Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு கெடு விதித்தது ஏன்? நாடாளுமன்ற உரையின் 7 முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், ஜூட் ஷீரின் பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன் 5 மார்ச் 2025, 14:52 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் முதல்முறையாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அதில் பேசும்போது, "அமெரிக்க கனவு நிறுத்த முடியாதது" என்று அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில், டிரம்பின் இந்த உரையே மிக நீளமானது. இதில் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்திற்கான தொலைநோக்குத் திட்டத்தை அதிபர் டிரம்ப் விவரித்தார். உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்த, டிரம்பின் ஆறு வார கால ஆட்சியை குடியரசுக் கட்சியினர் பாராட்டினர். ஜனநாயகக் கட்சியினரால் டிரம்ப் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் உரையாற்றினார். அமெரிக்க அரசின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, குடியேற்றத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவது, அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் நாடுகள் மீதான வரிவிதிப்பு, யுக்ரேன் போர் தொடர்பான கூட்டணியை ஆட்டம் காணச் செய்தது என்று அதிபர் டிரம்ப் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நீளமான அவரது உரையின் 7 முக்கிய அம்சங்கள் என்ன? இந்தக் கட்டுரையில் காண்போம். 1. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், "பல தசாப்தங்களாக சில நாடுகள் நமக்கு எதிராகக் கடும் இறக்குமதி வரியை விதிக்கின்றன. தற்போது நமக்கான சந்தர்ப்பம் வந்துள்ளது. அந்தந்த நாடுகளுக்கு எதிராக நாமும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்" என்றார் அதோடு, "ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் எவ்வளவு வரி வசூலிக்கின்றன என்று தெரியுமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். "எண்ணற்ற பிற நாடுகள் நாம் வசூலிப்பதைவிட மிக அதிக வரியை நம்மிடம் இருந்து வசூலிக்கின்றன. இது நியாயமற்றது. இந்தியா, அமெரிக்க வாகனங்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேல் வரி வசூலிக்கிறது. இந்த முறை அமெரிக்காவுக்கு நியாயமானதாக இல்லை" என்று அவர் குறிப்பிட்டார். அதனால், "ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. பிற நாடுகள் நமது பொருளுக்கு என்ன வரி வசூலிக்கின்றனவே, அதே அளவுக்கு நாமும் அவர்களிடம் இருந்து வசூலிப்போம்" என்றும் டிரம்ப் தெரிவித்தார். Play video, "இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை", கால அளவு 1,00 01:00 காணொளிக் குறிப்பு, 2. வரிவிதிப்புகளில் ஒரு பெரிய ஏற்ற இறக்கம் இருக்கும் இரண்டாவது நாளாக பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தைத் தொடர்ந்து, இந்த வாரம் அவர் தொடங்கிய வர்த்தகப் போரின் சாத்தியமான பொருளாதார விளைவுகளை டிரம்ப் குறைத்து மதிப்பிட்டார். இதில் மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரிகளும், சீனப் பொருட்கள் மீதான கூடுதல் 10% வரியும் அடங்கும். அதோடு, அவரது மற்ற கொள்கை நோக்கங்களை வரவேற்ற கைதட்டல்களுக்கு மத்தியில், பல குடியரசுக் கட்சியினர் எதிர்வினையாற்றாமல் அமர்ந்திருந்தனர். இது டிரம்பின் இறக்குமதி மீதான வரிகள் அவரது கட்சியை எவ்வாறு பிளவுபடுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது. "இந்த வரி விதிப்பு அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக மாற்றுவது மற்றும் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவது பற்றியது" என்று அவர் சி.என்.என் ஊடகத்திடம் கூறினார். "அது நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் விரைவாக நடக்கும். சில இடையூறுகள் இருக்கும், ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது அதிகமாக இருக்காது." அமெரிக்க வர்த்தகக் கூட்டாளி நாடுகளுக்கு ஏற்றவாறு வரி விதிப்பு ஏப்ரல் 2ஆம் தேதி "அமலுக்கு வரும்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். புதன்கிழமையன்று, நாளின் தொடக்கத்தில், டிரம்ப் மெக்சிகோ மற்றும் கனடாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கக்கூடும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், ஃபாக்ஸ் பிசினஸிடம் கூறினார். நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? என்ன நடந்தது?5 மணி நேரங்களுக்கு முன்னர் தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 3. யுக்ரேனுடனான கனிம ஒப்பந்தம் பட மூலாதாரம்,Getty Images யுக்ரேன் அதிபரிடம் இருந்து, ஒரு "முக்கியமான கடிதம்" தனக்கு நேற்று முன்தினம் கிடைத்ததாகவும், அது வொலோதிமிர் ஸெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்ட கருத்துகளுடன் பொருந்துவதாகத் தோன்றியதாகவும் டிரம்ப் கூறினார். போரை முடிவுக்குக் கொண்டு வரவும், "முடிந்தவரை விரைவில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும்", டிரம்பின் "வலுவான தலைமையுடன்" இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் யுக்ரேன் அதிபர் கூறியிருந்தார். "அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியதற்கு நான் நன்றி கூறுகிறேன்," என்று டிரம்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். அமெரிக்க நட்பு நாடுகளுக்கு, அமெரிக்கா அனைத்து ராணுவ விநியோகங்களையும் நிறுத்திய, அடுத்த நாள் யுக்ரேன் அதிபர் அமைத்திக்கான கரங்களை நீட்டினார். கடந்த வாரம் அதிபர் அலுவலகத்தில் இரு தலைவர்களும் சந்தித்தனர். இரு நாட்டு அதிபர்களும், ஊடகங்கள் முன்பு காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். அதன் பிறகு, யுக்ரேனின் வளங்கள் உள்பட ஒரு பொருளாதாரக் கூட்டாண்மையில் இருந்து அமெரிக்கா லாபம் ஈட்ட அனுமதிக்கும் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டங்களை ரத்து செய்தனர். நாடாளுமன்றத்தில் தனது உரையின்போது, ஒப்பந்தம் நிறைவடைந்ததை அறிவிக்க டிரம்ப் இலக்கு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அது நிறைவேறவில்லை. எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 இலங்கையில் பள்ளி செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருவது ஏன்? என்ன காரணம்?7 மணி நேரங்களுக்கு முன்னர் 4. கிரீன்லாந்தை அமெரிக்கா கைக்குள் கொண்டு வரும் டிரம்பின் முயற்சி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரு நாட்டு அதிபர்களும், ஊடகங்கள் முன்பு காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். டிரம்பின் உரை 99 நிமிடங்களுக்கு நீடித்தது. அதன் பெரும்பகுதி உள்நாட்டுப் பிரச்னைகளை மையமாகக் கொண்டிருந்தாலும், டிரம்ப் சர்வதேச விவகாரங்களிலும் கவனம் செலுத்தினார். உலகில் அமெரிக்காவின் செல்வாக்கை விரிவுபடுத்த அவர் விரும்பும் இடங்கள் இருக்கின்றன. மேலும் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பகுதிகளைக் கைவிடவும் இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கா கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை டிரம்ப் தனது உரையில் வலியுறுத்தினார். "நாங்கள் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்" என்று அவர் கூறினார். மேலும் அவரது அரசாங்கம் பனாமா கால்வாயை "மீட்கும்" என்றும் அவர் கூறினார். முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஆட்சியில் இருந்த வீண் செலவுகள் என்று அவர் விவரித்த பட்டியலைப் பற்றி டிரம்ப் பேசும்போது, ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றிப் பேசினார். லைபீரியா, மாலி, மொசாம்பிக், உகாண்டா ஆகிய நாடுகள் அனைத்தும் அமெரிக்க உதவியால் நியாயமற்ற முறையில் பயனடைகின்றன என்று அவர் கூறினார். ஆனால், அவர் குறிப்பாக லெசோதோ பற்றி வலியுறுத்தினார். பால் புதுமையினரின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக 80 லட்சம் அமெரிக்க டாலர்களை பெற்ற போதிலும், அது "யாரும் கேள்விப்படாத" நாடாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?8 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிப்டோ ரிசர்வ்: டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?59 நிமிடங்களுக்கு முன்னர் 5. ஈலோன் மஸ்கிற்கு பாராட்டு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரம்பின் உரையை பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஈலோன் மஸ்க் கேட்டுக்கொண்டிருந்தார். தனது கோடீஸ்வர ஆலோசகரான ஈலோன் மஸ்கின் பெயரைத் தனது உரையின் ஆரம்பக் கட்டத்திலேயே டிரம்ப் குறிப்பிட்டார். அவரது உரையை பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஈலோன் மஸ்க் கேட்டுக் கொண்டிருந்தார். தொழில்நுட்ப தொழிலதிபரான ஈலோன் மஸ்கின் கீழ் செயல்படும் அரசு செயல்திறன் துறை, ஆயிரக்கணக்கான ஃபெடரல் அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த பல பில்லியன் டாலர் உதவிகளை நிறுத்தியதோடு, அமெரிக்க அரசின் பல்வேறு திட்டங்களையும் குறைத்துள்ளது. அடர் நிற கோட்டும் நீல நிற டையும் அணிந்திருந்த ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவரான ஈலோன் மஸ்க் எழுந்து நின்று மக்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். "உங்களுக்கு நன்றி ஈலோன். அவர் மிகவும் கடினமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் அப்படிச் செய்யவேண்டிய தேவையே இல்லை" என 78 வயதான அமெரிக்க அதிபர் தெரிவித்தார். "செலவுகளைக் குறைக்கும் ஈலோன் மஸ்கின் நடவடிக்கையால் தடுக்கப்பட்ட தேவையற்ற செலவுகளுக்கு சில எடுத்துக்காட்டுகளை" டிரம்ப் பட்டியலிட்டார். இது குடியரசுக் கடடியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அப்போது ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், "மஸ்க் திருடுகிறார்" மற்றும் "பொய்" என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். அரசு செயல்திறன்துறை, 105 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமித்திருப்பதாகக் கூறுகிறது. ஆனால் இது தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியாத ஒன்று. 18.6 அமெரிக்க பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டதற்கான ரசீதுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பிழைகள் இருப்பது அவற்றை ஆய்வு செய்த அமெரிக்க ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள்5 மார்ச் 2025 6. ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது ஜனநாயக கட்சியினர் "இது ஒரு பொய்" என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர். டிரம்ப் உரையைத் தொடங்கிய ஐந்து நிமிடத்திற்குள், அதிபரை ஏளனம் செய்து இடயூறு விளைவிக்க வேண்டாம் என அவைத் தலைவரின் உத்தரவை மதித்து நடக்கத் தவறியதால் டெக்சாஸை சேர்ந்த அல் கிரீன், அவைக் காவலர்களால் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது மற்ற ஜனநாயக கட்சியினர் "இதுவொரு பொய்" என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர். வெள்ளை மாளிகை, பிரதிநிதிகள் அவை, செனட் ஆகியவை குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஜனநாயக கட்சியினர் பெரும்பாலும் தலைவர் இல்லாமல், டிரம்பின் அடுக்கடுக்கான நடவடிக்கைகளுக்கு எதிரான செய்தியைக் கட்டமைக்க முயன்று கொண்டிருக்கின்றனர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பல பெண்கள், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இளஞ்சிவப்பு உடைகளை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களது கட்சியைச் சேர்ந்த பலர் டிரம்பின் உரையின்போது வெளிநடப்பு செய்தனர். அவர்களில் சிலர் 'எதிர்த்து நில்' எனப் பொருள்படும்படி Resist என்ற வார்த்தையைத் தங்களது சட்டையின் பின் பக்கம் எழுதியிருந்தனர். "அவர்களை மகிழ்விக்க நான் சொல்லக்கூடியது எதுவுமே இல்லை," என ஒருதலைப்பட்சமான வெறுப்பை ரசிப்பவர் போலத் தோன்றிய டிரம்ப் கூறினார். ஜனநாயக கட்சியின் தலைமை, கட்சியின் அதிகாரப்பூர்வ மறுப்பைத் தெரிவிக்க, எலிஸா ஸ்லாட்கின்னை தேர்வு செய்தது. இவர் நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற, கடும் போட்டி நிலவிய மிச்சிகன் மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். டிரம்ப் "முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு வாரி வழங்கியிருப்பதாக" எலிஸா குற்றம் சாட்டினார். "அவர் நம்மை பொருளாதார மந்தநிலைக்குக் கொண்டு செல்லக் கூடும்" எனவும் அவர் எச்சரித்தார். இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொலை - எல்லையில் என்ன நடந்தது?5 மார்ச் 2025 பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,"டிரம்ப் நம்மை பொருளாதார மந்தநிலைக்குக் கொண்டு செல்லக் கூடும்" என்று எலிஸா ஸ்லாட்கின் எச்சரித்தார் 7. பணவீக்கத்தை குறைப்பதற்கு முன்னுரிமை டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததும் பணவீக்கத்தை முறியடிப்பதாக வாக்காளர்களிடம் உறுதியளித்தார். மேலும் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளர்ச்சியை நோக்கி அமெரிக்காவை கொண்டு செல்வதன் மூலம் எரிசக்தி செலவுகளைக் குறைப்பதே தனது முன்னுரிமை என்றும் அவர் உரையில் கூறினார். "உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும்விட நம் காலடியில் அதிகளவில் திரவத் தங்கம் (liquid gold) உள்ளது. அதைக் கண்டறிந்து எடுக்க மிகவும் திறமையான குழுவை நான் முழுமையாக அங்கீகரித்துள்ளேன். இது 'ட்ரில் பேபி, ட்ரில் (drill baby, drill)' என்று அழைக்கப்படுகிறது" என்று டிரம்ப் தெரிவித்தார். சமீபத்திய வாரங்களில் வேகமாக உயர்ந்து வரும் முட்டை விலை தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. இந்த விலை உயர்வுக்குக் காரணம் யார் என்று டிரம்ப் தான் நினைப்பதைத் தெளிவுபடுத்தினார். "ஜோ பைடன் முட்டைகளின் விலையை, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர அனுமதித்துவிட்டார். அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் முயன்று வருகிறோம்," என்றார். கடந்த ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து பல மில்லியன் முட்டையிடும் பறவைகளைக் கொல்லும்படி பைடன் நிர்வாகம் உத்தரவிட்டதால் முட்டை விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் கீழும் முட்டை விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கடந்த மாதம் பணவீக்கம் சற்றே அதிகமாக 3 சதவீதமாக இருந்தது. இருப்பினும் அது, 2022ஆம் ஆண்டு இருந்த அதிகபட்ச பணவீக்கமான 9.1 சதவீதத்தைவிட மிகக் குறைவு. செவ்வாய்க் கிழமை ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் நடத்திய ஓர் ஆய்வின்படி, அமெரிக்கர்களில் மூவரில் ஒருவர்தான் விலைவாசி உயர்வைக் கையாள டிரம்ப் மேற்கொள்ளும் முறைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czedyz03rreo
