Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இந்தக் காணொளியின் விரிவான பதிவு கீழுள்ள யுரியூப்பில் உள்ளது. அடித்து நொறுக்கிய தமிழ்த்தேசியப் பேராளுமைகள் | ஈவெரா எனும் போலி பிம்பம் - பாகம் 1 *ஈவெரா எனும் போலி பிம்பம்* | சிறப்பு கருத்தரங்கம் - பாகம் 1 இந்தக் கருத்தரங்கில் தமிழ்த்தேசிய அரசியலின் முக்கியமான ஆளுமைகள் ஒன்றிணைந்து ஈவெராவின் போலி பிம்பத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். 🎙 *சிறப்புக் கருத்துரையாளர்கள்:* ✅ *பெ.மணியரசன்* - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ✅ *அரு.கோபாலன்* - ஆசிரியர், எழுகதிர் இதழ் ✅ *பா.குப்பன்* - வழக்குரைஞர், திருத்தணிகை ✅ *க.சக்திவேல்* - தலைவர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி 🔴 இந்த பகுதியில்: ஈவெரா எதிர்ப்பு ஏன்? ஈவெரா பற்றிய பொதுவான புரிதல்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள் அவருடைய கருத்துகளின் பின்னணி 📌 முக்கியமான அரசியல், சமூக மற்றும் வரலாற்றுத் தரவுகளுடன் தெளிவான பார்வையை வழங்கும் இந்த நிகழ்வைத் தவறவிடாமல் பாருங்கள்!
  2. நீங்கள் புள்ளி வைச்சாலே அண்ணை கோலம் போடுவார்!
  3. Muhammad Zia-ul-Haq (12 August 1924 – 17 August 1988) was a Pakistani dictator who controlled Pakistan from his 1977 coup until his death in 1988. He took over the country after leading a coup on 5 July 1977, which overthrew the democratically elected government of prime minister Zulfikar Ali Bhutto. அண்ணை, மேலே உள்ள ஷியா உல் ஹக் இல்லை தானே?!
  4. டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்" - எனது நாட்டை விற்க முடியாது - உக்ரைன் ஜனாதிபதி Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 05:14 PM அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்கும் கருத்துவேறுபாடுகள் உள்ளதை வெளிப்படுத்தும் விதத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளர்ர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்" என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதியாக தன்னை யாராவது மாற்றவிரும்பினால் அது நடைபெறாது என குறிப்பிட்டுள்ள அவர் 58 வீதமான உக்ரைன் மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். உக்ரைன் குறித்து ரஸ்யா பல பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மீது சகலமரியாதையையும் வைத்திருக்கும் அதேவேளை அவர் தவறான தகவல் உலகத்தில் வாழ்கி;ன்றார் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தனக்கான மக்கள் ஆதரவு குறித்த பொய்யான புள்ளிவிபரத்தை ரஸ்யாவே பரப்பியுள்ளது என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் உள்ள அபூர்வமான கனியவளங்களான லித்தியம் மற்றும் டைட்டானியத்தின் ஒரு பகுதியை அமெரிக்க ஜனாதிபதி கோரியுள்ளரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அந்த கனியவளங்களின் 50 வீதத்தின் உரிமையை அமெரிக்கா கோரியதாலும் எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காததாலும் தான் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்ததாக குறிப்பிட்டுள்ளார். நான் உக்ரைனை பாதுகாக்கின்றேன் என்னால் அதனை விற்க முடியாது,எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது என வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஸ்யாவை சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகள் மூலம் அமெரிக்கா மீண்டும் சர்வதேச அரங்கிற்கு கொண்டுவந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா உதவியை குறைத்தால் ஐரோப்பா என்ன ஆதரவை வழங்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார். ரஸ்யாவிற்கு பரந்துபட்ட விட்டுக்கொடுப்புகளை செய்வது குறித்த யோசனைகளை நிராகரித்துள்ள அவர் இந்த யோசனையை உக்ரைன் மக்கள் நிராகரிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்" - எனது நாட்டை விற்க முடியாது - உக்ரைன் ஜனாதிபதி
  5. மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக அதிகாரிகள் கள விஜயம் - எதிர்த்த மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட திணைக்களத்தினர் 19 FEB, 2025 | 05:34 PM மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கள ஆய்வு செய்து, கனிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை வழங்க சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்த குழுவினர் இன்று (19) அப்பகுதியில் கள விஜயம் செய்தபோதும் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு தடவை கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்றைய தினம் மூன்றாவது தடவையாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிக்கு கள விஜயம் செய்தனர். மன்னார் தீவு பகுதியில் கனிய மணல் அகழ்வினை முன்னெடுப்பதற்கான ஆய்வுப் பணிகளில் முன்னதாக இரு தடவைகள் ஈடுபட முற்பட்டும் முடியாமற்போனதைத் தொடர்ந்து, மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக மூன்றாவது முறையும் திணைக்களத்தினரின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்களும் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு கட்டங்கட்டமாக வருகை தந்தன. இதன்போது மாவட்டச் செயலக பகுதியில் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டலில் சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்த குழுவினர் தோட்டவெளி கொன்னையன் குடியிருப்பு பகுதிக்குச் சென்றனர். அவ்வேளை, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்தகைய சூழ்நிலையில் அப்பகுதிக்கு கள விஜயம் செய்த அதிகாரிகளின் வருகைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர். எனினும், மக்களின் காணிகளின் ஊடாக தனியார் காணியில் கனிய மணல் பரிசோதனைக்கான கள விஜய நடவடிக்கைகள் தொடர்ந்தபோது மக்களும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் இந்த கனிய மணல் பரிசோதனை மற்றும் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தனர். அதன் அடிப்படையில் இவ்விடயம் உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர், உடனடியாக இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் அகழ்வுக்கான பரிசோதனை கள விஜயம் நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் பிரவேசித்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உட்பட கிராம மக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர். மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக அதிகாரிகள் கள விஜயம் - எதிர்த்த மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட திணைக்களத்தினர்
  6. “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் கைது 19 FEB, 2025 | 06:40 PM கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் உயிரிழந்துள்ளார். சட்டத்தரணி வேடத்தில் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குச் சென்ற துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிரதான சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் கைது
  7. கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம்; ஒருவருக்கு சிறைத்தண்டனை Published By: DIGITAL DESK 7 19 FEB, 2025 | 04:33 PM கிளிநொச்சி இரணைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், இதில் முதல்குற்றமுள்ள உள்ள ஒருவருக்கு 18 மாதகால கட்டாயச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம் திகதி அதிகாலை இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் 09 ஆம் திகதி மாலை கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்து அன்றைய தினம் இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று புதன்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த வழக்கானது இன்றையதினம் பகல் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ஒரு இழுவைப்படகுடன் தொடர்புபட்ட பதினொரு பேருக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பன்னிரெண்டு மாத சிறையும் இரண்டாவது குற்றச் சாட்டுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், செலுத்த தவறின் ஆறுமாத சிறைத் தண்டனையும் படகை செலுத்தியமை மற்றும் படகு உரிமை ஆகிய இரண்டு குற்றச் சாட்டுக்கும் தலா ஆறு மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் தண்டம் செலுத்த தவறின் தலா ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மற்றைய படகுடன் தொடர்பட்ட மூன்று பேருக்கும் முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பன்னிரெண்டு மாத சிறையும் இரண்டாவது குற்றச் சாட்டுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், செலுத்த தவறின் ஆறுமாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு முதல் குற்றச்சாட்டு உள்ள ஒருவருக்கு பதினெட்டு மாதகால கட்டாய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் ; ஒருவருக்கு சிறைத்தண்டனை
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கீரி என்று சொன்னாலே, பாம்பு குறித்த நினைவு நமக்கு வந்துவிடும் அளவுக்கு, இந்த இரண்டு உயிரினங்கள் பற்றிய கதைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. கீரி - பாம்பு இடையே நிகழும் ஆக்ரோஷமான சண்டைகள் இயற்கைச் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயிர் பிழைத்திருப்பதற்கான உத்திகள், பரிணாம தகவமைப்புகள், சூழலியல் சமநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த இரண்டு உயிரினங்களுக்கு இடையிலான பகையுணர்வு சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமானது. ஆனால், அடிப்படையில் இவையிரண்டுக்கும் இடையே இருக்கும் இயற்கையான பகை மக்களிடையே பிரபலமான அளவுக்கு, அதற்கான காரணம் அதிகமாகப் பிரபலமடையவில்லை. பாம்பு - கீரி இரண்டும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? அதில் கீரியே பெரும்பாலும் வெற்றி பெறுவது ஏன்? பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாதா? இவையிரண்டும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா? குவாம் தீவு: பாம்புகளின் தீரா பசிக்கு மொத்தமாக அழிந்து போன பறவை இனங்கள் வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்க முடியுமா? கீரிகள் - அச்சமற்ற பாம்பு வேட்டையாடிகள் கீரிகள், குறிப்பாக இந்திய சாம்பல் நிற கீரிகள், அச்சமற்ற பாம்பு வேட்டையாடிகளாக அறியப்படுகின்றன. இவை நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட நச்சுப் பாம்புகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை. ஒரு சில பாம்புகளின் நஞ்சை தாங்கிக் கொள்ளும் எதிர்ப்பாற்றலும் இவற்றுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கீரிகளின் சுறுசுறுப்பு, வேகம் ஆகியவை, பாம்புகளின் தாக்குதல்களில் இருந்து விரைந்து தப்பித்து, எதிர்த் தாக்குதல் தொடுக்கும் திறனை அவற்றுக்கு வழங்குவதாகக் கூறுகிறார் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தைச் சேர்ந்த உயிரியலாளர் முனைவர் தணிகைவேல். அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "கீரி அடிப்படையில், எலி, அணில் போன்ற சிறிய வகை