Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 28 FEB, 2025 | 03:21 PM மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும் என்றும், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (27) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைகள் மற்றும் டிஜிட்டல் மூலோபாயங்கள், அவற்றின் வினைத்திறனான மற்றும் சூழல்நேய பயன்பாடு மற்றும் இந்த வலுசக்தி முறைகளின் ஊடாக நாட்டின் பொருளாதார ஆற்றலை எவ்வாறு உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, "மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முகாமைத்துவம் குறித்த செயல் திட்டத்தை வெளியிடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நேரத்தில், இந்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக மாத்திரம் நாங்கள் ஒன்றுசேரவில்லை. எதிர்காலத்தில், நம் நாட்டில் சக்திவள மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபேறான வலு அதிகார சபை ஆகியவை இலங்கையை நிலையான வலுசக்தி பாவனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னின்று பங்களித்தன. "வலுசக்தி அமைச்சு இந்த "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" என்ற ஐந்தாண்டுகளுக்கான செயல் திட்டத்தை முன்வைத்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் வலுசக்தியின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அந்த வலுசக்தியை அடையாளம் காணவும், வலுசக்தி பாதுகாப்பு மற்றும் சேமிப்பு முறைகள் பற்றிய விரிவான புரிதலை வழங்கவும் வழி ஏற்படும். மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும். எமது வலுசக்தி தொடர்பான சட்டங்கள் மூன்று முக்கிய வழிகளில் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது, சூரிய சக்தி, காற்றாலை சக்தி மற்றும் நீர் போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளத்தைப் பயன்படுத்தி, குறைந்த அளவு கார்பன் சூழலுக்கு வெளியேற்றும் வகையில் மலிவு விலையிலும் நம்பகத்தன்மையுடனும் வகையில் வலுசக்தியை வழங்க வேண்டும். இரண்டாவதாக, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, டிஜிட்டல் மூலோபாயங்கள் போன்ற திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் நவீன முறைகளின் கீழ் எவ்வாறு நம்பகத்தன்மையுடன் வலுசக்தி வடிவங்களைப் பெறுவது என்பது பற்றி மக்களுக்குதெ ளிவூட்டுதல். மூன்றாவது வலுசக்தி துறையில் மாற்றத்திற்கான நவீன முறைகளை அறிமுகப்படுத்துதல். இன்று உலகில் பல முன்னேற்றமான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன, நவீன உலகத்துடன் வலுவான போட்டித்தன்மையுடன் வலுசக்தி துறையை உருவாக்க அவற்றை நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். இது வெறுமனே ஒரு திட்டம் மட்டுமல்ல, 5 ஆண்டுகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி. வலுசக்திகளை அடையாளம் காணுதல், அவற்றை அபிவிருத்திசெய்தல், மக்களுக்கு அறிமுகம்செய்தல், அதற்காக செலவிடப்படும் காலம், ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் தேவையான சட்டங்கள் போன்ற பல விடயங்கள் இதில் உள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை வெற்றியடையச்செய்ய வேண்டும். மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைமைகளைப் பயன்படுத்தி அனைத்து இலங்கையர்களின் வலுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்." இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன, ஜனித் ருவன் கொடித்துவக்கு வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/207898
  2. உத்தர பிரதேசத்தில் 2 வயது பெண் புலியை அடித்தே கொன்ற கிராம மக்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உத்தர பிரதேசத்தின் தூத்வா புலிகள் காப்பகத்தில் இரண்டு வயது பெண் புலி ஒன்று கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சையத் மோசிஸ் இமாம் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்வா புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்றை கிராம மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். அந்தப் பெண் புலி தாக்கியதால் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அதே புலிகள் காப்பகத்தில் உள்ள மலனி என்ற பகுதியில் மற்றொரு புலி இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தூத்வா புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான டி. ரங்கராஜு இந்த இரண்டு விவகாரம் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா? 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி? வயநாடு கடையடைப்பு: காட்டுயானை தாக்குதலால் தொடரும் மரணங்கள் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல் ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி? புலிகளைக் கொன்ற கிராம மக்கள் பிப்ரவரி 26ஆம் தேதியன்று தூத்வா புலிகள் காப்பகத்தின் எல்லையோரப் பகுதியில் ஒன்று திரண்ட புல்வாரியா கிராம மக்கள் பெண் புலி ஒன்றை அடித்துக் கொன்றனர். "இந்தப் புலிக்கு இரண்டு வயதுதான் ஆகிறது. தாய்ப் புலியிடம் இருந்து பிரிந்து சமீபத்தில்தான் அதற்கான எல்லையை வரையறுக்கத் தொடங்கியிருந்தது. அதற்குள்ளாக, கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தப் புலி தாக்கியுள்ளது. அது இரண்டு வயதே நிரம்பிய வளரிளம் பருவத்தைச் சேர்ந்த புலி என்பதால் அளவில் சிறிதாக இருந்தது. ஆகவே, மக்கள் அதை எளிதாகச் சுற்றி வளைத்துள்ளனர்," என்று ரங்கராஜு தெரிவிக்கிறார். இருப்பினும் இந்தச் சம்பவம் அதிகாலையில் நடைபெற்றுள்ளது. எனவே இதில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காட்டுயிர் சட்டத்தின் கீழ் இதில் தொடர்புடைய சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மலனியில் மற்றொரு புலி, வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளது. அந்த வாகனத்தை ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளர். இறந்த இரண்டு புலிகளுக்கும் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. தாலிபன் அரசு காபூல் மக்களைக் கண்காணிக்க அவர்களிடமே பணம் கேட்டு நிர்பந்திக்கிறதா? உண்மை என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர் குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?8 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இரண்டு வயதே நிரம்பிய வளரிளம் பருவத்தைச் சேர்ந்த புலி என்பதால், கிராம மக்கள் அதை எளிதில் சூழ்ந்துவிட்டதாகக் கூறுகிறார் தூத்வா புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் டி.ரங்கராஜு தூத்வா பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்கள் உள்ளன. அதிகரித்து வரும் புலிகள் எண்ணிக்கை காரணமாக, மனிதர்கள் - புலிகள் எதிர்கொள்ளல் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இது எதிர்மறையான பின்விளைவை ஏற்படுத்துகிறது. ரங்கராஜு இதுகுறித்துப் பேசும்போது, "தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் புலிகள் அவற்றின் குட்டிகளோடு வலம் வருகின்றன," என்று கூறினார். இந்தப் புதிய புலிகள் காட்டின் எல்லைப் பகுதிகளில் நடமாடுகின்றன. சில நேரங்களில் அவை மனிதர்களை எதிர்கொள்ளும்போது தாக்கக்கூடிய சூழலும் ஏற்படுகிறது. ஆனால் மிகவும் அரிதாகவே நடக்கிறது," என்று கூறினார். காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் காட்டுயிர் ஆய்வுகளுக்கான மையத்தின் (Centre for Wildlife Studies) தரவுகள்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 80 ஆயிரம் காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் பதிவாகின்றன. இந்தியாவில், காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் பிரச்னைகளில் அதிகமாகப் பேசப்படுபவை, புலிகள், யானைகள் மற்றும் சிறுத்தைகள். தற்போது 3,500க்கும் அதிகமான புலிகள் உள்ளன. அதோடு, 30,000 யானைகள் மற்றும் 13,874 சிறுத்தைகள் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசின் தரவுகள்படி, 349 பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகள் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் காட்டுயிர் நிபுணரான முனைவர் யத்வேந்திரா சிங் ஜாலா இதுகுறித்துப் பேசும்போது, "காட்டுயிர் மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்துள்ளன. பல உயிரினங்கள் முன்பு அழியும் நிலையை எதிர்கொண்ட பகுதிகளிலேயே இப்போது எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன," என்று கூறுகிறார். ஒவ்வோர் ஆண்டும், 35க்கும் மேற்பட்டோர் புலிகள் தாக்கி உயிரிழக்கின்றனர். சிறுத்தைகள் தாக்குவதால் 150 பேரும், காட்டுப் பன்றி தாக்குவதால் 150 பேரும் உயிரிழக்கின்றனர். பாம்புக் கடியால் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். மற்றொரு புறம், ஒவ்வோர் ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். டிரம்பின் 'கோல்டு கார்டு' விசா என்றால் என்ன? - கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா?5 மணி நேரங்களுக்கு முன்னர் சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 80 ஆயிரம் காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் பதிவாகின்றன "இது இறப்புகளின் எண்ணிக்கையைப் பற்றியதல்ல. 200 ஆண்டுகளுக்கு முன்பு மனித இறப்புக்கான காரணங்களில் காட்டுயிர்கள் தாக்குவதும் கணிசமான பங்கைக் கொண்டிருந்தன. இன்று, அரிதாக ஆங்காங்கே நடக்கின்றன. அதனால்தான் இத்தகைய செய்திகள் உடனே செய்தியாக்கப்படுகின்றன. உண்மையில் புலிகள் காப்பகத்தில் புலிகள் தாக்கி இறப்பதைக் காட்டிலும் நீங்கள் வாகன விபத்தில் சிக்கி இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது," என்று முனைவர் ஜாலா தெரிவித்தார். இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தற்போது 3,682 புலிகள் உள்ளன. 2018ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 2,967 ஆக இருந்தது. 2014ஆம் ஆண்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2,226. ஆண்டுக்கு 6% என்ற அளவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. புலிகள் 1,38,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழ்ந்து வருகின்றன. அதே பகுதியில் ஆறு கோடி மக்களும் வசித்து வருகின்றனர். பட மூலாதாரம்,RANGARAJAN T DEPUTY DIRECTOR DUDHWA TIGER RESERVE படக்குறிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தற்போது 3,682 புலிகள் உள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து புலிகள் வாழும் 20 மாநிலங்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின்போது, புலிகளின் வாழ்விடங்களில் அவற்றுக்குத் தேவையான இரை உயிரினங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன, புலிகளுக்கு வாழ்விடப் போட்டியை விளைவிக்கும் வேறு உயிரினங்கள், வாழ்விடத்தின் தரம் ஆகியவையும் மதிப்பிடப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgzzpz2zrmo
  3. Published By: DIGITAL DESK 3 28 FEB, 2025 | 09:29 AM 1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3% - 4% ஆக அதிகரிக்க முடியுமெனவும், பொருளாதாரத்தை கிராமத்தை நோக்கி நகர்த்தும் போது தற்போது உள்ள பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்தவும், புதிய வாய்ப்புக்களை அறிந்துகொள்வதற்குமான அவசியத்தையும் ஜனாதிபதி தௌிவுபடுத்தினார். மேலும் அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் கிடையாது எனவும், அதற்கு வினைத்திறன் இன்மையே காரணமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, திருப்திகரமான அரச சேவையை உருவாக்கி அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 2025 வரவு செலவுத் திட்ட பரிந்துரைகளில் முன்வைக்கப்பட்டுள்ள சம்பள மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டது. தற்போதும் அரச சேவையில் 30,000 வெற்றிடங்கள் அறியப்பட்டிருப்பதால், அதற்காக ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும், அதனால் அரச சேவையின் நடுத்தர பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் முழுமையடையும் என்றும் கூறினார். அபிவிருத்தி என்பது கட்டிடங்கள், பாலங்களை கட்டுவது மாத்திரமல்ல என்றும்,வீழ்ச்சியடைந்திருக்கும் சமூகக் கட்டமைப்பை உயர்த்தி வைக்க வேண்டியது அவசியம் என்றும், அதில் முதன்மைப் பணி மாவட்ட செயலாளர்களை சார்ந்திருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மேலும், இதன்போது மாவட்டங்களுக்கு அமைவான பிரச்சினைகள் குறித்து அரசாங்க அதிபர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அரச நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அரச நிருவாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார மற்றும் மாவட்டச் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/207880
