Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 16 FEB, 2025 | 12:26 PM நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுவதாகவும் அவர்களில் 9 இலட்சம் பேர் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என அகில இலங்கை பார்வைக்குறைபாடுடையவர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவித்தார். மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுடனான கலந்துயைாடலில் போது அவர் இதனைத் தெரிவித்தார். கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஆளுநருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. மேற்படி சந்திப்பின் போது மத்திய மாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. மேற்படி கலந்துரையாடலின் போது மத்திய மாகாண பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இவை தொடர்பாக தகவல்களைப் பெற்று வெகு விரைவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயற்சிப்பதாகவும் ஆளுநர் அங்கு தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் மத்திய மாகாண பார்வைக்குறைபாடுடையோல் சங்க நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுகின்றனர்
  2. நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்டம் - புதிய வரிகள் இல்லை, ஏற்கனவே உள்ள வரிகள் நீடிப்பு, அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள அதிகரிப்பு16 FEB, 2025 | 11:43 AM நாளை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள முதலாவது வரவு செலவுதிட்டத்தில் அரசாங்க ஊழியர்களிற்கான சம்பள அதிகரிப்பு,அரசாங்க வேலைவாய்ப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் எனினும் வரவு செலவுதிட்டம் எனினும் வரவு செலவுதிட்டம் சர்வதேசநாணயநிதியத்தின் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுறுவை மீறாததாக காணப்படும் என நிதியமைச்சின் சிரேஸ்டஅதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப வரவு செலவு திட்டம் குறித்த விபரங்களை அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியம் வரவு செலவுதிட்டம் தனது திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுறுவை மீறாததாக காணப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கான மூன்றாவது தொகுதி உதவியை வழங்குவது குறித்து ஆராய முடியும் என தெரிவித்திருந்தது. அரசசேவைக்கு ஆட்களை சேர்க்கும்நடவடிக்கைகள் வரவுசெலவு திட்ட விவாதங்கள் முடிவடைந்த பின்னர் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள நிதியமைச்சின் அதிகாரி,எனினும் பெருமளவில் அரசசேவைக்கு ஊழியர்களை சேர்க்கப்போவதில்லை அவசியமாக உள்ள வெற்றிடங்கள் மாத்திரம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். புதிய வரிகள் விதிக்கப்படாது ,நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுகொண்டிருப்பதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகள் நீடிக்கும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்டம்
  3. படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளும் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசிக்காக 15 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் மூன்று டிரங்க் பெட்டிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏகே-47 ஆயுதமேந்திய போலீசாரின் பாதுகாப்புடன், இன்று மாலை பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு அவை கொண்டு வரப்பட்டன. கடந்த 1996ஆம் ஆண்டில் ஜெயலலிதாவிடம் இருந்து இவை கையகப்படுத்தப்பட்டன. அவை, 36வது கூடுதல் சிவில் மற்றும் செஷன்ஸ் நிதிபதி ஹெச்.எஸ்.மோகன் உத்தரவின் கீழ், இப்போது தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வைரக் கற்கள், மரகதங்கள், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட நகைகள் உள்பட 27 கிலோகிராம் தங்க நகைகள், மூன்று வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டவற்றில் அடக்கம். ரூ.59,870 மற்றும் ரூ.1,60,514 மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் (அப்போதைய ரூபாய் நோட்டுகள்), 10 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரத்து 591 ரூபாய் (ரூ.10,18,78,591.67) மதிப்பிலான நிரந்தர வைப்பு நிதி(2023இன்படி) ரசீதுகள் ஆகியவையும் தமிழ்நாடு காவல் துறை குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதா: முன்னாள் முதல்வரின் இல்லத்துக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயம் ஜெயலலிதா 'இந்துத்துவ' தலைவர் என்று எந்த அடிப்படையில் அண்ணாமலை கூறினார்? மத்திய அரசில் மாறிமாறி இடம் பெற்ற திமுக, அதிமுக - தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை? ஓர் அலசல் இவற்றை உள்துறை இணை செயலாளர் ஜே.ஆன் மேரி ஸ்வர்ணா தலைமையிலான தமிழக அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.விமலா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் மற்றும் பிற அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது. ஒப்படைக்கப்பட்ட சொத்து ஆவணங்களில் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 6 நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,526 ஏக்கர் நிலத்தின் சொத்துகளின் ஆவணங்களும் அடக்கம். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த உத்தரவு கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது. "பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை என்ன செய்வது என்பதை முடிவு செய்வது தமிழக அரசின் பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, சொத்துகளை மதிப்பிட்டு ஏலத்தில் விற்று பணத்தை மீட்டெடுக்கலாம் அல்லது கருவூலத்திற்கு அனுப்பலாம்," என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இந்த வழக்கில் மக்களின் உணர்ச்சிகள் பெருமளவு சம்பந்தப்பட்டு இருப்பதாலும், இந்தப் பொருட்கள் சட்டவிரோத சொத்துகள் என அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ப தமிழக அரசு பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்று தமிழக அரசே முடிவு செய்வது சரியாக இருக்கும்," என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதோடு, அவற்றை என்ன செய்யலாம் என்பதற்குச் சில வழிகளையும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதாவது, "இந்த நிலங்கள், பொது நோக்கங்களுக்காகவோ, வளர்ச்சிக்கான நிலங்களாகவோ அல்லது நிலமற்ற மக்களுக்கு வழங்கவோ பயன்படுத்தப்படலாம். இல்லையேல், அந்த நிலங்களை விற்று அரசு நிதி திரட்டவும் பயன்படுத்தலாம்," என்று உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்?15 பிப்ரவரி 2025 குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. சுத்திகரிப்பு நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது?15 பிப்ரவரி 2025 சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நகைகள் மற்றும் நிலங்களை ஏலம் விடலாம் எனவும் அந்த வருமானத்தைப் பொது நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம் எனவும் நீதிபதி மோகன் குறிப்பிட்டுள்ளார். "இந்த வழக்கின் உண்மைகளையும், நீதியையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இந்த வருவாயை மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைக் கிராமப்புறங்களில் உருவாக்கப் பயன்படுத்தும்'' என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார். "அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி, மக்களின் நலனுக்காகத் தங்கள் கடமைகளை எச்சரிக்கையாகவும், கவனமாகவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற செய்தியை இது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அனுப்பும்," என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். வி.கே.சசிகலா மற்றும் இளவரசியிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 20 கோடியே 20,000 ரூபாய் அபராதத் தொகையில், கர்நாடக அரசுக்கு ஐந்து கோடி ரூபாயும், விசாரணை நடத்துவதற்கும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் ஏற்பட்ட செலவுகளுக்காகக் கூடுதலாக எட்டு கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் தனது தண்டனையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா மே 11, 2015 அன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பாகவே, அவர் டிசம்பர் 6, 2016இல் காலமானார். அவரது சொத்துகளை ஏலம் விடவோ, விற்கவோ சிறப்பு பொது வழக்கறிஞரை நியமிக்கக் கோரி வழக்கறிஞர் டி நரசிம்மமூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பொது வழக்கறிஞர் 2024இல் நியமிக்கப்பட்டு, இறுதி உத்தரவுகள் இன்று நிறைவேற்றப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்து
  4. 16 FEB, 2025 | 07:20 AM புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் சனிக்கிழமை (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புகையிரத நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் புதுடெல்லி புகையிரத நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜுக்குச் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் 13 மற்றும் 14-வது நடைமேடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என டெல்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறியுள்ளார். “டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்” என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் காபந்து முதல்வர் ஆதிஷி நேரில் வந்து பார்த்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட நடைமேடை எண் 13 மற்றும் 14-ல் நடைமேடையில் மக்கள் தங்களது உடைமைகளை விட்டுச் சென்றது அப்படியே இருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளனர. ட்ராலி, தண்ணீர் பாட்டில், காலணி போன்றவை அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கிறது. நடந்தது என்ன? - சனிக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் மகா கும்பமேளாவுக்கான ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் புதுடெல்லி ரயில் நிலைய நடைமேடை 13 மற்றும் 14-ல் திரண்டனர். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகளும் பீதி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீஸார், காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் நடைமேடையில் கூடியது தான் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 1,500 முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் விற்பனையானதும், ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய ரயில்கள் தாமதமாக வந்ததும் இதற்கு காரணம் என ரயில்வே துணை போலீஸ் கமிஷனர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகு புதுடெல்லி ரயில் நிலையத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு
