Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்தன - காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நெட்டன்யாகு தெரிவிப்பு Published By: RAJEEBAN 17 FEB, 2025 | 12:46 PM அமெரிக்கா வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் ,அமெரிக்கா காசாவை அபிவிருத்தி செய்யும் டொனால்ட் டிரம்பின்திட்டத்தினை பாலஸ்தீனியர்களும் அமெரிக்காவின் சகாக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ள போதிலும் வேறு விதமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இது உகந்த திட்டம் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பிற்கு ஒப்பானது என தெரிவிக்கப்படுவதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார். காசா குறித்து நானும் டிரம்பும் பொதுவான மூலோபாயமொன்றை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு,அமெரிக்க ஜனாதிபதியின் திட்டமே சரியானது என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நீங்கள் விரும்பிய எதனையும் செய்யுங்கள் என பிபியிடம் ( பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம்) தெரிவித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். என்னுடன் கலந்தாலோசித்துவிட்டு இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் இந்த வகை குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதற்கு தடை விதித்திருந்தார். வலிமை மூலம்சமாதானம் என கருதுவதால் இந்த குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். எம்கே84-907 கிலோ குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்தன- காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நெட்டன்யாகு தெரிவிப்பு
  2. Published By: RAJEEBAN 17 FEB, 2025 | 10:38 AM உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ்படையினரை பயன்படுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம் என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எமது படையினரை அனுப்புவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நான் தயார், நான் இதனை சாதாரணமாக தெரிவிக்கவில்லை என ஒப்சேவரில் எழுதியுள்ள பத்தியில் அவர் தெரிவித்துள்ளார். இது பிரிட்டிஸ் படையினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விடயம் என்பதை நான் ஆழமாக உணர்கின்றேன் எனினும் உக்ரைன் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உதவுவது என்பது எங்கள் கண்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுவது,எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுவது என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் - பிரிட்டிஸ் பிரதமர்
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜார்ஜினா ரென்னார்ட் பதவி,காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் கடந்த 20 ஆண்டுகளில் மாறியிருக்கக் கூடும். பூமியின் நடுப்பகுதி ஒரு பந்து போன்ற வடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் ஓரங்கள் சில இடங்களில் 100 மீட்டர் உயரத்துக்கு உருக்குலைந்திருக்கலாம் என்பது அந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசியர் ஜான் விடாலின் கூற்று. சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயினங்களை காக்கும் காந்தப்புலத்தை உருவாக்கும் பூமியின் உட்புற மையக்கருவே நமது கிரகத்தின் துடிக்கும் இதயமாக இருக்கிறது. பூமியோடு தொடர்பில்லாமல் உட்புற மையக்கரு, தனியாக சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுழற்சி இல்லாவிட்டால், பூமி அழிந்து, பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தனது காந்தப் புலத்தை இழந்த செவ்வாயைப் போன்று வறண்டு போய்விடும். இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா? சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்? 100-வது ராக்கெட் வெற்றி: முதல் தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்து சிகரம் தொட்ட ஸ்ரீஹரிகோட்டா வானியல் அற்புதம்: ஒரே இரவில் வரிசை கட்டி நிற்கும் 7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்? படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் திடமான மையக்கருவின் ஓரம், மிகவும் சூடான திரவ நிலையில் உள்ள உலோக வெளிப்புற மையக்கருவை தொடும் இடத்தில் வடிவ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடும். நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டில் பூமி சுழலும் வேகத்தை விட உட்புற மையக்கரு சுழலும் வேகம் குறைந்து பின்னர் மீண்டும் வேகமெடுத்ததற்கு என்ன காரணம் என்பதை அறிவதற்காகத்தான் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துகொண்டிருந்தனர். பூமியின் மையக்கரு எப்படி இருக்கும்? பூமியை பாதுகாக்கும் காந்தப்புலத்தை புரிந்துகொள்ளவும் அது வலுவிழக்குமா அல்லது நின்றுவிடுமா என்பதை புரிந்துகொள்ளவும், பூமியின் மையக்கரு எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம். நமது பூமியின் உட்புறம் மிகவும் மர்மமான ஒரு பகுதியாகும். மையக்கரு பூமியின் மேற்பரப்பிலிருந்து 4,000 மைல் ஆழத்தில் உள்ளது. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் விஞ்ஞானிகளால் இதுவரை மையக்கருவை அடைய முடியவில்லை. பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?12 பிப்ரவரி 2025 ஒரு சவரன் தங்கத்தின் விலை இந்தாண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை எட்டுமா? 10 கேள்விகளும் பதில்களும்12 பிப்ரவரி 2025 எனவே, அதன் ரகசியங்களை புரிந்துகொள்ள, நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள் பூமி முழுவதும் பரவும் போது அவற்றை கணக்கெடுக்கின்றனர் சில ஆய்வாளர்கள். இந்த அலைகள் பயணம் செய்யும் விதத்தைக் கொண்டு அவை பூமியின் உட்கரு உட்பட எந்த பொருட்களை கடந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது நமது பூமிக்குக் கீழே இருப்பது என்ன என்பதை கண்டறிவதில் உதவியாக இருக்கும். வேகம் குறைந்த உட்புற மையக்கரு 1991 முதல் 2023வரை ஒரே இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் அதிர்வலைகளை இந்த புதிய ஆய்வு கணக்கில் எடுத்துக்கொண்டது. பூமியின் உட்புற மையக்கரு எப்படி காலப்போக்கில் மாறியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அது உதவியது. அந்த காலகட்டத்தில் சுமார் 2010-ஆம் ஆண்டுவாக்கில் உட்புற மையக்கரு வேகம் குறைந்தது என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் கூடுதல் ஆதாரங்களை கண்டுபிடித்தவர் தெற்கு கலிஃபோர்னிய பல்கலைக் கழகத்தில் புவியியல் விஞ்ஞானியாக இருக்கும் பேராசிரியர் விடால். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பூமியின் மையக்கருவோடு தொடர்புப்படுத்தப்படும் காந்தப்புலம் சூரிய துகள்களுடன் தொடர்பு கொள்ளும்போது நார்தர்ன் லைட்ஸ் ஏற்படுகின்றன ஆனால், உட்புற மையக்கருவின் வடிவம் மாறுகிறது என்பதற்கான ஆதாரத்தையும் அவரது குழுவினர் கண்டுபிடித்தனர். இது உட்புறக்கரு மற்றும் வெளிப்புற கருவின் எல்லையில் உட்புற மையக்கரு உருகும் நிலையில் உள்ள இடத்தில் நிகழ்வதாக தெரிகிறது. வடிவ உருகுலைவுக்கு, வெளிப்புற மையக்கருவின் திரவ ஓட்டம் மற்றும் சமச்சீர் இல்லாத புவி ஈர்ப்பு விசையின் ஈர்ப்பு காரணமாக இருக்கலாம். இந்த ஆய்வில் பங்கேற்காத ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹர்வாயே டுகல்சி "மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய கருத்துரு," என இந்த ஆய்வு குறித்து குறிப்பிட்டுள்ளார். "நவீன அறிவியலில் அதிகம் அறியப்படாத உட்புற மையக்கருவின் பாகுத்தன்மை உள்ளிட்ட முக்கிய பருப்பொருள் குறித்த மதிப்பீடுகளைச் செய்ய இது விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும்" என அவர் தெரிவித்தார். விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?11 பிப்ரவரி 2025 காதலர் தினத்தன்று பௌர்ணமி: முழு நிலவு நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா? புனைவுகளும் உண்மையும்13 பிப்ரவரி 2025 காலப்போக்கில் வெளிப்புற மையக்கரு, திடமான உட்புற மையக்கருவை போல் உறைந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது முழுமையாக திடமாக மாறுவதற்கு பல கோடி ஆண்டுகள் ஆகும். அது கிட்டத்தட்ட பூமியில் உயிரின் அழிவை காட்டும். ஆனால் அதற்குள் இந்த கிரகத்தையே சூரியன் விழுங்கியிருக்கக் கூடும். பூமியின் மையக்கருவில் என்ன நடக்கிறது? பூமியின் மையக்கருவுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி உலகெங்கும் வல்லுநர்கள் நடத்தி வரும் ஆய்வின் ஒரு அங்கமாக பேராசிரியர் விடாலின் பணி உள்ளது. "அறிவியலில், பொதுவாக ஒரு பொருளை புரிந்து கொள்ளும் வரை அவற்றை திரும்பத்திரும்ப பார்க்க முயற்சிப்போம்," என்கிறார் பேராசிரியர் விடால். "இந்த கண்டுபிடிப்பு ஒரு துளிகூட நமது வாழ்வை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் உண்மையில் பூமியின் மையக்கருவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என மேலும் சொல்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த மாற்றங்களுக்கும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் காந்த புலத்தில் திடீர் அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அதற்கும் உட்புற மையக்கரு எல்லையில் நாம் காண்பதற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என்றார். மையக்கரு சுழல்வதும் விரைவில் நின்றுவிடப் போகிறது என்பது போன்ற எண்ணங்களை ஏற்படுத்துவதை தவிர்ப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் விடால். இன்னமும் நிச்சயமற்ற பல விஷயங்கள் இருப்பதாக அவர் கூறினார். "இந்த முடிவுகளை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா என்பதை 100% உறுதியாக எங்களால் சொல்லமுடியாது." என்றார் அவர். அறிவியல் அறிவின் எல்லைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பல ஆய்வாளர்களைப் போல் தான் சொன்னதும் கடந்த காலத்தில் தவறாகியிருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் விடால். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்