  4. Published By: VISHNU 28 FEB, 2025 | 01:46 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பார்கள். ஆணைக்குழு அமைக்கப்பட்டது ஒரு செய்தியாக குறிப்பிடப்படும். ஆனால் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஏதும் வெளிவராது. 2016 ஆம் ஆண்டு முதல் பிரதானமாக 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக 662.34 இலட்சம் ரூபா செலவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இறுதியில் இந்த குழுவின் அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கும் 144.56 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை கிடைக்கவில்லை.அதுவும் காணாமலாக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவுக்கு 1063 இலட்சம் ரூபாய், ஊழல் எதிர்ப்பு காரியாலயத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு 350 இலட்சடம் ரூபாய், அரசியல் பழிவாங்களுக்கல் தொடர்பான விசாரணை குழுவுக்கு 842 இலட்சம் ரூபாய், சுங்கத் திணைக்களம் மீதான குற்றச்சாட்டை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவுக்கு 318 இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் செலவிடப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக மொத்தமாக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுக்கள் முறையாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை . ஆனால் 2022 மே 09 சம்பவம் தொடர்பில் மாத்திரம் துரிதரமாக விசாரணை செய்து, துரிதமாக அறிக்கை சமர்ப்பித்து நட்டஈடும் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களை காட்டிலும் இயலுமான வகையில் அரச செலவுகளை குறைத்து கொண்டுள்ளோம். செலவு குறைப்புக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் விடயதானத்தில் இருந்து முன்னெடுத்து நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/207875
  5. Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 07:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பூகோள பயங்கரவாதம் மற்றும் பூகோள நவீன சவால்கள் ஆகியவற்றை எதிர்க்கொள்ளும் வகையில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாகவே பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புதிய சட்டம் இயற்றப்படும். அடுத்த தேர்தல் வரை இது இழுபறியில் இருக்காது வெகுவிரைவில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விடயதானத்துக்கு பொறுப்பற்ற வகையில் பேசுகிறார்கள். விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.இருப்பினும் ஒருசிலர் பொறுப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் மறக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று அன்றும் குறிப்பிட்டோம்.இன்றும் குறிப்பிடுகிறோம். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக நீதியரசர் (ஓய்வுநிலை) ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்துச் செல்லப்படமாட்டாது. பூகோள பயங்கரவாதம் மற்றும் பூகோள நவீன சவால்கள் ஆகியவற்றை எதிர்க்கொள்ளும் வகையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சட்டம் விரைவில் இயற்றப்படும். உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாகவே புதிய சட்டம் இயற்றப்படும். ஆகவே இச்சட்டம் இயற்றப்பட்டவுடன் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். ஆகவே இவ்விடயத்தில் எவரும் அச்சம் கொள்ள வேண்டாம். பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் இடையில் முரண்பாடு, சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு என்று எதிர்க்கட்சிகள் இன்றும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் கடும் போட்டி நிலவுவதாக குறிப்பிட்டார்கள். ஆனால் அது இன்றுவரை பொய்யாக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/207842
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேஸ்மின் ஃபாக்ஸ்- ஸ்கெல்லி பதவி,‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு ஒரு முறை கழிக்கப்படும் டைப் 3 அல்லது டைப் 4 என வகைப்படுத்தப்படும் சாஸேஜ் வடிவிலான மலமே சிறந்தது எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழிக்கும் மனிதரா, அல்லது கழிவறை செல்வதே அபூர்வமான ஒன்றா? இப்படியாக, ஒவ்வொருவரின் மலம் கழிக்கும் இடைவெளியும் எண்ணிக்கையும் வேறுபடும். அவை உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உணர்த்துவது என்ன? மலத்தின் பின்னால் உள்ள அறிவியலை இங்கு தெரிந்துகொள்வோம். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஏன் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்? இந்தியாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும் 'செகண்ட் இயர் சிண்ட்ரோம்' பற்றி தெரியுமா? குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன? ஒரு நாளைக்கு எத்தனை முறை மலம் கழிப்பது சரி? ஒருவர் எத்தனை முறை மலம் கழிக்கிறார் என்பது நபருக்கு நபர் மாறுபடும். நாம் உணவு உண்ணும்போதெல்லாம், பெருங்குடல் சுருங்கி உணவைச் செரிமானப் பாதையில் தள்ளுகிறது. இந்தத் தன்னிச்சையான "கேஸ்ட்ரோ-கோலிக் ரிப்லெக்ஸ்" எனும் விளைவால் மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தூண்டும் ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் இந்த உந்துதலைக் கட்டுப்படுத்த கற்றுள்ளோம். அதனால் ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது என்பது புதிய நடைமுறையாகிவிட்டிருக்கிறது. "நாம் மலம் கழிக்கக்கூட நேரமின்றி இருக்கிறோம்," என்கிறார் ஆஸ்திரேலியாவின் கேன்பெரா மருத்துவமனையில் இரையகக் குடலியலாளரும் (gastroenterologist), பொது மருத்துவருமான மார்டின் வேய்சே. பொதுவாக ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது நல்ல குடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மலம் கழித்தலைப் பொறுத்தவரை சரியானது எது என்பது கடந்த காலங்களில் தெரியாமல் இருந்தது. ஆனால் முன்னர் செய்யப்பட்ட ஓர் ஆய்வு, ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பது முதல் ஒரு நாளைக்கு 24 முறை மலம் கழிப்பது வரை இயல்பானது எனக் கருதலாம் என்றுகூடத் தெரிவித்திருந்தது. பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC ஆனால், பிரிட்டன் பிரிஸ்டல் ராயல் இன்பர்மரி மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் கென் ஹீட்டன் போன்ற விஞ்ஞானிகளின் முன்னோடி ஆய்வுகள் காரணமாக இப்போது நமக்கு அதன் உண்மைத்தன்மை தெரியும். 1980களின் பிற்பகுதியில் கீட்டனும் அவரது சகாக்களும் கிழக்கு பிரிஸ்டல் மக்களிடம் ஒரு நாளைக்கு எத்தனை முறை மலம் கழிக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பினர். ஆய்வு முடிவுகள் மலம் கழித்தலில் பல வகைகள் இருப்பதைக் காட்டின. ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது பொதுவான பழக்கமாக இருந்தாலும் ஆண்களில் 40 சதவீதம் பேரும், பெண்களில் 33 சதவீதம் பேரும் மட்டுமே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். சிலர் வாரத்திற்கு ஒருமுறைக்கும் குறைவாகவே மலம் கழித்தனர், வேறு சிலர் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழித்தனர். மொத்தத்தில் இயல்பான குடல் செயல்பாடு, மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களிடமே இருந்தது என்றும் மனித இயங்கியலில் இளம் பெண்கள் பாதகமான சூழலை எதிர்கொள்கின்றனர் என்றும் இந்த ஆய்வு முடிவு செய்தது. மலம் தொடர்பான அறிவியலுக்கு ஹீட்டனின் பங்களிப்பு இது ஒன்று மட்டுமல்ல. அதன் பின்னர், 'தி பிரிஸ்டல் ஸ்டூல் ஃபார்ம் ஸ்கேல்' என்ற அளவுகோலை வடிவமைக்கவும் அவர் உதவினார். இந்த அளவுகோலும் அதனுடன் வரும் வரைபடங்களும், செரிமானம் தொடர்பான பிரச்னைகளை அடையாளம் காண மருத்துவர்கள் பயன்படுத்தும் வழிகாட்டியாக அமைந்துள்ளன. இந்த அளவுகோலில், "தனி கடலைகள் போலக் கட்டியாக இருக்கும் மலம்" முதல் "நைந்த ஓரங்களைக் கொண்ட பஞ்சு போன்ற கட்டிகள்" வரை பல வகையான மலங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்27 பிப்ரவரி 2025 கோல்டிலாக்ஸ்/கோல்டிலாப்ஸ் நிலை பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,அடிக்கடி மலம் கழிப்பது குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளர்வதுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு மூன்று முறை முதல் வாரத்திற்கு மூன்று முறை வரை மலம் கழிப்பது இயல்பானதாகக் கருதப்படுவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பு மற்றும் பிற சுகாதார அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் இயல்பானதும், ஆரோக்கியமானதும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் எவ்வளவு முறை மலம் கழிக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கலாம். ஆனால் நாம் எவ்வளவு முறை மலம் கழிக்க வேண்டும் என்ற கேள்விக்கு அது பதிலளிக்கவில்லை. ஒரு மனிதர் மலம் கழிப்பது அவரது ஆரோக்கியத்தின் வலுவான அளவுகோல் என ஆய்வாளர்கள் அதிகமாகக் கண்டறிந்து வருகின்றனர். உதாரணத்திற்கு 2023இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அமெரிக்காவில் 14,573 வயது வந்தவர்களின் மலம் கழிக்கும் பழக்கங்களை ஆராய்ந்தது. இதில் அதிகமான நபர்களிடம், வாரத்தில் ஏழு முறை மலம் கழிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. மலம் "ஒரு சாஸேஜ் அல்லது பாம்பு போல மிருதுவாகவும், மென்மையாகவும்" அதிகம் காணப்பட்டது. அதன் பின்னர் மலம் கழிக்கும் இடைவெளிக்கும், இறப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய, ஆய்வில் பங்கேற்றவர்களை ஆய்வாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குக் கண்காணித்து வந்தனர். வாரத்தில் ஏழு நாட்கள் இயல்பான மலம் கழித்தவர்களோடு ஒப்பிடுகையில் வாரத்திற்கு நான்கு முறை மென்மையான மலம் கழிப்பவர்கள் 5 ஆண்டுகளுக்குள் உயிரிழப்பதற்கு 1.78 மடங்கு வாய்ப்பு அதிகம் எனக் கண்டறிந்தனர். அதிக இடைவெளியில் மலம் கழிப்பவர்கள் புற்றுநோயால் இறப்பதற்கு 2.42 மடங்கு அதிக வாய்ப்பும், இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழப்பதற்கு 2.27 மடங்கு அதிக வாய்ப்பும் இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்தது. அமெரிக்காவின் சியாட்டலில் இருக்கும் இன்ஸ்டிடியூட் ஃபார் சிஸ்டம்ஸ் பயாலஜியில் நுண்ணுயிரியல் வல்லுநரான சான் கிப்பன்ஸ் முன்புள்ள கேள்வி எவ்வளவு மலம் கழிப்பது சரியான அளவு என்பதுதான். 