Everything posted by ஏராளன்
-
'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்?
பண்ணைபுரம் முதல் லண்டன் 'சிம்ஃபொனி' இசை வரை - இளையராஜா இன்றும் டிரெண்டில் இருப்பது எப்படி? பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இளையராஜா, 7000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மெட்டமைத்தவர், 1400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். இந்த எண்களைப் படிக்கும்போது, அவரது இசையமைக்கும் பாணி மற்றும் படைப்புத் திறன் குறித்த ஓர் ஆச்சர்யம் எழும். "பாடலுக்கான சூழலும், கதையும் விவரிக்கப்படும்போது திரைப்பட இயக்குநர் மட்டுமே என்னுடன் இருப்பார். பிறகு, நானும் என் ஹார்மோனியமும் மட்டும்தான். பாடலுக்கான சூழலை கற்பனை செய்து ஹார்மோனியத்தை தொடும்போது, இசை பாயும். நான் அப்போது வேறு உலகில் சஞ்சரிப்பேன். அது என்னால் விளக்க முடியாத ஒன்று." தனது இசையமைக்கும் பாணி குறித்து இளையராஜா கூறிய வார்த்தைகள் இவை. 'அன்னக்கிளி' தொடங்கி 'விடுதலை 2' வரை, வினைல் ரெக்கார்டுகள் முதல் ஸ்ட்ரீமிங் தளங்கள் வரை, ஏறக்குறைய 50 ஆண்டுகளாகப் பல தலைமுறைகள் கடந்தும் இளைராஜாவின் இசையும் குரலும் கொண்டாடப்படுகிறது. 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்? காற்றில் வரும் கீதமே: பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள் பாடகர் ஜெயச்சந்திரனின் காலத்தால் அழியாத 15 பாடல்கள் பண்ணைபுரம் முதல் லண்டன் சிம்ஃபொனி வரை தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற ஊரில் இருந்து, தனது 25வது வயதில் (1968), இசைதான் வாழ்க்கை என்ற முடிவோடு மெட்ராஸ் (சென்னை) வந்தார் இளையராஜா. அவர் அப்போது மேற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள விரும்பினார். இளையராஜாவின் குழுவில் இருந்த பாடகி கமலா, தன்ராஜ் மாஸ்டர் என்பவரைப் பரிந்துரைத்தார். அவரிடம் மாணவராகச் சேர்ந்தார் இளையராஜா. தனது வாழ்க்கையின் முக்கியமான மூன்று பேர் என இளையராஜா குறிப்பிடுவது, தன்ராஜ் மாஸ்டர், இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேசன் மற்றும் கடவுள் மூகாம்பிகை. இதில் ஜி.கே.வெங்கடேசன் என்பவர் 1960கள் மற்றும் 70களில் கன்னட திரைப்படத் துறையில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர். அவரிடம் சிறிது காலம் இசை உதவியாளராகப் பணிபுரிந்தார் இளையராஜா. பட மூலாதாரம்,Ilaiyaraajalive படக்குறிப்பு,தன்ராஜ் மாஸ்டருடன் இளையராஜா "தன்ராஜ் மாஸ்டர்தான் ராசையா என்ற பெயரை மாற்றி ராஜா என வைத்தார். பின்னர் பஞ்சு அருணாச்சலம் ராஜாவை இளையராஜா என்று மாற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'இசைஞானி' என்ற பட்டத்தை வழங்கினார். எல்லோரும் என் பெயரை மாற்றிவிட்டார்கள்," என்று தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஒருமுறை கூறியிருந்தார் இளையராஜா. இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான 'அன்னக்கிளி', 1976இல் வெளியானபோது, அதன் பாடல்கள் வெகு சீக்கிரமாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. காரணம் அதில் ஒலித்த புதுமையான கிராமத்து இசை. "படம் வெளியான நேரத்தில், ஒருமுறை நான் நடைபயிற்சி செய்யக் கிளம்பும்போது, பக்கத்து வீட்டின் வானொலியில் 'அடுத்த பாடல் அன்னக்கிளி படத்தில் இருந்து' என அறிவித்தார்கள். உடனே பக்கத்து வீட்டுக்காரர் 'அன்னக்கிளி பாடல் போடுகிறார்கள்' என்று பிறரையும் அழைத்தார். நான் தெருவைக் கடப்பதற்குள் அனைத்து வீட்டு வானொலிகளிலும் அந்தப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது" எனத் தனது முதல் திரைப்படம் தொடர்பான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருப்பார் இளையராஜா. நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? பிடிபட்டது எப்படி?5 மார்ச் 2025 சப்தம் திரை விமர்சனம்: ஈரம் போல இந்த படத்திலும் தடம் பதித்ததா ஆதி - அறிவழகன் கூட்டணி?28 பிப்ரவரி 2025 இளையராஜாவின் தாக்கம் பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja படக்குறிப்பு,இயக்குநர் பாரதிராஜாவுடன், இளையராஜா அதன் பிறகு, எத்தனையோ பாடல்கள், திரைப்படங்கள் என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார் இளையராஜா. ஆனால் இளையராஜாவின் இசையை, குறிப்பாகப் பின்னணி இசையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற திரைப்படம் என்றால், அது 1977இல் வெளியான இயக்குநர் பாரதிராஜாவின் '16 வயதினிலே'. அன்னக்கிளிக்கும் 16 வயதினிலே படத்திற்கும் ஒரு வருடம்தான் இடைவெளி என்றாலும், இளையராஜா அதற்கு இடையே 11 படங்களுக்கு இசையமைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய இளையராஜா, "16 வயதினிலே படத்திற்கு முன்பு வரை இயக்குநர்கள் கேட்டதை மட்டுமே செய்ய முடிந்தது. ஆனால், அந்தப் படத்தில்தான், பின்னணி இசையில் நான் என்னவெல்லாம் நினைக்கிறேனோ அவற்றையெல்லாம் செய்ய பாரதிராஜா ஒப்புக்கொண்டார். அந்தப் படத்திற்குப் பிறகுதான், எல்லாப் படங்களுக்கும் பின்னணி இசையில் என்னால் முழுமையாக, எந்தத் தயக்கமும் இல்லாமல் பணியாற்ற முடிந்தது" என்று கூறினார். ஒரு காட்சியில் வசனங்கள் ஏதும் இல்லாவிட்டாலும்கூட, தனது பின்னணி இசை மூலமாகவே கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் இளையராஜா வல்லவர். அதற்கு உதாரணமாக, இயக்குநர் பாலு மகேந்திராவின் 'வீடு' திரைப்படத்தில், தனது பேத்தி கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டை முருகேசன் எனும் தாத்தா கதாபாத்திரம் (நடிகர் சொக்கலிங்க பாகவதர்) சுற்றிப் பார்க்கும் ஒரு காட்சியைக் கூறலாம். கோலிவுட்: பல வருடங்களாக தொடரும் கதைத் திருட்டு சர்ச்சை, ஒரு கதையை முறையாக பதிவு செய்வது எப்படி?22 பிப்ரவரி 2025 டிராகன் விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? கல்லூரி நாயகனாக பிரதீப் ரங்கநாதன் கவர்ந்தாரா?21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,Instagram/ilayaraja_official கதை, திரைக்கதை மற்றும் நடிகர்களின் பங்களிப்பைத் தாண்டி இசை மூலம் ஒரு படத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை 1988-இல் வெளியான 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' என்ற திரைப்படம் மூலம் இளையராஜா நிரூபித்திருப்பார். இந்தத் திரைப்படம் மலையாள இயக்குநர் ஃபாசில் (நடிகர் பஹத் ஃபாசிலின் தந்தை) இயக்கிய 'என்டே மாமட்டுக் குட்டியம்மாக்கு' என்ற படத்தின் ரீமேக். தமிழிலும் அவரே இயக்கியிருப்பார். அதே கதை, அதே திரைக்கதை, அதே இயக்குநர். ஆனால் மலையாளத்தில் வேறொரு இசையமைப்பாளர். தமிழுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். தமிழில் வரும் பின்னணி இசை, குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் இசையை, மலையாள படத்தோடு ஒப்பிட்டால் இளையராஜா ஏன் இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பது புரிந்துவிடும். ஒரு குழந்தையைப் பிரிந்து செல்லும் தாயின் உணர்வுகளை மிக அழகாகத் தனது இசையின் வாயிலாகக் கடத்தியிருப்பார். பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja கடந்த 1970களின் இறுதியில் தொடங்கி, 1990களின் தொடக்கம் வரை தமிழ் சினிமாவின் பாடல்களில் இருந்து ஏதேனும் ஒரு பிரபலமான பாடலை போட்டுக் காட்டி, இதற்கு யார் இசையமைப்பாளர் எனக் கேட்டால், யோசிக்காமல் பலரும் கூறும் பதில் 'இளையராஜா'. உதாரணமாக ரஜினிகாந்த் நடித்து 1980களில் வெளியான மனிதன், ராஜா சின்ன ரோஜா, ஊர்க்காவலன், தாய் வீடு போன்ற படங்களின் பாடல்களைக் கேட்கும் பலர், இளையராஜாதான் இசையமைப்பாளர் என்றே நினைப்பார்கள். சங்கர்-கணேஷ், சந்திரபோஸ் போன்ற இசையமைப்பாளர்கள் அப்போது பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ள போதும், '80களில் தமிழ் சினிமாவில் இளையராஜா மட்டுமே இசையமைப்பாளராக இருந்தார் அல்லது ஒரு நல்ல ரெட்ரோ தமிழ்ப் பாடல் என்றால் ராஜாவின் இசையாகவே இருக்கும்' என்ற பிம்பம் உருவாகும் அளவுக்கு அவரது பாடல்கள் பெருமளவில் தாக்கம் செலுத்தின. அதன் தாக்கம் குறித்த ஒரு பிரபலமான உதாரணம் தான், தமிழ்நாட்டின் சிறுநகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களின் பேருந்துகளில் இன்றும் ஒலிக்கும் 'இளையராஜா பாடல்கள்'. மார்ச் 8 அன்று லண்டனில், வேலியன்ட் (Valiant) என்ற பெயரில், இளையராஜா உருவாக்கிய முதல் சிம்ஃபொனி வெளியிடப்பட இருக்கிறது. சிம்ஃபொனிகள் மிகச் சிக்கலான இசை வடிவமாகக் கருதப்படும் நிலையில், இதை வெறும் 34 நாட்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்துள்ளார். இதற்காகக் கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் உள்படப் பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் அவரை நேரில் சந்தித்தும், சமூக ஊடகங்கள் மூலமும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விண்வெளியிலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய சுனிதா வில்லியம்ஸ் - பூமி திரும்புவது எப்போது?