Everything posted by ஏராளன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
துடுப்பாட்டத்திற்கு சாதகமான பிட்ச் போல.
-
உலகெங்கும் அமெரிக்கா தங்கத்தை வாங்கிக் குவிப்பது ஏன்? தட்டுப்பாடு ஏற்படுமா? இந்தியாவில் என்ன பாதிப்பு?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஜித் காத்வி பதவி, பிபிசி செய்தியாளர் 22 பிப்ரவரி 2025, 09:44 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தங்கத்தின் விலை தினமும் புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், தங்கம் பெரிய அளவில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதையும் பார்க்க முடிகிறது. லண்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பெட்டகங்களிலிருந்து பல ஆயிரம் கிலோ தங்கம் தற்போது அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சர்வதேச செய்திகளின்படி, அமெரிக்க தங்க வியாபாரிகள் விமானங்களில் தங்கத்தை நியூயார்க் நகருக்கு எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு வகையில் லண்டனில் தங்கப் பற்றாக்குறையையும், அமெரிக்காவில் தங்கப் பதுக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தற்போது உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தங்கத்தை ஈர்க்கும் பிரம்மாண்ட காந்தம் போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தற்போதுவரை, பிரிட்டன் தலைநகர் லண்டனில்தான் மிக அதிக அளவு தங்கம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் அதிக தங்கம் குவிந்துள்ளதாக வால் ஸ்டீரிட் ஜர்னல் இதழில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது. ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா? பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி: எளிய முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? 9 கேள்விகளும் பதில்களும் டாலருக்கு எதிராக ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்? இதற்கும் டிரம்புக்கும் என்ன தொடர்பு? வேகமாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம், மெதுவாக சரியத் தொடங்குகிறதா? - ஓர் ஆய்வு லண்டனைத் தவிர, ஸ்விட்சர்லாந்திலிருந்தும் தங்கம் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தங்கத்திற்கான தேவை மிக அதிகமாக இருப்பதால், ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தங்கத்திற்கான ஸ்பாட் விலை செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத அளவு ஒரு அவுன்சுக்கு (சுமார் 28 கிராம்) 2,942.70 டாலர்கள் என்ற உச்சத்தை தொட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை 2,932 டாலராக அதன் விலை இருந்தது. தங்கத்தின் விலை இதே போன்று உயர்ந்துகொண்டிருந்தால், முதல் முறையாக அதன் விலை 3,000 டாலர்களை கூட எட்டக்கூடும். எப்போது தொடங்கியது? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பே லண்டன் மற்றும் உலகின் பிறப்பகுதிகளிலிருந்து தங்கம் அமெரிக்காவிற்கு செல்வதற்கு காரணம் என சொல்லப்படுகிறது . ஸ்டீல் மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது 25 % வரி விதித்ததைப் போல், டொனால்ட் டிரம்ப் தங்கத்தின் மீது 10 % வரி விதிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவே தங்க வியாபாரிகளை அவசரமாக தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல தூண்டியிருக்கிறது. அமெரிக்க பொருட்கள் மீது வரிவிதிக்கும் அனைத்து நாடுகள் மீதும் வரியை அதிகரிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்ததால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டிரம்பின் திட்டம் அவர் நினைத்தது போல் நடந்தால், வரும் நாட்களில் சீனா, கனடாவோடு, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிக அதிக வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 2024 நவம்பர் 5-ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்காவின் காமெக்ஸில் (COMEX - தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை வர்த்தகம் செய்யும் ஒரு முக்கிய சந்தை) தங்கத்தின் கையிருப்பு சுமார் 533 டன்னாக இருந்தது. அதன் பின்னர் அது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டிசம்பர் 29ஆம் தேதி, தங்கத்தின் கையிருப்பு 681 டன்னாக இருந்தது. ஜனவரி 29, 2025-ல் அது 963 டன்னாக அதிகரித்தது. ஜனவரி 31ஆம் தேதி இந்த கையிருப்பு 1000 டன்களை கடந்தது. பிப்ரவரி முதல் வாரதில் 1100 டன் கையிருப்பு இருந்தது. தங்கத்தை அதிகம் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவிற்கு செல்லவேண்டிய தங்கம் இப்போது லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருக்கிறது என்று ராய்ட்டர்ஸின் செய்து ஒன்று கூறுகின்றது. நடிகை வழக்கில் சீமான் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் கூறியது என்ன? இன்றைய முக்கிய செய்திகள்22 பிப்ரவரி 2025 வந்தவாசி பஞ்சமி நில சர்ச்சை: 'அரை மணிநேரத்துல மொத்தமா அழிச்சுட்டாங்க' - பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் தங்கம் விலை புதிய உச்சங்களை தொட்டிருப்பதால், அதனை வாங்குவது பாதிக்கப்படும் உலகிலேயே அதிக தங்க கையிருப்பைக் கொண்டுள்ள அமெரிக்கா பிபிசியிடம் பேசிய ஹெச்டிஎஃப்சி செக்யூரிடிஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் செளமில் காந்தி, "தங்கம் லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருக்கின்றன," என்கிறார். "ஒன்று, டிரம்ப் வரி விதிப்பார் என்ற அச்சம். இந்த வரி எவ்வளவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அது 10% அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இதுபோன்ற வரிகள் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான செலவை அதிகரிக்கும். எனவே தங்க இறக்குமதியாளர்கள் இழப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்கனவே குறைக்க தொடங்கிவிட்டனர்." "அத்தோடு, உலகிலேயே அதிக தங்க கையிருப்பு அமெரிக்காவில் இருக்கிறது. அது நீண்ட காலமாக தணிக்கை செய்யப்படவில்லை. எனவே வங்கிகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் லண்டன் பெட்டகங்களில் இருக்கும் தங்களது தங்கத்தை கணக்கில் காட்டுவதற்காக அமெரிக்காவிற்கு கொண்டு செல்கின்றன." "வரி யுத்தமும், சர்வதேச நிச்சயமற்ற தன்மையும்தான் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். தனது தங்க கையிருப்பை ஜனவரியில் அதிகரித்த சீனாவின் மத்திய வங்கி போல பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக்கொண்டிருக்கின்றன," என்கிறார் செளமில் காந்தி. "முக்கியமாக, பிரிக்ஸ் நாடுகள் தற்போது டாலர்களை குறைத்து கொண்டு தங்களது தங்க கையிருப்பை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனாலேயே தங்கத்தின் விலை உயர்கிறது" என்றும் அவர் கூறினார். டிராகன் விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? கல்லூரி நாயகனாக பிரதீப் ரங்கநாதன் கவர்ந்தாரா?21 பிப்ரவரி 2025 இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே சட்டவிரோத கும்பல் தலைவரை கொன்ற நபர்21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகிலேயே அதிகம் தங்கம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று இந்தியாவில் திருமணங்களுக்கு தங்கம் வாங்குவது குறையுமா? தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், திருமணத்திற்கு தங்கம் வாங்க விரும்பும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆமதாபாத் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜிகர் சோனி பிபிசி குஜராத்தியிடம் பேசிய போது," தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காக நிதி சேமித்து வைத்திருக்கும் மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் வாங்க வேண்டும் என நினைத்திருப்பார்கள். ஆனால் தற்போதைய விலையில் அவர்களால் குறைவான அளவிலே வாங்க முடியும்'' என்றார். "10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயாக மாறலாம்'' "தங்கத்தின் விலை உயர்ந்தாலும், மக்கள் அதன் மீதான ஆர்வத்தை இழந்துவிடமாட்டார்கள். மக்கள் தற்போது 14 முதல் 18 கேரட் தங்க நகைகளையும் வாங்குகின்றனர். இவை குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. " என்கிறார் அவர். "அண்மையில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் பலர் பங்குச்சந்தையில் ஆர்வத்தை இழந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டாக கருதுகின்றனர்." முன்னதாக டிரம்பின் வருகைக்கு பிறகு, கூடுதலாக 600 டன் தங்கம் அமெரிக்காவில் குவிக்கப்பட்டிருப்பதாகவும், தங்கத்தின் அடிப்படையில் அமெரிக்கா அதிக டாலர்களை அச்சடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறார் ஹரேஷ் ஆச்சார்யா. இண்டியா புல்லியன் ஆண்டு ஜூவல்லர்ஸ் அசோசியேசன் (IBJA) எனப்படும் இந்திய தங்க மற்றும் நகைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இயக்குநராக அவர் உள்ளார். இவ்வாறு நடைபெற்றால், வரும் மாதங்களில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ஒரு லட்சம் ரூபாயை எட்டக்கூடும். இந்தியாவில் பலர், புதிய தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து நகைகளை தயாரித்து வருகின்றனர். மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம்: மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்னைக்கு என்ன தீர்வு?4 மணி நேரங்களுக்கு முன்னர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் விமர்சனம்: தனுஷ் இயக்கிய 3வது படம் எப்படி இருக்கிறது?21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வரும் நாட்களில் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.1 லட்சத்தை தொடக்கூடும் இந்தியாவுக்கான தங்கமும் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது அமெரிக்காவிற்கு அதிக அளவில் தங்கம் நகருவதால், இந்தியாவிலிருந்தும் தங்கம் அமெரிக்காவை சென்றடைந்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஒரு முன்னணி வங்கி இந்தியாவில் சுங்க வரியில்லா பகுதியில் சேமித்து வைத்திருந்த தங்கத்தை இரண்டு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவிற்கு அனுப்பியது. பொதுவாக பல வங்கிகள் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து சுங்க வரி இல்லா பகுதியில் சேமித்து வைக்கும். அதன் பின்னர், தங்கத்திற்கு தேவை இருக்கும்போது மட்டும் அவர்கள் இறக்குமதி வரியை செலுத்தி தங்கத்தை எடுக்கிறார்கள். இவை தவிர, அவர்கள் விரும்பினால் அந்த தங்கத்தை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படிச் செய்தால் அவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை. துபை சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வரும் தங்கமும் அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. இந்த தங்கம் சாதாரணமாக இந்தியாவிற்கு வரும். பிப்ரவரி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏழாவது வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்க வியாபாரத்தின் மிகப்பெரிய வர்த்தக மையம் லண்டன். ப்ளும்பர்க் செய்தியின்படி லண்டனின் பெட்டகங்களில் 800 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள தங்கம் வைக்கப்பட்டுள்ளது. ஹலால் முறையில் விலங்குகள் எவ்வாறு கொல்லப்படும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? 6 கேள்வி - பதில்கள்22 பிப்ரவரி 2025 மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கம், பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம் - பிபிசி புலனாய்வு21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லண்டன் பெட்டகங்களிலிருந்து பெரிய அளவிலான தங்கம் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குன்றன உலக தங்க கவுன்சில் அறிக்கை ஒன்றின்படி, உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தற்போது பெரிய அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. மத்திய வங்கிகள் மூன்றாவது வருடமாக 1000 டன்னுக்கு மேல் தங்கத்தை வாங்கியுள்ளன. 2024-ல் அந்த வங்கிகள் 1,044 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. 2024-ல் அதிகபட்சமாக போலந்து 89.5 டன் தங்கம் வாங்கியிருந்தது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி 72 டன்னுக்கு மேல் தங்கம் வாங்கியது. மிண்ட் நாளிதழ் செய்தியின்படி, இந்தியாவின் தங்கம் கையிருப்பு 2021ஆம் ஆண்டு 754 டன்னாக இருந்தது. 2024-ல் 876 டன்னாக அதிகரித்தது. இந்தியா அதன் அன்னிய செலாவணியில் 11% மேல் தங்கமாக வைத்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y050k12rko
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு
தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளின் தடையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு 22 FEB, 2025 | 05:16 PM தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளின் தடையை நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். குறித்த அமைப்புகளின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பெயர் பட்டியலையும் அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/207360
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அது சரி நீங்க பழமா? மண்ணா?
