக்குறிப்பு,அதிக துருப்பிடிக்கும் சூழலை கொண்ட பாம்பன் பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதால் துருப்பிடிக்காமல் இருக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன புதிய பாலத்தின் கீழே கப்பலுக்கு எவ்வாறு வழி கிடைக்கும்? இந்தியாவிலேயே முதன்முறையாக, பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்ல செங்குத்து தூக்கு பாலம் இங்கே கட்டப்பட்டுள்ளது. பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலம் இரும்பாலானது, 400 டன் எடை கொண்டது. அத்துடன் மனித உழைப்பைக் கொண்டு இயங்கக் கூடியது. ஆனால் புதிய ரயில் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்திற்கு விமானத் தொழில் நுட்பத்தில் பயன்படக் கூடிய அலுமினிய உலோகக் கலவை (Aluminium alloy) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 650 டன் ஆகும். இந்த செங்குத்து தூக்கு பாலத்தின் உயரம் 33 மீட்டர், நீளம் 77 மீட்டர் ஆகும். மனித உழைப்பின்றி மோட்டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இவற்றை இயக்க இயலும். இதன் மூலம் 5.3 நிமிடத்தில் பாலத்தை மேலே தூக்கி திறந்து விட முடியும். கப்பல் கடந்து செல்வதற்கு வசதியாக பாலத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தலாம். இது சாலை பால உயரத்திற்கு இணையானது. பாலத்தின் இருபுறமும் உள்ள கோபுரங்களில் ஹைட்ராலிக் லிப்ட்டை இயக்கக்கூடிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு கணினி மூலம் 650 டன் எடை கொண்ட செங்குத்து தூக்கு பாலம் மேலே தூக்கி கீழே இறங்கி இயக்கப்படுகிறது. செங்குத்து தூக்கு பாலம் சென்சார்கள் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கப்பல் பாம்பன் பாலம் வழியாக கடந்து செல்லும் போது மட்டுமே இந்த செங்குத்து தூக்கு பாலம் திறக்கப்படும். செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகில் இரண்டு மாடி கட்டடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்கான அறை கட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,THE ENGINEER படக்குறிப்பு,மனித உழைப்பின்றி மோட்டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிப்ட் மூலம் செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்க முடியும் 28 மாதங்களுக்கு பின் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையம் வரையில் 70 கி.மீ வேகத்திலும், இடையே உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 50 கி.மீ வேகத்திலும் ரயிலை இயக்கலாம். அதே சமயம், பாம்பன் கடல் பகுதியில் 58 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் புதிய ரயில் பாலத்தில் ரயில் இயக்க கூடாது என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்த பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்ரல் 6-ஆம் தேதி ராம நவமி நாளன்று மோதி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த செந்தில். "ராமேஸ்வரம் மிக முக்கிய சுற்றுலா தலம் என்பதால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளூர் பொது வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் நிலையில், ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் வெளி மாநிலங்களில் இருந்து இங்கே வரும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது. அதேபோல் மீனவர்கள் தங்கள் பிடிக்கும் மீன்களை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் சரக்கு போக்குவரத்திற்காக ரயிலை பயன்படுத்தி வந்த நிலையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது 28 மாதங்களுக்குப் பிறகு பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்ககூடும்," என்றார். மனிதர்களே இல்லை: பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுகளுக்கும் வரி விதித்த டிரம்ப்4 ஏப்ரல் 2025 காஞ்சிபுரத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக 7 மாதங்களாக போராட்டம் நடப்பது ஏன்?3 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,THE ENGINEER படக்குறிப்பு,மீனவர்கள் தங்கள் பிடிக்கும் மீன்களை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் சரக்கு போக்குவரத்திற்காக ரயிலை பயன்படுத்தி வந்தனர். பழைய தூக்குப் பாலம் அகற்றப்படுமா? பழைய பாம்பன் பாலம் நூற்றாண்டு காலப் பழமையானது என்பதுடன், தற்போது அதன் உறுதித் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் கப்பல்கள், பெரிய படகுகளுக்காக புதிய ரயில் பாலம் தூக்கப்படும் போதும் பழைய பாலத்தை திறப்பதும் பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பிபிசி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங், "பாம்பன் பழைய இரும்பு தூக்கு பாலம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் தூக்கு பாலத்தை பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஐ.ஐ.டி. சென்னை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆய்வின் முடிவில் பாம்பன் பழைய தூக்கு பாலத்தை என்ன செய்யலாம் என்பது குறித்து தெற்கு ரயில்வே முடிவு செய்யும்," என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wxey00z93o
