Everything posted by ஏராளன்
-
இலங்கை - இந்திய கூட்டு முயற்சியில் சம்பூரில் சூரிய மின்னுற்பத்தி நிலையம்
Published By: DIGITAL DESK 7 20 FEB, 2025 | 04:15 PM (எம்.மனோசித்ரா) திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் I) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரண்டு அரசுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் திட்டமாக இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின்சார கூட்டுத்தாபனத்தின் கூட்டு தொழில்முயற்சி கம்பனியால் நிர்மாணித்தல், உரிமை வகித்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் I) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலக்கரி மின்னுற்பத்தி நிலைய திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றால் கூட்டு தொழில்முயற்சி கம்பனியாக நிறுவப்பட்ட திருகோணமலை வலுசக்தி நிறுவனத்தின் முலம் உத்தேச 50 மெகாவோற் கூரிய மின்னுற்பத்தி திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இலங்கை - இந்திய கூட்டு முயற்சியில் சம்பூரில் சூரிய மின்னுற்பத்தி நிலையம்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நல்ல காலம் நான் முந்திட்டன்!🤣
-
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடவுள்ள நீதிவான்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் யாழ். நீதிமன்ற நீதவான்! 20 FEB, 2025 | 04:21 PM யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் யாழ். நீதிமன்ற நீதவான்!
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை 20 FEB, 2025 | 03:57 PM கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகக் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று வியாழக்கிழமை (20) அறிவித்துள்ளனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய பிரதான சந்தேக நபரும், சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு உதவி செய்த வேன் சாரதியுமே இவ்வாறு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்! 20 FEB, 2025 | 05:36 PM மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இன்று (20) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார். தமிழ்நாடு, ராமேஸ்வரம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி தொழிலில் ஈடுபட்டபோது மன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். வடமத்திய மாகாண கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைதான நான்கு இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனையடுத்து, மேலதிக விசாரணைகளின் பின்னர், அவர்கள் நால்வரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அந்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்!
-
இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தினூடாக இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் ; இரு தரப்பு ஒப்பந்தத்தை செயற்படுத்த நடவடிக்கை
Published By: DIGITAL DESK 3 20 FEB, 2025 | 03:27 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கான நிறுவனம் (SLIDA) ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து வருட காலத்திற்கு 1,500 இலங்கை சிவில் அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வழிவகை செய்வதாக அமைந்துள்ளது. இலங்கை அரசின் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் அழைப்பின் பேரில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உறுதிப்படுத்த, இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் பணிப்பாளர் ஜெனரல் கலாநிதி சுரேந்திரகுமார் பாக்டே தலைமையிலான குழு, இம்மாதம் 17 - 20 வரை இலங்கைக்கு விஜயம் செய்தது. இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் இணைப் பேராசிரியர் கலாநிதி அசுதோஷ் பால் சிங்கும் இந்தக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். இந்தக் குழு, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி.பி. சபுதந்திரி மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார ஆகியோரையும் சந்தித்தது. இந்தக் குழு கண்டி மாவட்டச் செயலகத்திற்கும் சென்று மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பணியமர்த்தப்பட்ட இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடியது. இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப அமர்வுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான முறைகள் இறுதி செய்யப்பட்டன. இலங்கை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமைகள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, பயிற்சிகள், நிர்வாகத்தில் டிஜிட்டல் முயற்சிகள், மின்-ஆளுமை, நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், அரசாங்க மின்-சந்தை, பொதுப் போக்குவரத்து அமைப்பு மேம்பாடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழு முயற்சிகள், விவசாயம், மீன்வளம், வனவியல் போன்றவற்றில் தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் சுமார் 40 சிவில் அதிகாரிகளுக்கான முதல் தொகுதி பயிற்சி விரைவில் நடைபெறும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் இருந்தபோதும், 200க்கும் மேற்பட்ட இலங்கை சிவில் சேவை அதிகாரிகள் ஏற்கனவே திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக பயிற்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தினூடாக இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் ; இரு தரப்பு ஒப்பந்தத்தை செயற்படுத்த நடவடிக்கை
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்!
20 FEB, 2025 | 01:30 PM கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் (20) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏ9 வீதி வழியாக டிப்போ சந்தி வரை சென்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்!
-
எங்களின் ஆளுமைகள் எங்கள் இனத்தின் அடையாளம் என் தங்கைக்கு நாமும் ஆதரவு குடுப்போம்
தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவ பீடத்தில் இரண்டாவது வருடம் கல்வி கற்கும் தங்கையின் காணொளி. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். 29/03/2025 பழைய ஐ.பி.சி இயங்கிய கட்டிடத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற உள்ளது. Contract 075 3539 4739.
-
இலங்கை தனிமைப்பட்ட நிலையில் இருக்க முடியாது ஏனைய நாடுகளுடன் ஈடுபாடு அவசியம் - இந்திய உயர்ஸ்தானிகர்
20 FEB, 2025 | 03:56 PM இலங்கை தனிமைப்பட்ட நிலையில் இருக்க முடியாது. இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இனொவேசன் ஐலண்ட் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முதலாவதாக இலங்கை ஒரு பெரும்மாற்றத்தின் தருணத்தில் உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இரண்டு தேர்தல்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில் புதிய விதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் பெருந்தொற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும், பல தசாப்தங்களாக இலங்கையர்கள் எதிர்பார்த்த மாற்றங்களிற்கான தேவைகளை வெளிப்படுத்தியுள்ளன. உலகின் வேறு எந்த நாட்டையும் போல இலங்கையும் தனித்து செயற்படமுடியாதுஇஉலகளாவிய இணைப்பும்இஒன்றையொன்று சார்ந்திருந்தல் ஆகியன இந்த பூகோளமயமாக்கல் யுகத்திலும் கூட ஒருவிதிமுறைiயாக உள்ளது. வெளிநாட்டு சந்தையாகயிருந்தாலும்சரி அல்லது முக்கிய இறக்குமதிகள் சுற்றுலாதுறையாகயிருந்தாலும் சரி முதலீடு மற்றும் தொழில்நுட்பமாகயிருந்தாலும் சரி இ இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம். இதற்கு உலகின் போக்குகளை சரியாக புரிந்துகொள்ளும் திறன் அவசியம். இலங்கை தனிமைப்பட்ட நிலையில் இருக்க முடியாது ஏனைய நாடுகளுடன் ஈடுபாடு அவசியம் - இந்திய உயர்ஸ்தானிகர்
-
புகழ்பூத்த சர்வதேச வீரர்களைக் கொண்ட 6 அணிகள் பங்குபற்றும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்
19 FEB, 2025 | 05:56 PM (நெவில் அன்தனி) வல்லுநர்கள் (Masters) என விபரிக்கப்படும் புகழ்பூத்த சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாஸ்டர்ஸ் அணிகள் பங்குபற்றுகின்றன. இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு குமார் சங்கக்கார, இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வொட்சன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு ப்றயன் லாரா, தென் ஆபிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு யக் கலிஸ் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கும் இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் நவி மும்பை விளையாட்டரங்கில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று ஒரு தடவை லீக் சுற்றில் எதிர்த்தாடும். லீக் சுற்றில் 15 போட்டிகள் நிறைவில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். அவற்றில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் மார்ச் 16ஆம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும். புகழ்பூத்த சர்வதேச வீரர்களைக் கொண்ட 6 அணிகள் பங்குபற்றும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்
-
தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி காலமானார்
தினக்குரல், யாழ். தினக்குரல் பத்திரிகைகளின் நிறுவுனர் எஸ். பி. சாமி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும். தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி காலமானார்
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; பிரதான சந்தேக நபருக்கு தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது 20 FEB, 2025 | 11:26 AM கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு தப்பிச் செல்ல உதவி செய்ததாக கூறப்படும் வேன் சாரதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான வேன் சாரதி புத்தளம் பாலாவி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளாார். “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; பிரதான சந்தேக நபருக்கு தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது
-
கண் சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த அமைச்சர்
கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று சென்றிருந்தார். நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சராக இருந்தபோதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். கண் சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த அமைச்சர்
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து 10 இந்திய மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 2 20 FEB, 2025 | 11:22 AM வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்று புதன்கிழமை (19) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளதுடன், மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 04 மீனவர்களையும், அவர்களின் ஒரு படகினையும் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், அவர்களை மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக மன்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை, நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 06 மீனவர்களையும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், அவர்களை யாழ்ப்பாண நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர். இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கடந்த 50 நாட்களில் 99 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து 10 இந்திய மீனவர்கள் கைது
-
இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி?
இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, பிபிசி நியூஸ் 19 பிப்ரவரி 2025 32 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விண்வெளி கண்ணாடியைப் பயன்படுத்தி சைபீரியாவை ஒளிரூட்டுவதற்கான விளாடிமிர் சைரோமியட்னிகோவின் துணிச்சலான முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1993, பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பரிசோதனை குறித்து 'பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட்' செய்தி வெளியிட்டது. ஒரு பிரமாண்ட கண்ணாடியை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தி சூரியனின் கதிர்களை கிரகித்து அதை பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி திருப்புவது இத்திட்டத்தின் நோக்கம். இது ஏதோ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வில்லன் கதாபாத்திரம் உருவாக்கிய திட்டம் போல் தோன்றலாம். ஆனால், ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்கோஸ்மோஸ் 1993 பிப்ரவரி 4ஆம் தேதி செய்ய முயன்றது இதைத் தான். ஆனால் ஸ்னாமியா (ரஷ்ய மொழியில் பதாகை எனப் பொருள்) திட்டத்தின் நோக்கம் உலகை மிரட்டி பணம் பறிப்பது போன்ற ஒரு கொடூரமான திட்டம் அல்ல. ஸ்னாமியா ஏவப்படும் முன்னர் பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கேட் பெல்லிங்ஹாம், "இதன் நோக்கம், சைபீரியாவில் உள்ள ஆர்டிக் நகரங்களை இருண்ட குளிர்காலத்தின் போது ஒளிரூட்டுவது. அடிப்படையில் ரஷ்யாவின் துருவப் பகுதிகளில் இரவு கவிழ்ந்த பின்னர் சூரியனை ஒளிரச் செய்யும் முயற்சிதான் இந்த திட்டம்." என்று விவரித்தார். சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்? 100-வது ராக்கெட் வெற்றி: முதல் தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்து சிகரம் தொட்ட ஸ்ரீஹரிகோட்டா ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ வரலாற்று சாதனை - 'டாக்கிங்' செயல்முறை வெற்றி என அறிவிப்பு விண்வெளியில் இருந்து எரிந்தபடி விழுந்த 'ராட்சத வளையம்' - எங்கிருந்து வந்தது? இன்றுமே கேட்பதற்கு இது ஒரு புதிய திட்டம் போல தோன்றுகிறது. இருப்பினும் ஒளியை பூமியின் மேற்பரப்பை நோக்கி பிரதிபலிக்க விண்வெளியில் கண்ணாடிகளை பயன்படுத்துவது என்ற நோக்கம் உண்மையில் புதுமையான ஒன்றல்ல. 1923இல் ஜெர்மனியின் ராக்கெட் முன்னோடி ஹெர்மன் ஓபெர்த் இதை தனது 'ராக்கெட் இண்டூ பிளானட்டரி ஸ்பேஸ்' என்ற புத்தகத்தில் முன்வைத்தார். மிகவும் சாத்தியமற்றதாக தோன்றுகிறது என்ற காரணத்திற்காக ஹைடெல்பர்க் பல்கலைக் கழகத்தால் நிராகரிக்கப்பட்ட அவரது பி.ஹெச்டி ஆய்வறிக்கையின் அடிப்படையில், அவர் சுயமாக வெளியிட்ட புத்தகம். இது, ஒரு ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறுவது எப்படி சாத்தியம் என்பதை கணித ரீதியாக காட்டியது. விண்வெளி பயணத்தால் மனிதர்கள் உடலில் ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகள், செயற்கைக்கோள்களை எப்படி சுற்றுவட்டப்பாதையில் செலுத்துவது மற்றும் பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி ஒளியை குவிக்கும் வகையில் விண்வெளியில் மிகப்பெரிய குழிவான கண்ணாடிகளை அமைப்பது ஆகியன குறித்த தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. 'டைட்டானிக் மூழ்கியது போன்ற பேரிடர்களை தவிர்க்க உதவும்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1912, டைட்டானிக் கப்பல் விபத்தைச் சித்தரிக்கும் ஓவியம் இவ்வாறு ஒளிரூட்டுவது 1912-ல் டைட்டானிக் மூழ்கியது போன்ற பேரிடர்களை தவிர்க்க உதவும் அல்லது அதில் உயிர் பிழைத்தவர்களை மீட்க உதவும் என ஓபெர்த் தெரிவித்தார். பனிப்பாறைகளை உருக்குவதன் மூலம் கப்பல்களுக்கு பாதைகளை உருவாக்குவது அல்லது பூமியின் தட்பவெட்ப நிலையை மாற்றக் கூட விண்வெளி கண்ணாடிகளை பயன்படுத்தலாம் என ஓபெர்த் பேசியிருந்தார். விண்வெளியில் கண்ணாடி திட்டம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய இயற்பியலாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹில்லர்ஸ்லெபனில் இருந்த நாஜி ஆயுத ஆய்வு நிலையத்தில், ஒளியை பிரதிபலிக்கும் ஒரு சூரிய துப்பாக்கியை (சானெங்வெயர் என ஜெர்மன் மொழியில் அறியப்படும்) உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். சூரிய ஒளியை குவியச் செய்து பூமியில் நகரங்களை எரியச் செய்வது அல்லது ஏரிகளில் உள்ள நீரை ஆவியாக்குவதுதான் சானெங்வெயரின் நோக்கம் என்று கைது செய்யப்பட்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடம் கூறியதாக, 1945ஆம் ஆண்டில் டைம் இதழ் செய்தி வெளியிட்டது. அவர்கள் தங்களது தகவல் தொழில்நுட்ப வரைபடங்களை அளித்த பின்னர் அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கையின்மை தெரிவித்தாலும், ஜெர்மனிய விஞ்ஞானிகள் தங்களது சூரிய துப்பாக்கி 50 வருடங்களில் செயல்பாட்டிற்கு வரும் என நம்பியதாக நேச நாடுகளின் தொழில்நுட்ப உளவுப்பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஜான் கெக் அந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். 1970-களில் மற்றொரு ராக்கெட் பொறியாளர் கிராஃப்ட் எரிக்கே இந்த சாத்தியத்தை ஆராயத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் வி-2 ராக்கெட் குழுவில் எரிக்கே ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறார். யுத்தத்திற்கு பிறகு அவர் அமெரிக்காவிடம் சரணடைந்து, ஆபரேசன் பேப்பர்கிளிப் என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்காக பணியாற்ற தொடங்கினார். 1,600 ஜெர்மானிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்பு மிக்கவர்கள் என வகைப்படுத்தப்பட்டு, வழக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். எரிக்கே அமெரிக்க விண்வெளி திட்டத்தின் ஒரு அங்கமாக மாறி, விண்வெளியில் கண்ணாடிகளை அமைக்கும் திட்டத்தை 1970-களில் தொடங்கினார். பூமியைச் சுற்றிவரும் பிரமாண்ட கண்ணாடிகள் இரவு வானை எப்படி ஒளிரூட்டி, விவசாயிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் சாகுபடி அல்லது அறுவடை மேற்கொள்ளலாம் அல்லது அந்த ஒளியை சூரிய ஒளி தகடுகளை நோக்கி திருப்பி உடனடியாக மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என விளக்கி 1978-ல் அவர் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இதை அவர் பவர் சொலெட்டா என அழைத்தார். குழந்தைப் பருவம் முதலே விண்வெளி பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவரும், பிற கோள்களில் மனிதர்கள் குடியேற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவருமான எரிக்கே, பவர் சொலெட்டா செயல்பாட்டுக்கு வருவதை பார்க்காமலேயே 1984ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஆனால் அவருடைய விண்வெளி பயண கனவு அவரது இறப்பிற்கு பிறகு நனவானது. 1984-ல் தகனம் செய்யப்பட்ட அவரது எச்சங்கள், ஸ்டார் டிரெக்கை உருவாக்கிய ஜீன் ராடென்பெர்ரி மற்றும் 1960-களின் முக்கியமான உளவியலாளர் திமோதி லியரி ஆகியோரின் எச்சங்களுடன் சேர்த்து, பூமி சுற்றுப்பாதையில் 1997ஆம் ஆண்டு செலுத்தப்பட்டன. 1980-களில், சோலரெஸ் என்று அழைக்கப்படும் பூமியை சுற்றி வரும் கண்ணாடி அமைப்பு மூலம் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு குறித்து நாசா மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தது, ஆனால் அரசு ஆர்வம் காட்டினாலும் அந்த திட்டத்திற்கு போதிய நிதியை திரட்ட முடியாமல் போய்விட்டது. ஆனால் அதே நேரம் ரஷ்யாவில் சூரிய கண்ணாடிகள் குறித்த ஆர்வம் வேரூன்றியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பகல் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் ரஷ்யாவின் வட துருவப்பகுதிகளில் இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளியை வழங்க இந்த கண்ணாடிகளை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டது விண்வெளியில் படகோட்டம் அந்த நேரத்தில் விண்வெளி கலங்களில் மிகப்பெரிய சூரிய ஒளி பாய்களை இணைக்க முடியுமா என விளாடிமிர் சைரோமியாட்னிகோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆய்வுகளை மேற்கொண்டார். விண்வெளி பொறியியல் கண்டுபிடிப்புகளில் சைரோமியாட்னிகோவ் ஒரு முன்னோடியாக