Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கிடையில், சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை, கல்கிஸ்ஸ பொலிஸை சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் தனது சேவை துப்பாக்கியுடன் காணாமல் போன சம்பவம் பதிவாகியிருந்தது. முதற்கட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் டுபாய்க்கு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வரும் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு, குறித்த கான்ஸ்டபிளின் பெற்றோரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=199966
  2. காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சனிக்கிழமை ஹமாஸ் விடுவித்த பணயக்கைதிகளின் உடல்நிலை மோசமாக இருந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் பணயக்கைதிகளின் அடுத்த குழு இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்பட இருந்த நிலையில், பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்? "ஆக்கிரமிப்பாளர் (இஸ்ரேல்) தன் கடமைகளைச் செய்ய அழுத்தம் கொடுப்பதற்காக போதுமான நேரம் மத்தியஸ்தர்களுக்கு வழங்கப்படுகிறது" இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுப்பதாகக் கூறி ஹமாஸ் அமைப்பினர் தங்களின் டெலிகிராம் பக்கத்தில் விடுத்துள்ள அறிக்கை இது. வரும் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட அடுத்தக்கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை குறிப்பிட்டுள்ள ஹமாஸ், "கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன" என குறிப்பிட்டுள்ளது. பிரச்னையில் முட்டுக்கட்டையாக இருக்கும் சிலவற்றை சுமூகமாக தீர்க்க இந்த குழு நேரம் கொடுப்பதாகத் தோன்றுகிறது. காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும் குரங்கு காரணமா? இலங்கையில் இன்று முதல் மின் தடை அமலாகும் என்று அறிவிப்பு இந்தியாவின் வரி குறைப்பு நடவடிக்கைகள் டிரம்பின் வரி அச்சுறுத்தலை தவிர்க்க போதுமா? ஆனால் அந்த முட்டுக்கட்டை என்ன? ஹமாஸ் அமைப்பு தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இடம் பெயர்ந்த மக்கள் வாழ்விடங்களுக்கு திரும்புவதில் இருக்கும் தாமதம், அவர்கள் மீது இன்னமும் தாக்குதல்கள் தொடர்வது மற்றும் சில மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க மறுப்பது உள்ளிட்டவை இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுக்களாக உள்ளன. ஹமாஸ் உடன் தொடர்பில் இல்லாத சில பாலத்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரும் எண்ணிக்கையிலான பாலத்தீனர்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்தநிலையில் மக்கள் வசிப்பதற்கு தேவையான கேரவன்களை காஸாவுக்கு உள்ளே அனுமதிக்க இஸ்ரேல் மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. காஸாவிலிருந்து வெளியேற மக்களை ஊக்கப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இஸ்ரேலிய அரசு வெளிப்படையாக விவாதிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், தற்காலிக குடியேற்றத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் அனுமதிக்க மறுப்பது, பாலத்தீனர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?9 மணி நேரங்களுக்கு முன்னர் காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன தினம் தெரியுமா? அன்றைய தினம் என்ன செய்வார்கள்?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS அச்சத்தை அதிகரிக்கும் டிரம்ப்பின் வார்த்தைகள் டிரம்பால் ஒவ்வொரு நாளும் காஸாவில் அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. தொடக்கத்தில், காஸாவை மறு கட்டமைப்பு செய்ய பெரும்பாலான பாலத்தீனர்கள் வெளியேற வேண்டும் என டிரம்ப் கூறினார். பின்னர் அவரது கருத்து மாற்றம் பெற்று, "அனைவரும் வெளியேற வேண்டும், அமெரிக்கா காஸாவை கைப்பற்றி, சொந்தமாக்கிக்கொள்ளும்" என்பதாக மாறியது. டிரம்ப்பின் தீ மூட்டும் பேச்சுகள் தொடரும் நிலையில், இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை பயன்தரக் கூடியதா? என்ற கேள்வி ஹமாஸுக்கு ஏற்படலாம். டிரம்ப்பின் வார்த்தைகள் உண்மையிலேயே தீவிரத்தன்மை உடையதாக இருந்தால் காஸாவை பொதுமக்கள் அற்றதாக மாற்றித் தரும் வேலை இஸ்ரேலின் தலையில் விழும் என்பது பாலத்தீனர்களுக்கு தெரியும். அந்த சூழலில், அவர்களுக்கு வசிப்பிடம் கிடைப்பதை தடுப்பது மட்டும் போதுமானதாக இருக்காது. பலப் பிரயோகமும் கண்டிப்பாக தேவைப்படலாம். தற்போது டிரம்ப் கூறுவது என்னவென்றால் சனிக்கிழமைக்குள்ளாக காஸாவில் இருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் திரும்பவில்லை என்றால், போர் நிறுத்தத்தை ரத்து செய்ய தான் பரிந்துரைப்பேன் என எச்சரிக்கிறார். ஆனால், ''இது என்னுடைய கருத்துதான், இஸ்ரேல் தன்னுடைய முடிவை எடுக்கலாம்'' எனவும் கூறுகிறார் டிரம்ப். மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதி - விவசாய சேதம் குறையுமா? அல்லது காடுகளுக்குப் பாதிப்பா?9 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,AFP மீண்டும் போருக்கான முகாந்திரம் இருக்கும் சூழலில், எஞ்சிய பணயக் கைதிகளையும் விடுவிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என ஹமாஸ் நினைக்கலாம். "ஒவ்வொரு அறிக்கையும், பேச்சுக்களும் ஹமாஸின் பிடிவாதத்தை அதிகரிக்கும்" என பிபிசியிடம் கூறுகிறார் இஸ்ரேலைச் சேர்ந்த சல்மானோவிக் . இவருடைய மனைவியின் உறவினரான ஓமர் ஷெம் டோவ் , இன்னமும் ஹமாஸின் பிடியில் உள்ளார். "அவர் (டிரம்ப்) தனது அதீத செயல்பாட்டை கொஞ்சம் குறைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என கூறுகிறார் சல்மானோவிக் . ஹமாஸின் தாமதம் குறித்து இஸ்ரேல் தனக்கேயான சந்தேகங்களைக் கொண்டுள்ளது. கடந்த வார இறுதியில் உடல் மெலிந்த நிலையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், மற்ற பணயக்கைதிகளின் இன்னும் மோசான உடல்நிலையை உலக மக்கள் பார்ப்பதை ஹமாஸ் விரும்பாமல் இருக்கலாம். பட்டப்பகலில் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் குழுவினரின் அணிவகுப்பு காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் போரில் இழந்தவர்களை விடவும், அதிக எண்ணிக்கையில் நபர்கள் ஹமாஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் எச்சரிக்கை ஆகியவற்றால் போர் நிறுத்தம் தொடரலாம் அல்லது தொடரும் என்பதை அனைத்து இஸ்ரேலியர்களும் நம்பவில்லை. மிகக்கவனமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்யப்பட்ட இந்த ஏற்பாடு உடையப்போகிறது என கூறுவதற்கு இது சரியான நேரமாக இருக்காது. ஆனால் பெரும்பாலானோர் யூகித்ததைப் போன்று ஆரம்பம் நன்றாக இருந்தாலும், தற்போது அழுத்தம் அதிகரிக்கிறது என்பது தான் உண்மை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5y7dn8542yo
  3. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்ததாக அவர் தெரிவித்தார். 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விபத்துக்கள் அனைத்தும் 2025 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை பதிவாகியுள்ளன. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆகும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=199958
  4. மின் வெட்டு குறித்து மின்சார சபை விசேட அறிவிப்பு தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துக் கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து அல்லது மின்சார சபையின் கைப்பேசி செயலி மூலம் அல்லது 1987 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அதை அறிந்துக் கொள்ள முடியும் என்று சபை தெரிவித்துள்ளது. இதற்கு, பின்வரும் முறைமைகள் ஊடாக குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். 1. Power Cut Schedule in CEB Website URL: https://dm.ceb.lk Check updates and schedules under the Power Cut Schedule page 2. CEBCare Outage Map o URL: https://cebcare.ceb.lk/Incognito/OutageMap o Customer can check interruption schedules specific to their areas 3. CEBCare Web Customer Portal o URL: https://cebcare.ceb.lk CEBAssist Mobile App (Android Only) 5. SMS Request to 1987Send an SMS to 1987 with the following format to receive your interruption schedule: INT [electricity account number] 6. SMS Notifications Receive SMS alerts with demand management schedules specific to your area. https://tamil.adaderana.lk/news.php?nid=199955