பாலூட்டிகளில் ஒன்று. அவற்றின் உடலமைப்பு கிட்டத்தட்ட அணில்களை ஒத்திருக்கும். இருந்தாலும், அளவில் பெரிதாக இருப்பதால், அவற்றால் பாம்புகளை எதிர்த்துச் சண்டையிட முடிகிறது," என்று விவரித்தார். அவரது கூற்றுப்படி, ஒரு பாம்பு தாக்கும் போது, கடிபடாமல் உடலை வளைத்து தப்பிக்கவும், துரிதமாகத் திருப்பித் தாக்கவும் கீரிகளின் உடல் அமைப்பு அவற்றுக்கு ஒத்துழைக்கிறது. இருமொழிக் கொள்கையால் தடைகள் இருந்ததா? தமிழ், ஆங்கிலம் மட்டும் படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் கூறுவது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை: உடல் பருமனால் ஏற்பட்ட மன அழுத்தம் - விபரீத முடிவை எடுத்த அண்ணன் தங்கை5 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்பு - கீரி இடையே சண்டை ஏற்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான சண்டைக்கு அடிப்படைக் காரணம், உயிர் பிழைத்தலுக்கான நிர்பந்தமே என்கிறார் ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் குறித்து இவர் ஆய்வு செய்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இவை இரண்டுமே வேட்டையாடி உண்ணக் கூடியவை. அதோடு, இரண்டுமே நிலவாழ் உயிரினங்களாகவும் இருப்பதால் அடிக்கடி வாழ்விட மோதல்கள் நிகழ்கின்றன. ஆகவே, அவை ஒன்றையொன்று தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன," என்றார். அதாவது, ஓரே நிலப்பரப்பில் பாம்பு, கீரி இரண்டுமே வாழ்கின்றன. அதில் வாழும் பூச்சிகள், எலிகள், பல்லி ஆகியவற்றை உணவாகக் கொண்டாலும், கீரிகள் பாம்புகளையும் உணவாகக் கொள்கின்றன. ஆகவே, பாம்புகள் தமது இருப்புக்கு கீரிகளை அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. பாம்பைக் கண்டாலே கீரி தாக்கும் என்ற கருதுகோள் குறித்துக் கேள்வியெழுப்பிய போது, "பாம்புகள் கீரிகளின் உணவுப் பட்டியலில் இருக்கக் கூடிய ஓர் உயிரினம். அப்படியிருக்கும் போது, ஒரு வேட்டையாடியான கீரி, அதை எதிர்கொண்டால் உணவை விட்டுவிட்டுச் செல்லாதல்லவா!" என்கிறார் முனைவர் தணிகைவேல். நன்கு வளர்ந்த கீரிகளுடன் சண்டையிடுவது ஒரு பாம்புக்கு சவாலாக இருந்தாலும், கீரி குட்டிகளை சில பாம்புகளால் உணவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக பாம்புகளை கீரிகள் கருதுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES "நிலத்தில் குழி பறித்து வாழக்கூடிய உயிரினம் என்பதால், கீரிகளின் குட்டிகளை வேட்டையாடுவது பறவை போன்ற வேட்டையாடிகளுக்கு அவ்வளவு எளிதல்ல. ஆனால், நிலவாழ் ஊர்வன உயிரியான பாம்புகளுக்கு அது எளிதான காரியம். ஆகவே, கீரிகளுக்கு பாம்புகள் இயற்கை எதிரிகளாகி விடுகின்றன," என்று விளக்கினார் ரமேஸ்வரன். இப்படியாக, பாம்பின் இருப்புக்கு கீரியும், கீரியின் இருப்புக்கு பாம்பும் ஆபத்தை விளைவிப்பதால், அந்த அபாயத்தை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவை சண்டையிடுகின்றன. "பரிணாம வளர்ச்சியில் ஒவ்வோர் உயிரினமும் தத்தம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உயிரினத்தைக் கண்டால், உடனடியாக எதிர்செயலாற்றும் தன்மையைப் பெற்றுள்ளன. ஒரு மானுக்கு புலியைக் கண்டால் ஓட வேண்டும் எனத் தெரிகிறது, எலிக்கு பாம்பைக் கண்டால் தப்பிக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்த நடத்தைகளை அவற்றுக்கு யாரும் பயிற்றுவிப்பதில்லை. பரிணாமப் பாதையில் அவற்றுக்கு உள்ளுணர்வாகப் பதிவாகியுள்ளன. கீரி, பாம்பு இடையிலான சண்டையும் அப்படிப்பட்டதே. இரண்டுமே வேட்டையாடி உயிரினங்கள். ஒரே வகையான நிலப்பரப்பில் இரண்டுமே வாழ்விடங்களைக் கொண்டுள்ளன. இரண்டுக்குமே ஒன்றுக்கொன்று ஆபத்தை விளைவிக்க கூடிய திறனுள்ளது. ஆகவே, அவற்றுக்கு இடையே சண்டை நிகழ்வது இயற்கையானதுதான்," என்கிறார் ரமேஸ்வரன். காந்தி கேட்டுக்கொண்டதால்தான் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கோரினாரா?2 மணி நேரங்களுக்கு முன்னர் இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாதா? பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்பு வகைகளில் கீரிகள் சண்டையிடுவது நாகங்களுடன் மட்டுமே அல்ல என்று கூறிய தணிகைவேல், ஒருவேளை நாகப் பாம்புகள் படமெடுத்து நின்று சண்டையிடுவதால் அவற்றுடனான கீரிகளின் சண்டை எளிதில் தென்படுகிறது என்றார். கீரிகள், நாகம் போன்ற நஞ்சுள்ள பாம்புகளை உணவாக உண்ணக் கூடியவை. அவற்றின் நெகிழ்வுத்தன்மை மிக்க உடலமைப்பு, அதிவேகமாகச் செயல்படும் திறன் ஆகியவை பாம்புகளை ஆக்ரோஷமாக வேட்டையாட உதவுகின்றன. அதேவேளையில், கீரிகளின் தற்காப்பு அமைப்பும் பாம்புக் கடி அவற்றின் உடலில் நேரடியாக படுவதைத் தவிர்க்கும் வகையில் இருக்கின்றது. பாம்புடன் சண்டையிடும் போது, தனது ரோமங்களைச் சிலிர்த்துக் கொண்டு உடலைச் சற்றுப் பருமனாகக் காட்டிக் கொள்வதன் மூலம், அவை பாம்புகளை ஏமாற்றுகின்றன. இதன்மூலம், ஒருவேளை பாம்பு தாக்கினால்கூட, அதன் கடி கீரியின் உடலில் நேரடியாக படுவதில்லை. இந்த உத்திகளின் மூலம், கீரியால் பாம்பை நெருங்கவும், அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பகுதிகளில் தாக்குதல் நடத்தவும் முடிகிறது. வயநாடு கடையடைப்பு: காட்டுயானை தாக்குதலால் தொடரும் மரணங்கள் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்15 பிப்ரவரி 2025 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றோடு, கீரிகளின் உடலில், பாம்பின் நஞ்சை எதிர்க்கக் கூடிய தன்மை இருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 1872ஆம் ஆண்டில் மூன்று கீரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இரண்டு கீரிகளுக்கு பாம்புக்கடியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில ஆய்வுகள், கீரியின் உடலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக் கூடிய சில பாம்பு நஞ்சுகளின் வீரியத்தை எதிர்க்கும் திறன் கொண்ட அசிடைல்கோலின் ஏற்பி இருப்பதாகக் கூறுகின்றன. 'பாம்பு, கீரியைப் போல் சண்டையிடுகிறார்கள்' என்று ஊர்ப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு. உண்மையில், பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க இதுவே காரணம். இது உயிர் பிழைத்தலுக்கான சண்டையின் அடிப்படையில் வேரூன்றிய பகை. இந்தத் தொடர்ச்சியான மோதல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதிலும், முக்கியப் பங்கு வகிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பாம்பும் கீரியும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?
  9. LIVE 1st Match, Group A (D/N), Karachi, February 19, 2025, ICC Champions Trophy New Zealand 320/5 Pakistan (2.5/50 ov, T:321) 5/0 Pakistan need 316 runs from 47.1 overs.Stats view Current RR: 1.76 • Required RR: 6.69 Win Probability:PAK 26.64% • NZ 73.36%
  10. Published By: DIGITAL DESK 7 19 FEB, 2025 | 04:45 PM (எம்.மனோசித்ரா) உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், அன்றைய தினத்திலிருந்து 52 - 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பெப்ரல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறும். குறித்த சட்ட மூலத்தில் 3 மாதங்களுக்குள் வேட்புமனுவைக் கோருவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அது குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்கு எவ்வித தடைகளும் கிடையாது. வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் நாளிலிருந்து 52 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு. அதற்கான ஆகக் குறைந்த கால அவகாசம் 52 நாட்கள் என்பதோடு, ஆகக் கூடிய கால அவகாசம் 66 நாட்களாகும். அதற்கமைய ஏப்ரல் இறுதி வாரத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள், தமிழ் - சிங்கள புத்தாண்டு உள்ளடவை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய கடப்பாடும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்படு தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். அதேபோன்று இவ்விடயத்தில் அரசியல் கட்சிகளுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன. இளைஞர் மற்றும் பெண்களுக்கான கோட்டா தொடர்பில் வேட்புமனுவின் போது கட்சிகள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 4 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரையறைகளுக்குட்டு செலவுகளை மேற்கொள்ள வேண்டும். இவை தொடர்பில் வழமை போன்று நாம் கண்காணிப்புக்களை முன்னெடுப்போம் என்றார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? - பெப்ரல் அமைப்பு விளக்கம்
  11. மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை வாரி வழங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம் - சம்பியனுக்கான 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்துள்ள 8 அணிகள் 19 FEB, 2025 | 10:17 AM (நெவில் அன்தனி) மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவுக்கு மேல் வாரி வழங்கும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் கராச்சியில் புதன்கிழமை (19) நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் சம்பியன் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் கிடைக்கவுள்ள 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்து எட்டு முன்னணி அணிகள் இரண்டு குழுக்களில் போட்டியிடவுள்ளன. துரதிர்ஷ்டவசமாக முன்னாள் சம்பியன்களான இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் இந்த வருட சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறவில்லை. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலிருந்த அணிகளே சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முதல் எட்டு அத்தியாயங்களில் விளையாட தகுதி பெற்றன. ஆனால், 2025 சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றாக 2023 உலகக் கிண்ணப் போட்டி அமையும் என திடீரென ஐசிசி அறிவித்தது. இதற்கு அமைய இந்தியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் முதல் எட்டு இடங்களைப் பெற்று சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. தனது கடைசி நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்ததால் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை இழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 2023 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை. இந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அகிய அணிகள் ஏ குழுவிலும் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் பி குழுவிலும் பங்குபற்றுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் தலா 6 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் முதல் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். இந்த வருடப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக நடப்பு சம்பியன் பாகிஸ்தான் விளங்குகிறது. ஆனால், இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் யாவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முழு கிரிக்கெட் உலகினாலும் வெகுவாக கவரப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந் நிலையில் பங்குபற்றும் அணிகளின் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம். ஏ குழு நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (பங்களாதேஷ்) ஐசிசி போட்டி ஒன்றில் மூன்றாவது முறையாக பங்களாதேஷ் அணியை 26 வயதான ஷன்டோ வழிநடத்துகிறார். பங்களாதேஷ் தங்கள் முதலாவது சம்பியன் பட்டத்திற்கு குறிவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னேற்றத்தை நோக்கி நகரும் அணி மீது நம்பிக்கையை ஷண்டோ வெளிப்படுத்தியதுடன் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் தமது அணி பலரை ஆச்சரியப்படுத்தும் எனவும் கூறினார். பங்காளதேஷுக்கு இந்தப் போட்டி எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதை விளக்கிய ஷன்டோ, 'இப் போட்டி மிகவும் முக்கியமானது. நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் இந்த முறை கிண்ணத்தை வெல்ல விரும்புகிறோம். இந்த முறை எங்களுக்கு மிகச் சிறந்த அணி இருப்பதால் கிண்ணத்தை வென்றெடுக்க முடியும் என நினைக்கிறோம்'என்றார். 