2024இல் கிப்பன்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் 1400 ஆரோக்கியமான வயது வந்தவர்கள் அவர்களின் மலம் கழிக்கும் வழக்கத்தின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். மலச் சிக்கல் உள்ளவர்கள் (வாரத்திற்கு ஓரிரு முறை மட்டும் மலம் கழிப்பவர்கள்), குறைவான இயல்பு (வாரத்திற்கு மூன்று முதல் ஆறு முறை மலம் கழிப்பவர்கள்), அதிக இயல்பு (ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முறை வரை மலம் கழிப்பவர்கள்) மற்றும் டயாரியா அல்லது பேதி. அதன் பின்னர் மலம் கழிக்கும் இடைவெளிக்கும், குடல் நுண்ணுயிர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டனர். கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது? - 5 அரிய தகவல்கள்26 பிப்ரவரி 2025 சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 இதய நோய்க்கும் மலம் கழிப்பதற்குமான தொடர்பு பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,உங்கள் மலத்தைக் கண்காணிப்பது மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டிய மாற்றங்களைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் கழிப்பறைக்கு அதிகமாகச் செல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முறை மலம் கழிப்பவர்களின் குடலில் அதிக நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதை கிப்பன்ஸ் கண்டுபிடித்தார். மற்றொரு புறம், ஒரு வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பவர்கள் ரத்தத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் அல்சைமர் நோயோடு தொடர்புபடுத்தப்பட்ட நச்சுகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதும் கண்டறியப்பட்டது. "மலம் கழித்தலில் அதிக இயல்பு பிரிவில், குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்கள் எனப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் காற்றில்லா உயிரினங்கள் அதிகரிப்பதைக் கண்டோம்," என்கிறார் கிப்பன்ஸ். இந்தக் குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்களில் ஒன்றான ப்யுடிரேட், உடலில் அழற்சியைக் குறைக்கும் திறன் கொண்டது. இது முக்கியமானது, ஏனென்றால் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு மற்றும் அல்சைமர்ஸ் போன்றவற்றுக்கு நாள்பட்ட அழற்சிதான் தற்போது காரணமாகக் கருதப்படுகிறது." "அதிக அளவு ப்யுடிரேட் இருப்பது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி 'இன்சுலின் ஏற்பு நிலை' அதிகரிக்க உதவுகிறது," என்கிறார் கிப்பன்ஸ். ப்யுடிரேட் குடலில் உள்ள அணுக்களுடன் ஒட்டிக்கொண்டு வயிறு நிறைந்தது போல் உணர வைக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய வைக்கிறது," என்கிறார் அவர். ஒரு நபர் அரிதாக மலம் கழிக்கும்போது, மலம் அவரது குடலில் நீண்ட காலம் தங்கிவிடுவது மலச்சிக்கல் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக நச்சுகள் இருக்க ஒரு காரணம் என்று கிப்பன்ஸ் நம்புகிறார். இதனால் குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் நார்ச்சத்துகள் அனைத்தையும் தின்று அவற்றை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்களாக மாற்றுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES இதில் பிரச்னை என்னவென்றால் நார்ச்சத்து தீர்ந்தவுடன் பாக்டீரியா புரதத்தை உட்கொள்ளத் தொடங்குகின்றன. இது தீங்கு விளைவிக்கும் நச்சுகளை ரத்தத்தில் கலக்கிறது. இந்த நச்சுகள் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியவை. உதாரணமாக பெனிலசிடைல்குளுடாமைன் எனப்படும் நச்சு, இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஓர் அபாயகரமான காரணியாக உள்ளது. "வளர்சிதை மாற்றத்தில் உருவான இந்தப் பொருள் அதிக அளவில் நீண்ட நாட்கள் உங்கள் ரத்த ஓட்டத்தில் இருந்தால், பெருந்தமனி தடிப்பை அது ஊக்குவிக்கக்கூடும். இது தமனிகளைக் கடினப்படுத்தி இதய அமைப்பைப் பாதிக்கலாம்," என்கிறார் கிப்பன்ஸ். மருத்துவ நடைமுறைகள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழித்தலில் இருந்து வாரத்திற்கு மூன்று முறை மலம் கழிப்பது வரை ஆரோக்கியமானது எனக் கூறினாலும், தமது ஆய்வில் இந்தக் குறைவான இயல்பைக் கொண்ட பிரிவினர் மத்தியிலும்கூட ரத்த ஓட்டத்தில் நச்சுகள் அதிகரித்து இருந்ததாக கிப்பன்ஸ் கூறுகிறார். "எதிர்காலத்தில் இந்த நபர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதா என்கிற தரவுகள் இல்லாததால் உறுதியாகச் சொல்வது கடினம். இருப்பினும், நாம் பார்த்தவரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் முதல் ஒரு நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது, ஆரோக்கியமாக இருப்பதற்குச் சிறந்த பழக்கமாக இருக்கலாம்," என்கிறார் கிப்பன்ஸ். இருப்பினும், எப்போதும் போல, தொடர்பு என்பது காரண, காரியத்திற்குச் சமமாக இருக்காது. மற்ற வழிகளில் ஏற்கெனவே குறைவான ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் குறைவாக மலம் கழிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கக்கூடும். இதைக் கட்டுப்படுத்த கிப்பன்ஸின் ஆய்வில் எந்த நோய் பிரச்னைகளும் இல்லாதவர்களே தேர்வு செய்யப்பட்டனர். தரங்கம்பாடி: 400 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நிற்கும் 'டேனிஷ்' கோட்டை எதற்காக கட்டப்பட்டது?26 பிப்ரவரி 2025 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?26 பிப்ரவரி 2025 குடலின் ஆரோக்கியத்தைக் கணிக்க ஒரு வழி பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது அடிக்கடி மலம் கழிக்க மக்களுக்கு உதவும். உங்கள் குடலின் ஆரோக்கியத்தைக் கணிக்க ஒரு வழி உங்கள் செரிமானப் பாதையைக் கடக்க உணவு எடுத்துக்கொள்ளும் நேரம். இதை ஆங்கிலத்தில் கட் டிரான்ஸிட் டைம் என்கிறார்கள். பிரகாசமான நிறமுடைய ஸ்வீட்கார்ன் போன்ற உணவை உட்கொண்டு, அதன் பின்னர் அது வெளியே வருவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே பரிசோதிக்கலாம். பொதுவாகச் சொல்வதானால், ஒரு நபரின் கட் டிரான்ஸிட் டைம் அதிகரிக்கும்போது அவர் மலம் கழிக்கும் இடைவெளி அதிகரித்து அவர்கள் மலச் சிக்கலால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். கடந்த 2020இல் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கட் டிரான்சிட் நேரத்தைக் கணக்கிட 863 பேருக்கு நீல நிற மஃபின்களை கொடுத்தனர். இது வெவ்வேறு உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைப் பாதிப்பதை, மரபியல், குடல் நுண்ணுயிர் தொகுப்பு மற்றும் பிற காரணிகள் எப்படி மாற்றுகின்றன என்பதைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பபிரெடிக் 1 ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தது. இதில் கட் டிரான்ஸ்ட் டைம் என்படும் உணவு செரிமானக் குழாயைக் கடக்கும் நேரம் நபருக்கு நபர் 12 மணிநேரத்தில் இருந்து பல நாட்கள் வரை மாறுபட்டதாகத் தெரிய வந்தது. குறிப்பாக, குறுகிய டிரான்ஸிட் டைம் இருந்த நபர்களிடம் - அதாவது அடிக்கடி மலம் கழிப்பவர்கள் மத்தியில் - காணப்பட்ட நுண்ணுயிர்கள் அதிக டிரான்ஸிட் டைம் இருந்த நபர்களிடம் இருந்த நுண்ணுயிர்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தன. குறைவான கட் டிரான்ஸிட் டைம் இருந்தவர்களுக்கு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்கள் இருந்ததாகத் தெரிய வந்தது. "அதிக டிரான்ஸிட் நேரம் இருந்தவர்களிடம் அதிக தீய குடல் பாக்டீரியாக்கள் இருந்ததை நாங்கள் கண்டோம். இவை மோசமான இதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்குப் பாதகமானவையாக முன்பு அடையாளம் காணப்பட்டவை," என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நுண்ணுயிர் தொகுப்பு விஞ்ஞானியாக இருக்கும் எமிலி லீமிங். பட மூலாதாரம்,GETTY IMAGES இது 58 மணிநேரம் அல்லது அதற்கு மேல் கட் டிரான்ஸிட் நேரம் இருந்தவர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. இவர்கள் ஒரு வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். குடலில் மலம் அதிக நேரம் இருப்போரிடம் நுண்ணுயிர்களுக்குப் புதிய உணவு கிடைக்காமல் அவை நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்துகளை உண்பதை விடுத்து புரதங்களை உண்ணத் தொடங்குவதாக கிப்பன்ஸ் போலவே லீமிங்கும் கருதுகிறார். இவை உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. குறைவான கட் டிரான்ஸிட் டைம் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் தொகுப்பு இருந்ததுடன் விசெரெல் ஃபேட் எனப்படும் உள்ளுறுப்புக் கொழுப்பும் குறைவாக இருந்ததாக லீமிங்கின் ஆய்வில் தெரிய வந்தது. இந்த வகையான கொழுப்பு வயிற்றின் ஆழமான பகுதிகளில் உள்ளுறுப்புகளைச் சுற்றிக் காணப்படுகிறது. இந்த உள்ளுறுப்புக் கொழுப்பு பல இதய நோய்கள், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட ஆரோக்கிய சீர்கேடுகளைக் கொண்டு வரலாம் என்பதால் அபாயகரமானது. குறைவான கட் டிரான்ஸிட் இருப்பவர்களிடம் போஸ்ட்பிராண்டியல் ரெஸ்பான்ஸ் எனப்படும் உணவுக்குப் பிந்தைய வினை ஆரோக்கியமானதாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டது. அதாவது அவர்கள் உணவு எடுத்துக்கொண்ட பிறகு, அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் லிப்பிட்ஸ் எனப்படும் கொழுமியங்களின் அளவு குறைவாக இருந்தது. இதனால் அவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. மலச் சிக்கல் குறித்தும், நாள்பட்ட நோய்களுடன் அதற்கிருக்கும் தொடர்பு குறித்தும் விஞ்ஞானிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த தகவல்களுடன் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஒத்துப் போகின்றன. யாருக்கேனும் நாள்பட்ட மலச் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு குடல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதற்கு ஆதாரம் கலவையாக இருக்கிறது. ஒரே கேள்விக்குப் பதிலளிக்கும் பல ஆய்வு முடிவுகளைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்யும் மெட்டா அனாலிசிஸ் என்ற முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் மலச் சிக்கல் இருப்பவர்களிடம் குடல் புற்றுநோய் அதிக அளவில் இல்லை எனத் தெரிய வந்தது. "ஆனால் நாங்கள் உடலின் பிற பகுதிகளுடன் தொடர்புகள் இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக பார்க்கின்ஸன் நோய் உள்ளவர்கள் அறிகுறிகள் தெரிவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மலச் சிக்கலால் பாதிக்கப்படலாம்," என்கிறார் லீமிங். இதற்கிடையில் பெருங்குடல் வழியாக மலம் கடத்துவதில் தாமதத்திற்கும், பித்தப்பை கற்களுக்கும் இருக்கும் தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார். "அது குடலில் புற்றுநோய்க் கட்டிகளுக்கு முன் தோன்றும் பாலிப்ஸ் உருவாவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. இவை பின்னர் புற்றுநோயாக மாறலாம்" என்கிறார் அவர். காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கம், பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம் - பிபிசி புலனாய்வு21 பிப்ரவரி 2025 உங்கள் மலம் உங்களைப் பற்றிச் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு வாரத்திற்கு எத்தனை முறை மலம் கழிக்கிறோம் என்பது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது. ஆனால், அதைவிட, மலம் கழிக்கும் பழக்கத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பதுதான் முக்கியமானது என்கிறார் லீமிங். நீங்கள் வழக்கமாக மலம் கழிக்கும் பழக்க வழக்கத்தைக் கவனத்தில் கொள்வதால் உங்கள் உடலுக்கு எது இயல்பானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். "நாம் அனைவரும் நமது மலத்தைப் பார்க்க வேண்டும், ஏனென்றால் அடிப்படையில் அது ஓர் இலவச குடல் ஆரோக்கிய பரிசோதனையைப் போன்றது," என்கிறார் லீமிங். "நீங்கள் எப்போதெல்லாம் மலம் கழிக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, உங்கள் மலத்தின் நிறம் மற்றும் வடிவமும் கவனிக்கப்படவேண்டும். (பிரிஸ்டல் ஸ்டூல் ஃபார்ம் ஸ்கேல் அளவுகோலில்) டைப் 3 அல்லது டைப் 4, அதாவது வெடிப்புகளுடன் ஒரு சாஸேஜ் அல்லது மிருதுவான சாஸேஜ் வடிவில் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்." நிறத்தைப் பொறுத்தவரை, மலத்தில் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தைப் பார்த்தால் அது ரத்தம் இருப்பதைக் குறிக்கிறது. இதற்கு அபாயமில்லாத ஒரு விளக்கம் இருக்கக்கூடும் என்றாலும் இது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே ஒரு மருத்துவரை முடிந்த வரை உடனடியாகப் பார்ப்பது முக்கியமானது. உங்களுக்கு அடிக்கடி பேதி ஏற்பட்டாலோ, திடீரென மலம் கழிக்க வேண்டியிருந்தாலோ, உணவு உட்கொண்ட பின்னர் பிடிப்பு, வயிறு கனத்திருப்பது போன்ற உணர்வு அல்லது வாயுத் தொந்தரவு இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம். இறுதியாக மேலும் இயல்பாக மாற விரும்பினால் நீங்கள் செய்யக்கூடிய மூன்று எளிதான காரியங்கள் உள்ளன. "எங்களது ஆய்வில் இயல்பான கட்டத்தில் இருந்தவர்கள், அதிகமாகப் பழங்களையும், காய்களையும் உட்கொண்டதுடன், அதிகமாக நீர் அருந்தினர், உடல் ரீதியாக அதிகம் சுறுசுறுப்பாக இருந்தனர்," என்கிறார் கிப்பன்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05mme1pgndo