  5. இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால் வென்றது அவுஸ்திரெலியா; தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது; திமுத் கருணாரட்ன ஓய்வு பெற்றார் 09 FEB, 2025 | 04:26 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இரண்டாவது வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் இலங்கையை வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா தொடரை 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாகக் கைப்பற்றியது. இதன் மூலம் இலங்கையில் 2013க்குப் பின்னர் அவுஸ்திரேலியா முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் முழுமையான வெற்றியை ஈட்டியுள்ளது. இந்தப் போட்டியுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 -25 சுழற்சிக்கான டெஸ்ட் போட்டிகள் நிறைவுக்கு வந்தன. காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, அதே மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றியீட்டியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது. தனது இன்னிங்ஸை 48 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ் இப் போட்டியில் தனது இரண்டாவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். குசல் மெண்டிஸின் பிடியை எடுத்த ஸ்டீவன் ஸ்மித், 200 டெஸ்ட் பிடிகளை எடுத்த முதலாவது அவுஸ்திரேலிய வீரரானார். நேற்றைய தினம் ஏஞ்சலோ மெத்யூஸ் 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவர்கள் இருவரைவிட தனஞ்சய டி சில்வா (23) மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார். பந்துவீச்சில் மெத்யூ குனேமான் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் போ வெப்ஸ்டர் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 75 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரு விக்கெட்டை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இப் போட்டி முடிவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இறுதி அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா 67.54% புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் ஆபிரிக்கா 69.44% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 38.46% புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திமுத் விடைபெற்றார் இது இவ்வாறிருக்க, திமுத் கருணாரட்ன தனது கடைசி இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபட்டபோது அவரை கௌரவிக்கும் வகையில் தனஞ்சய டி சில்வா தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருந்தார். போட்டி முடிவில் தனது பிரியாவிடை உரையை உணர்ச்சிபூர்வமாக ஆற்றிய திமுத் கருணாரட்ன, 'நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, 100 டெஸ்ட்களைப் பூர்த்தி செய்யவேண்டும், 10,000 ஓட்டங்களைக் கடக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்து. அதில் ஒரு பகுதியை (100 டெஸ்ட்கள்) நிறைவெற்றிவிட்டேன். ஆனால் மற்றைய பகுதியை (10,000 ஓட்டங்கள்) நிறைவு செய்யாதது மனதுக்கு சங்கடத்தைக் கொடுக்கிறது. மேலும் எனது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடுவதை நான் தவறவிட்டேன். இனியும் தவறவிடமாட்டேன்' திமுத் கருணாரட்ன, 'இது ஒரு நீண்ட கிரிக்கெட் பயணம். நான் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் அரங்கில் அதிக நேரத்தை செலவிட்டேன். ஆகையால் அவர்களிடம் இருந்து (கிரிக்கெட் அரங்கிலிருந்து) பிரிவதால் நான் உணர்ச்சிவசப்படுகிறேன். ஆனால் நான் எங்கு சென்றாலும், எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்;. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை ஆதரித்து உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' எனவும் திமுத் கருணாரட்ன கூறினார். எண்ணிக்கை சுருக்கம் இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 257 (குசல் மெண்டிஸ் 85 ஆ.இ., தினேஷ் சந்திமால் 74, திமுத் கரணாரட்ன 36, ரமேஷ் மெண்டிஸ் 28, மிச்செல் ஸ்டார்க் 27 - 3 விக்., மெத்யூ குனேமான் 63 - 3 விக்., நேதன் லயன் 96 - 3 விக்.), அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 414 (அலெக்ஸ் கேரி 156, ஸ்டீவன் ஸ்மித் 131, உஸ்மான் கவாஜா 36, போ வெப்ஸ்டர் 31, ப்ரபாத் ஜயசூரிய 151 - 5 விக்., நிஷான் பீரிஸ் 94 - 3 விக்., ரமேஷ் மெண்டிஸ் 81 - 2 விக்.) இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 231 (ஏஞ்சலோ மெத்யூஸ் 76, குசல் மெண்டிஸ் 50, தனஞ்சய டி சில்வா 23, மெத்யூ குனேமான் 63 - 4 விக்., நேதன் லயன் 84 - 4 விக்., போ வெப்ஸ்டர் 6 - 2 விக்.) அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 75 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 75 - 1 விக். (உஸ்மான் கவாஜா 27 ஆ.இ., மானுஸ் லபுஷேன் 26 ஆ.இ., ட்ரவிஸ் ஹெட் 20, ப்ரபாத் ஜயசூரிய 20 - 1 விக்.) ஆட்டநாயகன்: அலெக்ஸ் கேரி, தொடர்நாயகன்: ஸ்டீவன் ஸ்மித். https://www.virakesari.lk/article/206243
  6. கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிர ஆர்வமாக உள்ளேன் - டிரம்ப் 10 FEB, 2025 | 03:56 PM கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தான் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து அவர் தெரிவித்துவரும் விடயங்கள் உண்மையா என்ற பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கு ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் வருடாந்தம் 200 பில்லியன் டொலரை கனடாவிடம் இழக்கின்றோம் என தெரிவித்துள்ள டிரம்ப் அது தொடர்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையாகவே கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க விரும்புகின்றார் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வர்த்தக சமூகத்தினர் மத்தியில் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்பின் ஆசை உண்மையானது என ட்ரூடோ தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டை கைப்பற்றி அமெரிக்காவுடன் இணைப்பது இலகுவான விடயம் என டிரம்ப் எண்ணுகின்றார் என ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒலிவாங்கி செயற்பட்டுக் கொண்டிருந்ததை அறியாமல் கனடா பிரதமர் இதனை தெரிவித்தார், பின்னர் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிரம்ப் கனடாவின் கனிமவளங்கள் மீது கண்வைத்துள்ளார். அவர்களிற்கு எங்கள் வளங்களை பற்றி தெரியும் எங்களிடம் என்ன உள்ளது என்பது தெரியும், இதன் காரணமாகவே அவர்கள் எங்களை தங்களுடன் இணைந்து 51வது மாநிலமாக மாற்றுவது குறித்து பேசுகின்றனர் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206326
  7. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை, கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 10) ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பிரசாந்த் கிஷோர் முன்பு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் தொடங்கிய நிறுவனம் தற்போதும் தேர்தல் வியூக பணிகளை செய்து வருகிறது. பிரசாந்த் கிஷோரின் வருகையால் த.வெ.க-வுக்குள் குழப்பம் ஏற்படவே வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். த.வெ.க தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது ஏன்? தமிழக அரசியல் களத்தில் ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா? விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டாக என்ன செய்தது? தாக்கம் ஏற்படுத்தியதா? ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி? 'ஏதோ ஒரு லாபம் இருக்கிறது' - பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜய் பேசியது என்ன? விஜய் வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் என்ன நடக்கிறது? 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக பணிகளை ஜான் ஆரோக்கியசாமி கவனித்து வருகிறார். அண்மையில் வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பின் நிறுவனரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா, த.வெ.க-வில் இணைந்தார். தேர்தல் வியூக வகுப்பாளராகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜூனாவுக்கு த.வெ.க-வில் தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவர், ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, த.வெ.க தலைமை அறிவித்தது. காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?5 மணி நேரங்களுக்கு முன்னர் எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏன் சந்திப்பு விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு மூன்று மணிநேரம் நடந்ததாகக் கூறுகிறார், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய த.வெ.க நிர்வாகி ஒருவர். "மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது நடந்தது. அப்போது தமிழக அரசியல் சூழல்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்" எனக் கூறினார். இந்த சந்திப்பின் பின்னணியில் ஆதவ் அர்ஜூனா இருப்பதாகக் கூறும் அவர், "2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வுக்கு சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "புதிய கட்சியாக இருந்தாலும் த.வெ.க-வுக்கு மிகப் பெரிய தொண்டர்கள் பலம் உள்ளது. இதனை தேர்தல்ரீதியாக பலப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. த.வெ.க மீது நம்பிக்கை இருப்பதால் நேரடியாக விஜயை சந்திப்பதற்கு பிரசாந்த் கிஷோர் வந்துள்ளார்" என்கிறார். த.