இருந்தார். சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரினை 1961-ல் விண்வெளிக்கு கொண்டு சென்ற உலகின் முதல் விண்கலமான வோஸ்டாக்ஸ் ராக்கெட்டை உருவாக்குவதில் அவர் பணியாற்றியுள்ளார். ஆண்டோஜைனெஸ் பெரிபெரல் அசெம்பளி சிஸ்டம் (APAS) என அழைக்கப்படும் அற்புத விண்கல தொழில்நுட்பத்தையும் அவர் உருவாக்கினார். இது 1975 ஜூலையில், அப்போதைய பனிப்போர் எதிரிகளான அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இணைந்து செயல்படுத்திய முதல் கூட்டு விண்வெளி பயணமான அப்போலோ- சோயூஸ் சோதனை திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 3 விண்வெளி வீரர்களுடன் சென்ற அமெரிக்க விண்கலம், இரண்டு வீரர்களுடன் இருந்த சோவியத் சோயூஸ் கலத்துடன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் பின்னர் அமெரிக்க விண்கலங்கள் ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்துடன் இணைவதற்கு APAS பயன்படுத்தப்பட்டது. இன்றும் விண்கலங்கள் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைவதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளி பாய்களை விண்கலங்களுடன் இணைப்பதன் மூலம் கப்பலின் பாய்கள் காற்றை பயன்படுத்திக் கொள்வதைப் போல அவை சூரியனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என சைரோமியாட்னிகோவ் நினைத்தார். இந்த பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்ட பாய்கள் சரியான கோணத்தில் வைக்கப்பட்டால் சூரியனிலிருந்து வெளியேறும் போட்டான் துகள்கள் அவற்றின் கண்ணாடி போன்ற பரப்பில் பிரதிபலித்து எரிபொருளை எரிக்க வேண்டிய தேவையில்லாமல், கலத்தை விண்வெளியில் முன்னோக்கி செலுத்தும். ஆனால் ரஷ்யாவில், சோவியத் சகாப்தத்திற்கு பிறகு, சைரோமியாட்னிகோவின் விண்வெளி திட்டம் போன்றவற்றால் கிடைக்கும் பொருளாதார பலனை காட்டாவிட்டால் நிதி பெறுவது கடினமானது. எனவே தனது திட்டத்தில் மாற்றங்கள் செய்ய சைரோமியாட்னிகோவ் முடிவு செய்தார். பூமியை சுற்றி வரும் விண்கலத்தின் ஒளியை பிரதிபலிக்கும் சூரிய பாய்கள், ஒரு கண்ணாடி போல் செயல்படலாம் என்றும், சூரிய பாய்கள் எப்போதும் சூரியனை பார்க்கும் வகையில் அவற்றின் கோணத்தை விண்கலத்தின் திரஸ்டர்கள் மூலம் மாற்றலாம் எனவும் அவர் நினைத்தார். பகல் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் ரஷ்யாவின் துருவப்பகுதிகளில் இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளியை வழங்க இந்த கண்ணாடிகளை பயன்படுத்தலாம். கூடுதலாக கிடைக்கும் சூரிய ஒளி விவசாய நிலங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். கூடுதலாக கிடைக்கும் சூரியவெளிச்சம் அந்தப் பகுதியில் விளக்குகள் மற்றும் வெப்பத்திற்கான மின்சார செலவுகளை குறைத்து அந்த பகுதி மக்களின் நலனுக்கு வலு சேர்க்கலாம் என அவர் கருதினார். இது அரசு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு திட்டமாக அமைந்தது. எனவே ரஷ்ய அரசு நிறுவனங்கள் மற்றும் முகமைகள் கொண்ட விண்வெளி ரெகாட்டா கூட்டமைப்பின் நிதி பங்களிப்புடன், ரஷ்ய விண்வெளி முகமை ரோஸ்காஸ்மாஸின் மேற்பார்வையில் ஸ்னாமியா விண்வெளி கண்ணாடியை மெய்ப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார் சைரோமியாட்னிகோவ். தாந்தியா தோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தியைப் பரப்பிய கிளர்ச்சியாளர் - ஆங்கிலேயர்களை திணற வைத்தது எப்படி?19 பிப்ரவரி 2025 காந்தி கேட்டுக்கொண்டதால்தான் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கோரினாரா?19 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம் முதலில் உருவாக்கப்பட்ட ஸ்னாமியா-1 மாதிரி விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை. மாறாக பரிசோதனைகள் மேற்கொண்டு ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தால் அவற்றை சைரோமியாட்னிகோவ் சரி செய்யும் வகையில் பூமியிலேயே இருந்தது. ஸ்னாமியா-2 தான் சுற்றுப்பாதைக்கு செல்லவிருந்த முதலாவது கண்ணாடியாக இருந்தது. அதன் கண்ணாடி, விண்வெளியில் இருக்கும் மோசமான சூழ்நிலையை சமாளிக்கும் அளவு வலுவானது என கருதப்பட்ட பளபளப்பான அலுமினியம் சேர்க்கப்பட்ட மெல்லிய மைலார் இழைகளால் உருவாக்கப்பட்டது. அது மத்தியில் சுழன்று கொண்டிருக்கும் டிரம்மில் இருந்து எட்டு பிரிவுகளாக வட்ட வடிவில் பிரிந்து மையவிலக்கு விசையைப் பயன்படுத்தி அதே வடிவில் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. "பயணத்தின் போது கண்ணாடி விண்கலத்தைச் சுற்றி இறுக்கமாக சுற்றப்பட்டிருக்கும். அதை பிரிக்க விண்கலம் வேகமாக சுழன்று ஒரு குடையை போல் அதை வெளியே தள்ள வேண்டும்," என 1992-ல் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு விளக்கிய பிபிசியின் பெல்லிங்ஹாம், "இந்த 20 மீட்டர் அகல பிரதிபலிப்பான் சாதாரணமாக பூமியை கடந்து செல்லும் சூரிய கதிர்களை அந்த உயரத்தில் ஈர்த்து அவற்றை பூமியின் இருளான பகுதியை நோக்கி திருப்புவது தான் சூட்சுமம்." என்றார். முதலில் செலுத்தப்பட்டதைவிட படிப்படியாக பெரிய கண்ணாடிகளை அனுப்பி அவை பூமிக்கு வரும் போது எரிந்து விடும்படி பல ஸ்னாமியாக்களை ஏவுவதுதான் சைரோமியாட்நிகோவின் திட்டம். ஸ்னாமியாவின் மெல்லிய பிரதிபலிக்கும் தகடுகள் விண்வெளியில் எவ்வாறு செயல்பட்டன என்பதை ரஷ்ய பொறியாளர்கள் ஆய்வு செய்து அவரது மாதிரியை மேலும் மேம்படுத்த முடியும். இதன் தொடர்ச்சியாக நிரந்தரமாக பூமியை சுற்றி வரும் 200 மீட்டர் அகல பிரதிபலிப்பானுடன் கூடிய ஸ்னாமியா அனுப்பப்படும். தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு17 பிப்ரவரி 2025 ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 பௌர்ணமி நிலவுக்கு இணையாக ஒளிர்ந்த விண்வெளி கண்ணாடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதிபலிப்பான்களால் நிலவை விட 50 மடங்கு கூடுதலான ஒளியை பிரதிபலிக்க முடியும் என கணிக்கப்பட்டது சுழலும் ஆற்றல் உள்ள இதுபோன்ற 36 பிரமாண்ட கண்ணாடிகளை விண்ணில் செலுத்தி பிரதிபலிக்கும் ஒளியை குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடர்ந்து பாயும் வகையில் வைத்திருப்பதுதான் இந்த திட்டத்தின் உச்சபட்ச நோக்கம். ஒரு சிறிய பகுதியில் ஒளி பாய ஒரே ஒரு பிரதிபலிப்பான் பயன்படுத்தலாம். "ஒரு தெளிவான இரவில் அந்த விண்வெளி பிரதிபலிப்பானால் ஒரு கால்பந்தாட்ட மைதானத்திற்கு இணையான பகுதிக்கு ஒளியூட்ட முடியும். இதன் மூலம் நீண்ட குளிர்கால இரவுகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும்," என்றார் பெல்லிங்ஹாம். கூடுதல் வெளிச்சம் அல்லது பெரிய பகுதியில் ஒளி வீச பல பிரதிபலிப்பான்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த விண்வெளி கிரிட் மூலம் ஒன்றாக செயல்படும் பிரதிபலிப்பான்களால் நிலவை விட 50 மடங்கு கூடுதலான ஒளியை பிரதிபலிக்க முடியும் எனவும் 90 கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஒளியை பரப்ப முடியும் எனவும் கணிக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி, திட்டம் தயாராக இருந்தது. ஆளற்ற புரோகரஸ் எம்-15 விண்கலம், ஸ்னாமியா-2 உடன் கஜகஸ்தானில் உள்ள பைகானுர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. பொருட்களை ஏற்றிச்சென்ற கலம் ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்துடன் இணைந்த போது, விண்வெளி வீரர்கள் பிரதிபலிப்பான்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த டிரம்மை புரோகரஸ் விண்கலத்தில் பொருத்தினர். ஸ்னாமியா-2 அந்த ஆண்டு இறுதியில் பரிசோதிக்கப்படவிருந்தது. ஆனால் மிர் குழுவினர் வரவிருக்கும் பிற திட்டத்திற்கான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்ததால் இதை செலுத்துவது தாமதமானது. இறுதியில் 1993ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி அவர்கள் திட்டத்தை செயல்படுத்த தயாராகினர். தானாக செயல்படக் கூடிய புரோகரஸ் விண்கலம், மிர் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்த போது அது சுழல ஆரம்பித்து ஒரு பிரமாண்ட விசிறியை விரிப்பது போல் கண்ணாடியை விரித்தது. அந்த கண்ணாடி சூரியனின் கதிர்களை ஈர்த்து, பூமியை நோக்கி பிரதிபலித்தது. அவ்வாறு பிரதிபலிக்கப்பட்ட ஒளி பெளர்ணமி நிலவுக்கு இணையான பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. அது