  7. 27 FEB, 2025 | 03:23 PM கனடா கடந்தவருடம் மிக அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது இவர்களில் அனேகமானவர்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டு;ள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கனடா கடந்த வருடம் அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது,ஒருதசாப்தகாலத்திற்கும் மேற்பட்ட காலத்தில் அதிகளவானவர்கள் வெளியேற்றப்பட்டமை கடந்த வருடத்திலேயே. ரொய்ட்டர் பெற்றுக்கொண்டுள்ள தரவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் வரை கனடா நாடுகடத்தியவர்களின் எண்ணிக்கையை வைத்துபார்க்கும்போது 2015ம் ஆண்டின் பின்னர் கடந்த வருடமே கனடா அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளமை புலனாகின்றது. நாடு கடத்துவதற்காக அதிகளவு நிதியை கனடா அரசாங்கம் கடந்த வருடம் ஒதுக்கியிருந்தது. புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கைஅதிகரிப்பு மற்றும் கனடாவில் வீடுகளிற்கான தட்டுப்பாட்டினை புலம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரிக்கின்றது என்ற சர்ச்சை போன்றவற்றை எதிர்கொண்டிருந்த ஜஸ்டின் ட்ருடோ அரசாங்கம் தான் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக காண்பிப்பதற்காக புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதை தீவிரப்படுத்தியுள்ளது. 2020 முதல் புகலிடக்கோரிக்கைகளை பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவே நாடு கடத்தல்களை தீவிரப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டது என கனடாவின் எல்லை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கனடாவிலிருந்து தாமாக வெளியேறியவர்கள்,இருதரப்பு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் விபரங்களை ரொய்ட்டர்ஸ் கோரியிருந்தது. கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு வழங்கியுள்ள புள்ளிவிபரங்கள் மூலம் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதி வரை 7300 பேரை நாடுகடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 8வீதம் அதிகமாகும். https://www.virakesari.lk/article/207835
  8. பட மூலாதாரம்,@SEEMAN4TN படக்குறிப்பு,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் கூறினார். கைதான நபர்கள் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை" எனக் கூறியுள்ளார். சீமானின் வீட்டில் என்ன நடந்தது? சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார்: வீட்டில் போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த தொண்டர் பெரியாரை விமர்சித்து, அண்ணாவை புகழ்ந்த சீமான் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதகவுக்கு கைகொடுத்ததா? தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா? செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா? சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் மனுவின் அடிப்படையில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அடுத்து வந்த நாட்களில் புகாரை வாபஸ் பெறுவதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, புகாரின் மீது காவல்துறையும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார். இந்தநிலையில், தன் மீது 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக தனது புகார் மனுவை நடிகை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்தார். "மனரீதியான பிரச்னைகளை நடிகை எதிர்கொண்டுள்ளார். புகாரை வாபஸ் பெற்றாலும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது தீவிரமான குற்றம்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, 12 வாரங்களில் வழக்கில் புலன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அந்த நடிகையிடம் வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார், புதன்கிழமையன்று (பிப்ரவரி 26) நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதுதொடர்பாக, வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், ஏற்கெனவே திட்டமிட்ட கட்சி நிகழ்வில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் செல்வதால் தன்னால் வர இயலாது என சீமான் தெரிவித்துவிட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் பிபிசி தமிழிடம் கூறினார். டிரம்பின் 'கோல்டு கார்டு' விசா என்றால் என்ன? - கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா?4 மணி நேரங்களுக்கு முன்னர் சிரியா: பஷர்-அல்-அசத் வீழ்ச்சிக்கு பிறகும் குர்து மக்கள் தொடர்ந்து போரிடுவது ஏன்?3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர். நீலாங்கரை வீட்டில் என்ன நடந்தது? நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று (பிப்ரவரி 27) வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 28) நேரில் ஆஜராகுமாறு சீமானிடம் சம்மன் கொடுப்பதற்கு அவர்கள் சென்றுள்ளனர். ஊடகங்களில் வெளியான வீடியோ பதிவுகளின்படி, சம்மனை சீமான் வீட்டின் சுவற்றில் போலீஸார் ஒட்டியுள்ளனர். இதை அங்கிருந்த நபர் ஒருவர் கிழித்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே போலீஸார் செல்ல முயன்றபோது, ஒருவர் தடுத்துள்ளார். இதனால் அவருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். 'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - புகார்களை மறுத்து அறிக்கை27 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் நடந்த மோதல் பிபிசி தமிழிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், "சம்மன் கொடுக்க வரும்போது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தாலோ அல்லது வீடு பூட்டப்பட்டிருந்தாலோ சுவற்றில் ஒட்டலாம். ஆனால், சீமானின் வீட்டில் குடும்பத்தினர் இருந்துள்ளனர். அவர்களிடம் கொடுக்காமல் சுவற்றில் ஒட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார். "ஆஜராக முடியாது" - சீமான் இதே கருத்தை ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது சீமான் தெரிவித்தார். "எனக்கு ஏற்கெனவே அழைப்பாணையை போலீஸ் கொடுத்தபோது அதில் கையெழுத்திட்டு, திட்டமிட்டபடி வேலை இருப்பதால் வர முடியாது எனக் கூறிவிட்டேன். தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன். அப்படியிருக்கும்போது என்னை விரட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்றார் "நாளையே வருமாறு கூறினால் வர முடியாது. 15 வருடங்களாக இதே நாடகத்தை நடத்தி வருகிறார்கள். விசாரணையே நடத்தாமல் இவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். என்னை எதுவும் செய்ய முடியாது. இதற்கெல்லாம் பயந்து ஓடக் கூடிய ஆள் நான் இல்லை" எனவும் சீமான் பதில் அளித்தார். "என் வீட்டில் மனைவி, மகன்கள் இருந்தனர். ஆனால் போலீஸார் அழைப்பாணையை சுவற்றில் ஏன் ஒட்ட வேண்டும்? ஏற்கெனவே விசாரணைக்கு பதில் அளித்துவிட்டேன்" என அவர் கூறினார். ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?8 மணி நேரங்களுக்கு முன்னர் 'வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை' - சமையல், வீட்டை சுத்தப்படுத்துவதில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே பாகுபாடா?9 மணி நேரங்களுக்கு முன்னர் நீலாங்கரை உதவி ஆணையர் சொல்வது என்ன? சீமானின் குற்றச்சாட்டு தொடர்பாக, நீலாங்கரை காவல் உதவி ஆணையர் பரத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் சீமானிடம் தகவல் கொடுப்பதற்காக வந்திருந்தனர். சீமானோ அல்லது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களைப் பார்ப்பதற்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் யாரும் வரவில்லை. அதைப் படிக்காமல் கிழிப்பதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், " சம்மனை கிழித்தது தொடர்பாக, வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் புகார் கொடுத்ததால், நீலாங்கரை காவல்நிலைய ஆய்வாளர் விசாரிப்பதற்குச் சென்றார். இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறினார். நடைமுறை என்ன? காவல்துறை சார்பில் சம்மன் கொடுப்பது தொடர்பான நடைமுறை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, "குறிப்பிட்ட நாளில் ஆஜராகுமாறு காவல்துறை கூறினால், தன்னால் வர முடியாது எனக் கூறி ஒருவர் அவகாசம் கேட்கலாம். ஆனால் ஆஜராகாமல் தவிர்த்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" எனக் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "வழக்கில் தொடர்புடைய நபருக்கு தபால் மூலமாகவோ நேரில் சென்றோ சம்மன் அளிக்கலாம் அல்லது அவர்களின் உறவினர்களிடம் வழங்கலாம். அவ்வாறு ஒப்படைக்க முடியாவிட்டால் வீட்டில் ஒட்டிவிட்டு வரலாம்" எனக் கூறுகிறார். ''சம்மனைப் பெறுவதற்கு தொடர்புடைய நபரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தால், அதை உரிய சாட்சிகள் மூலம் காவல்துறைதான் நிரூபிக்க வேண்டும்'' எனவும் கூறுகிறார் கருணாநிதி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ckgzz4j79k0o
  9. மிதிபலகையில் தொங்கிச் சென்றாலும் குறைந்த செலவில் வெளிநாடு செல்ல முடியாது : ஜனாதிபதி அநுர எவ்வாறு 18 இலட்சம் ரூபா செலவில் 3 நாடுகளுக்கு சென்றார் - திலித் ஜயவீர 27 FEB, 2025 | 09:03 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 18 இலட்சம் ரூபா செலவில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு சென்றார் என்பது புரியவில்லை. மிதிபலகையில் தொங்கிக்கொண்டு போனாலும் அவ்வாறு குறைந்த செலவில் வெளிநாட்டு பயணத்தை செய்ய முடியாது என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்த வரவு செலவுத் திட்டம் எந்த திசையை நோக்கி இந்த நாட்டை கொண்டு போகின்றது என்று புரியவில்லை. எவ்வாறு இந்த வரவு செலவுத் திட்டம் முன்னிலையானது என்றும் புரியவில்லை. இந்த அரசாங்கம் சோஷலிச அரசாங்கம் என்று கிராமங்களில் உள்ளவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். கிராமங்களில் உள்ளவர்களை எவ்வவாறு மேலே கொண்டு வரப் போகின்றோம் என்றோ அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலோ குறிப்பிடப்படவில்லை. அவர்கள் முன்னேற்றமடைய வேண்டும். இளைஞர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் அந்த கனவுகளுக்கு உயிர் கிடைக்குமா? உள்ள கனவுகளையும் கலைக்கும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது. அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் கழுத்தை நெரித்தாலும் அதற்கு இடமளிக்காது அப்பாவிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். இந்நிலையில் இந்த அரசாங்கம் பழைய அரசியலையே செய்கின்றது. இவர்களின் அரசியலுக்குள் மறைந்துள்ள அரசியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயன்படுத்தி கொண்டு செல்லப்படும் பயணத்தில் இந்த நாட்டை முன்னால் கொண்டு செல்ல முடியாது. மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்த அரசாங்கத்துக்கு பெரும் பொறுப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புகளுடன் உள்ள மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு உள்ளது. அவர்களின் சம்பளம், வருமை நிலையில் உள்ளவர்கள், சுற்றுலாத்துறை ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் பாரிய மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. உங்களின் அரசியல் இருப்புக்காக மட்டும் செயற்படுகின்றீர்கள். அரசியல் கலாச்சாரத்தை மாற்றுகின்றோம் என்று கூறி செலவுகளை குறைப்பதால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது நிதியை உருவாக்க வேண்டும். அதற்காக மனித மற்றும் பௌதீக வளங்களை பயன்படுத்த வேண்டும். அதற்காக மக்களை ஊக்குவிக்க வேண்டும். செலவுகள் மற்றும் வீணடிப்புகளை குறைப்பதால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்துவிட முடியாது. ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அவரின் உரையில் ஜனாதிபதி 1.8 மில்லியன் ரூபாவில் மூன்று நாடுகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள. எப்படி அவர் சென்றார் என்று தெரியவில்லை. மிதிபலகையில் தொங்கிக்கொண்டு போனாலும் அந்த தொகையில் எவ்வாறு மூன்று நாடுகளுக்கு சென்றிருக்க முடியும் என்று புரியவில்லை. அவர் எப்படி குறைந்த செலவில் மூன்று நாடுகளுக்கு சென்றார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/207865