வெ.க-வின் தேர்தல் வியூக சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறினாலும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் அக்கட்சித் தலைமை இதுவரை வெளியிடவில்லை. த.வெ.க-வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணியிடம் இதுகுறித்து கேட்டபோது, "இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமை வெளியிடும். அதற்கு முன்னதாக யூகத்தின் அடிப்படையில் கூறுவது சரியாக இருக்காது" என்று மட்டும் பதில் அளித்தார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றியுள்ளார். ஆனால், தேர்தல் வியூக வகுப்பாளர் தொழிலில் இருந்து விலகுவதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலின்போது பிரசாந்த் கிஷோர் கூறினார். அவரது ஐபேக் (IPAC) நிறுவனத்தை தனது கம்பெனி ஊழியர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார் காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்ன தினம் தெரியுமா? அன்றைய தினம் என்ன செய்வார்கள்?6 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, சமீபத்தில் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க-வில் இணைந்தார். த.வெ.க-வுக்கு பலன் தருமா? "அரசியல் களத்தில் பிரசாந்த் கிஷோர் பிராண்டாக இருக்கிறார். அவர் வெற்றியை நோக்கி, கொண்டு செல்வார் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால், களத்தில் ஒரு கட்சி வலுவாக இருந்தால்தான் அது சாத்தியம்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "கட்சிக் கட்டமைப்பு எதுவும் இல்லாத த.வெ.க-வை எந்தளவுக்கு அவரால் உயரத்துக்குக் கொண்டு செல்ல முடியும் எனத் தெரியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஈடுபட்டிருந்ததையும் அவர் பட்டியலிட்டார். 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் வியூக பணிகளை மேற்கொண்டது. 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், 2021 ஆம் ஆண்டு தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் பணிகளை மேற்கொண்டது. "இவர்கள் எல்லாம் அந்தந்த காலகட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்தனர். அவர்களுடன் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றினார். மற்றபடி, பூஜ்ஜியமாக உள்ளதை பத்தாக மாற்றுவதற்கு அவரால் முடியாது" எனக் கூறுகிறார் ப்ரியன். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் மூன்று ஆலோசகர்கள் - த.வெ.க-வுக்குள் குழப்பம் வருமா? அதேநேரம், பிரசாந்த் கிஷோர் வருகையால் த.வெ.க-வுக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் ப்ரியன். "அக்கட்சியில் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேர்தல் வியூக வகுப்பாளர்களாக உள்ளனர். தற்போது பிரசாந்த் கிஷோர் வந்தால் அது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும். மூன்று தேர்தல் ஆலோசகர்கள் ஒரேநேரத்தில் ஒரு கட்சிக்கு வேலை பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. இதில், யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் முடிவை எடுக்கப் போகிறார் என்பது முக்கியம்" என்கிறார் அவர். ஆனால், "இது எந்தவகையிலும் குழப்பத்தை ஏற்படுத்தாது" எனக் கூறுகிறார் த.வெ.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் அவர் சில தகவல்களைத் தெரிவித்தார். "ஒவ்வொருவரும் அவரவருக்கான வேலைகளைப் பிரித்துக் கொண்டு செயல்படுவார்கள். தேர்தல் என்பது மிகப் பெரிய வேலை. அரசியல் பணி, பூத் கமிட்டி, தேர்தல் வியூகம் என தனித்தனி வேலைகள் உள்ளன. இதில் எந்தவித சிக்கலும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார். இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்? காஸாவில் டிரம்ப் செய்ய நினைப்பது என்ன?11 பிப்ரவரி 2025 வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?10 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் தி.மு.க-வுக்கு பாதிப்பா? 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வேலை பார்த்தது. "இதனால் தி.மு.க குறித்த தரவுகள் அந்நிறுவனத்திடம் இருக்கும்" எனக் கூறும் ஷ்யாம். "இது த.வெ.க-வுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த உதவும்'' என்கிறார் ஆனால், இந்தக் கருத்தை மறுத்துப் பேசுகிறார் திமுக முன்னாள் எம்.பி-யும் அக்கட்சியின் செய்தித் தொடர்பு தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தல் வியூகங்களை ஐபேக் நிறுவனம் மேற்கொண்டாலும், ஒரு கட்சிக்கு அடிப்படைக் கட்டமைப்பு, அக்கட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு போன்றவை மிக முக்கியமானவை" எனக் கூறுகிறார். தி.மு.க-வின் கட்சிக் கட்டமைப்பு மிக வலுவாக உள்ளதாக கூறும் அவர், "அனைத்து கிராமங்களிலும் தி.மு.க-வுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் உள்ளனர். த.வெ.க-வுக்கு தேர்தல் வியூகங்களைக் கணக்கிட்டு சொல்ல முடியுமே தவிர, தி.மு.க-வை போன்று வலுவாக உள்ள கட்சிக்கு ஆபத்தை உண்டாக்க வாய்ப்பில்லை" என்கிறார். காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்7 பிப்ரவரி 2025 கேரளா: 15 வயது தனியார் பள்ளி மாணவர் தற்கொலையில் நீடிக்கும் மர்மம் - கொடூரமான ரேகிங் காரணமா?6 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, முன்னாள் எம்.பி-யும், திமுக செய்தித் தொடர்பு தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவன். " தி.மு.க-வுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது" என்று குறிப்பிட்டார் டி.கே.எஸ்.இளங்கோவன் "கட்சியைத் தொடங்கிய உடனே தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை" எனக் கூறிய டி.கே.எஸ்.இளங்கோவன், "கட்சியை வளர்ப்பது என்பது மிகப் பெரிய வேலை. மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டும்.'' "அந்தவகையில், நடிகர் விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பை தாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என டி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cg5y9826ypyo
  8. சொன்னபடி பெயரை மாற்றும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். இவர், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். பதவியேற்பதற்கு முன்னதாக, ”மெக்சிகோ வளைகுடாவின் பெயரை, ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றப் போகிறேன். இது நிறைய பிரதேசங்களை உள்ளடக்கியது. அமெரிக்க வளைகுடா என்பது எவ்வளவு அழகான பெயர்? அது மிகவும் பொருத்தமானது” என்று கூறியிருந்தார். இது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், ”மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளை, ’மெக்சிகன் அமெரிக்கா’ என்று பெயர் மாற்றலாம். அந்தப் பெயரும் நன்றாக இருக்கிறது. உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர், 17ஆம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, ட்ரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” என தக்க பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில், மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என மாற்றம் செய்யப்படுமென அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கூகுள் மேப்பில், அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டும் இந்த மாற்றம் செய்யப்படுமென கூகுள் நிறுவனமும் தெரிவித்திருந்தது. அதாவது மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என்று தெரியும் என அது அறிவுறுத்தியுருந்தது. இந்த நிலையில், மெக்சிகோ பெயர் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஒன் விமானத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகருக்குப் பயணித்தபோது, இதற்கான ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்ட வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. https://thinakkural.lk/article/315192
  9. தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் 11 FEB, 2025 | 05:04 PM யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் நாளை புதன்கிழமை (12) மாலை 6 மணி வரை தொடரும் என கூறப்படுகிறது. இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கூறுகையில், இப்போராட்டத்துக்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்டத்துக்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206434