'அது கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால். நாங்கள் எங்களது திட்டத்தை சரியாக செயற்படுத்தினால் உரிய தினத்தில் எங்களால் வெல்ல முடியும்' என ஷன்டோ மேலும் தெரிவித்தார். குழாம்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), சௌம்யா சர்க்கார், தன்ஸித் ஹசன், தௌஹித் ரிதோய், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முத் உல்லா, ஜாக்கர் அலி ஆனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசெய்ன், தஸ்கின் அஹ்மத், முஷ்தாபிஸுர் ரஹ்மான், பர்வெஸ் ஹொசெய்ன் ஈமோன், நசும் அஹ்மத், தன்ஸிம் ஹசன் ஷக்கிப், நஹித் ராணா. ரோஹித் ஷர்மா (இந்தியா) தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் விளையாடும் ரோஹித் ஷர்மா, முதல் தடவையாக இந்திய அணியின் தலைவராக விளையாடுகிறார். 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டிவரை சிறப்பாக வழிநடத்திய ரோஹித் ஷர்மா, கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை உலக சம்பியனாக உயர்ந்த நிலையில் இட்டார். எட்டு அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ஏற்கனவே ரோஹித் ஷர்மா வெற்றியை ருசித்துள்ளார். இந்தியா இரண்டாவது முறையாக 2013இல் சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தபோது இந்தியாவின் துணிச்சல்மிக்க ஆரம்ப வீரராக ரோஹித் தனது வருகையை வெளிப்படுத்தினார். இந்த சுற்றுப் போட்டியில் முன்னிலை அடைய அனுகூலமான அணியாக விளங்கும் இந்தியா, தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டியிருந்தது. அந்தத் தொடரில் ரோஹித் உட்பட மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை வேகமாகக் குவித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். 'ஆடுகளம் நுழைந்து தங்களது வழியில் விளையாடுவதற்கு தேவையான சிறிது சுதந்திரம் குழாத்திற்கு இருக்கிறது' என ரோஹித் ஷர்மா கூறினார். 'உலகக் கிண்ணம் அதற்கு ஒரு சரியான களமாக இருக்கும். அங்கு நாங்கள் அதைத் தொடர்ந்து செய்து அணியை கட்டியெழுப்ப விரும்புகிறோம். சில சமயங்களில் விஷயங்கள் சரியாக அமையாமல் போகலாம், ஆனால் அது பரவாயில்லை' என்றார் ரோஹித் ஷர்மா. குழாம்: ரோஹித் ஷர்மா (தலைவர்) ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ரிஷாப் பான்ட், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, மொஹமத் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவிந்த்ர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி. மிட்செல் சன்ட்னர் (நியூஸிலாந்து) மற்றுமொரு ஐ.சி.சி. போட்டியில் அணித் தலைவராக அறிமுகமாகிறார் சென்ட்னர். இந்த அனுபவம் வாய்ந்த சுழல்பந்துவீச்சாளர், ஏற்கனவே நேர்மறையான அறிகுறிகளை வெளிப்படுத்தி தலைமைப் பொறுப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாத சம்பியன் அணியாக நியூஸிலாந்தை சென்ட்னர் வழிநடத்தியிருந்தார். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வெற்றிபெறுவதற்கு நியூஸிலாந்து வீரர்கள் சிலர் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தனர். இது அணிக்கு நல்ல சமிக்ஞையாகும். 'வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என மும்முனை தொடரில் நியூஸிலாந்து வெற்றிபெற்ற பின்னர் சன்ட்னர் கூறியிருந்தார். 'வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் பிரகாசிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் முதலாவது ஆட்டத்தை விளையாடும் வரை அது ஒன்றுமில்லை' என்றார் மிச்செல் சென்ட்னர். குழாம்: மிச்செல் சென்ட்னர் (தலைவர்), மிச்செல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், டெவன் கொன்வே, கய்ல் ஜெமிசன், மெட் ஹென்றி, டொம் லெதம், டெரில் மி ச்செல், வில் ஓ'ரூக், க்லென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி. மொஹம்மத் ரிஸ்வான் (பாகிஸ்தான்) சொந்த மண்ணில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் அணியை ஐசிசி போட்டியில் முதல் முறையாக அணித் தலைவராக ரிஸ்வான் வழிநடத்தவுள்ளார். பாகிஸ்தான் அணித் தலைவராக கடந்த வருடம் பொறுப்பேற்ற ரிஸ்வான், ஏற்கனவே அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் தொடர் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இறுதிப் போட்டிக்கு ரிஸ்வான் வழிநடத்தியிருந்தார். ஆனால், நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ரிஸ்வான், 'கிரிக்கெட்டை நேசிக்கும் நாடு என்ற வகையில் இந்த வருடம் ஐசிசி சம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அண்மைக் காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது, இந்த மெகா போட்டியை நோக்கிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும் எங்கள் சொந்த மைதானத்தில் நடைபெறும் எட்டு அணிகள் கொண்ட இந்த போட்டியில் திறமையாக விளையாட நாங்கள் ஆவலுடன் உள்ளோம்' என்றார். குழாம்: மொஹமத் ரிஸ்வான் (தலைவர்) பாபர் அஸாம், பக்கார் ஸமான், கம்ரன் குலாம், சவூத் ஷக்கீல், தய்யப் தாஹிர், பாஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் கான், அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹம்மத் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. பி குழு ஹஷ்மத்துல்லா ஷஹிதி (ஆப்கானிஸ்தான்) இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெற்றிகரமாக வழிநடத்திய அணித் தலைவர். அவரது வழிநடத்தலில் பலம்வாய்ந்த அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றை அதிரவைத்து ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகும் ஆப்கானிஸ்தானுக்கு கடந்த வருடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரஙகு வெற்றிகரமாக அமைந்தது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அறிமுக அணியாக பங்குபற்றுகின்றபோதிலும், நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நாளில் எத்தகைய அணியையும் வெற்றிகொள்ளும் திறன் கொண்டது என்று ஷஹிதி நம்புகிறார். 'ஒவ்வொரு வடிவத்திலும் ஒவ்வொரு அணியையும் வெற்றிகொள்ளும் திறமை எங்களிடம் இருப்பதால் நாங்கள் முன்னேற முயற்சிப்போம்,' என்று அவர் அண்மையில் கூறினார், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்காக தங்களது திறமையை வளர்துக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'எங்களது அடுத்த பெரிய சவால் சம்பியன்ஸ் கிண்ணம். இது எங்களுக்கு ஒரு பெரிய போட்டி. எனவே அதனை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றார் அவர். குழாம்: ஹஷ்மத்துல்லா ஷஹிதி (தலைவர்), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், சிதிக்குல்லா அத்தல், ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில், குல்பாதின் நய்ப், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், மொஹமத் நபி, ராஷித் கான், நங்கேயாலியா கரொத், நூர் அஹ்மத், பஸால்ஹக் பாறூக்கி, பரித் மாலிக், நவீத் ஸத்ரான். ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலிய அணியின் முழுநேர தலைவர் பெட் கமின்ஸுக்குப் பதிலாக, துடுப்பாட்ட நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் நடப்பு ஒருநாள் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வழிநடத்துகிறார். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் அவர் தலைமை வகிப்பது இது இரண்டாவது தடவையாகும். 2017 சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட ஸ்மித், ஒரு தலைவராக ஏராளமான அனுபவங்களுடன் சம்பியன் கிண்ணத்தை எதிர்கொள்கிறார். அவுஸ்திரேலிய அணியில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பெறாதது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், அவர்களுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட வீரர்கள் மீது ஸ்மித் நம்பிக்கை கொண்டுள்ளார். 'அவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு ஏற்ற தனித்துவமான திறமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் அவர்களை வழிநடத்துவது, அவர்களுடன் கலந்துரையாடுவது, சரியான நேரத்தில் அவர்களிடமிருந்து சரியானவற்றைப் பெற முயற்சிப்பது என்பனவே எனது பணி ஆகும். எமது அணியில் அனுபவம்வாய்ந்த வீரர்கள் பலர் இடம்பெறுவதால் எங்களால் சாதிக்க முடியும் என நம்புகிறேன்' ஸ்மித் கூறினார். குழாம்: ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), சோன் அபொட், அலெக்ஸ் கேரி, பென் த்வாஷுய்ஸ், நேதன் எலிஸ், ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க், ஆரொன் ஹாடி, ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜோன்சன், மானுஸ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மெத்யூ ஷோர்ட், அடம் ஸம்ப்பா. ஜொஸ் பட்லர் (இங்கிலாந்து) 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தை சம்பியனாக்கிய ஜொஸ் பட்லர், 2019 உலகக் கிண்ண வெற்றியில் ஒரு சிறந்த வீரராகத் திகழ்ந்தவர். அதிரடி ஆட்டக்காரரான பட்லர், தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்கிறார். சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் முறையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் முழு வீச்சில் இங்கிலாந்து களம் இறங்கவுள்ளது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்த போதிலும், இந்த சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வாய்ப்புகள் குறித்து பட்லர் நம்பிக்கையுடன் உள்ளார். 