பூமியில் 5 கிலோமீட்டர் விட்டத்துடன் ஒரு வெளிச்ச வட்டத்தை உண்டாக்கியது. விநாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் அந்த வெளிச்ச வட்டம் தெற்கு பிரான்ஸிலிருந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் மேற்கு ரஷ்யாவை கடந்தது. மிர் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவர்களால் ஒரு மெல்லிய ஒளி ஐரோப்பாவையும் ரஷ்யாவையும் கடந்ததைக் காண முடிந்தது. அந்த கண்டம் முழுவதும் மேகங்களால் சூழப்பட்டிருந்தாலும், பூமியில் இருந்த சிலர் அதை ஒரு வெளிச்ச கீற்றாக பார்த்ததாக கூறினர். சில மணி நேரங்களுக்கு பிறகு, அந்த விண்வெளி கண்ணாடி சுழற்சிப் பாதையை விட்டு விலகி, கனடாவின் மேல் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது எரிந்து போனது. குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது?15 பிப்ரவரி 2025 தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யூரி ககாரினை (புகைப்படத்தில் இருப்பவர்) விண்வெளிக்கு கொண்டு சென்ற உலகின் முதல் விண்கலமான வோஸ்டாக்ஸ் ராக்கெட்டை உருவாக்குவதில் சைரோமியாட்னிகோவ் பங்காற்றினார் ஒரு தொழில்நுட்ப வெற்றி ரஷ்யாவில், ஸ்னாமியா-2 சோதனை ஒரு தொழில்நுட்ப வெற்றியாக பாராட்டப்பட்டது. ஆனால் அது இந்த திட்டத்திற்கான சில குறிப்பிடத்தக்க சவால்களையும் வெளிப்படுத்தியது. ஸ்னாமியா-2 பிரதிபலித்த ஒளி எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான தீவிரத்துடன் இருந்ததுடன், பூமியில் ஒரு பெரிய பகுதிக்கு பயன்படுத்தத்தக்க ஒளியை வழங்க முடியாத வகையில் மிகவும் பரவலாக இருந்தது. சுற்றுப்பாதையில் சுழலும் ஸ்னாமியா-2-ன் நிலைத்தன்மையை பராமரிப்பதும் கடினமாக இருந்தது. மேலும் அதன் வெளிச்ச வட்டம் பூமியின் மேற்பரப்பில் விரைவாகப் பயணித்தது. அதன் உண்மையான பயன்பாடு மிகவும் குறைவு என தோன்றச் செய்தது. ஆனால் இந்த திட்டம் ஊக்கமளிக்கும் முடிவுகளையும் புரிதல்களையும் வழங்கியது. எனவே திட்டமிட்டபடி ஸ்னாமியா-2.5 திட்டத்தை செயல்படுத்த சைரோமியாட்னிகோவ் முனைந்தார். இந்த முறை இது 25 மீட்டர் கண்ணாடியைக் கொண்டிருக்கும் இது ஐந்து முதல் 10 முழு நிலவுகளின் பிரகாசத்தை பிரதிபலிப்பதுடன் 8 கிலோமீட்டார் அகலமுள்ள வெளிச்ச வட்டத்தையும் பெற்றிருக்கும். ஸ்னாமியா-2.5 பூமியைச் சுற்றி வரும் போது, பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல நிமிடங்களுக்கு பிரதிபலிக்கும் வகையில் ஒளிக்கற்றையின் திசையை கட்டுப்படுத்துவதுதான் நோக்கம். 24 மணி நேர சோதனையின் போது கண்ணாடி பிரதிபலிக்கும் சூரிய கதிரால் ஒளிர வட அமெரிக்காவில் இரண்டு நகரங்கள் மற்றும் ஐரோப்பாவில் சில நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. சைரோமியாட்னிகோவ் தனது குழு அடைந்த முன்னேற்றத்தால் மகிழ்ச்சியடைந்தார். 1998 அக்டோபரில் இதை ஏவ திட்டமிடப்பட்டது. "நாங்கள் இந்த துறையில் முன்னோடிகள்" என்று அவர் ஜூலை 1998இல் தி மாஸ்கோ டைம்ஸிடம் கூறினார். "பரிசோதனை திட்டமிட்டபடி நடந்தால், எதிர்காலத்தில் பல டஜன் விண்கலங்களை நிரந்தரமாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்." என்றார். டீப்சீக்: உயர் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுக்கு சீனா சவால் விட அடிகோலிய பத்தாண்டு திட்டம் பற்றி தெரியுமா?8 பிப்ரவரி 2025 பாரசூட் முதல் கலங்கரை விளக்கம் வரை - சொந்த கண்டுபிடிப்புகளாலேயே கொடூரமாக உயிரிழந்த 5 விஞ்ஞானிகள்13 பிப்ரவரி 2025 வானிலையாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலை ஸ்னாமியா-2.5 புறப்படும் முன்னரே ரஷ்ய விண்வெளி அதிகாரிகளிடம் புகார்கள் வரத் தொடங்கின. விண்வெளி கண்ணாடி, இரவு வானத்தை ஒளியால் மாசுபடுத்தி, அவர்களின் தொலைநோக்கிகள் நட்சத்திரங்களைப் பார்ப்பதை மறைத்துவிடும் என்று வானிலையாளர்கள் கவலைப்பட்டனர். ராயல் வானியல் சங்கம், விண்வெளி ரெகட்டா கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரலிடம் இந்த சோதனை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு சென்றது. விண்வெளி கண்ணாடியின் செயற்கை ஒளி, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, வன உயிர்கள் மற்றும் இயற்கை சுழற்சிகளைப் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். இந்த சந்தேகங்கள் இருந்த போதிலும், ஸ்னாமியா திட்டத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்து உலகளவில் கணிசமான கவனமும் உற்சாகமும் இருந்தது. "மனித குலத்தின் எதிர்காலத்திற்கு இது என்ன பலனளிக்கும் என்று நினைத்துப் பாருங்கள்," என்று சைரோமியாட்னிகோவ் மாஸ்கோ டைம்ஸிடம் கூறினார். "மின்சார கட்டணங்கள் இல்லை, நீண்ட இருண்ட குளிர் காலங்கள் இல்லை. தொழில்நுட்பத்திற்கு இது ஒரு பெரிய முன்னேற்றம்." என்றார். எனவே, ஸ்னாமியா-2.5 திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டது. மாஸ்கோவில் இருந்து மிஷன் கண்ட்ரோல் கண்காணித்துக் கொண்டிருக்க, முன்பை விட பெரிய விண்வெளி கண்ணாடி பிப்ரவரி 5, 1999 அன்று ஏவப்பட தயாராக இருந்தது. முதலில் அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்தேறின. மடித்து வைக்கப்பட்டிருந்த விண்வெளி கண்ணாடி புரோகிரஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டு, மிர் விண்வெளி மையத்தில் இருந்து எந்த பிரச்னையும் இன்றி பிரிந்தது. அது விண்வெளி மையத்தை விட்டு விலகி அதற்கான இடத்தில் நிலைகொண்டது. புரோகிரஸின் திரஸ்டர்கள் செயல்பட உத்தரவிடப்பட்டதும், அது சுழன்று கண்ணாடியை விரிக்கத் தொடங்கியது. அதே நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக புரோகிரஸுக்கு கூடுதலாக ஒரு கட்டளை தவறுதலாக பிறப்பிக்கப்பட்டது. விண்கலத்தை விண்வெளி மையத்துடன் இணைப்பதற்கான ஆண்டெனாவை செயல்படுத்தும்படி அதற்கு உத்தரவிடப்பட்டது. மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் (கோப்புப் படம்) ஆண்டெனா நீளத் தொடங்கிய போது ஸ்னாமியா 2.5 -ன் மெல்லிய பிரதிபலிப்பான்கள் அதில் உடனடியாக சிக்கிக்கொள்ள தொடங்கியது. மிர் விண்வெளி மையத்திலிருந்து வந்த ஆண்டனாவில் கண்ணாடியிழை சிக்கிக்கொண்ட காட்சிகளை மாஸ்கோவில் உள்ள கட்டுப்பாட்டு மையம் வேதனையுடன் பார்த்தது. ஆண்டெனாவை உள்ளிழுக்க அவசர கட்டளைகள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்த நேரத்திற்குள் பல கஜ நீள கண்ணாடியிழை ஆண்டனாவை சுற்றிக்கொண்டதுடன், கண்ணாடியை பல இடங்களில் கிழித்துவிட்டது. பிரதிபலிக்கும் பரப்பு மேலும் கிழித்துவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து கட்டளைகள் நிறுத்தப்பட்டன. கண்ணாடியை விரிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு இறுதிக்கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. ஸ்னாமியா-2.5-ன் கிழிந்து கசங்கிய கண்ணாடியை விரிக்க முடியாது என்பதை உணார்ந்த மிஷன் கன்ட்ரோல், புரோகிரஸ் விண்கலத்துடன் இணைந்த நிலையிலேயே அதை பூமியில் விழ அனுமதித்தனர். அது அடுத்த நாள் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது. "இங்கு மிகவும் சோர்வான மனநிலை உள்ளது," என மாஸ்கோவில் உள்ள மிஷன் கண்ட்ரோலின் செய்தித் தொடர்பாளார் வேலெரி லிண்டின் அப்போது பிபிசியிடம் தெரிவித்தார். ஸ்னாமியா-2.5 பூமியில் விழுந்தது அதை மட்டும் அழிக்கவில்லை. மாறாக சைரோமியாட்னிகோவின் உன்னதமான விண்வெளி கண்ணாடி திட்டத்தின் எதிர்காலத்தையும் அழித்தது. 70 மீட்டர் விட்ட கண்ணாடியுடன் 2001-ல் ஏவ அவர் திட்டமிட்ட ஸ்னமியா 3-க்கு நிதி கிடைக்காததால் அது தயாரிக்கப்படவே இல்லை. தனது தலைமுறையின் தலைசிறந்த விண்வெளி பொறியாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட சைரோமியாட்னிகோவ் 2006-ல் சூரிய சக்தி பாய்கள் மற்றும் கண்ணாடிகள் பற்றிய கனவுகள் நிறைவேறாமலேயே உயிரிழந்தார். "இந்த பரிசோதனை உலகளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது என்பதால் இந்த தோல்வி மிகவும் வேதனையானது," என லிண்டின் 1999இல் பிபிசிக்கு கூறினார். "ரஷ்ய விண்வெளித் திட்டங்களின் பழைய கொள்கையை நாம் மறந்துவிட்டோம். முதலில் ஏதாவது செய்ய வேண்டும், பின்னர் அதைப் பற்றி பெருமை பேச வேண்டும்" என அப்போது அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி?
