Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. உங்களைப் போல திறமையான இயந்திர வல்லுநர்கள் சிலருடைய முயற்சிகளால் இது சாத்தியமாகி உள்ளது. நானும் எனது பற்றறியில் இயங்கும் முச்சக்கர ஸ்கூட்டரிற்கு சோலார் பனல் பூட்ட திட்டமிடுகிறேன். வெயிலுக்கு நிழலும் பற்றறிக்கு மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்யலாம்! கடந்த மாதத்தின் பெருமளவு நாட்கள் எனதும் தம்பியினதும் வண்டிகள் பழுதடைந்ததால்(வயறிங் டமேஜ், பற்றறி புதிது மாற்றம்) றீசார்ஜ் செய்வது குறைந்துவிட்டது. இதனால் 30-35 யுனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது lead acid battery மாற்றிவிட்டேன்.
  2. 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய Asteroid பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று Scientists ஆரம்பத்தில் கவலைப்பட்டனர். பின்னர் அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக அறிவித்தனர். இந்த Asteroid பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் உள்ளது என ஆரம்பத்தில் மதிப்பிட்ட விஞ்ஞானிகள், பின்னர் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கூறினர். ஆனால் இது Moon-ஐ தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக NASA மதிப்பிட்டுள்ளது. #NASA #Earth #Space இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  3. Published By: Rajeeban 07 Mar, 2025 | 04:04 PM அணுவாயுதங்களை பயன்படுத்தி தனது ஐரோப்பிய சகாக்களை பாதுகாப்பது குறித்து ஆராயவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஸ்ய போரில் அமெரிக்கா ஐரோப்பாவின் பக்கம் இல்லாத நிலையை எதிர்கொள்வதற்கு ஐரோப்பா தயாராகவேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தில் எமது நட்புநாடுகளை பாதுகாப்பது குறித்த மூலோபாய விவாதத்தை ஆரம்பிப்பதற்கு நான் தீர்மானித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி எங்கள் அணுசக்தி பாதுகாப்பு எங்களை பாதுகாக்கின்றது அது முழுமையான இறையாண்மை என தெரிவித்துள்ளார்.எங்கள் அயலவர்களை விட பிரான்சின் அணுவாயுதங்களே எங்களை பாதுகாக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பா புதிய யுகத்திற்குள் நுழைகின்றது ரஸ்யாவின் அச்சுறுத்தலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எங்களின் நெருங்கிய சகாவான அமெரிக்கா திடீர் என உக்ரைன் யுத்தத்திற்கான ஆதரவிலிருந்து மாறியுள்ளது, உக்ரைனிற்கான ஆதரவை குறைத்துள்ளது என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்கா எங்கள் பக்கம் நிற்கவேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ஆனால் ஆனால் அது இடம்பெறாவிட்டால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகயிருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின் இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ரஸ்யா இமானுவேல் மக்ரோன் ரஸ்யாவிற்கு நேரடி அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி ரஸ்யாவை ஒரு ஆபத்தாக கருதுகின்றார்,ஐரோப்பிய நாடுகளினதும் பிரிட்டனினதும் முப்படை பிரதானிகளை அழைத்து அணுவாயுதங்களை பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளது,ரஸ்யாவிற்கு எதிராக அணுவாயுதங்களை தயாரியுங்கள் என தெரிவிக்கின்றார் இது நிச்சயம் மிரட்டலே என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்கேய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208543
  4. அண்ணை, பெற்றோல் வாகனங்களை மாற்றியமைத்து பயன்படுத்துவதாகவே எனக்கு தோன்றுகிறது. மின்சார பற்றறிகளில் இயங்குபவை அதிகபட்சம் 25 கி.மீற்றர் மணிவேகம் தான் ஓடும், அவற்றுக்கு பதிவோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரமோ இதுவரை குறிப்பிடவில்லை.
  5. இந்திய அணியை அச்சுறுத்தும் நியூசிலாந்தின் 5 வீரர்கள் யார்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரிட்சை நடத்துகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் 2000ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை வென்று நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. ஆனால், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் ஒருமுறை மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது, 3 முறை நியூசிலாந்து அணி வென்று வலிமையாக இருக்கிறது. 3 தோல்விகள் 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பைனல், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி, 2021ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வென்று லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனங்களை நியூசிலாந்து நொறுங்கச் செய்தது. ஆனால் 2023 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி பழிதீர்த்தது. இந்நிலையில் மீண்டும் இரு அணிகளும் கோப்பைக்கான கோதாவில் இறங்கியுள்ளன. புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது இந்திய அணியைவிட நியூசிலாந்து அணி வலிமையாகவே இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் 119 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன, இதில் இந்திய அணி 60 வெற்றிகளும், நியூசிலாந்து 50 வெற்றிகளும் பெற்றுள்ளன. 7 போட்டிகளில் முடிவு ஏதும் எட்டவில்லை. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியும் கடைசியாக 2013ம் ஆண்டுக்குப்பின் வெல்லவில்லை, ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை வெல்லும் தாகத்தோடு இருக்கிறது, அதேபோல 25 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லவும் நியூசிலாந்து போராடும். ரமலான் நோன்பு இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு முறை என்ன?5 மார்ச் 2025 உடல் பருமன்: ஆபத்தான 'வில்லன்' சமையல் எண்ணெய் - ஒருநாளைக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?6 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images சளைத்தவர்கள் இல்லை இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சமவலிமையோடுதான் இருக்கின்றன. இரு அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய அணியில் ஷமி, அர்ஷ்தீப், ஹர்திக் இருப்பதைப் போல் ஹென்றி, ரூர்க், ஜேமிஸன் உள்ளன. சுழற்பந்துவீச்சில் வருண், ஜடேஜா, குல்தீப், அக்ஸர் இருப்பதைப் போல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, பிரேஸ்வெல், டேரல் மிட்ஷெல் என வரிசையாக வீரர்கள் உள்ளனர். பேட்டிங்கிலும் இந்திய அணியைப்போல் 8-வது வீரர் வரை பேட்டர்களை வைத்துள்ளது நியூசிலாந்து அணி. ஆதலால், ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், இந்திய அணியை எச்சரிக்கை செய்யும் விதத்தில், பந்துவீச்சு, பேட்டிங்கில் சவாலாக இருக்கக்கூடிய 5 வீரர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர். டேவன் கான்வே பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டேவன் கான்வே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை கான்வே இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஆனால், பைனல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டங்களில், அதிலும் இந்தியாவுக்கு எதிராக கான்வேயின் ஆட்டம் தனித்துவமாக இருக்கும். 