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரமலான் நோன்பு இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு முறை என்ன?5 மார்ச் 2025 இளையராஜா எனும் எழுத்தாளர் பட மூலாதாரம்,kumudam puthagam velieedu படக்குறிப்பு,இளையராஜா எழுதிய 'பால் நிலாப் பாதை' என்ற புத்தகம் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்பதைத் தாண்டி, பலரும் அறியாத இளையராஜாவின் மற்றொரு முகம் அவர் ஒரு எழுத்தாளர் என்பது. உண்மைக்கு திரை ஏது? என் நரம்பு வீணை யாருக்கு யார் எழுதுவது? (தொகுப்பு) யாதுமாகி நின்றாய் சங்கீத கனவுகள் வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது வழித்துணை துளிக்கடல் ஞான கங்கா பால் நிலாப் பாதை நாத வெளியினிலே பள்ளி எழுச்சிப் பாவைப் பாடல்கள் இளையராஜாவின் சிந்தனைகள் இளையராஜாவிடம் கேளுங்கள் வெண்பா நன்மாலை ஆதிசங்கரரின் விவேக சூடாமணி இளையராஜா ஆய்வுக் கோவை இவை அனைத்தும் இளையராஜா எழுதிய நூல்கள். "இளையராஜா, மரபுக் கவிதைகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதுவே திரைப்படங்களில் பாடல்கள் எழுதவும், புத்தகங்களை எழுதவும் அவரைத் தூண்டியுள்ளது" என்கிறார் சென்னை கிறித்தவக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் பரத் ஸ்ரீராம். இளையராஜா எழுதிய நூல்கள் குறித்து இவர் ஆய்வு செய்துள்ளார். "பெரும்பாலும் அவர் எழுதிய புத்தகங்களில் 'தத்துவ ஞானம்' சார்ந்தும், 'சித்தர் இலக்கியங்களின்' தொடர்ச்சி போலவும் இருக்கும். அவரது ஆன்மீக ஈடுபாடு, வாழ்க்கை குறித்த அவரது பார்வை ஆகியவற்றை அதில் புரிந்துகொள்ளலாம். தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் எழுதியவை மிக இயல்பாக இருக்கும். திருக்குறள் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் தனது எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பார்," என்கிறார் பரத் ஸ்ரீராம். இளையராஜா எழுதியவற்றில், 'பால் நிலாப் பாதை' என்ற புத்தகத்தில் சிறு வயதில் கம்யூனிசம் மீது தான் கொண்ட ஈர்ப்பு முதல் தனது சினிமா பயணம் வரை பல விஷயங்களை பேசியிருப்பார். தனது புகழ்பெற்ற பாடல்கள் உருவான விதம் குறித்தும் அவர் விவரித்திருப்பார். அதற்குச் சான்றாக, ரஜினிகாந்த் நடிப்பில் 1984இல் வெளியான 'தம்பிக்கு எந்த ஊரு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காதலின் தீபம் ஒன்று' என்ற பாடலைக் கூறலாம். அப்போது ஹெர்னியா அறுவை சிகிச்சையால் பேச முடியாமல் இருந்தபோதும், விசில் சத்தம் மூலம் பாடகர் எஸ்பிபி-க்கு பாடலையும், குழுவினருக்கு இசைக் குறிப்புகளையும் கொடுத்து பாடலை உருவாக்கியதாக புத்தகத்தில் விவரித்திருப்பார் இளையராஜா. பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 இளையராஜாவும் சர்ச்சைகளும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது இளையராஜா இதுவரை ஐந்து முறை இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சாகர சங்கமம், ருத்ர வீணா என இரு தெலுங்கு படங்களுக்கும், சிந்து பைரவி என்ற தமிழ் படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். பழசிராஜா என்ற மலையாள திரைப்படத்திற்காகவும் இயக்குநர் பாலாவின் தாரைத் தப்பட்டை படத்திற்காகவும் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை இளையராஜா வென்றுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. அதேநேரம் இளையராஜா குறித்த சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 2022இல், பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அண்ட் மோதி' என்ற தலைப்பில் ப்ளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்ட நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அதே ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டார். பல்வேறு தருணங்களில் அவர் தனது மனதில் பட்டதை அப்படியே பேசியதும், 'பாடல்களுக்கான காப்புரிமை' தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு மற்றும் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண், பாடகி சித்ரா ஆகியோருக்கு அனுப்பிய நோட்டீஸ் போன்றவையும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதையெல்லாம் கடந்து அவரது இசைக்காக இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் கொண்டாடப்படுவார் என்பதே அவரைக் கொண்டாடும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpwdyvelg7eo
-
கச்சதீவு திருவிழாவிற்கான திகதி அறிவிப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் 07 Mar, 2025 | 11:08 AM வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (06) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு கடற்படையினரின் ஒத்துழைப்பு அவசியமானது என குறிப்பிட்டதுடன், பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்கள் 9,000 பேர்வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பாா்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து செல்லுகின்ற பயணிகளுடைய பதிவுகள் குறிகாட்டுவானில் மேற்கொள்ளபடுமெனவும் ஏனைய பிரதேசங்களிலிருந்து செல்லுகின்றவர்கள் கடற்பாதுகாப்பு கருதி தங்களுடைய பிரதேசங்களில் உள்ள கடற்படை முகாம்களில் தங்களுக்குரிய பங்குகளிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1,300 ரூபாய் அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1,000 ரூபாய் அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இம்முறை சாரணர்கள் 25 பேர்வரை இத்திருவிழாவில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுதுடன், கடற் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள படகுகள் சேவை மற்றும் அவை புறப்படும் நேரங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டன. யாத்திரிகர்களுக்கு 14 ஆம் திகதி இரவு உணவும், 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், ஆலயச்சூழல் துப்பரவு செய்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம், தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகள் (Dialog,mobital) ஊடகங்களுக்கான அனுமதி தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, மாவட்ட பிரதம கணக்காளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதி , யாழ்ப்பாண சாரணர் பிரதிநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/208508
-
தனியார் காணியில் தையிட்டி விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? - சபையில் எஸ். சிறிதரன் கேள்வி
Published By: Vishnu 07 Mar, 2025 | 03:45 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்-தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27 /2 பிரகாரம் ''திஸ்ஸ ராஜமகா விகாரை''தொடர்பில் கேள்விகளை முன்வைத்தார். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிக்குள் 'திஸ்ஸ ராஜமகா விகாரை என்ற பெயரில் விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா?, அந்த விகாரை அமைக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 20 பரப்பு காணியின் உரிமையாளர்கள் விகாரையை அகற்றி தங்களின் நிலங்களை தங்களிடம் கையளிக்குமாறு மிக நீண்டகாலமாக அமைதிவழி போராட்டம் நடத்திவருவதை அமைச்சர் அறிவரா? இவ்விகாரை அமைந்திருக்கும் காணிகள் திருத்தப்பட்டவாறாக 1950ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க காணி சுவிகரிப்பு சட்டத்தின் கீழ் அரசினால் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளதாயின் அது தொடர்பான வர்த்தமானி பிரசுரத்தின் இலக்கத்தினையும் என்ன நோக்கத்திற்காக கவீகரிக்கப்பட்டது என்பதனையும் அமைச்சர் அறியத்தருவாரா ஒருநோக்கத்திற்காக சுவீகரிக்கப்படும் காணியினை இன்னொரு நோக்கத்திற்காக பாவிக்க முடியாது என்பதனை அமைச்சர் அறிவாரா? அவ்விகாரை அமைந்துள்ள காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதனை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா? என பல கேள்விகளை சிறீதரன் முன்வைத்தார். இந்த கேள்விகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக ஒருவார கால அவகாசம் வழங்குமாறு கோருகின்றேன். காணி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தகவல்கள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்பின்னர் முழுமையான பதிலை வழங்குகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/208496
-
டிரம்ப்; அமெரிக்க காங்கிரசிற்கான உரை
கடவுளால் காப்பாற்றப்பட்டுள்ளேன்; அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் உரை இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டபின், நாடாளுமன்றத்தில் தனது முதல் மற்றும் முக்கியமான உரையை ஆற்றியிருக்கிறார். ‘அமெரிக்க கனவைப் புதுப்பித்தல்’ எனும் கருப்பொருளில் ட்ரம்ப் உரையாற்ற இருக்கிறார் என்று வெள்ளை மாளிகை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், ட்ரம்ப் தனது உரையைத் தொடங்கும்போதே, ‘உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என ஜனநாயகக் கட்சியின் அல் க்ரீன் முழக்கமெழுப்பினார். உடனே குடியரசுக் கட்சியினர் ’USA! USA!’ எனக் கோஷமிட்டனர். ட்ரம்பின் உரையைத் தொந்தரவு செய்ததற்காக சபாநாயகர் மைக் ஜான்சன், அல் க்ரீனை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். க்ரீன் வெளியேறும்போது குடியரசுக் கட்சியினர் எழுந்து நின்று ‘Get out!’ என்றும் ‘Goodbye!’ என்றும் கோஷமிட்டனர். கடும் கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ட்ரம்ப் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து சில முக்கியப் பகுதிகளை இங்கு காணலாம்.. “பெரும்பாலான நிர்வாகங்கள் நான்கு அல்லது எட்டு ஆண்டுகளில் சாதித்ததை விட நாங்கள் 43 நாட்களில் அதிகமாகச் சாதித்துள்ளோம். மேலும், நாங்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளோம். கடந்த நிர்வாகத்திடமிருந்து நாம் பொருளாதாரப் பேரழிவைப் பெற்றோம் என்பது உங்களுக்குத் தெரியும். 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான பணவீக்கத்தை நாம் சந்தித்தோம். அவர்களது கொள்கைகள் எரிசக்திகளின் விலைகளை உயர்த்தின, மளிகைப் பொருட்களின் விலைகளை அதிகரித்தன, அத்தியாவசிய தேவைகளையே மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு எட்டாதவாறு செய்தது. மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக நமக்கு எதிராக அதிக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக அவ்விதிமுறைகளைப் பயன்படுத்தத் தொடங்குவது நமது முறை. ஜப்பான், தென் கொரியா மற்றும் பிற நாடுகள் அலாஸ்காவில், பிரம்மாண்ட இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தில் அமெரிக்காவுடன் கூட்டு சேர விரும்புகின்றன. இந்த குழாய்திட்டம் உலகின் மிகப்பெரிய குழாய்திட்டங்களில் ஒன்றாக இருக்கும். குழந்தைகள் மீதான பாலியல் மாற்றங்களை நிரந்தரமாகத் தடை செய்யும் மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டுமென விரும்புகிறேன். ‘குழந்தை தவறான உடலில் சிக்கிக் கொள்கிறது’ எனும் பொய்யை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அன்று பட்லரில் (ட்ரம்பிற்கு எதிரான துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம்) என் உயிர் காப்பாற்றப்பட்டது நல்ல காரணத்திற்காகத்தான் என நான் நம்புகிறேன். அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்க கடவுளால் நான் காப்பாற்றப்பட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315714
-
ஒரே நேரத்தில் 3 பெண்களை காதலித்த இளைஞர் ஏற்காடில் இருவர் உதவியுடன் முதல் காதலியை கொன்றது எப்படி?