  4. Published By: VISHNU 17 FEB, 2025 | 07:33 PM நாளை செவ்வாய்க்கிழமை (18) பல பகுதிகளில் வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வெப்பமான வானிலை நிலவரங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வுத் துறை திங்கட்கிழமை (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும், மேலும் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை எதிர்பார்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  5. 17 FEB, 2025 | 05:37 PM வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவது தொடர்பிலோ போதைப்பொருள் பயன்பாடுகளை நிறுத்துவதற்கோ விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதன் விளைவே மக்கள் துன்பங்களை சந்தித்துவருகிறார்கள் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் சந்திரசேகர் இதனை தெரிவித்தார். அமைச்சர் சந்திரசேகர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கல்விக்கு சிறந்த பெயர் பெற்ற இடமான யாழ்ப்பாணத்தில் இன்று துர்நடத்தைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? கலை கலாச்சாரம் கட்டிக் காத்த யாழ்ப்பாணத்தில் ஏன் இத்தகைய நிலை. ஜனாதிபதித் தேர்தலுக்காக நாம் வீடு வீடாகச் சென்றபோது இங்கு இடம்பெற்று வருகின்ற கசிப்பு உற்பத்தியை நிறுத்த வேண்டும். போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை நிறுத்த வேண்டும் என்றே கேட்கிறார்கள் போதை பொருள் கடத்தல் ,பயன்பாடுகளை அதிகரித்துள்ளமையை நிறுத்தவேண்டும். வாள் வெட்டு அச்சறுத்தல்கள் இடம்பெற்று வருகிறது. இங்குள்ள ஒரு சில பொலிஸ்காரர்கள் அட்டுழியங்கள் அதிகரித்துள்ளது . போதைவஸ்துக் காரர்களுடன் பொலிசார் தொடர்பில் இருக்கின்றார்கள் இவைகளுக்கு கூடிய சீக்கிரம். முடிவுகளை எடுத்து எங்களுடைய சமூகத்தை மீட்டு எடுக்க வேண்டும். யாழ்ப்பாணம் ஏன் இந்தப் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளத என்பதை நாம் தேடிப் பார்க்கவேண்டும் இங்குள்ள குடும்பங்கள் சமூக ரீதியாக இன ரீதியாக மத ரீதியாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளது. இவை எல்லாவற்றக்கும் காரணம் அரசியல் வாதிகளும் காரணமாகின்றர்கள் எந்தவொரு அரசியல்வாதியும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருளில் இருந்து மீள்வதற்கு வழிப்பணர்வு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை இன்றுள்ள பெரிய சவாலாக சீரழிந்துள்ள அசுத்தமடைந்துள்ள நாட்டை ஒற்றுமையான நாடாக கட்டியெழுப்பப்படவேண்டும். இதற்காககத்தான் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த நாட்டை சுத்தப்படுத்துவது மட்டுமன்றி அனைவரது மனங்களையும் சுத்தப்படுத்தவேண்டும். போதைப் பொருளிளன் கீழ் முழுச் சமூகமும் சீரளிக்கப்பட்டுள்ளது மது பாவனை காரணமாக யாழ்மாவட்டம் முதல் இடத்திலுள்ளது உலகத்தில் குடிகார நாடாக இலங்கை உள்ள இடத்தில் இருந்த போது இலங்கையில் நுவரெலியா மாவட்டம் அதிக குடிகாரர் உள்ள மாவட்டமாக இருந்தது இன்று அதிக குடிகாரர் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது. யுத்தத்திற்கு பின்னரான சூழலில் பாதிப்படைந்த மக்களை வறுமையும் சேர்ந்து வாட்டுகிறது. இதன் காரணமாக நூண்நிதி கடன் களை பெற்று அதனைக் கட்டமுடியாதவர்களாக தற்கொலை செய்தவர்கள் அதிகமாகவுள்ள இடமாக வன்னி மாவட்டம் உள்ள்து. இவ்வாறாக தொடர் பாதிப்புகளை வடக்கு மாகாணம் சந்தித்துகொண்டிருக்கிறது இங்கு மட்டுமல்ல முழு இலங்கையுமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நாட்டை மாறிமாறி ஆட்சியிலிருந்தவர்களால் இந்த நிலையேற்பட்டது. நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் அதற்காவே உங்கள் வாக்குகளும் எமக்கு கிடைத்துள்ளது இதனால் தான் இந்த நாட்டை சுத்தப்படுத்த வேண்டும். நாம் எமது பதவியேற்பு ,சுதந்திர தினம் போன்றவற்றிற்கு ஆடம்பர செலவு இல்லாது மிக எளிமையான அவற்றை செய்து காண்பித்தோம். நாம் எவற்றை செய்வோம் என்பதை கூறினோமோ அவற்றை செய்து உண்மையான மாற்றத்தை எற்படுத்துவோம் என்றார். வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவதில்லை : அமைச்சர் சந்திரசேகர்
  6. தலைநகர் டெல்லியில், காலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், ‘நிலநடுக்கத்தின் மையம் (epicentre)’ டெல்லி தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு அருகில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த ஸ்ரீஜன் பால் சிங், நிலநடுக்கத்தின் மையப்பகுதி டெல்லியில் இருந்ததால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதற்குமுன் இதற்குமுன் இதுபோன்ற நிலநடுக்கத்தை உணர்ந்ததில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயத்தில், டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிக்டர் 3.0 அளவுகோளில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நிலநடுக்க பயத்தின் காரணமாக நொய்டா மற்றும் காசியாபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறினர். நிலநடுக்க நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, பூமிக்கடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, ரிக்டர் அளவு கோளில் 4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இந்தியாவின் நில அதிர்வு மண்டல வரைபடத்தில் (seismic zoning map) நில அதிர்வு மண்டலம் 4ல் டெல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, அதிகமக்கள் தொகை அடர்த்தி, திட்டமிடாத மற்றும் பாதுகாப்பற்ற கட்டமைப்புகளின் காரணமாக நிலநடுக்கத்தின் விளைவுகள் குறித்தான அச்சம் அதிகமாக இருக்கிறது. குறைவான அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அதை எளிதாகக் கடந்து செல்லக்கூடிய சூழல் டெல்லியில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. 1720ஆம் ஆண்டு முதல் 5.5 ரிக்டர் அளவுகோளுக்கும் மேல் 5 முறை டெல்லியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் டெல்லி நிலநடுக்கம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், பின்விளைவுகளை கருத்தில்கொண்டு எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்துகிறேன். அதிகாரிகள் நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். தேசிய நில அதிர்வு மையத்தின் இயக்குநர் ஓ.பி. மிஸ்ரா, “நிலநடுக்கம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி நிலநடுக்கம்; முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் வீதிகளில் தஞ்சம்
  7. Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 05:11 PM முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தை அறிவித்துள்ளார். இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நிதியை இவ்வருட வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். அந்த வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென கூட்டுறவுப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியதுடன், இக்கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர் மற்றும் சக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்ப்பாடுகள் குறித்து நேரடியாகக் காண்பித்திருந்தார். அதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர் 04ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது பாராளுமன்ற முதல் உரையில், வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதன்போது வட்டுவாகல் பாலம் அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் உறுதியளித்திருந்தார். இத்தகைய சூழலிலேயே திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு
  8. 17 FEB, 2025 | 04:21 PM தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்துவந்த தனியார் காணியில் அவர்களது அனுமதியின்றி இராணுவத்தின் பாதுகாவலில் பௌத்த விகாரை (திஸ்ஸ விகாரை) கட்டப்பட்டமையை யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இராணுவம் போர்க்காலத்தில் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் உள்ள வீடுகள், இந்துக் கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் பலவற்றை இடிப்பதற்கும் தரைமட்டமாக்குவதற்கும் இவர்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது? அண்மையில் புதிய ஜனாதிபதி “மக்களுடைய காணிகள் மக்களுக்கே வழங்கப்படும்” என்று வழங்கிய வாக்குறுதியின்படி மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படுமா? நீதிமன்றத் தீர்ப்புக்கள் மதிக்கப்படாது கட்டுமானப் பணிகள் பாதுகாப்பு படையினரின் அனுசரணையில் நடக்கும்போது (உ+ம்: குருத்தூர் மலை விவகாரம்) தையிட்டி விகாரை விவகாரத்தில் காணி உரிமையாளர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனால், தையிட்டி விகாரை விவகாரம் இதுபோன்றே வேறு இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனை இடித்து அகற்றினால் பிரச்சினை தீருமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இடிப்பதால் தென்னிலங்கையில் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகளால் பிரச்சினை இன்னமும் மோசமாகும் என்பதே யதார்த்தம். அத்துடன் மத நல்லிணக்கம் எட்டாக்கனியாகிவிடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்புக்களை எல்லா இடங்களிலும் எல்லா மக்களும் (பாதுகாப்புப் படையினர் உட்பட) மதித்து நடப்பது சாத்தியப்படக்கூடிய வழிமுறை என்று நாம் கருதுகிறோம். வடக்கு, கிழக்கில் போர் முடிவுக்கு வந்து 16 வருடங்களாகியும் இன்னமும் பெருமளவில் நிலைகொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் அங்குள்ள மக்களின் பாதுகாப்பையும் அடிப்படை மனித உரிமைகளையும் மதித்துச் செயற்படும்போது அது இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற கள நிலையை உருவாக்கும் என குறிப்பிட விரும்புகிறோம் என்றுள்ளது. தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு; நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு
  9. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து ஒன்றாக மண்பாண்டம் செய்வது, பண்டையை சீன இசைக்கருவிகளை ஆராய்ச்சி செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வது என்று மகிழ்ச்சியாக வாழ்நாட்களை ஒன்றாக கழித்துள்ளனர். இப்படி சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், ஒருநாள் விழுந்தது பேரிடி. பியாவோவி மனைவியான லாங்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். பிறகு லாங்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எப்படியும் ஒருநாள் தனது உடல்நிலை மோசமடையும் அதற்கும் தன்னுடைய விருப்பதை தனது கணவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துள்ளார்.. இதன்படி, தான் இறந்த பிறகு தனது உடமைகளை பானைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்று மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்களும் கடந்தன… இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லாங்கின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. தனது மனைவி உயிரிழந்தாலும், ’எங்களின் காதல் இந்த உலகத்தைவிட பெரியது. அது என்றும் அழியாது’ என்பதை சுட்டிக்காட்டுவகையில், பியோ, தனது மனைவியின் இறுதி ஆசையையும் நிறைவேற்றினார். இதன்படி,. மனைவியின் சாம்பலை களிமண்ணுடன் கலந்து பானை ஒன்றையும் செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட பியோ, தனது மனைவியின் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகவும், இதன்மூலம் இருவரும் இறந்த பிறகு சொர்க்கத்தில் ஒன்றாக வாழ்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ”நான் இதுவரை செய்த மண்பாடங்களிலேயே இதுதான் சிறந்த மண்பாண்டம்.. நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்?.. “ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் பியோ. இதுகுறித்தான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதற்கு கருத்து தெரிவிக்கும் பயனர்கள்,”இன்றைய உலகில் உண்மையான காதல் இன்னும் இருப்பதைக் கண்டால்,சிறுது பொறாமையாகவும் மிகுந்த நெகிழ்ச்சியும் அடைகிறோம். ” என்று தெரிவித்து வருகின்றனர். மனைவின் சாம்பலால் செய்யப்பட்ட பானை; சீன நபரின் வியத்தகு செயல்
  10. 18 பேர் பலி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? அந்த '15 நிமிடங்களில்' என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சனிக்கிழமை இரவு, பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு செல்வதற்காக புது டெல்லி ரயில் நிலையத்தில் கூடிய மக்கள் கூட்டம் கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி செய்தியாளர் 17 பிப்ரவரி 2025, 08:29 GMT சனிக்கிழமை இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். பெண்களும் குழந்தைகளும் கூட இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வேயின் கூற்றுப்படி, பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவுக்கு பங்கேற்க சென்ற பெருங்கூட்டத்தால் இந்த நெரிசல் ஏற்பட்டது. கும்பமேளாவுக்காக தொடர்ச்சியாக சிறப்பு ரயில்களை இயக்குவதாகவும், கண்காணிப்பு அறை அமைத்து, கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ரயில்வே துறை கூறிவரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை (பிப்ரவரி 15) அன்று புது டெல்லி ரயில் நிலையத்தில் என்ன நடந்தது? புது டெல்லி ரயில் நிலையத்தில் விபத்து நடந்த அந்த 15 நிமிடங்கள் குறித்து இங்கே விரிவாக பார்ப்போம். புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - எவ்வாறு நடந்தது? புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 18 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? கும்பமேளாவில் புனித நீராடுவது தவிர பக்தர்கள் வேறு என்னவெல்லாம் செய்கின்றனர்? (காணொளி) இனி காஷ்மீர் செல்வது கஷ்டமில்லை: டெல்லி - ஸ்ரீநகர் இடையே புதிய ரயில் சேவை, அதன் சிறப்பு என்ன? 'ரயில்வே எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை' ரயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறுகையில், "இந்த விஷயத்தில் முற்றிலும் ஒருங்கிணைப்பு இல்லை. ரயில்வே பாதுகாப்புப் படை எப்போதும் கூட்டத்தைக் கண்காணித்து தேவையான தகவல்களை அனுப்புகிறது." என்றார். "ரயில் நிலையத்தின் ஒரு நடைமேடையில் கூட்டம் அதிகம் இருந்தால், அதற்கு அடுத்த ரயில் வேறு ஏதாவது நடைமேடைக்கு வரவைக்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து ரயில்களையும் ஒரே இடத்தைச் சுற்றி நிறுத்தி வைத்திருந்தது பெரிய தவறு. 'சத்' பூஜையின் போது (இந்து மத பூஜை) அதிக கூட்டத்தைத் தடுக்க தனி இடங்களை உருவாக்கியிருப்போம். இம்முறை, கும்பமேளாவின் போது புது டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே துறை இதுபோன்ற எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை." என அவர் தெரிவித்தார். முன்பே கண்டுபிடித்திருக்க வேண்டிய ஒரு தவறு, புது டெல்லி ரயில் நிலையத்தில் நடந்திருப்பதாக அருண்குமார் நம்புகிறார். ரயில்வே தரப்பில் தவறு நடந்திருப்பதாகவும், அவர்களால் மாலை 6 மணி முதல் 10 மணி வரை அதிகரித்த கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார் அவர். இதற்கிடையில், இரவு 9:30 மணிக்கு 9:45 மணிக்கு இடையே, அந்த இரண்டு நடைமேடைகளிலும் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. மக்கள் ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு ஓடிக்கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழத் தொடங்கினர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 'தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள்' - மும்மொழிக் கொள்கை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை எதிர்க்கும் தமிழக அரசியல் கட்சிகள்8 மணி நேரங்களுக்கு முன்னர் திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: மனைவி உயிரிழந்த வழக்கில் கணவர் விடுவிப்பால் எழும் கேள்விகள்16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சனிக்கிழமை, கிழக்கு இந்தியாவை நோக்கிச் செல்லும் பல ரயில்கள் குறுகிய நேரத்துக்குள் நடைமேடையின் ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றன ஒரே திசையில் செல்லும் ஏராளமான ரயில்கள் சனிக்கிழமை இரவு சுமார் 7 மணிக்கு, புது டெல்லி ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ரயில் நிலையத்தின் 12ஆம் எண் நடைமேடையிலிருந்து சிவகங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதற்குள், பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் கூட ரயில்களில் ஏறமுடியாத அளவுக்கு ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது. அதே 12ஆம் எண் நடைமேடையில் இரவு 9:45 மணிக்கு, புது டெல்லியிலிருந்து சுபேதார்கஞ்ச்-க்கு (பிரயாக்ராஜ்) 04404 என்ற எண்ணுள்ள சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ரயில் வந்த சற்று நேரத்தில் பயணிகள் கற்பனை செய்திராத ஒன்று ரயில் நிலையத்தில் நடைபெற்றது. பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில், நடைமேடை எண் 14-ல் சுமார் 9:30 மணிக்கு நிறுத்தப்பட்டது. அது 10:15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அதாவது அதன் பயணிகள் அந்த நடைமேடையில் இருந்தனர். அதற்கு முன் பிகாரை நோக்கிச் செல்லும் மகத் எக்ஸ்பிரஸுக்கு ஒரு பெரிய கூட்டம் காத்திருந்தது. பிகாரை நோக்கிச் செல்லும் ஸ்வதந்திரா செனானி எக்ஸ்பிரஸின் பயணிகள் 13ஆம் எண் நடைமேடையில் காத்திருந்தனர். அது மூன்று மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக நள்ளிரவைத் தாண்டி புறப்பட்டது. அதாவது, அதிக தேவையிருந்த பல ரயில்கள் ஒரு குறுகிய இடைவெளியில் புது டெல்லியிலிருந்து கிழக்கு இந்திய மாநிலங்களை நோக்கிப் புறப்பட்டன. அவை 12, 13 மற்றும் 14ஆம் எண் நடைமேடைகளிலிருந்து புறப்பட்டுச் சென்றன. நெரிசல் ஏற்பட்டது இந்த நேரத்தில்தான். ஆனால், விபத்து ஏற்பட்ட நேரம் மற்றும் விபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ள விசாரணை முடிவதற்காக ரயில்வே அதிகாரிகள் காத்திருக்கின்றனர். பொக்லைன் வாகன ஓட்டுநர் பலி: மதுரை நக்கீரர் தோரண வாயில் இடிப்பின் போது என்ன நடந்தது?16 பிப்ரவரி 2025 மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?16 பிப்ரவரி 2025 'சிறப்பு ரயில் வந்தவுடன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது' படக்குறிப்பு, வடக்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் ஹிமான்ஷு உபாத்யாயின் கூற்றுப்படி, பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் சிறப்பு ரயில் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே விபத்து ஏற்பட்டது கும்பமேளாவுக்கு 12ஆம் நடைமேடையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ஒரு பெரிய கூட்டம் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக 12ஆம் எண் நடைமேடையில் காத்திருந்தது. பிரயாக்ராஜ் விரைவு ரயில் என்பது ஒரு வழக்கமான ரயில். புது டெல்லியிலிருந்து பிரயாக்ராஜுக்கு செல்வதற்கு மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு ரயில். "பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் 14ஆம் எண் நடைமேடைக்கு வரவிருந்தது. மக்கள் அதற்காக காத்திருந்தனர். இதற்கிடையில் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு ஒரு சிறப்பு ரயில் நடைமேடை 12-ல் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் 14ஆம் எண் நடைமேடையிலிருந்து 12ஆம் எண் நடைமேடைக்கு நகர்ந்தனர்," என வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஹிமான்ஷு உபாத்யாய் பிபிசியிடம் தெரிவித்தார். "இதில் மக்கள் ஒருவரை ஒருவர் கடக்கத் தொடங்கினர், யாரோ தடுமாற, யாரோ விழ, இந்த பரிதாப நிகழ்வு நிகழ்ந்தது." இரவு சுமார் 9:30 மணியளவில் கூட்டம் மிகவும் அதிகரித்திருந்தது. ஆனால் நெரிசல் தொடங்கவில்லை என, அந்த நேரத்தில் ரயில் நிலையத்தில் இருந்த நேரடி சாட்சி ஒருவர் தெரிவித்தார். மக்களின் கூட்டம் இருந்த அளவுக்கு பாதுகாப்பு காவல்துறையினர் இருக்கவில்லை என அவர் கூறினார். தமிழ்நாடு அரசியல் களத்தை சூடாக்கிய திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு16 பிப்ரவரி 2025 ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நடைமேடை மாற்றப்பட்டதால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டதாக சில பயணிகளும் நேரில் பார்த்த சாட்சிகளும் கூறுகின்றனர். சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், என்ன செய்வதென தெரியாமல் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்ததாக, ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத சிலர் தெரிவித்தனர். பயணிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. 