Everything posted by ஏராளன்
-
தேர்தலின் பின்னரே கூட்டணி தொடர்பில் தீர்மானம் - தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன்
13 MAR, 2025 | 11:15 AM தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (12) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் எந்தக் கட்சியுடன் இணைவது என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209068
-
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி!
13 MAR, 2025 | 11:27 AM உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (13) யாழ்ப்பாணத்தில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. இதன்போது விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான நடைபவனி காங்கேசன்துறை வீதியூடாக சென்று, பின்னர் வைத்தியசாலை வீதியூடாக எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையை அடைந்தது. பின்னர் வைத்தியசாலையில் விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றது. குளுக்கோமா என்பது கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோயினை ஆரம்பத்தில் இனங்கண்டு சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் நோயிலிருந்து குணமடைய முடியும். எனவே, இந்த நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடைபவனி அமைந்திருந்தது. லயன்ஸ் கழகம் மற்றும் எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/209074
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது 13 MAR, 2025 | 10:55 AM அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மற்றைய சந்தேக நபர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் வைத்தியரிடமிருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 37 வயதுடைய பெண்ணொருவரும் 27 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய பிரதான சந்தேக நபரை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (13) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/209069
-
ரேபிஸ் நோய் முற்றிய நோயாளிகளை கையாளும் வழிமுறைகள் - மருத்துவர் விளக்கம்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தச் செய்தியில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. நாய்க் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி முற்றிய நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வட மாநிலத் தொழிலாளி ஒருவர், நோயின் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு, அவருடைய செயல்பாடுகள் குறித்த வீடியோ, வைரலாக பரவியுள்ள நிலையில், ரேபிஸ் முற்றிய நோயாளிகள் குறித்த அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது. அதேவேளையில், ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளைக் கையாள்வது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று காலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், சிகிச்சைக்காக வந்துள்ளார். தனது பெயர் ராம்சந்தர் (வயது 35) என்றும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தான் கோவை சித்ரா பகுதியில் தங்கி, கார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தன்னை தெருநாய் கடித்ததாகவும், அதற்கு எந்த சிகிச்சையும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளை வைத்திருக்கும் தனி வார்டில் (Isolation Ward) அவரை வைத்துள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு, ரத்தத்தால் தன்னுடைய உறவினரின் தொடர்பு எண்ணை எழுதி வைத்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அந்த நோயாளி நடந்து கொண்ட விதத்தை சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்துப் பலருக்கும் பகிர்ந்துள்ளனர். ரேபிஸ் நோய் தாக்கியவர்களின் இறுதி நிலை குறித்து, பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தக் காணொளி அமைந்துள்ளது. இதனால் ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளைக் கையாள்வது எப்படி என்பது குறித்த கேள்விகளும் பலரிடமும் எழுந்துள்ளன. இதுகுறித்த சந்தேகங்களுக்கு, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்தார். பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியது ஏன்?3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான்: கடத்தப்பட்ட ரயிலில் இருந்து 300 பயணிகள் மீட்பு, 33 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை4 மணி நேரங்களுக்கு முன்னர் நாய் கடித்துவிட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? படக்குறிப்பு,கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா நாய் கடித்த இடங்களை முதலில் நன்கு சோப்புப் போட்டு குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கழுவ வேண்டும். அதன் பிறகு தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்றால் அங்கு ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும். அந்தத் தடுப்பூசி, குறிப்பிட்ட கால இடைவெளியில் மொத்தம் 4 முறை போடப்படும். அதைச் சரியான தேதிகளில் செலுத்திக் கொள்வது அவசியம். அதுபோக, மருத்துவர் கூறும் சில வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியம். ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட வீட்டு நாய்கள் கடித்தால் சாதாரண தடுப்பூசி (TT-Tetanus Toxoid) போட்டுக் கொண்டால் போதுமா? தன்னிச்சையாக இப்படி முடிவெடுப்பது தவறு. அதனால் வீட்டு நாய்க்கும் ரேபிஸ் தாக்குதல் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது மிக முக்கியம். அப்படி வீட்டு நாய்க்கு ரேபிஸ் தாக்குதல் இல்லை என்பதை உறுதி செய்யும் பட்சத்தில், ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசி தேவைப்படாது. ஆனால், அப்படி உறுதி செய்ய முடியாத பட்சத்தில் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதே சரியான முடிவாக இருக்கும். தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்? சென்னையில் 1.8 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடக்கம் - எதற்காக தெரியுமா? ரேபிஸ் தடுப்பூசி ஏன் அவசியம்? நீரிழிவு, உடல் பருமன் மருந்துகளில் புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கன் பல்லியின் விஷம் ஏனெனில், ஒவ்வொரு நாய்க்கும் அதன் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையின் (Antibody level) அளவைப் பொருத்து, ரேபிஸ் தடுப்பூசி செயலாற்றும். அது குறைவாக இருக்கும்பட்சத்தில், ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், வேறு ஏதாவது நாயிடம் இருந்து அதற்கு அந்த நோய் தாக்க வாய்ப்புண்டு. அதேபோன்று போடப்படும் ரேபிஸ் தடுப்பூசியும் தரமுடையதாக இருக்க வேண்டும். ரேபிஸ் நோய் தாக்கியும் வீட்டு நாய்களிடம் அது வெளிப்படாமல் இருக்கலாம். அத்தகைய நேரங்களில் வீட்டு நாய்கள் கடிக்கின்ற நபருக்கும் ரேபிஸ் தாக்கும் அபாயம் அதிகமிருக்கிறது. எனவே, நாய்க்கடியால் அச்சப்படவும் கூடாது; அதே நேரத்தில் அசட்டையாகவும் இருக்கக்கூடாது. ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆரோக்கியமான வீட்டு நாய்கள் கடித்தால் மட்டுமே, கடிபட்டவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பலூச் விடுதலை ராணுவம்: பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்தி மிரட்டும் இவர்கள் யார்?12 மார்ச் 2025 யுக்ரேன் போர்: 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஸெலன்ஸ்கி தரப்பு - ரஷ்யாவின் முடிவு என்ன?12 மார்ச் 2025 நாய்க்கடி காயம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES காயமான இடத்தை நன்கு கழுவிய பிறகு, அரசு மருத்துவமனைக்குச் சென்றால், காயம்பட்ட இடத்தை மேலும் நன்கு சுத்தம் செய்து, அந்த இடத்தைச் சுற்றிலும் Rabies immune globulin என்ற தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மருந்தின் வீரியம் சில ஆண்டுகள் வரையிலும் உடலில் தங்கியிருக்கும். இதைச் செலுத்தினால் மட்டுமே, நாயால் ஏற்பட்ட காயம் விரைவில் குணமாகும். நாய் கடித்துவிட்டால் எவ்வளவு நேரத்துக்குள் தடுப்பூசி போட வேண்டும்? குறிப்பிட்ட நேரத்துக்குள் போடாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்? ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படாத தெருநாய்கள் கடித்துவிட்டால் எந்த வகையிலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதைத் தாமதிக்கவே கூடாது. வழக்கமாக, 24 மணிநேரத்துக்குள் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருப்பது தவறு. நாய் கடித்த இடம், பாதிப்பின் அளவைப் (VIRAL LOAD) பொருத்து, ரேபிஸ் வைரஸ் மூளையைத் தாக்கும். அதை யாராலும் கணிக்க முடியாது என்பதால் எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட முடியுமோ அதற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்லது. சீக்கிரமாக தடுப்பூசி போடாவிட்டால், அதற்குள் ரேபிஸ் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாகிவிடும். ஒரு வேளை ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதன்பின் உயிரைக் காப்பாற்றவே இயலாது. மருத்துவப் பரிசோதனையில் ரேபிஸ் உறுதி செய்யப்பட்டுவிட்டால், அதன் பிறகு அந்த நோயாளியைத் தனிமைப்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. எம்.பி. தொகுதி மறுவரையறை: 7 மாநில முதல்வர்களை ஒன்று திரட்டும் ஸ்டாலின் முயற்சி தேசிய அளவில் தாக்கம் செலுத்துமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் பிஎம் ஸ்ரீ பள்ளி என்பது என்ன? தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுவிட்டு பின் நிராகரித்ததா? முழு பின்னணி12 மார்ச் 2025 ரேபிஸ் நோயின் இறுதிக் கட்டத்துக்கான அறிகுறிகள் என்ன? இதை ரேபிஸ் நோயின் நான்காம் நிலை என்பார்கள். இதுதான் நோயின் முற்றிய நிலை. அப்போது நோயாளிகளுக்கு காய்ச்சல், உடல் வலி ஏற்படும். தண்ணீரைக் கண்டால் கடுமையான அச்சம் ஏற்படும். நுரையீரல் செயலிழந்து விடும், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும். சிலர் கோமா நிலைக்குச் சென்றுவிடுவர். இந்த நிலைக்கு வந்துவிட்டால், அதிகபட்சமாக 4 அல்லது 5 நாட்களுக்குள் மரணம் ஏற்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கலாமா? அது மிகவும் ஆபத்தானது. ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களின் உடல் தன்மையும், செயல்பாடுகளும் மிகவும் விநோதமாகிவிடும். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மினால், அதிலும் அந்த வைரஸ் இருக்கும். அப்போது எதிரில் இருப்பவரின் வாய் அல்லது மூக்கு வழியாக உடலுக்குள் சென்றால் அவர்களுக்கும் ரேபிஸ் பரவ வாய்ப்புள்ளது. அதேபோல், நோயாளிகளைப் பராமரிப்பவருக்கு உடலில் ஏதும் காயம் இருந்து, அதன் வழியாக நோயாளியின் எச்சில் உடலுக்குள் சென்றாலும் இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆகையால், ரேபிஸ் நோயாளிகளை வீட்டிலேயே வைத்திருப்பது ஆபத்தானது. அவர்களை எங்கே எப்படி வைத்திருந்தாலும் உயிரைக் காப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், அவர்களை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிப்பதே சிறந்தது. முக்கிய குறிப்பு மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vyjvx70yyo