  10. நாட்டை முடக்குவோம்..! அநுர அரசை கடுமையாக சாடிய யாழ். போதனா தாதியர் வரவு செலவுத்திட்டத்தில் தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு உட்பட சில கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna ) தாதியர் சங்கத்தினர் இன்றையதினம் (27.02.2025) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். போராட்டத்தின் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தாதியர்கள் போராட்டம் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்றைய தினம் (27) நாடளாவிய ரீதியில் எமது சங்க தாதியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளோம். கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடைமுறையின் படி தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு அளவு உட்பட சில கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பதவி உயர்வு காலநிலை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுகாதார ஊழியர்களை முழுமையாக பாதிக்கும் ஒரு செயற்பாடாக உள்ளது. பாரிய அநீதி தாதியர்கள் மிகவும் வேலை பழுக்கும் மத்தியில் இரவு பகலாக வேலை செய்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை அவர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும். இந்த அநீதிக்கெதிராக அகில இலங்கை ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தாம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/govt-nurses-protest-allowance-cuts-in-2025-budget-1740646622#google_vignette
  11. படக்குறிப்பு, ஐஎஸ்-ன் கோபனி நகர முற்றுகையை முறியடித்த பத்தாம் ஆண்டை அந்நகரத்து குர்து மக்கள் ஜனவரியில் கொண்டாடினர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜியர் கோல் பதவி, பிபிசி பெர்ஷிய சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் வடகிழக்கு சிரியாவை அடைய நாங்கள் டிகிரிஸ் ஆற்றின் குறுக்கே மோசமான நிலையில் உள்ள மிதக்கும் பாலத்தை கடந்து சென்றோம். இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் இருந்து சிரியாவின் எண்ணெய் வெளிகள் வழியாக எங்களை அழைத்துச் செல்லும்போது எங்கள் பேருந்து பயங்கரமாக குலுங்கியது. அந்த சாலையோரம் முழுவதும் கச்சா எண்ணெயை இறைக்கும் இயந்திரங்கள் இருந்தன. சிரியாவின் இந்தப்பகுதி குர்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. குர்து மக்கள், இந்த இந்தப் பகுதியை 'ரோஜாவா' என்று அழைக்கின்றனர். இதற்கு பொருள் மேற்கு குர்திஸ்தான் என்பதாகும். 2012-ல் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர், அதை சுயாட்சி பெற்ற பகுதியாக அறிவித்து, குர்து மக்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இப்பகுதி குர்துகள் தலைமையிலான ஆயுதப் படையினரால் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் பஷர் அல் அசதின் அரசு இதனை எப்போதும் அங்கீகரித்தது இல்லை. அவர் அதிகாரதிலிருந்து வீழ்ந்த பின்னரும் இப்பகுதியின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு போருக்கு பிறகும் சிரியாவின் குர்துகள், வடக்கில் உள்ள அதன் அண்டை நாடான துருக்கியுடன் பல ஆண்டுகளாக மோதிக்கொண்டிருக்கின்றனர். இந்த மோதல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிரியா: அசத் ஆட்சியின் வீழ்ச்சி மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மாற்றியமைக்குமா? பஷர் அல் அசத் : ஒரு கண் மருத்துவர் சிரியாவின் சர்வாதிகார அதிபர் ஆனது எப்படி? சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி ஐஎஸ்-க்கு எதிரான யுத்தம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் துருக்கி எல்லைக்கு அருகில் உள்ள கோபனி நகரை அடையும் வரை, அப்பகுதியில் பல நகரங்கள், கிராமங்களை ஐ.எஸ் குழு கைப்பற்றியது. ஐஎஸ் குழுவினர் இந்த நகரினுள் நுழையமுடியவில்லை, ஆனால் அவர்கள் பல மாதங்களுக்கு முற்றுகையை தொடர்ந்தனர். 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் உதவியுடன் குர்து தலைமையிலான ஆயுதப் படையினர் இந்த முற்றுகையை முறியடித்தனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற, இதன் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நகரவாசிகளுடன் நானும் இணைகிறேன். கோபனி நகரத்தின் நுழைவாயிலில் தங்களது 50-களில் உள்ள பெண்கள் ஏகே-47 துப்பாக்கிகளுடன் சோதனைச்சாவடிகளை காவல் காக்கின்றனர். ஐஎஸ் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். பல பெண்கள் தாமாக முன்வந்து அனைத்து பெண்கள் பாதுகாப்பு பிரிவில் (YPJ) சேர்ந்தனர். நகரை சுற்றி நாங்கள் வாகனத்தில் செல்லும்போது, இந்த போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்னமும் பார்க்கமுடிகிறது. அத்துடன் உயிரை இழந்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் அச்சிட்ட சுவரொட்டிகளையும் பார்க்கமுடிந்தது. ஆனால் நகரின் முக்கிய சதுக்கத்தில், திருவிழா போன்ற மனநிலையே நிலவுகிறது. வண்ணமயமான குர்து உடைகளை அணிந்துகொண்டு சிறுவர்களும், சிறுமிகளும் கைகோர்த்து ஆடிப் பாடி கொண்டாடுகின்றனர். ஆனால் மூத்த தலைமுறைக்கு, இது இனிப்பும் கசப்பும் கலந்த ஒரு தருணம்தான். "கோபனி நகரில் வீரமரணம் அடைந்த எனது சகோதரன் மற்றும் மற்றவர்களின் நினைவை போற்றும் விதமாக நேற்றிரவு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தேன்," என்கிறார் 45 வயதான நியுரோஸ் அகமது. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன. "இது ஒரு மகிழ்ச்சியான நாள், அதே நேரம் வலி நிறைந்த நாள். இதைக் காண அவர் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." தேநீர் அருந்த ரயிலில் இருந்து இறங்கியவர் 20 ஆண்டுகளுக்கு மேல் கொத்தடிமையாக இருந்த துயரம் - அதிகாரிகள் மீட்டது எப்படி?9 மணி நேரங்களுக்கு முன்னர் 'வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை' - சமையல், வீட்டை சுத்தப்படுத்துவதில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே பாகுபாடா?9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஜனவரி 2015-ல் ஐஎஸ் முற்றுகை முறியடிக்கப்பட்ட பின்னர் கோபனி துருக்கியுடன் மோதல் குர்துகள் தலைமையிலான சிரியா ஜனநாயக படை (SDF) வடகிழக்கு சிரியாவில் ஐஎஸ்-க்கு எதிராக வெற்றி பெற்றதாக 2019-ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் ஐஎஸ்ஸிடம் பெற்ற விடுதலை நிரந்தர அமைதியை கொண்டுவரவில்லை. துருக்கியும், சிரியா தேசிய ராணுவம் (SNA) எனப்படும் துருக்கியின் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுக்களின் கூட்டணியும் 2016 முதலே சிரியா ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு எதிராக பல ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. மேலும் எல்லையில் உள்ள நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர். சிரியா ஜனநாயக படையின் முக்கிய அங்கமான மக்கள் பாதுகாப்பு பிரிவை (ஒய்பிஜி), குர்து தொழிலாளர் கட்சியின் ஒரு நீட்டிப்பாக துருக்கி கருதுகின்றது. குர்து தொழிலாளர் கட்சி துருக்கியில் குர்து மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகளாக போராடியுள்ளது. அதனால் அதை பயங்கரவாத அமைப்பாக துருக்கி அறிவித்தது. சிரியா ஜனநாயக படையை தனது எல்லையில் இருந்து பின்னுக்கு தள்ள துருக்கி விரும்புகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு அசத் ஆட்சி வீழ்ந்த பின்னர், துருக்கியின் ஆதரவு பெற்ற சிரியா தேசிய ராணுவம் யுப்ரேடிஸ் நதிக்கு மேற்கே சிரியா ஜனநாயக படையின் வசமிருந்த பகுதிகளை கைப்பற்ற புதிய முயற்சியை மேற்கொண்டது. ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?8 மணி நேரங்களுக்கு முன்னர் 'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கோபானி நகரின் நுழைவாயில்களில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன இப்போது இந்த மோதல் கோபன் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை எட்டியுள்ளது. "இங்கே கேமராவில் படம் பிடிக்காதீர்கள், மற்றொரு முற்றுகைக்கு தயாராகும் வகையில் நாங்கள் நகருக்கு கீழே சுரங்கங்கள் அமைத்துள்ளோம்," என நகரில் இருக்கும் குர்து படைத்தளபதி ஒருவர் அமைதியாக என்னிடம் தெரிவித்தார். நகரில் எங்கும் பெட்ரோல் மனம் வீசுகின்றது, ஜென்ரேட்டர்களின் சத்தம் எல்லா பகுதிகளிலும் ஒலிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் துருக்கி விமான தாக்குல்களில் பெரும்பாலான மின்சார உற்பத்தி நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆண்டெனாக்கள் கூட அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் என்னிடம் தெரிவித்தனர். "ஐஎஸ்-ஐ கோபானி நகரில் தோற்கடித்த பின்னர் துருக்கியையும் அதன் பினாமிகளும் எங்களது நகரை ஆக்கிரமிக்க அனுமதிக்கமாட்டோம், அவர்களையும் தோற்கடிப்போம்," என்கிறார் நியுரோஸ் அகமது. ஒரு உணவகத்தில் இருந்தோம், நாங்கள் உள்ளூர்வாசிகள் அல்ல என்பதை உணர்ந்தவுடன் மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டனர். நரைத்த முடி மற்றும் கைகளில் ஒரு குச்சியுடன் இருந்த முதியவரிடம் அவரது வயது என்னவென்று கேட்டேன். அவருக்கு 80வயதிருக்கும் என நான் யூகித்தேன், ஆனால் அவரது பதில் என்னை சங்கடப்படுத்துகிறது. "எனக்கு 60 வயது." என்றார் அவர். இவ்வளவு உயிரிழப்புகளையும், ரத்தம் சிந்தியதையும் பார்த்த பின்னர் இங்கிருக்கும் மக்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. இப்போது மற்றொரு யுத்தத்தின் அபாயம் எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராஃபி: ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி, இங்கிலாந்து ஏமாற்றம் - சறுக்கியது எங்கே?27 பிப்ரவரி 2025 தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - புகார்களை மறுத்து அறிக்கை27 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, நியுரோஸ் அகமதுவின் சகோதரர் ஐஎஸ் முற்றுகையில் உயிரிழந்தார். மக்கள் மீது தாக்குதல் துருக்கி தயாரித்த டிரோன்களும், துருக்கி போர் விமானங்களும் சிரியா ஜனநாயக படையின் நிலைகள் மற்றும் நகரை சுற்றிய விநியோகத்திற்கான வழிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளன. எதிர்த்து போராடிய குடிமக்கள் கூட தாக்கப்பட்டுள்ளனர். ஒரு பிராந்திய மருத்துவமனையில் காயமடைந்தவர்களில் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த 28 வயதான லீயா பன்ஸியை கண்டேன். அவர் ஒரு அமைதிக்கான செயற்பாட்டாளர் ஆவார். இவர் ரோஜாவாவில் ஒரு பெண்கள் தங்குமிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வலராக பணியாற்றியிருக்கிறார், ஜனவரி மாதம் தாம் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காணொளியை அவர் எனக்கு காட்டினார். அந்தக் காட்சிகளில் வானத்திலிருந்து இரண்டு குண்டுகள் விழுந்து நடனமாடும் மக்கள் கூட்டத்தைத் தாக்குவதைக் காட்டுகின்றன. இந்த போராட்டம் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த டிஷ்ரீன் அணையின் அருகே நடைபெற்றது. இதில் ஆறு குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் சிரியா ஜனநாயக படை கூறுகிறது. "எனக்கு அருகே இருந்த முதியவர் ஒருவரும் காயமடைந்தார்," என தனது படுக்கையிலிருந்து அவர் தெரிவித்தார். "எனக்கு கொஞ்சம் ரத்த இழப்பு ஏற்பட்டது... ஆனால் நாங்கள் அம்புலன்ஸின் உள்ளே நுழைந்த பின்னர், எங்கள் ஆம்புலன்ஸ் அருகே மற்றொரு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது," என அவர் மேலும் கூறுகிறார். குர்திஷ் ரெட் கிரசண்ட் ஆம்புலன்ஸ் மீதான தாக்குதலை துருக்கிய-சிரியா தேசிய ராணுவ கூட்டணியின் "ஒரு போர்க்குற்றம்" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. ''குடிமக்கள் மீதும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதும் நடந்த தாக்குதலில் துருக்கிக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையை பிரதிபலிக்கவில்லை" என துருக்கியின் வெளியுறவுத்துறை பிபிசியிடம் தெரிவித்தது. குறிப்பிட்ட அந்த அணை மீதான கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க மனித கேடயங்களாக பயன்படுத்துவதற்காக பொதுமக்களை சண்டை நடக்கும் பகுதிக்கு சிரியா ஜனநாயக படை வேண்டுமென்றே அனுப்புவதாகவும் துருக்கி வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி கழிப்பறையில் சடலமாக