  2. Published By: Rajeeban 04 Mar, 2025 | 12:01 PM விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ள வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர்ஜெனரல் பொனிபஸ் பெரேரா விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களின் கரங்களை சென்றடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார் டெய்லிமிரருக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் கேள்வி- யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையை நாங்கள் கருத்தில் கொள்வோம்இயுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என நினைத்தோம் எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. தற்போது சிறிய ரக ஆயுதங்களை பலர் பயன்படுத்துவது போல உள்ளது? பதில்: யுத்தத்திற்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என நினைத்தோம், ஆனால் எனது பதில் இல்லை என்பதே. யுத்தம் ஏன் இடம்பெற்றது என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கான அடிப்படை காரணங்களை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். வடக்குகிழக்கில் சில பிரச்சினைகள் உள்ளன, அவை அனைத்து அரசியல் விவகாரங்கள். ஆனால் அவற்றிற்கான பதில் இராணுவரீதியானது. ஆனால் பிரச்சினை இன்னமும் நீடிக்கின்றது அதற்கு தீர்வை காணவேண்டும். சுமார் 30,000 பயங்கரவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் பலர் கொல்லப்பட்டனர், பலர் சரணடைந்தனர் ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது? அவர்களிடம் ஆர்பிஜிக்கள் இருந்தன, விமானங்களை நோக்கி ஏவுகணைகளை அவர்கள் ஏவியுள்ளனர். அவர்களிடம் 30,000 சிறிய ஆயுதங்கள் இருந்தன. இரண்டு குழுக்கள் இருந்தன, கருணா குழுவிடம் கூட ஆயுதங்கள் இருந்தது. ஆனால் இந்த ஆயுதங்களை அவர்கள் ஒப்படைக்கவில்லை. அந்த ஆயுதங்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் எந்த அமைப்பும் அந்த ஆயுதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன? எத்தனை ஆயுதங்களை ஒப்படைத்தனர்? என்ற விபரங்கள் இல்லை. இது குறித்து எந்த ஆராய்ச்சியும் இல்லை! இவ்வாறான ஆராய்ச்சிகளில் நாங்கள் பலவீனமானவர்களாக உள்ளோம். இதன் காரணமாக இந்த ஆயுதங்கள் எங்கும் உள்ளன, எல்லா இடங்களிலும் இவற்றை பயன்படுத்துகின்றனர். கொலை செய்வதற்கு ரி56 ரக துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர், பிஸ்டல்களும் உள்ளன. இந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு எந்த உரிய திட்டங்களையும் அரசாங்கங்கள் முன்னெடுக்கவில்லை. ஆகவே இங்கு பாக்கிஸ்தானின் பெசாவர், ஆப்கானிஸ்தான் போன்ற நிலை காணப்படுகின்றது. அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் என்றால் பிரச்சினையில்லை, ஆனால் அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகளால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அவ்வாறான ஒன்று இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. எங்கள் தேசியபுலனாய்வு பிரிவுகள் பலவீனமானவையாக உள்ளன. அமெரிக்கா, நியுசிலாந்தில் அல்லது மத்திய கிழக்கில் சம்பவம் ஒன்று இடம்பெற்றால் அதனால் எங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா என நாங்கள் ஆராயவேண்டும். நியுசிலாந்து தேவாலய தாக்குதல் குறித்து எங்கள் புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்திருக்கவேண்டும். கேள்வி - தற்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பயங்கரவாதிகள் உடையவை, இராணுவத்தினருடையவை இல்லை என நீங்கள் எவ்வளவு உறுதியாக தெரிவிக்கின்றீர்கள்? பதில்- இராணுவத்தினரிடமிருந்து சில ஆயுதங்களை கொண்டு சென்றனர். ஆனால் அது குறித்து என்னிடம் போதிய விபரங்கள் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த ஆயுதங்களை பயன்படுத்தப்போவதில்லை இது உறுதியான விடயம். இலங்கை ஒரு சிறிய நாடு எவராலும் தெற்கு வடக்கு கிழக்கிற்கு இடையில் 8 மணித்தியாலங்களிற்குள் பயணம் செய்ய முடியும். விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களிற்கு கரங்களை சென்றடைந்துள்ளன. இவை அனைத்தையும் பணத்திற்காக செய்துள்ளனர். கேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எங்கள் தேசிய பாதுகாப்பின் மீது விழுந்த பெரிய அடியாகும்.ஆனால் இந்த தாக்குதலிற்கு முன்னர் எங்களிற்கு இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு தகவல்களும் அறிக்கைகளும் கிடைத்துள்ளன. எவரும் இதனை கருத்திலெடுத்து செயற்படவில்லை. அரச புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் குறித்த உங்களின் அவதானிப்புகள் என்ன? பதில் - உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய குற்றவாளி அந்தவேளை ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவை தவிர வேறு யாரும் இல்லை. ஏனென்றால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதால் அவர் முப்படைகளின் தளபதியாக பதவிவகித்தார், பாதுகாப்பு அமைச்சர் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் தேசிய பாதுகாப்பு பேரவையின் தலைவர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்தார். அரசமைப்பின்படி அவரே நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பு. இதன் காரணமாக எனக்கு தெரியாது என தெரிவித்துவிட்டு அவரால் தப்ப முடியாது. ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறும்போது அவருக்கு ஜனாதிபதிக்கான விடுபாட்டுரிமை இல்லாமல் போய்விடும். அவர் என்ன செய்திருக்கின்றார் என்றால் கொல்லப்பட்ட அந்தமக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு அவர் குற்றவாளி என தெரிவித்தது. ஆனால் நீதிமன்றம் நஸ்ட ஈட்டை மாத்திரம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக காணப்படவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை அவர் சிங்கப்பூரிலிருந்தார், 22 மில்லியன் மக்களின் உயிருக்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர் உடனடியாக நாடு திரும்பவில்லை. விமானப்பயணங்களை தாமதமாக்கிவிட்டு தாமதமாகவே வந்து சேர்ந்தார். இது அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/208221
  3. இந்திய மீன்பிடிப்படகுகளின் அத்துமீறல் : இந்தியாவுடன் முரண்பட நாங்கள் இடமளிக்கப்போவதில்லை : சீனாவின் தலையீடும் உள்ளது - செல்வம் 05 Mar, 2025 | 05:34 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எமது கடல் எல்லைக்குள் இந்திய மீன்பிடிப் படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். இந்த பிரச்சினையை காரணமாகக்கொண்டு இந்தியாவுடன் முரண்படுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதில் சீனாவின் தலையீடும் இருந்து வருகிறது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாகாப்பு மற்றும் சமூகவலுவூட்டவ் அமைச்சு மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், போர்க்காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் எமது மீனவர்களின் வாழ்க்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இந்திய மீனவர்களின் இழுவைப்படகு பிரச்சினை அங்கு பூதாகரமாக வெடித்திருக்கிறது.மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு காப்புறுதி திட்டம் ஒன்று கூட இதுவரை இல்லாமல் இருக்கிறது.அதனால் மீனவர்கள் தங்களின் உடமைகளை இழக்கும்போது அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவை பகைத்துக்கொள்ளாமல் இந்திய டோனர்கள் கடல் எல்லைக்குள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுத்தால், அவர்களின் பிரச்சினைக்கு மாற்று திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாக எமது மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ப்பாக நாங்கள் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்ககை சந்தித்து கலந்துரையாடியபோது, ஆழ் கடல் மீன்பிடி முறையை அறிமுகப்படுத்தினால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என நாங்கள் ஆலாேசனையாக தெரிவித்திருந்தோம். அதனால் அரசாங்கம் இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாட தமிழ் நாட்டு மற்றும் இந்திய மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாட நடவடிக்கை எடுங்கள். அதற்கு நாங்கள் எமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம். அப்போது இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க வருவதற்கான வழி முறையை நாங்கள் தெரிவிப்போம். அதனால் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முல்லைத்தீவு அல்லது மன்னாரில் மீன்பிடி வளாகத்தில் மீன்பிடி துறைமுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன் மூலம் மீனவர் பிள்ளைகளுக்கு கடல்சார் கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் மீனவர் சமூகத்தின் கல்வி நிலையில் முன்னேற்றத்தை மேற்கொள்ள முடியும். அதேநேரம் கடற்றொழில் நடவடிக்கையை முன்னேற்ற அமைச்சர் எடுக்கும் நடவடிக்கையை செயற்படுத்த வேண்டுமானால் அங்குள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். ஊழல் அற்ற அதிகாரிகள் இருக்கவேண்டும். அதனால் அங்குள்ள நீண்கால அதிகாரிகளை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் இந்திய இழுவைப்படகை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் நாங்கள் முரண்பட வேண்டும் என்ற சிந்தனை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இந்த விடயத்தில் சீனாவின் தலையீடும் இருந்து வருகிறது, சீனா இன்று வடக்கிலே எமது மீனவர்களுடன் எந்த அர்த்தத்தில் நாடுகின்றனர் என கேட்கிறேன். நிலங்களை கைப்பற்றுவதும் வளங்களை ஆக்கிரமிப்பதுமே சீனாவின் சிந்தனை. அதனூடாக வடக்கிலே எந்த நடவடிக்கையையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. வடக்கில் இந்தியாவை தவிர வேறு ஒரு நாடு மூக்கை நுழைவிப்பதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை என்றார். https://www.virakesari.lk/article/208362
  4. பட மூலாதாரம்,Special Arrangement கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில், நாட்டின் அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ''கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விடயம் தொடர்பான தரவுகளை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்றே தற்போதைக்குக் கூற முடியும்' என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிழலுலக குழுக்களின் மோதல்கள், அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள், போதைப்பொருள் பயன்பாட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறுகின்றது. துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், அதன் பின்னணிகளும் இலங்கையில் 2024ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அந்தத் சம்பவங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்தத் துப்பாக்கி சூடு சம்பவங்களில் 46 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தது. இந்த நிலையில், இலங்கையில் 2025ஆம் ஆண்டின் இதுவரையான 63 நாட்களில் 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் 12 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் திட்டமிட்ட நிழலுலக குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவை எனவும், ஏனைய 7 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்னைகளின் விளைவாக ஏற்பட்டவை எனவும் போலீஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் தொடர்பாகவும், மொத்தமாக 64 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களே அதிகம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. இதன்படி, திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களுடன் தொடர்புடைய 50-க்கும் அதிகமான சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபர்கள் குறித்தும், பிபிசி தமிழ், போலீஸாரிடம் வினவியது. ''இந்தச் சம்பவங்கள் குறித்து இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிவரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டே கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். அதைத் தற்போதைக்கு சரியாகக் கூற முடியாது'' என போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார். ரமலான்: நோன்பு இருக்கும் நேரத்தில் சோர்வின்றி உடற்பயிற்சி செய்வது எப்படி?47 நிமிடங்களுக்கு முன்னர் தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?44 நிமிடங்களுக்கு முன்னர் 2025 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பட மூலாதாரம்,NALINTHA JAYATHISSA FACEBOOK படக்குறிப்பு,அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கொழும்பு புதுகடை நீதிமன்ற சாட்சிக் கூண்டில் வைத்து, பிரபல நிழலுலக தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். வழக்கறிஞர் வேடத்தில் வந்த ஆண் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நிலையில், 8 மணிநேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபருடன் நீதிமன்றத்திற்கு வருகை தந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணைத் தேடி, 11 போலீஸ் குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை சட்ட புத்தகத்திற்குள் மறைத்து மிக சூட்சமமான முறையில் இஷாரா செவ்வந்தியே கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன், இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிரதான சூத்திரதாரியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தப் பெண் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 12 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், போலீஸாரினால் பிரதான சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் உயிருக்கு, நிழலுலக எதிர்தரப்பினால் ஆபத்து காணப்படுகின்றமை தொடர்பில் பாதுகாப்புப் பிரிவிற்குத் தகவல் கிடைத்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், மித்தெனிய பகுதியில் கடந்த 18ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, மகன், மகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூவரும் உயிரிழந்திருந்தனர். இந்தச் சம்பவத்தில் 39 வயதான தந்தை, 9 வயதான மகன், 6 வயதான மகள் ஆகியோர் உயிரிழந்திருந்தனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 21ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்தார். அதுமாத்திரமன்றி, பமுனுகம, மினுவங்கொடை, வெலிகம, கல்கிஸ்ஸை, அவுங்கல, இனிதும, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 கிழக்கு மாகாணத்தில் என்ன நடக்கின்றது? பட மூலாதாரம்,Special Arrangement ''திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் செயற்படும் இரண்டு இடங்களை நாங்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளோம். ஒன்று மட்டக்களப்பு. மற்றைய இடம் வட மாகாணம். சில தரப்பினரால் தமக்கு செயற்படுத்தக்கூடிய திட்டமிட்ட குழுக்களை உருவாக்கியுள்ளனர். மட்டக்களப்பில் அவ்வாறான குழுவொன்று உள்ளது. யாழ்ப்பாணத்தில் அவ்வாறான சிறு குழுக்களை உருவாக்கியிருந்தனர். இவற்றை ஒரே நேரத்தில் செயற்படுத்துவதன் பின்னணியில் ஏதோவொரு சூழ்ச்சி காணப்படுகின்றது'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய தினம் (மார்ச் 4) அறிவித்துள்ளார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரயம்பதி கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 03) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருந்தார். கடலில் மிதந்து வந்த மர்மப் பொருளொன்று வெடித்ததிலேயே இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்ச நிலையை உருவாக்கினாலும், அது திட்டமிட்ட பாரதூரமான சம்பவம் அல்லவென்று பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து வெளியிட முற்பட்ட வேளையில், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?43 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா யுக்ரேனுக்கு ராணுவ உதவியை நிறுத்தியதன் பின்னால் உள்ள அரசியல் கணக்கு இதுவா?4 மார்ச் 2025 பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ''கௌரவ சபாநாயகர் அவர்களே! மிக முக்கியமான ஒரு விடயத்தை இந்தச் சபையில் எழுப்ப வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஆரயம்பதி பிரதேசத்தில் கத்தியால் வாள்வெட்டு சம்பவமொன்று நடந்தது. அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (மார்ச் 03) இரவும் கல்லடியில், மட்டக்களப்பு நகரப் பகுதியில் ஒரு வாள்வெட்டு குழுவினால் வாள்வெட்டுச் சம்பவமொன்று நடந்திருக்கின்றது'' என இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட சபாநாயகர், ''சபை ஒத்தி வைப்பு வேளையில் இது தொடர்பில் உரையாற்றுங்கள். இது தேசிய பிரச்னை கிடையாது'' எனக் கூறிய நிலையில், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. ''ஜனாதிபதி அவர்களும் அண்மையில் சொன்னார். மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளே சில குழப்பங்கள் நடக்கலாம், இந்தப் பாதாள உலக குழுக்களினால். நேற்றைய தினம் இரவு நேரத்தில் கல்லடி பகுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. ஒரு வாரத்திற்கு முன்பு ஆரயம்பதியில் நடந்திருக்கின்றது'' என்று பிரச்னையைக் கூற இராசமாணிக்கம் சாணக்கியன் மீண்டும் முயன்ற வேளையில், 'சந்தர்ப்பத்தை வழங்க முடியாது'' என சபாநாயகர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, சபையில் மீண்டும் அமளிதுமளி ஏற்பட்டதை அடுத்து, அமளிதுமளியில் ஈடுபடுவோரை சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என சபாநாயகர் எச்சரித்திருந்தார். ''எமது பிரதேசங்களிலுள்ள மக்களை வாள்களைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டுகின்றார்கள். இந்தப் பிரச்னைகளை இந்த இடத்தில் கூறாமல் எங்கு சென்று கூறுவது? தயவு செய்து நாங்கள் கூறுவதைக் கேளுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். நான் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். வேறு நபர்கள் கேட்டால் மணித்தியால கணக்கில் பேசுவதற்கு இடமளிக்கின்றீர்கள். ஏன் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்க முடியாது? நாங்கள் எழுந்தவுடன் ஏன் ஒலிவாங்கியை எங்களுக்கு வழங்க முடியாது. ஏன் நாங்கள் தமிழ் மொழியில் பேசுவதை உங்களால் கேட்க முடியாதா?" என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகரைப் பார்த்து ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய நிலையில், ''அது இந்தச் சபையின் நடைமுறை' என சபாநாயகர் பதிலளித்திருந்தார். ''இந்தச் சம்பவம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றைக் கொண்டு வர முடியும்'' என சபாநாயகர் மீண்டும் சபைக்கு அறிவித்திருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சபையில் கருத்துகளை வெளியிட சந்தர்ப்பத்தை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தனர். இருந்த போதிலும், அதற்கு சபாநாயகர் சந்தர்ப்பத்தை வழங்காது, சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு பதில் வழங்கியிருந்தார். எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து அவசரமாக கவனத்திற்குக் கொண்டு, இந்தப் பிரச்னைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேட்டுக்கொண்டார். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்? - அமெரிக்கர்களுக்கும் கூட சிக்கலா?4 மார்ச் 2025 இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொலை - எல்லையில் என்ன நடந்தது?5 மார்ச் 2025 நிழலுலக குழுக்களின் மோதல், வாள்வெட்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? பட மூலாதாரம்,PARLIAMENT LIVE படக்குறிப்பு,இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சமூகத்தில் எழுந்துள்ள கேள்விக்கு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் பதில் வழங்கியிருந்தார். ''தேசியப் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. பொது மக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது. மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கம் செயற்படவில்லை என்றதைப் போன்றதொரு விடயத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. இந்த நிழலுலக மோதல்களில் எந்தவொரு சாதாரண மனிதனுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், நிழலுலக மோதல்கள் காரணமாக சமூகத்தில் அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், எந்தவொரு சாதாரண பொது மக்களினது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்போ அச்சுறுத்தலோ ஏற்படவில்லை. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இரண்டு விடயங்களை நாங்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளோம். ஒன்று இனவாதம். மற்றொன்று அடிப்படைவாதம்" என்று ஜனாதிபதி கூறினார். மேலும், "யுத்தத்தினால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்பட்டமையானது, அதனுள் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் காணப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில், அதிலம் இனவாதமும் அடிப்படைவாதமும் காணப்பட்டன. இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தைத் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்" என்று குறிப்பிட்டார். திட்டமிட்ட குற்றங்கள், இனவாதத்தில் முன்னேற்றம் தொடர்பான சட்ட வரைபொன்று தேவைப்படுவதாகக் கூறிய ஜனாதிபதி, நிழலுலக குழுக்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்று தேவைப்படுவதாகத் தெரிவித்தார். "பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது ஒழிக்கும் கொள்கையிலேயே இருக்கின்றோம். நிழலுலக குழுக்கள் மற்றும் இனவாத செயற்பாடுகளைத் தடுப்பற்கு சாதாரண சட்டம் போதுமானதாக இல்லாத பட்சத்தில், அதற்காகப் புதிய சட்டம் தேவைப்படுகின்றது. அவ்வாறான புதிய சட்டத்தைக் கொண்டு வருவதன் ஊடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம்'' என்றும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c984jzm8371o
  5. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை தெற்கு ஜோர்ஜியாவில் கரை ஒதுங்கியது Published By: Digital Desk 3 05 Mar, 2025 | 04:56 PM 2020 ஆம் ஆண்டு முதல் அந்தாட்டிக்காவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வந்த A23a என அறியப்படும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஒரு டிரில்லியன் மெற்றிக் தொன் (1.1 டிரில்லியன் டன்) எடையுள்ள A23a தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசமான தெற்கு ஜோர்ஜியா தீவில் கரை ஒதுங்கியுள்ளதாக செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் தேசிய துருவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த பனிப் பாறையை அளவிட்டப்போது 3,672 சதுர கிலோமீட்டர் (1,418 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருந்தது. இது ரோட் தீவை விட சற்று சிறியதும் லண்டனை விட இரண்டு மடங்கு பெரியதுமாக காணப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு அந்தாட்டிக்காவிலுள்ள ஃபில்ச்னர் பனிக்கட்டியிலிருந்து உடைந்தது. அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்த பனிப்பாறை வடக்கு நோக்கி மெதுவாக நகர ஆரம்பித்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அது கடலுக்கடியில் உள்ள ஒரு மலையைச் சுற்றி பல மாதங்களாக சிக்கிக் கொண்டது. இதனால் வடக்கு நோக்கி அதன் எதிர்பார்க்கப்பட்ட பயணத்தை தாமதப்படுத்தியது. ஆனால் பனிப்பாறை கரையிலிருந்து 90 கிலோமீட்டர் (56 மைல்) தொலைவில் கண்டத் தகட்டில் தரையிறங்குவது போல் தோன்றுவதால் இந்தக் கவலைகள் குறைந்துவிட்டன. "பனிப்பாறை அப்படியே இருந்தால், தெற்கு ஜோர்ஜியாவின் உள்ளூர் வனவிலங்குகளை குறிப்பிடத்தக்களவு பாதிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என பிரிட்டிஷ் அந்தாட்டிக் சர்வேவின் கடல்சார் ஆய்வாளர் ஆண்ட்ரூ மெய்ஜர்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாறாக, அதன் வருகை வனவிலங்குகளுக்கு சில நன்மைகளை ஏற்படுத்தக்கூடும். "நிலத்தடிப்படுத்தல் மற்றும் அதன் உருகலால் தூண்டப்படும் ஊட்டச்சத்துக்கள், கவர்ச்சிகரமான பெங்குவின் மற்றும் சீல்கள் உட்பட முழு பிராந்திய சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் உணவு கிடைப்பதை அதிகரிக்கக்கூடும்" என்று அவர் தெரிவித்துள்ளார். பனிப்பாறை தற்போது அதன் கட்டமைப்பைப் பராமரித்து வருவதாகத் தோன்றினாலும், சமீபத்திய தசாப்தங்களில் இந்தப் பாதையில் சென்ற பெரிய பனிப்பாறைகள் "விரைவில் உடைந்து, சிதறி, உருகும்" என்று மெய்ஜர்ஸ் தெரிவித்துள்ளார். "தற்போது அது தரைமட்டமாகிவிட்டது, அதிகரித்த அழுத்தங்கள் காரணமாக அது உடைந்து போகும் வாய்ப்பு அதிகம், ஆனால் இதை கணிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது," என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார். "பெரிய பனிப்பாறைகள் இதற்கு முன்பு வடக்கே வெகுதூரம் சென்றுள்ளன - ஒன்று பெர்த் அவுஸ்திரேலியாவிலிருந்து 1000 கிலோ மீற்றர் தொலைவில் ஒருமுறை வந்தது - ஆனால் அவை அனைத்தும் தவிர்க்க முடியாமல் உடைந்து பின்னர் விரைவாக உருகும்." A23a இறுதியில் உடைந்து போகும்போது, அது உருவாக்கும் சிறிய பனிப்பாறைகள் மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும், ஏனெனில் அவற்றைக் கண்டறிந்து கண்காணிப்பது ஒரு மெகாபர்க்கை விட கடினமாக இருக்கும் என்று மெய்ஜர்ஸ் கூறினார். “மீன்பிடியாளர்களுடன் கலந்துரையாடல்கள், கடந்த கால பெரிய பனிப்பாறைகள் சில பகுதிகளை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அதிக அல்லது குறைவான வரம்புகளை சில காலமாக விலக்கி வைத்திருக்கின்றன, ஏனெனில் சிறிய - ஆனால் பெரும்பாலும் மிகவும் ஆபத்தான பனிப்பாறை துண்டுகளின் எண்ணிக்கை காரணமாக,” என தெரிவித்துள்ளார். இந்த குறிப்பிட்ட பனிப்பாறை பனி அடுக்கின் இயற்கையான வளர்ச்சி சுழற்சியினால் உடைந்து போயிருக்கலாம், புதைபடிவ எரிபொருள் சார்ந்த காலநிலை நெருக்கடியால் அல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் புவி வெப்பமடைதல் அந்தாட்டிக்காவில் கவலைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது உலகளாவிய கடல் மட்ட உயர்வுக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும். https://www.virakesari.lk/article/208339
  6. அமெரிக்க காங்கிரசிற்கான உரை - உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிரான கடும் தொனியை குறைத்தார் டிரம்ப்,- கிறீன்லாந்திற்கு தொடர்ந்தும் எச்சரிக்கை Published By: Rajeeban 05 Mar, 2025 | 04:41 PM உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் கனிமங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் தயார் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். அமெரிக்க காங்கிரசிற்கான உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்று உக்ரைன் ஜனாதிபதியிடமிருந்து மிக முக்கியமான கடிதம் கிடைத்தது என தெரிவித்துள்ள டிரம்ப் நிரந்தர சமாதானத்தை ஏற்படு;த்துவதற்காக மிகவிரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளது, உக்ரைன் மக்களை விட வேறு எவருக்கும் சமாதானம் மிக முக்கியமானதாகயில்லை என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றுவதற்கு நானும் எனது அpணியினரும் தயாராகவுள்ளோம் என ஜெலென்ஸ்கி கடிதத்தில் தெரிவித்துள்ளதை டிரம்ப் வாசித்துள்ளார். ரஸ்யாவுடன் தீவிரபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப் அவர்கள் பேச்சுவார்த்தைகளிற்கு தயார் என்பதை வெளிப்படுத்தும் வலுவான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார். அது அழகானது இல்லையா? இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவதற்கான தருணம் இது, கொலைகளை நிறுத்துவதற்கான தருணம் இது, அர்த்தமற்ற யுத்தத்தை நிறுத்துவதற்கான தருணம் இது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்க காங்கிரசிற்கான தனது உரையில் டிரம்ப் எந்த வழியிலாவது கிறீன்லாந்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவேன் என தெரிவித்துள்ளார். கிறீன்லாந்து மக்களை உள்வாங்குவதற்கு அமெரிக்கா தயார் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பிற்காகவும் உலகின் பாதுகாப்பிற்காகவும் டென்மார்க்கின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிறீன்லாந்து அமெரிக்காவிற்கு அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் எந்த வழியிலாவது நாங்கள் அதனை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார். கிறீன்லாந்து மக்களிற்கு என்னிடம் இன்று செய்தியொன்று உள்ளது உங்கள் தீர்மானத்தை நீங்களே தீர்மானிக்கும் உரிமையை நாங்கள் வலுவாக ஆதரிக்கின்றோம். நீங்கள் விரும்பினால் நாங்கள் உங்களை அமெரிக்காவிற்குள் வரவேற்போம் பாதுகாப்பாக செல்வந்தர்களாக வைத்திருப்போம் என அவர் தெரிவித்துள்ளர். https://www.virakesari.lk/article/208367
  7. தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? பட மூலாதாரம்,TNDIPR கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலமான தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு புதன்கிழமையன்று (மார்ச் 05) அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எந்தக் கட்சி, என்ன பேசியது? என்ன தீர்மானிக்கப்பட்டது? இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் அடுத்த மறுசீரமைப்பு 2026க்கு பிறகு நடத்தப்பட வேண்டுமென 2001ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகையின் அடிப்படையில்தான் நடக்கும். ஆகையால், 1970களில் இருந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கடுமையாகக் குறைக்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் சுட்டிக்காட்டினார். இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். மொத்தம் 63 கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகியவை அறிவித்தன. இதுதவிர, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வெற்றிக் கழகம், அ.ம.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் இதில் பங்கேற்றன. இந்தக் கூட்டம் மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை பத்து மணிக்குத் தொடங்கியது. எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 இலங்கையில் பள்ளி செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருவது ஏன்? என்ன காரணம்?7 மணி நேரங்களுக்கு முன்னர் முதலமைச்சர் பேசியது என்ன? பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு,தொகுதி மறுவரையறைக்கான காலத்தை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோதி நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டுமென்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். "தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்தவே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறு சீரமைப்பு என்ற கத்தி தமிழ்நாட்டின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகள் இருக்கின்றன. இவை குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டில் (2026) மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கணக்கிட்டுத்தான் செய்வார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது," என்றார் அவர். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "இப்போது உள்ள 543 தொகுதிகள் தொடர்ந்தால், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்கிறார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டால், நமக்குக் கூடுதலாக 22 இடங்கள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள்தான் கிடைக்கும். 12 தொகுதிகளை இழக்க நேரிடும். இந்த இரு முறைகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும்," என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Handout படக்குறிப்பு,"தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு 10 தொகுதிகள்தான் கிடைக்கும். 12 தொகுதிகளை இழக்க நேரிடும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆகையால், இந்தச் சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள் தொகை அடிப்படையில், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, 'மக்கள் தொகை கட்டுப்பாடு' எனும் கொள்கையை, முனைப்பாகச் செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனையாகவே அமையும்" என்று குற்றம் சாட்டினார். "இந்தத் தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது எழுப்பப்படும் குரலையே, மத்திய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும்" என்று கூறியதோடு, முதலமைச்சர் சில தீர்மானங்களை முன்மொழிந்தார். 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?8 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிப்டோ ரிசர்வ்: டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?6 மணி நேரங்களுக்கு முன்னர் முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மனங்கள் பட மூலாதாரம்,TNDIPR அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்: இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான 'நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை' இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது. கடந்த 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பேய் உறுதி அளித்தார். தற்போதும் இந்த வரையறை 2026இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இந்தக் கோரிக்கைளையும் அவை சார்ந்த போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல - மக்கள் மத்தியில் இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய 'கூட்டு நடவடிக்கைக் குழு' ஒன்றை அமைத்திட வேண்டும். திருவண்ணாமலை, ராஜபாளையத்தில் பூமிக்கடியில் தங்கம்: ஆய்வில் தகவல் - இன்றைய முக்கிய செய்திகள்5 மார்ச் 2025 ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள்5 மார்ச் 2025 மற்ற கட்சிகளின் கருத்து என்ன? பட மூலாதாரம்,HAndout முதலமைச்சர் பேசி முடித்த பிறகு ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அ.தி.மு.க சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் கடுமையாக முயற்சி செய்து, மக்கள் தொகையைக் கடுமையாகக் குறைத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற கடும் முயற்சிகளை வட மாநிலங்கள் செய்யாததால் அந்த மாநிலங்களில் மக்கள் தொகை உயர்ந்துள்ளது," என்று கூறினார். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு அது தண்டனையாக அமையும் என்பதால், முன்பு அந்த முற்சிகளை மத்திய அரசு ஒத்திவைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு, இப்போது மறுசீரமைப்பு முயற்சிகளை மீண்டும் மத்திய அரசு எடுத்து வருகிறது எனவும், தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், "ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்கு 7.18 சதவீதத்தில் இருந்து குறையக் கூடாது என்பதையும் பிரதமர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தைத் திருத்த வேண்டும்" என்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பேசிய அன்புமணி ராமதாஸ், "சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதியைக்கூட குறைக்க மாட்டோம் என்றார். அதே நேரம் உத்தர பிரதேசம், பிகார் போன்ற வட மாநிலங்களுக்கு எவ்வளவு தொகுதிகளை உயர்த்துவோம் என்பதைச் சொல்லவில்லை. ஆகவே மத்திய அரசு அவர்களுக்குள் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. முதல்வர் அத்தனை தென் மாநில முதல்வர்களையும் நேரில் சந்தித்து, சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும், இதேபோல, மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாகவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். பட மூலாதாரம்,handout வி.சி.க. தலைவர் திருமாவளன் பேசும்போது, "மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன், இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டிய பொறுப்புணர்வோடு இந்தக் கூட்டம் நடக்கிறது. ஐம்பது மாநிலங்களைக் கொண்ட நாடு அமெரிக்கா. நூறு ஆண்டுகளாக ஒரே எண்ணிக்கையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள். அங்கேயும் இதேபோன்ற பிரதிநிதித்துவ ஜனநாயகம்தான் இருக்கிறது. ஆகவே நம் முதல் நிலைப்பாடு எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என்பதாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், எண்ணிக்கை சமநிலை மாறக்கூடாது. அதில் உறுதியாக இருப்போம். முதல்வர் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்கத் தீர்மானித்திருக்கிறார். அது தேவை எனக் கருதுகிறேன்" என்றார். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்? - அமெரிக்கர்களுக்கும் கூட சிக்கலா?4 மார்ச் 2025 பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 பட மூலாதாரம்,X/@SPK_TNCC படக்குறிப்பு,காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை பேசும்போது, "தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் பேசும்போது, தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்ற மாட்டோம் என்கிறார். ஆனால், உத்தர பிரதேசத்திற்கோ, பிகாருக்கோ இடங்களின் எண்ணிக்கையை மாற்ற மாட்டோம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆகவே தமிழ்நாட்டின் உரிமைக்காக அனைவரும் ஒத்துழைப்போம்," என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "மக்கள் தொகை அடிப்படையிலான மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். எந்தத் தேவையும் இன்றி நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்பதை யார் பேசுகிறார்கள், எதற்காகப் பேசுகிறார்கள் என்பது கவனத்திற்கு உரியது," என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், "மாநில உரிமைகளில் தலையிடுவதும், வருடாந்திர பட்ஜெட்டில் தேர்தல் வரவிருக்கும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதும், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதிப் பகிர்வை மறுப்பதும், பேரிடர்க் காலங்களில் நமது கூக்குரலுக்கு செவி சாய்க்காததும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிப்பதும் என் பேச்சைக் கேட்டால்தான் நிதி தருவேன் என மிரட்டுவதும், ஒரு ஒன்றிய அரசின் செயலாகத் தெரியவில்லை. எப்போதுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் கொண்டு வராமல் இருப்பதுதான் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் இந்தியாவின் பன்முகத் தன்மையையும் காக்கும்," என்றார். கூட்டத்தில் பேசிய அனைவருமே முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தே பேசினர். இதற்குப் பிறகு கூட்டம் முடிவுக்கு வந்தது. ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல்26 பிப்ரவரி 2025 'இதுவொரு நாடகம்' - ஜெயக்குமார் விமர்சனம் படக்குறிப்பு,அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. தொகுதி மறுவரையறை செய்ய நிதியும் ஒதுக்கப்படவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்கவே இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் என்ற நிலையில் எதற்கு எந்த அவசரம்? நாங்கள் மாநில உரிமையைக் காப்பதற்காக தீர்மானத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தோம். அது வேறு விஷயம். ஆனால், மாநில உரிமையை பற்றிப் பேசுவதற்கு, தி.மு.கவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த முகாந்திரமும் இல்லை," என்று விமர்சித்தார். மேலும், "இவர்கள் கச்சத்தீவு, நீட் தேர்வு, காவிரி போன்ற விஷயங்களில் உரிமையைப் பறிகொடுத்தார்கள். பொதுப் பட்டியலுக்குச் சென்ற கல்வியை, 17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கேற்றபோது மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் சூழலைப் பார்க்கும்போது, ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்" என்றும் கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாட்டிற்கு உள்ள 7.18 சதவீத பிரதிநிதித்துவம் நீடிக்க வேண்டும் என்பதும், இது குறித்து பிரதமர் எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை அதற்கேற்றபடி திருத்த வேண்டும்" என்ற விஷயமும் தீர்மானத்தில் இணைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c78eng74z03o
  8. வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் சட்டவிரோத மீன்பிடியை இந்தியா தடுக்க வேண்டும்! - அமைச்சர் பிமல் Published By: Vishnu 05 Mar, 2025 | 08:43 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை இந்தியா வழங்க வேண்டும். இந்திய பிரதமரின் விஜயத்தின் போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் வடக்கு மாகாணத்தில் தான் அதிகளவான மீனவர்கள் உள்ளார்கள். அத்துடன் மீன்பிடி மற்றும் அதனுடனான தொழில்களில் அதிகளவானோர் ஈடுபடுகிறார்கள். வடக்கு பகுதியில் வாழும் மீனவர்கள் கஷ்டமான வாழ்க்கை முறைமையில் தான் உள்ளார்கள். கடற்றொழிலை மேம்படுத்துவதை போன்று அந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் அதற்கான பொறுப்பு கடற்றொழில் வளங்கள் அமைச்சுக்கு உண்டு. வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் அதனுடான இணை கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. வடக்கில் அதிகளவான கடற்றொழிலுடன் தொடர்புடைய வளங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் தெற்கில் உள்ள மீனவர்களை காட்டிலும் வடக்கில் உள்ள மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் கஸ்டப்படுகிறார்கள். இந்திய மத்திய அரசிடமும், தமிழ்நாடு அரசிடமும் விசேட கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் இலங்கையர்கள் படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் போது அவுஸ்திரேலிய அரசாங்கம் ' படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு வர வேண்டாம்' என்று பல விளம்பரங்களை அழுத்தமாக வெளியிட்டது. அத்துடன் சட்ட ரீதியிலான அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. மீன்பிடி கைத்தொழிலை தவிர்த்து வடக்கு மக்களுக்கு வேறு எந்த கைத்தொழில்களும் கிடையாது. வடக்கு மக்களின் ஒரே ஜீவனோபாயத்தை இல்லாதொழிக்க இடமளிக்க வேண்டாம் என்று இந்திய அரசிடம் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் உள்ள சட்டங்களை செயற்படுத்துங்கள். இவற்றை செயற்படுத்தாமல் வடக்கு மக்களின் நலன்புரி பற்றி பேச முடியாது. இதன்போது எழுந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டடணியின் தலைவர் மனோ கணேசன், உங்களின் கருத்து மிகவும் முக்கியமானது, இந்திய பிரதமர் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். ஆகவே தயவு செய்து பேச்சுவார்த்தையில் ஒழுங்கில் இந்த விடயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள். வடக்கு மக்களுக்கு இது பாரியதொரு பிரச்சினை. எமது சொத்துக்களை கொள்ளையடித்துச் செல்கிறார்கள். யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகி விட்டது.இந்தியா உதவி செய்தது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள் நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். என்றார். தொடர்ந்து உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, இது பாரதூரமான பிரச்சினை. அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைளை இந்திய அரசாங்கத்தினால் நிறுத்த முடியும். இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பல உதவிகளை செய்கிறது. வடக்கு மக்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் வழங்கும் உதவிகள் உண்மையானதாக அமையாது. இந்திய மீனவர்களின் எல்லை மீறல் செயற்பாடு நாளாந்த பிரச்சினையாகவே காணப்படுகிறது. இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்க வேண்டும். இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். https://www.virakesari.lk/article/208391
  9. 05 Mar, 2025 | 05:29 PM (எம்.வை.எம்.சியாம்) வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் (Speed Guns ) உபகரணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் இந்த உபகரணத்தை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும் எனவும் இதன்போது பதிவு செய்யப்படும் காணொளியை நீதிமன்றத்தில் வழக்கின் போது சாட்சியமாக பயன்படுத்த முடியும் எனவும் வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரனகல தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் இந்த வருடத்தின் பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் 341 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை விபத்துக்களினால் உயிரிழப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. வீதி விபத்துக்கள் ஏற்பட பிரதான காரணம் அதிக வேகமாகும். எனவே வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் Speed Guns பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் நாட்டில் இவ்வாறான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இவை அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த உபகரணத்தை வெற்றிகரமான பயன்படுத்த முடியும். 1200 கிலோ மீட்டர் தூரத்தில் வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை இதன் மூலம் கண்டறியலாம். இதன்போது பதிவு செய்யப்படும் காணொளியை நீதிமன்றத்தில் வழக்கின் போது சான்றாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் வாகனம் செலுத்தப்பட்ட வேகம் சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனங்களின் இலக்கத்தகடுகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். எனவே தவறிழைக்கும் தரப்பினர் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. தற்போது 30 ஸ்பீட் கன்கள் Speed Guns பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவை அதிக வீதி விபத்துக்கள் பதிவாகும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 15 உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஒட்டுமொத்தமாக 45 பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு இவை வழங்கப்படவுள்ளன. இந்த உபகரணம் ஒன்றுக்காக அரசாங்கத்தினால் 33 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/208369
  10. பட மூலாதாரம்,Ranyarao/X படக்குறிப்பு,ரன்யா ராவ் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி செய்தியாளர், பெங்களூரு 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழில் வாகா திரைப்படத்திலும், கன்னட மொழியில் இரு படங்களிலும் நடித்துள்ள நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து திரும்பியபோது 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரன்யா ராவ், கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் மகள். பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு, செவ்வாய்க்கிழமை (மார்ச் 04) தங்கத்துடன் ரன்யா ராவ் வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது. ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது? உலகெங்கிலும் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் பல ஆயிரம் கிலோ தங்கம் - இந்தியாவில் விலை குறைவது எப்போது? ஜமாஜாமா: 'நிலத்தடியில் 3 மாதம், ஒரு தளத்தில் எலும்புகள்' - தங்கச் சுரங்கத்தை கட்டுப்படுத்தும் இரக்கமற்ற கும்பல் கோலார் தங்க வயலில் தங்கம் எடுத்த தொழிலாளர்கள் இன்று என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு "அவர் தங்கக் கட்டிகளை அவரது உடலில் மிகவும் சாமர்த்தியமாக மறைத்து வைத்திருந்தார்" என்று வருவாய் புலனாய்வுத் துறை புதன்கிழமை (மார்ச் 05) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவரது உடலில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறப்பு பெல்ட்டில், இந்த தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர ரன்யா ராவிடம் இருந்த 800 கிராம் தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்ட பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டைச் சோதனையிட்டனர். அவரது வீட்டில் இருந்து 2.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 2.67 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. "1962 சுங்கச் சட்டத்தின் கீழ் இந்தப் பெண் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மொத்தமாக 17.29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில், இந்த முறை சிக்கிய 14.8 கிலோ தங்கமே பெருமதிப்புடையது என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கூறியுள்ளது. அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 யார் இந்த ரன்யா ராவ்? பட மூலாதாரம்,Ranyarao/X தற்போது 32 வயதாகும் நடிகை ரன்யா ராவ், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் சுதீப்புக்கு ஜோடியாக 'மாணிக்யா' என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் ரன்யா திரை உலகில் தனக்கான முத்திரையைப் பதித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக "வாகா" என்ற திரைப்படத்தில் நடித்தார். 2017ஆம் ஆண்டில், பிரபல கன்னட நடிகர் கணேஷாவுக்கு ஜோடியாக 'பட்கி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். "கடந்த சில ஆண்டுகளாக, அவர் திரைப்படத் துறையில் அதிகமாக ஈடுபடவில்லை. ஆனால் அவர் பணியாற்றிய படங்களில், அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்" என்று பத்திரிகையாளராக இருந்து திரைப்படத் தயாரிப்பாளரான சுனைனா சுரேஷ் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். ரன்யா பொறியியல் படித்து முடித்த பிறகு, திரையுலகில் அடியெடுத்து வைத்ததாக கன்னட திரையுலகைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு நபர் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரன்யா ராவ். அவரது தாயார், காபி செடி விளைவிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ராமச்சந்திர ராவ், கர்நாடக காவல்துறையின் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக உள்ளார். ரன்யா ராவின் நடவடிக்கைகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தனது மகள் மற்றும் மருமகனின் வணிகம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவரது தந்தை ராமச்சந்திர ராவ் உள்ளூர் ஊடகத்திடம் கூறினார். ரன்யா ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ராமச்சந்திர ராவின் அதிகாரப்பூர்வ கருத்து கிடைத்தவுடன் இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும். கிரிப்டோ ரிசர்வ்: டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?5 மார்ச் 2025 ரன்யா ராவ் பிடிபட்டது எப்படி? பட மூலாதாரம்,PIB படக்குறிப்பு,ரன்யா ராவிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் படத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ரன்யா ராவ் அடிக்கடி துபைக்கு சென்று வருவதால் அவர் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் பார்வையில் சிக்கியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 15 நாட்களில் நான்கு முறை அவர் துபைக்கு சென்று வந்ததால், அவர் மீதான சந்தேகம் மேலும் அதிகரித்தது. மற்ற பயணிகள் குடியேற்ற ஆவண சரிபார்ப்பு செயல்முறை வரிசை வழியாகச் செல்ல வேண்டியிருந்த நிலையில், ரன்யா ராவ் அந்த வழியில் செல்லாமல் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. தான் காவல்துறை இயக்குநர் ஜெனரலின் மகள் என்றும், தனது அடையாளத்தை நிரூபிக்க ஒரு ப்ரோட்டோகால் கான்ஸ்டபிள் எப்போதும் தன்னுடன் இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகளிடம் ரன்யா ராவ் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ப்ரோட்டோகால் கான்ஸ்டபிள் அல்லது காவல்துறை அதிகாரிகளைக் குறை கூறுவது தவறு என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5y0760gznko