-
தமிழை அவமதித்தவரை மாலை அணிவித்து வணங்குகின்றனர் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியது ஏன்? பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியுள்ளார்" எனப் பேசினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இத்தகைய விமர்சனத்தைப் பெரியார் மீது வைத்திருக்கிறார். உண்மையிலேயே பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினாரா? தமிழ் மொழி குறித்த அவருடைய பார்வை என்ன? பெரியார் கூறியது என்ன? தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன். ஆனால், அதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர். "இதிகாசங்கள், புராணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ் மொழியில் சாதி, மதத்தைப் பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் இருப்பதை பெரியார் பல சந்தர்ப்பங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். மாறாக, மனித வளர்ச்சிக்கும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கும் தமிழில் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அந்த அர்த்தத்தில்தான் காட்டுமிராண்டித்தனமான விஷயங்கள் தமிழ் மொழியில் இருப்பதாக பெரியார் கூறினார்" என்கிறார் கலி. பூங்குன்றன். பெரியாரின் நோக்கம், தமிழ் மொழியைக் குறை கூறுவதாக அல்லாமல், விஞ்ஞான ரீதியாக தமிழ் மொழி சீர்திருத்தம் அடைய வேண்டும் என்பதே இதன் பொருள் எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர். இருப்பினும், மேடைகளில் 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் பிரசாரம் செய்ததில்லை என்றும் ஓரிரு சமயங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றன, பெரியாரிய இயக்கங்கள். தாய் மொழி என்பதற்காகவே அதிலுள்ள பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டக் கூடாது என்று அர்த்தம் இல்லை என்பதே பெரியாரின் வாதமாக இருந்ததாக பூங்குன்றன் கூறுகிறார். மேலும், தமிழ் மொழியின் பழம்பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிராமல், புதுமையை நோக்கி நவீனத்துடன் மொழி பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே பெரியார் ஒரு குறையாக இதைக் கூறாமல், ஓர் அக்கறையின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டதாக, திராவிட இயக்கத்தினர் கூறுகின்றனர். இளையராஜாவின் சிம்ஃபொனி வெளியீடு எப்போது? நேரில் கண்டு பரவசமடைந்த ரசிகர்கள் எதிர்பார்ப்பு12 மார்ச் 2025 '100 முறைகூட மன்னிப்பு கேட்கத் தயார்' - பி.எம்.ஶ்ரீ பள்ளி விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் கூறுவது என்ன?12 மார்ச் 2025 தமிழ் மொழி குறித்த பெரியாரின் பார்வை பெரியாரை பொறுத்தவரையில் தனக்கு எவ்விதமான பற்றும் இல்லை என்றே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். "எவனொருவன் மனித சமுதாயத்துக்காகத் தொண்டாற்ற வருகிறானோ அவனுக்கு நாட்டுப் பற்று, சாதிப் பற்று, மொழிப் பற்று உள்ளிட்ட எவ்விதப் பற்றும் இருக்கக் கூடாது," என்று அவர் கூறியிருக்கிறார். "மொழி என்பது போர்க்கருவி போல, போர்க் கருவிகளில் மாறுதல் ஏற்பட்டதைப் போல், மொழியிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்" என்பதே மொழி குறித்த பெரியாரின் பார்வை என்று, 'தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?' என்ற தனது புத்தகத்தில் விளக்குகிறார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. "தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கு முக்கியக் காரணம், மதச்சார்புடையோரின் கையில் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான்" எனப் பெரியார் கூறியுள்ளதாக, அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான 'மொழி - எழுத்து' நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி. தொகுதி மறுவரையறை: 7 மாநில முதல்வர்களை ஒன்று திரட்டும் ஸ்டாலின் முயற்சி தேசிய அளவில் தாக்கம் செலுத்துமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் பிஎம் ஸ்ரீ பள்ளி என்பது என்ன? தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுவிட்டு பின் நிராகரித்ததா? முழு பின்னணி12 மார்ச் 2025 தமிழ் மொழி குறித்த தனது கருத்துகளை 'விடுதலை' நாளிதழில் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார் பெரியார். அவற்றைத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கி.வீரமணி. 1970ஆம் ஆண்டு, டிசம்பர் 1 விடுதலை நாளிதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளவை: ''தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி, ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு எதுவும் இல்லை.'' ''நான் வீட்டிலும், வெளியிலும் பேசுவது தமிழ், படிப்பது தமிழ், எழுதுவதும் தமிழ், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகிறது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகையால், தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாகக் கூற வேண்டியதாகிறது." பெரியாருடன் முரண்பட்ட திமுக அவரது சித்தாத்தங்களை ஆதரிப்பது ஏன்? 1967 தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தது? காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி? பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா? பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர் பெரியார் தமிழுக்காக என்ன செய்தார்? படக்குறிப்பு,பெரியாரின் மொழி குறித்த பார்வையைத் தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார் கி.வீரமணி "பெரியார் தமிழுக்கான எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். 1930களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை பெரியார் முன்னின்று நடத்தினார். அப்போதுதான், தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழியில் மறுமலர்ச்சி வருகிறது. அந்தக் காலகட்டதில் தமிழில் பல வடமொழி வார்த்தைகள் கலந்திருந்தன. அதையெல்லாம் மாற்றி, தமிழ் வார்த்தைகளை அன்றாடம் உபயோகிக்குமாறு செய்தார்," என்று பெரியார் தமிழ் மொழிக்காகச் செய்துள்ளவற்றைப் பட்டியலிட்டார் கலி. பூங்குன்றன். மேலும், தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை ஊக்குவித்தார். ஊர்களின் பெயர்களில் சமஸ்கிருத ஊடுருவல் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியதாகவும், கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக்கூடாதா என்று பெரியார் கேள்வியெழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். பலூச் விடுதலை ராணுவம்: பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்தி மிரட்டும் இவர்கள் யார்?12 மார்ச் 2025 யுக்ரேன் போர்: 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஸெலன்ஸ்கி தரப்பு - ரஷ்யாவின் முடிவு என்ன?12 மார்ச் 2025 அதோடு, தமிழ் மொழியின் ஆக்கபூர்வமான விஷயங்களை சுட்டிக் காட்டிய அதே நேரம், அதன் குறைகளையும் எடுத்துரைத்தவர் பெரியார் என்கிறார் கலி. பூங்குன்றன். தான் நடத்திய பத்திரிகைகளுக்கு விடுதலை, குடிஅரசு, உண்மை, பகுத்தறிவு, புரட்சி என தமிழ் பெயர்களையே பெரியார் சூட்டியுள்ளார். இந்தப் பத்திரிகைகளில், ஆயிரக்கணக்கிலான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். தமிழை அறிவார்ந்த மொழியாக மாற்ற நினைத்தே அனைத்து மேடைகளிலும் பெரியார் திருக்குறளை முன்னிறுத்தி, திருக்குறள் மாநாடுகளை நடத்தியதாக, பெரியாரிய இயக்கத்தினர் கூறுகின்றனர். தமிழ் மொழியை எழுதுவதை எளிமையாக்கி எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் முன்னிறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரயிலில் இருந்து தப்பிய பயணிகள் கூறுவது என்ன? - தற்போதைய நிலவரம்4 மணி நேரங்களுக்கு முன்னர் இயேசுவை முடிவெட்டச் சொன்ன டிக்டோக் பிரபலம் - இந்தோனீசியாவில் 3 ஆண்டு சிறை12 மார்ச் 2025 தமிழ் மொழியில் சீர்திருத்தம் தமிழ் மொழியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த பெரியார் பல முயற்சிகளை மேற்கொண்டதாக மூத்த செய்தியாளர் ப. திருமாவேலன் எழுதிய 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, "தமிழ்நாட்டு ஆட்சி தமிழில்தான் இருக்க வேண்டும். அது தமிழாட்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார் பெரியார்" எனத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமாவேலன். "தமிழையும் மதத்தையும் பிரித்து, தமிழை அறிவு மற்றும் அறிவியல் மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செல்ல வேண்டும்" என பெரியாரின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவர். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வாரி ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டபோது, 1956ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய மாநாட்டில், சென்னை ராஜ்ஜியம் எனும் பெயருக்குப் பதிலாக தமிழ்நாடு எனும் பெயரை வழங்க வேண்டும் என முதன்முதலில் கூறியது பெரியாரும் திராவிடர் கழகமும்தான் என்று கி.வீரமணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி, சமஸ்கிருதம் குறித்து பெரியார் கூறியது என்ன? ஹிந்தி எதிர்ப்பில் பெரியார் மிகவும் வலுவாக இருந்ததாக திருமாவேலன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "பெரியாரின் போராட்ட குணத்தை அதிகமாக்கியது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1938ஆம் ஆண்டில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடிவத்தைக் கொண்டாலும், பெரியார் தமது ஹிந்தி எதிர்ப்பை 1929ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார். 7.3.1929 நாளிட்ட 'குடிஅரசுவில்' ஹிந்தி எதிர்ப்பைத் தொடங்கினார். 'தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும்' என்பதுதான் 'சித்திரபுத்தன்' எனும் புனைப்பெயரில் அவர் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பு" என்று தனது நூலில் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக மட்டுமின்றி சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளை பெரியார் பதிவு செய்துள்ளார். "இன்று தமிழ்நாட்டில் 'சமஸ்கிருதம்' என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காகவாவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் எதிலாவது ஒற்றுமை-பொருத்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில், தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும் ஏதாவது ஒரு காரியத்துக்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?" என்று பெரியார் கேள்வியெழுப்பியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2gp21gn0vo