  15. ஜனாதிபதி அநுரகுமார - இந்திய பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சு ஆரம்பம் 05 APR, 2025 | 11:39 AM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டது. காலை 11.00 மணிக்கு இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211198
  16. பட மூலாதாரம்,X/NARENDRA MODI கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவரது இந்த பயணத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சிக்கலான இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? மோதிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோதி, அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஏப்ரல் 4 இரவு சென்றார். 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மோதி, அந்நாட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். இது அவர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள நான்காவது பயணமாகும். அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இலங்கைக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோதிதான். ஆகவே, அவரது இந்தப் பயணம் இருதரப்பாலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் கவனிக்கப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது சில திட்டங்களைத் துவக்கி வைக்கும் மோதி, இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார். இருந்தபோதும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து பேசப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1247 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 6 ஆண்டுகளில் 1,200 தமிழக மீனவர்கள் கைது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கையின் கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கொடுத்த தகவல்களின்படி, 2020 முதல் 2025 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் 1247 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில்தான் அதிகபட்சமாக 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையுடன் கடலில் நடந்த மோதல்களில் 7 பேர் வரை இறந்துபோயுள்ளனர். 2025ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகும் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மார்ச் ஐந்தாம் தேதி கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்தது. மார்ச் 26ஆம் தேதி 11 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் புகார் இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்து மீன் பிடிக்கும் விவகாரம் நீண்ட காலமாகவே நீடிக்கும் ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வட இலங்கையின் கடற்கரைக்கு அருகில் சென்று, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதாக வட இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலை போன்றவற்றைப் பயன்படுத்துவதாக, இலங்கை வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரத்திற்கு தீர்வு காண நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான இலங்கை மீனவர் பிரதிநிதிகள், தமிழக மீனவர் பிரதிநிதிகள், இந்திய அரசு அதிகாரிகள் இடையே 2014 - 2015 வாக்கில் முத்தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இருந்தபோதும் இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழக மீன்வர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலையைப் பயன்படுத்துவதாக, இலங்கை வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர் விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 இந்நிலையில், இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடரச் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஜஸ்டின், சகாயம், ஆல்வின், ஜெர்மனியஸ் ஆகிய 5 பேர் மார்ச் 25ஆம் தேதி இலங்கை சென்றனர். மார்ச் 