12ஆம் நடைமேடையில் இருந்தவர்கள் 14ஆம் எண் நடைமேடையை நோக்கியும், 14ஆம் எண் நடைமேடையில் இருந்தவர்கள் 12ஆம் எண் நடைமேடையை நோக்கியும் ஓட ஆரம்பித்தனர். இதில்தான் நெரிசல் நேர்ந்தது. இரண்டு ரயில்களுக்கான அறிவிப்பும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டதால், எந்த ரயிலுக்கு செல்வது என மக்களால் முடிவு செய்ய முடியாமல் போய்விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மக்கள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு ஓடத்தொடங்கியதுதான் நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது. இது நடைமேடை14-லும் அதற்கு அருகே இருந்த நடை மேம்பாலத்திலும் நடைபெற்றது. இந்த சம்பவம் இரவு 9:30 முதல் 10:45 மணிக்குள் நடைபெற்றது. ரயில் குறித்த அறிவிப்பு செய்யப்பட்ட பின்னர்தான் நடைமேடையில் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்த பலர் தெரிவித்தனர். வழக்கமான ரயில்களின் நடைமேடைகள் எதுவும் மாற்றப்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், நடைமேடை மாற்றப்பட்டதால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டதாக சில பயணிகளும் நேரில் பார்த்த சாட்சிகளும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை விசாரித்ததில், ரயிலின் நடைமேடை குறித்த மாற்றத்தை கடைசி நிமிடத்தில் ரயில்வே அறிவித்ததாக எந்த தகவலையும் பிபிசி கண்டுபிடிக்கவில்லை. சூதாட்டம், வானுயர்ந்த கட்டடங்கள் - மோசடிகளால் கட்டி எழுப்பப்பட்ட விசித்திர நகரத்தில் பிபிசி நேரில் கண்டவை41 நிமிடங்களுக்கு முன்னர் டிரம்ப் - புதின் முதல் சந்திப்பை சௌதி அரேபியாவில் திட்டமிடுவது ஏன்? ஒரு பகுப்பாய்வு16 பிப்ரவரி 2025 ரயில்வே துறை வழக்கமாக ஒவ்வொரு ரயிலின் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பான தகவல்களை அதன் இணையதளத்தில் புதுப்பிக்கிறது. இந்த இணையதளத்துக்குச் சென்று '04404 கும்பமேளா சிறப்பு' ரயில் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முயன்றபோது, சனிக்கிழமை இரவு 31 நிமிடங்கள் தாமதமாக இந்த ரயில் புறப்பட்டது குறித்தத் தகவல் மட்டுமே அங்கே வழங்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் தொடர்பான நடைமேடை குறித்தத் தகவல்கள் என்.டி.இ.எஸ்-இல் வழங்கப்படவில்லை, இது மற்ற ரயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை, விபத்து நடந்த நேரத்தில் நடைமேடை எண் 16-இன் நிலை என்ன? இங்கு எந்த ரயிலும் நிற்கவில்லை என்றால், இந்த நடைமேடைக்கு ஏன் சிறப்பு ரயிலை முன்கூட்டியே கொண்டு வரவில்லை? இந்த விபத்துக்குப் பிறகு, புது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து கும்பமேளா சிறப்பு ரயில்கள் நடைமேடை எண் 16இலிருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அஜ்மீரி நுழைவுவாயிலில் இருந்து இந்த முதல் நடைமேடையை அடைய படிக்கட்டுகளில் ஏற வேண்டிய அவசியம் கிடையாது. படக்குறிப்பு,சம்பவப் பகுதியை சுத்தப்படுத்தும் ஊழியர்கள் ரயில்கள் தாமதமானது தான் முக்கிய காரணமா? ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமானதற்கு சில ரயில்கள் தாமதமானதும் ஒரு காரணம் என நம்பப்படுகிறது. இவற்றில் ஒன்றுதான் 12562 ஸ்வதந்திரா செனானி எக்ஸ்பிரஸ் ரயில். அது செல்லவேண்டிய இரவு 9:15 மணிக்குப் பதில் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் நடைமேடை எண் 13-ல் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் இந்த நடைமேடையில் அந்த நேரத்தில் ஏராளமானவர்கள் காத்திருந்தனர். "ஒன்றிரண்டு ரயில்கள் தாமதமான போது, அவை புறப்படும் நடைமேடையை மாற்றி மக்களை தொலைவில் உள்ள நடைமேடைகளுக்கு அனுப்புவதன் மூலம் கூட்டத்தைக் குறைத்திருக்க முடியும்," என்கிறார் அருண்குமார் . இந்த விபத்து குறித்து விசாரிக்க ரயில்வே ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இதில் ஆர்.பி.எஃப் அதிகாரி பங்கஜ் கங்வாரும் இடம்பெற்றுள்ளார். பங்கஜ் கங்வார் முதன்மை பாதுகாப்பு ஆணையராக உள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பங்கஜ் கங்வார் புது டெல்லி ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். நாம் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தோம். கூட்டத்தைக் கருத்தில் கொள்ளும்போது பாதுகாப்புப் படையினர் எவ்வளவு பேர் ரயில் நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டனர்? விசாரணை நடைபெறுவதற்கு முன்பாகவே அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டது, விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்துக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும்? இந்த ஒவ்வொரு கேள்விக்கும் விசாரணை முடியும் வரை காத்திருக்கும்படி அவர் தெரிவித்தார். ஒருபுறம் ரயில்வே அதிகாரிகள், சனிக்கிழமை வந்த கூட்டம் எதிர்பாராதது என்கிறார்கள், மறுபுறம், உத்தரப் பிரதேச அரசு பிரயாக்ராஜில் வரலாறு காணாத அளவு பக்தர்களின் வருகை குறித்து பேசிக்கொண்டிருக்கிறது. யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா? ஐரோப்பிய நாடுகள் பாரிஸில் நாளை அவசர ஆலோசனை16 பிப்ரவரி 2025 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதன்மை பாதுகாப்பு ஆணையர் பங்கஜ் கங்வார், சம்பவ இடத்தை ஞாயிற்றுகிழமை காலை பார்வையிட்டார் பிரயாக்ராஜுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை பொதுவாக, 'சத்' போன்ற விழாக்களின்போது ரயில்வே மிகப்பெரிய முன்னேற்பாடுகளை செய்யும். கூட்டத்தை சமாளித்து சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மக்களை அனுப்பும் வகையில் கூட்டம் வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்படும். பிரயாக்ராஜ் சாலைகள் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏராளமான மக்கள் கூட்டம் இருப்பது குறித்தும், போக்குவரத்து நெரிசல், ரயில் நிலையங்களில் கூட்டம் குறித்தும் சில நாட்களாகவே செய்திகள் வெளியாகின்றன. ரயில்வேயும் புது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து பிரயாக்ராஜுக்கு இரண்டு சிறப்பு ரயில்களை சனிக்கிழமை மாலை இயக்கியது. "மாலையில் ஏரளமான கூட்டம் இருந்தது, நடைமேடை 14 மற்றும் 15-ல் பலர் இருந்தனர். அதற்கு முன் எல்லாம் சரியாக இருந்தது. நாங்கள் சில சிறப்பு ரயில்களையும் இயக்கினோம். அது சீராக சென்றது." என ரயில்வே அமைச்சகத்தின் செயல் இயக்குநர் (செய்தி விளம்பரம்) திலீப் குமார் தெரிவித்தார். "இரவு நேரம் என்பதால் இதுவே கடைசி ரயிலாக இருக்கலாம் என மக்கள் நினைத்திருக்கலாம். இதனால் தள்ளுமுள்ளு அல்லது நெரிசல் ஏற்பட்டிருக்கலாம். பலர் படிக்கட்டில் தவறி விழுந்தனர். அதனால் இந்த சம்பவம் நடந்தது." என்கிறார் அவர். நடைமேடைகளிலும், நடைமேம்பாலங்களிலும், படிக்கட்டுகளிலும் அமர்ந்து மக்கள் ரயிலுக்காக காத்திருப்பதை ரயில் நிலையங்களில் அடிக்கடி பார்க்கலாம். இந்த மக்கள், ரயிலை பார்த்த பின்னர் அந்த குறிப்பிட்ட நடைமேடையை நோக்கி நடக்கத் தொடங்குவர். தங்களது சுமைகளை சுமந்துகொண்டு அதிக தூரம் நடக்க வேண்டாம் அல்லது படிகளில் ஏறவேண்டாம் என்பதுதான் இதன் நோக்கம். சனிக்கிழமை இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் இதேபோன்றதொரு சூழ்நிலைதான் நிலவியது. எதிரி ரேடார்களில் சிக்காது: இந்தியாவுக்கு அமெரிக்கா விற்க முன்வந்துள்ள எப்-35 போர் விமானத்தின் சிறப்புகள் என்ன?15 பிப்ரவரி 2025 இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்?15 பிப்ரவரி 2025 படக்குறிப்பு,சிறப்பு ரயில் குறித்த அறிவிப்புக்கு பிறகே பிரயாக்ராஜுக்கு செல்ல எந்த ரயிலில் ஏறவேண்டும் என்பது குறித்து மக்கள் குழப்பமடைந்ததாக ரயில் நிலையத்தில் பணிபுரியும் பலரும் நம்புகின்றனர் "இந்த கூட்டத்தை முறையாக கையாளாமல் ரயில்வே தவறு செய்துள்ளது. கடைசி நிமிடத்தில் ஒரு பெருங்கூட்டத்தின் முன் அறிவிப்பை வெளியிட்டதால் இது நடந்துள்ளது. இதைபோன்ற ஏற்பாடுகள் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் இருக்க மக்களின் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் அங்கும் இங்கும் அமரக்கூடாது என்பதை மக்களும் உணரவேண்டும்," என்கிறார் அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஷிவ் கோபால் மிஷ்ரா. பிரயாக்ராஜுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு வார இறுதி நாட்களில் புது டெல்லியிலிருந்து ஃபாஃபாமாவ் (Phaphamau) ரயில் நிலையத்துக்கு மாலை 5:20 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதே பாதையில் இரண்டாவது சிறப்பு ரயில் இரவு 7:15 மணிக்கு இயக்கப்பட்டது. கூட்டத்தைக் கருத்தில் கொண்டு கடைசி நிமிடத்தில் இயக்கப்படும் இது போன்ற ரயில்கள் 'தேவைக்கேற்ப ரயில்கள்' என அழைக்கப்படுகின்றன. சனிக்கிழமை கூட்டத்தைக் கருத்தில் கொண்டு புது டெல்லியிருந்து ஃபாஃபாமாவுக்கு (பிரயாக்ராஜ்) முதல் ரயில் 5:20 மணிக்கு இயக்கப்பட்டது. பெரும் கூட்டம் இருந்தும், அடுத்த சிறப்பு ரயில் இரவு 10 மணிக்கு பிறகுதான் அனுப்பப்பட்டது. இந்த நேரத்தில், ரயில் நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. இது பற்றிய பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் அளிக்கப்படாமல் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 18 பேர் பலி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? அந்த '15 நிமிடங்களில்' என்ன நடந்தது?