4 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே கான்வே விளையாடியுள்ள நிலையில் இறுதி போட்டியில் களமிறங்கினால் இடதுகை பேட்டர் கான்வேயின் ஆட்டம் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். இந்திய அணிக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடிய கான்வே ஒரு சதம் உள்பட 230 ரன்கள் சேர்த்துள்ளார், 92 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். தொடக்கத்திலேயே கான்வே விக்கெட்டை வீழ்த்துவது இந்திய அணிக்கு பாதுகாப்பானது, இல்லாவிட்டால் இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் பெரிய சவாலாக இருப்பார். ரச்சின் ரவீந்திராவின் விஸ்வரூபம் பட மூலாதாரம்,Getty Images நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நாயகனாக ரவீந்திரா இருக்கிறார். இந்திய அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பெரிய சவாலாக ரவீந்திரா இருப்பார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலயே ரவீந்திரா 2வது சதத்தை நிறைவு செய்து மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய ரவீந்திராவின் பேட்டிங் நிச்சயம் சவாலாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபில் 3 போட்டிகளில் 226 ரன்கள் சேர்த்து 75 சராசரி வைத்துள்ளார். பந்துவீச்சிலும் நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசக்கூடியவர். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ரவீந்திரா, மெதுவாக பந்துவீசி, பேட்டர்களை திணறடிப்பார். இந்திய அணிக்கு எதிராக லீக் ஆட்டத்தில் 3 ரன்னில் ஹர்திக் பந்துவீச்சில் ரவீந்திரா ஆட்டமிழந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் ரவீந்திரா எளிதாக ஆட்டமிழக்கமாட்டார், கடும் சவலாக இருப்பார் என நம்பலாம். நடுப்பகுதியில் சான்ட்னர் சுழற்பந்துவீச்சு மிட்ஷெல் சான்ட்னர் பந்துவீச்சை சமீபத்தில் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய பேட்டர்கள் மறந்திருக்கமாட்டார்கள். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் எவ்வாறு பந்துவீசுவது எனத் தெரிந்து வேகத்தைக் குறைத்து, பந்தை டாஸ் செய்து வீசுவதில் சிறந்தவர். நடுப்பகுதி ஓவர்களில் சான்ட்னர் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கக்கூடும். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில்கூட சான்ட்னர் நடுப்பகுதியில் பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பந்துவீசுவதில் சான்ட்னர் வல்லவர். 4 போட்டிகளில் இதுவரை 7 விக்கெட்டுகளை சான்ட்னர் எடுத்துள்ளார். நடுவரிசையில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், கோலி, ராகுல், அக்ஸர் ஆகியோருக்கு சான்ட்னர் பந்துவீச்சு சவாலாக இருக்கும். பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மிட்ஷெல் சான்ட்னர் வில்லியம்ஸன் பேட்டிங் ஃபார்ம் முன்னாள் கேப்டன் வில்லியம்ஸன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கவலைதரக்கூடிய அம்சம். களத்தில் நங்கூரம் பாய்ச்சிவிட்டால் இவரின் விக்கெட்டை சாய்ப்பது கடினம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த வில்லியம்ஸன், இந்திய அணி்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் 81 ரன்கள் சேர்த்து தனது ஃபார்மை நிருபித்துள்ளார். சுழற்பந்துவீச்சை நன்றாகக் கையாளக்கூடிய வில்லியம்ஸன், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வில்லியம்ஸன், ரவீந்திரா இருவரும் சேர்ந்து 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர், தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சையும் அனாசயமாகக் கையாண்டனர் என்பதால் இந்திய அணி எச்சரிக்கையாக இருக்கக்கூடிய வீரர்களில் வில்லியம்ஸனும் ஒருவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வில்லியம்ஸன் ஒருநாள் போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக வில்லியம்ஸன் 2952 ரன்கள் சேர்த்து 47 சராசரியும், 86 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்து வலுவாக இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக 30 ஒருநாள் போட்டிகளில் ஆடிய வில்லியம்ஸன் 1228 ரன்கள் சேர்த்துள்ளார், 45 சராசரி வைத்து 75 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். வில்லியம்ஸன் இரு அணிகளுக்கு எதிராக மட்டுமே ஆயிரம் ரன்களை ஒருநாள் போட்டியில் கடந்துள்ளார், அதில் ஒன்று இந்திய அணி மற்றொன்று பாகிஸ்தான். ஆதலால் இந்திய அணிக்கு எதிராக எப்போதுமே வில்லியம்ஸன் சிறப்பாக ஆடக்கூடியவர். ஹென்றியின் வேகப்பந்துவீச்சு இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டிங்கிற்கு பெரிய அச்சுறுத்தலை தரக்கூடிய பந்துவீச்சாளர் மாட் ஹென்றி. கடந்த போட்டியில் முதல் 10 ஓவர்களுக்குள்ளே கில், கோலி விக்கெட்டுகளை ஹென்றி வீழ்த்தினார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹென்றி இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 10 ஓவர்கள்வரை ஹென்றியின் பந்துவீச்சை இந்திய பேட்டர்கல் சமாளித்து ஆடிவிட்டால் அதன்பின் வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காது. இந்திய அணி சமாளித்துவிடும். ஆனால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் 7 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் ஹென்றி பாதியிலேயே வெளியேறினார். இன்னும் காயத்தால் முழுமையாக ஹென்றி குணமடையவில்லை என பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஹென்றி இறுதிப் போட்டியில் பந்துவீசவில்லை என்றால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ஹென்றியைத் தவிர்த்துப் பார்த்தால் ஜேமிஸன், ரூர்க் ஆகியோரிடம் துல்லியம், லைன்லெத் இருக்காது என்பதால் எளிதாக இந்திய பந்துவீச்சாளர்கள் சமாளித்து விடுவார்கள். புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து1 மார்ச் 2025 உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹென்றி மறக்க முடியாத தோல்விகள் நியூசிலாந்திடம் ஐசிசி நாக்அவுட் போட்டிகளி்ல் இந்திய அணி அடைந்த அனைத்து தோல்விகளும் இன்னும் ஆறாத ரணமாக இருக்கின்றன. குறிப்பாக 2000ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி வென்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றியவர் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ். இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி(113), சச்சின்(69) இருவரும் 149 ரன்கள் சேர்த்து முதல் விக்கெட்டுக்கு வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தனர். ஆனால், அதன்பின் நடுவரிசை பேட்டர்கள் ராகுல் திராவிட்(28), யுவராஜ் சிங்(18), வினோத் காம்ப்ளி(1), ராபின்சிங்(13) என அனைவரும் சொதப்பியதால் 269ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. 265 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 24 ஓவர்களில் 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. அப்போது ஆல்ரவுண்டர்கள் கிறிஸ் கெயின்ஸ், கிறிஸ் ஹேரிஸ் இருவரும் அமைத்த 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர். இந்த பார்ட்னர்ஷிப்பை கடைசியில்தான் வெங்கடேஷ் பிரசாத் உடைத்தார். ஆனால், கிறிஸ் கெயின்ஸ் சதம் அடித்து 102 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். வெற்றியின் விளிம்புவரை இந்திய அணி சென்றும், கெயின்ஸ் விக்கெட்டை வீழ்த்த முடியாததால் கடைசி 2 பந்துகளில் தோல்வி அடைந்தது. 2019 தோனியின் ரன்அவுட் 2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இந்திய அணி அடைந்த தோல்வியும் மறக்க முடியாதது. நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. 240 ரன்களை சேஸிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்விக்குழிக்குள் சென்றது. ஆனால், ரவீந்திர ஜடேஜா, தோனி இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழந்தாலும் தோனி களத்தில் இருப்பதால் வெற்றி குறித்த நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. 216 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றியை நெருங்கியது,ஆனால், 48.3 ஓவரில் தோனியை மார்டின் கப்தில் செய்த ரன்அவுட் ஆட்டத்தையே திருப்பிப் போட்டு வெற்றி நியூசிலாந்து வசமாகியது. 