  10. கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு சீனிவாஸ் பதவி, பிபிசி 11 பிப்ரவரி 2025, 05:46 GMT பாம்பை கையில் பிடித்தால், ஒருவரின் உடலில் விஷம் ஏறிவிடும், பாம்பு தன் சட்டையை உரிக்கும் போது பாம்பை பார்த்தால், அது நம்மை தாக்கும் என்றெல்லாம் கூறுவதை கேட்கிறோம். இதில் எது உண்மை? உலகில் உள்ள எல்லா வகை பாம்புகளும் தங்கள் சட்டையை உரிக்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தோலை உரிக்கும்? எதனால் தோலை உரிக்கிறது? தோலை உரிக்காவிட்டால் பாம்புகளுக்கு என்னவாகும்? இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள ஆந்திரா பல்கலையில் உள்ள பேராசிரியர் சி. மஞ்சுலதா, மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை வன உயிரியல் அமைப்பை சேர்ந்த மூர்த்தி காந்திமஹந்தி ஆகியோரை பிபிசி தொடர்பு கொண்டது. பாம்பு தன் தோலை உரிப்பது மிக இயல்பான நடவடிக்கை என்று கூறுகிறார் பேராசிரியர் மஞ்சுலதா. "இது மனிதர்களிலும் நடைபெறுகிறது. ஆனால் நாம் தினமும் குளிப்பதால், தோல் உரிவதை நாம் கவனிப்பதில்லை. ஆனால் பாம்புகளில் பழைய தோல் உரிந்து புதிய தோல் வருவது ஒரே நேரத்தில் நடைபெறுவதாகும். பழைய தோலுக்கு அடியில் புதிய தோல் உருவாகிய பின் பழைய தோல் உரிந்துவிடும்" என்கிறார். நாம் சற்று வளர்ந்த உடன், நாம் ஏற்கனவே அணிந்திருந்த ஆடைகள் நமக்கு பத்தாமல் போகும். அப்போது நமக்கு ஏற்ற புதிய ஆடைகளை நாம் தைத்துக் கொள்வது போல தான் இதுவும் என்கிறார் அவர். "பாம்பு உடல் மீது இருக்கும் தோல் இறுக ஆரம்பிக்கும் போது, அதற்கு அடியில் புதிய தோல் உருவாகும். பின்னர் பழைய தோல் உரிந்துவிடும்." என்கிறார். இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா? உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்? ஏ.ஐ. உலகில் புதிய அலை: ஒரே செயலி மூலம் அமெரிக்க நிறுவனங்களை மிரளச் செய்த சீன நிறுவனம் நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா? பாம்பு தோலை உரிப்பது எப்படி? பாம்பு தன் தோலை உரிக்க நினைக்கும் போது, ஒரு சொரசொரப்பான இடத்தில் தனது தலையை தேய்க்க தொடங்கும். அப்போது தோலில் விரிசல் உண்டாகும். அதிலிருந்து பாம்பு தன் உடலை வெளியே கொண்டு வரும். பழைய தோலை முற்றிலும் உரித்து, புதிய தோலை அது கொண்டிருக்கும். "பாம்பு உயிர் வாழும் வரை அது சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே இருக்கும். அதன் உடல் வளரும் போது, அதன் தோல் இயல்பாக இறுக தொடங்கும். இது மனிதர்களிலும் நடைபெறும். இறுகிப்போன தோலை பாம்பு தன் உடலிலிருந்து உரித்துக் கொள்ளும்" என்று பேராசிரியர் மஞ்சுலதா கூறுகிறார். தோல் உரிக்காத பாம்பு வகைகள் உலகில் இல்லை என்றும் தற்போது உலகில் உள்ள 3 ஆயிரம் வகை பாம்புகள் தங்கள் தோலை உரித்துக் கொள்கின்றன என்றும் அவர் கூறுகிறார். நுண்ணுயிரிகள் மற்றும் மாசு காரணமாக அடர்த்தியாகியுள்ள தோலை அகற்றுவது தான் தோல் உரித்தல் எனப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில், ஒரே நேரத்தில் பாம்பு தன் முழு தோலையும் உரித்துக் கொள்ளும். இந்த நடைமுறை, பாம்புகளுக்கு நுண்ணுயிரிகள் மற்றும் மாசு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது என்று பேராசிரியர் மஞ்சுலதா கூறுகிறார். படக்குறிப்பு, பேராசிரியர் மஞ்சுலதா. குரங்கு காரணமா? இலங்கையில் இன்று முதல் மின் தடை அமலாகும் என்று அறிவிப்பு11 பிப்ரவரி 2025 வன்முறை முதல் முதல்வரின் ராஜினாமா வரை! ஒன்றரை ஆண்டில் மணிப்பூரில் நடந்தது என்ன?10 பிப்ரவரி 2025 பாம்பு தோல் உரிப்பது ஏன்? பாம்பு தன் உடலில் புதிய தோல் உருவாகியுள்ளது என்று உணரும் போது, அது உடனே பழைய தோலை உரித்துக் கொள்ள முயலும் என்கிறார் மூர்த்தி காந்திமஹந்தி. "ஏனென்றால் புதிய தோல் அதன் கண்களுக்கு அருகிலும் உருவாகியிருக்கும். இதன் காரணமாக பாம்பினால் சரியாக பார்க்க இயலாது. அதன் கண்கள் நீல நிறமாக மாறிவிடும். உடனே தனது பழைய தோலை அகற்றிட பாம்பு நினைக்கும்." என்கிறார். அதன் பொந்திலிருந்து வெளியே வரும் போது, பாம்பு ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம். பொந்தை விட்டு வெளியே வந்த பிறகு, பாம்பு உற்சாகமாக காணப்படும். பொந்திலிருந்து வெளிவரும் பாம்பு சாப்பாடு இல்லாமல் இருக்கும், எனவே உணவு தேடி அவசரஅவசரமாக அலைந்துக் கொண்டிருக்கும். படக்குறிப்பு, கிழக்குத் தொடர்ச்சி மலை வன உயிரியல் அமைப்பை சேர்ந்த மூர்த்தி காந்திமஹந்தி தோல் உரிக்கும் போது பார்த்தால் பாம்பு தாக்குமா? பாம்பு தோல் உரிக்கும் போது அதை பார்த்தால், பாம்பு தாக்குமா என்று கேள்விக்கு பதிலளிக்கிறார் மூர்த்தி காந்தி மஹந்தி. "ஒரு பாம்பு தன் உடலில் பழைய தோல் இருக்கும் போது அசௌகர்யமாக கருதும். ஒரு இருட்டான இடத்தில் இருந்துக் கொள்ளும். யாரையும் தாக்காது. அந்த நேரத்தில் அதை தொந்தரவு செய்தால், பாம்பு தாக்க முற்படும். தோல் உரியும் போது அதன் கண்களுக்கு அருகில் தோல் சரியாக உரியாமல் போனால், அது பாம்புக்கு மேலும் சிக்கலாகிவிடும். எனவே, பாம்பு தன் தோலை உரிக்கும் போது, ஏதாவது சத்தம் கேட்டால், இயல்பாகவே பாம்பு தாக்க முயலும். இதை தான் அனைவரும் கூறுகிறார்கள்" என்று மூர்த்தி காந்தி மஹந்தி. பட மூலாதாரம்,GETTY IMAGES காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்7 பிப்ரவரி 2025 கிரீன்லாந்து: பனி சூழ்ந்த மலைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது? எதற்காக இந்த போட்டி?30 ஜனவரி 2025 பாம்பு எத்தனை முறை தோல் உரிக்கும்? உலகில் உள்ள அனைத்து பாம்பு வகைகளும் தங்கள் தோலை உரிக்கும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆன பாம்பு மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை தன் தோலை உரிக்கும். சற்று வயதான பாம்புகள் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தோலை உரிக்கும். "பாம்புகள் எத்தனை முறை தோலை உரிக்கும் என்று குறிப்பிட்ட எண்ணிக்கை எதுவும் கிடையாது. பாம்பு சாப்பிடும் உணவு, அதன் இருப்பிடம், அங்குள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில் எத்தனை முறை தோலை உரிக்கும் என்பது மாறுபடும். எந்த வகை பாம்பு என்பதும் இதில் முக்கிய காரணியாகும்." என்கிறார் மூர்த்தி காந்தி மஹந்தி. கண்கள் முதல் வால் வரை உடம்பில் உள்ள தோலை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் உரித்துக் கொள்ளும் ஒரே உயிரினம் பாம்பு என்று அவர் கூறுகிறார். எப்போது தோலை உரிக்க வேண்டும் என்று பாம்புக்கு எப்படி தெரியும்? தோல் பழையதாகும் போது பாம்புக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தும். உடனே தோலை அகற்றவிட வேண்டும் என்ற சமிக்ஞையை அதன் உடல் பாம்புக்கு வழங்கும். உடனே அதை உரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை பாம்பு மேற்கொள்ளும். "பாம்பு தோலை உரிப்பது மிகவும் இயல்பான நடைமுறை. ஒரு பாம்பு தோலை உரிக்கவில்லை என்றால், அதற்கு உடல் நலம் சரியில்லை என்று புரிந்து கொள்ளலாம். தோல் உரியாமல் பாம்பு சுறுசுறுப்பாக இருக்காது. பாம்புக்கு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சரியாக உணவு சாப்பிடாது. இப்படியே தொடர்ந்தால், பாம்பின் உயிருக்கு கூட ஆபத்தாக இருக்கலாம். பாம்பு தோல் உரிக்கும் போது, அதற்கு உதவி செய்யும் எண்ணத்தில் அருகே சென்றாலும், பாம்பு நம்மை தாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று மூர்த்தி காந்தி மஹந்தி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியதா?10 பிப்ரவரி 2025 பெங்களூரு சாலையோரம் பாடிய எட் ஷீரன், தடுத்து நிறுத்திய காவலர் - என்ன நடந்தது?9 பிப்ரவரி 2025 பாம்பை தொட்டால் விஷம் ஏறுமா? பாம்பை தொட்டாலே விஷம் என்று கூறுவது தவறு என்கிறார் பேராசிரியர் மஞ்சுலதா. "பாம்பு உடலை தொடுவதால் எந்த தீங்கும் ஏற்படாது. அது உயிரற்ற செல்களை கொண்டது. அதில் விஷம் கிடையாது." என்கிறார். ஒரு இடத்திலிருந்து பாம்பு வெளியேறினாலும், அந்த இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மஞ்சுலதா. "ஏனென்றால், பாம்பு இருந்த இடம், அதன் வாழ்விடமாகும். எனவே, அந்த இடத்தில் பாம்பு நீண்ட காலத்துக்கு இருக்க வாய்ப்புண்டு. ஒரு பாம்பை பார்த்தால், அந்த இடத்தில் புகையை மூட்டி வேறு இடத்துக்கு அதை அனுப்பிவிடலாம்." என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyjrze8g0xo
  11. புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை அமைக்க நடவடிக்கை Published By: DIGITAL DESK 3 11 FEB, 2025 | 04:45 PM பல்வேறு குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் ஒன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் அமைக்கவுள்ளது. இந்த மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளாராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும், பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவவும் செயற்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/206420
  12. நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - இலங்கை மின்சார சபை 11 FEB, 2025 | 03:52 PM நாடளாவிய ரீதியில் நாளை புதன்கிழமை (12) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி பெளர்ணமியை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு பல பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சாரசபை தீர்மானித்திருந்தது. அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (10) மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதுடன் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206417