-
மட்டு.கூளாவடியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 13 உணவங்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு உணவு விடுதிகள், உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் சோதனை 12 MAR, 2025 | 06:51 PM மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் நேற்று (11) மாலை பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனை நடத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அதிகளவான மக்கள் வசிக்கும் மாமாங்கம் பொது சுகாதார பிரிவு மற்றும் இருதயபுரம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் சோதனையிடப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமாரின் வழிகாட்டலின் கீழ் மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் ரி.பகீரதன் மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர் என்.கருணாகரன் ஆகியோர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது மாமாங்கம் பொது சுகாதார பிரிவில் சுமார் 10 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மூன்று உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று இருதயபுரம் பொது சுகாதார பிரிவில் சுமார் 23 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 13 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்போது, உணவு தயாரிப்புக்காக பயன்படுத்தக்கூடிய புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பண்டங்கள் பெருமளவான பொருட்களும் பாவனைக்கு உதவாத பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/209032
-
ஐ.தே.க. தொகுதி அமைப்பாளர் நியமனத்தின் போது கோபமடைந்த ரணில்
Published By: VISHNU 12 MAR, 2025 | 09:03 PM (எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் புதன்கிழமை (12) தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது இரு தொகுதி அமைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன தொடர்பில் கூறிய போது ரணில் விக்கிரமசிங்க கோபமாக அவர்களுக்கு பதிலளித்தார். தொகுதி அமைப்பாளர் ஒருவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கிய போது அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பேச முயற்சித்த போதிலும், அவர் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. 'ராஜித சேனாரத்ன வர முன்னர் நாம் தனியாகவே அனைத்து பணிகளையும் முன்னெடுத்தோம். தற்போது அவருக்கு மாத்திரம் முன்னுரிமையளிப்பது தவறாகும்.' என குறித்த தொகுதி அமைப்பாளர் கூறினார். எவ்வாறிருப்பினும் அதற்கு பதிலளிக்காத ரணில், அவரை சென்று அமருமாறு கூறினார். எனினும் அங்கு அமர்ந்திருந்த மேலும் இருவர் எழுந்து, கருத்துக்களை தெரிவிக்க முயற்சித்த போதிலும், அவர்களையும் அமருமாறு ரணில் கூறினார். அவர்கள் தொடர்ந்தும் பேச முயற்சித்தமையால் சற்று கடுந்தொனியில், 'அமருமாறு கூறினால் தயவு செய்து அமருங்கள்' என்று மீண்டும் மீண்டும் கூறினார். இதன் போது ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன அவர்களின் அருகில் சென்று அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். எனினும் அவர்கள் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/209042
-
வேலியன்ட்(VALIANT) சிம்ஃபொனி இசைக் கோர்வையை லண்டனில் அரங்கேற்றிய இளையராஜா
இளையராஜாவின் சிம்ஃபொனி வெளியீடு எப்போது? நேரில் கண்டு பரவசமடைந்த ரசிகர்கள் எதிர்பார்ப்பு பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 12 மார்ச் 2025, 04:41 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் தான் உருவாக்கிய சிம்ஃபொனி இசைக் கோர்வையை லண்டனில் அரங்கேற்றிவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள், பின்னணி இசைக் கோர்வை, 7000க்கும் அதிகமான பாடல்கள் என்று பல சாதனைகளைப் படைத்திருக்கும் இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது உலகளவில் மிகப்பெரிய திரை இசை ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். வேலியன்ட் (VALIANT) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சிம்ஃபொனி, அவரது இசைப் பயணத்தில் மற்றுமொரு மகுடம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இளையராஜாவின் இந்த சிம்ஃபொனி இசைக் கோர்வையின் முக்கியத்துவம் என்ன? சிம்ஃபொனியை உருவாக்குவதில் இருக்கும் சவால்கள் என்ன? இந்தியாவில் பல திறமையாளர்கள் இருந்தும் பல சிம்ஃபொனிக்கள் உருவாகாததன் காரணம் என்ன? இந்த இசை நிகழ்ச்சியை நேரில் கண்ட ரசிகர்கள் கூறுவது என்ன? மேற்கத்திய செவ்வியல் இசையின் உச்சம் சிம்ஃபொனி மேற்கத்திய செவ்வியல் இசை மிகப்பெரிய மரபைக் கொண்டது. அந்த மரபின் உச்சம் சிம்ஃபொனி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் இசைக் கலைஞர்கள், அமெரிக்க இசைக் கலைஞர்கள் மேற்கத்திய செவ்வியல் இசையை இசைத்துள்ளனர். ஆனால் இந்தியாவில், இந்தியர்கள் இந்த இசை மரபு சார்ந்து இசைக் கோர்வையை உருவாக்குவதே மிக அரிதான விஷயம். ஒரு சிலருக்கே அது சாத்தியப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இளையராஜாவும் இடம்பெற்றிருப்பது இந்திய இசை வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்று இசை ஆர்வலர்கள் கருதுகின்றனர். இது குறித்து புகழ்பெற்ற பியானோ இசைக் கலைஞர் மற்றும் இசைக் கல்வியாளர் அனில் ஸ்ரீனிவாசன் பிபிசி தமிழிடம் பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியதாவது: "இளையராஜா செய்திருக்கும் இந்த சிம்ஃபொனி ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், மேற்கத்திய செவ்வியல் மரபில் இந்திய இசையமைப்பாளர் ஒருவரின் முதிர்ச்சியை இது காட்டுகிறது. பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த, லண்டனில் இருக்கும் மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர் ஒருவர் இந்தியாவின் பாரம்பரிய இசையில் உச்சம் தொட்டால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு இது மிகப்பெரிய சாதனை." இளையராஜா இன்று வெளியிடும் சிம்ஃபொனியின் பின்னணி என்ன? 5 கேள்விகளும் பதில்களும்8 மார்ச் 2025 பாகிஸ்தான் ரயில் கடத்தலில் 104 பேர் மீட்பு, 16 ஆயுதக் குழுவினர் சுட்டுக் கொலை - என்ன நடக்கிறது?3 மணி நேரங்களுக்கு முன்னர் சிம்ஃபொனி இசைப்பது ஏன் கடினம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேற்கத்திய செவ்வியல் மரபில் இந்திய இசையமைப்பாளர் ஒருவரின் முதிர்ச்சியை சிம்ஃபொனி உணர்த்துகிறது பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் என மிகத் திறமையான மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்கள் பலர் நம்மிடையே இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர். ஆனால் இதில் இசையமைப்பாளர்கள் அரிது. "வன்ராஜ் பாடியா, ஓல்கா க்ரான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் இருந்துள்ளனர். இவர்களை நான் குறிப்பிடுவதற்கான காரணம், இவர்களின் மேற்கத்திய செவ்வியல் இசைக் கோர்ப்புகளை, மேற்கத்திய இசைக் கலைஞர்கள் வாசித்துள்ளனர். நாம் அந்த அளவுக்கு கற்றுக் கொள்ள இந்தியாவில் வசதி இல்லை என்பதால் இங்கிருந்து சிம்ஃபொனி செல்லும் வாய்ப்பு பலருக்கு அமைந்ததில்லை," என்கிறார் அனில் ஸ்ரீனிவாசன். சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இந்த இசை மரபை கற்றுத் தரும் சங்கங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே இந்தியாவில் இதைக் கற்க முடியும் என்கிறார் அவர். மேற்கொண்டு படிக்க, வெளிநாடுதான் செல்ல வேண்டும். அதனால்தான் இங்கிருந்து கொண்டே இதைக் கற்று, இதில் இசைப்பது அரிது என்று கூறப்படுகிறது. பீத்தோவன், மொசார்ட் வரிசையில் இளையராஜா - 'சிம்ஃபொனி' இசைக்கும் முதல் இந்தியர்7 மார்ச் 2025 நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? பிடிபட்டது எப்படி?5 மார்ச் 2025 இளையராஜாவுக்கு இது சாத்தியப்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES இத்தகைய சூழலிலும் மேற்கத்திய செவ்வியல் இசை சார்ந்தும், அதை இந்திய பார்மபரிய இசையுடன் சேர்த்தும் தொடர்ந்து பல புதுமைகளைப் படைத்து வருகிறார் இளையராஜா. தற்போது அவருக்கு சிம்ஃபொனி சாத்தியப்பட்டதற்கு அவரது அனுபவமே காரணம் என்கிறார் அனில் ஸ்ரீனிவாசன். "சிக்கலான உணர்வுகளை இசையில் கையாள்வதில் இளையராஜா பல ஆண்டுகளாக அனுபவம் பெற்றிருக்கிறார், தேர்ந்திருக்கிறார். இந்த முதிர்ச்சி மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளது. ஒரு பக்கம் பிறப்பிலேயே அவரிடம் இருக்கும் இசை மேதமை, இன்னொரு பக்கம் மிக நுணுக்கமான உணர்வுகளைப் பல ஆண்டுகளாக இசையின் மூலம் அவர் கடத்தி வந்த அனுபவம், இந்த இரண்டும் சேர்ந்திருப்பது மிக அரிதான கலவை. திரையிசை அல்லாது இந்திய பாரம்பரிய இசை, பக்திப் பாடல்கள் எனப் பல்வேறு வகையான தனி இசையையும் அவர் உருவாக்கியிருக்கிறார்." கடந்த 2005ஆம் ஆண்டு புடாபெஸ்ட் சிம்ஃபொனி இசைக்குழுவை வைத்து திருவாசகம் ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. இது ஆரடோரியா என்கிற இசை வகையைச் சார்ந்தது. இதன் மூலம் மேற்கத்திய செவ்வியல் இசையை, அந்த இசைக் குழுவோடு, மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்களை வாசிக்க வைத்து, தேர்ந்த அனுபவத்தை இளையராஜா பெற்றிருந்தது இந்த சிம்ஃபொனிக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. "How to Name It?, Nothing but Wind போன்ற ஆல்பங்களை எடுத்துக் கொண்டால் பல்வேறு இசைப் பரிமாணங்களில் அவர் வளர்ச்சி எப்படி இருந்திருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எனவே அப்படியான ஓர் உணர்வுப்பூர்வமான முதிர்ச்சி இருப்பதால்தான், மற்றவர்களைவிட இளையராஜாவால் இது சாத்தியப்பட்டிருக்கிறது," என்கிறார் அனில் ஸ்ரீனிவாசன். எட் ஷீரன்: திக்குவாய் பிரச்னையை கடந்து, 600 கோடி பார்வைகளை பெற்று இசையில் சாதித்த இவர் யார்?5 பிப்ரவரி 2025 மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கப் பல்லியின் விஷம்4 மணி நேரங்களுக்கு முன்னர் அற்புதமான இசை அனுபவம் பட மூலாதாரம்,FACEBOOK இந்த இசை நிகழ்ச்சியை நேரில் கண்ட பலர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். லண்டன் லெஸ்டர் பகுதியில் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில்வியன், அவ்வாறான ஒரு ரசிகர். தொடர்ந்து இளையராஜாவின் இசை பற்றித் தனது ட்விட்டர் பக்கத்தில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரிடம் இந்த அனுபவம் குறித்து பிபிசி சார்பாகப் பேசினோம். "நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் பேசிய இளையராஜா, இது அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்றார். முதல் ஸ்வரத்தின் ஒலியில் இருந்தே அற்புதமான ஓர் அனுபவமாக அது இருந்தது. இந்த இசை மரபு குறித்துத் தெரியாத ஒரு வெகுஜன ரசிகனாக நான் இருந்தும், இந்த இசைக் கோர்ப்பு அவ்வளவு சிறப்பு மிக்கதாக, புது அனுபவமாக இருந்தது. மொத்தம் நான்கு பகுதிகள் (movements) கொண்ட சிம்ஃபொனி அரேங்கற்றப்பட்டது. முழுக்க முழுக்க அந்த இலக்கணத்தை மீறாமல், பிரத்யேக மேற்கத்திய செவ்வியல் இசையாகவே இளையராஜா இதை எழுதியிருக்கிறார்" என்று குறிப்பிட்டார் சில்வியன். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இந்த சிம்ஃபொனி நீடித்ததாகக் கூறும் அவர், குறிப்பாக மூன்றாவது பகுதி துள்ளலான தன்மையுடன் இருந்ததாகத் தெரிவித்தார். "இந்த சிம்ஃபொனி வெளியானவுடன் மூன்றாவது பகுதியைக் கேட்டுப் பலர் குதூகலிக்கப் போகின்றனர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த அரங்கேற்றம் முடிந்ததும், அந்த மூன்றாவது பகுதியை மட்டும் மீண்டும் வாசிக்கலாம் என்று இசைக் கலைஞர் ஒருவர் உத்தேசிக்க, அதை மீண்டும் வாசித்துக் காட்டினார்கள்," என்று உற்சாகத்துடன் பகிர்ந்தார் சில்வியன். இந்த இசை நிகழ்ச்சியில் பெரும்பாலும் இந்திய ரசிகர்களையே காண முடிந்ததாகக் கூறிய சில்வியன், இதற்காகவே பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்தும், மத்தியக் கிழக்கு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்ததாகக் குறிப்பிட்டார். அமெரிக்காவில் இருந்தும் கணிசமான ரசிகர்கள் வந்திருந்ததாகக் கூறுகிறார் சில்வியன். "சிம்ஃபொனி வாசித்து முடிக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும், கை தட்டக்கூடாது என்பது அவர்களின் பாரம்பரியம். இசை நடத்துநர் (conductor) சொல்லும்போதுதான் கை தட்ட வேண்டும். ஆனால் ஒவ்வொரு பகுதி முடிந்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் கைதட்டினார்கள். இசையை நடத்திய மிக்கெல் டாம்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இளையராஜா பரவாயில்லை, இதுதான் எங்கள் வழக்கம் என்று அவரிடம் சொன்னார். சிம்ஃபொனி அரங்கேற்றம் முடிந்த பிறகு இளையராஜாவின் சில பாடல்களை அந்த இசைக் குழுவின் பாணியில் இசைத்தார்கள். இதில் அவர் 3 ஸ்வரங்களை வைத்து மட்டும் இசையமைத்த பாடல், ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா, மடை திறந்து பாடும், பூவே செம்பூவே, கண்ணே கலைமானே ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. ஷூபெர்டின் முடிக்கப்படாத சிம்ஃபொனியை தழுவி அவர் இசையமைத்த இதயம் போகுதே பாடல் இசைக்கப்பட்ட போது இளையராஜாவும் இணைந்து பாடினார். பிறகு சில படங்களின் பின்னணி இசைக் கோர்வையும் இசைக்கப்பட்டன," என்றார் சில்வியன். சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானைவிட இந்தியாவுக்கே அதிக பலனா? நியூசிலாந்து ஊடகங்கள் சொல்வது என்ன?11 மார்ச் 2025 இந்திய பங்குச் சந்தைகளில் தொடரும் வீழ்ச்சியால் சாமானியருக்கு என்ன பாதிப்பு? ஓர் அலசல்11 மார்ச் 2025 இளையராஜாவின் சிம்ஃபொனி வெளியீடு எப்போது? பட மூலாதாரம்,FACEBOOK/ILAIYARAAJA லண்டனில் இந்த சிம்ஃபொனி இசை நிகழ்ச்சி முடிந்த நிமிடம் முதலே சமூக ஊடகங்களில் சில காணொளிகள் பகிரப்பட்டு வந்தன. அதைப் பார்த்த ரசிகர்கள் பலர், வேலியன்ட்டின் அதிகாரப்பூர்வ வெளியீடு எப்போது என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அது குறித்த எந்தத் தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த சிம்ஃபொனி இசை நிகழ்ச்சியை உலகின் பல்வேறு நாடுகளில் நடத்த ஏற்கெனவே திட்டமிட்டு முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார் இளையராஜா. லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தத் தகவலை இளையராஜா தெரிவித்தார். இளையராஜாவின் இந்த சிம்ஃபொனி முயற்சி இந்திய இசை வரலாற்றில் ஒரு கலாசார மைல்கல் என்று பலர் புகழாரம் சூட்டியுள்ளனர். ராஜா ஏன் இன்னும் இசையின் ராஜாவாக இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று என அவரது ரசிகர்கள் பலர் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர். இளையராஜவின் இந்தச் சாதனை இந்தியாவை சேர்ந்த பல்வேறு இசைக் கலைஞர்களுக்குப் புதிய சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், அடுத்த ஆண்டு தனது சிம்ஃபொனி இசையை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளதும், தனக்கு இசையமைப்பாளர் இளையராஜா தந்த உற்சாகம் ஒரு முக்கியக் காரணம் என்று கூறியிருப்பதுமே அதற்கான அத்தாட்சி என்று கொள்ளலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy83j283d22o
-
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
12 MAR, 2025 | 04:17 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் (சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்) இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. அதற்கமைய முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2024 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபால் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், மார்ச் 10 ஆம் திகிக்கு முன்னர் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk வலைத்தளத்தின் மூலம் இணையவழியூடாக தெரியப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலை அதிபர்களும் மாணவர்களுக்கு அனுமதி அட்டைகளை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். இன்னும் அனுமதி அட்டைகள் கிடைக்காத மாணவர்கள் தங்கள் அதிபர்கள் ஊடாக பரீட்சை திணைக்களத்தை நாடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சி பட்டறைகள் உள்ளிட்டவை கடந்த 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தடை அன்று முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/208996
-
மட்டு.கூளாவடியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 13 உணவங்களுக்கு எதிராக வழக்கு
கனகராசா சரவணன் மட்டக்களப்பு – கூளாவடி பிரதேசத்தில் இடியப்பம், பிட்டு. தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்துவரும் உணவுக்கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனையில் ஈடுபட்ட 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய கோட்டமுனை மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர்களான எஸ்.கஜானந்தன், என்.கருணாகரன், ரி.மிதுன்ராஜ். யே. யசேதரன், ரி.பகீரதன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ தினமான நேற்று இரவு கூளாவடி பிரதேசத்திலுள்ள இடியப்பம், பிட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை முற்றுகையிட்டனர். இதன்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 13 கடைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிரா வழக்கு தாக்கல் செய்ததுடன் பாவனைக்கு உதவாத பாத்திரங்களையும் மீட்டனர். https://thinakkural.lk/article/315952
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
தமிழ் மருத்துவராம்! (உறுதியாகத் முடியவில்லை)
-
தண்டனைகளிலிருந்து படையினர் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்; - தியாகராஜா நிரோஷ்
தண்டனைகளிலிருந்து படையினர் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் ; அந்தத் துணிவே நாட்டில் முன்னாள் படைத்தரப்பின் குற்றங்கள் அதிகரிக்க காரணம் - தியாகராஜா நிரோஷ் 12 MAR, 2025 | 12:14 PM நாட்டில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித பொறுப்புக்கூறலுமின்றி, சட்டத்தில் இருந்து படையினரை அரசு பாதுகாத்துவரும் துணிவுதான் இந்நிலைமைக்குக் காரணம் என்பதை ஒட்டுமொத்த நாடும் உணர்ந்துகொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக தனது கருத்தினை வெளிப்படுத்துகையிலேயே தியாகராஜா நிரோஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இன்று நாட்டின் நீதிமன்றத்தின் உள்ளே படுகொலை நடக்கிறது. வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியர் அரச வளாகத்தினுள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக நேர்கிறது. சாதாரணமான துப்பாக்கிப் பிரயோகங்கள் எங்கும் நடக்கின்றன. இவற்றுக்குப் பின் முன்னாள் இராணுவத்தினர் உள்ளனர். நாட்டின் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர் நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிக்காமல் மறைந்துள்ளார். அவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை நாட்டின் பாதுகாப்புத் தரப்பு மற்றும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொலிஸ் தரப்பின் தொழில்சார் ஒழுக்கத்தை பகிரங்கப்படுத்தி நிற்கின்றன. படைகளின் தொழில்முகப்படுத்தலில் ஒழுக்கம் இன்மைகளை வெளிக்காட்டுகின்றன. படைகளில் இருந்து விலகியோர் என்று கூறி சாதாரணமாக இந்த விடயங்களை கைவிரித்துவிட முடியாது. படைகளில் பணியாற்றிய மனிதர்கள் உயர் ஒழுக்கம் மற்றும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதியை அவர்களது சேவைக்கால பயிற்சி மற்றும் சத்தியப்பிரமாணங்களின் வாயிலாகப் பெற்றிருக்க வேண்டும். இது இலங்கையில் நடைபெறவில்லை. காரணம், தமிழ் மக்கள் மீது படைகளில் இருந்தவர்கள் மேற்கொண்ட அத்தனை பாலியல் வல்லுறவுகள், மிலேச்சத்தனமான படுகொலைகள், சிறார் படுகொலைகள், மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு அரச பாதுகாப்பு அளிக்கப்பட்டதன் விளைவே, இலங்கையில் இராணுவ ஒழுக்கம் மற்றும் பொலிஸாரின் ஒழுக்கம் புகட்டப்படாத குற்றக் கலாசாரத்துக்கான அடிப்படை காரணம் என்பதை அரச இயந்திரம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் நாட்டின் ஜனாதிபதிகள், பொதுமன்னிப்பு அதிகாரத்தினை பயன்படுத்திக் கூட தமிழ் மக்களை மிலேச்சத்தனமாக கொலை செய்த படைத்தரப்பினரை குற்றத்துக்கான தண்டனையில் இருந்து பாதுகாத்துள்ளனர். இவ்வாறான மனித நாகரிகமற்ற சட்டத்துக்கும் நீதிக்கும் ஏற்புடையதல்லாத கலாசாரம் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் வெற்றியாக அரசும் மாறி மாறி ஆட்சியேறிய அரசாங்கங்களும் கட்டிவளர்த்த கலாசாரம் தான் இன்று நாடே குற்றங்களுக்குள் மூழ்கக் காரணமாக உள்ளன. இந்நிலையில் மக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்களை, படையினரை அரசாங்கம் பாதுகாக்கக்கூடாது. குற்றங்களுக்கு பொறுப்புக்கூறாத கலாசாரம் ஒருபோதும் குற்றங்கள் மீள நிகழாமையினை உறுதிப்படுத்தாது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/208976
-
ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார் – உக்ரேன் இணக்கம்!