26ஆம் தேதி வவுனியாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பிரதமர் மோதி இலங்கைக்கு வரும்போது, அவரிடம் இது குறித்துப் பேச தங்களுடைய ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்போவதாகவும், அதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்படலாம் என்றும் இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதற்குப் பிறகு, இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை நேரில் சந்தித்து பல ஆண்டுகளாக நடத்தப்படாத இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டுமென தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பிறகு இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் மீனவர்களைச் சந்தித்துவிட்டு அவர்கள் தமிழகம் திரும்பினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மார்ச் 26ஆம் தேதி வவுனியாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது மனிதனை போல பேசி பிரமிக்க வைக்கும் காகம் - வியப்பூட்டும் காணொளி4 ஏப்ரல் 2025 தமிழர் மரபில் தண்ணீர் பந்தல்கள் - பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தாகம் தீர்த்த வரலாறு3 ஏப்ரல் 2025 தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பு என்ன? இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மீனவர் பிரதிநிதி ஜேசுராஜா, கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசை மோதி வலியுறுத்த வேண்டும். அதேபோல, இலங்கை கடற்படை 2018ஆம் ஆண்டு முதல் சிறைபிடித்து வைத்துள்ள 200க்கும் மேற்பட்ட நல்ல நிலையில் உள்ள மீன்பிடி படகுகளை மீட்பதற்கும் இலங்கை அரசிடம் பேச வேண்டும். மேலும், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்தின்படி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர இலங்கை ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார். இலங்கை அமைச்சர் கூறியது என்ன? ஆனால், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடிப்பதை நிறுத்துவது தான் ஒரே தீர்வு என்கிறார் இலங்கையில் கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக பிபிசியிடம் பேசியிருந்த அவர், "இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. கச்சத்தீவுக்குக் கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது. அவர்கள் எங்களுடைய கரையையும் கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள்," என்கிறார் அவர். கச்சத்தீவு, தமிழ்நாடு - இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு என்ன? பிபிசிக்கு இலங்கை அமைச்சர் பேட்டி பிரதமர் மோதி, அநுர குமார சந்திப்பு இந்தியா, இலங்கை உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழக மீனவர்கள் கைதுக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கும் தொடர்பா? இவர்கள் கூறுவது என்ன? பிரதமர் மோதி, அநுர குமார சந்திப்பு இந்தியா, இலங்கை உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் ஆழ்கடல் மீன்பிடிப்பு தீர்வாகுமா? தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் செல்வதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு என்கிறார் சென்னையைச் சேர்ந்த, சர்வதேச விவகாரங்களில் நிபுணரான என். சத்தியமூர்த்தி. "கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைதுசெய்ததாகவும் திசை மாறி இலங்கை கடற்பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் சொல்வதெல்லாம் சரியானவையல்ல. நம்முடைய மீனவர்கள் இலங்கை கடற்கரைக்கு 2-3 கி.மீ. அருகில் வரை செல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் மீன் வகைகள், நம்முடைய கடற்பரப்பில் இல்லை. அவற்றைப் பிடிப்பதற்காகவே அவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குச் செல்கிறார்கள். அதனால், இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு, ஆழ்கடல் மீன் பிடிப்புத்தான்" என்கிறார் அவர். இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக பெரிய படகுகளை வாங்கியளிக்கும் திட்டத்தை 2017-இல் இந்திய அரசு துவங்கியது. இதில் பத்து சதவீத நிதியை மீனவர்கள் கொடுத்தால் போதும். 20 சதவீதம் கடனாகவும் மீதமுள்ள தொகை மானியமாகவும் வழங்கப்படும். "ஆனால், இந்தத் திட்டம் மெதுவாக செயல்படுத்தப்படுகிறது. அதனை விரைவுபடுத்த வேண்டும். தற்போதைய பயணத்தின் போது பிரதமர் மோதி இது குறித்தும் இலங்கைத் தரப்பிடம் பேசுவார். கச்சத்தீவு தொடர்பாக அறிவிப்பு ஏதும் வருவது கடினம்" என்கிறார் என். சத்தியமூர்த்தி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg9mn7dy3vo