2019ம் ஆண்டு அணியில் இருந்த வில்லியம்ஸன், டாம் லேதம், ஹென்றி, சான்ட்னர் ஆகிய 4 பேருமே சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,Getty Images டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி 2021ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது நியூசிலாந்து அணிதான். அந்த அணியில் இருந்த பலர் சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடுகிறார்கள். டாம் லேதம், டேவன் கான்வே, ஜேமிஸன், வில்லியம்ஸன் ஆகியோர் இப்போது விளையாடுகிறார்கள். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய பேட்டர்களை வீழ்த்தியதில் ஜேமிஸன் பந்துவீச்சு முக்கியப் பங்கு விகித்தது. இங்கிலாந்து காலநிலை, சவுத்தாம்டன் சூழல், வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் ஆகியவை நியூசிலாந்துக்கு சாதகமா அமைந்தது. ஜேமிஸ் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். அந்த போட்டியில் டேவன் கான்வே, வில்லியம்ஸன் பேட்டிங், பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மற்ற பேட்டர்களை விரைவாக வெளியேற்றியநிலையில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய நீண்டநேரம் எடுத்தனர். 2வது இன்னிங்ஸில் வில்லியம்ஸன் அரைசதம் வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றும் கிடைத்த வாய்ப்பை நியூசிலாந்திடம் பறிகொடுத்தது இந்திய அணி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgj517z4lj7o
  6. ஜெய்சங்கர் மீதான பாதுகாப்பு அத்துமீறல்: இந்தியா கடும் கண்டனம் 07 Mar, 2025 | 03:03 PM இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அமர்ந்திருந்த காரை நோக்கி ஒருவர் வேகமாகச் சென்ற சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இங்கிலாந்து பயணத்தின் போது நடந்த பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தை கண்டித்த இந்தியா "ஜனநாயக சுதந்திரத்தை இதுபோன்ற நபர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்" என்று கூறியுள்ளது. எக்ஸ் தளத்தில் பரவும் வீடியோவில் மூவர்ணக் கொடியுடன் ஒரு நபர் ஜெய்சங்கர் அமர்ந்திருக்கும் காரை நோக்கி விரைவதைக் காணலாம். அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அந்த நபரைத் தடுத்து அழைத்துச் சென்றபோதும் காலிஸ்தான் ஆதரவுக் கொடிகளுடன் போராட்டக்காரர்கள் குழு கோஷங்களை எழுப்புவதைக் காணலாம். இது குறித்து இந்தியவெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் "வெளியுறவுத்துறை அமைச்சர் இங்கிலாந்துக்கு சென்ற போது பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்ட காட்சிகளை நாங்கள் பார்த்தோம். இந்த பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று கூறினார். மேலும் "இப்படிப்பட்டவர்கள் ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும் அரசு தங்கள் அனைத்து கடமைகளை முழுமையாக நிறைவேற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208538
  7. Published By: Rajeeban 07 Mar, 2025 | 11:29 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் காலத்தில் அமெரிக்காவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்துச்செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்வதுகுறித்து ஆராயப்படுகின்றதா என ரொய்ட்டர் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள டிரம்ப் இது குறித்து நான் ஆராய்கின்றேன், நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை நிச்சயமாக அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். உக்ரைனை சேர்ந்தவர்களிற்கு விசா வழங்கியது குறித்து இரு வேறுபட்டகருத்துக்கள் உள்ளன நான் விரைவில் இது குறித்து முடிவெடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக உக்ரைனை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்யும் நடவடிக்கைகளை அடுத்தமாதம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை இது குறித்து எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார். ஜோபைடனின் ஆட்சிக்காலத்தில் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்த்து மற்றும் உக்ரைனிற்காக ஒன்றிணைதல் திட்டங்களின் கீழ் 200,000க்கும் அதிகமான உக்ரைனியர்களிற்கு அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஜனாதிபதியாக பதவியேற்றதும் உக்ரைனிற்காக ஐக்கியப்படும் திட்டத்தை டிரம்ப் இடைநிறுத்தியிருந்தார். இதேவேளை ஜோபைடன் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு பத்து நாட்களிற்கு முன்னர் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்த்து விசாக்களை 2026வரை நீடித்திருந்தார். டிரம்பின் நடவடிக்கைகளை முறியடிக்கவே முன்கூட்டியே ஜோபைடன் இந்த நடவடிக்கையை எடுத்தார். https://www.virakesari.lk/article/208515
  8. 07 Mar, 2025 | 06:43 PM (நா.தனுஜா) வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை (07) இருநாடுகளும் கைச்சாத்திட்டன. கொழும்பில் அமைந்துள்ள நிதியமைச்சில் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் அகியோ இஸோமாட்டா ஆகியோர் கைச்சாத்திட்டனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு, இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் ஊடாக ஜப்பானுடனான கடன்மறுசீரமைப்பு செயன்முறையை இலங்கை உத்தியோகபூர்வமாகப் பூர்த்திசெய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் எனத் தெரிவித்துள்ளது. 'கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை உள்ளடக்கியதாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கைக்கும், உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவில் அங்கம்வகிக்கும் நாடுகளுக்கும் இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனைத்தொடர்ந்து இலங்கைக்கும், அந்த உறுப்புநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, அவை பரஸ்பரம் கைமாற்றம் செய்யப்படுவதே கடன்மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு இணக்கப்பாட்டின் நிறைவு செயன்முறையாகும்' எனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு என்பன ஒட்டுமொத்த இந்து - பசுபிக் பிராந்தியத்தினதும் ஸ்திரத்தன்மைக்கும், சுபீட்சத்துக்கும் இன்றியமையாதவையாகும் எனவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/208571
  9. பெலிகாட்: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற தந்தை மீது குற்றச்சாட்டை பதிவு செய்த மகள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,கிசெல் பெலிகாட்டின் மகளான கேரோலின் டரியன் தனது தந்தை டாமினிக் தனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர்,லாரா கோஸி பதவி,பிபிசி நியூஸ் 7 மார்ச் 2025, 13:02 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் டொமினிக் மற்றும் கிசெல் பெலிகாட் மகளான கேரோலின் டரியன், தனது தந்தை தனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டை அவர் தந்தை மறுத்துள்ளார். தனது முன்னாள் மனைவி கிசெலுக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக போதை மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பல டஜன் ஆண்களை வரவழைத்து அவரை வன்கொடுமை செய்ய வைத்ததற்காக டொமினிக் பெலிகாட்டிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தனது மனைவி வன்கொடுமை செய்யப்படுவதை படம்பிடித்து, நூற்றுக்கணக்கான வீடியோக்களை பட்டியலிட்டு ஹார்டு டிஸ்கில் சேமித்து வைத்தார். அதில் அவரது மகளின் இரண்டு புகைப்படங்களும் இருந்தன. அந்த புகைப்படங்களில் தற்போது 46 வயதான டரியன் நினைவில்லாமல், தனக்கு அடையாளம் தெரியாத உள்ளாடைகளை அணிந்துகொண்டு மயங்கிய நிலையில் இருந்ததாக கூறுகிறார். கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை 'என் தந்தை ஒரு குற்றவாளி' - மனைவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவரின் மகள் பேட்டி இந்த புகைப்படங்களுக்கு டொமினிக் பெலிகாட் முன்னுக்கு பின் முரணான விளக்கங்களை