'நாங்கள் இன்னும் எங்களுக்கு இருக்க வேண்டிய திறமையை அண்மிக்கவில்லை. தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறமையாக விளையாடினால் எங்களால் சிறந்த இடத்தில் இருக்க முடியும் என்பதை அறிவோம். சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் நாங்கள் சவால் மிக்க அணியாக இருக்க முடியும் என்று நம்புகிறோம்' என இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பின்னர் பட்லர் கூறியிருந்தார். குழாம்: ஜொஸ் பட்லர் (தலைவர்), ஜொவ்ரா ஆச்சர், கஸ் அட்கின்சன், டொம் பென்டன், ஹரி ப்றூக், ப்றைடன் கார்ஸ், பென் டக்கட், ஜமி ஓவர்ட்டன், ஜமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ராஷித், ஜோ ரூட், சக்கிப் மஹமூத், பில் சோல்ட், மார்க் வூட். டெம்பா பவுமா (தென் ஆபிரிக்கா) 2023 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவை அரை இறுதிக்கு வழிநடத்திய டெம்பா பவுமா, அதனைத் தொடர்ந்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடவுள்ளார். அங்குரார்ப்பண சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் 1998இல் சம்பியனான தென் ஆபிரிக்காவுக்கு 27 வருடங்களின் பின்னர் கிண்ணத்தை மீண்டும் வென்று கொடுக்க டெம்பா பவுமா முயற்சிக்கவுள்ளார். உலக கிரிக்கெட் அரங்கில் தென் ஆபிரிக்காவை புகழ்பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ள பவுமா, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தனது அணியை வழிநடத்தியுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சவால்மிக்கதாக இருந்தாலும், தென் ஆபிரிக்காவால் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதில் பவுமா நம்பிக்கையுடன் உள்ளார். 'உலகக் கிண்ணத்தில் போட்டிகள் அதிகம் என்பதால் திட்டங்களை வகுத்து முன்னேறுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகள் மாத்திரம் இருப்பதால் அப்படி செய்ய முடியாது. எனினும், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் ஒரு படி முன்னே நகர்வோம் என நம்புகிறோம்' என்று தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா புவுமா தெரிவித்தார். குழாம்: டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, மார்க்கோ ஜென்சன், ஹென்றிச் க்ளாசன், கேஷவ் மஹராஜ், ஏய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, கெகிசோ ரபாடா, ரெயான் ரிக்ல்டன், தப்ரெய்ஸ் ஷம்சி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ரசி வென் டேர் டுசென், கோபின் பொஷ் மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை வாரி வழங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம் - சம்பியனுக்கான 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்துள்ள 8 அணிகள்
  12. Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 10:36 AM ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப்பதாக நான் நினைக்கின்றேன். அது சரியான விதத்தில் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப், எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தெரிவிக்கின்றார்கள், நீங்கள் மூன்று வருடமாக இருக்கின்றீர்கள், நீங்கள் இதனை முடித்துவைத்திருக்கவேண்டும், என தெரிவித்துள்ளார். நீங்கள் ஒருபோதும் இதனை ஆரம்பித்திருக்க கூடாது, நீங்கள் உடன்பாட்டிற்கு வந்திருக்கவேண்டும் உக்ரைனிற்காக நான் உடன்பாட்டிற்கு வந்திருப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
  13. நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் - வத்திக்கான் Published By: DIGITAL DESK 3 19 FEB, 2025 | 10:27 AM பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (14) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாப்பரசருக்கு நேற்றையதினம் மேற்கொண்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பரிசோதனைகள், நெஞ்சு பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கைகள் நோய் ஆபத்தானது என்பதை காட்டுக்கின்றது. இருந்தாலும், பாப்பரசர் நல்ல நிலையில் உள்ளாரெனவும் "செபித்தல், ஓய்வெடுத்தல் மற்றும் பிரார்த்தனை செய்வதில்" நாளை கழித்துவருவதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. தனது உடல் நலத்திற்காக செபிக்குமாறு பாப்பரசர் கேட்டுக் கொண்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளார். பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்பு பல நாட்களாக மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். திருப்பலி பூசை வேளையில் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளின் போது தயாரிக்கப்பட்ட உரைகளை வாசிக்க அதிகாரிகளை நியமித்தார். இவ்வாண்டு புது வருடத்திற்கான வார இறுதியில் பல ஆராதனைகளை பாப்பரசர் பிரான்ஸிஸ் வழி நடத்தவிருந்தார். இந்த நிகழ்வுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நடைபெறும். இந்நிலையில், பாப்பரசர் பங்கேற்க இருந்த அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாப்பரசருக்கு அவரது 21 ஆவது வயதில் நுரையீரலில் ஒரு பகுதி அகற்றப்பட்டமையினால் வயது முதிர்ந்த நிலையில் நுரையீரல் தொற்றுக்குள்ளாகியுள்ளார். ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு பாப்பரசராக 12 ஆண்டுகள் சேவையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ் 2023 ஆம் ஆண்டு ஆர்ஜன்டீனாவில் மூச்சுக்குழாய் அழற்சியினால் 3 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் பல தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் - வத்திக்கான்
  14. 19 FEB, 2025 | 11:02 AM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரான அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை இன்று புதன்கிழமை (19) சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக கேட்டறிந்ததோடு, வடக்கின் பொருளாதார நிலை மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன் சந்திப்பு
  15. Published By: DIGITAL DESK 2 18 FEB, 2025 | 05:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெற்றோலிய விற்பனையின் மூலம் 2023 -2024 வரையான காலப்பகுதியில் 265.63 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இக்காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 42.04 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது. எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமர்வு வேளையில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2023.10.22 ஆம் திகதி முதல் 2024.10.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பெற்றோலிய விற்பனையின் மூலம் 265.63 பில்லியன் ரூபாய் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 42.04 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது. இக்காலப்பகுதியில் எரிபொருள் விற்பனையில் ஏதேனும் மோடிகள் இடம்பெற்றுள்ளதாக என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார். இதனைத்தொடர்ந்து எழுந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எரிபொருள் இறக்குமதியின் போது மேலதிகமாக அறவிடப்படும் 50 சதவித வரியை நீக்குவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டார். ஆனால் இந்த 50 சதவீத வரி குறைவடையாது என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே 50 சதவீத வரி குறைப்பை பொய்யாக குறிப்பிட்டீர்களா அல்லது உண்மையில் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்களா என்று கேள்வியெழுப்பினார். இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. மக்களுக்கு இயலுமான வகையில் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது என்றார். மீண்டும் எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எரிபொருள் இறக்குமதியின் போது மோசடி இடம்பெறுவதாகவும், மோசடியின் ஒரு தொகை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு செல்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இன்றும் பழைய விநியோகஸ்த்தர்களிடமிருந்து தான் எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகிறது. அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருசில தலைவர்கள் சம்பளம் பெறுவதில்லை, அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்கள் என்று அரசாங்கம் பெருமைக்கொண்டது. மின்சார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் முன்னாள் பணிப்பாளர்களை காட்டிலும் அதிகளவில் சம்பளம் பெறுகிறார்.அவர் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா சம்பளம் பெறுகிறார் . அமைச்சரவை பேச்சாளர் அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அவர் இவ்விடயத்தை அறியவில்லையா, இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை பட்டியல் எதிர்வரும் காலங்களிலும் வெளியிடப்படும்.அரசியல்வாதிகளின் மின் மற்றும் நீர்கட்டணம் தொடர்பான விபரங்களை வெளியிடுவோம் என்றார். எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் - நளிந்த ஜயதிஸ்ஸ
  16. சாம்பியன்ஸ் டிராபி 2025: பலமான வேகப்பந்துவீச்சை நம்பி களம் இறங்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து பேட்டர்கள் கரை சேர்ப்பார்களா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 52 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஐசிசி சார்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது. கராச்சி நகரில் நேஷனல் பேங்க் ஏரினா மைதானத்தில் இன்று பகலிரவாக நடக்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு, பலமான வேகப்பந்துவீச்சு, குறிப்பிட்ட சில பேட்டர்களின் ஃபார்ம் ஆகியவற்றை நம்பி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி? விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா? 25 ஆண்டுகள் தாகம் 29ஆண்டுகளுக்குப்பின் உலக அணிகள் விளையாடும் கிரிக்கெட் தொடர் என்பதால், அந்நாட்டு ரசிகர்களோடு சேர்ந்து பாகிஸ்தான் அணியினரும் தீவிரமாகத் தயாராகியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி களமிறங்குகிறது. அதேசமயம், 2000ம் ஆண்டுக்குப்பின் நியூசிலாந்து அணியால் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட எந்த போட்டித்தொடரிலும் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக அந்த அணியால் ஒரு பட்டம் கூட வெல்லாமல் கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இருக்கும் இரு அணிகளும், இன்று முதல் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் இரு அணிகளுமே முதல் போட்டியில் மோதுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலுவான வேகப்பந்துவீச்சை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணியும், 8-வது வீரர் வரை பேட்டரை வைத்திருக்கும் நியூசிலாந்து அணியும் களத்தில் மோதும்போது அனல் பறக்கும். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? இந்தி எதிர்ப்பின் நெடிய வரலாறு18 பிப்ரவரி 2025 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி?17 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முகமது ரிஸ்வான் இதுவரை நடந்தவை பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் இதுவரை 118 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 61 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 53 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியைப் பொருத்தவரை பாகிஸ்தானுடன் 3 முறை மோதியுள்ள நியூசிலாந்து அணி அனைத்திலும் வென்றுள்ளது. இன்று போட்டி நடக்கும் கராச்சி மைதானத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தான் அணியும் 9 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 4 வெற்றிகளையும், நியூசிலாந்து அணி 5 வெற்றிகளையும் பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்து 31 முறையும், சேஸிங் செய்து 30 முறையும் பாகிஸ்தான் வென்றுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்து நியூசிலாந்து அணி 26 முறையும், சேஸிங் செய்து 27 முறையும் வென்றுள்ளது. மிரட்டும் வேகப்பந்துவீச்சு இந்த சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்தான். ஷாகின் ஷா அப்ரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன் ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்களும் நிச்சயமாக நியூசிலாந்து அணிக்கு குடைச்சல் கொடுப்பார்கள். குறிப்பாக தொடக்கத்தில் ஷாகீன் அப்ரிதியும், நடுப்பகுதியில் நசீம் ஷா, ஹாரிஸ் ராப் இருவரின் பந்துவீச்சும் சவாலாக இருக்கும். குறிப்பாக அப்ரிதி 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியில் முன்னணி பந்தவீச்சாளராகத் திகழ்கிறார். 