பட மூலாதாரம்,Police Department படக்குறிப்பு,கொலை செய்யப்பட்ட லோகநாயகி கட்டுரை தகவல் எழுதியவர்,சேவியர் செல்வக்குமார் பதவி,பிபிசி தமிழ் 6 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏற்காட்டில், கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று இளம் பெண் ஒருவர் மயக்க மருந்து செலுத்தி மலைப் பகுதியில் இருந்து துாக்கி எறியப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று மீட்கப்பட்டது. இதுதொடர்பாக, பொறியியல் மாணவர் ஒருவர், பெண் ஐடி ஊழியர் ஒருவர், ஒரு நர்சிங் கல்லுாரி மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர், மூன்று பெண்களையும் (கொலை செய்யப்பட்ட பெண், கைது செய்யப்பட்ட பெண்கள்) காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு, விஷ ஊசி போட்டு அப்பெண் கொலை செய்யப்பட்டதாகப் பரவியுள்ள தகவலை காவல்துறையினர் மறுத்துள்ளனர். 20 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் உடல் மீட்பு சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில், கடந்த புதன்கிழமையன்று 20 அடி பள்ளத்தில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் உடலுக்கு அருகிலிருந்த கைப்பையில் ஓர் அடையாள அட்டை, பான் கார்டு, தனியார் பெண்கள் விடுதியில் பணம் செலுத்தியதற்கான ரசீது, 200 ரூபாய் பணம் இருந்துள்ளது. அவற்றில் இருந்து, இறந்து கிடந்தவர் சேலத்திலுள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் பணியாற்றும் ஆசிரியர் லோகநாயகி (வயது 35) என்பது தெரிய வந்தது. மேலும் சேலத்தில் இவர் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர் இவரைக் காணவில்லை என்று அவர் ஏற்காடு சென்ற மறுநாளே பள்ளபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பது தெரிய வந்ததாக ஏற்காடு நகர கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தனி ஒருவன்'5 மார்ச் 2025 ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,அப்துல் ஹபீஸ் அதன் பிறகு, அவர் பயன்படுத்தி வந்த அலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டவர்களின் எண்களை வைத்து காவல்துறையினர் விசாரணையைத் துவக்கியுள்ளனர். அதில்தான், இவர் யாரால், எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வந்ததாக ஏற்காடு காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் சார்பு ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி உள்ளிட்ட காவல்துறையினர் பிபிசி தமிழிடம் கூறினர். ''கடைசியாக அந்தப் பெண்ணுக்கு பேசிய மொபைல் எண்ணைப் பார்த்தபோது, அது பெரம்பலுாரில் தனியார் பொறியியல் கல்லுாரியில் கணினி அறிவியல் படிக்கும் அப்துல் ஹபீஸ் (வயது 22) என்பதைக் கண்டுபிடித்தோம். அவரைப் பிடித்து விசாரித்ததும், இந்தக் கொலையின் முழு விவரமும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில்தான் அவரையும், இரண்டு பெண்களையும் கைது செய்தோம்'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் காவல் சார்பு ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி. 'வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை' - சமையல், வீட்டை சுத்தப்படுத்துவதில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே பாகுபாடா?27 பிப்ரவரி 2025 இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொலை - எல்லையில் என்ன நடந்தது?5 மார்ச் 2025 வீட்டை விட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய லோகநாயகி பட மூலாதாரம்,Police Department படக்குறிப்பு,மோனிஷா இந்தக் கொலையில் அப்துல் ஹபீஸ் உடன் தாவியா சுல்தானா (வயது 22), மோனிஷா (வயது 21) என்ற இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுல்தானா, சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர். மோனிஷா, திருச்சியைச் சேர்ந்த ஒரு நர்சிங் கல்லுாரி மாணவி. காவல்துறையினர் தந்த தகவலின்படி, கொலை செய்யப்பட்ட லோகநாயகிக்கு தாய், தந்தை இல்லாததால், அவருடைய சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎட் படித்து முடித்திருந்த லோகநாயகி, தன்னைவிட வயதில் இளையவரான அப்துல் ஹபீஸை காதலித்தது பற்றி வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு சித்தி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், 3 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறி, சேலத்திற்கு வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கிப் பயிற்றுநராக வேலை பார்த்துள்ளார். ஆனால், அப்துல் ஹபீஸ் ஏதேதோ காரணம் சொல்லி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதற்கிடையில் சுல்தானாவுடன் அப்துல் ஹபீஸ் நெருங்கிப் பழகுவதைத் தெரிந்து கொண்ட லோகநாயகி, தன்னை உடனே திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்'' என்கின்றனர் காவல்துறையினர். கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று வாடகை காரில் நான்கு பேரும் ஏற்காடு சென்றதாகவும், அங்கு வைத்தே இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்காகவே வாடகை காரை ஓட்டுநர் இல்லாமல் அப்துல் ஹபீஸ் ஓட்டி வந்ததையும் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ''அப்துல் ஒரே நேரத்தில் 3 பெண்களிடமும் பழகியுள்ளார். இவர்களில் லோகநாயகி திருமணத்துக்கு மிகவும் வலியுறுத்தியதால் அவரைக் கொலை செய்ய முடிவெடுத்த அப்துல் ஹபீஸ், மற்ற இருவரிடமும் லோகநாயகியை பற்றி மிகவும் தவறாகச் சித்தரித்துள்ளார். அவர் இருந்தால் உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மற்ற இருவரையும் தனித்தனியாக ஏமாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து, மற்ற இரு பெண்களின் உதவியுடனேயே இந்த கொலையை அவர் செய்து, மலையில் இருந்து உடலை எறிந்துள்ளார்'' என்று சார்பு ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி தெரிவித்தார். உத்தராகண்ட்: 'எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு ஏன் தலையிடுகிறது?' லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் அச்சம் என்ன?6 மார்ச் 2025 இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும்?விதிமுறைகள் என்ன?6 மார்ச் 2025 ஏற்காடு மலைப்பாதையில் கண்காணிப்பு இல்லையா? பட மூலாதாரம்,Police Department படக்குறிப்பு,தாவியா சுல்தானா விஷ ஊசி போட்டு லோகநாயகி கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் பரவியுள்ள தகவல்களை ஏற்காடு காவல்துறை மறுத்துள்ளது. அதுகுறித்துப் பேசியபோது, "நர்சிங் மாணவியான மோனிஷாவின் உதவியுடன், அறுவை சிகிச்சைக்குத் தரப்படும் மயக்க மருந்தை, லோகநாயகி கையில் ஏற்பட்ட காயத்துக்கு வலி நீக்கும் ஊசி என்று கூறி, இரு முறை செலுத்தியுள்ளனர். அதன் பிறகு மலையிலிருந்து உடலைத் துாக்கி எறிந்துள்ளனர்" என்று காவல்துறை தெரிவித்துள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே இன்னும் தெளிவான முடிவுகளை அறிய முடியுமென்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். படக்குறிப்பு,சேலம் டிஐஜி உமா ஏற்காடு மலைப்பகுதி ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்த நேரத்தில், இதே ஏற்காடு மலைப் பாதையில் ஒரு சூட்கேஸில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்தக் கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இப்போது ஓர் ஆண்டு கழித்து அதே மலைப்பாதையில் மற்றொரு கொலை நடந்துள்ளது. இது பற்றி சேலம் டிஐஜி உமாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''கடந்த ஆண்டில் நடந்த கொலையில், வேறு எங்கோ கொலை செய்துவிட்டு, இங்கு வந்து சூட்கேஸை துாக்கி வீசிச் சென்றிருந்தனர். இப்போது கொலையே அந்தப் பகுதியில்தான் நடந்துள்ளது. ஏற்காடுக்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அந்தப் பாதையில் காவல்துறை சோதனைச் சாவடியும் உள்ளது. அவ்வப்போது வாகனப் பரிசோதனையும் நடத்தப்படுகிறது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. மலைப் பாதையில் காடுகள் அடர்ந்த பகுதியில் கேமராக்களை நிறுவ இயலாது. ஆனால் அந்தப் பாதையில் காவல்துறையினர் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy5np00ve0qo
-
108ஆவது பொன் அணிகளின் போர் : சென்.பெட்றிக்ஸை 52 வருடங்களின் பின்னர் வெற்றிகொள்ளுமா யாழ்ப்பாணக் கல்லூரி ?
சமநிலையில் மோதப்படும் 108ஆவது பொன் அணிகளின் போர்; யாழ்ப்பாணக் கல்லூரி 153, சென். பற்றிக்ஸ் 50 - 2 விக். Published By: Vishnu 06 Mar, 2025 | 09:05 PM (நெவில் அன்தனி) சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமான சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கொட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர்களில் ஒருவரான ஈ. எமக்ஷன் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். ஆனால் மற்றைய ஆரம்ப வீரர் ஆர். ஜோன்சனும் 3ஆம் இலக்க வீரர் கே. ஹரிஷனும் 2ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். ஹரிஷன் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆர். ஜோன்சன் 6 பவுண்டறிகளுடன் 61 ஒட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் வி. விஷ்னுகோபன் 30 ஓட்டங்களையும் அணித் தலைவர் எஸ். மதுசன் 12 ஓட்டங்களையும் எஸ். கோபிஷன் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஜயகுமார் எவொன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பிரேமநாயகம் மதுசன் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விமலதாஸ் பிரியங்கன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குமணதாசன் சாருஷன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் சென். பற்றிக்ஸ் அணி அதன் முதல் இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. விமலதாஸ் டிபானோ 7 ஓட்டங்களுடனும் ரொபின்சன் டினோவன் (ரன் அவுட்) ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழந்தனர். ஸ்டீவ் ஆதித்தியா 21 ஓட்டங்களுடனும் டேவிட் அபிலாஷ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் வி. விஷ்னுகோபன் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/208486
-
தத்தெடுத்த குழந்தையை கொலை செய்த தம்பதிக்கு மரணதண்டனை
இலங்கையில் தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை 'சித்திரவதை செய்து கொன்ற' தம்பதிக்கு மரண தண்டனை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் 6 மார்ச் 2025 எச்சரிக்கை: இந்த கட்டுரையில் மனதை சங்கடப்படுத்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் இலங்கையில், தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக ஒரு தம்பதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று, வியாழக்கிழமை(மார்ச் 06) மரண தண்டனை விதித்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சுஜீவா நிசாங்கா தீர்ப்பு வழங்கினார். அதன்படி, கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட மாளிகாவாத்தையை சேர்ந்த முகமது அலி முகமது உஸ்மான் மற்றும் முகமது ஃபாஹிம் ஃபாத்திமா சிஃபானா ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு மாளிகாவத்தை பகுதியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி அல்லது அதனை ஒட்டிய காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது நீண்ட காலம் நீடித்த இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி சுஜிவா நிசாங்கா, பிரதிவாதிகளுக்கு எதிரான கொலைக் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படாமல் புதைக்கப்படவிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி நடத்தினர். தொடர்புடைய இடத்தில் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து குழந்தையின் மரணத்திற்கு காரணத்தை அறிய உடற்கூறாய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் மருத்துவ அறிக்கை குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருப்பதை காட்டுவதாக நீதிபதி கூறினார். இரு காதலிகளுடன் சேர்ந்து மற்றொரு காதலியைக் கொன்ற கல்லூரி மாணவர் - ஏற்காடு மலையில் என்ன நடந்தது?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொகுதி மறுசீரமைப்பு: தமிழக அரசின் தீர்மானங்கள் உணர்த்துவது என்ன? கோரிக்கைகள் சரியானதா?6 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images உடலில் காயங்கள் குழ்ந்தையின் உடலில் சுமார் 90 காயங்கள் காணப்பட்டன. அவை தீக்காயங்கள் மற்றும் தாக்கியதால் ஏற்பட்டவை என மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் விரைப் பைகள் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் மருத்துவ அறிக்கை காட்டியது. அதன்படி, அந்த குழந்தை கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகப்பட்டிருப்பதாகவும், அதன் மரணம் திட்டமிட்ட வன்முறையால் நிகழ்ந்தது மருத்துவ ஆதாரங்கள் மூலம் தெரியவருவதாகவும் நீதிபதி தெரிவித்தார். குழந்தையின் மரணம் நீண்ட காலமாக ஏற்படுத்தப்பட்ட தீக்காயங்களால் ஏற்பட்டதாக தடயவியல் மருத்துவ அதிகாரி முடிவு செய்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயிரிழந்த குழந்தையை முதலில் கொழும்பு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும், பின்னர் அங்கு அனுமதிக்காமல் கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவரிடம் கொண்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். குழந்தை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பராமரிப்பில் இருந்ததற்கு போதிய ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக எந்த சந்தேகமும் எழவில்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இறந்த குழந்தை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பராமரிப்பில்தான் வாழ்ந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் தடயவியல் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் அடிப்படையில் குழந்தையின் இறப்புக்கு குற்றம்சாட்டப்பட்டவர்களே பொறுப்பு என நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி அவர்கள் இருவரும் கொலைக் குற்றவாளிகள் என நீதிபதி கூறினார். இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும்?விதிமுறைகள் என்ன?6 மார்ச் 2025 சாதிரீதியாக கோவில்களுக்கு உரிமை கோர முடியுமா?நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?6 மார்ச் 2025 தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன்பாக நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர். தனக்கு வேறு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் இந்த குழந்தையை தனது சொந்த விருப்பத்தின்படியே தத்து எடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தம்மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர் நீதிமன்றத்தில் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvge072e024o
-
யாழ். சென். ஜோன்ஸ் - யாழ். மத்திய அணிகள் மோதும் பரபரப்பான 118ஆவது வடக்கின் சமர் நாளை ஆரம்பம்
118ஆவது வடக்கின் சமர் : யாழ். மத்திய அணி 131, சென். ஜோன்ஸ் 104 - 3 விக். அஷ்னாத் 5 விக்கெட் குவியல் Published By: Vishnu 06 Mar, 2025 | 08:54 PM (நெவில் அன்தனி) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமான சென். ஜோன்ஸ் அணிக்கும் யாழ். மத்திய அணிக்கும் இடையிலான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மத்திய அணியை 131 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய சென். ஜோன்ஸ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலமான நிலையில் இருந்தது. (படம் உதவி : முருகையா சரவணன்) சென். ஜோன்ஸ் வீரர் அஷ்னாத் சகலதுறைகளிலும் பிரகாசித்து அணியை நல்ல நிலையில் இட்டுள்ளார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ். மத்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பின்வரிசையில் அன்ரன்ரேஷான் அபிஷேக் அதிகபட்சமாக 27 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட அணித் தலைவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரருமான ரஞ்சித்குமார் நியூட்டன், சதாகரன் சிமில்டன் ஆகிய இருவரும் தலா 24 ஓட்டங்களைப் பெற்றனர். சென். ஜோன்ஸ் பந்துவீச்சில் 6ஆம் வருட வர்ண வீரர் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 18.2 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். முர்வின் ரெண்டியோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் சென். ஜோன்ஸ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் பிரகாரம் யாழ். மத்திய அணியை விட 27 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் பின்னிலையில் இருக்கிறது. சென். ஜோன்ஸ் அணியின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. மொத்த எண்ணிக்கை 2 ஓட்டங்களாக இருந்தபோது அதன் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டதுடன் மற்றைய ஆரம்ப வீரர் சற்குணராஜா வினுக்ஷன் 2 ஓட்டங்கள் பெற்ற நிலையில் உபாதை காரணமாக ஓய்வுபெற்றார். இந் நிலையில் ராமன் அனுஷாந்த், முர்பின் ரெண்டியோ ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர். முர்பின் ரெண்டியோ 20 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த வினுக்ஷன் சொற்ப நேரத்தில் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ராமன் அனுஷாந்த் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 49 ஓட்டங்களுடனும் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 29 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4 ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். பந்துவீச்சில் ரஞ்சித்குமார் நியூட்டன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/208481
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
தேசபந்துவை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தேஷபந்து தென்னகோனை கண்டுபிடிக்கும் பணி குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்புடைய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக சிஐடிக்கு தெரிவிக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன், முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதற்கான எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/315767
-
108ஆவது பொன் அணிகளின் போர் : சென்.பெட்றிக்ஸை 52 வருடங்களின் பின்னர் வெற்றிகொள்ளுமா யாழ்ப்பாணக் கல்லூரி ?