-
கொலைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன - எங்களுக்கு என்ன பாதுகாப்புள்ளது?
Published By: RAJEEBAN 20 FEB, 2025 | 11:02 AM சில துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர், அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். daily mirror இலங்கையில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், 2025ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக 6வயது சிறுமி 9 வயது சிறுவன் உட்பட 11 உயிர்கள் பலிகொல்லப்பட்டுள்ள நிலையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அழுத்தத்தின் கீழ் அதிகாரிகள் உள்ளனர். ஆறுவயது சிறுமி, 9 வயது சிறுவன் பாதாள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ ஆகியோர் உயிரிழந்த சம்பவங்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக இல்லை என்ற இந்த அதிகரித்துவரும் நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளன. இந்த வருடம் மாத்திரம் நாட்டில் 14 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களை சேர்ந்தவர்களின் நடவடிக்கையே இது என பலர் கருதுகின்றனர். சமீபத்தைய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மிதேனியவிலும் கொழும்பிலும் இடம்பெற்றுள்ளன, மிதேனியாவில் 39 வயது நபரும், அவரது மகளும் மகனும் இனந்தெரியாத நபர் ஒருவர் இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் உயிரிழந்தனர். கடவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவனும் சிறுமியும் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர் கஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே என தெரிவித்துள்ள பொலிஸார், இவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கொழும்பில் பாதளஉலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று காலை துணிச்சலான விதத்தில் இந்த கொலை இடம்பெற்றது. சட்டத்தரணி போன்று வேடமணிந்த ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவங்கள் பலவற்றிற்கு போதைப்பொருள் வர்த்தகமே காரணம் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். குற்றச்செயல்கள் அதிகரிப்பினால் திணறிக்கொண்டிருக்கும் பல நாடுகள் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன என தெரிவித்த அந்த பொலிஸ் அதிகாரி இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துவருவதால் இலங்கையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை உருவாகியுள்ளது என தெரிவித்தார். அதிகரித்துவரும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு மறைமுக புலனாய்வாளர்களை பயன்படுத்துதல், மற்றும் இரகசிய நடவடிக்கைகள் அவசியமாக உள்ளதாக தெரிவித்த அவர் ஒரு குழுவால் மாத்திரம் இதற்கு தீர்வை காணமுடியாது என குறிப்பிட்டார். இந்த குற்றகும்பல்களிற்கு எதிரான போராட்டத்திற்பு சட்டஅமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து எங்களிற்கு முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்ட அவர் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் குற்றவாளிகள் தொடர்ந்து செயற்படுவார்கள் என தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை இலக்குவைத்து முன்னைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றியளித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, துப்பாக்கி சூட்டு சம்பவங்களிற்காக தேடப்பட்ட பல தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர். சில துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைது செய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர், அதன் பின்னர் அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர், அனைத்து சம்பவங்களும் ஒரே பாணியிலேயே இடம்பெறுகின்றன, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இது தொடரும், என தெரிவித்த அந்த அதிகாரி, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை தடுத்துவைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறைகள் அவசியம், அவ்வாறான பொறிமுறை இல்லாவிட்டால் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விடுதலையாவார்கள் என அவர் தெரிவித்தார். கொலைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன- எங்களுக்கு என்ன பாதுகாப்புள்ளது?
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் முதல் கிரிக்கெட் தொடரை காண ரசிகர்கள் நேற்று (பிப். 19) ஆவலுடன் காத்திருந்த நிலையில் அது சோகத்தில் முடிந்தது. கராச்சியில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி. ஏற்கெனவே முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில் சாம்பியன்ஸ் டிராஃபியிலும் சாய்த்துள்ளது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. 321 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்களில் தோல்வி அடைந்தது. சாம்பியன்ஸ் டிராபி 2025: பலமான வேகப்பந்துவீச்சை நம்பி களம் இறங்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து பேட்டர்கள் கரை சேர்ப்பார்களா? மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா? பிபிசியின் வளரும் வீராங்கனை விருது பெற்ற ஷீத்தல் தேவி யார்? இந்தியாவில் கிரிக்கெட் போல மற்ற விளையாட்டுகளும் கவனம் பெற என்ன செய்யலாம்? - மனு பாக்கர் பேட்டி சவாலான ஆட்டங்கள் இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி 2 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு நகர்ந்தது. அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு வங்கதேசத்துடனும், இந்திய அணியுடனும் லீக் ஆட்டம் இருக்கிறது. இதில் வங்கதேச அணி நியூசிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருக்காது என கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவுடனான ஆட்டம் சவாலாகவே அமையும். இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் பாகிஸ்தானுடன் ஆடிய 4 ஆட்டங்களிலும் ஒன்றில்கூட தோல்வி அடையாத அணி என்ற பெருமையை தக்கவைத்துள்ளது. அதேபோல, பாகிஸ்தான் அணிக்கு அடுத்துவரும் இரு ஆட்டங்களுமே சவாலாக மாறும். இந்திய அணியுடனான ஆட்டம் எப்போதுமே பாகிஸ்தான் வீரர்களுக்கு சவாலாக இருந்துள்ளது. அடுத்ததாக, வங்கதேசமும் வெற்றியை பாகிஸ்தானுக்கு எளிதாக விட்டுக்கொடுக்காது. போராடித்தான் பாகிஸ்தான் வெல்ல வேண்டியதிருக்கும். ஆதலால், பாகிஸ்தான் அணிக்கு அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கும் அம்சமாக இருக்காது. கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் விளையாட வேண்டியதிருக்கும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கூட பெரும் சவாலாகவே இருக்கும். மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா?19 பிப்ரவரி 2025 பிபிசியின் வளரும் வீராங்கனை விருது பெற்ற ஷீத்தல் தேவி யார்?19 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் அணிக்கு அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கும் அம்சமாக இருக்காது நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கருத்து போட்டியின் வெற்றிக்குப்பின் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பேசுகையில் " பாகிஸ்தான் அணி நடுப்பகுதியில் நன்றாகப் பந்துவீசினர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், வில் யங், லேதம் இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ரன்களை சேர்த்தனர். 280 ரன்கள்தான் சேர்ப்போம் என நினைத்தேன், ஆனால் 320 ரன்களை எட்டிவிட்டோம். விக்கெட்டுகள் கைவசம் அதிகம் இருந்தது ஒரு காரணம். முதல் 10 ஓவர்களிலும் நாங்கள் சிறப்பாகப் பந்துவீசி பாகிஸ்தானை கட்டுப்படுத்தினோம். ரன்ரேட்டில் அழுத்தத்தை, நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டை வீழ்த்தினோம். கிளென் பிலிப்ஸிடம் இருந்து இப்படி ஒரு அற்புதமான கேட்சை நான் எதிர்பார்க்கவில்லை. ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். பனிப்பொழிவுக்குப் பதிலாக காற்று இருந்தது. இந்த காற்றைப் பயன்படுத்தி பந்துவீசினோம். ஃபீல்டிங் அற்புதமக இருந்தது. இதனால் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடவில்லை" எனத் தெரிவித்தார். நியூசிலாந்து வெற்றிக்குக் காரணம் என்ன? நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங், டாம் லேதம் அடித்த சதம், கிளென் பிலிப்ஸ் கேமியோ ஆடி அரைசதம் அடித்தது மிகப்பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அதேசமயம், பந்துவீச்சில் ரூர்க், கேப்டன் சான்ட்னர் எடுத்த தலா 3 விக்கெட்டுகள், ஹென்றி வீழ்த்திய 2 விக்கெட்டுகள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. அது மட்டுமல்லாமல் ரூர்க், ஹென்றி இருவரும் தொடக்கத்திலிருந்தே கட்டுக்கோப்பாகவும், துல்லியமான பந்துவீச்சை லைன் லென்த்தில் வீசியும் பாகிஸ்தான் பேட்டர்களை நிலைகுலையச் செய்தனர். இவர்கள் இருவரின் ஓவர்களில் பாகிஸ்தான் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க சிரமப்பட்டனர். இதனால் பவர்ப்ளே முடிவதற்குள் தொடக்க ஆட்டக்காரர் சகீலையும், கேப்டன் ரிஸ்வான் விக்கெட்டையும் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்தனர் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள். நியூசிலாந்து அணியின் நன்கு திட்டமிட்ட வியூகத்தை களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியதை பாகிஸ்தான் அணியினரால் எதிர்கொள்ள முடியவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சின் வியூகத்தை உடைக்கும் விதத்தில் ஒரு ஓவரில்கூட பேட் செய்ய முடியாதது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, நியூசிலாந்து அணி தங்கள் வியூகத்தை உடைக்கும் வகையில் பாகிஸ்தான் பேட்டர்களை களத்தில் யாரையும் நிலைக்கவிடவில்லை என்பதுதான் அவர்கள் வெற்றிக்கான முக்கியக் காரணமாகும். நடுப்பகுதி ஓவர்களில் பிரேஸ்வெல், சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து பாகிஸ்தான் பேட்டர்களின் கரங்களுக்கு விலங்கிட்டதுபோல் பந்துவீசினர். நடுப்பகுதி ஓவர்களில் ரன்களை சேர்க்கவிடாமல் நெருக்கடி தரும் வகையில் மும்முனைத் தாக்குதல் தொடுத்து பாகிஸ்தானை பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர். பாகிஸ்தான் அணி 28-வது ஓவரில் தான் 100 ரன்களையே எட்டியது. அந்த அளவு பாகிஸ்தான் ரன்ரேட்டை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இழுத்துப்பிடித்தனர். ஆனால், அடுத்த 13 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200-வது ரன்களையே எட்டியது. தொடக்கத்திலேயே பாகிஸ்தான் பேட்டர்களை திக்குமுக்காடச் செய்து பந்துவீசி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு அடித்தளமிட்டனர். பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது வென்ற அவ்னி லேகரா வாழ்க்கையின் திருப்புமுனை என்ன?18 பிப்ரவரி 2025 'நான் எழுவேன்' - பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருது பெற்ற மனு பாக்கரின் உத்வேக பயணம்18 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரூர்க், கேப்டன் சான்ட்னர் எடுத்த தலா 3 விக்கெட்டுகள், ஹென்றி வீழ்த்திய 2 விக்கெட்டுகள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன திருப்புமுனை தந்த வீரர் இந்த ஆட்டத்தில் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கிளென் பிலிப்ஸ்தான். இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 34 பந்துகளில் அரைசதம் அடித்து நியூசிலாந்து ஸ்கோர் உயர்வுக்கும் பிலிப்ஸ் முக்கியக் காரணமாகினார். ஃபீல்டிங்கில் ரிஸ்வான் ஆஃப்சைடில் விலக்கி அடித்த ஷாட்டில் தாவிச்சென்று பிலிப்ஸ் பிடித்த கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி, நியூசிலாந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஃபிலிப்ஸ் பிடித்த கேட்சால் கேப்டன் ரிஸ்வான் எனும் மிகப்பெரிய விக்கெட் இழப்பிலிருந்து பாகிஸ்தான் மீளமுடியவில்லை. இந்த கேட்சை பிலிப்ஸ் பிடிப்பார் என ரிஸ்வானும் நினைக்கவில்லை, களத்திலிருந்து ஏமாற்றத்துடன் சென்றார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அற்புதமான சதங்கள் நியூசிலாந்து அணியைப் பொருத்தவரை தொடக்க வீரர் வில் யங் அடித்த 107 ரன்கள், டாம் லாதம் அடித்த 118 ரன்கள், பிலிப்ஸ் சேர்த்த 61 ரன்கள்தான் ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு சென்றன. தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா களமிறங்க வேண்டிய நிலையில் அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் வில் யங் அந்த வாய்ப்பைப் பெற்றார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வில்லியம்ஸனுக்குப் பதிலாக இடம்பெற்ற வில் யங், தொடர் நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 3-0 என்று டெஸ்ட் தொடரை வெல்லவும் வில் யங் காரணமாக அமைந்திருந்தார். சாம்பியன்ஸ் டிராஃபி அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த 8-வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார் வில் யங். இதற்கு முன் சாம்பியன்ஸ் டிராஃபியின் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் எந்த வீரரும் சதம் அடித்ததில்லை. அதை வில் யங், டாம் லேதம் செய்துள்ளார். டாம் லேதம் நடுவரிசையில் களமிறங்கி நிதானமாக ஆடி சதம் அடித்தார். முத்தரப்பு தொடரில் 3 டக்அவுட்களைச் சந்தித்து டாம் லேதம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் அவர் அடித்த இந்த சதம் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளது. பிலிப்ஸுடன் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டாம் லேதம் ஆட்டம் ஸ்கோர் உயர்வுக்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம், 18 பந்துகளில் 10 ரன்கள் என்றிருந்த பிலிப்ஸ் ,அடுத்த 16 பந்துகளில் அரைசதத்தை எட்டி, கேமியோ ஆடியது ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாமல் இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியுமா?13 பிப்ரவரி 2025 305 ரன் இலக்கை ஊதித் தள்ளிய இந்தியா: இங்கிலாந்தை சிதறடித்து புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா10 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நியூசிலாந்து 8-வது வீரர் வரை வகைவகையான பேட்டர்களை வைத்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம் 6 ஆண்டுகளில் முதல்முறை நியூசிலாந்து 8-வது வீரர் வரை வகைவகையான பேட்டர்களை வைத்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்ஸ் (1) ரன்னில் ஆட்டமிழந்தார். ஒற்றை இலக்க ரன்னில் கேன் வில்லியம்ஸன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் நேற்றுதான் ஆட்டமிழந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் 35 இன்னிங்ஸ்களில் ஆடிய வில்லியம்ஸன் 34 இன்னிங்ஸ்களிலும் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்துதான் ஆட்டமிழந்துள்ளார். பாகிஸ்தான் தோல்விக்குக் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பக்கர் ஜமான், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடியிருந்தால், பாகிஸ்தான் வெற்றி சாத்தியமானது என நம்பியிருக்கலாம் பாகிஸ்தான் தோல்விக்கு பல காரணங்களைக் கூறலாம். 30 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மைதானத்தில் வரலாற்றுசிறப்பு மிக்க ஐசிசி தொடர் நடக்கும்போது, ரசிகர்களை கவர்ந்திழுக்கம் வகையில் ஆட்டத்தை ஆடாமல் பல தவறுகளை பாகிஸ்தான் அணி செய்தது. பாகிஸ்தான் அணியோடு ஒப்பிடுகையில் குறைந்த தவறுகளையே நியூசிலாந்து செய்தது. ஆனால், பாகிஸ்தான அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் பல தவறுகளைச் செய்தது. குறிப்பாக பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்களிடம் கட்டுக்கோப்பு, துல்லியம் என எதுவுமே இல்லை. உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களான ஹாரிஸ் ராப், ஷாகித் அஃப்ரிடி இருந்தும், பந்துவீச்சு படுமோசமாக இருந்ததாக பார்க்கப்படுகிறது. ஹாரிஸ் 83 ரன்களையும், அப்ரிடி 68 ரன்களையும் வாரி வழங்கினர். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது மட்டுமே 4 ரன்ரேட்டில் நேற்று பந்துவீசி விக்கெட் வீழ்த்தினார். மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 6 ரன்கள் வீதம் வாரி வழங்கியதுதான் தோல்விக்கு முதல் காரணம். இரண்டாவதாக பாகிஸ்தான் சந்தித்த டாட் பந்துகள். இந்த ஆட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் அணி, 162 டாட் பந்துகளை சந்தித்தது, அதாவது ஏறக்குறைய 27 ஓவர்களில் ரன்கள் ஏதும் அடிக்கவில்லை என்பது இதன் அர்த்தம். இலக்கு பெரிதாக இருக்கிறது, ஓவருக்கு 6 ரன்களுக்குமேல் வெற்றிக்கு தேவைப்பட்டபோது, 27 ஓவர்களை டாட் பந்துகளாக விட்டது பாகிஸ்தான் தோல்விக்கு 2வது காரணம். 