Everything posted by ஏராளன்
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
எங்கள் அம்மாவும் 2 ஆண் பிள்ளைகள் என்று மகிழ்வாய் இருந்தவ, நாங்கள் தசைபலவீனமாதல்(Muscular Dystrophy) எனும் நோயால் பாதிக்கப்பட்டதால் ஆறாத துயரமடைந்துள்ளார். எனினும் நாங்கள் அம்மாவிற்கு ஆறுதலாக இருப்பதோடு அவவின் பொழுதுபோக்க யுரியூப் காணொளிகளை கணனியில் போட்டுக் காட்டுவோம். அண்மையில் வழுக்கி விழுந்து கையில் வெடிப்பு ஏற்பட்டு தற்போது மெதுவாக நலமாகி வருகிறார்.
-
"சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]]
25 ஆம் ஆண்டு அண்ணை. பெரும்பாலும் தந்தைகள் தம்வலி காட்டாது வாழ்ந்தவர்களே. 1907 இல் பிறந்த உங்கள் தந்தைக்கான கவிதை 1904 இல் பிறந்து 1997இல் மறைந்த எங்கள் அப்புவின்(அம்மப்பா) நினைவுகளை கிளறிவிட்டது. மடியில் வைத்து பல கதைகள் சொல்வார். எள்ளிலும் சின்னி கதை இப்போதும் நல்ல ஞாபகம். தம்மட மகளைத் தாயார் தின்ன நமக்கென்ன பாடு டும்டும் என்று எள்ளிலும் சின்னி பாடுவதாக அப்பு சொன்னது இன்றும் காதுகளில் கேட்கிறது! மாலுமியாய் எமக்கு வழி காட்டி மாயை உலகிற்கு விடைகொடுத்தது ஏனோ?
-
தமிழ்நாடும் இந்தி எதிர்ப்பும்: ஒரு நூற்றாண்டு பயணத்தின் வரலாற்றுப் பின்னணி
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 18 பிப்ரவரி 2025, 07:46 GMT மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க. போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? மத்திய அரசு, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மறுத்துவருகிறது. இந்த நிதியை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிவருகிறது. தமிழ்நாட்டில் குழந்தை மணம் 55% அதிகரிப்பு: முதல் 10 இடங்களில் 6 மேற்கு மாவட்டங்கள் - என்ன காரணம்? பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல் அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்தாகிறது - பாஜக அரசு முடிவின் பின்னணி 'உனக்கு ஏதும் குறை இருக்கிறதா? - இந்தியாவில் 40 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் இந்நிலையில், உத்தர பிரதேசம் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது'' எனத் தெரிவித்தார். "புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு பல பிரச்சனைகளும் (தமிழக அரசுடன்) இருக்கின்றன.'' ''அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கின்றனவா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு, ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?" என்று கேள்வியெழுப்பினார் தர்மேந்திர பிரதான். சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?17 பிப்ரவரி 2025 தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு17 பிப்ரவரி 2025 அவரது இந்தப் பேட்டி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். செவ்வாய்க் கிழமையன்று இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாகவே மாநிலத்தில் பார்க்கப்படுகிறது. இந்தியை அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் குறிப்பிடும்போது, 1930களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமுமே பொதுவாக பேசப்பட்டாலும் தமிழ்நாட்டில் பல தருணங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் துவக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னையில் அன்மைந்துள்ள தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலை. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தியை பரவலாக்கும் முயற்சிகள் 1918ல் துவங்கின. சென்னை மாகாணத்திலும் தென்னிந்தியாவில் இருந்த சமஸ்தானங்களான பங்கனப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், மைசூர், புதுக்கோட்டை, சந்தூர், திருவாங்கூர் ஆகிய பகுதிகளிலும் இந்தியை பரப்பும் நோக்கத்தோடு சென்னை நகரத்தில் தக்ஷிண பாரத இந்தி பிரசார சபா 1918ல் மகாத்மா காந்தியின் முயற்சியில் துவங்கப்பட்டது. 1927ல் இதன் தலைவரான மகாத்மா காந்தி, இறுதிவரை அந்தப் பதவியில் நீடித்தார். 1935வாக்கில் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆறு லட்சம் மாணவர்கள் அங்கு இந்தி கற்றுக்கொண்டிருந்தனர் என்கிறது பேராசிரியர் அ. ராமசாமி எழுதிய Struggle for Freedom of Languages in India நூல். அந்தத் தருணத்தில் தென்மாநிலங்களில் மாணவர்கள் தாமாக முன்வந்து இவ்வளவு பரவலாக இந்தியை கற்றுக்கொள்வது பிரச்னையாகவில்லை. பட மூலாதாரம்,DMK 1935 இந்திய சட்டத்தின் கீழ், 1937ல் மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 159 இடங்களைப் பிடித்து வெற்றிபெற்றது. சி. ராஜகோபாலச்சாரியார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜூலை 14ஆம் தேதி அவர் பதவியேற்றுக்கொண்டார். இதற்குப் பிறகு ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று சென்னையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர், பள்ளிக்கூடங்களில் இந்தி படிப்பது கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் சில இதழ்களும் சில காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதற்குப் பிறகு நடந்த போராட்டங்களை விரிவாக விவரிக்கிறது Struggle for Freedom of Languages in India நூல். இந்நிலையில், திருச்சி துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய சி.என். அண்ணாதுரை, இதனைக் கண்டித்தார். அடுத்தடுத்து காரியங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. அதே நாளில் கட்டாய இந்தியை எதிர்ப்பது குறித்து கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. செப்டம்பர் ஐந்தாம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்திலும் கட்டாய இந்தியை எதிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார் அண்ணா. அக்டோபர் 4ஆம் தேதி கோகலே ஹாலில் நடந்த கூட்டத்தில் பேசிய மறைமலை அடிகள், தமிழின் இலக்கியச் சிறப்பையும் இந்தியையும் ஒப்பிட்டு, தமிழைக் காப்பாற்ற வேண்டுமெனக் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு மாநாடுகள் நடத்தப்பட்டு இந்தியை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி?17 பிப்ரவரி 2025 கர்நாடகா கேரட்டை 'பாலிஷ்' செய்து ஊட்டி கேரட் என விற்பதாக புகார் - நீலகிரி விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?17 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தி மொழியை கட்டாயமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார் ராஜாஜி. ஆனாலும் இந்தியை கட்டாயமாக்கும் திசையில் தொடர்ந்து செயல்பட்டார் ராஜாஜி. 1938-39ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது 125 மேல்நிலை பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. சட்டமன்றத்தில் இருந்த நீதிக் கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இருந்தாலும் 20,000 ரூபாய் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மெட்ராஸ் அரசு வெளியிட்ட ஆணையில், மேல்நிலைப்பள்ளியின் முதல் மூன்று வகுப்புகளில் (6,7,8) ஹிந்துஸ்தானி கட்டாயமாக்கப்படும் எனக் கூறப்பட்டது. கன்னடம் பேசும் பகுதிகளில் 4 பள்ளிகள், மலையாளம் பேசும் பகுதிகளில் 7, தெலுங்கு பேசும் பகுதிகளில் 54, தமிழ் பேசும் பகுதிகளில் 60 பள்ளிகள் என 125 பள்ளிகள் இதற்கென தேர்வுசெய்யப்பட்டன. இதையடுத்து, இந்தப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களைச் சேர்க்காமல் வேறு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டுமென பெற்றோருக்கு இந்தி எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மே மாத இறுதியில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னை மாகாண இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. இதில் கி.ஆ.பெ. விசுவநாதம், பெரியார், உமா மகேஸ்வரன், டபிள்யு.பி.ஆர். சௌந்தரபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 1938ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி, ஸ்டாலின் ஜெகதீசன் என்பவர் முதல்வரின் இல்லத்தின் முன்பாக உண்ணாவிரதத்தைத் துவங்கினார். ஜூன் 1ஆம் தேதி ஈழத்து சிவானந்த அடிகள் தலைமையில் தி. நகரிலிருந்து முதல்வரின் இல்லம் வரை ஊர்வலமாகச் சென்று, அங்கே போராட்டம் நடத்தினர். பல்லடம் பொன்னுச்சாமியும் அன்று உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இதற்குப் பிறகு கட்டாய இந்தி தொடர்பாக மாகாண அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அந்த விளக்கத்தில் "இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் நமது மாகாணத்திற்கு உரிய இடத்தைப் பெற, நம்முடைய படித்த இளைஞர்கள், இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியை அறிந்திருப்பது அவசியம். அதனால்தான் பள்ளிகளில் இந்துஸ்தானி அறிமுகப்படுத்தப்பட்டது" என அந்த விளக்கம் கூறியது. இருந்தபோதும் இந்தி கற்பிக்கப்படும் பள்ளிக்கூடங்களுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. இதில் கலந்துகொண்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு ராஜாஜி செல்லுமிடங்களில் எல்லாம் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்பட்டது. ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ARUNKUMARSUBASUNDARAM பல இடங்களிலும் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடந்துவந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் சி.என். அண்ணாதுரை கைதுசெய்யப்பட்டு அவருக்கு நான்கு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் பெரியார் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு ஒன்றரை மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த நடராசன் என்பவரது உடல்நிலை மோசமடைந்து, 1939 ஜனவரி 15ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார். மார்ச் மாதம் இதேபோல தாளமுத்து என்பவரும் காலமானார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த முதல் இருவர் இவர்கள்தான். 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மேலும் 100 பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்கப்போவதாக அறிவித்தது மாகாண அரசு. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன. அக்டோபர் 30ஆம் தேதி ராஜாஜியும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 1939 நவம்பரில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் 100 பள்ளிகளில் கட்டாய இந்தியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை நவம்பர் 27ல் சென்னை மாகாண ஆளுநர் ரத்துசெய்தார். ஆனால், ஏற்கனவே இந்தியைக் கற்பித்துவந்த 125 பள்ளிகளில் அது தொடர்ந்ததால், போராட்டங்களும் தொடர்ந்தன. பிறகு, ஒரு கட்டத்தில் கட்டாய இந்தி கற்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் வைசிராய் ஒப்புக்கொண்டார். 1940 பிப்ரவரி 21ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்டாய இந்தி ரத்து செய்யப்படுவதாகவும் விரும்பியவர்கள் வேண்டுமானால் படிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது?15 பிப்ரவரி 2025 மராட்டியப் பேரரசில் கிளர்ச்சி மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிவாஜி மகன் சம்பாஜியின் சோகக் கதை15 பிப்ரவரி 2025 இரண்டாவது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இரண்டாவது உலகப் போர் முடிந்த பிறகு மத்திய மற்றும் மாகண சட்டமன்றங்களுக்கு 1946ல் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றது. முதல்வராக பதவியேற்ற டி. பிரகாசம் ஓர் ஆண்டிற்குள்ளேயே பதவி விலகினார். இதற்கடுத்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தார். 