கிடந்த 14 வயது மாணவர் - என்ன நடந்தது? இன்றைய முக்கிய செய்திகள்27 பிப்ரவரி 2025 தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா?26 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, கோபேனை சுற்றி எஸ்டிஎஃப் வீரர்கள் காவல் காப்பதை காணமுடிகிறது தடுமாற்றம் சிரியாவின் புதிய தலைவர் அகமது அல்-ஷாரா கடினமான ஒரு சூழலுக்கு இடையே மாட்டிக்கொண்டிருக்கிறார். சிரியாவில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைப்பதாக உறுதியளித்த இடைக்கால அதிபர் அல்-ஷாரா, ஆயுதம் தாங்கிய அனைத்து பிரிவினரையும் ஆயுதங்களை கைவிட கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது இஸ்லாமிய அமைப்பான ஹையத் தஹ்ரீர் அல் ஷாம் (ஹெச்டிஎஸ்) அசத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியிருந்தது. வடகிழக்கிற்கு ஒரு தீர்வு காண்பதற்கு சிரியா ஜனநாயக படை உடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குர்து பிரிவுகளை உள்ளடக்குவது, அவரது முக்கிய கூட்டாளிகளில் ஒன்றான துருக்கியுடன் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்கிழமை சிரியாவின் எதிர்காலம் குறித்த தேசிய கூட்டத்தை ஷாரா தொடங்கியபோது, குர்து தன்னாட்சி நிர்வாகம் அதில் பங்கேற்கவில்லை. தாங்கள் அழைக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹசாகே பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளத்திற்கு அருகே ரகசிய இடத்திலிருந்து என்னிடம் பேசிய சிரியா ஜனநாயக படையின் தலைவர் ஜெனரல் மாஸ்லோம் அப்தி, தாம் ஷாராவை டமாஸ்கஸில் முன்பே சந்தித்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் இருதரப்பும் இதுவரை எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை. "உண்மையின் துருக்கியுடனும், அதன் பினாமிகளுடனும் நாங்கள் இன்னமும் போரிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். துருக்கி போர்விமானங்களும், டிரோன்களும் எங்கள் மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன."என்கிறார் அவர். "சிரியாவில் புதிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அவர்களது கருத்துக்கள் நேர்மறையாக இருக்கின்றன. ஆனால் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு எதிராக செயல்படும்படி அவர்களுக்கு துருக்கியிடமிருந்து அழுத்தம் வருகிறது. ஆனால், குர்து உரிமைகளை அங்கீகரிக்கும்படி அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சில அரபு நாடுகள் அவர்களிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றன," என்கிறார் அவர். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஐஎஸ்-க்கு எதிரான சண்டையில் சிரியா ஜனநாயக படையை சேர்த்தவர்கள்தான் மிகவும் நம்பகமான கூட்டாளிகளாக இருந்திருக்கின்றனர். இன்றோ, ஐஎஸ் ஸ்லீப்பர் செல்களை எதிர்கொள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்கப் படைகள் குர்து கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கின்றன. ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்ப் படைகளை திரும்பப்பெற்று, துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கும், ஐஎஸ்-ன் எழுச்சிக்கும் காரணமாகிவிட வாய்ப்பிருப்பதாக குர்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிரியா ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்கள் மற்றும் சிறைகளில் இன்னமும் சுமார் 40,000 ஐஎஸ் குழுவை சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும், 10,000 வரை ஜிகாதிகளும் இருக்கலாம் என கணிக்கப்படுவதாக அப்தி கூறுகிறார். "துருக்கி தாக்குதல் நடத்தினால், எங்களுடைய படைகளை இடமாற்றம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. அப்படி நேர்ந்தால் சிறைகள் மீது தாக்குதல் நடத்தி கைதிகளை விடுவிக்க ஐஎஸ் அமைப்புக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்." என்கிறார் அவர் பார்வையற்ற காளையை 12 ஆண்டுகளாக சொந்த மகன் போல கவனிக்கும் விவசாயி27 பிப்ரவரி 2025 சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 படக்குறிப்பு,ரோக்சனா முகமது நிச்சயமற்ற எதிர்காலம் ஐஎஸ் குழுவுக்கு எதிராக சண்டையிட்ட பெண்களை மட்டும் உள்ளடக்கிய பெண்கள் பாதுகாப்பு பிரிவில் உள்ள பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பு பிரிவின் செய்தித்தொடர்பாளர் ரோக்‌சனா முகமதுவின் அலுவலக அறை சுவர்கள் போரில் உயிரிழந்த சக பெண் கமாண்டர்களின் புகைப்படங்களால் நிறைந்துள்ளது. "சிரியாவின் புதிய தலைமையில் பெண்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட்டு நாங்கள் பார்க்கவில்லை," என்கிறார் அவர். "ஏன் ஒரு பெண் பாதுகாப்பு அமைச்சராக இருக்கக்கூடாது?" இந்தப் பகுதியில் பெண்கள் தங்களது உரிமைகாக போராடியதாக ரோக்‌சனா முகமது சொல்கிறார். அரசியல், சமூக மற்றும் ராணுவ வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் பங்கேற்றுள்ளனர். "எங்களது உரிமைகள் மதிக்கப்படாவிட்டால் , நாங்கள் எப்படி ஆயுதங்களை கைவிடுவோம்?." என அவர் கேள்வி எழுப்புகிறார். எனவே சிரியாவில் நிலைத்தன்மை அருகில் தெரிவதாக சிலர் நம்பினாலும், குர்து மக்களை பொறுத்தவரை எதிர்காலம் தெளிவில்லாமல்தான் இருக்கிறது. புதிய சிரியாவில் அவர்கள் கூட்டாளிகளாக அங்கீகரிக்கப்படுவார்களா அல்லது மற்றொரு வாழ்க்கை போராட்டதை சந்திப்பார்களா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn7vvxxmxm3o
  12. சங்கமாக பணிப்புறக்கணிப்புச் செய்வதால் தனிநபர்களை தண்டிக்க முடியாதே அக்கா.
  13. கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த பொலீஸ் அதிகாரி கைதை குறிப்பிடுகிறார்கள் அண்ணை.
  14. சிங்கப்பூர் அரசினால் தப்பிய அர்ஜுன் மகேந்திரன்: தோல்வியில் முடிந்த அரசாங்கத்தின் முயற்சி சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிடியாணை இது தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மகேந்திரனுக்கு அழைப்பானை அனுப்பியிருந்தது. இருப்பினும், அன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை, பின்னர் அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக மகேந்திரனை கைது செய்ய கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பித்திருந்தது. நாடு கடத்தல் இதேவேளை, மகேந்திரனை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில், அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு நாடு கடத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பல சந்தர்ப்பங்களில் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளதால், நாட்டின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவரை இலங்கைக்கு நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. https://ibctamil.com/article/attempt-to-extradite-arjuna-mahendran-fails-1740670114#google_vignette
  15. முன்னாள் சபாநாயகர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்கள் பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல செலவு அறிக்கைகளை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நாடாளுமன்றில் இன்று வெளியிட்டார். அதன்படி, 2024 நவம்பர் வரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். சபாநாயகரின் வாகன செலவு 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை, முன்னாள் சபாநாயகர் 9 வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்த 9 மாத காலத்தில் மட்டும் எரிபொருளுக்காக ரூ.3.34 மில்லியன் செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், முன்னாள் துணை சபாநாயகர் 9 மாதங்களில் 6 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், எரிபொருளுக்காக 1.35 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளார் என்றும் சபைத் தலைவர் தெரிவித்தார். மேலும், முன்னாள் துணைக் குழுத் தலைவர் 04 வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், எரிபொருளுக்காக 7.2 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மனோ கணேசன் கண்டனம் இந்த நிலையில், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவித்ததை தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan), இவ்வாறான விடயங்களை வெளியிடும் போது பொதுவாக அனைவரையும் குறிப்பிடாமல் தொடர்புடைய நபரின் பெயரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். https://ibctamil.com/article/expense-reports-of-former-speakers-sri-lanka-1740655791
  16. யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி யாழ்.போதனா வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவதிவை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (27) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை வைத்திய அதிகாரிகள் இடைநிறுத்தி உள்ளதால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர்கள் சங்கத்தின் குறித்த போராட்டத்தினால் வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் பலவும் இயங்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. கோரிக்கை இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியாமல் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாகவும் நோயாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://ibctamil.com/article/jaffna-hospital-patients-suffering-today-strike-1740663619#google_vignette
  17. கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்! கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அவரைப் பாதுகாத்து வந்த காவல்துறை சிறப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 20 அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 30 அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. வாக்குமூலங்கள் அதன்படி, அவர்களின் தொலைபேசிகளை சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, கொலை சம்பவம் தொடர்பாக 15 சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொலைத் திட்டம் அத்தோடு, கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கொலையின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள தற்போது தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண் சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ganemulla-sanjeewa-murder-case-investigation-1740653459