  13. கடந்த 2021 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது நிரம்பிய சிறுவனின் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கோரி இன்றைய தினம்(11) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம் ஒன்று இடம் பெற்றது. சிறுவனின் உறவுகள், மற்றும் அப்பகுதி பெற்றோர்கள் இன்று காலை நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக அளுத்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி அமைதியாக முறையில் கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த சிறுவனுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக நோய் காரணமாக வைத்தியரிடம் அவரை பெற்றோர்கள் கொண்டு சென்றுள்ளனர். வைத்திய பரிசோதனையினை மேற்கொண்ட வைத்தியர், குறித்த சிறுவனுக்கு இடது புற சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாகவும், சிகிச்சை செய்வதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்வாங்கப்படுவதாகவும் தெரிவித்தனர் பின்னர் குறித்த சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சிகிச்சையின் பின்னர் இயந்திரத்தின் உதவியுடன் சிறுவன் வைத்தியசாலையில் இருந்த போது, திடீரென சிறுவனின் உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பித்தன. இதனை அவதானித்த வைத்தியர்கள் உடனடியாக சிறுவனை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிறுவனின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடினர். அதேவேளை குறித்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் மேற்படி வழக்கு விசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த போதும், இன்றைய தினம் அந்த தீர்ப்பு நீதிமன்றினால் அறிவிக்கப்படாத நிலையில் மீண்டும் இம்மாதம் 21 ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315195
  14. 11 FEB, 2025 | 05:21 PM இலங்கையர்களிடையே பாரம்பரிய ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிப்பதற்காக இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் ஓரிகமி பட்டறையை கடந்த 7ஆம் திகதி தூதரகத்தில் நடத்தியது. ஜப்பானிய ஓரிகமி நிபுணர் ஹிகாஷி கட்சுகாவா இந்தப் பட்டறையின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்தார். இந்தப் பட்டறையில் இலங்கை ஓரிகமி கோப்புறைகள் சங்கத்தின் (OFASL) நிறுவனர் மற்றும் தலைவர் ரெசா தில்ஷார்ட் கரீம் (Reza Dilshard Kareem) உட்பட பல பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் சிக்கலான ஓரிகமி நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இந்த பாரம்பரிய ஜப்பானிய கலை வடிவத்தின் அழகை ஆராய்வதற்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த முயற்சி ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் மேலும் ஒரு படியாக அமைந்தது. அதேவேளை, இது ஓரிகமி மீதான உள்ளூர் ஆர்வத்தையும் ஊக்குவிக்கிறது. ஜப்பானிய தூதரகம் கலாசார போற்றுதலை ஊக்குவிப்பதிலும் உறுதியாக உள்ளதுட ன் எதிர்காலத்தில் மேலும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஆவலுடன் உள்ளது. https://www.virakesari.lk/article/206440
  15. காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி - இடித்து சமப்படுத்தப்படவேண்டிய பகுதி - டிரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்து 10 FEB, 2025 | 11:01 AM காசாவை கையகப்படுத்தும் தனது திட்டத்தை மீண்டும் உறுதி செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காசாவை பெரும் ரியல் எஸ்டேட் என வர்ணித்துள்ளார். மீண்டும் காசா மக்களை அல்லது பாலஸ்தீனியர்களை அந்த பகுதிக்கு செல்வதற்கு அனுமதிப்பது பெரும் தவறு என கருதுவதாக தெரிவித்துள்ள டிரம்ப் ஹமாஸ் மீண்டும் அங்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். காசாவை மிகப்பெரிய ரியல் எஸ்டேட்டாக நினையுங்கள்! காசாவை அமெரிக்கா நிச்சயமாக கையகப்படுத்தப்போகின்றது, மெதுவாக மெதுவாக ஆனால் நிச்சயமாக என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அவசரப்படமாட்டோம், ஆனால் அபிவிருத்தி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் மத்தியகிழக்கிற்கு மீண்டும் ஸ்திரதன்மையை கொண்டுவரப்போகின்றோம் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் வர்த்தகரான டிரம்ப் காசாவை இடிக்கப்படவேண்டிய பகுதி, என வர்ணித்துள்ளதுடன் அது சமப்படுத்தப்படும், சரி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகள் இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனிய மக்களை அழகான இடங்களில் மீளகுடியமர்த்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/206286
  16. இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு - காரணம் என்ன? பட மூலாதாரம்,EPA 31 நிமிடங்களுக்கு முன்னர் 'அடுத்த அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது. "கடந்த மூன்று வாரங்களாக, ஹமாஸ் குழுவின் தலைமை, எதிரி படைகளின் வீதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதையும் கண்காணித்து வருகிறது. வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, அந்த பகுதியில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கத் தவறுதல் ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்.'' என ஹமாஸ் தெரிவித்துள்ளது ஆனால் ''ஹமாஸ் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடித்து வருகிறது. அதன்படி, வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இஸ்ரேலிய பணையகைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது", என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் பதில் "இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாகும். காஸாவில் எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும், அதற்காக அதிக எச்சரிக்கையுடன் தயாராக இருக்கவும் இஸ்ரேல் மக்களை பாதுகாக்கவும் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். அக்டோபர் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலை போல மீண்டும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம்", என்று இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,REUTERS இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை. முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இன்னும் விடுவிக்கப்பட உள்ளனர். அந்த 17 பேர் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. மற்றொரு ஒப்பந்ததின்படி தாய்லாந்தை சேர்ந்த 5 பேரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு இணையாக 1900 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும்.அதில் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலையாகியுள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கியது. இந்த தாக்குதலில் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்தது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயந்தனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cg45dnr4eydo
  17. டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட் ஊழியர்களை நீக்கும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்: அமெரிக்க நீதிபதி அதிரடி உத்தரவு 09 FEB, 2025 | 02:04 PM யுஎஸ்எயிட்டின் வெளிநாடுகளில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் ஜனாதிபதி டிரம்பின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அந்நாட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உலக நாடுகளுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற மனிதாபிமான உதவிகளை செய்ய அமெரிக்க அரசு யுஎஸ்எயிட்அமைப்பை கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த அமைப்பிற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதி ஒதுக்குகிறது. அந்த நிதியின் மூலம் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பலன் அடைகின்றன. ஆனால் இந்த நிதி உதவி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தவறான நோக்கங்களுக்கு செலவிடப்படுவதாகவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி நிதி உதவியை நிறுத்தி உள்ளது. மேலும் உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான அரசின் செயல்திறன் குழு யுஎஸ்எய்டை முழுமையாக மூட பரிந்துரைத்தது. அதற்கு டிரம்ப் ஒப்புதல் வழங்கிய நிலையில் அதற்கான பணிகள் வேகமாக நடக்கின்றன. அதன் ஒரு கட்டமாக யுஎஸ்எய்டு அமைப்பிற்காக வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிர்வாக விடுப்பு வழங்கப்படுவதாகவும் அவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அமெரிக்கா திரும்ப வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவு அரசு தரப்பில் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து யுஎஸ்எயிட் ஊழியர்கள் தரப்பில் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்ல் நிக்கோலஸ் நிர்வாக விடுப்பு மற்றும் 30 நாள் கெடு உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் யுஎஸ்எயிட் அமைப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்திய டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இந்த 2 உத்தரவாலும் வெளிநாடுகளில் பணியாற்றும் சுமார் 2200 ஊழியர்களை டிரம்ப் நிர்வாகம் பணிநீக்கம் செய்வது தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. இதே போல மஸ்க்கின் செயல்திறன் குழு அமெரிக்காவின் நிதி விவகாரங்களை கவனிக்கும் கருவூலத் துறையின் முக்கிய ஆவணங்களை அணுகுவதற்கு தற்காலிக தடை விதித்து நீதிபதி பால் என்ஜெல்மேயர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக வருமான வரி ரீபண்ட்கள் சமூக பாதுகாப்பு பயனாளிகள் முதியோர் நிதி உதவி உள்ளிட்ட கோடிக்கணக்கான கணக்கு வழக்குகள் அரசின் திட்டங்கள் மூலம் பலனடையும் பயனாளிகளின் விவரங்களை மஸ்க் குழு பார்வையிட டிரம்ப் நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்க மஸ்க் தலைமையில் அதிபர் டிரம்ப் குழு அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் தங்கி உள்ள சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் பணியில் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளுக்கு உள்ளூர் போலீசாரும் உதவலாம் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் உள்ளூர் காவல் அதிகாரிகள் நேரடியாக சந்தேகிக்கப்படும் நபரை நடுரோட்டில் நிறுத்தி குடியேற்ற ஆவணங்களை சரிபார்த்து கைது செய்ய முடியும். நிறவெறிக்கு எதிரான பிரச்னையை தூண்டியதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நடைமுறையை டிரம்ப் மீண்டும் கொண்டு வந்திருப்பது அமெரிக்காவில் பிரச்னைகளை அதிகரிக்க வழிவகுக்கும். https://www.virakesari.lk/article/206226
  18. டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது உண்மை - வெறும் வாய் வார்த்தையில்லை - கனடா பிரதமர் தெரிவிப்பு 09 FEB, 2025 | 10:38 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையாகவே கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க விரும்புகின்றார் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வர்த்தக சமூகத்தினர் மத்தியில் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்பின் ஆசை உண்மையானது என ட்ரூடோ தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டை கைப்பற்றி அமெரிக்காவுடன் இணைப்பது இலகுவான விடயம் என டிரம்ப் எண்ணுகின்றார் என ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒலிவாங்கி செயற்பட்டுக்கொண்டிருந்ததை அறியாமல் கனடா பிரதமர் இதனை தெரிவித்தார், பின்னர் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிரம்ப் கனடாவின் கனிமவளங்கள் மீது கண்வைத்துள்ளார். அவர்களிற்கு எங்கள் வளங்களை பற்றி தெரியும் எங்களிடம் என்ன உள்ளது என்பது தெரியும். இதன் காரணமாகவே அவர்கள் எங்களை தங்களுடன் இணைந்து 51வது மாநிலமாக மாற்றுவது குறித்து பேசுகின்றனர் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206203
  19. நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீள இயங்க 4 நாட்கள் செல்லும்; சில பிரதேசங்களில் வரையறைகளுடன் மின் விநியோகம் - மின்சார சபை 10 FEB, 2025 | 02:19 PM (எம்.மனோசித்ரா) நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையால் செயலிழந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின் உற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு சுமார் 4 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமான சில பிரதேசங்களில் மின் விநியோகத்தை சில வரையறைகளுடன் முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது. பாணந்துரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) நாடு முழுவதும் சில மணித்தியாலங்கள் மின் தடை ஏற்பட்டது. சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் படிப்படியாக மின் விநியோகம் வழமைக்கு திரும்பிய போதிலும், சில பிரதேசங்களில் மீண்டும் இடைக்கிடை மின்தடை ஏற்பட்டது. இந்நிலையிலேயே நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன. இதன் காரணமாக தேசிய மின் உற்பத்தியில் 900 மெகா வோல்ட் மின்சாரம் இழக்கப்பட்டது. எனவே இந்த இயந்திரங்கள் மீள இயங்கும் வரை சில பிரதேசங்களில் வரையறைகளுடன் மின் விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை மின்சார சபை தலைவரும் மின்சக்தி அமைச்சரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதத்தை அனுப்பி வைத்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் குறைகளை அறிந்து தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். எனவே முன்னைய ஆட்சியாளர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/206304
  20. 8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - மின்சக்தி அமைச்சரிடம் பிரதான எதிர்க்கட்சி கேள்வி 10 FEB, 2025 | 05:44 PM (எம்.மனோசித்ரா) தேசிய மின் கட்டமைப்பில் இவ்வாறு சமநிலையற்ற நிலை ஏற்படுவதாக கடந்த 8 வாரங்களாக மின்சாரசபை பொறியியலாளர்களால் மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு அபாகரமான நிலைமை ஏற்படவிருந்தமையை அறிந்திருந்தும் அமைச்சரால் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கேள்வியெழுப்பினார். இன்று திங்கட்கிழமை (10) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு குரங்குகள் தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையே காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. இறுதியில் நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகளின் செயலிழப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மின்சக்தி அமைச்சர் இவை அனைத்துக்கும் அப்பால் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவித்தார். அவ்வாறெனில் இவ்வாறான நிலைமை ஏற்படும் வகையில் கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன? தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் சூரிய மின் உற்பத்தியின் ஊடாக 1,300 மெகாவோல்ட் மின்சாரத்தை இணைத்தமை தவறான தீர்மானமா? கடந்த ஆட்சி காலங்களில் இந்த துறையில் பொறுப்புக்களை வகித்தவர்கள் என்ற ரீதியில் எம்மால் கேட்கப்படும் இந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும். கடந்த 8 வாரங்களாக தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. ஒருபுறும் ஞாயிற்றுக்கிழமை மின்சாரப் பாவனை குறைவடைந்து காணப்பட்டதோடு, மறுபுறம் சூரிய மின் உற்பத்தி அதிகபட்சமாகக் காணப்பட்டது. தேசிய மின் கட்டமைப்பில் இவ்வாறு சமநிலையற்ற நிலை ஏற்படுவதாக அது குறித்து நாளாந்தம் கண்காணித்து வந்த பொறியியலாளர்கள் அமைச்சருக்கு புதுப்பிக்கப்பட்ட நிலைமைகளை தெளிவுபடுத்தியிருக்கின்றனர். அந்த வகையில் இரு மாதங்களாக இது தொடர்பில் மின் சக்தி அமைச்சரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முன்னரே அறிந்திருந்த தகவல்களின் அடிப்படையில் மக்களை அறிவுறுத்தியிருந்தால் அசௌகரியங்களையாவது குறைத்திருக்கலாம். ஆனால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திகளை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்தமையை தேசிய குற்றமாக்கும் வகையிலேயே இவர்களது கருத்துக்கள் காணப்படுகின்றன. தொடர்ச்சியாக 8 ஞாயிற்றுக்கிழமைகளாக தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையற்ற நிலை ஏற்படுவதை அறிந்திருந்தும் ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்மையில் இந்த பிரச்சினைக்கு அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் தேவையில்லை. மின்சார பொறியியலாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/206330