-
வட் வரி செலுத்த தவறிய அர்ஜுன் அலோசியஸுக்கு ஆறு மாத சிறை
அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் விடுதலை 22 FEB, 2025 | 05:58 PM அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் இன்று சனிக்கிழமை (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவர் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நீதிமன்றம் வழங்கிய 06 மாத கால சிறைத்தண்டனை முடிவடைந்த பின்னர் இருவரும் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207407
-
ஆரையம்பதியில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் ; இருவர் படுகாயம்
22 FEB, 2025 | 04:11 PM (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு, ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (20) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் காயமடைந்தவர்களுக்கும் வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்திய குழுவிற்கும் இடையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யாழ் ஆவாக்குழுவின் பாணியில் இடம்பெற்ற சம்பவத்தினால் பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/207381
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
சாம்பியன்ஸ் டிராபியில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் - இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை துபையில் பலப்பரீட்சை நடத்துகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த போட்டி, அனல் பறக்கும் பந்துவீச்சு, இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஓவரின் ஒவ்வொரு பந்து, த்ரில்லான முடிவு என அனைத்துக்கும் தீனி கொடுக்கும் ஆட்டம் நாளை துபையில் நடக்கிறது. துபையில் நாளை (23ம்தேதி) நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்குகின்றன. ஐ.சி.சி. நடத்தும் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்துகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களிலும், இந்திய அணி 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்? பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜின் நம்பிக்கை பயணம் சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்? சாம்பியன்ஸ் டிராஃபி 2025: வெற்றிநடை போடுமா இந்திய அணி? துபை ஆடுகளம் எப்படி? ஓர் ஆண்டுக்குப் பின்.. இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் கடைசியாக 2023-ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் அகமதாபாத் நகரில் நடந்த ஆட்டத்தில் மோதின. அதன்பின் மீண்டும் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுகின்றன. சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டதால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபைக்கு மாற்றப்பட்டன. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த ஆட்டங்களும் துபையில் நடக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. துபையில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து உற்சாகத்துடன் இருக்கிறது. நாளை நடக்கும் 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது. மறுபுறம் பாகிஸ்தானைப் பொருத்தவரை, சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அணியிடம் தோற்றாலும் அந்தத் தொடர் முழுவதும் பாபர் ஆஸம், பக்கர் ஜமான், சகா ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றாலும், அந்த அணியில் இளம் வீரர்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் பாகிஸ்தானுக்கு முக்கியமான ஆட்டமாகும். இதில் தோல்வி அடைந்தால், தொடரை விட்டே வெளியேற நேரிடும் என்பதால் பாகிஸ்தான் அணி கவனமாக விளையாடும். இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஆனாலும், வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் தவறுகள், சரிசெய்ய வேண்டிய விஷயங்கள், சவால்கள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா?19 பிப்ரவரி 2025 பிபிசியின் வளரும் வீராங்கனை விருது பெற்ற ஷீத்தல் தேவி யார்?19 பிப்ரவரி 2025 1. விராட் கோலி மோசமான ஃபார்ம் கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியத் தொடர்களில் இருந்து எழுப்பப்படும் கேள்வி விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம். விராட் கோலி மிகப்பெரிய மேட்ச்வின்னர்தான். பல போட்டிகளை இவர் ஒற்றை ஆளாக வென்று கொடுத்துள்ளார் என்ற வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்று இவரின் ஃபார்ம் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இங்கிலாந்து தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் 38 பந்துகளில் 21 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். வேகப்பந்துவீச்சில் ஆப் திசையில் விலகிச் செல்லும் பந்துக்கு விராட் கோலி ஆட்டமிழப்பதும், சுழற்பந்துவீச்சில் லெக் ஸ்பின்னுக்கு ஆட்டமிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. 2023 உலகக் கோப்பையில் அதிக ரன் அடித்தவர் என்ற பெயரை கோலி பெற்றிருந்த போதிலும் அதற்கான நம்பிக்கையை சமீபத்தில் எந்தத் தொடரிலும் அவர் வெளிப்படுத்தவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் லெக் ஸ்பின்னர் ரிசாத் ஹூசைனின் பந்துவீச்சில் தொடக்கத்திலிருந்தே தடுமாறிய கோலி அவர் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தார். 2024-ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் கோலி விளையாடத் தொடங்கியதிலிருந்து லெக் ஸ்பின்னர்களின் 51 பந்துகளைச் சந்தித்து அதில் 31 ரன்கள் மட்டுமே கோலி அடித்துள்ளார். அதேசமயம், 5 முறை லெக்ஸ்பின்னர்களிடம் கோலி விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கவலைக்குரியதாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோலியின் பேட்டிங் ஃபார்ம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கவலைக்குரியதாக இருக்கும். பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது வென்ற அவ்னி லேகரா வாழ்க்கையின் திருப்புமுனை என்ன?18 பிப்ரவரி 2025 பிபிசி நட்சத்திர வீராங்கனை விருது பெற்ற தமிழ்நாட்டின் துளசிமதி முருகேசன்18 பிப்ரவரி 2025 2. கவலை தரும் சுழற்பந்துவீச்சு துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது. எப்போதும் இல்லாத வகையில் இந்திய அணி 5 சுழற்பந்துவீச்சாளர்களை இந்த முறை தேர்ந்தெடுத்துள்ளது. அப்படியிருக்கும் போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக அச்சுறுத்தலை தரவில்லை. அக்ஸர் படேல் 9-வது ஓவரை வீசிய போது ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்புக் கிடைக்க வேண்டியது கேப்டன் ரோஹித் சர்மாவால் தவறியது. அதன்பின் 27 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களே மாறிமாறி வீசியும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. ஜடேஜா 9 ஓவர்கள் வீசி சிக்கனமாக 37 ரன்கள் மட்டுமே கொடுத்தாலும் விக்கெட் இல்லை. குல்தீப் யாதவ் 10 ஓவர்களை முழுமையாக வீசி 43 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. சுழற்பந்துவீச்சில் இந்திய பந்துவீச்சாளர்களைவிட, வங்கதேச வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்தனர். எக்கானமி ரேட்டும் 4.29 என இருந்தது. ஆனால், வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வீசி 3.75 எக்னாமி வைத்திருந்தனர். ஆக இந்திய அணி 5 சுழற்பந்துவீச்சாளர்களை எந்த நம்பிக்கையில் எடுத்ததோ அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய கடமை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்தனர். 3. ரோஹித் சர்மாவின் பெரிய இன்னிங்ஸ் எங்கே? ரோஹித் சர்மா 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஓரளவுக்கு நல்ல ஃபார்மில் ஆடி வந்தார். ஆனால், ஏதேனும் பெரிய ஷாட்டுக்கு முயலும் போது விக்கெட்டை இழப்பதும், நீண்டநேரம் களத்தில் நிலைத்திருக்காமல் ஆடுவது, பெரிய இன்னிங்ஸை வழங்காமல் இருப்பது அவரின் இயல்பான ஆட்டத்தின் மீது கேள்வியை எழுப்புகிறது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில்கூட ரோஹித் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 41 ரன்களுடன் பவர்ப்ளே முடியும் போது வெளியேறினார். ரோஹித் பெரிய ஷாட்டுக்கு முயன்ற போது கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 18 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். அதில் 6 முறை 40 முதல் 50 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்து, அரைசதத்தை நிறைவு செய்யமுடியாமல் வீழ்ந்துள்ளார். 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில்கூட ரோஹித் சர்மா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் விரைவாக ஆட்டமிழக்கும் போது, இயல்பாகவே நடுவரிசை பேட்டர்கள் தன்னம்பிக்கையை அது அசைத்துப் பார்த்துவிடும். சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாமல் இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியுமா?13 பிப்ரவரி 2025 பார்வை மாற்றுத்திறனாளிகள் ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுக்க உதவும் கைட் ரன்னர்கள்10 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 41 ரன்களுடன் பவர்ப்ளே முடியும் போது வெளியேறினார். 4. பேட்டிங்கில் மந்தம் இந்திய அணி 8-வது வீரர் வரை வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 40 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டிய இலக்கை 46 ஓவர்கள் வரை இந்திய பேட்டர்கள் இழுத்தடித்தனர். இதனால், இந்திய அணி வென்றாலும், நிகர ரன்ரேட்டில் பின்தங்கியது. கேப்டன் ரோஹித் அதிரடியான தொடக்கத்தை அளித்துவிட்டு ஆட்டமிழந்தபின், அதைத் தொடர விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் தவறிவிட்டனர். முதல் பவர்ப்ளேயில் 75 ரன்கள் சேர்த்த இந்திய அணி அடுத்த 20 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியின் மந்தமான பேட்டிங்தான் எளிமையாக சேஸ் செய்ய வேண்டிய ஸ்கோரை 46 ஓவர்கள் வரை ஆட்டம் நீடிக்க காரணமானது. ஆதலால், நடுப்பகுதி ஓவர்களில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து வேகமாக ரன் சேர்ப்பதில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும். கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை27 ஜனவரி 2025 3 ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியாவின் முதல் கோல்ஃப் வீராங்கனை - யார் இவர்?20 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதல் பவர்ப்ளேயில் 75 ரன்கள் சேர்த்த இந்திய அணி அடுத்த 20 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 5. நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறல் கேப்டன் ரோஹித் ஏற்கெனவே ஒரு பேட்டியில் கூறுகையில் " ஒருநாள் கிரிக்கெட்டில் நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியமானது. இந்த ஓவர்கள்தான் டெத் ஓவரை நிர்ணயிக்கும் ஓவர்கள், ஆட்டத்தையும் திருப்பும் ஓவர்கள், இதில் கவனம் செலுத்துவது அவசியம்" என்று தெரிவித்திருந்தார். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜாகீர் அலி, தவ்ஹீத் இருவரையும் 154 ரன்கள்வரை பார்ட்னர்ஷிப் அமைக்க இந்திய பந்துவீச்சாளர்கள் அனுமதித்ததால்தான் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டால், எதிரணி பேட்டர்கள் நங்கூரம் அமைத்து களத்தில் நிலைத்து நின்று ஆட்டத்தை தட்டிப் பறிக்க வாய்ப்பாக அமைந்துவிடும். ஆதலால், நடுப்பகுதி ஓவர்களில் எந்த பந்துவீச்சாளருக்கு ஓவரை வழங்கலாம், எதிரணியின் பலவீனம் என்ன என்பதை உணர்ந்து வியூகம் அமைத்து பந்துவீசுவது அவசியம். ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி?15 பிப்ரவரி 2025 ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன?5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் தவறிவிடுகின்றனர். 6. பீல்டிங்கில் தேர்ச்சி அவசியம் மோசமாக பீல்டிங் செய்வது யார் என்பதில் பாகிஸ்தானுடன் போட்டியிடும் அளவுக்கு இந்திய அணியின் பீல்டிங் மோசமாகியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் கைக்கு கிடைத்த கேட்சை தவறவிட்டார். ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த ஸ்டெம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தவறவிட்டதால் ஜாகீர் அலி தப்பித்தார். இந்திய அணியின் பீல்டிங் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாகவே இருந்தது. கேப்டன் ரோஹித் 2023-ஆம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை கோட்டை விட்டுள்ளார். 22 கேட்ச் வாய்ப்புகளில் 12 கேட்சுகளை மட்டுமே ரோஹித் பிடித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேப்டன் ரோஹித் 2023-ஆம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை கோட்டை விட்டுள்ளார். 7. வலதுகை சுழற்பந்துவீச்சு தேவை துபை ஆடுகளத்தை நம்பி இந்திய அணி முகமது ஷமி, ஹர்சித் ராணா ஆகிய இரு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு வங்கதேசத்தை எதிர்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் அணியிடம் வலுவான வேகப் பந்துவீச்சு இருக்கிறது. துபை ஆடுகளத்தை பாகிஸ்தான் வீரர்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக இந்திய அணி வேகப் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஹர்திக் பாண்டியா பகுதிநேரப் பந்துவீச்சாளராக இருந்தாலும், ராணாவுக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அல்லது இருவரையும் சேர்த்து 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம். சுழற்பந்துவீச்சில் சினாமேன் எனப்படும் ரிஸ்ட் ஸ்பின்னர்களை விளையாடி பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக பழகவில்லை என்பதால், வலது கை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் இடதுகை பேட்டர்கள் 4 பேர் இருப்பதால் வலதுகை சுழற்பந்துவீச்சாளர்களுடன் செல்வது அவசியம். தற்போது அணியில் இருக்கும் அக்ஸர், குல்தீப், ஜடேஜா மூவருமே இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி, அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை சேர்த்து, குல்தீப் யாதவை பெஞ்சில் அமர வைக்கலாம். விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா?31 ஜனவரி 2025 ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் எதிரணிகளை கலங்கடித்த மறக்க முடியாத 10 தருணங்கள்29 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி, அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை சேர்க்கலாம். 8. பும்ரா இல்லாததால் பலவீனம் பிரதான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் மினி உலகக் கோப்பையை இந்தியா சந்திக்கிறது. தேவைப்படும் நேரத்தில் எதிரணி ரன் ரேட்டைக் குறைப்பது, விக்கெட் வீழ்த்துவது என பும்ரா சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளார். அவரின் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் ஷமி இருக்கிறார் முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி தனது ஃபார்மை நிரூபித்தது நம்பிக்கையளித்தாலும், அடுத்த போட்டியில் கிடைக்கும வெற்றி அரையிறுதிக்கு கொண்டு செல்லும். அதற்கு ஷமி, அர்ஷ்தீப் சிங், ராணா ஆகிய மூவரின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருத்தல் அவசியம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0egnlx8d8lo
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பயங்கரவாத சம்பவமில்லை- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களை தடுத்துவைக்க முடியாது – அம்பிகா சற்குணநாதன் 22 FEB, 2025 | 02:51 PM கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பயங்கரவாத சம்பவமில்லை சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார் அவர் சமூக ஊடக பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படவுள்ளனர் என்ற தகவல் உண்மை என்றால்இது பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்யும் செயல், இது பயங்கரவாத குற்றமல்ல, பயங்கரவாத குற்றமல்லாதவற்றிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும்போது அதுவழமையானதாக மாற்றப்படுகின்றது, இது அதளபாதாளத்தை நோக்கிய வீழ்ச்சியாகும்.தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என தெளிவாக தெரிவித்துள்ளது நம்பகதன்மை மிக்க புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் தெரிவித்தார் என ஒக்டோபர் 29ம் திகதி தகவல்கள் வெளியாகியிருந்தன. அரசியல் பழிவாங்கலுக்காக அதனை பயன்படுத்தமாட்டோம்,என அவர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/207373
-
தமிழகத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது சிவகங்கை
தமிழகத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது சிவகங்கை கப்பல் ! Published By: DIGITAL DESK 7 22 FEB, 2025 | 02:16 PM நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இன்று சனிக்கிழமை (22) காலை இலங்கை காங்கேசன்துறையை , சிவகங்கை கப்பல் வந்தடைந்தது. இவ்வாறு தமிழகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலானது இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா - இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று துவங்கும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது. 3 மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் ஆரம்பித்ததால், இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த கப்பலானது இன்று மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. அத்துடன் இந்த கப்பல் சேவையானது செவ்வாய் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களும் இடம்பெறும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/207365
-
யாழ். கோப்பாயில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் வாகன விபத்து - ஒருவர் பலி, ஐவர் காயம்
Published By: DIGITAL DESK 7 22 FEB, 2025 | 03:44 PM யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த 30 வயதுடையவரே விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , தப்பி சென்ற வாகனத்தினை கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர். https://www.virakesari.lk/article/207379
-
மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு - மட்டக்குளியில் சம்பவம் Published By: VISHNU 22 FEB, 2025 | 09:05 AM கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிஸார் கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள் இருவரையும் அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த ஒருவர் பிலியந்தலையைச் சேர்ந்த அருண என்ற 32 வயதானவர் மற்றையவர் மட்டக்குளி, மோதரை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்னர். சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறுகையில், 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் கடைக்குள் சசிக்குமார் என்ற 38 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்டது. சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும்போது பொலிஸாரால் துரத்திச் சென்று கைது செய்யப்பட்டனர்." கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு தாமாக, சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த ஏனைய ஆயுதங்கள் குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த பகுதிக்கு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகளைப் பறித்து அவர்களைச் சுட முயன்றனர். பொலிஸ் அதிகாரிகள் நடத்திய தற்காப்பு துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்." https://www.virakesari.lk/article/207340
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்திய பங்குவிலை கூட இவ்வளோ வேகமா விழுந்திருக்காது! LIVE 4th Match, Group B (D/N), Lahore, February 22, 2025, ICC Champions Trophy England (21.1/50 ov) 147/2 Australia Australia chose to field.Stats view Current RR: 6.94 • Last 5 ov (RR): 34/0 (6.80) Live Forecast:ENG 317
-
வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபடும் பெண்!