அளித்துள்ளார். ஆனால் தனது மகளை பாலியல் ரீதியதாக துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை எப்போதும் மறுத்து வந்திருக்கிறார். தனது தந்தை தனக்கு போதை மருந்து அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததற்கு இந்த புகைப்படங்களே ஆதாரம் என டரியன் நீண்ட காலமாக கூறி வந்திருக்கிறார். "அவர் எனக்கு போதை மருத்து அளித்தார் என்பது தெரியும். இது ஒருவேளை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக இருக்கலாம். ஆனால் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை," என அவர் பிபிசியிடம் ஜனவரியில் தெரிவித்தார். காவல்துறையினர் அந்த புகைப்படங்களை தனக்கு முதல்முறை காட்டியபோது ஏற்பட்ட அதிர்ச்சியை பற்றியும் அவர் பேசியிருந்தார். இப்போது காவல்துறையினர் விசாரணை நடத்துவர், அதன் பின்னர் வழக்கு தொடருவது குறித்து அரசு தரப்பு முடிவு செய்யும். டாமினி பெலிகாட்டின் வழக்கறிஞரான பியாட்ரிஸ் ஜவாரோ, புகாரை முன்வைக்கும் டரியனின் முடிவு "ஆச்சரியமளிக்கவில்லை," என பிரான்ஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆனால், தனது மகள் மீது ரசாயன போதைப்பொருட்களை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக டொமினிக் பெலிகாட் மீது குற்றம்சாட்ட போதிய "பக்கசார்பற்ற கூறுகள்" இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இதற்கு முந்தைய வழக்கு விசாரணையில் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். உடல் பருமன்: ஆபத்தான 'வில்லன்' சமையல் எண்ணெய் - ஒருநாளைக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?6 மார்ச் 2025 ரமலான் நோன்பு இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு முறை என்ன?5 மார்ச் 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,கிசெல் பெலிகாட் பிரான்ஸையும் உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 16 வார வழக்கில், டரியன் மற்றும் அவர் தந்தைக்கு இடையில் நிகழ்ந்த வாக்குவாதங்கள், மிகவும் உணர்ச்சி பூர்வமான தருணங்களாக இருந்தன. விசாரணையின் போது "நான் உன்னை தொட்டதில்லை, எப்போதுமில்லை," என டொமினிக் பெலிகாட் தனது மகளிடம் கெஞ்சினார், "நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!" என டரியன் கூச்சலிட்டார். தம் தாயின் வழக்குப் போல் அல்லாமல், தன்மீது நிகழ்த்தப்பட்டதாக அவர் நம்பும் வன்கொடுமைக்கு ஆதாரம் இல்லாததால், அந்த வழக்கில் "மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவராக" உணர்வதாக டரியன் முன்னர் தெரிவித்திருந்தார். இவ்வாரத்தில் முன்னதாக தனது தந்தை மீது தாம் சுமத்தும் குற்றச்சாட்டுகள் "ஒரு குறியீடு", ஆனால் "நான் ராசயன வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவள், ஆனால் அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படவில்லை." என்று ஆரம்பம் முதலே தாம் முன் வைத்துவரும் குற்றச்சாட்டை ஒட்டியே இருப்பதாக எல்லே பிரான்ஸ் இதழிடம் அவர் கூறினார். தம் சார்பில் வாதிட வழக்கறிஞர் ஃபிளாரன்ஸ் ரால்ட்டை அவர் நியமித்துள்ளார். 1990-களில் வன்முறையான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக ரால்ட் பல ஆண்டுகளாக போராடிக்கொண்டிருப்பவர். அவர்களில் ஒருவர் மேரியான் என்ற புனைப்பெயரால் அறியப்படும் இளம் சொத்து முகவர். இவர் 1999-ல் நிகழ்ந்த ஒரு பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்டவர். இந்த குற்றச்சாட்டை டொமினிக் பெலிகாட் ஒப்புக்கொண்டுள்ளார். மற்றொருவரும் தனது 20-களில் இருந்த ஒரு எஸ்டேட் முகவர். அவர் 1991-ல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக டொமினிக் பெலிகாட் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தனக்கு இதில் தொடர்பில்லை என அவர் எப்போதும் கூறிவந்துள்ளார். ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தனி ஒருவன்'5 மார்ச் 2025 பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,வழக்கறிஞருடன் டொமினிக் பெலிகாட் (வலது) தனக்கும் மேரியனுக்கு ஒற்றுமைகள் இருப்பதாக டரியன் கூறினார். "நாங்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறோம். அவருக்கும் பொன்னிற கேசம். பாப் கட் செய்யப்பட்டுள்ளது, நாங்கள் இருவரும் ஒரே வருடத்தில் பிறந்தோம்... அவருடைய வழக்கறிஞரை சந்தித்து அனைத்து விவரங்களையும் கேட்டறிய விரும்பினேன்," என எல்லே பிரான்ஸிடம் கூறினார் டரியன் காவல்துறையிடம் வழக்கறிஞர் ரால்ட் அளித்த புகாரில், டரியனை பெண் மருத்துவரின் சோதனைக்குட்படுத்த அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் டொமினிக் பெலிகாட் தன் மனைவி மீது பயன்படுத்திய போதை மருந்துகளுக்கு இவரும் உட்படுத்தப்பட்டாரா என சோதிக்கப்படவுமில்லை என்றும் கூறியிருந்தார். இந்தப் புகார் பிரான்ஸ் ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்டது. நடந்து முடிந்த வழக்கு கிசெல் பெலிகாட் மீது மட்டும் கவனம் செலுத்தியதாகவும், தனது கட்சிக்காரர் விளிம்பு நிலையில் பாதிக்கப்பட்டவராகவே நடத்தப்பட்டதாக ரால்ட் தெரிவித்தார். ஒரு புதிய தீவிரமான விரிவான விசாரணையை நடத்தவேண்டும் என அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். டிசம்பரில் டொமினிக் பெலிகாட்டுடன் 49 நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைவர் மீதும் குறைந்தது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அது கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக பதினேழு பேர் முதலில் தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் ஏழு பேர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். மேல்முறையீட்டை தொடருவது என முடிவு செய்பவர்கள் இந்த வருட இறுதியில் தெற்கு பிரான்ஸில் உள்ளா நைம்ஸில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வார்கள், 2024 செப்டம்பர் முதல் டிசம்பவர் வரை நீடித்த முதல் வழக்கு, கிசெல் பெலிகாட் தனது அநாமதேய உரிமையை விட்டுக்கொடுத்து வழக்கு விசாரணையை பொதுமக்களும் ஊடகங்களும் பார்க்க அனுமதித்ததால் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2erjdjneg2o
  10. இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணிக்கமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர்இந்த தகவலை வெளியிட்டார். இங்கு தொடர்ந்து பேசிய அவர்; நாளை கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு எமது அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர்களாக, ரயில் சாரதிகளாக, பாதுகாவலர்களாக பெண்களை இன்னும் சில நாட்களில் பார்க்க முடியும். நாளைய மகளிர் தினத்திற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேபோல், பாடசாலை பேருந்துகளை பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/315799
  11. London-ல் ஒலிக்கப்போகும் Ilayaraaja-வின் Symphony; சிம்ஃபொனி இசைப்பது கௌரவமாக பார்க்கப்படுவது ஏன்? இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  12. 07 Mar, 2025 | 04:34 PM திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இதன் போது மீளாய்வு செய்யப்பட்டதோடு, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தைச் சந்தித்தால், அதில் முதலீடு செய்தவர்கள் தான் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே, முறையான முகாமைத்துவத்தின் மூலம் அதனை அதிக லாபம் ஈட்டும் அரச நிறுவனமாகப் பேண வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க உள்ளிட்ட பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/208542