  21. படக்குறிப்பு, பாராலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற முதல் பார்வை மாற்றுத் திறனாளி இந்திய பெண் ரக்‌ஷிதா கட்டுரை தகவல் எழுதியவர், திவ்யா ஆர்யா பதவி, பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "என் இளம் வயதில் என் கிராமத்தில் உள்ள அனைவரும் 'இவளுக்கு கண் பார்வை இல்லை, இவள் வீண்' என்று கூறுவார்கள்," என்கிறார் ரக்‌ஷிதா ராஜு. இப்போது 24 வயதான அவர் இந்தியாவின் சிறந்த இடைநிலை (middle distance) பாரா தடகள வீரர்களில் ஒருவர் ஆவார். "இது என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது," என்று அவர் கூறுகிறார். ரக்‌ஷிதா தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் பார்வை மாற்றுத் திறனாளியாகப் பிறந்தார். 10 வயதுக்குள் தனது பெற்றோர் இருவரையும் அவர் இழந்துவிட்டார். கேட்கும் குறைபாடு மற்றும் பேச்சுக் குறைபாடுள்ள தனது பாட்டியால் அவர் வளர்க்கப்பட்டார். "நாங்கள் இருவருமே மாற்றுத் திறனாளிகள். எனவே என் பாட்டி என்னைப் புரிந்துகொண்டார். அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறுவார்," என்று ரக்‌ஷிதா குறிப்பிட்டார். ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன? விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா? கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை ரக்‌ஷிதாவுக்கு சுமார் 13 வயது இருக்கும்போது அவரது பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அவரை அழைத்து 'ஒரு சிறந்த தடகள வீராங்கனையாக' இருக்கும் திறன் அவருக்கு இருப்பதாகக் கூறினார். "எப்படி என்னால் முடியும்? நான் பார்வையற்றவள், பார்க்க முடியாத என்னால் எப்படி ஓட முடியும் என யோசித்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். பார்வைக் குறைபாடுள்ள ஓட்டப்பந்தய வீரர்கள் ஒரு வழிகாட்டியை வைத்துக் கொள்ளலாம். அந்த வழிகாட்டியின் உதவியுடன் ஓட முடியும் என்று அவருடைய ஆசிரியர் அவரிடம் விளக்கினார். அதாவது, பார்வை மாற்றுத்திறனாளி தடகள வீரரும் அவருக்கு உதவும் கைட் ரன்னரும் (ஓடுவதற்கு வழிகாட்டியாக உதவுபவர்), டிராக்கில் ஓடுவார்கள். அவர்கள் ஒரு நெகிழிக் கயிறு ஒன்றின் மூலம் இணைக்கப்படுவார்கள். அந்தக் குறுகிய கயிற்றின் இரு முனைகளிலும் இருக்கும் வளையங்களை, பாரா தடகள வீரரும் அவருக்கு உதவும் கைட் ரன்னரும் பிடித்துக் கொள்வார்கள். இது ரக்‌ஷிதாவுக்கு புதிதாக இருந்தது. Play video, "பார்வை மாற்றுத்திறனாளிகள் ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுக்க உதவும் கைட் ரன்னர்கள்", கால அளவு 11,14 11:14 காணொளிக் குறிப்பு, டென்மார்க்கின் 'கருணை' மிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்து கிரீன்லாந்து விடுபடுமா? சுதந்திர தாகத்திற்கு புது வெளிச்சம் பாய்ச்சிய டிரம்ப்9 பிப்ரவரி 2025 மஞ்சள் கரு, வெள்ளை கரு ஆகிய இரண்டையும் சாப்பிட ஏதுவாக முட்டையை மிகச்சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 கேலி செய்த கிராமவாசிகளை கொண்டாட வைத்த ரக்‌ஷிதா படக்குறிப்பு, விளையாட்டு வீரர்கள் மத்தியில் பார்வைக் குறைபாடுகள் மாறுபடும். எனவே சில நிகழ்வுகளில் சில வீரர்கள் சமநிலையை உறுதிப்படுத்த தங்கள் கண்களை மறைக்கும் பட்டைகளை அணிந்துகொள்வார்கள். சிறிது காலம் மற்ற நபர்கள் ரக்‌ஷிதாவுக்கு கைட் ரன்னர்களாக செயல்பட்டனர். பின்னர் 2016இல், தனது 15 வயதில் ரக்‌ஷிதா தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். அங்கு ராகுல் பாலகிருஷ்ணா என்ற நபர் அவரைக் கண்டார். ராகுல் ஒரு இடைநிலை தொலைவு ஓடும் தடகள வீரர். அதற்கு முன்பு அவர்1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் மீண்டு வந்துகொண்டிருந்தபோது, இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ) பயிற்சியாளரால் அவருக்கு பாரா தடகளம் அறிமுகமானது. வழிகாட்டிகள் (கைட் ரன்னர்கள்) மற்றும் பயிற்சியாளர்களின் பற்றாக்குறை இருந்ததால் ராகுல் அந்த இரண்டு பொறுப்புகளையும் தாமே ஏற்க முடிவு செய்தார். அவரது பயிற்சிப் பணிக்கான சம்பளத்தை அரசு அவருக்கு வழங்குகிறது. ஆனால் வழிகாட்டி ஓட்ட வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இருப்பினும் பார்வையற்ற ஓட்டப் பந்தய வீரர் ஒருவர் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்றால், அவரது வழிகாட்டிக்கும் பதக்கம் கிடைக்கும். ராகுல் தனது சொந்த ஓட்டப் பந்தய வாழ்க்கையில் சாதிக்காத ஒன்று அது. "எனக்காகவும் என் நாட்டிற்காகவும் இதைச் செய்ய முடிந்ததில் நான் பெருமைப்பட்டேன்," என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு, ராகுலும் ரக்‌ஷிதாவும் சுமார் எட்டு ஆண்டுகளாக ஒன்றாகப் பயிற்சி செய்து வருகின்றனர் ரக்‌ஷிதாவுக்கு உதவ அவர் தனது சொந்த நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்தார். ரக்‌ஷிதா 2018இல் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து சிறந்த பயிற்சி வசதிகளைப் பெற உதவினார். அரசால் நடத்தப்படும் விடுதியில் ரக்‌ஷிதா வசிக்கிறார், ராகுலுடன் தினமும் பயிற்சி செய்கிறார். அவர்கள் ஓடும்போது, "சிறிய விஷயங்களே முக்கியமானவை" என்று ராகுல் கூறுகிறார். "ஒரு வளைவை நெருங்கும்போது வழிகாட்டி, தடகள வீரரை எச்சரிக்க வேண்டும். அல்லது ஒரு போட்டியாளர் முந்திச் செல்லும்போது அவர் தடகள வீரரிடம் சொல்ல வேண்டும். தடகள வீரர் இன்னும் வேகமெடுத்து ஓட முயல்வதற்கு இது உதவும்." என்கிறார் அவர். போட்டி விதிகளின்படி அவர்கள் கைகளைப் பிடித்துக் கொள்ள முடியாது. இறுதிக்கோட்டைக் கடக்கும் வரை அவர்களை இணைக்கு நெகிழிக் கயிற்றை மட்டுமே பிடித்துக் கொள்ள முடியும். கூடுதலாக வழிகாட்டி வீரர், பார்வைக் குறைபாடுள்ள தடகள வீரரைத் தள்ளவோ, இழுக்கவோ அல்லது உந்தவோ அனுமதியில்லை. காலப்போக்கில் இந்த ஜோடி ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கியுள்ளது. "இப்போது நான் என்னைவிட என் வழிகாட்டியை அதிகம் நம்புகிறேன்" என்று ரக்‌ஷிதா கூறுகிறார். அவர்களின் பயிற்சி பலனளித்தது. 2018 மற்றும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். ரக்‌ஷிதாவின் கிராமத்தில் அவர்களுக்கு அமர்க்களமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னைக் கேலி செய்த அதே கிராமவாசிகள் தனக்காக ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்து, ஆரவாரத்துடன் கொடிகளை அசைத்ததை விவரிக்கும்போது ரக்‌ஷிதாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது. தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதி - விவசாய சேதம் குறையுமா? அல்லது காடுகளுக்குப் பாதிப்பா?9 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 கைட் ரன்னரை தேர்வு செய்வதில் உள்ள சவால்கள் படக்குறிப்பு, ரக்‌ஷிதாவின் பாட்டி (இடமிருந்து இரண்டாவது), ரக்‌ஷிதா (இடமிருந்து மூன்றாவது) மற்றும் ராகுல் (வலது) கிராமத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்டனர் ரக்‌ஷிதா பாராலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தகுதி பெற்ற முதல் பார்வையற்ற இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு அவர் ராகுலுடன் இணைந்து 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் போட்டியிட்டார். பிரான்சில் அவர் பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனால் பாரிஸ் பாராலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்தியாவின் மற்றொரு பார்வைக் குறைபாடுள்ள பெண் தடகள வீராங்கனையான சிம்ரன் ஷர்மா வெண்கலப் பதக்கம் வென்றார். சிம்ரனுக்கு ஓரளவு பார்வைக் குறைபாடு இருந்தது. அவர் தடகளத்தில் ஈடுபடத் தொடங்கியபோது தனியாகவே ஓடினார். ஆனால் 2021இல் சிம்ரன் டோக்கியோ பாராலிம்பிக்கில் போட்டியிட்டபோது ஓடும் பாதையில் உள்ள கோடுகளைப் பார்க்க முடியாமல் தனது பாதையை விட்டு விலகிச் சென்றார். தான் தொடர்ந்து ஓட வேண்டுமானால் தனக்கு ஒரு வழிகாட்டி தேவை என்பதை அவர் அப்போது உணர்ந்தார். சிம்ரன் டெல்லியில் வசித்தாலும்கூட தனக்கான கைட் ரன்னரை தேடுவது சவால் மிகுந்ததாக இருந்தது. "அவர் ஏதோவொரு விளையாட்டு வீரராக இருக்க முடியாது. நீங்கள் பங்கெடுக்கும் அதே பிரிவில் திறன் பெற்றவராகப் பொருந்தியிருக்க வேண்டும், உங்களைப் போலவே வேகமாக ஓடும் ஒருவர் உங்களுக்குத் தேவை," என்று சிம்ரன் விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரிஸில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் தனது வழிகாட்டி ஓட்டப் பந்தய வீரர் அபய் (இடது) உடன் சிம்ரன் (வலது) சிம்ரனின் வேகம் அல்லது ஸ்டைலுடன் சரியாகப் பொருந்தாத சிலருடன் சில தவறான தொடக்கங்கள் அவருக்கு இருந்தன. ஆனால், இறுதியாக அபே குமார் என்ற இளம் தடகள வீரரைக் கண்டார். சிம்ரன் பயிற்சி பெறும் அதே இடத்தில் அபயும் பயிற்சி செய்து வந்தார். பல போட்டிகளில் பங்கெடுத்திருந்த, 18 வயதான அபயுக்கு , சிம்ரனுக்கு கைட் ரன்னராக இருப்பது சர்வதேச போட்டிகளின் அனுபவத்தைப் பெறும் வாய்ப்பாக அமைந்தது. "அவர்கள் எனக்கு வீடியோக்களை அனுப்பினார்கள். நான் வேகமாகக் கற்றுக் கொள்பவன், இது எளிதாகவே இருக்கும் என்று அவற்றைப் பார்த்த பிறகு நினைத்தேன். ஆனால் நான் முதல் முறையாக ஓடியபோது அது மிகவும் கடினமாக இருந்தது," என்கிறார் அபே. "நான் ஒரு வளைவில் ஓடும்போது உள்பக்கமாக இருக்கும் கை குறைவாகவும், வெளிப்புறம் இருக்கும் கை அதிகமாகவும் நகரும் என்பதை உணர்ந்தேன். ஆனால் நான் அவருடன் ஓடும்போது நான் வெளிப்புறமாக இருப்பேன். அவருடைய ஓட்டத்தைத் தடுக்காமல் இருக்க அல்லது அவருடைய அசைவில் தலையிடுவதைத் தவிர்க்க என் உள்புற கை அவரது வெளிப்புறக் கையைப் போலவே நகரும் வகையில் நான் ஓடுவதைச் சரிசெய்ய வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார். பார்வைக் குறைபாடுள்ள தடகள வீரர் தங்கள் வழிகாட்டிக்கு முன்பாக இறுதிக் கோட்டை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது வரை, என்பது போல ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும் ஒத்திசைவு இருக்க வேண்டும். ஜப்பானில் நடந்த 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிதான் சிம்ரனும் அபயும் கலந்துகொண்ட முதல் சர்வதேச போட்டி. அவர்கள் சந்தித்து சில வாரங்கள் மட்டுமே ஆகியிருந்ததால் ஒன்றாகப் பயிற்சி செய்ய அவர்களுக்கு அதிக நேரம் இருக்கவில்லை. புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?7 