யாழில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது! Published By: DIGITAL DESK 2 22 FEB, 2025 | 12:00 PM வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களிடம், போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மோசடியாக பெற்றிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி, கல்வியங்காடு, கோப்பாய், கொக்குவில் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து சென்ற குறித்த பெண், தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடியாக பெற்று சென்றுள்ளார். பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர், அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே, குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளமையை உறவினர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு தெரியவந்ததை அடுத்து, பொலிஸாருக்கு பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம், பெண் தொடர்பான அடையாளங்களை தெரிவித்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (21) குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/207352
-
மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம்: மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்னைக்கு என்ன தீர்வு?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களை செகண்ட் இயர் சிண்ட்ரோம் பிரச்னை அதிகம் பாதிக்கிறது (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ரக்ஷனா.ரா பதவி, பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2025 பிரியா, பிலிப்பைன்ஸில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்தையும் வகுப்பறையில் படித்தவர், நான்காம் ஆண்டில் நோயாளிகளைப் பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டார். அப்படி நோயாளிகளை நேரடியாகப் பரிசோதிக்கத் தொடங்கியதும் அவரிடம் ஒரு மாற்றம் தென்பட்டது. "அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகத்துடன் இருப்பது மற்றும் அதிகமாக இனிப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இருப்பது ஆகியவை நீரிழிவு நோய்க்கான அறிகுறி. இந்தப் பிரச்னை இருக்கும் நோயாளிகளைப் பார்த்தப் பின்னர், நான் இனிப்புகளைச் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் எனக்கும் நீரிழிவு நோய் இருப்பதாக எண்ணி அஞ்சினேன்." "அதேபோல அதிக வேலைப் பளுவால் இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுவது பொதுவானதே. ஆனால் நாள்பட்ட கிட்னி நோய் இருப்பதாக நினைத்தேன். அது எனது மன அழுத்தத்தை அதிகரித்ததோடு, எனக்கு மனப் பதற்றத்தையும் ஏற்படுத்தியது" என்று தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என்று சந்தேகித்த பிரியா, செவிலியரான தனது தாயிடம் இதுகுறித்துப் பேசினார். "ஒரு செவிலியர் என்பதால் எனது பிரச்னையை அம்மாவிடம் தெரிவித்தேன். அப்போதுதான் மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் பற்றித் தெரிய வந்தது. அதன் பிறகுதான் என்னால் இதிலிருந்து வெளியே வர முடிந்தது," என்று விவரித்தார் அவர். பிரியா மட்டுமில்லை, மருத்துவ மாணவர்கள் பலரும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஏன்? தோல் புற்றுநோய்: ஏற்படுவது ஏன்? தடுப்பதற்கான வழி என்ன? மருத்துவர்கள் விளக்கம் மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன? ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டால் அவர் செய்யும் முதன்மையான வேலை என்னவாக இருக்கும்? அதிகமாகத் தண்ணீர் குடிக்கலாம், எளிதாகச் செரிக்கும் உணவை உட்கொள்ளலாம். ஆனால் இந்த வரிசையில் அவர் ஈடுபடும் மற்றொரு செயல், தனக்கு இருக்கும் அறிகுறியை கூகுள் போன்ற ஆன்லைன் தேடுதளங்களில் ஆராய்ந்து பார்ப்பதாக இருக்கும். அந்தத் தேடலில் வரும் விடை மிகவும் அச்சமூட்டுவதாகக்கூட இருக்கலாம், அவருக்கு இருக்கும் அறிகுறியை மிகைப்படுத்தும் வகையில்கூட இருக்கலாம். அதைப் பார்க்கும் நபர் தனக்கு அந்த நோய் இருக்குமோ என்ற மனநிலையை உருவாக்கிக்கொண்டு, பதற்றம் அடையலாம். அதன் விளைவாக அவருக்கு மன அழுத்தமும்கூட ஏற்படலாம். ஆனால் இதேபோன்று பெரிய அச்சமூட்டும் நோய்கள் தனக்கும் இருப்பதாக மருத்துவம் பயிலும் மாணவர்களும் அச்சம் கொள்கின்றனர். அந்தப் பிரச்னைதான் செகண்ட் இயர் சிண்ட்ரோம் அல்லது மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. அது என்ன மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம்? இது ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் என்ன? இது யாருக்கெல்லாம் ஏற்படும்? பள்ளிகளில் தொடரும் பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவும் அரசாணை என்ன ஆனது?21 பிப்ரவரி 2025 துக்கத்தில் மூழ்கிய இஸ்ரேல் மக்கள்; 2 குழந்தைகள் உட்பட பணயக்கைதிகளின் உடல்களை அனுப்பிய ஹமாஸ் - தாயின் உடல் குறித்து சர்ச்சை21 பிப்ரவரி 2025 மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அவர்கள் படிக்கும் நோய்களின் அறிகுறிகள் தங்களுக்கு இருப்பதாகவோ அல்லது அந்த நோய் ஏற்படும் அபாயம் தங்களுக்கு இருப்பதாகவோ எண்ணி அச்சத்திற்கு உள்ளாகும் நிலையே மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்கிறது அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம். இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா, "பயிற்சி மருத்துவர்கள் இதுபோன்ற பிரச்னையைச் சந்திப்பது மிகவும் பொதுவானது. மருத்துவப் படிப்பின் முதல் ஆண்டில் மனித உடலின் கட்டமைப்பு, அதன் செயல்பாடுகள் மற்றும் உடலில் உள்ள வேதியியல் பரிமாற்றங்கள் ஆகியவற்றைப் பாடங்களாகவே படிப்பார்கள். அதில் நோயைப் பற்றியோ, அதன் அறிகுறிகளைப் பற்றியோ அவர்கள் படிக்க மாட்டார்கள். ஆனால், இரண்டாம் ஆண்டில் மனித உடலில் ஏற்படும் நோய்களைப் பற்றி விளக்கும் நோயியல் (pathology) என்ற பாடத்தைப் படிப்பார்கள். அப்போதுதான் அவர்களுக்குள் ஒரு பதற்றம் மற்றும் பயம் ஏற்படுகின்றது," என்று விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ வசதிகளை அணுகும் நடைமுறை எளிதாக இருப்பதால், உடல்நிலையில் சந்தேகம் இருக்கக் கூடிய மாணவர்கள் அதை அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டார் மருத்துவர் பூர்ண சந்திரிகா. "உதாரணமாக ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் போன்ற சோதனைகளை அவர்கள் செய்துகொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதன் முடிவுகளைப் பார்த்து, தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனத் தெரிந்த பின்னரே அவர்களின் மனம் அமைதியடையும்." "முதல் முறையாக இரண்டாம் ஆண்டில்தான் மருத்துவ மாணவர்கள் நோயாளிகளைப் பார்க்க ஆரம்பிப்பார்கள். இத்தகைய பல்வேறு மனநலம் சார்ந்த காரணிகளால், இது அனைத்து மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சில பேருக்கு அவ்வாறான பயம் ஏற்பட்டாலும் அதை எளிதில் கடந்துவிடுவர், சிலருக்கு அது கடினம்" என்கிறார் தமிழ்நாடு பயிற்சி மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர், மருத்துவர் கீர்த்தி வர்மன். பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?12 பிப்ரவரி 2025 விரல் நகங்களின் நிறம், வடிவம் மாறுவது உடல்நலக் கோளாறின் வெளிப்பாடா? வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது?12 பிப்ரவரி 2025 சொந்த அனுபவத்தை பகிர்ந்த மருத்துவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர், "நான் மருத்துவம் படித்து முடித்த சில நாட்களுக்குப் பிறகு எனது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டது. அது சாதாரண தசைப் பிடிப்புதான். ஆனால் அதை என் மனம் ஏற்கவில்லை. எனக்கு ஆங்கிலூசிங் ஸ்பான்டிலைசிஸ் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அஞ்சி ரூ.14,000 செலவு செய்து ஹெச்.எல்.ஏ பி27க்கான பரிசோதனையை மேற்கொண்டேன். அதன் முடிவு நெகட்டிவ் என்ற வந்த பிறகே என் மனம் அமைதியடைந்தது," என்று தெரிவித்தார். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், 2016ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இதுபோன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் கதாநாயகனின் தோழி, தனது முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருப்பது போலவும் மயங்கி விழுவது போலவும் காட்சிகள் இடம்பெறும். தோழியை ஆய்வு செய்த மருத்துவர், அவருக்கு செகண்ட் இயர் சிண்ட்ரோம் இருப்பதாகக் கூறுவார். செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியாவால் முன்னேற முடியுமா?21 பிப்ரவரி 2025 உடல் பருமன்: எடை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் - தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை20 பிப்ரவரி 2025 மீண்டு வரும் வழிமுறைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருக்க இயலாது என்று கூறுகிறார் மருத்துவர் திருநாவுக்கரசு (சித்தரிப்புப் படம்) "இதுபோன்ற மனநிலையைச் சந்திக்கும் மாணவர்கள் அவர்களது கல்லூரியின் மூத்த மருத்துவர்களிடம் அறிவுரை பெறுவது, தெளிவு பெற உதவும். ஆனால் சிலருக்கு, அதாவது தொடக்கத்தில் இருந்தே பயந்த சுபாவமாக இருப்பவர்களுக்கு மனரீதியான ஆலோசனைகளை வழங்குவது தீர்வு தரும்," என்கிறார் மருத்துவர் திருநாவுக்கரசு. "ஆனால் சில நேரங்களில் நம்மால் இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமலும் இருக்க இயலாது. ஏனென்றால் நோயைத் தடுப்பதே மருத்துவத் துறையின் முதன்மையான நோக்கம். பெரிய நோய்களைச் சிறிய அறிகுறி வாயிலாகவே கண்டறிய முடியும். ஆனால் அதையே நினைத்துக்கொண்டு அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை" என்கிறார் அவர். அதோடு, தொடர்ந்து படிக்கப் படிக்க மாணவர்களுக்கு நம்பிக்கை மற்றும் தைரியம் ஏற்படுவதால் இந்த நிலை மாறிவிடுவதாகவும் இதைப் பற்றி கவலைப்படக்கூட அவர்களுக்கு நேரம் இருக்காது என்கிறார் மருத்துவர் கீர்த்தி வர்மன். ஒரு சவரன் தங்கத்தின் விலை இந்தாண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை எட்டுமா? 10 கேள்விகளும் பதில்களும்12 பிப்ரவரி 2025 விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?11 பிப்ரவரி 2025 மருத்துவ மாணவர் அல்லாதவர்களையும் பாதிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இப்பிரச்னை மருத்துவ மாணவர் அல்லாத நபர்களையும் பாதிக்கலாம் என்கிறார் பூர்ணசந்திரிகா (சித்தரிப்புப் படம்) இதை மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்று அழைப்பதால் இது மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு பயம் சார்ந்த பிரச்னையா என்ற கேள்விக்கு மருத்துவர் பூர்ணசந்திரிகா, "இல்லை" என்று பதிலளித்தார். மெடிக்கல் ஸ்டூடண்ட் சிண்ட்ரோம் என்பது ஹைபோகான்ட்ரியாசிஸ் எனப்படும் ஒருங்கின்மையின் (disorder) ஒரு வகை என்கிறார் அவர். "அதாவது தனக்கு ஏதோ தீவிரமான நோய் ஏற்பட்டுள்ளதாகவோ அல்லது ஏற்படப் போகின்றதோ என்று நினைத்து அச்சப்படும் பிறழ் மனநிலை. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுவும் தொழில்நுட்பம் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மொபைலில் தேடுகிறார்கள், ஒன்றுக்கு பத்து மருத்துவர்களை அணுகுகிறார்கள், நிறைய பரிசோதனைகளைச் செய்து கொள்கிறார்கள். இதனால் மக்களிடம் இந்த அச்சம் மிகுந்துள்ளது," என்கிறார் அவர். மருத்துவர்கள் அடுத்தடுத்து வரும் பயிற்சி ஆண்டுகளில் இந்த நிலையைப் பற்றிய புரிதலைப் பெறுகின்றனர். ஆனால் இது சாமானியர்களுக்கு ஏற்படும்போது அவர்களுக்குப் புரிய வைப்பது சற்று கடினமாகவே உள்ளது என்கிறார் அவர். இந்த மனநிலையில் இருப்பவர்கள் நோயைப் பற்றி அதிகமாக ஆராய்ச்சி மேற்கொள்வது, இதயத் துடிப்புப் போன்ற உடலில் நடக்கும் சாதாரண செயல்கள், தங்களின் உடல்நிலை குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பது, சிறிதாக இருக்கும் அறிகுறிகளை மிகைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கிளீவ்லேண்ட் கிளீனிக் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24z52vp5vo
-
கொலைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன - எங்களுக்கு என்ன பாதுகாப்புள்ளது?