  13. விமானம் பழுதுபார்க்கும் நிலையமாக மாறவுள்ளது மத்தள விமான நிலையம் Published By: Digital Desk 3 07 Mar, 2025 | 02:36 PM மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமானம் நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் நிலையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் பொருத்தமான வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. அதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 38.5 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற விரும்புகிறோம்," என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208531
  14. சர்வதேச விசாரணை - பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது என கருதுகின்றீர்களா? - ரணிலிடம் கேள்வி எழுப்பிய கலும்மக்ரே Published By: Rajeeban 07 Mar, 2025 | 01:09 PM சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது என கருதுகின்றீர்களா என இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் நிகழ்ந்த பாரிய மனித உரிமைமீறல்களை வெளிக்கொணர்ந்த கலும் மக்ரே முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் கேள்விஎழுப்பினார். அல்ஜசீரா பேட்டியின் போது ஹமாசை அழிப்பதற்கான ராஜபக்ச மாதிரி குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, காசாவில் யுத்தம் ஆரம்பித்து ஒரு மாதத்தின் பின்னர் அமெரிக்காவின் புத்திஜீவிகள் அமைப்பொன்று ஹமாசினை முற்றாக அழிப்பதற்கான ராஜபக்ச திட்டம் என கட்டுரையொன்றை வெளியிட்டது. இஸ்ரேல் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய தந்திரோபாயத்தை பயன்படுத்தவேண்டும் என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் குறிப்பிட்ட மூலோபாயம் என்பது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை, யுத்தசூன்ய வலயம் என அழைக்கப்படும் பகுதியை நோக்கி செல்லவைத்து அதன் பின்னர் அவர்கள் மீது குண்டுவீசுவதாகும். ராஜபக்சாக்கள் செய்ததை இஸ்ரேல் செய்யவேண்டும், என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டதுடன் இஸ்ரேல் எந்த வகையான சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலிற்கும் உடன்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது, அவ்வாறு சர்வதேச சட்டங்களை புறக்கணிப்பதை நியாயப்படுத்தும் அதன் விளைவுகளை நியாயப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது , அதனை காசாவில் பார்க்கவேண்டியுள்ளது என்பது குறித்து நீங்கள் கவலையடைகின்றீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க நான் அந்த கட்டுரையை படிக்கவில்லை, ஆகவே அதில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது. இதனால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த மெஹ்டி ஹசன் இஸ்ரேலை ஆதரிக்கும் சிலர் யுத்தகுற்றங்கள் மருத்துவமனைகள் மீதுதாக்குதலை மேற்கொள்வது போன்ற ராஜபக்ச பாணியை பின்பற்றவேண்டும் என கருதுகின்றார்களே என கேள்வி எழுப்பினார். மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் இடம்பெறவில்லை என இதற்கு பதிலளிக்க ஆரம்பித்தவேளை பார்வையாளர்கள் மத்தியிலிருந்து குரல்கள் எழுந்தன. அதற்கு ரணில் எனது பதிலை முடிக்க விடுகின்றீர்களா? என தெரிவித்துவிட்டு, முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே முக்கியமானது, வேறு சில சம்பவங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனைகள் மீது விமானப்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் பாரியளவில் பெருமளவில் இது இடம்பெற்றது என நான் தெரிவிக்கமாட்டேன். மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளகூடாது என வலியுறுத்தியவன் நான் அதனை நாங்கள் உறுதி செய்தோம். யுத்தத்தின் இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்றால், ஆம் அங்கு பிரச்சினைகள் உள்ளது. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன், நான் இல்லை என தெரிவிக்கமாட்டேன் என குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/208530
  15. யாழில் மாற்றுவலுவுடையோருக்காக விசேட திட்டம் இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தினால் இலங்கையில் முன்னுதாரணமான முறையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வடமாகாண மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. https://www.facebook.com/LankasriTv/videos/1166145185015299/?ref=embed_video&t=42 சாரதி அனுமதி பத்திரம் இதன் பொழுது உள்ளூரில் மாற்றுதிறனாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு பயணிப்பது மற்றும் அவர்களுக்கான விசேட சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குமாறும் இதன் காரணமாக தாம் பொலிஸ் மற்றும் சட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மோட்டார் வாகன தலைமையக தொழில்நுட்ப பிரவின் உதவியுடன் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவியுடனும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு வாகன பதிவு வழங்கப்பட்டு சாரதி அனுமதி பத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்த பொழுதிலும் குறித்த சாரதி அனுமதி பத்திரத்தில் அவர்களுடைய வாகன இலக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. [ZKFXWMB ] 8 மோட்டார் வாகனங்கள் இந்நிலையில் வேறு வாகனங்களை அவர்கள் செலுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அனுமதி வழங்கபட்ட 8 மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்களான எட்டு மாற்றுத்திறனாளி உரிமையாளர்களுக்கு இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய முற்படுகின்ற பொழுது அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/special-program-for-the-disabled-in-jaffna-1741293670#google_vignette
  16. ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை 07-03-02025 முதல் மீள இயங்க நடவடிக்கை
  17. பெராரி காரை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தவரை அல்ஜசீரா இடித்து விழுத்தியுள்ளது - பிமல் ரத்நாயக்க 07 Mar, 2025 | 12:02 PM பெராரி காரை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வீதிவிபத்தில் சிக்குண்டுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அல்ஜசீராவிற்கு ரணில்விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெராரி வாகனங்களை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தவரை அல்ஜசீரா இடித்து விழுத்தியுள்ளது அவர் தனது புத்தியை இழந்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றார் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208520
  18. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு 2024 கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த கல்வி செயற்பாடுகளுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை 2025 மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/315796
  19. காட்டு யானைகள் ரயிலில் மோதுவதை தவிர்ப்பதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உபகரணமொன்றை பரிசோதிப்பதற்கு போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளை மறுதினம் முதல் குறித்த உபகரணம் பொருத்தப்பட்ட ரயிலொன்று கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். பரிசோதனையின் பின்னர் மட்டக்களப்பு மார்க்கத்தில் இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களிலும் குறித்த உபகரணம் பொருத்தப்படவுள்ளது. ரயில்களில் மோதுண்டு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 09 யானைகள் உயிரிழந்துள்ளன. மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தின் கல்ஓய மற்றும் பளுகஸ்வெவ இடையிலான பகுதியில் 20 கிலோமீற்றர் அளவிலான பிரதேசத்தில் யானைகள் ரயிலில் மோதுவதற்கான அதிக அளவு அபாயம் காணப்படுவதாக பிரதியமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இதனைக் குறைப்பதற்காக புதிய உபகரணத்தை எஞ்ஜினில் பொருத்தி, இரவு நேரங்களில் ரயிலை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பேராசிரியர் லிலந்த சமரநாயக்க உள்ளிட்ட தரப்பினரால் இந்த உபகரணம் தயாரிக்கப்பட்டுள்ளது. கலாநிதி தரிந்து வீரகோன், நலீன் ஹரிஸ்சந்திர மற்றும் பேராசிரியர் காமினி திசாநாயக்க உள்ளிட்ட சிலரும் இதில் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். https://thinakkural.lk/article/315784 AI Technology| ரயில்வே ட்ராக்கில் சுற்றி வரும் 6பேர் -5000 எச்சரிக்கை.. காப்பாற்றப்பட்ட 2500 யானைகள்