  5. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. களுவாஞ்சிகுடியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே,சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது உயிரிழந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்
  6. 16 FEB, 2025 | 09:48 AM (லியோ நிரோஷ தர்ஷன்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (22) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார். எவ்வாறாயினும் 'கடற்பிராந்திய ஒத்துழைப்பின் புதிய பரிமாணங்களை அடையாளங்காணல்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் சிறப்பு அதிதியாக பங்கேற்பதற்காக ஓமான் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை நாடு திரும்பவுள்ளார். இதன் பின்னரே டெல்லிக்கு விஜயம் செய்வார் என முன்னாள் அரசாங்க தகவல் தினைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக செயலாளருமான தினித் சிந்தக கூறினார். 2024 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை - இந்திய கூட்டுத்திட்டங்கள் தொடர்ந்தும் இழுபறி நிலையை எதிர்ககொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே இலங்கையில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட இந்திய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதாக குறிப்பிட்டு வந்தது. குறிப்பாக அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த அரசாங்கம், ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய தீர்மானத்தை தொடர்ந்து அதானி நிறுவனம் அத்திட்டத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளது. மேலும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்புகளை வழங்கியிருந்த இந்தியா, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைப்பதற்கும் பங்காற்றியிருந்தது. ஆனால் இலங்கையில் இந்தியா திட்டமிட்டிருந்த கூட்டுத்திட்டங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்படுகின்றமை டெல்லியின் கவலைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. குறிப்பாக, திருகோணமலை மின் நிலைய விவகாரம் மற்றும் வடக்கு தீவுகளின் சூரிய சக்தி திட்டம் என பல்வேறு திட்டங்கள் வெறும் ஆவண கோப்புகளாகவே உள்ளன. இத்தகைய நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இந்திய திட்டங்கள் குறித்து தொடர்ந்தும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ரணில் விக்கிரமசிங்க டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும் ரணில்
  7. Published By: DIGITAL DESK 7 16 FEB, 2025 | 09:22 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் விடயத்தை மாற்றியமைக்க நாணய நிதியத்திடம் கோரியுள்ள அரசாங்கம், அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு சாதகமான பதிலை அளித்துள்ள சர்வதேச நாணய நிதியம் நாளை திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ள அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டத்தின் பின்னர் ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நாளை 17 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன், மார்ச் மாதம் 21 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இந்த வரவு - செலவு திட்டமானது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மறுபுறம் இந்த வரவு - செலவு திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரகாரம் நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும். எவ்வாறாயினும் இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது - மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. எனினும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது. இதனை அடுத்த வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்
  8. Published By: DIGITAL DESK 7 16 FEB, 2025 | 09:11 AM அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணவும் வழிசமைப்போம் என்று பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் நேற்று சனிக்கிழமை (15) நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் வெற்றிபெற்ற பிரதிநிதித்துவங்களுடன் அரசாங்கத்தினை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி என்ற தனியொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 76வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அரசியலில் இருந்து எமது மக்கள் இம்முறை மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். இது தான் மிக முக்கியமானதொரு வெற்றியாக உள்ளது. எமது அரசாங்கம் என்பது மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை உருவாக்குவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவமாகும். இத்தனை வருடங்களாக இனங்களுக்கு இடையில் எட்டப்படாதிருக்கும் இன ஐக்கியத்தினை இத்தடைவை காண வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கமாகவுள்ளது. எமது நாடு பல்வகைமையைக் கொண்டதாகும். அது பரந்துபட்டதாகும். அவ்வாறான நிலையில் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் சிறப்பானதொரு வாழ்க்கையை நாட்டிற்குள் வாழ்வதற்கான சமத்துவ உரிமை காணப்படுகின்றது. அனைவரும் தமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் அதேநேரம், அனைவரும் ஒற்றுமையாக வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. இலங்கை என்பது எமது வீடு. எமது வீட்டுக்குள் பிரச்சினைகள் உள்ளன. எங்கு தான் பிரச்சினைகள் இல்லை. எமது வீட்டுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்க்க வேண்டும். வடக்கில் உள்ள தயார் ஒருவர் பாடசாலைக்கு தனது பிள்ளையை அனுப்பும்போது எதிர்காலத்தினை சிந்திப்பது போன்று தான் தென்னிலங்கையில் உள்ள தாயாரும் தனது பிள்ளையின் எதிர்காலத்தினைக் கருதுகின்றார். உள்நாட்டு போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். தங்களுடைய அதிகார பலம் வீழும்போது இனவாதத்தினை , மதவாதத்தினை ஏற்படுத்துவார்கள். அதனை மக்கள் தோல்வியடைச் செய்தபோதும் தற்போது இனவாதத்தினை, மதவாத்தினை தூக்கிப் பிடிப்பதற்கு முனைகின்றார்கள். அடுத்த ஒருமாதத்துக்குள் அவ்வாறு கூக்குரல் இடுபவர்கள் சத்தம் முழுமையாக நின்றுவிடும். அதன்பின்னர் எமது எதிர்காலத்தினை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும். புதிய அரசியலமைப்பை உருவக்குவது எமது இலக்குகளில் ஒன்றாகும். அந்த அரசியலமைப்பினை அனைவருடனும், கலந்துரையாடியே அவர்களின் தீர்மானத்துக்கு அமைவாக முன்னெடுப்போம். அது எமது பொறுப்பாகும் என்றார். அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்; வட்டுக்கோட்டையில் பிரதமர் உறுதி
  9. 16 FEB, 2025 | 11:27 AM விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனைஇ சீமான் போர் முனையில் சந்தி்த்து பேசியதாகவும்இ அதன் பிறகு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் சீமான் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டபிறகுஇ விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார். அவர் மார்பிங் செய்யப்பட்ட படங்களை பொது வெளியில் பயன்படுத்தி வருவதாக சங்ககிரி ராஜ்குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார். எனவே தடை செய்யப்பட்ட பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு
  10. ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 15 பிப்ரவரி 2025 ஐபிஎல் 20 ஓவர் தொடரில் இதுவரை 17 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 8 கேப்டன்கள், 7 தலைமைப் பயிற்சியாளர்கள், 5 முறை லோகோ மாற்றம், 2 முறை பெயர்மாற்றம் என இவ்வளவு செய்தும் இன்னும் ஒரு முறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இந்த முறையாவது கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் புதிய வீரர்கள் மற்றும் புதிய கேப்டன் ரஜத் பட்டிதாருடன் ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது ஆர்சிபி அணி. 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியை வழிநடத்த ரஜத் பட்டிதாரை கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். கடந்த 2 சீசன்களிலும் தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த டூப்பிளசி கேப்டனாக ஆர்சிபி அணியை வழிநடத்திய நிலையில், இந்த சீசனுக்கு விராட் கோலி கேப்டனாக மீண்டும் வருவார் என்று பல்வேறு ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக இளம் வீரர் ரஜத் பட்டிதாரை கேப்டனாக ஆர்சிபி நிர்வாகம் நியமித்துள்ளது. அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெரிதாக இல்லை, மேலும் அவர் 100 உள்நாட்டு போட்டிகளில் கூட விளையாடியாதில்லை. இருப்பினும் இந்த சீசனில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஹேசல்வுட், பில் சால்ட், லிவிங்ஸ்டோன், புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கும் இந்த அணியை எவ்வாறு வழிநடத்தப் போகிறார், யாருக்கு முக்கியத்துவம் தரப்போகிறார் என்பதில்தான் ரஜத் பட்டிதாரின் வெற்றி இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாமல் இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியுமா? கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை பார்வை மாற்றுத்திறனாளிகள் ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுக்க உதவும் கைட் ரன்னர்கள் விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா? நனவாகாத கனவுஆர்சிபி அணிக்கும், ஐபிஎல் டி20 சாம்பியன் பட்டத்துக்கும் எட்டாப் பொருத்தமாகவே இருக்கிறது. இதுவரை 17 சீசன்களில் 3 முறை இறுதிப்போட்டிவரை சென்ற ஆர்சிபி அணி, கடந்த 5 சீசன்களில் 4 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது, ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை அந்த அணியால் வெல்ல முடியவில்லை. தொடக்கத்தில் இருந்து தற்போதுவரை ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்ஸன், அணில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்ஸன், டூப்பிளசி உட்பட பல ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்தபோதிலும் அந்த அணியால் அதிகபட்சமாக பைனல் செல்ல முடிந்ததே தவிர சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. அதேசமயம், தொடக்கத்திலிருந்து பல முன்னணி வீரர்களையும் பயிற்சியாளர்களாக மாற்றிப்பார்த்தது ஆர்சிபி அணி. வெங்கடேஷ் பிரசாத், ரே ஜென்னிங்ஸ், டேனியல் வெட்டோரி, சைமன் கேடிச், கேரி கிறிஸ்டன், சஞ்சய் பங்கர், ஆன்டி பிளவர் ஆகியோரை அணியில் நியமித்து பார்த்தாலும் ஒரு முறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால், 2025 ஐபிஎல் சீசனில் 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்த ஆர்சிபி அணி, முற்றிலும் புதிய வீரர்களுடன் களம் காண இருக்கிறது. கேப்டனாகவும் யாரும் எதிர்பாரா வகையில் இளம் வீரரை அறிமுகப்படுத்துகிறது. டிரம்ப் இந்தியாவுக்கு விற்க உள்ள எப்-35 போர் விமானத்தின் சிறப்பம்சம் என்ன? ஒரு மணி நேரம் பறக்க ரூ. 