உக்ரைன் 30 நாள் யுத்தநிறுத்தத்திற்கு தயார் - பாதுகாப்பு உதவிகளை வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா 12 MAR, 2025 | 12:16 PM உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதையும் புலனாய்வு தகவல்களை பரிமாறுவதையும் அமெரிக்க மீள ஆரம்பித்துள்ளது. ரஸ்யா உடன்பட்டால் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளதை தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளை புலனாயவு தகவல்களை வழங்குவது ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. ஒரு வாரகாலத்திற்கு முன்னர் காணப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து விலகி டிரம்ப் நிர்வாகம் புதிய நிலைப்பாட்டையெடுத்துள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க உக்ரைன் ஜனாதிபதிகள் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டதை தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்பு உதவிகளை புலனாயவு தகவல்களை வழங்குவதை இடைநிறுத்தியிருந்தது. சவுதி அரேபியாவில் உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளிற்கு தலைமைதாங்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ருபியோ யுத்த நிறுத்தம் குறித்த திட்டத்தை அமெரிக்கா ரஸ்யாவிற்கு தெரிவிக்கும், என தெரிவித்துள்ளார்.. பேச்சுவார்த்தை மேசையில் என்ன உள்ளது என்பதை அவர்களிற்கு தெரிவிக்கப்போகின்றோம், உக்ரைன் துப்பாக்கி சூட்டை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகளிற்கு தயார், இனி ரஸ்யாவே ஆம் அல்லது இல்லை என தெரிவிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சமாதான திட்டத்தினை ரஸ்யா ஏற்க மறுத்தால் சமாதானத்திற்கான உண்மையான தடை என்னவென்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208981
-
வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபர் கைது
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் கைது 12 MAR, 2025 | 12:08 PM யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை தரப்பினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். அந்த வைத்தியசாலையில் துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/208975
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம் Published By: DIGITAL DESK 3 12 MAR, 2025 | 11:17 AM சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (12) விஜயம் செய்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்து நபரொருவர் பெண் வைத்தியர் ஒருவரை பாலியஸ் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. பெண் வைத்தியர் பாலியஸ் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளார். பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் துணை பணிப்பாளர் உள்ளிட்ட வைத்தியக்குழுவிடம் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/208974
-
கச்சதீவு திருவிழாவிற்கான திகதி அறிவிப்பு
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன அரசாங்கம் தெரிவித்துள்ளது Published By: VISHNU 12 MAR, 2025 | 03:24 AM 2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், திருவிழாவை வெற்றிகரமா நடத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இவ்விழாவுக்கு வரும் கப்பல்களுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகள் அமைத்தல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் அமைத்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இன்று (2025 மார்ச் 10) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதுடன், இன்று (2025 மார்ச் 10) பெருவிழாவிற்கு வரும் மக்களுக்கு தகவல் தொடர்பு வசதிகளை வழங்குவதற்காக கச்சத்தீவில் தகவல் தொடர்பு கோபுரம் நிறுவும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவு மற்றும் கரையோர பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் பாதுகாப்பு கமரா அமைப்பை பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதுடன், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவ கடற்படையின் முழு உழைப்பு, தொழில்நுட்ப மற்றும் வள பங்களிப்பை வழங்குவதற்கு ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/208954
-
அர்ச்சுனாவின் செயற்பாடுகள் வருத்தத்துக்குரியது : அவருக்கு எதிராக சிறப்பு பிரேரணையை கொண்டு வர நேரிடும் - நிசாம் காரியப்பர்
Published By: VISHNU 12 MAR, 2025 | 06:36 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பிற இனத்தையும், மதத்தையும் அவமதிக்கும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் பேசுவது தமிழர் பண்பாடல்ல, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் வருத்தத்துக்குரியன. பதவிக்கான கௌரவத்தை அவர் பாதுகாத்துக் கொண்டு முறையற்ற வகையில் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சிறப்பு பிரேரணையை கொண்டு வர நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது; பொலிஸ் திணைக்களம் தமது பொலிஸ்மா அதிபரை கைது செய்ய முடியாமல் தள்ளாடுகிறது. இது ஆச்சரியத்துக்குரிய வெட்ககேடானதொரு செயலாகும். தன்னை கைது செய்வதை தடுக்க கோரி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்துக்கு ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார். பொதுவாக ரிட் மனுத்தாக்கல் செய்யும் போது குறித்த ஆவணத்தில் சட்டத்தரணி முன்னிலையில் சத்திய கூற்றினை முன்வைக்க வேண்டும். ஆகவே அந்த சட்டத்தரணியை விசாரித்தால் தேசபந்துவை கண்டுப்பிடிக்கலாம். குற்றப்புலனாய்வு திணைக்களம் என்ன செய்கிறது என்பதை அறியவில்லை. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இஸ்லாமிய நூல்கள் மீது தடைவிதிக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் கடந்த மாதம் 08 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வியெழுப்பியிருந்தேன். உரிய தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கமைவாக ஒருசில இஸ்லாமிய நூல்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை திங்கட்கிழமை (10) நீக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆகவே அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற இராமநாதன் அச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிட வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு எதனையும் பேச முடியாது. பேசும் வார்த்தையில் இனிமை இருக்க வேண்டும், வாய்மை மற்றும் சொல்வான்மை இருத்தல் வேண்டும். வாய்மை தொடர்பில் திருவள்ளுவர் ' வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொல்' என்று குறிப்பிட்டுள்ளார். பிறருக்கு சொல்லால் கூட தீங்கிழைக்க கூடாது என்று இந்த குறளுக்கு பொழிப்புரைக்கப்படுகிறது. அதேபோல் வள்ளுவர் ' ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும்' என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கமே அனைத்துக்கும் மேன்மை தருவதால் அந்த ஒழுக்கம் உயிரிலும் மேலானதாக மதிக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்களை ' கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்' என்று அழைப்பார்கள். ஆகவே அனைவரும் இந்த மரியாதைக்கு அமைவாக நடந்துக் கொள்ள வேண்டும். பிற இனத்தையும், மதத்தையும் அவமதிக்கும் வகையில் பேசுவது தமிழர் பண்பாடல்ல, பாராளுமன்ற அச்சுனா பிற சமூகத்தை புண்படுத்தும் வகையில் பேசுகிறார். இது கவலைக்குரியது. பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு எதனையும் பேச முடியாது. இவ்வாறான செயற்பாடுகளை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் நாங்கள் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையை கொண்டு வர நேரிடும் என்றார். https://www.virakesari.lk/article/208953
-
டைப் 2 நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் அரக்கப் பல்லியின் விஷம்
மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கப் பல்லியின் விஷம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த பல்லியின் விஷம், செமிக்ளூடைடு எனும் மருந்துக்கு ஆதாரமாக விளங்குகின்றது கட்டுரை தகவல் எழுதியவர்,ரஃபேல் அபுசைபே பதவி,பிபிசி முண்டோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் வட அமெரிக்காவின் பாலைவனங்களில் பளபளக்கும், செதில்களைக் கொண்ட, மெதுவாக நகரும் அந்தச் சிறிய உயிரினம்தான் மருந்துகள் துறையில் புரட்சியை ஏற்படுத்த மறைமுகமாக உதவியுள்ளது. அதன் அறிவியல் பெயர் ஹெலோடெர்மா சஸ்பெக்டம் (Heloderma suspectum), ஆனால், பெரும்பாலானோர் அதை கிலா மான்ஸ்டர் என்கின்றனர். அதன் விஷம், பல தீவிரமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். 