  11. 2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு - செலவுத் திட்டம் Live Update #Budget2025 17 FEB, 2025 | 01:53 PM சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். 2025 ஆம் ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை அடைவது பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான் இம்முறை வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரச நிதி முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய துறைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு. மீண்டெழும் செலவுகளுக்கு 4% நிதி ஒதுக்கீடு. மக்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவும் மக்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும். கைத்தொழில், வர்த்தகம், மற்றும் உற்பத்தித் துறையில் அதிகளவான மேம்பாட்டை எதிர்பார்க்கிறோம். பொருள் மற்றும் சேவை நியாயமான விலைக்கு தடையின்றி விநியோகிக்கப்படும். கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு. மக்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பொருள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி ஊடாக 19 பில்லியன் டொலர் வருவாயை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு. 2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அரசமுறை கடன்களை முறையாக செலுத்துவோம். ஏழ்மையை இல்லாதொழிப்பதற்கு உரிய திட்டங்கள் செயற்படுத்தப்படும். அரச - தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் அபிவிருத்தி செய்யப்படும் பொருளாதார பரிமாற்ற சட்டம் திருத்தம் செய்யப்படும் தரிசு நிலங்களாக உள்ள அரச காணிகள் குத்தகை அடிப்படையில் தனியார் தரப்பினருக்கு வழங்கப்படும் அரச - தனியார் பங்குடைமை தொடர்பில் புதிய சட்டமூலம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் காணிகளின் உச்ச பயனை பெற "பிம்சவிய" திட்டம் அமுல்படுத்தப்படும் சட்டவரைபாக காணப்படும் வங்குரோத்து தொடர்பான வரைபு வெகுவிரைவில் சட்டமாக்கப்படும் தேசிய தரவு கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் கொழும்பு துறைமுக முனையங்கள் அபிவிருத்திக்கான திட்ட மனுக்கள் எதிர்வரும் நாட்களில் கோரப்படும் சகல பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலராக அதிகரிக்க எதிர்பார்ப்பு. டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தி துரிதப்படுத்தலுக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக புதிய சுற்றுலாத்தலங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். ஜப்பான் நாட்டு முதலீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் நிர்மாணிக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதி இல்லை. வாகனம் இல்லை. சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை மேம்பாட்டுக்காக நடப்பு வங்கி கட்டமைப்புடன் அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்படும். அரச செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும். சுங்க சட்டம் திருத்தம் செய்யப்படும். அதிக பராமரிப்பு செலவுகளை கொண்டுள்ள சகல அதிசொகுசு அரச வாகனங்கள் எதிர்வரும் மாதம் ஏலத்தில் விடப்படும். கொள்கை அடிப்படையில் அரச நிறுவனங்கள் கூட்டிணைக்கப்படும். அரச முயற்சியாண்மைக்கான பரிபாலன சபை ஸ்தாபிக்கப்படும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு மகளிர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டலுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. சுகாதார சேவை டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக அதிக நிதி ஒதுக்கீடு. தோட்ட வைத்தியசாலைகளுக்கான மனித மற்றும் பெளதீக வளங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும். சுகாதாரத்துறைக்கு 706 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்துக்கு 185 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : மருந்து தட்டுப்பாடு ஏற்படாது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பராமரிப்பது தொடர்பில் பயிற்சியளிப்பதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாவும் பல்கலைக்கழக உட்கட்டமைப்புக்காக 135 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு. முன்பிள்ளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 100 ரூபாவாக அதிகரிப்பு. இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. தெரிவு செய்யப்பட்ட முன்பிள்ளை பாடசாலை அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு. ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் அதிசித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 750 ரூபா புலமைப் பரிசில் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு 7500 ரூபாவாகவும், மாணவர் கொடுப்பனவு 6500 ரூபாவாகவும் அதிகரிப்பு. இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. தேர்தலுக்காகவே யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது : யாழ். நூலக அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஏனைய பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. வடக்கு மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்துக்காக 232.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. அஸ்வெசும நலன்புரித்திட்டத்தில் புதிதாக 2,80000 பயனாளர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பு. நீரிழிவு நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாவாகவும், வயோதிபர்களுக்கான கொடுப்பனவு 5,000 ரூபாவாகவும் அதிகரிப்பு. சிறைச்சாலை, சிறுவர் நன்னடத்தை மத்திய நிலையங்களில் உள்ள சிறுவர்களின் நலன்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. சிறைச்சாலையில் இருந்து வெளியேறும் சிறுவர்களின் நலன் கருதி விசேட திட்டங்கள். சிறுவர் மற்றும் இளைஞர் உளவியல் பிரச்சினையானது சமூக பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு தீர்வுகாணும் திட்டங்களை அமுல்படுத்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும். நிவாரண பொதி வழங்கப்படும். இதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். கிராமிய வீதி அபிவிருத்திக்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. கழிவு முகாமைத்துவ வசதிகளுக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. யானை - மனித மோதலை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. அரச சேவையாளர்களின் சம்பளம் 15, 500 ரூபாவால் அதிகரிப்பு. கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. வடக்கு - கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் வீட்டு நிர்மாணிப்புக்கு 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஊடகவியலாளர்கள் மற்றும் கலைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு கொட்டாவ பகுதியில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பு. இலங்கையர் தினம் என்ற பெயரில் தேசிய நிகழ்வு கொண்டாடப்படும். அரசியல் பரிந்துரைகளுடன் அரச நியமனம் மற்றும் அரச தொழில்வாய்ப்புக்கள் இனி இல்லை. தனியார் துறையினரின் 21 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆயிரம் ரூபாவாகவும், 2026 ஜனவரி மாதம் 30 ஆயிரமாகவும் அதிகரிக்க தனியார் தரப்பின் சேவை வழங்கல் சங்கம் இணக்கம். பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மீள்பரிசீலிக்கப்படும். தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. புதிதாக வரிகள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. திருத்தங்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களை இனி இன, மத, மொழி என்ற அடிப்படையில் பிளவுபடுத்த முடியாது. வரவு செலவுத்திட்டத்தின் உள்ளடக்கம் முறையாக செயற்படுத்தப்படும். வரவு - செலவு திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய திறைசேரியின் செயலாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை நிறைவு செய்தார். 2025 வரவு - செலவுத்திட்டம் : மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் - ரூ.4,990 பில்லியன் மொத்த செலவீனம் - ரூ.7,190 பில்லியன். துண்டுவிழும் தொனை - ரூ.2,200 பில்லியன். 2025 ஆம் ஆண்டுக்கான 79 ஆவது வரவு - செலவுத்திட்டத்தின் ஜனாதிபதியின் முழுமையான உரையை மும்மொழிகளிலும் பார்வையிட - https://cdn.virakesari.lk/uploads/medium/file/275690/Budget_Speech_2025_Final.pdf 2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு - செலவுத் திட்டம்
  12. Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 01:26 PM சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினமான கடந்த சனிக்கிழமை 15ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா, "Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான "SUWA ARANA" நோய்த்தடுப்பு பராமரிப்பு மையத்தின் குணப்படுத்தும் தோட்டத்தைக் கையளிக்கும் விழாவில் கலந்துகொண்டார். Suwa Aranaவை இயக்கும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க, புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலில் இத்தோட்டத்தின் பங்கு தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன், புற்றுநோயானது மனம், உடல் மற்றும் உயிரை பாதிக்கிறது என்பதை வலியுறுத்தினார். மேலும், இந்த குணப்படுத்தும் தோட்டமானது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆறுதல், புதுப்பித்தல், வலிமையைக் கண்டறிவதற்கான அமைதியான இடமாக விளங்குகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் கவலைகளைத் தணிப்பதற்கும், அவர்கள் மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் இந்தத் திட்டம் பங்களிப்பு செய்துள்ளது என்று தூதுவர் இசோமட்டா மகிழ்ச்சியோடு தெரிவித்தார். ஜப்பானிய குழந்தைகளின் நல்வாழ்வு மையங்களுடனான எதிர்கால பரிமாற்றங்கள் மூலம் நோய்த்தடுப்பு பராமரிப்பு மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய தோட்டத்தை” கையளிக்கும் நிகழ்வு : ஜப்பானிய தூதுவர் பங்கேற்பு
  13. பிரிட்டனை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஜான் மெக்ஃபால். விபத்து ஒன்றில் வலது காலை இழந்த அவர், மனம் தளராமல் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பரில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாராலிம்பிக் குழுவின் உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். 2007ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற விசா பாராலிம்பிக் உலகக் கோப்பை போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில், அவர் தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் பந்தயத்தில் அவர் 26.84 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராக ஜான் மெக்ஃபாலை ஐரோப்பிய விண்வெளி முகமை தேர்வு செய்தது. இதைத் தொடா்ந்து, அவர் விண்வெளிக்கு வெற்றிகரமாக செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் விண்வெளிக்குச் செல்வதற்கு ஏற்ப என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அந்த முகமை ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், ஜான் மெக்ஃபால் விண்வெளிக்குச் செல்வதற்கு தடையாக எந்தவொரு தொழில்நுட்ப அல்லது மருத்துவக் காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த ஐரோப்பிய விண்வெளி முகமை, அவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல அனுமதித்து மருத்துவச் சான்றிதழ் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கிப் பணியாற்ற உள்ளார். ஆனால், அவர் எப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்வார் என்ற தேதி இறுதி செய்யப்படவில்லை. மாற்றுத்திறனாளி வீரர் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மேற்கொள்ள அனுமதி
  14. 17 FEB, 2025 | 03:21 PM இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர். இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றமை இவரை பெருமைப்படுத்தும் விடயமாகும். அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும். இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
  15. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சிங்கப்பூர் அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில் ப்ரீதம் சிங் வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங், நாடாளுமன்றக் குழுவின் முன் சத்தியப்பிராமணம் செய்த போது பொய் கூறியுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரீதம் சிங் மீதான குற்றச்சாட்டுகள், அவர் தனது கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரயீசா கானை எப்படி எதிர்கொண்டார் என்பதுடன் தொடர்புடையது. முன்னதாக, வேறு ஒரு விவகாரத்தில் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் கூறியிருந்தார். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரிதம் சிங் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, சிங்கப்பூர் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நேரத்தில் வெளியாகியுள்ளது. அந்த தேர்தல் நவம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 இடங்களில் ஒன்பது இடங்களை சிங்கின் தொழிலாளர் கட்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரீதம் சிங் தேர்தல் போட்டியிட சிக்கல் வருமா? சிங்கப்பூரில், குறைந்தபட்சம் 10,000 சிங்கப்பூர் டாலர் (7,440 டாலர் ; 5,925 யூரோ) அபராதம் விதிக்கப்பட்டாலோ அல்லது ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலோ, எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் பதவியை இழக்கலாம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம். திங்களன்று இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி லூக் டான், மக்கள் நிரம்பிய நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார். இந்த அமர்வு பல்வேறு பத்திரிகையாளர்களுக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. "கான் ஒருபோதும் தனது பொய்யை ஒப்புக்கொள்வதை" சிங் விரும்பவில்லை என்பதை பல்வேறு சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று நீதிபதி தெரிவித்தார் . கான் தனது பொய்யைத் தொடர வழிகாட்டியதில் சிங்குக்கு "நேரடி மற்றும் நெருக்கமான ஈடுபாடு" இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். சிங் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் 7,000 சிங்கப்பூர் டாலர் (5,200 டாலர்;4,200 யூரோ) அபராதம் விதிக்க வேண்டுமென்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். உலகின் மிக ஏழ்மையான பகுதியாக இருந்து இப்போது மோசடிகளின் தாயகமாக மாறிய நகரத்தின் கதை டிரம்ப் - புதின் முதல் சந்திப்பை சௌதி அரேபியாவில் திட்டமிடுவது ஏன்? ஒரு பகுப்பாய்வு 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு 48 வயதான சிங், விசாரணை முழுவதும் தான் குற்றமற்றவர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஒரு முக்கியமான பிரச்னையைச் சமாளிக்க கானுக்கு நேரம் கொடுக்க விரும்பியதாக அவர் வாதிட்டார். ஆகஸ்ட் 2021-இல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவரிடம் காவல்துறை தவறாக நடந்துகொண்டதை தான் பார்த்ததாக கான் நாடாளுமன்றத்தில் கூறியதிலிருந்து இந்த விவகாரம் தொடங்கியது. பின்னர் தான் கூறியது உண்மை இல்லை என்பதை கான் ஒப்புக்கொண்டார். பிறகு, கான் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பொய் சொல்லி தவறாகப் பயன்படுத்தியதற்காக, அவருக்கு 35,000 சிங்கப்பூர் டாலர் (26,000 டாலர், 21,000 யூரோ ) அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். தான் கூறியது உண்மையில்லை என்று தெரிந்த பிறகும்,"அதே நிலைப்பாட்டை தொடருங்கள்" என்று ப்ரீதம் சிங் உட்பட அவரது கட்சியின் தலைவர்கள் தன்னிடம் கூறியதாக, அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையின் போது கான் சாட்சியம் அளித்தார். தான் பொய் சொன்னதாக கான் ஒப்புக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கான் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த சிங், "இந்த விவகாரம் குறித்து கானிடம் பேசுவதற்கு முன், நிலைமையைக் கையாள அவருக்கு அதிக நேரம் கொடுத்ததாக" கூறினார் . அதனையடுத்து, சிங் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று முடிவு செய்த நாடாளுமன்றக் குழு , இந்த வழக்கை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பியது. கானின் பொய்யைப் பற்றி கண்டுபிடித்த சிங், "ஒரு கட்டத்தில் தவறான தகவலை ரயீசா கான் விளக்குவதை விரும்பவில்லை" என்பதை சிங்கின் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக நீதிபதி டான் திங்களன்று கூறினார். சிங்கின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ஆம் ஆண்டு தேர்தலின் போது, அவரது கட்சிக்கு கணிசமான வெற்றி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியின் இடங்கள் ஆறிலிருந்து பத்தாக உயர்ந்தது. 1965-இல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு எதிர்க்கட்சி அடைந்துள்ள மிகப்பெரிய வெற்றி இதுவாகும். தேர்தலுக்குப் பிறகு, சிங் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். ரயீசா கான் ராஜினாமா செய்துள்ளதால், நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை அக்கட்சி இழந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்தது நிரூபணம் - தேர்தலில் போட்டியிட சிக்கல் வருமா?