2023 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்குப்பின் பாகிஸ்தான் அணி உயிர்தெழுந்து விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் நியூசிலாந்திடம் தோற்றிருந்தாலும், பாகி்ஸ்தானின் பேட்டர்கள் ஃபார்முக்கு வருவதற்கு அந்தத் தொடர் உதவியாக இருந்தது. 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியில் விளையாடியவர்களில் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான், பகீம் அஸ்ரம் ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் புதியவர்கள். முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். சுழற்பந்துவீச்சில் சக்லைன் முஸ்தாக், முஸ்தாக் அகமது போன்ற பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருந்தாலும், குஷ்தில் ஷா, சல்மான் அகா, கம்ரான் குலாம் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் மிகுந்த நம்பிக்கையை அளித்தது. பேட்டிங்கைப் பொருத்தவரை பாபர் ஆஸம் கடந்த 21 இன்னிங்ஸ்களாக ஒரு சதம்கூட அடிக்கவில்லை. ஆனால், முத்தரப்புத் தொடரில் சிறப்பாக ஆடி இழந்த ஃபார்மை பாபர் ஆஸம் மீட்டுள்ளார். ஃபக்கர் ஜமான், முகது ரிஸ்வான் மட்டுமே ஓரளவுக்கு நம்பிக்கைக்குரிய , நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். நடுவரிசையில் சவுத் சகீல், சல்மான் சஹாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க வேண்டும். உள்நாட்டில் போட்டி நடப்பது, ரசிகர்களின் ஆதரவு, கராச்சி மைதானத்தில் அதிகமாக விளையாடிய அனுபவம் ஆகியவை பாகிஸ்தானுக்கு நிச்சயம் கைகொடுக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் அணியின் பலமே இந்த சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்தான். வலுவான பேட்டிங் வரிசை நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் ஒர் ஒற்றுமை இருக்கிறது. 2000ம் ஆண்டில் நியூசிலாந்து அணியும், 2017ம் ஆண்டில் பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திதான் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின. நியூசிலாந்து அணிக்கு இந்தத் தொடர் தொடங்கும்போதே வேகப்பந்துவீச்சாளர்கள் லாக்கி பெர்குஷன், பென் சீர்ஸ் இருவரும் காயத்தால் விலகியது பின்னடைவுதான். பெர்குஷனுக்குப் பதிலாக ஜேமிஸன் சேர்க்கப்பட்டாலும் கராச்சிக்கு அவர் இன்னும் வராததால் முதல் போட்டியில் ஜேமிஸன் பங்கேற்கமாட்டார். முத்தரப்புத் தொடரில் கேட்ச் பிடிக்கும்போது தலையில் பந்துபட்டு காயமடைந்து, தேறிவரும் ரச்சின் ரவீந்திராவும் முதல் ஆட்டத்தில் விளையாடாதது நியூசிலாந்துக்கு பின்னடைவுதான். இருப்பினும் சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி நியூசிலாந்து வலுவாக இருப்பதால், பாகிஸ்தான் எச்சரிக்கையுடனே அணுக வேண்டியதிருக்கும். இதனால் டேவன் கான்வேயுடன் சேர்ந்து வில் யங் ஆட்டத்தைத் தொடங்குவார். மற்றவகையில் நியூசிலாந்து அணி வலுவான பேட்டிங் வரிசையை வைத்துள்ளது. கேன் வில்லியம்ஸன், டேரல் மிட்ஷெல், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம், பிரேஸ்வெல், சான்ட்னர் வரை பேட்டர்கள் உள்ளதால், கடைசிவரை போராடக்கூடிய பேட்டிங் வரிசை இருப்பது பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியாக மாறும். முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வில்லியம்ஸன் சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். சுழற்பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர், பிரேஸ்வெல் ஆகியர் மட்டுமே இருக்கிறார்கள். சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர்கள் ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் வழங்கிய நிலையில் நியூசிலாந்தின் சான்ட்னர், பிரேஸ்வெல் 4 ரன்களுக்குள்தான் விட்டுக்கொடுத்து பந்துவீசினர். ஆதலால், இருவரின் பந்துவீச்சும் நடுப்பகுதி ஓவர்களில் பாகிஸ்தானுக்கு சவாலாக இருக்கும். பகுதிநேரப் பந்துவீச்சில் டேரல் மிட்ஷெல், பிலிப்ஸ் இருப்பது பலம். பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது நியூசிலாந்து அணியின் டிரன்ட் போல்ட், சவுத்தி, பெர்குஷன் இல்லாதது பலவீனமாக இருந்தாலும், மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, வில் ரூர்கே ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துதான் கரைகடக்க வேண்டும். மற்றவகையில் வலுவானபேட்டர்களை நம்பிதான் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி. மராட்டியப் பேரரசில் கிளர்ச்சி மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிவாஜி மகன் சம்பாஜியின் சோகக் கதை15 பிப்ரவரி 2025 தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வலுவானபேட்டர்களை நம்பி களமிறங்குகிறது நியூசிலாந்து அணி ஆடுகளம் எப்படி கராச்சி ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, பந்து பேட்டரை நோக்கி நன்கு எழும்பி வரும் என்பதால் அடித்து ஆடலாம். சமீபத்தில் முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 352 ரன்கள் குவித்தது.. இந்த மைதானத்தில் ஓவருக்கு சராசரியாக 5.90 ரன்கள்வரை பேட்டரால் சேர்க்க முடியும், ஒரு அணி சராசரியாக 230 முதல் 250 ரன்கள் வரை அடிக்க முடியும் அதை எளிதாகவும் சேஸிங் செய்யலாம் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி 300 ரன்களுக்கு மேல் அடிப்பது பாதுகாப்பானது. அணிகள் விவரம் பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான்(கேப்டன்), பாபர் ஆஸம், ஃபக்கர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் சகீல், தயாப் தகிர், பஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் காந், அப்ரார் அகமது, ஹரிஸ் ராப், முகமது ஹஸ்னன், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி நியூசிலாந்து மிட்ஷெல் சான்ட்னர்(கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லாக்கி பெர்குஷன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரல் மிட்ஷெல், வில் ரூர்கோ, கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்ஸன், வில் யங், ஜேக்கப் டபி - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு சாம்பியன்ஸ் டிராபி 2025: பலமான வேகப்பந்துவீச்சை நம்பி களம் இறங்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து பேட்டர்கள் கரை சேர்ப்பார்களா?
  17. 18 FEB, 2025 | 08:12 PM (எம்.நியூட்டன்) ஒரு இனத்தின் தேசிய அடையாளங்களில் உணவுப் பண்பாடும் ஒன்று. தேசியத்தைக் கட்டமைப்பதில் பண்பாட்டின் ஏனைய கூறுகளைப்போன்று உணவுப் பண்பாடும் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது. ஆனால், மதப் பண்பாட்டில் பௌத்தத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற நாம், உணவுப் பண்பாட்டில் நிகழும் ஆக்கிரமிப்புகள் குறித்துக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அண்மைக்காலமாக வெளிநாட்டு உணவகங்கள் பல இங்கு கிளைகளைத் திறந்துகொண்டிருக்கின்றன. எமது உணவுப் பண்பாட்டில் திணிக்கப்படும் மாற்றங்கள் பற்றி நாம் விழிப்படையாவிட்டால் வெளிநாட்டு உணவகங்கள் எமது பாரம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் எமது ஆரோக்கியமும் மேலும் வீழ்ச்சியடையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சிறுதானியப் பொங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) ஊரெழு வளர்பிறை சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றுகையில், நெல் அரிசிச் சோற்றின் வருகையுடனேயே எமது உணவுத் தட்டுகளில் இருந்து சாமை, வரகு, கம்பு, குரக்கன், குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் ஓரங்கட்டப்பட்டன. நெல் அரிசியுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அதிக கலோரிப் பெறுமானம் கொண்டவை அதிக நார்ச்சத்து உடையவை. அதிக அளவில் மாப்பொருளையும் புரதத்தையும் விற்றமின்களையும் கனியுப்புகளையும் கொண்டவை. மேலதிகமாக, புற்றுநோய் எதிர்ப்புச் சேர்வைகளையும் கொண்டிருக்கின்றன. இவற்றால்தான் எமது முன்னோர்கள் தேக ஆரோக்கியத்துடன் நூற்றாண்டைக் கடந்தும் வாழ்ந்தார்கள். சூழலியல் நோக்கிலும் நெல்லைவிட சிறுதானியங்களே முதன்மை பெறுகின்றன. நெல் பயிரிடுவதற்கு ஈரமான தரையும் அதிகளவில் நீர்ப்பாசனமும் தேவைப்படுகிறது. ஆனால், சிறுதானியங்கள் வறண்ட சூழலிலும் குறைந்த நீர்த்தேவையுடன் வளரக்கூடியவை. நெல் நோய்களினதும் பீடைகளினதும் தாக்கத்துக்கு அதிகளவில் ஆளாகும்போது சிறுதானியங்கள் இவற்றுக்கு எதிராகத் தாக்குப் பிடிக்கின்றன. காலநிலை மாற்றம் எம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சிறுதானியங்களை நோக்கி நாம் திரும்புவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. எமது இளைய தலைமுறை பாரம்பரிய உணவுகளை நாகரிகமற்றதொன்றாகக் கருதும் மனப்பாங்கைக் கொண்டிருக்கின்றது. துரித உணவகங்களையே அதிகம் நாடுகிறார்கள். கொத்து ரொட்டியையும், பிஸ்ஸாவையும், ப்ரைட் றைஸ்சையுமே விரும்புகிறார்கள். மென்பான நிறுவனங்களின் விளம்பரங்களில் மயங்கி இந்த உணவுகளோடு சேர்த்து ஆபத்தான மென்பானங்களையும் அருந்தி வருகிறார்கள். தேசியம் என்பது வெறும் அரசியல் சொல்லாகியுள்ள இன்றைய சூழ்நிலையில் உணவுப் பண்பாட்டுத் தேசியம் பற்றிய புரிதலை எமது மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/207054