2024 நவம்பரில் கொலோரடோ மாகாணத்தில் இந்த கிலா அரக்கப் பல்லியின் குட்டி ஒன்று கடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சிறிய, விகாரமான உயிரினம்தான் வருங்காலத்தில் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றப் போகும் மருத்துவக் கண்டுபிடிப்பின் பின்னால் உள்ளது. அதன் விஷத்தில், ஜிஎல்பி-1 ஏற்பி (GLP-1 receptor) எனும் புரதத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் மருந்துகளை உருவாக்க உதவக்கூடிய ஊக்குவிக்கும் நொதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புரதம், தற்போது ஓஸெம்பிக் (Ozempic), வெகோவி (Wegovy), மௌஞ்சரொ (Mounjaro) எனும் பெயரில் மருந்துகளாக விற்கப்படுகின்றன. இவை, டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்? தவளைக் குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் அரிய வகை ஆண் தவளை பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா? பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா? இந்த மருந்துகளை உருவாக்குவதில் கிலா மான்ஸ்டர் முக்கிய உயிரினமாக உள்ளது. விலங்கின் நஞ்சை மக்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்துவது புதிதல்ல, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் முதல் ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கான மருந்துகளில் அவை முக்கியப் பங்கு வகித்துள்ளன. ஆனால், இந்தப் பல்லி எந்த அளவுக்குச் சிறப்பானது? நம்பிக்கைக்குரிய மருந்துகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அதன் நஞ்சை எப்படிப் பெறுவது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செமிக்ளூடைட் டைப் 2 நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது அரக்க பல்லியின் நஞ்சு "தன்னை வேட்டையாட வருவதிலிருந்து காத்துக்கொள்வது மற்றும் தன்னுடைய இரையை முடக்குவது என குறிப்பாகச் செயல்படும் வகையில் இத்தகைய நஞ்சுக்கள் பரிணமிக்கின்றன," என உயிரினங்களின் நஞ்சு குறித்து ஆராய்ந்து, அதன் மாற்றுப் பயன்பாடுகள் குறித்து ஆராய்ந்து வரும் பேராசிரியர் கினி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். வட அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஷப் பல்லி இனங்களில் ஒன்றான இந்த கிலா அரக்க பல்லியைப் பொறுத்தவரையில் அதனால், வேகமாக நகர முடியாது என்பதால் தன் இரை வேகமாகச் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் விஷம் பரிணமித்துள்ளது. இரையின் மீது ஏற்படுத்தும் இந்த விளைவைத் தவிர்த்து, அதன் விஷத்தில் உள்ள ஹார்மோன் ஒன்று, இந்தப் பல்லி வெறும் ஆறு வேளை உணவின் மூலம் ஓர் ஆண்டு வரை வாழும் வகையில் அதன் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் குறைப்பதில் உதவுவதாக, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் எக்ஸென்டின் - 4 (exendin-4) எனப் பெயரிட்டுள்ள இந்த ஹார்மோன், மனிதர்களில் ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உற்பத்தியாகும் ஜிஎல்பி 1-ஐ ஒத்திருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், எக்ஸென்டின் - 4 ஜிஎல்பி 1-ஐ விட முக்கியமான ஒரு விஷயத்தில் வித்தியாசமானதாக உள்ளது. மனித உடலில் உள்ள ஜிஎல்பி 1 இயற்கையாகவே கழிவாக வெளியேறும் நிலையில், எக்ஸென்டின் - 4 உடலில் நீண்ட காலம் தங்குகிறது, இதனால், குளுக்கோஸ் அளவைச் சீராக வைத்திருப்பதில் இது நீண்ட கால விளைவைக் கொண்டிருக்கிறது. இதுதான் ஜிஎல்பி-1 ஏற்பியாகச் செயல்படும் மருந்துகளை உருவாக்குவதன் அடிப்படையை வழங்குகிறது. சிரியாவில் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு மிகப்பெரிய மோதல் - நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட பொதுமக்கள்9 மார்ச் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு வைத்த நியூசிலாந்து9 மார்ச் 2025 நஞ்சு மருந்தாக மாறுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இதன் விஷம் மற்ற உயிரினங்களைத் தாக்குவதைவிட தன்னைப் பாதுகாப்பதிலேயே அதிகம் செயலாற்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர் எக்ஸெண்டின்-4 முதன்முதலில், டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பையெட்டா (எக்ஸெனாட்டைட்) (Byetta -exenatide) எனும் மருந்துக்காகத்தான் பெரியளவில் பயன்படுத்தப்பட்டது. இந்த மருந்து குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் உதவியது. மேலும், சில மாற்றங்களுடன் செமக்ளூடைடு(semaglutide - Ozempic, Wegovy) போன்ற மிகவும் வலுவான மற்றும் நீடித்த சேர்மங்களுக்கு அடித்தளத்தை அமைத்தது. "ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், அவற்றை ரத்த ஓட்டத்தில் நீடித்த விளைவுடன் மாற்றுவதால், அதன் சிகிச்சைத் திறனை சீராக நிர்வகிப்பது அல்லது அதிகப்படுத்துவது அற்புதமான விஷயம்," என பேராசிரியர் கினி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். செமக்ளூடைடை பொறுத்தவரை கொழுப்பு அமில சங்கிலியை ரத்தத்தில் ஹார்மோன்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகளை உடலில் கடத்துவதற்குப் பயன்படுத்தும் ஆல்புமின் எனும் புரதத்துடன் இணைப்பதன் மூலம், ரத்த ஓட்டத்தில் மருந்தின் விளைவை நீடித்ததாக ஆக்குவதாக அவர் விளக்கினார். எனினும், ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கு இத்தகைய நஞ்சு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுவதற்கு செமிக்ளூடைடு மட்டும் உதாரணம் அல்ல என்கிறார் பேராசிரியர் கினி. சுனிதா வில்லியம்ஸ் எப்போது, எவ்வாறு பூமிக்குத் திரும்புவார்? நாசா புதிய அறிவிப்பு9 மார்ச் 2025 ஜென் Z, ஜென் ஆல்பா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள் எங்கிருந்து வந்தன?9 மார்ச் 2025 மற்ற உயிரினங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போத்ரோப்ஸ் ஜராராகா எனும் இனத்தின் பெப்டைட் ரத்தம் உறைதலை நிர்வகிப்பதற்குப் பயன்படும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது பேராசிரியர் கினி சுட்டிக்காட்டுவது போன்று, கடந்த பல்லாண்டுக் காலமாக பல்வேறு விதமான உயிரினங்களின் நஞ்சை உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்மூலம் தயாரிக்கப்படும் மருந்து சேர்மங்கள், சந்தையில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. "கடந்த 1970களின் முற்பகுதிக்கு முன்பே பிரேசில் நாட்டு பாம்பு இனமான போத்ரோப்ஸ் ஜராராகா (Bothrops jararaca) எனும் இனத்தின் நஞ்சில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பெப்டைட் எனும் அமினோ அமிலங்கள், ஏசிஇ (angiotensin-converting enzyme) எனப்படும் மருந்துகள் தயாரிக்கப்பட வழிவகுத்தது," எனக் கூறும் அவர், அந்த மருந்துகள் தற்போது ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு ஆகியவற்றில் அத்தியாவசியமான மருந்துகளாக உள்ளன என்றார். காலப்போக்கில் கேப்டோப்ரில் (captopril) மற்றும் எனலாப்ரல் (enalapril) போன்ற மருந்துகள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. கடல் நத்தைகளின் நஞ்சு, நாள்பட்ட வலிக்கு சிகிச்சை அளிப்பதில் பயன்படுத்தப்படுகிறது, மேலும், இயற்கையான ரத்த உறைவு எதிர்ப்பு மருந்தாக விளங்கும் அட்டைப் பூச்சிகள், ரத்தக் குழாய் அடைப்பு ஆபத்தைக் குறைக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. "தன் இரை அல்லது வேட்டையாட வரும் உயிரினங்கள் மீது மிகவும் குறிப்பான விளைவுகளை இந்த நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. இதைப் புரிந்துகொண்டு, நாம் பிரித்தெடுத்தால் அந்த நஞ்சை சிகிச்சை மருந்தாக மாற்ற முடியும்," என கினி விளக்குகிறார். பாம்பின் நஞ்சு, கொசுவின் எச்சில் ஆகியவற்றிலிருந்து மாரடைப்புக்குப் பிறகான இதய செயலிழப்பைத் தடுப்பது அல்லது சிறுநீரகத்தில் இருந்து அதிகப்படியான சிறுநீர் உற்பத்தியாதல் (diuresis) ஆகிய பிரச்னைகளுக்கான மருந்துகளை உருவாக்கும் நோக்கத்துடன் அவற்றை ஆய்வு செய்து வருகிறார் கினி. அவரது அனுபவத்தில், இந்த நச்சுகளில் பலவற்றில், ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்களில் சிறிய மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவை மிகவும் குறிப்பிட்ட உடலியல் விளைவுகளைத் தூண்டுகின்றன, மேலும் புதிய சிகிச்சைகளை உருவாக்க அவற்றைத் தனிமைப்படுத்தி மாற்றியமைக்க வேண்டும். 'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?11 மார்ச் 2025 காஸா குழந்தைகளுக்கு ஜோர்டானில் சிகிச்சை - திரும்பிச் செல்வது எப்போது?9 மார்ச் 2025 நஞ்சுகளின் எதிர்காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல வகையான உயிரினங்களின் நஞ்சு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன மூலக்கூறு உயிரியல், மருந்தியல் மற்றும் நஞ்சுகள் குறித்த விரிவான ஆய்வுகளை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கிலா அரக்க பல்லி மீதான சோதனைகள் வழங்குகின்றன. மிகவும் மெதுவாக நகரும், பெரிதாக ஆபத்து இல்லாத, சில வேளை உணவுகளில் மட்டும் உயிர் பிழைக்கும், நிலையான நஞ்சைக் கொண்டுள்ள இந்த உயிரினம், புரட்சிகரமான மருந்துகளைத் தயாரிப்பதற்கான அடிப்படையை வழங்கும் என்கிறார் கினி. "முன்பைவிட மிக வேகமாக இயங்குவதற்கு அனுமதிக்கும் புதிய சாதனங்கள் உள்ள யுகத்தில் நாம் வாழ்கிறோம். எனினும், இப்போதும் நிதி என்பது பெரும் சவாலாக உள்ளது. ஆய்வக கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக சந்தைப்படுத்துவதற்குப் பல ஆண்டுக்கால மனிதர்கள் மீதான சோதனைகள் மற்றும் பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன," எனக் கூறுகிறார் அவர். ஆனால், இந்த முயற்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் முடிவுகள் இருப்பதாக அவர் நம்புகிறார். குறிப்பாக, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது இந்த முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக அவர் கூறுகிறார். இந்த ஆய்வில், "அடுத்த சில பத்தாண்டுகளில் இன்னும் புதிய ஆச்சர்யங்கள் ஏற்படும்" என்கிறார் கினி. மேலும், "இன்னும் பல விலங்குகளின் நஞ்சில் இருந்து அதிக திறன் வாய்ந்த மருந்து சேர்மங்களை நம்மால் கண்டுபிடிக்க இயலும் அல்லது, நோய்களைப் புதிய கோணத்தில் எதிர்க்கக்கூடிய செயற்கையான நஞ்சுகளை உருவாக்க முடியும்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2nw92gz97o