  18. 'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்கெனவே செவ்வாய் கோள் இடதுபக்கத்திலும், வியாழன் கோள் நடுவிலும், சனி மற்றும் வெள்ளி கோள்கள் வலதுபக்கத்திலும் தெரிந்தது. ஆனால், இந்த வாரம் ஏழு கோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் கட்டுரை தகவல் எழுதியவர், மேடி மோல்லோய் பதவி, பிபிசி காலநிலை & அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பிப்ரவரி 28 அன்று (நாளை) செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என்பது, வானியல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படி பல கோள்கள் அணிவகுத்து நிற்கும் இந்த அரிய நிகழ்வை 'பிளானெட்டரி பரேட்' (planetary parade) என அறிவியல் மொழியில் அழைக்கின்றனர். இப்போது இந்த நிகழ்வை நீங்கள் தவறவிட்டால், 15 ஆண்டுகள் கழித்து 2040-ம் ஆண்டில்தான் தோன்றும். இந்த நிகழ்வை இன்னும் சில தினங்கள் பார்க்க முடியும் என்கின்றனர் வானியலாளர்கள். சூரியன் மறைந்த பின்னர், முடிந்தவரை அனைத்து கோள்களையும் பார்ப்பதற்கு சிறந்த நேரமாகும். இதுகுறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்வி-பதில்களை இங்கே தொகுத்துள்ளோம். வானியல் அற்புதம்: ஒரே இரவில் வரிசை கட்டி நிற்கும் 7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்? பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல் கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள் செவ்வாய் மற்றும் நிலாவில் மனிதன் குடியேற சென்னை ஐஐடியின் இந்த ஆய்வு எவ்வாறு உதவும்? 'பிளானெட்டரி பரேட்' என்பது என்ன? நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது, புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 புவி ஆண்டுகள் ஆகும். கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடியும். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தரும். இதை 'பிளானெட்டரி பரேட்' என்கின்றனர். சூரியனை சுற்றிவரும் கோள்கள் வெவ்வேறு வேகம் மற்றும் தொலைவில் சூரியனை சுற்றிவருகின்றன. அப்படியிருக்கும் போது பூமியிலிருந்து ஒரே நேரத்தில் அணிவகுத்து நிற்கும் கோள்களை பார்ப்பது பிரமிக்கத்தக்க காட்சியாக இருக்கும். எனினும், இந்த கோள்கள் பூமியிலிருந்து வெகு தொலைவிலேயே இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வானில் கோள்கள் ஒரே நேரத்தில் வரிசையாக நிற்பதை சித்தரிக்கும் படம் அனைத்து கோள்களையும் வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா? சிறந்த நேரம் எது? புதன், வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை வெறுங்கண்களாலேயே பார்க்க முடியும். சனிக்கோள் அடிவானத்தில் கீழாக இருக்கும் என்பதால் அதை பார்ப்பது கடினம். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை தொலைநோக்கி மூலமே பார்க்க முடியும். அடிவானம் மற்றும் வானம் தெளிவாக இருந்தால் அனைத்து கோள்களையும் பார்ப்பதற்கு சிறப்பான வாய்ப்பாக இருக்கும். ஆனால், ஏழு கோள்களையும் பார்ப்பதற்கான நேரம் மிக குறைவானதே. தென்கிழக்கு லண்டனில் உள்ள கிரீன்விச் ராயல் கோளரங்கத்தின் வானியலாளர் முனைவர் எட்வர்ட் ப்ளூமர் கூறுகையில், "நாம் எளிதாக பார்க்கும் விதத்திலான இடத்தில் அந்த ஏழு கோள்களும் இருக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது." என்றார். 'கோவில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயர் கூடாது' - நீதிமன்ற உத்தரவுக்கு அறநிலையத்துறை பதில் என்ன?26 பிப்ரவரி 2025 தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசிய 5 முக்கிய விஷயங்கள்26 பிப்ரவரி 2025 எந்தெந்தெ கோள்களை பார்ப்பது கடினம்? சூரியன் மறையும்போது சனி மற்றும் புதன் கோள்களும் மறையும் சமயம் என்பதால், அவற்றை பார்ப்பது கடினமானது. "சூரியன் மறைந்த பிறகு அந்த கோள்களை பார்ப்பதற்கு உங்களுக்கு சில நிமிடங்களே இருக்கும். அதன்பின், அவை அடிவானத்துக்குக் கீழே சென்றுவிடும். அதன்பின்னும் வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை இன்னும் சிறிது அதிக நேரத்துக்கு பார்க்க முடியும்," என்கிறார் ப்ளூமர். பட மூலாதாரம்,GETTY IMAGES கோள்களை பார்ப்பதற்கு சிறந்த சூழல் எது? வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் மிக பிரகாசமான கோள்கள் என்பதால் அவற்றை எளிதாக பார்க்க முடியும். அதேசமயம், செவ்வாய் கோள் தனித்துவமான சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கும். "யுரேனஸ் கோளை வெறுங்கண்ணால் பார்க்க முடியும், ஆனால் உங்களுக்கு சிறந்த பார்வை திறனும் தகுந்த சூழலும் அமைய வேண்டும்," என விளக்குகிறார் ப்ளூமர். ஒளி மாசு குறைவாகவும் அடிவானம் தெளிவாகவும் தெரியும் இடத்துக்கு சென்று பார்த்தால், அதிகமான கோள்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கூடும் என்றும் முனைவர் ப்ளூமர் அறிவுறுத்துகிறார். "நீங்கள் அப்போதுதான் உங்கள் சமையலறையிலிருந்து கொல்லைப்புறத்துக்கு வந்திருந்தால், அதன் வெளிச்சத்துக்கு நீங்கள் பழக நேரம் எடுக்கும். அதற்கு சிறிது நேரம் கொடுங்கள், அந்த வெளிச்சத்துக்கு முழுமையாக உங்கள் கண்கள் பழகுவதற்கு அரை மணிநேரம் ஆகும்," என்கிறார் ப்ளூமர். "உங்கள் மொபைல்போனை பார்ப்பதை தவிருங்கள், சௌகரியமாக இருங்கள். அடிவானத்தை தடையின்றி பார்ப்பதை உறுதிசெய்யுங்கள்." இது ஓர் ஆச்சர்யகரமான வாய்ப்பு எனக்கூறும் அவர், இரவு வானத்தை உற்றுநோக்குவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஊக்கப்படுத்துகிறார். "எப்படி விஷயங்கள் மாறுகின்றன என்பதை கவனியுங்கள்," எனக்கூறுகிறார் அவர். "சூரிய குடும்பத்தின் இயக்கவியலை கவனிப்பதற்கான ஒரு வாய்ப்பு வானத்தைப் பார்ப்பதுதான்." என்கிறார் அவர். சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 செலவிட பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள் - ஆய்வு கூறுவது என்ன?26 பிப்ரவரி 2025 இந்தியாவில் பார்க்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதன், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவு பிரகாசமாக இருக்கின்றன உலகம் முழுவதிலும் இந்த வானியல் அற்புதத்தைப் பார்க்க முடியும் என்கிறார், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் "வெறுங்கண்ணாலேயே பெரும்பாலான கோள்களை பார்க்க முடியும். யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரு கோள்களை மட்டும் தொலைநோக்கியால் பார்க்க முடியும். வானம் தெளிவாக இருக்க வேண்டும், மேக மூட்டத்துடன் இருக்கக் கூடாது என்பதை மட்டும் தான் நினைவில் கொள்ள வேண்டும்." என்றார் அவர். சென்னை பிர்லா கோளரங்கத்தின் விஞ்ஞானி லெனின் கூறுகையில், "இதை வீட்டிலிருந்தே பார்க்க முடியும். இது பிப். 28-ல் தொடங்கி சில நாட்களுக்கு தெரியும். அதன்பின், ஒவ்வொரு கோளும் வெவ்வேறு காலத்தில் அடிவானத்தில் கீழே சென்றுவிடும்." என்றார். கூடுதல் தகவல்கள்: ஜோனதன் ஓ'கலஹன், பிபிசி அறிவியல் செய்தியாளர் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgwm0re7ywo
  19. உச்சம் தொட்ட தேங்காய் விலைக்கு விரைவில் தீர்வு : அரச தரப்பு தகவல் நாட்டில் தற்போது தேங்காயின் விலையானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுப்பட்டுள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (25.02.2025) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேங்காய் பிரச்சினை அரசாங்கம் என்ற ரீதியில் தேங்காய் பிரச்சினையை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஊடாக சதோச நிறுவனத்திடம் ஒப்படைத்து மக்களுக்கு சாதாரண விலைக்கு தேங்காயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். விலங்குகளின் பிரச்சினை, உர பற்றாக்குறை மற்றும் காலநிலை காரணமாக அதிக அளவில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. மேலும் தற்போதைய தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக கம்பஹா மாவட்டத்தில் 2.5 மில்லியன் தென்னங்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த சிறப்பு தேங்காய் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/increase-in-price-of-coconuts-shortage-in-srilanka-1740476181#google_vignette
  20. டிரம்பின் 'கோல்டு கார்டு' விசா என்றால் என்ன? - கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES 27 பிப்ரவரி 2025, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் 5 மில்லியன் டாலர்கள் செலவழித்து பெறக்கூடிய "கோல்டு கார்டு" விசா திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பணக்கார வெளிநாட்டினர் நிரந்திரமாக குடியிருப்பதற்கான (permanent residency) உரிமையை வழங்கும். மேலும், அவர்கள் நாட்டின் குடிமக்கள் ஆவதற்கான பாதையாகவும் இது இருக்கும். "அவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். அதிக பணம் செலவிடுவார்கள், அதிக வரி செலுத்துவார்கள். மேலும் பலரை வேலைக்கு அமர்த்துவார்கள். இந்த திட்டம் மிகுந்த வெற்றியை பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று வெள்ளை மாளிகையிலுள்ள அதிபர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமையன்று டிரம்ப் கூறினார். தற்போது நடைமுறையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விசா வழங்கும் ஈபி-5 முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு பதிலாக, புதிய "கோல்டு கார்டு" விசா திட்டம் இருக்கும் என்றார் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவார்ட் லட்னிக். இந்தியாவுடன் முரண்படும் வங்கதேசத்தை வளைக்க சீனா முயற்சியா? டிரம்பின் முடிவுகள் அமெரிக்கா - அரபு நாடுகளுக்கு இடையே இந்தியாவை சிக்க வைத்துவிட்டதா? ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள் டிரம்ப் முன்மொழிவது என்ன ? புதிய விசாவை பெற வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தேவை குறித்து டிரம்ப் எதையும் குறிப்பிடவில்லை. "அது பணக்காரர்களுக்கானதாக இருக்கும்," என்றார் அவர். ஈபி-5 விசாக்களின் எண்ணிக்கை வரம்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் பற்றாக்குறையை குறைக்க 10 மில்லியன் "கோல்டு கார்டுகளை" அரசு விற்கலாம் என்றார் டிரம்ப். இது "சிறப்பானதாக இருக்கலாம், அல்லது இது மிகவும் அற்புதமாக இருக்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார். "இது பணக்காரர்கள் அல்லது மிகவும் திறமையான நபர்களுக்கான குடியுரிமைக்கான பாதையாகும். திறமையான நபர்கள் நாட்டிற்குள் வருவதற்கு பணக்காரர்கள் பணம் செலுத்துவார்கள். மேலும் இதுபோன்றவர்களை நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்கள் நாட்டில் நீண்ட காலம் தங்குவதற்கான உரிமையை பெறவும் நிறுவனங்கள் பணம் செலுத்தும்" என்று அவர் குறிப்பிட்டார். பணக்கார ரஷ்யர்கள் இதற்குத் தகுதி பெற முடியுமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, "ஆம், ஒருவேளை அவர்களும் தகுதி பெறலாம். எனக்கு தலைசிறந்த சில ரஷ்யப் பணக்காரர்களைத் தெரியும், அவர்கள் மிகவும் நல்ல மனிதர்கள்" என்று டிரம்ப் பதிலளித்தார். இருப்பினும், அனைத்து விண்ணப்பதாரர்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று லட்னிக் கூறினார். கோல்டு கார்டு விசா வைத்திருப்பவர்கள் குடியுரிமைக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போதைய ஈபி-5 திட்டத்தின் பயனாளிகள் (கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள்) ஐந்து ஆண்டுகள் நிரந்தர குடியிருப்பாளராக அமெரிக்காவில் வசித்த பிறகே அமெரிக்க குடியுரிமை பெற தகுதி பெற முடியும். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கான தகுதிகளை நாடாளுமன்றம் தீர்மானிக்கிறது, ஆனால் "கோல்டு கார்டு விசா" பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய திட்டத்தின் விவரங்கள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். ஈபி -5 திட்டத்தை ஏன் மாற்ற வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் கூறுகையில், டிரம்பின் "கோல்டு விசா" 35 ஆண்டுகால ஈபி-5 முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார். "ஈபி-5 திட்டம்...அர்த்தமற்றது, கற்பனையால் நிரம்பியதும் மோசடிகளால் நிறைந்ததுமாக இருந்தது. குறைந்த விலையில் கிரீன் கார்ட் பெறுவதற்கான ஒரு வழியாக இது இருந்தது. எனவே இதுபோன்ற அபத்தமான ஈபி-5 திட்டத்தை வைத்திருப்பதைக் காட்டிலும், நாங்கள் ஈபி-5 திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று அதிபர் கூறினார்'' என்கிறார் லட்னிக். வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் 1990ம் ஆண்டில் ஈபி-5 திட்டத்தை தொடங்கியது. சுமார் 1 மில்லியன் டாலர் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 10 வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டிற்கு ஈடாக உடனடியாக கிரீன் கார்டு பெறுகிறார்கள், இது எதிர்காலத்தில் அவர்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாகும். ஆனால், கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் பெரும்பாலானோர், நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்தை பெற பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஈபி-5 திட்டமானது வருடத்திற்கு 10,000 விசாக்களுக்கு வரம்பிடப்பட்டுள்ளது, மேலும் வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள பகுதிகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்காக 3,000 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. பிற குடியேற்ற விசாக்களை விட ஈபி-5 விசாக்களால் மோசடி நடவடிக்கைகள் அதிகம் ஏற்படும் ஆபத்து உள்ளது என்று 2021ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையின் அறிக்கை கண்டறிந்தது. " முதலீட்டாளர்களின் நிதி சட்டப்படி பெற்றதா என்பதைச் சரிபார்ப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இந்த விசா மூலம் கிடைக்கக்கூடிய பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றுடன் இந்த வகையான ஆபத்துக்கள் தொடர்புடையவை. இது முதலீட்டாளர்களை ஏமாற்ற தனிநபர்களை தூண்டக்கூடும் மற்றும் விசா வழங்கும் முறையில் சிலருக்கு விருப்பச்சலுகை வழங்கப்படுகின்றது எனும் தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்," என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. பில் கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது? அவர் நன்கொடைகளை அள்ளி வழங்குவது ஏன்?23 பிப்ரவரி 2025 எப்.