  18. கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் - உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி? பட மூலாதாரம்,JOHN NELSON கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் ஸ்மித், நதீன் யூசூஃப், ஜார்ஜ் வைட் பதவி, பிபிசி நியூஸ் 18 பிப்ரவரி 2025, 08:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் உயிருடன் இருப்பதாக விமான நிலையத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார். "பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பித்தனர்," என்று கிரேட்டர் டொராண்டோ விமான நிலையத்தின் தலைமை அதிகாரி டேபோரா பிலிண்ட் தெரிவித்தார். அவசர கால சேவைகளின்படி, ஒரு குழந்தையும் இரண்டு பெரியவர்களும் இந்த விபத்தில் தீவிரமான காயம் அடைந்துள்ளனர். பனிப்போர்வை போர்த்திய காடு - பிரமிக்க வைக்கும் சீன நகரம் அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமான ஆம்புலன்ஸ், குழந்தை நோயாளியுடன் சென்றபோது நடந்த விபத்து விமானத்தில் எந்த 'சீட்' அதிக பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியுமா? ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி? சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட காட்சிப்பதிவுகளில் விமானம் தலை கீழாக, அதாவது விமானத்தின் மேற்கூரை பனி சூழ்ந்த தரையில் விழுந்துள்ளது. அதன் ஒரு இறக்கை காணாமலும் காட்சியளித்தது. விபத்துக்குள்ளான விமானம், மினியாபோலிசிலிருந்து கிளம்பிய டெல்டா ஏர் லைன்ஸின் விமானம் என்று டொராண்டோ பியர்சன் விமான நிலையம் தெரிவித்தது. இதில் 4 விமான பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் உட்பட மொத்தம் 80 பேர் பயணித்துள்ளனர். மொத்தமாக பதினெட்டு பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வான் வழி ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமான ஆரஞ், மூன்று வான் வழி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களையும், இரண்டு தரை வழி ஆம்புலன்ஸ்களையும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தீவிர காயங்கள் ஏற்பட்டவர்களில் ஒரு குழந்தை, 60களில் உள்ள ஒரு ஆண் மற்றும் தன்னுடைய 40களில் உள்ள பெண் ஒருவர் உள்ளதாக அது தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?17 பிப்ரவரி 2025 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி?17 பிப்ரவரி 2025 விபத்துக்குள்ளான விமானம் டெல்டா ஏர் லைன்ஸ் 4819, அதன் துணை நிறுவனமான எண்டேவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாக அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள் கிழமை மதியம் 2.15 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக டெல்டா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பயணித்தவர்களில் 22 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் சர்வதேச பயணிகள் என்றும் பிலிண்ட் தெரிவித்தார். விபத்து ஏற்பட்ட உடனே விமான நிலையம் மூடப்பட்டிருந்தாலும், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கிவிட்டதாக, விமான நிலையம் தெரிவித்தது. கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, விபத்து குறித்து அனைத்து தரவுகளையும் சேகரிக்க சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் இன்னும் சில நாட்களுக்கு விசாரணைக்காக மூடி இருக்கும் என்றும் பயணிகள் விமானங்கள் சில தினங்களுக்கு தாமதத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பயணிகள் கூறுவது என்ன? ''எங்கள் விமானம் விபத்துக்குள்ளானது. அது தலைகீழாகக் கவிழ்ந்தது'' என்கிறார் அதில் பயணித்த ஜான் நெல்சன். '' பெரும்பாலோனோர் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் விமானத்திலிருந்து இறக்குகிறோம்'' என விபத்து நடந்த உடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ''தரையிறங்குவதற்கு முன்பு அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை. விமானத்திற்குள் அமர்ந்திருந்தபோது நாங்கள் ஒரு பக்கமாக சாய்ந்தோம், அதன் பிறகு நாங்கள் தலை கீழாக கவிழ்ந்தோம்.", என்று அவர் சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் கூறினார். நெல்சனைப் போலவே, ஆஷ்லி ஜூக் என்ற பயணியும் இப்படிப்பட்ட ஒரு விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்ததை அவரால் நம்ப முடியாமல், "கடவுளே, நான் ஒரு விமான விபத்தில் சிக்கி உயிர்பிழைத்தேன்!" என்று சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். பயணிகள் விமானத்தில் கூரையில் இருந்து தலைகீழாக தொங்கியபடி இருந்தனர். ''நாங்கள் வௌவால்கள் போல விமானத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தோம்.'' என்கிறார் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசிய பீட்டர் கோவ்கோவ். "தரையிறங்கிய பின்பு உங்கள் நண்பர்களையும், நெருங்கியவர்களையும் சந்திக்கலாம் என்று ஒரு நிமிடம் ஆவலாக காத்திருப்பீர்கள், மறு நிமிடம் நீங்கள் தலை கீழாக தொங்கியபடி இருப்பீர்கள்", என்று மற்றொரு பயணி பீட் கார்ல்சன் சிபிசி செய்திகளிடம் கூறினார். '' சீட் பெல்டை அவிழ்த்து என்னால் இறங்க முடிந்தது. சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது", என்கிறார் நெல்சன். பயணிகள் விரைவாக ஒரு குழுவாகச் செயல்பட்டதாக விமானத்தில் பயணித்த கார்ல்சன் கூறினார். "நான் பார்த்தது என்னவென்றால், அந்த விமானத்திலிருந்த அனைவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் எப்படி உதவுவது, ஒருவருக்கொருவர் எப்படி ஆறுதல் இருப்பது என நினைத்துச் செயல்பட்டனர்'' என்கிறார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், கவிழ்ந்த விமானத்திலிருந்து மக்கள் வெளியே வருவதையும், தீயணைப்பு வீரர்கள் அதன் மீது நுரை (foam) தெளிப்பதையும் காட்டுகிறது. விமானத்தின் கதவுகளிலிருந்து உள்ளே இருந்தவர்களை விமான நிலைய ஊழியர்கள் வெளியே வர உதவி செய்வதையும் காண முடிந்தது. வேறொரு விமானத்தில் பயணிக்க இருந்த டயான் பெர்ரி தனது உடைமைகளை செக்-இன் செய்யும் வரிசையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அப்போதே இந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்ததாக அவர் தெரிவித்தார். "நான் அந்த விமான நிலையத்தில்தான் இருந்தேன், ஆனால் வெளியே இப்படி ஒரு விபத்து நடந்ததாக எனக்கு தெரியவில்லை என்பது ஒரு முரணாக இருக்கிறது", என்று பிபிசியிடம் அவர் கூறினார். இந்த விமானம் எப்படி விபத்துக்கு உள்ளானது என்பதை இன்னும் நெல்சன் யோசித்துகொண்டிருக்கிறார். "அந்த சம்பவத்தை பற்றி நினைத்தாலே மன அழுத்தம், பதற்றம், நடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. நாங்கள் இன்னும் இங்கே உயிருடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது", என்று அவர் கூறினார். பயணி கார்ல்சனும் இவ்வாறே உணர்வதாக கூறினார். "தற்போது உயிருடன் இருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த சம்பவத்தை பற்றி விவரிக்க வார்த்தைகள் வரவில்லை", என்று அவர் கூறினார். தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 மராட்டியப் பேரரசில் கிளர்ச்சி மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிவாஜி மகன் சம்பாஜியின் சோகக் கதை15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES முரணான தகவல்கள் டொரோண்டோ பியர்சன் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை தலைமை அதிகாரி டாட் அய்ட்கென், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், "ஓடுபாதை மிகவும் காய்ந்திருந்தது. விமான ஓட்டத்தின் திசைக்குப் பக்கவாட்டாக காற்று வீசவில்லை," என்று தெரிவித்திருந்தார். ஆனால் முதலில் மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும், பக்கவாட்டாக காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளது. டொராண்டோ பியர்சன் விமான நிலையம் கடந்த சில தினங்களாக வானிலை காரணமாக விமான தாமதங்களை சந்தித்து வருகிறது. பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ், விமானம் தரையிறங்கியபோது பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டதாக தெரிவித்தது. ஏற்கனவே வாஷிங்டன் டிசியில் பயணிகள் விமானமும் ராணுவ விமானமும் மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் இறந்தநிலையில் கடந்த ஒரு மாதத்தில் வான் வழி விபத்துகள் வட அமெரிக்காவில் நான்காக உயர்ந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் - உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி?
  19. 18 FEB, 2025 | 05:58 PM உயிர் வாழச் செய்ய முடியாமற்போன நோயாளியின் உறுப்புகளை உயிருக்காக போராடும் நோயாளிக்கு தானம் செய்வது மிகவும் மனிதாபிமானம் மிக்க செயலாகும் என தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நமது பண்பாடு, நமது மதங்கள் மூலம் கிடைத்த இந்த தானம் செய்யும் பண்பு மிக உயர்ந்த நற்செயலாகும். அந்த பரோபகார சிந்தனை நமது நாட்டின் கலாசாரத்திலும் “இலங்கையர்” என்ற அடையாளத்திலும் வலுவானதாக இருப்பதை நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார். உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று (18) பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் வைத்தியசாலையில் நடைபெற்றது. உடல் உறுப்பு தான தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினம் இந்த ஆண்டு 7ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுப் பலகைக்கு பிரதமர் தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிக்கையில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உடல் உறுப்பு தான தேசிய தினத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்காக வைத்தியசாலைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்புகளை தானம் செய்து நம்பிக்கையின்றி வாழ்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு ஆறுதல். அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உயிர் வாழச் செய்ய முடியாமற்போன நோயாளியின் உறுப்புகளை உயிருக்காக போராடும் நோயாளிக்கு தானம் செய்வது மிகவும் மனிதாபிமானம் மிக்க செயலாகும். மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு மற்றுமொருவரை உயிர் வாழச்செய்ய முடியும். உயிர் வாழ கடினமாக இருக்கும் நோயாளியின் உறுப்புகளை தானம் செய்ததற்காக அந்த குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் கருணையான முடிவுகளை எடுக்கும் பலத்தினைப் பெற்ற அந்தக் குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் தன்னலமற்ற செயல்களால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. அதை எண்ணி நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கலாம். அதன் மூலம் உங்களைப் பிரிந்தவர்கள் நீண்ட காலம் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற உணர்வை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நமது பண்பாட்டின் மூலம், நமது மதங்கள் மூலம் கிடைத்த இந்த தானம் செய்யும் பண்பு மிக உயர்ந்த நற்செயலாகும். அந்த பரோபகார சிந்தனை நமது நாட்டின் கலாசாரத்திலும் “இலங்கையர்” என்ற அடையாளத்திலும் வலுவானதாக இருப்பதை நான் பார்க்கின்றேன். இதுபோன்ற சமயங்களில் மட்டுமல்ல, ஓர் அனர்த்தம் ஏற்படும்போதும், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போதும், நாம் வேற்றுமைகளை எல்லாம் மறந்து, இந்த பரோபகார சிந்தை வெளிப்படுகிறது. இது பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் பாராட்டப்பட வேண்டிய ஒரு பண்பு. அதுவே “இலங்கையர்” என்ற வகையில் எமக்கு கிடைத்துள்ள பலமாகும். கடந்த சில வருடங்களில் உலகிலேயே அதிகளவு கண் தானம் செய்பவர்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. மேலும், நம் நாட்டில் பலர் உறுப்புகள் மற்றும் ஏனைய இழையங்களை தானம் செய்கிறார்கள். இந்த செயல்முறை மேம்படுத்தப்பட வேண்டும். தேவையான சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வணிகச் செயலாகச் செய்யக்கூடாது. இதனை தேசிய மட்டத்தில் பலப்படுத்தும் வகையில் எமது அமைச்சு தலையிட்டு செயற்படும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனவே, சரியான முறைமையொன்றை அறிமுகப்படுத்தல் மற்றும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய விடயங்களுக்கான பின்னணியை தயார்படுத்துவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதற்காக நடவடிக்கை எடுத்த அனைத்து மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை ஊழியர்கள், குறிப்பாக உடல் உறுப்பு தானம் செய்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் இந்த தன்னலமற்ற செயலுக்கு உறுதுணையாக இருந்து இன்னொருவருக்கு வாழ வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மேலும், உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் அன்பளிப்புகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின் கலாசாரத்திலும் “இலங்கையர்” என்ற அடையாளத்திலும் வலுப்பெற்றுள்ளது - பிரதமர்