Published By: RAJEEBAN 20 FEB, 2025 | 11:51 AM துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர் அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் daily mirror இலங்கையில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் 2025ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக 6 வயது சிறுமி 9 வயது சிறுவன் உட்பட 11 உயிர்கள் பலிகொல்லப்பட்டுள்ள நிலையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அழுத்தத்தின் கீழ் அதிகாரிகள் உள்ளனர். ஆறுவயது சிறுமி, 9 வயது சிறுவன், பாதாள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ ஆகியோர் உயிரிழந்த சம்பவங்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக இல்லை என்ற இந்த அதிகரித்துவரும் நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளன. இந்த வருடம் மாத்திரம் நாட்டில் 14 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திட்டமிட்ட குற்;றச்செயல்களி;ல் ஈடுபடும் கும்பல்களை சேர்ந்தவர்களின் நடவடிக்கையே இது என பலர் கருதுகின்றனர். சமீபத்தைய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மிதேனியவிலும் கொழும்பிலும் இடம்பெற்றுள்ளன மிதேனியாவில் 39 வயது நபரும் அவரது மகளும் மகனும் இனந்தெரியாத நபர் ஒருவர் இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் உயிரிழந்தனர். கடவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவனும் சிறுமியும் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர் கஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே என தெரிவித்துள்ள பொலிஸார் இவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கொழும்பில் பாதள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று காலை துணிச்சலான விதத்தில் இந்த கொலை இடம்பெற்றது. சட்டத்தரணிபோன்று வேடமணிந்த ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவங்கள் பலவற்றிற்கு போதைப்பொருள் வர்த்தகமே காரணம் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். குற்றச்செயல்கள் அதிகரிப்பினால் திணறிக்கொண்டிருக்கும் பல நாடுகள் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன என தெரிவித்த அந்த பொலிஸ் அதிகாரி இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துவருவதால் இலங்கையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை உருவாகியுள்ளது என தெரிவித்தார். அதிகரித்துவரும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு மறைமுக புலனாய்வாளர்களை பயன்படுத்துதல் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் அவசியமாக உள்ளதாக தெரிவித்த அவர் ஒரு குழுவால் மாத்திரம் இதற்கு தீர்வை காணமுடியாது என குறிப்பிட்டார். இந்த குற்றகும்பல்களிற்கு எதிரான போராட்டத்திற்கு சட்டஅமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து எங்களிற்கு முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்ட அவர் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் குற்றவாளிகள் தொடர்ந்து செயற்படுவார்கள் என தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை இலக்குவைத்து முன்னைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றியளித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூட்டு சம்பவங்களிற்காக தேடப்பட்ட பல தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர். சில துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து சம்பவங்களும் ஒரே பாணியிலேயே இடம்பெறுகின்றன. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இது தொடரும் என தெரிவித்த அந்த அதிகாரி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை தடுத்துவைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறைகள் அவசியம். அவ்வாறான பொறிமுறை இல்லாவிட்டால் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விடுதலையாவார்கள் என அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் குற்றவாளிகளை இலக்குவைத்து பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை வன்முறை மிக்க மோதல்கள் இடம்பெற்றன சந்தேகநபர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இதற்கு சில குழுக்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டன. யுக்திய நடவடிக்கையை ஆரம்பித்திருந்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கடும் பலத்தை பயன்படுத்துவதை நியாயப்படுத்தியிருந்தார். குற்றவாளிகளை கொலை செய்வதுஒரு பாவமல்ல என தெரிவித்திருந்த அவர் நாட்டின் பாதுகாப்பிற்காக செயற்படுவதற்கு அதிகாரிகள் தயங்ககூடாது என குறிப்பிட்டிருந்தார். போதைப்பொருள் குழுக்கள் மற்றும் பாதளஉலக குழுக்களை ஒழிப்பதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட படையணிகள் தேவை என்பது தெளிவாகியுள்ளது. பாரம்பரிய கலாச்சார கூறுகளை கருத்தில் கொள்ளும்போது இந்த வகையான குற்றங்களை கையாள்வது மிகவும் கடினமான விடயம் என அந்த அதிகாரி தெரிவித்தார். அதிகரித்துவரும் குற்றங்களை கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் எதிர்கால நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பி;ன் ஆறு பொலிஸ் நிலையங்களில் விசேட அதிரடிப்படையினரை நிறுத்திவைப்பதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். திட்டமிடப்பட்ட குற்றங்கள் போதைப்பொருள் குற்றங்களை கையாள்வதற்கு உலகின்பல நாடுகளில் விசேட படையணிகள் உள்ள போதிலும், இலங்கையில் அவ்வாறான படைப்பிரிவொன்று இல்லாதமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207171
-
தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி காலமானார்
பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுக்கு மத்தியில், தமிழ்ப் பத்திரிகை உலகிலும் தனக்கென்று தனித்துவத்தைக் கொண்ட எஸ்.பி.சாமி ஐயா! 20 FEB, 2025 | 12:09 PM தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தில் நான் நெருக்கமாக பணியாற்றிய இருவருக்கு ஒரு பத்துநாள் இடைவெளியில் அஞ்சலிக் குறிப்புக்களை எழுதவேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை எனக்கு. பெப்ரவரி 9ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் காலமான முன்னாள் ஞாயிறு தினக்குரல் ஆசிரியரும் நெருங்கிய நண்பனுமான பாரதி இராஜநாயகத்தின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பி இரு நாட்கள் கடந்துபோவதற்கு இடையில் நேற்று புதன்கிழமை (பெப்ரவரி 19) தினக்குரல் தாபகர் எஸ்.பி.சாமி அவர்கள் அதே திருநெல்வேலியில் காலமான துயரமிகு செய்தி வந்து சேர்ந்தது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்தவும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டு வழியனுப்பவும் மீண்டும் யாழ்ப்பாணம் பயணமாகிறோம். செல்லையா பொன்னுச்சாமி என்பது அவரது முழுப்பெயர். ஆனால், எஸ்.பி. சாமி என்றுதான் நாடும் சமூகமும் அவரை அறிந்து வைத்திருக்கிறது. எனக்கும் அவருக்கும் இடையிலான ஊடாட்டத்துக்கும் தினக்குரலுக்கும் ஒரே வயது. வடக்கிலும் தலைநகர் கொழும்பிலும் பிரபலமான ஒரு வர்த்தகப் பிரமுகர் என்ற வகையில் சாமி அவர்களை நான் ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த போதிலும், தினக்குரலை அவர் ஆரம்பித்திருக்காவிட்டால் அவருக்கும் எனக்கும் இடையில் உறவுமுறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது. வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய காலஞ்சென்ற பொன். இராஜகோபால் மூலமாகத்தான் எனக்கும் சாமி அவர்களுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தலைநகரில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் சாமி அவர்களுக்கு ஏற்கெனவே இருந்திருந்தாலும், இராஜகோபாலுடனான சந்திப்பையடுத்தே அந்த எண்ணம் விரைவாக நடைமுறைச் சாத்தியமாவதற்கான வழி பிறந்தது எனலாம். தினக்குரலில் என்னைப் போன்றவர்களின் இணைவு இராஜகோபாலின் முயற்சியின் விளைவானது. பத்திரிகையாளன் என்ற வகையில் எனது தொழில் வாழ்க்கைப் பயணத்தின் இடைநடுவில் சாமி அவர்களை சந்தித்த நாள் தொடக்கம் அவர் எனக்கு இன்னொரு தந்தை. எனக்கு மாத்திரமல்ல, என்னைப் போன்று தினக்குரலில் பணியாற்ற வந்த இளையவர்களுக்கு எல்லாம் அவர் தந்தை என்று கூறுவதே பொருத்தம். நெருக்கடிகள் ஏற்பட்ட வேளைகளில் எல்லாம் அவர் நிலைகுலையாமல் உறுதியுடன் நின்று, நாம் துவண்டுபோகாமல் வழிகாட்டிய பாங்கை இந்த சந்தர்ப்பத்தில் கண்கள் பனிக்க நினைத்துப் பார்க்கிறேன். ஏற்கெனவே பல வருடங்கள் பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர்களைக் கொண்ட, ஒப்பீட்டளவில் இளவயதினரான பலரை உள்ளடக்கிய குழாம் ஒன்று அதன் எதிர்காலத்தை சாமி அவர்களிடம் ஒப்படைத்த வண்ணமே தினக்குரலில் பணியாற்றத் தொடங்கியது. அவர்களில் சிலர் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்று கவலை கொள்ள ஆரம்பித்த வேளைகளிலெல்லாம் அவர்களுக்கு தைரியமூட்டுவதற்கு எமக்கு தெம்பைத் தந்தது சாமி அவர்களின் மன உறுதிதான். வர்த்தகத் துறையில் சாமி அவர்கள் கைவைக்காத கிளையே இல்லை என்று கூறலாம். அச்சுத் துறையிலும் அவர் பெயரெடுத்தவராக விளங்கிய போதிலும், ஏற்கெனவே பல தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில், இன்னொரு பத்திரிகையை ஆரம்பிப்பது என்பது அதுவும் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த கடந்த நூற்றாண்டின் 90களின் நடுப்பகுதியில் பாரிய சவால்மிக்க பணியாக இருந்தது. அந்தச் சவாலை துணிச்சலுடன் எதிர்கொண்டு கால் நூற்றாண்டைக் கடந்து தினக்குரல் பயணிக்கிறது என்றால் அதற்கு சாமி அவர்கள் எமக்கு தந்த ஊக்கமும் தைரியமும் அவற்றின் விளைவாக ஊழியர்களுக்கு ஏற்பட்ட உத்வேகமுமே அடிப்படை காரணங்கள். நான் முதலில் தினக்குரலில் செய்தி ஆசிரியராக பணியாற்றினேன். இராஜகோபால் எமது வழிகாட்டி. ஆறுமுகம் சிவனேசச்செல்வன் பிரதம ஆசிரியர். தினக்குரலின் முதலாவது இதழ் ஞாயிறு பத்திரிகையாக 1997 ஏப்ரல் 6ஆம் திகதி வெளியானது. அதை வெளிக்கொணருவதற்கு எமது குழாம் சில வாரங்களாக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. பத்திரிகை வெற்றிகரமாக வெளிவந்ததால் மகிழ்ச்சியடைந்த போதிலும், ஆசிரியபீட உறுப்பினர்கள் சற்று களைத்துப் போயிருந்தார்கள். மறுநாள் திங்கட்கிழமை தினசரிப் பத்திரிகையை வெளியிடுவதை தாமதித்து சில வாரங்களுக்கு பிறகு தினசரியை வெளியிடுவோம் என்று ஆசிரியபீட உறுப்பினர்களில் சிலர் யோசனை கூறினார்கள். ஆனால், சாமி அவர்கள் அதற்கு இணங்கவில்லை. திட்டமிட்டபடி திங்கட்கிழமை தினசரி தினக்குரல் வெளிவந்தேயாக வேண்டும் என்பதில் அவர் காட்டிய உறுதிப்பாடு சோர்வடைந்திருந்தவர்களை தட்டியெழுப்பியது. அச்சியந்திரப் பிரிவில் இருந்து தினசரிப் பத்திரிகையின் முதல் பிரதிகளை அவரே மகிழ்ச்சியுடன் எடுத்துவந்து ஆசிரிய பீடத்துக்கு தந்தார். தினக்குரலின் உய்வின் சாத்தியம் குறித்து ஆரம்ப நாட்களில் 'பல்லி' சொன்ன பலருக்கு நாளடைவில் ஏமாற்றமே மிஞ்சியது. தலைநகரில் இருந்து வெளிவரும் இன்னொரு தமிழ்ப்பத்திரிகையாக தினக்குரல் தன்னை குறுகிய காலத்திற்குள்ளேயே நிலைநிறுத்தக் கூடியதாக இருந்தது. அதன் வளர்ச்சிக்காக தாபகர் சாமி அவர்கள் தொடக்கம் கடைநிலை ஊழியர் வரை கடுமையாக உழைத்ததை கண்ட சாட்சிகளில் ஒருவன் நான். பத்திரிகை அச்சுக்குப் போகும்வரை நடுநிசியிலும் சாமி அவர்கள் அலுவலகத்துக்கும் அச்சியந்திரப் பகுதிக்கும் இடையே இளைஞர்களே வியக்கும் வண்ணம் ஓடிக்கொண்டிருப்பார். ஆரம்பக்கட்டத்தில் பத்திரிகையை நாடுபூராவும் விநியோகிப்பதற்கான பணிகளில் அவரும் புதல்வர்களும் கூட முழுமூச்சாக ஈடுபட்டதை கண்டவன் நான். அவரின் குடும்பமே பத்திரிகையுடன் மாய்ந்தது. ஒரு கட்டத்துக்கு பிறகு தலைநகரில் இருந்து மாத்திரமல்ல, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்தும் தினக்குரலின் பிராந்தியப் பதிப்பு வெளியானது. குடாநாட்டை நாட்டின் ஏறைய பாகங்களுக்கும் வெளியுலகிற்கும் காட்டுவதற்கும் நாட்டின் ஏனைய பாகங்களையும் வெளியுலகையும் குடாநாட்டுக்கு காட்டுவதற்குமான ஒரு முயற்சியாக அமைந்த அந்த பிராந்தியப் பதிப்பு சாமி அவர்களின் விடாமுயற்சியினால் வெற்றி கண்டது. குடாநாட்டில் இருந்து பத்திரிகைகள் ஏற்கெனவே வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், தலைநகரில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று அதன் குடாநாட்டுப் பதிப்பை முதன்முதலாக வெளியிட்ட சாதனையை நிகழ்த்தியது தினக்குரலேயாகும். அந்த வெற்றியின் பின்னால் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளினதும் ஊழியர்களின் அர்ப்பணிப்புச் சிந்தையுடனான உழைப்பு இருந்தது என்ற போதிலும், இடர்பாடுகள் மிகுந்த குடாநாட்டுச் சூழ்நிலைகளுக்கு மத்தியில் சாமி அவர்கள் தந்த ஊக்கமே ஊழியர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அவர் நிலைகுலையாமல் வெளிக்காட்டிய உறுதிப்பாடு எமக்கு நம்பிக்கையை தந்தது. ஏழு வருடங்களாக செய்தி ஆசிரியராக பணியாற்றிய நான் சிவனேசச்செல்வன் இலங்கை பத்திரிகை தாபனத்தின் இதழியல் கல்லூரி விரிவுரையாளராக பதவியேற்றுச் சென்ற பின்னர் தினக்குரலின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். நான் தினக்குரலில் சுமார் 15 வருடங்கள் பணியாற்றினேன். அந்தக் காலப்பகுதியில் பத்திரிகைகக்கு விடயதானங்களை பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை தேடிப்பிடிக்கும் பணியையும் செய்ய வேண்டியிருந்தது. புதிய பத்திரிகைக்கு எழுதுவதால் என்ன பயன் என்று அலுத்துக் கொண்டவர்களும் உண்டு. கல்விமான்கள், எழுத்தாளர்களின் வீடுகளுக்கு என்னைக் கூட்டிச் சென்று அவர்களுடன் சாமி அவர்கள் பேச வைத்த நாட்களை இன்று நினைத்துப் பார்க்கிறேன். சாமி அவர்களின் கல்விப்பின்புலம் வலுவானதாக இல்லாவிட்டாலும் கூட கற்றறிந்தவர்களுடனான அவரது சுலபமான ஊடாட்டம் எம்மை பிரமிக்கவைத்தது. சமூகத்தின் எந்த மட்டத்தவர்களுடனும் இலகுவாக பரிச்சயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வியக்கத்தக்க ஆளுமை அவரிடம் இருந்தது. இதை காலஞ்சென்ற பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்னிடம் நேரடியாகவே பல தடவைகள் கூறியிருக்கிறார். சமூகத்தில் பல தரப்பினரதும் மதிப்புக்குரியவராக சாமி அவர்கள் விளங்கினார். ஆசிரிய பீடத்தின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு அவர் ஒருபோதும் இடையூறாக இருந்ததில்லை என்பதை ஒரு நீண்டகாலப் பத்திரிகையாளன் என்ற வகையில் வெளிப்படையாகக் கூறவேண்டியது எனது கடமையாகும். எமது சுயாதீனமான செயற்பாட்டுக்கு அவர் மேலும் உறுதுணையாக இருந்தார் என்றே கூறவேண்டும். வெளியார் சிலர் செய்த முறைப்பாடுகள் காரணமாக சாமி அவர்களுக்கும் நான் உட்பட ஆசிரிய பீடத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டாலும், அதை தனது தொழிற்துறை அனுபவத்துடனும் முதிர்ச்சியுடனும் மிகவும் இலாவகமாகக் கையாளுவதிலும் முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதிலும் அவர் சமர்த்தர். அவர் ஈடுபட்ட சகல வர்த்தக முயற்சிகளினதும் வெற்றிக்கு அதுவே நிச்சயமான காரணம் எனலாம். வெவ்வேறு துறைகளில் குறிப்பாக, தனியார் மருத்துவத்துறையில் முதலீடுகளைச் செய்வதில் நாட்டம் கொண்டிருந்த காரணத்தால் பிற்காலத்தில் சாமி அவர்கள் தினக்குரலின் முகாமைத்துவத்தில் செய்த மாற்றம் எம்மில் பலரை எமது பத்திரிகைத் துறைத் தொட்டிலான வீரகேசரி வளாகத்துக்குள்ளேயே மீண்டும் கொண்டு போய்விட்டது. தன்னை நம்பிவந்தவர்களின் எதிர்கால நலன்களை உறுதிசெய்யவேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. அது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருக்கின்ற போதிலும், தினக்குரலின் தொடர்ச்சியை புதிய நிருவாகம் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை அதன் ஊழியர்களுக்கு வலுவாக இருக்கிறது. சாமி அவர்கள் வர்த்தகத்துறையுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டவர் அல்ல. வடக்கிலும் தலைநகரிலும் சமூக , சமய அமைப்புக்கள் பலவற்றின் தலைவராகவும் அவர் நீண்டகாலம் பயனுறுதியுடைய பணியைச் செய்துவந்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலருடனும் கூட நெருக்கமான பழக்கத்தைக் கொண்டிருந்த போதிலும், அரசியலில் ஒருபோதும் அவர் ஈடுபாடு காட்டியதில்லை. தினக்குரல் காரணமாக அரசியல்வாதிகளுக்கு அவர் வேண்டியவரானார். அவருடன் இருபது வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் எனக்கு பல படிப்பினைகளை தந்திருக்கிறது. வர்த்தகத்துறையின் பல்வேறு கிளைகளிலும் அவர் கால்பதித்த போதிலும், பிற்காலத்தில் கைவைத்த பத்திரிகைத்துறையே தொழிற்துறை அடையாளங்களில் அவருக்கு முக்கியமானதாக விளங்குகிறது என்பது அதில் அவருடன் பணியாற்றிய எமக்கு ஒருவித மனத்திருப்தியைத் தருகிறது. இந்த உலகில் பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான போகிறோம். மரணம் எவரையும் விட்டுவைக்கப் போவதில்லை. ஆனால், வாழும் காலத்தில் நாம் செய்கின்ற பணிகளின் மூலமாக, வாழும் முறையின் மூலமாக எத்தகைய மரபை விட்டுச் செல்கிறோம் என்பதே முக்கியமானது. அந்த வகையில் நோக்கும்போது சாமி அவர்கள் வர்த்தகத்துறையிலும் சமூக சேவையிலும் வளமான மரபை விட்டுச் செல்கிறார். அது குறித்து அவரின் குடும்பத்தவர்கள் என்றென்றைக்கும் பெருமைப்படமுடியும். நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன், சாமி அவர்களை யாழ்ப்பாணம் நல்லூரில் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் சென்று சந்தித்துப் பேசினேன். அதற்கு பிறகு அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்பது துதிர்ஷ்டவசமானது. ஆனால் மீண்டும் அவரது வீட்டுக்கு அவருக்கு இறுதிமரியாதை செலுத்துவதற்கே செல்லப்போகிறேன் என்பதை கனத்த மனதுடன் நினைத்துக் கொள்கிறேன். அவர் முழுமையான ஒரு வாழ்வை வாழ்ந்தவர் .அவரை இழந்து வாடும் மனைவி வீரலட்சுமி அம்மையாருக்கும் அவர்களது புதல்வர்கள், புதல்விகள் உட்பட குடும்பத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் எழுதுவதற்கு ஒரு பத்திரிகையை வெளியிட்ட சாமி ஐயாவுக்கு இறுதியில் பத்திரிகைகளில் அஞ்சலிக்குறிப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன். மரணமடைவதை பெரும்பான்மையானவர்களுடன் இணைவதாக (Joining the majority) கூறும் முதுமொழி ஒன்று இருக்கிறது. உலகில் வாழ்பவர்கள் அல்ல, காலமானவர்களே பெரும்பான்மையினர். சாமி ஐயா பெரும்பான்மையுடன் இணைந்துவிட்டார். நாங்கள்தான் சிறுபான்மையினர். சமூகத்தில் எனக்கு ஏதாவது அடையாளம் இருக்குமானால் அதற்கு காரணமானவர்களில் சாமி அவர்களும் ஒருவர். சென்றுவாருங்கள் சாமி ஐயா! உங்களை நினைத்துக்கொண்டிருப்பதை தவிர எங்களால் என்ன செய்யமுடியும்! - வீரகத்தி தனபாலசிங்கம் https://www.virakesari.lk/article/207176
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தானை 107 ஓட்டங்களால் வென்றது தென் ஆபிரிக்கா Published By: VISHNU 22 FEB, 2025 | 02:17 AM (நெவில் அன்தனி) கராச்சிய தேசிய விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான முதலாவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா சகல துறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி 107 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ரெயான் ரிக்ல்டன் குவித்த சதம், டெம்பா பவுமா, ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வித்திட்டன. தென் ஆபிரிக்காவின் களத் தடுப்பும் மிக அற்புதமாக இருந்தது. அப் போட்டியில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களைக் குவித்தது. மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது டோனி டி ஸோர்ஸி (11) ஆட்டம் இழந்தார். ஆனால், ரெயான் ரிக்ல்டன், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உரமூட்டினர். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய டெம்பா பவுமா 58 ஓட்டங்களைப் பெற்றார். ரெசி வென் டேர் டுசெனுடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த ரெயான் ரிக்ல்டன் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அவர் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 103 ஓட்டங்களைப் பெற்று இந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்த 5ஆவது வீரரானார். நியூஸிலாந்தின் வில் யங், டொம் லெதம், பங்களாதேஷின் தௌஹித் ரிதோய், இந்தியாவின் ஷுப்மான் கில் ஆகியோர் சதம் குவித்த முதல் நான்கு வீரர்களாவர். ரெசி வென் டேர் டுசென் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அடுத்து டெவிட் மில்லர் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றபோதிலும் 5ஆவது விக்கெட்டில் ஏய்டன் மார்க்ராமுடன் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஏய்டன் மார்க்ராம் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மொஹமத் நபி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 316 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரஹ்மத் ஷாவைத் தவிர வேறு எவரும் 20 ஓட்டங்களைக் கடக்கவில்லை. ஆறு வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களால் பெரிய எண்ணிக்கைகளை நோக்கி செல்ல முடியவில்லை. தனி ஒருவராகப் போராடிய ரஹ்மத் ஷா 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 92 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வியான் முல்டர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லுங்கி எங்கிடி 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ரெயான் ரிக்ல்டன். https://www.virakesari.lk/article/207332
-
ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?
ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா? படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 22 பிப்ரவரி 2025, 01:49 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இவற்றை விரைவில் ஏலம் விடுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், ஏல நடைமுறைகள் தொடங்கினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறுகிறார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இந்த விஷயத்தில் அதிமுக தொடர்ந்து மௌனம் காக்கிறது. ஜெயலலிதாவின் உடைமைகளை ஏலம் விடும் முடிவை தமிழ்நாடு அரசு எடுக்குமா? தமிழரசன்: விடுதலை படம் நினைவூட்டும் இடதுசாரி அரசியல்வாதி - யார் இவர்? கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 7 ஆண்டுகளாக நீடிக்கும் விசாரணையில் இதுவரை கிடைத்தது என்ன? முரசொலி செல்வம்: சட்டமன்றக் கூண்டில் ஏற்றி கண்டிக்கப்பட்டபோது என்ன செய்தார்? பாஜக-அதிமுக: ஜெயலலிதா 'இந்துத்துவ' தலைவர் என்று எந்த அடிப்படையில் அண்ணாமலை கூறினார்? சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன? 1996 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து நகைகள், நில ஆவணங்கள், வங்கி வைப்பு நிதி தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், 27 கிலோ தங்க, வைர நகைகளும் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 1526 ஏக்கர் நிலங்களும் அடங்கும் என கர்நாடக நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன. இவை தவிர, 11,344 பட்டுப்புடவைகள், 750க்கும் மேற்பட்ட காலணிகள், 91 கைக்கடிகாரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நகை மற்றும் சொத்து ஆவணங்களை என்ன செய்வது?' என 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியன்று வெளியான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அந்த தீர்ப்பில், பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை பொதுநோக்கம் அல்லது வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம். நிலங்களை விற்று அரசு நிதி திரட்டலாம்' என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கம், பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம் - பிபிசி புலனாய்வு21 பிப்ரவரி 2025 டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா?21 பிப்ரவரி 2025 ஏலம் விடப்படுமா? "பல ஆண்டுகள் கடந்தும் கர்நாடக அரசுக்கு வழக்குக்கான செலவுத் தொகை வழங்கப்படவில்லை" எனக் கூறி 2023 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். பெங்களூரூ குடிமையியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கர்நாடக மாநில அரசின் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் நகை மற்றும் சொத்து ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று இவை தமிழ்நாடு அரசின் கருவூலத்துக்கு வந்துவிட்ட நிலையில், வருவாய்த்துறை மூலம் ஏலம் விடுவது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், "ஏலம் விடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை" என உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை செயலர் ராஜேஷ் லக்கானியின் கருத்தை அறிய பிபிசி தமிழ் முயன்றது. இந்த கட்டுரை வெளியாகும் வரையிலும், அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் பதிலளித்ததும் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும். வந்தவாசி பஞ்சமி நில சர்ச்சை: 'அரை மணிநேரத்துல மொத்தமா அழிச்சுட்டாங்க' - பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?21 பிப்ரவரி 2025 பள்ளிகளில் தொடரும் பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவும் அரசாணை என்ன ஆனது?21 பிப்ரவரி 2025 'வருத்தத்தைக் கொடுக்கும் செயல்' - ஜெ.தீபா பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,ஏல நடைமுறைகள் தொடங்கினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறுகிறார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா "முன்னாள் முதலமைச்சரின் உடைமைகளை ஏலம் விடுவது என்பது வருத்தத்தைக் கொடுக்கும் ஒரு செயல்." என்றார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இவற்றை எங்களிடம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், நான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாடு அரசிடம் ஜெயலலிதாவின் நகை உள்பட அவரது பொருட்களை கர்நாடக அரசு ஒப்படைத்துவிட்டது. இவற்றை ஏலம் விடுவதற்கு சில மாதங்கள் ஆகும். இதில் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழக்கறிஞரிடம் ஆலோசிக்க உள்ளேன்" என்கிறார். இதுதொடர்பாக அ.தி.மு.க நிர்வாகிகள் மௌனம் காப்பது குறித்துப் பேசிய ஜெ.தீபா, "ஜெயலலிதா தொடர்புடைய எந்த வழக்காக இருந்தாலும் அதில் அ.தி.மு.க தலையிடுவது இல்லை. எந்தவித கருத்தையும் அவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை" எனக் கூறுகிறார். 