34 லட்சம் செலவா?15 பிப்ரவரி 2025 மராட்டியப் பேரரசில் கிளர்ச்சி மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிவாஜி மகன் சம்பாஜியின் சோகக் கதை15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM 8ஆம் வகுப்பு பாஸ் செய்ய திணறியவர்ஆர்சிபி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரஜத் பட்டிதார் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 1993 ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அன்று பிறந்தார். பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார் பெரிய வர்த்தகர் என்பதால் செல்வச் செழிப்பான சூழிலில் ரஜத் பட்டிதார் வளர்ந்தார். சிறுவயதிலிருந்து ரஜத் பட்டிதார் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்ததால், அவருக்கு 8 வயது ஆகும்போதே அவர் கிரிக்கெட் பயிற்சிக்கான வகுப்புகளில் குடும்பத்தினர் சேர்த்தனர். இந்தூரில் உள்ள நியூ திகம்பர் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவர் குரு வஷிஸ்டா கல்லூரில் கல்லூரிப்படிப்பையும் முடித்தார். ரஜத் பட்டிதார் குறித்து அவரின் தந்தை மனோகர் பட்டிதார் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிறுவயதில் இருந்தே ரஜத் பட்டித்தாருக்கு படிப்பின் மீது துளி கூட கவனம் இருந்தது இல்லை, 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவே அவர் கடுமையாக சிரமப்பட்டார். கிரிக்கெட் பயிற்சிக்குச் சென்றபின் படிப்பின் மீது அவரது ஆர்வம் இன்னும் மோசமானது", என்றார். "கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ரஞ்சிக் கோப்பைக்கு ரஜத் பட்டிதார் தேர்வானபின் அவருக்கு முழுசுதந்திரம் அளித்தோம், முழுமையாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அனுமதித்தோம். கிரிக்கெட் விளையாடுவதற்காக குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்க மாட்டார்", என்றார். சென்னை: இரும்பு வாயிற்கதவு விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு – இன்றைய முக்கிய செய்திகள்15 பிப்ரவரி 2025 சிவகங்கை: புல்லட் ஓட்டியதற்காக தலித் இளைஞர் கைகள் வெட்டப்பட்டதா? காவல்துறை கூறுவது என்ன?15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM ரஞ்சிகோப்பைத் தொடரில் அறிமுகம்2015-16 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பைத் தொடரில்தான் மத்திய பிரதேச அணிக்காக விளையாட ரஜத் பட்டிதார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் மண்டல அளவிலான டி20 தொடருக்கும் பட்டிதார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரின் கிரிக்கெட் வாழ்க்கை மெல்ல வளர்ந்தது. 2018-19 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்காக ஆடிய ரஜத் பட்டிதார் 8 போட்டிகளில் 713 ரன்கள் சேர்த்து முன்னணி வீரராக வலம்வந்தார். 2019 ஆம் ஆண்டில் இந்திய அணியின் ப்ளூ அணியிலும் பட்டிதாருக்கு இடம் கிடைத்தது. இதுவரை 68 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய ரஜத் பட்டிதார் 13 சதங்கள் 24 அரைசதங்கள் உட்பட 4738 ரன்கள் சேர்த்துள்ளார். 64 லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்றுள்ள பட்டிதார் 4 சதங்கள், 13 அரைசதங்கள் உள்பட 2211 ரன்கள் சேர்த்துள்ளார். 75 டி20 போட்டிகளில் ஆடி 2463 ரன்களையும் அவர் சேர்த்துள்ளார். சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரிலும் மத்திய பிரேதச அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டார். 2024-25 சயத் முஸ்தாக் அலி கோப்பைத் தொடரில் மத்திய பிரதேச அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார் பட்டிதார். சையத் முஷ்டாக் அலி தொடரில் 9 இன்னிங்ஸில் 428 ரன்கள் குவித்து 2வது அதிகபட்ச ரன் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். அதன்பின் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரிலும் மத்திய பிரதேச அணியின் கேப்டனாக பட்டிதார் நியமிக்கப்பட்டு 226 ரன்கள் குவித்தார். பின்லாந்து: புவியின் வெப்பநிலையைக் குறைக்க துர்கு நகரின் பெண்கள் தலைமையிலான குழு எப்படி உதவுகிறது?15 பிப்ரவரி 2025 சென்னையில் தலித்துகள், முஸ்லிம்கள் வாடகை வீடு தேடுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM ஐபிஎல் தொடரில் அறிமுகம்2021-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி முதல்முறையாக ரஜத் பட்டிதாரை ஏலத்தில் ரூ.20லட்சத்துக்கு வாங்கியது. இந்தத் தொடரில் பட்டிதாருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை, 4 போட்டிகளில் 71 ரன்கள் மட்டுமே பட்டிதாரால் சேர்க்க முடிந்தது. 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரஜத் பட்டிதாரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. ஆனால், ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த லிவித் சிசோடியா என்ற வீரர் காயத்தால் தொடரின் பாதியிலேயே விலகியதால், ரூ.20 லட்சத்துக்கு ரஜத் பட்டிதாரை ஆர்சிபி அணி மீண்டும் வாங்கி வாய்ப்பளித்தது. ஆனால், இந்த முறை தனக்குக் கிடைத்த வாய்ப்பை பட்டிதார் தவறவிடவில்லை. எலிமினேட்டர் சுற்றில் லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்து மாபெரும் வெற்றியை ஆர்சிபிக்கு பெற்றுக்கொடுத்தார். 8 போட்டிகளில் பட்டிதார் 333 ரன்கள் குவித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். இந்த சீசன் பட்டிதாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தவே 2023 சீசனில் ஆர்சிபி அணி பட்டிதாரை தக்கவைத்து, 2024 ஏலத்திலும் பட்டிதாரை தக்கவைத்து, கேப்டனாக்கியுள்ளது. தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 டிரம்ப் - மோதி சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM ஆர்சிபிக்காக திருமணம் தள்ளிவைப்புஆர்சிபி அணியில் விளையாடுவதற்காகவே தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே ஒத்திவைத்தவர் ரஜத் பட்டிதார். ரஜத் பட்டிதாருக்கும், குஞ்சன் பட்டிதார் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. 2022 ஐபிஎல் ஏலத்தில் ரஜத்பட்டிதாரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் ஐபிஎல் நடக்கும் மே மாதம் 9ம் தேதி ரஜத் பட்டிதார் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ஆர்சிபி அணியில் சிசோடியா காயத்தால் பாதியிலேயே விலகியதால் அவருக்குப் பதிலாக பட்டிதாரை ஆர்சிபி அணி அழைத்தது. இதற்காக அவர் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தள்ளி வைத்தார். திருமணத் தேதியை ஐபிஎல் தொடர் முடிந்தபின் வைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்றுவிட்டார். ஐபிஎல் தொடர் முடிந்தபின்புதான் ரஜத் பட்டிதார் குஞ்சன் பட்டிதாரை திருமணம் செய்துகொண்டார். இதை பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் படிப்பறிவு விகிதம் உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டில் குறைந்தது ஏன்?14 பிப்ரவரி 2025 காதலர் தினம்: உலகம் முழுக்கவே காதலிக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்களா? ஏன் இந்தச் சிக்கல்?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM பட்டிதாரின் ப்ளேயிங் ஸ்டைல், வலிமைரஜத் பட்டிதார் ஸ்ட்ரோக் ப்ளே மற்றும் பேட்டிங்கில் நல்ல ஷாட்களை ஆடக்கூடியவர். குறிப்பாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பலவிதமான ஷாட்களை அற்புதமாக பட்டிதார் ஆடக்கூடியவர். அணியில் தேவைப்படும் போது ஆங்கர் ரோலிலும், தொடக்க வீரராக களமிறங்கும்போது ஆக்ரோஷமான அதிரடி பேட்டிங்கையும் பட்டிதார் வெளிப்படுத்தக்கூடியவர். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து பேட் செய்யக்கூடிய திறமை படைத்தவர். உள்நாட்டுப் போட்டிகள், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடக் கூடியவர். 2022 ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் பட்டிதாரின் சதம், கடுமையான நெருக்கடியிலும் தன்னால் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது. அதுவே அவருக்கான திருப்புமுனையாகவும் அமைந்தது. 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?13 பிப்ரவரி 2025 துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன?13 பிப்ரவரி 2025 ஆர்சிபி கேப்டனாக ரஜத் பட்டிதார் தேர்வானது எப்படி?ஆர்சிபி அணியின் தலைமைப்பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கிரிக்இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ஆர்சிபி அணியின் கேப்டனாக பட்டிதாரை ஏன் தேர்வு செய்தனர் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்," ரஜத் பட்டிதாரைப் பற்றி என்னால் நீண்டநேரம் பேச முடியும். பகிர்ந்து கொள்ள ஸ்வாரஸ்யமாக இருக்கும் என்று நான் நினைத்த மூன்று முக்கிய விஷயங்களை கூறுகிறேன். முதலாவதாக பட்டிதாரின் அமைதி மற்றும் எளிமை. இதுதான் அவருக்குரிய கேப்டன் பதவியை வழங்க பிரதான காரணமாக இருந்தது. ஒரு கேப்டனாக ஐபிஎல் அணிக்கு வரும்போது மிகவும் நிதானமாக, பதற்றமின்றி, எந்த சூழலையும் அமைதியாக கையாளும் திறமை இவருக்கு இருந்தது. அது மட்டுமல்லாமல் மத்திய பிரதேச அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் கேப்டனாக பட்டிதார் செயல்பட்டதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். அவரது முடிவு எடுக்கும் திறன், கிரிக்கெட் களத்தில் அவரின் அர்ப்பணிப்பு, வீரர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் இவர் கேப்டனாக தகுதியானவர் என்பதை எனக்கு உணர்த்தின. இரண்டாவது விஷயம், அவர் இயல்பாகவே மிகவும் அமைதியானவர், தன்னை கவனித்துக்கொள்வது, அவரைச் சுற்றியுள்ளவர்களின் மேல் அவர் காண்பிக்கும் அக்கறை, அவருடன் விளையாடும் சகவீரர்கள் குறித்த அக்கறை, டிரஸ்ஸிங் ரூமில் அவரின் போக்கு அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. சக வீரர்களுக்கு அளிக்கும் மரியாதை, அக்கறை அவரின் முக்கிய தகுதிகளாக எனக்குத் தெரிந்தது. ஒரு கேப்டனுக்கு இந்த தகுதிகள் முக்கியமானவை, அப்போதுதான் சகவீரர்கள் கேப்டனை பின்பற்றி நடக்க முடியும். மூன்றாவதாக, ரஜத் பட்டிதாரின் உத்வேகம். அணியில் ஏற்ற, இறக்கங்கள் வரும்போது அதீத வலிமையுடன், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் பட்டிதார் சிறந்தவர். அதனால்தான் பட்டிதாரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி?