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் நமது சூரிய மண்டலம் உள்ள பால் வீதி போன்ற ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் சிறுசிறு குழுக்களாக தொகுக்கப்பட்டதும், அத்தகைய சிறு குழுக்களை ஒட்டுமொத்தமாக உள்ளடக்கியதுமான மிகப்பெரிய பொருள் (Superstructure) குய்பு. குய்பு 1,300 கோடி ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது மற்றும் 200 குவாட்ரில்லியன் (200 பிளஸ் 24 பூஜ்ஜியங்கள்) நட்சத்திரங்களின் மொத்த நிறையை உடையது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய பொருள் குய்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கயிறுகளில் முடிச்சுகளைப் பயன்படுத்தி எண்களைக் கணக்கிடுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படும் இன்கன் முறையைப் (பழங்கால முறையைப்) போன்றுள்ள இந்த மிகப்பெரிய விண்மீன் திரளுக்கு குய்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல் குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? டீப்சீக்: உயர் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுக்கு சீனா சவால் விட அடிகோலிய பத்தாண்டு திட்டம் பற்றி தெரியுமா? பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் என்ன ஆகும்? இன்கன் முறையில் உள்ள முடிச்சுகளைப் போலவே, குய்பு என்பதும் ஒரு சிக்கலான பொருளாக உள்ளது. இது ஒரு நீண்ட இழை மற்றும் பல பக்கவாட்டு இழைகளால் ஆனது. இதுவரை கண்டறியப்பட்ட நட்சத்திர மண்டலங்களின் தொகுப்புகளிலேயே மிகப் பெரியதாக விளங்கும் குய்பு, அளவில் மற்ற நட்சத்திர மண்டல தொகுப்புகளை (சூப்பர் கிளஸ்டர்களை) விஞ்சியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு arXiv இணையதளத்தில் தொடக்க நிலை ஆராய்ச்சி ஒன்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ( இந்த ஆய்வு, வானியல் துறையில் உள்ள மற்ற நிபுணர்களால் முறையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படவில்லை. ஆயினும், இந்த ஆய்வு வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்) 18 பேர் பலி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? அந்த '15 நிமிடங்களில்' என்ன நடந்தது?17 பிப்ரவரி 2025 'மத உணர்வை விட பொறுமையின்மை, கபடம், ஒழுங்கின்மையைப் பார்த்தேன்', கும்பமேளா குறித்த மகாத்மா காந்தியின் பதிவுகள் சொல்வது என்ன?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தரவுகளை வைத்து கணக்கீடுகளைச் செய்ய இன்காக்களால்( பண்டை நாகரித்தைச் சேர்ந்தவர்கள்) பயன்படுத்தப்படும் குய்புவின் விளக்கம். ஒன்றிணைக்கப்பட்ட பொருள் பிரபஞ்சம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பாக அமைந்துள்ளதைப் போன்று தோற்றமளிக்கிறது . பால் வீதி விண்மீன் மண்டலத்தின் ஒரு பகுதியாக உள்ள சூரிய மண்டலத்தில் கிரகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த விண்மீன் மண்டலங்கள் ஒன்றிணைந்து குழுக்களை (கிளஸ்டர்களை) உருவாக்குகின்றன. அந்த குழுக்கள் ஒன்றிணைந்து, மிகப்பெரிய குழுக்களை (சூப்பர் கிளஸ்டர்களை) உருவாக்குகின்றன. அந்த சூப்பர் கிளஸ்டர்கள் ஒன்றிணைந்து, அதைவிட பெரிய சூப்பர் கிளஸ்டர்களை உருவாக்குகின்றன. வானியலாளர்கள் இந்த செயல்முறை தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக நம்புகிறார்கள். ஆனால், தற்போது நம்மிடம் உள்ள தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் மூலம் அவற்றை முழுமையாகக் ஆராய இயலவில்லை. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இவை, விண்மீன் மண்டலங்களையும், அவற்றின் குழுக்களையும் (சூப்பர் கிளஸ்டர்களின்) கொண்ட மிகப் பெரிய அமைப்புகளாகும். அளவில் மிகப் பெரிய இந்த குழுக்கள், நமது பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றிய நமது புரிதலுக்கு சவால் விடுகின்றன. வேற்று கிரக இயற்பியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஹான்ஸ் போஹ்ரிங்கர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, பூமியிலிருந்து சுமார் 425 மில்லியன் முதல் 815 மில்லியன் ஒளி ஆண்டுகள் வரை ஐந்து பெரிய அமைப்புகளை அடையாளம் கண்டுள்ளது. ஒரு காலத்தில், அருகிலுள்ள மிகப்பெரிய குழுவாக (சூப்பர் கிளஸ்டராக) கருதப்பட்ட ஷாப்லி சூப்பர் கிளஸ்டர்,செர்பென்ஸ்-கொரோனா பொரியாலிஸ் சூப்பர் கிளஸ்டர், ஹெர்குலஸ் சூப்பர் கிளஸ்டர், ஸ்கல்ப்டர்-பெகாசஸ் சூப்பர் கிளஸ்டர் மற்றும் இறுதியாக, குய்பு ஆகிய ஐந்து அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. "குய்பு என்று நாங்கள் பெயரிட்ட இந்த அமைப்பு, பிரபஞ்சத்தில் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது" என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். "இந்த மிகப்பெரிய அமைப்பு, சுமார் 45 சதவீத விண்மீன் குழுக்களையும், 30 சதவீத விண்மீன் மண்டலங்களையும், 25 சதவீத பொருளையும் (matter), பொருளின் தொகுதி அளவில் (volume fraction) 13 சதவீதத்தையும் கொண்டு, இதுவரை அறியப்பட்டதிலேயே மிகப்பெரிய அமைப்பை உருவாக்குகிறது" என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். கயிறுகளில் உள்ள முடிச்சுகளில் இருந்து உருவாக்கப்படும் குய்புகள், நிறம், வரிசை மற்றும் எண் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்களைக் கொண்டிருக்கும். "சிறிய பக்கவாட்டு இழைகளைக் கொண்ட ஒரு நீண்ட இழை (நூல் ) போன்ற தோற்றம், அந்த பெரிய கட்டமைப்புக்கு குய்பு என்ற பெயரிட வழிவகுத்தது" என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். உலகின் ஏழ்மையான பகுதி எட்டே ஆண்டுகளில் வானுயர்ந்த கட்டடங்களுடன் பளபளப்பான நகரானது எப்படி? பிபிசி கள ஆய்வு17 பிப்ரவரி 2025 கர்நாடகா கேரட்டை 'பாலிஷ்' செய்து ஊட்டி கேரட் என விற்பதாக புகார் - நீலகிரி விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?17 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ARXIV/HANS BÖHRINGER ET AL அவர்களின் ஆராய்ச்சியில், போரிங்கரும் அவரது குழுவினரும் குய்பு மற்றும் அதனைப் போன்ற நான்கு பெரிய அமைப்புகளை 130 முதல் 250 மெகாபார்செக்குகளுக்குள் (மெகாபார்செக் - 1 மெகாபார்செக் = 3.26 மில்லியன் ஒளியாண்டுகள்) கண்டுபிடித்தனர். அவற்றை அடையாளம் காண, விஞ்ஞானிகள் எக்ஸ்-ரே கதிர்வீச்சு மற்றும் விண்மீன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சோதனைகளைப் பயன்படுத்தினர். கிளாசிக்ஸ் (Cosmic Large-Scale Structure in X-ray) கிளஸ்டர் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி இந்த பெரிய அமைப்புகளை பகுப்பாய்வு செய்தனர். எக்ஸ்-கதிர் விண்மீன் குழுக்கள், விண்வெளியில் பல்லாயிரம் நட்சத்திரங்களைக் கொண்ட பெரிய குழுக்கள் ஆகும். இக்குழுக்களில் நட்சத்திரங்களுக்கு இடையே மிகுந்த வெப்பம் கொண்ட ஒரு வாயு உள்ளது. இன்ட்ராகிளஸ்டர் வாயு என்று அழைக்கப்படும் இந்த வாயு எக்ஸ்-கதிர்களை வெளியிடுகிறது. இந்த எக்ஸ்-கதிர்கள், பொருள் அதிகமாக திரண்டுள்ள இடங்களை காட்டுகின்றன. அதேசமயம் அடிப்படையான காஸ்மிக் வலையை (cosmic web) வெளிப்படுத்துகின்றன. அதனால், இந்த கதிர்வீச்சுகள் மிகப்பெரிய கட்டமைப்புகளை அடையாளம் காண்பதற்கான சமிக்ஞைகள் போன்றவை. பிரபஞ்சத்தில் உள்ள இதர மிகப்பெரிய கட்டமைப்புகள் குய்பு மிகப் பெரிதாகவும் இப்போது பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பாகவும் கருதப்பட்டாலும், அதற்கு கடும் போட்டி தரும் விதத்தில் பல பெரிய கட்டமைப்புகள் உள்ளன. உதாரணமாக, லானியாக்கியா (Laniakea) சூப்பர் கிளஸ்டர் என்பது 520 மில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட மற்றொரு அமைப்பாகும். 2003இல் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்லோன் கிரேட் வால் (SGW) அமைப்பும் உள்ளது. இது 1 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு மேல் நீளமுள்ளது என்று நம்பப்படுகிறது. ஹெர்குலிஸின் கொரோனா-போரியல் கிரேட் வால் எனும் அமைப்பு தான் இதுவரை பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய அமைப்பாகும். புதிரான பொருட்களை உள்ளடக்கிய 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் நீளம் கொண்ட இது, இதுவரை அறியப்பட்ட பிரபஞ்சத்தில் 11 சதவீதத்தை கொண்டிருக்கிறது. தற்போது குய்பு கண்டறியப்பட்ட பிறகு, இந்த அமைப்புகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் குய்பு தனது முதலிடத்தை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளாது என்று பேராசிரியர் போரிங்கர் நம்புகிறார். "நாம் இன்னும் பெரிய விண்வெளி பரப்புகளை ஆராய்ந்தால், அதிகமான மிகப்பெரிய கட்டமைப்புகள் இருக்கலாம் ( அதற்கான சாத்தியம் அதிகம்) என்று எர்த்ஸ்கையிடம் பேராசிரியர் போரிங்கர் தெரிவித்தார். 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?13 பிப்ரவரி 2025 துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன?13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லானியாக்கியா (Laniakea) சூப்பர் கிளஸ்டர் என்பது 520 மில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட மற்றொரு அமைப்பாகும். உடைந்து விழக் கூடிய பொருட்கள் ஆனால் இந்த "சூப்பர்ஜெயண்ட்களின்" (மிகப்பெரிய அமைப்புகள்) கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குய்புவின் அளவுள்ள ஒரு அமைப்பு அதன் சுற்றுப்புறங்களில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். அந்த தாக்கத்தைப் புரிந்துகொள்வது பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படை ஆகும். குய்பு மற்றும் அதனைப் போன்ற பெரிய கட்டமைப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வது, விண்மீன் மண்டலங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், பிரபஞ்சத்தை கண்காணிக்கவும் அளவிடவும் பயன்படுத்தப்படும் மாதிரிகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த பெரிய அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ள அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படும். காலப்போக்கில் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது, குய்பு மற்றும் அதனைப் போன்ற பிற அமைப்புகள் இறுதிவரை நீடிக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். "பிரபஞ்சத்தின் எதிர்காலப் பரிணாம வளர்ச்சியில், இந்த பெரிய கட்டமைப்புகள், இறுதியில் சிறுசிறு துண்டுகளாக உடைந்துவிடும். அதனால் அவை நிரந்தரமானவை அல்ல" என்று போரிங்கரும் அவரது குழுவினரும் விளக்குகின்றனர். ஆனால் "தற்போது, தனித்துவமான பௌதிக பண்புகள் மற்றும் விண்வெளிச் சூழல்களை கொண்ட சிறப்புப் பொருட்களான அவை, தனி கவனம் பெற தகுதியானவை" என்று அவர்கள் கூறுகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?