பி.ஐ. இயக்குநராக பதவியேற்பு: இந்திய வம்சாவளி காஷ் படேலைப் பார்த்து டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அஞ்சுவது ஏன்?23 பிப்ரவரி 2025 டிரம்ப் - புதின் இடையிலான ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் உலகையே உலுக்கியது எப்படி?22 பிப்ரவரி 2025 இதே போன்ற திட்டங்கள் மற்ற நாடுகளில் எவ்வாறு செயல்படுகின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டு விசாக்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் பணக்காரர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன இது போன்ற திட்டங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. "கோல்டு கார்டு விசா" திட்டங்கள், பணக்கார வெளிநாட்டினரின் பெரிய முதலீட்டிற்கு ஈடாக நாட்டில் வசிக்கவும் வேலை செய்யவும் உரிமை வழங்குகின்றன. "கோல்டு பாஸ்போர்ட்" திட்டங்களும் சில கரீபியன் நாடுகளில் பிரபலமாக உள்ளன. இந்த திட்டங்களின் மூலம், அந்த நாட்டில் வேலை செய்யவும் வாக்களிக்கவும் உள்ள உரிமைகள் உட்பட குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் சுதந்திரங்களையும் பணக்கார தனிநபர்கள் பெறுகின்றனர். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், கிரீஸ், மால்டா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இத்தாலி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட நாடுகள், பணக்கார தனிநபர்களுக்கு "கோல்டு விசாக்களை'' வழங்குகின்றன என அறியப்படுகின்றது. இருப்பினும், இந்த திட்டங்கள் அதிகமான விமர்சனங்கள் மற்றும் கண்காணிப்பிற்கு உட்பட்டுள்ளன. "(அவை) வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சியை தூண்டும், ஆனால் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சட்டபூர்வமான வருவாய் போல மாற்றி, ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புடைய பணத்தை ஒழுங்குபடுத்த இது உதவலாம்," என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) 2023ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊழலுக்கு எதிராக செயல்படும் உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள திட்டங்கள் "உண்மையான முதலீடு அல்லது இடம்பெயர்வு பற்றியது அல்ல, மாறாக ஊழல் நலன்களுக்கு சேவை செய்வது" என்று எச்சரிக்கிறது. 2022 ஆம் ஆண்டில், சிவில் உரிமைகள், நீதி மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழு கோல்டு பாஸ்போர்ட்டுக்களை தடை செய்வதற்கு வாக்களித்தது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விசா இல்லாமல் வருகை தர அனுமதிக்கும் மூன்றாம் தரப்பு நாடுகளை தங்களுடைய பாஸ்போர்ட் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தியது. இந்த காரணங்களே, பிரிட்டன் , ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் கிரீஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் தங்களுடைய கோல்டு விசா திட்டங்களை திரும்பப் பெற வழி வகுத்தன. எடுத்துக்காட்டாக, ஸ்பெயின், 2013 இல் உருவாக்கப்பட்ட அதன் "கோல்டு விசா" திட்டத்தை நீக்கியது. இது முதலீட்டாளர்களுக்கு 500,000 யூரோ(525,000 டாலர்) அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களை வாங்குவதற்கு ஈடாக விசா வழங்கியது. இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி காலக்கெடு 3 ஏப்ரல் 2025 ஆகும். இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பாலிடிக்கல் சயின்ஸ் (London School of Economics and Political Science) மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) இணைந்து நடத்திய ஐரோப்பிய ஒன்றிய கோல்டு விசாக்கள் பற்றிய ஆய்வு இந்த திட்டங்களின் பொருளாதார நியாயத்தை கேள்விக்குள்ளாக்கியது. ஆய்வின் முடிவில், இவை "மிக குறைந்த" பொருளாதார தாக்கத்தைதான் ஏற்படுத்துகிறது என கூறப்பட்டது. புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் உலகளாவிய வலையமைப்பான, 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தால்' நடத்தப்பட்ட விசாரணை அக்டோபர் 2023ல் வெளியிடப்பட்டது. போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் லிபிய கேப்டன் மற்றும் துருக்கியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு துருக்கிய தொழிலதிபர் ஆகிய இருவராலும் இந்த திட்டங்களின் மூலம் டொமினிகன் பாஸ்போர்ட்டை வாங்க முடிந்தது என்பது இந்த விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c86ppw8yz91o
  21. Published By: RAJEEBAN 27 FEB, 2025 | 12:31 PM குழந்தைகளிற்கான போர்வையில் போர்த்தப்பட்டு தந்தையின் அரவணைப்புடன் ஷாம் அல் சான்பாரி, இரண்டு கிழமைக்கு முன்னர் மிகவும் கடினமான முயற்சியின் பின்னர் சாத்தியமான யுத்த நிறுத்தம் காரணமாக காசாவில் ஒரளவு அமைதி நிலவிய இரண்டு கிழமைக்கு முன்னர் உலகிற்கு வந்தார். எனினும் காசா யுத்தம் அவளின் உயிரையும் பறித்தது. திங்கட்கிழமை இரவு காசாவில் சமீபத்தில் கடும் குளிரினால் உயிரிழந்த ஏழு குழந்தைகளில் ஒருவராக ஷாம் அல் சான்பாரி மாறினாள். சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அவளது குடும்பம் ஆயிரக்கணக்கான ஏனைய பொதுமக்கள் போல கடும் குளிரில் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களால் அவர்களின் வீடுகள் வாழமுடியாதவையாக மாற்றப்பட்ட பின்னரே அவர்கள் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர். நள்ளிரவு குழந்தையின் தாயார் அவளை உறங்கச்செய்தார் என தந்தை முகமட் தவ்பீக் அல்சன்பாரி என்பிசி செய்தியாளர்களிற்கு இதனை தெரிவித்தார். காசாவின் வடக்குகிழக்கில் உள்ள பெய்ட் இன் கனூனில் அவர் இதனை தெரிவித்தார். காலையில் அவளை நாங்கள் எழுப்ப முயன்றோம் அவள் எழும்பவில்லை என அவர் தெரிவித்தார். தனது மகளின் சிறிய உடல் சிறிய புதைகுழிக்குள் வைக்கப்படுவதை பார்த்தபடி அவர் இதனை தெரிவித்தார். கடந்த இரண்டு வாரகாலப்பகுதியில் கடும் குளிரால் மேலும் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன என காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் முனீர் அல் பேர்ஸ் தெரிவித்தார். காசாவில் வீடுகள் அழிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலும் ஏனைய தற்காலிக தங்குமிடங்களிலும் உறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சிலா அப்துல் காதர் என்ற இரண்டு வயது குழந்தையே இறுதியாக கடும்குளிர் காரணமாக உயிரிழந்தது என பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் முனீர் அல் பேர்ஸ் தெரிவித்தார். எனது மகள் இறப்பதற்கு முன்னர் 100 வீதம் ஆரோக்கியமானவளாக காணப்பட்டாள், விளையாடினால் வழமை போல சிரித்தால் என என தந்தை முகமட் தவ்பீக் அல்சன்பாரி தெரிவித்தார். ஆனால் நான் கூடாரத்தில் வசிக்கின்றேன் கடும் குளிர் அவள் எப்படி உயிர் தப்பமுடியும் என அவர் கேள்வி எழுப்பினார். காசாவில் கடந்த ஒருவாரகாலமாக இரவில் குளிர் 10டிகிரிக்கும் குறைவானதாக காணப்படுகின்றது, என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் குளிரினால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம். ஒருவருடத்திற்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் முற்றாக அழிந்துள்ளன. இதன் காரணமாக உயிரை பாதுகாப்பதற்காக அடிப்படை மருத்துவ வசதிகளை காசா மக்கள் பெறுவது கூட சாத்தியமற்ற விடயமாகியுள்ளது. காசாவில் பாடசாலைகள்மருத்துவமனைகள் உட்பட 70 வீதமான உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்,65வீதமான வீடுகளும் வீதிகளும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஒக்டோபர் 2023ம் திகதி ஒக்டோபர் மாதம் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக 48300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் ஒரு இரண்டுவயது குழந்தையாவது உயிரிழந்துள்ளதை பதிவு செய்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த பாலஸ்தீனியர்களிற்கான மருத்துவ உதவி என்ற பிரித்தானிய அமைப்பொன்று தெரிவித்துள்ளது. குளிர் காரணமாகவே அந்த குழந்தை உயிரிழந்தது,குளிர் பாதிப்பு காரணமாக மேலும் மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/207820
  22. Published By: DIGITAL DESK 3 27 FEB, 2025 | 04:49 PM எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு நாளை வெள்ளிக்கிழமை (28) முதல் தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தவுள்ளனர். இந்நிலையில், இன்றையதினம் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீன்வளத்துறை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கைவிட கோரி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து தமிழக மீனவர்கள் நாளையதினம் திட்டமிட்டபடி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207845
  23. Published By: VISHNU 27 FEB, 2025 | 03:47 AM (நா.தனுஜா) இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் செவ்வாய்கிழமை (25) இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் எனவும், நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. அதேபோன்று உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மேரி லோலர், மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி பல பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/207783
  24. Published By: VISHNU 27 FEB, 2025 | 03:52 AM (நா.தனுஜா) அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது. அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் செவ்வாய்கிழமை (25) கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே ரஜீவ் அமரசூரிய மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: ஜவகர்லால் நேருவினால் 1951 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கருத்து, அடிக்கடி திருத்தங்களுக்கு உட்படுத்தப்படக்கூடாத அரசியலமைப்பின் மேன்மைத்தன்மையைக் காண்பிக்கின்றது. இருப்பினும் இலங்கையின் அரசியலமைப்பானது கடந்த இரு தசாப்தகாலத்தில் 17 ஆவது திருத்தம் முதம் 21 ஆவது திருத்தம் வரை பல திருத்தங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. இத்திருத்தங்கள் அவை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் நிலவிய அரசியல் மற்றும் சமூக ரீதியான வல்லாதிக்கம் அரசியலமைப்பின் நேர்மைத்தன்மையையும், அரசியலமைப்புவாத கோட்பாட்டையும் புறந்தள்ளியிருப்பதைப் பிரதிபலிக்கின்றன. அரசியலமைப்புவாத கோட்பாடானது ஜனநாயகம், ஆட்சியியல் நிர்வாகம், அதிகாரப்பகிர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கின்றது. அரசியலமைப்பானது அரச இயங்குகையை வடிவமைக்கும் அடிப்படை சட்டக்கட்டமைப்பாகக் காணப்படுகின்றது. நாட்டின் சட்ட, அரசியல் மற்றும் சமூகக்கட்டமைப்பை வழிநடத்தும் மீயுயர் சட்டமாக அரசியலமைப்பு விளங்குகின்றது. அரசியலமைப்பு என்பது சகலரையும் உள்ளடக்கிய, பரந்துபட்ட சட்டக்கட்டமைப்பைக் கொண்டிருக்கவேண்டும். இலங்கையின் அரசியலமைப்பு வரலாறானது ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதும், வலுவிழக்கச்செய்வதுமென மாறி மாறி ஏற்ற இறக்கங்களைக் கொண்டமைந்திருக்கின்றது. அரசியலமைப்பும், ஆட்சியியல் கட்டமைப்புக்களும் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி கூட்டிணைந்து இயங்கவேண்டியது அவசியமாகும். இருப்பினும் இலங்கை இன்னமும் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முழுமையான இயலுமையை அடைந்துகொள்ளவேண்டியிருக்கின்றது. அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது. அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/207785
  25. ABANDONED 9th Match, Group A (D/N), Rawalpindi, February 27, 2025, ICC Champions Trophy PrevNext Pakistan Bangladesh Match abandoned without a ball bowled

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.