  11. பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், டியர்பெய்ல் ஜோர்டன் பதவி, செய்தியாளர், பிபிசி நியூஸ் 15 பிப்ரவரி 2025 அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள "ஐரோப்பாவின் ராணுவம்" ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், "யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது " என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்ட பிறகு ஸெலென்ஸ்கி இதைக் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையில் ஐரோப்பிய ஜனநாயகங்களை தாக்கிப் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறையில் "ஐரோப்பா பெரிய அளவில் முன்னேற வேண்டியிருப்பதாக" எச்சரித்திருந்தார். டிரம்ப் - புதின் தொலைபேசியில் 90 நிமிடம் பேசியது என்ன? இந்தியாவுக்கு அமெரிக்கா விற்க முன்வந்துள்ள எப்-35 போர் விமானத்தின் சிறப்புகள் இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்? "ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என நான் உண்மையில் நம்புகிறேன்" என்றார் ஸெலென்ஸ்கி. "பல பத்தாண்டுகளாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையே இருக்கும் உறவுகள் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாக நேற்று இங்கே மியூனிச் நகரில், அமெரிக்க துணை அதிபர் தெளிவுபடுத்தினார்" என தெரிவித்தார். "இப்போது முதல் விஷயங்கள் வேறாக இருக்கும், அதற்கேற்ப ஐரோப்பா அனுசரித்து நடந்துகொள்ளவேண்டும்" என்றார் அவர். யுக்ரேன் மீது முழுவீச்சில் ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பு, நேட்டோ கூட்டமைப்பு வலுவாகவும், பலமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது என இவ்வாரத்தில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹேக்சேத் கூறியிருந்தார். "நாம் நிதர்சனத்தைப் பேசுவோம். ஐரோப்பாவை அச்சுறுத்தும் ஒரு விஷயத்தில், அமெரிக்கா இல்லை என சொல்வதற்கான வாய்ப்பை நாம் மறுப்பதற்கில்லை," என சனிக்கிழமை ஸெலென்ஸ்கி தெரிவித்தார். "பல தலைவர்கள் ஐரோப்பாவிற்கு அதன் சொந்த ராணுவம் தேவை என்று பேசியுள்ளனர். ஒரு ராணுவம், ஐரோப்பாவின் ராணுவம்" என்றும் அவர் கூறினார். ஐரோப்பிய ராணுவம் என்ற கருத்தாக்கம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட மற்ற தலைவர்களால் முன்மொழியப்பட்டதுதான். அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைப்பதற்கு ஐரோப்பாவிற்கு தனி ராணுவம் உருவாக்குவதற்கு மக்ரோன் ஆதரவு தெரிவித்திருந்தார். பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?12 பிப்ரவரி 2025 இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்?15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் அண்மையில் தொலைபேசியில் உரையாடினர் (கோப்புப் படம்) "புதினுடனான தன்னுடைய உரையாடல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் என்னிடம் தெரிவித்தார். ஒருமுறைகூட ஐரோப்பா பேச்சுவார்தையில் இடம்பெற வேண்டும் என அவர் குறிப்பிடவிலை. அது பல விஷயங்களை சொல்கிறது," என்றார் ஸெலென்ஸ்கி. "ஐரோப்பாவை அமெரிக்கா ஆதரித்த அந்த பழைய நாட்கள் முடிந்துவிட்டன" என்று அவர் கூறினார். யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டிரம்ப் மற்றும் ஹெக்சேத் இருவருமே யுக்ரேன் நேட்டோவில் சேருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். கடந்த 2014க்கு முந்தைய யுக்ரேனின் எல்லைகளுக்கு திரும்புவது யதார்த்தத்தில் சாத்தியம் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
  12. பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 01:04 PM பாப்பரசர் பிரான்ஸிஸ் சுவாசத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ், வெள்ளிக்கிழமை (14) திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, வத்திக்கானில் உள்ள வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மேலதிக சிகிச்கைக்காக இத்தாலியின் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206741
  13. Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 04:37 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலமான மின் உற்பத்திகளை வரையறுப்பதற்காக இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட பொறியியலாளர்களை உள்ளடக்கி விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைய எதிர்காலத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின்உற்பத்தி திட்டங்களின் நிலைமை கேள்விக்குறியே. நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்படுவதற்கு முதல் நாள், அதாவது கடந்த 7ஆம் திகதி இலங்கை மின்சாரசபையால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. காற்றாலை, சூரிய மற்றும் நீர் மின்னுற்பத்திகளை வரையறுப்பது தொடர்பிலேயே அந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களை இவற்றை முற்றாக இல்லாமலாக்குவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் நிலக்கரி, டீசல் மாபியாக்கள் தலைதூக்கவுள்ளன. இது மிகவும் கவலைக்குரியதாகும். கடந்த காலங்களில் எம்மால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட இந்த மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களே இன்று நாட்டில் பிரதான மின்னுற்பத்தி மூலங்களாகவுள்ளன. இவை அனைத்தையும் சீர் குலைக்கும் வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதற்காகவே இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் பலரை உள்ளடக்கி இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் அதானி மாத்திரமின்றி சகல சர்வதேச முதலீட்டாளர்களும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த காலங்களில் மன்னார் காற்றலை மின்உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அதானி நிறுவனம் முதலீட்டு சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு ஏனைய முதலீட்டாளர்களும் சிந்திப்பர். எந்தவொரு முதலீட்டாளருக்கும் போட்டித்தன்மை இன்றி வலுசக்தி துறையில் அதிகாரத்தை வழங்க வேண்டிய தேவை கிடையாது. அண்மையில் கூட விலைமனு கோரலின்றி நிறுவனமொன்றுக்கு 50 மொகாவோல்ட் காற்றாலை திட்டம் வழங்கப்பட்டது. இது முற்று முழுதாக விலைமனு கோரல் முறைமையை மீறிய மோசடி மிக்க கொடுக்கல் வாங்கலாகும் என்றார். https://www.virakesari.lk/article/206759
  14. படக்குறிப்பு, அட்ரியன் சிமன்காஸ் கயாக்கிங் செய்து கொண்டிருந்த போது, அவரை ஒரு ஹம்பேக் திமிங்கிலம் (humpback whale) விழுங்கியது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரியா டியாஸ் & அயெலன் ஒலிவா பதவி, 3 மணி நேரங்களுக்கு முன்னர் கயாக்கிங் (கயாக் என்பது துடுப்பு போட்டு இயக்கக் கூடிய ஒரு சிறு படகு) சென்ற அட்ரியன் சிமன்காஸை ஒரு திமிங்கிலம் விழுங்கியபோது, அவர் முதலில் கவனித்தது வழுவழுப்பான ஒரு உணர்வைத் தான். "நான் ஏதோ ஒன்றின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன், ஒருவேளை அது என்னை சாப்பிட்டிருக்கலாம், அது ஓர்கா (திமிங்கிலம்) அல்லது கடல் அரக்கனாக இருக்கலாம் என நினைத்தேன் " என்று 23 வயதான அட்ரியன் பிபிசி முண்டோவிடம் கூறினார். அட்ரியன், "பினோச்சியோவைப் போல" (ஒரு கற்பனைக் கதாபாத்திரம்) ஹம்பேக் திமிங்கிலத்திற்குள் எப்படி உயிர் வாழ முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினார். ஆனால் அந்த உயிரினம் திடீரென்று அவரை வெளியே துப்பியது. வெனிசுலாவைச் சேர்ந்த அட்ரியன் தனது தந்தையுடன் சிலியின் படகோனியா கடற்கரையில் உள்ள மெகல்லன் கடல் பகுதியில் வழியாக கயாகிங் சென்ற போது, "பின்னாலிருந்து ஏதோ ஒன்று என்னைத் தாக்கியது, அருகில் வந்து மூடிக்கொண்டு என்னை மூழ்கடித்தது" என்றார். அவரது தந்தை டாலால், அந்தச் சம்பவத்தை சில மீட்டர் தொலைவில் இருந்து படம் பிடிக்க முடிந்தது. "நான் என் கண்களை மூடிக் கொண்டேன், மீண்டும் கண்களைத் திறந்த போது, நான் திமிங்கிலத்தின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன்" என்று அட்ரியன் பிபிசியிடம் விவரித்தார். "எனது முகத்தில் வழுவழுப்பான தன்மை கொண்ட ஏதோ ஒன்று உரசியதை உணர்ந்தேன்" என்று கூறிய அவர், தான் பார்த்தது அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய அட்ரியன், "அதை தடுக்க நான் இனி போராட முடியாது என்பதால் அது என்னை விழுங்கிவிட்டால் என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன்," என்றும், "அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நான் யோசிக்க வேண்டியிருந்தது" என்றும் தெரிவித்தார். ஆனால் சில நொடிகளில், அட்ரியன் மேற்பரப்பை நோக்கி எழுவதைப் போல உணரத் தொடங்கினார். டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன? பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா? விரல் நகத்தில் தோன்றும் வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது? தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா? "எவ்வளவு ஆழத்தில் உள்ளேன் என்பது தெரியாமல் மூச்சை அடக்க முடியுமா என்று சற்று பயந்தேன், மேலே வருவதற்கு நீண்ட நேரம் எடுத்தது போல் உணர்ந்தேன்" என்று விளக்குகிறார் அட்ரியன். "நான் இரண்டு வினாடிகள் மேலே வந்தேன், இறுதியாக நான் மேற்பரப்புக்கு வந்தபோது , அது என்னை உண்ணவில்லை என்பதை உணர்ந்தேன்." என்கிறார். அருகிலுள்ள கயாக்கில் இருந்து , அட்ரியனின் தந்தை டால் சிமான்காஸ் இக்காட்சியை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். சிலியின் தெற்கு நகரமான புன்டா அரீனாஸில் இருந்து கடற்கரையோரம் இருக்கும் ஈகிள் பே-வை அவர்கள் இருவரும் கடந்தபோது, பின்னால் ஒரு