  17. 05 APR, 2025 | 10:54 AM இந்திய கடற்படைக் கப்பலான 'INS SAHYADRI' உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. https://www.virakesari.lk/article/211200
  18. இந்திய பிரதமரிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக முன்வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து மகஜர் 05 APR, 2025 | 10:15 AM இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வெள்ளிக்கிழமை (04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத் துவங்களிடமும் அக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் பகிரங்க கோரிக்கை யை முன் வைக்கின்றோம். இது வரை காலமும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறவில்லை. இதற்கு பிரதான காரணம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வு குறித்த ஏகோபித்த உடன்பாடு காணப்படாமையும் ஜக்கியமின்மையுமே காரணமாகும். இந் நிலையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் இந்திய பிரதமரை நேரடியாக சந்திப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வாக அமையுமென தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வலியுறுத்துகின்றார்கள். இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதனை மறுதலிக்கமுடியாது. எனவே தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் ஏகோபித்த குரலில் ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். இதுவே, தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு செய்கின்ற அரசியல் கடமையாகும். அவ்வகையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் இந்திய பிரதமரிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கையானது, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதாகும். என குறிப்பிடத் தக்கது. https://www.virakesari.lk/article/211194
  19. இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு 05 APR, 2025 | 11:11 AM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று சனிக்கிழமை (05) முற்பகல் நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குதிரைப்படையை முன்னிலையாக கொண்டு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய பிரதமர் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரமுகர்களுக்கான கௌவரத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் அரச நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/211195
  20. இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமுலாக்க இடமளிக்க மாட்டோம் - சோசலிச முன்னணி 04 APR, 2025 | 04:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இந்தியாவுடன் அரசாங்கம் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கும், அமைச்சரவைக்கும் தெரியாது, மக்களுக்கு அறிவுறுத்தாமல் திருட்டுத்தனமாக கைச்சாத்திடப்பட்டால் அதனொரு உறுப்புரையையேனும் செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை. அதற்கு எதிராக பாரிய மக்கள் அணியை திறட்டுவோமென முன்னிலை சோசலிய கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். இந்தியாவுடன அரசாங்கம் செய்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்து முன்னிலை சோசலிச கட்சி ஜனாதிபதி செயலகத்துக்கு மகஜர் ஒன்றை கையளித்தது. அதன் பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், 1971ஆம் ஆண்டு ஏப்ரல் போராட்டத்தின் 54 ஆவது ஆண்டை கொண்டாடும் 2025 ஏப்ரல் 5ஆம் திகதி அன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அரசாங்கம் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் என்ன என இதுவரை நாட்டிற்கு வெளிப்படுத்தவில்லை. மக்களுக்கு மாத்திரமல்ல பாராளுமன்றத்துக்கும் அறிவிக்கவில்லை. நாங்கள் அறிந்த மட்டத்தில் அமைச்சரவைக்கும் ஒப்பந்தத்தின் நகல் பத்திரம் காட்டப்படவில்லை. அமைச்சரவை அமைச்சர்கள் எங்களுக்கு பொய் சொல்கிறார்கள் அல்லது இந்த ஒப்பந்தம் தொடர்பில் யாருக்கும் தெரியாது. மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுக்கும்போது, குறிப்பாக பல தலைமுறையினரை பாதிக்கும் முடிவுகளை எடுக்கும்போது மக்களிடம் கேட்க வேண்டும். இவ்வாறான ஒப்பந்தங்கள் சமூகமயப்படுத்தி கருத்தாடல் மேற்கொண்டு மக்கள் அபிப்பிராயத்துடன் அனுமதித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒப்பந்தத்தின் பிரதியை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு எதுவும் இல்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்த ஒப்பந்தத்தை பார்க்கக்கூட கேட்பதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு. ஐக்கிய தேசியக் கட்சி இந்தியாவுக்கு எதிராக வாய் திறப்பதில்லை. பாராளுமன்றத்துக்குள் அரசாங்கமும் எதிர்க் கட்சியும் இணைந்தே மக்கள் விரோத செயலை மேற்கொள்கின்றன. அரசாங்கம் அரசியல் கலாசாரத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து அதனை முற்றாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுப்படுத்தியுள்ளது. அரசியல் கலாசாரம் என்பது இரண்டு வேளை பசியுடன் இருப்பதும் பஸ் மற்றும் புகையிரத வண்டியில் செல்வது மாத்திரமல்ல. பாரதூரமான அரசியல் தீர்வுகளை மக்களுடன் கலந்துரையாடி மேற்கொள்வதும் சிறந்த அரசியல் கலாசாரத்துக்கு உரியதாகும். இன்றாகும்போது மக்கள் விடுதலை முன்னணி அரசியல் கலாசாரத்தை மாத்திரமல்ல அரசியலையும் குழப்பிக்கொண்டுள்ளது. அரசாங்கம் இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் விளையாட்டுவிடயமல்ல . இந்தியா யுத்த ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு. ஆசியாவின் நேட்டோ என்று அறிமுகப்படுத்தப்படும் ‘இக்வட்’ அமைப்பு, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்து அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக இந்தியா அமெரிக்காவுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட தீர்மானித்திருக்கிறது. ஏகாதிபத்தியவாதிகள், உலக வல்லரசு, பிராந்திய வல்லரசு நாடுகளுக்கு முன்னால் மண்டியிட்டு அழிவுகரமான ஏகாதிபத்திய யுத்தம் ஒன்றில் மரணிக்கும் தலையெழுத்தை இலங்கையர்களின் நெற்றியில் குத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது. இது முற்றிலும் காட்டிக்கொடுப்பாகும். இந்த காட்டிக்கொடுப்புக்கு எதிராக மக்கள் சக்தி ஒன்றை கட்டியெழுப்புவோம். இந்தியாவுடன் அரசாங்கம் கைச்சாத்திட இருக்கும் ஒப்பந்தங்களின் பிரதிகளை நாங்கள் கேட்டிருக்கிறோம். அதனை மக்களுக்கு காட்டாமல் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டால், அதன் ஒரு உறுப்புரையைக்கூட செயற்படுத்த முடியாத சக்தி ஒன்றை கட்டியெழுப்புவோம் என்றார். https://www.virakesari.lk/article/211148
  21. 05 APR, 2025 | 06:42 AM சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ, மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், தென் மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நீர்கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/211188
  22. வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை - இந்தியப் பிரதமர் மோடி நெகிழ்ச்சி! Published By: PRIYATHARSHAN 05 APR, 2025 | 07:47 AM உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (4) இரவு இலங்கை வந்தடைந்தார். இந்நிலையில், அவர் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் பெரும் வரவேற்பளித்தனர். இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் பொம்மலாட்டத்தினை பார்வையிட்ட இந்தியப் பிரதமர் மோடி அது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், “சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பிரதி பலித்த பொம்மலாட்டதினை இங்கு காண முடிந்தது. நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட கழகத்தினருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் ஆற்றலுக்காக எனது பாராட்டுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாஜ் சமுத்திர ஹோட்டலில் இசை தொடர்பான நூல்கள், இந்தியக் கதைகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, இது குறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், “சமூக வரவேற்பின்போது மகாபுருஷர் ஶ்ரீமந்த சங்கரதேவ், ஸ்ரீ ஸ்ரீ மாதப்தேவ் ஆகியோரின் சிந்தனைகளின் மொழிபெயர்ப்புகள் இசை தொடர்பான நூல்கள், இந்தியக் கதைகள் மற்றும் பாளி மொழியிலான கீத கோவிந்தத்தின் சில அத்தியாயங்கள் ஆகியவற்றையும் பார்வையிட முடிந்தது. இந்த கலாசார பிணைப்புகள் எப்போதும் செழிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211187