3வது காரணம் பாபர் ஆஸம். பாகிஸ்தான் வெற்றிக்கு பல போட்டிகளில் காரணமாக இருந்தவர், பல போட்டிகளில் ஒற்றை மனிதராக இருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்ற பாபர் ஆஸம் ஏன் இப்படி பேட் செய்தார் என்று கேட்கும் அளவு மோசமாக இருந்தது. 90 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து பாபர் ஆஸம் ஆட்டமிழந்தார். 81 பந்துகளில்தான் பாபர் ஆஸம் அரைசதத்தையே நிறைவு செய்தார். பாபர் ஆஸம் மிகவும் மெதுவாக ஆடியது, ரன் சேர்க்க வேகம் காட்டாதது தோல்விக்கு இட்டுச் சென்றது. நியூசிலாந்து அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு பாகிஸ்தான் பேட்டர்களை நிலைகுலைய வைத்து. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களும், 17-வது ஓவர்வரை 73 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் நடந்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் சேர்த்த குறைந்த பட்ச ஸ்கோர் நேற்று சேர்த்ததாகும், சாம்பியன்ஸ் டிராஃபியில் 3வது குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. அணியின் மெதுவான ரன் சேர்ப்பு தோல்வியை உறுதி செய்தது. நியூசிலாந்து அணியின் நேற்றைய உலகத்தரமான ஃபீல்டிங்கோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தான் சற்று குறைவாகவே விளையாடியது. நியூசிலாந்து அணி ஃபீல்டர்கள் மட்டும் நேற்று 20 ரன்களையாவது சேமித்திருப்பார்கள். நியூசிலாந்து அணியின் ராணுவ ஒழுக்க ஃபீல்டிங் பாகிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தது, எதிர்பார்த்த எந்த ஷாட்டிலிருந்தும் பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பவுண்டரி கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர். பக்கர் ஜமானைப் போல் பாகிஸ்தான் அணியில் பல பேட்டர்கள் தொடக்கத்திலேயே தடுமாறி, ரன் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டனர். பக்கர் ஜமானும் ஃபீல்டிங் செய்யும்போது கையில் காயம் ஏற்பட்டு, நீண்டநேர ஓய்வுக்குப்பின் விளையாட வந்தார். மற்ற வகையில் பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான்(24), சல்மான்(42), குஷ்தில் ஷா(69) ஆகியோரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அதிலும், குஷ்தில் ஷா கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து ரன் சேர்க்காமல் இருந்தால், பாகிஸ்தான் அணி 200 ரன்களில் சுருண்டிருக்கும். குறிப்பாக பக்கர் ஜமான், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடியிருந்தால், பாகிஸ்தான் வெற்றி சாத்தியமானது என நம்பியிருக்கலாம். ஆனால், இவர்கள் 3 பேருமே தோல்வி அடைந்து, அணியையும் தோல்விக் குழியில் தள்ளிவிட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்?ணைந்திருங்கள்.)
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி அண்ணை. வாகன லைசன்ஸ் மட்டும் ஓடிக் காட்டி வாங்கலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முடிச்சுவிட்டீங்க போங்க
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நிலையற்ற பதவி மேல் பற்றில்லை அண்ணை!- டிரம்ப் அணுகுமுறையால் அதிர்ந்து போன யுக்ரேன் - போர் முனையில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய-யுக்ரேன் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியமாவதற்கான சமிக்ஞைகள் எதுவும் இல்லை. கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர். (யுக்ரேன்- ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சௌதி அரேபியாவில் நடைபெற்றன). யுக்ரேனுக்கும், அமெரிக்காவின் மேற்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை, அட்லாண்டிக் பிராந்திய கூட்டணியில் சரி செய்ய முடியாத விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. யுக்ரேன்: அமெரிக்கா - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட 3 விஷயங்கள் என்ன? லாவ்ரோவ் தகவல் டிரம்ப் - புதின் முதல் சந்திப்பை சௌதி அரேபியாவில் திட்டமிடுவது ஏன்? ஒரு பகுப்பாய்வு 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா? ஐரோப்பிய நாடுகள் பாரிஸில் நாளை அவசர ஆலோசனை அமெரிக்காவின் எச்சரிக்கையால் அதிர்ந்து போன யுக்ரேன் அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி குழப்பமடைந்துள்ளார். அமெரிக்காவின் இந்த அணுகுமுறையை அவர் முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும் என அவரது விமர்சகர்கள் கூறி வருகின்றனர். டிரம்ப் இந்த தேர்தலை வெல்வதற்கு முன்பாகவே, முன்னாள் அதிபர் ஜோ பைடனின் கொள்கைகளை தான் பின்பற்ற போவதில்லை என்பதை தெளிவாக்கியிருந்தார். துருக்கி வந்திருந்த ஜெலன்ஸ்கி, "ரஷ்யா ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட முக்கிய தரப்புகள் இல்லாமல்" போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக வருத்தம் தெரிவித்தார். ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் நேருக்கு நேர் பேசிக் கொள்ளும் சௌதி அரேபியாவில் உள்ள அந்த குளிர்ந்த அறைக்கும் உறைய வைக்கும் பனி சூழ்ந்த வட கிழக்கு யுக்ரேனுக்கும் வெகு தூரம் இருப்பது போல் தோன்றுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் இல்லாமல் ரஷ்யாவுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்துவது வருத்தமளிப்பதாக யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகிறார். ரஷ்ய எல்லையில் பனி படர்ந்த கிராமங்கள் மற்றும் காடுகளில் உள்ள பதுங்கு குழிகளிலும், ராணுவ தளங்களிலும் யுக்ரேன் வீரர்கள் வழக்கம் போல் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சுமி நகருக்கு அருகே காட்டில் உள்ள ராணுவ தளத்தில் ஒரு நிலத்தடி பதுங்கு குழியில், ஒரு யுக்ரேனிய அதிகாரி என்னிடம் செய்திகளைப் பின்தொடர தனக்கு அதிக நேரம் இல்லை என்று கூறினார். அவரைப் பொருத்தவரை, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு "வெற்றுச் சத்தம்" தான். "வெள்ளை" என்ற அடையாளப் பெயரால் மட்டுமே தன்னை குறிப்பிடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ராணுவ தளபதி, கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளன. மேற்கத்திய தலைவர்களையும், அவரது சொந்த நாட்டின் அதிபரையும் அதிர வைத்த ராஜதந்திர செயல்பாடுகளை புறக்கணித்து, தனது ஆட்களை மீண்டும் சண்டைக்கு வழிநடத்தத் தயாராவதே ஒரு போர்க்கள அதிகாரி செய்ய வேண்டிய சரியான விஷயம். ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேன் கைப்பற்றிய நிலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் மீண்டும் இணைவதற்காக அவர்கள் விரைவில் குர்ஸ்க் நகருக்குள் நுழைகிறார்கள். யுக்ரேன் போர் முனையில் என்ன நடக்கிறது? யுக்ரேனிய வீரர்களை அணுகுவதற்கான ஒரு நிபந்தனையாக, துல்லியமான இடங்கள் அல்லது அடையாளங்களை வெளியிட மாட்டோம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். எனவே அவர்கள் சுமி நகரைச் சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் இருப்பதையும், குர்ஸ்கில் யுக்ரேன் தொடர்ந்து சண்டையிடும் அனைத்து பகுதிகளிலும் இருப்பதை தவிர வேறு குறிப்பிட்ட தகவல்களை பகிரவில்லை. ஒரு சிறிய கிராமத்தில் இருந்த ஒரு பட்டறையின் ஒரு சிறிய அறையில், அதிக அளவிலான பயங்கரமான ஆயுதங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. மரத்தாலான வெடிமருந்துப் பெட்டிகளால் முட்டுக் கொடுக்கப்பட்ட, மர அலமாரியில் அவை வைக்கப்பட்டிருந்தன. அலமாரிகளில் நூற்றுக்கணக்கான டிரோன்கள் இருந்தன, அவை அனைத்தும் யுக்ரேனில் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொன்றும் சுமார் £300 ($380) மதிப்பு கொண்டவை. குர்ஸ்க் போர்க் களத்திற்கு அனுப்புவதற்காக அட்டைப் பெட்டிகளில் அடைப்பதற்கு முன்பு அவற்றை வீரர்கள் சோதித்தனர். அவற்றில் ஆயுதங்களை நிரப்பி, ஒரு திறமையான வீரர் பறக்க விட்டால் – ஒரு டாங்கியைக் கூட அழிக்க முடியும் என்று வீரர்கள் கூறினர். அவர்களில் ஒருவரான