'காலாவதியான தலைவர்கள்' - தன் மீது டெல்லி சென்று புகார் அளித்தவர்கள் குறித்து செல்வப்பெருந்தகை கூறியது என்ன?21 பிப்ரவரி 2025 மும்மொழிக் கொள்கை சர்ச்சை: ஸ்டாலினுக்கு எழுதிய 3 பக்கக் கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?21 பிப்ரவரி 2025 'ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்கு' "தவிர, புதிதாக அவர்கள் எதையும் செய்யவில்லை என நாங்கள் கேட்கவும் முடியாது. எதிர்பார்க்கவும் முடியாது. இது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட தனிப்பட்ட வழக்குகளாக கருதப்படுகிறது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். "ஜெயலலிதாவின் தனிப்பட்ட சொத்துகளாக இவற்றைப் பார்க்க வேண்டும்" எனக் கூறும் ஜெ.தீபா, "அவரது உடைமைகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் கொடுக்கும் வரை நாங்களும் தலையிடவில்லை" எனக் கூறுகிறார். இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவே தங்கள் குடும்பம் எதிர்கொள்ள உள்ளதாகவும் ஜெ.தீபா குறிப்பிட்டார். சாம்சங் இந்தியா: 5 மாதங்களை கடந்தும் போராட்டம் நீடிப்பது ஏன்? 5 கேள்விகளும் பதில்களும்20 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலான வரலாறு - சட்டமன்றத்தில் அண்ணா பேசியது என்ன?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அ.தி.மு.க மௌனம் காப்பது ஏன்? பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு ஜெயலலிதாவே உரிமை கோரவில்லை எனக் கூறுகிறார் சி.பொன்னையன் "ஏல விவகாரத்தில் அ.தி.மு.க மௌனமாக இருப்பது ஏன்?" என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "முன்னாள் முதலமைச்சரின் உடைமைகளைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்காது. இது தனிப்பட்ட விவகாரம் என்பதால் கருத்து சொல்வதில் உடன்பாடு இல்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். இதையே பிபிசி தமிழிடம் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு ஜெயலலிதாவே உரிமை கோரவில்லை. அதன்பிறகு அவர் நகைகளை அணிய மறுத்துவிட்டார். அவரே விரும்பாத ஒரு விஷயத்திற்குள் அ.தி.மு.க தலைமை செல்வதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு மட்டுமே கடந்த அ.தி.மு.க அரசு முயற்சி எடுத்ததாக கூறும் ஷ்யாம், "அந்த வீடும் நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளுக்கு சென்றுவிட்டது" என்கிறார். இருமொழி கொள்கை முன்னேற தடையாக இருந்ததா? தமிழ், ஆங்கிலம் படித்து வாழ்வில் சாதித்தவர்கள் கூறுவது என்ன?19 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டில் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதா? 5 கேள்விகளும் பதில்களும்19 பிப்ரவரி 2025 'தாக்கத்தை ஏற்படுத்தாது' - மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,ஏலம் விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும்போது அரசியல்ரீதியாக பாதிப்பு வருமோ என்று தான் யோசிப்பார்கள் எனக் கூறுகிறார் ஷ்யாம் "ஜெயலலிதாவின் உடைமைகளை ஏலம் விடுவது பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?" எனக் கேட்டோம். "அதற்கான வாய்ப்புகள் இல்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. இதன்பிறகு நகை, புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால், 1998 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 30 இடங்களில் அ.தி.மு.க வென்றது. மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்கிறார். "தவிர, ஏலம் விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும் போது அரசியல் ரீதியாக பாதிப்பு வருமோ என்று தான் யோசிப்பார்கள். அந்த வகையில் ஏலம் விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது" எனக் கூறுகிறார் ஷ்யாம். இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 தாந்தியா தோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தியைப் பரப்பிய கிளர்ச்சியாளர் - ஆங்கிலேயர்களை திணற வைத்தது எப்படி?19 பிப்ரவரி 2025 தி.மு.க சொல்வது என்ன? பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,ஏலம் விடுவதை மக்கள் வரவேற்கவே செய்வார்கள் எனக் கூறுகிறார் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ஆனால், இந்தக் கருத்தை தி.மு.க செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் மறுக்கிறார். "ஏலம் விடுவதன் மூலம் என்ன நேரும் என்பதை நாங்கள் பார்க்கவில்லை. அது மக்கள் பணம். அதை மக்களிடம் சேர்க்கும் போது ஊழல் செய்வது குறித்து மற்றவர்கள் அச்சப்படும் சூழல் ஏற்படும்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "எந்த அரசாக இருந்தாலும் ஏலம் விட்டுத் தான் ஆக வேண்டும். இதில் அரசியல் ரீதியான லாப, நஷ்டத்தைவிட சமூகத்துக்கு என்ன பலன் என்று தான் பார்க்க வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில், ஏலம் விடுவதை மக்கள் வரவேற்கவே செய்வார்கள் எனக் கூறுகிறார் பேராசிரியர் கான்ஸ்டன்டைன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2rywrrp4ko
-
கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்
22 FEB, 2025 | 10:48 AM கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/207346
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரே நாளில் 1 இல் இருந்து 15 ஆம் இடத்திற்கு...
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே சட்டவிரோத கும்பல் தலைவரை கொன்ற நபர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதிவாதியை சுடப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒரு புத்தகத்துக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், கோ ஈவ் பதவி, பிபிசி செய்திகள் 21 பிப்ரவரி 2025 குற்றப் பின்னணி உள்ள சட்டவிரோத கும்பல் ஒன்றின் தலைவர், இலங்கையில் நீதிமன்றத்தின் உள்ளேயே, வழக்கறிஞர் வேடமிட்ட ஒரு நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அளித்த தகவலின்படி, தாக்குதல் நடத்திய நபர் ஒரு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். ஒரு புத்தகத்தின் உள்ளே துளையிட்டு அந்த கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ள ஒரு பெண், அதைத் துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு வழங்கியுள்ளார். ஆனால் அந்தப் பெண் இன்னும் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுகிறது. சட்டவிரோத கும்பலின் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்னே, வழக்கு விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் அவர் பல்வேறு கொலை வழக்குகளில் சந்தேகத்திற்குரிய நபராக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்? மாவை சேனாதிராஜா காலமானார்: இலங்கை தமிழர்களுக்காக குரல் எழுப்பிய இவர் யார்? தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு - நடுக்கடலில் என்ன நடந்தது? தலைநகர் கொழும்பில் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு, கும்பல்களுக்கு இடையிலான போட்டியின் தொடர்ச்சியாக நடந்துள்ள கொலைச் சம்பவங்களில் ஒன்று. நாட்டில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களை அடக்குவோம் என அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கணேமுல்லே சஞ்சீவ என்று பிரபலமாக அறியப்படும் அந்த சட்டவிரோதக் கும்பலின் தலைவர், 2023 செப்டம்பரில் கைது செய்யப்பட்டதில் இருந்து காவலில் இருந்தார். காவல்துறை தெரிவித்த தகவலின்படி, அவர் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் புதன்கிழமையன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர், சுடப்பட்டுக் காயமடைந்ததும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரால் சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முடிந்தாலும், பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் அவரை வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடும் நிலையில், அவர் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வாண்டிதான் அந்தப் பெண் குற்றவாளி என்று காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. அதிகாரிகள், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல் வழங்குபவருக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவருக்கும் உதவியதாக சந்தேகிக்கப்படும் ஒரு காவலர் மற்றும் ஒரு வாகன ஓட்டுனரைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பிரபாகரனை சீமான் சந்தித்ததும், ஆயுதப் பயிற்சி பெற்றதும் உண்மையா?28 ஜனவரி 2025 யாழ்ப்பாணத்தில் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என்ற பெயருக்கு எதிர்ப்பு ஏன்? புதிய பெயர் என்ன?26 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன்கிழமையன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இதை "முக்கியமான பாதுகாப்புப் பிரச்னை" என்று குறிப்பிட்டார். டிசம்பரில் இத்தகைய குற்றச் செயல்களை ஒடுக்குவதாக உறுதியளித்திருந்த சுகாதாரம் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, "ஒருங்கிணைக்கப்பட்ட நிழல் உலகக் கும்பல்களின் செயல்களை அரசு மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளும்" என்று புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம், நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதிகாரிகள் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஆயுதமேந்திய காவலர்களை நிறுத்துவது உள்ளிட்ட புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியாளர்கள் பொதுவாக நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வியாழக்கிழமை தெரிவித்தார். காவல்துறையின் தரவுகளை மேற்கோள்காட்டிய ஏ.எஃப்.பி செய்தி முகமை, இந்த ஆண்டில் மட்டும் கும்பல்களுக்கு இடையிலான விரோதத்தின் காரணமாக ஏற்பட்ட தொடர் துப்பாக்கிச்சூடுகளில் குறைந்தபட்சம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04zp6kzy3po
-
நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுகின்றன - பதில் பொலிஸ்மா அதிபர்
22 FEB, 2025 | 11:14 AM நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுவதாகவும் அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டு 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 18 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையிலிருப்பதால் அதன் கீழ் சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் இல்லையெனவும் பதில் பொலிஸ்மா அதிபர் இந்த விசேட ஊடக சந்திப்பின் போது மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/207350
-
பிபிசி புலனாய்வு - மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கத்தின் பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம்
படக்குறிப்பு, மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மா எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போல் தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி ஐ விசாரணைகள் பதவி, பிபிசி உலக சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மருந்து நிறுவனம் ஒன்று, உரிமம் பெறாத, தீவிர போதை பழக்கத்துக்கு உள்ளாக்கும் ஓபியாய்டுகளை (ஓபியம் செடியிலிருந்து தயாரிக்கப்படும் வலி நிவாரண மற்றும் சட்ட விரோத மருந்துகள்) தயாரித்து, அவற்றை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து, அங்கு பெரும் பொது சுகாதார நெருக்கடியை உண்டாக்குகிறது என்று பிபிசி ஐ (BBC Eye) நடத்திய புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மாகியூட்டிகள்ஸ் எனும் மருந்து உற்பத்தி நிறுவனம் பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போன்று தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ஒரே மாதிரியான ஆபத்தான கலவையைக் கொண்டுள்ளன. அதில் டேபெண்டடால் என்ற சக்திவாய்ந்த மருந்துப்பொருள் மற்றும் காரிஸோப்ரோடால் என்ற மிகவும் அடிமையாக்கக்கூடிய தசை தளர்த்தி போன்றவை உள்ளன. மேலும், இது ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மருந்துகளை உலகில் வேறு எங்கும் பயன்படுத்த உரிமம் கிடையாது. இது சுவாசக்கோளாறுகள் மற்றும் வலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறியப்படுகின்றது. இவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உயிரிழப்பும் ஏற்படலாம். இத்தனை ஆபத்துகள் இருந்தாலும், இந்த மருந்துப் பொருட்கள் பல்வேறு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளின் தெருக்களில் விற்கப்படும் பிரபலமான போதைப் பொருட்களாக உள்ளன. ஏனென்றால், அவை மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன. உடல் பருமன்: எடை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் - தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன? விரல் நகத்தில் தோன்றும் வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது? தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா? கானா, நைஜீரியா, கோட் டிவோயர் போன்ற நாடுகளின் தெருக்களில், ஏவியோ நிறுவனத்தின் முத்திரையிடப்பட்ட பாக்கெட்டுகளில் இம்மருந்துகள் விற்பனைக்குக் கிடைப்பதை பிபிசியின் உலக சேவை கண்டறிந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஏவியோவின் தொழிற்சாலையில் இருந்த போதைப் பொருட்களைக் கண்டறிந்த பிபிசி, ஒருவரை உளவு பார்க்க, ரகசியமாக அந்த