  16. 17 FEB, 2025 | 10:48 AM மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு சேவையாக இலங்கையின் புகையிரத சேவை மீளமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கண்டியில் தெரிவித்துள்ளார். கண்டியில் இருந்து தெமோதர நோக்கி பயணித்த 'எல்ல ஒடிசி - கண்டி புகையிரதத்தில் எல்லவுக்கு செல்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கண்டி ரயில் நிலையத்துக்கு சென்றபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, புகையிரத சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும் இலாபகரமாகவும் அமைய வேண்டும். அதற்காக அரசு பாடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள் நமது நாட்டின் அரசு நிறுவனங்களையும் பொதுச் சேவையையும் புறக்கணித்தன. இதனால், அந்த நிறுவனங்கள் சரிந்தன. இடிந்து விழுந்த நிறுவனங்களில் ரயில்துறையும் அடங்கும். புகையிரதத் துறையினரின் அலட்சியத்தால் ரயில் சேவைகள் பதிவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்தது. புதிய மலிமாவ அரசாங்கம் வந்த பின்னர் அனைத்து அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தலையிட்டு ரயில் சேவையை மீண்டும் பொது சேவையாக கட்டியெழுப்ப பாடுபட்டனர். இந்தச் சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகமானதாகவும் அதிக இலாபம் தரக்கூடியதாகவும் மாற்றப்படும் என்றார். புகையிரத சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும் இலாபகரமாகவும் அமைய வேண்டும் - டில்வின் சில்வா
  17. 17 FEB, 2025 | 10:19 AM இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 3,544 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் பலமுறை விளக்கியும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, தமிழக முதல்வர் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும்போது, மீனவர் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இரு நாட்டு எல்லைகளில் மீனவர் பிரச்சினை சார்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பினரும் பாதுகாப்பாக மீன் பிடிக்கின்றனர். அதேபோல, இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனாலும், இதுவரை மீனவர் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தமிழக முதல்வர், விரைவில் மத்திய அரசின் இந்தப் போக்கை சரி செய்து, மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பார். இவ்வாறு கனிமொழி பேசினார். பின்னர், பத்திரிகை இணையதளம் முடக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "பாஜக ஆட்சியில் ஊடகங்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. எதிர் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாத மத்திய அரசு, ஊடகங்களை முடக்கி வருகிறது. கருத்து சுதந்திரத்தை மெல்ல மெல்ல அழிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது" என்றார். இந்தியா - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை
  18. கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 16 பிப்ரவரி 2025 "புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி" என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக என்ன சொல்கிறது? கல்வியாளர்களும், சட்ட நிபுணர்களும் கூறுவது என்ன? பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு அரசு முடிவு - புதிய கல்வி கொள்கைக்கு திமுக எதிர்ப்பு என்ன ஆகும்? தமிழுக்காக குழந்தைகளுடன் சிறைபுகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு தமிழ்நாடு மொழிப்போர் தியாகிகள் தினம்: இந்தித் திணிப்பை எதிர்த்து இத்தனை பேர் உயிரிழந்தது ஏன்? இந்தித் திணிப்பு எதிர்ப்பு: மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்? தர்மேந்திர பிரதான் கூறியது என்ன? உத்தரப் பிரதேசம் வாரணாசியில், காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு வாரணாசிக்கு சென்றுள்ளது. இந்த நிகழ்வை அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்தார். இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காதது ஏன் என்று செய்தியாளர்கள் தர்மேந்திர பிரதானிடம் கேள்வி எழுப்பினர். "புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்," என்றும் அவர் பதிலளித்தார். "பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, பல்வேறு பிரச்னைகள் இதற்கு காரணம். அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட போதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கிறதா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?" என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசியல் களத்தை சூடாக்கிய திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு16 பிப்ரவரி 2025 மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@DPRADHANBJP படக்குறிப்பு, காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் தமிழகத்திற்கு நிதி வழங்காதது குறித்து கருத்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின் கண்டனம் மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாட்டில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "மும்மொழிக் கொள்கையை சட்டம் என்று ஒன்றியக் கல்வி அமைச்சர் கூறுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது என்று கல்வி அமைச்சரால் கூற முடியுமா?" என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், "மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது தான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டும் தொணியை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எங்கள் உரிமையைக் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்," என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 18 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?16 பிப்ரவரி 2025 டிரம்ப் புதினை சௌதி அரேபியாவில் சந்திக்க விருப்பம் தெரிவித்தது ஏன்? - பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@MKSTALIN/X படக்குறிப்பு,தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட கருத்து தமிழக தலைவர்கள் கூறியது என்ன? தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வது சரியல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். மக்களைப் பாருங்கள். மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வதும், மும்மொழி கொள்கையை ஏற்க நிர்பந்திப்பதும் சரியல்ல. தமிழ்நாட்டில் என்றுமே இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது" என்று திட்டவட்டமாக கூறினார். மத்திய அமைச்சரின் பேச்சைக் கண்டித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "அனைத்து மாநிலங்களையும் சமமாகக் கருத வேண்டிய ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது மிகப்பெரிய அநீதி. இது அரசமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சாவால். இதை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள்'' எனத் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதியளிக்கமாட்டோம் எனக் கூறுவது கொடுங்கோண்மை, ஆணவம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டித்துள்ளார். "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?" என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். "கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது" இது தேவையற்ற கருத்து என்கிறார் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி. "அரசியலமைப்புக்கு விரோதமான போக்கை அவர்கள் எடுத்துள்ளனர். கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஒத்திசைவு பட்டியலுக்கு சென்றிருக்கிறதே தவிர, ஒன்றிய பட்டியலில் கல்வி இல்லை. ஒன்றிய பட்டியலில் கல்வி இருப்பதைப் போன்று ஏகாதிகாரமாக பேசுகிறார் மத்திய அமைச்சர். இருமொழிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது என்பது கொள்கை ரீதியிலான முடிவு. அதற்கு விரோதமாக தங்களின் கருத்தை திணிப்பதும், தங்களின் நிதி அளிப்புக்கு ஆதாரமாக இந்த கருத்தை முன்வைத்து பேரம் பேசுவதும் ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு கொந்தளிக்கும் சூழ்நிலையை அவர்கள் மீண்டும் உருவாக்கக் கூடாது," என்றார். "உங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியை திணிக்க முயன்றாலும், அதன் விளைவுகளை உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது," என்று மும்மொழிக் கொள்கை தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கூறியதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக வீரமணி கூறினார். "மக்கள் வரிப்பணத்தை தான் அவர்கள் தருகிறார்களே தவிர, அது அவர்களின் சொந்தப் பணம் அல்ல. ஒரு கூட்டாட்சியில் இருக்கும் நாட்டை, மத்திய அரசின் ஏகபோக ஆட்சிக்கு ஏற்றவகையில் மாற்றுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை," என்றும் கூறினார் அவர். பட மூலாதாரம்,DMK படக்குறிப்பு,உங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியை திணிக்க முயன்றாலும், அதன் விளைவுகளை உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது என அண்ணாதுரை கூறியதை மேற்கோள்காட்டினார் வீரமணி பாஜக கூறுவது என்ன? "உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். "அரசியல் அமைப்பின் படி நிர்வாக வசதிகளுக்காக இந்தியா மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதே தவிர, முதல்வர் முக ஸ்டாலின் கூறுவது போன்று மாநிலங்களால் இந்தியா உருவாக்கப்படவில்லை" என்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. "நாட்டு மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் ஒரு திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டிருக்கும் பட்சத்தில், அதனை தமிழ்நாடு அரசு மட்டும் ஏற்க மறுப்பது இந்திய அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உள்ளாக்கும் செயல். புதிய கல்விக் கொள்கையை பின்பற்றும் மாநிலங்களுக்கு அதற்கான நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு அரசு பின்பற்றாத போது அதற்கான நிதியை மட்டும் தமிழ்நாடு அரசு கேட்பது எந்த வகையில் நியாயம்," என்ற கேள்வியை முன்வைக்கிறார் அவர். மேற்கொண்டு பேசிய அவர், "புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. எந்த ஒரு மாநிலத்தின் பிரதான மொழியையும் மூன்றாவது மொழியாக தமிழ்நாடு அரசு தேர்வு செய்துக் கொள்ளலாம். அந்த மொழியை பேசும் மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்த மொழியை இங்குள்ள மாணவர்களுக்கு கற்றுத் தரலாம். அதே போன்று தமிழ் மொழியையும் பிற மாநிலங்களுக்கு கொண்டு போய் சேர்க்க இயலும். ஆனால் இதனை தமிழ்நாடு அரசு செய்ய மறுக்கிறது," என்று குறிப்பிடுகிறார் அவர். "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைத் தவிர அனைத்து பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மட்டும் அது எட்டாக்கனியாக உள்ளது" என்றும் அவர் குற்றம்சாட்டினார். கல்வியாளர்கள் கூறுவது என்ன? அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி மாநில செயலாளர் கே. யோகராஜன் பிபிசி தமிழிடம் பேசிய போது, இதில் இருக்கும் பல சிக்கலான கூறுகளை எடுத்துரைத்தார். "கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை முதலில் தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். சமக்ர சிக்‌ஷா அபியான் திட்ட நிதியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதை நிறுத்திவிட்டு, அடிப்படை உரிமையை செயல்படுத்த நிதி வேண்டும் என்று கேட்க வேண்டும்," என்று கூறினார். "1990-களுக்கு முற்பாதியில், மாநிலங்கள் வரியை வசூலிக்கும் உரிமையைப் பெற்றிருந்தன. வரியை வைத்து, கல்விக்கு தேவையான நிதியை மாநில அரசுகள் ஒதுக்கின. ஆனால் வரி வசூலிக்கும் உரிமையானது மத்திய அரசிடம் சென்ற பிறகு, கல்விக்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது. மத்திய அரசு நிதியை மட்டுமே வழங்க முடியுமே தவிர, மாநில அரசுகள் அதனை எப்படி செலவிட வேண்டும்? எதன் அடிப்படையில் கல்வித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று கூற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை," என்று தெரிவிக்கிறார். நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய பிறகும் உயிருடன் மீண்டு வந்தது எப்படி? இளைஞரின் திகில் அனுபவம்51 நிமிடங்களுக்கு முன்னர் இரான் 'ஷாவின்' ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த அரச விழா! 