  21. 18 FEB, 2025 | 05:27 PM மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக நாளை (19) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் விருப்பமின்றி இந்த கள ஆய்வு இடம்பெற்றால் பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆபத்தான நிலைமைகள் தோன்றலாம். இதன் காரணமாக சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் உண்டாகும் என ரவிகரன் மேலும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், மன்னார் தீவுப் பகுதியில் இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். மன்னார் தீவுப் பகுதி என்பது மிகவும் குறுகிய தாழ்வான நிலப்பகுதியாகும். இது, கடல் நீர் மட்டத்திலிருந்து தாழ்வான நிலப்பகுதி என்பதால் மழைக்காலத்தில் நீர் வழிந்தோட முடியாமல் பொதுமக்கள் தொடர்ந்தும் இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர். இயற்கை அனர்த்தத்தை தாங்குதிறன் கொண்டதாக தீவுப்பகுதியின் தரைத்தோற்ற அமைவிடம் இல்லை. அதனால்தான் மன்னார் தீவில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்டடங்களை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்குவதில்லை. ஆகவே, இப்பகுதியில் கனியமணல் அகழ்வதென்பது மிகவும் பாரதூரமான விளைவுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையின் கீழ் 23 அரச திணைக்களங்கள் மன்னார் தீவுப் பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கை வழங்குவதற்குரிய ஏற்பாட்டுக்காக முன்னர் இரண்டு முறை சென்றபோதும் மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாக கள ஆய்வு மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் (17) மன்னார் நீதிமன்றத்தில் போராட்டத்துக்கு எதிராக தடை உத்தரவு பெற்றுக்கொண்டு, நாளை (19) அப்பகுதியில் கள ஆய்வினை மேற்கொள்ளவிருக்கின்றனர். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்த மக்களுடைய விருப்பம் இல்லாமல் தனியார் காணிக்குள் அத்துமீறி உட்புகுந்து இந்த ஆய்வை மேற்கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு கனியமணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதென்பது அந்த மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களுடைய விருப்பமின்றி செயற்படுத்த முடியாது. பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் ஆபத்தான நிலைமைகள் தோன்றலாம். சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. ஆகவே, நாளைய கள ஆய்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையும் ஏனைய திணைக்களங்களும் உடனடியாக நிறுத்தவேண்டும் என இந்த உயரிய சபையின் ஊடாக கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும்
  22. AB17 வீதி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இருந்து பொன்னாலைச் சந்தி வரை புனரமைக்கப்படாதுள்ளது. காரைநகரில் வலந்தலைச்சந்தியில் இருந்து வீதி மோசமாக உள்ளது.
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரேச்சல் லூக்கர், லில்லி ஜமாலி பதவி, 17 பிப்ரவரி 2025 ஈலோன் மஸ்கின் பிள்ளைகள் சென்றுள்ள இடங்களை பலரும் பார்க்கவே போவதில்லை. வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு முதல் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவும் கட்டுப்பாட்டு அறை வரை, மஸ்கின் குழந்தைகள் – தொழில்நுட்பம், தொழில், இப்போது அரசியலிலும் - தங்கள் தந்தையின் முன்னெடுப்புகளில் எப்போதும் உடன் இருந்திருக்கின்றனர். அமெரிக்க அரசில் புதிதாக உருவாக்கப்பட்ட துறைக்கு தலைமையேற்க தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரும் டெஸ்லா இணை நிறுவனருமான மஸ்கை அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்த பின்னர், மஸ்கின் குழந்தைகள் தலைநகரில் அடிக்கடி தோன்றியிருக்கின்றனர். மஸ்கின் 4 வயது மகன் "லில் எக்ஸ்", கோட் மற்றும் காலர் வைத்த சட்டையும் அணிந்து, ஓவல் அலுவலகத்தில், அதிபரின் மேசையின் மேல் காணப்பட்டார். கடந்த வியாழக்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் அவரது தொழில்நுட்பம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, எக்ஸும் அவருடன் பிறந்த மற்ற இருவரும் மோதியுடன் பரிசுகளை பகிர்ந்துகொண்டனர். ஆப்பிள் நிறுவனம் குறித்து ஈலோன் மஸ்க் பகிர்ந்த மீமின் பின்னணி என்ன? அம்பானி vs ஈலோன் மஸ்க்: இந்திய செயற்கைக்கோள் இணையசேவை சந்தையை பிடிக்க நடக்கும் போர் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்: உலகின் மிகப்பெரிய ராக்கெட் வெடித்த பிறகும் மனஉறுதி குலையாத ஈலோன் மஸ்க் வாஷிங்டனுக்கு வருவதற்கு முன்னரும் மஸ்க் தனது குழந்தைகளுடன் காணப்பட்டுள்ளார். துருக்கி அதிபருடனான சந்திப்பு, அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக மஸ்கை அறிவித்து டைம் பத்திரிகை நடத்திய விழா போன்றவற்றில் மஸ்குடன் அவரது குழந்தைகளும் பங்கேற்றுள்ளனர். மஸ்கின் குழந்தைகள் அவருடன் வருவதற்கு என்ன காரணம்? "பொது இடங்களில் தோன்றும் போது குழந்தைகளை அவருடன் வைத்துக் கொள்வது, அவரை மேலும் சிறந்தவராக காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல்வாதியின் அல்லது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கை, அவரை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கான ஒரு நடவடிக்கை," என்கிறார் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு பேராசிரியர் கர்ட் பிரடாக். குழந்தைகளை ஏன் அழைத்து வர வேண்டும்? இருந்தும், மஸ்கின் சிறு குழந்தையை ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் முடிவு வித்தியாசமானது என்கிறார் பிரடாக். 30 நிமிட செய்தியாளர் சந்திப்பின் போது எக்ஸ் சலிப்பாக காணப்பட்டதுடன் தனது தந்தையை போல் செய்து கொண்டு, தரையில் அமர்ந்திருந்த அவரை, அதிபர் அவ்வப்போது பார்த்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அறையில் இருந்த யாரோ ஒருவரை அமைதி காக்கும்படி எக்ஸ் சைகை செய்தது போல் தோன்றியது. குழந்தைகளை அழைத்து வருவது திட்டமிட்டது என்கிறார் பிராடாக். இது மஸ்க் மற்றும் டிரம்ப் இருவருக்குமே பலனளிப்பதுதான். "சில விஷயங்களுக்கு கவனத்தை ஈர்த்து, பல விஷயங்களிலிருந்து கவனத்தை திசை திருப்புவது என இதில் ஒரு திட்டமிருப்பதாக நான் கருதுகிறேன்." மக்கள் தொடர்பு திட்டமிடல் ஆலோசகரக இருக்கும் ஜான் ஹாபர் 5 அதிபர் தேர்தல் பரப்புரைகளில் பணியாற்றியுள்ளதுடன் ஹார்வர்டில் பயிற்றுவிக்கிறார். மஸ்கின் குழந்தைகள் அவ்வப்போது தோன்றி, வைரலாகும் தருணங்களை உருவாக்குவது டிரம்புக்கு உதவிகரமாக இருப்பதாக ஜான் ஹாபர் சொல்கிறார். டிரம்பை பொருத்தவரை, மேலும்மேலும் குழப்பம் ஏற்படுத்தினால் , மற்றவர்கள் ஏதேனும் ஒன்றின் மீது கவனம் செலுத்துவது குறைகிறது. குழப்பம் அவருக்கு பலனளிக்கிறது." என்கிறார் ஹாபர். மஸ்கின் முன்னாள் காதலியும் எக்ஸின் தாயுமான கிரைம்ஸ், தனது மகன் அதிபர் அலுவலகத்தில் தோன்றியதை விமர்சிக்கிறார். "அவன் பொது வெளியில் இவ்விதம் இருக்கக் கூடாது," என எக்ஸ் தள பதிவு ஒன்றில் தெரிவித்தார். "நான் இதை பார்க்கவில்லை.. ஆனால் அவன் கண்ணியமாக இருந்தது மகிழ்ச்சியளிகிறது." என்று அவர் குறிப்பிட்டார். தனது மகன் வெளிச்ச வட்டத்தில் இருப்பதை தான் ரசிக்கவில்லை என 2022 வேனிட்டி ஃபேர் கட்டுரை ஒன்றில் கிரைம்ஸ் தெரிவித்திருந்தார். "குடும்பத்தில் என்ன நடந்தாலும், குழந்தைகள் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால் எக்ஸ் அங்கே வெளியே இருக்கிறான். அவன் தனது பாதுகாப்பில் இருப்பதாக ஈலோன் பார்க்கிறார் என நினைக்கிறேன். அதனால அவனை எல்லாப் பக்கமும் அழைத்துச் செல்கிறார். எக்ஸ் அங்கே இருக்கிறான். அவன் சூழ்நிலை அப்படி, ஆனால், எனக்கு சொல்ல தெரியவில்லை." என்கிறார் கிரைம்ஸ். யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா? ஐரோப்பிய நாடுகள் பாரிஸில் நாளை அவசர ஆலோசனை16 பிப்ரவரி 2025 மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மஸ்கின் முன்னாள் காதலியும் எக்ஸின் தாயுமான கிரைம்ஸ் அவருடைய மகன் இப்படி பொதுவெளியில் இருப்பதை விரும்பவில்லை மஸ்க்கும் அவரது குழந்தைகளும் அரசியலுக்கு வருவதற்கு வெகு காலதிற்கு முன்னரே மஸ்க் தனது குழந்தைகளை தம்முடன் வர அனுமதித்திருக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்னர், தன்னுடைய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் மீது கவனத்தை ஈர்க்கும் ஆர்வத்துடனிருந்த துவக்க காலத்திலும், அவரது குழந்தைகளை நிகழ்ச்சிகளில் பார்ப்பது அபூர்வமானதாக இருக்கவில்லை. 2015-ல் சிலிகான் பள்ளத்தாக்கில் டெஸ்லா தொழிற்சாலையில் புதிய வாகனம் ஒன்றின் அறிமுகத்திற்காக செய்தியாளர்களும். ஆய்வாளர்களும் காத்திருந்த போது, அவருடைய ஐந்து குழந்தைகள் சத்தமாக சிரித்துக் கொண்டு, நடைபாதைகளில் ஒருவரை ஒருவர் விரட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், மஸ்கின் குழந்தைகள் அங்கிருந்தது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இறுக்கத்தை தளர்த்தி, ஒரு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. பிற நிறுவனங்களால் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் உத்யோகப்பூர்வமாக நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து இது வேறுபட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் ஒரு அதிகாரியின் மிக சிறு வயது குழந்தைகளை பார்ப்பது வித்தியாசமானதாக இருந்திருக்கும். மஸ்க் மூன்று பெண்கள் மூலம் 12 குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளார். அவரது அதிகம் அறியப்பட்ட மகன், X Æ A-12?, "லில் எக்ஸ்" என அழைக்கப்படுகிறார். இது சமூக வலைதளமான டிவிட்டரை வாங்கிய போது அதன் பெயரை மாற்ற மஸ்க் பயன்படுத்திய அதே எழுத்துதான். நான்கு வயதான அவரை " உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை தரும் மனிதன்" என மஸ்க் விவரித்துள்ளார். மஸ்க் தம்மை தனது குழந்தைகளுக்கு "முழுமையாக அர்ப்பணித்திருப்பதாகவும்" அவர்கள் மீது அதீத அக்கறை கொண்டிருப்பதாகவும்", மஸ்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்டர் ஐசாக்சன் டைரி ஆஃப் ஏ சீஇஓ பாட்காஸ்டில் தெரிவித்திருந்தார். "அவர் செய்வது எல்லாவற்றிலும் ஊறியிருக்கும் தீவிரம், அவரது சொந்த குழுந்தைகள், காதலிகள், அவரது மனைவிகளிடமும் உண்டு," என்கிறார் ஐசாக்சன். "தன்னைச் சுற்றி எப்போதும் சில குழந்தைகள் இருப்பதை அவர் விரும்புகிறார். ஒரு துணைவர் இருப்பதை அவர் எப்போதும் விரும்புகிறார். அதற்காக அவர் அமைதியை விரும்புகிறார் என பொருளில்லை." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.