பிப்ரவரி 2025 பேட் கேர்ள் டீசர்: கலாசாரம், சாதி சர்ச்சைகள் கிளம்புவது ஏன்? படத்தின் இயக்குநர் கூறியது என்ன?31 ஜனவரி 2025 அனுபவம் தந்த வெற்றி படக்குறிப்பு, சிம்ரனும் அபயும் பந்தயத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒத்திசைவாக இருப்பதை உறுதி செய்யப் பயிற்சி செய்கிறார்கள் அவர்களது முதல் பந்தயமான 100 மீட்டர் ஓட்டம் படுதோல்வியில் முடிந்தது. "எங்கள் இருவருக்கும் விதிகள் சரியாகத் தெரியாது. நான் முதலில் கோட்டைக் கடக்க ஏதுவாக அபய் ஓடுவதை நிறுத்திவிட்டார். அவர் தொடர்ந்து ஓடி என் பின்னால் கோட்டைக் கடந்திருக்க வேண்டும்," என்றார் சிம்ரன். இதன் காரணமாக அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டதால், அவர்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடியபோது தங்கம் வென்றனர். சிம்ரன் T12 பிரிவில் உலக சாம்பியன் ஆனார். பிறகு பாரிஸில் நடந்த பாராலிம்பிக்கிற்கும் அவர்கள் சென்றனர். அங்கு 100 மீட்டர் ஓட்டத்தில் நான்காவது இடத்தைப் பிடித்தனர். அதே நேரம் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றனர். மேலும் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பார்வைக் குறைபாடுள்ள இந்திய பெண் என்ற பெருமையை சிம்ரன் பெற்றார். "நாங்கள் பதக்கம் வென்றுவிட்டோம் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் பதக்கம் வென்றது மட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவுக்கு எனது குறைவான சாதனை நேரத்தில் ஓடியுள்ளேன் என்று என் வழிகாட்டி அபய் என்னிடம் கூறினார்," என்று சொல்லியபடி சிம்ரன் புன்னகைக்கிறார். இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதை சிம்ரன் பெற்றார். பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. ஆனால் 100 மீட்டர் ஓட்டத்தில் தோல்வி என்பது ஒரு வேதனையான விஷயம். மேலும் அபே தனது விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர் தன்னுடைய வழிகாட்டியாக எவ்வளவு காலம் நீடிப்பார் என்றும் சிமரன் கவலைப்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரிஸில் நடந்த 200 மீட்டர் ஓட்டத்தில் சிம்ரனும் அபயும் (முன்னால்) மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். ஒரு ஜோடி வெற்றி பெறும்போது வழிகாட்டி ஓட்டப்பந்தய வீரர்கள் பதக்கம் பெற்றாலும்கூட, அவர்களுக்கு சம்பளம், ரொக்கப் பரிசுகள் அல்லது அவர்களின் விளையாட்டு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்று இந்திய பாராலிம்பிக் குழு (PCI) கூறுகிறது. "அவர்களின் உணவு, தங்குமிடம், போக்குவரத்து, பயிற்சி வசதிகள் போன்ற குறுகிய கால தேவைகளை மட்டுமே எங்களால் பூர்த்தி செய்ய முடியும்," என்று இந்திய பாராலிம்பிக் குழுவின் தேசிய தடகளப் பயிற்சியாளர் சத்யநாராயணா கூறுகிறார். ரக்‌ஷிதா, சிம்ரன் இருவருக்குமே இப்போது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் உள்ளன. அவர்களின் பயிற்சிக்கு நிதியளிக்க அவை உதவுகின்றன. தங்கள் வழிகாட்டிகளுக்கு அவர்களே பணம் கொடுக்கிறார்கள். தாங்கள் வெல்லும் எந்தவொரு பரிசுத் தொகையிலும் ஒரு பங்கை அவர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால் ராகுலும் அபயும் அரசிடம் இருந்து கூடுதல் ஆதரவை விரும்புகிறார்கள். விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பொதுத்துறை வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தாங்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். அபய் உடன் தனது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் சிம்ரன் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் அடுத்த பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். "இந்தப் பதக்கத்தின் நிறத்தை மாற்றும் வரை நான் ஓயமாட்டேன்," என்று அவர் கூறுகிறார். அடுத்த முறை தங்கம் வெல்லும் உத்வேகத்துடன் அவர் உள்ளார். ராகுலுடன் சேர்ந்து அடுத்த முறை பதக்கம் வெல்லும் நம்பிக்கையில் ரக்‌ஷிதாவும் உள்ளார். "ரக்‌ஷிதா கண்டிப்பாக பதக்கம் வெல்ல வேண்டும். கிராமங்களில் அவரைப் போல பலர் இருக்கிறார்கள். விளையாட்டு மற்றும் வாய்ப்புகள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. ரக்‌ஷிதா அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குவார்," என்று ராகுல் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crr08y9j9x9o
  22. 10 FEB, 2025 | 05:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ரணில், சஜித் இரண்டு பேரும் விரைவாக ஒரு மேசைக்கு வரவேண்டிய காலம் வந்துள்ளது. இல்லாவிட்டால் மக்கள் அவர்களின் புதைகுழிக்கும் சாபமிடும் நிலை ஏற்படும். அதிகாரம் மற்றும் வரப்பிரசாதங்களை பார்க்காமல் மக்களின் நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெலிபன தம்மாராம தேரர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படவேண்டியதன் தேவைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை கீழ் மட்டத்தில் இடம்பெற்று வருகிறது. என்றாலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டிருக்க முடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரண்டு தலைவர்களும் விரைவாக ஒரு மேசைக்கு வந்து கலந்துரையாட வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. இல்லாவிட்டால் அவர்கள் மரணித்தால் அவர்களின் புதைகுழிக்கும் மக்கள் சாபமிடும் நிலை ஏற்படும். ரணில் விக்ரமசிங்க இந்த நாடு, சர்வதேசம் ஏற்றுக்கொண்ட தலைவர். அவரின் ஆலோசனை இந்த நாட்டுக்கு தேவை. அதேபோன்று சஜித் பிரேமதாச இந்த நாட்டு மக்களின் மனதை வெற்றிகொண்ட தலைவர். அவரின் தேவைப்பாடு நாட்டுக்கு இருக்கிறது. இவர்கள் இருவரின் இணக்கப்பாடு மூலம் நாட்டின் அபிவிருத்தி, வெற்றியை மக்களால் அடைந்துகொள்ள முடியும். அத்துடன் இந்த பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதற்கு இரண்டு தரப்பில் உள்ளவர்களுக்கும் சிறு சிறு சிக்கல்கள் இருக்கலாம். அதனை விரைவில் அவிழ்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அவிழ்த்துவிடுவார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஒரு கட்சியில் இருந்த தலைவரும் உப தலைவருமாகும். அதனால் அதிகாரங்கள் வரப்பிரசாதங்களை பார்க்காமல் ஒரு அடி பின்னுக்கு சென்று அர்ப்பணிக்க வேண்டும். மக்களின் நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு, தேசம் ஆதரவாளர்களை பாதுகாக்கும் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும், 76 வருட சாபத்தை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேல் போடமுடியாது. இந்த சாபத்துக்கு தோள் கொடுத்தது மக்கள் விடுதலை முன்னணியாகும். சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்துகொண்டு 39 அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள். இன்று இவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்கள் கைசேதப்படுகின்றனர். 76 வருட சாபத்துக்கும் மக்கள் விடுதலை முன்னணியே காரணமாகும் என்றார். https://www.virakesari.lk/article/206337
  23. ufc போன்ற அதிக பணம் கொழிக்கும் விளையாட்டில் கவசக் கையுறைகள் மெல்லியதாகக் காணப்படுவதுடன் வெற்றிபெற கழுத்தைத் திருகுவது, கையை காலை கடுமையாக வளைப்பது வரை முயல்கிறார்கள். முழங்கை முழங்கால்களால்களால் மிகமோசமாக தலைப்பகுதியில் தாக்குகிறார்கள். ஆபத்தென தெரிந்தே எல்லாம் நடைபெறுகிறது. ஒப்பீட்டளவில் பழைய குத்துச்சண்டைப் போட்டிகளில் விதிமுறைகள் கடுமையானது, பாதுகாப்பு கூடிய கையுறைகள் பயன்படுத்தப்படுகிறது. அங்கும் ஆபத்துகள் உண்டு.
  24. நிலம், மொழி காக்கப்படவேண்டுமாயின் அரசு இருக்கவேண்டும் எனப் பெரியோர்கள் சொல்வதுண்டு.
  25. மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - சந்தேக நபர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு 10 FEB, 2025 | 05:54 PM மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார் கைதான 7 சந்தேக நபர்களில் முன்னதாக ஐவர் ஆள் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்டனர். ஏனைய இருவருக்கு ஆள் அடையாள அணிவகுப்பு இன்று நடத்தப்படவிருந்த நிலையில் அடையாளத்தை காண்பிப்பதற்காக வருகை தரவிருந்த இருவரும் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகவில்லை. இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்தவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு பெண் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின்போது பிரதான சந்தேக நபர்கள் உள்ளடங்கலாக 7 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் இராணுவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் அடங்குகின்றனர். இந்த 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (10) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இன்று நடத்தப்பட்ட விசாரணைகளின்போது நீதவான் 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/206342

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.