  11. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுகோய்-57 மற்றும் எஃப்-35 போர் விமானங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விமானப்படையை நவீனமயமாக்குவதில், ஒரு முக்கியமான முடிவினை எடுக்க வேண்டியதாக இருக்கின்றது. அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்களை வாங்குவது இதற்கு தீர்வாகுமா? கடந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது, அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே வழங்கக் கூடிய எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்தார். எஃப்-35 என்பது மேம்பட்ட சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தாக்குதல் அமைப்புகள் மற்றும் தடையற்ற தகவல் பகிர்வு திறன்களைக் கொண்ட "ஐந்தாம் தலைமுறை" போர் விமானமாகும். இது எதிரிகளின் ரேடார்களில் சிக்காத வகையில் அதாவது, எதிரிகளுக்குப் புலப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு மிகவும் அதிநவீன மற்றும் விலை உயர்ந்த போர் விமானமாகும். ஒரு எஃப்-35 போர் விமானத்தின் விலை 80 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (எதிரி ரேடார்களுக்குப் புலப்படாமல் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்துவது என்பது "ஐந்தாம் தலைமுறை" போர் விமானத்தின் முக்கிய அம்சமாகும்) இந்தியாவின் விமானப் படையில் போர் விமானங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், சீனாவின் ராணுவப்படை மேம்பட்டு வருவதாலும், தற்போது இந்தியா மிகவும் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று பலர் கருதுகின்றனர். அது அமெரிக்காவில் இருந்து அதிநவீன, விலையுயர்ந்த எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதா அல்லது ரஷ்யாவின் மிகவும் மேம்பட்ட போர் விமானமான சுகோய்-57-ஐ வாங்குவதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. சுகோய்-57 போர் விமானங்களை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் ரஷ்யாவுடன் இந்தியாவுக்குள்ள பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்பது இதில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று. சர்வதேச அரசியலில் அமெரிக்கா - ரஷ்யா போட்டாபோட்டி ஊடகங்களில் பெரும்பாலும் மிகைப்படுத்திக் காட்டப்படுவதாகவும், யதார்த்தம் மிகவும் வேறுபட்டது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த மாதம், பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் போர் விமானங்களும் இடம் பெற்றிருந்ததால், இந்த விவாதம் மேலும் சூடுபிடித்தது. அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்தியது யுக்ரேனுக்கு மட்டுமல்ல இந்த நாடுகளுக்கும் பேரிடியாக விழுந்துள்ளது4 மார்ச் 2025 டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்? - அமெரிக்கர்களுக்கும் கூட சிக்கலா?4 மார்ச் 2025 பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,எஃப்-35 போர் விமானம் எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கத் தயார் என்று டிரம்ப் அறிவித்தது, வழக்கத்திற்கு மாறான ஒன்று என்று கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் அமைப்பின் மூத்த ஆய்வாளர் ஆஷ்லி ஜே. டெல்லிஸ் கூறுகிறார். இந்திய விமானப்படையின் திட்டம் உள்நாட்டிலேயே ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பது மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில், உள்நாட்டிலேயே ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது சவாலான ஒன்றாக இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO) ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி வருகிறது. "உள்நாட்டிலேயே தயாரிக்கும் உரிமையுடன் எஃப்-35 போர் விமானங்களை இந்தியா வாங்குவது சாத்தியமற்றது; எந்தவொரு ஒப்பந்தம் கையெழுத்தானாலும் அது நேரடி விற்பனையாகவே இருக்கும். இந்தியாவுடன் கூட்டுத் தயாரிப்பு இல்லாமல் நேரடியாக எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்வது, 'மேக் இன் இந்தியா' திட்டத்துடன் ஒத்துப்போகாது. இந்த போர் விமானங்களை இந்தியா எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அமெரிக்கா கண்காணிக்க விரும்புவது இந்தியாவால் ஏற்கப்பட வாய்ப்பில்லை," என்று ஆஷ்லி டெல்லிஸ் கூறினார். அதிக விலை, அதிகப்படியான பராமரிப்பு தேவைகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் என எஃப்-35 போர் விமானங்களை பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க சவால்கள் இருக்கின்றன என்று பாதுகாப்புத் துறை நிபுணர் ஸ்டீபன் பிரையன் கூறுகிறார். "ரஷ்யாவின் சுகோய்-57 போர் விமானம் நல்ல தேர்வாக இருக்கும் என்று அறிந்தும், எஃப்-35 போர் விமானத்தில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்ய இந்தியா தயாராக உள்ளதா என்பதுதான் கேள்வி." என்கிறார் அவர். ஜோர்டானில் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள நபர்- வேலை தேடி சென்றவருக்கு நடந்தது என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: இந்தியாவை சரிவிலிருந்து மீட்பாரா விராத் கோலி?4 மார்ச் 2025 பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,2021 ஆம் ஆண்டு இந்திய விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் ஆனால், பலர் சுகோய்-57 போர் விமானத்தை இந்தியா வாங்கும் என்று கருதவில்லை. ஏனெனில், தொழில்நுட்ப பரிமாற்றம், செலவு பகிர்வு மற்றும் போர் விமானத்தின் அம்சங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் இணைந்து போர் விமானங்களை தயாரிப்பதற்கான திட்டத்தில் இருந்து இந்தியா விலகியதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நிச்சயமாக, இந்திய விமானப்படையில் உள்ள போர் விமானங்கள் பழையவை என்பதுடன், போர் விமான பற்றாக்குறையும் உள்ளது. இந்திய விமானப்படைக்கான 42 படைப் பிரிவுகளில் 31 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ரஷ்யா மற்றும் சோவியத் தயாரிப்புகளாகும். இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக இருக்கும் ரஷ்யாவின் சுகோய்-30க்கு மாற்றாக, பொருத்தமான மற்றொரு போர் விமானத்தை இனங்காண்பது ஒரு முக்கிய சவாலான பணியாகும். அல்பானி பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கிளாரி, சமீபத்தில் ஐஐஎஸ்எஸ் மிலிட்டரி பேலன்ஸ் வெளியிட்ட தரவுகளை சுட்டிக்காட்டினார்: 2014 மற்றும் 2024க்கு இடைப்பட்ட காலத்தில் சீனா தனது விமானப்படையில் 435 போர் விமானங்களையும், பாகிஸ்தான் 31 போர் விமானங்களையும் சேர்த்துள்ளன. அதே நேரத்தில் இந்திய விமானப்படையில் 151 போர் விமானங்கள் குறைந்துள்ளன. இந்தியா 500-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் இந்தியா விரும்புகிறது. உள் நாட்டிலேயே தயாரிக்கப்படும் தேஜஸ் மார்க் 1ஏ என்ற போர் விமானத்தை விமானப்படையில் சேர்க்க திட்டமிட்டுள்ள இந்தியா, 83 போர் விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது; இதே ரகத்தைச் சேர்ந்த மேலும் 97 போர் விமானங்களை வாங்க விரைவில் ஆர்டர் கொடுக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இன்னும் நவீன தேஜஸ் மார்க் 2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் நடக்கிறது. இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை போர் விமானம் (AMCA) பயன்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டு ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமானப்படைக்கு 20 பில்லியன் டாலரில் 114 பன்முனை பயன்பாட்டு போர் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களிடம் உரிமம் பெற்று தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் மூலம் போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா விரும்புகிறது. ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தனி ஒருவன்'ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்?4 மார்ச் 2025 பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் இந்திய விமான கண்காட்சியில் புறப்பட தயாராகிறது. பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் விமர்சனங்கள் ஏற்பட்டதால், அதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காத வகையில் வெளிப்படையான நடைமுறையில் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு இம்முறை திட்டமிடுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 போர் விமானங்கள் இதற்கான போட்டியில் இருக்கையில், ரஃபேல் விமானமே முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் விமானப்படை நவீனமயமாக்கும் செயல் திட்டம் நிதி, அடுத்தடுத்த தாமதங்கள் மற்றும் வெளிநாட்டு போர் விமானங்களைச் சார்ந்திருப்பது என 3 முக்கிய தடைகளை எதிர்கொள்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய பட்ஜெட்டில் பாதுகாப்புக்கான நிதி அதிகரிக்கப்பட்டு வந்தாலும் கூட, உண்மையான மதிப்பை கருத்தில் கொண்டால் அது குறைந்தே இருக்கிறது. வெளிநாட்டு போர் விமானங்களையே சார்ந்திருப்பது நீண்டகால நோக்கில் சிக்கலாக மாறும் அபாயம் உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா முன்னுரிமை அளித்தாலும், டி.ஆர்.டி.ஓ.வின் தாமதம், வேறு வழியின்றி தற்காலிகமாக வெளிநாட்டில் இருந்து போர் விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியாவை நிர்பந்திக்கிறது. இது ஒரு சுழற்சியை உருவாக்குகிறது. இந்த நிலையை மாற்ற, தேவைப்படும் நேரத்தில் உள்நாட்டிலேயே சிறந்த போர் விமானம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F-404 என்ஜின் விநியோகத்தில் தாமதம் காரணமாக, இந்தியாவில் போர் விமானங்களை தயாரித்து படைகளுக்கு சப்ளை செய்யும் பணியும் தாமதமாகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வைக்கும் இந்திய விமானப்படையின் தேவைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் இதற்கு ஒரு முக்கிய சவாலாக உள்ளது என்று யூரேசியா குழுமத்தின் ஆய்வாளர் ராகுல் பாட்டியா கூறுகிறார். "தேஜஸ் மார்க் 1 போர் விமானத்தின் செயல்திறன் குறித்து விமானப்படை எழுப்பிய சந்தேகத்திற்குப் பிறகே தேஜஸ் மார்க் 1ஏ மற்றும் மார்க் 2 போன்ற மேம்பட்ட திறன் கொண்ட அடுத்தக்கட்ட போர் விமானங்கள் திட்டமிடப்பட்டன. ஆனால் பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பணிகள், இந்திய ஆயுதப் படைகளை விரக்தியடையச் செய்கின்றன. குறிப்பாக பாதுகாப்புத் துறையில் அடுத்தடுத்து புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வரும் சூழலில் படைகளின் தேவை தொடர்ந்து மாறி வருகிறது." என்று ராகுல் பாட்டியா கூறினார். இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் கூட, போர் விமானங்கள் கிடைப்பதில் உள்ள தாமதங்கள் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். "நான் வெளிநாடுகளில் இருந்து எதையும் வாங்க மாட்டேன் அல்லது இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக காத்திருப்பேன் என்று சபதம் எடுக்க முடியும். ஆனால் குறித்த நேரத்தில் [சரியான நேரத்தில்] உள்நாட்டிலேயே அவை உருவாக்கப்படவில்லை என்றால் இது சாத்தியமில்லை," என்று ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கூறினார். புதினுடன் கைகோர்ப்பாரா டிரம்ப்? வேகமாக மாறும் உலக அரசியலில் என்ன நடக்கிறது?4 மார்ச் 2025 இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி?4 மார்ச் 2025 பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக ரஷ்யாவின் சுகோய்-30 இருக்கிறது "தற்போது, போர் விமானங்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை நாம் மிக மோசமான நிலையில் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். உறுதியளிக்கப்பட்டவாறு போர் விமானங்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தற்போதுள்ள வெற்றிடத்தை உடனே நிரப்பும் வகையில் மாற்று ஒன்றை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.," என்று அவர் குறிப்பிட்டார். இந்திய விமானப்படைக்கு தேஜஸ் மார்க் 1ஏ போர் விமான சப்ளை கடந்த பிப்ரவரியிலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் சாத்தியமாகவில்லை. உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் (எதிரிகளின் ரேடார்களில் புலப்படாமல் தாக்கும்) போர் விமானங்களுக்கே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்பது தெளிவு. இதற்காக ஏற்கனவே ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. "உடனடியாக அச்சுறுத்தல் ஏற்படும் நிலை வந்தால் மட்டுமே வெளிநாட்டில் இருந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்க இந்தியா பரிசீலிக்கும்", என்று ராகுல் பாட்டியா கூறுகிறார். சீனா ஜே-20 (J-20) மற்றும் ஜே-35 (J-20) ஆகிய இரண்டு வகை ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை கொண்டுள்ளது. அமெரிக்கா அல்லது ரஷ்யாவின் போர் விமானங்களை இந்தியா தேர்வு செய்யாது என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகிறார்கள். "கடந்த கால வரலாற்றை கருத்தில் கொண்டு, போர் விமானங்கள் பற்றாக்குறையை ஈடு செய்ய அவசரமாக அவற்றை வாங்கலாம். அடுத்து வரும் காலத்தில் போர் விமானங்களை இணைந்து தயாரிப்பதில் கவனம் செலுத்தலாம். ஆனால், உள்நாட்டிலேயே தயாரிப்பது என்பதே இந்தியாவின் தொலைநோக்குத் திட்டமாக உள்ளது", என்று ராகுல் பாட்டியா குறிப்பிடுகிறார். இந்தியாவைப் பொருத்தவரை, விமானப்படையின் எதிர்கால வலிமை அவற்றை உள்நாட்டிலேயே இணைந்து தயாரிப்பதாகும், குறிப்பாக, மேற்கத்திய நாட்டுடன் கூட்டு சேர்வதாகும். இந்தியாவின் இந்த நோக்கம் ஈடேற உள்நாட்டிலேயே தயாரிக்கும் போர் விமானங்களை குறித்த நேரத்தில் படைகளுக்கு சப்ளை செய்வது முக்கியமானதாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cjevlxj38k9o
  12. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியேற்பட்டால் அதனை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னதாக ஒன்லைன் ஊடாக சமர்ப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கான வசதியினை WWW.Doenets. LK என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் மாணவர்களுக்கு அவர்களின் பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவாக வழங்குமாறு அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/315635