சத்தம் கேட்டது. "திரும்பிப் பார்த்தபோது, அட்ரியனைக் காணவில்லை" என்கிறார் அட்ரியனின் தந்தை டால் சிமான்காஸ். மேலும் "அட்ரியன் கடலில் இருந்து மேலே வருவதை பார்க்கும் வரை நான் கவலைப்பட்டேன்" என்று 49 வயதான டால் கூறினார். "பின்னர் நான் ஏதோ ஒரு உடலைப் பார்த்தேன், அதன் அளவின் காரணமாக திமிங்கிலமாக இருக்கலாம் என்று நான் உடனடியாக புரிந்துகொண்டேன்" என்றும் குறிப்பிடுகிறார். கயாக்கிங் செய்யும் போது எழும் அலைகளைப் பதிவுசெய்ய, டால் தனது கயாக்கின் பின்புறத்தில் ஒரு கேமராவைப் பொருத்தியிருந்தார். இது அவரது மகனின் அனுபவத்தைப் படம்பிடித்தது. கடல் நடுவே உள்ள சிறிய தீவை ஆயிரக்கணக்கான மக்கள் காலி செய்ய என்ன காரணம்?12 பிப்ரவரி 2025 இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 Play video, "ஆளையே விழுங்கி துப்பிய ஹம்பேக் திமிங்கிலம் - தப்பியவர் கூறுவது என்ன?", கால அளவு 0,52 00:52 காணொளிக் குறிப்பு, ஏழு ஆண்டுகளுக்கு முன் தந்தையுடன் வெனிசுலாவிலிருந்து சிலிக்குக் குடிபெயர்ந்த அட்ரியன், அந்த வீடியோவை மீண்டும் பார்த்த போது, திமிங்கிலத்தின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். "அந்த திமிங்கிலத்தின் முதுகு மேலெழுந்த தருணத்தையும், அதன் துடுப்புகள் தெரிந்ததையும் நான் பார்க்கவில்லை. சத்தத்தை மட்டும் தான் கேட்டேன். அதனால் தான் எனக்கு பயமாய் இருந்தது," என்றார் அட்ரியன். தொடர்ந்து பேசிய அவர், "பின்னர் அந்த வீடியோவை பார்த்த போது, அது என் முன்னால் மிகப்பெரிய அளவில் தோன்றியது என்பதை உணர்ந்தேன். அதை அப்போதே பார்த்திருந்திருந்தால், என்னை அது இன்னும் அதிகமாகப் பயமுறுத்தியிருக்கும் என்று தோன்றியது" என்றும் தெரிவித்தார் . 'ஹம்பேக் திமிங்கிலத்தால் மனிதனை விழுங்க இயலாது' அட்ரியனைப் பொருத்தவரை, அந்த அனுபவம் வெறும் உயிர் தப்பியதைப் பற்றியது மட்டுமல்ல. ஆனால் திமிங்கிலம் அவரைத் துப்பியபோது தனக்கு "இரண்டாவது வாய்ப்பு" கிடைத்ததாக உணர்ந்ததாக அவர் கூறினார். "உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றில் ஏற்பட்ட அந்த 'தனிப்பட்ட' அனுபவம், அதுவரை நான் என்ன சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பதைப் பற்றியும், அந்த அனுபவத்தை எவ்வாறு பயன்படுத்தி, அதற்காக நன்றியுடன் இருக்க முடியும் என்பதையும் சிந்திக்க என்னை வித்திட்டது," என்று அவர் மேலும் கூறினார். ஆனால், வனவிலங்கு நிபுணரின் கூற்றுப்படி, அட்ரியன் இவ்வளவு விரைவாக திமிங்கிலத்திலிருந்து தப்பிக்க ஒரு காரணம் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹம்பேக் திமிங்கிலங்கள், சிறிய மீன்கள் மற்றும் இறால்களை விழுங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட "வீட்டு தண்ணீர்க் குழாயின் அளவே உடைய" குறுகிய தொண்டைகளைக் கொண்டுள்ளன என்று பிரேசிலிய பாதுகாவலர் ரோச்ட் ஜேக்கப்சன் செபா பிபிசியிடம் தெரிவித்தார். "கயாக்கர்கள், டயர்கள் அல்லது ட்யூனா போன்ற பெரிய மீன்களை கூட அவற்றால் விழுங்க முடியாது," என்பதைத் தெரிவித்த செபா, "இறுதியில், அந்த திமிங்கிலம் கயாக்கிங் சென்றவரைத் துப்பியது, ஏனெனில் அதனால் விழுங்க இயலாது" என்று அவர் கூறினார். ஹம்ப்பேக் திமிங்கிலம் தற்செயலாக அட்ரியனை மூழ்கடித்திருக்கலாம் என செபா பரிந்துரைத்தார். அதாவது, "திமிங்கிலம் மீன் கூட்டத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தவறுதலாக, அது மீன்களுடன் அவரை விழுங்கியிருக்கலாம்" என்கிறார் செபா. "திமிங்கிலங்கள் உணவுக்காக மிக விரைவாக மேலெழும்பும் போது, அவை தற்செயலாக தங்கள் பாதையில் உள்ள பொருட்களை தாக்கலாம் அல்லது மூழ்கடிக்கலாம்." திமிங்கிலங்கள் வழக்கமாக நீந்தும் பகுதிகளில் துடுப்புப் பலகைகள், மிதவைப்படகுகள் அல்லது அதிகம் சத்தம் எழுப்பாத மற்ற படகுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு "முக்கியமான நினைவூட்டலாக" அமைந்துள்ளதாக அவர் எச்சரித்தார். திமிங்கிலத்தைப் பார்ப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் பயன்படுத்தப்படும் படகுகள், அவற்றின் இயந்திரங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த ஒலியின் மூலம் திமிங்கிலங்களால் அந்த படகுகளின் இருப்பைக் கண்டறிய முடியும். லூயிஸ் பர்ருச்சோ மற்றும் மியா டேவிஸ் ஆகியோர் தந்த கூடுதல் தகவல்கள் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8q0my3g42o
  15. Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 05:52 PM மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மீன் பிடி சட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு யாருக்காவது அனுமதி வழங்கப்படுகின்ற போது உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206766
  16. 15 FEB, 2025 | 05:50 PM மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலும், எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கணிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும் கனிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(15) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவில் மூன்று திட்டங்கள் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் சூழ்நிலையில் அதானியுடைய காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனம் பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசாங்கம் எதிர்வரும் வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிகிறோம். மின்சாரத்தை கொள்வனவு செய்வதில் விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட முரண்பாடு, அத்திட்டத்தை மீளாய்வு செய்ய அரசு குழு ஒன்றை நியமித்திருந்த சூழ்நிலையிலே அதானி குழுவினரால் இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக இத்திட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேறுவார்களா?,அல்லது எதிர்வரும் வாரம் இடம்பெற உள்ள பேச்சு வார்த்தையுடன் அவர்கள் மீண்டும் இணங்கி போவார்களா? என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. எனவே மன்னார் தீவில் அவர்கள் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அழுல் படுத்தக் கூடாது என்பதே எமது தொடர்ச்சியாக கோரிக்கையும், ஜனநாயக போராட்டமுமாக அமைந்துள்ளது. மக்களின் அடிப்படை இருப்பையும்,உணர்வையும், புரிந்து கொண்டு அவர்கள் மன்னார் தீவில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் வெளியேறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கனிய மணல் அகழ்வு மேலும் இரண்டு தடவைகள் கணிய மணல் அகழ்வு குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு கனிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க கள விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்திருந்த போது மக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த இரு தடவைகள் அவர்களினால் நடைமுறை படுத்த முடியவில்லை. அவர்கள் மீண்டும் கள விஜயத்தை மேற்கொள்ள பாதுகாப்பு கோரியுள்ளனர்.பாதுகாப்புடன் சென்று கள ஆய்வு மேற்கொள்ள அவர்கள் பாதுகாப்பை கோரியுள்ளனர். நீதிமன்றத்தின் ஊடாக அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். திங்கட்கிழமை அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு புதன்கிழமை மன்னாரிற்கு 23 திணைக்களங்களும் வந்து கள ஆய்வு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிகின்றோம். எனவே கனிய மணல் அகழ்வுக்கான கள ஆய்வில் ஈடுபட அவர்கள் வருகை தரக் கூடாது. மக்களின் விருப்பம் இன்றி அவர்கள் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க கூடாது. மன்னாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மழை விட்டும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தேங்கியுள்ள மழை நீரை வெளி யேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விதமான சுற்றுச்சூழல் தாக்கத்தையும் சமூக இருப்புக்கான கேள்விக் குறியையும், மக்கள் வாழ்விடங்களில் இருக்க முடியாத ஒரு நிலைப்பாடும் காணப்படுகின்ற மையினால் இந்த பகுதியில் மண் அகழ்வு செய்யக் கூடாது என்கிற மக்களினுடைய போராட்டத்தை மதித்து அவர்களுடைய உணர்வுகளுக்கு செவி சாய்த்து இத் திட்டத்தில் இருந்து அவர்களும் வெளியேற வேண்டும். இவ்வாறு இன்றி அடாத்தாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் வருவர்களாக இருந்தால் மன்னார் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு எதிராக மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய ஜனநாயகப் போராட்டத்தை மக்கள் முன்னெடுப்பார்கள். எனவே அரசு இந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு,இத்திட்டங்களில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும். மேலும் கரையேற மணல் அகழ்வு செயல் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும். இந்த மூன்று திட்டங்களையும் மன்னார் தீவு பகுதியில் இருந்து அவர்கள் கை விட்டு, வெளியேறி மக்களின் வாழ்வியல் இருப்புக்கும், வாழ்வியல் சுகாதார சுற்றுச் சூழல் பாதிப்புக்களின் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலைப்பாட்டிற்கு அரசு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என மன்னார் மக்கள் சார்பில் நாங்கள் இந்த கோரிக்கையை விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், மீனவ சங்க பிரதி நிதி என்.எம்.ஆலம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/206763