தொழிற்சாலைக்குள் அனுப்பியது. அவர், ஆப்பிரிக்க தொழிலதிபராக தன்னைக் காட்டிக்கொண்டு, நைஜீரியாவுக்கு போதை மருந்துகளை விற்க விரும்புவதாகக் கூறினார். பிபிசி மேற்கு ஆப்பிரிக்காவின் சந்தையில் கண்ட அதே ஆபத்தான தயாரிப்புகளை, ஏவியோ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வினோத் ஷர்மா எடுத்துக் காட்டும் காட்சிகளை, ஒரு மறைமுக கேமராவைப் பயன்படுத்தி பிபிசி படம் பிடித்தது. மறைமுகமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், அந்த உளவாளி வினோத் ஷர்மாவிடம், நைஜீரியாவில் "இந்த தயாரிப்பை விரும்பும்" இளைஞர்களிடம் விற்கத் திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். ஷர்மா அதற்கு சிறிதும் சளைக்காமல், "சரி" என பதிலளிக்கிறார். பின்னர், இவற்றைப் பயன்படுத்துபவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், "ஓய்வு கிடைக்கும்" என்றும், அவர்கள் "(போதையின்) உச்ச நிலையை அடையலாம்" என்பதையும் ஒப்புக்கொள்கிறார். சந்திப்பின் முடிவில், "இது ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்" என்று கூறும் ஷர்மா, "இப்போதெல்லாம், இது தான் வியாபாரம்" என்றும் தெரிவித்தார். தந்தை வாயில் இருந்து பிறக்கும் தலைப் பிரட்டைகள் - அருகி வரும் அரிய வகை சதர்ன் டார்வின் தவளைகள்6 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?20 பிப்ரவரி 2025 Play video, "ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்?", கால அளவு 14,47 14:47 காணொளிக் குறிப்பு, ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்? கோடிக்கணக்கான இளைஞர்கள் பாதிப்பு அந்த தொழிற்சாலையில், கலவை மருந்துகள் நிரப்பப்பட்ட பெரிய பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்றாக, கூரையின் உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வினோத் ஷர்மா தனது மேசையில், டேபெண்டடால்-காரிஸோப்ரோடால் கலவையுடன் கூடிய மாத்திரை பாக்கெட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். அவற்றுள் மிகவும் பிரபலமான டாஃப்ரோடோல் உட்பட, டிமாகிங் மற்றும் சூப்பர் ராயல்-225 போன்ற பல்வேறு பெயர்களில், அந்த நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. இந்தத் தொழில், மேற்கு ஆப்பிரிக்கா முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து, அவர்களின் திறனை அழித்துக்கொண்டிருக்கின்றது. கானாவின் வடக்கு பகுதியிலுள்ள டமாலே நகரத்தில், பல இளைஞர்கள் சட்டவிரோத மருந்துப் பொருட்களை எடுத்துக்கொள்வதால், அந்த நகரின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அல்ஹசன் மஹாம், உள்ளூரைச் சேர்ந்த சுமார் 100 பேரை கொண்ட தன்னார்வக்குழுவை உருவாக்கியுள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களை தேடித் பிடித்து, இந்த மாத்திரைகளை வீதிகளிலிருந்து அகற்றுவது அவர்களது முக்கியப் பணியாக உள்ளது. "நெருப்பில் மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படிப் பற்றிக் கொள்கிறதோ, அதேபோல இந்த ஓபியாய்டுகள், அவற்றை தவறாக பயன்படுத்துபவர்களின் புத்திசாலித்தனத்தை அழிக்கின்றன" என்று மஹாம் தெரிவித்தார். "இவை எங்களுடைய வாழ்க்கையையே வீணடித்துவிட்டன" என்று டமாலேயில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் அதை இன்னும் எளிமையாகக் கூறுகிறார். இருசக்கர வாகனங்களில் ஏறிச் சென்ற அந்த தன்னார்வக் குழுவினரை, பிபிசியின் குழு பின்தொடர்ந்து சென்றது. ஒரு போதைப்பொருள் ஒப்பந்தத்தைப் பற்றி தகவல் கிடைத்த நிலையில், டமாலேயின் மிகவும் ஏழ்மையான பகுதியில் சோதனை தொடங்கியது. அவர்கள் செல்லும் வழியில், ஒரு இளைஞர் மயக்கத்தில் சரிந்து கிடந்தார். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, அவர் இந்த மருந்துகளை உட்கொண்டிருந்தார் என அறியப்படுகின்றது. படக்குறிப்பு, டமாலேயில் உள்ள அந்த தன்னார்வ குழுவினர், அந்த இளைஞர் டாஃப்ரோடால் மாத்திரைகளை எடுத்திருக்கக்கூடும் எனக் கருதினர். சோதனையில் அந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன அந்த வியாபாரி பிடிபட்டபோது, அவர் டாஃப்ரோடால் என்று பெயரிடப்பட்ட பச்சை மாத்திரைகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையை எடுத்துச் சென்றார். பாக்கெட்டுகளில் ஏவியோ மருந்து நிறுவனத்தின் தனித்துவமான முத்திரை அச்சிடப்பட்டிருந்தது. ஏவியோவின் மாத்திரைகள் டமாலேயில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் பெருந்துயரத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதேபோன்ற ஏவியோ நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் கானாவின் வேறு இடங்களில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதை பிபிசி கண்டறிந்தது. நைஜீரியா மற்றும் கோட் டிவோயர் தெருக்களிலும் ஏவியோ நிறுவனத்தின் மாத்திரைகள் விற்பனைக்கு உள்ளன என்பதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். போதையின் உச்ச நிலையை அடைவதற்காக, அங்குள்ள இளைஞர்கள் அவற்றை மதுபானத்தில் கலந்து குடிக்கிறார்கள். ஏவியோ மருந்து நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனமான வெஸ்ட்ஃபின் இன்டர்நேஷனல் ஆகியவை, கோடிக்கணக்கான இந்த மாத்திரைகளை கானா மற்றும் பிற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புகின்றன என்று பொதுத்தளத்தில் கிடைக்கும் ஏற்றுமதி தரவுகள் வெளிப்படுத்துகின்றன. 22.5 கோடி மக்கள்தொகை கொண்ட நைஜீரியா இந்த மாத்திரைகளுக்கு மிகப்பெரிய சந்தையாக உள்ளது. நைஜீரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, சுமார் 40 லட்சம் நைஜீரியர்கள் சில வகையான போதை மருந்துகளை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறியப்படுகின்றது. நைஜீரியாவின் போதைப்பொருள் மற்றும் சட்ட அமலாக்க முகமையின் (NDLEA) தலைவர் பிரிக் ஜெனரல் முகமது புபா மார்வா, "இந்த வலி நிவாரணி மருந்துகள் (ஓபியாய்டுகள்) எங்கள் இளைஞர்களையும், எங்கள் குடும்பங்களையும் அழித்துவிட்டன, நைஜீரியாவின் ஒவ்வொரு சமூகத்திலும் இது புகுந்துவிட்டது" என்று பிபிசியிடம் கூறினார். பிரமாண்ட விண்வெளி கண்ணாடி மூலம் இரவை பகலாக்க முடியுமா? ரஷ்யாவின் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன?20 பிப்ரவரி 2025 இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, கானாவின் டமாலேயில் நடந்த சோதனையில், ஏவியோ நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட டாஃப்ரோடால் மாத்திரை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன டிரமடாலுக்கு மாற்றாக வந்த மாத்திரைகள் 2018 ஆம் ஆண்டில், இந்த வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்வது குறித்து 'பிபிசி ஆப்பிரிக்கா ஐ' மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, தெருவில் போதை மருந்துகளாக விற்பனையாகி, பரவலாகத் தவறாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான டிரமடாலை நைஜீரிய அதிகாரிகள் கட்டுப்படுத்த முயன்றனர். மருந்துச் சீட்டு இல்லாமல் டிரமடாலை விற்பனை செய்வதை அரசாங்கம் தடை செய்தது. மேலும், மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான உச்சவரம்பின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனையடுத்து, சட்டவிரோத மாத்திரைகளின் இறக்குமதியை அரசு கட்டுப்படுத்தியது. அதே நேரத்தில், இந்திய அதிகாரிகள் டிரமடாலின் ஏற்றுமதி விதிமுறைகளை கடுமையாக்கினர். இந்த கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, வெகு விரைவாகவே ஏவியோ மருந்து உற்பத்தி நிறுவனம், தசை-தளர்ச்சி மருந்தான காரிஸோப்ரொடாலுடன் கலந்து, டேபண்டடால் அடிப்படையிலான இன்னும் வலிமையான புதிய மருந்துப்பொருளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. போதை மாத்திரைகளை ஏற்றுமதி செய்வோர், இந்த புதிய கலவை மாத்திரைகளை டிரமடாலுக்கு மாற்றாகவும், கடுமையான கண்காணிப்பை தவிர்ப்பதற்காகவும் பயன்படுத்துவதாக மேற்கு ஆப்பிரிக்க அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தனது தொழிற்சாலையில் பணிபுரியும் 'விஞ்ஞானிகளால்' வெவ்வேறு மருந்துகளை ஒன்றிணைத்து 'ஒரு புதிய தயாரிப்பை' உருவாக்க முடியும் என்று வினோத் சர்மா பிபிசியின் ரகசிய கண்காணிப்புக் குழுவிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஏவியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய மாத்திரைகள், முந்தைய டிரமடாலுக்கு மாற்றாக வந்தவையாக இருந்தாலும், இன்னும் அதிக ஆபத்தானவையாக உள்ளன. இந்தியாவின் பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் லேகன்ஷ் ஷுக்லா கூறுகையில், ஆழ்ந்த உறக்க நிலை உட்பட, "ஒரு வலி நிவாரண மாத்திரை அளிக்கும் விளைவுகளை, டேபண்டடால் தருகிறது" என்றார். "அது ஒருவரை மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு ஆழ்ந்த உறக்கத்துக்குக் கொண்டுசெல்லலாம். இதுதான் அந்த வலி நிவாரணி மாத்திரையை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்தான நிலை," என்று அவர் விளக்கினார். "அத்துடன், இன்னொரு பொருளான காரிஸோப்ரோடால் சேர்க்கப்படுகிறது, இது ஆழ்ந்த உறக்கத்தையும், தளர்வையும் அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான கலவையாகத் தெரிகிறது." என்றார். காரிஸோப்ரோடால் ஒருவரை அடிமைப்படுத்தக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது என்பதால் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மூன்று வாரங்கள் வரை என்ற குறுகிய காலத்துக்கு மட்டுமே அதனை பயன்படுத்த அனுமதி உள்ளது. இதைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது ஏற்படும் அறிகுறிகளில், கவலை, உறக்கமின்மை மற்றும் மாயத்தோற்றங்கள் தென்படுவது போன்றவை அடங்கும். காங்கிரஸ்: செல்வப் பெருந்தகைக்கு எதிராக டெல்லியில் மாநில தலைவர்கள் புகார் - அவர் கூறுவது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் ரேகா குப்தா: டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இவர் யார்?20 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, நைஜீரிய அதிகாரிகள் தாங்கள் கைப்பற்றிய சட்டவிரோத மருந்துகளை, பெரும்பாலும் வலி நிவாரண மருந்துகளை, லாகோஸில் உள்ள ஒரு கிடங்கில் சேமித்து வைத்துள்ளனர் டேபண்டடால் உடன் சேர்க்கப்படும்போது, சாதாரண வலி நிவாரண மருந்துகளைக் காட்டிலும், அந்த மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்தும்போது ஏற்படும் அறிகுறிகள் இன்னும் 'கடுமையானவையாக' இருக்கின்றன. இது "மிகுந்த வேதனை தரும் அனுபவமாக இருக்கும்," என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்த கலவையின் செயல்திறனைப் பற்றி மனிதர்களிடத்தில் நடத்தப்பட்டுள்ள எந்த சோதனை குறித்தும் தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும் கூறினார். மேலும், வரையறுக்கப்பட்ட அளவுகளில் பயன்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதி உள்ள டிரமடாலைப் போன்றில்லாமல், டேபண்டடால்-காரிஸோப்ரோடால், "சரியான மருந்து சேர்க்கையாகத் தோன்றவில்லை" என்றார். "இந்த கலவையை எங்கள் நாட்டில் பயன்படுத்துவதற்கு உரிமமும் இல்லை" என்றும் தெரிவித்தார். மருந்துகளை ஏற்றுமதி செய்ய விரும்பும் நாட்டின் தர நிலைகளை பூர்த்தி செய்யாவிட்டால், மருந்து நிறுவனங்களால் இந்தியாவில் அவற்றை சட்டபூர்வமாகத் தயாரித்து, ஏற்றுமதி செய்ய முடியாது. ஏவியோ நிறுவனம், கானாவுக்கு டேபண்டடால் மற்றும் அதற்கு இணையான தயாரிப்புகளை அனுப்புகிறது. கானா தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தகவலின் படி, டேபண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் கலவையுடன் கூடிய இந்த மருந்து அங்கு அங்கீகரிக்கப்படாததும் சட்டவிரோதமானதும் ஆகும். எனவே, டாஃப்ரோடாலை கானாவுக்கு அனுப்புவதன் மூலம், ஏவியோ நிறுவனம் இந்திய சட்டத்தை மீறுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை வினோத் சர்மாவிடமும், ஏவியோ மருந்து நிறுவனத்திடமும் நாங்கள் முன்வைத்தோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. உலகளாவிய பொது சுகாதாரத்துக்கான அதன் பொறுப்பை இந்திய அரசு அங்கீகரிப்பதாகவும், இந்தியா ஒரு பொறுப்பான மற்றும் வலுவான மருந்து ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் உறுதியுடன் இருப்பதாகவும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எங்களிடம் தெரிவித்தது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதிகள் கவனத்துடன் கண்காணிக்கப்படுகின்றன என்றும், சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. மேலும், இந்தியாவின் முயற்சிகளை ஆதரிக்க, இறக்குமதி செய்யும் நாடுகளும் வலுவான கட்டுப்பாட்டு அமைப்புகளை கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுடன் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளதாகவும், தவறுகளைத் தடுக்கும் நோக்கில் அவற்றுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் எந்த மருந்து நிறுவனத்தின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கண்காணிப்பாளர் தெரிவித்தார். சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் இருந்து தப்பிக்க கடலில் குதித்தபோது என்ன நடந்தது?20 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலான வரலாறு - சட்டமன்றத்தில் அண்ணா பேசியது என்ன?20 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, டமாலே