Published By: Vishnu 06 Mar, 2025 | 10:05 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது பழைமைவாய்ந்த சென். பெட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் சென். பெட்றிக்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தபோதிலும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டிருந்தது. சென். பெட்றிக்ஸ் கல்லூரி இந்த வருடம் 175 வருட பூர்த்தியைக் கொண்டாடுவதை முன்னிட்டு முதல் தடவையாக பொன் அணிகளின் போர் மூன்று நாள் போட்டியாக நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடப் போட்டியில் முடிவு கிட்டும் என நம்பப்படுகிறது. பொன் அணிகளின் போரில் கடந்த 52 வருடங்களாக வெற்றிபெறாமல் இருந்துவரும் யாழ்ப்பாணக் கல்லூரி இம்முறை வெற்றி தாகத்தை தீர்த்துக்கொள்ளும் எனவும் அதேவேளை தனது 175 வருடப் பூர்த்தியை சென். பெட்றிக்ஸ் கல்லூரி வெற்றியுடன் கொணடாட முயற்சிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணக் கல்லூரி கடைசியாக 1973ஆம் ஆண்டு எம். கணேசலிங்கம் தலைமையிலும் சென் பெட்றிக்ஸ் கல்லூரி 2023இல் எஸ். கீர்த்தன் தலைமையிலும் வெற்றிபெற்றிருந்தன. கடந்த வருடம் (2024) வரை இரண்டு - நாள் போட்டியாக நடத்தப்பட்டுவந்த பொன் அணிகளின் போரில் சென் பெட்றிக்ஸ் கல்லூரி 35 - 16 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 31 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது. சென். பெட்றிக்ஸ் கல்லூரி அணிக்கு பற்குணம் மதுஷன் தலைவராகவும் யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கு சிதம்பரலிங்கம் மதுஷன் தலைவராகவும் விளையாடுகின்றனர். இதேவேளை, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 32ஆவது ராஜன் கதிர்காமர் கிண்ணத்துக்கான 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் இரண்டு கல்லூரி அணிகளும் பங்குபற்றும் அருட்தந்தை ஜீ. ஏ. பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் வெற்றிக் கிண்ணத்துக்கான 5ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. அணிகள் சென். பெட்றிக்ஸ் கல்லூரி: பற்குணம் மதுஷன் (தலைவர்), கே. சாருஷன், ஆர். ஷியாந்த்சன், டி. அபிலாஷ், வி.வி. பிரியங்கன், பி. மதுஷன், ஆர்.பி. டினோவன், எஸ். ஷெஹான், வி. எவொன், கே. லிக்ஷன், வி. டிஃபானோ, எம்.எஸ். ஆதித்யா, எஸ்.என். ஹரின் ஏட்ரியன், எஸ். ஸ்மித் ஸெனாரி, ஜே. டினுலக்ஷான், ரி. ஜோயேஷ், பி. சிபிஷாந்த், எஸ். ஜனுஷன், பி.எம். டெவின். பயிற்றுநர் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்: ஏ. எஸ். நிஷாந்தன், ஆலோசக பயிற்றுநர்: எஸ். சகாயராஜா, பொறுப்பாசிரியர்: ஜீ. ரஞ்சித் தேவராஜன். யாழ்ப்பாணக் கல்லூரி: எஸ். மதுசன் (தலைவர்), ரீ. டேமியன் (உதவித் தலைவர்), ஆர். ஜோன்சன், ஐ. இமக்ஷன், கே. புவினயன், ரி. கார்த்திகன், வி. விஷ்னுகோபன், ஏ. ரித்மன், எஸ்.கே. ஹாமிஷ், கே. ஹரிஷன், ஏ. கர்மிஷன், எஸ். கபிஷன், எஸ். தக்சிகன், கே. திருக்குமரன், எஸ். பங்கஜன், எஸ். அஷ்மின், யூ. ஹென்ரிக்சன், எஸ். அட்சயன், பி. கெவின். பயிற்றுநர்: பி. ஸ்ரீகுகன், உடற்கல்வி பணிப்பாளர்: ஆர். குகன், பொறுப்பாசிரியர்: பி.எம்.எம். தேவதர்ஷன். https://www.virakesari.lk/article/208393
-
பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது
மேர்வினுடன் கைதுசெய்யப்பட்ட மேலும் ஆறு பேர் களனி பிரதேச சபைக்குச் சொந்தமான 0.2137 ஹெக்டேயர் நிலத்திற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ. 75 மில்லியன் மோசடி செய்ததற்காக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா, பத்தரமுல்லையில் உள்ள பெலவத்தை பகுதியில் வைத்து புதன்கிழமை (05) இரவு கைது செய்யப்பட்டார். இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. https://thinakkural.lk/article/315765
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாசின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்கமுடியாது - சமூக ஊடக பதிவில் டிரம்ப் மிரட்டல் Published By: Rajeeban 06 Mar, 2025 | 08:02 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் நான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாஸ் அமைப்பின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தனது வேலையை முடிப்பதற்காக நான் தேவைiயான அனைத்தையும் அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நான் சொல்வதை செய்யாவிட்டால் ஹமாசின் ஒரு உறுப்பினர் கூட பாதுகாப்பாகயிருக்கமுடியாது என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்யுங்கள், நீங்கள் கொலை செய்தவர்களின் உடல்களை திருப்பிதாருங்கள் இல்லாவிட்டால் உங்கள் கதை முடிவிற்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளார். காசா பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி காசா மக்களே உங்களிற்கு மிகவும் அழகான எதிர்காலம் காத்திருக்கின்றது, பணயக்கைதிகளை வைத்திருந்தால் நீங்கள் மரணிக்கவேண்டிய நிலையேற்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208407
-
மதுசாரம், புகைப்பொருட்கள், போதைப்பொருட்களின் பாவனைகளால் எவ்வாறு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்?
மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் பெண்களின் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுசாரத்தையும், புகைப்பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுசார நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்க்களில் முயற்சித்து வருகின்றன. மேலும் பெண்களின் மதுசார பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் மதுசாரத்தினால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பெண்கள் முகங்கொடுக்கின்றனர். இவற்றை வெளிக்கொணரும் வகையிலும், ஏனையோரின் மதுசார பாவனையினால் பெண்கள் முகங்கொடுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் 2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது ஆய்வொன்றினை மேற்கொண்டது. 25 மாவட்டங்களிலிருந்தும் 15 வயதிற்கும் மேற்பட்ட 1000 பெண்களிடம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது மதுசார பாவனையினால் பெண்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர், மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? என்பனவற்றை ஆராயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். ஆய்வின் சாரம்சம் 54 வீதமான பெண்கள் மதுசார பாவனையினால் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் 42 வீதமான பெண்கள் உள ரீதியாக பாதிப்படைகின்றனர் 69 வீதமான பெண்கள் பொது இடங்களில் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் பெண்களின் உரிமைகளுடன் இணைத்து மதுசார நிறுனங்கள் அதிகமான விளம்பரங்களை மேற்கொள்ளுகின்றன. எனினும் 37 வீதமான பெண்கள் இன்னமும் அது தொடர்பாக அறிந்திருக்கவில்லை. மதுசார நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருளை விற்பனை செய்வதற்கு பெண்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன என 64 வீதமான பெண்கள் குறிப்பிட்டனர். 54 வீதமான பெண்கள் மதுசார பாவனையினால் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்பது எமது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பல்வேறு தரப்பினர்களின் மதுசார பாவனையால் பெண்கள் பாதிப்படைகின்றனர். குறிப்பாக 27.4 வீதமான பெண்கள் அயலவர்களின் பாவனையாலும், 27 வீதமான பெண்கள் இணந்தெரியாதோர்களின் பாவனையாலும், 20 வீதமான பெண்கள் உறவினர்களின் பாவனையாலும் பிரச்சினைகளுக்கு ஆளாகுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மதுசார பாவனையின் காரணமாக 42 வீதமான பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். 38.2 வீதமான பெண்கள் தமது மகிழ்ச்சி சீர்குழைவதாக குறிப்பிட்டுள்ளனர், 24 வீதமானோர் தமது சுதந்திரம் மட்டுப்படுவதாகவும், 27.3 வீதமானார் பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பதாகவும், 12 வன்முறைகளுக்கு ஆளாகுவதாகவும், 18 வீதமான பெண்களின் கல்விக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. மதுசார பாவனையின் காரணமாக பொது இடங்களில் 69 பெண்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர், மேலும் தாங்கள் உட்பட தங்களது நண்பிகளும் இவ்வாறான அசௌகரியங்களுக்கு ஆளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதுசார பாவனையின் காரணமாக பொது இடங்களில் அசௌகரியப்படும் பெண்களில் அதிகமானோர் அவற்றிற்கான பிரதிபலிப்புக்களை வழங்குவதில்லை. 61 வீதமான பெண்கள் பொது இடங்களில் அசௌகரியத்திற்கு ஆளாகினாலும் அதற்கான பிரதிபலிப்புக்களை வழங்குவதில்லை என குறிப்பிட்டிருந்தனர். 11 வீதமான பெண்கள் அது தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களை மதுசார பாவனைக்கு ஈர்ப்பதற்காக மதுசார நிறுவனங்கள் வெவ்nவுறு வழிகளிலும் முயற்சிப்பதாக 40 வீதமான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. பெண்களின் உரிமையுடன் இணைத்து மதுசாரத்தை விளம்பரப்படுத்துவதாக 29 வீதமான பெண்கள் குறிப்பிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது, மேலும் 34 வீதமானோர் இது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகக் காணப்பட்டமை ஆய்விலிருந்து தெரிய வருகின்றது. மதுசார நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை விளம்பரப்படுத்துவதற்காக பெண்களை விளம்பர நாமமாக பயன்படுத்துவதால் பெண்களின் உரிமை மீறப்படுவதாக 64 வீதமான பெண்கள் கூறியிருந்தனர். பெண்களை இலக்கு வைத்து திரைப்படங்களில் மதுசார விளம்பரங்கள் இடம்பெறுவதாக 54 பெண்கள் குறிப்பிட்டதோடு, 43 வீதமானோர் முகப்புத்தகங்களில் விளம்பரங்கள் இடம்பெறுவதாகவும், 29.3 வீதமானோர் டிக்டொக் மூலம் விளம்பரம் இடம்பெறுவதாகவும், வெவ்வேறு சமூக வலைதளங்களின் ஊடாக இலக்கு வைக்கப்பட்டு விளம்பரங்கள் இடம்பெறுவதாகவும், விளம்பரங்கள் 24.2 வீதமானோர் நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் இம்பெறுவதாகவும், 23.6 வீதமானோர் ஒன்றுகூடல்களின் போது விளம்பரப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். பெண்கள் உடல், உள ரீதியாக சமூகத்தில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்ற மிகவும் முக்கியமான தரப்பினராகும். ஆகவே ஆண்கள் ஏற்கனவே சிக்கியிருக்கின்ற மதுசாரம் எனும் பிரயோசனமற்ற வலையில் பெண்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை குறைப்பதற்காகவும் பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் விளப்பரங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமான கீழ்வரும் பரிந்துரைகளை முன்வைக்கின்றது. மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்திற்கமைய பெண்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பினரையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மதுசாரம் மற்றும் புகைப்பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் விளம்பரங்கள் இன்னமும் வெவ்வேறு வலைதளங்களில் மேற்கொள்ப்படுகின்றது. ஆகவே Nயுவுயு சட்டத்தை வலுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும். மதுசாரம் என்பது பிரயோசனமற்ற ஒன்று என்கின்ற விழிப்புணர்வை பெண்கள் ஏற்படுத்த வேண்டும். மதுசாரம் எனும் போர்வையில் மேற்கொள்ளுகின்ற தொந்தரவுகளுக்கு பிரதிபலிப்புக்களை வழங்குவதற்கு பெண்களை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எமது நாடானது மிகவும் கலாச்சாரம் பொருந்திய நாடாகும் “அம்மா”எனும் பதம் அதிலுள்ள அன்பு, அரவணைப்பு, மதிப்பு ஆகியவை அனைத்து பெண்களிடத்திலும் செறிந்து காணப்படுகின்ற அழகிய பெறுமதியான சமூகம் வாழும் நாடாகும். ஆகவே இப்பெறுமதியை சீர்குழைப்பதற்கு மதுசார நிறுவனங்கள் பெரிதும் முயற்சிக்கின்றன. ஆகவே பெண்களை இலக்கு வைத்து மதுசார நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை வெளிக்கொணர்ந்து, அதற்கு ஏமாறாமல், அவறறை முற்றுமுழுதாக கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். பெண்களின் சுதந்திரம், உரிமை என்பன தொடர்பான தெளிவு மற்றும் இவற்றை காரணமாகக்கொண்டு எமது கலாச்சாரத்தை அழிப்பதற்கு எவ்வாறு மதுசாரம், மற்றும் புகையிலை நிறுவனங்கள் திட்டமிடுகின்றன என்கின்ற தெளிவும் சிறு வயதிலிருந்தே பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும். https://thinakkural.lk/article/315737
-
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; இராணுவத்தினர், பொலிஸாருக்கு நேரடித்தொடர்பு - தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டு
Published By: Digital Desk 2 06 Mar, 2025 | 09:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விநியோகம், பாவனைகளில் இராணுவத்தினர்,பொலிஸாருக்கு நேரடித்தொடர்புகள் உண்டு. அவர்கள் தான் போதைப் பொருளுக்கு முழுக் காரணம் என்பதனை புரிந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டினர். வடக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை தடுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி. ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கட்சிகளின் எம்.பி.க்கள் இவ்வாறுசுட்டிக்காட்டினர். வடக்கில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையை தடுப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எம். பி. உரையாற்றுகையில், எமது இளைஞர்களிடையே போதைப் பொருள் பாவனை சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள், வன்முறைகள் சமுகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன . பெண்கள், பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையங்கள் இல்லாமை இதற்கு பெரும் காரணியாக இருக்கின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இதனால் புனர்வாழ்வளித்தல், சிறுவர்கள், பெண்களை பாதுகாத்தல் என்பனவும் அவசியமாகும். இதில் மாவட்ட செயலாளர்கள், பொலிஸார், கிராமிய தலைவர்கள் ஆகியோர்களை உள்ளடக்கியதாக குழுவை அமைத்து அந்த குழுவின் செயற்பாடுகளை ஆராய்ந்து சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு போதைப் பொருள் பாவனையையும் மற்றும் அதன் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த பிரேரணையை வழிமொழிந்து தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி ஸ்ரீபவானந்தராஜா உரையாற்றுகையில், நான் இந்த பிரேரணையை வரவேற்கின்றேன். 2009இற்கு முன்பிருந்த நிலைமை வேறு, இப்போதுள்ள நிலைமை வேறாகும். ஏ9 வீதி திறக்கப்பட்ட பின்னர் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சமுக சீர்கேடுகள் நடக்கின்றன. இதனால் இளம் சமூதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை ஏடுக்கப்பட வேண்டும் என்றார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில், இந்தப் பிரேரணை எதிர்க்கட்சி உறுப்பினரால் கொண்டு வரப்பட வேண்டியது. ஆனால் இதனை அரசாங்க கட்சியை சேர்ந்த ஒருவர் கொண்டு வந்துள்ளமை ஆச்சரியத்துக்குரியது. இந்த பிரேரணையை பார்க்கும் போது அறைக்குள் இருக்கும் யானையை நாங்கள் கண்டும் காணாமலும் இருப்பதை போன்றே உள்ளது. வடக்கு, கிழக்கை எடுத்துக்கொண்டால் இராணுவத்தின் 20 பிரிவுகளில் 16 பிரிவுகள் இந்த மாகாணங்களில் உள்ளன. குறிப்பாக வடக்கில் மாத்திரம் 14 பிரிவுகள் உள்ளன. கரையோரம் முழுவதும் ஒரு கிலோ மீற்றர் இடைவெளியில் பொதுமக்களின் காணிகளை பிடித்து கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற ரீதியில் படையினர் இருப்பதுடன் யாழ்ப்பாணத்தில் 14 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற வகையிலும் வன்னியில் 10 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற ரீதியிலும் படையினர் இருக்கின்றனர். போரை வென்றெடுத்தவர்கள் என்றும் தமது புலனாய்வு பலமாக இருக்கின்றது என்றெல்லாம் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் இதுபோன்ற மோசமான நிலைமை இருக்கின்றதென்றால் இராணுத்தினரின் முழுப் பங்களிப்பு இன்றி இது நடக்கும் என்று நினைக்கின்றீர்களா? கிரீஸ் பூதம் போன்ற விடயங்கள் நடந்த போது தப்பியோடியவர்கள் இராணுவ முகாம்களுக்குள் ஒளிந்தமை தெரியவந்தது. அத்துடன் ஆவா குழுவினர் பொலிஸாரால் வழிநடத்தப்படுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இன்று போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் இப்போது ஓடி ஒளிவது இராணுவ முகாம்கள் மற்றும் கடற்படை முகாம்களுக்குள்ளேயே ஆகும். இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அதே இராணுவம், அதே முப்படையினரை வைத்துக்கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க முடியுமென்று கனவு காண வேண்டாம். பிரச்சினை எங்கே இருக்கின்றது என்று சரியாக விளங்கிக்கொள்ளுங்கள். இந்த இராணுவம் இப்போதும் தமிழர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர் என்பதே உண்மை. இவர்களின் மனோநிலையை மாற்றாமல் ஒருபோதும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இதனை கோபத்திலோ, எரிச்சலிலோ, வெறுப்பு காரணமாகவோ, இனவாதத்திலோ கூறவில்லை. போர் முடிவடைந்த பின்னர் மனோநிலை மாற்றங்கள் நடக்காது வட, கிழக்கில் உள்ள இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. கடந்த கால அரசாங்கங்களை விடவும் நீங்கள் வித்தியாசமானவர்களாக இருக்க விரும்பினால் இந்த உண்மைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் பேசுகையில், போதையினால் நாடுமட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கின்றன . இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன். இருப்பினும் சக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமுர்த்தியால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்புவேளைப் பிரேரணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயமாக மிகவும் பொருத்தமான ஒத்திவைப்புவேளைப் பிரேரணையாகும். நாட்டின் அதியுயர்பீடமாகக் காணப்படும் பாராளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப்பொருட்களால் சீரழிந்துகொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்த போதைப்பொருள் ஊடுருவல்கள் பாடசாலைகளில்கூட இடம்பெற்றுவருவதை தற்போது நாம் அவதானித்து வருகின்றோம். போதைப்பொருள் பாவனையால் எமது சந்ததிகள், ஒருதொகுதி எதிர்கால தலைமுறையினர் அழிந்துவருகின்றனர். இந்தப் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் பொலிஸாருக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுத்துங்கள். இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்றார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சிறிநேசன் பேசுகையில், யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை, அதன் விநியோகம் மற்றும் வியாபாரம் என்பன பரந்துபட்டு காணப்படுகின்றன. விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் பரிபாலனம் செய்த காலங்களில் அங்கு போதைப்பொருள் பாவனை என்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.