  17. நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்தன 15 FEB, 2025 | 04:34 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட மின்தடையால் செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் திருத்தப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய 3 இயந்திரங்களும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடையால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன. இதன் விளைவாக, தேசிய மின்கட்டமைப்பில் 900 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டது. நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காக கடந்த 10, 11 ஆகிய இரு தினங்களில் தலா ஒன்றரை மணிநேரமும், கடந்த 13ஆம் திகதி ஒரு மணிநேரமும் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது. எவ்வாறாயினும் வெள்ளிக்கிழமை (14) காலை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது இயந்திரமும் இயங்க ஆரம்பித்ததையடுத்து, இதன் காரணமாக நாளாந்த மின்வெட்டு முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக மின்சக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/206761
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனித உடலின் செயல்பாட்டில் தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது 15 பிப்ரவரி 2025, 11:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புனேவில் கியான் பாரே சின்ட்ரோம் (Guillain-Barre syndrome) நோய் குடிநீர் மூலம் பரவுவதாகத் தெரிய வந்துள்ளது. குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? இவற்றில் குடிப்பதற்குப் பாதுகாப்பான நீர் எது? எந்த நீர் அதிக தூய்மையானது? ஊட்டச் சத்துகள் அதிகமுள்ள நீர் எது? இந்தக் கட்டுரையின் மூலம் புரிந்துகொள்ளலாம். தண்ணீர் என்பது H2O. தண்ணீர் மூலக்கூறு 2 ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுவால் ஆனது. இதுபோன்ற லட்சக்கணக்கான மூலக்கூறுகள் ஒன்றிணைந்து ஒரு துளி நீரை உருவாக்குகின்றன. பூமி 71% தண்ணீரால் நிரம்பியுள்ளது. இதில் 96.5% கடலில் உள்ளது. பூமியில் உள்ள நீரில் 1% மட்டுமே குடிக்க உகந்ததாக இருக்கிறது. மனித உடல் சுமார் 60-70% தண்ணீரால் ஆனது. மனித உடலின் செயல்பாட்டில் தண்ணீர் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான் நாம் எந்த வகையான தண்ணீரைக் குடிக்கிறோம் என்பதும் முக்கியமாகிறது. விரல் நகத்தில் தோன்றும் வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது? தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா? மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி? தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா? குடிநீரின் தரம் நீரின் தரத்தை அளவீடு செய்து அது குடிப்பதற்கு உகந்ததா என்பதைக் கண்டறிய இந்திய தர நிலைகள் பணியகம் சுமார் 60 பரிசோதனைகளைப் பரிந்துரைத்துள்ளது. இவை குடிநீருக்கான இந்திய தரநிலை விவரக் குறிப்புகள்-10500 என அழைக்கப்படுகின்றன. குடிநீரின் பி.ஹெச், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய தர நிலைகள் பணியக அளவுகளின்படி 6.5 முதல் 8.5-க்குள் இருக்க வேண்டும். தண்ணீரில் பல உப்புகளும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. அவற்றின் சரியான அளவுகளை அளவீடு செய்ய டிடிஎஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. தண்ணீரில் இருக்கும் டிடிஎஸ் எனப்படும் மொத்த கரைந்த திடப் பொருள்கள் ஒரு லிட்டருக்கு 500 மில்லிகிராமிற்கு மேலோ 100 மில்லி கிராமிற்கு கீழோ இருக்கக்கூடாது என இந்திய தரநிலைகள் பணியகம் தெரிவித்துள்ளது. தண்ணீரின் டிடிஎஸ் 100க்கு கீழ் இருந்தால், அதில் உடலுக்குத் தேவையான உப்புகள் இல்லை என்று பொருள். தண்ணீரின் டிடிஎஸ் 500-க்கு மேல் இருந்தால் அந்த நீர், கடின நீர் என அழைக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் குடிக்க தகுதியானது அல்ல. தண்ணீரில் இருக்க வேண்டிய உப்புகளின் அளவுகளையும் பிஐஎஸ் நிர்ணயம் செய்துள்ளது. ஒரு லிட்டர் தண்ணீர் இருக்க வேண்டிய உப்புகள் பைகார்பனேட்ஸ் 200 மி.கி. கால்சியம் 200 மி.கி. மெக்னீசியம் 30 மி.கி. நைட்ரேட் 45 மி.கி, ஆர்சனிக் 0.01 மி.கி செம்பு 0.05 மி.கி. குளோரைட்ஸ் 250 மி.கி சல்ஃபேட் 200 மி.கி. ஃபுளோரைடு 200 மி.கி. இரும்பு 0.3 மி.கி பாதரசம் 0.01 மி.கி. துத்தநாகம் 5 மி.கி. ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி?12 பிப்ரவரி 2025 பனாமா: கடலுக்கு அடியில் 11 மீட்டர் ஆழத்தில் வீடு கட்டி 120 நாட்கள் வாழ்ந்த மனிதர்5 பிப்ரவரி 2025 தண்ணீரில் அளவுக்கு அதிகமாக உப்புகள் இருப்பதன் பக்க விளைவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தண்ணீரில் பல உப்புகளும், ஊட்டச்சத்துகளும் உள்ளன தண்ணீரில் உப்புகளின் அளவு அதிகரித்தால், அது உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். ஃபுளோரைடு 1 மில்லிகிராமிற்கு மேல் இருந்தால் பல் ஃபுளோரோசிஸ் ஏற்பட வாய்ப்புள்ளது சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால் ரத்த அழுத்த பிரச்னைகளை ஏற்படுத்தலாம் வேளாண் உரங்களில் இருந்து நைட்ரேட் குடிநீர் மூலம் உடலுக்குள் சென்றால் அது ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவைக் குறைத்து, மூச்சு விடுவதில் சிரமம், தலை சுற்றல், கண்களின் பார்வை நீலமாக மாறுவது போன்றவை ஏற்படக் கூடும். இது 'புளூ பேபி சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகப் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும். தண்ணீரில் ஆர்சனிக் அதிகம் இருந்தால், தோலில் வெண் புள்ளிகள் ஏற்படும். தண்ணீரில் கால்சியம் அளவு குறைவாக இருந்தால் அது எலும்புகளை பாதிக்கக்கூடும் குறைவான டிடிஎஸ் உள்ள குடிநீர் நரம்பு மண்டலத்தைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா: பெண்களிடம் நெருங்கிப் பழகி டீப் ஃபேக் மூலம் ஆபாசமாக சித்தரித்து மோசடி - என்ன நடந்தது?14 பிப்ரவரி 2025 காதலர் தினத்தன்று பௌர்ணமி: முழு நிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? புனைவுகளும் உண்மையும்13 பிப்ரவரி 2025 தண்ணீரின் வகைகள் மற்றும் அதன் சாதக, பாதகங்கள் குழாய் நீர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குழாய்கள் பல தூய்மையற்ற பகுதிகளை கடந்து செல்கின்றன. நமது வீடுகளுக்கு ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்களில் இருந்து குழாய் மூலம் வரும் குடிநீரில் குளோரினேற்றம் செய்யப்படுகிறது, அதாவது குளோரின் கலக்கப்படுகிறது அல்லது ஓசோன் மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்தச் செயல்முறைகள் தண்ணீரின் தூய்மையை அதிகரிக்கச் செய்யப்படுகின்றன. இதிலிருக்கும் அபாயங்கள் என்ன? இந்த முறையில் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் அனைத்தும் கொல்லப்படுவதில்லை. எனவே தொற்று பரவ வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. குழாய்கள் பல தூய்மையற்ற பகுதிகளைக் கடந்து செல்கின்றன. அவை வெடித்தாலோ, கசிந்தாலோ, தண்ணீர் மாசுபடும். அது அபாயகரமானது. ஆறு, கிணறு, ஆழ்துளை கிணற்று நீர் பெரும்பாலும் கிராமங்களிலும் நகரங்களிலும், கிணறு அல்லது ஆழ்துளை கிணற்று நீர் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பிபிசி மராத்தியிடம் இதுகுறித்துப் பேசிய மருத்துவர் அவினாஷ் போண்ட்வே, "கிணறு அல்லது அழ்துளை கிணற்று நீர், நிலத்திலிருந்து கிடைக்கிறது. கழிவுநீர் குழாய்கள் அதே கிராமத்தின் வழியாக, அதே பக்கத்தில் செல்கின்றன. எனவே அவற்றிலிருந்து பாக்டீரியா மற்றும் வைரஸ்கள், கிணற்று நீரில் அதிக அளவில் நுழைய முடியும்," என்கிறார். மேலும், "இதன் காரணமாக, கிணற்று நீர் மாசடைவதுடன், நிலத்தில் இருந்து வரும் பல வகையான உப்புகளும், ரசாயனங்களும் அத்துடன் கலந்துவிடுகின்றன. இது பல வகையான பிரச்னைகள் அல்லது கோளாறுகளை ஏற்படுத்தலாம். அது வயிறு தொடர்பான நோய்களையும் ஏற்படுத்தலாம். எனவே கிணற்று நீரைப் பயன்படுத்துவோர் அதை நன்கு கொதிக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?13 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதி - விவசாய சேதம் குறையுமா? அல்லது காடுகளுக்குப் பாதிப்பா?9 பிப்ரவரி 2025 கொதிக்க வைத்த குடிநீர் தண்ணீரை வடிகட்டுவது அதிலிருக்கும் கழிவுகளை அகற்ற உதவுகிறது. ஆனால் நீரில் இருக்கும் வைரஸ் மற்றும் ரசாயனங்களை வடிகட்ட முடியாது. இந்தத் தண்ணீரைக் கொதிக்க வைப்பது, அதாவது அதை 100 டிகிரி செல்சியல் என்ற கொதிநிலைக்குக் கொண்டு வருவது அதிலிருக்கும் பெரும்பாலான பாக்டீரியாக்களை கொன்றுவிடும். ஆனாலும் சில வைரஸ்கள் அழிக்கப்படுவதில்லை. ஒற்றை செல் உயிரினமான அமீபா போன்றவை அழிக்கப்படுவதில்லை. அவை கொதிக்கும் நீரிலும் பிழைத்திருக்கும் ஆற்றல் பெற்றவை. இவை வாந்தி, பேதி, மற்றும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்.ஓ. வடிகட்டியில் தண்ணீர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூய்மைப்படுத்தப்படுகிறது இந்த வார்த்தைகள் தொடர்ந்து விளம்பரங்களில் ஒலிக்கின்றன. ஆர்ஓ என்றால் ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ். இந்தச் செயல்முறையில் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, மற்றும் நச்சுகள் அழிக்கப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில், உப்புகள் போன்ற ஊட்டச்சத்துகளும் தண்ணீரிலிருந்து நீக்கப்படுகின்றன. ஆக்டிவேடட் கார்பன் என்ற செயல்முறை தண்ணீரில் இருக்கும் கரிம ரசாயனங்களை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரின் நிறம் மற்றும் சுவையைப் பாதிக்கும் மாசுக்கள், ரசாயன உரங்களின் கசடுகள், மற்றும் அபாயகரமான ரசாயனங்களை ஆக்டிவேட்டட் கார்பன் வடிகட்டிகள் நீக்குகின்றன. இருப்பினும், அது தண்ணீரில் உள்ள அபாயகரமான மைக்ரோபாக்டீரியாவை நீக்குவதில்லை. யூ.