1971-ல் நடந்தது என்ன?16 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சட்டமன்றங்களற்ற யூனியன் பிரதேசங்களில் சமக்ர சிக்‌ஷா திட்டத்தை செயல்படுத்த 100% நிதியை மத்திய அரசே வழங்கும் அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன? "இந்தியையோ அல்லது இதர மொழியையோ கற்றுக் கொள்ளுமாறு மக்களை மத்திய அரசு வற்புறுத்த இயலாது. ஆனாலும் இந்திய அரசமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்கிறார் எழுத்தாளரும், வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் சித்ரா. இந்திய அரசியல் அமைப்பு குறித்த 'இந்திய மக்களாகிய நாம்' என்ற புத்தகத்தின் ஆசிரியரான அவர் பிபிசி தமிழிடம் பேசினார். "கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. மாநில அரசு கல்வி தொடர்பாக எத்தகைய கொள்கையை கொண்டு வந்தாலும், மத்திய அரசுடன் முரண்படாத வகையில் மாநில அரசு தான் உருவாக்கிய கொள்கையை செயல்படுத்தலாம். ஆனால், மத்திய அரசு இதற்கு மாறாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தால், பொதுப் பட்டியலில் இருக்கின்ற காரணத்தால், அதிகாரம் அதிகம் கொண்ட மத்திய அரசின் கொள்கையை பின்பற்றியே ஆக வேண்டும்," என்று கூறுகிறார். "மத்திய அரசுடன் முரண்படுகையில், மாநில அரசு சட்டம் ஒன்றை இயற்றி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆனாலும் அரசியலமைப்பு பிரிவு 74-ன் படி, குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்று மட்டுமே செயல்பட இயலும். தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது," என்றும் தெரிவித்தார் வாஞ்சிநாதன் சித்ரா. இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்?15 பிப்ரவரி 2025 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அரசியலமைப்பு மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது என்பதால் ஒத்திசைவு பட்டியலில் இடம் பெற்றுள்ள அம்சங்களிலும் மத்திய அரசின் முடிவே அதிக வலுப்பெறும் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தி எதிர்ப்பு தமிழ்நாட்டில் பல காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு, சி.ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில நாட்களில் நடந்த கூட்டம் ஒன்றில், கட்டாய இந்தி குறித்து அவர் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் 1938 ஏப்ரலில் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கான ஆணை இடப்பட்டது. இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கங்களும் பெரியாரும் மேற்கொண்டனர். பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் போராட்டங்கள் எதிரொலியாக, 1940ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக அரசு அறிவித்தது. இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் இந்தி கட்டாயமாக்கப்படுவது குறித்து சென்னை மாகாண அரசு அறிவித்தது. முதலில் சென்னை மாகாணத்தில் இருந்த (இப்போதைய) ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளில் இந்தி கட்டாயமென்றும் (தற்போது) தமிழ்நாடு இருக்கும் பகுதிகளில் விருப்பப் பாடமென்றும் அறிவிக்கப்பட்டது. பிறகு, தமிழ்நாட்டிலும் கட்டாயப்பாடமாக்கப்பட்டது. முடிவில் 1950ல் இந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, ஆட்சி மொழியாக எதனைப் பயன்படுத்துவது என்பதில் நீண்ட விவாதம் ஏற்பட்டது. முடிவில் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ள 15 ஆண்டு காலம் அவகாசம் அளிப்பது என்றும், 1965 முதல் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து இந்திக்கு எதிரான மன நிலை பல மாநிலங்களில் நிலவிய நிலையில், இந்தி பேசாத மாநிலங்களின் மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் 1963ல் கொண்டுவரப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தில், 1965க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. "தொடரலாம்" என்று இருப்பதை "தொடரும்" என்று மாற்ற வேண்டுமெனக் கோரப்பட்டது. இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்றார் பிரதமர் நேரு. அப்படியானால், தொடருமென மாற்றுவதில் என்ன தயக்கமெனக் கேள்வியெழுப்பினார் திமுக தலைவர் சி.என். அண்ணாதுரை. எதிர்ப்புகளை மீறி 1963 ஏப்ரல் 23ஆம் தேதி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் 1964 மார்ச் மாதம் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுமென அறிவித்தார். ஆட்சி மொழிச் சட்டம் செயல்படுத்தப்படும் நாளான 1965ஆம் ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதி நெருங்க நெருங்க பதற்றம் அதிகரித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைக்க தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. ஜனவரி 17ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு திருச்சியில் கூட்டப்பட்டது. எதிர்வரும் குடியரசு தினத்தைக் கொண்டாட ஏதுவாக, மொழி மாற்ற தினத்தை ஒரு வாரம் தள்ளிவைக்கும்படி அண்ணாதுரை கோரினார். அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆகவே ஜனவரி 25ஆம் தேதியை துக்க தினமாக அறிவித்தது தி.மு.க. அன்றைய தினம் சி.என். அண்ணாதுரையும் 3,000 தி.மு.கவினரும் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் நடந்த ஊர்வலத்தில் வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரஸ் அலுவலகம் அருகே மோதல் ஏற்பட்டது. முடிவில் அந்த அலுவலகப் பந்தல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதையடுத்து மதுரை முழுவதும் கலவரம் பரவியது. அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது. ஜனவரி 28ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. கலவரங்கள் பிப்ரவரி மாதமும் தொடர்ந்த நிலையில், இந்திய அரசில் அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசனும் இந்தி விவகாரத்தில் தங்கள் அரசின் பிடிவாதத்தை எதிர்த்து பதவி விலகல் கடிதம் அளித்தனர். முடிவில், பிப்ரவரி 11ஆம் தேதியன்று உரையாற்றிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நேருவின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமென உறுதியளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. 'தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள்'
  19. முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். குறித்த போராட்டம் இன்று (16) மூன்றாவது நாளாக தொடர்கின்றது பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். போராளியின் கொள்கை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்ற நிலையில் இன்றைய தினம் (16) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) உள்ளிட்டவர்கள் சென்று தமது ஆதரவை வழங்கியதோடு குறித்த முன்னாள் போராளியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், குறித்த போராளியின் கொள்கைகளுடன் தாம் உடன்பட்டு செல்வதாகவும் இவருடைய கோரிக்கைகள் அடங்கிய வகையிலே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது சாதகமாக அமைகின்ற பட்சத்தில் நீங்கள் கேட்கின்ற கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் தெரிவித்துள்னனர். அரசியல் அமைப்பு இருப்பினும், உடனடியாக இதனை செயல்படுத்த முடியாத காரணத்தினால் உங்களது உயிரை இழக்க நாங்கள் விரும்பவில்லை ஆகவே எங்களது இந்த முயற்சிக்கு உரிய ஒரு கால அவகாசத்தை கொடுத்து தங்களுடைய போராட்டத்தை நிறைவு செய்யுமாறு கோரியுள்ளனர். இருப்பினும், தமிழரசு கட்சியினுடைய உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் மூன்று கட்சிகளையும் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வந்து குறித்த அரசியல் அமைப்பு விடயத்திலே தனது கோரிக்கைக்கு ஏற்ற வகையிலே தாங்கள் விடயங்களை கையாளுவதாக உத்தரவாதம் தரப்படும் பட்சத்தில் தான் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாக குறித்த முன்னாள் போராளி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி
  20. Published By: VISHNU 16 FEB, 2025 | 09:44 PM முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை சந்திப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினரும் வருகை தந்திருந்த போதிலும் அவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஞாயிற்றுக்கிழமை (16) மறுக்கப்பட்டிருந்தது. மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதமரை சந்திக்க வந்த கேப்பாபிலவு மக்கள் அவரை சந்திக்க முடியாது ஏமாற்றமடைந்தனர். இது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி காணி உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். தாம் அமைச்சர் சந்திரசேகரனின் அழைப்பின் பேரில் காணி விடுவிப்பு தொடர்பாக வந்திருந்த போதிலும் ஒரு நிமிடம் கூட தமக்கு ஒதுக்கப்படவில்லை. என்ற கருத்து இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது இவர்களை நம்பாத தாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த கேப்பாபிலவு மக்கள்
  21. Published By: DIGITAL DESK 3 16 FEB, 2025 | 04:51 PM இராணுவ மேஜர் பதவிக்குக் கீழுள்ள அனைத்து இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டுக்களை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவம் பணிப்புரை விடுத்துள்ளது. வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிர்வாக நோக்கங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு பணிப்பு
  22. முன்னால் வீட்டுப் பூ வேலைக்காகது அண்ணை! அது காசுக்கு வாங்கி இருந்தால் தானாம்.....
  23. ஐயா பெரியவர்களே சிறிசுகள் பாதுகாப்பாக இருப்பதை குழப்பிவிடாதீர்கள், வேறு மாற்றுவழிகளை(உங்கள் அநுபவம், நம்பகமான மருத்துவர்) பரிந்துரையுங்கள்.
  24. முடிவெட்ட போயிற்று(வெயிலில் பகல் நேரம் அநாவசியமாக வெளியே செல்வதில்லை) வரும்போது குளிக்க உதவும் தம்பி வரத்தாமதமாக சிறிது நேரம் போயிருந்தேன் அண்ணை. 2 மணிக்கூட்டம் 2.45 அளவில் ஆரம்பமானது. பிரதமர் வந்திறங்கிய பின்னர் புறப்பட்டுவிட்டேன். தொல்புரத்தில் உள்ள முன்னாள் கம்யூனிஸ்ட் அமரர் சுப்ரமணியம் ஞாபகார்த்த 'சத்தியமனை' நூலகத்திற்கும் பிரதமர் சென்றிருந்தார்.