  23. 04 APR, 2025 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் உள்ளடங்கங்கள் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை வெளிப்படுத்தாத வரையில் சாதாரண சந்தேகம் தோற்றம் பெறும். இலங்கை பிளவுபடாத வெளிவிவார கொள்கையை கடைப்பிக்கின்ற நிலையில் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நாட்டுடன் மாத்திரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது நாட்டின் வெளிவிவகார கொள்கையை கேள்விக்குள்ளாக்கும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு தான் அனைத்து நாடுகளுடன் செயற்பட வேண்டும். குறித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இராணுவ பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டசபையில் இலங்கையின் கச்சத்தீவை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இந்தியாவுடனான பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிகாலத்தில் தான் விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/211170
  24. லக்னௌ த்ரில் வெற்றி: ஹர்தித் சாதனை வீண் - திலக் வர்மாவை 'ரிட்டயர்ட் அவுட்' செய்த முடிவால் சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 ஏப்ரல் 2025, 02:34 GMT லக்னெளவில் ஏப்ரல் 4 அன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் மட்டுமே சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய லக்னெள அணி இதுவரை 6 ஆட்டங்களில் வென்று 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. லக்னெள அணி கேப்டன் ரிஷப் பந்த் தனது அணிக்கு 2-வது வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். லக்னெள அணி 4 போட்டிகளில் 2 வெற்றிகள் என 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது, மும்பை அணி 4 போட்டிகளில் 3 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 7வது இடத்தில் இருக்கிறது. திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெள அதிரடித் தொடக்கம் லக்னெள அணிக்கு மிட்ஷெல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்தனர். மார்ஷ் 27 பந்துகளில் அரைசதம் அடித்து, 60 ரன்களில் புத்தூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர். இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கும் பூரன் (12) ரன்னில் பாண்டியா பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். ரிஷப் பந்த் (2) 4வது முறையாக சொற்ப ரன்னில் ஹர்திக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மார்க்ரம் நிதானமாக ஆடி 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆயுஷ் பதோனி (30), மில்லர் (27) கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். லக்னெள அணிக்கு தொடக்க வீரர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளம் தான் பெரிய ஸ்கோருக்குச் செல்ல உதவியது. ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லாத குறையைத் தீர்த்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாலும் அவருக்கு ஈடு கொடுத்து மற்ற பந்துவீச்சாளர்கள் பந்து வீசவில்லை. தீபக் சஹர், அஸ்வானி குமார், சான்ட்னர் ஆகியோர் ஓவருக்கு 11 ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர். விக்னேஷ் புத்தூர் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி கட்டுக்கோப்பாக பந்துவீசினார். சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா?1 ஏப்ரல் 2025 சன்ரைசர்ஸ் கண்டெடுத்த முத்து: டெல்லியை மிரட்டிய 23 வயது இளம் வீரர் அனிகேத் வர்மா யார்?31 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பைக்கு டாப்ஆர்டர் ஏமாற்றம் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக வில் ஜேக்ஸ் சேர்க்கப்பட்டு ரிக்கிள்டனுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்கினார். ரிக்கிள்டன்(10), ஜேக்ஸ் (5) இருவருமே சொற்ப ரன்களில் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், நமன் திர் சேர்ந்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். இருவரும் வழக்கம் போல் அதிரடியாக ஆடியதால் விக்கெட்டுகளை இழந்தபோதும் மும்பை அணி பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது. நமன் திர் முதல் 9 பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி 30 ரன்கள் சேர்த்த இருவரும் அருமையான ஃபார்மில் இருந்தனர். 