வி. செயல்முறையில், மைக்ரோபாக்டீரியாக்கள் அல்ட்ராவைலட் கதிரியக்கம் மூலம் கொல்லப்படுகின்றன. ஆனால் தண்ணீரில் இருக்கும் ரசாயன மாசுகள் அகற்றப்படுவதில்லை. இந்தச் செயல்முறைகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறைபாடு இருப்பதால், பல வடிகட்டிகள் இந்த மூன்று செயல்முறைகளையும் (ஆர்ஓ, ஆக்டிவேட்டட் கார்பன் பிறகு யுவி) ஒருங்கிணைக்கின்றன. இந்தத் தண்ணீர் தூய்மையானது, ஆனால் அதில் ஊட்டச்சத்து ஏதும் இல்லை. அதுதவிர இந்த வடிகட்டிகளில் இருந்து கழிக்கப்படும் உபயோகப்படுத்த முடியாத தண்ணீரின் அளவும் மிக அதிகம். நீங்கள் பயன்படுத்தும் வடிகட்டிகளை அவ்வப்போது தூய்மைப்படுத்திப் பராமரிக்க வேண்டியது முக்கியம். இதுகுறித்துப் பேசிய மருத்துவர் அவினாஷ் போண்ட்வே, "ஆர்ஓ தண்ணீர் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது அல்லது பல பகுதிகளில் ஆர்.ஓ. தண்ணீர் பெரிய பாட்டில்களில் அடைத்து வணிக ரீதியாக விற்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. ஆர்.ஓ. வடிகட்டியில் தண்ணீர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூய்மைப்படுத்தப்படுகிறது. பல வகையான பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் சில வைரஸ்கள் இதைக் கடந்தும் வரக்கூடும். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால், ஆர்.ஓ. செய்வதால் உடலுக்குத் தேவையான பல்வேறு வகையான உப்புகளும், தாதுப் பொருட்களும் தண்ணீரில் இருந்து அழிக்கப்படுகின்றன" என்கிறார். "எனவே, நமது உடலுக்குத் தேவையான உப்புகள் கிடைக்காதது, கை, கால்களில் உணர்வின்மை, நடப்பதற்கு வலிமையில்லாமல் போவது, தலை சுற்றல் போன்ற பிரச்னைகளை உருவாக்கலாம்" என்றும் எச்சரிக்கிறார். கடல் நடுவே உள்ள சிறிய தீவை ஆயிரக்கணக்கான மக்கள் காலி செய்ய என்ன காரணம்?12 பிப்ரவரி 2025 பாரசூட் முதல் கலங்கரை விளக்கம் வரை - சொந்த கண்டுபிடிப்புகளாலேயே கொடூரமாக உயிரிழந்த 5 விஞ்ஞானிகள்13 பிப்ரவரி 2025 பாட்டில் குடிநீர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்.ஓ மற்றும் பிற வடிகட்டும் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் விற்கப்படுகிறது. அவற்றுடன் தாதுப் பொருட்கள் சேர்க்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படுவது உண்டு. இதனால்தான் தயாரிக்கும் நிறுவனத்தை பொறுத்து பாட்டிலில் விற்கப்படும் தண்ணீரின் சுவை மாறுபடுகிறது. ஆனால் அதுபோன்ற தண்ணீரை வாங்கும்போது, அது எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது, எப்போது பாட்டிலில் அடைக்கப்பட்டது, அதில் இருக்கும் உப்புகளின் அளவு, தண்ணீர் பாட்டில் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கின் வகை போன்ற அனைத்தும் முக்கியமானவை. பாட்டில் குடிநீருக்கு காலாவதி தேதி இருப்பதை நினைவில் கொள்வது முக்கியம். காய்ச்சி, வடித்த நீர் இதில் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டு, நீராவி சேகரிக்கப்படுகிறது. அது குளிரும்போது மீண்டும் தண்ணீராக மாறுகிறது. இது காய்ச்சி வடித்த நீர். இதுவே மிகவும் தூய்மையான நீர். ஆனால் இந்தத் தண்ணீரில் எந்த வைட்டமின்களும் உப்புகளும் இல்லை. எனவே, இந்தத் தண்ணீருக்கு எந்த ஊட்டச்சத்து மதிப்பும் இல்லை. இந்தத் தண்ணீர் பெரும்பாலும் ஆய்வகங்களிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 'மத உணர்வை விட பொறுமையின்மை, கபடம், ஒழுங்கின்மையைப் பார்த்தேன்', கும்பமேளா குறித்த மகாத்மா காந்தியின் பதிவுகள் சொல்வது என்ன?12 பிப்ரவரி 2025 இந்திய வரலாற்றையே மாற்றிய 'நாகா சாதுக்கள்' - கையில் வாளுடன் நிர்வாண கோலத்தில் வலம் வரும் இவர்கள் யார்?8 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுகாதார பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்க தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடிப்பது முக்கியம் நீங்கள் எந்த நீரை குடிக்க வேண்டும்? மருத்துவர் அவினாஷ் போண்ட்வே சொல்கிறார், "தண்ணீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் ரசாயனங்களை எந்தச் செயல்முறையாலும் முழுமையாக அழிக்க முடியாத அளவுக்குத் தண்ணீர் மாசுபட்டுள்ளது." "எனவே சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிப்பது முக்கியம். உங்களால் முடியுமானால் நீங்கள் நிச்சயம் ஒரு நல்ல வடிகட்டியைப் பயன்படுத்தலாம்." சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம், நீங்கள் பருகும் நீர் மாசுபட்டதா என்பதை யூகிக்க முடியும். தண்ணீரின் சுவை எப்படி இருக்கிறது? அது வழக்கத்தைவிட வேறுவிதமான சுவை அல்லது உலோகம் போன்ற சுவையுடன் இருக்கிறதா? தண்ணீரின் நிறம் என்ன? அது எவ்வளவு தெளிவாக இருக்கிறது? குழாயிலோ, உடைகளிலோ கறைகளை ஏற்படுத்துகின்றனவா? அது அழுகிய முட்டை போன்ற ஏதாவது வாசத்துடன் இருக்கிறதா? இவற்றை ஆராய்வதன் மூலம் தண்ணீரின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgx784lqpzo
  19. 15 FEB, 2025 | 01:33 PM நாட்டில் இடம்பெறும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்த வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை 076 6412029 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு குறுஞ்செய்திகளாக அனுப்பலாம். இந்த வாட்ஸ்அப் இலக்கமானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சேவையில் இருக்கும். பொது மக்களால் முன்வைக்கப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/206740
  20. 15 FEB, 2025 | 01:13 PM அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்தால் உடனடியாக அவர்களை அன்பாக அணுகி சேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். உங்களால் முடியாவிட்டால் மேலதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பொதுமகனின் தேவையை எப்படி நிறைவு செய்து கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள். 'பந்தடிப்பது' போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்காதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத் தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் அதை முடிவுக்கு கொண்டு வந்து சரியானதைச் செய்யவேண்டும். இந்த மாற்றத்துக்கு எல்லோரும் தயாராகவேண்டும் எனவும் குறிப்பிட்டார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், வடக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் ஆகியோரை வடக்கு மாகாண ஆளுநர், ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (15) சந்தித்துக் கலந்துரையாடினார். கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஆளுநர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையில் ஒரு விடயமான தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஒரு கூறு எமது பிரதேசத்தை துப்புரவாக வைத்திருத்தல் என்பதாகும். இதன் அங்குரார்பணம் ஒரு நாள் இடம்பெற்றது. அத்துடன் அந்த விடயம் முடிந்துவிடாது. ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றமும் இதைத் தொடர்ந்து கண்காணித்து செயற்படுத்த வேண்டும். முதலீட்டாளர்கள் வருகைதரும் போது அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுங்கள். எமது மாகாணத்துக்கு அதிகளவு முதலீடு தேவை. ஜனாதிபதி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கூறியதைப்போன்று வடக்கு மாகாணத்துக்கு 1,500 கிலோ மீற்றர் நீளமான வீதிப் புனரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கின்றது. இதற்கான வீதிகளைத் தெரிவு செய்யும்போது அதிகாரிகள் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வீதிகளைத் தெரிவு செய்யுங்கள். உங்களுடைய அலுவலகத்துக்கு பொதுமகன் வந்தால் உடனடியாக அவர்களை அன்பாக அணுகி சேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். உங்களால் முடியாவிட்டால் மேலதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பொதுமகனின் தேவையை எப்படி நிறைவு செய்து கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள். அதிகாரிகள் 'பந்தடிப்பது' போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்காதீர்கள். நான் உட்பட எங்கள் அதிகாரிகள் உங்கள் அலுவலகங்களுக்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு இவை தொடர்பில் அவதானிப்போம். சோலைவரி உட்பட உள்ளூராட்சிமன்றங்களுக்கான அனைத்து கட்டணங்களையும் இணையவழியில் பொதுமகன் செலுத்துவதற்கு ஏற்றவகையில் வழிசெய்யுங்கள். இதுவரை அவ்வாறான வழிமுறையில் இணைந்து கொள்ளாத உள்ளூராட்சிமன்றங்கள் விரைவில் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். அரசாங்கமும் டிஜிட்டல் மயமாக்கலைத்தான் ஊக்குவிக்கின்றது. வெளிநாட்டு நிதிமூலங்களில் அமைக்கப்பட்ட கடைகளை குத்தகைக்கு வழங்கும்போது உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். உள்ளூர்வாசிகள் கேள்விகோரலில் பெற்றுக்கொள்ளாவிடின் மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள். உள்ளூராட்சிமன்றங்கள் மக்களுக் சேவை செய்வதற்கானவையே தவிர வருமானம் ஈட்டுவதற்கானது அல்ல. சேவைகளை முதலில் மக்களுக்கு வழங்குங்கள். சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அவை அகற்றப்படத்தான் வேண்டும். இவ்வளவு காலமும் இருந்தது என்பதற்காக அதை அப்படியே தொடரவிட முடியாது. நான் கடந்த மழை காலத்தின்போது இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அதை அவ்வாறு சொல்லிவிட்டு நான் பேசாமல் இருக்கப்போவதில்லை. உள்ளூராட்சி மன்றங்கள் சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். கரவெட்டி பிரதேச சபையின் செயலர், எவ்வாறு இது தொடர்பான நடவடிக்கையைச் செய்தாரோ அதைப்போல ஏனைய சபைகளும் செய்யவேண்டும். அதேபோல, மதகுகள், வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களையும் அகற்றவேண்டும். கடந்த மழை காலத்தில் எங்கெங்கு ஆக்கிரமிப்புக்கள் நடந்துள்ளன என்பதை நீங்கள் அடையாளம் கண்டிருப்பீர்கள். அவற்றை அகற்றுங்கள். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்னதாக வாய்க்கால்களை துப்புரவு செய்யுங்கள். அதைப் பராமரியுங்கள். பருவமழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருப்பதற்கு வழிவகைகளை செயற்படுத்துங்கள். கடந்த பருவமழையின்போது சேதமடைந்த வீதிகளை முன்னுரிமை அடிப்படையில் புனரமைத்துக்கொள்ளுங்கள். சில சந்தைகளில் இன்னமும் பத்து சதவீத விவசாயக் கழிவுகள் அறவிடப்படுகின்றன. இது தொடர்பில் பலரும் பல தடவைகள் முயற்சிகள் எடுத்து கைவிட்டிருக்கின்றனர். நான் இந்த முயற்சியை கைவிடப்போவதில்லை. இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதும் சில சந்தைகளில் அங்குள்ள கட்டமைப்புக்களால் அவர் எதிர்ப்பை சந்தித்துள்ளார். எமக்கு இதை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு பொதுமகன் ஒருவர் சில யோசனைகளை முன்வைத்திருக்கின்றார். அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆராயுங்கள். உள்ளூராட்சிமன்றங்களுக்கு சொந்தமான கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பில் பல முறைப்பாடுகள் வருகின்றன. அதை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுங்கள் என ஆளுநர் குறிப்பிட்டார். இதேவேளை இந்தக் கலந்துரையாடலில் உள்ளூராட்சிமன்றங்கள் தமது நிதியில் இந்த ஆண்டு முன்னெடுக்கவுள்ள சமூகநலனோம்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை முன்வைத்திருந்தன. அவை தொடர்பிலும் ஆளுநர் கவனம் செலுத்தினார். https://www.virakesari.lk/article/206733
  21. 15 FEB, 2025 | 12:43 PM அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை (15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. https://www.virakesari.lk/article/206738
  22. Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 12:16 PM பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர தேசிய கல்விக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (14) பொலன்னறுவை புலதிசிபுர கல்விக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "புலதிசிய தருனை" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புலதிசிபுர கல்விக் கல்லூரியின் இலச்சினையுடன் கூடிய நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார். 2000 முதல் 2025 வரை இங்கு பணியாற்றிய பீடாதிபதிகள் உட்பட முழு பணிக்குழாமினருக்கான பாராட்டு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதமர் என்ற வகையில் உத்தியோகபூர்வமாக ஒரு கல்விக் கல்லூரிக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். எமது அரசாங்கம் கல்விக்கு விசேட கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த, கல்வியின் தரத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு முதல் நாம் செய்யப்போகும் கல்விச் சீர்திருத்தம் ஒட்டுப் போடுகின்ற ஏற்கனவேயுள்ள ஒன்றை இழுத்துச்செல்கின்ற ஒரு முறைமையல்ல. இது ஒரு தரமான மற்றும் மனிதாபிமான மற்றும் நவீன உலகை வெற்றிகொள்ளக்கூடிய ஒரு நபரை உருவாக்கும் கல்வி சீர்திருத்தமாகும். கல்வியின் தரம் ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது, நாம் எதிர்பார்க்கும் இலக்கை அடைய ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். உலகில் சிறந்த கல்வியை நம்மால் கொண்டு வர முடியும், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வர முடியும், ஆனால் அனைத்தின் இறுதி முடிவு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தரம் மற்றும் மனித உறவுகளின் வலிமையினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இதுவரை நடைமுறையில் இருந்த கல்விச் சீர்திருத்தங்களில் மறந்து போன விடயம் என்னவென்றால், ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அறிவும் அளிக்கும் திட்டம் எதுவும் அவற்றில் இருக்கவில்லை என்பதுதான். பயிற்சி மற்றும் அறிவு மூலம் ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதே எங்கள் முதன்மையான கவனமாகும். இன்றைய சமூகத்தில் ஒரு ஆசிரியருக்கு உள்ள அங்கீகாரம் பற்றியோ அல்லது ஆசிரியர் தொழிலை நீங்கள் தேர்ந்தெடுத்ததை பற்றியோ நீங்கள் திருப்பதியடைய முடியுமான நிலை உள்ளதா? ஆசிரியர் தொழில் என்பது ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை உருவாக்கும் அல்லது அழிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு தொழில். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, அத்தகைய சக்தியும், வலிமையும், பொறுப்பும் கொண்ட ஆசிரியர்கள் இந்த நாட்டில் பிறக்க வேண்டும். ஆனால் அத்தகைய கல்வியைப் பெறுவதற்கான சூழல், வளங்கள் அல்லது உட்கட்டமைப்பு கல்விக் கல்லூரிகளில் உள்ளதா? இன்று நான் இந்தக் கல்லூரியில் ஒரு கண்காணிப்பை மேற்கொள்கிறேன், அந்த நிலை இருக்கிறதா என்று பார்ப்போம். கல்விக் கல்லூரிகள் மூலம் பட்டங்கள் வழங்குவது பற்றி ஒரு கருத்தாடல் இருப்பது பற்றி நான் அறிவேன். அதனை பெயர் பலகையை மாற்றுவதன் மூலமும் செய்யலாம். கடந்த காலங்களில் இப்படி நடந்துள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கத்தின் தரம் உள்ளதா என்பதுதான் பிரச்சினை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார். விழாவினைத் தொடர்ந்து மாணவ, மாணவியரின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கண்காட்சியை கண்டுகளித்த்துடன், கல்லூரியின் வசதிகள் குறித்தும் நேரடியாக சென்று பார்வையிட்டார். கதுருவெல ஜயந்தி விகாரையின் விகாராதிபதி, அமரபுர சத்தம்ம யுக்திக நிகாயவின் பதிவாளர், வடமாகாண பிரதம அதிகரண சங்கநாயக்க தேரர், சங்கைக்குரிய கதுருவெல தம்மபால நாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி. சரத், வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, புலதிசி கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம்.சந்திரசிறி பெரேரா, அரச அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206735
  23. தொழிலதிபர் எலான் மஸ்க்கின் (Elon Musk) பரிந்துரையின்படி 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ஃபெடரல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு. அமெரிக்க அரசாங்கத் துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் இந்நிலையில், அவர்களில் பலர் செயல்திறனற்றவர்கள் என்றும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறி, ஆட்குறைப்பு செய்யப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது 9,500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்துறை, எரிசக்தி, பணி ஓய்வு பெற்றோர் விவகாரங்கள் துறை, வேளாண் துறை, சுகாதாரத் துறை, சேவைகள் துறை எனப் பல்வேறு துறைகளிலும் இந்த ஆட்குறைப்பு நடந்துள்ளது. பதவி விலகல் முன்னதாக செயல்திறன் அற்ற துறைகளாக அறியப்பட்ட துறைகளில் உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து பதவி விலகல் செய்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்ததாகவும் அதற்கு ஆயிரக்கணக்கானோர் இசைவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்டு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பதவி விலகல் செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/layoffs-of-government-employees-in-united-states-1739600365#google_vignette
  24. உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ் நிலையத்தில் அர்ச்சுனா எம்.பி. யும் மற்றைய தரப்பினரும் சமரசம் 15 FEB, 2025 | 09:59 AM நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது. கைக்கலப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால் , அவர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதேவேளை , காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கும் பரஸ்பர முறைப்பாட்டை வழங்கி இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து , யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் போது , இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும் முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி இரு தரப்பினரும் சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து , இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்க்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/206723
  25. மூன்று பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் : வெளியான காணொளி இன்றைய தினம் (15.02.2025) விடுதலை செய்யப்படும் மூன்று பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டிருந்தது. இஸ்ரேல் (Israel) மற்றும் காசாவின் (Gaza) ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250 இற்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்செல்லப்பட்டனர். அதன்பின்னர். தற்காலிக போர் நிறுத்தத்த நடைமுறையின் போது 120 இற்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ள நிலையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிணைக்கைதிகளில் மூன்று ஆண்களை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் யாஹர் ஹரன் (46), அலெக்சாண்டர் ருபெனோ (29) மற்றும் சஹொய் டிகெல் ஷென் (36) ஆகிய மூன்று பேரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/hamas-releases-list-of-3-hostages-to-be-released-1739606765#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.