1948ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பள்ளிக்கூடங்களில் இந்தி கற்பிப்பது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது மாகாண அரசு. ஆனால் இந்த முறை, தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்பை மனதில் கொண்டு ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது, சென்னை மாகாணத்தில் இருந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் பகுதிகளில் இந்தி கட்டாயப் பாடமாகவும் தமிழகப் பகுதிகளில் விருப்பப் பாடமாகவும் இந்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் தேசிய அளவிலான ஊடகங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கின. இந்த முறை போராட்டத்தின் தலைமை நிர்வாகியாக சி.என். அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். பெரியாரை அழைத்து, முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பேசினார். ஆனால், அதில் பயன் ஏதும் ஏற்படவில்லை. ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது. பெரியார், அண்ணா உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி சென்னைக்கு வந்தபோது அவருக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. முதல்வர் ஓமந்தூரார், கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் ஆகியோருக்கும் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. 1948 செப்டம்பர் 14ஆம் தேதி ஹைதராபாத் மீது இந்திய அரசு போலீஸ் நடவடிக்கையை தொடங்கியபோது சென்னை மாகாணத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, அக்டோபரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் தொடர முடிவுசெய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு, இது தொடர்பான போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பலர் கைதுசெய்யப்பட்டனர். இருந்தாலும் இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்களை முற்றுகையிடுவது நீடித்துவந்தது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜர் ஒரு கருத்தை வெளியிட்டார். "பள்ளிக் கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து" என்றார் அவர். இந்நிலையில், 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓமந்தூரார் பதவி விலகினார். இதையடுத்து, பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக இருந்தது விலக்கிக்கொள்ளப்பட்டது. போராட்டமும் முடிவுக்கு வந்தது. இந்தியைக் கட்டாயமாக்கும் மூன்றாவது முயற்சி ஓமந்தூராருக்குப் பிறகு பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வரானார். அவரது அமைச்சரவையில் மாதவ மேனன் கல்வி அமைச்சராகப் பதவியேற்றார். 1950 மே இரண்டாம் தேதி, பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த முறையும் சி.என். அண்ணாதுரை இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அறிவித்தார். ஆனால், விரைவிலேயே காங்கிரஸ் அரசு இந்த முடிவிலிருந்து பின்வாங்கியது. பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாக்கும் உத்தரவை ஜூலை 27ஆம் தேதி திரும்பப் பெற்றுக்கொண்டது. பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாக்குவதற்கு நடந்த முயற்சிகள் இதோடு முடிவுக்கு வந்தன. இதற்குப் பிறகு ஆட்சி மொழியாக இந்தியை இந்திய அரசு முன்வைத்தபோது, மீண்டும் 'இந்தி திணிப்புக்கு எதிரான' போராட்டம் வெடித்தது. அரசமைப்புச் சட்டத்தை மையமாக வைத்து இந்தப் போராட்டங்கள் வெடித்தன. டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன?14 பிப்ரவரி 2025 தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்குவதை எதிர்த்த போராட்டம் இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஆங்கில வடிவத்தை அதிகாரபூர்வமான அரசியலமைப்பு சட்டமாக வைக்காமல், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை அதிகாரபூர்வமான அரசமைப்புச் சட்டமாக்க முயற்சிகள் நடந்ததை கிரான்வில் ஆஸ்டின் எழுதிய The Indian Constitution: Corner Stone of a Nation நூல் விவரிக்கிறது. அந்த நூலில் உள்ள தகவல்களின்படி, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை இந்தியில் மொழிபெயர்த்து, அதனையே அடிப்படையான அரசமைப்புச் சட்டமாக வைத்துக்கொள்ளும் திட்டத்தை முன்மொழிந்தார் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத். 1948ஆம் ஆண்டு கோடை காலத்தில் இந்தி மொழிபெயர்ப்பு நேருவிடம் அளிக்கப்பட்டது. "அதிலிருக்கும் ஒரு வார்த்தையும் எனக்குப் புரியவில்லை" என ராஜேந்திர பிரசாத்துக்கு கடிதம் எழுதினார் நேரு. முழுக்க முழுக்க சமஸ்கிருதமயமாக்கியதால்தான் அது யாருக்கும் புரியவில்லையென இந்தி ஆதரவாளர்கள் பிறகு குற்றம்சாட்டினார்கள். இருந்தாலும் இந்தி அரசமைப்புச் சட்டத்தை அதிகாரபூர்வமாக்கும் முயற்சிகள் தொடரவே செய்தன. ஒரு கட்டத்தில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, ''தென்னிந்தியாவில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு இது உதவிகரமாக மாறிவிடும்'' என்றார் விரைவிலேயே இந்த விவகாரம் ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் இடையிலான போட்டியாகவே மாறியது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டமும் பிறகு இந்தியில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமானதாக இருக்கலாம் என்று ஒரு யோசனையை முன்வைத்தார் ராஜேந்திர பிரசாத். ஆனால் இது ஏற்கப்படவில்லை. ஆங்கில வடிவமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு நடுவில் இந்தியாவின் தேசிய மொழி எது என்பது குறித்த பிரச்னை அரசமைப்பு அவையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இந்தியை தேசிய மொழியாகவும் தேவநகரியை தேசிய எழுத்தாகவும் அங்கீகரிக்க வேண்டும் என இந்தியின் ஆதரவாளர்கள் கூறினார்கள். ஆனால், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். முடிவில், இந்தி இந்தியாவின் அலுவல் மொழியாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் காதலிக்காக ராஜேந்திர சோழன் கட்டிய 'காதல் சின்னம்' பற்றி தெரியுமா?14 பிப்ரவரி 2025 பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் புதிய அரசமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஆகவே அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொண்டபடி 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. இது இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, 1965க்குப் பிறகும் ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக விளங்கச் செய்வதற்கான சட்டம் ஒன்று 1963ல் அறிமுகப்படுத்தப்பட்டது. The Official Languages Act, 1963 என்ற இந்தச் சட்டம், 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரலாம் எனக் குறிப்பிட்டது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.என். அண்ணாதுரை, 'தொடரலாம்' எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, 'தொடரும்' (may என்பதற்குப் பதிலாக Shall) எனக் குறிப்பிட வேண்டும் என்றார். இருந்தபோதும் அந்தச் சட்டம் 1963ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நிறைவேறியது. இந்தச் சட்டத்தில் திருப்தியடையாத தி.மு.க., இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயத்தமானது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17ஐ எரிக்கும் போராட்டங்களையும் நடத்த ஆரம்பித்தது. தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டார்கள். அண்ணாவும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தத் தருணத்தில் திருச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக சின்னச்சாமி என்பவர் 'தமிழ் வாழ்க, இந்தி ஒழிக' என்று கூறியபடி தீக்குளித்து உயிரிழந்தார். 1964ஆம் வருடம் முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. 1964ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி, "அரசமைப்புச் சட்டம் குறிப்பிட்டபடி ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்தி, இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாகும். இந்தியுடன் ஆங்கிலமும் தொடர 1963ஆம் ஆண்டின் சட்டம் வழிசெய்தாலும், 1965 ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தின் எல்லா அலுவல்களுக்கும் இந்தியே பயன்படுத்தப்படும்" என்றது அந்த அறிவிப்பு. இதையடுத்து அந்த தினத்தை துக்க தினமாக கடைபிடிக்கப்போவதாக அறிவித்தது தி.மு.க. ஜனவரி 25ஆம் தேதி தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டார் அண்ணா. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னைக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேப்பியர் பூங்காவுக்கு அருகில் திரண்டு, முதலமைச்சர் எம். பக்தவத்சலத்தைச் சந்திக்க புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். ஆனால், அவர் மாணவர்களைச் சந்திக்க விரும்பவில்லை. அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் மாலையில் மெரீனாவில் திரண்டு இந்தி புத்தகங்களை எரித்தனர். மதுரையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்கினர். விரல் நகத்தில் தோன்றும் வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது? தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா?12 பிப்ரவரி 2025 கடல் நடுவே உள்ள சிறிய தீவை ஆயிரக்கணக்கான மக்கள் காலி செய்ய என்ன காரணம்?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,UNKNOWN படக்குறிப்பு,1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டக் காட்சி. டி.எம். சிவலிங்கம் என்பவர் கோடம்பாக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரைத் தொடர்ந்து கீழப்பழுவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன் என பலரும் தற்கொலை செய்துகொண்டனர். ஜனவரி 27ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ராஜேந்திரன் என்ற மாணவர் உயிரிழந்தார். பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. ரயில்கள் நிறுத்தப்பட்டன. பல இடங்களில் பேருந்துகள் எரிக்கப்பட்டன. மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பிப்ரவரி 11ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான சி. சுப்பிரமணியமும் ஓ.வி. அளகேசனும் ஆங்கிலமே தொடர வேணடுமெனக் கூறி ராஜினாமா செய்தனர். மாணவர்களின் போராட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துவந்த நிலையில், அதனை நிறுத்த முடிவுசெய்தார் அண்ணா. மாணவர் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். முதலில் அதனை ஏற்காத மாணவர்கள், பிறகு அரை மனதுடன் அதனை ஏற்றுக்கொண்டனர். இந்த கட்டத்தில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இறங்கிவந்தார். பிப்ரவரி 11ஆம் தேதி வானொலியில் உரையாற்றிய பிரதமர், "மக்கள் எவ்வளவு காலம் வேண்டுமோ அவ்வளவு காலத்திற்கு ஆங்கிலத்தை ஒரு மாற்று மொழியாக வைத்திருக்க விரும்புகிறேன். ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைத்திருக்கும் முடிவை நான் இந்தி பேசும் மக்களிடம் விடாமல், இந்தி பேசாத மக்களிடம் விடப்போகிறேன்" என்று குறிப்பிட்டார். இந்த உறுதி மொழியையடுத்து போராட்டம் கட்டுக்குள் வர ஆரம்பித்தது. பிப்ரவரி 12ஆம் தேதி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்தனர். ஓ.வி. அளகேசனும் சி. சுப்பிரமணியமும் தங்கள் ராஜினாமாவை திரும்பப் பெற்றனர். மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. 1986ஆம் ஆண்டு போராட்டம் 1986ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரான ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதன்படி நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் துவங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதால் தி.மு.க. அதனைக் கடுமையாக எதிர்த்தது. நவம்பர் 17ஆம் தேதி அரசமைப்பு சட்டத்தின் 17வது பிரிவை தி.மு.கவினர் எரித்தனர். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார் ராஜீவ் காந்தி. இதற்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கவேபடவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு தமிழ்நாடும் இந்தி எதிர்ப்பும்: ஒரு நூற்றாண்டு பயணத்தின் வரலாற்றுப் பின்னணி
-
கெஹலியவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவு!