  20. பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,சாரதா வி பதவி,பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு உடலில் சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என்பனவற்றைக் கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று சென்னை மாநகராட்சி நம்புகிறது. சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்யத் தொடங்கியுள்ளது. வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஜனவரி 30ஆம் தேதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. "சென்னையில் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீட்டு நாய்களுக்கு சிப் பொருத்தும் பணி தொடங்கவுள்ளது," என்று சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் ஹுசைன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கேரளா மாநிலத்தில் தெரு நாய்களை கொலை செய்யும் நபர் விருதுநகர் அருகே 30 நாய்களை கொன்றதாக ஊராட்சித் தலைவி, கணவர் உள்பட 4 பேர் கைது திருவண்ணாமலையில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கிறதா? உண்மை என்ன? பண்ணைபுரம் முதல் லண்டன் 'சிம்ஃபொனி' இசை வரை - இளையராஜா இன்றும் டிரெண்டில் இருப்பது எப்படி? மைக்ரோ சிப் என்பது என்ன? நாய்களின் உடலில் மைக்ரோ சிப்கள் தோலுக்கு அடியில், பொதுவாக தோள்பட்டைப் பகுதியில் ஊசி மூலமாகச் செலுத்தப்படும். இந்த சிப் ஒரு அரிசிப் பருக்கையின் அளவில் மட்டுமே இருக்கும். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோ சிப்பில் நாயின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) வழங்கிய சிப் எண் ஆகிய விவரங்கள் பதிவேற்றப்பட்டு இருக்கும். அந்த நாய்கள், எந்தப் பகுதியில் காணப்படுபவை என்ற ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் (புவி குறியீடு) விவரமும், வீட்டு நாய்களில் அவற்றின் உரிமையாளர் விவரங்களும் இருக்கும். உடலில் அந்த சிப் இருக்கும் இடத்திற்கு அருகில் ஸ்கேனர் கருவியைக் கொண்டு செல்லும்போது அதிலுள்ள விவரங்களைப் படிக்க முடியும். RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சிப்களில் நாயின் விபரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தத் தரவுகள் பிரத்யேக மென்பொருள் செயலியின் மூலம் பராமரிக்கப்படும். "இதன் மூலம் நாய்களின் தடுப்பூசி விவரங்களைக் கண்காணிக்க முடியும். வருடாந்திர தடுப்பூசி செலுத்துவதற்கான நினைவூட்டலை உரிமையாளர்களுக்கு அனுப்ப முடியும்" என்று சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் ஹுசைன் கூறுகிறார். விண்வெளியிலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய சுனிதா வில்லியம்ஸ் - பூமி திரும்புவது எப்போது?7 மார்ச் 2025 இரு காதலிகளுடன் சேர்ந்து மற்றொரு காதலியைக் கொன்ற கல்லூரி மாணவர் - ஏற்காடு மலையில் என்ன நடந்தது?7 மார்ச் 2025 தொகுதி மறுசீரமைப்பு: தமிழக அரசின் தீர்மானங்கள் உணர்த்துவது என்ன? கோரிக்கைகள் சரியானதா?6 மார்ச் 2025 சாதிரீதியாக கோவில்களுக்கு உரிமை கோர முடியுமா?நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?6 மார்ச் 2025 தெருநாய்களைக் கட்டுப்படுத்தலாம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த மைக்ரோ சிப்புகளின் மூலம், தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்கவும் முடியும். கடந்த 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்னையில் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. இவற்றில் சுமார் 30% நாய்களுக்கு மட்டுமே இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் கவனம் செலுத்தி நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது மிக அவசியமான நடவடிக்கை என்கிறார் விலங்குகள் நல உரிமை ஆர்வளர் கிளமன்ட் ஆண்டனி ரூபின். "தெரு நாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாடு திட்டம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுணங்கியது. இப்போது மிக வேகமாக இதில் ஈடுபட வேண்டும். நாய்கள் ஓர் ஆண்டுக்கு இருமுறை குட்டிகளைப் பிரசவிக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, ஆறு மாத கால பிறப்பு சுழற்சியை முந்திக்கொள்ள இந்த சிகிச்சைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தி அனைத்து தெரு நாய்களுக்கும் இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்" என்று கிளமன்ட் வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சியின் கால்நடை அதிகாரி கமால் ஹுசைன் இதுகுறித்துப் பேசுகையில், "இனப்பெருக்கக் கட்டுப்பாடு சிகிச்சை வழங்கத் தற்போது ஐந்து மையங்கள் செயல்படுகின்றன. மேலும் பத்து மையங்கள் அமைக்கப்படவுள்ளன, அவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம். கடந்த ஆண்டு 15 ஆயிரம் நாய்களுக்கு இந்தச் சிகிச்சையைச் செய்திருந்தோம். இந்த ஆண்டு 20 ஆயிரம் நாய்களுக்கு செய்யத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு, கூடுதல் மையங்களுடன் நாய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்" என்றார். இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும்?விதிமுறைகள் என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் உத்தராகண்ட்: 'எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு ஏன் தலையிடுகிறது?' லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் அச்சம் என்ன?6 மார்ச் 2025 கைவிடப்பட்ட நாய்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு இல்லை பட மூலாதாரம்,Antony Rubin படக்குறிப்பு,விலங்குகள் நல உரிமை ஆர்வளர் கிளமன்ட் ஆண்டனி ரூபின் சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் எத்தனை நாய்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டவை என்ற அதிகாரபூர்வ விவரங்கள் அதிகாரிகளிடம் இல்லை. இருப்பினும் கைவிடப்படும் நாய்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன என்று சென்னை மாநகராட்சி கூறுகிறது. ப்ளூ கிராஸ் காப்பகத்தில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 15 கைவிடப்பட்ட வீட்டு நாய்கள் தஞ்சமடைவதாகக் கூறுகிறார் டாக்டர் எஸ்.சின்னி. இவர், இந்திய விலங்கு நல வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும் ப்ளூ கிராஸ் அமைப்பின் துணை நிறுவனராகவும் இருக்கிறார். ராட்வீலர், டாபர்மேன் உள்ளிட்ட வகை நாய்கள் கைவிடப்படுகின்றன என்று கூறும் அவர், "நாய்கள் குட்டியாக இருக்கும்போது அவை பார்க்க அழகாக இருக்கின்றன என்று நினைத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் அவற்றைப் பராமரிப்பதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் கைவிடுகின்றனர். சிலர் வெளிநாடு செல்வதால் கைவிடுகின்றனர். இன்னும் சிலரது வீட்டில், குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு நாய்கள் பிடிக்காததால் கைவிடுகின்றனர்" என்கிறார். சென்னையில் வளர்ப்பு நாய்கள் குறித்த கணக்கெடுப்பு இல்லாத நிலையில், சுமார் ஒரு லட்சம் நாய்கள் வீட்டில் வளர்க்கப்படலாம் என்கிறார் சின்னி கிருஷ்ணா. மேலும், "இந்த நாய்களைப் பதிவு செய்வது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி கூறினாலும், அனைவரும் முன்வந்து பதிவு செய்யவில்லை. பதிவு செய்யப்பட்ட நாய்களுக்கே சிப்கள் பொருத்தப்படும்" என்று கூறினார். படக்குறிப்பு,இந்திய விலங்கு நல வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவரும் ப்ளூ கிராஸ் அமைப்பின் துணை நிறுவனருமான டாக்டர் எஸ். சின்னி கிருஷ்ணா சென்னையில் வளர்ப்பு நாய்கள் ஆன்லைன் பதிவு 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. "இதுவரை 9,600 நாய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓர் உரிமையாளர் எத்தனை நாய்களை வீட்டில் வைத்துக் கொள்ளலாம், நாய்களைப் பதிவு செய்யாவிட்டால் அதற்கான நடவடிக்கை, வளர்ப்பு நாய்களைக் கைவிட்டால் அதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விதிகள் இதுவரை வகுக்கப்படவில்லை," என்றும் சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி தெரிவித்தார். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன?5 மார்ச் 2025 க்ளோயி ஸாவ்: 'நான் மனிதனாக நடத்தப்பட வேண்டும்' - ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கூறுவது என்ன?6 மார்ச் 2025 சிப் பொருத்துவதால் சிக்கல் ஏற்படுமா? பெங்களூர் மாநகராட்சி தனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் 2.79 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவது என முடிவு செய்து, அதற்கான சோதனையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டம் சட்டவிரோதமானது என ஆக்ஷன் ஃபார் அனிமல் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் நெவினா காமத் தனது மனுவில் தெரிவித்துள்ளார். சிப் பொருத்துவதால், நாய்களின் உடலில் காயங்களும் கட்டிகளும் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சென்னையில் சிப் பயன்பாடு ஏற்கெனவே உள்ளது என்று கூறுகிறார் விலங்குகள் நல உரிமைகள் ஆர்வலர் கிளமண்ட் ஆண்டனி ரூபின். அவர் கூறுகையில், "சென்னையில் ஏற்கெனவே மெரினா கடற்கரையில் உள்ள குதிரைகளுக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளது. காடுகளில் யானைகளுக்கு இதுபோல சிப் பொருத்தப்படுவது உண்டு. கோவாவில் தெரு நாய்களுக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளது. சிப் பொருத்துவதால் நாய்களின் உடலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது," என்கிறார். பட மூலாதாரம்,Getty Images மைக்ரோ சிப் எங்கே பொருத்தலாம்? சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 6 கால்நடை மருத்துவ கிளினிக்குகளிலும், கால்நடை வளர்ப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 5 மருத்துவ கிளினிக்குகளிலும், கால்நடை அறிவியல் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கும் மருத்துவ கிளினிக்குகளிலும் இந்த சிப்புகளைப் பொருத்தலாம். மேலும், இதற்காக தனியார் கால்நடை மருத்துவ நிலையங்களையும் ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgpnvzvr4do
  21. எல்லை தாண்டிய 14 தமிழக மீனவர்கள் கைது மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அம்மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/315782
  22. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 10 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின Published By: Vishnu 07 Mar, 2025 | 07:38 PM எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்த கட்டுப்பணம் பெறும் செயல்முறையின்படி, 6ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.15 மணி வரை 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அந்த 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 38 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/208580
  23. வடக்கு பகுதியை வதிவிடமாக கொண்ட புற்றுநோயாளர்கள் சிகிச்சைக்காக கொழும்புக்கு சென்று மருத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் அதற்கான சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிகிச்சைக்கு சென்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாகவும் அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும் பணவசதிக் குறைவு காரணமாகவும் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சிகிச்சையைத் தொடர்வதற்காக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறித்த விடயம் தொடர்பில் புற்றுநோயாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சு, வெகுஜன ஊடகங்களூடாகவும் முறைப்பாடுகளை முன்வைத்து கடந்த ஒரு வருடமாக தீர்வுக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை பெற்று வருகையில் நோயாளர்கள் தமது சிகிச்சையை யாழில் தொடர விரும்புமிடத்து தாம் பெற்ற சிகிச்சை தொடர்பான சகல விபரங்களையும் கடிதத்துடன் எடுத்து சென்று, தெல்லிப்பளையில் அங்கு உள்ள மருத்துவ மற்றும் கதிர்வீச்சு வசதிகளுடன் அங்கு சேவையாற்றும் புற்றுநோய் நிபுணர்களின் தீர்மானத்துடன் சிகிச்சை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் எவ்வித காரணத்துக்காகவும் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் எனவும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/315779
  24. திருவண்ணாமலையில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கிறதா? உண்மை என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ், சென்னை 17 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சில இடங்களில் தங்கமும் லித்தியமும் இருப்பதாக இந்திய நிலவியல் துறை தெரிவித்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி என்ன? உண்மையில், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன? தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் (Geological Survey of India) தெரிவித்ததாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால், அது இரு தனித்தனி பகுதிகள் இல்லையென்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதி என்று புவிவியல் ஆய்வு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குநர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தங்கம் விலை தினமும் புதிய உயரங்களைத் தொட்டு வரும் நிலையில், இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்ஃபொனி என்றால் என்ன? இளையராஜா தான் அதை உருவாக்கும் முதல் இந்தியரா? சாதிரீதியாக கோவில்களுக்கு உரிமை கோர முடியுமா?நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன? தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா? அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன? சில நாட்களுக்கு முன்பாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் 175வது ஆண்டு விழா சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய அந்நிறுவன இயக்குநர் எஸ்.பி. விஜயகுமார் "திருவண்ணாமலை ராஜபாளையம் பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அதேபோல, மின்கலங்கள் தயாரிக்கப் பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன," என்று அவர் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவித்தன. தமிழ்நாட்டில் தங்கமும் லித்தியமும் உள்ள இடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? இது குறித்து பிபிசியிடம் பேசிய இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான தென் மண்டல இயக்குநர் எஸ்.