போர் முடிந்த பின்னர் போதைப்பொருள் விநியோகம் என்பது முழு மூச்சாக நடைபெறுகிறது. யுத்தம் முடிந்த பின்னரே வடக்கில் ஆவா குழு உருவாக்கப்பட்டுள்ளது.கிரீஸ் மனிதர்கள் உருவாக்கப்பட்டார்கள்.வாள்வெட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மக்கள் மத்தில் அவர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை உடைத்து சிதைப்பதற்கேற்ற வகையில் இந்த விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஆட்சிக்கு வந்து சிறிது காலமே ஆகியுள்ளது. இனிவரும் நாட்களில் நீங்கள் வடக்கு,கிழக்கில் இந்த போதைவஸ்து என்னும் அரக்கனை அழிப்பதற்கு முழுமையான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.வடக்கு ஆளுநர் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து நடவடிவக்கை எடுத்தால் இதனை அழிக்க முடியும். வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் போதைப்பொருள் விநியோகம் அதிகரித்துள்ளது .கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. மதுபான சாலைகள் அதிகரித்து வருகின்றன எனவே போதைப்பொருள் விநியோகம், பாவனையை தடுக்க வேண்டுமாக இருந்தால் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை இறுக்கமாக முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறான வேலைகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற இராணுவத்தினர்,பொலிஸார் கைது செய்யப்பட வேண்டும் . சுயேச்சைக் குழு 17 இன் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான இ.அர்ச்சுனா பேசுகையில், மக்களை பாதுகாப்போம் எனக் கூறி அரசாங்கத்தை பொறுப்பேற்றவர்களே வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கூறுவது வேடிக்கையானது, யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொள்ளுமாம். அந்த வகையிலேயே இந்தப் பிரேரணையும் உள்ளது. அரசாங்கம் உங்களிடமே இருக்கின்றது. மக்களை பாதுகாப்போம். என்று கூறி அரசாங்கத்தை பெற்றுக்கொண்டு நீங்களே பாதுகாப்பு தொடர்பில் பிரேரணையை கொண்டுவந்து வடக்கு, கிழக்கில் போதை இருக்கின்றது என்று கூறுவது கேவலமானதே. இதேவேளை நாட்டின் நீதிமன்றம் சுயமாக இயங்காவிடின் அந்த நாட்டில் நீதி நியாயம் ஒருபோதும் நிலைநாட்டப்படாது. வடக்கின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் நீதிபதிகளுக்கே நீதிபதியான இளஞ்செழியனை தமிழன் என்ற காரணத்தினால் பதவி உயர்வு வழங்காது இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. அந்தளவுக்கு கேவலமான வேலைசெய்யும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் வடக்கு, கிழக்கில் போதைப் பொருளை குறைக்கலாம் என்று பிரேரணையை கொண்டுவருவது கேவலமான செயலே. உங்களுக்கு கீழே இயங்கும் கடற்படையின் கீழேயே கேரள கஞ்சா கொண்டுவரப்படுகிறது. வல்வெட்டித்துறையில் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரை அமைச்சர் ஒருவர் தமது பிராந்திய இணைப்பாளராக தேசிய மக்கள் சக்திக்கு இணைத்துள்ளார் என்றார். இந்த பிரேணைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பதிலளித்து உரையாற்றுகையில், வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைவான போக்கில் இருப்பதை காண முடிகிறது.இருப்பினும் ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் வடக்கில் விசேட மத்திய நிலையத்தை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்களில் வடக்கில் மாத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை 174 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க 14 விசேட மையங்களை ஸ்தாபிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புனர்வுகள் வழங்கப்படும். 2025 .01.01 முதல் 2025.03.01 வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 168 ஹெரோயின் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, 279 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது . 2140 கிலோ கேரள கஞ்சா, 423 கிராம் ஐஸ் போதைப்பொருள், 41048 போதைப்பொருள் குளிசைகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல் யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ், 650 கிலோ கேரள கஞ்சா, 26915 போதைப்பொருள் குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/208478
-
வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு - விசேட மத்திய நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை - பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்
06 Mar, 2025 | 05:45 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைந்து ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. எனவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட மத்திய நிலையத்தை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) மாலை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்ந்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்களில் வடக்கில் மாத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை 174 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக 14 விசேட மையங்களை ஸ்தாபி பிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புனர்வுகள் வழங்கப்படும். 2025 .01.01 முதல் 2025.03.01 வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 168 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, 279 கிராம் ஹெரோயின், 2,140 கிராம் கேரள கஞ்சா, 423 கிராம் ஐஸ் போதைப்பொருள், 4,1048 போதைப்பொருள் குழிசைகள் கைப்பற்றபட்டன. அதேபோல் யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ், 650 கிராம் கேரள கஞ்சா, 2,6915 போதைப்பொருள் குழிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைவான போக்கில் இருப்பதை காண முடிகிறது.இருப்பினும் ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட மத்திய நிலையத்தை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/208467
-
விண்வெளியிலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய சுனிதா வில்லியம்ஸ் - பூமி திரும்புவது எப்போது?
பட மூலாதாரம்,NASA 6 மார்ச் 2025, 12:24 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் போயிங் தயாரித்த ஸ்டார்லைனர் பரிசோதனை விண்கலத்தில் கடந்த ஜூன் மாதம் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இரு விண்வெளி வீரர்களும் பூமிக்குத் திரும்புவது குறித்து செய்தியாளர்களிடம் பேசினர். நாசாவின் மற்றொரு விண்வெளி வீரரான நிக் ஹாகும் இந்த சந்திப்பில் இணைந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர். கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது? - 5 அரிய தகவல்கள் பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி மூலம் இரவை பகலாக்க முடியுமா? ரஷ்யாவின் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? விண்வெளி நிலைய செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய தருணங்கள் முன்னதாகவே வீடு திரும்ப விரும்புகிறீர்களா என்று அவர்களிடம் கேட்டதற்கு, குறுகிய காலத்திற்கு மட்டுமே திட்டமிட்டிருந்தாலும், நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகவே வந்ததாக புட்ச் வில்மோர் கூறினார். மேலும் மனித விண்வெளி பயணம் "எதிர்பாராத சூழ்நிலைகளுக்கான திட்டமிடலை அடிப்படையாக கொண்டது" என்றும் அவர் தெரிவித்தார். கீழே உள்ள குடும்பங்களுக்கு இது ஒரு "ரோலர்கோஸ்டர்" அனுபவமாக இருந்ததாகவும், ஏனெனில் தாங்கள் எப்போது திரும்பி வருவோம் என்பது அவர்களுக்கு தெரியாது, இதுதான் கடினமான பகுதி என்றும் கூறினார் சுனிதா வில்லியம்ஸ். முரண்பாடுகளைக் கையாள்வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது எதிர்கால பயணங்களை எளிதாக்கும் என்று நம்புகிறோம் என்றும் விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர். செவ்வாய் மற்றும் நிலாவில் மனிதன் குடியேற சென்னை ஐஐடியின் இந்த ஆய்வு எவ்வாறு உதவும்?19 பிப்ரவரி 2025 பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?18 பிப்ரவரி 2025 பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்17 பிப்ரவரி 2025 வயதுக்கு ஏற்ப விண்வெளிப் பயணம் கடினமாகிறதா? பட மூலாதாரம்,NASA/BOEING அந்த குழுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, வயதாகும்போது விண்கலனின் ஏதேனும் அம்சங்கள் கடினமாகிவிடுமா என்பதுதான். விண்வெளியில் இருக்கும் போது வலிகள் போய்விடுகின்றன என்று புட்ச் வில்மோர் கூறினார். சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் தூங்குவது உண்மையில் எளிதானது என்று கூறினார். இந்தப் பணியின் மிக உற்சாகமான பகுதி என்னவென்று கேட்கப்பட்டபோது, விண்வெளி உடையில் உள்ள மற்றொரு நபரை, விண்கலத்தின் நுழைவாயிலைத் திறந்து உள்ளே கொண்டு வருவது என்பது மிகப்பெரிய பொறுப்பு என்றும், அதுவே பெருமையான தருணம் என்றும் வில் மோர் கூறினார். அவரைத் தொடர்ந்து, குழு ஒன்பதை பூமிக்கு அழைத்து வர ஆவலுடன் இருப்பதாக ஹேக் கூறுகிறார். விண்வெளியைப் பார்ப்பது மிகவும் உற்சாகமான விஷயம் என்று சுனிதா கூறினார். "சூரியன் உண்மையில் சுறுசுறுப்பாக உள்ளது. பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை நீங்கள் உணர்வீர்கள்." என்றும் தெரிவித்தார் சுனிதா வில்லியம்ஸ். இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 பனாமா: கடலுக்கு அடியில் 11 மீட்டர் ஆழத்தில் வீடு கட்டி 120 நாட்கள் வாழ்ந்த மனிதர்5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,"நாங்கள் குறுகிய காலம் இருக்க திட்டமிட்டிருந்தாலும், நீண்ட காலம் தங்குவதற்கு தயாராக வந்துவிட்டோம்," என்று நிருபரின் கேள்விக்கு பதிலளித்தார் வில்மோர் . சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வயதாகிவிட்டதாகத் தெரிகிறது என்று ஈலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதன் நிலை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. "விண்வெளி நிலையத்தில் எவ்வளவு அறிவியல் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார்த்து நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்" என்று கூறினார் சுனிதா வில்லியம்ஸ். "தற்போது நாம் நமது உச்சத்தில் இருக்கின்றோம் என்று நான் கூறுவேன்," என்றார் சுனிதா. மேலும், "ஒப்பந்தங்களின் அடிப்படையில் 2030 வரை இது செயல்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதுவே மிகச் சரியானது என நினைக்கின்றேன்." என்றும் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தார். வில்மோரிடம் அவரது ஒன்பது மாத விண்வெளி அனுபவத்தில் முக்கியமான பாடம் என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும்போது, அவரது நம்பிக்கை மிக முக்கியமாக இருந்ததாக கூறினார். சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 அடுத்து நடக்கப்போவது என்ன ? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து பதில் அளித்த ஹேக், "சில குறுகிய நாட்களில்" க்ரூ 10 விண்வெளி வீரர்கள் வருவார்கள் என்றும், "ஒரு வெற்றிகரமான, நீண்ட காலப் பணியின் முடிவில்" இவர்கள் பூமிக்குத் திரும்புவதற்கு முன், க்ரூ 10 விண்வெளி வீரர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள் என்றார் ஆனால், இவர்கள் பூமி திரும்பும் நாள் பற்றி அவர் குறிப்பிடவில்லை. "மார்ச் 12க்கு முன்பாக இல்லை'' என்றாலும் மாற்று விண்கலமான ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமிக்கு திரும்ப உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் இருந்து எரிந்தபடி விழுந்த 'ராட்சத வளையம்' - எங்கிருந்து வந்தது?19 ஜனவரி 2025 ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ வரலாற்று சாதனை - 'டாக்கிங்' செயல்முறை வெற்றி என அறிவிப்பு16 ஜனவரி 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளி வீரர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது இதுவே முதல் முறை அல்ல. கடந்த ஜூன் மாதத்திலிருந்து அவர்கள் பல பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர். முன்னாள் அதிபர் ஜோ பைடன் இவர்கள் இருவரையும் "கிட்டத்தட்ட விண்வெளியில் கைவிட்டதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் உரிமையாளரான ஈலோன் மஸ்க் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். வழக்கத்துக்கு மாறாக நீண்ட விண்வெளிப் பயணம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 272 நாட்கள் இருந்துள்ளனர். பெரும்பாலான விண்வெளி பயணங்கள் சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும். ஆனால் வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் தாங்கள் அங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், அனைத்து விண்வெளி வீரர்களும் பங்களிக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் துளிர் விட்ட தட்டைப்பயறு - இஸ்ரோ சாதித்தது எப்படி?5 ஜனவரி 2025 வானியல் அதிசயம்: 2025ஆம் ஆண்டின் சிறந்த எரிகல் பொழிவை எங்கு, எப்போது பார்க்கலாம்?2 ஜனவரி 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனிதா "சுனி" வில்லியம்ஸ் மற்றும் பாரி "புட்ச்" வில்மோர் சுனிதா வில்லியம்ஸ் 1998 இல் நாசாவால் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு இரண்டு விண்வெளிப் பயணங்களில் அனுபவம் வாய்ந்தவர் சுனிதா என்று நாசா கூறுகிறது. மேலும் விண்வெளி நிலையத்திற்கான ரஷ்யாவின் பங்களிப்பு குறித்து ரஷ்ய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து மாஸ்கோவில் பணியாற்றினார் சுனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், அவர் ரோபோடிக்ஸ் பிரிவில் பணிபுரியத் தொடங்கினார். சுனிதா வில்லியம்ஸ் தனது முந்தைய இரண்டு பயணங்களின் போது மொத்தம் 322 நாட்களை விண்வெளியில் கழித்தார். மேலும் 50 மணிநேரம் மற்றும் 40 நிமிடங்கள் என்ற அளவுடன் விண்வெளியில் அதிக நேரம் நடந்தவர் என்ற பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். வில்மோர் புட்ச் இரண்டு விண்வெளிப் பயணங்களில் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் விண்வெளியில் 178 நாட்கள் கழித்துள்ளார் என்று நாசா கூறுகிறது, இருப்பினும் அவரது சமீபத்திய பயணம் இன்னும் முழுமையாகக் கணக்கிடப்படாததால் இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம். மேலும், ஜூலை 2000 இல் நாசாவால் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஓய்வு பெற்ற அமெரிக்க கடற்படை கேப்டன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2rxkerzg7o
-
யாழ். சென். ஜோன்ஸ் - யாழ். மத்திய அணிகள் மோதும் பரபரப்பான 118ஆவது வடக்கின் சமர் நாளை ஆரம்பம்
Published By: Vishnu 05 Mar, 2025 | 10:56 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் வருடாந்த 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென சீரற்ற காலநிலை நிலவியதால் பிற்போடப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குபட்ட ஆசிய கிண்ண இளையோர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இருவர் இந்த இரண்டு கல்லூரி அணிகளிலும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சென். ஜோன்ஸ் அணியில் இடம்பெறும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், யாழ். மத்திய கல்லூரி அணியில் இடம்பெறும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகிய இருவரே இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர்கள் ஆவர். இரண்டு கல்லூரிகளினதும் இந்த வருட பெறுபேறுககளை நோக்கும்போது இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் கொண்டவையாகத் தெரிகிறது. இதன் காரணமாக இந்த வருடப் போட்டி மிகவும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இரண்டு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அதாவது மூன்றுக்கும் மேற்பட்ட வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெறுவது போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது. சென். ஜோன்ஸ் கல்லூரி இந்த வருடம் விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றிகளை ஈட்டியதுடன் இரண்டில் தோல்வி அடைந்துள்ளது. யாழ். மத்திய கல்லூரி விளையாடிய 9 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்றதுடன் 2இல் தோல்வி அடைந்துள்ளது. கடந்த வருடம் வரை நடைபெற்ற 117 வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி 39 - 29 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 41 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளதுடன் 7 போட்டிகள் தொடர்பான விபரங்கள் இல்லை. ஒரு போட்டி கைவிடப்பட்டது. கடந்த 4 அத்தியாயங்களில் இரண்டு கல்லூரிகளும் மாறிமாறி வெற்றிபெற்றுவந்துள்ளதால் இந்த வருடமும் வடக்கின் சமரில் முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென். ஜொன்ஸ் கல்லூரி கடந்த வருடம் நேசகுமார் எபநேசர் ஜெய்சால் தலைமையில் 10 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. யாழ். மத்திய கல்லூரி 2023இல் ஆனந்தன் கஜன் தலைமையில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. சென். ஜோன்ஸ் அணிக்கு இம்முறை 6ஆம் வருட வர்ண வீரர் ஜெயச்சந்திரன் அஷ்நாத் தலைவராகவம் 4ஆம் வருட வர்ண வீரர் முர்பின் ரெண்டியோ உதவித் தலைவராகவும் விளையாடுகின்றனர். அவர்களைவிட 3ஆம் வருட வர்ண வீரர்களான அபிஜோய்ஷாந்த், குகதாஸ் மாதுளன் ஆகியோரும் அணியில் இடம்பெறுகின்றனர். யாழ். மத்திய கல்லூரிக்கு இம் முறை 5ஆம் வருட வர்ண வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் தலைவராகவும் 5ஆம் வருட வீரர் சதாகரன் சிமில்டன், 3ஆம் வருட வர்ண வீரர் தகுதாஸ் அபிலாஷ் ஆகியோர் இணை உதவித் தலைவர்களாகவும் விளையாடுகின்றனர். அவர்களைவிட விக்னேஸ்வரன் பாருதி, முரளி திசோன், கணேசலிங்கம் மதுசுதன் ஆகியோர் 3ஆம் வருட வீரர்களாவர். வடக்கின் சமரில் தனி ஒருவருக்கான அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவர் சென். ஜோன்ஸ் வீரர் எஸ். சுரேன்குமார் ஆவார். இவர் 1990இல் நடைபெற்ற வடக்கின் சமரில் 145 ஓட்டங்களைக் குவித்தார். அரவது மகள் அமுருதா சுரேன்குமார், 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார். ஓர் இன்னிங்ஸில் 26 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்கள் என்ற அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை 1951இல் பதிவு செய்தவர் யாழ். மத்திய கல்லூரியின் வி. சண்முகம் ஆவார். சென். ஜோன்ஸ் அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: ஏ. சஞ்சயன் (பயிற்றுநர்), எஸ். திலீபன் (பொறுப்பாசிரியர்), உதயணன் அபிஜோய்ஷாந்த், ஜெயச்சந்திரன் அஷ்நாத் (தலைவர்), வி.எஸ்.பி. துசீதரன் (அதிபர்), முர்பின் ரெண்டியோ (உதவித் தலைவர்), குகதாஸ் மாதுளன், சி. ஏ. அரவிந்தன் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), மத்திய வரிசை: சிவகுமார் ஜோன் நதேனியா, இளங்கோ வெண்டட் மரியோ, சற்குணராஜா வினுக்ஷன், ரேமண்ட் அனுஷாந்த், சௌந்தரராஜன் ஆதர்ஷ், விஜயராஜா சஞ்சய், யோகசீலன் சாருஜன், கிருபாகரன் சஞ்சுதன், தினேஷ் லருன், பின்வரிசை: நாகேஸ்வரன் கிரிஷான், கஜந்தன் மிதுன், சிவசங்கர் கிரிஷான், ஜோன் ஸ்டபர்ட் ஆர்னல்ட், ராஜ்குமார் நிதுர்சிஜன். யாழ். மத்திய கல்லூரி அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: வி. பாருதி, கே. பாலகுமார் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), ரஞ்சித் குமார் நியூட்டன் (தலைவர்), எஸ். இந்திரகுமார் (அதிபர்), தகுதாஸ் அபிலாஷ் (இணை உதவித் தலைவர்), எவ். குலேந்திரன் ஷெல்டன் (பயிற்றுநர்), சதாகரன் சிமில்டன் (இணை உதவித் தலைவர்), எஸ். மணிமாறன் (பொறுப்பாசிரியர்), மத்திய வரிசை: செல்வராசா திசோன், மதீஸ்வரன் கார்த்திகன், சயந்தன் நியந்தன், நாகராசா சஜித், கணேசலிங்கம் மதுசுதன், தவராசா வேனுஜன், ரஞ்சித் குமார் அக்ஷயன், முரளி திசோன், ஏ. அபிஷேக், பி. நவிந்தன், ஏ. ஷாராளன், அன்டோநேசன் தனுஷன், பின்வரிசை: உதயராசா வோல்டன், ஜெயசீலன் ஜெனோஷன், வெலன்டைன் ஹரிஷ், ஸ்ரீதரன் சாருஜன். https://www.virakesari.lk/article/208394
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
Published By: Rajeeban 06 Mar, 2025 | 03:06 PM யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார் அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற் நீதி வழங்கப்பட்டுவிட்டதா என மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் சிக்குண்டிருந்தவர்களிற்கான மனிதாபிமான உதவி தடுக்கப்பட்டது, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஆனால் இது திட்டமிடப்பட்ட விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன, இதற்காக அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க ஆனால் இது பெருமளவில் இடம்பெற்றதா? நான் அப்படி சொல்ல மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மெஹ்டி ஹசன் ஐக்கியநாடுகளின் குழு இலங்கை படையினர் யுத்தத்தில் சிக்குண்டவர்களிற்கான மனிதாபிமான உதவிகளை தடுத்தனர் என குறிப்பிட்டுள்ளனரே என கேள்வி எழுப்பியுள்ளார். நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன் என அவ்வேளை எதிர்கட்சி தலைவராகயிருந்த ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208445
-
உடல் பருமன்: ஆபத்தான 'வில்லன்' சமையல் எண்ணெய் - ஒருநாளைக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?
பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,சஜித் ஹுசைன் பதவி,பிபிசி ஹிந்திக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் முன்பெல்லாம் உடல் பருமன் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் பிரச்னையாக பார்க்கப்பட்டது, ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் பிரச்னையாக மாறியுள்ளது. இதை எதிர்கொள்ளும் பொருட்டு, உடல் பருமனுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். "ஆரோக்கியமான நாடாக மாறுவதற்கு நாம் உடல் பருமனை சமாளிக்க வேண்டும். அதிக உடல் எடை பல வித பிரச்னைகள் மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கிறது," என்றும் அந்நிகழ்ச்சியில் மோதி பேசினார். உடல் பருமன்: எடை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் - தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை உடல் பருமன்: பி.எம்.ஐ கணக்கீடு ஆரோக்கியம் பற்றி தெளிவாக உணர்த்துகிறதா? உங்கள் ஆரோக்கியத்தைக் காட்டும் இடுப்புச் சுற்றளவு - எப்படி அறியலாம்? எடைக் குறைப்பு அறுவை சிகிச்சையில் என்ன ஆபத்து? சென்னை இளைஞர் இறந்தது ஏன்? ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது என்ன? 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஓர் ஆய்வின்படி, எட்டு பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. "குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. உலக சுகாதார மைய தரவுகளின்படி, 2022-ல் உலகளவில் சுமார் 250 கோடி பேர் உடல் எடை அதிகமாக உள்ளனர். அதாவது, சரியான எடையை விட அவர்கள் அதிக எடையுடன் உள்ளனர்," என்றார். 2024-ம் ஆண்டில் 'தி லேன்செட்' ஆய்விதழ் ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-ம் ஆண்டில் இந்தியாவில் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுள் ஒரு கோடியே 25 லட்சம் குழந்தைகள் அதிக எடையுடன் உள்ளனர். அவர்களுள் 73 லட்சம் ஆண் குழந்தைகள். 52 லட்சம் பெண் குழந்தைகள் 1990-ல் இந்த எண்ணிக்கை வெறும் 4 லட்சமாக இருந்தது. குழந்தைகள் மட்டுமல்லாமல் வயது வந்தோரிடையேயும் உடல் பருமன் கவலைக்குரிய பிரச்னையாக மாறியுள்ளது. எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?5 மார்ச் 2025 அந்த ஆய்வறிக்கையின்படி, 2022-ல் இந்தியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட 4.4 கோடி பெண்கள் மற்றும் 2.6 கோடி ஆண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990-ல், இந்த எண்ணிக்கை 24 லட்சம் பெண்களாகவும் 11 லட்சம் ஆண்களாகவும் இருந்தது. ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வும் இந்தியாவில் உடல் பருமன் பிரச்னையை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட 23% ஆண்கள் மற்றும் 24% பெண்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 2015-16ல் இந்த எண்ணிக்கை 20.6% பெண்கள் மற்றும் 18.9% ஆண்கள் என இருந்தது. எண்ணெய் எப்படி பங்காற்றுகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எண்ணெய் பயன்பாடும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது நொறுக்குத் தீனிகள் மற்றும் உடல் உழைப்பில்லாத வாழ்வியல் முறை போன்றவை உடல் பருமன் பிரச்னைக்கு முக்கிய காரணங்களாக பெரும்பாலும் கூறப்படுகின்றன. ஆனால், நம்முடைய உணவில் நாள் முழுவதும் சேர்த்துக் கொள்ளப்படும் எண்ணெய் உடல் பருமனை அதிகரிப்பது குறித்து புறந்தள்ளிவிடுகிறோம். அனைத்து இந்திய மேம்பட்ட ஆய்வு மற்றும் உடல் பருமன் சங்கத்தின் தலைவர் டாக்டர் மகேந்திர நர்வாரியா, "இந்திய உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எண்ணெய் ஆகியவை அதிகளவில் உள்ளன. எந்தவொரு உணவையும் சுவையானதாக மாற்ற எண்ணெய் மற்றும் நெய் பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக, நமது உடலில் கொழுப்பு அதிகமாகிறது. நாம் அதிகமாக உடற்பயிற்சி செய்யாததால், உடலில் உள்ள கொழுப்பு கரைவதில்லை." என்கிறார். "நம் உணவில் அதிகமாக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடலில் நுழைந்ததும் கொழுப்பாக மாறுகின்றன. மேலும், கொழுப்பும் நம் உடலில் சேருகிறது. இதனால் உடல் பருமன் அதிகரிப்பதற்கான ஆபத்து ஏற்படுகிறது." "நமது உடலில் கொழுப்பின் அளவு எப்போதும் அதிகமாக இருக்கும். உடல் மெலிந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் அவருடைய உடலிலும் 30-40% கொழுப்பு இருக்கும், அதுவே மிக அதிகம். மற்றொருபுறம், விளையாட்டு வீரர்களின் உடலில் 7-8% கொழுப்பு இருக்கும்." "நமது உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால், நம்முடைய வளர்சிதை மாற்றம் குறையும். இதனால், நமது உடல் எடை அதிகமாகும்." கிரிப்டோ ரிசர்வ்: டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?5 மார்ச் 2025 திருவண்ணாமலை, ராஜபாளையத்தில் பூமிக்கடியில் தங்கம்: ஆய்வில் தகவல் - இன்றைய முக்கிய செய்திகள்5 மார்ச் 2025 டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் டாக்டர் பர்மீத் கௌர் கூறுகையில், "பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எண்ணெயை எடுத்துக்கொண்டால், நம்முடைய வளர்சிதை மாற்றம் குறையும். இதனால், நம் உடலில் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமனும் அதிகமாகும். மேலும், இது நமக்கு நார்ச்சத்து, தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தராமல், கூடுதல் கலோரிகளையே தரும்." என்றார். மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையின் பேரியாட்ரிக் (உடல் பருமனுக்கான சிகிச்சை) அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமன் கோயல், "எண்ணெயில் பொதுவாகவே கொழுப்பு அதிகமாக இருக்கும். நமது உடல் பெரும்பாலான கலோரிகளை கொழுப்பிலிருந்து தான் பெறும். புரதச் சத்திலிருந்து நான்கு கலோரிகளை பெற்றால், கொழுப்பிலிருந்து 9 கலோரிகளை நாம் பெறுவோம். எனவே, அதிகமான கலோரிகளுடன் நாம் உண்ணும் எதுவாக இருந்தாலும், உடல் பருமனுக்கு வழிவகுக்கும், குறிப்பாக ஏற்கெனவே உடல் பருமனாக உள்ளவர்களுக்கு எடை மேலும் அதிகமாகும்." என தெரிவித்தார். எண்ணெய் எந்தளவு எடுக்க வேண்டும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எண்ணெயை அதிகமாக சூடுபடுத்துவது அதன் தரத்தை பாதிக்கிறது எண்ணெயை குறைவாக உபயோகிப்பதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் மகேந்திர நர்வாரியா. அதிகளவு எண்ணெயை மக்கள் பயன்படுத்துவதால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. டாக்டர் பர்மீத் கௌர் கூறுகையில், "நம் உடலில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ, கே ஆகிய வைட்டமின்களை ஜீரணிக்க கொழுப்பு நமக்கு உதவுகிறது. எனவே, நம் உடலுக்கு குறிப்பிட்ட அளவு கொழுப்பு தேவை." என்றார். மேலும், "வயதுக்கேற்ப மக்கள் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதிக உடலுழைப்பு இல்லாத ஒருவர் ஒரு நாளைக்கு 4-5 தேக்கரண்டி எண்ணெய் தான் எடுக்க வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு 20-25 கிராம் எண்ணெய். இதுவே ஒருவருக்கு அதிகமான அளவுதான்." என கூறுகிறார். எனினும், உடல் பருமனுக்கு எண்ணெய் மட்டுமே காரணம் அல்ல. டாக்டர் ராமன் கோயல் கூறுகையில், "உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் எந்தளவுக்கு இனிப்புகள் உட்கொள்ளப்படுகின்றன தெரியுமா? இனிப்புகளும் உடல் பருமனை அதிகரிக்கும்" என்றார். என்ன எண்ணெய் பயன்படுத்த வேண்டும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எண்ணெய் தரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் பர்மீத் கௌர் கூறுகையில், "இந்தியாவில் அந்தந்த பிராந்தியங்களில் கிடைக்கும் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டாலான எண்ணெய் (rice bran oil) ஆகியவை தென்னிந்தியாவில் கிடைக்கும். கடலை எண்ணெய் குஜராத்திலும் மற்ற மாநிலங்களில் கடுகு எண்ணெயும் கிடைக்கும்." என்கிறார். அவரைப் பொறுத்தவரை, பொறிப்பதற்கு பயன்படுத்திய எண்ணெயை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மேலும், ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களையும் நாம் தவிர்க்க வேண்டும். மேலும், எண்ணெயின் தரமும் முக்கியமானது. சமையல் எண்ணெயை நாம் அதிகமாக சூடுபடுத்துவது உடலுக்கு நல்லதல்ல. தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?5 மார்ச் 2025 ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள்5 மார்ச் 2025 ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) கூறுகிறது. ஏனெனில், அந்த எண்ணெயில் கெட்ட கொழுப்புகள் (trans fat) அதிகமாக இருக்கும். ஹார்வர்டு பொது சுகாதார பள்ளியின் இணையதளத்தில், இத்தகைய கெட்ட கொழுப்புகள் உடலுக்கு மோசமானவை என குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கொழுப்புகள் எல்.டி.எல் போன்ற தீய கொழுப்புகளை அதிகரித்து ஹெச்.டி.எல் போன்ற நல்ல கொழுப்புகளை குறைக்கும். இதனால், உடலில் வீக்கம் அதிகரித்து, இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்பு, நோயெதிர்ப்பு ஆகியவற்றை பாதிக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cevx0m0dww7o
-
பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை!
பெருங்குடல் புற்றுநோயார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ; விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் Published By: Digital Desk 3 06 Mar, 2025 | 01:31 PM நாட்டில் பெருங்குடல் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தளவில் அதிகரித்து வரும் நிலையில், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பெருங்குடல் புற்றுநோயால் 1.9 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 900,000க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக குளோபோகன் 2022 சர்வதேச புற்றுநோய் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தலாம். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் 50 வயதிற்குப் பின்னர் நோயின் ஆபத்து அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார். பெருங்குடல் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் வசந்த விஜேநாயக்க, 2040 ஆம் ஆண்டுக்குள் சுமார் 3.5 மில்லியன் பேர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். 40 வயதிற்குப் பின்னர் 50 சதவீதமானவர்களுக்கு பெருங்குடல் அல்லது மலக்குடலில் பாலிப்கள் வளர்ச்சி அடைவதால் புற்றுநோய் ஏற்படலாம். ஆனால் எல்லா பாலிப்களும் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை. அவற்றில் சுமார் 4 சதவீதமானவை மட்டுமே புற்றுநோயாக மாறக்கூடும். புற்றுநோயாக மாறுவதற்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை செல்லும். எனவே ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டவற்றை அகற்றி நோயைக் கட்டுப்படுத்த முடியும். அத்துடன், 23 ஆண்களில் ஒருவருக்கும் 26 பெண்களில் ஒருவருக்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208430
-
வடகிழக்கு மக்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை : அதற்காக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம் - அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்
Published By: Digital Desk 3 06 Mar, 2025 | 01:41 PM வடகிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது. எனவே நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காகவும் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர் அருட்தந்தை ஜீவநந்த பீரிஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரையும் இன்று வியாழக்கிழமை (06) நீதிக்கான நடை பயணத்தின் 1030 வது நாள் போராட்டத்தில் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காலிமுகத்திடல் அரகலைய போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் நீதிக்கான பயணம் தொடர்ந்து 1030 வது நாளாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் வடக்கு கிழக்கில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி அவர்களுக்கான இடங்கள் அன்று முதல் இன்றுவரை கிடைக்கப்படவில்லை அனைத்து மக்களையும் விட அதிகமாக வடகிழக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும். எனவே அந்த மக்களின் நோக்கத்தை கூட தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது. எனவே, அந்த மக்களின் நோக்கத்துக்காக மக்கள் பேரவைக்கான இயக்கமாகிய நாங்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து பேராடிவருகின்றோம் அதை வலியுறுத்துவதற்காக இந்த தொடர்ச்சியான நடைபாதை போராட்டங்கள் கோரிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த அசாதாரண நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காக உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக மக்களாகிய நாங்கள் ஒன்றுபடவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/208437
-
நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன்
நெடுந்தீவில் பாடசாலை நேரத்தை மாற்ற ஆராய்வு Published By: Digital Desk 3 06 Mar, 2025 | 01:17 PM நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை (05) மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பில் நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய பற்றாக்குறை தொடர்பிலும், அவற்றினை நிவர்த்தி செய்வது தொடர்பில் புதிய ஆசிரிய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதன்போது, படகுச் சேவையின் நேரத்தை கருத்தில் கொண்டு நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/208435
-
தத்தெடுத்த குழந்தையை கொலை செய்த தம்பதிக்கு மரணதண்டனை
06 Mar, 2025 | 04:13 PM தத்தெடுத்த குழந்தையை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பதிக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி தத்தெடுக்கப்பட்ட 02 வயதுடைய குழந்தை ஒன்று சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை தத்தெடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதவான் சுஜீவ நிஷாங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்ட வைத்தியரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட வைத்திய அறிக்கையில், உயிரிழந்த குழந்தையின் உடலில் சுமார் 90 காயங்கள் காணப்பட்டதாகவும் குழந்தை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதவான் சுஜீவ நிஷாங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/208452
-
பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
பந்தலந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில் Published By: Rajeeban 06 Mar, 2025 | 11:19 AM பந்தலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ; அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதைகள் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார். அரசாங்க விசாரணை அறிக்கை பந்தலந்த வீடமைப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய முக்கிய சூத்திரதாரி ரணில்விக்கிரமசிங்க என தெரிவித்திருந்ததுடன் அங்கு மீறல்கள் இடம்பெறுவது குறித்து குறைந்தபட்சம் அவருக்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளது. அல்ஜசீரா செய்தியாளர் தன்வசம் வைத்திருந்த அரசாங்க விசாரணை அறிக்கையின் நகல்வடிவத்தை காண்பித்து கேள்விஎழுப்பியவேளை முதலில் அவ்வாறான அறிக்கையொன்று உள்ளதையே மறுத்த ரணில்விக்கிரமசிங்க பின்னர் அந்தஅறிக்கை செல்லுபடித்தன்மை வாய்ந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208420
-
அமெரிக்காவுடன் எந்த வகையான போருக்கும் தயார்; சீனா அறிவிப்பு
அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தாம் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கும் வரி விதிப்புகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரிவிதிப்பு மூலமாகவோ வர்த்தக போர் மூலமாகவோ அல்லது எவ்வித போர் மூலமாகவோ அதற்காக எதிராக இறுதி வரை போராட தாம் தயாராகவுள்ளதாக அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள சீன தூதுரகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 10 முதல் 15 வீத வரி விதிப்பதாக நேற்று அறிவித்தது. இதனிடையே, சீனாவில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதியை 7.2 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://thinakkural.lk/article/315723