ஆண்ட்ரூ தனது காலை இழக்கும் வரை டிரோன் விமானியாக இருந்துள்ளார். இங்கிருந்து வெகு தொலைவில் அமெரிக்கர்கள் கூறுவதைப் பற்றி தான் அதிகம் சிந்திக்கவில்லை என்று கூறினார். ஆனால் அவர்களில் யாரும் ரஷ்ய அதிபர் புதினை நம்பவில்லை என்றார். சில மணி நேரத்திற்கு முன்னர் அவர்களின் டிரோன்கள் உறைந்த பனி மூடிய வயல்வெளியில் பட்டப்பகலில் முன்னேறி வந்த ரஷ்ய கவச படைப்பிரிவை அழித்திருந்தன. அவர்கள் அந்த வீடியோவை எங்களிடம் காட்டினார்கள். அவர்கள் தாக்கிய சில வாகனங்கள் ரஷ்ய கொடிக்கு பதிலாக சோவியத் யூனியனின் சிவப்பு கொடியை பறக்கவிட்டிருந்தன. தாந்தியா தோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தியைப் பரப்பிய கிளர்ச்சியாளர் - ஆங்கிலேயர்களை திணற வைத்தது எப்படி?9 மணி நேரங்களுக்கு முன்னர் இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 சுமி நகரில் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டு, பகலில் நன்கு பரபரப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இருட்டத் தொடங்கியதும் தெருக்கள் கிட்டத்தட்ட வெறிச்சோடி காணப்படுகின்றன. விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. யுக்ரேனின் உட்பகுதியில் இலக்குகளைத் தாக்குவதற்காக செல்லும் ரஷ்ய டிரோன்களை குறிவைத்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் மணிக்கணக்கில் வானத்தை நோக்கி சுடுகின்றன. ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று மாடி உயரத்துக்கு ஒரு துளை உள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்பு ரஷ்ய டிரோன் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த கட்டடம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதால், அது இடிந்து விழக்கூடும் என்று பொறியாளர்கள் அஞ்சுகின்றனர். எனவே அந்த கட்டடம் காலி செய்யப்பட்டுள்ளது. இது சோவியத் காலத்தில் கட்டப்பட்ட ஒரே மாதிரியான தொகுப்பு வீடுகளின் ஒரு பகுதியாகும். சிதிலமடைந்த பாதுகாப்பற்ற கட்டடத்திற்கு அருகிலேயே வசித்து வந்த குடியிருப்பாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடைகளுக்கோ அல்லது தங்கள் கார்களுக்கோ நடந்து சென்று கொண்டிருந்தனர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? இந்தி எதிர்ப்பின் நெடிய வரலாறு18 பிப்ரவரி 2025 பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?18 பிப்ரவரி 2025 அமைதியை விரும்பும் மக்கள் 50 வயதான மைகோலா, தனது மகனுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பேசுவதற்காக நின்றார். ரஷ்யர்கள் அழித்த கட்டடத்துக்கு அடுத்த பகுதியில் அவர் வசிக்கிறார். யுக்ரேனில் அமைதி பற்றிய டொனால்ட் டிரம்பின் யோசனை குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று நான் அவரிடம் கேட்டேன். "எங்களுக்கு அமைதி வேண்டும்" என்றார். "ஏனென்றால் போரிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. போரினால் எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதுவரை ரஷ்யர்கள் ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளைப் பார்த்தால், அவர்கள் கீவ் (யுக்ரேனின் தலைநகர்) நகரை அடைய 14 ஆண்டுகள் ஆகும். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இது முடிவுக்கு வர வேண்டும்" என்றார். எனினும், ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பியர்கள் இல்லாமல், புதின் மற்றும் டிரம்ப் அமர்ந்து பேசுவதால் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாது என்று அவர் கருதுகிறார். சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?17 பிப்ரவரி 2025 தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு17 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, யூலியா, "நிச்சயமாக, நீங்கள் புதினை நம்ப முடியாது" என்கிறார். அதே பகுதியில் வசிக்கும் யூலியா (33) தனது நாயுடன் வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். ரஷ்யர்கள் பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பைத் தாக்கிய போது அவர் தனது வீட்டில் இருந்துள்ளார். "இது எல்லாம் நள்ளிரவைத் தாண்டி, நாங்கள் படுக்கைக்குச் செல்லவிருந்த நேரத்தில் நடந்தது. நாங்கள் ஒரு பெரிய வெடிச் சத்தத்தைக் கேட்டோம். எங்கள் ஜன்னல் வழியாக ஒரு பெரிய சிவப்பு ஒளியை பார்த்தோம். இந்தக் கொடூரத்தைப் பார்த்தோம். மிகவும் பயமாக இருந்தது. பலர் வெளியே இருந்தனர். ஒரு பெண் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் உதவிக்காக அலறிக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக பார்க்க முடியவில்லை, ஆனால் இறுதியில் அவர் இடிபாடுகளிலிருந்து காப்பாற்றப்பட்டார்." என்று அவர் கூறினார். சமாதானம் சாத்தியம் என்றே அவர் நம்புகிறார். "ஆனால் அவர்கள் முதலில் எங்கள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும். அதை அவர்கள் நிறுத்தினால்தான் அமைதி நிலவும். இந்த கொடூரத்தை அவர்கள் தொடங்கியதால் அந்த முயற்சி அவர்கள் தரப்பில் இருந்து வர வேண்டும்". "நிச்சயமாக, நீங்கள் புதினை நம்ப முடியாது." என்றார். பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்17 பிப்ரவரி 2025 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி?17 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, யுக்ரேன் சரணடையக் கூடாது என்று போரிஸ் கூறுகிறார். சூரியன் மறைந்து கொண்டிருந்த வேளையில், தனது காரை நோக்கிச் சென்று கொண்டிருந்த 70 வயதான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி போரிஸ் நின்றார். சோவியத் ராணுவத்தில் 30 ஆண்டுகள் அவர் சேவை புரிந்துள்ளார். அவரது மகனும், பேரனும் கூட தற்போது யுக்ரேனுக்காக போர்க்களத்தில் சண்டையிட்டு வருகின்றனர். "அமைதி சாத்தியமே" என்கிறார். "ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. யுக்ரேனுக்கான நீதி கிடைக்கும். ஆனால் கவனமாக இருக்க வேண்டும். புதின் இருக்கும் போது ரஷ்யர்களை நம்ப முடியாது. ஏனென்றால் அவர்கள் புதினை ஒரு மதத்தை நம்புவது போன்று நம்புகின்றனர். அவர்களை மாற்ற முடியாது, அதற்கு காலம் எடுக்கும்" என்றார். அப்படியென்றால், போரிட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? அல்லது அமைதி ஒப்பந்தம் போட வேண்டுமா? "யுக்ரேன் அமைதி குறித்து யோசிக்க வேண்டும். ஆனால் நாங்கள் சரணடையக் கூடாது. அதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் பலமாக இருக்கும் வரை எதிர்ப்போம். ஐரோப்பா எங்களுக்கு உதவி செய்யும் என்று தோன்றுகிறது. சரணடைவதில் எந்த பலனும் இல்லை" என்றார். ரியல் எஸ்டேட் துறையில் ஒப்பந்தம் போடுவது போல, ஒரு ஒப்பந்தத்தை போட்டு போரை நிறுத்தி விடலாம் என்று நம்பும் டொனால்ட் டிரம்ப், அமைதியை கொண்டுவருவது அதை விட சிக்கலானது என்று தெரிந்துக் கொள்ளப் போகிறார். அது போர் நிறுத்த ஒப்பந்தமிட்டு, இரு தரப்பும் எவ்வளவு நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதை தாண்டியது என்று அவர் அறிந்து கொள்வார். யுக்ரேனின் இறையாண்மையை நிலைகுலைய செய்து, சுதந்திரமான நாடாக இருக்கும் அதன் திறனை அழிக்க விரும்புவதாக புதின் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் பேச்சுவார்த்தை மேஜையில் ஜெலன்ஸ்கிக்கு இடம் இருக்கிறதோ இல்லையோ, அதற்கு அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். நீடித்த அமைதியை உருவாக்குவது சாத்தியம் என்றால், அது ஒரு நீண்ட, மெதுவான நடைமுறையாக இருக்கும். உடனடியாக அமைதி வேண்டும் என்று நினைத்தால் டிரம்ப் பார்க்க வேண்டியது வேறு பக்கம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு டிரம்ப் அணுகுமுறையால் அதிர்ந்து போன யுக்ரேன் - போர் முனையில் என்ன நடக்கிறது?- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பொறுத்தது தான் பொறுத்தோம் இன்னும் 16.4 ஓவர் தானே அண்ணை?- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
New Zealand 320/5 Pakistan (31.6/50 ov, T:321) 130/5 Pakistan need 191 runs from 18 overs.Stats view Current RR: 4.06 • Required RR: 10.61 • Last 5 ov (RR): 36/2 (7.20) Win Probability:PAK 0.51% • NZ 99.49% - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.