  13. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மட்சா பதவி, பிபிசி நியூஸ் 5 மார்ச் 2025, 08:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகராக்குவதற்கு ஒரு புதிய கிரிப்டோ ரிசர்வை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அதில் தாம் சேர்க்க விரும்பும் ஐந்து கிரிப்டோ நாணயங்களின் பெயர்களையும் அறிவித்தார். டிரம்ப் குறிப்பிட்ட ஐந்து கிரிப்டோ பிட்காயின், ஈதேரியம், எக்ஸ்ஆர்பி, சொலானா மற்றும் கார்டோனா ஆகியவற்றின் சந்தை மதிப்பு அவரது அறிவிப்புக்கு பிறகு உயர்ந்தது. அதிபர் தேர்தலுக்கான பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பயன்படுத்துபவர்களை கவர தீவிரமாக முயன்றார். மோசடி மற்றும் பணப்பதுக்கல் போன்ற காரணங்களால் கிரிப்டோ நாணயங்கள் மீது முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிர நடவடிக்கை எடுத்தார். இந்த புதிய கிரிப்டோ ரிசர்வ் எப்படி செயல்படும் என்பதில் தெளிவில்லை. வரும் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் முதலாவது கிரிப்டோ உச்சிமாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார், அன்றைய தினம் மேலும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஃபிளாட், வில்லா வாங்குவோர் கவனிக்க வேண்டிய 11 முக்கிய விஷயங்கள் செலவிட பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள் - ஆய்வு கூறுவது என்ன? உலகெங்கிலும் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் பல ஆயிரம் கிலோ தங்கம் - இந்தியாவில் விலை குறைவது எப்போது? சென்னையில் சொகுசு வீடுகள் விற்பனை அதிகரித்த அளவுக்கு சாதாரண வீடுகளின் விற்பனை உயராதது ஏன்? கிரிப்டோ நாணயங்களின் மதிப்பு அதிகரிப்பு டிரம்ப், ஞாயிறன்று வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், "எக்ஸ்ஆர்பி, சொலானா மற்றும் கார்டோனா ஆகியவை கொண்ட கிரிப்டோ ரிசர்வை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிபரின் பணிக்குழுவுக்கு உத்தரவிட்டிருப்பதாக" தெரிவித்தார். அதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர் மற்றொரு பதிவை வெளியிட்டார், "மதிப்பு மிக்க பிற கிரிப்டோ நாணயங்கள் என்ற வகையில் பிட்காயின் மற்றும் ஈதேரியம் ஆகியவை இந்த ரிசர்வின் மையமாக இருக்கும்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் அவர் குறிப்பிட்ட முதல் மூன்று நாணயங்களின் விலை ஞாயிறன்று 62% அதிகரித்தது. பிட்காயின் மற்றும் ஈதேரியம் தலா பத்து விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்தன. டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குறைந்து வந்த கிரிப்டோ கரன்சிக்களின் விலை, இந்தப் பதிவுகளால் உயர்வை நோக்கித் திரும்பியது. ஜனவரி மாதம் தான் பதவியேற்ற பின்னர், புதிய கிரிப்டோ சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை பரிந்துரைப்பதற்காக அதிபரின் பணிக் குழுவை உருவாக்க டிரம்ப் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன?4 மார்ச் 2025 யுக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவி நிறுத்திவைப்பு - என்ன நடக்கிறது?4 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கிரிப்டோ தொடர்பான டிரம்பின் மனமாற்றம் "சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் ஃபெடரல் அரசால் சட்டரீதியாக பறிமுதல் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி தேசிய டிஜிட்டல் சொத்துக்களுக்கான ரிசர்வ் ஒன்றை உருவாக்கி, பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை" ஆய்வு செய்ய இத்தகைய பணிக்குழு தேவை என டிரம்பின் உத்தரவு தெரிவித்தது. இந்த புதிய தேசிய ரிசர்வை உருவாக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டுமா என்பதில் தெளிவு கிடைக்கவில்லை. இதற்கு முன்னர் வரை, டிரம்ப் கிரிப்டோவை விமர்சிப்பவராகவே இருந்திருக்கிறார். 2021-ல் அவர் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பிட்காயின் என்பது ஒரு 'மோசடி' என கூறியிருந்தார். ஆனால் அண்மை வாரங்களில் அவரும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் அவர்களது சொந்த கிரிப்டோ நாணயங்களை வெளியிட்டுள்ளனர். இதனால் வெள்ளை மாளிகை கொள்கைகளின் மூலம் அவர்கள் லாபம் ஈட்ட முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8rkpkv3gz5o
  14. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மட்டுமே முழு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் எனவும் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஓரளவு மாற்றம் இருக்கும் எனவும் ஏனைய வகுப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய கற்றல்- கற்பித்தல் செயல்முறை வகுப்பறைகளில் செயற்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/315663
  15. 05 Mar, 2025 | 12:44 PM மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தொழில் சந்தை இன்று (5) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்திர, உதவி மாவட்ட செயலாளர் சாபர்ஜா, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சனா குமார ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர். இத்தொழில் சந்தையில் 30க்கு மேற்பட்ட நிறுவனங்கள் வருகை தந்திருந்ததுடன், 100க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்பினை பெறும் நோக்குடன் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/208332
  16. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2024இல், 213 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் பாடசாலை செல்லும் வயதிலுள்ள சிறுமிகள் மத்தியில் பதிவாகியுள்ள குழந்தை கர்ப்பிணிகளில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக அதிகாரபூர்வ தகவல்களின் ஊடாக உறுதி செய்யபட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 163 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதுடன், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கையானது 213 வரை அதிகரித்துள்ளதாக போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2024ஆம் ஆண்டு பதிவான குழந்தைத் தாய்மார்களுக்கு மத்தியில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள குழுந்தைத் தாய்மார்களை விடவும், அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தாய்மார்கள் இலங்கையில் இருக்கக்கூடும் என போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக பிரிவிற்குப் பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர பிபிசிக்கு தெரிவித்துள்ளார். பாலியல் கல்வி குழந்தைகளுக்கு எப்போது, எப்படி சொல்லித் தர வேண்டும்? திருமணமாகாதவர்களுக்கும் கருக்கலைப்பு உரிமை: உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் சாத்தியமா? இந்தியாவில் அவசர கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் நேரடியாக வாங்க தடை வருமா? இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி? கடந்த 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் அனுமதிக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தின் பிரகாரம், 18 வயதுக்கு குறைவான அனைவரும் சிறுவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தண்டனைச் சட்ட கோவையின் 363(இ) சரத்தின் பிரகாரம், 16 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் ''ஒப்புதல்'' பொருந்தாது என்பதால், அவ்வாறானவர்களுடன் உடலுறவு கொள்வதானது ''பாலியல் வன்கொடுமை'' எனக் கருதப்படுகின்றது. சிறு வயது காதல் காரணமாக ஏற்படும் சம்பவங்கள் தற்போது பதிவாகின்ற குழந்தைகள் கர்ப்பமடைவதானது, காதல் தொடர்புகளின் பெறுபேறுகளினால் ஏற்படுகின்ற சம்பவம் என பிரதி போலீஸ் மாஅதிபர் குறிப்பிடுகின்றார். ''இதில், 16 வயதுக்குக் குறைவான சிறுமிகளின் விருப்பத்துடன் இடம் பெறுகின்ற சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையே எமக்குள்ள பிரச்னையாகும். அது துஷ்பிரயோகம் என சட்ட ரீதியாக உரித்தானாலும், அது பலவந்தமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. காதல் ஏற்பட்டு விருப்பத்துடன் இடம்பெற்ற சம்பவங்களாலேயே அந்தச் சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்.'' இவ்வாறான சந்தர்ப்பங்களில் பலவந்தமாக இடம்பெற்ற துஷ்பிரயோகங்களில் கர்ப்பமடைவதைத் தடுப்பதற்கு வாய்ப்பில்லை. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கும்போது, அந்தச் சிறுமி கர்ப்பமடைந்து பல மாதங்கள் ஆகியிருக்கும் எனவும் அவர் கூறுகின்றார். ''பலவந்தமாக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கட்டாயம் போலீஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கும். அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். கர்ப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும். சம்பவம் இடம்பெற்று முதல் 24 அல்லது 48 மணித்தியாலங்களுக்குள் வருகை தரும் பட்சத்தில், நீதிமன்றம், மருத்துவர்கள் அது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால், அவர்களுடன் சம்பந்தப்பட்ட சிறுமிகள் தொடர்புகளைப் பேணுகின்றமையினால் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால், அவர்கள் அவற்றை மறைத்து காலம் செல்லும் போதே அறிந்துகொள்ள முடிகின்றது'' என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images இலங்கையிலுள்ள சட்டத்தின் பிரகாரம், குழந்தைகள் கர்ப்பமடைந்தால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தவிர்த்து. கர்ப்பத்தைக் கலைப்பதற்கு சட்டத்தின் இயலுமை இல்லை. நாட்டில் தற்போது பதிவாகின்ற சில சம்பவங்களில், கர்ப்பத்திற்குப் பொறுப்பு கூற வேண்டிய ஆண்கள், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் எனவும் பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவிக்கின்றார். அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில், இவ்வாறான சம்பவங்களில் 14 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட பெண் குழந்தைகள் உட்படுத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். குழந்தைத் தாய்மார்களின் குழந்தைகள் ''பாதிக்கப்பட்டவர்களாகவே'' இந்த உலகத்தைக் காண்பதாகக் கூறும் பிரதி போலீஸ் மாஅதிபர், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சமூகத்தின் கவனம் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ''யாரும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதை நான் காணவில்லை. இவர்களை நீதிமன்றம் வேறு யாருக்காவது ஒப்படைத்து விடும். பெரும்பாலும் அவர்களின் குடும்பத்திடமே ஒப்படைக்கப்படும். விருப்பம் என்றால் வளர்த்துக்கொள்ள முடியும்.'' பிளாஸ்டிக் தாளில் இட்லியை வேக வைத்தால் என்ன ஆபத்து?மருத்துவர்கள் தகவல்3 மார்ச் 2025 'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?3 மார்ச் 2025 தெளிவின்மையால் ஏற்படுகின்ற குழந்தை கர்ப்பமடைதல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிறார்கள் தங்களுக்கென ஒரு குடும்பம் என்ற கற்பனை உலகிற்குள் விரைவாகப் பிரவேசிக்க முயல்வதாகக் கூறுகிறார் மாத்தளை மாவட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் நுவன் தோடவத்த பாலியல் தொடர்பான போதிய தெளிவின்மையே குழந்தைகள் இவ்வாறான பேராபத்திற்கு முகம் கொடுக்கக் காரணம் என பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர கூறுகின்றார். ''பாலியல் தொடர்பான கல்வி, அது தொடர்பில் காணப்படும் அறிவு மற்றும் தேவையற்ற விதத்தில் கர்ப்பமடைவதைப் பாதுகாத்துக் கொள்வது ஆகியவை குறித்த தெளிவின்மை இதற்கு ஒரு காரணம். பாலியல் உறவைப் பேணும் ஒருவராயின், அவர் கட்டாயமாகப் பாதுகாப்பு குறித்து அறிந்திருக்க வேண்டும். அதைப் பேணுவதற்கு வயது பொருத்தமற்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது குறித்து அறிந்துகொள்ள வயது எல்லை எதுவும் கிடையாது.'' ''நாங்கள் இந்தச் சம்பங்கள் குறித்துப் பார்க்கும்போது அந்தச் சிறுமிகள் அது தொடர்பில் அறிந்திருப்பதில்லை என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது'' என்பதை விசாரணை அனுபவங்களின் ஊடாக அவர் குறிப்பிட்டார். ''நாங்கள் இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராயும்போது, குடும்பங்களில் காணப்படும் பிரச்னைகள் குறித்து அதிகளவில் அவதானிக்கின்றோம். பெரும்பாலான சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் இருக்கின்றார்கள். தாயும், தந்தையும் பிரிந்துள்ளமை அதற்கான காரணம். இவ்வாறான நிலையிலேயே காதலுக்கு மிகவும் விரைவாக அடிமையாகின்றனர்.'' எவ்வாறாயினும், சரியாக இந்த நிலைமைக்கான காரணம் தொடர்பில் கூற முடியாது என போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதானி பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர குறிப்பிடுகின்றார். இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?2 மார்ச் 2025 'முறையற்ற விதத்தில் குழந்தைகள் அறிவைப் பெறுகின்றனர்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குழந்தைகளுக்கு அவர்கள் ஆபத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பான தெளிவு வழங்கப்படுவதில்லை என்கிறார் மருத்துவ அதிகாரி தோடவத்த. குழந்தைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய நடைமுறை இல்லாமையால், பாலியல் தொடர்பில் முறைசாரா விதத்தில் அவர்கள் அறிவைப் பெற்றுக் கொண்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் நுவன் தோடவத்த, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''பாடசாலை கல்வியில் முறையான விதத்தில் இவற்றைக் கற்பிப்பதில்லை. அதனால், முறைசாரா விதத்தில் அவர்கள் இது தொடர்பான அறிவைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பெரியோரிடம், நண்பர்களிடம், பாலியல் திரைப்படங்களைப் பார்த்து இவ்வாறான அறிவைப் பெற்றுக்கொண்டுள்ளனர். தெளிவின்மை காரணமாகவே குழந்தைகள் கர்ப்பமடைகின்றனர். அவ்வாறானவர்களை நாங்கள் சந்திக்கின்றோம்.'' ''இலங்கையில் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்குக்கூட இது தொடர்பில் தெரியாது. துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரியவர்களாக இல்லாத போதிலும்கூட, அவர்கள் அது குறித்து அறிந்திருக்க மாட்டார்கள்" என அவர் கூறுகின்றார். குழந்தைகள் ஆபத்தில் விழும் சந்தர்ப்பங்கள் தொடர்பான தெளிவு வழங்கப்படுவதில்லை எனக் கூறும் மருத்துவ அதிகாரி தோடவத்த, எதிர்காலத்தைத் திட்டமிடும் வகையிலான கல்வி இல்லாமையானது, பாரிய பிரச்னை எனத் தெரிவிக்கின்றார். ''துஷ்பிரயோகத்தை ஒருபுறத்தில் வைப்போம். எமது இளைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான குழந்தைகள் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு, 19 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்கென ஒரு குடும்பம் என்ற கற்பனை உலகத்திற்குள் விரைவாகப் பிரவேசிக்க முயல்கின்றனர்.'' ''இந்தக் குழந்தைகள் ஆபத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் தெளிவு வழங்கப்படுவதில்லை. உதாரணமாக சமூக ஊடகப் பயன்பாட்டைக் கூற முடிகின்றது. அவ்வாறான இடத்தில் அதிக ஆபத்து எந்த இடத்தில் இருக்கின்றது. அதை புத்திசாதுரியமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பவை எந்தவோர் இடத்திலும் கல்வி முறையில் கற்பிக்கப்படவில்லை'' என அவர் குறிப்பிடுகின்றார். புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து1 மார்ச் 2025 உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?28 பிப்ரவரி 2025 குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொடுக்கும் வயது தொடர்பில் டாக்டர் நுவன் தோடவத்தவிடம் வினவப்பட்டது. ''சிறு வயது முதலே, தமது உடலிலுள்ள உறுப்புகள் குறித்த தெளிவு கிடைக்கும் சந்தர்ப்பத்திலேயே, சிறிது சிறிதாக இந்த அறிவை வழங்க ஆரம்பிக்க வேண்டும். மூன்று வயது குழந்தைக்கு மாதவிடாய் சுழற்சி புரிவதில்லை. எனினும், வயிற்றைப் பிடிப்பது, முகத்தைப் பிடிப்பது, மார்பைப் பிடிப்பது புரியும்.'' குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக இது தொடர்பான கல்வியை ஆரம்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார். குறிப்பிட்ட வேலைத் திட்டத்தின் ஊடாக கல்வி முறையில் இவ்வாறான சம்பவங்களைக் குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxne79jwveo
  17. 05 Mar, 2025 | 01:16 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவின் அற்புதமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து, சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக ஸ்டீவ் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஸ்டீவன் ஸ்மித் அறிவித்தார். இந்தியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'இது ஒரு சிறந்த பயணம். இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன்' என கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு (அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம்) அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார். 'எனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் பல அற்புதமான நேரங்களும் அற்புதமான நினைவுகளும் இருந்தன. இரண்டு உலகக் கிண்ணங்களை வென்றதுடன் அற்புதமான அணி வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் பயணத்தைப் பகிர்ந்துகொண்டது சிறப்பம்சமாகும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மெல்பேர்னில் 2010 பெப்ரவரி 19ஆம் திகதி நடைபெற்ற போட்டி மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித் அறிமுகமானார். அன்றிலிருந்து கடந்த 15 வருடங்களில் 170 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 12 சதங்கள், 35 அரைச் சதங்களுடன் 5800 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். பகுதிநேர பந்துவீச்சாளராக 40 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 28 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/208341