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு 18 FEB, 2025 | 01:06 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தனது கையடக்கத் தொலைபேசியின் கட்டணத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை, அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திச் செலுத்தியதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
-
மல்லாவியில் மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
18 FEB, 2025 | 12:33 PM மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றைய தினம் மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்டுள்ளார். இதன்போது, பாடசாலையின் அதிகாரிகள் இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
-
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி கட்டுநாயக்கவில் கைது
18 FEB, 2025 | 10:28 AM போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர்களின் ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதன்போது, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசா போலியாக தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளன. சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தரகர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா தருவதாக கூறி இந்த போலி கனடா விசாவை தயாரித்துள்ளதாகவும், ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி கட்டுநாயக்கவில் கைது
-
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது - பிரதமர் முல்லைத்தீவில் தெரிவிப்பு
Published By: DIGITAL DESK 2 18 FEB, 2025 | 10:47 AM சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இந்த நாட்டை மாற்ற வேண்டுமாயின் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என தற்போதைய அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்தால், அந்த மாற்றங்களை விரைவில் அடைய முடியும். நீங்கள் வழங்கிய மக்கள் ஆணையின் பேரிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம், உங்களுடனேயே எங்களது உடன்படிக்கை உள்ளது. அனைவருக்கும் சமமான, அனைவரையும் அங்கீகரிக்கும், அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய நாட்டை நாம் ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புவோம். நாம் ஒற்றுமையாக இருக்கும் போது நாம் வலுவாக இருக்கிறோம், எவராலும் எங்களைப் பிரிக்க முடியாது. நீங்கள் இந்த நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அந்த மாற்றத்தை வேறு திசையில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க மாட்டோம். சட்டத்தை தாம் விரும்பியவாறு கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்க மாட்டோம். இதுவரை இந்நாட்டின் அபிவிருத்தி எல்லாப் பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரியாக இடம்பெறவில்லை. முழு நாட்டையும் மையமாகக் கொண்ட ஒரு அபிவிருத்தி முறைமையை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். அஸ்வெசும நிவாரண உதவி பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்குப் போன்றே 300க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகளின் பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு ரூபா 6,000/= வவுச்சரை வழங்கியுள்ளோம். 2026 இல் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். பாடசாலை கல்வியை முடித்து சமூகத்திற்குச் செல்லும் பிள்ளைக்கு எதிர்கால பாதையை தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்வது எளிதானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையும் எளிதானது அல்ல, ஆனால் அதை எப்படியாவது செய்தாக வேண்டும். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம்". அனைவருக்கும் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் வழங்குவதற்காக நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்தார். https://www.virakesari.lk/article/206975
-
உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசம் அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 88 வயதான போப் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. சோதனைகளில் சுவாச தொற்று இருப்பது தெரியவந்ததால், அவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது ரோமிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார். 88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் உடல் நலக் குறைவு காரணமாக பிரதான மதக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தும் அண்மைக்காலமாக விலகியிருந்தார். இதேவேளை, கடந்த 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் சத்திர சிகிச்சைகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Thinakkural.lkபாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசம்அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 88 வயதான போ...
-
நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்! Published By: DIGITAL DESK 7 18 FEB, 2025 | 09:08 AM காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும். www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும். இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/206970
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
மின்தடைக்கான காரணம் வெளியானது கடந்த 9ஆம் திகதியன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது.எனவே, மீண்டும் மின்தடை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/315310
-
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு: மத்திய அரசுக்கு எதிராக காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்!
18 FEB, 2025 | 10:59 AM காரைக்கால் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இலங்கை அரசின் தொடர் துப்பாக்கிச்சூடு மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் பெண்கள் தண்டவாளத்தில் படுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் காரைக்கால் ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணி ரயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காததால் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய அரசுக்கு எதிராக காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்!
-
உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் : 187 வாக்குகளுடன் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றம்
Published By: VISHNU 17 FEB, 2025 | 07:39 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் 187 வாக்குகளுடன் திருத்தங்கள் ஏதுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தேர்தல்கள் ( விசேட ஏற்பாடுகள்) தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன, முதலாம் வாசிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சபைக்கு சமர்ப்பித்தால். குறித்த சில உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் கோரப்பட்டு பிற்போடப்பட்டுள்ளவிடத்து அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக் கோருவதற்காகவும், தேர்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புப்பட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் நான்கு அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவிப்பதற்காக பாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (14) கூடியது. இதன்போது சபாநாயகர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் ' சட்டமூலம் முழுமையாகவும் மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் குழாமில் பெரும்பான்மையினராகிய இரண்டு நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளனர். நீதியரசர் குழாமில் மீதமுள்ள ஒரு நீதியரசர், சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படவில்லையென்பதால் அதனைப் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையொன்றினால் நிறைவேற்ற முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று பி.ப.2 மணிமுதல் பி.ப 7 மணி வரை நடைபெற்றது. அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வாக்கெடுப்பு கோரினார். இதனைத்தொடர்ந்து வாக்கெடுப்பு கோரப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டு ஏகமனதாக திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் : 187 வாக்குகளுடன் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றம்
-
வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு
Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 05:45 PM இரண்டாவது உலக தமிழர் மாநாடு தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்ட வியட்நாம் நாட்டில் உள்ள டனாங் (Da Nang) நகரில் எதிர்வரும் 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு தமிழர் நடுவம், வியட்நாம் தமிழ் சங்கம், தமிழ் சாம்பர் ஒஃப் காமர்ஸ் ஆகிய தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் 'வியட்நாம் உலக தமிழர் மாநாடு 2025' நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், இலங்கை பிரதமரின் தனிச் செயலர் சிறி பகவான் வினிதா உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றுகிறார்கள். மேலும் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகைதரும் பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர். இரண்டாம் உலக தமிழர் மாநாடு குறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவரான திருத்தணிகாசலம் கூறுகையில், ''இரண்டாம் நூற்றாண்டிலேயே கடல் வணிகத்தில் சோழ, பல்லவ, பாண்டிய பேரரசர்கள் ஏற்றுமதியாளர்களாக இருந்துள்ளனர். பண்டைய பட்டுப்பாதை எனப்படும் கடல் வணிக பாதை என்பது சீனா, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, மாமல்லபுரம், நாகப்பட்டினம், தொண்டி வழியாக இலங்கையை தொட்டு, அரபு நாடுகள் வழியாக ஐரோப்பாவுக்கு கடல் வணிகம் நடைபெற்றுள்ளது. வியட்நாமில் உள்ள டனாங் கடற்கரை நகரத்திற்கு அருகில் மைசன் எனும் இடத்தில் சைவ மற்றும் வைணவ கோயில்கள் இருக்கின்றன. முக லிங்கம் என்பது உலகத்திலேயே சிறப்பு வாய்ந்த லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தில் சிவனின் முகம் இருக்கும். இத்தகைய முக லிங்கம் வியட்நாமின் மைசன் நகரத்தில் இருக்கிறது. இங்கு சிவன் கோயில், முருகன் கோயில் உள்ளன. அத்துடன் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் மீசை இருப்பதும் தனித்துவமானது. இதை போன்ற முக லிங்கம் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் உள்ள