-
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகக் கல்வியையே கைவிடும் மாணவிகள் - மகளிர் தின நிகழ்வில் பேராசிரியர்கள் சுட்டிக்காட்டு
Published By: DIGITAL DESK 2 11 MAR, 2025 | 09:58 PM ( டானியல் மேரி மாக்ரட் ) பாடசாலையில் உயர்தரத்தை நிறைவு செய்துவிட்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் சில மாணவிகள் பகிடிவதை காரணமாக தங்கள் பல்கலைக்கழகக் கல்வியையே கைவிட்டுவிடக்கூடிய நிலைமை காணப்படுவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின சமத்துவ மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) ஆணைக்குழுவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சிறப்பு விருந்தினர்களால் விளக்கேற்றி வைக்கப்பட்டது. அடுத்ததாக பாலின சமத்துவ மையத்தின் இயக்குனரான பேராசிரியர் பிரபா மனுரத்னவினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது. உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஏன் ஒவ்வொரு வருடமும் மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என்று பலர் கேட்கிறார்கள்? ஆண்களுக்கான தினம் எங்கே? என எப்போதும் என்னிடம் கேள்விகள் எழுப்புவார்கள். எனவே நான் அதற்கான சிறு விளக்கம் கூறுகிறேன். ஆண்கள் ஒவ்வொரு நாளும் மிக எளிதாக வரவேற்கப்படுகிறார்கள், மேலும் ஆண்கள் பல வருகைகளிலும் வியாபித்து காணப்படுகின்றார்கள். இந்த நாள் தான் உலகம் முழுவதும் பெண்களை வரவேற்பதற்காக கொண்டாடப்படுகின்ற ஒரு நாளாக காணப்படுகிறது. நமது பல்கலைக்கழக கல்வி முறையில், பெண்களே முதலில் பெரும்பான்மையாக உள்ளனர். எனவே பெண்கள் தினத்தை கொண்டாடுவது சரிதான். எங்களால் கடந்த வருடங்களில் மாற்றங்கள் சில இடம்பெற்றுள்ளன. பாலின சமத்துவ மையத்தின் இயக்குனரான எனக்கு பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கடந்த ஆண்டு கிடைத்தது. நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நாம் அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ளவது தான். விசேடமாக மாணவர்களின் மலசலகூடங்கள் மிகவும் அழகானதாகவும் சுத்தமானதாகவும் இருந்தது. மாணவர்களின் வரவேற்பை உணரக் கூடியதாக இருந்தது. நாங்கள் மாணவர்களை சுமையாக உணரவில்லை. இடைநிலை வேலை திட்டம், நாம் செய்யும் செயல்களுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதே தவிர அவற்றில் பாலினம், இனம், மொழி எதையும் கருதுவதில்லை என்றார். மேலும் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர் குழுவினால் வயலின் , மேளம் , புல்லாங்குழல் , தபேலா, ஓகன் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன. அடுத்ததாக, இந்த ஆண்டுக்கான பாலின விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டு விழா நடைபெற்றதுடன் பவ்கலைகை்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பின்னர், பல்கலைக்கழக பேராசியர்களால் குழு விவாதம் நடைபெற்றது, குறித்த குழு விவாதத்தில், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பகிடிவதை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும் பல பெண்கள், பல்கலைக்கழகம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என கருதுகின்றார்கள். இதற்கு காரணம் பகிடிவதையே ஆகும். இதனால் தங்கள் உயர் கல்வியை முடித்து பல்கலைக்கழகம் தெரிவான பெண்கள் பகிடிவதையினால் தங்கள் பல்கலைக்கழக கல்வியை கைவிடுகின்றார்கள். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு விவாதத்தில் கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைச் செயலாளரும், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சிறப்பு அறிக்கையாளருமான தேசமான்ய டாக்டர் ராதிகா குமாரசாமி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் பல்கலைக்கழக பேராசியர்கள் பலர் இவ் விழாவில் பங்குபற்றினர். https://www.virakesari.lk/article/208943
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதிநாள் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் புதன்கிழமை (12) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். வேட்பு மனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நாளை 13ஆம் திகதி போயா தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/315937
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம் Published By: VISHNU 12 MAR, 2025 | 03:28 AM அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. தனது பணியிடத்திற்குள் அவசரகாலப் பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒரு பெண் மருத்துவர் மீது நடந்த பாலியல் வன்கொடுமையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயலை மேற்கொண்ட சந்தேகநபரை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவும், தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி செயல்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துகிறோம். இந்த துரதிர்ஷ்டவசமான, அருவெருக்கத்தக்க செயலுக்கு ஆளான மருத்துவரின் தனியுரிமை மற்றும் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வைத்தியர்களுக்கான பணியிடங்களின் பாதுகாப்பை விரைவில் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் வைத்தியர்கள் தமது பணிகளைத் தொடர்வது சவாலான விடயமாக அமையலாம். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு ஆகிய இரண்டும் ஒன்று என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் தங்கள் கடமைகளை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் பொறுப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதேவேளை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் செவ்வாய்க்கிழமை (11) காலை 10. 00 மணி முதல் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு காலவரையரையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதுடன் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை கிளையின் செயலாளர் வைத்தியர் சசிக விதானகே தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208955
-
மரண அச்சுறுத்தல் - பாலியல் தொந்தரவு இலங்கையின் பெண் அரசியல்வாதி நியுசிலாந்தில் தஞ்சம்
Published By: RAJEEBAN 12 MAR, 2025 | 11:29 AM இலங்கையில் அரசியலில் ஈடுபட்ட- பெண் என்பதால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக நியுசிலாந்தில் தஞ்சமடைந்துள்ளமை தீர்ப்பாயமொன்றின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையின் 32 வயது பெண் அரசியல்வாதியொருவருக்கு நியுசிலாந்து அடைக்கலமளித்துள்ளது. முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகாக்கள் அந்த பெண் தனது அரசியல்வாழ்க்கையை தொடர்வதற்காக அவருடன் பாலியல் உறவில் ஈடுபடவேண்டும்,என தெரிவித்தனர் அந்த பெண்ணின் நண்பர் ஒருவர் இதனை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னர் அவரை பழிவாங்க முயல்கின்றனர்என்பது தீர்ப்பாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அரசியல்வாதி 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். குறிப்பிட்ட பெண் அரசியல்வாதியின் உறவினர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தை தொடர்ந்து அவரது இறுதிசடங்கில் பிரேதப்பட்டிக்கு அருகில் அடுத்ததாக அவர் கொல்லப்படுவார் என்ற குறிப்பு காணப்பட்டது. அந்த பெண் அரசியல்வாதிக்கு இரண்டு முறைமரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன, அவரை நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது. 2018 பொதுத்தேர்தலிற்கு முன்னர் அவர் அரசியலில் இருந்து விலகவேண்டும் என எச்சரித்தனர் தனது வீட்டிற்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இலங்கையை சேர்ந்த அந்த பெண் குடிவரவு தீர்ப்பாயத்திடம் தெரிவித்தார். இலங்கையில் அரசியலில் ஈடுபடும் பெண்களிற்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிக்கின்றன என தகவல்கள் கிடைப்பதாக நியுசிலாந்தின் தீர்ப்பாயம் தெரிவித்தது. 'உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் தான் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என அந்த பெண் தெரிவித்தார்" அரசியலில் ஈடுபட நினைத்ததே எனது வாழ்க்கையின் மிக மோசமான தீர்மானம் நான் என்னை இழந்தேன் தோல்வியடைந்தது மாதிரி உணர்கின்றேன்" என அவர்தெரிவித்தார். இலங்கைக்கு தான் திரும்பிச்சென்றால் அந்த அரசியல்வாதி தன்னை கொலை செய்வார் தனது அரசியல்வாழ்க்கையை அழித்தமைக்காக பழிவாங்குவார் என அவர் கருதுகின்றார். 2022 இல் தனது பெற்றோரின் வீடு தீக்கிரையானது என தெரிவித்துள்ள அவர் அவ்வேளை நிலவிய குழப்பத்தை பயன்படுத்தி இதனை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். நண்பரின் வாக்குமூலம் இவ்வாறு தெரிவிக்கின்றது -' எதிர்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமாகவும்,நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரை பாலியல் உறவிற்கு இணங்க செய்ய முயற்சி செய்ததாலும் அவரால் அரசியலில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போனது. https://www.virakesari.lk/article/208958
-
ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார் – உக்ரேன் இணக்கம்!