  18. காசாவிலிருந்து மக்களை வெளியேற்றாமல் இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் - அராபிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் Published By: Rajeeban 05 Mar, 2025 | 11:35 AM காசாவிலிருந்து மக்களை வெளியேற்றி அதனை புனர்நிர்மானம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்திற்கு பதில் காசாவில் இரண்டுலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அராபிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எகிப்திய தலைநகரில் இடம்பெற்ற அராபிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. 53 பில்லியன் டொலர் செலவில் இரண்டுலட்சம் வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கே அராபிய தலைவர்கள் இணக்கம்தெரிவித்துள்ளனர். பொதுமக்களை காசாவிலிருந்து வெளியேற்றாமல் காசாவை புனரமைக்கும்திட்டத்தினை அராபிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எகிப்து இந்த திட்டத்தினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. எகிப்தின் திட்டம் தற்போது அராபிய திட்டம் என அராபிய லீக்கின் செயலாளர் நாயகம் அஹமட் அபொல் கெய்ட் தெரிவித்துள்ளார். அராபிய உலகை அச்சத்திற்குள்ளாக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தினை எதிர்கொள்வதற்காக எகிப்து மரங்கள் நிறைந்த சுற்றுப்புறங்கள் மற்றும் பிரமாண்டமான பொதுகட்டிடங்கள்காணப்படும் காசாவை காண்பிக்கும் ; படங்களை உள்ளடக்கிய 91 பக்க வரைபடமொன்றை தயாரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த திட்;டம் குறித்து விபரங்கள்; வெளியாகலாம் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. காசாவை புனரமைக்கும்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களின் தற்காலிக குழுவொன்று நியமிக்கப்படலாம் என டெலிகிராவ் யுகே தெரிவித்துள்ளது. ஹமாசினை இந்த குழுவிற்குள் உள்வாங்குவது குறித்து அராபிய தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை பாலஸ்தீன அதிகார சபையின் கீழ் இந்த நிபுணர்கள் குழு செயற்படும் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அதிகாரசபை தற்போது மேற்குகரையை நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. காசாவை அபிவிருத்தி செய்யும் திட்டம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும்.முதல் கட்டம் ஆரம்ப மீட்பு நிலை என அழைக்கப்படுகின்றது இந்த கட்டத்தில் முதல் ஆறு மாதங்களிற்கு காசாவில் உள்ள மிகப்பெருமளவு இடிபாடுகளையும் வெடிக்காதவெடிபொருட்களையும் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அடுத்த இரண்டு கட்டங்களும் பல வருடங்களிற்கு நீடிக்கும், இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள 15 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தற்காலிக கொள்களன்களில் குடியமர்த்தப்படுவார்கள். https://www.virakesari.lk/article/208328
  19. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களின் விபரங்கள் 05 Mar, 2025 | 03:47 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளல் கடந்த திங்கட்கிழமை (03) முதல் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை (03) முதல் நேற்று செவ்வாய்க்கிழமை (04) பிற்பகல் 04.15 மணி வரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் விபரங்கள் பின்வருமாறு; https://www.virakesari.lk/article/208356
  20. Published By: Rajeeban 05 Mar, 2025 | 01:30 PM அரசாங்கம் மாறினாலும் தாங்கள் தண்டனையின் பிடியிலிருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையுடன் தனிநபர்களும் அரசநிறுவனங்களும் செயற்படுவதை நீதிமன்ற கொலை உட்பட சமீபத்தைய கொலைகள் வெளிப்படுத்தியுள்ளன என அனைவருக்குமான நீதி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண உட்பட பலர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி பாதுகாப்பு சட்டமொழுங்கினை பேணுவதற்காக உருவாக்கப்பட்ட முக்கிய நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள சமீபத்தைய கொலைகள் குறித்து நாட்டின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்தவேளை சந்தேகநபர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டமை உட்பட அதிர்ச்சியூட்டும் கொலைகள் பலவற்றை பெப்ரவரி மாதம் சந்தித்துள்ளது. இதன் பின்னர் கொட்டாஞ்சேனையில் பொலிஸ் காவலில் இருந்த இரண்டு நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்த தகவல் வெளியானது. அதேவாரத்தில் வேறு சில சம்பவங்களும் இடம்பெற்றன மித்தேனியாவில் தந்தையும் இரண்டு பிள்ளைகளும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் தங்களின் காவலில் இருந்தவர்களிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் தவறியுள்ள அரச கட்டமைப்புகளான பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து இந்த கொலைகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த கொலைகள் இலங்கையில் சட்டமொழுங்கு வீழ்ச்சியடைவதை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்ட சூழமைவில் இந்த நிலை அம்பலமாகி வருகின்றது. முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடிஉயர் குழாம் தiமையிலான அரசியல் ஆட்சி ஆழமாக வேரூன்றிய ஊழல்சட்டத்தின் ஆட்சி அற்றுப்போனமை போன்ற காரணங்களால் இலங்கை மக்கள் முறைமை மாற்றத்திற்காகவும்பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படை தன்மை காணப்படும் அரசியல் கலாச்சாரத்திற்காகவும் போராடினார்கள். 2024 இல் இந்த வேண்டுகோள்கள்ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கும்தேசிய மக்கள் சக்திக்கும் பெரும் ஆணையை வழங்கின. மக்கள் தலைமையிலான தேர்தல் வெளிப்பாடுகள் கடந்த காலத்தின் பல சுற்று வன்முறைகள் மற்றும் கண்மூடித்தனமாக தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் போன்றவற்றிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்த முயன்றன. அரசாங்கம் மாறினாலும் தாங்கள் தண்டனையின் பிடியிலிருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையுடன் தனிநபர்களும் அரசநிறுவனங்களும் செயற்படுவதை நீதிமன்ற கொலை உட்பட சமீபத்தைய கொலைகள் வெளிப்படுத்தியுள்ளன. சட்ட அமுலாக்கல் பிரிவின் சில அமைப்புகளின் மத்தியில் ஆழமாக வேருன்றியுள்ள ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் போன்றவை காரணமாக நீண்டகாலமாக சித்திரவதைகள் மற்றும் என்கவுண்டர்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இத்தகைய பின்னணியில் நாங்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பதும்இசட்ட அமுலாக்கல் அதிகாரிகள் அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதை கண்டிப்பதும்இவிரைவான நடவடிக்கை மற்றும் பொறுப்புக்கூறலை கோருவதும்இஎங்கள் அனைவரினதும் கடமையாகும். அரச அதிகாரத்தை பயன்படுத்துபவர்கள் உட்பட இந்த வன்முறைகளுடன் தொடர்புடையவர்களி;ற்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அதுபோன்ற அசாதாரண பொலிஸ் அதிகாரங்களை நம்பி அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம். ஒவ்வொரு சந்தர்ப்பங்கள் குறித்தும் பொதுமக்களிற்கு தெளிவான தொடர்ச்சியான தகவல்களை வழங்கவேண்டும்பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான தகவல்களை வழங்கவேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட தவறியமைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும் தற்போதைய சூழமைவின் அடிப்படையில் இந்த சூழ்நிலை குறித்து அனைத்து மக்களும் அரசியல் முதிர்ச்சியுடன் எதிர்வினையாற்றவேண்டும் அனைத்து அரசியல் தலைமைத்துவத்தையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதில் பொதுமக்கள் பங்களிப்பு செய்ய முடியும் . சட்டமொழுங்கு அரசியல் தலையீடுகள் இல்லாமல் இயங்குவதை பொதுமக்கள் உறுதி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/208342
  21. 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், மேத்யூ ஹென்றி பதவி, பிபிசி விளையாட்டுச் செய்தியாளர் துபை 5 மார்ச் 2025, 07:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரன் எடுப்பது பற்றி விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் தன்னுடைய சிறந்த பேட்டிங் போட்டியாளரான விராட் கோலியை புகழ்வதில் அவர் தாமதிக்கவில்லை. துபையில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் விராட் கோலி இந்திய அணி வெற்றி இலக்கை எட்டும் வரை களத்தில் இல்லாது போயிருக்கலாம். ஆனால், இந்தியா மீண்டும் ஒரு முறை சிறந்த சேஸிங் மூலம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. "இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடிக்கும் பேட்டர்களில் சிறந்தவர் யார் என்று விவாதித்தால், அது அவர் தான்" என கோலி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். ஆனால் இதில் விவாதத்திற்கே இடமில்லை. புள்ளிவிவரமே, கோலியே இதில் தலைசிறந்தவர் என்பதைக் காட்டுகிறது. கோலி அசத்தல், ஷமி அற்புதம்! 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா - 14 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய கனவு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்கு தலைவலியாக திகழும் 5 முக்கிய பலவீனங்கள் நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் - இந்தியா வெற்றி பெற இந்த உத்திகள் கைகொடுக்குமா? கோலி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தலைசிறந்த சேஸரா? கோலி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தலைசிறந்த சேஸரா? என்ற கேள்விக்கு எளிமையான பதில் "ஆம்". இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 84 ரன்கள் குவித்தார் கோலி. சர்வதேச போட்டிகளில் சேஸிங்கில் அவரது சராசரி 64.50. இது இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க பேட்டர் ஏ.பி. டி வில்லியர்ஸைக் காட்டிலும் 8 ரன்கள் அதிகம். ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள 51 சதங்களில் 28 சதங்கள் சேஸிங்கின் போது வந்தவை. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரை விட கோலி 11 சதங்கள் அதிகம் அடித்துள்ளார். இந்தியா சேஸிங்கில் வெற்றியடைந்த போட்டிகளில் விராட் கோலியின் சராசரி 89.50 என மிகப்பெரியதாக உள்ளது. அவர் மீண்டும் மீண்டும் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தருகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோலி அடித்த 51 சதங்களில் 28 சேஸிங்கில் அடித்தவை கோலி சொல்லும் சேஸிங் ரகசியம் என்ன? போட்டியின் அழுத்தத்தை தனது தோள்களில் சுமந்தவாறே ரன்களை சேர்க்கும் அசாத்தியத் திறமை கோலியிடம் உள்ளது. "இந்த போட்டி முழுமையாக அழுத்தத்தை தாங்குவதைப் பொருத்தது, குறிப்பாக அரையிறுதி, இறுதி போன்ற பெரிய போட்டிகளின் போது நிலைத்து நின்று நீண்ட இன்னிங்சை ஆடுகையில், அணியின் கைவசம் விக்கெட்டுகள் இருக்கும் பட்சத்தில், எதிரணியினர் தாமாகவே விட்டுக்கொடுத்து விடுவார்கள். போட்டியை வெல்வதும் எளிதாகிவிடும்" செவ்வாய்க்கிழமை நடந்த போட்டிக்குப் பின்னர் விராட் கோலி இவ்வாறு கூறினார். கோலியின் சிறந்த திறன் என்பது ஒன்றிரண்டு ரன்களாகச் சேர்ப்பது. ஒரு நாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை ஒன்றிரண்டாக எடுத்துள்ளார் கோலி. இவர் எப்போதுமே இடைவெளியை கவனித்து பேட்டிங்கை ரொட்டேட் செய்வதன் மூலம், பேட்டர்கள் மீது அழுத்தம் தருவதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்குவதில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோலியின் சிறந்த திறன் என்பது சிங்கிள் ரொட்டேட் செய்வது "விளையாட்டின் போது உங்களைத் தூண்டும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்" என்கிறார் விராட் கோலி. "என்னைப் பொருத்தவரையிலும் எத்தனை ஓவர்கள் எஞ்சியிருக்கின்றன, எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்பதை அறிவது தூண்டுவதாக இருக்கும்" "தேவைப்படும் ரன்ரேட் ஓவருக்கு 6 ரன்னாக இருந்தால் கூட, கையில் 6 அல்லது 7 விக்கெட்டுகள் இருந்தால் நான் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் உங்களுக்குத் தெரியும். களத்தில் நிலைத்து ஆடும் 2 பேட்டர்கள் போட்டியின் போக்கையே மாற்றி விடுவார்கள். கடைசி கட்டத்தில் எதிரணி விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து திருப்திப்பட்டுக் கொள்ளலாம். போட்டியை வெல்ல முடியாது." என்றார் கோலி. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் , கோலியை ஆட்டமிழக்கச் செய்ய ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பந்தை வீசி வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் புதிய பந்தில் இது இல்லை, ஆஃப் ஸ்டம்ப்-க்கு வெளியே செல்லும் பந்துகளில் கோலியின் சராசரி 50க்கும் மேலாக இருக்கிறது. அவரை ஒரு திட்டமிடலோடு சீக்கிரமாக வீழ்த்தாவிட்டால், எதிரணிக்கு சிக்கல்தான். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தேவைப்படும் ரன்ரேட் ஓவருக்கு 6 ஆக இருந்தால் கூட, கைவசம் விக்கெட் இருந்தால் கவலை இல்லை 'இது அடிமேல் அடி வைத்து முன்னேறுவது' ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன்றிரண்டு ரன்களாக ரொட்டேட் செய்வதில் கோலி சிறந்தவராக இருக்கிறார். தான் எதிர்கொண்டதில் 33% பந்துகளை மட்டுமே அவர் ரன் எடுக்காமல் விட்டுள்ளார். இதே மைதானத்தில் 250 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணியின், பேட்டர் வில்லியம்சனின் டாட் பால் 57.5% ஆகும். பவுண்டரியே அடிக்காமல் ஸ்கோரை உயர்த்தி கொண்டே இருந்திருக்கிறார் கோலி. ஆஸ்திரேலிய அணியில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த ஆடம் ஸம்பா போன்ற லெக் ஸ்பின்னர்களையும் தந்திரமாக எதிர்கொண்டு, ரன்களை கோலி சேர்த்தார். ஆடம் ஸம்பா இதற்கு முன்பு ஒரு நாள் போட்டிகளில் 5 முறை கோலி விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியிலும் 6வது முறையாக கோலி விக்கெட்டை ஸம்பா வீழ்த்தினார். ஆனால், அந்த நேரத்தில் இந்திய அணிக்கு வெற்றி எட்டிவிடும் தூரத்திலேயே இருந்தது. பட மூலாதாரம்,Getty Images "சதம் பற்றி கவலை இல்லை" முடிவில் ஒரே ஆச்சரியம் என்னவென்றால் அவர் மூன்றிலக்க ரன்களை எட்டவில்லை என்பது தான். "நீங்கள் தனிப்பட்ட இலக்குகளை பற்றி யோசிக்காவிட்டால், வெற்றி நிகழும் போது அதுவும் தாமாகவே நடக்கும்" என சதத்தை தவற விட்டது குறித்து கோலி பேசுகிறார். "என்னைப் பொருத்தவரை, வெற்றியில் பெருமை கொள்வது மற்றும் அணிக்கு சிறந்தது எதுவோ அதை செய்வது தான் முக்கியம். மூன்றிலக்க ரன்களை எட்டினால் சிறப்பு. இதுபோன்ற போட்டிகளில் சதத்தை எட்டும் முன் அவுட்டானாலும், அணிக்கு கிடைக்கும் வெற்றி, வீரர்களுடன் டிரெஸ்ஸிங் அறையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்" என்கிறார் கோலி. "அதுபோன்ற விஷயங்கள் (சதம் அடிப்பது) இனி பெரிதல்ல. ஒரு படி மேலே சென்று அணிக்கான வேலையைச் செய்வது தான் முக்கியம்" என்கிறார் கோலி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly6mdl1g1mo