பரமக்குடி எனுமிடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி வியட்நாம் நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டில் சாம்பா பேரரசு சாம் எனும் புதிய மொழியை தமிழிலிருந்து தோற்றுவித்தது. பண்டைய சாம் மொழியில் தான் கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளின் பழைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலும் சாம் மொழியும் தமிழ் எழுத்துக்கள் போலவே க, ஞ, ச, ன, ய , ர, ல, வ, ழ, ள என முடிகிறது. டனாங் நகரில் சாம்பா அருங்காட்சியகம் உள்ளது. அங்கே சிவன், பார்வதி, முருகன், காரைக்கால் அம்மையார் ஆகியோரின் சிலைகள் உள்ளன. இவ்வாறு தமிழர்களுடன் நெருக்கமான வரலாற்றுத் தொடர்புகளையும் பண்பாட்டு தொடர்புகளையும் கொண்டிருக்கும் வியட்நாமில் உள்ள டனாங் நகரில் தான் உலக தமிழர் மாநாடு பெப்ரவரி 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. உலக தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், தமிழர்கள், தமிழ் மொழி ஆய்வாளர்கள், வணிகர்கள் என பலரும் பங்குபற்றுகிறார்கள். மேலும், இந்த மாநாட்டில் இரண்டாவது நாளில் உலக தமிழர்களின் வணிகம் சார்பான மாநாடும் நடைபெறுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களுக்குள் வணிக தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும், புதுப்பித்துக்கொள்ளவும், உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்'' என்றார். இதனிடையே பன்னாட்டு தமிழர் நடுவம் சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டின் கம்போடியா நாட்டில் உள்ள சியாம்ரீப் எனும் நகரில் முதலாவது உலக தமிழர் மாநாடு நடைபெற்றமை என்பதும், இந்த மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கு பற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்தன - காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நெட்டன்யாகு தெரிவிப்பு Published By: RAJEEBAN 17 FEB, 2025 | 12:46 PM அமெரிக்கா வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் ,அமெரிக்கா காசாவை அபிவிருத்தி செய்யும் டொனால்ட் டிரம்பின்திட்டத்தினை பாலஸ்தீனியர்களும் அமெரிக்காவின் சகாக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ள போதிலும் வேறு விதமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இது உகந்த திட்டம் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பிற்கு ஒப்பானது என தெரிவிக்கப்படுவதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார். காசா குறித்து நானும் டிரம்பும் பொதுவான மூலோபாயமொன்றை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு,அமெரிக்க ஜனாதிபதியின் திட்டமே சரியானது என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நீங்கள் விரும்பிய எதனையும் செய்யுங்கள் என பிபியிடம் ( பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம்) தெரிவித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். என்னுடன் கலந்தாலோசித்துவிட்டு இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் இந்த வகை குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதற்கு தடை விதித்திருந்தார். வலிமை மூலம்சமாதானம் என கருதுவதால் இந்த குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். எம்கே84-907 கிலோ குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்தன- காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நெட்டன்யாகு தெரிவிப்பு
-
உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் - பிரிட்டிஸ் பிரதமர்
Published By: RAJEEBAN 17 FEB, 2025 | 10:38 AM உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ்படையினரை பயன்படுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம் என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எமது படையினரை அனுப்புவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நான் தயார், நான் இதனை சாதாரணமாக தெரிவிக்கவில்லை என ஒப்சேவரில் எழுதியுள்ள பத்தியில் அவர் தெரிவித்துள்ளார். இது பிரிட்டிஸ் படையினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விடயம் என்பதை நான் ஆழமாக உணர்கின்றேன் எனினும் உக்ரைன் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உதவுவது என்பது எங்கள் கண்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுவது,எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுவது என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் - பிரிட்டிஸ் பிரதமர்
-
பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜார்ஜினா ரென்னார்ட் பதவி,காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் கடந்த 20 ஆண்டுகளில் மாறியிருக்கக் கூடும். பூமியின் நடுப்பகுதி ஒரு பந்து போன்ற வடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் ஓரங்கள் சில இடங்களில் 100 மீட்டர் உயரத்துக்கு உருக்குலைந்திருக்கலாம் என்பது அந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசியர் ஜான் விடாலின் கூற்று. சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயினங்களை காக்கும் காந்தப்புலத்தை உருவாக்கும் பூமியின் உட்புற மையக்கருவே நமது கிரகத்தின் துடிக்கும் இதயமாக இருக்கிறது. பூமியோடு தொடர்பில்லாமல் உட்புற மையக்கரு, தனியாக சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுழற்சி இல்லாவிட்டால், பூமி அழிந்து, பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தனது காந்தப் புலத்தை இழந்த செவ்வாயைப் போன்று வறண்டு போய்விடும். இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா? சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்? 100-வது ராக்கெட் வெற்றி: முதல் தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்து சிகரம் தொட்ட ஸ்ரீஹரிகோட்டா வானியல் அற்புதம்: ஒரே இரவில் வரிசை கட்டி நிற்கும் 7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்? படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் திடமான மையக்கருவின் ஓரம், மிகவும் சூடான திரவ நிலையில் உள்ள உலோக வெளிப்புற மையக்கருவை தொடும் இடத்தில் வடிவ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடும். நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டில் பூமி சுழலும் வேகத்தை விட உட்புற மையக்கரு சுழலும் வேகம் குறைந்து பின்னர் மீண்டும் வேகமெடுத்ததற்கு என்ன காரணம் என்பதை அறிவதற்காகத்தான் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துகொண்டிருந்தனர். பூமியின் மையக்கரு எப்படி இருக்கும்? பூமியை பாதுகாக்கும் காந்தப்புலத்தை புரிந்துகொள்ளவும் அது வலுவிழக்குமா அல்லது நின்றுவிடுமா என்பதை புரிந்துகொள்ளவும், பூமியின் மையக்கரு எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம். நமது பூமியின் உட்புறம் மிகவும் மர்மமான ஒரு பகுதியாகும். மையக்கரு பூமியின் மேற்பரப்பிலிருந்து 4,000 மைல் ஆழத்தில் உள்ளது. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் விஞ்ஞானிகளால் இதுவரை மையக்கருவை அடைய முடியவில்லை. பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?12 பிப்ரவரி 2025 ஒரு சவரன் தங்கத்தின் விலை இந்தாண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை எட்டுமா? 10 கேள்விகளும் பதில்களும்12 பிப்ரவரி 2025 எனவே, அதன் ரகசியங்களை புரிந்துகொள்ள, நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள் பூமி முழுவதும் பரவும் போது அவற்றை கணக்கெடுக்கின்றனர் சில ஆய்வாளர்கள். இந்த அலைகள் பயணம் செய்யும் விதத்தைக் கொண்டு அவை பூமியின் உட்கரு உட்பட எந்த பொருட்களை கடந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது நமது பூமிக்குக் கீழே இருப்பது என்ன என்பதை கண்டறிவதில் உதவியாக இருக்கும். வேகம் குறைந்த உட்புற மையக்கரு 1991 முதல் 2023வரை ஒரே இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் அதிர்வலைகளை இந்த புதிய ஆய்வு கணக்கில் எடுத்துக்கொண்டது. பூமியின் உட்புற மையக்கரு எப்படி காலப்போக்கில் மாறியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அது உதவியது. அந்த காலகட்டத்தில் சுமார் 2010-ஆம் ஆண்டுவாக்கில் உட்புற மையக்கரு வேகம் குறைந்தது என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் கூடுதல் ஆதாரங்களை கண்டுபிடித்தவர் தெற்கு கலிஃபோர்னிய பல்கலைக் கழகத்தில் புவியியல் விஞ்ஞானியாக இருக்கும் பேராசிரியர் விடால். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பூமியின் மையக்கருவோடு தொடர்புப்படுத்தப்படும் காந்தப்புலம் சூரிய துகள்களுடன் தொடர்பு கொள்ளும்போது நார்தர்ன் லைட்ஸ் ஏற்படுகின்றன ஆனால், உட்புற மையக்கருவின் வடிவம் மாறுகிறது என்பதற்கான ஆதாரத்தையும் அவரது குழுவினர் கண்டுபிடித்தனர். இது உட்புறக்கரு மற்றும் வெளிப்புற கருவின் எல்லையில் உட்புற மையக்கரு உருகும் நிலையில் உள்ள இடத்தில் நிகழ்வதாக தெரிகிறது. வடிவ உருகுலைவுக்கு, வெளிப்புற மையக்கருவின் திரவ ஓட்டம் மற்றும் சமச்சீர் இல்லாத புவி ஈர்ப்பு விசையின் ஈர்ப்பு காரணமாக இருக்கலாம். இந்த ஆய்வில் பங்கேற்காத ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹர்வாயே டுகல்சி "மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய கருத்துரு," என இந்த ஆய்வு குறித்து குறிப்பிட்டுள்ளார். "நவீன அறிவியலில் அதிகம் அறியப்படாத உட்புற மையக்கருவின் பாகுத்தன்மை உள்ளிட்ட முக்கிய பருப்பொருள் குறித்த மதிப்பீடுகளைச் செய்ய இது விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும்" என அவர் தெரிவித்தார். விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?11 பிப்ரவரி 2025 காதலர் தினத்தன்று பௌர்ணமி: முழு நிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? புனைவுகளும் உண்மையும்13 பிப்ரவரி 2025 காலப்போக்கில் வெளிப்புற மையக்கரு, திடமான உட்புற மையக்கருவை போல் உறைந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது முழுமையாக திடமாக மாறுவதற்கு பல கோடி ஆண்டுகள் ஆகும். அது கிட்டத்தட்ட பூமியில் உயிரின் அழிவை காட்டும். ஆனால் அதற்குள் இந்த கிரகத்தையே சூரியன் விழுங்கியிருக்கக் கூடும். பூமியின் மையக்கருவில் என்ன நடக்கிறது? பூமியின் மையக்கருவுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி உலகெங்கும் வல்லுநர்கள் நடத்தி வரும் ஆய்வின் ஒரு அங்கமாக பேராசிரியர் விடாலின் பணி உள்ளது. "அறிவியலில், பொதுவாக ஒரு பொருளை புரிந்து கொள்ளும் வரை அவற்றை திரும்பத்திரும்ப பார்க்க முயற்சிப்போம்," என்கிறார் பேராசிரியர் விடால். "இந்த கண்டுபிடிப்பு ஒரு துளிகூட நமது வாழ்வை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் உண்மையில் பூமியின் மையக்கருவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என மேலும் சொல்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த மாற்றங்களுக்கும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் காந்த புலத்தில் திடீர் அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அதற்கும் உட்புற மையக்கரு எல்லையில் நாம் காண்பதற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என்றார். மையக்கரு சுழல்வதும் விரைவில் நின்றுவிடப் போகிறது என்பது போன்ற எண்ணங்களை ஏற்படுத்துவதை தவிர்ப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் விடால். இன்னமும் நிச்சயமற்ற பல விஷயங்கள் இருப்பதாக அவர் கூறினார். "இந்த முடிவுகளை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா என்பதை 100% உறுதியாக எங்களால் சொல்லமுடியாது." என்றார் அவர். அறிவியல் அறிவின் எல்லைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பல ஆய்வாளர்களைப் போல் தான் சொன்னதும் கடந்த காலத்தில் தவறாகியிருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் விடால். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்