பி. விஜயகுமார், தான் சொன்ன தகவல்கள் அளவுக்கு அதிகமாகப் பெரிதுபடுத்தப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images "அந்த விழாவில் பேசும்போது, இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் 175 ஆண்டுகளாக இந்தியாவில் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து பேசினேன். இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம்தான் இந்தியாவில் பூமிக்கு அடியில் உள்ள கனிமங்களைத் தனது ஆய்வுகளின் மூலம் அறிந்து சொல்கிறது என்றெல்லாம் குறிப்பிட்டேன். அப்படிச் சொல்லும்போது தமிழ்நாட்டில் தங்கம் சில இடங்களில் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தேன். அது மிகவும் பெரிதுபடுத்தப்பட்டு விட்டது" என்று தெரிவித்தார். இந்த நிலையில், திருவண்ணாமலையிலும் ராஜபாளையத்திலும் தங்கம் பூமிக்கு அடியில் இருப்பதாக செய்திகள் வெளியானது எப்படி? இந்தச் செய்தியைப் படித்த பலரும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) பகுதியிலும் தங்கம் கிடைப்பதாகப் புரிந்துகொண்டனர். ஆனால், இங்கு குறிப்பிடப்படும் ராஜபாளையம் என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டமடுவு ஊராட்சிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். கடந்த 2022-23இல் திருவண்ணாமலை மாவட்டம் ராஜபாளையத்தில் இரும்புடன் சேர்த்து தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வை நிலவியலாளர்களான ஆர். ராம்பிரசாத், சுபா ராய் ஆகியோர் மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் 2024 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகளில்தான், அந்தப் பகுதிகளில் தங்கம் இருப்பது தெரிய வந்தது. டிரம்பின் வர்த்தகப் போர் சீனாவின் சந்தை வளர்ச்சியை எந்த அளவுக்கு பாதிக்கும்?5 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் இருந்தே சுனிதா வில்லியம்ஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு - பூமிக்கு திரும்புவது எப்போது?2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆய்வறிக்கை கூறும் தகவல்கள் என்ன? பட மூலாதாரம்,Geological Survey of India/Facebook படக்குறிப்பு,இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் 175 ஆண்டுகளாக இந்தியாவில் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தே பேசியதாகத் தெரிவிக்கிறார் எஸ்.பி.விஜயகுமார் திருவண்ணாமலையில் உள்ள ராஜபாளையத்தில் எளிதாகப் பிரித்து எடுக்கக்கூடிய வகையிலான தங்கமாக, பிற உலோகங்களுடன் கலந்து என இரு வகைகளில் தங்கம் கிடைக்கிறது. இந்த தங்கத் தாதுக்கள் பெரும்பாலும் இரும்புக் கல் எனப்படும் Banded Magnetite Quartzite (BMQ) பாறைகளிலேயே கிடைக்கின்றன. சில இடங்களில் வேறு உலோகங்களுடன் கலந்தும் கிடைக்கின்றன. பொதுவாக தங்கச் சுரங்கங்கள் லாபகரமாக இருக்க வேண்டுமெனில், தோண்டி எடுக்கப்படும் தாதுக்களில் 500ppb (parts per billion) அளவுக்கு தங்கம் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தங்கத் தாதுக்கள், அதாவது 554ppb - 24,293ppb தரமுள்ள தங்கத் தாதுக்கள் கிடைக்கக்கூடிய இடங்கள் ராஜபாளையம் பகுதியில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இங்கு ஒட்டுமொத்தமாக 3.2 டன் அளவுக்குத் தங்கம் கிடைக்கலாம். ஆனால், இதை உறுதி செய்ய மேலும் சில ஆய்வுகளைச் செய்ய வேண்டும். உடல் பருமன்: ஆபத்தான 'வில்லன்' சமையல் எண்ணெய் - ஒருநாளைக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?6 மார்ச் 2025 உத்தர பிரதேசத்தில் 2 வயது பெண் புலியை அடித்தே கொன்ற கிராம மக்கள் - என்ன நடந்தது?28 பிப்ரவரி 2025 'ஆறுகளிலேயே கிடைக்கும் தங்கம்' பட மூலாதாரம்,Getty Images தமிழ்நாட்டின் சில இடங்களில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை எடுப்பது பொருளாதார ரீதியில் பலனளிக்குமா என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கும் என்கிறார் விஜயகுமார். பல இடங்களில் தங்கத்தைத் தோண்டியெடுத்து அவற்றைச் சுத்திகரிக்கும் செலவு, தங்கத்தின் மதிப்பைவிட அதிகமாக இருக்கும். அம்மாதிரி இடங்களில் யாரும் தங்கத்தை எடுக்க மாட்டார்கள் என்கிறார் அவர். "கோலார் தங்க வயல் பகுதியில் இன்னும் தங்கம் கிடைக்கும். ஆனால், வெளியில் ஒரு கிராம் தங்கத்தை வாங்க செலவு செய்யும் தொகையைவிட அங்கு தங்கம் எடுக்க அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால்தான் அங்கிருக்கும் தங்க வயல் கைவிடப்பட்டது. ஆகவே ஓரிடத்தில் தங்கம் கிடைக்கிறதா என்பது முக்கியமல்ல. மாறாக, அதை எடுப்பது லாபகரமாக இருக்குமா என்பதுதான் மிகவும் முக்கியம். அதற்குச் சில இடங்களில் வாய்ப்புள்ளது. அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்" என்று விஜயகுமார் விளக்கினார். "நான் இயக்குநர் ஜெனரலாக இருக்கும்போது இந்தப் பகுதிக்குச் சென்றுள்ளேன். அப்போது அங்குள்ள ஆறுகளிலேயே சிலர் சலித்து தங்கத் தாதுக்களை பிரிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே, தங்கம் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிதான் அது. கூடுதல் ஆய்வுகளில் இதை உறுதி செய்ய வேண்டும்" என்றார் இந்திய நிலவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரலான எஸ். ராஜு. பண்ணைபுரம் முதல் லண்டன் 'சிம்ஃபொனி' இசை வரை - இளையராஜா இன்றும் டிரெண்டில் இருப்பது எப்படி?4 மணி நேரங்களுக்கு முன்னர் டாப் 5 செய்திகள்: தருமபுரியில் தந்தத்திற்காக கொன்று எரிக்கப்பட்ட யானை - என்ன நடந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் லித்தியம் கிடைக்க வாய்ப்புள்ளதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல இடங்களில் தங்கத்தைத் தோண்டியெடுத்து அவற்றைச் சுத்திகரிக்கும் செலவு, தங்கத்தின் மதிப்பைவிட அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் லித்தியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று எஸ்.பி. விஜயகுமாரிடம் கேட்டபோது, "லித்தியம் தற்போது மிக முக்கியமான உலோகம் என்ற மதிப்பைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் லித்தியம் கிடைக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதுபோல தமிழ்நாட்டிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை," என்று தெரிவித்தார். எஸ். ராஜுவும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "பல இடங்களில் உப்பு வயல்களில் லித்தியம் படிவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அயர்லாந்து, பின்லாந்தில் உப்பு வயல்களில் லித்தியம் எடுக்கிறார்கள். நான் இயக்குநர் ஜெனரலாக இருந்தபோது தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பு வயல்களில் லித்தியம் இருக்கிறதா என்று ஆய்வு செய்து பார்த்தேன். வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. வேதாரண்யம் உள்ளிட்ட பிற உப்பு வயல் அமைந்துள்ள பகுதிகளிலும் இதுபோன்ற ஆய்வுகளைச் செய்து பார்க்கலாம்," என்றார் அவர். கடந்த 2023 பிப்ரவரியில் இந்திய அரசு தனது பத்திரிகைத் தகவல் அலுவலகம் மூலம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதாவது, ஜம்மு - காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் சலால் - ஹைமனா பகுதியில் பெரிய அளவில் லித்தியம் இருப்பதாக அந்தச் செய்தி கூறியது. அதுபோக, உலகளவில் தற்போது ஆஸ்திரேலியாவில்தான் மிகப்பெரிய அளவில் லித்தியம் கிடைத்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c99nmdnkz0ko
  25. 07 Mar, 2025 | 11:38 AM உயிர்த்தஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள பொதுபலசேனாவின் ஞானசார தேரர் இந்த விபரங்களை ஜனாதிபதியிடமும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்துள்ள அவர் இந்த விபரங்களை ஊடகங்களை தெரிவிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். நான் இதனை பொறுப்புணர்வுடன் தெரிவிக்கின்றேன், உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பது எனக்கு தெரியும், என தெரிவித்துள்ள ஞானசார தேரர் சூத்திரதாரி யார் அவரின் குணாதிசயங்கள் அவர் எப்படி ஜஹ்ரானை பயிற்றுவித்தார், எப்படி தற்கொலை தாக்குதலை நோக்கி வழிநடத்தினார் என்பது தனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நான் பல விடயங்களை தெரிவித்தேன், அதற்காக என்னை இனவாதி என தெரிவித்தார்கள், சிறையில் அடைத்தார்கள் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208517

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.