யுக்ரேன் போர்: 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஸெலன்ஸ்கி தரப்பு - ரஷ்யாவின் முடிவு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,சௌதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தத்திற்கு யுக்ரேன் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், மையா டேவிஸ் & பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய யுக்ரேன் தரப்பினர், அமெரிக்கா பரிந்துரைத்தபடி உடனடியாக அமலாகும் வகையில் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தனர். இனி இந்த விஷயத்தில் "ரஷ்யாதான் முடிவெடுக்க வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இனி இந்த நேர்மறையான முன்மொழிவை ஏற்றுக் கொள்ளும் வகையில் ரஷ்யாவை சமாதானப்படுத்துவது அமெரிக்காவின் கையில் இருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையே நடைபெற்ற அசாதாரணமான வார்த்தைப் போருக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப்பூர்வ முதல் சந்திப்பாக ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பு அமைந்தது. இரு தரப்பும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் யுக்ரேனுக்கான பாதுகாப்பு உதவிகள் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கை உடனடியாக மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதவிகளை, யுக்ரேன் அதிபர் உடனான ஓவல் அலுவலக சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது. 'இனி முடிவு ரஷ்யாவின் கையில்...' இரு தரப்பு கூட்டறிக்கையில் "இரு தரப்புப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கான குழுக்களின் பெயர்களை அறிவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். யுக்ரேனின் நீண்ட கால பாதுகாப்புக்காக அமைதியை எட்டுவதற்கான பேச்சுவார்தையைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெட்டாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மார்கோ ரூபியோ இந்த முன்மொழிவை ரஷ்யா ஏற்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்க யுக்ரேன் தயாராக உள்ளது" எனக் கூறிய ரூபியோ ஒருவேளை ரஷ்யா இதை நிராகரித்தால், "அமைதிக்குத் தடையாக யார் இருக்கிறார்கள் என்பதை துரதிர்ஷ்டவசமாக நாம் தெரிந்து கொள்வோம்" எனக் கூறினார். "போரை நிறுத்தவும், உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், நாங்கள் வழங்கிய ஒரு திட்டத்தை யுக்ரேன் இன்று ஏற்றுக்கொண்டது" எனவும் அவர் தெரிவித்தார். "நாங்கள் இந்தத் திட்டத்தை ரஷ்யா தரப்புக்கு எடுத்துச் செல்வோம். அவர்களும் அமைதியை ஆமோதிப்பார்கள் என நம்புகிறோம். இனி முடிவு அவர்கள் கையில் உள்ளது" என்றார் ரூபியோ. கடலிலும், வான் பரப்பிலும் மட்டும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற ஸெலென்ஸ்கியின் முன்மொழிவைவிட இந்த 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவு பரந்துபட்டதாக இருக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன? பாகிஸ்தானில் ரயிலை கடத்திய ஆயுதக்குழு, ஆபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் - என்ன நடக்கிறது? பிரிட்டன் அருகே நடுக்கடலில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் கப்பல்கள் - என்ன நடக்கிறது? நன்றி தெரிவித்த ஸெலன்ஸ்கி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமையன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது ஜெட்டாவில் நடந்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்காக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, டிரம்புக்கு நன்றி தெரிவித்தார். ஸெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், "போரை நிறுத்துவதற்கோ அல்லது தொடர்வதற்கோ ரஷ்யா தனது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். இது முழு உண்மைக்கான நேரம்" என்று கூறியுள்ளார். ரஷ்யா இதுவரை ஏதும் பதிலளிக்காத நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே அளித்த தகவல்களின்படி, பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து அமெரிக்காவுடன் விவாதித்த பிறகு ஓர் அறிக்கை வெளியிடப்படும். பிப்ரவரி 2022 முதல் யுக்ரேனில் முழுமையான ஆக்கிரமிப்பை ரஷ்யா தொடங்கியது. யுக்ரேனின் நிலப்பரப்பில் 20 சதவீதத்தை தற்போது மாஸ்கோ கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசவுள்ளதாகவும் தமது முன்மொழிவுகளை அவர் ஏற்பார் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார். "அவர்கள் கூறுவதைப் போன்று, இது இரு தரப்பு ஒப்புதல்களுக்கு உட்பட்டது" எனக் கூறிய டிரம்ப் அடுத்த சில நாட்களில் இந்தத் திட்டமானது ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். "எங்களுக்கு ரஷ்யாவுடன் நாளை பெரிய சந்திப்பு இருக்கிறது, சில சிறந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என நம்புகிறோம்" என்பது டிரம்பின் கூற்றாக இருக்கிறது. யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை மீண்டும் வாஷிங்டன் அழைப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறினார். ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகமான Tass வழங்கிய தகவல்களின்படி, வரும் சில நாட்களில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை இருக்கிறது என்பதை ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளரான மரிய ஸகரோவா மறுக்கவில்லை. ஓநாய்-மனித நோயால் முகம் முழுக்க வளர்ந்த முடி - இந்திய இளைஞர் செய்த கின்னஸ் சாதனை5 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கப் பல்லியின் விஷம்4 மணி நேரங்களுக்கு முன்னர் அரிய கனிமங்களை வழங்கும் யுக்ரேன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓவல் அலுவலக நிகழ்வுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையிலான நல்லுறவு மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பியுள்ளதா? இந்தக் கேள்விக்குப் பதிலளித்த மார்கோ ரூபியோ, "அமைதிக்கான பாதையை நோக்கித் திரும்பியுள்ளது" என்று கூறினார். "இது தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்ல" எனவும் அவர் குறிப்பிட்டார். "மக்கள் நேற்றும் போரில் இறந்தார்கள், போர் நிறுத்தம் எட்டப்படவில்லை எனில் நாளையும் மரணங்கள் நிகழும்" என்று ரூபியோ கூறினார். மாஸ்கோவில் இரவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான ராஜ்ஜீய நடவடிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் யுக்ரேன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா இடையிலான "அரிய கனிமங்கள்" தொடர்பான ஒப்பந்தத்தைச் சாத்தியமுள்ள வகையில் விரைவாக இறுதி செய்ய டிரம்ப் மற்றும் ஸெலன்ஸ்கி ஒப்புக் கொண்டதாகவும் கூட்டறிக்கை கூறியுள்ளது. அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தின் பேரில் அரிய கனிமங்களை எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை அமெரிக்காவுக்கு வழங்குவதாக யுக்ரேன் கூறியிருந்தது. ஆனால் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற பிரச்னையால் இது தடம் மாறியது. ஆனால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கனிமங்கள் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை எனவும், யுக்ரேன் மற்றும் அமெரிக்க கருவூலத் துறைகள் சார்பில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மார்கோ ரூபியோ கூறினார். புத்தகயா: புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் உருவான மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து - பெளத்தர் மோதல்11 மார்ச் 2025 அப்பாராவை 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அண்ணாதுரை சொல்வது என்ன?11 மார்ச் 2025 'பேச்சுவார்த்தையில் ஐரோப்பாவும் இடம் பெற வேண்டும்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உடனடி பாதுகாப்பு உத்தரவாதங்கள் இன்றி கனிமங்களைத் தர ஒப்புக் கொண்ட யுக்ரேன் ஜெட்டாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழுவில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். ஸ்டீவ் விட்காஃப் வரும் நாட்களில் ரஷ்யா செல்லவிருப்பதாக, திட்டமிடல் குறித்து அறிந்த வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. ஆனாலும் இது மாறுதலுக்கு உட்பட்டது. இந்தக் கூட்டறிக்கையின்படி, எந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாடு இருக்க வேண்டும் என கீயவ் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவை பேச்சுவார்த்தையில் இருந்து தள்ளி வைக்கும் வகையில், போர் தொடர்பான அணுகுமுறையில் அமெரிக்காவிடம் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் கடந்த சில வாரங்களில் அவசர சந்திப்புகளை நடத்தின. ஐரோப்பிய யூனியன் ஆணையத்தின் தலைவரான உர்சுலா வோன் டெர் லெயன் பேசுகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேர்மறையான முன்னேற்றங்களை வரவேற்பதாகக் கூறினார். யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது அமெரிக்க அதிபரின் முக்கிய உறுதி மொழியாக இருக்கிறது. யுக்ரேன் அதிபர் வலியுறுத்திய உடனடிப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்காமல், போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஸெலன்ஸ்கிக்கு அவர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தார். போர் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்கக் கூடும் என்ற அரிதான எச்சரிக்கையையும் வெள்ளிக்கிழமையன்று டிரம்ப் விடுத்தார். போர்க்களத்தில் தற்போது ரஷ்யா யுக்ரேனை முழு வேகத்துடன் தாக்குகிறது என்பதால் இந்த நடவடிக்கை குறித்து யோசிப்பதாக டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். ரூ.13,000 கோடி கிரிப்டோகரன்சி கொள்ளை: வட கொரியா ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி? மீட்பதில் சிக்கல் ஏன்?11 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடியே செய்தியாளர் சந்திப்பு - கேள்விகளும் பதில்களும்8 மார்ச் 2025 தொடரும் டிரோன் தாக்குதல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாஸ்கோ பிராந்தியத்தில் யுக்ரேனின் டிரோன் தாக்குதலால் 3 பேர் கொல்லப்பட்டனர் நடைமுறையில், களத்தில் நடைபெற்று வரும் போர் செவ்வாய்க்கிழமை அன்றும் தொடர்ந்தது. மாஸ்கோ பிராந்தியத்தில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கியது முதல் ரஷ்ய தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இது மட்டுமின்றி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் கூறியுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த தகவலின்படி, 337 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. இதில் 91 டிரோன்கள் மாஸ்கோ பிராந்திய வான் வெளியில் இடைமறிக்கப்பட்டன. தலைநகர் கீயவ் மற்றும் பல பிராந்தியங்களில் ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்கள் நடந்ததாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவால் ஏவப்பட்ட 126 டிரோன்களில் 79 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக யுக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் Iskander-M ஏவுகணையும் இருந்ததாக யுக்ரேன் கூறியுள்ளது. ஆனால் யுக்ரேனில் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj0q1p8p93do
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Published By: DIGITAL DESK 3 12 MAR, 2025 | 10:49 AM அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றையதினம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை https://www.virakesari.lk/article/208962
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
புலிகளின் தலைவரின் வீரச்சா அறிவிப்பு; பின்னணியில் இந்திய புலனாய்வுத்துறை என்கிறார் பொன் சுதன் சீற்றம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவை அறிவித்தவர்கள் இறுதி போரில் மக்களை சுட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களே என பொன் சுதன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்து விட்டதாக கூறி அவருக்கான வீரச்சாவு அறிவித்தலை புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்த இவர்களை தற்போது யார் தூண்டி விட்டது? இவர்களுக்கு தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் இல்லை. இவர்கள் கொண்ட கொள்கையை மறந்து இறுதி போரில் தாங்கள் தப்பிப்பதற்காக மக்களை சுட்டுவிட்டு சென்றவர்கள். தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக ஒன்று சேரும் போதெல்லாம் போலி அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறார்கள். இலக்கில் இருந்து அவர்களை அகற்றுகிறார்கள் இவர்கள் அனைவரும் இந்திய புலனாய்வுத்துறையான” றோ” அமைப்பின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள். இரண்டு அணிகளாக பிரிந்து போலி அறிவிப்புகளை செய்து மக்களை நம்பவைத்து பணம் சேர்க்கும் தந்திரத்தில் இதுபோன்ற புலம்பெயர் அமைப்புக்கள் சிலர் செயற்பட்டு வருகிறார்கள். ஒரு அணியினர் துவாரகா இருக்கிறார் என்றும் இன்னொரு அணியினர் தலைவர் பிரபாகரன் இல்லை என்றும் பிரச்சாரம் செய்து பணம் சேர்க்கிறார்கள். இந்த இரண்டு அணியினரும் ஒரே நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்படுகிறவர்கள். முன்னாள் போராளிகள் என வெளி நாடுகளில் இருந்து இதுபோன்ற அறிக்கைகளை விடுபவர்கள் உண்மையான போராளிகள் இல்லை, உயிருக்கு பயந்து காக்க வேண்டிய மக்களை சுட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள். இவர்கள் தற்போது புலிகளின் பணத்தை சுருட்டியவர்களுடன் இணைந்து இவ்வாறான போலி அறிவிப்புக்களை விடுகின்றனர். இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் இலங்கை தமிழர்களும் அவதானமாக இருப்பதுடன் இவர்களை எமது தேசிய ரீதியான பயணத்தில் இருந்து அகற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/315922