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 16 பிப்ரவரி 2025, 14:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். மறுபுறம், ஐரோப்பிய தலைவர்கள் நாளை பாரிஸில் அவசர உச்சி மாநாட்டில் ஒன்றுகூடி இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். யுக்ரேன் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் உலகளாவிய ராஜ தந்திரத்தில் அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என்ற அச்சம் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் தயாராகி வருகின்றன. இதனால், யுக்ரேன் குறித்த முக்கியமான முடிவுகளில் ஐரோப்பா ஓரங்கட்டப்படுவதாக கவலைகள் எழுந்துள்ளன. அதை நிவர்த்தி செய்வதே பாரிஸில் நாளை நடக்கவுள்ள உச்சிமாநாட்டின் நோக்கம். டிரம்ப் புதினை சௌதி அரேபியாவில் சந்திக்க விருப்பம் தெரிவித்தது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன? 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு டிரம்ப் - மோதி: 'அதானி, ஆவணமற்ற இந்தியர்கள்' - செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள் அவசரமாகக் கூடும் ஐரோப்பிய தலைவர்கள் சௌதி அரேபியாவில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. இந்த முக்கியமான பேச்சுவார்த்தைக்கு யுக்ரேன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை அழைக்காதது குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பிரட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதையொட்டி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அவசரமாகக் கூடி விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அவசர உச்சிமாநாட்டில், ஐரோப்பா கண்டத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுப்பதில் இருந்து ஐரோப்பிய நாடுகள் தவிர்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் குறித்துப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுக்ரேனின் நிலைமை குறித்து விவாதிக்க பிப்ரவரி 17ஆம் தேதியன்று நடக்கவுள்ள இந்த உச்சிமாநாடு 'பெரிதுபடுத்தப்படக் கூடாது' என்றும் இத்தகைய சந்திப்புகள் வழக்கமான ஒன்றுதான் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் அளித்த பேட்டியில், "நமது தேசியப் பாதுகாப்பைப் பொருத்தவரை, இந்த விவகாரம் மிகவும் அரிதான ஒன்று" என்றார். அத்துடன், ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் வலுவான பங்கைக் கொண்டிருப்பது மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மோதி பற்றி கேலிச்சித்திரம்: அண்ணாமலை புகாரால் விகடன் இணையதளம் முடக்கமா?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆப்ரகாம் லிங்கனின் மனைவி அமெரிக்க வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்பட்ட 'முதல் பெண்மணி' - ஏன் தெரியுமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் 'யுக்ரேனிய-அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுத் திட்டம் அவசியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின்கீழ், 'ஐரோப்பிய நாடுகளின் ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தாமல் அமெரிக்கா போருக்கு விரைவான தீர்வை நாடுகிறது' என்ற அதிகரித்து வரும் கவலைகளை கீயர் ஸ்டார்மரின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா தவிர்க்கக்கூடாது என்று பிரிட்டனுக்கான ஜெர்மன் தூதர் மிகேல் பெர்கர் கூறுகிறார். ஞாயிற்றுக்கிழமை காலையில் பிபிசி ரேடியோ 4இல் பேசிய மிகேல் பெர்கர், அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதிகமாக சமரசம் செய்திருக்கலாம் என்று தெரிவித்தார். குறிப்பாக, "யுக்ரேன் நேட்டோவில் சேர அனுமதிக்கப்படாது, யுக்ரேனில் அமெரிக்க ராணுவம் இருக்காது என்ற ரஷ்யாவின் இரண்டு முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது" என்று கூறினார். இதன் மூலம், பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கத் தேவைப்படும் இரண்டு முக்கிய அம்சங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், "நாம் ஒரு கூட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸிகியும் அதையே வலியுறுத்தினார். "சமாதான உடன்பாட்டை அடைவதற்கு ரஷ்யாவிடம் என்ன கேட்க வேண்டும் என்பது குறித்து யுக்ரேனிய-ஐரோப்பிய-அமெரிக்க கூட்டுத் திட்டம் இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது" என்று அவர் தெரிவித்தார். யுக்ரேனின் முதுகுக்குப் பின்னால் செய்யப்படும் எந்த ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியின் எச்சரிக்கைகளை பெர்கரும் எதிரொலித்தார். புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 18 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?8 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் 'ஷாவின்' ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த அரச விழா! 1971-ல் நடந்தது என்ன?16 பிப்ரவரி 2025 அமெரிக்கா - ஐரோப்பா இடையே பிரிட்டன் பாலமாக இருக்குமா? யுக்ரேன் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவை ஓரங்கட்டுவது, சூடான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. "எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் நீடிக்கக் கூடியதாகவும் நியாயமான ஒன்றாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு ஐரோப்பாவின் ஈடுபாடு அவசியம்" என்று பிரிட்டனின் தொழில் மற்றும் வர்த்தக செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் பேசியபோது, "ஐரோப்பாவின் ஆதரவு இல்லாத தீர்வு ஒன்றை ஏற்படுத்த முடியாது. நீடித்த அமைதியைப் பாதுகாப்பதில் அனைவரும் பங்கு வகிக்க வேண்டியது மிகவும் முக்கியம்," என்று ரெனால்ட்ஸ் கூறினார். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து ஐரோப்பாவை விலக்கி வைப்பது, அந்தக் கண்டத்தின் மூலோபாய பாதுகாப்பு நலன்களை முழுமையாக நிவர்த்தி செய்யாத ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கலாம் என்பதே ஐரோப்பிய தலைவர்களிடையே உள்ள முதன்மையான கவலைகளில் ஒன்று. ரஷ்யாவுடனான அவசர ஒப்பந்தம் ஆக்கிரமிப்புக்கு வெகுமதி அளிக்கக் கூடியதாகவும், ஐரோப்பாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒன்றாகவும் இருக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கும் கடந்த சில நாட்களாக அதிபர் டிரம்பை விமர்சித்து வரும் சில ஐரோப்பிய தலைவர்களுக்கும் இடையில் பாலமாக இருக்க முயலும் இடத்தில் தாம் இருப்பதாக பிரிட்டன் கருதுவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் நேற்றிரவு கூறியதாக பிபிசி அரசியல் செய்தியாளர் ஹேரி ஃபார்லே குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பிரிட்டன் மற்றும் அதன் பாதுகாப்பு செலவினங்கள் மீது இவை அனைத்தும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. "பிரிட்டன் தொழிலாளர் கட்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தைப் பாதுகாப்புக்காகச் செலவிடக்கூடிய ஒரு திட்டத்தை வகுக்க உறுதி அளித்துள்ளது. ஆனால், அது எப்போது நடக்கும் என்பதற்கான உடனடி காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த சில நாட்களில் ராணுவத் தலைவர்கள் பிரிட்டன் தனது பாதுகாப்பு செலவினங்களை 2.5 சதவீதத்திற்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்" என்கிறார் ஹேரி ஃபார்லே. முன்னாள் ராணுவத் தலைவர் லார்ட் டான்னட் பிபிசியிடம் பேசியபோது, "பிரிட்டன் ராணுவம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது" என்றார். யுக்ரேனில் எதிர்கால அமைதி காக்கும் பணிகளை வழிநடத்த முடியாத நிலையில் பிரிட்டன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு, "பிரிட்டனின் பாதுகாப்பு செலவினங்களைக் கணிசமாக உயர்த்தத் தவறினால், கீயர் ஸ்டார்மரை வரலாறு புறக்கணிக்கும்" என்றும் அவர் எச்சரித்தார். நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய பிறகும் உயிருடன் மீண்டு வந்தது எப்படி? இளைஞரின் திகில் அனுபவம்15 பிப்ரவரி 2025 டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன?14 பிப்ரவரி 2025 யுக்ரேன் விவகாரத்தில் நிலவும் இருவேறு கருத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விவகாரத்தில் இருவேறு கருத்துகள் நிலவுவதாகக் கூறுகிறார் பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர். அதில் ஒன்று, ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான யுக்ரேனின் எதிர்ப்பு தொடர்வதை "முடிந்த வரைக்கும்" மேற்கு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற நேட்டோவின் நீண்டகால நிலைப்பாடு. ஃபிராங்க் கார்ட்னரின் கூற்றுப்படி, பொருளாதாரத் தடைகள் மற்றும் நீடித்த போர் காரணமாக, ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையான சிக்கலில் உள்ளதாகவும் யுக்ரேன் இன்னும் சில மாதங்கள் மட்டும் தாக்குப்பிடிக்க முடிந்தால், ரஷ்யாவின் தாக்குதல் முடிந்துவிடும் என்றும் அதன் விளைவாக யுக்ரேன் இப்போது இருப்பதைவிட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வலுவான நிலையில் இருக்கும் என்றும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், "இந்த நிலையெல்லாம் மாறிவிட்டதாக மற்றுமொரு கருத்து நிலவுகிறது. அதன்படி, டிரம்ப் நிர்வாகத்திற்கு அதற்கான நேரமோ பொறுமையோ இல்லை. இந்தப் போர் உடனடியாக முடிவடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். புதினுடனான ஒப்பந்தத்தில் அவர் கவனம் செலுத்தி வேகமாக முன்னேறி வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார் ஃபிராங்க் கார்ட்னர். மேலும், "ஐரோப்பாவும் யுக்ரேனும் இந்தப் புதிய, கடினமான சூழ்நிலைக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ள முயல்கின்றன. அதனால்தான் பல சந்திப்புகள் நடக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு அவசரமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நெருக்கடியான பெரிய விஷயம் நடக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அடுத்து என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க தலைவர்கள் அவசரமாக ஒன்று கூடுகின்றனர்" என்றார் கார்ட்னர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், யுக்ரேன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, "ஐரோப்பிய நிலப்பரப்பை ஆக்கிரமித்த விளாதிமிர் புதினுக்கு இதன் மூலம் வெகுமதி அளிக்கும் ஆபத்து இருந்தாலும்கூட, வெள்ளை மாளிகை ரஷ்யாவுடன் அந்த ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன" என்றும் பிராங்க் கார்ட்னர் குறிப்பிட்டுள்ளார். யுக்ரேனின் பாதுகாப்புக்கு நீண்ட காலத்திற்கு இதே அளவிலான ஆதரவை வழங்குவது குறித்து உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், நேட்டோவின் எதிர்காலத்தையும், ஐரோப்பாவின் பாதுகாப்பு முற்றிலும் அதன் கைகளிலேயே விடப்படுமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதற்கிடையே, நேட்டோவில் வலுவான ஐரோப்பிய பங்கு இருக்க வேண்டுமென அழைப்பு விடுத்த பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், யுக்ரேனின் எதிர்காலம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஒருதலைபட்சமான ஒப்பந்தத்தால் எழுதப்படக் கூடாது என்றும், அது ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதன் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த விவாதங்கள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, சௌதி அரேபியாவில் ரஷ்ய பிரதிநிதிகளைச் சந்திக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த மாறி வரும் சூழலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த உத்திகளை வகுக்க ஐரோப்பிய தலைவர்கள் அவசர உச்சிமாநாட்டை நாளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவு, வரும் ஆண்டுகளில் ஐரோப்பா கண்டத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மறுவடிவமைக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. யுக்ரேன் போர்: அமெரிக்கா மீது அதிருப்தியா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.