-
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை எதிர்பார்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Published By: VISHNU 17 FEB, 2025 | 07:33 PM நாளை செவ்வாய்க்கிழமை (18) பல பகுதிகளில் வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வெப்பமான வானிலை நிலவரங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வுத் துறை திங்கட்கிழமை (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும், மேலும் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை எதிர்பார்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவதில்லை : அமைச்சர் சந்திரசேகர்
17 FEB, 2025 | 05:37 PM வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவது தொடர்பிலோ போதைப்பொருள் பயன்பாடுகளை நிறுத்துவதற்கோ விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதன் விளைவே மக்கள் துன்பங்களை சந்தித்துவருகிறார்கள் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் சந்திரசேகர் இதனை தெரிவித்தார். அமைச்சர் சந்திரசேகர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கல்விக்கு சிறந்த பெயர் பெற்ற இடமான யாழ்ப்பாணத்தில் இன்று துர்நடத்தைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? கலை கலாச்சாரம் கட்டிக் காத்த யாழ்ப்பாணத்தில் ஏன் இத்தகைய நிலை. ஜனாதிபதித் தேர்தலுக்காக நாம் வீடு வீடாகச் சென்றபோது இங்கு இடம்பெற்று வருகின்ற கசிப்பு உற்பத்தியை நிறுத்த வேண்டும். போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை நிறுத்த வேண்டும் என்றே கேட்கிறார்கள் போதை பொருள் கடத்தல் ,பயன்பாடுகளை அதிகரித்துள்ளமையை நிறுத்தவேண்டும். வாள் வெட்டு அச்சறுத்தல்கள் இடம்பெற்று வருகிறது. இங்குள்ள ஒரு சில பொலிஸ்காரர்கள் அட்டுழியங்கள் அதிகரித்துள்ளது . போதைவஸ்துக் காரர்களுடன் பொலிசார் தொடர்பில் இருக்கின்றார்கள் இவைகளுக்கு கூடிய சீக்கிரம். முடிவுகளை எடுத்து எங்களுடைய சமூகத்தை மீட்டு எடுக்க வேண்டும். யாழ்ப்பாணம் ஏன் இந்தப் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளத என்பதை நாம் தேடிப் பார்க்கவேண்டும் இங்குள்ள குடும்பங்கள் சமூக ரீதியாக இன ரீதியாக மத ரீதியாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளது. இவை எல்லாவற்றக்கும் காரணம் அரசியல் வாதிகளும் காரணமாகின்றர்கள் எந்தவொரு அரசியல்வாதியும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருளில் இருந்து மீள்வதற்கு வழிப்பணர்வு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை இன்றுள்ள பெரிய சவாலாக சீரழிந்துள்ள அசுத்தமடைந்துள்ள நாட்டை ஒற்றுமையான நாடாக கட்டியெழுப்பப்படவேண்டும். இதற்காககத்தான் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த நாட்டை சுத்தப்படுத்துவது மட்டுமன்றி அனைவரது மனங்களையும் சுத்தப்படுத்தவேண்டும். போதைப் பொருளிளன் கீழ் முழுச் சமூகமும் சீரளிக்கப்பட்டுள்ளது மது பாவனை காரணமாக யாழ்மாவட்டம் முதல் இடத்திலுள்ளது உலகத்தில் குடிகார நாடாக இலங்கை உள்ள இடத்தில் இருந்த போது இலங்கையில் நுவரெலியா மாவட்டம் அதிக குடிகாரர் உள்ள மாவட்டமாக இருந்தது இன்று அதிக குடிகாரர் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது. யுத்தத்திற்கு பின்னரான சூழலில் பாதிப்படைந்த மக்களை வறுமையும் சேர்ந்து வாட்டுகிறது. இதன் காரணமாக நூண்நிதி கடன் களை பெற்று அதனைக் கட்டமுடியாதவர்களாக தற்கொலை செய்தவர்கள் அதிகமாகவுள்ள இடமாக வன்னி மாவட்டம் உள்ள்து. இவ்வாறாக தொடர் பாதிப்புகளை வடக்கு மாகாணம் சந்தித்துகொண்டிருக்கிறது இங்கு மட்டுமல்ல முழு இலங்கையுமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நாட்டை மாறிமாறி ஆட்சியிலிருந்தவர்களால் இந்த நிலையேற்பட்டது. நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் அதற்காவே உங்கள் வாக்குகளும் எமக்கு கிடைத்துள்ளது இதனால் தான் இந்த நாட்டை சுத்தப்படுத்த வேண்டும். நாம் எமது பதவியேற்பு ,சுதந்திர தினம் போன்றவற்றிற்கு ஆடம்பர செலவு இல்லாது மிக எளிமையான அவற்றை செய்து காண்பித்தோம். நாம் எவற்றை செய்வோம் என்பதை கூறினோமோ அவற்றை செய்து உண்மையான மாற்றத்தை எற்படுத்துவோம் என்றார். வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவதில்லை : அமைச்சர் சந்திரசேகர்
-
டெல்லி நிலநடுக்கம்; முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் வீதிகளில் தஞ்சம்
தலைநகர் டெல்லியில், காலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், ‘நிலநடுக்கத்தின் மையம் (epicentre)’ டெல்லி தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு அருகில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த ஸ்ரீஜன் பால் சிங், நிலநடுக்கத்தின் மையப்பகுதி டெல்லியில் இருந்ததால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதற்குமுன் இதற்குமுன் இதுபோன்ற நிலநடுக்கத்தை உணர்ந்ததில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயத்தில், டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிக்டர் 3.0 அளவுகோளில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நிலநடுக்க பயத்தின் காரணமாக நொய்டா மற்றும் காசியாபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறினர். நிலநடுக்க நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, பூமிக்கடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, ரிக்டர் அளவு கோளில் 4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இந்தியாவின் நில அதிர்வு மண்டல வரைபடத்தில் (seismic zoning map) நில அதிர்வு மண்டலம் 4ல் டெல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, அதிகமக்கள் தொகை அடர்த்தி, திட்டமிடாத மற்றும் பாதுகாப்பற்ற கட்டமைப்புகளின் காரணமாக நிலநடுக்கத்தின் விளைவுகள் குறித்தான அச்சம் அதிகமாக இருக்கிறது. குறைவான அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அதை எளிதாகக் கடந்து செல்லக்கூடிய சூழல் டெல்லியில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. 1720ஆம் ஆண்டு முதல் 5.5 ரிக்டர் அளவுகோளுக்கும் மேல் 5 முறை டெல்லியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் டெல்லி நிலநடுக்கம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், பின்விளைவுகளை கருத்தில்கொண்டு எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்துகிறேன். அதிகாரிகள் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். தேசிய நில அதிர்வு மையத்தின் இயக்குநர் ஓ.பி. மிஸ்ரா, “நிலநடுக்கம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி நிலநடுக்கம்; முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் வீதிகளில் தஞ்சம்
-
வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மகிழ்ச்சி - ரவிகரன் எம்.பி
Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 05:11 PM முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தை அறிவித்துள்ளார். இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நிதியை இவ்வருட வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். அந்த வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென கூட்டுறவுப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியதுடன், இக்கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர் மற்றும் சக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்ப்பாடுகள் குறித்து நேரடியாகக் காண்பித்திருந்தார். அதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர் 04ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது பாராளுமன்ற முதல் உரையில், வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதன்போது வட்டுவாகல் பாலம் அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் உறுதியளித்திருந்தார். இத்தகைய சூழலிலேயே திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு
-
தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு; நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு
17 FEB, 2025 | 04:21 PM தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்துவந்த தனியார் காணியில் அவர்களது அனுமதியின்றி இராணுவத்தின் பாதுகாவலில் பௌத்த விகாரை (திஸ்ஸ விகாரை) கட்டப்பட்டமையை யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இராணுவம் போர்க்காலத்தில் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் உள்ள வீடுகள், இந்துக் கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் பலவற்றை இடிப்பதற்கும் தரைமட்டமாக்குவதற்கும் இவர்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது? அண்மையில் புதிய ஜனாதிபதி “மக்களுடைய காணிகள் மக்களுக்கே வழங்கப்படும்” என்று வழங்கிய வாக்குறுதியின்படி மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படுமா? நீதிமன்றத் தீர்ப்புக்கள் மதிக்கப்படாது கட்டுமானப் பணிகள் பாதுகாப்பு படையினரின் அனுசரணையில் நடக்கும்போது (உ+ம்: குருத்தூர் மலை விவகாரம்) தையிட்டி விகாரை விவகாரத்தில் காணி உரிமையாளர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனால், தையிட்டி விகாரை விவகாரம் இதுபோன்றே வேறு இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனை இடித்து அகற்றினால் பிரச்சினை தீருமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இடிப்பதால் தென்னிலங்கையில் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகளால் பிரச்சினை இன்னமும் மோசமாகும் என்பதே யதார்த்தம். அத்துடன் மத நல்லிணக்கம் எட்டாக்கனியாகிவிடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்புக்களை எல்லா இடங்களிலும் எல்லா மக்களும் (பாதுகாப்புப் படையினர் உட்பட) மதித்து நடப்பது சாத்தியப்படக்கூடிய வழிமுறை என்று நாம் கருதுகிறோம். வடக்கு, கிழக்கில் போர் முடிவுக்கு வந்து 16 வருடங்களாகியும் இன்னமும் பெருமளவில் நிலைகொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் அங்குள்ள மக்களின் பாதுகாப்பையும் அடிப்படை மனித உரிமைகளையும் மதித்துச் செயற்படும்போது அது இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற கள நிலையை உருவாக்கும் என குறிப்பிட விரும்புகிறோம் என்றுள்ளது. தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு; நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு
-
மனைவின் சாம்பலால் செய்யப்பட்ட பானை; சீன நபரின் வியத்தகு செயல்
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து ஒன்றாக மண்பாண்டம் செய்வது, பண்டையை சீன இசைக்கருவிகளை ஆராய்ச்சி செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வது என்று மகிழ்ச்சியாக வாழ்நாட்களை ஒன்றாக கழித்துள்ளனர். இப்படி சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், ஒருநாள் விழுந்தது பேரிடி. பியாவோவி மனைவியான லாங்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். பிறகு லாங்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எப்படியும் ஒருநாள் தனது உடல்நிலை மோசமடையும் அதற்கும் தன்னுடைய விருப்பதை தனது கணவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துள்ளார்.. இதன்படி, தான் இறந்த பிறகு தனது உடமைகளை பானைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்று மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்களும் கடந்தன… இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லாங்கின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. தனது மனைவி உயிரிழந்தாலும், ’எங்களின் காதல் இந்த உலகத்தைவிட பெரியது. அது என்றும் அழியாது’ என்பதை சுட்டிக்காட்டுவகையில், பியோ, தனது மனைவியின் இறுதி ஆசையையும் நிறைவேற்றினார். இதன்படி,. மனைவியின் சாம்பலை களிமண்ணுடன் கலந்து பானை ஒன்றையும் செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட பியோ, தனது மனைவியின் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகவும், இதன்மூலம் இருவரும் இறந்த பிறகு சொர்க்கத்தில் ஒன்றாக வாழ்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ”நான் இதுவரை செய்த மண்பாடங்களிலேயே இதுதான் சிறந்த மண்பாண்டம்.. நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்?.. “ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் பியோ. இதுகுறித்தான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதற்கு கருத்து தெரிவிக்கும் பயனர்கள்,”இன்றைய உலகில் உண்மையான காதல் இன்னும் இருப்பதைக் கண்டால்,சிறுது பொறாமையாகவும் மிகுந்த நெகிழ்ச்சியும் அடைகிறோம். ” என்று தெரிவித்து வருகின்றனர். மனைவின் சாம்பலால் செய்யப்பட்ட பானை; சீன நபரின் வியத்தகு செயல்
-
டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
18 பேர் பலி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? அந்த '15 நிமிடங்களில்' என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சனிக்கிழமை இரவு, பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு செல்வதற்காக புது டெல்லி ரயில் நிலையத்தில் கூடிய மக்கள் கூட்டம் கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி செய்தியாளர் 17 பிப்ரவரி 2025, 08:29 GMT சனிக்கிழமை இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். பெண்களும் குழந்தைகளும் கூட இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வேயின் கூற்றுப்படி, பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவுக்கு பங்கேற்க சென்ற பெருங்கூட்டத்தால் இந்த நெரிசல் ஏற்பட்டது. கும்பமேளாவுக்காக தொடர்ச்சியாக சிறப்பு ரயில்களை இயக்குவதாகவும், கண்காணிப்பு அறை அமைத்து, கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ரயில்வே துறை கூறிவரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை (பிப்ரவரி 15) அன்று புது டெல்லி ரயில் நிலையத்தில் என்ன நடந்தது? புது டெல்லி ரயில் நிலையத்தில் விபத்து நடந்த அந்த 15 நிமிடங்கள் குறித்து இங்கே விரிவாக பார்ப்போம். புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - எவ்வாறு நடந்தது? புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 18 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? கும்பமேளாவில் புனித நீராடுவது தவிர பக்தர்கள் வேறு என்னவெல்லாம் செய்கின்றனர்? (காணொளி) இனி காஷ்மீர் செல்வது கஷ்டமில்லை: டெல்லி - ஸ்ரீநகர் இடையே புதிய ரயில் சேவை, அதன் சிறப்பு என்ன? 'ரயில்வே எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை' ரயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறுகையில், "இந்த விஷயத்தில் முற்றிலும் ஒருங்கிணைப்பு இல்லை. ரயில்வே பாதுகாப்புப் படை எப்போதும் கூட்டத்தைக் கண்காணித்து தேவையான தகவல்களை அனுப்புகிறது." என்றார். "ரயில் நிலையத்தின் ஒரு நடைமேடையில் கூட்டம் அதிகம் இருந்தால், அதற்கு அடுத்த ரயில் வேறு ஏதாவது நடைமேடைக்கு வரவைக்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து ரயில்களையும் ஒரே இடத்தைச் சுற்றி நிறுத்தி வைத்திருந்தது பெரிய தவறு. 'சத்' பூஜையின் போது (இந்து மத பூஜை) அதிக கூட்டத்தைத் தடுக்க தனி இடங்களை உருவாக்கியிருப்போம். இம்முறை, கும்பமேளாவின் போது புது டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே துறை இதுபோன்ற எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை." என அவர் தெரிவித்தார். முன்பே கண்டுபிடித்திருக்க வேண்டிய ஒரு தவறு, புது டெல்லி ரயில் நிலையத்தில் நடந்திருப்பதாக அருண்குமார் நம்புகிறார். ரயில்வே தரப்பில் தவறு நடந்திருப்பதாகவும், அவர்களால் மாலை 6 மணி முதல் 10 மணி வரை அதிகரித்த கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார் அவர். இதற்கிடையில், இரவு 9:30 மணிக்கு 9:45 மணிக்கு இடையே, அந்த இரண்டு நடைமேடைகளிலும் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. மக்கள் ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு ஓடிக்கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழத் தொடங்கினர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 'தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள்' - மும்மொழிக் கொள்கை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை எதிர்க்கும் தமிழக அரசியல் கட்சிகள்8 மணி நேரங்களுக்கு முன்னர் திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: மனைவி உயிரிழந்த வழக்கில் கணவர் விடுவிப்பால் எழும் கேள்விகள்16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சனிக்கிழமை, கிழக்கு இந்தியாவை நோக்கிச் செல்லும் பல ரயில்கள் குறுகிய நேரத்துக்குள் நடைமேடையின் ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றன ஒரே திசையில் செல்லும் ஏராளமான ரயில்கள் சனிக்கிழமை இரவு சுமார் 7 மணிக்கு, புது டெல்லி ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ரயில் நிலையத்தின் 12ஆம் எண் நடைமேடையிலிருந்து சிவகங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதற்குள், பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் கூட ரயில்களில் ஏறமுடியாத அளவுக்கு ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது. அதே 12ஆம் எண் நடைமேடையில் இரவு 9:45 மணிக்கு, புது டெல்லியிலிருந்து சுபேதார்கஞ்ச்-க்கு (பிரயாக்ராஜ்) 04404 என்ற எண்ணுள்ள சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ரயில் வந்த சற்று நேரத்தில் பயணிகள் கற்பனை செய்திராத ஒன்று ரயில் நிலையத்தில் நடைபெற்றது. பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில், நடைமேடை எண் 14-ல் சுமார் 9:30 மணிக்கு நிறுத்தப்பட்டது. அது 10:15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அதாவது அதன் பயணிகள் அந்த நடைமேடையில் இருந்தனர். அதற்கு முன் பிகாரை நோக்கிச் செல்லும் மகத் எக்ஸ்பிரஸுக்கு ஒரு பெரிய கூட்டம் காத்திருந்தது. பிகாரை நோக்கிச் செல்லும் ஸ்வதந்திரா செனானி எக்ஸ்பிரஸின் பயணிகள் 13ஆம் எண் நடைமேடையில் காத்திருந்தனர். அது மூன்று மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக நள்ளிரவைத் தாண்டி புறப்பட்டது. அதாவது, அதிக தேவையிருந்த பல ரயில்கள் ஒரு குறுகிய இடைவெளியில் புது டெல்லியிலிருந்து கிழக்கு இந்திய மாநிலங்களை நோக்கிப் புறப்பட்டன. அவை 12, 13 மற்றும் 14ஆம் எண் நடைமேடைகளிலிருந்து புறப்பட்டுச் சென்றன. நெரிசல் ஏற்பட்டது இந்த நேரத்தில்தான். ஆனால், விபத்து ஏற்பட்ட நேரம் மற்றும் விபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ள விசாரணை முடிவதற்காக ரயில்வே அதிகாரிகள் காத்திருக்கின்றனர். பொக்லைன் வாகன ஓட்டுநர் பலி: மதுரை நக்கீரர் தோரண வாயில் இடிப்பின் போது என்ன நடந்தது?16 பிப்ரவரி 2025 மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?16 பிப்ரவரி 2025 'சிறப்பு ரயில் வந்தவுடன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது' படக்குறிப்பு, வடக்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் ஹிமான்ஷு உபாத்யாயின் கூற்றுப்படி, பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் சிறப்பு ரயில் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே விபத்து ஏற்பட்டது கும்பமேளாவுக்கு 12ஆம் நடைமேடையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ஒரு பெரிய கூட்டம் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக 12ஆம் எண் நடைமேடையில் காத்திருந்தது. பிரயாக்ராஜ் விரைவு ரயில் என்பது ஒரு வழக்கமான ரயில். புது டெல்லியிலிருந்து பிரயாக்ராஜுக்கு செல்வதற்கு மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு ரயில். "பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் 14ஆம் எண் நடைமேடைக்கு வரவிருந்தது. மக்கள் அதற்காக காத்திருந்தனர். இதற்கிடையில் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு ஒரு சிறப்பு ரயில் நடைமேடை 12-ல் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் 14ஆம் எண் நடைமேடையிலிருந்து 12ஆம் எண் நடைமேடைக்கு நகர்ந்தனர்," என வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஹிமான்ஷு உபாத்யாய் பிபிசியிடம் தெரிவித்தார். "இதில் மக்கள் ஒருவரை ஒருவர் கடக்கத் தொடங்கினர், யாரோ தடுமாற, யாரோ விழ, இந்த பரிதாப நிகழ்வு நிகழ்ந்தது." இரவு சுமார் 9:30 மணியளவில் கூட்டம் மிகவும் அதிகரித்திருந்தது. ஆனால் நெரிசல் தொடங்கவில்லை என, அந்த நேரத்தில் ரயில் நிலையத்தில் இருந்த நேரடி சாட்சி ஒருவர் தெரிவித்தார். மக்களின் கூட்டம் இருந்த அளவுக்கு பாதுகாப்பு காவல்துறையினர் இருக்கவில்லை என அவர் கூறினார். தமிழ்நாடு அரசியல் களத்தை சூடாக்கிய திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு16 பிப்ரவரி 2025 ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நடைமேடை மாற்றப்பட்டதால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டதாக சில பயணிகளும் நேரில் பார்த்த சாட்சிகளும் கூறுகின்றனர். சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், என்ன செய்வதென தெரியாமல் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்ததாக, ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத சிலர் தெரிவித்தனர். பயணிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. 