3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்திருந்தபோது, பார்ட்னர்ஷிப்பை திக்வேஷ் ராதி பிரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES திக்வேஷ் ராதி வீசிய 9-வது ஓவரில் நமன் திர் 46 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளீன போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார். ஆனால் சூர்யகுமார் தொடர்ந்து தனது இயல்பான ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்து 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால் மறுபுறம் திலக் வர்மா பேட்டிங்கில் தொடக்கத்தில் இருந்தே தடுமாறினார். பெரிய ஷாட்களுக்கு முயன்றும் அவரால் அடிக்க முடியவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 88 ரன்கள் சேர்த்தாலும், அதில் ஒரு சிக்ஸர் கூட இல்லை. சூர்யகுமர், திலக் வர்மா என பெரிய ஹிட்டர்கள் இருந்த போதிலும் சிக்ஸர் அடிக்க முடியாத அளவில்தான் லக்னெள பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். 4-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா, சூர்யகுமார் ஜோடி 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் ஹர்திக் பாண்டியா, திலக் வர்மாவால் வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்க முயன்றும் லக்னெள பந்துவீச்சு முன் தோல்வி அடைந்தனர். மும்பை மீண்டும் தோல்வி: ரோஹித்திடம் ஹர்திக் நடந்து கொண்ட விதம் பற்றி ரசிகர்கள் கூறியது என்ன?30 மார்ச் 2025 ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியை கோட்டைவிட்ட மும்பை கடைசி 4 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. மும்பை அணி வெற்றிக்கு 36% வாய்ப்பு இருந்ததாகக் கணிக்கப்பட்டது. சூர்யகுமார், திலக் வர்மா களத்தில் இருந்தனர். ஹர்திக் பாண்டியா களத்துக்கு வரவேண்டியிருந்தது. 3 பெரிய பிக் ஹிட்டர்கள் இருந்தும் வெற்றியை மும்பை அணியால் வசப்படுத்த முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் டெத் ஓவர்களை வீசிய ஆவேஷ் கான், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் ராதி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு தான். 17-வது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய பந்தில் சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி அடிக்க முற்பட்டு 67 ரன்னில் அப்துல் சமதிடம் டீப் ஸ்குயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார். ஷர்துல் வீசிய 18-வது ஓவரில் திலக் வர்மா ரன்சேர்க்கத் திணறினார். வைடு யார்கர்களை பெரிய ஷாட்களுக்கு திலக் வர்மாவால் மாற்ற முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் திக்வேஷ் ராதி பந்துவீச்சிலும் பெரிதாக ரன்கள் குவிக்க முடியாமல் மும்பைக்கு நெருக்கடி அதிகரித்தது. கடைசி 7 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ஃபார்மில் இல்லாத திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் ஆகக் கூறி சான்ட்னரை கொண்டு வந்தார் பாண்டியா. திலக் வர்மா சிறந்த ஹிட்டர். அவரை ரிட்டயர்ட் அவுட் ஆகக் கூறி, பேட்டர் இல்லாத சான்ட்னரை கொண்டு வந்தது எந்த விதத்தில் வெற்றியைப் பெற்றுத் தரும். கடைசி நேரத்தில் பெரிய ஷாட்களை ஆடும் திறமை திலக் வர்மாவுக்கு இருக்கும்போது, சான்ட்னரை கொண்டு வந்தது ஹர்திக்கின் கேப்டன்ஷிப் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக வர்ணனையாளர்கள் விமர்சித்தனர். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய ஓவரில் ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்தடுத்து யார்கர்களாக ஆவேஷ்கான் வீச 3 ரன்களை மட்டுமே ஹர்திக்கால் எடுக்க முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை கைக்கு கிடைத்த வெற்றியை லக்னெளவின் டெத் பந்துவீச்சாளர்களிடம் கோட்டைவிட்டது என்றுதான் கூற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியின் நாயகன் ராதி லக்னெள அணியின் வெற்றிக்கு நடுப்பகுதியில் பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதி முக்கியக் காரணம். 4 ஓவர்கள் வீசிய திக்வேஷ் 21 ரன்கள் கொடுத்து முக்கியமான நமன்திர் விக்கெட்டை சாய்த்தார். ஒரு பவுண்டரி கூட தனது ஓவரில் பேட்டர்களால் அடிக்க விடாமல் ராதி பந்துவீசினார். நடுப்பகுதியில் ராதி வீசிய 4 ஓவர்கள் தான் மும்பை அணியின் வெற்றி ஓட்டத்துக்கு பெரிய பிரேக் போட்டது. இவரின் பந்துவீச்சு ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சூர்யகுமார், நமன் திர் என யாராலும் பெரிய ஷாட்களுக்கு ஆடமுடியாத அளவுக்கு மிககடினமான லைன் லென்த்தில் இருந்தது. லக்னெள அணி 200 ரன்கள் வரை சேர்க்க மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம் ஆகியோரின் அரைசதம், வெற்றிக்கு காரணமாகக் கூறப்பட்டாலும், திக்வேஷ் ராதி பந்துவீச்சுதான் ஆட்டத்தின் கருப்புக்குதிரை. ஏனென்றால், திக்வேஷ் தவிர லக்னெள அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் சராசரியாக ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஆதலால், ராதி