நகரில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட, ஏவியோ நிறுவனம் தயாரித்த டாஃப்ரோடால் உள்ளிட்ட போதை மருந்துகளை கானாவின் தன்னார்வக் குழு எரித்து அழித்தது உரிமம் இல்லாத வலி நிவாரண மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஒரே இந்திய நிறுவனம் ஏவியோ மட்டும் அல்ல. மற்ற மருந்து நிறுவனங்கள் இதே போன்ற மருந்துகளை உற்பத்தி செய்வதையும், வெவ்வேறு பெயர்களில் இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன என்பதையும் பொதுத்தளத்தில் கிடைக்கும் ஏற்றுமதித் தரவுகள் தெரிவிக்கின்றன. உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் உயர்தர பொது மருந்துகளையும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய தடுப்பூசிகளையும் தயாரிக்கின்ற, வேகமாக வளர்ந்து வரும் இந்திய மருந்துத் துறையின் நற்பெயரை இந்த உற்பத்தியாளர்கள் சேதப்படுத்துகின்றனர். மேலும் இந்த தொழில்துறையின் ஏற்றுமதிகள் வருடத்துக்கு குறைந்தது 28 பில்லியன் டாலர்கள் (22 பில்லியன் யூரோ) மதிப்புடையவை என்றும் அறியப்படுகின்றது. அந்த தொழிற்சாலைக்குள் ரகசியமாக சென்றவர் (பாதுகாப்புக்காக அவருடைய அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது), ஷர்மாவுடனான சந்திப்பு குறித்து பேசுகையில், "நைஜீரிய செய்தியாளர்கள் இந்த வலி நிவாரண மருந்துப் பொருட்களின் நெருக்கடியைப் பற்றி 20 ஆண்டுகளாக செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இறுதியாக, ஆப்பிரிக்காவில் நெருக்கடி ஏற்படுத்தியுள்ள மூல காரணமாக உள்ள ஒருவரை, இவற்றைத் தயாரித்து, கப்பலில் எங்கள் நாடுகளுக்கு சரக்குப் பெட்டகங்களில் அனுப்பும் ஒருவரை, நேருக்கு நேர் சந்தித்தேன். இது எவ்வளவு கேடு விளைவிக்கிறது என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆனால், அவருக்கு எந்த கவலையும் இல்லாதது போல் காட்சியளித்தார். இதை வெறும் 'தொழில்' என விவரித்தார்" என்கிறார். கானாவின் டமாலே நகரத்தில், பிபிசியின் குழு உள்ளூர் பணிக்குழுவுடன் சேர்ந்து இறுதியாக ஒரு சோதனை மேற்கொண்டது. அப்போது இன்னும் அதிகளவிலான ஏவியோ நிறுவனத்தின் டாஃப்ரோடால் மருந்துகள் கைப்பற்றப்பட்டன. அன்று மாலை, அவர்கள் பறிமுதல் செய்த அந்த போதைப்பொருட்களை எரிக்க உள்ளூர் பூங்காவில் கூடினார்கள். "அனைவரும் பார்க்கும்படி திறந்த வெளியில் நாங்கள் அதை எரிக்கிறோம்," என்று தலைவர்களில் ஒருவரான ஜிக்கே கூறினார். அவற்றைப் பெட்ரோலில் ஊறவிட்டு தீ வைத்துவிட்டு, தொடர்ந்து பேசிய அவர், "எனவே, இது விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் வழங்கப்படும் ஒரு எச்சரிக்கை. நீங்கள் பிடிபட்டால், உங்கள் மருந்துகளை எரிப்போம்" என்றார். ஆனால், தீப்பிழம்புகள் சில நூறு டாஃப்ரோடால் பாக்கெட்டுகளை அழித்தபோதும், இந்த விநியோகச் சங்கிலியின் உயர் நிலையில் உள்ள 'விற்பனையாளர்களும், விநியோகஸ்தர்களும்' ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், இந்தியாவில் இருந்துகொண்டு இன்னும் கோடிக்கணக்கான மருந்துகளை உற்பத்தி செய்து, மனிதர்கள் அடையும் பெருந்துன்பத்தின் மூலம் லாபம் அடைந்து பணக்காரர்களாகிக் கொண்டிருப்பர். எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும் YouTube பதிவின் முடிவு - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyged5nyv9o
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை வீரராக்கியுள்ளீர்கள்; இது முறையற்றதொரு செயற்பாடு - சாமர சம்பத் Published By: VISHNU 21 FEB, 2025 | 09:04 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) டுபாயில் இருந்து கிடைக்கப் பெற்ற காட்டிக்கொடுப்பு தகவலுக்கமைவாகவே கொழும்பு நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் 8 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை வீரராக்கியுள்ளீர்கள். இது முறையற்றதொரு செயற்பாடு என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். கொழும்பு நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு பிரதான சந்தேக நபரை 8 மணித்தியாலங்களில் கைது செய்தாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் கூறினார். பொலிஸ் திணைக்களம் 8 மணித்தியலங்களில் திறமையாக சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் மற்றைய சந்தேக நபரான பெண்ணை இதுவரை கைது செய்யவில்லை. அந்தப் பெண் நீர்கொழும்புக்கு சென்று துப்பாக்கிதாரியிடம் இருந்து பிரிந்து தனியாக சென்றுள்ளார். ஆனால் பிரதான துப்பாக்கிதாரி மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் நீங்கள் (பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை நோக்கி) இவ்வாறு கூறினாலும் ஊடக செய்திகளில் டுபாயில் இருந்து துப்பாக்கிதாரி காட்டிக்கொடுக்கப்பட்டமையினாலேயே துப்பாக்கிதாரியை கைது செய்தாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இது எமது திறமையால் அன்றி டுபாயில் இருந்து பாதாள கும்பலால் காட்டிக்கொடுத்தமை ஊடாகவே அவர் கைதாகியுள்ளார். இப்படிதான் ஊடகங்கள் கூறுகின்றன. இதேவேளை சந்தேக நபரின் படங்களை வெளியிட்டு நாட்டுக்கு வீரராக்கியுள்ளீர்கள். இவ்வாறு புகைப்படங்களை பகிர்வதற்கு இடமளிக்க வேண்டாம். அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினரை பார்த்து சிரித்து, காதல் கொள்வது போல் காணொளிகள், படங்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளியாகின என்பது தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/207326
-
சமூக புதைகுழியை மறைக்குமுகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா ? - அருட்தந்தை மா.சத்திவேல் சந்தேகம்
21 FEB, 2025 | 07:25 PM சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவரால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படையினரை பொறுத்தவரையில் தமிழர் பிரதேசத்தில் நாட்டின் சட்டங்கள் அவர்களின் இரும்பு சப்பாத்தின் கீழ் என்பதற்கு இன்னொரு அடையாளமே அவர்களால் தையிட்டியில் தனியார் காணியில் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரையாகும். இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயக உரிமையோடு போராடுவோர்க்கு எதிராக பொலிஸாரும் செயற்பட்டு போராட்டம் தொடராதிருக்க அடையாளம் காணப்பட்டோரை விசாரணைக்கென அழைப்பதையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறோம். அநீதிக்கு எதிரான ஆட்சியாளர்கள் தம்மை தம்பட்டம் அடிக்கும் தேசிய மக்கள் சக்தி தலையிட்டு நீதியை நிலைநாட்டாதவிடத்து அது தமிழர்களுக்கு இழைக்கும் அநீதியாக அமைவதோடு அதுவே இனங்களுக்கிடையில் அமைதியின்மை இன, மத விரிசல் என்பன ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். அது மட்டுமல்ல, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த தமிழ் தேச மக்களை அவமானப்படுத்துவதாக அமையும் எனவும் கூறுகின்றோம். வரலாற்றில் மன்னர் ஆட்சிக் காலத்தில் நாட்டில் செல்வம் பெருகி அமைதி நிலவியபோது அரசன் தமது கௌரவத்துக்காகவும் புகழுக்காகவும் வானுயர கோபுரங்களோடு வழிபாட்டிடங்களை அமைத்ததாகவும் அதன் மூலம் பக்தி வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இலங்கையில் விசேடமாக 1948ஆம் ஆண்டுக்கு பின்னரான காலகட்டத்தில் சிங்கள பௌத்த பேரின வாதத்தை பாதுகாக்கவும் அதன் மூலம் அரசியல் செய்யவும் ஆட்சியை கைப்பற்றவும் மட்டுமல்ல, தமிழர் தேசத்தில் நிலங்களை ஆக்கிரமிக்கவும் ஆட்சியாளர் விகாரைகளை கட்டியதே வரலாறு. அதேபோன்று தமிழர் தேசத்தில் பல நூறு விகாரைகளை கட்டுவோம் என சூழுரைத்த சிங்கள பௌத்த அரசியல்வாதிகளையும் கொண்டதே நாட்டின் அரசியல். யுத்த காலத்தில் படையினர் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து துரத்திவிட்டு அவர்களுக்கு சொந்தமான காணிகளை இல்லாமல் ஆக்கிரமித்து பாரிய படைத்தளங்களை அமைத்தனர். புத்தரின் தர்ம போதனைகளை எல்லாம் தூக்கி எறிந்தவர்கள் தனது வழிபாட்டுக்கென படைத்தளங்களில் வழிபாட்டுத் தலங்களையும் அமைத்துக்கொண்டனர். அந்த வகையில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள தையிட்டி விகாரை பல கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்புகிறது. விகாரைக்கென்று காணி இருக்கும்போது தனியார் காணியை தேர்ந்தெடுத்து அதன் உரிமையாளர்களின் அனுமதியின்றி விகாரை கட்டியது ஏன்? தொற்று நோய் காரணமாக முழு நாடும் முடக்கப்பட்டிருந்தபோது அவசர அவசரமாக விகாரை எழுப்பியது ஏன்? நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும்போதும் படையினர் யாருடைய அனுமதியோடு இவ்விகாரையை அமைத்தனர்? அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்ற கேள்விகளோடு இந்த விகாரை அமைக்கப்பட்டதன் பின்னால் ஏதோ மர்மம் உள்ளதாகவே தோன்றுகிறது. இதற்கு அடிப்படை காரணம் தனியார் காணியில் விகாரை அமைத்தமையாகும். கொழும்பு துறைமுகப் பகுதியில் அதுவும் அதி பாதுகாப்பு பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அண்மையில் செம்மணியில் மின்சார தகன மேடை அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டபோது மனித எச்சங்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இவற்றைத் தவிர நாட்டின் தமிழர் பிரதேசம் உட்பட பல பகுதிகளில் சமூக புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது தொடர்பான விசாரணை முழுமை பெற்றதாக இல்லை. காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடுவோர் சமூக புதைகுழிகளுக்கு முன்னால் நின்று கண்ணீர் விடுகின்றனர். நீதி கேட்டு வீதியில் நிற்கின்றனர். அவர்களுக்கு இன்று வரை நீதி கிட்டவில்லை. இந்த நிலையில் அவ்வாறான ஒரு சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக இவ்விகாரை கட்டப்பட்டுள்ளதா? என மக்கள் சந்தேகம் கொள்வதிலும் நியாயம் இருக்கிறது. தையிட்டி விகாரை என்பது நில ஆக்கிரமிப்பு, யுத்த வெற்றி, பௌத்தமயமாக்கல் அடையாளங்களுக்கு அப்பாலும் சிந்திக்க வைக்கிறது. ஏனெனில், உண்மையில் பௌத்தத்தை காக்க வேண்டும் எனில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடத்திலேயே விகாரை கட்டப்பட்டிருக்க வேண்டும். அதனை தவிர்த்து விட்டு வேறோர் இடத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? அதுவும் அவசர அவசரமாக விகாரை கட்டப்பட்டுள்ளது. அதுவே விகாரைக்கு பின்னால் ஏதோ மர்மம் உள்ளது. அதனை மறைக்கவே படையினர் திட்டமிட்டு செயற்பட்டுள்ளனர் என மக்கள் சிந்திக்கின்றனர். மர்ம முடிச்சை அவிழ்க்கவேண்டியதும் மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டியதும் அரசின் கடமையாகும். யுத்த காலத்தில் இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. உயிருக்குப் பயந்து அபயம் தேடி அங்கு வந்திருந்த மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். மக்கள் வாய் திறக்கவில்லை. ஏனெனில் அடக்குமுறை, கொலை, ஆயுதம் அவர்களுக்கு நேராக நீட்டிக்கொண்டிருந்ததோடு தலைக்கு நேராகவும் தொங்கிக்கொண்டிருந்தது. தம்புள்ளையில் இந்து ஆலயமொன்று அனுமதியின்றி கட்டப்பட்டதாக இடித்து அழிக்கப்பட்டபோது மக்கள் பொறுமை காத்தனர். ஆனால், திஸ்ஸ விகாரை என்பது சிங்கள பௌத்த பேரினவாதம் தம் தலையில் காலை வைத்து விதைத்திருப்பதன் அடையாளமாகவே மக்கள் உணர்கின்றனர். அதனால் மக்கள் தம் அறக்கோபத்தையே வெளிப்படுத்துகின்றார். இதனை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ளல் வேண்டும். வெறுமனே பிழையான இடத்தில் விகாரை கட்டப்பட்டுள்ளது என்று கூறுவது மட்டும் பிரச்சினைக்கு தீர்வு அல்ல. மக்களுடைய சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். நாட்டின் சட்டங்களுக்கு காவலாக இருப்போம் என்பதை ஆட்சியாளர் உறுதிபடுத்தவும் வேண்டும். கடந்த கால ஆட்சியாளருக்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி என்ன செய்ய முடியும்? என கேள்வி கேட்போர் ஒன்றை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியினர் கடந்த கால தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி அதற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியதை மறந்துவிட முடியாது. தற்போது அவர்களை தேடி தேடி வலை வீசி நீதிமன்றம் கொண்டுவர முயற்சிப்பதை நாம் காண்கின்றோம். பலர் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, திஸ்ஸ விகாரை விடயத்திலும் அநீதி நிகழ்ந்துள்ளது. இங்கும் நீதி நிலைநாட்டப்படுவதோடு குற்றவாளிகள் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும். இங்கு விகாரை பிரச்சினை என்பது சமயம் சார்ந்த பக்தி சார்ந்த பிரச்சினை அல்ல. இது தமிழ் மக்களின் அரசியலோடு தொடர்புடையது. அதனாலேயே போலி சிங்கள தேசியவாதிகளும் சிங்கள பௌத்த அரசியல்வாதிகளும் கூக்குரல் இடுகின்றனர். தமிழர்களின் அரசியல் வீழ்த்தப்பட்ட தன் அடையாளமாகவே விகாரை அமைந்துள்ளது. இதனை ஏற்க முடியாது. எனவே சமூக புதைகுழி விகாரைக்குள் இருக்கலாமோ என்கின்ற சாதாரண சந்தேகத்தினை தீர்க்க வேண்டியது ஆட்சியாளரின் கடமை. அதேபோன்று நீதியை நிலைநாட்ட வேண்டியதும் அவர்களின் பொறுப்பாகும். இதற்கான அழுத்தத்தினை தமிழ் தேசத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க கட்சியினர் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்புதல் வேண்டும். மக்களோடு பயணிக்க வேண்டும். இதுவே இன்றைய தேவை. அதுவே மக்களுக்கான அரசியல் கௌரவமாகவும் நீதிக்கான பயணமாகவும் அமையும் என்றார். https://www.virakesari.lk/article/207323