12ஆம் நடைமேடையில் இருந்தவர்கள் 14ஆம் எண் நடைமேடையை நோக்கியும், 14ஆம் எண் நடைமேடையில் இருந்தவர்கள் 12ஆம் எண் நடைமேடையை நோக்கியும் ஓட ஆரம்பித்தனர். இதில்தான் நெரிசல் நேர்ந்தது. இரண்டு ரயில்களுக்கான அறிவிப்பும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டதால், எந்த ரயிலுக்கு செல்வது என மக்களால் முடிவு செய்ய முடியாமல் போய்விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மக்கள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு ஓடத்தொடங்கியதுதான் நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது. இது நடைமேடை14-லும் அதற்கு அருகே இருந்த நடை மேம்பாலத்திலும் நடைபெற்றது. இந்த சம்பவம் இரவு 9:30 முதல் 10:45 மணிக்குள் நடைபெற்றது. ரயில் குறித்த அறிவிப்பு செய்யப்பட்ட பின்னர்தான் நடைமேடையில் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்த பலர் தெரிவித்தனர். வழக்கமான ரயில்களின் நடைமேடைகள் எதுவும் மாற்றப்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், நடைமேடை மாற்றப்பட்டதால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டதாக சில பயணிகளும் நேரில் பார்த்த சாட்சிகளும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை விசாரித்ததில், ரயிலின் நடைமேடை குறித்த மாற்றத்தை கடைசி நிமிடத்தில் ரயில்வே அறிவித்ததாக எந்த தகவலையும் பிபிசி கண்டுபிடிக்கவில்லை. சூதாட்டம், வானுயர்ந்த கட்டடங்கள் - மோசடிகளால் கட்டி எழுப்பப்பட்ட விசித்திர நகரத்தில் பிபிசி நேரில் கண்டவை41 நிமிடங்களுக்கு முன்னர் டிரம்ப் - புதின் முதல் சந்திப்பை சௌதி அரேபியாவில் திட்டமிடுவது ஏன்? ஒரு பகுப்பாய்வு16 பிப்ரவரி 2025 ரயில்வே துறை வழக்கமாக ஒவ்வொரு ரயிலின் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பான தகவல்களை அதன் இணையதளத்தில் புதுப்பிக்கிறது. இந்த இணையதளத்துக்குச் சென்று '04404 கும்பமேளா சிறப்பு' ரயில் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முயன்றபோது, சனிக்கிழமை இரவு 31 நிமிடங்கள் தாமதமாக இந்த ரயில் புறப்பட்டது குறித்தத் தகவல் மட்டுமே அங்கே வழங்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் தொடர்பான நடைமேடை குறித்தத் தகவல்கள் என்.டி.இ.எஸ்-இல் வழங்கப்படவில்லை, இது மற்ற ரயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை, விபத்து நடந்த நேரத்தில் நடைமேடை எண் 16-இன் நிலை என்ன? இங்கு எந்த ரயிலும் நிற்கவில்லை என்றால், இந்த நடைமேடைக்கு ஏன் சிறப்பு ரயிலை முன்கூட்டியே கொண்டு வரவில்லை? இந்த விபத்துக்குப் பிறகு, புது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து கும்பமேளா சிறப்பு ரயில்கள் நடைமேடை எண் 16இலிருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அஜ்மீரி நுழைவுவாயிலில் இருந்து இந்த முதல் நடைமேடையை அடைய படிக்கட்டுகளில் ஏற வேண்டிய அவசியம் கிடையாது. படக்குறிப்பு,சம்பவப் பகுதியை சுத்தப்படுத்தும் ஊழியர்கள் ரயில்கள் தாமதமானது தான் முக்கிய காரணமா? ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமானதற்கு சில ரயில்கள் தாமதமானதும் ஒரு காரணம் என நம்பப்படுகிறது. இவற்றில் ஒன்றுதான் 12562 ஸ்வதந்திரா செனானி எக்ஸ்பிரஸ் ரயில். அது செல்லவேண்டிய இரவு 9:15 மணிக்குப் பதில் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் நடைமேடை எண் 13-ல் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் இந்த நடைமேடையில் அந்த நேரத்தில் ஏராளமானவர்கள் காத்திருந்தனர். "ஒன்றிரண்டு ரயில்கள் தாமதமான போது, அவை புறப்படும் நடைமேடையை மாற்றி மக்களை தொலைவில் உள்ள நடைமேடைகளுக்கு அனுப்புவதன் மூலம் கூட்டத்தைக் குறைத்திருக்க முடியும்," என்கிறார் அருண்குமார் . இந்த விபத்து குறித்து விசாரிக்க ரயில்வே ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இதில் ஆர்.பி.எஃப் அதிகாரி பங்கஜ் கங்வாரும் இடம்பெற்றுள்ளார். பங்கஜ் கங்வார் முதன்மை பாதுகாப்பு ஆணையராக உள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பங்கஜ் கங்வார் புது டெல்லி ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். நாம் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தோம். கூட்டத்தைக் கருத்தில் கொள்ளும்போது பாதுகாப்புப் படையினர் எவ்வளவு பேர் ரயில் நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டனர்? விசாரணை நடைபெறுவதற்கு முன்பாகவே அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டது, விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்துக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும்? இந்த ஒவ்வொரு கேள்விக்கும் விசாரணை முடியும் வரை காத்திருக்கும்படி அவர் தெரிவித்தார். ஒருபுறம் ரயில்வே அதிகாரிகள், சனிக்கிழமை வந்த கூட்டம் எதிர்பாராதது என்கிறார்கள், மறுபுறம், உத்தரப் பிரதேச அரசு பிரயாக்ராஜில் வரலாறு காணாத அளவு பக்தர்களின் வருகை குறித்து பேசிக்கொண்டிருக்கிறது. யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா? ஐரோப்பிய நாடுகள் பாரிஸில் நாளை அவசர ஆலோசனை16 பிப்ரவரி 2025 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதன்மை பாதுகாப்பு ஆணையர் பங்கஜ் கங்வார், சம்பவ இடத்தை ஞாயிற்றுகிழமை காலை பார்வையிட்டார் பிரயாக்ராஜுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை பொதுவாக, 'சத்' போன்ற விழாக்களின்போது ரயில்வே மிகப்பெரிய முன்னேற்பாடுகளை செய்யும். கூட்டத்தை சமாளித்து சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மக்களை அனுப்பும் வகையில் கூட்டம் வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்படும். பிரயாக்ராஜ் சாலைகள் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏராளமான மக்கள் கூட்டம் இருப்பது குறித்தும், போக்குவரத்து நெரிசல், ரயில் நிலையங்களில் கூட்டம் குறித்தும் சில நாட்களாகவே செய்திகள் வெளியாகின்றன. ரயில்வேயும் புது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து பிரயாக்ராஜுக்கு இரண்டு சிறப்பு ரயில்களை சனிக்கிழமை மாலை இயக்கியது. "மாலையில் ஏரளமான கூட்டம் இருந்தது, நடைமேடை 14 மற்றும் 15-ல் பலர் இருந்தனர். அதற்கு முன் எல்லாம் சரியாக இருந்தது. நாங்கள் சில சிறப்பு ரயில்களையும் இயக்கினோம். அது சீராக சென்றது." என ரயில்வே அமைச்சகத்தின் செயல் இயக்குநர் (செய்தி விளம்பரம்) திலீப் குமார் தெரிவித்தார். "இரவு நேரம் என்பதால் இதுவே கடைசி ரயிலாக இருக்கலாம் என மக்கள் நினைத்திருக்கலாம். இதனால் தள்ளுமுள்ளு அல்லது நெரிசல் ஏற்பட்டிருக்கலாம். பலர் படிக்கட்டில் தவறி விழுந்தனர். அதனால் இந்த சம்பவம் நடந்தது." என்கிறார் அவர். நடைமேடைகளிலும், நடைமேம்பாலங்களிலும், படிக்கட்டுகளிலும் அமர்ந்து மக்கள் ரயிலுக்காக காத்திருப்பதை ரயில் நிலையங்களில் அடிக்கடி பார்க்கலாம். இந்த மக்கள், ரயிலை பார்த்த பின்னர் அந்த குறிப்பிட்ட நடைமேடையை நோக்கி நடக்கத் தொடங்குவர். தங்களது சுமைகளை சுமந்துகொண்டு அதிக தூரம் நடக்க வேண்டாம் அல்லது படிகளில் ஏறவேண்டாம் என்பதுதான் இதன் நோக்கம். சனிக்கிழமை இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் இதேபோன்றதொரு சூழ்நிலைதான் நிலவியது. எதிரி ரேடார்களில் சிக்காது: இந்தியாவுக்கு அமெரிக்கா விற்க முன்வந்துள்ள எப்-35 போர் விமானத்தின் சிறப்புகள் என்ன?15 பிப்ரவரி 2025 இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்?15 பிப்ரவரி 2025 படக்குறிப்பு,சிறப்பு ரயில் குறித்த அறிவிப்புக்கு பிறகே பிரயாக்ராஜுக்கு செல்ல எந்த ரயிலில் ஏறவேண்டும் என்பது குறித்து மக்கள் குழப்பமடைந்ததாக ரயில் நிலையத்தில் பணிபுரியும் பலரும் நம்புகின்றனர் "இந்த கூட்டத்தை முறையாக கையாளாமல் ரயில்வே தவறு செய்துள்ளது. கடைசி நிமிடத்தில் ஒரு பெருங்கூட்டத்தின் முன் அறிவிப்பை வெளியிட்டதால் இது நடந்துள்ளது. இதைபோன்ற ஏற்பாடுகள் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் இருக்க மக்களின் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் அங்கும் இங்கும் அமரக்கூடாது என்பதை மக்களும் உணரவேண்டும்," என்கிறார் அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஷிவ் கோபால் மிஷ்ரா. பிரயாக்ராஜுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு வார இறுதி நாட்களில் புது டெல்லியிலிருந்து ஃபாஃபாமாவ் (Phaphamau) ரயில் நிலையத்துக்கு மாலை 5:20 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதே பாதையில் இரண்டாவது சிறப்பு ரயில் இரவு 7:15 மணிக்கு இயக்கப்பட்டது. கூட்டத்தைக் கருத்தில் கொண்டு கடைசி நிமிடத்தில் இயக்கப்படும் இது போன்ற ரயில்கள் 'தேவைக்கேற்ப ரயில்கள்' என அழைக்கப்படுகின்றன. சனிக்கிழமை கூட்டத்தைக் கருத்தில் கொண்டு புது டெல்லியிருந்து ஃபாஃபாமாவுக்கு (பிரயாக்ராஜ்) முதல் ரயில் 5:20 மணிக்கு இயக்கப்பட்டது. பெரும் கூட்டம் இருந்தும், அடுத்த சிறப்பு ரயில் இரவு 10 மணிக்கு பிறகுதான் அனுப்பப்பட்டது. இந்த நேரத்தில், ரயில் நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. இது பற்றிய பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் அளிக்கப்படாமல் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 18 பேர் பலி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? அந்த '15 நிமிடங்களில்' என்ன நடந்தது?