இல்லாமல் இருந்தால் நிச்சயம் வெற்றி மும்பையின் பக்கம் சென்றிருக்கும். சிஎஸ்கே ஆட்டங்கள் எப்போது? கேப்டன்கள், புதிய விதிகள் உள்பட ஐபிஎல் பற்றிய முழு விவரம்22 மார்ச் 2025 'இந்திய கிரிக்கெட் பிதாமகன்' என்று இவரை அழைப்பது ஏன்? பன்முக ஆளுமையின் ஆச்சர்யம் தரும் வாழ்க்கை18 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்திக் பாண்டியா புதிய சாதனை ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் அவரது சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன்பு, 2023-ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 16 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் கேப்டன் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். அந்த வகையில், ஆர்சிபி கேப்டனாக இருந்த போது அனில் கும்ப்ளே 4 விக்கெட் வீழ்த்தியிருந்ததை முந்தி, ஹர்திக் புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக ஷேன் வார்னே மட்டுமே ஹர்திக்கை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய வார்னே 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்ட போது 30 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES "நானே பொறுப்பு" மும்பையின் தோல்வி குறித்தும், திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் குறித்தும் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் " தோல்வி அடையும்போது விரக்தியாக இருக்கும். நேர்மையாகக் கூறினால் நாங்கள் 10 முதல் 12 ரன்களை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். பீல்டிங்கில் சரியாகச் செயல்படவில்லை, ரன்களை கோட்டைவிட்டோம். நான் பந்துவீச்சை அனுபவித்து வீசுவேன். எனக்கு பந்துவீச்சில் அணியில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்பதால், நானே பொறுப்பேற்க வேண்டியதிருந்தது. நான் விக்கெட் எடுக்க முயவில்லை. பேட்டர்களை தவறு செய்ய வைக்க முயன்றேன். விக்கெட் கிடைத்தது. பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அணியாகத் தோல்வி அடைந்தோம். இந்த தோல்விக்கு நானே பொறுப்பு. திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் ஆக்கியது என்பது கிரிக்கெட்டில் இயல்பாக நடப்பதுதான். எங்களுக்கு பெரிய ஷாட்கள் தேவைப்பட்டன, ஆனால் அதை அடிக்கும் நிலையில் திலக் இல்லை. கிரிக்கெட்டில் நமக்கு நல்ல நாட்கள் வரும், மோசமான நாட்களும் வரும். திலக் பெரிய ஷாட்களுக்கு முயன்றார் பேட்டில் மீட் ஆகவில்லை. ஆதலால் ரிட்யர்ட் அவுட் ஆகக் கூறினோம். ஸ்மார்ட்டாக பந்துவீச வேண்டும், பேட்டிங்கில் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் இதுதான் எனக்குப் பிடிக்கும். இது பெரிய தொடர், இன்னும் 2 வெற்றிகள்தான் ரேஸில் தொடர்ந்து ஓட வைக்க உற்சாகம் அளிக்கும்," எனத் தெரிவித்தார். ஹர்திக் பாண்டியா முடிவால் சர்ச்சை திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறச் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மட்டுமல்லாது, முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களும் கூட ஹர்திக் பாண்டியா முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். "சாண்ட்னரை களமிறக்க திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் செய்வதா? குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஹர்திக் இதேபோல் ரன் எடுக்க திணறிய போது ரிட்டயர்ட் முறையில் வெளியேறினாரா? திலக் வர்மாவுக்கு மட்டும் ஏன்?" என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்டாக இருந்த ஹனுமான் விஹாரி கேள்வி எழுப்பியுள்ளார். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு "திலக்கை விட சாண்ட்னர் மிகப்பெரிய ஷாட்களை அடிக்கக் கூடியவரா? பொல்லார்ட் போன்ற மிகப்பெரிய ஹிட்டரை களமிறக்கவே இந்த முடிவு என்றால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த முடிவு ஏற்கக் கூடியது அல்ல" என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ராபின் சிங், இர்பான் பதான் போன்ற இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் திலக் வர்மாவை வெளியேற்றும் முடிவை விமர்சித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20n979y3ro
  25. 11 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை 05 APR, 2025 | 09:09 AM யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகைதந்துள்ள நிலையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211189

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.