  22. Published By: Rajeeban 05 Mar, 2025 | 03:22 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் குறித்து இலங்கையில் உள்ள இணைஅனுசரணை நாடுகளின் தூதரகங்களிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது. அந்த கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது 2021 ஜனவரி 15ம்திகதியும் பெப்ரவரி 24ம் திகதியும் செப்டம்பர் 8 ம் திகதியும் 2022 பெப்ரவரி 25ம் திகதியும் கூட்டாக வெளியிட்ட கடிதங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே, தீர்மானத்தின் நகல்வடிவம் வெளியாவதற்கு முன்னரே நாங்கள் முன்னைய தீர்மானங்கள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளோம் அவை பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை,குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் என தெரிவித்திருந்தோம். இந்த விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்கள் பிரச்சினைக்குரியவையாக காணப்படுகின்றன,இவை அரசியல் சூழமைவை சரியாக இனம்காணதவறிவிட்டன,என தெரிவித்த நாங்கள் பின்வரும் விடயங்களை குறிப்பிட்டிருந்தோம். அனைத்து முன்னைய தீர்மானங்களும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை தேக்கமடையச்செய்கின்றன.மேலும் இவை இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குகின்றன. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இரண்டு உறுப்பினர்களை கொண்டுள்ள இணை அணுசரனை நாடுகள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் ஆதாரங்களை சேகரிப்பதற்கான சுயாதீனஅமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இலங்கையில் தொடரும் வன்முறைகளை கண்காணித்துஅறிக்கையிடுவதற்காக விசேட அறிக்கையாளரை நியமிக்கும் வகையிலும்,வடக்குகிழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகங்களை ஏற்படுத்தும் விதத்திலும் தீர்மானங்களில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம். பாதுகாப்பு அபிவிருத்தி தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவத்தையும் அரசதிணைக்களங்களையும் பயன்படுத்துவதையும் முன்னைய தீர்மானங்கள் கருத்தில் கொள்ள தவறிவிட்டன என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகம் ஆகியவை குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் காணப்படுவது குறித்த எங்கள் கரிசனையை வெளியிட்டிருந்தோம். இரு அலுவலகங்களும் அவை உருவாக்கப்பட்ட நோக்கம் அவற்றின் கட்டமைப்பு ஆகியவற்றில் தவறுகளை கொண்டவையாக காணப்படுகின்றன. இதேவேளை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான ஆரம்புள்ளியாக கூட 13வது திருத்தத்தை நாங்கள் ஏற்க தயாரில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். இலங்கை குறித்த முதலாவது தீர்மானம் 2012 இல் நிறைவேற்றப்பட்டு பல வருடங்களாகிவிட்டது. எங்களின் எச்சரிக்கைகள் ஒவ்வொன்று சரியானவை என்பது நிரூபணமாகியுள்ளது. அரசியல் கைதிகளை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் சட்டம் நீதியானது இல்லை அதனை நீக்கவேண்டும் என நீதியமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர்கள் தெரிவித்துள்ள போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர். இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னைய தீர்மானங்களை, இலங்கை விவகாரத்தில் தலையிடுபவை, அரசியல் நோக்கம் கொண்டவை என நிராகரித்துள்ளதுடன் உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ஆகக்குறைந்தது 2024 ஆகஸ்ட் முதல் யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமைக்காகவோ அல்லது மனித உரிமை மீறல்களிற்காகவோ எவரும்தண்டிக்கப்படமாட்டார்கள் என சிங்கள மக்களிற்கு மீண்டும்மீண்டும் உறுதியளித்துள்ளார். உருவாக்கப்படும் எந்த பொறிமுறையும் உண்மையை கண்டறிவதை நோக்கமாக கொண்டிருக்கும் பொறுப்புக்கூறலை நோக்கமாக கொண்டிராது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலைகளில் இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை போல குற்றவாளிகளிற்கு எதிராக சுயவிருப்புடன்நடவடிக்கைகளை எடுக்காது என்பது மிகவும் தெளிவாக தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்பதையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வலியுறுத்திவருகின்றனர். மீளநிகழாமைக்கு இது மிகவும் அவசியம். கடும் கவலையை ஏற்படுத்தும் பின்னணியில் நீங்கள் எங்களின் இந்த கடிதத்திலும்முன்னைய கடிதத்திலும் வலியுறுத்தப்பட்ட விடயங்களை கருத்தில் எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம். பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி என்ற அடிப்படையில் கடந்தகால தீர்மானங்களை பின்பற்றி கொண்டுவரப்படும் எந்த தீர்மானத்தினாலும் நாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் ஆதரவை பெறமுடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் நாங்கள் இந்த விடயத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அடிப்படையாக கொண்ட, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம். https://www.virakesari.lk/article/208355
  23. 04 Mar, 2025 | 08:48 PM (எம்.மனோசித்ரா) இராணுவம் உள்ளிட்ட முப்படை ஆட்சேர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எனவே இவை தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்துவதாக எவரும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவம் தொழிற்துறை நிபுணத்துவம் மிக்கதாக மாற்றப்படும். இராணுவமானது அரசுக்கு சார்பானதாக காணப்பட வேண்டுமே தவிர, ஜனாதிபதிக்கோ பாதுகாப்பு செயலாளருக்கோ பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கோ சார்பாக செயற்படக் கூடாது, தேசிய பாதுகாப்பே முப்படைகளின் பணியாகும். அதற்கான தொழிற்துறையைப் பாதுகாக்க வேண்டும். இராணுவத்துக்குரிய பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர் தொழிற்பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்பது முன்னரே கலந்துரையாடப்பட்ட விடயமாகும். சிவில் யுத்தம் நிலவிய போது இராணுவத்துக்கான ஆட்சேர்ப்புக்கான எண்ணிக்கை தற்போதைய நிலைவரத்தின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும். அதற்கமைய 5 ஆண்டுகளுக்கான திட்டமிடல்களையே ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அதற்கமைய தொழிநுட்ப ரீதியான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, மறுபுறம் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான கரிசணையும் இதில் உள்ளடங்கும். எனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் எவரும் கலவரமடையத் தேவையில்லை. ஏதேனுமொரு பிரதேசத்தில் இராணுவ முகாம் நீக்கப்படும் போது, அல்லது பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்படும் போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதற்கென குழுவொன்று உள்ளது. விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே நாம் இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றோம் என்பதை அவ்வாறானவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/208280
  24. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 5 மார்ச் 2025, 02:22 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (05/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பேட்டரி தயாரிக்க பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் படிமங்களாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. அந்த செய்தியில், "இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாடு முழுவதும் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தார். "அந்த ஆய்வின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நிலத்துக்கு அடியில் சுண்ணாம்புக் கற்கள் அதிகம் உள்ளன. திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அது பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, பேட்டரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டது. அது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்" என்று அவர் பேசினார். மேலும், பூமிக்கு அடியில் நில அதிர்வுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும் என்றும் அவை உணரப்படும் அளவுக்கு இல்லாதவரை பாதிப்பில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். "வங்கக் கடலையொட்டிய தமிழக நிலப்பரப்பு, குறிப்பாக சென்னை மண்டலத்தின் கீழ்ப்பகுதியில் பூமிக்கு அடியில் கருங்கல் பாறைகள் உள்ளதால் சென்னைக்கு நிலநடுக்கம், பூகம்ப பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. எனினும் கடலோரப் பகுதிகளில் உயர்ந்த கட்டடங்களை கட்டாமல் இருப்பது நல்லது" என்றும் அவர் பேசினார்" என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொலை - எல்லையில் என்ன நடந்தது? அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன? தமிழ்நாட்டில் ஃபிளாட், வில்லா வாங்குவோர் கவனிக்க வேண்டிய 11 முக்கிய விஷயங்கள் தொகுதி மறுசீரமைப்பு: தென்னிந்திய மாநிலங்கள் எந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும்? எந்த சாதியினரும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் பட மூலாதாரம்,Getty Images கோயில்களை நிர்வகிக்க எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள ஒரு கோயிலின் நிர்வாகம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இதை கூறியுள்ளது என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. அந்த செய்தியில், "நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் மற்றும் பொன் காளியம்மன் கோவில்களில் இருந்து, பொன் காளியம்மன் கோவிலை தனியாக பிரிக்க வேண்டும் என்று கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான அந்த மனுவில், பொன் காளியம்மன் கோவில் தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கிறார்கள் என்றும், மற்ற கோவில்கள் வேறு சாதியினர் நிர்வகிக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாதியை நிலைநிறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்று கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் கோவிலை நிர்வகிக்கலாம், வழிபடலாம். எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது. கோவிலை சாதி அடிப்படையில் நிர்வகிப்பது என்பது மத நடைமுறையும் அல்ல. பெரும்பாலான பொதுக்கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. சாதிப்பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மதப்பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்2 மார்ச் 2025 ஒரு லட்சம் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப்ஸ் - கைவிடப்படுவதை தடுக்க சென்னை மாநகராட்சி முடிவு பட மூலாதாரம்,Getty Images சென்னையில் வளர்ப்பு நாய்கள் கைவிடப்பட்டு, தெருநாய்களாக மாறுவதைத் தடுப்பதற்காக ஒரு லட்சம் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப்ஸ்களைப் பொருத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்,"வளர்ப்பு நாய்களுக்கு பொருத்தப்படும் மைக்ரோசிப்ஸ்களில் உரிமையாளர்களின் பெயர், முகவரி, நாயின் இனம் மற்றும் தடுப்பூசி விவரங்கள் இடம் பெற்றிருக்கும். வீடுகளின் அளவை கணக்கில் கொண்டு , அங்கு வளர்க்க அனுமதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான செயலி தயாராகி வரும் நிலையில், நாய்களுக்கு மைக்ரோ சிப்ஸ் பொருத்தும் பணி , தரவு தளம் உள்ளிட்டவை தயாரானதும், நாய்களின் உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு தடுப்பூசி தேதி உள்ளிட்டவை நினைவூட்டப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாய்களுக்கான உரிமத் தொகையாக 50 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், மைக்ரோசிப்ஸ் பொருத்த எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்? என்பது மென்பொருள் தயாரானதும் முடிவு செய்யப்படும் எனவும், இந்த மைக்ரோசிப்ஸ் கட்டாயமாக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாக தி இந்து செய்தி கூறுகிறது. மேலும்," மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை 1.8 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், உரிமையாளர்கள் தங்கள் நாய்களை கைவிடுவது, முறைப்படுத்தப்படாத இனப்பெருக்கம் இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சென்னையில் கருத்தடை செய்யப்படாத தெருநாய்கள் 71 சதவிகிதமாக உள்ளது. மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டிலும் 15,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்கிறது." என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் கால்நடை நலத்துறை மூலமாக நடத்தப்படும் 5 மருத்துவமனைகளிலும் மைக்ரோசிப்ஸ் பொருத்தும் பணி நடைபெறும் எனவும், இது தவிர 60 தனியார் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் 150 பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலமாகவும் மைக்ரோசிப்ஸ்கள் பொருத்தும் பணி நடைபெறும் என தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?3 மார்ச் 2025 பிளாஸ்டிக் தாளில் இட்லியை வேக வைத்தால் என்ன ஆபத்து?மருத்துவர்கள் தகவல்3 மார்ச் 2025 இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த யாழ்ப்பாணம் எம்.பி. பட மூலாதாரம்,தி இந்து தமிழ்திசை இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை யாழ்ப்பாணம் எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்ததாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டு கைதிகளாக உள்ளனர்." என்ற புள்ளி விவரங்கள் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், "இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப். 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்ட மீனவர்களும் இலங்கையில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சந்திப்பு குறித்து யாழ்ப்பாணம் எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தங்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மீண்டும் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க வரமாட்டோம் என்று கூறினா். ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில் ஒருமுறை மட்டும் தான் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாட அனுமதி வழங்கப்பட்டதாத தெரிவித்தனர். மீண்டும் குடும்பத்தினருடன் பேசுவதற்கு அனுமதி பெற்று தருமாறு கேட்டுக் கொண்டனர்," என்று அவர் கூறினார்." என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி?4 மார்ச் 2025 பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு குறைப்பு தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தாது – இலங்கை அரசு பட மூலாதாரம்,வீரகேசரி படக்குறிப்பு,இலங்கை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறைப்பு தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்துவதாக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதாக இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், " ராணுவம் உள்ளிட்ட முப்படை ஆட்சேர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எனவே இவை தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்துவதாக எவரும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ராணுவம் தொழிற்துறை நிபுணத்துவம் மிக்கதாக மாற்றப்படும். ராணுவமானது அரசுக்கு சார்பானதாக காணப்பட வேண்டுமே தவிர, ஜனாதிபதிக்கோ பாதுகாப்பு செயலாளருக்கோ பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கோ சார்பாக செயற்படக் கூடாது, தேசிய பாதுகாப்பே முப்படைகளின் பணியாகும். சிவில் யுத்தம் நிலவிய போது ராணுவத்துக்கான ஆட்சேர்ப்புக்கான எண்ணிக்கை தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும். அதற்கமைய 5 ஆண்டுகளுக்கான திட்டமிடல்களையே ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அதற்கமைய தொழிநுட்ப ரீதியான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, மறுபுறம் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான கரிசணையும் இதில் உள்ளடங்கும். எனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் எவரும் கலவரமடையத் தேவையில்லை." என்று பேசினார் என குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj0qmngl591o
  25. யாழ். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தம் Published By: Digital Desk 3 05 Mar, 2025 | 11:26 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது. வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு தீர்வு எட்டப்படாவிடில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை நடத்தவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தனர். இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துடன் யாழ். போதனா வைத்தியசாலைக் கிளைச் சங்கம் கலந்துரையாடிய பின்னர், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போராட்டத்தை தொடர்ந்தது. இதன்போது அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் வைத்தியர்களால் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நேற்றைய தினம் மாலை முதல் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது. விபத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர் மற்றும் தாதி உத்தியோகத்தர் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வைத்தியர்களால் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. பணிப்பகிஷ்கரிப்பு காலத்தில் ரத்து செய்யப்பட்டவர்களுக்கான சத்திர சிகிச்சைகள் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/208326

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.