-
தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில்
2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு - செலவுத் திட்டம் Live Update #Budget2025 17 FEB, 2025 | 01:53 PM சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். 2025 ஆம் ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை அடைவது பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான் இம்முறை வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரச நிதி முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய துறைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு. மீண்டெழும் செலவுகளுக்கு 4% நிதி ஒதுக்கீடு. மக்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவும் மக்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும். கைத்தொழில், வர்த்தகம், மற்றும் உற்பத்தித் துறையில் அதிகளவான மேம்பாட்டை எதிர்பார்க்கிறோம். பொருள் மற்றும் சேவை நியாயமான விலைக்கு தடையின்றி விநியோகிக்கப்படும். கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு. மக்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பொருள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி ஊடாக 19 பில்லியன் டொலர் வருவாயை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு. 2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அரசமுறை கடன்களை முறையாக செலுத்துவோம். ஏழ்மையை இல்லாதொழிப்பதற்கு உரிய திட்டங்கள் செயற்படுத்தப்படும். அரச - தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் அபிவிருத்தி செய்யப்படும் பொருளாதார பரிமாற்ற சட்டம் திருத்தம் செய்யப்படும் தரிசு நிலங்களாக உள்ள அரச காணிகள் குத்தகை அடிப்படையில் தனியார் தரப்பினருக்கு வழங்கப்படும் அரச - தனியார் பங்குடைமை தொடர்பில் புதிய சட்டமூலம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் காணிகளின் உச்ச பயனை பெற "பிம்சவிய" திட்டம் அமுல்படுத்தப்படும் சட்டவரைபாக காணப்படும் வங்குரோத்து தொடர்பான வரைபு வெகுவிரைவில் சட்டமாக்கப்படும் தேசிய தரவு கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் கொழும்பு துறைமுக முனையங்கள் அபிவிருத்திக்கான திட்ட மனுக்கள் எதிர்வரும் நாட்களில் கோரப்படும் சகல பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலராக அதிகரிக்க எதிர்பார்ப்பு. டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தி துரிதப்படுத்தலுக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக புதிய சுற்றுலாத்தலங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். ஜப்பான் நாட்டு முதலீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் நிர்மாணிக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதி இல்லை. வாகனம் இல்லை. சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை மேம்பாட்டுக்காக நடப்பு வங்கி கட்டமைப்புடன் அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்படும். அரச செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும். சுங்க சட்டம் திருத்தம் செய்யப்படும். அதிக பராமரிப்பு செலவுகளை கொண்டுள்ள சகல அதிசொகுசு அரச வாகனங்கள் எதிர்வரும் மாதம் ஏலத்தில் விடப்படும். கொள்கை அடிப்படையில் அரச நிறுவனங்கள் கூட்டிணைக்கப்படும். அரச முயற்சியாண்மைக்கான பரிபாலன சபை ஸ்தாபிக்கப்படும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு மகளிர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டலுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. சுகாதார சேவை டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக அதிக நிதி ஒதுக்கீடு. தோட்ட வைத்தியசாலைகளுக்கான மனித மற்றும் பெளதீக வளங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும். சுகாதாரத்துறைக்கு 706 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்துக்கு 185 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : மருந்து தட்டுப்பாடு ஏற்படாது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பராமரிப்பது தொடர்பில் பயிற்சியளிப்பதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாவும் பல்கலைக்கழக உட்கட்டமைப்புக்காக 135 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு. முன்பிள்ளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 100 ரூபாவாக அதிகரிப்பு. இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. தெரிவு செய்யப்பட்ட முன்பிள்ளை பாடசாலை அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு. ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் அதிசித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 750 ரூபா புலமைப் பரிசில் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு 7500 ரூபாவாகவும், மாணவர் கொடுப்பனவு 6500 ரூபாவாகவும் அதிகரிப்பு. இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. தேர்தலுக்காகவே யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது : யாழ். நூலக அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஏனைய பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. வடக்கு மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்துக்காக 232.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. அஸ்வெசும நலன்புரித்திட்டத்தில் புதிதாக 2,80000 பயனாளர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பு. நீரிழிவு நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாவாகவும், வயோதிபர்களுக்கான கொடுப்பனவு 5,000 ரூபாவாகவும் அதிகரிப்பு. சிறைச்சாலை, சிறுவர் நன்னடத்தை மத்திய நிலையங்களில் உள்ள சிறுவர்களின் நலன்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. சிறைச்சாலையில் இருந்து வெளியேறும் சிறுவர்களின் நலன் கருதி விசேட திட்டங்கள். சிறுவர் மற்றும் இளைஞர் உளவியல் பிரச்சினையானது சமூக பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு தீர்வுகாணும் திட்டங்களை அமுல்படுத்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும். நிவாரண பொதி வழங்கப்படும். இதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். கிராமிய வீதி அபிவிருத்திக்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. கழிவு முகாமைத்துவ வசதிகளுக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. யானை - மனித மோதலை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. அரச சேவையாளர்களின் சம்பளம் 15, 500 ரூபாவால் அதிகரிப்பு. கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. வடக்கு - கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் வீட்டு நிர்மாணிப்புக்கு 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஊடகவியலாளர்கள் மற்றும் கலைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு கொட்டாவ பகுதியில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பு. இலங்கையர் தினம் என்ற பெயரில் தேசிய நிகழ்வு கொண்டாடப்படும். அரசியல் பரிந்துரைகளுடன் அரச நியமனம் மற்றும் அரச தொழில்வாய்ப்புக்கள் இனி இல்லை. தனியார் துறையினரின் 21 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆயிரம் ரூபாவாகவும், 2026 ஜனவரி மாதம் 30 ஆயிரமாகவும் அதிகரிக்க தனியார் தரப்பின் சேவை வழங்கல் சங்கம் இணக்கம். பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மீள்பரிசீலிக்கப்படும். தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. புதிதாக வரிகள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. திருத்தங்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களை இனி இன, மத, மொழி என்ற அடிப்படையில் பிளவுபடுத்த முடியாது. வரவு செலவுத்திட்டத்தின் உள்ளடக்கம் முறையாக செயற்படுத்தப்படும். வரவு - செலவு திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய திறைசேரியின் செயலாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை நிறைவு செய்தார். 2025 வரவு - செலவுத்திட்டம் : மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் - ரூ.4,990 பில்லியன் மொத்த செலவீனம் - ரூ.7,190 பில்லியன். துண்டுவிழும் தொனை - ரூ.2,200 பில்லியன். 2025 ஆம் ஆண்டுக்கான 79 ஆவது வரவு - செலவுத்திட்டத்தின் ஜனாதிபதியின் முழுமையான உரையை மும்மொழிகளிலும் பார்வையிட - https://cdn.virakesari.lk/uploads/medium/file/275690/Budget_Speech_2025_Final.pdf 2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு - செலவுத் திட்டம்
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய தோட்டத்தை” கையளிக்கும் நிகழ்வு : ஜப்பானிய தூதுவர் பங்கேற்பு
Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 01:26 PM சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினமான கடந்த சனிக்கிழமை 15ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா, "Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான "SUWA ARANA" நோய்த்தடுப்பு பராமரிப்பு மையத்தின் குணப்படுத்தும் தோட்டத்தைக் கையளிக்கும் விழாவில் கலந்துகொண்டார். Suwa Aranaவை இயக்கும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க, புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலில் இத்தோட்டத்தின் பங்கு தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன், புற்றுநோயானது மனம், உடல் மற்றும் உயிரை பாதிக்கிறது என்பதை வலியுறுத்தினார். மேலும், இந்த குணப்படுத்தும் தோட்டமானது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆறுதல், புதுப்பித்தல், வலிமையைக் கண்டறிவதற்கான அமைதியான இடமாக விளங்குகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் கவலைகளைத் தணிப்பதற்கும், அவர்கள் மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் இந்தத் திட்டம் பங்களிப்பு செய்துள்ளது என்று தூதுவர் இசோமட்டா மகிழ்ச்சியோடு தெரிவித்தார். ஜப்பானிய குழந்தைகளின் நல்வாழ்வு மையங்களுடனான எதிர்கால பரிமாற்றங்கள் மூலம் நோய்த்தடுப்பு பராமரிப்பு மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய தோட்டத்தை” கையளிக்கும் நிகழ்வு : ஜப்பானிய தூதுவர் பங்கேற்பு